Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் களத்தில் ஓர் தசாப்தம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டி விட்ட ஊரை விட்டு

ஓடி வர மனசின்றி..

ஒட்டிய விசா ஸ்ராம்

உந்தித் தள்ள

பள்ளிப் படிப்பு இழுத்து வர

ஓடி வந்த இடத்தில்

ஒதுங்க ஓர் இடம்..!

 

மோகன் - யாழ் என்ற

உறவுகளின் சிந்தனையில்

உதித்த ஓர் தளம்.

 

ஆங்கில மேடையில்

விதம் விதமாய்

அலங்கரிக்க

அங்கீகாரம் இருந்தும்

அங்கும் எழுந்தது

தாய்த் தமிழ் தாகம்..!

 

நட்புக்கள் தம் உறவாடலில்

யாழெனும் இணையத் தொடர்பும்

பிணைந்து கொள்ள

"வைரஸாய் "

முதல் நாமம் இட்டு

தொற்றிக் கொண்டது

இன்னும்

பசுமையான நினைவுகளாய்.

 

கேடு இன்றி

விளையாட்டா "ஹாக் "செய்து

யாழின் "கோட்" எடுத்து

தமிழ்

போறம் செய்து

நண்பர்கள் விளையாட..

கூடியிருந்து களித்தமை

இன்றும் நினைவதில்

ஊஞ்சலாடுது..!

 

யாழின் நெருக்கம்

எம் எஸ் என் வழி கை நீட்ட

அங்கும் தொடர்ந்தது உறவுகள்.

ரி ரி என்னிற்கு

வில்லுப்பாட்டு எழுதி

அசைன்மென்ரைக் கோட்டை விட்டதும்

நினைவின் ஓர் மூலையில்..!

 

அன்று கூடிய

தொலைதூர நட்புகள்

இன்றும்... இணைப்பில்

உள்ளூர மகிழ்ச்சி.

சண்டை சச்சரவுகள்

இடையில் சில

அவையும் கலைந்து

கசப்புகள் நீங்கி

நீளுது தமிழ் உறவு..!

 

கால ஓட்டத்தில்

கூடியிருந்த நண்பர் நாம்

பல திக்கும் பிரிந்து விட்டோம்

ஓரிருவர் தான் கூட இன்று.

யாழெனும்

நட்பு மட்டும்

தசாப்தம் கடந்தும்

எம்மோடு..!

 

சமூகத் தளத்தில்

குழந்தைகளாய் தவிழ்ந்த எம்மை

தத்தெடுத்து

இணையத் தமிழூட்டி

பாடங்கள் பலவும்

கற்றுத் தந்த

அன்னைக்கு நிகர்த்தவளே

யாழே ..

நீ என்றும்

வாழிய..!

 

Edited by nedukkalapoovan

  • Replies 60
  • Views 4.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைதான் நெடுக்ஸ் அண்ணை,

 

உறவுகளில் உண்மையைக் கண்டு கொண்டதும். அன்பான நட்புகளைக் கண்டுகொண்டதும் இங்குதான். எப்போதும் நினைவோடு நிறைந்து நிற்கும்!!! யாழ்த(க)ளம்.

  • கருத்துக்கள உறவுகள்

பத்து வருடம் பக்குவத்தைக் கொண்டுவந்துவிட்டது என்று பறை சாற்றுகின்றது நெடுக்ஸின் கவிதை! இன்னும் பல்லாண்டுகள் யாழ் களத்தில் நிலைத்திருக்க வாழ்த்துக்கள்.

வாவ் பத்துவருடங்கள் .................இன்னும் பல பல ஆண்டுகள் யாழோடு இணைந்திருக்க வாழ்த்துக்கள். 

இன்னும் பல பல ஆண்டுகள் யாழோடு இணைந்திருக்க வாழ்த்துக்கள்
 

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி.உங்களை போல பலர் இக்களத்தில் இணைந்து தொடர்ந்து எழுதுபவர்கள்,விட்டுச்சென்றோர்,எழுதுவதை விட்டு பார்வையாளர் என பலரை கண்டது இக்களம்.



வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பத்துவருடம் மிகவும் நீண்ட காலம், நெடுக்கர்.

 

கவிதைக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி நெடுக்ஸ்.
நீங்கள் கூறியது போல்... ஆரம்பத்தில், விளையாட்டாக யாழ்களத்தைப் பார்க்க வந்து, இன்று யாழ்களத்துக்கு வராவிட்டால்... மனது ஒரு மாதிரி இருக்கும்.
முகம் காணாத உறவுகளை, யாழ் களத்தின் மூலம் காண்பதன் மூலம், மனதில் ஒரு உற்சாகம் பிறக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்தங்கை: நன்றி தங்கை.. யாழில் கண்ட அனுபவங்கள் உங்களுக்கும் எங்களைப் போலவே ஒத்துள்ளது. :)

 

கிருபண்ணா: நன்றி கிருபண்ணா. யாழில் அவதானித்த மாத்திரத்தில்.. அன்றிலிருந்து இன்று வரை கூடப் பயணிக்கும் யாழ் உறவுகளில் நீங்களும் ஒருவர் என்று நினைக்கிறேன். :)

 

தோற்கெழுதாசன்: நன்றி தோற்கெழுதாசன். பத்து வருடங்கள் போனதே தெரியல்ல. எல்லாம் நேற்றுப் போல் உள்ளது. :)

 

வந்தியதேவன்: வாழ்த்துக்கு நன்றி நண்பரே. :)

 

நுணாவிலான்: நன்றி தங்கள் கருத்துக்கு நுணா. :)

 

புங்கையூரன்: 10 ஆண்டுகள் வார்த்தையில் நீண்டது ஆனால் அனுபவத்தால் சுருங்கி நிற்கிறது. நன்றி உங்கள் கருத்திற்கு :)

 

தமிழ்சிறி அண்ணா: ஒத்த அனுபவங்கள் இங்கும். நன்றி அண்ணா. :)

 

எம்மோட தசாப்த காலப் பயணம் படிச்சு ஊக்கம் தந்த உறவுகளுக்கும் அன்றும் இன்றும் கூடவே பயணிக்கும் உறவுகள் அனைவருக்கும்.. மிக்க நன்றி. :icon_idea:

 

 

 

 

 

 

வாழ்த்துக்கள் என்று கூற விரும்பவில்லை. உங்களிற்கு நல்லதோர் வாழ்க்கை, நல்லதோர் எதிர்காலம் அமையவேண்டும் என்பதே எனது அவா ஆகும்.

 

உங்களது இந்த யாழ்க்களத்தில் ஓர் சகாப்தம் பதிவை நான் உடனடியாகவே பார்வையிட்டேன். கருத்திட வாய்ப்பு கிடைக்கவில்லை. பத்து வருடங்கள் இங்கு மினக்கட்டு இருக்கின்றீர்கள், அது எத்தனை ஆயிரம் பொன்னான மணித்தியாலங்கள், உங்கள் வாழ்நாளில் எவ்வளவு பெரிய பகுதி என்று யாரும் சொல்லித்தெரியவேண்டியதில்லை. என்னால் அதை உணரமுடிகின்றது.

 

யாழில் நீங்கள் இதுவரை காலமும் மினக்கட்ட நேரம் பல்கலைக்கழகத்தில் ஓர் பட்டப்படிப்பு செய்வதற்கு போதுமானது என்றால் அது மிகையானது இல்லை. 2007ம் ஆண்டு நான் மும்மரமாக யாழில் உறவாடியபோது சுமார் ஆயிரம் மணித்தியாலங்களிற்கு மேல் செலவளித்தேன் என்று நினைக்கின்றேன். அந்தவகையில் நோக்கும்போது கடந்த பத்து ஆண்டுகளில் உங்கள் ஆக்கங்கள், கருத்துக்களிற்கு செலவளித்த நேரம் என்று பார்க்கும்போது அது மிகப்பெரியதோர் பங்களிப்பு.

