Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசியத் தலைவர் சம்பந்தனாம் !!! சுய நிர்ணய உரிமையை பேசவேண்டாமாம் !!! TNAஎம்பி சரவணாபவன்

Featured Replies

சம்பந்தன் தானாம் தேசியத் தலைவர்சொல்கின்றார் TNA எம்பி சரவணபவன் !!!! TNA தலைவர் சம்பந்தனை தேசியத் தலைவர் என TNAஎம்பி சரவணாபவன் தீபம் தொலைக் காட்சியில் தெரிவித்தார் .

இதனை அவதானித்த தீபம் தொலைக்காட்சி ஊடகவியலாளர் அனஸ் அவர்கள் சற்று அதிசயமாகவே ,

நீங்கள் சம்பந்தனையா தேசியத் தலைவர் என குறிப்பிடுகின்றீர்கள் என மீண்டும் கேட்டார் .

அதற்கு சரவணபவன் ஆம்எனப் பதிலளித்தார் .

இந்த வீடியோவில் பார்க்கலாம் .

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=jry_fW_p-rc

அதே பேட்டியில் தொடர்ந்து பேசிய சரவணபவன்

தேசியம் , சுய நிர்ணய உரிமை பற்றி பேசுவதால் சிங்கள அரசு கோபப்படுகின்றது அதனால் தான் எல்லாப் பிரச்சனையும் என்றும் தெரிவித்தார்

ஏதோ இன அடக்குமுறை தேசியம் சுய நிர்ணய உரிமை பேசியதால் வந்ததாகவே இவர் பேச்சு அர்த்தம் கொள்கின்றது .

அதனை இந்த வீடியோவில்பார்க்கலாம்

http://www.youtube.com/watch?v=cRUuAEqf2xI&feature=player_embedded

சரவண பவனின் போலி முகத்தை அம்பலப்படுத்த இதனை அனைவருக்கும் அனுப்புங்கள் .

இதனை ஊடகங்கள் மௌனமாக பார்த்திருப்பது நல்லதல்ல

http://video.thaaitamil.com/?p=37

சுயநிர்ணய உரிமை பற்றி கூட்டமைப்பு சிங்களத்துடன் பேசத்தேவையுள்ளதாக தெரியவில்லை. காணி, காவல்துறை சம்பந்தமாக பேசியே அவர்கள் பேச வருகிறார்கள் இல்லை என்பதை உலகிற்கு சொன்னால் காணும்.

  • கருத்துக்கள உறவுகள்

தீபம் தொலைக்காட்சிக்கு இதே வேலையாப்போச்சு கண்ட கண்ட புறம்போக்குகளை பேட்டி அனஸ் என்பவர் எடுப்பது வழமையாகி போட்டுது ........

*தேசியத்தலைவர் அண்ணன் பிரபாகரன் மட்டும்தான் வேறு யாருக்கும் அந்த தகுதியும் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது செருப்புகள் எல்லாம் ஜிகினா குத்தி ஊர்வலம்போக வெளிக்கிட்டுதுகள். தூ... வே......கள் தலைவர் சம்பந்தன் என வேண்டுமாகில் சொல்லுங்கோ. யாழ் இணையம் வேணுமெண்டால் எனஹு உறுப்புரிமையை திரும்பப் பெறவும் இப்படிக் கருத்தெழுதியதுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

தேசி***த்தலைவர் சம்பந்தன் வாழ்க :icon_mrgreen::(:o:)

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சைக் கேட்டாலே தெரியேல்லையா? இவருக்குப் பேச்சுத் தமிழ் கொஞ்சம் மட்டு மட்டுப் போல இருக்கு. தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் எண்டதை தேசியத் தலைவர் எண்டு மாறி அல்லது அரைகுறையாகச் சொல்லியிருப்பார் போல. த.தே.கூ இனி அதன் உறுப்பினர்களை கண்டபடி பேட்டி உரை எண்டு கொடுக்க விடாமல் பார்த்துக் கொண்டால் தமிழர்களின் ஒற்றுமை கொஞ்சம் பிழைக்கும். இல்லையேல் கடினம் தான்!

(பர)தேசியத்தலைவர் சம்மந்தன்... வாழ்க வாழ்க... :D

உந்த நிகழ்ச்சி தொகுத்துவழங்கிறவரும் ஒரு தொப்பிபிரட்டி தானே. அவரிட்ட இருந்து வேற என்ன மாதிரி ஆக்களை பேட்டி காணுவார் என்டு எதிர்பார்க்கமுடியும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போன கிழமைதான் ஈழத்து எம்.ஜி.ஆர் என்று சொல்லி இந்திய எம்.பி;க்கள் அறிவிலிகளாகினர் இந்தக்கிழமை சரவணன் அடுத்த கிழமை யாரோ......?

  • கருத்துக்கள உறவுகள்

ஆம்.. அவர் சொல்வது சரிதானே. சம்பந்தன்.. தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிறீலங்கா தேசிய தலைவர். சங்கரி.. செயலாளர்..!

நாம் ஏன் இதனை இட்டு அதிகம் அலட்டிக் கொள்ள வேண்டும். சம்பந்தனோ வேறு எவருமோ.. தமிழீழ தேசிய தலைவரை பிரதியீடு செய்ய முடியாது. அது அவர் மட்டும் தான்..! எவர் என்பது எல்லோருக்குமே தெரியும்..! அதை தலைமுறைகளும் சொல்லச் செய்ய வேண்டியது தன்மானமுள்ள ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.

சிங்களவன்... சமஷ்டி சொல்லுக்கு பயப்பிடுறான் என்று.. தந்தை செல்வா மீது திட்டி.. சிங்களவன்.. உள்ளூராட்சி சபைகளில் தீர்வை திணிக்கச் செய்தீங்க... அப்புறம் திம்புவில வைச்சு.. மாநில சுயாட்சி கேட்டிங்க. அதுக்கும் சிங்களவன் பயப்படுறான் என்று சொல்லி.. அழுது குளறி.. வடக்குக் கிழக்கு தற்காலிமாக இணைந்த உப்புச்சப்பற்ற மாகாண சபையை ஏற்றீங்க.. இறுதியில் என்ன நடந்தது.. அதுக்கு அதிகாரமும் இல்ல.. ஆட்சியும் இல்ல.. இப்ப.. துண்டு துண்டாக்கப்பட்டு விட்டது. இப்ப சுயநிர்ணயம்.. சுயாட்சி.. இவற்றைக் கதைக்கிறதால தான் சிங்களவன் பயப்பிடுறான்.. உதுகளைக் கைவிட்டுவிட்டால்.. தமிழீழத்தை மறைமுகமாக சிங்களவருக்குத் தெரியாமல் மகிந்த தருவார் என்றா இவர் சொல்லவாறார்..!

