Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்தேவி-இறுதிப் பாகம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது பாகத்தை வாசிக்கப் பின்வரும் இணைப்பில் கிளிக்கவும்!

http://www.yarl.com/...howtopic=110495

800px-Sri_Lankan_train%2CNorthern_Line%2CSri_Lanka.JPG

[size=4]வவுனியா புகையிரத நிலையத்தினுள், ஒரு பெருமூச்சை விட்டவாறு யாழ்தேவி நுழைந்தது.[/size]

[size=4]அநேகமானவர்கள், தங்கள் மதியச் சாப்பாடுகளை, இங்கேயே முடித்து விட அவசரப் பட்டனர். வவுனியா தாண்டினால், கையைக்காலை நீட்டிச் சாபிடுவது கொஞ்சம் கடினமாக இருக்கும்![/size]

[size=4]பல பெண்கள் போட்டிருந்த தாலிக் கொடிகள், இப்போது கணவர்களிடம் கை மாறின. சில புத்திசாலியான கணவர்கள், தங்கள் உள்ளாடைகளில், ஒரு விதமான இரகசியமான பொக்கட்டுகளைத் தைத்திருப்பார்கள் போலும். அவர்கள் நகைகளை வாங்கியதும்,யாழ்தேவியின் கழிப்பறைக்குள் போய் வந்த படி, இருந்தது அதனை உறுதிப் படுத்தியது. அதிகம் நகை போடாதவர்கள், சேலைத் தலைப்புகளை, இழுத்து மூடுவதன் மூலம், இயலுமான அளவுக்குத் தங்கள் நகைகளை, மறைத்துக் கொள்ள முற்பட்டனர்! ஏன் தான், இவற்றை அணிந்து வர வேண்டுமோ, எனச் சுகுமாரன் தனக்குள் நினைத்துக் கொண்டான்.[/size]

[size=4]வவுனியாவில் இருந்து, பேராதனைப் பல்கலைக்கழகம் போகும் மாணவர்களின் கூட்டமும் ஏறியது! மாணவப் பருவத்துக்கேயுரிய, அந்தப் பயமில்லாத துணிச்சல், அவர்களின் முகங்களில் எழுதியிருந்தது.[/size]

[size=4]ஏறியவுடனேயே அவர்கள் தங்கள் அடையாளமான பைலாப் பாட்டுக்களைப் பாடத் துவங்கியது, வவுனியாவில் அவர்கள் சும்மாயிருக்கவில்லை என்பதையும் தெளிவாகக் காட்டியது. இனிப் பொல்காவலையில் இறங்கி, உடரட்ட மெனிக்கேயைப் பிடிக்கும் வரைக்கும், கல கலப்புக்குக் குறைவிருக்காது எனச் சுகுமாரன் நினைத்துக் கொண்டான். அவர்கள் ஏறியதிலிருந்து, பத்மினியும் அவளது தோழியும் ஒரு விதமான 'மவுன விரதம்; தொடங்கி விட்டது போல இருந்தது.[/size]

[size=4]கண்டி நகர் கண்டு நாமும் வருகிறோமம்மா![/size]

[size=4]காணாத காட்சியெல்லாம் கண்டோமேயம்மா![/size]

[size=4]மதவாச்சி தாண்டியதும், இந்தப் பாடல், சூட மெனிக்கே பலாலா, யனவா மேயப்பே! என மாறிவிடும் என்பதும் சுகுமாருக்குத் தெரிந்திருந்தது![/size]

[size=4]மால் மருகா எனும், வேல்முருகா நீயே...[/size]

[size=4]ஆவலுடன் உன்னைத் தேடி வந்தேனே...[/size]

[size=4]வருவாய் வேல்முருகா.......[/size]

கதிர்மலைக் கந்த வேளே!

காப்பது நீ, ஐயா!.....

