Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"பிரபாகரன் மிகப்பெரும் வரலாற்றுத் தவறு செய்தார்": எரிக் சோல்ஹெய்ம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"பிரபாகரன் மிகப்பெரும் வரலாற்றுத் தவறு செய்தார்": எரிக் சோல்ஹெய்ம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 8 அக்டோபர், 2012 - 18:19

இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான போரில், 2009 ஆம் ஆண்டின் துவக்கத்தில், போரின் இறுதிக் கட்டத்தில் பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்படக்கூடிய மனிதப் பேரவலம் நடக்காமல் தடுக்கும் நோக்கத்தில் சர்வதேச நாடுகள் கூட்டாக ஒரு முயற்சி எடுத்ததாக ஏற்கெனவே செய்திகள் கசிந்திருந்தன.

அந்த முயற்சியில் முக்கிய பங்காற்றிய நோர்வே நாட்டின் முன்னாள் அமைச்சரும், இலங்கையில் அரசுக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவருமான எரிக் சொல்ஹேய்ம், அந்த திட்டம் குறித்து தற்போது வெளிப்படையாக பேசியுள்ளார்.

கடந்த வாரம் லண்டனில் பிபிசி அலுவலகம் வந்திருந்த எரிக் சொல்ஹேய்ம் அவர்களிடம் இந்த திட்டம் உருவான பின்னணி குறித்தும் அது ஏன் செயற்படாமல் கைவிடப்பட்டது என்றும் பிபிசி தமிழோசை மற்றும் சிங்கள சேவைகள் சார்பில் செவ்வி காணப்பட்டது.

அந்த செவ்வியின் முக்கிய பகுதிகளை இங்கு எழுத்துவடிவில் காணலாம்.

எரிக் சொல்ஹேய்ம் பதில்:

இலங்கையின் சமாதானத்துக்காக முன்முயற்சி எடுத்த கொடை நாடுகளான ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நார்வே ஆகிய நாடுகள் இணைந்து 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு யோசனையை முன்வைத்தன. ஐநா மன்றமும் இதன் பின்னணியில் இருந்தது. அன்றைய நிலைமையில் போரின் முடிவு இலங்கை அரசுக்கு ராணுவ ரீதியிலான வெற்றியாக அமையும் என்பது எல்லோருக்கும் தெரிந்த நிலையில், போரின் முடிவில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படும் பேரழிவை தடுக்கும் வகையில் போரை முறையாக முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்கிற யோசனையை நாங்கள் முன்வைத்தோம். அந்த திட்டத்தின் முழுமையான இறுதி வடிவமும் விடுதலைப்புலிகளும் இலங்கை அரசும் ஒப்புக்கொண்டபிறகு தான் முடிவுசெய்யப்பட்டிருக்கும். ஆனால் அதற்கு அடிப்படையாக நாங்கள் தெரிவித்த நடைமுறை யோசனை என்னவென்றால், சர்வதேச அமைப்பு, உதாரணமாக அமெரிக்கா, இந்தியா அல்லது வேறு ஒரு நாடு இலங்கையின் வடக்கு - கிழக்குப் பகுதிக்கு ஒரு பெரிய கப்பலை அனுப்பிவைப்பது என்றும், அதில் ஐநா மன்ற அதிகாரிகளோ அல்லது மற்ற சர்வதேச அமைப்பை சேர்ந்தவர்களோ இருந்து, போரின் இறுதியில் எஞ்சியிருந்த அனைத்து விடுதலைப்புலிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் ஒருவர் விடாமல் கணக்கெடுத்து புகைப்படத்துடன் பதிவு செய்வது என்றும் தெரிவித்திருந்தோம். அவர்கள் அனைவரும் கொழும்பு கொண்டு செல்லப்பட்டு அவர்களிடமிருந்த ஆயுதங்களை ஒப்படைத்த பிறகு, விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகிய இருவர் தவிர்த்த மற்ற அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அப்படி நடந்திருந்தால், சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் சர்வதேச அமைப்புக்களால் பதிவு செய்யப்பட்டவர்களை இலங்கை அரசால் நினைத்த மாத்திரத்தில் கொல்லமுடிந்திருக்காது. எங்களின் இந்த யோசனை மட்டும் ஏற்கப்பட்டிருந்தால், இறுதிகட்டத்தில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பேர் இன்று நம்மிடையே உயிருடன் இருந்திருப்பார்கள். ஏப்ரல் மாதம் இந்த திட்டத்தின் இறுதிவடிவத்தை முடிவு செய்வதற்காக விடுதலைப்புலிகள் அமைப்பின் சர்வதேச பேச்சாளர் குமரன் பத்மநாதன் ஒஸ்லோவுக்கு வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் பிரபாகரன் அவரை தடுத்துவிட்டார். எங்களின் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பத்திரமாக அழைத்து வருவதற்காக கோலாலம்பூருக்கே சென்றிருந்தனர். ஆனால் இந்தத் திட்டம் தங்களுக்கு ஏற்படையதல்ல என்று எங்களுக்கு செய்தி சொல்லப்பட்டது. எங்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை.

தமிழோசை கேள்வி:

இந்த திட்டத்திற்கு இலங்கை அரசின் ஒப்புதல் இருந்ததா?

சொல்ஹேய்ம் பதில்:

அந்த நாட்களில் நான் இலங்கைக்கு செல்லவில்லை. ஆனால் ஒஸ்லோவில் இருக்கும் இலங்கைத் தூதரகம் மூலமாகவும், மற்ற தூதரகங்கள் மூலமாகவும் இலங்கை அரச தரப்புடன் எங்களுக்கு இருந்த தொடர்புகள் மூலமாகவும் இலங்கை அரசுடன் நாங்கள் நிறைய பேச்சுவார்த்தைகள் நடத்தினோம். அவர்களுடன் பேசியதிலிருந்து முழுமையான ராணுவ ரீதியிலான வெற்றியை பெறுவதே இலங்கை அரசின் பெரும்பாலானவர்கள் விரும்புகிறார்கள் என்கிற உணர்வையே நாங்கள் பெற்றோம். அதேசமயம், விடுதலைப்புலிகள் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியிருந்தால் இலங்கை அரசுக்கு அதற்கு சம்மதிப்பதைத் தவிர வேறு வழி இருந்திருக்காது என்றே எங்களுக்கு தோன்றியது.

தமிழோசை கேள்வி:

இந்த திட்டத்திற்கு இலங்கை அரசு ஒப்புக்கொண்டிருக்கும் என்று எதை வைத்து நீங்கள் நம்புகிறீர்கள்?

சொல்ஹேய்ம் பதில்:

அவர்களுக்கு இதில் விருப்பம் இருக்கிறதோ இல்லையோ, அவர்கள் இதை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டிய நிலைமையே இருந்தது. காரணம் இந்தியாவும் அமெரிக்காவும் மற்றவர்களும் இதில் உறுதி காட்டியிருப்பார்கள், ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்தினரும் இதில் ஒன்றாகவும் உறுதியாகவும் குரல் கொடுத்திருப்பார்கள். இலங்கை அரசில் தயக்கம் இருந்திருந்தாலும் அவர்களுக்கு வேறு வழி இருந்திருக்காது.

தமிழோசை கேள்வி:

அப்படியானால் இலங்கைப், போரின் இறுதிக் கட்டத்தில் பல்லாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முதன்மையான பொறுப்பு விடுதலைப் புலிகளின் தலைமையை சாரும் என்கிறீர்களா?

சொல்ஹேய்ம் பதில்:

போரின் இறுதி முடிவு என்னவாக இருக்கப்போகிறது என்பதை அனைவரும் உணர்ந்த நிலையிலும் போரை ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் முடிக்காமல் கடைசிவரை போராடவேண்டும் என்று பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைமை முடிவெடுத்தது மிகப்பெரிய வரலாற்று தவறு என்றே நான் நினைக்கிறேன். அதேசமயம், இதை காரணமாகக் காட்டி இலங்கை அரசு நடத்திய குறிவைத்த தாக்குதல்களை நியாயப்படுத்தமுடியாது. மக்கள் செறிவாக வாழும் பகுதிகள் என்று தெரிந்தே, இலங்கை அரசு தாக்குதல்களை நடத்தியது என்பதற்கான பல சான்றுகள், அறிக்கைகள் வெளிவந்துள்ளன. அதிலும் குறிப்பாக துப்பாக்கிச் சூடுகள் நடத்தமுடியா 'பாதுகாப்பு வலயம்' என்று அரசே ஒரு பகுதியை அறிவிப்பதும் அந்த பகுதிக்கு மக்கள் வந்த பிறகு அங்கே குறிவைத்து தாக்குதல் நடத்துவதுமாக அரசு செயற்பட்டிருக்கிறது என்பதற்கான வலுவான சான்றுகள் கிடைத்திருக்கின்றன.

