Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம் பெயர் அப்பனும் வெளிநாட்டு பிள்ளையும்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இதை வாசித்து விட்டு உருண்டு பிரண்டு, மல்லாக்க படுத்து பிறகு கவிண்டு கிடந்து சிரிச்சன்... :D :D :lol: :lol:

இசை  எழுதியதை வாசித்ததும் வந்த சிரிப்பை  ஒருவாறு அடக்கிப்போட்டன்

ஆனால் இதை வாசித்ததும்  முடியலயப்பா :D  :D  :D  :D  :D  :D

(அங்கால  இருக்கிறவனெல்லாம் எழும்பி  வந்து எட்டிப்பார்த்துவிட்டு போகின்றார்கள்)

  • Replies 77
  • Views 6.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஏதாச்சும் சொல்லுவீங்க என்று தான் மூன்று பக்கம் முடியும் மட்டும் வராமலே இருந்தன்... :) எழுதி வேலை இல்லை...

எப்பவும் தாய், தகப்பன்மார் கொஞ்சம் ஓவராகத்தான் கற்பனைகளை ஓடவிடுகிறது.. :rolleyes: பகிர்விற்கு நன்றி விசுகு  அண்ணா :)

நீங்கள், உங்கள் பிள்ளைகளோடு நண்பனாகப் பழகினாலும் உங்கள் சிறகுகளுக்குள்ளேயே வைத்திருக்கிறீர்கள்.  அவர்களைச் சுதந்திரமாகச் சிந்திக்கக்கூட விடுவதாகத் தெரியவில்லை.  நீங்கள் விதித்த எல்லைகளுக்குள்ளேயே சிந்திக்க விடுகிறீர்கள். நீங்கள் உயிரோடு இருக்கும்வரை அவர்களைச் சுதந்திரமாகச் சிந்திக்க விட மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.  இதுவும் ஒருவிதமான அடக்குமுறைதான்.  இவ்வாறு வளர்க்கப்படுபவர்கள்தான் கட்டறுந்ததும் வழிதவறிப் போகக்கூடியவர்கள்.  இவர்களுக்கு உங்களின் வழிநடத்தல் வாழ்க்கை முழுவதும் தேவைப்படும்.  என்னைப் பொறுத்தவரையில் இவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இன்றையை உலகம் போகும் போக்கில் பிள்ளைகளையும் அவர்கள் சிந்தனையில் விட்டால் என்ன பின்னர் என்ன நடக்குமென்றே தெரியாது? வாலிப வயதில் நல்லது கெட்டது தெரியமாட்டாது.....சொல்ல வேண்டிய வயதில் சொல்லி பக்குவமாக வளர்க்க வேண்டியது பெற்றோரின் பொறுப்பு. நல்லது கெட்டதை சொல்லி வளர்ப்பதை கூட சுதந்திரவலயத்துக்குள் கொண்டுவந்து விட்டார்கள். விசுகர்! மீண்டுமொருமுறை வணக்கம்.நீங்கள் அனுமதித்தால் என் கண்ணெதிரில் நடக்கும்,நடந்த சம்பவங்களை எழுதலாம் என நினைக்கின்றேன்.
 
ஆதாவது புலம்பெயர் நாட்டில் கட்டுப்பாடுடன் வளர்ந்த பிள்ளைக்கும்......சுதந்திரமாக வளர்ந்த பிள்ளைக்குமான வித்தியாசங்கள்?
  • கருத்துக்கள உறவுகள்

குமார் அண்ணா வரவேண்டும் உங்கள் பதிவுகள்...........ஆவலுடன் காத்திருக்கும் யாழ் களம். :D

இங்கு விசுகு வெளிப்படையாக சொல்லி இருப்பதால் சிலர் அவர் மேல் விழுந்து அடித்து குறை கண்டுபிடிப்பது போல இருக்கு.  இதன் மூலம் தம்மை கடும் முற்போக்கு வாதிகளாக காட்ட எத்தனிப்பது மாதிரியும் இருக்கு.

மகன் இரவு 10 மணிக்கு பின்   அப்பாவுடன் காரில் போகின்றார். நண்பி வீட்டுக்கு முன்பாக காரை நிறுத்தச் சொல்லி நண்பியின் வீட்டுக்குள் செல்கின்றார். போக முதல் சில நிமிடங்களில் வந்து விடுவேன் என்று கூறிவிட்டுப் போகின்றார். சொன்ன மாதிரி உடனேயும் வரவில்லை. அப்பா வெளியே காத்திருக்கின்றார். கன நேரம் போகுது... இன்னும் காத்திருக்கின்றார்....

இப்ப மனசுக்குள் ஒரு சின்ன சந்தேகமும் வராத மனித மனம் இங்கு யாருக்கும் இல்லையா? ஆண் பெண் நட்பினை புரிந்து கொள்ளுவது வேறு, மனிதருக்கே உண்டான சின்ன சந்தேகமும் வராதளவுக்கு முற்று முழுதாக இருப்பது வேறு.

