Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் படைமுகாம்களை முழுமையாக அகற்றவேண்டுமென கூறவில்லை: சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sampanthan(24).jpg

வடபகுதியிலிருந்து படைமுகாம்களை முழுமையாக அகற்றவேண்டுமேன்றோ விலக்கிக்கொள்ள வேண்டுமென்றோ நான் ஒருபோதும் கூறியதில்லை. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் தங்களின் வரையறைக்குள் இருந்து செயற்படவேண்டும். அந்த வரையறைகளை அவர்கள் மீறி நடக்கக்கூடாது. இதற்காக வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை முழுமையாக வெளியேற்ற வேண்டும் என நான் ஒருபோதும் கூறியதில்லை. இருப்பவர்கள் அவர்களின் நிலையுணர்ந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

தமிழ் மக்களை அங்குள்ள இராணுவம் அடக்கி ஆள்வதை, தாம் இந்த நாட்டில் சமமான பிரஜைகள் அல்ல என நினைக்க செய்வதை நாம் விரும்பவில்லை. எமது மக்கள் சுயமரியாதையுடனும் கௌரவத்துடனும் வாழ விரும்புகின்றனர்.
ஆயுதப்படையினர் நாட்டின் ஏனைய பகுதிகளில் இருப்பதை போல அவர்கள் இங்கு இருக்கவேண்டும்.

வுடக்கில் வௌ;வேறு பகுதிகளில் 1,50,000 ஆயுதப்படையினர் இருக்கின்றனர். இதனை ஏற்கமுடியாது மட்டுமன்றி தேவையற்ற ஒன்றாகும்.

யுத்தத்திற்கு முன்னர் இருந்த இடங்களில் மட்டுமே அவர்கள் இருக்கவேண்டும். அவர்கள் புலனாய்வு செய்யலாம், கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஆனால் அவர்கள் எமது மக்களின் வாழ்விற்கு குந்தகமாக இருப்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெறும் பாதுகாப்பு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/54335-2012-12-07-13-59-32.html

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் தங்களின் வரையறைக்குள் இருந்து செயற்படவேண்டும். அந்த வரையறைகளை அவர்கள் மீறி நடக்கக்கூடாது. இதற்காக வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை முழுமையாக வெளியேற்ற வேண்டும் என நான் ஒருபோதும் கூறியதில்லை. இருப்பவர்கள் அவர்களின் நிலையுணர்ந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

 

 

நல்ல தலைவர் ... வாழ்க வளர்க...

 

  • கருத்துக்கள உறவுகள்

இவரது பேட்டியின் சில பகுதிகள் இங்கே இணைக்கப்படவில்லை. இங்கே இணைக்காமல் விடப்பட்ட அந்தப் பகுதிகள் கீழே..... வடக்கிலிருந்து படையினரை விலக்கிக் கொள்ளுமாறு தாம் கோரவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஓர் பயங்கரவாத இயக்கம், அந்த இயக்கம் மேற்கொண்ட நடவடிக்கைளினால் அழிவைத் தேடிக்கொண்டது. மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருபோதும் கவனத்திற் கொள்ளவில்லை. இந்தக் காரணத்தினால் புலிகள் அழிவடைந்தனர். எனினும், தமிழ் மக்கள் குறித்த பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றனர். போர் இடம்பெற்ற பகுதிகளில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுத் திட்டங்களை முன்வைக்க வேண்டும் என சம்பந்தன் கோரியுள்ளார். வரவு செலவுத் திட்டம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

இவர், இந்தியாவின் குரலாக ஒலிக்கிறார், போல உள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்

இவர், இந்தியாவின் குரலாக ஒலிக்கிறார், போல உள்ளது!

போல உள்ளது அல்ல, இந்தியாவின் குரலே தான். card_his_masters_voice-p1377022919538929

புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டாலும் போராட்டம் மீண்டும் தலைதூக்கும்!!; நாடாளுமன்றில் முழங்கினார் சம்பந்தன்
sam.jpg
"தமிழர் தாயகப்பகுதிகளை அரசு திட்டமிட்டு முற்றுமுழுதாக இராணுவமயப்படுத்தி வருகிறது. விடுதலைப்புலிகளின் போராட்டத்தை அழித்துவிட்டோம் என்றும் அரசு பெருமை பேசுகின்றது. 
 