தமிழோசை கேள்வி:

இந்த திட்டத்திற்கு இந்திய அரசின் ஒப்புதல் இருந்ததா?

சொல்ஹேய்ம் பதில்:

விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பாக இந்திய அரசில் கொஞ்சம் கூட அனுதாபம் இல்லை. ராஜீவ் காந்தி கொலை உட்பட பல்வேறு காரணங்கள் இதற்கு பின்னணியில் இருக்கின்றன. ஆனால் அதேசமயம், இறுதிகட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படக்கூடாது என்பது குறித்து அங்கே கரிசனை காணப்பட்டது.

தமிழோசை கேள்வி:

நீங்கள் இறுதியாக முன்வைத்த திட்டத்திற்கு இந்திய அரசின் ஒப்புதல் இருந்ததா இல்லையா?

சொல்ஹேய்ம் பதில்:

இலங்கை பிரச்சினையில் நான் ஈடுபட்டிருந்த 10 ஆண்டுகாலங்களில் இந்தியாவுக்கு தெரிவிக்காமல் நான் எந்த திட்டத்தையும் முன்னெடுத்ததில்லை. இந்த திட்டத்தை இந்தியா ஏற்றிருக்கும் என்பதிலும் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசும் இருந்திருக்கும் என்பதிலும் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.

தமிழோசை கேள்வி:

இப்படி ஒரு திட்டம் இருந்ததாக நீங்கள் இப்போது கூறும் கருத்துக்கள் உண்மையா என்பதற்கு என்ன ஆதாரம்?

சொல்ஹேய்ம் பதில்:

2009 ஆம் ஆண்டில் நடந்த இந்த விடயங்கள், கொழும்பில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தின் தகவல் பரிமாற்றங்கள் மற்றும் அது தொடர்பான மற்ற ராஜீய தகவல் பரிமாற்றங்கள் அனைத்தும் விகிலீக்ஸில் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் இருக்கும் தகவல்களை நுணுகிப் பார்த்தால் இந்தக் கூற்றுக்கான ஆதாரங்கள் அதில் இருக்கின்றன.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/10/121008_ericsolhaim.shtml

  • Replies 163
  • Views 14.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஹ்ம்ம் என்னத்த சொல்ல அதான் எல்லாம் முடிஞ்சு போயிடிச்சே :(

பிரபாகரன் விட்ட மிகப்பெரும் வரலாற்றுத் தவறு எரிக் சோல்ஹெய்மை வன்னிக்குள்ள விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் விட்ட மிகப்பெரும் வரலாற்றுத் தவறு எரிக் சோல்ஹெய்மை வன்னிக்குள்ள விட்டது.

இதென்டால் 100க்கு 100% சரி

[size=2]நியானி: மேற்கோள் நீக்கப்பட்டுள்ளது[/size]

Edited by நியானி

[size=4]இலங்கை அரசு நடத்திய குறிவைத்த தாக்குதல்களை நியாயப்படுத்தமுடியாது. மக்கள் செறிவாக வாழும் பகுதிகள் என்று தெரிந்தே, இலங்கை அரசு தாக்குதல்களை நடத்தியது என்பதற்கான பல சான்றுகள், அறிக்கைகள் வெளிவந்துள்ளன. அதிலும் குறிப்பாக துப்பாக்கிச் சூடுகள் நடத்தமுடியா 'பாதுகாப்பு வலயம்' என்று அரசே ஒரு பகுதியை அறிவிப்பதும் அந்த பகுதிக்கு மக்கள் வந்த பிறகு அங்கே குறிவைத்து தாக்குதல் நடத்துவதுமாக அரசு செயற்பட்டிருக்கிறது என்பதற்கான வலுவான சான்றுகள் கிடைத்திருக்கின்றன.[/size]

Edited by thanga

ஓ நாயே , சாப்பிட்ட ஆடு கேட்டிரிந்தா அதனைச் சாப்பிட்டிருக்க மாட்டேன் எண்டு சொன்ன மாதிரி இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

"பிரபாகரன் மிகப்பெரும் வரலாற்றுத் தவறு செய்தார்": எரிக் சோல்ஹெய்ம்

சர்வதேச விழுமியங்களிற்கு மதிப்பளித்து பல போராளிகளின் தியாகங்களின் பின்னர் மீட்ட இடங்களில் இருந்து எரிக் சோல்ஹெய்ம் போன்றவர்களின் கபடமான வேண்டுகோளை மதித்து பின்வாங்கச்சொல்ல பின்வாங்கியது, சொந்தமக்கள் கொல்லப்பட்டுக்கொண்டு இருக்கும்போதும் தென்பகுதியில் சிங்களவர்களை பொது இடங்களில் ஆயிரக்கணக்கில் கொல்லாது மனிதாபிமானமாக நடந்து கொண்டது. இவைகள் போன்ற பல மனிதாபிமான செயல்களே தலைவர் செய்த வரலாற்று தவறுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாளுக்கு தாங்கள் பிளான் பண்ணினமாதிரி ஒண்டும் நடக்குதில்லையே.. சீனா பக்கம் போய்ட்டானே எண்டு கவலை.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு தமிழ் மக்கள் தொடர்பில் பெரிய அக்கறைகள் இருந்தது என்றால்.. SAARC மாநாட்டுக்கு மன்மோகன் சிங் வந்த போது விடுதலைப்புலிகள் ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்தம் செய்திருந்த போது சிறீலங்காவையும் செய்யச் சொல்லிக் கேட்டு மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற அல்லது யுத்தத்தை நிறுத்த சொல்கைம் முயற்சித்திருக்கலாமே. ஏன் அதுகளை அப்ப செய்யாமல்.. கிளிநொச்சி விழுந்ததன் பின்னர் சரணடைதல் அறிக்கை கொடுத்தவர். எந்த போராளி அமைப்பாவது அது எதிர்த்துப் போராடும் அரசிடம் எந்த சர்வதேச உத்தரவாதமும் கண்காணிப்பும் இன்றி.. சரணடையும்...??!

செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்த அமுலாக்கத்திற்கும் கண்காணிப்பிற்கும் சர்வதேச உதவியை நாடிய புலிகள்.. சரணடைதலுக்கு ஒரு அறிக்கையோடு சரணடைய முயற்சித்திருப்பார்களா..??!

இவர் உள் நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் தோற்றுப் போன ஒரு இராஜதந்திரி என்பதை மறைக்க.. இப்ப இல்லாத புலிகள் மீது வீண் பழிகளைப் போடுகிறார்..!

புலிகள் என்றுமில்லாத வகையில்.. இம்முறை காட்டிய பொறுமையும் வெளிநாட்டவர்கள் மீது வைத்த நம்பிக்கைகளுமே அவர்களின் அழிவுக்கும் மக்களின் அழிவிற்கும் வித்திட்டது..! அதில் சொல்கைமும் ஒருவர்..! முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு சொல்கைமும் பொறுப்புக் கூற வேண்டிய ஒருவர்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வேயின் நடுநிலைமையை மக்களும் விடுதலை புலிகளும் நன்கே அறிந்து இருந்தனர்.அரசு மீறிய போர் நிறுத்த மீறல்களை கண்டும் காணாமல் எத்தனை தடவைகள் விட்டது என்பது வடக்கு கிழக்கில் வாழ்ந்தவர்களுக்கு நன்கு தெரியும்.குறிப்பாக போர் நிறுத்தம் இருந்த வேளையில் பூநகரி, வாகரை போன்ற இடங்களில் நோர்வே நடுநிலையாளர்கள் மீது ஸெல் தாக்குதல் நடாத்தப்பட்டது நினைவில் இருக்கலாம். இந்த லட்சணத்தில் இவர்களை நம்பி (இந்தியாவையும் சேர்த்து) புலிகளை சரணடைய எந்த நம்பிக்கையில் அவர்கள் வருவார்கள்.(ஒரு பேச்சுக்கு பிரபாகரனையும்,பொட்டம்மானையும் தவிர எனைய போராளிகளுக்கு மன்னிப்பு வழங்கல் எனும் திட்டம் மேற்குலகால் மேற்கொள்ளப்பட்டிருந்தால்)

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தான் எல்லா தகவல்களையும் இந்தியாக்கு கொடுத்திருக்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசத்தின் அனுசரனையுடன் சரண் அடையச்சென்ற நடேசன், புலித்தேவனையே உங்களால் காப்பாற்ற முடியவில்லையே. அமெரிக்காவின் மகிந்தா முகம் இஸ்ரெல். அமெரிக்காவின் ரணில் முகம் நோர்வே.

எரிக் சொல்கேயும் சொல்லித்தான் தெரியவேண்டுமா ? அதுவும் கடைசி நேர பிரச்சனை பற்றி சொல்லுகின்றார் .