தமிழச்சி, யாயினி, அர்ஜுன் போன்றோருக்கு கீழே நான் எழுதிருப்பது போல நடக்கும் போது எப்படி உங்கள் மனம் எண்ணிக் கொள்ளும் என்று நேர்மையாகச் சொல்லுங்கள்.

இரவு 10 மணிக்கு பின்பு உங்கள் கணவனை அல்லது மனைவியை அழைத்துக் கொண்டு காரில் போகின்றீர்கள். அவர்கள் தம் ஆண் நண்பன் அல்லது பெண் நண்பியின் வீட்டுக்கு முன் காரை நிறுத்த சொல்லி உடனே வருகின்றேன் என்று விட்டு உள்ளே போகின்றார்.

உடனே வரவில்லை

வெளியே காத்திருக்கின்றீர்கள்...கன நேரம் போகுது...இன்னும் வரவில்லை... காத்திருக்கின்றீர்கள்.

இந்த நேரத்தில் உங்கள் மனதில் ஒரு சின்ன நெருடலாவது வர மாட்டுதா? கன நேரத்தின் பின் கணவன் அல்லது மனைவி வந்து காரில் ஏறி உங்களுடன் வந்தாலும் ஒரு மெல்லிய சந்தேகமாவது ஏற்படாதா?

மனித மனதின் உளவியலையும் கருத்து எழுதும் போது கொஞ்சம் உணர்ந்து நேர்மையாக எழுதவும்.

இதில் எங்கு வந்தது முற்போக்கு ,இங்கு வாழ்க்கை முறையே அப்படித்தான் .

பிள்ளைகள் என்ன செய்கின்றார்கள் ,அவர்களின் நண்பர்கள் யார் ,பழக்க வழக்கங்க்களை   அவதானிப்பது ,அவர்கள் பாடசாலையில் எப்படி,படிப்பு எப்படி, இப்படியான விடயங்களில் அவர்களுக்கு தெரியாமலே அவதானித்தே வருவேன் .

மற்றப்படி இப்படியான சிந்தனைகள் உண்மையில் ஒரு நாளும் எழுந்ததில்லை .அப்படி அவர்கள் நடந்தாலும் எங்களால் அதை தடுக்கமுடியாது என்பது காரணமாக இருக்கலாம் அல்லது எங்களுக்கு தெரியாமல் செய்ய அவர்களுக்கு எவ்வளவோ சந்தர்ப்பங்கள் இருக்கு காருக்க அப்பாவை விட்டு விட்டு அந்த பத்து நிமிடத்தில் செய்ய வேண்டும் என்று இல்லை .

இன்றும் மகன் யுத் என்று ymca இற்கு போய் விட்டான் .பதினோரு மணிக்குத்தான் திரும்பிவருவார் .சிலவேளை மகன் திரும்பி வரும்போது நான் தூங்க கூட போய்விடுவேன் .பன்னிரெண்டாம் வகுப்புடன் தூ ர இருக்கும்  யுனிவேர்சிடிக்கு பெண் பிள்ளைகளையே எத்தனயோ பெற்றூர் அனுப்புகின்றார்கள் .மனத்தில் ஒரு வித பயம் இருக்கலாம் அதற்காக வீட்டில் இருந்து படி என்று சொல்ல முடியாது அவர்கள் கே   ட்கவும் மாட்டார்கள் . 

நிழலி நல்லா தமிழ் சீரியல் பார்க்கின்றீர்கள் போல கிடக்கு .

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பிள்ளை வளர்ப்பில் அனுபவம் இல்லையாயினும் நானும் நான்கு ஆண் சகோதரங்களோடு தான் வளர்ந்தேன்..எங்கள்  நாட்டுக்கும் வெளி நாடுகளுக்குள் இருக்கும்  பிள்ளை வளர்ப்புக்கும் நிறையவே வித்தியாசங்கள் உண்டு..புரிந்து கொள்கிறோம்...வீட்டுக்குள் எவ்வகையான கட்டுப்பாடுகளை வகுத்து வைத்திருந்தாலும் அந்தப் பிள்ளை வெளயில் பாடசாலை என்று போகும் போது கூடப் பழகும் பிள்ளைகளுக்கு ஏற்ப தான் நடக்க வேண்டிய சூழ் நிலைகள் நிறையவே இருக்கிறது...அப்படி இருக்கையில் ஏன் சில பெற்றோரால் பிள்ளைகளை புரிந்து கொள்ள முடிவதில்லை....மூத்த பிள்ளை,இளைய பிள்ளை,அது நல்ல பிள்ளை,இவர் கொஞ்சம் துடியாட்டமான பிள்ளை என்று கதைப்பது இது எல்லாம் நல்லாவா இருக்கு..பிள்ளைகள் எல்லாம் ஒன்று தானே....