[size=4]அவர்களது, பாடலில் இடைக்கிடை முருகப் பெருமானும் வந்து தலையைக் காடிவிட்டுப் போனார்.[/size]

[size=4]யாழ்தேவி, வவுனியாவை விட்டுப் புறப் பட்டு மதவாச்சி வரை, ஆட்டமும் பாட்டும் தொடர்ந்தது. பின்பு களைத்துப் போய்,, அவர்கள் முன்னூற்றி நாலு, விளையாடத் துவங்கியிருந்தார்கள்![/size]

[size=4]அப்போது, அவர்களில் ஒருவன், விரிவுரையாளனாக இருக்க வேண்டும் என்று, அவர்களுக்கிடையில் நடந்த உரையாடல்களில் இருந்து தெரிந்தது, தனது கலியாண மோதிரத்தைக் கழட்டி, அதைப் பணயமாக வைத்து விளையாடப் போவதாகக் கூறவும்,, யாழ்தேவியில் பயணம் செய்த ஒரு பெரியவர், யாரும் எதிர்பாராத மாதிரி,[/size]

[size=4]'தம்பிமார், நீங்க என்னத்தையும் வைச்சு விளையாடுங்க, ஆனால் அந்த மோதிரத்தை மட்டும் வைச்சு விளையாட விட மாட்டன் சொன்னார்.[/size]

[size=4]அப்பு, உங்களுக்கு என்ன பிரச்சனை, எனச் சாதாரணமாகத் தொடங்கிய வாக்குவாதம் பெரிய சத்தங்களுடன் தொடர்ந்தது.[/size]

[size=4]அப்புவும், தம்பி, நீங்கள் ஆரு பெத்த பிள்ளையளோ எனக்குத் தெரியாது. ஆனால், கலியாண மோதிரத்தை வைச்சு விளையாட மட்டும் விட மாட்டன் என்று பிடிவாதம் பிடித்தார்.[/size]

[size=4]இறுதியில், அந்த மாணவர்களுக்கே, தாங்கள் செய்வது பிழையென்று தெரிந்ததோ, அல்லது பெரியவரின் பிடிவாதத்துக்குப் பயந்தார்களோ, அந்த மோதிரத்தை வைத்து விளையாடுவதை நிறுத்தி விட்டார்கள். இப்போது யாழ்தேவியும், அனுராதபுரம், புகையிரத நிலையத்தினுள் நுழைந்தது. மதவாச்சியில் இருந்து, வெளியில் தெரிந்த இடங்களில் பெரிய மாற்றங்கள் தெரிந்தன. மரங்களும், வயல்களுமாகப் பச்சைப் பசேலென்று வெளிகள் இருந்தன. கல்வீடுகள் மறைந்து, காட்டுத் தடிகள் கொண்டு கட்டப் பட்டு, அவற்றின் மீது மண்ணுருண்டைகள் அடுக்கப் பட்டு, கிடுகளால் வேயப்பட்ட கூரைகள் அதிகம் காணப் பட்டன. பனையோலை வேலிகள், முற்றாகவே மறைந்து போயின. இடைக்கிடையே, ஓடு போடப்பட்ட கல்வீடுகளும் காணப் பட்டன. புத்தளம், கற்பிட்டி போகவேண்டியவர்கள், அனுராதபுரத்தில் இருந்து, பஸ் எடுப்பதற்காக, இறங்கிப் போயினர்.[/size]

[size=4]இதுவரை, காலை நீட்டி அமர்ந்திருந்தவர்கள் எல்லாரும், கொஞ்சம் ஒடுங்கிப் போய், ஒதுக்கமாக அமர்ந்து கொண்டார்கள். அவ்வாறு, நகர்ந்து கொள்ளாமல், இருந்தவர்களை, மாத்தயோவ், பொட்டக், அங்கன்ன க்கோ .... என்ற சத்தங்கள், நகர வைத்தன.[/size]

[size=4]வட, வடே.... எஸ்ஸோ வடே....... என்ற குரலில், வடை விற்பவர்களில் தொனியும் மாறியிருந்தது. மொத்தத்தில், கடவுச் சீட்டு இல்லாமல், இன்னொரு நாட்டுக்குள் பிரவேசிப்பது போலவே இருந்தது.[/size]