வரலாற்று தவறு அல்ல வரலாறே தவறுதான் .

ஆனால் அதற்கு அடிப்படையாக நாங்கள் தெரிவித்த நடைமுறை யோசனை என்னவென்றால், சர்வதேச அமைப்பு, உதாரணமாக அமெரிக்கா, இந்தியா அல்லது வேறு ஒரு நாடு இலங்கையின் வடக்கு - கிழக்குப் பகுதிக்கு ஒரு பெரிய கப்பலை அனுப்பிவைப்பது என்றும், அதில் ஐநா மன்ற அதிகாரிகளோ அல்லது மற்ற சர்வதேச அமைப்பை சேர்ந்தவர்களோ இருந்து, போரின் இறுதியில் எஞ்சியிருந்த அனைத்து விடுதலைப்புலிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் ஒருவர் விடாமல் கணக்கெடுத்து புகைப்படத்துடன் பதிவு செய்வது என்றும் தெரிவித்திருந்தோம்.

ஏன் பூறுகொடவின் தலைமையின் கீழ் இருந்த கண்காணிப்பாளர்கள் வெளியேறினார்கள். ஏன் ஐ.நா அதிகாரிகள் வெளியேறினார்கள். ஏன் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் வைத்திய சாலைகள் தாக்கப்படும் போது ஒன்றும் செய்ய வில்லை. ஏன் நடேசனும் மற்றவர்களும் சரண் அடைந்து, கொல்லப்படும் போது சர்வதேச செஞ்சிலுவை கப்பல் வெளியில் இருந்து பார்த்து கொண்டிருந்தது.

இவற்றில் எல்லாம் அரசு செய்தது, தேவை இல்லாமல் குண்டுகளை வீண்ணடிக்காமல் இருக்க, கூடியமட்டும் மக்களையும் போராளிகளையும் சர்வதேச உதவியை வைத்து ஒரு இடத்தில் சேர்த்து அதன் பின் கொலை செய்வது மட்டுமே.

ஐ.நா அதிகாரிகள் வேண்டுமென்றேதான் விலக்கப்பட்டார்கள் என்று ஐ.நா வாலே குற்றம் சாட்டப்பட்டு ஐ.நாவாலேயே விசாரணை ஆரம்பிக்க பட்டிருக்கிறது.

இலங்கை அரசு போர் முடிந்து மூன்று வருடங்களின் பின்னும் அங்கே சர்வதேச அமைப்புக்களை செல்ல அனுமதி அளிக்க மறுக்கிறது. இதை யாரும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். போர் முடிந்த பின்னர் தன்னும் இலங்கை அரசை சம்மதிக்க வைத்து அகதிகள் முகாம்கள் ஒன்றைத்தன்னும் பொறுப்பெடுக்க இந்த நாடுகள் வரவில்லை. எந்த அகதிகள் முகாம்களில் இருந்தவர்களைத்தன்னும் சர்வதேசநாடுகள் தாம் முன் வந்து கணக்கெடுக்க இலங்கை அரசிடம் அனுமதி கேட்டு வாங்கவில்லை.

போர் நடக்கத்தொடங்கு முதல் வெளியேறிய சர்வதேச அமைப்புகள் எந்த கணக்கும் வைத்திருக்கவில்லை. இந்த அமைப்புக்கள் வைத்திய சாலைகளின் ஆள்கூறுகளை இராணுவத்திற்கு கொடுக்க வேண்டாம் என வைத்தியர்கள் தடுக்கவும், அதை ஏற்றுக்கொள்ளாமல் விடாப்பிடியாகக் கொடுத்து வைத்திய சாலைகள் மீது குண்டுகள் இலக்காக விழ வைத்தவர்கள். இவரகள் கப்பலுக்காக மக்களை ஒரு இடத்தில் சேர்க்கும் போது வைத்திய சாலைகளுக்கு நடந்துகொண்டிருந்தவை கப்பலுக்காக சேர்க்கப்படும் மக்களுக்கும் போராளிகளுக்கும் நடக்காது என்ற உறுதி மொழியை யாருக்காவது வழங்கினார்களா?

இந்த மனுசாள் இலங்கை அரசிடம் வாங்கிய பணத்துக்கு எல்லோரயும் கூட்டு மொத்தமாக ஒரே அள்ளலில் அள்ளிக்கொண்டு போய்கொடுக்கமுடியவில்லை என்று கவலைப்படுகிறது போலிருக்கு. சுத்த ரோவின் முடிச்சு மாறி பிராணி

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் சேர்ந்துதான் பிளான் பண்ணினவை.. சரிவரேல்லை. கிடந்து குத்தி முறியினம்..

  • கருத்துக்கள உறவுகள்

நம் விவாதங்களில் பல பயனற்ற subjective வான உணர்வு நிலையிலேயே இன்னும் தொடர்கிறது. இனியேனும் எங்கள் எதிர்கால சந்ததியின் தேவைகளுக்காக எங்கள் விடுதலைப்போராட்டத்தின் இராணுவத் தோல்வி தொடர்பாக ன பல விடயங்களை திரட்டி நாம் objective வாக ஆராயவேண்டும். .

இராணுவப் புவியியல் ரீதியாக தப்பானதும் தோற்றுப்போனதுமான தங்கள் ஜெயசுக்குறு நடவடிக்கையின் தோல்வியில் இருந்து எதிரி நிறையக் கற்றிருந்தான், ஜெயசுக்குரு நடவடிக்கையின் மீழாய்வே இறுதி யுத்தத்தில் அவனது இராணுவ நடவடிக்கைகளின் அடிபடையாக இருந்தது.

ஜெயசுக்குறு மற்றும் சமாதான பேச்சுவார்த்தை மற்றும் இறுதி யுத்தம் என்பவை இடம்பெற்றபோது - வன்னியுடனும், நோர்வேயுடனும் சர்வதேச அரசியல் சக்திகள் சிலவற்றோடும் - நான் சம்பந்தபட்ட விவாதங்களை நான் அறிந்த விடயஙளை விரிவாக எழுத முடிவு செய்துள்ளேன். ஆரோக்கியமான விவாதம் சாத்தியம் என உறுதியழித்தால் யாழிலேயே எழுதலாம். அல்லது முதலில் ஆங்கில சஞ்சிகை ஒன்றில் எழுதி பின் மொழி பெயர்கவுள்ளேன்/

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

காலம் கடந்தாவது உண்மைகளை வெளிக்கொணர்ந்த எரிக் சொல்ஹெய்முக்கு நன்றிகள்.

உண்மைகளை யார் கூறினாலும் இங்கே தமிழ்த் தேசியவாதிகளுக்கு பிடிக்காது. எதனையும் தீவிரமாக ஆராயாது உடனடியாக துரோகிப் பட்டம் கொடுப்பதற்கு எம்மைத் தவிர வேறு யாருக்கும் இந்த அளவு துணிச்சல் வராது. அந்த வகையில் எரிக் சொல்ஹெய்ம் அவர்கள் இனி எம்மவர்களால் துரோகியாகவே கணிக்கப்படுவார்.

உண்மையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது பிடிவாதத்தால் ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளை அடகு வைத்து விட்டார் என்பதே பொருத்தம்.

பிரபாகரனிடம் போரியல் திறமை இருந்ததே தவிர இராஜதந்திர ரீதியான நகர்வில் அவர் மிக மிக பலவீனமாகவே காணப்படார். அந்தத் திறமை அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் அவர்களிடமே இருந்தது. இவர்தான் விடுதலைப் புலிகளை அரசியல் ரீதியாக சிறப்பாக வழி நடத்தினார் என்றால் அது மிகையாகாது.

தன்னைத் துதி பாடக்கூடியவர்களான சு.ப.தமிழ்ச்செல்வன், காஸ்ட்ரோ போன்றவர்களின் கூற்றுக்களை நம்பி பிரபாகரன் செயற்பட்டாரே தவிர தனக்கு அறிவுரை கூறியவர்களை அவர் இறுதி வரை நம்பவில்லை.