தாயார் புத்தி சொல்ல முனையும் போதே பிள்ளை நான் உங்கள் பிள்ளையம்மா என்று சொல்லும் போதே அந்தப் பிள்ளையின் மனதில் பெற்றோரைப் பற்றிய நல்ல ஒரு நிலைப்பாடு தான் இருக்கிறது என்பது புரிகிறது அல்லவா...இப்படியான  பிள்ளைகளை ஏன் பெற்றோர் சந்தேக கண் கொண்டு பார்க்க வேண்டும் என்பதை தான் கேக்கிறன்...விசுகு அண்ணா வெளியில் தாமதித்து கொண்டு நின்ற அவ்வளவு நேரத்திற்கும் ஒரு தாய் என்றால் என்ன செய்திருபார்..ஓகே சரி போகப் போறீரோ......???எங்க நானும் பார்ப்பம் அந்த பிரண்ட என்று பார்க்க முயற்சித்திருப்பார்.....ஓரளவுக்கு தன்னும் மனதில் சஞ்சலம் இருக்காது....கண்டிப்பாக நான் என்றால் அப்படித் தான் செய்வேன்.....எடுத்த எல்லாத்துக்கும் தப்பு கண்டிப்பது தான் வேலையாக இருக்க கூடாது...

அதற்காக நான் ஒரு மேதாவி என்றோ அல்லது எனக்கு தான் எழுத தெரியும் என்றோ எதையும் எழுத முயற்சிக்க இல்ல நிழலி அண்ணா.....அனேமான தலைப்புக்களுக்கு கருத்து எழுத முயற்சிப்பதில்லை...யாருமே அவதானிப்பார்கள்...பறவா இல்ல..

நீங்கள், உங்கள் பிள்ளைகளோடு நண்பனாகப் பழகினாலும் உங்கள் சிறகுகளுக்குள்ளேயே வைத்திருக்கிறீர்கள்.  அவர்களைச் சுதந்திரமாகச் சிந்திக்கக்கூட விடுவதாகத் தெரியவில்லை.  நீங்கள் விதித்த எல்லைகளுக்குள்ளேயே சிந்திக்க விடுகிறீர்கள். நீங்கள் உயிரோடு இருக்கும்வரை அவர்களைச் சுதந்திரமாகச் சிந்திக்க விட மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.  இதுவும் ஒருவிதமான அடக்குமுறைதான்.  இவ்வாறு வளர்க்கப்படுபவர்கள்தான் கட்டறுந்ததும் வழிதவறிப் போகக்கூடியவர்கள்.  இவர்களுக்கு உங்களின் வழிநடத்தல் வாழ்க்கை முழுவதும் தேவைப்படும்.  என்னைப் பொறுத்தவரையில் இவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் தற்போது அதி கூடிய விருப்ப பசையை எடுத்த ஆக்கமாக இது இருக்கின்றது ஆகவே பலரின் மனதை இது தொட்டிருகின்ற்றது சும்மார் 28 பச்சைகளுக்கு மேல் சில பேர் மாதக்கணக்கா யோசிச்சு மாஞ்சு மாஞ்சு எழுதினாலும் இந்தளவு வரவேற்ப்பு கிடைக்காது சமுகத்தில் நடை பெருபவற்றை தலைமுறை இடைவெளியை தயக்கம் இல்லாமல் சொன்னதற்கு விசு அண்ணாவிற்கு வாழ்த்துக்கள் விசு அண்ணா எழுத மாட்டார் பட் எழுதினால் அது பச்சை வாங்கி யாழிலே சாதனை படைக்கும் ஆக்கமாக தான் இருக்கும் இதுக்கு முதலும் பெண்கள் பற்றிய ஆக்கம் ஒன்றிற்காக அதி விருப்பு வாக்குகளை அள்ளி குவித்திரிந்திர்கள் தயங்காமல் நடந்தவற்றை எழுதும் விசு அண்ணாவிற்கு பாராட்டுக்கள்

http://www.yarl.com/forum3/index.php?app=members&module=reputation§ion=most

Most liked content

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கரவு,வஞ்சகமில்லாமல் விசுகருக்கு அந்தமாதிரி பச்சைப்புள்ளியாலை சாத்துப்படி நடந்திருக்கு  :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இப்படி ஏதாச்சும் சொல்லுவீங்க என்று தான் மூன்று பக்கம் முடியும் மட்டும் வராமலே இருந்தன்... :) எழுதி வேலை இல்லை...

தமிழச்சி மற்றும் யாயினி

நீங்கள் காரை வாங்கி  விட்டால் எப்படியும் ஓட்டலாமா?

அதற்கு விதி படிக்கணும். அதை படித்து பத்திரம் எடுக்கணும்.

அந்த விதிகளுக்கு ஏற்பவே வீதியில் காரை ஓட்டமுடியும்

பாடசாலை போகின்றோம்

எப்பவும் போகலாம் வரலாம்

விரும்பினால் படிக்கலாம்

பாடநேரத்தில் வம்பளக்கலாமா?