[size=4]யாழ்தேவி வழமைக்கு அதிகமான நேரம், அனுராதபுரத்தில் தரித்து நின்றது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம், நோக்கிச் செல்லும்,உத்தரதேவிக்காகக் காத்திருப்பதாகப் பேசிக் கொண்டார்கள். [/size][size=4]உத்தர தேவியைக் கண்ட மகிழ்சியில், யாழ்தேவி மீண்டும் தனது பயணத்தைத் தொடர்ந்தது.[/size]

[size=4]இப்போது, வெளியில் காணப்பட்ட மாடுகளும், குறையத் தொடங்க, சேற்று நிலங்களில், எருமைகள் அதிகம் படுத்திருந்தன. இடையிடையே, தண்டவாளங்களில், குறுக்கிடும் சிற்றோடைகளில், பெண்கள் குளித்துக் கொண்டிருந்தனர். தண்டவாளங்களில், இரைமீட்கும் இந்த எருமைகளைத் தூக்கி எறிவதற்காக, யாழ்தேவியின் முன்னால், பாரிய இரும்புத் தகடுகள் பொருத்தப் பட்டிருந்தன. யாழ்தேவி, இரத்தம் தோய்ந்த முகத்துடன், கொழும்புக் கோட்டைப் புகையிரத நிலையத்துனுள், நுழைந்த சந்தர்ப்பங்களும் உண்டு.[/size]

[size=4]பொல்காவலை, வரும் வரைக்கும், கலகலப்புக்குக் குறைவிருக்கவில்லை, பத்மினியினதும், அவவின்ர தோழியினதும் வாய்கள் கூட, மவுனமாய் இருந்தது, கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. [/size][size=4]பொல்காவலையில், மாணவக்கூட்டம் இறங்கியதும், யாழ்தேவியின் அமைதி முடிவுக்கு வந்தது, வெளியில், உயர்ந்து வளர்ந்திருந்த, ரப்பர் மரங்களும், தென்னைகளும், ஈரப் பலாக்காய் மரங்களும், ஒரு புத்துணர்ச்சியை ஊட்டின.[/size]

[size=4]கொழும்பிலை எங்க தங்கப் போறீங்கள்? மீண்டும் பத்மினியின் சீண்டல்.[/size]

[size=4]வேற எங்கை, வெள்ளவத்தையில தான்![/size]

[size=4]நாங்களும், வெள்ளைவத்தை தான். [/size]

[size=4]வெள்ளவத்தை,என்னவோ 'திருநெல்வேலி' மாதிரியும், ஏதோ யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதி மாதிரியும், எங்கள் பேச்சில் புகுந்து விளையாடியது.[/size]

[size=4]பொல்காவலையில் இருந்து, புறப்பட்ட யாழ்தேவி, எந்த விதத் தடங்கலும் இன்றி,, றாகம, வரையும் ஓடியது. றாகம, ஒரு முக்கிய சந்தியாதலால், யாழ்தேவியின் இரு பக்கமும், கைகாட்டி மரங்களாலும், சமிக்ஞை விளக்குகளாலும், நிறைந்திருந்தது, மிகவும் அழகாக இருந்தது. [/size]

[size=4]இங்கிருந்து ஏறியவர்கள், அனேகமாக முஸ்லிம்களாக இருந்தனர். அவர்கள் அணிந்திருந்த தொப்பிகளும், பெண்கள் போட்டிருந்த உடைகளும், அவர்களைத் தனியாக இனம் காட்டின. இதுவே, மீண்டும் தமிழில் சத்தம் போட்டுக் கதைக்கக் கூடிய, துணிச்சலைப் பலருக்குக் கொடுத்திருக்க வேண்டும், எனச் சுகுமாரன் நினைத்துக் கொண்டான்.[/size]

