Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெரியவர்களே உங்கள் ஆலோசனை தேவை..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ்.. இதுக்கெல்லாம் ஆலோசனை கேட்கக் கூடாது.. கேட்டால் அட்வைஸ்தான் வரும்.. :D பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் சிந்திக்கக்கூடியவர்கள்.. உங்களுக்கு சரியெனப் படுவதைச் செய்யவேண்டியதுதான்.. :rolleyes:

உன்னை நீ நம்பு

மற்றவர்களின் ஆலோசனை என்பது உன்னால் எந்த ஒரு அடியையும் முன்னால் எடுத்து வைக்க உதவாது. கடந்துவந்த அனுபவங்களை வைத்து அடுத்த கட்டத்திற்கு எப்படி நகரலாம் என்பது உனக்கு தெரியும். நின்று நிலைத்து பெரியவர்களே என்ன செய்யலாம் என்று கேட்டால் தம்பி கொஞ்சம் சும்மா இரு... நாங்கள் செய்கிறோம். உனக்கு விளங்காது நாங்கள் எவ்வளவைக்கண்டிருக்கிறோம் என்று உன்னை அடக்கிப்போடும் தடைகளைச் சிருட்டித்துக்கொண்டிருப்பார்கள். இங்கு வேதனையான விடயம் என்ன என்றால் தாமும் உருப்படியாகச் செய்ய மாட்டார்கள் செய்யத்துணிபவர்களையும் உருப்படியாகச் செய்ய விடமாட்டார்கள். இந்த மனோபாவம் முதலில் நம்மினத்திற்குள் மாறவேண்டும். மாற்றவேண்டும் .

உன்னுடைய சிந்தனை வலியது. இதில் விடுதலை வேணவா அதீதமுள்ளது. நீண்டுகொண்டிருக்கும் போராட்டவாழ்வியலில் ஒவ்வொரு போராளிக்குள்ளும் முகிழ்க்கக்கூடிய சிந்தனை. போராட்டத்திற்கு அப்பாற்பட்ட சமூகப்பிரிவிடம் கேட்டால் அவர்களிடம் இருந்து எத்தகைய பதில் கிடைக்கும்?

  • Replies 116
  • Views 7.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தற்கொலை அரசியலையும் கொலை அரசியலையும் தாண்டிச் சிந்தித்தால் ஏதாவது தென்படும். அத்துடன் பெரும்பாலான தமிழ்மக்கள் உரிமைகளுடன் வாழவேண்டும் என்று மனதில் விரும்பியிருந்தாலும் "எதற்கு வீண்வம்பு" என்று அடங்கியே வாழப் பழகிவிட்டார்கள். அதனால்தான் அந்தக் காலத்தில் போராட்ட இயக்கங்களை ஆரம்பித்தவர்கள் "பெரியவர்"களின் அறிவுரைகளைக் கேளாமல் தங்களுக்கு தெரிந்த வழிகளில் தொடங்கினார்கள். வெல்லக்கூடியவர்கள் என்று நம்பிக்கை கொண்டவர்களின் பின்னர் கூட்டம் சேர்ந்தது. அதுதான் இப்போதும் நிலைமை!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கருத்து கிருபன் அண்ணா

எங்களுடைய படுதோல்விக்கு முதல் காரணம் எங்களது பிடிவாதம் அதையும் கலைந்து எங்கள் பலம் என்ன பலவீனம் என்ன எதிரி பலம் என்ன பலவீனம் என்ன உலகநாடுகள் என்ன நினைகிறது எதை எதிர்பாக்கிது போன்ற கணக்குகளை போட்டு நாங்களும் அரசியல் செய்ய பழக வேண்டும்.....

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கருத்து கிருபன் அண்ணா

எங்களுடைய படுதோல்விக்கு முதல் காரணம் எங்களது பிடிவாதம் அதையும் கலைந்து எங்கள் பலம் என்ன பலவீனம் என்ன எதிரி பலம் என்ன பலவீனம் என்ன உலகநாடுகள் என்ன நினைகிறது எதை எதிர்பாக்கிது போன்ற கணக்குகளை போட்டு நாங்களும் அரசியல் செய்ய பழக வேண்டும்.....

உரிமைகளைப் பெறவேண்டும் என்பதில் பிடிவாதம் வேண்டும். ஆனால் வழிமுறைகளில் பிடிவாதமாக இருந்ததால் காலவோட்டத்தில் வழிமுறைகள் சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத நிலைதோன்றியும் தொடர்ந்துகொண்டிருந்தது. அதற்காக உலகம் எப்படிச் சிந்திக்கின்றது, செயற்படுகின்றது என்று தெரியாமல் இருந்ததாக அர்த்தம் இல்லை.

இன்று ஒரு செய்தியின் தலைப்பு இப்படி இருந்தது!

அனைத்துலக போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தும் புதிய நகர்வில் விடுதலைப் புலிகள் – கொழும்பு ஆங்கில நாளேடு

எனக்குத் தெரிந்தவரை கடந்த அறுபது ஆண்டுகாலத்தில் முனையப்பட்ட விடயங்கள் அனைத்தும் முனையப்பட்டவர்களால் சிறப்பாகவே முனையப்பட்டன. அவர்களிற்குத் தெரியாது நாங்கள் செய்துகாட்டுவம் என்று ஏற்கனவே முயலப்பட்ட விடயங்களை மீள முயல்வது வினைத்திறன் அற்றது. வேண்டுமாயின் தோற்றுப்போனதற்கான காரணங்களைப் புதிதாக அறியலாம், ஏன் தவறுகள் பிரச்சினைகள் வந்தன என்று அறியலாம். ஆனால் அவ்வாறு நாங்கள் அறியும் காரணங்களை நாங்கள் திருத்தி அதே பழைய முயற்சிகளை வெற்றியாகச் செய்துமுடிப்போம் என்று கூற முடியாது. காரணம், மேற்படி முயற்சிகளின் தோல்விகளிற்கான பல பாரியகாரணங்கள் மாற்றமுடியாதவை. எனவே, பெட்டிக்கு வெளியே சிந்திக்காத எந்தச் சிந்தனையும் புதிய பெறுபேறுகளைத் தரப்போவதில்லை.

எனக்குத் தோன்றும் சிலவற்றைக் கூறுகிறேன்.

1) இடியமீன் கலைச்ச போது, இஸ்மாயிலி முஸ்லிம்களின் தலைவர் ஆகர்கான் தலைமையில் சில மேற்கு நாடுகளோடு அவர்கள் ஒரு உடன்படிக்கை செய்தார்க்ள். அதாவது, கிழக்காபிரிக்க நாடுகளில் இருந்து வெளியேற்றப்படும் இஸ்மாயிலி மக்களைக் குடிபுக அனுமதிக்கும் படியும், அவ்வாறு குடியேறுபவர்கள் சொந்தக் காலில் நிற்கும் வரையான அனைத்துச் செலவுகளையும் தாங்கள் பார்த்துக்கொள்வோம், அனுமதிக்கும் நாடுகளிற்கு எந்தப் பணவிரயமும் வராது என்று. இதன்படி அனுமதி பெற்றது மட்டுமல்ல அந்த மக்களைக் குடிபுகச் செய்து சொன்னது படியே செய்து வெற்றியும் பெற்றார்கள். இல்மாயிலிகள் பொதுவாக இன்றும் பெரும்பணக்காரர்களாக இருக்கிறார்க்ள.

இப்போ தாயகத்தில் முன்னாள் போராளிகள் உள்டங்கலாக எங்களவரது நிலை எங்கள் அனைவரையும் கொதிக்கச் செய்கிறது. உண்மையில் நாங்கள் ஒரு போராட்டத்தை முன்னெடுக்கக்கூடியவர்களாக, பலம் பொருந்தியவர்களாகத் தான் இருக்கிறோம் என்றால், குறைந்தது ஒரு ஐம்பது தொடக்கம் நூறு மில்லியன் டொலர் கட்டமைப்பை உருவாக்கி (இருபத்தையாயிரம் பேர் இரண்டாயிரத்து ஐந்நூறு டொலர்கள் கொடுத்தால் அறுபது மில்லியன் உடன வரும்) இஸ்மாயிலிகள் செய்தது போல் மிகப்பெரும் தொகையான எங்களவவரை, அவர்கள் கடலில் தினம் சாகாது, மேற்கின் ஏதோ ஒரு நாட்டிற்குக் கொண்டுவந்து சேர்க்கலாம். தமிழீழத்திற்கு வாக்கெடுப்பு நடத்து, போர்க்குற்றவாளியைத் தூக்கிலபோடு என்று நாங்கள் விடுக்கும் கோரிக்கைகளைக் காட்டிலும் மேற்கின் அரசியல் வாதிகளிற்கு நாங்கள் நூறு மில்லியன் கட்டமைப்பை வைத்துக் கொண்டு எங்கட சனத்தைக் கொண்டுவரக்கேட்பதை அனுமதிப்பது மில இலகு. பளிவாங்குவாங்குவது தான் முதல் நோக்கம் என்றால் இது சரிவராது. முக்கள் நலம் அக்கறை என்றால் சரிவரும். அது மட்டுமல்ல நூறுமில்லியன் கட்டமைப்பு உண்மையிலேயே ஒரு உண்மையான நாடுகடந்த தமிழீழம் என்ற கருத்தைப்போல எத்தனையோ சாதிக்கக் கூடியதாய் இருக்கும்.

ஏற்கனவே அவனவன் சேர்தகாசை வைச்சுக்கொண்டு எகத்தாளம் பேசும் வரலாறு எங்களிடம் உள்ளநிலையில், மேற்கின் சட்டதிட்டங்களிற்கேற்ப வெளிப்படையாக (இதில் என்ன ரகசியம். ரகசியம் இல்லாட்டி எவ்வாறு யார் யாரைச் சுத்துவது) இந்தக் கட்டமைப்பை உருவாக்கலாம். ஒவ்வொரு சதமும் வங்கிமூலம் சேர்க்கப்பட்டு, வங்கியில் இருந்து எவர் பணமெடுக்கலாம் என்பதை நினைக்கமுடியாத கடினமாய் உருவாக்கலாம்.