ஆனால், புலிகள் அழிக்கப்பட்டாலும் அங்கு தமிழர்களின் பிரச்சினைகள் இன்னும் தீரவில்லை. எனவே, தமிழர் போராட்டம் ஆத்மார்த்த ரீதியில் மீண்டும் தலைதூக்கும்.
 
இவ்வாறு நாடாளுமன்றில் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன். 
 
அவர் நாடாளுமன்றத்தில் மேலும் தெரிவித்ததாவது
 
எம்மீது தவறான குற்றச்சாட்டுகளும், பிரசாரங்களும் மேற்கொள்ளப்படுகின்றன. அதனை நான் மறுக்கின்றேன். புலிகளின் கொலைப்பட்டியலில் எனது பெயரும், எனது சகாக்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. ஆனால், நீங்களோ (அரசு)எம்மைப் புலிகள் என்றும், எங்களைப் புலிகளின் பங்காளிகள், பிரதிநிதிகள் என்றும் கூறுகின்றீர்கள். இதனை மாற்றிக்கொள்ளவேண்டும். 
 
புலிகள் தாமாக உருவாகவில்லை. தமிழ் மக்களாலும் உருவாக்கப்படவில்லை. மாறி மாறி வந்த அரசுகள் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட ஆக்கிரமிப்புகளும்,  அடக்குமுறைகளும்தான் புலிகள் உருவாகுவதற்குக் காரணிகளாகின என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். 
 
இன்று புலிகளை அழித்துவிட்டோம் என்று யார் யாரோ கூறிக்கொள்கின்றனர். புலிகளை எவரும் அழிக்கவில்லை. அவர்கள் தம்மைத் தாமே அழித்துக்கொண்டனர்.  ஜனநாயகத்தையும், தார்மீகத்தையும், மனித உரிமைகளையும் கடைப்பிடிக்கத் தவறியதாலேயே புலிகள் அழிந்து போனார்கள். 
 
டயஸ் போராக்கள், புலம்பெயர்வாழ் சமூகம் என்று கூச்சல் போடுகின்றீர்கள். 1956ஆம் ஆண்டு முதல் 1983ஆம் ஆண்டு வரை சிங்கள அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட பெருமெடுப்பிலான இன ஒழிப்பின்போது தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்காகவே இந்த மக்கள் நாட்டைவிட்டு வெளியேறினர். இன்று ஒன்றுபட்ட சமூக அமைப்பாக செயற்படுகின்றனர். 
 
இனப்பிரச்சினைத் தீர்வுக்கு கடந்த காலங்களில் பண்டார நாயக்க  செல்வநாயகம், டட்லி  செல்வநாயகம் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன. அந்த உடன்படிக்கைகளில் குடிப்பரம்பல்களில் மாற்றம் ஏற்படுத்தப்படக்கூடாது என குறிப்பிடப்பட்டிருந்தது. 
 
அன்றே அந்த உடன்படிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இன்று இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. அதன் பலனை இன்று அனுபவிக்கின்றோம். வடக்கில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான 4 ஆயிரத்து 600 ஹெக்டேயர் காணிகள் இராணுவத்தினரால் கபளீகரம் செய்யப்பட்டுள்ளன. 10 ஆயிரம் வீடுகள் இராணுவத்தினருக்காகக் கட்டப்பட்டுள்ளன. 
 
இதற்கும் மேலாக பொதுமக்களின் 555 வீடுகளிலும், 308 தனியார் காணிகளிலும், 153 பிரதேச செயலாளர் பிரிவு அலுவலகங்களிலும் இராணுவத்தினர் முகாமிட்டுள்ளனர்.
 
இலங்கையில் உள்ள 20 படைப்பிரிவுகளில் 15 படைப்பிரிவுகள் வடக்கிலும், இரண்டு படைப்பிரிவுகள் கிழக்கிலும் நிலைகொண்டுள்ளன. போர் முடிந்து மூன்றரை வருடங்கள் கடந்த பின்னும் இந்த இராணுவ அதிகரிப்பு அவசியம் தானா?
அரசால் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்தத் திட்டமிட்ட இராணுவக் குடியேற்றங்களில் வசிக்க இருப்பவர்கள் ஆரம்பத்தில் குடியேற்றவாசிகளாகவும், பின்னர் வாக்காளர்களாகவும் பதியப்படுவதன் மூலம் பாரம்பரியமாக வாழும் தமிழ் மக்களின் குடிப்பரம்பலைக் குறைக்கும் திட்டம் இருப்பதாகவே கருத வேண்டியுள்ளது. 
 
