Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்தில் தமிழ் பெண்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தில் தமிழ் பெண்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்

15 நவம்பர் 2012

இராணுவத்தில் தமிழ் பெண்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை இராணுவத்தில் சுமார் 100 தமிழ் பெண்கள் உள்ளீர்க்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. எதிர்வரும் சனிக்கிழமை கிளிநொச்சி பாரதிபுரத்தில் நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றில் இவ்வாறு பெண்கள் இணைத்துக்கொள்ளப்பட உள்ளனர்.

இலங்கை மகளிர் இராணுவத்தின் தன்னார்வ படைப்பிரிவில் இந்தப் பெண்கள் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆரம்பகட்ட பயிற்சிகளின் பின்னர் குறித்த தமிழ் பெண்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடமையில் அமர்த்தப்பட உள்ளனர்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழ் யுவதிகளே இவ்வாறு இராணுவத்தில் உள்ளீர்க்கப்பட உள்ளனர்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/85450/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இராணுவத்தில் தமிழ் பெண்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்

மிகுதி அவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் தமிழ் பெண்களை ஆள்சேர்க்கிறது இராணுவம்; 100 பேர் விரைவில் இணைவர்

இலங்கை இராணுவத்தில் வன்னியில் பெண்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர். இதற்கான முயற்சிகள் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் முதல் தடவையாக அதனை இராணுவம் பகிரங்கமாக அறிவித்துள்ளது.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழும் தமிழ்ப் பெண்களே இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர். முதல் கட்டமாக 100 பெண்கள் தொண்டர் படையில் இணைக்கப்படுகின்றனர்.

முற்றுமுழுதாகச் சிங்களவர்களைக் கொண்ட இலங்கை இராணுவத்தில் தமிழ்ப் பெண்கள் இணைக்கப்படவுள்ளனர் என்பதை இராணுவத்தின் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய உறுதிப்படுத்தி உள்ளார்.

சீன செய்தி நிறுவனத்துக்குக் கருத்துத் தெரிவித்த அவர், "இராணுவத்தில் தமிழர்களைச் சேர்த்துக்கொள்வது ஒன்றும் புதிய விடயம் அல்ல; ஆனால் ஒரே தடவையில் 100 தமிழர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவது இதுதான் முதல் தடவை'' என்று தெரிவித்திருக்கிறார்.

சேர்த்துக்கொள்ளப்படும் தமிழ்ப் பெண்கள், இலங்கை இராணுவத்தின் பெண்கள் படைப்பிரிவின் கீழ் இயங்கும் தொண்டர் படையினராக இருப்பர். இவர்களை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளும் சம்பிரதாய பூர்வ நிகழ்வு கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பாரதிபுரத்தில் விரைவில் நடைபெறும் என்று பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.

அடிப்படைப் பயிற்சிகளின் பின்னர் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலேயே இந்தப் பெண்கள் இப்பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

இணைத்துக் கொள்ளப்படவுள்ள பெண்களின் பெற்றோர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்து முறைப்படி, இணைப்பு சம்பிரதாயங்கள் இடம்பெறும் என்று இராணுவப் பேச்சாளர் கூறினார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள இராணுவ முகாம்களால் நடத்தப்படும் பயிற்சி நிலையங்களுக்கு வரும் பெண்களில் இருந்து இந்த 100 பேரில் பெரும்பான்மையானவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனை 28.10.2012 "சூரியகாந்தி' பதிப்பில் "இராணுவத்துக்குப் பெண் எடுக்கிறார்கள்' என்ற தலைப்பில் உதயன் அம்பலப்படுத்தி இருந்தது.

வன்னியில் நிலவும் வேலைவாய்ப்பின்மை, இளம்பெண்களில் சிலரையாவது இராணுவத்தில் சேர நிர்ப்பந்திக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

16 நவெம்பர் 2012, வெள்ளி 8:40 மு.ப

http://www.onlineuthayan.com/News_More.php?id=821341614816269338

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா இராணுவத்திடம் 100 தமிழ்ப் பெண்களை பெற்றோரே ஒப்படைக்கின்றனர்

[ வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2012, 07:50 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]

கிளிநொச்சி பாரதிபுரத்தில் நாளை நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றில், 100 தமிழ் இளம் பெண்கள் சிறிலங்கா இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.

சிறிலங்கா இராணுவத்தின் தொண்டர் படையில், 6வது பெண்கள் படைப்பிரிவு பற்றாலியனில் இவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.

இராணுவப் பயிற்சிக்குப் பின்னர், இவர்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இராணுவ - குடியியல் ஒத்துழைப்பு நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

18 - 22 வயதுக்கிடைப்பட்ட இவர்கள் சாதாரண படைச் சிப்பாய்களாக சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.