ஆனால் அப்படி ஒரு கட்டமைப்பை உருவாக்குவதற்கு முன் எங்களது மனநிலையில் ஒரு அடிப்படை மாற்றம் வரவேண்டும். அதாவது, சேர்க்கிற காசு சொல்லப்படுற விடயத்திற்காத்தான் உண்மையிலேயே சேர்க்கப்படுகின்றது என்பதைச் சேர்ப்பவர்கள் நம்பவும் செயற்படுத்தவும் வேண்டும். இதை ஏன் கூறுகிறேன் என்றால், ஆயுதப்போராட்டம் என்பது ஆரம்பம் முதல் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படுவது. ஆதனால், பணச்சேகரிப்பில் பல ஒழிவுமறைவுகள், திட்டங்கள் பொயர் பயன்படுத்தல்கள் என்று இருக்கத்தான் செய்யும். குடுக்கிறவரும் வாங்கிறவரும் ஆயுதத்தையே கனவுகண்டபடி உணவு என்று பற்றுச்சீட்டுப்போடப்பட்டது அக்காலத்து அவசியம் என்று புரிந்து கொள்ளப்படலாம். ஆனால், பலரிற்கு அந்த மனநிலை இன்னமும் தொடர்கிறது. முதலில் இது மாறவேண்டும். குடுக்கிறவரும் வாங்கிறவரும் ஏன் குடுக்குpறோம் எதற்காகக் குடுக்கிறோம் என்பதைத் தெரிவாகவும் உண்மையாவும் தெரிந்து பரிமாறவேண்டும். குடுப்பவர்கள் குடுப்பதற்கான நிலை இல்லை என்றால் அதற்கான பிரச்சாரம் கருத்துப்பகிர்வு என்பன முதலில் ஒரு முதிர்ச்சியடைந்த நிலையில் இடம்பெறவேண்டும்.

மற்றது குடுக்கிறவர் மட்டுமே இந்தப் பரிமாற்றத்தில் தேவை, வாங்கிறவர் என்ற பாத்திரமோ கட்டப்பஞ்சாயத்துத் தலைவர்களோ தேவையில்லை. அனைத்தும் வெளிப்படை. ஏற்கனவே ஊரிற்கு உதவிப்பணம் இவ்வழியில் சேகரிக்கப்படினும் ஊரில் இருப்பவர்களிற்கு நிவாரணம் கொடுப்பதும் இங்கு பரிந்துரைக்கப்படுவதும் முற்றிலும் வேறானவை.

உண்மையில் இன்று எமது முன்நாள் போராளிகளின் நிலையோ மக்களின் நிiயோ பலரிற்குப் பிரச்சினையாக இல்லாமைக்கான உண்மைக்காரணம், ஊடகம் அது இது என்று எல்லோரும் ஒன்றையே தெளிவின்றிக் கதைத்து எல்லாமே சத்தமாகப் போய்விட்டது. வார்த்தைகள் மலடாகப் போய்விட்டன. கோசங்கள் மட்டும் சடங்குகளாகப் போடப்படுகின்றன. இந்நிலை மாறாமல், அறிவுசார்ந்து விடயங்கள் அணுகப்படாமல், பெட்டிக்கு வெளியே சிந்திக்காமல் எதுவும் மாறப்போவதில்லை.

2) எங்களது 60 வருட கால முயற்சியும் திட்டவட்டமான புவியியல் பிரதேசம் சார்ந்து தான் நடந்தது. யாழ் களத்தில் கதைத்தபடி ஊரில் திண்ணையில் இருந்த கதைத்த உணர்வை அப்படியே தமிழன் வேர்ச்சுவலா அனுபவித்த காலத்திற்கு முந்தியது அது. நிலம் என்பது உண்மையில் மிகவும் சென்சிரிவான ரெத்தக்கொதிப்பேற்றும் விடயம் தான். அதைப் பற்றிக் கண்டபடி கதைக்கமுடியாது தான். ஆனால், இன்று யூதன் யூதனாக இருப்பதற்கான பலம் இஸ்ரேலாலாலோ இஸ்ரேலுக்குள்ளோ இல்லை. நாங்கள் வட்டம் கீறி எல்லை போட்டு அடிபட்டு நொருங்கிப்போனவர்களாக, தமிழீழம் என்றால் என்ன அது எப்படி எப்டி இருந்தால் பறவாயில்லை என்று பல அடிப்படைக் கதைகளிற்கு மீளவேண்டும். அதற்கு எங்களிற்குள் நடக்கும் கருத்துப்பகிர்வுகள் விவாதங்கள் முதிர்ச்சி பெறவேண்டும். நாங்கள் பார்த்த வரைபடத்தில் தமிழீழம் என்று குறிப்பிடப்பட்ட நிலப்பிரதேசத்திற்கப்பாற்பட்ட தமிழீழம் என்ற சிந்தனை பலரிற்கு எடுத்த எடுப்பில் நகைப்பேற்படுத்தும் என்பது நிதர்சனம். ஆனால் சிரிச்சுக் கழைத்து முடிந்தபின்னர், ஆழங்களிற்குச் செல்லின் சிலவேளை சில உடன்பாடுகள் தோன்றலாம். சாத்தியங்கள் தெரியலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிந்தவரை கடந்த அறுபது ஆண்டுகாலத்தில் முனையப்பட்ட விடயங்கள் அனைத்தும் முனையப்பட்டவர்களால் சிறப்பாகவே முனையப்பட்டன. அவர்களிற்குத் தெரியாது நாங்கள் செய்துகாட்டுவம் என்று ஏற்கனவே முயலப்பட்ட விடயங்களை மீள முயல்வது வினைத்திறன் அற்றது. வேண்டுமாயின் தோற்றுப்போனதற்கான காரணங்களைப் புதிதாக அறியலாம், ஏன் தவறுகள் பிரச்சினைகள் வந்தன என்று அறியலாம். ஆனால் அவ்வாறு நாங்கள் அறியும் காரணங்களை நாங்கள் திருத்தி அதே பழைய முயற்சிகளை வெற்றியாகச் செய்துமுடிப்போம் என்று கூற முடியாது. காரணம், மேற்படி முயற்சிகளின் தோல்விகளிற்கான பல பாரியகாரணங்கள் மாற்றமுடியாதவை. எனவே, பெட்டிக்கு வெளியே சிந்திக்காத எந்தச் சிந்தனையும் புதிய பெறுபேறுகளைத் தரப்போவதில்லை.

எனக்குத் தோன்றும் சிலவற்றைக் கூறுகிறேன்.

1) இடியமீன் கலைச்ச போது, இஸ்மாயிலி முஸ்லிம்களின் தலைவர் ஆகர்கான் தலைமையில் சில மேற்கு நாடுகளோடு அவர்கள் ஒரு உடன்படிக்கை செய்தார்க்ள். அதாவது, கிழக்காபிரிக்க நாடுகளில் இருந்து வெளியேற்றப்படும் இஸ்மாயிலி மக்களைக் குடிபுக அனுமதிக்கும் படியும், அவ்வாறு குடியேறுபவர்கள் சொந்தக் காலில் நிற்கும் வரையான அனைத்துச் செலவுகளையும் தாங்கள் பார்த்துக்கொள்வோம், அனுமதிக்கும் நாடுகளிற்கு எந்தப் பணவிரயமும் வராது என்று. இதன்படி அனுமதி பெற்றது மட்டுமல்ல அந்த மக்களைக் குடிபுகச் செய்து சொன்னது படியே செய்து வெற்றியும் பெற்றார்கள். இல்மாயிலிகள் பொதுவாக இன்றும் பெரும்பணக்காரர்களாக இருக்கிறார்க்ள.

[size=6]இப்போ தாயகத்தில் முன்னாள் போராளிகள் உள்டங்கலாக எங்களவரது நிலை எங்கள் அனைவரையும் கொதிக்கச் செய்கிறது. உண்மையில் நாங்கள் ஒரு போராட்டத்தை முன்னெடுக்கக்கூடியவர்களாக, பலம் பொருந்தியவர்களாகத் தான் இருக்கிறோம் என்றால், குறைந்தது ஒரு ஐம்பது தொடக்கம் நூறு மில்லியன் டொலர் கட்டமைப்பை உருவாக்கி (இருபத்தையாயிரம் பேர் இரண்டாயிரத்து ஐந்நூறு டொலர்கள் கொடுத்தால் அறுபது மில்லியன் உடன வரும்) இஸ்மாயிலிகள் செய்தது போல் மிகப்பெரும் தொகையான எங்களவவரை, அவர்கள் கடலில் தினம் சாகாது, மேற்கின் ஏதோ ஒரு நாட்டிற்குக் கொண்டுவந்து சேர்க்கலாம். தமிழீழத்திற்கு வாக்கெடுப்பு நடத்து, போர்க்குற்றவாளியைத் தூக்கிலபோடு என்று நாங்கள் விடுக்கும் கோரிக்கைகளைக் காட்டிலும் மேற்கின் அரசியல் வாதிகளிற்கு நாங்கள் நூறு மில்லியன் கட்டமைப்பை வைத்துக் கொண்டு எங்கட சனத்தைக் கொண்டுவரக்கேட்பதை அனுமதிப்பது மில இலகு. பளிவாங்குவாங்குவது தான் முதல் நோக்கம் என்றால் இது சரிவராது. முக்கள் நலம் அக்கறை என்றால் சரிவரும். அது மட்டுமல்ல நூறுமில்லியன் கட்டமைப்பு உண்மையிலேயே ஒரு உண்மையான நாடுகடந்த தமிழீழம் என்ற கருத்தைப்போல எத்தனையோ சாதிக்கக் கூடியதாய் இருக்கும்.

ஏற்கனவே அவனவன் சேர்தகாசை வைச்சுக்கொண்டு எகத்தாளம் பேசும் வரலாறு எங்களிடம் உள்ளநிலையில், மேற்கின் சட்டதிட்டங்களிற்கேற்ப வெளிப்படையாக (இதில் என்ன ரகசியம். ரகசியம் இல்லாட்டி எவ்வாறு யார் யாரைச் சுத்துவது) இந்தக் கட்டமைப்பை உருவாக்கலாம். ஒவ்வொரு சதமும் வங்கிமூலம் சேர்க்கப்பட்டு, வங்கியில் இருந்து எவர் பணமெடுக்கலாம் என்பதை நினைக்கமுடியாத கடினமாய் உருவாக்கலாம்.