நீங்கள் எதனை கைவிட்டு.. எதனை சாதித்தீர்கள்.. என்று முதலில் பட்டியலிடுங்கள்..!! பின் இதைப் பேசாதை அதைப் பேசு என்று மக்களுக்கு அறிவுரை சொல்லலாம்....!

2002 புரிந்துணர்வு உடன்படிக்கையின் பின்.. விடுதலைப்புலிகள்.. புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்பதை.. தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்று அதனை மக்கள் மயப்படுத்திய போது.. சிலர் இப்படித்தான் வியாக்கியானம் செய்தார்கள். புலிகள் தமிழீழக் கோரிக்கையை கைவிட்டு.. இன்னொரு தீர்வுக்கு தயார் என்பதை இனங்காட்டவே இப்படிச் செய்கிறார்கள் என்று. அந்த வியாக்கியானத்தை செய்தது தமிழர்கள்.. ஆனால் சிங்களவன் அதனை நம்பவில்லையே..??! இறுதில் நடந்தது என்ன.. சிங்களத்துக்கு சிங்கள சிறீலங்காவை நிறுவ அச்சுறுத்தலாக இருந்த விடுதலைப்புலிகள் அமைப்பும் அதன் கொள்கைகளும் பயங்கரவாதமாக சித்தரிக்கப்பட்டு.. சிங்களத்தால் அடக்கப்பட்டிருப்பது தான்..!

ஆக சாத்வீக வழியிலும் சரி.. ஆயுத வழியிலும் சரி.. தமிழர்கள் விட்டுக்கொடுத்து எதனையும் சிங்களவர்களிடம் பெற்றுக் கொண்ட வரலாறு இல்லை. வேணும் எனில் காட்டிக் கொடுத்து.. டக்கிளஸ்.. கருணா.. சுமந்திரன்.. வரதராஜப்பெருமாள்.. சித்தார்த்தன்.. சங்கரி.. பிள்ளையான் வரிசையில் சரவணபவனும் சேர்ந்து கொண்டு.. சிங்களவன் கிள்ளிப் போடுறதை பொறுக்கிக் கொண்டு போகலாம்..!

ஆனால்.. சுயநிர்ணய உரிமை.. சுயாட்சி என்ற தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளை சிங்களவர்களுக்கு பயந்து விடச் சொல்வது மிகவும் மோசமான இனவிரோதச் செயல். இப்படிச் சொல்லும் சரவணபவன்.. சிங்களவர்களின் குடியேற்றங்களால் தமிழர்கள் அச்சப்படுகிறார்கள் என்று சொல்லி.. அதை நிறுத்தட்டும் பார்க்கலாம். புத்த ஆலயங்கள் தமிழர்களின் கோவில்களுக்கு அருகில்.. அல்லது பிரதியீடு செய்யப்படுவதால்.. தமிழ் மக்கள் அஞ்சுகிறார்கள் என்று சொல்லி அதை நிறுத்தச் சொல்லட்டும் பார்க்கலாம்.. ஏன்.. தமிழ் மக்கள் கண்டு அஞ்சும் சிங்களப் படைகளை தமிழ் மக்களின் நிலத்தில் இருந்து விலகிச் செல்ல வைக்கட்டும் பார்க்கலாம்..! அவை முடியவே முடியாது. அதற்கு ஒரு வியாக்கியாணம் வைச்சிருக்கினம்.. ஐக்கிய இலங்கையை நாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.. எனவே தமிழ் மக்கள் இப்படி துன்பப்பட்டுத்தான் வாழ வேண்டும் என்று..! ஆக சிங்களவன் தமிழர்கள் கேட்கிறதை இட்டு மனக்கஸ்டப்படுவதையே சம்பந்தனால தாங்க முடியல்ல.. ஆனால் சிங்களவனால் கொல்லப்பட்டு.. சித்திவதைப்பட்டு..தமிழர்கள் வாழ்வது மட்டும் சகிப்புக்குரியதாக உள்ளது சம்பந்தனுக்கும்.. கூட்டமைப்புக்கும்.. அப்படியா..???!

இவர்கள் இதனால என்ன சொல்ல விளைகிறார்கள் என்றால்.. தமிழ் மக்கள் சிங்களவர்கள் வெறுக்கிற விடயங்களை பேசுவதை.. கோருவதை விட்டு.. அவர்கள்.. விரும்பிற வடிவில்.. தமிழ் மக்கள் வாழ வேண்டும் என்று. இதற்கு ஏன் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும். பேசாமல்.. ஈபிடிபிக்கும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளுக்கும் ஆதரவளிக்கலாமே. அவர்களும் இதைத்தானே சிங்களவர்களுக்காகச் சொல்கிறார்கள்.. செய்கிறார்கள்.. இதில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு..(இந்தப் பெயர் கூட தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்டு வர மட்டும்.. ஒரு சாட்டுக்குத்தான்.. உண்மையில்.. தமிழரசுக் கட்சி என்று தான் கட்சியை பதிவே செய்து வைத்திருக்கிறார்கள்..!) எந்த விதத்தில் இன்று மாறுபட்டு நிற்கிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிர்ணயிக்கப்பட்ட அதன் கொள்கையில் இருந்து விலகிச் சென்று கொண்டிருப்பின்.. நிச்சயம் அது மக்களால் விரைந்து நிராகரிக்கப்படும் மோசமான விளைவை சந்திக்கும் நாள் அதற்கு வந்தே தீரும். மக்களே இதற்கான சரியான தீர்ப்பை அளிக்கக் கூடியவர்கள்.. அதை சரவணபவன் போன்றவர்கள் எதனைக் கொண்டு நியாயப்படுத்தப் போகிறார்கள் என்றும் தான் பார்ப்போமே..! இவர்களின் இந்தக் குளறுபடி அரசியலால் அதிகம் ஆதாயம் தேடிக் கொள்ளப் போவது சிங்கள பெருந்தேசியவாதிகளும்.. பேரினவாதிகளும்.. அவர்களுக்கு அடிவருடிப் பிழைக்கும்.. தமிழினத் துரோகிகளுமே.. தமிழ் மக்கள் அல்ல.. என்பது மட்டும் மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெற்றிக் கண்ணை காட்டினாலும் குற்றம் குற்றமே.....இந்த ஊடகவியலாளர்களே அப்படித்தான்....உயரத்துக்கு ஏறும்வரை ஏணி வேணும்....அப்புறம் அதை உதைத்து விடுவார்கள்.....தேசியம் என்ற ஏணியை பாவித்தே....முன்னுக்கு வந்தவர்கள்..இவர்கள்....இன்று அற்ப பணத்துக்காக அடிமட்டத்துக்கு போய் விட்டார்கள்...கனடவிலையும்

