Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமராட்சியின் பொலிகண்டியில் புலிகளின் முன்னாள் மூத்த பெண் போராளி தற்கொலை

Featured Replies

வடமராட்சியின் பொலிகண்டிப் பாலாவிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் முன்னாள் மூத்த பெண் போராளி ஒருவர்

தனக்குத் தானே தீமூட்டித் தற்கொலை செய்துள்ளார். 38 வயதுடைய சிவலிங்கம் சுகந்தி என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நீண்டகால மூத்த பெண்போராளியாக இருந்த இவர் 1999ஆம் ஆண்டு இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையின் போது கடுமையான காயங்களுக்கு உள்ளான இவர் இடுப்பின் கீழ் செயலிழந்த நிலையில் காணப்பட்டார். எனினும் 2009 ஆம் ஆண்டுவரை விடுதலைப் புலிகளின் அமைப்பில் ஒரு மருத்துவப் போராளியாக செயற்பட்ட இவர் மே 17ன் பின் படையினரால் கைது செய்யப்பட்டு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு அண்மையிலேயே விடுவிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் பொலிகண்டி பாலாவிப் பகுதியில் உள்ள மீள் குடியேற்ற மக்களுக்கான முகாம் ஒன்றில் தனது பெற்றோருடன் இவர் வாழ்ந்து வந்தார். நேற்றைய தினம் வீட்டின் அறையை பூட்டிக் கொண்ட இவர் தனக்குத் தானே மண் எண்ணையை ஊற்றிக் கொண்டு தீமூட்டி இறந்துள்ளார். இவரது சடலம் மந்திகைப் பொலிசாரால் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

http://nilavaram.com/index.php?option=com_content&view=article&id=9746:2012-05-04-20-21-51&catid=1:cilon&Itemid=18

இழப்புக்களுக்கு முடிவில்லாமல் இருக்கிறது. ஆழ்ந்த இரங்கல்கள்

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள். என்ன எழுதுவது என்று தெரியவில்லை.சமூக, பொருளாதார, அரசியல் பின்னணிகள் காரணமாக இருக்கலாம்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

எழுத வார்த்தையில்லை

எம்மை மன்னித்து விடுங்கள்

வீரவணக்கம்.

கண்ணீர் வணக்கம்!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

வெறும் கண்ணீர் அஞ்சலிகள் செலுத்திக் கொண்டு இருப்பது தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த அவலங்களை முடிவுக்கு கொண்டு வராது.

மீண்டும் மீண்டும் இந்த அவலங்களின் பெரும் பங்களிப்பாளராக, புலம் பெயர் அமைப்புகளும், தமிழ் தேசிய அமைப்புகளும் தான் இருந்து வருகின்றோம். முள்ளிவாய்க்கால் அவலத்தின் மூன்றாவது ஆண்டிலும் இது தொடர்வது எம் கையாலாகாத்தனத்தின் முற்று முழுதான வெளிப்பாடுதான். மனித உரிமை அமைப்புகளுடனும், சர்வதேச தொண்டர் அமைப்புகளுடன் ஒன்றிணைந்து ஆற்றக்கூடிய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை இன்னும் விரிந்து கொண்டே செல்கின்றது.

இந்தப் பெண் போராளியை காயப்பட்டவுடன் தவிக்க விடாது தாயாக அரவணைத்துக் காத்த புலிகள் இயக்கம் வாழ்ந்த அதே மண்ணில் தான் அவள் தன் வாழ்க்கையை தொடரமுடியாது தற்கொலை செய்துள்ளாள் என்பது எத்தனை துயரமானது. இவளைத் தாங்கிய புலிகள் இயக்கத்தை தாங்கிக் பிடித்த தூண்களில் முதன்மையான புலம்பெயர் அமைப்புகளும் நிதி கொடுத்த அமைப்புகளும் இவளை தொடர்ந்து தாங்க முடியாது போனதன் பின் புலத்தில் எம் மனங்களில் இருக்கும் போலித் தேசியமும் பலிக்கடாக்களை வளர்க்கும் குணமும்தான் கண்ணுக்கு தெரிகின்றன

  • கருத்துக்கள உறவுகள்

வெளியே தெரிபவை சில தெரியாதவை பல

ஏதாவது செய்ய வேண்டும்

மட்டுப்படுத்தப்பட்ட உதவிகளோடு நின்று விடாதீர்கள் என்பதை முகத்தில் அறைந்து சொல்லிலிட்டுச் சென்றிருக்கிறாய் சகோதரி.....