வடக்கு, கிழக்கில் நடத்தப்பட்ட ஆட்சேர்ப்பில், தெரிவு செய்யப்பட்ட இவர்களை நாளை நடைபெறும் நிகழ்வில் பெற்றோர் அதிகாரபூர்வமாக சிறிலங்கா இராணுவத்திடம் ஒப்படைக்கவுள்ளனர்.

http://www.puthinappalakai.com/view.php?20121116107295

பேற்றோர்களே வந்து ஒப்படைப்பார்கள் ?

இப்பிடியுமா ஒரு நிலைவரனும்?

  • கருத்துக்கள உறவுகள்

வறுமையினால் உருவாகும் இத்தகைய ஒரு சூழலை தடுக்க நீ என்ன செய்தாய் என புலம் பெயர் தமிழர்களை பார்த்து வரலாறு கேகிறது. ஆனந்த விகடன் எழுதிய சூழல் இத்தகையதுதானே. கொதிப்பதைவிட காலம்கடந்தாவது நம்மால் என்ன செய்ய முடியும் என சிந்திப்பது நல்லது. புறப்புலத்தில் செலவுகளை கட்டுப்படுத்தி அகப்புலத்தில் அல்லாடும் முன்னைநாள் போராளிகளின் குழந்தைகளின் செலவுகளை மாவீரர்கள் பெயரில் ஆளாளுக்குப் பொறுப்பெடுத்து உதவுவ முன்வருவதே மாவீரர்களுக்கு நாம் செய்யக்கூடிய மகத்தான வீர வணக்கமாகும்.

சிங்களவர்கள் இறந்த சிங்கல இராணுவ சிப்பாய்களதும் காயமடை சிங்கல சிப்பாய்களதும் குடும்பங்களுக்கு உதவும் திட்டமொன்றை நடைமுறைப் படுத்துகிறார்கள்.

நாடுகடந்த அரசாங்கம் தலைமைச் செயலகம் பேரவை போன்ற நிறுவனங்கள் இனியாவது போட்டி போட்டுக்கொண்டு இத்தகைய சேவைகலில் ஈடுபட முன்வரவேண்டும்.

[size=4]இந்த நடவடிக்கை மனிதாபிமான இல்லை அவர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற நோக்கம் மட்டும் கொண்டதாக தெரியவில்லை. [/size]

[size=1]

[size=4]இதன் பின்னால் முழுக்க முழுக்க அரசியலே உள்ளது. [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தி மிகவும் பாராதூரமானது

ஏற்கனவே சிங்கள இராணுவத்தால் எம்மினப் பெண்கள் பாரிய அவலங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தவேளையில் இப்படி ஒரு ஏற்பாட்டை சிங்கள அரசு மேற்கொள்ள விளைவதன் பின்னணியை எதிர் நோக்கினால் எவ்வளவு தூரம் ஒரு இனத்தை சிதைக்கமுடியுமோ அவ்வளவும் இதற்குள் அடங்கியிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா இராணுவத்தின் தொண்டர் படையில், 6வது பெண்கள் படைப்பிரிவு பற்றாலியனில் இவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.

தொண்டர் படையில் தான் சேர்த்துக்கொள்ளபடுகிறார்கள்....தேவை ஏற்படும்பொழுது மட்டும் சேவைக்கு அழைப்பார்கள்.ஒய்வூதியம் மற்றும் எனைய கொடுப்பனவுகள் கொடுக்கப்படாது..

நாம் புலத்தில் இறந்த முன்னாள் போராளிக்கு கேணல் பட்டம் கொடுக்கிறோம்...இது ஒரு நகைப்புக்குறிய விடயம் /ஒரு போராளி இராணுவ பட்டத்திற்காக போராட்டத்தில் இணைந்திருக்கமாட்டான்....

தொண்டர் படையில் தான் சேர்த்துக்கொள்ளபடுகிறார்கள்....தேவை ஏற்படும்பொழுது மட்டும் சேவைக்கு அழைப்பார்கள்.ஒய்வூதியம் மற்றும் எனைய கொடுப்பனவுகள் கொடுக்கப்படாது..

நாம் புலத்தில் இறந்த முன்னாள் போராளிக்கு கேணல் பட்டம் கொடுக்கிறோம்...இது ஒரு நகைப்புக்குறிய விடயம் /ஒரு போராளி இராணுவ பட்டத்திற்காக போராட்டத்தில் இணைந்திருக்கமாட்டான்....

இல்லை அவர் ஓர் சிறந்த போராளி ஆரம்ப காலத்தில் தீவகத்தின் பொறுப்பாளராக கூட இருந்தார், தலைவரின் நம்பிக்கையால் புலத்தேசத்திற்கு அனுப்பபட்டவர் உயிர் போகும் வரை தலைவரின் கடமையை எந்த வெளிநாட்டு சுகபோக வாழ்வும் சபலப்படுத்தாமல் இறுதி வரை செய்தவர்.