ஒரு ஊஊடகவியலாளர்....ஒரு கலை நிகழ்வை நடன ஆசிரியைகளின் காலில் விழுந்து அரங்கம் நிறைந்த பெற்ரோர்கள்,...உறவினர்களை கண்டவுடன்....தலை கால் தெரியாமல்..தேசியத்தையும்..புலம்பெயர் தமிழர்களையும்....திட்டி தீர்த்தவர்....காசு கொடுத்த சனமெல்லாம் ....திட்டையும் வாங்கிக் கொண்டு வந்தவையாம்......

.

அந்தாள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்பதை இப்படி தடுமாறிச் சொல்லிவிட்டார்.

தமிழருக்கு ஒரு தேசமும் இல்ல. அதுக்குள்ள... இல்லாத‌ அந்த தேசத்துக்கு ஆர் தலைவர் எண்ட பிரச்சனை வேறையோ ??

அங்க இருக்கிற இன்னல் பட்ட மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் தான் த.தே.கூட்டமைப்பு.

தமிழ்த்தாய்.கொம் இன் நோக்கம் என்ன ? தொடர்ந்து அங்குள்ள மக்கள் இன அழிப்பிற்கு உள்ளாக வேண்டும் என்பதா ? சம்பந்தருக்கும் ஏனையோருக்கும் என்ன தலையிடியா, இப்படி உயிராபத்துள்ள அரசியலில் ஈடுபட ?

தமிழ்த்தாய்.கொம் இன் அரசியல் சாணக்கியம் என்ன ? தாயகத்தில் உள்ள மக்கள் தொடர்ச்சியாக இன அழிப்பிற்கு உள்ளாக வேண்டும். அவர்களிற்காக யாரும் பேசக்கூடாது. ஒரு கட்டத்தில் மற்ற நாடுகள் இரக்கப்பட்டு நாட்டைப் பிரித்துக் கொடுக்க வேண்டும் !! இதனால் தான் த.தே.கூ. ஐ ஒரு இடைஞ்சலாகப் பார்க்கிறார்கள் போலிருக்கிறது.

மக்களைப் பலிகடாக்களாக்கும் நோக்கமுள்ள தமிழ்த்தாய்.கொம் ஐ கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் படி நிர்வாகத்திடம் ஒரு விண்ணப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் களத்துவாழ் தமிழ் மக்களின் பெரும் தலைவர். புலத்தில் சிலர் அவரை ஏற்றுக் கொள்கிறார்கள் சிலர் ஏற்க்கவில்லை. பலருக்கு உறுதியான முடிவில்லை. ஆனால் நடைமுறையில் சர்வதேச சமூகத்துக்கு களம் என்ன நினைக்கிறது என்பது மட்டுமே முக்கியம். வரலாற்றில் முதன் முறையாக கிழக்கு மாகாணத்தவர் ஒருவர் பொம்மைத் தலைவராக நியமிக்கப் படாமல் உண்மைத் தலைவராக தேர்வாகி இருக்கிறார். வdaக்கு வேறு கிழக்குவேறா என்கிற கேழ்வி சர்வதேச சமூகத்தின் முன் உள்ள நிலையில் நமது தேசிய ஒருமைப் பாட்டின் அடையாளம் அவர்.

யாரோ தீபம் ரிவியில் எதுவோ சொன்னார்கள் என்பதற்க்காக சம்பந்தரை தாக்குவதுபோல சிலர் எழுதியிருப்பதும் ஒரு ஊடகவியலாளரது இன அடையாளத்தை கொச்சை படுத்துவதும் தவறான முன்னுதாரணமாகும்.

சர்வதேசத்துக்கு ஆலோசனை வளங்கும் மேற்குலக சமூகவியலாளர்கள் புலம் பெயர்ந்த தமிழர்களின் ’மெயின் ஸ்றீம்’ வடபுலத்து மேலோர் என அடையாளப் படுத்தி இருக்கும் பின்னணியில் சம்பந்தர் பற்றி நாம் மிகுந்த பொறுப்புணர்வுடன் கருத்துச் சொல்ல வேண்டும்.

தோல்வியின்பின்னர் ஏற்பட்ட மரண ஆபத்து இருளுக்குள் அவர் பணிபுரிகிறார். விமர்சனமில்லாமல் யாரையும் ஆதரிக்க வேண்டாம். ஆனால் ஆரோக்கியமான விமர்சனங்களோடு சாத்தியமற்ற சூழலில் சாத்தியமான வழியில் பணிபுரிகிற சம்பந்தருக்கு இயன்றவரையில் நாம் அனுசரணையாக இருக்க வேண்டும்.என்பது எனது வேண்டுகோள்.

Edited by poet

.

அந்தாள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்பதை இப்படி தடுமாறிச் சொல்லிவிட்டார்.

தமிழருக்கு ஒரு தேசமும் இல்ல. அதுக்குள்ள... இல்லாத‌ அந்த தேசத்துக்கு ஆர் தலைவர் எண்ட பிரச்சனை வேறையோ ??

அங்க இருக்கிற இன்னல் பட்ட மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் தான் த.தே.கூட்டமைப்பு.

தமிழ்த்தாய்.கொம் இன் நோக்கம் என்ன ? தொடர்ந்து அங்குள்ள மக்கள் இன அழிப்பிற்கு உள்ளாக வேண்டும் என்பதா ? சம்பந்தருக்கும் ஏனையோருக்கும் என்ன தலையிடியா, இப்படி உயிராபத்துள்ள அரசியலில் ஈடுபட ?