ஆனால் அப்படி ஒரு கட்டமைப்பை உருவாக்குவதற்கு முன் எங்களது மனநிலையில் ஒரு அடிப்படை மாற்றம் வரவேண்டும். அதாவது, சேர்க்கிற காசு சொல்லப்படுற விடயத்திற்காத்தான் உண்மையிலேயே சேர்க்கப்படுகின்றது என்பதைச் சேர்ப்பவர்கள் நம்பவும் செயற்படுத்தவும் வேண்டும். இதை ஏன் கூறுகிறேன் என்றால், ஆயுதப்போராட்டம் என்பது ஆரம்பம் முதல் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படுவது. ஆதனால், பணச்சேகரிப்பில் பல ஒழிவுமறைவுகள், திட்டங்கள் பொயர் பயன்படுத்தல்கள் என்று இருக்கத்தான் செய்யும். குடுக்கிறவரும் வாங்கிறவரும் ஆயுதத்தையே கனவுகண்டபடி உணவு என்று பற்றுச்சீட்டுப்போடப்பட்டது அக்காலத்து அவசியம் என்று புரிந்து கொள்ளப்படலாம். ஆனால், பலரிற்கு அந்த மனநிலை இன்னமும் தொடர்கிறது. முதலில் இது மாறவேண்டும். குடுக்கிறவரும் வாங்கிறவரும் ஏன் குடுக்குpறோம் எதற்காகக் குடுக்கிறோம் என்பதைத் தெரிவாகவும் உண்மையாவும் தெரிந்து பரிமாறவேண்டும். குடுப்பவர்கள் குடுப்பதற்கான நிலை இல்லை என்றால் அதற்கான பிரச்சாரம் கருத்துப்பகிர்வு என்பன முதலில் ஒரு முதிர்ச்சியடைந்த நிலையில் இடம்பெறவேண்டும்.

மற்றது குடுக்கிறவர் மட்டுமே இந்தப் பரிமாற்றத்தில் தேவை, வாங்கிறவர் என்ற பாத்திரமோ கட்டப்பஞ்சாயத்துத் தலைவர்களோ தேவையில்லை. அனைத்தும் வெளிப்படை. ஏற்கனவே ஊரிற்கு உதவிப்பணம் இவ்வழியில் சேகரிக்கப்படினும் ஊரில் இருப்பவர்களிற்கு நிவாரணம் கொடுப்பதும் இங்கு பரிந்துரைக்கப்படுவதும் முற்றிலும் வேறானவை.

உண்மையில் இன்று எமது முன்நாள் போராளிகளின் நிலையோ மக்களின் நிiயோ பலரிற்குப் பிரச்சினையாக இல்லாமைக்கான உண்மைக்காரணம், ஊடகம் அது இது என்று எல்லோரும் ஒன்றையே தெளிவின்றிக் கதைத்து எல்லாமே சத்தமாகப் போய்விட்டது. வார்த்தைகள் மலடாகப் போய்விட்டன. கோசங்கள் மட்டும் சடங்குகளாகப் போடப்படுகின்றன. இந்நிலை மாறாமல், அறிவுசார்ந்து விடயங்கள் அணுகப்படாமல், பெட்டிக்கு வெளியே சிந்திக்காமல் எதுவும் மாறப்போவதில்லை.[/size]

இங்கு எழுதப்பட்ட மிகச்சிறந்த கருத்துக்களில் ஒன்று...இதை நான் முன்னரும் எனது கவிதைகளில் எழுதி இருக்கன்..எல்லோரையும் மிகப்பெரிய அளவில் முற்றிலுமாக வெளியே எடுக்கவேண்டும்...பின்னர் எல்லோரும் ஒன்றிணைந்து பாரிய அழுத்தங்களை வெளிநாட்டு அரசுகளுக்கு கொடுக்கவேண்டும் எங்கள் பொருளாதாரம் மற்றும் ஏனைய எல்லாவழிகளிலும்..இது புலம்பெயர்ந்த உறவுகள் மனம்வைத்தால் சாத்தியமே...இதுதான் இப்படியான சிந்தனைகள்தான் இன்னுமொருவன் அண்ணாவில் எனக்குப் பிடித்ததே...இது இரண்டு வேலைகளைச் செய்யும்..ஒன்று அங்கு வறுமையில் வாடும் எம் உறவுகள் எங்களைப்போல நிம்மதியான வாழ்வைப் பெற்றுக்கொள்வார்கள்..அஞ்சுக்கும் பத்துக்கும் அவர்கள் மாசம் மாசம் தொண்டு நிறுவனங்களிடம் கையேந்த தேவை இல்லை...இப்படி ஒரு கருத்தைதான் முன்னர் கரும்பின் ஒரு திரியில் எழுதி இருந்தேன்(http://www.yarl.com/forum3/index.php?showtopic=103639&#entry773043)..இரண்டு வெளிநாடுகளில் எமது எண்ணிக்கை அதிகமாகும்..யூதர்கள் போல் ஒரு சக்தியாக நாங்கள் வெளிநாடுகளில் தலையெடுக்க்கலாம்..ஒரு கொஞ்சப்பேர் வெளிநாடுகளில் இருந்துகொண்டே இவ்வளவு செய்யமுடிந்தால் எல்லோரும் ஒன்று சேர்ந்தால் நிச்சயம் ஒரு பெரும் சக்தியாக திரலலாம்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2) எங்களது 60 வருட கால முயற்சியும் திட்டவட்டமான புவியியல் பிரதேசம் சார்ந்து தான் நடந்தது. யாழ் களத்தில் கதைத்தபடி ஊரில் திண்ணையில் இருந்த கதைத்த உணர்வை அப்படியே தமிழன் வேர்ச்சுவலா அனுபவித்த காலத்திற்கு முந்தியது அது. நிலம் என்பது உண்மையில் மிகவும் சென்சிரிவான ரெத்தக்கொதிப்பேற்றும் விடயம் தான். அதைப் பற்றிக் கண்டபடி கதைக்கமுடியாது தான். ஆனால், இன்று யூதன் யூதனாக இருப்பதற்கான பலம் இஸ்ரேலாலாலோ இஸ்ரேலுக்குள்ளோ இல்லை. நாங்கள் வட்டம் கீறி எல்லை போட்டு அடிபட்டு நொருங்கிப்போனவர்களாக, தமிழீழம் என்றால் என்ன அது எப்படி எப்டி இருந்தால் பறவாயில்லை என்று பல அடிப்படைக் கதைகளிற்கு மீளவேண்டும். அதற்கு எங்களிற்குள் நடக்கும் கருத்துப்பகிர்வுகள் விவாதங்கள் முதிர்ச்சி பெறவேண்டும். நாங்கள் பார்த்த வரைபடத்தில் தமிழீழம் என்று குறிப்பிடப்பட்ட நிலப்பிரதேசத்திற்கப்பாற்பட்ட தமிழீழம் என்ற சிந்தனை பலரிற்கு எடுத்த எடுப்பில் நகைப்பேற்படுத்தும் என்பது நிதர்சனம். ஆனால் சிரிச்சுக் கழைத்து முடிந்தபின்னர், ஆழங்களிற்குச் செல்லின் சிலவேளை சில உடன்பாடுகள் தோன்றலாம். சாத்தியங்கள் தெரியலாம்.

நன்றி அண்ணா..இந்த திரி பெற்றுக்கொண்ட பிரயோசமான விடயங்களில் உங்கள் பதிவும் ஒன்று....நீங்கள் யார் எப்படி இருப்பீர்கள் என்று எனக்குதெரியாது...ஆனால் யாழில் உங்கள் ஒவ்வொரு கருத்துக்களிளும் பதிவுகளிலும் என்னை பிரமிக்கவைத்துக்கொண்டிருப்பவர்...உங்கள் சிந்தனையின் வீச்சு பரந்தது...உங்களிடம் கற்றுக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் அது என் வாழ்க்கையின் பெரிய பெறுமதியாக இருக்கும்...வாழ்க்கையிலை நான் நேரில் சந்திக்கவேணுமின்னா நான் சொல்லும் பெயர்களில் நீங்களும் ஒருவர்...

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ் நானும் வாசித்தேன்

இப்படி ஒவ்வொருவரும் காலத்துக்கு காலம் இதே கருத்தை சொல்கிறார்கள். ஆனால் செயற்படுத்தப்படுவது தான் தாமதமாகிறது.

இதே தேவைகளுக்காகத்தான் தலைவரால் பல தொழில்களும் முதலீடுகளும் செய்யப்பட்டன. இன்று அவையே எம்மை மேலும் மேலும் பிரித்து நிற்கின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக மிக முக்கியமான மறுதலிக்கப்பட முடியாத கருத்து இன்னுமொருவன் அண்ணா.

இது எம்மால் முடியாத,சிக்கலான விடையமும் அல்ல. வார்த்தைகளே இல்லை அண்ணா.

நேரம் இருப்பின் உங்கள் போன்றவர்கள் அதிகம் எழுதுங்கள் யாரேனும் ஒருவராவது பயன்பெறுவார்கள். நன்றி இன்னுமொருவன் அண்ணா. :)

[size=4]இன்னுமொருவன்:[/size]

[size=4]பல நல்ல கருத்துக்கள், நன்றிகள். இருந்தாலும் சில கருத்துக்களை ஏற்க முடியவில்லை.

" எனக்குத் தெரிந்தவரை கடந்த அறுபது ஆண்டுகாலத்தில் முனையப்பட்ட விடயங்கள் அனைத்தும் முனையப்பட்டவர்களால் சிறப்பாகவே முனையப்பட்டன. அவர்களிற்குத் தெரியாது நாங்கள் செய்துகாட்டுவம் என்று ஏற்கனவே முயலப்பட்ட விடயங்களை மீள முயல்வது வினைத்திறன் அற்றது. வேண்டுமாயின் தோற்றுப்போனதற்கான காரணங்களைப் புதிதாக அறியலாம், ஏன் தவறுகள் பிரச்சினைகள் வந்தன என்று அறியலாம். ஆனால் அவ்வாறு நாங்கள் அறியும் காரணங்களை நாங்கள் திருத்தி அதே பழைய முயற்சிகளை வெற்றியாகச் செய்துமுடிப்போம் என்று கூற முடியாது. காரணம், மேற்படி முயற்சிகளின் தோல்விகளிற்கான பல பாரியகாரணங்கள் மாற்றமுடியாதவை. எனவே, பெட்டிக்கு வெளியே சிந்திக்காத எந்தச் சிந்தனையும் புதிய பெறுபேறுகளைத் தரப்போவதில்லை."