அவரை கவுரப்பதில் நாங்கள் பெருமை படுகிறோம் அவரது மக்களுக்கான சேவை நன்றியுடன் பார்க்கிறோம்

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை அவர் ஓர் சிறந்த போராளி ஆரம்ப காலத்தில் தீவகத்தின் பொறுப்பாளராக கூட இருந்தார், தலைவரின் நம்பிக்கையால் புலத்தேசத்திற்கு அனுப்பபட்டவர் உயிர் போகும் வரை தலைவரின் கடமையை எந்த வெளிநாட்டு சுகபோக வாழ்வும் சபலப்படுத்தாமல் இறுதி வரை செய்தவர்.

அவரை கவுரப்பதில் நாங்கள் பெருமை படுகிறோம் அவரது மக்களுக்கான சேவை நன்றியுடன் பார்க்கிறோம்

அவரின் செயற்பாடுகளில் நான் குறை கூறவில்லை ...பட்டம் கொடுக்கப்பட்டதைப்பற்றிதான் சொல்லுகிறேன் புலத்தில் இராணுவபட்டங்களை நாம் முன்னாள் போராளிகளுக்கு கொடுப்பதால் இராணுவ நடவடிக்கையில் நாம் இன்னும் செய்ல்படுகிறோம் என்று சிங்கள அரசு பிரச்சாரம் செய்ய உதவியாக இருக்கும்....மற்றும் தலைவரின் நம்பிக்கைக்குறிய பலர் என்ன செய்தார்கள் என்பது எங்களுக்கு தெரியும்தானே....மனித மனம் எப்படி எல்லாம் மாறும் என்பதை ஒரு தலை சிறந்த விடுதலை போராட்டத்திலயே கண்டு கொண்டோம்....

[size=4]இலங்கையில் இராணுவத்துக்கு தமிழ் பெண்களை சேர்ப்பது குறித்து அங்கிருக்கும் சில பெண்கள் நல அமைப்புக்களின் தலைவிகள் கவலை வெளியிட்டுள்ளார்கள்.[/size]

[size=3]

[size=4]இந்த விடயம் தொடர்பாக இரு பெண்கள் நல அமைப்புக்களை சேர்ந்தவர்களின் கருத்துக்களை இங்கே கேட்கலாம்.[/size][/size]

[size=3]

http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/11/121117_audioarmy.shtml[/size]

121117163807_tamil_army4_304x171_bbc_nocredit.jpg

[size=5] [/size][size=5]அழுத வண்ணம் இவர்கள் ..

:([/size]

  • கருத்துக்கள உறவுகள்

கருணா, பிள்ளையான், டக்ளஸ், ஆனந்தசங்கரி போன்றவர்கள் தங்கள் மனைவி மாரை இராணுவத்துக்கு அனுப்பி...

முன்னுதாரணத்தைக் காட்ட வேணும்.

இராணுவத்திற்கு பெண்களை சேர்க்கவுள்ளார்கள் என்றதும் உடனேயே வறுமையையும், புலத்து மாவீரர் தினத்தையும் இழுத்து கதைப்பதை நிறுத்த வேண்டும்.

எந்த பெற்றோரும் தமது பெண் பிள்ளைகளை தாமாக கொண்டுபோய் சிங்கள இராணுவத்தில் சேர்க்க விரும்ப மாட்டார்கள். பெண்கள் இராணுவத்தில் சேர்கிறார்கள் என்பது மட்டும் தான் எமக்கு தெரிகிறது. அதன் பின்னால் என்ன நடந்துள்ளது, யார் யார் வெருட்டப்பட்டுள்ளனர் என்பது எமக்கு தெரிய சந்தர்ப்பமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்திற்கு பெண்களை சேர்க்கவுள்ளார்கள் என்றதும் உடனேயே வறுமையையும், புலத்து மாவீரர் தினத்தையும் இழுத்து கதைப்பதை நிறுத்த வேண்டும்.

எந்த பெற்றோரும் தமது பெண் பிள்ளைகளை தாமாக கொண்டுபோய் சிங்கள இராணுவத்தில் சேர்க்க விரும்ப மாட்டார்கள். பெண்கள் இராணுவத்தில் சேர்கிறார்கள் என்பது மட்டும் தான் எமக்கு தெரிகிறது. அதன் பின்னால் என்ன நடந்துள்ளது, யார் யார் வெருட்டப்பட்டுள்ளனர் என்பது எமக்கு தெரிய சந்தர்ப்பமில்லை.

எமது போராட்டம் தோற்றதே... காட்டிக் கொடுப்பவர்களால் தான்...