உதாரணத்துக்கு உங்களுக்கு ஒரு சம்பவத்தினைக் குறிப்பிடலாம். அதாவது, ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக எம்.கே.நாராயணன் தனிப்பட்ட ரீதியாக அன்டன் பாலசிங்கம் அவர்களுடன் தொடர்ச்சியாக பல பேச்சுவார்த்தைகளை நடத்தி- பின்னர் எம்.கே.நாராயணன், நீங்கள் ராஜீவ் கொலைச் சம்பவம் தொடர்பில் வருத்தம் தெரிவித்து அறிக்கை விடுங்கள்;. இதன் பின்னர் இந்தியாவின் கொள்கை வகுப்பு மாறும் அல்லது விடுதலைப் புலிகள் மீதான இந்தியாவின் கோபம் தணியும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே இந்திய ஆங்கில தொலைக்காட்சிக்கு அன்டன் பாலசிங்கம் அவர்கள் பேட்டி வழங்கியிருந்தார். மிகத் தெளிவாக ராஜீவ் கொலைச் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிக்கின்றோம் என்று அந்தப் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், இதன் பின்னர் நடந்த பல விடயங்கள் பலருக்கு தெரிந்திருக்குமோ எனக்கு தெரியாது. உடனடியாக வன்னியில் இருந்து அப்போதைய அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த சு.ப.தமிழ்ச்செல்வன், அது பாலசிங்கம் அண்ணரின் தனிப்பட்ட கருத்து ஒட்டுமொத்தமான எமது கருத்து அல்ல என்று அங்கிருந்து அறிக்கை விட்டார்.

விடுதலைப் புலிகள் உருவாகிய காலம் தொட்டு தன்னை அதனுடன் இணைத்து வந்த பாலசிங்கத்தினை நொடிப்பொழுதில் அவரை தனிப்பட்டவர் எனக் குறிப்பிடக்கூடிய துணிச்சல் விடுதலைப் புலிகளைத் தவிர வேறு யாருக்கும் வராது.

சு.ப.தமிழ்ச்செல்வன் தன்னை கலந்து ஆலோசிக்காது உடனடியாக அதற்கு மறுப்பு அறிக்கை விட்டமை தொடர்பில் பாலசிங்கம் அவர்கள் மனதளவில் நொருங்கிக் காணப்பட்டார். இதன் பின்னர் விடுதலைப் புலிகளின் மத்திய குழு கூடி பாலசிங்கம் அவர்களுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிறைவேற்றி- அதனை அவருக்கு தெரியப்படுத்திய போது எந்தளவு நொருங்கிப் போனார் என்பதனை அவரின் மனைவியிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

இன்று வரை அடேல் பாலசிங்கம் அவர்கள் யாவற்றிலும் இருந்து ஒதுங்கி இருப்பதற்கு காரணமே பாலசிங்கம் அவர்களுடன் விடுதலைப் புலிகள் இறுதியில் நடந்து கொண்ட முறையே காரணம்.

புற்று நோயின் தாக்கம் காரணமாக உயிர் இழக்கும் தறுவாயில் தன்னைச் சந்திக்க- யாழில் இருந்து வெளிவரும் நாளேட்டின் ஆசிரியருடன் உரையாடும் போது, நான்கு தடவை தம்பியை (பிரபாகரனை) உயிரோடு காப்பாற்றி விட்டேன். ஐந்தாவது தடவை காப்பாற்றுவதற்கு நான் உயிரோடு இருக்க மாட்டேன் என்று கூறி தனது கவலையினை வெளிப்படுத்தினார். கடைசியில் நடைபெற்றது யாவரும் அறிந்த விடயம்.

எமக்கு அனைத்துலக சமூகத்தினால் எத்தனையோ சந்தர்ப்பங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால், அவற்றினை நாம் சரியாகப் பற்றிக்கொள்ளவில்லை என்பதே உண்மை.

சரியோ, தவறோ ஒன்றிணைந்த வடக்கு-கிழக்கு மாகாண சபை 87 ஆம் ஆண்டு கிடைத்தபோது விடுதலைப் புலிகள் குறைந்தபட்ச தீர்வாகக் கருதி- அதனை நடைமுறைப்படுத்த பல முட்டுக்கட்டைகளை வெளிப்படுத்தி- இறுதியில் இந்தியப் படையினரோடு மோதினர். இன்று உள்ளுராட்சி சபைக்காக நாம் தவம் கிடக்கின்றோம்.

பிரேமதாசவுடனான பேச்சுக்களின் போது பல விட்டுக்கொடுப்புக்களுக்கு பிரேமதாசா தயாராக இருந்த போது எங்கே அவர் தமிழர்களின் பிரச்சினையை இலகுவாக தீர்த்துவிடுவாரோ என்று அஞ்சிய விடுதலைப் புலிகள் அவருக்கும் சங்கு ஊதிவிட்டனர். இதனை பின்னர் பாலசிங்கம் அவர்களே, பிரேமதாசாவினை கொலை செய்த பாவம் எம்மை சும்மா விடாது என்று தனது நெருங்கிய நண்பர்களுக்கு கூறி கவலைப்பட்டாராம்.

அடுத்து, சந்திரிகாவின் காலத்தில் அவசரப்பட்டு பேச்சுக்களை முறித்து விடுதலைப் புலிகள் வெளியேறியதுதான் மிகக் கொடுமையான காலகட்டம். இந்தப் போர் நிறுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வராது தடுக்க பிரபாகரனுடன் பல தடவை அன்டன் பாலசிங்கம் அவர்கள் வாதிட்டும் பிரபாகரன் போரைத் தொடங்க விரும்பினார். இறுதியில் யாழ்ப்பாணத்தை இழந்தோம்.

சந்திரிகா-ரணில்-மகிந்த காலகட்டத்தில் பொறுமையாக விடுதலைப் புலிகள் இருந்தார்கள் என இங்கே கருத்துக்களை பதிவு செய்திருக்கின்றீர்கள். உண்மைதான் அதனை நானும் ஏற்றுக் கொள்கின்றேன். இந்தளவு நீண்ட பொறுமைக்கு விடுதலைப் புலிகள் வரக் காரணமே அவர்களுக்கு இருந்த நெருக்கடிகளே.

செப்ரெம்பர் 11-க்குப் பின்னர் போராட்டக் குழுக்கள் தொடர்பில் அனைத்துலக சமூகத்தின் பார்வை, விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பெருமளவிலான போராளிகள் வெளியேறியமை எனப் பல காரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

சமாதான காலத்தில் மென்தீவிர யுத்தத்தினை தொடங்கியவர்கள் புலிகள். அதாவது, கொழும்பிலும் பிற இடங்களிலும் சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர்கள், காட்டிக்கொடுத்தவர்கள் எனப் பலரை தேடித் தேடி கொலை செய்தது மட்டுமல்லாது உச்சகட்டக் கொலையா சிறிலங்காவின் வெளியுறவுத்துறை அமைச்சரான கதிர்காமரை கொலை செய்ததோடு விடுதலைப் புலிகள் மென்தீவிர யுத்தத்தினை வன்தீவிர யுத்தத்துக்கு கொண்டு சென்றனர்.

இதன் பின்னர் காட்சிகள் எமக்கு பாதகமாகவே மாறியது. கதிர்காமர் கொலை செய்யப்பட்டவுடன் அன்டன் பாலசிங்கத்துக்கு தொலைபேசியில் அழைத்த ஒரு அனைத்துலக நாடு ஒன்றின் வெளியுறவுத்துறை அமைச்சர், இவ்வாறு குறிப்பிட்டாராம். மிஸ்டர் பாலசிங்கம் பாரிய தவறு ஒன்றினை நீங்கள் இழைத்திருக்கின்றீர்கள். இதன் பின்னர் உங்களுக்கு நடைபெறப் போவது யாவும் பாதகமான விளைவுகளாகத்தான் இருக்கும் என்றாராம்.

இறுதிப் போராட்டக் காலத்தில் விடுதலைப் புலிகளை காப்பாற்றுவதற்கு எரிக் எடுத்த முயற்சிக்கு விடுதலைப் புலிகள் ஒத்துழைத்து இருந்தால் விடுதலைப் புலிகளின் தலைமையாவது காப்பாற்றப்பட்டு இருக்கும். விடுதலைப் போராட்டத்தின் தலைமையை இழந்த இயக்கமாக மலேசியாவில் முன்னர் போராடிய இயக்கமும் விடுதலைப் புலிகளும் தான் என்பது எனது அறிவுக்குத் தெரிந்தது. இந்தியாவின் மணிப்பூர் விடுதலைக்காக போராடிய தலைமை கூட இன்று லண்டனில் இயங்கி வருகின்றது. அதன் தலைமையுடன் மன்மோகன் சிங்க் பேச்சுக்களைக் கூட நடத்தி இருக்கின்றார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் தனது சொந்தப் புத்தியில் இயங்கி இருந்தால் பல விடயங்களை அவர் சாதித்தும் இருந்திருப்பார். இயக்கத்துக்குள் இருந்த உள் இருந்தே கொல்லும் வியாதி காரணமாக பலரின் தூண்டுதலின் காரணமாக சிறப்பாக ஆயுதங்களை தருவித்துக் கொண்டிருந்த குமரன் பத்மநாதனை நீக்கியதில் இருந்து பல வெற்றிகளை சிறப்பாகத் தேடித் தந்த பிரிகேடியர் பால்ராஜ் கூறிய ஆலோசனையை சு.ப.தமிழ்ச்செல்வனுக்காக ஏற்காது விட்டதில் இருந்து பல வரலாற்றுத் தவறுகளை பிரபாகரன் தன்மீது சுமத்தியபடி நந்திக்கடலை நோக்கி நடந்துவிட்டார் என்பதே சரி ஆகும்.