அறுபது ஆண்டுகளாக எதை நாம் முயற்சிக்கின்றோம்? எமது மக்களின் நியாயமான அரசியல் விடுதலையை. எனவே நாம் இதுவரை சாத்வீக, ஆயுத ரீதியாக முன்னெடுத்த போராட்டங்கள் தோல்வியில் முடிந்தாலும் நாம் முயற்சித்தே ஆகவேண்டும். மாறும் உலக பரிணாமங்களுக்கு ஏற்ப நாமும் எம்மை மாற்றி விடுதலையை முன்னெடுக்கவேண்டும். இது தான் பெட்டி. சிந்தனைகள் பெட்டிக்கு வெளியே செல்லவேண்டும், ஆனால் இலக்கு விடுதலையாக என்றும் இருக்கேவேண்டும். [/size]

[size=4]" இப்போ தாயகத்தில் முன்னாள் போராளிகள் உள்டங்கலாக எங்களவரது நிலை எங்கள் அனைவரையும் கொதிக்கச் செய்கிறது. உண்மையில் நாங்கள் ஒரு போராட்டத்தை முன்னெடுக்கக்கூடியவர்களாக, பலம் பொருந்தியவர்களாகத் தான் இருக்கிறோம் என்றால், குறைந்தது ஒரு ஐம்பது தொடக்கம் நூறு மில்லியன் டொலர் கட்டமைப்பை உருவாக்கி (இருபத்தையாயிரம் பேர் இரண்டாயிரத்து ஐந்நூறு டொலர்கள் கொடுத்தால் அறுபது மில்லியன் உடன வரும்) இஸ்மாயிலிகள் செய்தது போல் மிகப்பெரும் தொகையான எங்களவவரை, அவர்கள் கடலில் தினம் சாகாது, மேற்கின் ஏதோ ஒரு நாட்டிற்குக் கொண்டுவந்து சேர்க்கலாம். தமிழீழத்திற்கு வாக்கெடுப்பு நடத்து, போர்க்குற்றவாளியைத் தூக்கிலபோடு என்று நாங்கள் விடுக்கும் கோரிக்கைகளைக் காட்டிலும் மேற்கின் அரசியல் வாதிகளிற்கு நாங்கள் நூறு மில்லியன் கட்டமைப்பை வைத்துக் கொண்டு எங்கட சனத்தைக் கொண்டுவரக்கேட்பதை அனுமதிப்பது மில இலகு. பளிவாங்குவாங்குவது தான் முதல் நோக்கம் என்றால் இது சரிவராது. முக்கள் நலம் அக்கறை என்றால் சரிவரும். அது மட்டுமல்ல நூறுமில்லியன் கட்டமைப்பு உண்மையிலேயே ஒரு உண்மையான நாடுகடந்த தமிழீழம் என்ற கருத்தைப்போல எத்தனையோ சாதிக்கக் கூடியதாய் இருக்கும்."

கனடா ஒரு மேற்குலக நாடு, அதிகளவில் தமிழர்கள் தொகையில் வாழ்பவர்கள். பல மேற்குலக நாடுகள் தடை செய்துள்ளன விடுதலைப்புலிகளை. இரண்டு கப்பல்களில் வந்த முன்னால் போராளிகளை என்ன செய்தனர்?

எனவே பணம் இருந்தால் முன்னால் போராளிகளை மேற்குலகம் கொண்டுவரலாம் என்பது ஏற்க கூடியதல்ல. [/size]

அண்மையில் என்னை ரொம்ப சிந்திக்க வைச்ச ஒரு விடயம் முஸ்லீம்களை எங்கை அடித்தால் அவர்களை உலகின் முன் தவறானவர்களாக,காட்டுமிராண்டிகளாக,கொலைகாறர்களாக காட்டலாம் என்பதை புரிந்துவைத்துக்கொண்டு அவர்களின் மதவெறி எனும் முட்டாள்தனத்தை குறிவைத்து அடித்து ஒட்டு மொத்த உலகின் வெறுப்பை சம்பாதிப்பவர்களாக அவர்களை அமெரிக்கா தனது தந்திரத்தால் ஆக்கியது....ஏன் நம்ம சீமானோ,இல்லை வைகோவோ,இல்லை எங்கடை புலம்பெயர் தமிழ் அமைப்புக்களோ,இல்லை நாமோ இணைந்து பெளத்தத்தை உரசும்வகையில் ஒரு குறும்/நெடும் படம் தயாரித்து வெளியிடக்கூடாது..? வெளியிட்டால் கொழும்பு பற்றி எரியும்..சிங்களவனின் உண்மை முகம் உலகம் அறியும்...முக்கியமாக வெளியிடும் படத்தை இந்தியாவில் பெளத்தவர்கள் அநேகம் இருக்கும் மாநிலங்களை குறிவைத்து வெளியிடவேண்டும்...அப்பதான் தீ பக்கெண்டு இலங்கையையும் பற்றும்....அத்துடன் எமக்கு எதிராக சிங்களப் பத்திரிகைகளில் விசம் கக்கும் ஊடகவியலாளர்களையும் தொடர்புகொண்டு போட்டுக்கொடுக்கவேண்டும் இந்தப்படத்தைப் பற்றி பயங்கரமாக...முடிந்தால் கொஞ்சம் இலங்கைக் காசையும் தள்ளி அவர்களை சிங்களமக்களை தூண்டும் வகையில் எழுதவைக்கலாம்...யாரும் முன்வராட்டி இதை நாங்கள் சிலர் செய்வமோ எண்டு யோசிக்கிறம்..எல்லாரிடமும் நாம் கெட்டவர்கள் ஆனாலும் பறவாயில்லை இதன்மூலம் இந்தமுக்கியமான நேரத்தில் சிங்களவனின் இன்னொருமுகம் உலகம் அறிந்தால் சந்தோசமாக இருக்கும்..என்ன வரிசைகட்டி வாங்கோ எம்மை வைய்பவர்கள் :D ...செய்வதா,வேணாமா..? பெரியவர்களே உங்கள் ஆலோசனை தேவை...நாங்கள் வயசில் சிறியவர்கள்...உணர்ச்சிகரமான விடயங்களில் தவறாக முடிவெடுத்துவிடக்கூடாதென்பதால் உங்களிடம் கேட்கிறோம்...

சிங்கள வன்முறைகள் மோசமான காலத்தில் ஒரு கருத்துப்படம் வரைந்திருந்தார்கள், ஒரு சிப்பாய் முதலில் புத்தரையே துப்பாக்கியால் சுடுகின்றான் அந்த கருத்துப்படத்தில். அதன் அர்த்தம் புத்த சமய வழிகளை பின்பற்றுகின்றவர்கள் குருவி காக்காயை கூட சுட முடியாது. தமிழரை கொல்ல வேண்டுமாயின் முதலில் புத்தரை கொல்லவேண்டும்.

சிங்களம் தன்னை பெருந்தேசிய இனமாக உருவாக்கிக்கொள்ள பௌத்த சமயத்தை பாவித்துக்கொண்டது. காணொளி உருவாக்க வேண்டும் என்ற உங்கள் ஆர்வம் பாராட்டுதலுக்குரியது அதே நேரம் அதற்காக நீங்கள் எடுத்த கரு சிங்களவருக்கே சாதகமானது என்பதே உண்மை. பௌத்தம் என்ற புனிதமான ஆன்மீக மார்க்கத்தை நரகமாக மாற்றுபவர்கள் இவ்வுலகில் சிங்களவர்களே என்றே காணொளி உருவாகவேண்டும். அதுவே உண்மையும் கூட. பௌத்தத்துக்கும் சிங்கள இனவெறிக்குமான முரண்பாட்டை எடுத்துரைப்பதே பொருத்தமானது.

மேலும் பௌத்தத்துக்கும் தமிழுக்கும் இடையிலான உறவு என்ன. தமிழ் இலக்கியங்களின் வேர் பௌத்த சமண அடிப்படையைக் கொண்டவையே. திருக்குறள் உட்பட. சமணரையும் பௌத்தரையும் கழுவேற்றி மதவெறிபிடித்து நமது முன்னோர் தமக்குத் தாமே ஆப்பு வைத்துக்கொண்டனர். உண்மையில் சிங்களவரை விட தமிழருக்கே பௌத்தத்தின் மீது உரிமை அதிகம். ஆனால் பௌத்தத்தில் பல நல்ல விசயங்கள் இருப்பதால் தமிழர்கள் அதிலிருந்து விலகி சாதிய ஏற்றதாழ்வை ஸ்தாபிக்கக் கூடிய இந்து மதத்தை கையில் எடுத்தனர்.

சிங்களவர்கள் தமது தேசிய இனத்தை கட்டியெழுப்ப தமக்கேற்ற வகையில் வரலாற்றை எழுதினர். தமது முன்னோர்கள் மன்னர்களை பௌத்த மதத்தை சரியான வகையில் முன்னிலைப்படுத்தி மக்களை சிங்களத் தேசியத்தின் பால் ஒருமுகப்படுத்தி வழிநடத்தினர். நாம் இருந்த சமூகக் கட்டமைப்பை எந்தெந்த வகையில் சிதைக்க முடியுமோ அவ்வகையில் எல்லாம் சிதைத்துக்கொண்டிருந்தோம். எமது மண்ணில் பண்டார வன்னியனும் எல்லாளனும் சங்கிலியனும் என்னும் பல மன்னர்கள் இருந்தும் சேரன் சோழன் பாண்டியன் என்று முன்னிலைப்படுத்தினோம். (கடசிக் கந்தாயத்தில் எல்லாளனை இழுத்தோம் கண்கெட்டபிறகு சூரிய வணக்கம் போல) பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பாடல் பெற்ற கோணேஸ்வரம் கேதீஸ்வரம் இருந்தும் நல்லூரை மட்டும் கட்டிப்பிடித்துக்கொண்டிருந்தோம். அதுவும் சிங்களவனுக்கு வசதியாய் போய்விட்டது . தமிழர்களின் சொந்த பூமி தமிழ்நாடு அங்கேயே போகட்டும் என்றான். எமக்கான வரலாற்றையே நிராகரிப்பவர்களாகவும் அலட்சியம் செய்பவர்களாகவும் நாம் இருக்கின்றோம் அதனடிப்படையில் தமிழர்களின் அழிவு இயற்கையானது.