ஆன படியால்... காட்டிக் கொடுத்த கள்ளர் கூட்டம் எல்லாம், தங்கள் வீடுகளில் உள்ள பெண்களை... சிங்கள இராணுவத்துக்கு அனுப்ப வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=3]

இலங்கையின் வரலாற்றில் முதற் தடவையாக 109 தமிழ் இளம் பெண்கள் இராணுவத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்த வைபவம் கிளிநொச்சி பாரதிபுரத்தில் கோலாகல வைபவமாக சனிக்கிழமை நடைபெற்றிருக்கின்றது.[/size]

[size=3]

பதினெட்டுக்கும் இருபத்திரண்டுக்கும் இடைப்பட்ட வயதுடையவர்கள் இவ்வாறு இராணுவத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றார்கள்.[/size][size=3]

சிவில் வேலைக்காகவே தம்மை சேர்த்துள்ளதாகவும், தங்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கப்படமாட்டாது என்று அதிகாரிகள் தெரிவித்ததாகவும் இராணுவத்தில் இணைந்துள்ள பெண்கள் தெரிவித்தனர்.[/size][size=3]

[size=1]

பெண்கள் அமைப்புக்களின் கருத்து

[size=1]

[/size][/size][/size]

[size=3]

[size=1]

[size=2]

[/size]
[/size][/size][size=3]

[size=1]

121117164037_tamil_army5_304x171_bbc_nocredit.jpg[/size][/size][size=3]

சிங்கள மொழிப் பயிற்சி உட்பட மூன்று மாதப் பயிற்சியின் பின்னர் தமது கிராமத்திலேயே தொழில் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

குடும்ப வறுமை, தொழிலின்மை என்பன காரணமாகவும், 30 ஆயிரம் ரூபா மாதாந்த சம்பளம், மற்றும் வசதிகள் தரப்படும் என கூறியிருப்பதனால் தாங்கள் இதில் சேர்வதற்கு முன்வந்துள்ள போதிலும், இராணுவப் பயிற்சியென்றால் தங்களுக்கு விருதுப்பமில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

தமிழ் இளம் பெண்கள் வேலை வாய்ப்புக்காக இராணுவத்தில், அதுவும் தேசிய இராணுவத்தில் இணைவதை ஒரு சாதகமான நிலையாகவே தான் நோக்குவதாக, தெரிவித்த பாரதிபுரம் அருட் தந்தை டிக்ஷன், கடந்த காலங்களில் இவ்வாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் வேறு நிலைமைகளில் தமது பிள்ளைகளைப் பிரிந்த பெற்றோர் இந்தச் சந்தர்ப்பத்திலும் பிள்ளைகளைப் பிரிந்த போது கண்ணீர் விட்டு அழுததை கண்டதாகக் கூறினார்.

முதல் தடவையாக நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பெண்கள் இராணுவத்தில் இணைவதற்கு முன்வந்தமையானது, அரசாங்கத்தின் நல்லிணக்க நடவடிக்கையின் முன்னேற்றத்தைக் காட்டுகின்றது என்று இந்த நிகழ்வு குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட ஆயுதப்படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்தார்.[/size][size=3]

அதேவேளை தமிழர்களுக்கான ஏனைய விடயங்கள் எதுவும் இதுவரை சரியாக பூர்த்தியாகாத நிலையில், இராணுவத்துக்கு மாத்திரம் பெண்கள் சேர்க்கப்படுவதை சில தமிழ் பெண்கள் அமைப்புக்கள் சந்தேகத்துடன் பார்க்கின்றன.[/size][size=3]

அதுவும் குறிப்பாக கடந்த காலங்களில் பெண் போராளிகள் விடயத்தில் இராணுவம் தவறாக நடந்துகொண்டதாகக் கூறும் அவர்கள், அப்படியான இராணுவத்தில் சரியான மாற்றங்கள் எதுவும் வராமல், அதற்கு முன்னதாகவே பெண்கள் சேர்க்கப்படுவது குறித்து கரிசனையும் தெரிவித்துள்ளனர்.[/size]

[size=3]

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/11/121117_tamilwomentoarmy.shtml[/size]

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தி மிகவும் பாராதூரமானது

ஏற்கனவே சிங்கள இராணுவத்தால் எம்மினப் பெண்கள் பாரிய அவலங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தவேளையில் இப்படி ஒரு ஏற்பாட்டை சிங்கள அரசு மேற்கொள்ள விளைவதன் பின்னணியை எதிர் நோக்கினால் எவ்வளவு தூரம் ஒரு இனத்தை சிதைக்கமுடியுமோ அவ்வளவும் இதற்குள் அடங்கியிருக்கிறது.

உண்மைதான்.

வறுமையினால் உருவாகும் இத்தகைய ஒரு சூழலை தடுக்க நீ என்ன செய்தாய் என புலம் பெயர் தமிழர்களை பார்த்து வரலாறு கேகிறது. ஆனந்த விகடன் எழுதிய சூழல் இத்தகையதுதானே.

நாடுகடந்த அரசாங்கம் தலைமைச் செயலகம் பேரவை போன்ற நிறுவனங்கள் இனியாவது போட்டி போட்டுக்கொண்டு இத்தகைய சேவைகலில் ஈடுபட முன்வரவேண்டும்.