இவ்வாறு யாவற்றையும் எழுதுவதால் நான் சிறிலங்கா அரசினை நல்லவர்கள் என்று கூற வரவில்லை. அவர்கள் எமக்கு எதுவும் தரமாட்டார்கள் என்பது உண்மைதான். அதனை மறுப்பதற்கு இல்லை. எமக்குத் தேவையான உரிமைகளை பெறுவதற்கு இராஜதந்திரத்துடன் கூடி போரியல் திறமையினை நாம் பயன்படுத்தத் தவறிவிட்டோம் என்பதனையே மீண்டும் மீண்டும் தெரிவிக்க விரும்புகின்றேன். இனியாவது நாம் ஆக்கபூர்வாகச் செயற்பட வேண்டும். இல்லை எனில் இருக்கின்ற மண்ணை இழக்கின்ற நிலைக்கே நாம் செல்வோம்.

இங்கே மீளவும் மீளவும் நான் வலியுறுத்துகின்ற விடயம் இதுதான். வரலாற்றுத் தவறுகளில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அதனைக் கற்றுக் கொள்ளத் தவறினால் எதிர்காலச் சந்ததியினருக்கும் நாம் பிழையான முன்னுதாரணத்தினையே விட்டுச் செல்கின்றோம்.

Edited by nirmalan

  • கருத்துக்கள உறவுகள்

நிர்மலன்.. :D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

நான் சம்பந்தபட்ட விவாதங்களை நான் அறிந்த விடயஙளை விரிவாக எழுத முடிவு செய்துள்ளேன். ஆரோக்கியமான விவாதம் சாத்தியம் என உறுதியழித்தால் யாழிலேயே எழுதலாம். அல்லது முதலில் ஆங்கில சஞ்சிகை ஒன்றில் எழுதி பின் மொழி பெயர்கவுள்ளேன்/

ஆரோக்கியமான விவாதங்கள் யாழில் சாத்தியமற்றது என்பதே எனது கருத்தாக நேற்றுவரை இருந்தது..அதனாலேயே பல விவாதங்களில் இருந்து விலகி இருந்துகொண்டிருந்தேன்...என்னை எப்பவும் தூரமாக வைத்திருந்தேன்...ஏனெனில் இது முகமூடிகள் பலர் உலாவும் தளம்..உங்களைப்போல்,என்னைப்போல் சொந்தப் பெயரில் தம்மை வெளிப்படுத்திவருபவர்களுக்கு யாழ் ஆக்கம்களை எழுத்குவதற்கு,புதிய படைப்புகளை உருவாக்குவதற்கு உகந்த தளமாக இருக்கின்றபோதிலும் ஆரோக்கியமான விவாதங்களை புரிவதற்கு உகந்த தளம் அல்ல என்பது என் கருத்தாக நேற்றுவரை இருந்துவந்தது.....இங்கு முகமூடிகளினால் மிக இலகுவாக உங்கள் மேல் ஏதாவது அவதூறை வைத்துவிட்டு போகலாம்..ஏனெனில் அவர்களுக்கு இது சம்பந்தமாக பொறுப்புகூறலோ அல்லது பதிலளிக்கவேண்டிய கடப்பாடோ இல்லை..அதனால் அவர்களின் சொந்த வாழ்க்கையில் எந்தவித பிரச்சினையும் வரப்போவதுமில்லை...ஆனால் உங்கள் எங்கள் போன்றவர்களின் நிலை அப்படி அல்ல...அவை எமது சொந்த வாழ்விலும் தாக்கம்களை செலுத்தலாம்...வைக்கப்படும் பொய்யான குற்றசாட்டுக்களுக்குகூட பதிலளிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவீர்கள்...இன்னொன்று அவதூறான அல்லது தனிமனித தாக்குதலாய் அமைந்த கருத்துக்கள் எல்லாவற்றையும் நிர்வாகம் நீக்கிகொண்டிருக்க முடியாது என்பது ஒரு பிரச்சினையாக நேற்றுவரை இருந்தது... அதேபோல் அவதூறான விடயங்கள் என தெரிந்தும் சில விடயங்களை நிர்வாகம் கண்டும் காணாமல் விட்டு செல்வது என்பது இன்னொரு பிரச்சினையாக இருந்துவந்தது அண்மைவரை..எனவே நாளை உங்கள் மேல் விவாதத்தின்போது மேற்கொள்ளப்படக்கூடிய தனிமனித தாக்குதல்கள் எல்லாவற்றையும் நிர்வாகம் களவிதிகளை கடைப்பிடித்து நீக்கிவிடும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லாமல் இருந்தது....ஆனால் யாழில் இன்று அந்த நிலமை இல்லை...யாழில் கீழுள்ள இரண்டு திரிகளையும் போய்ப்பார்த்தீர்களானால் உண்மை தெரியும்(http://www.yarl.com/forum3/index.php?showtopic=109222) (http://www.yarl.com/forum3/index.php?showtopic=109331&hl=)...அவதூறான தனிமனித தாக்குதலாக அமைந்த கருத்துக்கள் அனைத்தும் உடனுக்குடன் நீக்கப் பட்டிருக்கின்றன...நியானியும்,நுணாவிலானும் புதிதாக யாழில் மட்டுக்களாக இணைந்த நாட்களில் இருந்து மிகச்சிறப்பாக யாழில் ஆரோக்கியமான விவாதங்கள் இடம்பெறக்கூடிய வகையில் சிறப்பாக யாழ் நகர்கிறது...இணையவன் அண்ணாவினதும் நிழலி அண்ணாவினதும் பணிகளையும் பகிர்ந்து மிகச்சிறப்பாக யாழை கொண்டு நடத்துகிறார்கள்...நால்வரதும் கரங்களில் யாழ் இருக்கும்வரை நம்பிகையுடன் இனிமேல் யாழில் கருத்தாடலாம்...அந்த நம்பிக்கை என்போன்ற முகம் காட்டி வரும் உறவுகளுக்கு இனி வரும்..அதை வரப்பண்ணுவதே யாழில் ஆரோக்கியமான விவாதங்கள் தொடர வழிகோலும்...எனவே இனி எந்தவித தயக்கமுமின்றி நீங்கள் ஆர்ரோகியமான விவாதங்களை நடத்தலாம் என்பது எனது நம்பிக்கை...

Edited by சுபேஸ்

தமிழர்களின் இன்றைய நிலைக்கு காரணம் என்ன என்பதை ஆராய, புலிகளுக்காக கதைக்க கூடிவர்கள் சுதந்திரமாக கதைக்கதக்க நிலைவரைக்கும் பொறுத்திருக்க தயார். ஆனல் இன்று கக்கீமின் மு.கா., சிங்கள ஜயநாயகத்தின் நிலை இவற்றையெல்லாம் ஆராய ஒரு புத்தகம் எழுத வேண்டும். இருந்தாலும் அந்த கேள்வியை கேட்க ஒரு வரி மட்டும் போதும். இவர்களுக்கு என்ன நடந்தது இந்த நிலைக்கு வந்தார்கள்.

பிராபாகரனை அழித்த பொன்சேக்காவை ஏன் அமெரிக்கா காப்பாற்ற வேண்டி வந்தது, ஏன் மஞ்சுளா திலகரத்தினா ஆஸ்பத்திரியில் படுத்திருக்கிறார்?. நமது மதியூக மன்னர்கள் பொன்சேக்காவுக்கு கொடுத்த அறிவுரைகள் என்ன? .

1.கருணாநிதியின் நிலை என்ன.

2. ஊருக்கு உபதேசம் செய்யும் சொலெய்ம் தன் பதவியை எப்படி இழந்தார்.

3. சோனியா காங்கிரஸ் இன்று (சொலெயும் கூறியிருப்பதின் படி தனது மிரண்டு பிடிக்கும்) குணத்தை வைத்து எங்கே வந்திருக்கிறது?. இலங்கைக்காக புலிகளை அழித்த இந்தியாவின் இலங்கையுடனான உறவு எங்கே?. புலிகளை அழிக்க கவனம் செலுத்திய இந்தியாவின் பாதுகாப்பு நிலை என்ன?