தமிழ்த்தாய்.கொம் இன் அரசியல் சாணக்கியம் என்ன ? தாயகத்தில் உள்ள மக்கள் தொடர்ச்சியாக இன அழிப்பிற்கு உள்ளாக வேண்டும். அவர்களிற்காக யாரும் பேசக்கூடாது. ஒரு கட்டத்தில் மற்ற நாடுகள் இரக்கப்பட்டு நாட்டைப் பிரித்துக் கொடுக்க வேண்டும் !! இதனால் தான் த.தே.கூ. ஐ ஒரு இடைஞ்சலாகப் பார்க்கிறார்கள் போலிருக்கிறது.

மக்களைப் பலிகடாக்களாக்கும் நோக்கமுள்ள தமிழ்த்தாய்.கொம் ஐ கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் படி நிர்வாகத்திடம் ஒரு விண்ணப்பம்.

குறிப்பிட்ட இணையதளம் தனது விளம்பர நோக்கத்துக்காகவே yarl இனை பாவிக்கிறது இவ் இணையதளத்தினை கறுப்பு பட்டியலில் சேர்க்குமாறு நானும் நிர்வாகத்தை கேட்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் களத்துவாழ் தமிழ் மக்களின் பெரும் தலைவர். புலத்தில் சிலர் அவரை ஏற்றுக் கொள்கிறார்கள் சிலர் ஏற்க்கவில்லை. பலருக்கு உறுதியான முடிவில்லை. ஆனால் நடைமுறையில் சர்வதேச சமூகத்துக்கு களம் என்ன நினைக்கிறது என்பது மட்டுமே முக்கியம். வரலாற்றில் முதன் முறையாக கிழக்கு மாகாணத்தவர் ஒருவர் பொம்மைத் தலைவராக நியமிக்கப் படாமல் உண்மைத் தலைவராக தேர்வாகி இருக்கிறார். வdaக்கு வேறு கிழக்குவேறா என்கிற கேள்வி சர்வதேச சமூகத்தின் முன் உள்ள நிலையில் நமது தேசிய ஒருமைப் பாட்டின் அடையாளம் அவர்.

யாரோ தீபம் ரிவியில் எதுவோ சொன்னார்கள் என்பதற்க்காக சம்பந்தரை தாக்குவதுபோல சிலர் எழுதியிருப்பதும் ஒரு ஊடகவியலாளரது இன அடையாளத்தை கொச்சை படுத்துவதும் தவறான முன்னுதாரணமாகும்.

சர்வதேசத்துக்கு ஆலோசனை வளங்கும் மேற்குலக சமூகவியலாளர்கள் புலம் பெயர்ந்த தமிழர்களின் ’மெயின் ஸ்றீம்’ வடபுலத்து மேலோர் என அடையாளப் படுத்தி இருக்கும் பின்னணியில் சம்பந்தர் பற்றி நாம் மிகுந்த பொறுப்புணர்வுடன் கருத்துச் சொல்ல வேண்டும்.

தோல்வியின்பின்னர் ஏற்பட்ட மரண ஆபத்து இருளுக்குள் அவர் பணிபுரிகிறார். விமர்சனமில்லாமல் யாரையும் ஆதரிக்க வேண்டாம். ஆனால் ஆரோக்கியமான விமர்சனங்களோடு சாத்தியமற்ற சூழலில் சாத்தியமான வழியில் பணிபுரிகிற சம்பந்தருக்கு இயன்றவரையில் நாம் அனுசரணையாக இருக்க வேண்டும்.என்பது எனது வேண்டுகோள்.

அழகான உச்சாடணங்கள் மூலம் பழமைவாதியான தாங்கள் பிரேதசவாதத்தை நவீன வடிவில் இதற்குள் தெளித்திருக்கிறீர்கள்.

பிரச்சனை வடக்குக் கிழக்கு மலையகம் என்பதல்ல. சரியான தலைமைத்துவம் தான்..!

தமிழ் மக்கள் அது வடக்கில் வாழலாம்.. கிழக்கில் வாழலாம்.. மலையகத்தில் வாழலாம்.. தமிழகத்தில் வாழலாம்.. சிங்கப்பூரில் வாழலாம்.. மலேசியாவில் வாழலாம்.. எங்கென்றாலும் வாழலாம்.. அவர்களின் பூர்வீக மண்ணில் அவர்களுக்குள்ள சுயநிர்ணய உரிமையை சம்பந்தன்.. சுமந்திரன் மட்டுமல்ல.. எவருமே தூக்கி எறிய முடியாது..!

சம்பந்தனை தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் அரசியல் மூப்பு அடிப்படையில் தலைமைத்துவத்துக்கு இழுத்து வந்தது.. வேறு யாருமல்ல.. தமிழீழ தேசிய தலைவர் மேதகு.. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள். கூட்டணியில்.. சிவசிதம்பரத்தின் மறைவின் பின்.. தலைமைக்கு ஏற்பட்ட போட்டா போட்டியில்.. சங்கரி.. தங்கத்துரை.. சம்பந்தன்.. இழுபறிப்பட்டுக் கொண்டிருந்த நிலையில்... காலத்தின் தேவை கருதி தேசிய தலைவர் தீர்க்க தரிசனத்தோடு எடுத்த சில முடிவுகளின் விளைவாக இன்று சம்பந்தன்.. தன்னைத் தானே தேசிய தலைவர் என்று அறிவிக்கும் நிலை உருவாகி இருக்கிறது.

பிரச்சனை.. சம்பந்தன்.. கூட்டமைப்பின்.. தேசிய தலைவராக இருப்பதல்ல. பிரச்சனை.. தமிழீழத்தைக் கைவிட்டுவிட்டதாகச் சொல்லி ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை தேடிக் கொண்டிருக்கும் சம்பந்தன்.. கடந்த 3 ஆண்டுகளில்.. தமிழீழத்தைக் கைவிட்டு ஐக்கிய இலங்கைக்குள் ஏற்படுத்திக் கொடுத்த தமிழ் மக்களுக்கான நன்மை என்ன என்பது தான்..??!