நாம் இராணுவத்தினருடன் சண்டை பிடிக்க முனையவில்லை. இராணுவம் முற்றாக வெளியேற்றப்படவேண்டும் என்றும் ஒருபோதும் கூறவில்லை. எமது பிரதேசம் முற்றும் முழுதாக இராணுவமயமாக்கப்படக் கூடாது என்றுதான் சொல்கிறோம். 
 
வடக்கில் ஐந்து லட்சம் பொதுமக்கள் வாழ்கின்றனர். ஆனால், ஒன்றரை லட்சம் படையினர் அங்கு இருக்கின்றனர். இந்தக் கணிப்பீட்டின்படி ஒவ்வொரு மூன்று பொது மகனுக்கும் ஓர் இராணுவம் என்ற விகிதத்தில் படையினர் நிலைகொண்டுள்ளனர். 
 
நாம் இராணுவத்தினருக்கு எதிரானவர்கள் அல்லர். ஆனால், இந்த இராணுவமும், அரசும் தமிழ் மக்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக நடத்துவதையும் ஆக்கிரமிப்புகளை மேற்கொள்வதையும்தான் கண்டிக்கின்றோம்.
 
இராணுவம் தமது முகாம்களில் இருந்து பாதுகாப்புக் கடமைகளைச் செய்யட்டும். எமது மக்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பு, சிறு கைத்தொழில்கள் மற்றும் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபட்டு சுயமாக வாழ விரும்புகின்றனர். 
 
ஆனால், இராணுவத்தினர் பல ஏக்கர் வயற்காணிகளை சுற்றிவளைத்து விவசாயம் செய்கின்றனர். கால்நடைகளை வளர்க்கின்றனர். மரமுந்திரிகைச் செய்கையிலும், தென்னை வளர்ப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.
 
அதேவேளை, எமது மக்கள் சொந்த இடங்களுக்குச் சென்று வாழத்  தடைவிதிக்கின்றனர். வலிகாமம் மற்றும் சம்பூர் பிரதேசங்களில் மீள் குடியமர்த்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் இராணுவம் மறுக்கின்றது. 
முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு ஆகிய இடங்களில உள்ள காணிகளை இராணுவ உடமையாக்கிக்கொண்டு அங்கு வாழ்ந்த மக்களை நடு வீதியில் விட்டுள்ளது. தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்த பிரதேசங்களில் அரசு திட்டமிட்டு இராணுவ முகாம்களையும், குடியேற்றங்களையும் மேற்கொள்வதன் மூலம் குடிசனப் பரம்பலில் பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்த அரசு முனைகின்றது. 
 
இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அதனை எதிர்க்கின்றோம். வடக்கில் 180 பேரை இராணுவத்திலும், 2,500 பேரை சிவில் பாதுகாப்புப் படைகளிலும் சேர்த்துள்ளனர். இவர்களுக்கு கறுப்புநிற ரீசேர்ட்டுகளை வழங்கி 18 ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவதாகவும் வெளியுலகுக்குக் காட்டப்படுகிறது. 
 
ஆனால், இவர்கள் முகாம்களில் சிற்றூழியர்களாகவும், பணியாளர்களாகவுமே அமர்த்தப்பட்டுள்ளனர். சுயநோக்குடன் தமது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காகவே இந்த ஆள்சேர்ப்புகளை மேற்கொண்டுள்ளனர்.
 
தென் பகுதியில் ஜே.வி.பியினர் வருடா வருடம் கார்த்திகை வீரர்கள் தினம் என்று பிரமாண்டமான விழாக்களையும், ஊர்வலங்களையும் நடத்துகின்றனர். இதனை அரசோ, இராணுவமோ கண்டு கொள்வதில்லை. 
 
ஆனால் முருகனுக்கும் விளக்கேற்றவும், வடக்கில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தவும் தடைவிதிக்கின்றனர். யாழ். பல்கலைக்கழகத்தில் அமைதியாக விளக்கேற்றி மௌன அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்த மாணவர்கள் மீது இராணுவத்தினர் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
 
யாழ். பல்கலைக்கழகத்தில் கைதுசெய்யப்பட்ட  மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இன்று புலிகளை அழித்துவிட்டோம் என்று பெருமைப்படுகின்றனர். 
புலிகள் அழிக்கப்பட்டுவிட்டாலும் அங்கே தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீரவில்லை. அது மீண்டும் ஆத்மார்த்த ரீதியாகத் தலைதூக்கும்.
 