4.11 கப்பல்களை தாழ்க்க உதவிய ஜனாதிபதி புஸ் அமெரிக்காவின் மிக தரம் குறந்தவர்களில் நான்காவதாக அமெரிக்கர்களால் கணிப்படுவது ஏன்? அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் இந்தியாவின் தூதுவராக படியிறக்கபட்டது ஏன்? இவற்றில் ஒன்றைத்தன்னும் விளங்கவைக்காமல் இவர்களின் சதியில் மாட்டுப்பட்டுபோனவர்களை மட்டும் ஆராயும் ஆராச்சிக்கு பெயர் என்ன? நமது மதி உரைஞ்ஞர்கள், இவர்களுக்கும் தங்கள் பதவிகளை காப்பாற்றிக்கொள்ள ஏதாவது உபதேசம் கொடுத்திருந்தால் அது என்ன.

அமெரிக்க பிரேரணை ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டவுடன் மறைந்துபோன உபதேசிகள் பலர் இந்த முறை ஐ.நா. கூட்டத்திற்கே மகிந்த வரமுடியாமல் நிலமை கேவலக்கெட்டுவிட்டது எனபதை கண்டவுடன் சற்று அவதிப்பட்டு கண்டு விழுந்தடித்து யாழுக்கு ஓடிவருகிறார்கள்.

மகிந்தவை யாழ் இனி காப்பாற்ற தக்க நிலையில் அவர் இல்லை. சர்வதேசம் அவரை கம்பி என்ன வைக்கத்தான் போகிறது. 8 வருடங்களின் பின் ACF தனது தொழிலாளிகளின் கொலைக்கு நீதி கேட்கிறது. தெய்வம் நின்றறுக்கும் என்பது போல இவை நடக்க ஆரம்பித்துவிட்டன.

போர்க்காலத்தில் எமக்கு எதிராக வேலை செய்த ICG இன்று நமது மிக்கப்பெரிய துணைகளில் ஒன்று. காலம் ஒருநாள் மாறும்.இதை கவனிக்க தவறி பழைய கதைகளை புரட்டுவது பலன் இல்லாதது.

கிட்லர் பதிவிக்கு வந்து ஐரோப்பாவை அழிப்பதை அந்த நேரத்தில் அரசியலில் முதன்மை பெற்றிருந்த ஐரோப்பியருக்கு தடுக்க முடியவில்லை. புலிகளை மகிந்த அழித்தது எந்த விவேகத்தையும் வைத்தல்ல. கிட்லர் மாதிரியே பொய்களையும் புனைந்துரைகளையும் முன் வைத்தே. இன்று அது முன்னால் போகாமல் தவிக்கிறார். அரியநேந்திரன் இரண்டு நாட்களுக்கு முன் சொல்லியிருப்பது சர்வதேசம் தலையிட்டு தமிழருக்கு ஒரு தீர்வை பெற்றுத்தரும் என்பது.

Edited by மல்லையூரான்

நம் விவாதங்களில் பல பயனற்ற subjective வான உணர்வு நிலையிலேயே இன்னும் தொடர்கிறது. இனியேனும் எங்கள் எதிர்கால சந்ததியின் தேவைகளுக்காக எங்கள் விடுதலைப்போராட்டத்தின் இராணுவத் தோல்வி தொடர்பாக ன பல விடயங்களை திரட்டி நாம் objective வாக ஆராயவேண்டும். .

இராணுவப் புவியியல் ரீதியாக தப்பானதும் தோற்றுப்போனதுமான தங்கள் ஜெயசுக்குறு நடவடிக்கையின் தோல்வியில் இருந்து எதிரி நிறையக் கற்றிருந்தான், ஜெயசுக்குரு நடவடிக்கையின் மீழாய்வே இறுதி யுத்தத்தில் அவனது இராணுவ நடவடிக்கைகளின் அடிபடையாக இருந்தது.

ஜெயசுக்குறு மற்றும் சமாதான பேச்சுவார்த்தை மற்றும் இறுதி யுத்தம் என்பவை இடம்பெற்றபோது - வன்னியுடனும், நோர்வேயுடனும் சர்வதேச அரசியல் சக்திகள் சிலவற்றோடும் - நான் சம்பந்தபட்ட விவாதங்களை நான் அறிந்த விடயஙளை விரிவாக எழுத முடிவு செய்துள்ளேன். ஆரோக்கியமான விவாதம் சாத்தியம் என உறுதியழித்தால் யாழிலேயே எழுதலாம். அல்லது முதலில் ஆங்கில சஞ்சிகை ஒன்றில் எழுதி பின் மொழி பெயர்கவுள்ளேன்/

யாழ் கருத்துக்களம். இங்கே வரும் கருத்துகள் அவற்றின் மீது எல்ல உறவுகளுக்கும் கருத்து சொல்ல தகமை உள்ளவையாக இருக்கவேண்டும்.

மேலே சுட்டிக்காட்டியிருக்கும் நீக்கபட்ட கருதுக்களில் திண்ணையில் இருந்து நான் கொண்டுவந்திருந்தாக கூறப்பட்ட கருத்துக்களும் அடங்கும். இதை நீக்கிய மட்டுறுத்தினர் இணியவனுடன் உரையாடியிருந்தேன். இதன் மூலம் நீக்கப்படாமல் எனது கருதுக்களை முன் வைக்கதக்க வழிமுறைகளை கண்டிருக்கிறேன். அதன் பின்னர் நான் பின்னால் போகத்தவையில்லாமல் கருத்துகளை வைக்க "[size=4]வரலாற்றுத் தவறுகளில் இருந்து நான் பாடம் கற்றுக்கொண்டுள்ளேன்". வைக்க இருக்கும் எல்லா கருத்துக்களும் கள விதிமுறைகளுக்கினங்க விவாதிக்கப்படும்.[/size]

Edited by மல்லையூரான்

காலம் கடந்தாவது உண்மைகளை வெளிக்கொணர்ந்த எரிக் சொல்ஹெய்முக்கு நன்றிகள்.

உண்மைகளை யார் கூறினாலும் இங்கே தமிழ்த் தேசியவாதிகளுக்கு பிடிக்காது. எதனையும் தீவிரமாக ஆராயாது உடனடியாக துரோகிப் பட்டம் கொடுப்பதற்கு எம்மைத் தவிர வேறு யாருக்கும் இந்த அளவு துணிச்சல் வராது. அந்த வகையில் எரிக் சொல்ஹெய்ம் அவர்கள் இனி எம்மவர்களால் துரோகியாகவே கணிக்கப்படுவார்.

உண்மையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது பிடிவாதத்தால் ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளை அடகு வைத்து விட்டார் என்பதே பொருத்தம்.

பிரபாகரனிடம் போரியல் திறமை இருந்ததே தவிர இராஜதந்திர ரீதியான நகர்வில் அவர் மிக மிக பலவீனமாகவே காணப்படார். அந்தத் திறமை அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் அவர்களிடமே இருந்தது. இவர்தான் விடுதலைப் புலிகளை அரசியல் ரீதியாக சிறப்பாக வழி நடத்தினார் என்றால் அது மிகையாகாது.

தன்னைத் துதி பாடக்கூடியவர்களான சு.ப.தமிழ்ச்செல்வன், காஸ்ட்ரோ போன்றவர்களின் கூற்றுக்களை நம்பி பிரபாகரன் செயற்பட்டாரே தவிர தனக்கு அறிவுரை கூறியவர்களை அவர் இறுதி வரை நம்பவில்லை.

உதாரணத்துக்கு உங்களுக்கு ஒரு சம்பவத்தினைக் குறிப்பிடலாம். அதாவது, ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக எம்.கே.நாராயணன் தனிப்பட்ட ரீதியாக அன்டன் பாலசிங்கம் அவர்களுடன் தொடர்ச்சியாக பல பேச்சுவார்த்தைகளை நடத்தி- பின்னர் எம்.கே.நாராயணன், நீங்கள் ராஜீவ் கொலைச் சம்பவம் தொடர்பில் வருத்தம் தெரிவித்து அறிக்கை விடுங்கள்;. இதன் பின்னர் இந்தியாவின் கொள்கை வகுப்பு மாறும் அல்லது விடுதலைப் புலிகள் மீதான இந்தியாவின் கோபம் தணியும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே இந்திய ஆங்கில தொலைக்காட்சிக்கு அன்டன் பாலசிங்கம் அவர்கள் பேட்டி வழங்கியிருந்தார். மிகத் தெளிவாக ராஜீவ் கொலைச் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிக்கின்றோம் என்று அந்தப் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், இதன் பின்னர் நடந்த பல விடயங்கள் பலருக்கு தெரிந்திருக்குமோ எனக்கு தெரியாது. உடனடியாக வன்னியில் இருந்து அப்போதைய அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த சு.ப.தமிழ்ச்செல்வன், அது பாலசிங்கம் அண்ணரின் தனிப்பட்ட கருத்து ஒட்டுமொத்தமான எமது கருத்து அல்ல என்று அங்கிருந்து அறிக்கை விட்டார்.