-நான்கள் சென்னையிலை படம் எடுக்கிறம். பரிசிலை தேடப்பட்ட வீடுகளின் நிரல் தாயரிக்கிறம். எங்கை இருக்கிறயல் எங்களிடை சம்பளவாங்கிற நீங்கள் எல்லாம்? TGTE, GTF? <_<

இந்தியா தமிழருக்கு கட்டிக்கொடுத்த வீடுகளை சிங்களவருக்கு கொடுத்து வன்னியில் குடியேற்ற பட்டிருக்கிறார்கள். தமிழ் நாட்டால் தமிழருக்கு கொடுக்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகள் சிங்களவரால் திருடப்பட்டிருகின்றன. இந்தியாவில் படம் எடுபோர் இதை மன்மோகன் சிங்கிடம் எடுத்து செல்ல முடியுமா?

http://onlineuthayan...541619319861134

Edited by மல்லையூரான்

19112012-md-hr-2%20copy.jpg

  • கருத்துக்கள உறவுகள்

போரின் கொடுமையால் பல பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளார்கள்.அதிலும் அவர்கள் புலிகள் என்றால் சமுதாயத்தால் வெறுக்கப்படுகிறார்கள்.பல பெண்கள் குடும்ப கஸ்டத்தால் பிச்சை எடுக்கிறார்கள்.விபச்சாரத்திலும் ஈடுபடுகிறார்கள்.புலத்தில் உறவினர்கள் இருப்பவர்கள் இரு காதிலும் ஒவ்வொரு செல்போனை வைத்தபடி திரிகிறார்கள்.

போரில் காயமடைந்தவர்கள் உறுப்புக்கள் ஊனமானவர்கள் பெண்கள் எனில் அதிலும் ஆண்துணை இல்லாதவர்களின் நிலை சொல்லி மாளாது.

பல பெண்கள் கண்ணி வெடிகளை அகற்றும் மிகவும் அபாயகரமான வேலை செய்து வாழ்வை நடாத்துகிறார்கள்.இன்னும் பல பெண் போராளிகள் இராணுவத்தால் தொடர்ந்து இம்சைப்படுத்தப்படுகிறார்கள்.

மேற்படி 100 பெண்கள் இராணுவ பயிற்சி பெறவில்லை என்று சொல்கிறார்கள்.சிவில் சேவையில் ஈடுபடுத்தப்பட போவதாகவும் சொல்கிறார்கள்.

புலம் பெயர்ந்தவர்கள் நினைத்தால் வடக்கு கிழக்கை சிங்கப்பூராக மாற்றி இருக்க முடியும். அதாவது போரால் பாதிக்கப்பட்ட அத்தனை மக்களுக்கும் ஒரு நின்மதியான வாழ்க்கையை கொடுத்திருக்க முடியும்.ஒரு சிலரின் உதவியால் போரால் பாதிக்கப்பட்ட அனைவரும் ஒரு நல்ல வாழ்வை பெறமுடியாது.

இந்நிலையில் அப்பெண்கள் தமது வாழ்வை தாங்களாகவே பார்த்து கொள்வார்கள்.புலம்பெயர்ந்தவர்கள் எவரினதும் இலவச ஆலோசனை அவர்களுக்கு தேவை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்நிலையில் அப்பெண்கள் தமது வாழ்வை தாங்களாகவே பார்த்து கொள்வார்கள்.புலம்பெயர்ந்தவர்கள் எவரினதும் இலவச ஆலோசனை அவர்களுக்கு தேவை இல்லை.

நெத்தியடி. கடந்த பல வருடங்களாக நான் கூறுவது இதுதான். அவர்களே, அவர்களின் முடிவுகளை எடுக்கட்டும் ஏனெனில் அவர்கள் தான் வலி சுமந்தவர்கள்.

[size=4]கிளிநொச்சியின் கிராமங்களில் வீடுவீடாகச் சென்ற இராணுவத்தினர் குடும்பத்தினரை அச்சுறுத்தியே தமிழ்ப் பெண்களை இராணுவத்துக்குச் சேர்த்துக்கொண்டனர். இராணுவத்தில் இணைவதற்குத் தேவையான பாடசாலை விடுப்புச் சான்றிதழ் மற்றும் கிராமசேவகரின் நற்சான்றிதழ் என்பனவும் இராணுவத்தினராலேயே பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவங்களால் கிளிநொச்சியே அதிர்ந்து போயிருக்கின்றது. [/size]

[size=4]இராணுவத்துக்கு ஆட்களைச் சேர்த்துக்கொள்வதாயின் அதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட வேண்டும். அதிலுள்ள நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ஆட்சேர்ப்பு இடம்பெற வேண்டும். ஆனால், கிளிநொச்சியில் எந்தவிதமான பகிரங்க அறிவித்தலும் இல்லாமல் தமிழ்ப் பெண்கள் வலுக்கட்டாயமாக இராணுவத்தில் சேர்க்கப்பட்டதாக கிளிநொச்சியைச் சேர்ந்த அரச அதிகாரி ஒருவர் தமிழ்லீடருக்குத் தெரிவித்தார். இரண்டு நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டே இந்த கட்டாய ஆட்சேர்ப்பு இடம்பெற்றிருக்கின்றது எனவும் அவர் கூறுகின்றார். இது தொடர்பாகக் கிடைக்கும் தகவல்கள் அதிர்ச்சியளிப்பனவாக உள்ளன. [/size]