இரணைமடு பிரதேசத்தின் பின்புலத்தில் டொலர்பாம், கெண்ட்பாம் மற்றும் வெலிஓயா உள்ளடக்கிய 78 கிலோ மீற்றர் பரப்புள்ள பிரதேசம் என்பவற்றை ஒன்றிணைத்து அரசு சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்திவருகின்றது. இது நாட்டில் ஒருபோதும் ஜனநாயகமான சமாதானத்தை ஏற்படுத்தப்போவதில்லை என்றார்.  

 

http://onlineuthayan.com/News_More.php?id=584971678108571675

சம்பந்தர் ஆற்றிய முழு பேச்சையும் அவர் ஆற்றிய இடம் / காலம் என பார்க்கும்பொழுது அவற்றின் இராசதந்திரம் பரவாயில்லை என்றே எண்ணத்தோன்றுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இலவசமாக இதய அறுவை சிகிச்சையும் இன்னும் பல சலுகைகளும் செஞ்சு கெடுத்திருக்கு சீ கொடுத்துருக்கு அதுக்கொரு நன்றி விசுவாசமா இருக்க வேண்டாமா?

  • கருத்துக்கள உறவுகள்

என்றாலும் கூட இன்றைய தமிழர் தரப்பின் பிரதிநிதிகளாக இருக்க கூடிய கூட்டமைப்பு விடுதலைப்புலிகளின் ஊதுகுழல் என்று சொல்லி பேச்சுவார்த்தைக்கு வர மறுக்கும் சிங்கள தரப்புக்கு விடுக்கப்பட்ட ஒரு சவாலாக ஒரு சாட்டையாக கூட இருக்கலாம்

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு தலைப்பில் இவரின் கருத்துக்கு பதியப்பட்ட பதில் இங்கும் பொருந்தும் என்பதால்...................

 

சம்பந்தன் தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்களை தவிர்ப்பது நல்லது. சம்பந்தன் புலிகளைப் பயங்கரவாதின்னு உச்சரிக்கிறதில அவருக்கு திருப்தி இருக்கலாம்.. இதனால் பாதிக்கப்படப் போவது சிறைகளில் உள்ள போராளிகளும் போராட்டத்தில் ஈடுபட்ட ஈடுபடும் மக்களுமே. அவர்களைப் பற்றி சம்பந்தன் கிஞ்சிதமும் கவலை கொள்ளவில்லை.

 

அண்மைய பல்கலைக்கழக மாணவர்கள் மீதான சிங்களப் படைகளின் தாக்குதல் உட்பட எதனையும் சம்பந்தன் கண்டிக்கவில்லை. எந்த சிங்களப் படைகளுக்கு அரசுக்கு எதிரான போராட்டங்களிலும் சம்பந்தன் ஈடுபட்டதில்லை. யாழ்ப்பாணத்திற்கு வந்து ரணிலோட சேர்ந்து சிங்கக் கொடியை தூக்கிப் பிடிச்சதோடு அவருடைய போராட்டம் ஓய்ந்துவிட்டது. இப்போது இந்திய தூதராலயங்களைத் திருப்திப்படுத்த பேசி வருகிறார்.

 

சம்பந்தன் என்ன கோருவது.. சிங்களப் படைகளால் தினமும் துன்பங்களை அனுபவிக்கும்.. மக்கள் கோருகிறார்... ஏன் அவரின் கட்சியை சேர்ந்த மாவை கோருகிறார் படைகளே வெளியேறுன்னு. சம்பந்தன் என்ன கோருவது. அவர் முதலில் சம்பூர் இடம்பெயர்ந்த மக்களுக்கு தீர்வைக் காணட்டும். அதன் பிறகு யார் பயங்கரவாதின்னு.. பட்டியலிடலாம்..!