விதியுண்டு

மதிக்காதுவிட்டால்  தண்டனையுண்டு.

இங்கு மாநகர சபையில் எழுதப்படும் திருமணங்கள் சிலவற்றிற்கு மொழி பெயர்ப்பு செய்துண்டு

இருவர் சேர்ந்து வாழுதல் அதன் பயனான  பிள்ளை வளர்ப்பு பற்றி பல விதிகள் அதிலுண்டு.

முக்கியமாக அந்த பிள்ளையின் வாழ்நாள் முழுவதும் ஒழுங்கான வளர்ப்புக்கும் அதனுடைய நன்மை தீமைகளுக்கும்  நீங்கள் இருவரும் கூட்டாகவும் தனித்தனியாகவும் இறக்கும்வரை பொறுப்பு  என்றுள்ளது.

அந்தவகையில் எனது வீட்டிலும் அவர்களது வரும்கால நன்மை கருதி சிலவிதிகள் உண்டு.

எனது மக்களிடம் நான் இப்படித்தான் சொல்லியுள்ளேன்.

நீங்கள் ஒரு கூடைக்குள் 4 தக்காளிப்பழங்கள்.

தக்காளியில் ஒன்று பழுதானால் என்ன  செய்வோம் என உங்களுக்கு தெரியும்.

அதையே  நானும் செய்வேன்.  மற்ற மூவரின் நன்மை கருதி பழுதாய்ப்போனதற்காக வருத்தப்படமாட்டேன் என்று.   இதை அவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.  இது வற்புறுத்தலால் வந்ததல்ல. ஒருமித்த கருத்து.

நேற்று சனிக்கிழமை.

நாலும் வந்து எனது கட்டிலில் என்னுடன் ஒன்றாக படுத்திருந்து இந்த கிழமை நடந்த விடயங்களையும் அடுத்த கிழமை நடக்கவிருக்கும் விடயங்களையும் கலந்து பேசி சிரித்து மகிழ்ந்து தான் போனார்கள்.

இவற்றை கட்டிப்போடுதல் அல்லது அடிமைப்படுத்துதல் என்பதற்குள் அடக்கமுடியாது.

தமிழச்சி  சொல்வது போல் இது கட்டு.  இதை உடைத்து வெளியில் வந்து பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க முடியாதவர்களாக இருப்பார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  காரணம்  தற்பொழுதும் என்னுடன் அல்லது வீட்டில் கழிக்கும் நேரத்தைவிட வெளியில் அவர்களது சொந்த அலுவல்கள் சம்பந்தமாகவே அதிக நேரத்தை செலவிடுகிறார்கள்.

இன்னும் கனக்க எழுதலாம்.

நீங்கள் விரும்பமாட்டீர்கள்.

ஒன்றை மட்டும் புரிந்து கொள்வீர்கள் என எதிர்பார்க்கின்றேன்

இந்த திரிக்கு விழுந்து வரவேற்பு புள்ளிகளும் இதன் வேகமும் இதை இங்கு எழுதிதற்காக விழுந்தவை.  ஒரு பாவமன்னிப்பு கேட்டதற்கு கிடைத்த அரவணைப்பு மட்டுமே.

நன்றி  நிழலி

நான் எழுதவேண்டியதை நீங்களே எழுதிவிட்டீர்கள்.

இங்கு  இதை நான் பதிந்ததற்கு காரணமே இந்த நாய்ப்புத்தி  எனக்கு மட்டும்தானா???

என அறியவே.

அதிலிருந்தே உங்களுக்கு தெரிந்திருக்கவேண்டும். எனக்கே அது சரியா?  பிழையா என தெரியவில்லை என்பதை. அத்துடன் அந்த சில நிமிடங்கள் என்னைக்குத்தின.  அதற்கு அவன் சொன்ன  காரணம் என்னை ஒரு ஐந்துவாக நினைக்க வைத்தது.

அதுவே உண்மை.

ஆனால் இங்கு வளர்ந்த பிள்ளைகளை உடைய  பலரும் இது எல்லோருக்கும் வரும் என்றபோது

எனது பிள்ளைகளில் நான் வைத்திருக்கும் அன்புக்கு களங்கமில்லை  என்பதை உணர்ந்து கொண்டேன்.  அதுவே எனக்கு கிடைத்த நன்மை.

அர்யூன் அண்ணா இங்கு எனக்கு எழுதிய பதிலில் தனது மகன் இரவு சாப்பிடப்போகும்போது ஒரு பிலிப்பைன் பிள்ளை  காரில் ஏறி   ஒன்றாகப்போனதை  கண்டதாக எழுதியிருந்தார்.  இதன் அர்த்தமும் ஒன்றுதான்.  அவரது மனதில் சிறு அலையொன்று அடித்துள்ளது.   அதனால்தான் இங்கு அதை எழுதினார்.   எனக்கு சூழ்நிலையின் தாக்கம் காரணமாக கொஞ்சம் அதிகம் அடித்தது.   அதுவே எனக்கான கேக்காக இருந்ததனால் குட்டு ரொம்ப வேதனை தந்தது.