[size=4]பொல்காவலை,தாண்டியதும், குருநாகலையில் இருந்து, கொழும்பு வரை, குறிப்பாக ஒன்றையும் காணவில்லை, புத்தர் சிலைகளும், புத்தரின் பெரிய வீடுகளும் தான் அதிகமாகக் காணப் பட்டன. இலங்கையின் இரண்டாவது பெரிய ஆறான களனியாறு கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. அதன் கரையில் வளர்ந்திருந்த, மூங்கில்கள், ஆற்றை நோக்கி, தலை சாய்த்திருந்தது, மிகவும் அழகாக இருந்தது. 'அதுவரை, 'தொண்டைமானாற்றையும், வழுக்கியாறையும் பார்த்திருந்த , சுகுமாருக்கு இது விந்தையாக இருந்ததில், வியப்பேதும் இல்லை.[/size]

[size=4]களனியில் இருந்தே, தமிழ் ஆக்கள், இறங்கத் தொடங்கியிட்டினம்![/size]

[size=4]கொழும்புக் கோட்டையை, யாழ்தேவி சென்றடையப் பிற்பகல் இரண்டு மணியாகி விட்டது![/size]

[size=4]சுகுமாருக்கும்,நண்பனுக்கும் கொழும்பு சூனியமாகத் தெரிந்தது. இதுவரை, நெஞ்சில் இருந்த துணிவெல்லாம், பனிபோல உருகியோடி விட, பத்தாதக்குப் பக்கத்தில இரண்டு பொம்பிளைப் பிள்ளையளும், அப்ப வெள்ளவத்தைக்குப் போவமே எண்டு கேட்க, நூறாம் நம்பர் பஸ்ஸில் ஏறி டிக்கட் கேட்கக் போட்டு வந்த ஒரு பஸ்ஸில் ஏற, கொண்டக்டரும், [/size][size=4]மாத்தையா, டிக்கட் ஹத்தறத? என்று கேட்டான்![/size]

[size=4]'ஒவ்; என்று கூறியபடி, அவனிடம், இருபது ரூபாவைக் கொடுத்து விட்டுச் சுகுமாரன், மிச்ச்சகாசுக்கு, வெயிட் பண்ணினான்/[/size]

[size=4]கொண்டக்டர் இது மாதிரி, எத்தனை பேரைப் பார்த்திருப்பான்![/size]

[size=4]'பயிண்டக்கொட இத்துறு சல்லி தென்னம், மாத்தையா என்றான்.[/size]

[size=4]அதோடு நிப்பாட்டாமல், கலைக்கிற மாதிரி,[/size]

ஒக்கொம இஸ்ஸறட யண்ட.... எண்டு சத்தம் போட்டுக் கத்தவே எல்லாரும் முன்னுக்குப் போனார்கள்.

[size=4]சுகுமாரது இப்போதைய பிரச்சனை எல்லாம். மிச்சக் காசை எப்பிடிச் சிங்களத்திலை, கேக்கிறது, எண்டு தான்! :D[/size]

[size=4]முற்றும்![/size]

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான் ஏன் இன்னும் மிகுதியையும் எழுதியிருக்கலாமே. பத்மினியுடன் ஏதும் ...... :D

வெள்ளவத்தை போர்ட் போட்டு வந்த ஒரு பஸ்ஸில் ஏற..

அந்தக்காலத்தில வெள்ளவத்தைக்கு எண்டும் தனியா பஸ் விட்டவையே

( ஏதாவது குறை பிடிக்காவிட்டால் பத்தியப்படாது )

:D

யாழ்தேவியில் பயணம் செய்த ஒரு பெரியவர், யாரும் எதிர்பாராத மாதிரி,

'தம்பிமார், நீங்க என்னத்தையும் வைச்சு விளையாடுங்க, ஆனால் அந்த மோதிரத்தை மட்டும் வைச்சு விளையாட விட மாட்டன் சொன்னார்.

அப்பு, உங்களுக்கு என்ன பிரச்சனை, எனச் சாதாரணமாகத் தொடங்கிய வாக்குவாதம் பெரிய சத்தங்களுடன் தொடர்ந்தது.