35 வருடத்திற்கும் மேலான.. போராட்ட இலட்சியமாக விளங்கிய தமிழீழத் தனிநாடு.. சுயநிர்ணய உரிமை.. சுயாட்சி.. இவற்றை விட்டுக் கொடுப்பதன் வாயிலாக.. சர்வதேச அரங்கில்.. இவை எல்லாம் புலிகளின் ஆயுத அச்சுறுத்தலால் தோற்றம் பெற்ற கோட்பாடுகளாக்கப்பட்டு.. அவற்றை நிராகரிப்பதன் மூலம்.. சம்பந்தன் தன்னை இந்தியச் சார்ப்பு மிதவாத அரசியல் விற்பன்னராக இனங்காட்டிக் கொண்டு சிறீலங்கா சிங்கள அரசியல் சாசன வரம்புக்குள் தன்னை ஒரு சாணக்கிய அரசியல்வாதிகாகக் காட்டிக்கொள்ள விளைவதையே செய்கிறார்..! இதனால் தமிழ் மக்களுக்கு கிடைக்கக் கூடிய பலன்..???! இதிலும் டக்கிளஸ்.. கருணா போன்று காட்டிக்கொடுப்பு இணக்க அரசியல் செய்யலாம்..!

இன்றுவரை.. இந்த விட்டுக்கொடுப்புக்களில் இருந்து சம்பந்தன் என்ன பலாபலனை தமிழ் மக்கள் அனுபவிக்க ஈட்டிக்கொடுத்தார்..! சர்வதேச அரங்கில் சம்பந்தன் சொல்லி எவரும்.. போர்க்கால மனித உரிமை மீறல்கள் குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக.. சர்வதேசத்தின் பிராந்திய தேவையும்.. அதற்கு உதவக் கூடியதுமான புலம்பெயர் மக்களின் போர்க்குற்ற முன்னெடுப்புகளுமே இங்கு அதிகம் செல்வாக்குச் செய்துள்ளன.

வன்னியில் கொல்லப்பட்டது போல்... திருகோணமலையில் 60,000 தமிழர்கள் கொல்லப்பட்டிருந்தால்.. அதில.. சம்பந்தனின் உறவுகள் கொல்லப்பட்டிருந்தால்.. சம்பந்தனிடம்.. இந்தளவு விட்டுக்கொடுப்புக்களுக்கு இடமிருந்திருக்குமா.. என்பது கேள்விக்குறியாகவே இருந்திருக்கும்..! காரணம்.. சம்பந்தனின் வாக்குகள் திருமலையைச் சார்ந்தவை. அங்குள்ள நிலவரம் வேறானது. 1990 இல் இருந்து அது சிங்கள ஆதிக்கத்துள் இருக்கிறது. குறைந்தளவிலான இராணுவ வன்முறைகளோடு அங்குள்ளவர்கள் வாழ்கின்றனர். அங்கு பெருகி வரும்.. சிங்களக் குடியேற்றங்களைக் கூட சம்பந்தன் போன்றவர்கள்.... பொருட்டாக நினைக்கவில்லை..! அது அவர்களுக்கு தமிழ் மக்களின் வாக்கைத் திரட்ட உதவுகிறது. இந்த இலட்சணத்தில் சம்பந்தன் போன்றோர் ஐக்கிய இலங்கை குறித்து கருத்துரைப்பது ஒன்றும் வேடிக்கையான விடயம் அல்ல.

ஆனால்.. மூதூர்.. சம்பூர்.. வாகரை..வன்னி.. மன்னார்.. மக்களின் நிலை வேறானது. அவர்கள் போரால் பேர் இடர்களை சந்தித்த மக்கள். வறுமைக்கோட்டில் அதிகம் பேர் வாழும் இடங்கள்..! அவர்கள் இந்த அரசியல்வாதிகளிடம்.. தங்கள் பிள்ளைகள் உயிர் கொடுத்து உரக்கக் கத்தச் செய்த.. சுயநிர்ணய உரிமையை.. தமிழீழத்தை விட்டுக்கொடு என்று கேட்கவில்லை. மாறாக தங்களின் அன்றாடப் பிரச்சனைக்கு ஒரு தீர்வை காண் என்று தான் கேட்கிறார்கள். இதே நிலையில் தான் அநேக தமிழ் மக்கள் உள்ளனர். எவருமே.. தமிழீழத்தைக் கைவிடு.. சுயநிர்ணய உரிமை வேண்டாம் என்று சொல்லவில்லை. அப்படிச் சொல்லி சம்பந்தனுக்கு பேராதரவு அளிக்கவில்லை. இந்த யதார்த்த தளத்தை நீங்களும் அடிக்கடி மறைத்து வருகிறீர்கள்..!

தமிழ் மக்களை ஏமாற்றமாட்டோம்.. கொள்கை தவறமாட்டோம் என்று சொல்லிக் சொல்லிக் கொண்டே.. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அடிப்படைக் கொள்கைகளையே சம்பந்தன் கைவிட்டு விட்டிருப்பது.. இங்கு தெளிவு. இதை சம்பந்தன் மட்டுமல்ல.. வடக்கிலோ.. மலையகத்திலோ இருந்து எவர் செய்தாலும் மக்கள் கண்டிக்கவே செய்வார்கள்.

வடக்கில் இருந்து கொண்டு.. டக்கிளஸ் செய்யும் தமிழீழ விரோத செயற்பாடுகளை மக்கள் அங்கீகரிக்கவில்லை. அதேபோல் கிழக்கில் இருந்து கொண்டு கருணாவும்.. பிள்ளையானும் செய்வதை மக்கள் அங்கீகரிக்கவில்லை. இந்த நிலை ...சம்பந்தன் தொடர்ந்து இப்படியான.. அமிர்தலிங்கம் கால தவறான கொள்கைக்கு இத்தனை பேரிடர்களின் பின்னும் தமிழ் மக்களை இட்டுச் செல்ல முனைந்தால்.. சம்பந்தனுக்கும் அந்த நிலையே.. தோன்றும்..! இதனை பிரதேசவாதக் கருத்துக்கள் அடிப்படையில் நீங்கள் கிழக்குக்கு எதிரான வடக்கின் கருத்தாக காட்ட நினைக்கலாம். ஆனால்..