அதை நான் மனம் திறந்து எழுதுவதே இங்கு வரவேற்கப்படுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இன்றையை உலகம் போகும் போக்கில் பிள்ளைகளையும் அவர்கள் சிந்தனையில் விட்டால் என்ன பின்னர் என்ன நடக்குமென்றே தெரியாது? வாலிப வயதில் நல்லது கெட்டது தெரியமாட்டாது.....சொல்ல வேண்டிய வயதில் சொல்லி பக்குவமாக வளர்க்க வேண்டியது பெற்றோரின் பொறுப்பு. நல்லது கெட்டதை சொல்லி வளர்ப்பதை கூட சுதந்திரவலயத்துக்குள் கொண்டுவந்து விட்டார்கள். விசுகர்! மீண்டுமொருமுறை வணக்கம்.நீங்கள் அனுமதித்தால் என் கண்ணெதிரில் நடக்கும்,நடந்த சம்பவங்களை எழுதலாம் என நினைக்கின்றேன்.
 
ஆதாவது புலம்பெயர் நாட்டில் கட்டுப்பாடுடன் வளர்ந்த பிள்ளைக்கும்......சுதந்திரமாக வளர்ந்த பிள்ளைக்குமான வித்தியாசங்கள்?

எழுதுங்கள் அண்ணா

ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்

புலம்பெயர் வாழ்வின் அவலங்களும்  அதில் எமது அனுபவங்களும் எம்மால் பதியப்படவேண்டும்.

ஏனெனில் நாமே சாட்சிகள்.  நாமே அவற்றை  எதிர் கொண்டோம்.

உங்களது அனுபவம் பலரையும் சென்றடையவேண்டும் என்பது எனது அவா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் தற்போது அதி கூடிய விருப்ப பசையை எடுத்த ஆக்கமாக இது இருக்கின்றது ஆகவே பலரின் மனதை இது தொட்டிருகின்ற்றது சும்மார் 28 பச்சைகளுக்கு மேல் சில பேர் மாதக்கணக்கா யோசிச்சு மாஞ்சு மாஞ்சு எழுதினாலும் இந்தளவு வரவேற்ப்பு கிடைக்காது சமுகத்தில் நடை பெருபவற்றை தலைமுறை இடைவெளியை தயக்கம் இல்லாமல் சொன்னதற்கு விசு அண்ணாவிற்கு வாழ்த்துக்கள் விசு அண்ணா எழுத மாட்டார் பட் எழுதினால் அது பச்சை வாங்கி யாழிலே சாதனை படைக்கும் ஆக்கமாக தான் இருக்கும் இதுக்கு முதலும் பெண்கள் பற்றிய ஆக்கம் ஒன்றிற்காக அதி விருப்பு வாக்குகளை அள்ளி குவித்திரிந்திர்கள் தயங்காமல் நடந்தவற்றை எழுதும் விசு அண்ணாவிற்கு பாராட்டுக்கள்

http://www.yarl.com/forum3/index.php?app=members&module=reputation§ion=most

Most liked content

நன்றி  தம்பி சுண்டல்

தங்கள் அன்புக்கு

இன்னும்  கனக்க அனுபவ  அலசல்கள் இருக்கு

நேரம்தான் கிடைக்குதில்லை.

சில  விரைவில் வரும்.

அதிலொன்று இன்றைய பெடியளின் தண்ணியடி பற்றியது.

மற்றது  இந்த திரியின் கதாநாயகனை 6 நாள் லண்டனுக்கு அனுப்பி  எடுத்தேன் (கூட்டாளிகளுடன் பெண்கள் உட்பட) :wub:

பகிர்வுக்கு நன்றி அண்ணா....

எங்கடா சந்தர்ப்பம் கிடைக்கும் உங்களை குதறி எடுக்கலாம் என்று இங்கு ஒரு சிலர் பார்த்து கொண்டிருக்கிறார்கள்  என்பது மட்டும் தெளிவா தெரியுது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பகிர்வுக்கு நன்றி அண்ணா....

எங்கடா சந்தர்ப்பம் கிடைக்கும் உங்களை குதறி எடுக்கலாம் என்று இங்கு ஒரு சிலர் பார்த்து கொண்டிருக்கிறார்கள்  என்பது மட்டும் தெளிவா தெரியுது

நன்றி தம்பி

30 வருடங்களுக்கு மேலான போராட்டத்தோடு ஒன்றிணைந்த பொது வாழ்க்கையின் அனுபவங்களோடு ஒப்பிடுகையில்  இதெல்லாம் மௌனத்தாலேயே அடித்துவிரட்டிடமுடியும்.

இலக்கு எங்கோ இருக்க  நாம்  ஏன் வீணாக நேரத்தை செலவிடவேண்டும்.