[size=4]கனடா ஒரு மேற்குலக நாடு, அதிகளவில் தமிழர்கள் தொகையில் வாழ்பவர்கள். பல மேற்குலக நாடுகள் தடை செய்துள்ளன விடுதலைப்புலிகளை. இரண்டு கப்பல்களில் வந்த முன்னால் போராளிகளை என்ன செய்தனர்?

எனவே பணம் இருந்தால் முன்னால் போராளிகளை மேற்குலகம் கொண்டுவரலாம் என்பது ஏற்க கூடியதல்ல. [/size]

நன்றி சுபேஸ், ஜீவா அக்கூதா.

அக்கூதா,

கரையில் கப்பலைக் கொண்டந்து அடிக்கும் ஒரு நிகழ்வு பற்றி ஒரு நாடு ஆற்றும் எதிர்வினைக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. மெறிரைம் பாதுகாப்பு என்பது, கப்பலில் பூர்வகுடிகளைப் படையெடுத்துப் பிடித்து அரசமைத்த மேற்கின் உளவியலில் எப்போதும் ஒரு காத்திரமான பங்கு வகிப்பது. நான் கூறவில்லை நூறுமில்லியன் டொலரைச் சேகரித்து ஆளிற்கு நாற்பதினாயிரம் என்று ஏஜென்சிக்குக் கட்டிக் கடலுக்கால எங்கட சனத்தைக் கொண்டுவரவேண்டும் என்று. எங்கள் மக்கள் வந்துசேர்வது நாம் எதிர்பார்க்கும் விளைவாக இருக்கின்ற அதே நேரம், நூறு மில்லியன் (உண்மையில் சரியாக நாம் ஒன்றிணைவோமேயாயின் நூறு மில்லியன் வெறும் ஆரம்பம் மட்டுமே) கட்டமைப்பு 'பிப் பிக்ச்சரில்' பல பங்குகளை ஆற்றும்.

ஒரு வாக்கியத்தில் எனக்குப் பூரண உடன்பாடுள்ளது. அதாவது. ஒரு கோரிக்கையினை நியாயப்படுத்துவதிற்கான முதற்படி அக்கோரிக்கையினை முன்வைப்பவரை நியாயப்படுத்துவது.

நூறு மில்லியன் கட்டமைப்பு என்பது, அந்தக் கட்டமைப்புத் தான் முன்மொழியும் விடயத்தைச் செய்யக்கூடிய நியாயத் தன்மையினை அதற்கு உருவாக்குவதற்கான படிகளில் ஒன்று. சிக்காக்கோ ஏழு மில்லியன் முதலீடடைச் ரொறன்ரோவில் செய்வதற்காக ரொறன்ரோ மேயர் சிக்காக்கோவில் காத்து நிற்கையில் நூறு மில்லியனை வைத்துப் பல விடயங்கள் சாதிக்கலாம். மேலும் நூறு மில்லியனைத் தலையணைக்குக் கீழ் வைத்து விட்;டு ஒவ்வொன்றா நோட்டை எடுத்துச் செலழிப்பது என்பதில்லைத் தானே. முதலீடுகள், புறோக்கறேச் என்று பலரது நலன்களை நாம் ஆர்வப்படுத்தவும் அதன் மூலம் எமது வீச்சை அதிகரிக்கவும் முடியும்..

எல்லாத்திற்கும் மேலால,; நாங்கள் லட்சக் கணக்கான மக்கள் மேற்கில் பல சிறப்புக்களுடன் வாழ்ந்தும், சிங்களவரின் முயற்சியாலும் இதர பல காரணங்களாலும், தமிழரை வெறுமனே லைனில் நின்று கொடி பிடிச்சுக் கூட்டம் வைப்பவர்களாக, அப்பப்போ பெருந்தெரு மறியல் செய்யக் கூடியவர்களாக, ஆயுதம் வாங்கவும் கடத்தவும் மக்களை வெருட்டீப் பணம் சேர்க்கக் கூடியவர்களாக (ஹியூமன் றைட்ஸ் வோட்ச் அறிக்கையான 'லிவிங் இன் பியர்' பற்றிச் சொல்லுகிறேன்) தான் பலரது பார்வையில் வைத்திருக்கிறார்கள். கனடாவை எடுத்தால் இங்குள்ள உளவுப் பிரிவுகள் பெருந்தொகை பட்ஜெட்டை எங்கள் பேரில் பெற்றுக்கொள்வதற்கும் பின் அந்த பட்ஜெட்டுக்குக் காரணம் காட்ட எங்கள் சமூகத்தலைவர்கள் என்று அட்டவணை போட்டு அனைவரது வீடுகளிற்கும் பல சமயங்களில் வேலைகளிற்கும் கோப்பிக் கடைகளிற்கும் சென்று கதை பிடுங்கவும் செய்கிறார்கள். ஒரு குழுமத்தின் சமூகத்தலைவர்களை கண்காணிப்பதற்காக உளவுத்துறை பட்ஜெட் அதிகரிப்புக் கேட்டுக்கொண்டிருக்கையில், அரசின் கனதியான மேல்மட்டங்கள் கூட்டங்களில் இந்தக் குழுமத்தை எவ்வாறு கையாள்வது என்று தங்களிற்குள் கதைத்துக்கொண்டிருடிக்கையில், எங்கள் விம்பம் மட்டமாகத் தான் இருக்கும். அப்படியான நிலையில், எப்படி இந்தக் கப்பல் கடலில் தப்பியது என்று நினைக்கும் கப்பலைக் கச்சிதமாய் அத்தனை தூரம் கொண்டுவந்து கனேடியக் கரையில் அடிக்கையில், நானும் நீங்களும் நினைக்காத மட்டங்களில் அரசு புருவத்தை உயர்த்திப் பார்ப்பது நடக்கத் தான் செய்யும்.

சிங்களவர் நினைத்துப் பார்க்க முடியாத வீச்சு எங்களிடம் உள்ளது. ஆனால் இன்னும் அந்த விம்பம் பொதுமை சார்ந்து வெளிவரவில்லை. உளவுத்துறைக்கு, தங்களின் பட்ஜெட்டை அதிகரிக்கக் கூட்டத்தில் ஒன்றாக எங்கள் பெயரையும் பாவிக்கலாம் என்று தோன்றவே முடியாத அளவிற்கு நாங்கள் மாறலாம்.. எந்த இரகசியமும் எங்களிற்கு இனித் தேவையில்லை.

நாங்கள் மட்டுமல்ல யூதர்களின் கப்பலும் சீக்கியர்களின் கப்பலும் கூட கனேடிய வரலாற்றில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. இன்று யூதரைத் திருப்பி அனுப்பிய வரலாற்றைக் கதைக்கவே நடுங்குகிறார்கள். அனைத்தும் விம்பத்தில் தான் இருக்கிறது. முன்னாள் போராளிகள் என்பது சிக்கலான விடயம் தான் மறுக்கவில்லை. ஆனால் எங்களது அணுகுமுறைகள் கிரமாக மாறி நூறுமில்லியனைத் தாண்டிய எங்கள் கட்டமைப்புக்கள் அதன் வீச்சை இங்குள்ள பொருளாதார ஒருவீதத்திற்குள் விஸ்த்தரித்து செல்லும் படிமுறையில், முன்னாள் போராளிகள் என்பவர்களை உலகிற்கு உதாரணமான புத்தர்களாக மேற்கின் நிகழ்ச்சிநிரலிற்கு போஸ்ட்டர்சில்ட்றனாக உருவாக்குவது முடியாதது அல்ல.

ஆனால் மற்றவன் பற்றி நாம் சிந்pப்பதற்கு முதல் இன்றியமையாதது எங்களவரின் அடிப்படை சிந்தனை மாற்றம். பல விடயங்கள் அணுகுமுறைகள் அடிப்படையில் இருந்து மாறவேண்டும். ஒரே சிஸ்ரத்திற்குள் ஒரே உள்ளீட்டைப்போட்டுக்கொண்டு வெளிவருவதே ஏன் ஒரேமாதிரி வெளிவருகுது என்று தலையைச் சொறிவதில் எந்த அர்தமும் இல்லை.

Edited by Innumoruvan

இன்னுமொருவன்,

உங்களின் இந்த யோசினையை நடைமுறைப்படுத்துவது இன்றைய நிலையில் தமிழர்கள் மத்தியில் சாத்தியமானது என்று நீங்கள் உண்மையிலேயே நம்புகிறீர்களா?

இன்னுமொருவன்,

உங்களின் இந்த யோசினையை நடைமுறைப்படுத்துவது இன்றைய நிலையில் தமிழர்கள் மத்தியில் சாத்தியமானது என்று நீங்கள் உண்மையிலேயே நம்புகிறீர்களா?

சபேசன்,

'உண்மையில் நாங்கள் ஒரு போராட்டத்தை முன்னெடுக்கக்கூடியவர்களாகப், பலம் பொருந்தியவர்களாக இருக்கிறோம் என்றால்' என்ற வாக்கியத்தோடு தான் எனது பின்னூட்டத்தை ஆரம்பித்தித்திருந்தேன். உங்களைப்பொறுத்தவரை இந்த முனநிபந்தனைக்கான பதில் திட்டவட்டமான 'இல்லை' என்பதே என்ற தொனி உங்கள் கேள்வியில் வெளிப்படுவதாக உணர்கிறேன். அதற்கான காரணங்களையும் நீங்கள் முன்வைத்தால் உபயோகமாக இருக்கும்.