தமிழீழ விடுதலை என்பது.. வடக்குக் கிழக்கு தமிழர் தாயகத்திற்கானது..! அங்கு வடக்கு கிழக்கு என்ற பாகுபாடுகள்.. தமிழ் மக்களிடம் இல்லை.. அது இருக்கவும் கூடாது. அது தமிழ் மக்களின் வாழ்வுரிமையையே பாதிக்கச் செய்யும். அதேபோல் வடக்குக் கிழக்கு தமிழர் தாயக விடுதலையோடு மலையகத் தமிழ் மக்களின் அரசியல்.. மற்றும் வாழ்வுரிமையும் மீட்கப்பட்டாக வேண்டும். அவர்களும் சம அந்தஸ்தோடு.. சம தகுதியோடு இலங்கைத் தீவில் வாழ வேண்டும். அந்த அடிப்படையில் முஸ்லீம்களுக்கும் அந்தத் தகுதி உண்டு..! அடாத்தாக இன்றி பூர்வீகமாக வடக்கில் கிழக்கில் நீண்ட காலம் வாழும் சிறுபான்மை இனச் சிங்கள மக்களுக்கும்.. அவர்களின் அரசியல்.. வாழ்வுரிமை அங்கீகரிக்கப்பட்டு அவர்களும் சம அந்தஸ்தோடு.. தகுதியோடு வாழும் உரிமையை வடக்குக் கிழக்கில் கொண்டுள்ளனர். அதனை தமிழர்கள் எப்போதுமே அங்கீகரிக்கின்றனர்..! இந்த நிலையில்.. தமிழர்கள் எவருக்கும் அஞ்சி.. தங்களின் இனத்துவ இருப்புக்கான.. நிலைகளில் இருந்து பின்வாங்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழர்கள் எதனையும் யாரிடமும் அடாத்தாகப் பெற முயலவில்லை. தங்களின் பூர்வீக மண்ணில்.. தங்களுக்கான அரசியல் வாழ்வுரிமையையே அவர்கள் கேட்கிறார்கள். இங்கு.. கூட்டமைப்பு ஆக்களுக்கு ஏற்ப.. விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை. மாறாக கூட்டமைப்பு மக்களின் மனநிலையை பிரதிபலிப்பதை விட்டு தூர விலகிச் செல்வது அதன் இருப்புக்கே ஆபத்தாகும். அது இன்றைய நிலையில் தமிழ் மக்களுக்கு மிகப் பாதமான ஒன்றாகவே இருக்கும். இந்தச் சூழலைப் பயன்படுத்தி சம்பந்தனும் சுமந்திரனும் செய்யும் அமிர்தலிங்கம் காலத்து அரசியல் தீர்மானங்கள் நிச்சயம் தமிழ் மக்களுக்கு எதனையும் பெற்றுத் தராது.. இதுவும் அங்கு வெளிப்படை உண்மை..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கொங்சகாலத்துக்கு முன்னம் புதினப்பலகை என்னும் இணயத்தளத்தில் வழுதி என்பவரும் இனி சம்பந்தன்தான் தேசியத்தலைவர் என்று என்று எழதியிருந்தார்.கூட்டபை;பின் போக்கும் அதன் தலைவர்களும் உறுதியானவர்களாகத் தெரியவில்லை.இந்த நிலை தொடர்ந்தால் தமிழர்கள் மாற்று அரசியல் அமைப்பொன்றை தேட வேண்டிய நிலை வரும்.இன்றைய நிலையில் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு மக்கள் ஆதரவைப் பெருக்கு முகமாக கூட்டங்களை ஒழுங்கு படுத்தி அரசியல் விளக்கங்களை அளிக்க வேண்டும். தாம் எது செய்தாலும் கேட்க நாதியில்லை என்னும் நிலையிலிருந்து கூட்டமைப்பைத் திசை திருப்ப ஒரு எதிர்க்கடை வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு நான் எழுதியதை காணவில்லை

ஆனாலும் என் கருத்து அதுதான்

அவரை நான் சந்திப்பேன்.

எனக்கு அவர் இந்த அவமதித்தலுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

(பர)தேசியத்தலைவர் சம்மந்தன்... வாழ்க வாழ்க... :D

உந்த நிகழ்ச்சி தொகுத்துவழங்கிறவரும் ஒரு தொப்பிபிரட்டி தானே. அவரிட்ட இருந்து வேற என்ன மாதிரி ஆக்களை பேட்டி காணுவார் என்டு எதிர்பார்க்கமுடியும்?

தொப்பி பிரட்டி என்றால் என்னப்பா ? கருத்தே பிழை, அதுக்குள்ள கருத்த கண்ராவி எண்டு பேர் வேற ........

இதெல்லாம் ஒரு செய்தி என்று இணைத்திருக்கு :(

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் பழமைவாதம் என்றால் என்ன? தமிழரைப்பொறுத்து சாதி மற்றும் யாழ் மையவாதம்தான். உங்கள் குரல் சிங்களப் பேரினவாதிகள் நாம் எல்லாம் இலங்கையர் என்பதுபோல இருக்கு. யாழ் மையவாதத்தை எதிர்பதன் நிராகரிப்பதன் மூலம் மட்டுமேஎதிர்காலத்தில் தமிழர் ஒற்றுமையை நிலை நிறுத்த முடியும்.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் பழமைவாதம் என்றால் என்ன? தமிழரைப்பொறுத்து சாதி மற்றும் யாழ் மையவாதம்தான். உங்கள் குரல் சிங்களப் பேரினவாதிகள் நாம் எல்லாம் இலங்கையர் என்பதுபோல இருக்கு. யாழ் மையவாதத்தை எதிர்பதன் நிராகரிப்பதன் மூலம் மட்டுமேஎதிர்காலத்தில் தமிழர் ஒற்றுமையை நிலை நிறுத்த முடியும்.

உங்கட பல நிலைப்பாடுகள் இன்னும் அமிர்தலிங்கம் காலத்தில் நிற்கிறது. அந்தக் காலத்தை கடந்து நாங்கள் 35 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்துவிட்டோம். தமிழ் மக்களின் போராட்ட நியாயங்கள் சர்வதேச அரங்கில் புரியப்பட ஆரம்பித்துள்ள நிலையில்.. பிரதேசவாதம்.. சாதியம்.. யாழ்ப்பாண மையவாதம்... என்ற பழைய பொன்னம்பலம்.. இராமநாதன் காலத்தில் நின்று கொண்டு இன்றைய தமிழ் மக்களின் சூழலை நீங்கள் நோக்குவது முற்றிலும்.. ஒரு பழமை வாதமே...!