 

இன்றைய காலத்தில் சம்பந்தன் அநாவசிய.. தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்களை தவிர்ப்பது நன்று. விடுதலைப்புலிகள் ஒன்றும் ஆகாயத்தில் இருந்து வரேல்ல. அவர்களும் தமிழ் மக்களே. தமிழ் மக்களின் பிள்ளைகளே. அவர்கள் பயங்கரவாதின்னா.. சம்பந்தனும் பயங்கரவாதியே..! அதை உணராமல் சம்பந்தன் உளறிக்கிட்டு திரிவது.. யாரையோ திருப்திப்படுத்த என்று மட்டும் தெளிவாக தெரிகிறது. இப்படியாக சொந்த இனத்தை காட்டிக்கொடுத்து மற்றவர்களைத் திரிப்திப்படுத்தி சம்பந்தன் வாழலாம்.. ஆனால் தமிழ் மக்கள்..????! இதன் மூலம் தமிழர்களுக்கு ஒரு விமோசனமும் கிடைக்கப் போறதில்லை. மாறாக தமிழ் மக்களின் அழிவுகளை தமிழர்களே நியாயப்படுத்தியதான வரலாறே நடந்து முடியப் போகிறது. இது கேவலம். :(:rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

sampanthan(24).jpg

வடபகுதியிலிருந்து படைமுகாம்களை முழுமையாக அகற்றவேண்டுமேன்றோ விலக்கிக்கொள்ள வேண்டுமென்றோ நான் ஒருபோதும் கூறியதில்லை. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

யுத்தத்திற்கு முன்னர் இருந்த இடங்களில் மட்டுமே அவர்கள் இருக்கவேண்டும். அவர்கள் புலனாய்வு செய்யலாம், கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஆனால் அவர்கள் எமது மக்களின் வாழ்விற்கு குந்தகமாக இருப்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெறும் பாதுகாப்பு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/54335-2012-12-07-13-59-32.html

 

 

யுத்தத்திற்கு முன்னர் இருந்த இடங்களில் மட்டுமே...........

 

அப்ப பழைய ஆக்கிரமிப்புச் சரியென்று சொல்கிறரா?

 

 

சம்பதரையாவின் சாணக்கிய இராசதந்திரத்தில் மெச்சத்தகு உரையாக இதைக் கொள்ளலாம். சிங்களப் படைகளின் ஆக்கிரமிப்பிற்கெதிராகவே இன்றும் மாணவருட்டபடத் தமிழினம் துன்பத்தைச் சுமக்கிறது. சிறைப்பிடித்தல் கொலைசெய்தல் எனத் தொடர்கின்ற சூழலில் தமிழரின் தலைவர் என்று கூறும் இவர்போன்றோர் ஆரோக்கியமான அரசியலை செய்ய மன்வரவேண்டும். இனியும் சுயநல அரசியல் வேண்டாமே!

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை தூற்றுவதால்தான் தமிழர்களின் விடுதலையை அடைய முடியும் எனில்.............

புலிகளும் அதைதான் விரும்புவார்கள்.
ஆனால் அது எவாறு சாத்தியமானது என்பதுதான் கேள்வி.
புலிகள் பயங்கரவாதிகள் இன்று இவர்களும் உளறினால்.............. இனி உறுதியாக குரல் கொடுக்க முனைபவர்களை புலிகள்  ஆக்கி விட்டால் சிங்களவனுக்கு எல்லாம் இலகுவாகிவிடும்.
இந்த தந்திரத்தை மிக நுட்பமாக அமெரிக்க செய்துவருவது எல்லோருக்கும் ஏற்கனவே  தெரிந்தது.
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை தூற்றுவதால்தான் தமிழர்களின் விடுதலையை அடைய முடியும் எனில்.............

புலிகளும் அதைதான் விரும்புவார்கள்.
ஆனால் அது எவாறு சாத்தியமானது என்பதுதான் கேள்வி.
புலிகள் பயங்கரவாதிகள் இன்று இவர்களும் உளறினால்.............. இனி உறுதியாக குரல் கொடுக்க முனைபவர்களை புலிகள்  ஆக்கி விட்டால் சிங்களவனுக்கு எல்லாம் இலகுவாகிவிடும்.
இந்த தந்திரத்தை மிக நுட்பமாக அமெரிக்க செய்துவருவது எல்லோருக்கும் ஏற்கனவே  தெரிந்தது.

அமெரிக்காவின் தந்திரம் தனது... சுயநலம் சார்ந்தது. தமிழனாய்ப் பிறந்து, தமிழனாய்... அவதிப்படும், இந்த அரசியல்வாச்திகளுக்கோ... ஒட்டுக்குழுக்களுக்கோ... எரப்பேனும்... சிந்திக்கும்... மூளையும், இல்லாமலிருக்கும்... கழிசறைக் கூட்டங்களா.