ஒரு சமூகத்தைப் பற்றி ஒட்டுமொத்தமாக நான் பேச முடியாது. உங்கள் கேள்விக்கு என்னைச் சார்ந்து மட்டும் கூறுவதாயின்:

1) எமது சமூகத்தில் ஓய்வின்றி ஏதாவது ஒரு போராட்டம் பற்றி எப்போதும் கதை இருந்து கொண்டே இருக்கிறது. சில பிழைப்புவாதங்களை அடையாளப்படுத்தமுடியும் என்றபோதும், அனைத்தையும் வெற்றுக்கூச்சலாகப் பாhக்;கவேண்டும் என்று எனக்குத்தோன்றவில்லை. ஈழம் மற்றும் அதன் மக்கள் சார்ந்து புலம்பெயர் தமிழனிற்குள் ஒரு கணிசமான ஆர்வம் அல்லது குறைந்தபட்சம் அப்படி ஒரு ஆர்வத்தினை விளைவிக்கக்கூடிய ஏதநிலை இருக்கிறது என நான் நம்புகிறேன். மற்றவர்களிற்காகப் பேசாது எனக்காக மட்டும் பேசின், தனிப்பட்ட ரீதியில் அந்த மக்கள் சார்ந்து எனக்கு அக்கறை இருக்கிறது.

2) எனது பின்நூட்டத்தில் இருபத்தைந்தாயிரம் பேர் இரண்டாயிரத்து ஐந்நூறு டொலர் கொடுத்தால்...என்று எழுதியிருந்தேன். இரண்டாயிரத்து ஐந்நூறு என்ற இலக்கத்தை எதேச்சையாக எழுதவில்லை. ஏன் இந்த இரண்டாயிரத்து ஐந்நூறு என்ற இலக்கத்தைப் பயன்படுத்தினேன் என்றால், என்னைப் பொறுத்தவரை எங்கள் மக்களின் கற்பனையினை செயலாக்குவதற்கான ஒரு குறியீடு அந்த இலக்கம். அந்த இலக்கம் தான் இறுதியாக நாங்கள் அனைவரும் ஒருமித்து, நம்பிக் கனவுகண்ட காலப்பகுதியின் அடிப்படை இலக்கம். எங்கள் மக்களின் கற்பனை வளர்வதற்கான ஒரு நியாயமான ஏதநிலை கிரமமாக முன்னெடுக்கப்படுமாயின் அந்த இலக்கத்தை நாங்கள் மீண்டும் காண்பது சின்னவேலை என்பது எனது கருத்து.

3) பொதுமையினை விடுவோம். அவரவர் மட்டத்தில் கணிசமான புலம்பெயர் தமிழர்கள் ஊரில் இருக்கும் தங்கள் சொந்தங்கள் சார்ந்து (பல சமயங்களில் அவர்களை புலத்திற்கு அழைப்பது சார்ந்து) சிந்திக்கவும் பலத்த பணச் செலவினை (இரண்டாயிரத்து ஐந்நூறைக் காட்டிலும் பலமடங்கு அதிகம்) மேற்கொள்ளவுமே செய்கிறார்கள். புலம்பெயர்ந்த தமிழர்களுள் மிகக்கணிசமான தொகையினர் (குறிப்பாக ஐரோப்பாவில்) தங்கள் சொந்தங்களைப் புலம்பெயர் நாடுகளிற்கு அழைத்துவரவேண்டும் என்பதை விரும்புகிறார்கள். அரசியல் போன்றனவற்றிற்கு அப்பால், சொந்தங்களை வெளிநாடு அழைக்கும் திட்டம் பலரிற்குப் பிரத்தியேக மட்டங்களில் புரிந்துகொள்ளக்கூடியதாக ஆர்வத்தைக் கிழறுவதாக, எக்சைற் பண்ணுவதாக இருக்கும் என்று கருதுகிறேன். வேளிநாட்டில் இருக்கிறவாகள் தங்கள் சொந்தங்களை மட்டும் அழைப்பது என்றால் மீண்டும் ஒரு குறிப்பிட்ட பணநிலையுடையவர் மட்டுமே வரமுடியும். எனவே அனைவரது ஆதரவுடன் அனைத்துத் தட்டு மக்களும் புலம்பெயர இவ்வாறான ஒரு திட்டம் உதவும என்று படுகிறது.

4) நாங்கள் ஒரு கட்டத்தில் ஓவர் கொன்பிடன்ஸ்சில் திரிந்தோம். முள்ளிவாய்க்காலைத் தொடர்;ந்து உண்மையில் அடிப்படைத் தன்னம்பிக்கை கூடப் பலரிற்கு இல்லாது போய்விட்டது. இந்நிலையில் பெரிய வார்த்;;தைப் பிரயோகங்களையும் சொல்லாடல்களையும் வைத்துப் பொதுமையினைக் கட்டமுடியாது. மேலும், ஏகப்பட்ட அமைப்புக்கள், குழுச்சண்டைகள் என்று எங்கள் மக்களின் கற்பனை சிறகு விரிக்கமுடியாதபடி புலம் வெறும் சத்தமாக இருக்கிறது. இந்தச் சத்தங்கள் ஓய்ந்து, மக்கள் மனங்கள் குவியப்பட்டு ஏதேனும் செயற்படுவதற்கு, முதலில் தற்தனது மட்டத்தில் எக்சைற் பண்ணக்கூடிய, தான் ரான்ஜிபிளா உணரக்கூடிய, அளவிடக்;கூடிய சின்னச்சின்ன பற்றிக்கொள்ளல்கள் ஏற்பட வேண்டும். அவ்வாறு ஒன்றிணைபவர்கள் ஒன்றாகப் பொதுமையாக வழர்வது தானாக நடக்கும்.

5) சுபேசின் பதிவில் பேச்சிற்கு மேற்பட்ட ஒரு தீப்பொறியினை உணர்ந்தேன். இப்போது புலம் இருக்கும் நிலையில் சுபேஸ் போன்ற இளைஞர்களின் இதயசுத்தியான உந்துதல்கள் சரியாக அணுகப்படவேண்டியது சமூகத்தின் கடமை. எங்கும் போவதற்கும் எதையும் செய்வதற்கும் இளையவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்று தெரிந்தால், நம்பியார் பாணியில் கையைச் பிசைந்துகொண்டு கொடுப்பிற்குள் சிரித்துக்கொண்டு முகத்தைச் சீரியசாக்கித் திட்டம்போடுவதற்கும் அனைத்துச் சமூகங்களிற்குள்ளும் ஆட்கள் இருப்பார்கள். எங்கள் இனத்திற்கும், 'இளைஞர் பாடம் படிப்பிப்பார்கள்' போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் புதியன அல்லவே.

உங்கள் கருத்துக்களையும் பதியுங்கள். உபயோகமாக இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள வன்முறைகள் மோசமான காலத்தில் ஒரு கருத்துப்படம் வரைந்திருந்தார்கள், ஒரு சிப்பாய் முதலில் புத்தரையே துப்பாக்கியால் சுடுகின்றான் அந்த கருத்துப்படத்தில். அதன் அர்த்தம் புத்த சமய வழிகளை பின்பற்றுகின்றவர்கள் குருவி காக்காயை கூட சுட முடியாது. தமிழரை கொல்ல வேண்டுமாயின் முதலில் புத்தரை கொல்லவேண்டும்.

சிங்களம் தன்னை பெருந்தேசிய இனமாக உருவாக்கிக்கொள்ள பௌத்த சமயத்தை பாவித்துக்கொண்டது. காணொளி உருவாக்க வேண்டும் என்ற உங்கள் ஆர்வம் பாராட்டுதலுக்குரியது அதே நேரம் அதற்காக நீங்கள் எடுத்த கரு சிங்களவருக்கே சாதகமானது என்பதே உண்மை. பௌத்தம் என்ற புனிதமான ஆன்மீக மார்க்கத்தை நரகமாக மாற்றுபவர்கள் இவ்வுலகில் சிங்களவர்களே என்றே காணொளி உருவாகவேண்டும். அதுவே உண்மையும் கூட. பௌத்தத்துக்கும் சிங்கள இனவெறிக்குமான முரண்பாட்டை எடுத்துரைப்பதே பொருத்தமானது.

நன்றி அண்ணா...மிகச்சரியான ஆலோசனை...இப்படித்தான் அமைக்கப்படவேண்டும்...சரியான சிந்தனாவாதிகள் கூட இருந்தால் எவ்வளவு சாதிக்கலாம்..

[size=4]மேலும் பௌத்தத்துக்கும் தமிழுக்கும் இடையிலான உறவு என்ன. தமிழ் இலக்கியங்களின் வேர் பௌத்த சமண அடிப்படையைக் கொண்டவையே. திருக்குறள் உட்பட. சமணரையும் பௌத்தரையும் கழுவேற்றி மதவெறிபிடித்து நமது முன்னோர் தமக்குத் தாமே ஆப்பு வைத்துக்கொண்டனர். உண்மையில் சிங்களவரை விட தமிழருக்கே பௌத்தத்தின் மீது உரிமை அதிகம்.[/size][size=4] [/size][size=4]ஆனால் பௌத்தத்தில் பல நல்ல விசயங்கள் இருப்பதால் தமிழர்கள் அதிலிருந்து விலகி சாதிய ஏற்றதாழ்வை ஸ்தாபிக்கக் கூடிய இந்து மதத்தை கையில் எடுத்தனர்.[/size]

உண்மை அண்ணா...வர்க்கபிரிவினைகளை வளர்த்து தமிழர்களின் ஒற்றுமையை சிதைத்து அவர்களை இன்னும் இன்னும் பிரிவுற வைத்ததும்...வர்ணங்களை கட்டமைத்து சமூக ஏற்றத்தாழ்வுகளை வளர்த்துவிட்டதுமே ஆரியர் எமக்கு அறிமுகப்படுத்திய இந்துசமயம் சாதித்தது..