[size=4]போர் முடிவுக்கு வந்து கிளிநொச்சியில் மீள்குகுடியேற்றமும் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்ற போதிலும், கிளிநொச்சி தொடர்ந்தும் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கின்றது. மக்கள் குடியிருப்புக்களுடன் இணைந்ததாக இராணுவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினர் பொதுமக்களின் வீடுகளுக்குள் சென்றுவரும் சம்பவங்கள் இங்கு சகஜமாகவே இடம்பெற்றுவருகின்றது. இது தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகளும் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் இதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. [/size]

[size=4]இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக கிளிநொச்சியிலுள்ள கிருஷ்ணபுரம், மலையாளபுரம் உட்பட சில கிராமங்களில் வீடுகளுக்குச் சென்ற இராணுவத்தினர் குடும்பத்துக்கு ஒருவராவது இராணுவத்தில் இணைந்துகொள்ள வேண்டும் என அச்சுறுத்தியுள்ளார்கள். தமிழ்ப் பெண்கள் இராணுவத்தில் இணைந்துகொள்வதன் மூலமாகவே அரசாங்கம் சர்வதேச ரீதியாக எதிர்கொள்ளும் நெருக்கடிகளிலிருந்து விடுபடமுடியும் எனவும் இவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். தமக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் எனவும் படையினர் எச்சரித்திருக்கின்றார்கள்.[/size]

[size=4]தொடர்ச்சியாக வீடுவீடாகச் சென்ற இராணுவத்தினர் கொடுத்த இவ்வாறான எச்சரிக்கையைத் தொடர்ந்தே பாடசாலைக் கல்வியை முடித்துவிட்டு வீட்டில் இருந்த தமது பெண் பிள்ளைகளை இராணுவத்தில் சேர்த்துக்கொள்வதற்கு பெற்றோர் இணங்கினார்கள். இவ்வாறு இணக்கம் தெரிவித்த பெற்றோர்களும் இராணுவj;னனரரால் மாலை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். ஜனாதிபதியின் படத்துடன் கூடிய சான்றிதழ் ஒன்றும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. [/size]

[size=4]குடும்பநிலை காரணமாகவும், மாதாந்தம் 30,000 ருபா சம்பளமும் வேறு வசதிகளும் வழங்கப்படும் என்பதால்தான் தாம் தமது பிள்ளைகளை இராணுவத்தில் இணைய அனுமதிவழங்கியதாகச் சொல்லலுமாறும் இராணுவத்தினரே பெற்றோருக்கு அறிவுறுத்தியிருக்கின்றார்கள். அடிப்படைச் சம்பளம் உட்பட மாதாந்தம் 50,000 ரூபா வரையில் கிடைக்கும் என இவர்களுக்கு இராணுவத்தினரால் உறுதியளிக்கப்பட்டுள்ளது. [/size]

[size=4]இருந்தபோதிலும், இராணுவத்தில் புதிதாக இணைக்கப்படும் ஒருவருக்கு இந்தளவு சம்வளம் ஆரம்பத்தில் வழங்கப்படுவதில்லை என கிளிநொச்சியிலுள்ள அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் பிரதிநிதி தெரிவிக்கின்றார். ஆக, இந்த இராணுவ ஆட்சேர்ப்புக்குப் பின்னணியில் கட்டாயப்படுத்தலும், ஆசைவார்த்தைகளும் இருந்துள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார். [/size]

[size=4]பெற்றோரின் சம்மதத்தைப் பெற்றுக்கொள்ளும் இராணுவத்தினர் குறிப்பிட்ட பெண்களின் பாடசாலை விடுப்புச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்காக குறிப்பிட்ட பெண்களை தாமே பாடசாலைகளுக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். பெற்றோருடன் வந்தால்தான் இந்தச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என பாடசாலை அதிபர்கள் சில சந்தர்ப்பங்களில் மறுப்புத் தெரிவித்திருக்கின்றார்கள். இவ்வாறான சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட பெண் பிள்ளைகள் 18 வயதைத் தாண்டியவர்கள் என்பதால் அவர்கள் சுயமாக முடியும் என இராணுவத்தினரே இந்தச் சான்றிதழ்களைப் பலவந்தமாகப் பெற்றுக்கொடுத்திருக்கின்றார்கள். [/size]