  • கருத்துக்கள உறவுகள்

"ஜனநாயகத்தையும், தார்மீகத்தையும், மனித உரிமைகளையும் கடைப்பிடிக்கத் தவறியதாலேயே புலிகள் அழிந்து போனார்கள்" அழிந்து போகாத அத்தனைபேரும் இவற்றையெல்லாம் கடைப்பிடித்துக் கொண்டா இருக்கிறார்கள்? சிங்களம் இன்னும் அழிந்துபோகவில்லை அது ஜனநாயகத்தையும், தார்மீகத்தையும், மனித உரிமைகளையும் கடைப்பிடிக்கிறதா?

Edited by vanangaamudi

சம்பந்தர் எவ்வளவோ சொல்லியிருக்கிறார். சீனாவும், இந்து சமுத்திரமும் என்ற போர்வையின் மேற்குநாடுகள் அவற்றை சட்டை செய்வில்லை. இதை சம்பந்தர் சொல்வது, பேச்சுவார்த்தைகளை முன்னேடுக்க. மேற்குநாடுகள் மனச்சாட்சியாக பேச்சுவார்த்தைகளில் அக்கறை காட்டவேண்டும். இல்லாமல் சம்பந்தர் புலிகளை ஜனநாயகத்திற்கு எதிரானவர்கள் என்றதை மட்டும் அவர்கள் தூக்கி பிடிக்க போகிறார்கள் என்றால் அது கள்ளை வடியவிட்டு, கஞ்சலை பிடித்துக் கொள்ளும் பன்னடை குணம்.

 

நமது கடமை முடியவில்லை. புலிகள் எது செய்தாலும், அரசு தமிழ் மக்களுக்கு 1948ல் இருந்து வஞ்சகம் செய்த்து வருகிறது. இதை மேற்கு நாடுகளுக்கு எடுத்து செல்வது நம் கடமை. இந்த ஒரு பேச்சுக்காக நாம் எமது கவனத்தை மேற்குநாட்டுகளிடமிருந்து எடுத்து சம்பந்தர் பக்கம் திருப்பக் கூடாது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் விடுதலைப்புலிகள் பற்றிச் சொன்னவை நேரடிப் பாதிப்புக்களை மட்டுமல்ல எதிர்கால தமிழ் மக்களின் அரசியல் குரல்களைக் கூட மழுங்கடிக்கக் கூடியது. சிங்களப் பேரினவாதத்தின் தமிழின அழிப்பிற்கு புதிய அங்கீகாரத்தையும் ஆதரவையும் அளிக்கக் கூடியது.

 

விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதிகள் என்று தமிழ் மக்களே அடையாளம் காண்கின்றனர் என்று எதிரி பிரச்சாரங்களை முன்வைக்கவும்.. தமிழின அழிப்பை அந்த பிரச்சாரங்களுக்குள் இருந்து கொண்டு பயங்கரவாத முலாம் மூலம் மேற்கொள்ளவும் இது வசதி செய்து கொடுக்கும்.

 

இந்தியப் படைகள் றப்பர் செல் அடித்தே யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியதாகவும் அங்கு தமிழ் மக்களுக்கு எந்த ஒரு பாதிப்பையும் அவர்கள் ஏற்படுத்தவில்லை என்று அமிர்தலிங்கம் கொழும்பில் இருந்து கொண்டு விட்ட அறிக்கையை விட மோசமானது இந்தப் பேச்சு..!

 

மேலும் சர்வதேசம் முன்னெடுக்க முனையும் சிறீலங்கா அரசின் போர்க்குற்ற மனித உரிமை மீறல்களை தமிழ் மக்கள் தான் புலிகளை அழிக்கச் சொன்னார்கள் என்று சொல்லி.. அடக்கிப் போட இது  எதிரிக்கு உதவும்.

 

மேலும் புலம்பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்படும் தமிழீழ விடுதலை நோக்கிய பிரச்சாரங்களை பயங்கரவாதப் பிரச்சாரங்களாக.. தமிழ் மக்களின் கோட்பாடாக சம்பந்தர் காட்ட முனையும் ஐக்கிய இலங்கை கோட்பாட்டுக்கு விரோதமான செயலாக சிறீலங்கா சர்வதேச அரங்கில் முன்னிறுத்தும். இவை எமது 35 வருட போராட்டத்தையும் அப்படியே வீணடிக்கும்.