விடுதலைப் புலிகள் உருவாகிய காலம் தொட்டு தன்னை அதனுடன் இணைத்து வந்த பாலசிங்கத்தினை நொடிப்பொழுதில் அவரை தனிப்பட்டவர் எனக் குறிப்பிடக்கூடிய துணிச்சல் விடுதலைப் புலிகளைத் தவிர வேறு யாருக்கும் வராது.

சு.ப.தமிழ்ச்செல்வன் தன்னை கலந்து ஆலோசிக்காது உடனடியாக அதற்கு மறுப்பு அறிக்கை விட்டமை தொடர்பில் பாலசிங்கம் அவர்கள் மனதளவில் நொருங்கிக் காணப்பட்டார். இதன் பின்னர் விடுதலைப் புலிகளின் மத்திய குழு கூடி பாலசிங்கம் அவர்களுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிறைவேற்றி- அதனை அவருக்கு தெரியப்படுத்திய போது எந்தளவு நொருங்கிப் போனார் என்பதனை அவரின் மனைவியிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

இன்று வரை அடேல் பாலசிங்கம் அவர்கள் யாவற்றிலும் இருந்து ஒதுங்கி இருப்பதற்கு காரணமே பாலசிங்கம் அவர்களுடன் விடுதலைப் புலிகள் இறுதியில் நடந்து கொண்ட முறையே காரணம்.

புற்று நோயின் தாக்கம் காரணமாக உயிர் இழக்கும் தறுவாயில் தன்னைச் சந்திக்க- யாழில் இருந்து வெளிவரும் நாளேட்டின் ஆசிரியருடன் உரையாடும் போது, நான்கு தடவை தம்பியை (பிரபாகரனை) உயிரோடு காப்பாற்றி விட்டேன். ஐந்தாவது தடவை காப்பாற்றுவதற்கு நான் உயிரோடு இருக்க மாட்டேன் என்று கூறி தனது கவலையினை வெளிப்படுத்தினார். கடைசியில் நடைபெற்றது யாவரும் அறிந்த விடயம்.

எமக்கு அனைத்துலக சமூகத்தினால் எத்தனையோ சந்தர்ப்பங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால், அவற்றினை நாம் சரியாகப் பற்றிக்கொள்ளவில்லை என்பதே உண்மை.

சரியோ, தவறோ ஒன்றிணைந்த வடக்கு-கிழக்கு மாகாண சபை 87 ஆம் ஆண்டு கிடைத்தபோது விடுதலைப் புலிகள் குறைந்தபட்ச தீர்வாகக் கருதி- அதனை நடைமுறைப்படுத்த பல முட்டுக்கட்டைகளை வெளிப்படுத்தி- இறுதியில் இந்தியப் படையினரோடு மோதினர். இன்று உள்ளுராட்சி சபைக்காக நாம் தவம் கிடக்கின்றோம்.

பிரேமதாசவுடனான பேச்சுக்களின் போது பல விட்டுக்கொடுப்புக்களுக்கு பிரேமதாசா தயாராக இருந்த போது எங்கே அவர் தமிழர்களின் பிரச்சினையை இலகுவாக தீர்த்துவிடுவாரோ என்று அஞ்சிய விடுதலைப் புலிகள் அவருக்கும் சங்கு ஊதிவிட்டனர். இதனை பின்னர் பாலசிங்கம் அவர்களே, பிரேமதாசாவினை கொலை செய்த பாவம் எம்மை சும்மா விடாது என்று தனது நெருங்கிய நண்பர்களுக்கு கூறி கவலைப்பட்டாராம்.

அடுத்து, சந்திரிகாவின் காலத்தில் அவசரப்பட்டு பேச்சுக்களை முறித்து விடுதலைப் புலிகள் வெளியேறியதுதான் மிகக் கொடுமையான காலகட்டம். இந்தப் போர் நிறுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வராது தடுக்க பிரபாகரனுடன் பல தடவை அன்டன் பாலசிங்கம் அவர்கள் வாதிட்டும் பிரபாகரன் போரைத் தொடங்க விரும்பினார். இறுதியில் யாழ்ப்பாணத்தை இழந்தோம்.

சந்திரிகா-ரணில்-மகிந்த காலகட்டத்தில் பொறுமையாக விடுதலைப் புலிகள் இருந்தார்கள் என இங்கே கருத்துக்களை பதிவு செய்திருக்கின்றீர்கள். உண்மைதான் அதனை நானும் ஏற்றுக் கொள்கின்றேன். இந்தளவு நீண்ட பொறுமைக்கு விடுதலைப் புலிகள் வரக் காரணமே அவர்களுக்கு இருந்த நெருக்கடிகளே.

செப்ரெம்பர் 11-க்குப் பின்னர் போராட்டக் குழுக்கள் தொடர்பில் அனைத்துலக சமூகத்தின் பார்வை, விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பெருமளவிலான போராளிகள் வெளியேறியமை எனப் பல காரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

சமாதான காலத்தில் மென்தீவிர யுத்தத்தினை தொடங்கியவர்கள் புலிகள். அதாவது, கொழும்பிலும் பிற இடங்களிலும் சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர்கள், காட்டிக்கொடுத்தவர்கள் எனப் பலரை தேடித் தேடி கொலை செய்தது மட்டுமல்லாது உச்சகட்டக் கொலையா சிறிலங்காவின் வெளியுறவுத்துறை அமைச்சரான கதிர்காமரை கொலை செய்ததோடு விடுதலைப் புலிகள் மென்தீவிர யுத்தத்தினை வன்தீவிர யுத்தத்துக்கு கொண்டு சென்றனர்.

இதன் பின்னர் காட்சிகள் எமக்கு பாதகமாகவே மாறியது. கதிர்காமர் கொலை செய்யப்பட்டவுடன் அன்டன் பாலசிங்கத்துக்கு தொலைபேசியில் அழைத்த ஒரு அனைத்துலக நாடு ஒன்றின் வெளியுறவுத்துறை அமைச்சர், இவ்வாறு குறிப்பிட்டாராம். மிஸ்டர் பாலசிங்கம் பாரிய தவறு ஒன்றினை நீங்கள் இழைத்திருக்கின்றீர்கள். இதன் பின்னர் உங்களுக்கு நடைபெறப் போவது யாவும் பாதகமான விளைவுகளாகத்தான் இருக்கும் என்றாராம்.

இறுதிப் போராட்டக் காலத்தில் விடுதலைப் புலிகளை காப்பாற்றுவதற்கு எரிக் எடுத்த முயற்சிக்கு விடுதலைப் புலிகள் ஒத்துழைத்து இருந்தால் விடுதலைப் புலிகளின் தலைமையாவது காப்பாற்றப்பட்டு இருக்கும். விடுதலைப் போராட்டத்தின் தலைமையை இழந்த இயக்கமாக மலேசியாவில் முன்னர் போராடிய இயக்கமும் விடுதலைப் புலிகளும் தான் என்பது எனது அறிவுக்குத் தெரிந்தது. இந்தியாவின் மணிப்பூர் விடுதலைக்காக போராடிய தலைமை கூட இன்று லண்டனில் இயங்கி வருகின்றது. அதன் தலைமையுடன் மன்மோகன் சிங்க் பேச்சுக்களைக் கூட நடத்தி இருக்கின்றார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் தனது சொந்தப் புத்தியில் இயங்கி இருந்தால் பல விடயங்களை அவர் சாதித்தும் இருந்திருப்பார். இயக்கத்துக்குள் இருந்த உள் இருந்தே கொல்லும் வியாதி காரணமாக பலரின் தூண்டுதலின் காரணமாக சிறப்பாக ஆயுதங்களை தருவித்துக் கொண்டிருந்த குமரன் பத்மநாதனை நீக்கியதில் இருந்து பல வெற்றிகளை சிறப்பாகத் தேடித் தந்த பிரிகேடியர் பால்ராஜ் கூறிய ஆலோசனையை சு.ப.தமிழ்ச்செல்வனுக்காக ஏற்காது விட்டதில் இருந்து பல வரலாற்றுத் தவறுகளை பிரபாகரன் தன்மீது சுமத்தியபடி நந்திக்கடலை நோக்கி நடந்துவிட்டார் என்பதே சரி ஆகும்.

இவ்வாறு யாவற்றையும் எழுதுவதால் நான் சிறிலங்கா அரசினை நல்லவர்கள் என்று கூற வரவில்லை. அவர்கள் எமக்கு எதுவும் தரமாட்டார்கள் என்பது உண்மைதான். அதனை மறுப்பதற்கு இல்லை. எமக்குத் தேவையான உரிமைகளை பெறுவதற்கு இராஜதந்திரத்துடன் கூடி போரியல் திறமையினை நாம் பயன்படுத்தத் தவறிவிட்டோம் என்பதனையே மீண்டும் மீண்டும் தெரிவிக்க விரும்புகின்றேன். இனியாவது நாம் ஆக்கபூர்வாகச் செயற்பட வேண்டும். இல்லை எனில் இருக்கின்ற மண்ணை இழக்கின்ற நிலைக்கே நாம் செல்வோம்.