 

பல இடங்களில் இன்றும் கூட உங்களது பல கருத்துக்கள், சித்தாந்தங்களுடன் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், உங்கள் திறமையை என்றும் பாராட்டுகின்றேன். உங்கள் கவிதைகளின் உயிர்ப்புத்தன்மை, இயல்புத்தன்மை இவற்றை இரசித்துள்ளேன்.

 

ஓர் விடயத்தை இங்கு வெளிப்ப்படையாகக்கூற விரும்புகின்றேன். என்ன காரணம் என்று தெரியவில்லை, ஆனால் நீங்கள் மிகுந்த திறமைசாலியாக இருந்தும் உங்களை யாழ் நிர்வாகம் நீண்டகாலம் ஏதோவகையில் ஒதுக்கி வைத்துள்ளதாகவே உணர்கின்றேன். சிலது மோகன் சின்னப்பெடியன் துடுக்குத்தனமாக ஏதும் குழப்படிகள் விடுவானோ எனும் பயத்தில் இப்படி நடந்துகொண்டாரோ தெரியாது.

 

யாழில் தொடர்ந்து எழுதுவது குறைவு என்றாலும் தொடர்ந்து அவதானிப்பாளனாக, வாசகனாக இருந்து வருகின்றேன். உங்களிற்கு உண்மையில் யாழ் மூலம் என்ன பயன் கிடைத்தது என்று எனக்குத் தெரியாது, ஆயினும் யாழ்க்களத்திற்கு நீங்கள் ஓர் பயனுள்ள பொக்கிசம் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

 

உங்களிற்கு நல்லதோர் ஒளிமயமான எதிர்காலம் அமையவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கலைஞன்.

 

உண்மையைச் சொல்லப் போனால்.. யாழில் எனது பயணம் இன்னும் ரகசியமானதாகவே உள்ளது.

 

பெரிசாக என் நேரத்தை யாழுக்காக ஒதுக்கி இழந்தது என்றில்லை. என்னால் வீணே செலவழிக்கக் கூடிய நேரத்தையே யாழில் அதிகம்.. பயன்படுத்திக் கொண்டுள்ளேன். யாழ் எனது தேடலை.. உணர்தலை.. எழுத்து வடிவில்.. தாய் மொழியில் தரும் ஒரு இடமாகி இருந்தது..! ஏனெனில் கடந்த தசாப்தம் முழுவதும் கல்வியோடு என் சொந்த உழைப்பையும் கவனித்தே வருகிறேன்..! ஊரை விட்டு வந்த பின்னர்.. இது வரை 3 வெவ்வேறு பல்கலைக்கழகப் படிப்புக்களை முடித்துள்ளேன். பிற மனிதாபிமானப் பணி.. சான்றிதழ்களும் பெற்றுள்ளேன். இவற்றிலும்.. எனது உழைப்பே மூலதனமாகியும் உள்ளது. யாழில் எழுதி இருக்காவிட்டாலும் இவற்றைத் தான் பெற்று இருப்பேன்.

 

இன்னொரு முக்கிய விடயம்.. நான் எந்த ஒரு ஆக்கத்திற்கும் அதிக நேரம் எடுத்துச் செலவு செய்வதில்லை. குறுகிய நேரத்தில் எழுதிட்டுப் போயிடுவன்..! பின்னர் நேரம் கிடைக்கும் போது மீண்டும் வந்து.. தவறுகள் கண்டால்.. திருத்துவேன்..மேம்படுத்துவேன்.

 

போரியல்... கைதுகள்.. மரணங்கள்.. விடுதலைக்கான ஏக்கங்கள் மலிந்து கிடந்த.. நகர வாழ்வுகளுக்குள் முடங்கிக் கிடந்த எமக்கு யாழ் கருத்துக்களைக் கொட்டும் ஒரு நல்ல தளமாக அமைந்தது என்றால் மிகையில்லை.

 

யாழிடம் இருந்து நான் அதன் சேவையை தவிர வேறு எதனையும் எதிர்பார்த்து வரவில்லை. அதனால் பெரிய ஏமாற்றங்கள் இல்லை..!