விரிபடுத்தப்பட்ட அரசியல் சாயமில்லாத உதவும் நிறுவனம் அல்லது பெண்கள் அமைப்பு இப்படி ஏதாவது ஒன்று பலமுள்ளதாக உருவாக்கப்படவேண்டும். முயற்சிப்போம். சகோதரி கையாலாகாத என்று அடைமொழிகளை தூக்கி எறியச் சொல்லியிருக்கிறாய். மீள்கிறேன்.

வல்வை சகாறாவின் கருத்துக்கு லைக். ஒரு சரியான அமைப்பு ஒன்றை அமைத்து நாங்கள் எதாவது செய்ய வேண்டும். இதை செய்யும் வரை தமிழீழத்தை பற்றி கதைக்க எங்களுக்கு அருகதை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சிறைக்குள் அடைபட்டிருப்பவனுக்கு சோற்றுப்பாசல் கொடுப்பது தீர்வல்ல.. விடுதலைக்கு வழிகாண்பதே தீர்வு.. அதற்குள் எல்லாம் அழிந்துவிடும் என்பது மனக்கணக்கு.. யூதர்கள் இன்னும் வாழவே செய்கின்றார்கள்..!

சிறைக்குள் அடைபட்டிருப்பவனுக்கு சோற்றுப்பாசல் கொடுப்பது தீர்வல்ல.. விடுதலைக்கு வழிகாண்பதே தீர்வு.. அதற்குள் எல்லாம் அழிந்துவிடும் என்பது மனக்கணக்கு.. யூதர்கள் இன்னும் வாழவே செய்கின்றார்கள்..!

இது சிறைக்குள் இருப்பவனுக்கு சோறு கொடுக்கும் விடயம் அல்ல. வாழ்வு தொடரமுடியாத ஒரு சமூகத்துக்கு சுவாசிக்க வழி செய்து கொடுப்பது. எமக்கான கடமைகளை தட்டிக் கழிக்கத்தான் இப்படி வார்த்தை விளையாட்டுகளும் வசன அமைப்புகளும் உதவி புரியும். இந்த மூன்றாண்டுகளில் நாங்கள் இந்த விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதுதான் இந்த பெண் போராளியும் இவரைப் போன்ற ஏராளமானவர்களும் வாழ்வை தொடர முடியாது துண்டித்து கொள்கின்றனர்.

எம்மை யூதர்களுடன் ஒப்பிடும் பாங்கு நாம் யூதர்களுக்கு செய்யும் பெருத்த அவமானம்

புலிகள் இருக்கும்வரையில் இந்தப் போராளிக்கு பாரிய உடல்ரீதியான பிரச்சினைகள் இருந்தாலும் தற்கொலை செய்யும் எண்ணம் வரவில்லை.. இறுதிக்கட்டத்திலும் தன்னாலான உதவிகளைச் செய்யும் மனநிலையிலேயே இருந்திருக்கிறார்..

அதை உடைத்தது யார் என்கிற கேள்வி எழ வேண்டும்.. மறுபடியும் அந்த நிலையைக் கொண்டுவருவது எப்படி என்கிற மட்டத்தில் இருக்க வேண்டும் கேள்விகள். நான் அடிக்கிறேன்.. நீ காசு கொடு என்றால் ஒருகட்டம் வரையில்தான் அதை முன்னகர்த்த முடியும்..

வெறும் காசை அனுப்பியிருந்தால் இப்போராளியைக் காப்பாற்றியிருக்கலாமா? அதுதான் இவரது முடிவுக்குக் காரணமா? இது எதுவும் தெரியாத நிலையில் புலம்பெயர் அமைப்பு என்று கொண்டு வந்து முடிப்பது எந்த வகையில் சரி..?