இது உங்களைப் போன்ற சந்தர்ப்பவாதிகளுக்கு நல்ல பயனுள்ளது. கருணா எதைச் செய்துவிட்டு தான் தப்ப.. பிரதேசவாதத்தைக் கையில் எடுத்தானோ.. அதையே தான் நீங்களும் செய்கிறீர்கள்.

கடந்த 35 வருட காலத்தில் பிரபாகரன் என்ற ஒரு தனிமனிதன்.. இந்த பழமை வாதங்களை எல்லாம் தகர்த்தெறிந்து.. தமிழ் மக்களை மொழியால்.. நிலத்தால்.. பண்பாட்டால் இணைத்து.. அவர்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் போராடினான் என்றால் அதுதான் புரட்சி. அதை சிங்கள மேலாதிக்க பழமை வாத்தோடு.. உங்களைப் போன்றோர் பிரதேசவாதத்தைக் கலந்து.. வீழ்த்தப் பெரும்பாடு பட்டீர்கள்..!

கருணா தனது தவறை மறைக்க முதலில் எடுத்துக் கொண்டதும்.. இதே தான் பிரதேசவாதம்..!

கிழக்கைப் பொறுத்தவரை.. அந்த மக்களின் வாழ்வியல் என்பது வடக்கை தவிர்த்து இருந்ததில்லை. அதேபோல் வடக்கின் மக்களின் வாழ்வியல் கிழக்கை தவிர்த்து இருந்ததில்லை. அதனை சாதாரண மக்கள் உணர்கிறார்கள்.. உண்மையான தேசப்பற்றுள்ள போராளிகள் உணர்கிறார்கள். நடைமுறை யதார்த்தமும் அதுதான். எத்தனையோ கிழக்கு மாகாண மக்கள் வடக்கில் திருமணம் செய்திருக்கிறார்கள்.. அதேபோல் வடக்கு மக்கள் அங்கு திருமணம் செய்துள்ளனர். மக்களைப் பொறுத்தவரை அவர்களிடம் பிரதேச வேறுபாட்டுக்கான காரணி புறக்கணிக்கத்தக்கதாகவே இருந்து வந்துள்ளது.

இவற்றை பூதாகரமாக்கி அரசியல் இலாபம் தேடுவோரும்.. கலை இலக்கியம் வளர்க்கிறோம் என்ற போர்வையில்.. பிரதேசவாதத்தை திணித்து தம்மை தனியாக அடையாளம் காட்ட விரும்புகிற.. ஆட்களுமே.. இந்த பிற்போக்கான வாதங்களை எம் மக்கள் மத்தியில் இன்றும் வாழ வைக்க விரும்புகின்றனர்.

யாழ்ப்பாண மையவாதம்.. மட்டக்களப்பு மையவாதம்.. திருமலை மையவாதம்.. என்று ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. அரசியல் தலைமைத்துவப் பண்போடு.. தலைவர்கள் எங்கிருந்தும் தோன்றலாம் மக்களை வழிநடத்தலாம். அமெரிக்காவில் எங்கையோ வறிய குடும்பத்தில் பிறந்த லிங்கன்.. முழு தேசத்தையும் ஆள முடிந்தது என்றால்... அதற்குக் காரணம்.. அவரின் தலைமைத்துவப் பண்பு..!

அதேபோல்.. தமிழ் தலைவர்கள்.. வடக்கில் இருந்தும் உருவாகி இருக்கிறார்கள்.. கிழக்கில் இருந்தும் உருவாகி இருக்கிறார்கள்.. மலையகத்தில் இருந்தும் உருவாகி இருக்கிறார்கள்..! இவர்களை எல்லாம் ஒன்றிணைக்கப் பாடுபட்ட ஒரே ஒருவர் என்றால் அது வேலுப்பிள்ளை பிரபாகரன் தான். அந்த தலைமைத்துவப் பண்பு தான் அவரை மக்கள் முன் முன்னிலைப்படுத்தியது. அதேவேளை மக்களைப் பிரித்தாண்டு.. மக்களின் நலனில் அக்கறை உள்ளது போல நடித்துக் கொண்டு.. தமது சுயநல இலாபங்களுக்காக தேசத்தைக் கூறுபோட நினைத்தவர்களை எல்லாம் மக்கள் நிராகரித்தே வந்துள்ளனர். அந்த வகையில்.. கருணா பிள்ளையான்..போன்ற துரோகிகள் கிழக்கிலும்.. டக்கிளஸ்.. சித்தார்த்தன்.. சங்கரி.. வரதராஜப் பெருமாள்.. போன்ற இன்னோரென்ன துரோகிகள் வடக்கில் இருந்தும் உருவாகி இருக்கின்றனர். இங்கெல்லாம்.. நீங்கள் பிரதேசவாதம் பார்த்துக் கதைக்கமாட்டீர்கள்.

எங்கே மக்கள் ஒற்றுமைப்படுகிறார்களோ.. அங்கே எதிரிக்கு சார்ப்பாக பிரதேசவாதம்.. சாதியம்.. யாழ்ப்பாணியத்தை நீங்கள் புகுத்தி வருவதை நான் உங்களின் பல கருத்துக்களில் அவதானித்திருக்கிறேன். நீங்கள் மட்டுமல்ல.. வேறு சிலரும் இங்கு அதைச் செய்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் ஆதவராக கருத்தெழுதி இருப்பதையும் காண்கிறேன். இது உங்களின் மிகப் பிற்போக்கான மக்களைப் பிரித்தாண்டு அதில்.. உங்களை முன்னிறுத்த முயலும் கருணாவின் சுயநலமே எனக்குத் தெரிகிறது..!

இவற்றை எல்லாம் நீங்கள் கைவிட்டு.. காலம் எமக்களிக்கும் நல்ல தலைமைகளை.. பிரதேசம்.. சாதியம்.. பிராந்தியம் கடந்து நாம் ஏற்று நிற்க வேண்டிய தேவை எமது இனத்துக்கு உண்டு. இன்று சீமானை உலகத்தமிழினம் மதிக்கிறது.