ஆனால் யாருக்கு பதிலளிப்பது???

எவரை வளர்த்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கவேண்டிய  காலகட்டம்.

அதையே  நான் இங்கும் செய்கின்றேன்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

கண்டிப்பா அந்த ஒரு சிலர் யார் அவர்கள் நோக்கம் என்ன என்பதும் நாங்கள் அறியாதவர் அல்லவே அபி

நிச்சியமாக விசு அண்ணா வின் பிள்ளைகள் கொடுத்து வைத்தவர்கள்

நான் எல்லாம் 12 வயதில் என்னுடைய தந்தையை இழந்தேன் எங்கள் ஒட்டுமொத்த வாழ்வையும் புரட்டி போட்ட சம்பவம் அது ஒரு குடும்பத்தின் ஆணி வேர் அஸ்தி வாரம் தந்தையே அதில் இருந்துகொண்டு பிள்ளைகளை வழி நடத்த வேண்டியது உங்கள் பொறுப்பே அவிட்டு விட நாங்கள் வளர்ப்பது ஒன்றும் கட்டாக்காலி நாய்கள் அல்லவே

இன்னும் எழுதுங்கள் உங்கள் அனுபவங்கள் அடுத்த தலைமுறைக்கான பாடங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வெளிப்படையாக எழுதுவது என்பது கடினமான காரியம். எங்கள் சமூகத்தில் வாழும் ஒவ்வொரு பெற்றோரும் இதற்கு விதிவிலக்கல்ல. பொதுவாக எமது சமூகத்தில் இரண்டு வகையான மன அழுத்தங்களுக்குப் பிள்ளைகள் ஆளாகிறார்கள். ஒன்று அளவுக்கதிகமான கட்டுப்பாடுகள், மற்றது அளவுக்கதிகமான சுதந்திரம் இவ்விரண்டும் ஏற்புடையனவாக பார்க்கமுடியாது. அளவுக்கதிகமான கட்டுப்பாடுகள் உறவுகளை உடைத்து வெளியேறக்கூடிய அதி உச்ச பிரிவை உருவாக்கும். அளவுக்கதிகமான சுதந்திரம் என்பது முற்றிலு; வெறுமையான தனித்த உணர்வைத் தோற்றுவித்து சிறுகச் சிறுகக் கொல்லும். பிள்ளைகள் விடயத்தில் கவனமம் கண்காணிப்பும் அவசியமான ஒன்று. அதை நாம் வெளிப்படுத்தும் தன்மைதான் அதிக கவனத்திற்குரியது. இதில் தந்தையாக விசுகு அண்ணா சில நிமிடங்களில் தனக்கு ஏற்பட்ட உணர்வைப் பகிர்ந்திருக்கிறார். சில மணித்துளிகளில் தான் அப்படி நினைத்ததற்காக வெட்கித்தும் போயிருக்கிறார். இரண்டு உணர்வையும் எழுதியிருக்கிறார். அவருடைய தேடல் தன்னுடைய நிலைப்பாடு சரியானதா என்பதாகவே இப்பதிவின்மூலம் பார்க்கத் தோன்றுகிறது. எச்சரிக்கை உணர்வு பெற்றோருக்கு இருப்பது தவறல்ல. இந்த எச்சரிக்கை உணர்வே அதிகரித்து பிள்ளைகளைக் காயப்படுத்திவிடக்கூடாது. எங்களுக்கான சமூக வாழ்வை அவ்வளவு சீக்கிரமாக இரண்டாம் தலைமுறையோடு தூக்கி எறிந்துவிட முடியாது அதற்கு இன்னும் இரண்டு தலைமுறைகள் தாண்டவேண்டும்.  அப்போது எங்களுடைய இந்த எழுத்துக்கள் வாசிப்பவர்களுக்கு வினோதமாக இருக்கக்கூடும். வெளிப்படையாக பகிர்வுக்குப் பாராட்டுக்கள் விசுகு அண்ணா.

சரியாகச் சொன்னீர்கள் சகாறா... கட்டுக் கடங்காத சுதந்திரத்துக்கு, கடும் கட்டுப்பாட்டுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் பலருக்கு புரிவதில்லை. பிள்ளைகள் வளர்ப்பில் மட்டுமல்ல அனைத்திலுமே இந்த இரண்டு extreme நிலைகளும் அபாயகரமானது.

விசுகு ஒரு தகப்பனாக தன் உணர்வினை எழுதியிருக்கின்றார். மகனை திட்டித் தீர்த்தோ, போகாதே என்று அடக்கவோ இல்லை. வந்த பின் கூட கேள்வி கேட்டு மனதை வருத்தவில்லை. தனக்குள் மறுகி, கேள்வி கேட்டு பின் அவற்றுள் இருந்து தன்னை வெளியே கொண்டு வருகின்றார்.