அப்புவும், தம்பி, நீங்கள் ஆரு பெத்த பிள்ளையளோ எனக்குத் தெரியாது. ஆனால், கலியாண மோதிரத்தை வைச்சு விளையாட மட்டும் விட மாட்டன் என்று பிடிவாதம் பிடித்தார்.

இந்த இடத்தில் ஒருவித தொய்வு நிலையை உணருகின்றேன் . அவர்களுடன் தொடர்பில்லாத ஓர் இறுக்கமான உறவுப்பிணைப்பொன்று ஏன் அப்படி சொன்னது என்பதை விளக்கியிருந்தால் இந்த யாழ்தேவி சொல்லவந்த செய்தி பூரணப்படுத்தப்பட்டிருக்கும் என நினைக்கின்றேன் . எனினும் நல்ல கதைக்கு நன்றிகள் புங்கையூரான் .

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]-----[/size]

[size=4]சுகுமாரது இப்போதைய பிரச்சனை எல்லாம். மிச்சக் காசை எப்பிடிச் சிங்களத்திலை, கேக்கிறது, எண்டு தான்! :D[/size]

:rolleyes::D:lol:

இதுக்கு, சிமைலி போடாமல்... இருக்க முடியவில்லை.

பழைய... ஞாபகங்களை.. கிளறி எடுத்தமைக்கு, நன்றி புங்கையூரான்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முடிவு இல்லை, ஆனா சிரிக்க முடியவில்லை சுகுமாரை நினைத்து, இவரைவிட நானும் என் நண்பனும் பரவாயில்லை, இது கற்பனை கதையா? எனென்றால் ஈசன் எழுதிய மாதிரி வெள்ளவத்தை வரை பஸ் ஓடுவதில்லை, கடைசி தெகிவளை அல்லது கல்கிசை வரை போகும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான் ஏன் இன்னும் மிகுதியையும் எழுதியிருக்கலாமே. பத்மினியுடன் ஏதும் ...... :D

கருத்துக்கு நன்றிகள், மொசோ!

எனக்குப் பத்மினியுடன் பிரச்சனை ஒண்டுமில்லை!

பிரச்சனை சுகுமாருக்கும், பத்மினிக்கும் இடையில தான்!

ஆளை விடுங்கோ, தாயே :D

அந்தக்காலத்தில வெள்ளவத்தைக்கு எண்டும் தனியா பஸ் விட்டவையே

( ஏதாவது குறை பிடிக்காவிட்டால் பத்தியப்படாது )

:D

அம்மாடியோவ், இந்த வாழைப் பழ, மாம்பழக் காறராலை, பெரிய சோலியாப் போச்சு!

கண்ணுக்குள்ள எண்ணெய் இல்லை, வெண்ணையே வைச்சிருக்கிறாங்கள் போல!

நூறாம் நம்பர் பஸ் எண்டு மாத்தியாச்சு! :D

வருகைக்கும், கருத்துக்கும், நன்றிகள் ஈசன்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்தேவியில் பயணம் செய்த ஒரு பெரியவர், யாரும் எதிர்பாராத மாதிரி,

'தம்பிமார், நீங்க என்னத்தையும் வைச்சு விளையாடுங்க, ஆனால் அந்த மோதிரத்தை மட்டும் வைச்சு விளையாட விட மாட்டன் சொன்னார்.

அப்பு, உங்களுக்கு என்ன பிரச்சனை, எனச் சாதாரணமாகத் தொடங்கிய வாக்குவாதம் பெரிய சத்தங்களுடன் தொடர்ந்தது.

அப்புவும், தம்பி, நீங்கள் ஆரு பெத்த பிள்ளையளோ எனக்குத் தெரியாது. ஆனால், கலியாண மோதிரத்தை வைச்சு விளையாட மட்டும் விட மாட்டன் என்று பிடிவாதம் பிடித்தார்.