இதே இலங்கைத் தமிழர்கள்.. வடக்கத்தையார் என்று ஒதுக்கிய அதே தமிழனை இன்று நாம்.. எமக்கான ஒரு தலைவனாக வரிந்து நிற்கிறோம். எந்தச் சாதியை காட்டி மக்களைக் கூறுபோட்டு அரசியல் செய்தீர்களோ.. அந்தச் சாதி பிற்போக்குத்தனத்துக்குள் கட்டுண்டு கிடந்த மக்களின் முன் தான் எமது தமிழீழத் தேசிய தலைவர் தோன்றி நின்றார்..! அதேபோல்.. மத அடிபடைகள் எல்லாம் தாண்டி.. கிழக்கில் இருந்து ஜோசப் பரராஜசிங்கம் போன்ற மதிப்பும் மாண்பும் மிக்க தலைவர்கள் தோன்றியே உள்ளனர்.

குமரப்பா.. புலேந்திரன் தொடங்கி.. தியாக தீபம் திலீபன்.. வரை எல்லோரும் மாவீரர்களாக நிற்கிறார்களே தவிர.. அவன் கிழக்கான்.. இவன் வடக்கான்.. யாழ்ப்பாண மையவாதத்தான் என்ற பாகுபாடு எமக்கிடையே இருந்ததில்லை..! ஆனால்.. உங்களைப் போன்றோர்.. இன்று அதனை வெகுவாக மீள முன்னிறுத்து உங்கள் போலி அடையாளங்களுக்கு விளம்பரம் தேட முனைவது மிக மோசமான சந்தர்ப்பவாத பிற்போக்குத்தனம். இதையே தான் நான் பழமை வாதம் என்று வரையறுத்திருக்கிறேன்.

நீங்கள் இன்றைய தலைமுறையின் அணுகுமுறையின் படி மிக மிக பிற்போக்கான பழமைவாதி. தலைமைத்துவம் என்ற சமூகவியல் யதார்த்தம் அறியாத ஒருவராகவே எனக்குத் தெரிகிறீர்கள். இதில் உள்ள ஆபத்து என்னவெனில்.. உங்களுக்கு சமூகம் அளித்துள்ள அங்கீகாரம் என்பது தான். அதை வைத்துக் கொண்டு.. நீங்கள் சமூகத்தை கூறுபோட்டு உங்களை முன்னுறித்தி சுய ஆதாயம் தேட முனைவதை நீங்கள் இலகுவாகச் செய்ய முடியும்..!

இதைத்தான் சம்பந்தனும் செய்கிறாரோ என்ற நிலை இன்று இருக்கிறது..! காரணம் தலைவர்கள் மக்களின் உணர்விருந்து செயற்படுவார்கள். ஆனால் சம்பந்தனோ.. தன் நிலையிருந்து மக்களை பணயம் வைத்துச் செயற்படுகிறார். இது ஒரு நல்ல தலைமைக்கான அறிகுறியல்ல..! இதில் பிரதேசவாதம் கிடையாது.. உலகத் தலைமைத்துவ நியாயமே உண்டு..! ஆனால் நீங்கள் அதை யாழ்ப்பாண மையவாதம்.. பிரதேசவாதம் போன்ற மாயக்கண்ணாடிகளூடு பார்த்து.. தவறான தலைமைத்துவத்திற்கு.. சரியான நிலையை காட்ட முனைகிறீர்கள். இதுவும் ஒருவகை பிற்போக்கு நிலை..! காரணம் இன்றைய உலகம்.. அறிவியல் மயப்படுத்தப்பட்டது. கல்வி அறிவு மேம்பட்டது. இன்றைய இளைய சமூகம் ஆராயும் திறன் கொண்டது. அந்த வகையில்.. பழமைவாதிகளின் தவறான அணுகுமுறைகள் அப்படியே அப்பட்டமாக வெளித்தெரிகின்ற போதும்.. அவர்கள் தங்களின் முன்னிலையை இழக்க விரும்பாது.. மீண்டும் மீண்டும் பிற்போக்குவாதங்களை சமூகத்துள் திணித்துவிடத் துடிக்கின்றனர்.

உங்களில் இந்த நிலையை நான் அடிக்கடி காண்கிறேன். இதில்.. நீங்கள் மாற்றம் கொண்டு வருவது சிறப்பு..! அது காலத்தின் தேவையும் கூட.

எனியும்.. இந்த மையவாத.. பிரதேசவாத.. சாதியவாத பிற்போக்கு கருத்தியல் வைத்து மக்கள் முன் தலைமைத்துவம் பெற முடியாது. சரியாக மக்களை மக்களின் உணர்வுகளை இனங்காணக்கூடிய.. பிரதிநிதிப்படுத்தக் கூடிய உலகச் சமூக அறிவியலின் பால் நிர்ணயிக்கப்பட்ட தலைமைப் பண்புகள் உள்ள ஒருவரை நோக்கியே இன்றைய சமூகம் அக்கறை காட்டும். எனவே உந்தப் பிற்போக்கு வாதங்களைக் கைவிட்டுவிட்டு.. நடைமுறை உலகில் மக்களின் உணர்வுகளோடு.. கூடி இருக்க வேண்டியது.. உங்களுக்கும்.. உங்களைப் போன்ற கொள்கை உடைய மற்றவர்களுக்கும் ஏன் மக்களில் ஒரு பகுதியினருக்கும்.. அவசியமாகிறது..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு என்னுடைய லைக் முடிந்து விட்டது.நான் எதை எழுத நினைத்தேனோ அவையெல்லாவற்றையும் எழுதியிருக்கிறீர்கள்.துர் அதிஸ்டவசமாக எமது தமிழ் எழுத்தாளர்கள் கவிஞர்கள் மற்போக்குவாதிகள் என்று சொல்லிக் கொள்ளுவோரில் பலர் தேசித்தலைவரால் தகர்தெறியப்பட்ட பல பிற்போக்கு வாதக் கொள்கைகளை அதை எதிர்க்கிறோம் என்ற போர்வையில் அதை வளர்த்துக் கொண்டே வருகிறார்கள்.கவிஞர் அவர்களே நீங்கள் இப்போது உங்கள் நண்பர் ஹக்கீமுக்கு ஏதாவது அறிவுரை செய்வது இந்த யாழ் களத்தில் மினக்கெடுவதை விட நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.