 

சம்பந்தன்.. இதனை சாணக்கியமாகச் செய்வதாகத் தெரியவில்லை. தனது அரசியல் விசுவாசிகளுக்கும் தனக்கும் எதிர்கால அரசியலை சாதமாக்கிக் கொள்ள செயற்படுகிறார்.

 

சம்பந்தனின் சமீபத்திய கூப்பாடுகளை கவனித்தால் இவை புரியும்.

 

* கடந்த காலத்தை மறப்போம் மன்னிப்போம்.

 

* தமிழ் மக்கள் தமிழீழம் கேட்கவில்லை.

 

* தமிழ் மக்கள் ஐக்கிய இலங்கைக்குளேயே ஏதோ ஒரு கெளரவமான தீர்வை தேடுகின்றனர்.

 

* 13 அல்லது 13 + ஊடாக அதனை அடையலாம்.

 

* சிங்கக் கொடியே எனது விருப்பக் கொடி. நான் மதிக்கும் கொடி. (புலிக்கொடி சுத்த வேஸ்டு)

 

* சிங்களப் படைமுகாம்களை முற்றாக விலக்க வேண்டிய அவசியம் இல்லை.

 

(அவற்றை ஒதுக்குப்புறமா வைச்சு அங்கு சிங்களக் குடியேற்றங்களை செய்தாலும் எனக்கு கவலை இல்லை. ஆனானப்பட்ட கிழக்கையே விட்டுக்கொடுத்திட்டமாம்.. வடக்கென்ன வடக்கு. யாழ்ப்பாணத்தாரின் தலைக்கனத்திற்கு வைக்கிறன் பார் புலிகளின் பெயரால் ஆப்பு.)

 

* நீங்கள் சிங்களப் புலனாய்வுப் படையை தமிழ் ஒட்டுக்குழுக்களை இயக்கி.. தமிழ் இளைஞர்களை யுவதிகளை கண்காணிக்கலாம்.. கைது செய்யலாம்.. எதையும் செய்யலாம். அது உங்கள் உரிமை.

 

* புலிகள் பயங்கரவாதிகள். மனித உரிமை மீறல்களைச் செய்தனர். தாமே அழிந்து போயினர். அவர்களை யாரும் அழிக்கவும் இல்லை.. யாரும் அது தொடர்பில் போர்க்குற்றமும் இழைக்கவில்லை. எல்லாம் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையே அன்றி தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல.

 

* இந்தியா எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளும்.

 

* சர்வதேசம் வந்து எமக்கு உதவும்.

 

சம்பந்தனின்.. இந்தப் பேச்சுக்களால் தமிழ் மக்கள் பெறக் கூடிய சாதகங்களை.. யாராவது பட்டியலிடுங்கள்.. இதில் சாணக்கியமே உள்ளது என்று வாதிட முனைபவர்கள்.

 

மனித உரிமைகள் விடயத்தில் சம்பந்தனை விட புலிகள் அதிக அக்கறை கொண்டிருந்ததோடு வடக்குக் கிழக்கு மனித உரிமை அமைப்பு என்ற ஒரு கண்காணிப்பு அமைப்பை உருவாக்கி கிளிநொச்சியை தளமாகக் கொண்டு அதனை இயக்கியும் வந்தனர். அதில் மதிப்பு மிக்க தலைவர்கள் உள்ளெடுக்கப்பட்டும் இருந்தனர். அதுமட்டுமன்றி.. எல்லா அரசியல் சக்தியாலும் கவனிப்பாரற்று விடப்பட்ட போர் பாதித்த மக்களையும் குழந்தைகளையும் பொறுப்பில் எடுத்து தமது மக்கள் நேயத்தை புலிகள் வெளிப்படுத்தினர். சிறுவர் உரிமைகள் தொடர்பில்.. சிறுவர் போராளிகள் தொடர்பில் ஐநா பிரதிநிதிகளின் கண்காணிப்புக்கு இடமளித்தனர். பேசினர். நிலைமைகளை விளக்கினர்.