பலருக்கு அறிவுக்கும், மனதுக்குமான வேறுபாடுகள் தெரிவதைல்லை. ஒரு விடயம் நடக்கும் போது மனம் அது பற்றி பலவிதமான எண்ணங்களுக்குள் தன்னை ஈடுபடுத்தும் போது, அறிவு அதனை துலக்க முற்படும். அறிவுக்கும் உணர்வுக்குமான போராட்டம் தான் இந்தப் பதிவு.

அர்ஜுன், நான் தமிழ் சீரியல்கள் எதுவும் பார்ப்பதில்லை. உங்களுக்கு என்னால் சொல்லக் கூடிய ஒரு விடயம். இனியாயவது கொஞ்சம் இலக்கியத் தரமான, யதார்த்தபூர்வமான விடயங்களை எழுதும் புத்தகங்களை படிக்கத் தொடங்குங்கள். வெறுமனே ஹொலிவூட் படங்களில் மாத்திரம் மனிதம் தேடாதீர்கள்.

இன்றைய காலகட்டங்களில் , அதுவும் புலம்பெயர் நாடுகளில் வாழும் பெற்றோர் தம் பிள்ளைகளை நினைத்து பயப்படுவது நியாயமானது. ஏனென்றால் இன்றைய இளைய சமுதாயம் முற்போக்குச் சிந்தனைகளை  கொண்டவர்களாக , அதனை சில நேரங்களில் சரியான முறைகளில் பயன்படுத்தத் தெரியாதவர்களாக இருப்பது. 

ஆனால் , உங்கள் பிள்ளைகள் உங்கள் பிறந்தநாளை நினைவில் வைத்து கொண்டாடியது, அவர்களின் பாசத்தையும், உங்கள் நல்ல வளர்ப்பையும் காட்டுகிறது.

வளர்ந்த பின்பு புலம் பெயர்ந்த அதிகமானவர்களுக்கு இந்தப் பயம் இருக்கும். பெரிய  கலாச்சார இடைவெளி.  அறியாத புதிய சமூகச் சூழலில் பிள்ளைகளை வளர்க்கிறோம்.  இங்க நடக்கிற நல்லது கெட்டதுகளைப் பார்த்து, பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசனை இருக்கத்தான் செய்யும்.  

நானெண்டால்.. நமக்குத்தான் வாய்க்கேல்லை.. :D பெடியாவது சந்தோசமா இருக்கட்டுமே எண்டு நினைச்சிருப்பன்.. :D

அது.....   :D

நன்றி விசுகு உங்கள் அனுபவ பகிர்வுக்கு. உங்கள் நிலைழில் யார் இருந்திருந்தாலும், அந்த நினைப்பு எட்டிப்பார்த்திருக்கும். நீங்கள் அன்று நடந்த விதத்தில் உயர்ந்து நிற்க்கின்றீர்கள். உங்கள் பிள்ளைகள் உங்களை தகப்பனா அடைய கொடுத்து வைத்திருக்கனும்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்டிப்பா அந்த ஒரு சிலர் யார் அவர்கள் நோக்கம் என்ன என்பதும் நாங்கள் அறியாதவர் அல்லவே அபி

நிச்சியமாக விசு அண்ணா வின் பிள்ளைகள் கொடுத்து வைத்தவர்கள்

நான் எல்லாம் 12 வயதில் என்னுடைய தந்தையை இழந்தேன் எங்கள் ஒட்டுமொத்த வாழ்வையும் புரட்டி போட்ட சம்பவம் அது ஒரு குடும்பத்தின் ஆணி வேர் அஸ்தி வாரம் தந்தையே அதில் இருந்துகொண்டு பிள்ளைகளை வழி நடத்த வேண்டியது உங்கள் பொறுப்பே அவிட்டு விட நாங்கள் வளர்ப்பது ஒன்றும் கட்டாக்காலி நாய்கள் அல்லவே

இன்னும் எழுதுங்கள் உங்கள் அனுபவங்கள் அடுத்த தலைமுறைக்கான பாடங்கள்

நன்றி  சுண்டல்

ஆடிப்பாடி பகிடிவிட்டு கடலை போடும் சுண்டலுக்குள் இவ்வளவு  சோகமா???

மனதை உறுத்தியது.

ஆனாலும் ஒரு நல்ல தமிழனாக தேசியம் சார்ந்து தெளிவான பார்வையுடையவராக உங்களை  வளர்த்தெடுத்த அந்த தாய்க்கு தலை வணங்குகின்றேன்.