வசன விளையாட்டு என்பது வெறும் புலம்பெயர் அமைப்புகளைத் திட்டிக்கொண்டு காலத்தை ஓட்டுபவர்களில் உள்ளதே தவிர, வேறு எங்கும் இல்லை என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.. :D

ஹிட்லர் காலத்தில் யூதர்களுக்கு என்ன மதிப்பு இருந்தது என்பது வரலாறு.. அவர்களுடன் எம்மை இணைத்துப் பேசியது வேண்டுமானால் தமிழர்களுக்கு அவமானமாக இருக்கலாம்.. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

அந்த அக்காவின் தற்கொலைக்கு எங்கள் சமுதாயமும் அதன் கட்டமைப்புமே முக்கிய கார‌ணம்...வீர‌ வணக்கங்கள் அக்கா

  • கருத்துக்கள உறவுகள்

வசன விளையாட்டு என்பது வெறும் புலம்பெயர் அமைப்புகளைத் திட்டிக்கொண்டு காலத்தை ஓட்டுபவர்களில் உள்ளதே தவிர, வேறு எங்கும் இல்லை என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.. :D

ஹிட்லர் காலத்தில் யூதர்களுக்கு என்ன மதிப்பு இருந்தது என்பது வரலாறு.. அவர்களுடன் எம்மை இணைத்துப் பேசியது வேண்டுமானால் தமிழர்களுக்கு அவமானமாக இருக்கலாம்.. :wub:

நன்றி இசை

நான் எழுதலாம் எனத்தொடங்கி பின்னர் அழித்துவிட்டேன்.

இதற்குள் நான் பல காலமாக வேலை செய்ததால் அவர்களை குற்றம் சொன்னால் இவர் ஓடி வந்து எழுதுவார் என ஒரு தப்பான அர்த்தம் யாழில் வைத்திருக்கிறார்கள். அதனாலேயே தவிர்த்தேன்.

என் கருத்தெல்லாம் மற்றவரைப்பார்த்து கை நீட்டும்முன் உன்னை நான்கு விரல் காட்டுது என்பதை புரிந்து கொண்டு எழுதணும் என்பதே. குறிப்பிட்ட ஒரு தரப்பினர் மீது தொடரும் சுமைகளாலேயே இன்றைய நிலை என வன்னியை மட்டும் பார்த்து சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. அது தமிழர் எல்லோருக்குமே பொருந்தும். 10வீதத்தமிழரின் தலையில் எல்லாவற்றையும் போடும் பழக்கத்தை மாற்றி எல்லோரும் சிலுவையைச்சுமக்கணும் என்பதே எனது ஆர்வம். ஆசை. அதுவே விடிவு தரும்.

இங்கு புலம் பெயர் அமைப்புக்கள் பற்றி தூற்றி எழுதப்படும் கருத்துகளுக்கு ஊக்கமும் பச்சைகளும் போடுபவர்களைப்பார்த்தாலே போதும் எவ்வளவு தூரம் வெளியில் நிற்கின்றனர் என்பது புரியும்.

புலிகள் இருக்கும்வரையில் இந்தப் போராளிக்கு பாரிய உடல்ரீதியான பிரச்சினைகள் இருந்தாலும் தற்கொலை செய்யும் எண்ணம் வரவில்லை.. இறுதிக்கட்டத்திலும் தன்னாலான உதவிகளைச் செய்யும் மனநிலையிலேயே இருந்திருக்கிறார்..

இதைத்தான் நான் குறிப்பிட்டு இருந்தேன். புலிகள் ஒரு தாயாக எல்லாக் காயமடைந்த போராளிகளையும் தாங்கி இருந்த அதே மண்ணில் தான் இன்று அவர்கள் தற்கொலை செய்யும் அவலம் வருகின்றது. இவர்களின் தற்கொலை இராணுவ முகாமில் அல்ல நடக்கின்றது. இதே சமூகத்தில் தான் இவை நிகழ்கின்றன. அவர்கள் வாழும் சமூகத்தின் பொருளாதார அச்சாணியாக இருக்கும் புலம்பெயர் மக்களில் தான் இவர்களின் வாழ்க்கைக்கான ஆதாரம் இருக்கின்றது. அனைத்து வாழ்வாதாரங்களையும் இழந்து அகதிகளாகி, பேரினவாதத்தின் கொடூர பொருளாதார ஒடுக்குதலுக்குள்ளாகி இருக்கும் ஈழத் தமிழ் சமூகத்தால் நிச்சயம் அங்கவீனர்களாகியும் அநாதகளாகியும் இருக்கும் முன்னாள் போராளிகளை தாங்கிக் காக்கும் சக்தி இல்லை, இதற்கான சக்தியை கொடுக்க வேண்டியதும் கொடுக்க வல்லதும் புலம்பெயர் மக்களும் அமைப்புகளுமே ஆகும்