 

மனித உரிமைகள் விடயத்தில் வேறு எந்த ஆயுதக் குழுக்களையும் விட புலிகள் மிக அவதானம் கொண்டிருந்தனர். அமிர்தலிங்கம் போன்றவர்கள் ஆயுதம் எடுக்காமல்.. துரோக ஆயுததாரிகளுக்கும் எதிரி ஆயுதப் படைகளுக்கும் ஆதரவளித்து செய்த மனித உரிமை மீறல்களை விட புலிகள் செய்தது குறைவு. இதே சம்பந்தனின் தலைமையின் கீழ் தான் முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்தது. அப்போதே அதை தடுத்து நிறுத்த தவறியதற்காக அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தனது தலைமைப் பதவியை விட்டு போய் இருக்க வேண்டும். அதுதான் உண்மையான ஜனநாயகவாதிக்கு அழகு. ஆனால் சம்பந்தன் அதனைச் செய்யவில்லை. மாறாக.. மறப்போம் மன்னிப்போம் தத்துவம் பேசினார். அதன் பின்னர் நடந்த தமிழ் மக்கள் மீதான  பல அசம்பாவித சம்பவங்களை கண்டிக்கவும் தவறியுள்ளார். யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டிக்கத் தவறியதும் இதில் அடங்கும்.

 

சம்பந்தனின் தலைமைத்துவம் தமிழ் மக்களுக்குப் பேரழிவையும் பேரிடர்களையும் தந்துள்ளதே அன்றி.. அதில் சாணக்கியம் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே அவர் அதனை விட்டு விலகி.. அனுபவமுள்ள இளையோர் கையில் அதனை அர்ப்பணித்துவிட்டு அரசியலில் இருந்து விலகி இருப்பதே நன்று.  அதேவே காலத்தின் தேவையாகியும் உள்ளது. :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் எப்படிச் சொல்வார் தமிழர் தாயகத்தில்.. சிங்களப் புலனாய்வுத்துறை.. ஒட்டுக்குழுக்கள் நிற்கலாம்.. கண்காணிக்கலாம் என்று. உலகமே தமிழ் மக்களின் பயத்தை உணர்கின்ற போது.. சம்பந்தன் உணரவில்லை என்றால்.. அவர் எப்படி தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்த முடியும்..??????!

 

Sri Lanka chief judge Bandaranayake found guilty by MPs

 

_64645784_016661688-1.jpg
 
Supporters of Chief Justice Shirani Bandaranayake say the attempt to impeach her is politically motivated
 

A report by a Sri Lankan parliamentary committee has found Chief Justice Shirani Bandaranayake guilty of three charges of misconduct.

She could be dismissed after parliament votes on the report in January.

 

Mrs Bandaranayake denies allegations of financial and professional wrongdoing. Her lawyer said it was not clear how the conclusion had been reached.

 

Her supporters say the government wants to get rid of her and undermine the independence of the judiciary.

US concern

 

The investigation was mounted after Mrs Bandaranayake ruled against several government bills, including one that gave more powers to President Mahinda Rajapaksa's brother Basil, the economic development minister.

 

Nimal Siripala de Silva, a government minister and member of the committee, said: "We have found her guilty of three charges out of the first five we have investigated."

 

He said she had been found guilty of an illicit property transaction and of failing to declare many bank accounts.

 

The chief justice was also convicted of being unfit to serve in office because of her potential influence over a case in which her husband is accused of bribery.

 

Mrs Bandaranayake's lawyer rejected the charges, saying they "will not stand the scrutiny of law".

 

"We can't understand how they came to these conclusions," lawyer K Neelakandan told the BBC Tamil Service.

 

Under parliamentary procedure, if the chief justice is found guilty of even one charge, and a majority of the 225-member house votes for her removal, the president can dismiss her.

 

The president's party controls a two-thirds majority in the house.

 

Mrs Bandaranayake has criticised the committee for giving her insufficient time to prepare her defence, failing to follow proper procedure and for concluding its report with undue haste.

 

She walked out of its hearings on Thursday, as did the four opposition MPs on the panel.

 

The US embassy in Colombo has said it is "very concerned" about the impeachment process and has demanded that the government follow the rule of law.

 

Tamil fears in the North

 

Critics say President Rajapaksa has concentrated enormous power in his hands since he crushed the Tamil Tiger separatist rebels in 2009 after a long and bloody war.

 

Human rights activists remain concerned about conditions in the Tamil heartland of northern Sri Lanka.

 

Eleven students have been arrested by the anti-terrorism division in the past few days and their teachers have warned that they face what they called a grave and dangerous situation.

 

In a letter to President Rajapaksa, the Jaffna University teachers say the authorities have been heavy handed in tackling festering political issues and have detained people on false pretences.

 

They also accuse them of failing to understand the gravity of the problems in Jaffna, the spiritual capital of the minority Tamil community.

 

http://www.bbc.co.uk/news/world-asia-20650997

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.