வெளிப்படையாக எழுதுவது என்பது கடினமான காரியம். எங்கள் சமூகத்தில் வாழும் ஒவ்வொரு பெற்றோரும் இதற்கு விதிவிலக்கல்ல. பொதுவாக எமது சமூகத்தில் இரண்டு வகையான மன அழுத்தங்களுக்குப் பிள்ளைகள் ஆளாகிறார்கள். ஒன்று அளவுக்கதிகமான கட்டுப்பாடுகள், மற்றது அளவுக்கதிகமான சுதந்திரம் இவ்விரண்டும் ஏற்புடையனவாக பார்க்கமுடியாது. அளவுக்கதிகமான கட்டுப்பாடுகள் உறவுகளை உடைத்து வெளியேறக்கூடிய அதி உச்ச பிரிவை உருவாக்கும். அளவுக்கதிகமான சுதந்திரம் என்பது முற்றிலு; வெறுமையான தனித்த உணர்வைத் தோற்றுவித்து சிறுகச் சிறுகக் கொல்லும். பிள்ளைகள் விடயத்தில் கவனமம் கண்காணிப்பும் அவசியமான ஒன்று. அதை நாம் வெளிப்படுத்தும் தன்மைதான் அதிக கவனத்திற்குரியது.

இதில் தந்தையாக விசுகு அண்ணா சில நிமிடங்களில் தனக்கு ஏற்பட்ட உணர்வைப் பகிர்ந்திருக்கிறார். சில மணித்துளிகளில் தான் அப்படி நினைத்ததற்காக வெட்கித்தும் போயிருக்கிறார். இரண்டு உணர்வையும் எழுதியிருக்கிறார். அவருடைய தேடல் தன்னுடைய நிலைப்பாடு சரியானதா என்பதாகவே இப்பதிவின்மூலம் பார்க்கத் தோன்றுகிறது.

எச்சரிக்கை உணர்வு பெற்றோருக்கு இருப்பது தவறல்ல. இந்த எச்சரிக்கை உணர்வே அதிகரித்து பிள்ளைகளைக் காயப்படுத்திவிடக்கூடாது. எங்களுக்கான சமூக வாழ்வை அவ்வளவு சீக்கிரமாக இரண்டாம் தலைமுறையோடு தூக்கி எறிந்துவிட முடியாது அதற்கு இன்னும் இரண்டு தலைமுறைகள் தாண்டவேண்டும்.  அப்போது எங்களுடைய இந்த எழுத்துக்கள் வாசிப்பவர்களுக்கு வினோதமாக இருக்கக்கூடும். வெளிப்படையாக பகிர்வுக்குப் பாராட்டுக்கள் விசுகு அண்ணா.

இந்த திரியை  முழுமையாக புரிந்து கொண்டு உள்வாங்கி   அதை பொறுப்போடும் புகலிட மற்றும் எதிர்கால சந்ததியின் நிலை குறித்து விபரித்துள்ளீர்கள்.

இதைவிட இதை விபரிக்கமுடியாது.

நன்றி  சகோதரி

சரியாகச் சொன்னீர்கள் சகாறா... கட்டுக் கடங்காத சுதந்திரத்துக்கு, கடும் கட்டுப்பாட்டுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் பலருக்கு புரிவதில்லை. பிள்ளைகள் வளர்ப்பில் மட்டுமல்ல அனைத்திலுமே இந்த இரண்டு extreme நிலைகளும் அபாயகரமானது.

விசுகு ஒரு தகப்பனாக தன் உணர்வினை எழுதியிருக்கின்றார்.

மகனை திட்டித் தீர்த்தோ, போகாதே என்று அடக்கவோ இல்லை. வந்த பின் கூட கேள்வி கேட்டு மனதை வருத்தவில்லை. தனக்குள் மறுகி, கேள்வி கேட்டு பின் அவற்றுள் இருந்து தன்னை வெளியே கொண்டு வருகின்றார்.

பலருக்கு அறிவுக்கும், மனதுக்குமான வேறுபாடுகள் தெரிவதைல்லை.

ஒரு விடயம் நடக்கும் போது மனம் அது பற்றி பலவிதமான எண்ணங்களுக்குள் தன்னை ஈடுபடுத்தும் போது, அறிவு அதனை துலக்க முற்படும். அறிவுக்கும் உணர்வுக்குமான போராட்டம் தான் இந்தப் பதிவு.

அதே.

இன்னொன்றுறும் புரிகிறது

அதை என்னாலல் மட்டுமே இங்கு எழுதமுடிகிறது.

தொடர்ந்து எழுதுவேன்.

நன்றி  நிழலி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய காலகட்டங்களில் , அதுவும் புலம்பெயர் நாடுகளில் வாழும் பெற்றோர் தம் பிள்ளைகளை நினைத்து பயப்படுவது நியாயமானது. ஏனென்றால் இன்றைய இளைய சமுதாயம் முற்போக்குச் சிந்தனைகளை  கொண்டவர்களாக , அதனை சில நேரங்களில் சரியான முறைகளில் பயன்படுத்தத் தெரியாதவர்களாக இருப்பது. 

ஆனால் , உங்கள் பிள்ளைகள் உங்கள் பிறந்தநாளை நினைவில் வைத்து கொண்டாடியது, அவர்களின் பாசத்தையும், உங்கள் நல்ல வளர்ப்பையும் காட்டுகிறது.

நன்றி  கல்கி

உங்களது கருத்தும் எனக்கு கிடைத்திருப்பது பெருமை தருகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.