இங்கே மீளவும் மீளவும் நான் வலியுறுத்துகின்ற விடயம் இதுதான். வரலாற்றுத் தவறுகளில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அதனைக் கற்றுக் கொள்ளத் தவறினால் எதிர்காலச் சந்ததியினருக்கும் நாம் பிழையான முன்னுதாரணத்தினையே விட்டுச் செல்கின்றோம்.

இனியென்ன நீங்களும் ஒரு வரலாற்று நூல் எழுதலாமே......ஏனனில் சில வருடங்களாய் பலர் எழுதி எழுதி அதை நாங்களும் வாசித்து வாசித்து .................இன்னும் எமக்கு பிடித்தமான சுவையான வகையில் யாரும் வழங்கவில்லை ...........அந்த குறையை நீங்கள் நிவர்த்தி செய்வீர்கள் என்று நினைக்கிறேன் .............. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

BBC's Former repporter Frances Harrison's book 'Still counting the dead' launch event was used to tell Tamil Diaspora 'Forget Tamil Eelam & all LTTE's leadership's fault'

http://tamilnet.com/...=13&artid=35641

Edited by Queen

[size=5]தவறுகள் ஒன்றல்ல பலவற்றை விட்டது எரிக் சொல்ஹேயம் தான்.

இதை மறைக்க எரிக் சொல்ஹேயம் அவ்வப்போது கட்டுக் கதைகளை சொல்லி பிதற்றுவது வழமையாகிவிட்டது. [/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]எமக்கு அனைத்துலக சமூகத்தினால் எத்தனையோ சந்தர்ப்பங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால், அவற்றினை நாம் சரியாகப் பற்றிக்கொள்ளவில்லை என்பதே உண்மை. -- நிர்மலன்[/size]

[size=4]..எனவே இனி எந்தவித தயக்கமுமின்றி நீங்கள் ஆர்ரோகியமான விவாதங்களை நடத்தலாம் என்பது எனது நம்பிக்கை...- சுபேஸ்[/size]

நிர்மலன் [size=4]தாங்கள் கூறிய விடயங்கள் மிக முக்கியமானவை. பாலாஅண்ணர் தொடர்பான விடயங்கள் சில எனக்கு ஏற்கனவே தெரிந்தது. இராணுவ புவியியல் மாணவன் என்றவகையில் தளபதி பல்ராஜ்மீது அளவு கடந்த மதிப்பு உள்ளவன். அவர் தொடர்பான முரண்பாடு பற்றி அறிவ விருப்பம். ஏனேனில் அது சில இராணுவ தந்திரோபாய முடிச்சுகளை அவிழ்க்க உதவும்.[/size]

கஸ்ரோவுடன் நான் வெளிநாட்டு கிழைகள் நிர்வாகம் மற்றும் இராணுவ வெளியுறவு அணுகுமுறை தொடர்பாக வெளிப்படையாகவே முரண்பட்டதுபற்றி நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள்.. அவரை வன்னியில் நடந்த கருணாகரனின் புத்தக வெளியீட்டுவிழாவில் பகீரங்கமாகவே விமர்சித்தேன்.

சுருக்கமாகச் சொன்னால் கஸ்ரோ இயக்கத்தை சர்வதேசத்தில் தனிமைப் படுத்துகிறார் என்றகிதுதான் என் குற்றச்சாட்டாக இருந்தது.

இறுதியுத்ததின் இறுதிக் கட்டத்தில் என்னுடன் வன்னியில் இருந்து தொடர்புகொண்ட ஒருவர் மனமுடைந்து ”நீங்கள் சொல்லுவதுதான் சரி ஆனால் நீங்கள் கஸ்ரோபோல --------- பிறக்கவில்லையே” என நொந்துகொண்டார். இறுதி யுத்தத்தின் இறுதி கட்டத்தில் நான் வன்னிக்கு வரவா என கேட்டு எழுதினேன். பாதுகாப்பில்லை வர முயலவேண்டாம் என்றார்கள். எல்லாம் கலம் கடந்துவிட்டது.

முள்ளிவாய்க்கால் அழிவுக்கு வழிவகுத்த பெரும்பாலான தவறுகளுக்கு கஸ்ரோவின் அணுகுமுறைதான் அடிப்படைக் காரணம் என்பதில் வரும்கால வரலாற்று ஆசிரியர்கள் சந்தேகம் கொள்ள மாட்டார்கள்.

[size=4]தவறுகள் பற்றிய சுய விமர்சணம் இல்லாமல் உண்மையின் ஒளியில் நம் தோல்விக்கு வழிவகுத்த காரனங்களை தேடி அடைய முடியாது. தோல்வியின் காரனங்களைக் கண்டடையாமல் நாம் வெற்றியின் பாதையைக் கண்டடைய முடியாது. [/size]

[size=4]நிர்மலன், ஜெனீவா பேச்சுவார்த்தையின்போது பாலாஅண்னரின் கருத்தைக் கேட்டிருந்தால் வரலாறே மாறியிருக்கும். ஜெனிவாவில் பேச்சுவார்த்தையை தமிழ்செல்வன் குழுவினர் முறித்த அன்று மாலை எரிக்கை ஓஸ்லோவில் சந்தித்தேன். மிகவும் உடைந்துபோயிருந்தார். பாலசிங்கம் அண்னர் ஓரம் கட்டப்பட்டதுதொடர்பாக வெறுத்துப்போய் இருந்தார். அவரைத் தவிர வேறுயாரையும் சர்வதேச சமூகம் நம்பவில்லை. இனி எங்களால் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. முடிவின் ஆரம்பம் என்று அந்த நாளை அவர் குறிப்பிட்டார். மிகுந்த மன உளைச்சலுடன் BBC நிருபருடன் நான் பேசினேன். ([/size]http://news.bbc.co.u...sia/5076930.stm[size=4]) [/size]

[size=4]தாரக்கியின் கொலைக்குப் பின்னர் நான் கொழும்பு சென்றால் கொல்லபடும் நிலை இருந்தது. அதுவரை தென்னிலங்கையில் என்னை பாதுகாத்த முஸ்லிம் அரசியல் சக்திகளும் தனிப்பட்ட சிங்கள நண்பர்களும் இனி வரவேண்டாம் என சொல்லிவிட்ட நிலையில் வன்னிக்கான என்னுடைய பயணத்தை மேற்கொண்டேன். வன்னியில் நிறைய விமர்சித்தேன். விவாதித்தேன். 1996 - 2006 காலக்கட்டத்தில் ஒழுங்காக வருடத்தில் பாதிநாள் வன்னியில் ஈழத்தின் ஏனைய பகுதிகலில் இலங்கையில் பயனம் செய்தேன். அந்தப் பயணம்தான் என் இறுதிப் பயணமாக இருந்தது.[/size]

முள்ளிவாய்க்கால் தோல்வி தமிழினத்தின் தோல்வியல்ல போராளிகளின் தோல்வியுமல்ல. சில தவறான தேசிய சர்வதேசிய அரசியல் இராணுவ தந்திரோபாயங்களின் தோல்வி என்றே நான் நம்புகிறேன். நமது தோல்விக்கு வழிவகுத்த தவறான பாதைகளை நிராகரித்தால் மட்டுமே வெற்றிக்கான சரியான பாதையை எம்மால் தேடிக் கண்டுகொள்ள முடியும்.

நாம் சீனாவில் இருந்தோ ரஸியாவில் இருந்தோ போராளிகளை இறக்குமதி செய்ய முடிஒயாது. பகைமைப் பட்ட யாவரும் விடுதலைக்காக கூடாமல் இந்தத்தேர் நகராது. கஸ்ரோ அணியினர் கடந்த கால தவறுகளை உணர்ந்து மேற்குலகோடும் இந்தியாவோடும் தமிழ்நாட்டோடும் முரண்பட்டு நம்மைத் தனிமைப் படுத்தும் பிழையான அணுகுமுறையை கைவிடவேண்டும். அதன்மூலம்தான் அவர்களும் நமக்குத் தலைமை தாங்கும் அணியாக முடியும்.

நம்மால் வரலாற்ருத் தவறுகளைத் திருத்திக் கொண்டு மீழ முடியும். ஈழம் நமதும் நம் பிள்ளைகளதும் சகோதர முஸ்லிம்களதும் பிள்ளைகளதும் பாரம்பரியச் சொத்து அவர்களுக்கு சுதந்திரத்தையும் விடுதலையையும் (Freedom and Independent) நம்மால் விட்டுச் செல்ல முடியும்.

Edited by poet

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.