[size=4]சிங்களவர்கள் தமது தேசிய இனத்தை கட்டியெழுப்ப தமக்கேற்ற வகையில் வரலாற்றை எழுதினர். தமது முன்னோர்கள் மன்னர்களை பௌத்த மதத்தை சரியான வகையில் முன்னிலைப்படுத்தி மக்களை சிங்களத் தேசியத்தின் பால் ஒருமுகப்படுத்தி வழிநடத்தினர். [/size][size=4]நாம் இருந்த சமூகக் கட்டமைப்பை எந்தெந்த வகையில் சிதைக்க முடியுமோ அவ்வகையில் எல்லாம் சிதைத்துக்கொண்டிருந்தோம். [/size][size=4]எமது மண்ணில் பண்டார வன்னியனும் எல்லாளனும் சங்கிலியனும் என்னும் பல மன்னர்கள் இருந்தும் சேரன் சோழன் பாண்டியன் என்று முன்னிலைப்படுத்தினோம். (கடசிக் கந்தாயத்தில் எல்லாளனை இழுத்தோம் கண்கெட்டபிறகு சூரிய வணக்கம் போல) [/size][size=4]பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பாடல் பெற்ற கோணேஸ்வரம் கேதீஸ்வரம் இருந்தும் நல்லூரை மட்டும் கட்டிப்பிடித்துக்கொண்டிருந்தோம். [/size][size=4]அதுவும் சிங்களவனுக்கு வசதியாய் போய்விட்டது . தமிழர்களின் சொந்த பூமி தமிழ்நாடு அங்கேயே போகட்டும் என்றான்.[/size][size=4] எமக்கான வரலாற்றையே நிராகரிப்பவர்களாகவும் அலட்சியம் செய்பவர்களாகவும் நாம் இருக்கின்றோம் [/size][size=4]அதனடிப்படையில் தமிழர்களின் அழிவு இயற்கையானது.[/size]

ஆம்...நாம் பிரிந்து பிரிந்து நமக்குள் பிளவுகளை உருவாக்கி சிதைந்து கிடக்கிறோம்..நமக்கு ஒற்றுமை எட்டாக்கனியாக இருப்பதற்கு சிறிது சிறிதாக நமது சமூகத்தை பிடித்து வளர்ந்த இந்தவிதமான சமூக நோய்களே காரணம்...நன்றி அண்ணா..அப்பப்ப உங்களை யாழுக்கு எனது பதிவுகளாவது இழுத்து வருகிறதே என்று மகிழ்ச்சியாக இருக்கிறது...உங்களை,இன்னுமொருவன் அண்ணாவைப் போன்றவர்கள் அதிகம் எழுதினால் எமது சமூகத்தில் ஒரு கொஞ்சப்பேரின் பிற்போக்கான சிந்தனையையாவது மாற்றலாம் அண்ணா...அடிக்க அடிக்க அம்மியும் நகரும்...

நல்ல கருத்து கிருபன் அண்ணா

எங்களுடைய படுதோல்விக்கு முதல் காரணம் எங்களது பிடிவாதம் அதையும் கலைந்து எங்கள் பலம் என்ன பலவீனம் என்ன எதிரி பலம் என்ன பலவீனம் என்ன உலகநாடுகள் என்ன நினைகிறது எதை எதிர்பாக்கிது போன்ற கணக்குகளை போட்டு நாங்களும் அரசியல் செய்ய பழக வேண்டும்.....

சுண்டல், முதலில் இதனை நடைமுறைப்படுத்துங்கள். முதலில் நாம் சர்வதேச அரசியலையும் எமது அரசியலையும் விளங்கிக் கொள்ள வேண்டும். நாம் ஆயுதப் போராட்டத்தில் சிறந்து விளங்கியிருந்தாலும் அரசியலில் கற்றுக் குட்டிகளாகவே இருந்தோம் என்பதை இப்போது உணர்கிறோம். தமிழீழம் என்பது நிச்சயம் சாத்தியமே. ஆனால், இப்போதைக்கு சாத்தியம் இல்லை என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழீழத்தை அடைவதற்காக எம்மை நாம் தயார்ப்படுத்தும் நிலையில்தான் இப்போது இருக்கிறோம்.

இன்னுமொருவன், நீங்கள் கூறிய கருத்தை நானும் வரவேற்கிறேன். ஆனால், அதனை நாம் இப்போது செயற்படுத்த முனைவோமாக இருந்தால் தாழியை உடைத்த கதையாகத்தான் முடியும்.

இன்னுமொரு கருத்தை நான் இங்கு வைக்க விரும்புகிறேன். 2003ஆம் ஆண்டளவில் தலைவர் இளைய சமுதாயத்தை நம்பியது உண்மைதான். ஆனால், அவர் நினைத்த அளவிற்கு அவர்களின் செயற்பாடுகள் இருக்கவில்லை என்பதும் நிதர்சனமான உண்மை. எந்தக் காலகட்டத்திலும் இளைஞர் அணியில் ஆயிரக்கணக்கானவர்கள் இருப்பார்கள். அவர்களில் எத்தனை பேர் தொடர்ந்தும் தமது செயற்பாடுகளில் மும்முரமாக இருக்கிறார்கள் என்பதை உங்களைச் சுற்றி இருப்பவர்களை வைத்தே கணக்கைப் பார்த்துக் கொள்ளுங்கள். 2003 இலிருந்து 2007 வரை பல நூற்றுக்கணக்கான இளையவர்கள் நீங்கள் வாழும் நாடுகளிலிருந்தே வன்னிக்குச் சென்று வந்திருந்தார்கள். அவர்களில் எத்தனை பேர் அன்றிருந்த அதே ஓர்மத்துடனும் உணர்வுடனும் செயல் வீச்சோடும் முனைப்போடும் இப்போது செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை பாருங்கள். அல்லது இப்போது ஏதாவதொரு செயற்பாட்டிலாவது ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்களா என்ற கணக்கையும் பாருங்கள். இளையவர்களின் உதவி எமக்குத் தேவைதான். ஆனால், அதற்காக அவர்களிடம் எந்தப் பொறுப்பையும் கொடுக்க முடியாது. அவர்களை நாம் நல்ல வழியில் வழிநடத்தி எதிர்காலத் தலைவர்களாக உருவாக்க முடியுமே தவிர, அவர்களையே நடத்தவிட முடியாது.

ஒரு மனிதன் தனிமனிதனாக இருக்கும் போது எதுவுமே சாத்தியம்தான். அவனது பொறுப்புகள் கூடியபின்னர்தான் அவனது சுயநலம் வெளிப்படுகிறது. அந்த வகையில், நடுத்தர வயதிற்கு மேற்பட்டவர்கள்தான் அரசியலுக்குப் பொருந்தியவர்கள். சர்வதேச அரங்கிலும் அதுவே சாத்தியம். எந்தவொரு நாட்டிலும் மிக முக்கியமான பொறுப்புகளில் எந்த இளைஞரும் பதவி வகித்ததாக நான் அறியவில்லை. இராஜ பரம்பரைகளில்தான் அது சாத்தியமாக இருந்ததே தவிர அரசியலிலோ சர்வதேச மட்டத்திலோ இருந்ததில்லை. இராஜ பரம்பரைகளிலும் அவர்களுக்கு மந்திரிகளாக, தளபதிகளாக மூத்தவர்கள் அறிவுரைகள் வழங்கிக் கொண்டிருப்பார்கள். இதனைக் கூட இன்னமும் விளங்கிக் கொள்ளாதவர்களாகத்தான் நாம் இருக்கிறோம். என்றோ ஒருநாள் தலைவர் அவர்கள் சொன்னதற்காக அதனை பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறோம். அது வெற்றி தந்ததா அல்லது தோல்வியைத் தந்ததா என்று சிந்திக்கக்கூட நாம் தயாராக இல்லை. இந்த நிலையில் நாம் தமிழீழம் காணப் புறப்பட்டால் எங்கள் நிலையை சற்று யோசித்துப் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தேங்க்ஸ் தமிழ் நீங்களாவது ஒத்துகிட்டின்களே நாங்கள் அரசியல் செய்ய தவறிட்டம் எண்டு.... ஒரு பக்கம் அரசியலும் ஒரு பக்கம் ஆயுத போராட்டமாகவும் இருந்திருக்கணும் இப்ப வெயிட் பண்ணுங்க கொஞ்ச பேர் வருவினம் தம்பி நாங்கள் செய்தது ஆயுத போர் அதில அரசியல் செய்ய முடியாது எண்டு சொல்லி சுண்டல போர் அடிக்க போயினம் பட் வாங்கையா வாங்க வந்து மிச்ச சொச்சத்த சொல்லுங்க

தேங்க்ஸ் தமிழ் நீங்களாவது ஒத்துகிட்டின்களே நாங்கள் அரசியல் செய்ய தவறிட்டம் எண்டு.... ஒரு பக்கம் அரசியலும் ஒரு பக்கம் ஆயுத போராட்டமாகவும் இருந்திருக்கணும் இப்ப வெயிட் பண்ணுங்க கொஞ்ச பேர் வருவினம் தம்பி நாங்கள் செய்தது ஆயுத போர் அதில அரசியல் செய்ய முடியாது எண்டு சொல்லி சுண்டல போர் அடிக்க போயினம் பட் வாங்கையா வாங்க வந்து மிச்ச சொச்சத்த சொல்லுங்க

உண்மையை நச்சென்று சொன்ன தமிழச்சியும் சுண்டுவும் பாராட்டப்படவேண்டியவர்களே.

எங்களை எங்கே அரசியல் செய்ய விட்டார்கள் ..............அமெரிக்காவும்,நோர்வேயும், ஐரோப்பாவும் இந்தியாவுமல்லவா எங்களை வைத்து அரசியல் செய்தார்கள் .............செய்துகொண்டிருக்கிறார்கள் ........................

  • கருத்துக்கள உறவுகள்

தேங்க்ஸ் தமிழ் நீங்களாவது ஒத்துகிட்டின்களே நாங்கள் அரசியல் செய்ய தவறிட்டம் எண்டு.... ஒரு பக்கம் அரசியலும் ஒரு பக்கம் ஆயுத போராட்டமாகவும் இருந்திருக்கணும் இப்ப வெயிட் பண்ணுங்க கொஞ்ச பேர் வருவினம் தம்பி நாங்கள் செய்தது ஆயுத போர் அதில அரசியல் செய்ய முடியாது எண்டு சொல்லி சுண்டல போர் அடிக்க போயினம் பட் வாங்கையா வாங்க வந்து மிச்ச சொச்சத்த சொல்லுங்க

சுண்டல்

எதை வைத்து அரசியல் செய்ய வில்லை என்கிறீர்கள்?