[size=4]இதன் தொடர்ச்சியாக கிராமசேகவரின் நற்சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்கும் இராணுவத்தினரே பெண்களை அழைத்துச்சென்றிருக்கின்றார்கள். இராணுவத்தில் ஒருவர் இணைந்துகொள்ள வேண்டுமானால், பாடசாலை விடுப்புச் சான்றிதழ் மற்றும் கிராமசேகவரின் நற்சான்றிதழ் என்பன சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாகும். [/size]

[size=4]100 க்கு குறையாமல் தமிழ்ப் பெண்களை இராணுவத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக கடந்த இரண்டு தினங்களாக இராணுவத்தினர் குறிப்பிட்ட பெண்களையும் அழைத்துக்கொண்டு பாடசாலைகளுக்கும் கிராமசேவகர் அலுவலகங்களுக்கும் நேரில் சென்றுவருவதைக் காணக்கூடியதாக இருந்தது. [/size]

[size=4]கிளிநொச்சியில் இடம்பெற்ற இந்தச் சம்பவங்களால் மக்கள் அதிர்ந்துபோயிருக்கின்றார்கள். முற்றுமுழுதாக இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட பகுதியாக கிளிநொச்சி இருப்பதால் இது தொடர்பாக தமது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்குக் கூட அச்சமடைந்தவர்களாகவே மக்கள் உள்ளார்கள். முதற்கட்டமாக 109 தமிழ்ப் பெண்கள் இணைத்துக்கொள்ளப்பட்டதைப் போல மேலும் சம்பவங்கள் இடம்பெறலாம் என்பதால் மக்கள் அச்சமடைந்தவர்களாகவும், நடைபபிணங்களாகவுமே காணப்படுகின்றார்கள். [/size]

[size=4]இராணுவத்தினரின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்ப் பிரமுகர்கள் சிலரும் துணைபோயிருக்கின்றார்கள். முன்னாள் அரசாங்க அதிபர் உட்பட முக்கிய பிரமுகர்கள் சிலர் சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் நேரில் பங்குகொண்டுள்ளார்கள். தமிழ்ப் பிரமுகர்களின் அங்கீகாரத்துடனேயே இந்த ஆட்சேர்ப்பு இடம்பெற்றதாகக் காட்டிக்கொள்வதற்கு இதன் மூலம் இராணுவம் முற்பட்டுள்ளது. [/size]

[size=4]நேற்றைய நிகழ்வுகள் முடிவடைந்த பின்னர் இரவு கேளிக்கை களியாட்ட நிகழ்வுகளும் இராணுவத்தினரால் நடத்தப்பட்டுள்ளது. [/size]

[size=4]தமிழ்ப் பெண்களைப் பயணமாக வைத்து இராணுவத்தினர் நடத்தும் ஆபத்தான விளையாட்டையிட்டு பிரதான தமிழ்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாய்திறக்காமலிருப்பது கிளிநொச்சி மக்களுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. தமது பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுப்பதற்கு யாருமே இல்லையா இந்த நிலைமைகள் எந்தளவுக்குத் தொடரப்போகின்றன என்ற கேள்விக்குறியுடன்தான் மக்கள் உள்ளார்கள். [/size]

[size=4]இதேவேளையில் இந்த சம்பவம் தொடர்பாக பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சில அமைப்புக்கள் தமது சரிசனையை வெளிப்படுத்தியுள்ளன. விழுது அமைப்பின் பணிப்பாளர் நாயகம் சாந்தி சச்சிதானந்தன் இது தொடர்பாகத் தெரிவிக்கையில், "தமிழ்ப் பெண் போராளிகளை இராணுவம் நடத்திய முறை தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இந்த நிலையில் மாற்றங்கள் எதுவும் ஏற்படாத நிலையில், இராணுவத்துக்குத் தமிழ்ப் பெண்களை இணைத்துக்கொள்வது பொருத்தமதனதல்ல" எனத் தெரிவித்திருந்தார்.[/size]

[size=4]தமிழர்களுக்கான ஏனைய விடயங்கள் எதுவும் இதுவரை சரியாக பூர்த்தியாகாத நிலையில், இராணுவத்துக்கு மாத்திரம் பெண்கள் சேர்க்கப்படுவதை தமிழ் பெண்கள் அமைப்புக்கள் சந்தேகத்துடன் பார்க்கின்றன. இராணுவம் கிளிநொச்சியில் வீடுவீடாகச் சென்று இராணுவத்துக்கு பெண்களை மட்டுமே இணைத்துக்கொண்டிருக்கின்றது. ஆண்களை அவர்கள் ஆட்சேர்ப்புச் செய்யவில்லை. இது கூட பல கேள்விகளை எழுப்புவதாகவே இருக்கின்றது என கிளிநொச்சியைச் சேர்ந்த அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவிக்கின்றார். [/size]