அதை உடைத்தது யார் என்கிற கேள்வி எழ வேண்டும்.. மறுபடியும் அந்த நிலையைக் கொண்டுவருவது எப்படி என்கிற மட்டத்தில் இருக்க வேண்டும் கேள்விகள். நான் அடிக்கிறேன்.. நீ காசு கொடு என்றால் ஒருகட்டம் வரையில்தான் அதை முன்னகர்த்த முடியும்..

இங்கு யார் உடைத்தது என்பது எல்லாருக்கும் தெரிந்த கேள்வி. உடைக்க முதல் இருந்த நிலையை இன்றோ நாளையோ நிச்சயம் எம்மால் உடனடியாக கொண்டு வர முடியாதது என்பதுதான் யதார்த்தம். இந்த கால அவகாசத்துக்குள் அநாதைகளாக்கப்பட்ட போராளிகளின் வாழ்வை அப்படி விட்டு விடாமல், அவர்களின் சுயமரியாதையுடனான வாழ்வுக்கான உறுதியான ஏற்பாடுகளைச் செய்ய நிச்சயம் புலம்பெயர் அமைப்புகளால் முடியும்.

முன்னர் இருந்த நிலையை கொண்டு வந்த பின் தான் இவர்களை காப்பாற்ற முடியும் என்பது எம்மை எம் பொறுப்பில் இருந்து தட்டிக் கழிக்கும் செயலே ஒழிய வேறொன்றும் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

வசன விளையாட்டு என்பது வெறும் புலம்பெயர் அமைப்புகளைத் திட்டிக்கொண்டு காலத்தை ஓட்டுபவர்களில் உள்ளதே தவிர, வேறு எங்கும் இல்லை என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.. :D

ஹிட்லர் காலத்தில் யூதர்களுக்கு என்ன மதிப்பு இருந்தது என்பது வரலாறு.. அவர்களுடன் எம்மை இணைத்துப் பேசியது வேண்டுமானால் தமிழர்களுக்கு அவமானமாக இருக்கலாம்.. :wub:

புலம்பெயர் அமைப்புக்கள் பற்றி எழுதினால் நான் வந்து எழுதுவேன் ஏனெனில் நானும் அதில் ஒருவன் என்ற கருத்து இங்கு உள்ளது. அதனால்தான் இதற்கு பதில் எழுதிவிட்டு அதை அழித்துவிட்டேன்.

இங்கு புலம் பெயர் அமைப்புகளுக்கு எதிராக வைக்கப்படும் கருத்துக்களையும் ஊக்குவிப்புபுக்களை செய்வோரையுயும் பார்க்கும்போது தெரியும் இவர்கள் அவர்களிலிருந்து எவ்வளவு தூரம் தள்ளி நிற்கின்றனர் என்பது.

இன்றைறய எமது நிலைக்கு முதல் காரணமே குறிப்பிட்ட ஒரு 10 வீத மக்களிடம் சுமையை ஏற்றிவிட்டு வாழாவிருந்ததும் வேடிக்கை பார்த்தும் தூற்றித்திரிந்ததுமே. அதையே தொடர்ந்து செய்வோமாயின் அந்த 10 வீதமும் சேதமடைந்து வீழ்ச்சியுறப்போவதைத்தான் காணமுடியும்.

என்னைப்பொறுத்தவரை ஒருவரைப்பார்த்து கை காட்டும்போது எம்மை

4 விரல்கள் சுட்டி நிற்கின்றன என்பதை முதலில் நாம் கணக்கெடுக்கவேண்டும்.