அப்போ பாலா அண்ணை என்ன செய்தார்?

தமிழ்ச்செல்வன் ஏன் வந்து போனார்?

உலகிலுள்ள அத்தனை தமிழ் அறிஞர்களும் சேர்ந்து இடைக்கால அரசு ஒன்றுக்கு கூட்டறிக்கை தயாரித்தார்களே. வேலை மினக்கட்டா?

தோற்றுப்போனதால் செய்தது பிழை என்றுஆகிவிடாது.

உலகம் ஒரு முடிவிலிருந்தது. நாம் ஏற்காவிட்டாலும் அது தலையை நுழைத்தது.( அனுசரணை நாடுகளை வா என்று நாம் கேட்டோமா?)

திட்டமிட்டு அவர்கள் எம்மை பலமிழக்கவைக்க வேலை செய்தார்கள். அதிலிருந்து தப்பிக்க எல்லாவற்றையும் செய்தோம். சரணாகதியைத்தவிர.

அதையும் செய்திருக்கணும் என்று தான் தற்பொழுது தோன்றும்.

ஆனால் உலகத்திடம் கடைசி நிமிடம் வரை மனச்சாட்சி இருக்கும் என்று நம்பினோம்.

களத்தில் பொறுப்பிலுள்ளவனுக்கே முடிவு எடுக்கும் பொறுப்பும் நேரமும். அந்த நேரம் அவன் எடுத்த முடிவுகளே சரியானவை. தற்பொழுது எமது ஆராய்ச்சிகள் எந்த பலனையும் தரா.

இந்த திரிபோல. ஆராய்ந்து கொண்டே இருக்கவேண்டியது மட்டும்தான் எம்மால் செய்யமுடியும். செயல்.............????

(படம் எடுக்க வெளிக்கட்ட திரி. புலிகளுக்கு அரசியல் தெரியாது என்று வந்து நிற்கிறது. அதற்கு கைதட்டல்கள் வேறு தொடர்கிறது)

இது தான் இன்றைய நிலை. இதைத்தவிர ஒரு புல்லைக்கூட எம்மால் இனி புடுங்கமுடியாது. இந்த இயலாமையை நாம் புரிந்து கொண்டால் மட்டுமே அடுத்த நடவடிக்கை என்று எதையாவது சிந்திக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தும்பளையான் யாழின் அடிப்பகுதியிலுள்ள இந்த சமாச்சாரத்தை இன்னும் பார்க்கவில்லையோ?

யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது.

தெரியும் அண்ணா ஆனால் பயங்கரவாதம், தீவிரவாதம் என வரும் போது சில அமைப்புகள் யாரையும் கேட்டு, தட்டித் தடவி எடுப்பதில்லை (அமெரிக்கன் பாகிஸ்தானுக்கு வந்து ஒசாமாவைப் போட்ட மாதிரி). இங்கிருக்கும் அனைவரினதும் IP மூலம் மிக இலகுவாக யாரென அடையாளம் காணலாம் என்பதால் தான் கவனமாக இருக்கும் படி சொன்னேன். நான் சில தளங்களுக்கு செல்லும் போது எனது IP யை மறைத்தே செல்லுவது வழமை.

http://www.nationalsecurity.gov.au/agd/www/nationalsecurity.nsf/AllDocs/826190776D49EA90CA256FAB001BA5EA?OpenDocument

இந்த இணைப்பில் இருக்கும் தீவிரவாதம் சம்பந்தமான அவுஸ் சட்டங்களை பாருங்கள். மிக உயர் அதிகாரங்களை அவர்கள் பாவிக்க முடியும்

மச்சி தும்ஸ் வெருட்டின உடன ஓடினவங்க தான் யாழ் பக்கமே வரினம் இல்லை எல்லாம் ரகசியமா வந்து பாத்திட்டு ஓடிபோஇனம் :D

மச்சி வெருட்டலயடா வம்பை விலைக்கு வாங்க வேண்டாம் எனச் சொல்ல வந்தேன். எங்களின் ASIO காரர் கூட பயங்கர கெட்டிக்காரர் என்பதை மட்டுமே என்னால் சொல்ல முடியும் :rolleyes:

எவன் வெருட்டுறவன், அந்த நாயை... ஒட்டுக் குழுக்கள், ஸ்ரீலங்கா இராணுவத்துடன் ஒட்டி, உறவாடி, கூட்டிக்கொடுத்து, காட்டிக் கொடுத்து செய்யும் வேலைகளை ஒரு தாய்க்குப் பிறந்த வீரமகன் செய்ய மாட்டான்.

யாரையும் வெருட்டவில்லை அண்ணா. இது தொழில் நுட்ப யுகம், சுவர்களுக்கே காதுகள் முளைத்திருக்கும் நேரம். இறுதிப் போரில் கூட இலங்கை அரசு அதியுயர் தொழில் நுட்பத்தால் பலவற்றை இலகுவாக சாதித்தார்கள். குறிப்பாக தளபதிகளின் நடமாட்டங்கள் :icon_idea:

தமிழ் செல்வனுக்கு அரசியல் தெரியும் என்ற அளவிற்கு தான் எங்கள் பலருக்கு அறிவு இருந்தது .

பாலசிங்கத்திற்கு அரசியல் தெரிந்தாலும் சுயநலத்தால் தமிழர்கள் அழிந்தாலும் பரவாயில்லை தான் துரோகியாக கூடாது என்ற கொள்கையுடன் இருந்தார் .கடைசி காலத்தில் புலிகள் கை விட்ட பின் அதை நண்பர்களிடம் சொல்லி குறைப்பட்டும் இருக்கின்றார் .

இதற்கெல்லாம் ஒரே காரணம் உலக அரசியல் கத்துக்குட்டி என்று எரிக் சொல்கேயும் சொன்னவர்தான் .

  • கருத்துக்கள உறவுகள்

மச்சி எனக்கு தெரிஞ்சு கான்பெர்ரா பாதுகாப்பு அமைச்சில் வேலை செய்யும் எத்தினையோ தமிழர்கள் மாவீரர் தினத்தில் வந்து கொத்துரொட்டி கூட போட்டு இருக்காங்க பட் நீ சொல்லுகின்ற கருத்துகளையும் உள் வாங்கி இந்த திரியில் மேலும் பயணிப்போம்..... நன்றிகள் டா மேலும் விசு அண்ணா ஒரு அமைப்பு விட்ட கடந்த கால தவறுகளை நாம் ஆராய்வதில் தப்பில்லை புதிய பாதையில் புதிய வேகத்தில் புதியவர்களால் எமது போராட்டம் கொண்டு செல்லப்படும் போது பலதையும் பத்தையும் பேசுவதில் தப்பில்லை இங்கு யாரும் விமர்சனத்திற்கு அப்பார்ப்பட்டவர்கள் கிடையாது முதலில் எங்களை நாங்களே சுய பரிசோதனை செய்ய வேண்டிய நிலையில் இருகின்றோம்...... ஏன் தோற்றோம்? எதற்காக தோற்கடிக்க பட்டோம்? யாரால்? என்ன காரணத்திற்க்காக? எதற்கு? எப்பிடி? போன்ற விடையங்களை ஆராய்ந்து பார்த்து தான் நாங்கள் எதையாவது புடுங்க முடியும். நிச்சியமாக புடுங்கலாம் பேச்சுவார்த்தையில் மொத்தம் 53 நாடுகளுக்கு மேல் கலந்து கொண்டன முதலில் அந்த பெரும்பான்மையான நாடுகளின் சிந்தனை ஓடம் எப்பிடி இருந்தது என்பதை அறிந்து எமது காய் நகர்த்தல்கள் இருந்திருக்க வேண்டும்..... அனால் துறதிஷ்டவசமாக புலம்பெயர் தமிழர்களின் தவறான தகவல்கள் முடிவுகளால் நாம் மீண்டுனம் ஒரு முறை தமிழர்களாலே தோற்கடிக்கபட்டோம் அதற்க்கு முழுக்க முழுக்க காரணம் புலம்பெயர் வியாபாரிகள்

  • கருத்துக்கள உறவுகள்

இனியும் இப்பிடியான புலம் பெயர் புல்லுரிவிகளினதும் வியாபாரிகளினதும் இந்த அரசியலை நாம் அணுமதிக்க போவதில்லை தவறான விம்பங்களை ஏற்படுத்தி உசுபேத்தல்களை தங்கள் இஷ்டம் போல வழங்கி எங்கே தங்கள் பிழைப்பில் மண் விழுந்து விடுமோ என்ற முழுக்க முழுக்க சுயநலம் ஒன்றையே தமிழர் நலனாக கொண்டு எங்கள் ஒட்டுமொத்த போராட்டத்தையே அழித்த பெருமை இவர்களிர்க்குண்டு.......

அதற்காக தியாகம் ஒன்றையே தமது குறிக்கோளாக கொண்டு தமது நலம் பாராது மக்களின் நலனோடு செயற்பட்டு சிறை சென்ற உன்னதாமான தமிழர்களையும் நாங்கள் இந்த வேளை வணங்கி நிற்கின்றோம்

தெரியும் அண்ணா ஆனால் பயங்கரவாதம், தீவிரவாதம் என வரும் போது சில அமைப்புகள் யாரையும் கேட்டு, தட்டித் தடவி எடுப்பதில்லை (அமெரிக்கன் பாகிஸ்தானுக்கு வந்து ஒசாமாவைப் போட்ட மாதிரி). இங்கிருக்கும் அனைவரினதும் IP மூலம் மிக இலகுவாக யாரென அடையாளம் காணலாம் என்பதால் தான் கவனமாக இருக்கும் படி சொன்னேன்.

நான் கூற வந்த விடயத்தை நீங்கள் விளங்கிக்கொள்ளவில்லை என்று நினைக்கின்றேன் தும்பளையான். தாம் வாழும் நாடுகளில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களே பயப்படவேண்டும். அவரவரின் செயற்பாடுகளுக்கு அவரவே பொறுப்பாளிகள். ஒருவர் தனது தவறான செயற்பாட்டின் மூலம் ஏற்படும் பின்விளைவுகளுக்கு இன்னொருவர் மீது பழியை போடமுடியாதுதானே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.