[size=4]இதிலுள்ள ஆபத்தான மற்றொரு நிலைமை தொடர்பாகவும் கிளிநொச்சியிலுள்ள அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பெண் அதிகாரி ஒருவர் விளக்கினார். "விடுதலைப் புலிகள் அமைப்பில் பெண்கள் பலர் போராளிகளாக இணைந்திருந்தார்கள். ஆனால், போர் முடிவடைந்த பின்னர் அவர்களைத் திருமணம் செய்வதற்கு முன்வரும் ஆண்களின் தொகை குறைவாகவே உள்ளது. இந்த நிலையில் இராணுவத்தில் இணைந்துகொள்ளும் பெண்களின் நிலை என்னவாகும்?" என அவர் கேள்வி எழுப்புகின்றார்.[/size]

[size=4]இந்தப் பெண்களை இராணுவத்தினரே திருமணம் செய்துகொள்ளும் நிலை ஏற்படலாம் என அபாய மணி அடிக்கும் அவர், இதன் மூலம் ஒரு கலப்பினத்தை உருவாக்கும் திட்டத்துடன்தான் அரசாங்கம் செயற்படுகின்றதா என்ற சந்தேகம் எழுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றார். இனத்தின் அடையாளத்தை அழிப்பதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக இது இருக்கலாம் எனவும் அவர் கோடிட்டுக்காட்டுகின்றார். [/size]

[size=4]இலங்கையின் இராணுவத்தைப் பொறுத்தவரையில் அது சிங்கள இராணுவம் எனவே அடையாளப்படுத்தப்படுகின்றது. இராணுவத்தில் 99 வீதமானவர்கள் சிங்களவர்களாகவே உள்ளனர். ஒரு வீதத்தினர் மட்டுமே முஸ்லிம்கள் உள்ளனர். தமிழ்கள் யாரும் இல்லை. சர்வதேச ரீதியாக இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்கு இது அரசாங்கத்துக்குத் தடையாகவே உள்ளது. இந்த நிலைமைகளை மாற்றியமைப்பதும் தமிழ்ப் பெண்களை அவசரமாக இராணுவத்துக்கு இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்துக்கு ஒரு காரணம். [/size]

[size=4]ஆக, ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள். சர்வதேச நெருக்கடிகளைச் சமாளித்து இது சிங்கள இராணுவம் அல்ல! ஏனைய இனத்தவர்களும் உள்ளார்கள் எனக் காட்டிக்கொள்வது முதலாவது மாங்காய். இனக்கலப்பைச் செய்து இன அழிப்பை முன்னெடுப்பது இரண்டாது மாங்காய்!![/size]

[size=4]இந்த நிலையில் தமிழ்த் தலைமைகள் என்ன செய்யப் போகின்றன?[/size]

[size=4]- கொழும்பிலிருந்து தமிழ்லீடருக்காக பார்த்தீபன்[/size]

http://www.tamilleader.com/mukiaya/7549-2012-11-18-06-53-04.html

[size=4]

இலங்கையின் இராணுவத்தைப் பொறுத்தவரையில் அது சிங்கள இராணுவம் எனவே அடையாளப்படுத்தப்படுகின்றது. இராணுவத்தில் 99 வீதமானவர்கள் சிங்களவர்களாகவே உள்ளனர். ஒரு வீதத்தினர் மட்டுமே முஸ்லிம்கள் உள்ளனர். தமிழ்கள் யாரும் இல்லை. சர்வதேச ரீதியாக இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்கு இது அரசாங்கத்துக்குத் தடையாகவே உள்ளது. இந்த நிலைமைகளை மாற்றியமைப்பதும் தமிழ்ப் பெண்களை அவசரமாக இராணுவத்துக்கு இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்துக்கு ஒரு காரணம். [/size]

[size=4]ஆக, ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள். சர்வதேச நெருக்கடிகளைச் சமாளித்து இது சிங்கள இராணுவம் அல்ல! ஏனைய இனத்தவர்களும் உள்ளார்கள் எனக் காட்டிக்கொள்வது முதலாவது மாங்காய். இனக்கலப்பைச் செய்து இன அழிப்பை முன்னெடுப்பது இரண்டாது மாங்காய்!!

இந்த நிலையில் தமிழ்த் தலைமைகள் என்ன செய்யப் போகின்றன?

[/size]

[size=4]உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தமிழர்கள், அமைப்புக்கள், தலைமைகள் - " பலாத்காரமாக இணைத்தார்கள் " - இவற்றை ஆதாரத்துடன் மேற்குலகம், இந்தியா, ஐ.நா., மனித உரிமை அமைப்புக்களிடம் ஒப்புவிக்கவேண்டும். [/size]

Edited by akootha

சில பொய்கள் GTF, BTF,TGTE போன்றவர்களின் பணம் அனுப்பாமையினால்தான் இப்படி நடகிறது என்று எழுதும் போது உண்மை வெளிவரு முன்னரே மூடி மறைக்கிறார்கள் என்பது அனுமானிக்கத்தகதாக இருந்தது. புலிகளின் பணம் சுருடிய விவாதம் இதை மூடிமறைக்கதான் சுடாக நாடத்தப்ப்ட்டது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.