இந்த இடத்தில் ஒருவித தொய்வு நிலையை உணருகின்றேன் . அவர்களுடன் தொடர்பில்லாத ஓர் இறுக்கமான உறவுப்பிணைப்பொன்று ஏன் அப்படி சொன்னது என்பதை விளக்கியிருந்தால் இந்த யாழ்தேவி சொல்லவந்த செய்தி பூரணப்படுத்தப்பட்டிருக்கும் என நினைக்கின்றேன் . எனினும் நல்ல கதைக்கு நன்றிகள் புங்கையூரான் .

நன்றிகள், கோமகன்.

இஞ்ச தான் யாழ்ப்பாணத் தமிழன்ர பலமும், பலவீனமும் சேர்ந்திருக்கு, என நினைத்துத் தான் அப்படி எழுதினேன்!

அடுத்தவன்ர, தனக்குச் சம்பந்தமில்லாத, விசயங்களுக்குள்ள தலையைப் போடுறதும்,அபிப்பிராயம் தெரிவிக்கிறதும் தான் அது! :D

:rolleyes::D:lol:

இதுக்கு, சிமைலி போடாமல்... இருக்க முடியவில்லை.

பழைய... ஞாபகங்களை.. கிளறி எடுத்தமைக்கு, நன்றி புங்கையூரான்.

நன்றிகள், தமிழ் சிறி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முடிவு இல்லை, ஆனா சிரிக்க முடியவில்லை சுகுமாரை நினைத்து, இவரைவிட நானும் என் நண்பனும் பரவாயில்லை, இது கற்பனை கதையா? எனென்றால் ஈசன் எழுதிய மாதிரி வெள்ளவத்தை வரை பஸ் ஓடுவதில்லை, கடைசி தெகிவளை அல்லது கல்கிசை வரை போகும்

நீங்கள் சொன்னது, சரிதான் உடையார்! நன்றிகள்!

அந்தக் காலத்து நினைவுகள், கொஞ்சம் தடக்கிப் போச்சுது! :D

இப்பெல்லாம், ஓட்டோவில தான் சுத்திறது!

நூறாம் நம்பர், பாணந்துறை பச்சைப் போட்டிருக்கு!

இப்பிடிப் பிரச்சனை வருமெண்டு, தெரிஞ்சிருந்தால், வெள்ளவத்தைக்குப் பேசாம, ரெயினிலேயே போயிருக்கலாம்! :o

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்னவோ புங்கையூரான் வேறு என்னவோ எழுத வந்து விட்டு எழுதாமல் முடிவை அவசரப்பட்டு முடித்த மாதிரி தெரியுது :lol:

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]சுகுமாரது இப்போதைய பிரச்சனை எல்லாம். மிச்சக் காசை எப்பிடிச் சிங்களத்திலை, கேக்கிறது, எண்டு தான்! :D[/size]

[size=4]முற்றும்![/size]

இந்தப் பாவம் உங்களைச் சும்மா விடாது புங்கை! :D

கடந்தகால நினைவுகளை கிளறிய பதிவு புங்கை.

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

சுகுமாரது இப்போதைய பிரச்சனை எல்லாம். மிச்சக் காசை எப்பிடிச் சிங்களத்திலை, கேக்கிறது, எண்டு தான்

இத்துறு சல்லி கேட்க பயத்தில என்னுடைய கனகாசு வீணாய் போய்விட்டது ....கூ கூ...குச்சு குச்சு கூ நல்லாய்யிருக்கு

பயணக் கதை நன்றாக இருந்தது. இரண்டாம் பாகத்தை அவசரப்பட்டு முடித்த மாதிரித் தெரிகிறது.

சிறிய வயதில் விரும்பிப் பார்க்க ஆசைப்பட்ட ஒரு வாகனம். ஊரில் இருந்து மட்டக்களப்பிற்கு பஸ்ஸில் போய் 'கோச்சி' பார்த்து வந்தது மறக்க முடியாத அனுபவம்.

பெரியவர்கள் தங்கள் பயண அனுபவக் கதைகளைச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.சில தடவைகள்தான் பயணிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. அதுவும் பிரச்சனை காலமாகையால் பயத்துடனேயே கழிந்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.