என்னால் முடிந்ததை நான் செய்கின்றேன். இவருக்கு என்னால் உதவ முடியவில்லையே என்பதால் தான் என்னை மன்னியுங்கள் என அவருக்கு அஞ்சலி போட்டேன்

Edited by விசுகு

என் கருத்தெல்லாம் மற்றவரைப்பார்த்து கை நீட்டும்முன் உன்னை நான்கு விரல் காட்டுது என்பதை புரிந்து கொண்டு எழுதணும் என்பதே. குறிப்பிட்ட ஒரு தரப்பினர் மீது தொடரும் சுமைகளாலேயே இன்றைய நிலை என வன்னியை மட்டும் பார்த்து சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. அது தமிழர் எல்லோருக்குமே பொருந்தும். 10வீதத்தமிழரின் தலையில் எல்லாவற்றையும் போடும் பழக்கத்தை மாற்றி எல்லோரும் சிலுவையைச்சுமக்கணும் என்பதே எனது ஆர்வம். ஆசை. அதுவே விடிவு தரும்.

இங்கு புலம் பெயர் அமைப்புக்கள் பற்றி தூற்றி எழுதப்படும் கருத்துகளுக்கு ஊக்கமும் பச்சைகளும் போடுபவர்களைப்பார்த்தாலே போதும் எவ்வளவு தூரம் வெளியில் நிற்கின்றனர் என்பது புரியும்.

விசுகு,

நானும் இந்த 10 வீதம் தவிர்ந்த மிச்ச 90 வீதத்தைத் தான் குறை சொல்கின்றேன். போர் முடிந்து விட்டதென ஊருக்கு ஓடிப்போய் கலர்ஸ் காட்டும் கூட்டம் இந்த 90 வீதத்தில் தான் அடங்கி இருக்கு. புலபெயர் குடும்பங்கள் என்று பார்த்தால் ஆகக் குறைந்தது 3 இலட்சமாவது வெளிநாடுகளில் இன்று இருக்கும். இவர்களில் 1 இலட்சம் பேராவது போரால் பாதிக்கப்பட்ட ஒருவரை பொறுப்பெடுத்து அவர்களின் வாழ்வாதரங்களை முன்னேற்ற முடிந்தாலே பல பிரச்சனைகள் மாறிவிடும்...ஆனால் நீங்கள் சொல்வது போன்று வெறும் 10 வீதம் தான் இதனை முன்னெடுக்கின்றனர் எனும் போது புலம்பெயர் சமூகத்தின் மீது விமர்சனம் வைப்பதில் தவறில்லை என்றே சொல்வேன்

இதனாலும் மனத்தாக்கங்களையும் சுமைகளையும் மேலும் அதிகரிக்கப்போவது இந்த 10 வீதத்தினரே.

இந்த 10 வீத்துக்குள்ளேயே புலம் பெயர் அமைப்புக்களைச்சார்ந்தோரும் வருகின்றனர். பலருக்கு வங்கி அட்டைகள் கூட இல்லை. பல வருடங்களுக்கு எடுக்க முடியாது.

புலிகளின் பெயரால் புலம்பெயர்ந்த நாடுகளில் சேர்த்த பணத்தை அங்குள்ள போராளிகளுக்கும் மக்களுக்கும் கொடுத்திருந்தாலே இப்படியான துயர்கள் வந்திருக்காது. இதனைப் பற்றி சிலர் எழுதினார்கள். அதற்கும் யாழில் எதிர்ப்புத்தான் வந்தது.

இந்த 10 வீத்துக்குள்ளேயே புலம் பெயர் அமைப்புக்களைச்சார்ந்தோரும் வருகின்றனர். பலருக்கு வங்கி அட்டைகள் கூட இல்லை. பல வருடங்களுக்கு எடுக்க முடியாது.

எனக்குத் தெரிந்த புலம்பெயர் அமைப்புகளில் இருப்பவர்கள், கடைசிச் சண்டைக்கு காசு சேர்த்தவர்கள் பலர் இரண்டுக்கு மேற்பட்ட சொகுசு வீடுகளும் வணிக நிலையங்களும் பல்பொருள் அங்காடிகளும் வைத்து இருக்கின்றனர். தலைவர் வந்தால் தான் இவற்றுக்கு கணக்கும் காட்டுவம் என்கின்றனர்

தற்கொலை செய்து கொண்ட பெண் போராளியின் சாவில் இத்தகைய அயோக்கியர்களின் கை ரேகைகளும் கலந்து இருக்கின்றதாகவே உணர்கின்றேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.