 

ஒரு சில மனிதர்களின் செயற்பாடுகள் மட்டும் கொஞ்சம் வேதனையான அனுபவங்களைத் தந்தன. இருந்தாலும்.. அவர்கள் இணையவெளியில் யாரோ என்ற யதார்த்தத்தையும் நான் அங்கு உணர எனக்கு அது உதவியது.

 

ஊர் ஊரா போய் தேடினாலும் கிடைக்க முடியாத நல்ல நட்பு வட்டம் ஒன்றை யாழ் தந்துள்ளது. இங்கு தனிநபர் நட்பு இல்லை... என்றாலும்.. கருத்தியல் சார்ந்து எழுந்த நட்பு இருக்கிறது.

 

மோகன் அண்ணா எங்களை சரியாக இனங்காணவும் பயன்படுத்தவும் செய்த சந்தர்ப்பங்கள் இருந்தன. இருந்தாலும் ஒரு சில நபர்களின் நிர்வாக மீதான ஆதிக்கப் போக்கு அவர் மீதும் செல்வாக்குச் செய்த தருணங்களையும் பின்னர் அவதானித்திருக்கிறேன். அது நிர்வாகத்துறையில் இருக்கின்ற ஒரு culture என்பதை உணர்ந்தே இருந்தேன். மேலும் அவரிடமோ வேறு எவரிடமோ நான் எதனையும் எதிர்பார்த்து எழுத வரவில்லை..!

 

ஒளிமயமான எதிர்காலம் என்ற ஒன்றை நோக்கி நான் பயணிக்கவில்லை. எனக்கான தேவைகளை நானே பூர்த்தி செய்து.. சாகும் வரை சொந்த உணர்வுகளுக்கு மதிப்பளித்து.. சுதந்திர மனிதனாக அடுத்தவருக்கு இடைஞ்சல் இன்றி.. உலகத்திற்கு செய்யக் கூடிய ஏதாவது.. நாலு நல்லது செய்து.. வாழக்  கூடிய நல்ல எதிர்காலம் ஒன்றே எனது இலட்சியம்..!

 

நான் முற்போக்குவாதியும் இல்ல.. புரட்சியாளனும் இல்ல.. தமிழ் தேசியவாதியும் இல்ல.. படைப்பாளியும் இல்ல..கவிஞனும் இல்ல.. எதுவுமே இல்ல. தாய் மொழியை தமிழாய் கொண்ட இன மொழி நில..உணர்வூட்டப்பட்ட சராசரி மனிதன்..! :)

 

நன்றி கலைஞன்.. வாழ்த்துக்களுக்கும் நட்புடன் கூடிய கருத்துப் பகிர்விற்கும். நம்மிருவர் வாழ்விடமும் ஒரு காலத்தில் ஒன்றாக இருந்துள்ளதை நான் அதிகம் உணர்ந்துள்ளேன். அது தான் யாழ் நகர வாழ்வு..! அது யாழிலும் நீளுது என்று நினைக்கிறேன். :):icon_idea:

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் .யாழில் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்

நான் முற்போக்குவாதியும் இல்ல.. புரட்சியாளனும் இல்ல.. தமிழ் தேசியவாதியும் இல்ல.. படைப்பாளியும் இல்ல..கவிஞனும் இல்ல.. எதுவுமே இல்ல. தாய் மொழியை தமிழாய் கொண்ட இன மொழி நில..உணர்வூட்டப்பட்ட சராசரி மனிதன்..!

அது
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் .யாழில் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் அது

 

நீண்ட காலம் எம்மோடு பயணிக்கும் இன்னொரு உறவு நீங்கள். நிறைந்த அனுபவசாலியா உங்களைக் கண்டிருக்கிறேன். இங்கு யாழில்..!

 

உங்கள் வாழ்த்துக்கு நன்றி புத்து..! :)

வாழ்த்துக்கள் நெடுக்ஸ்...சேவை தொடர வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நெடுக்ஸ்...சேவை தொடர வாழ்த்துக்கள்

 

உங்களோடும்.. இங்கு யாழில்.. குறிப்பிடத்தக்க காலம் பழகி இருக்கிறேன். ஆக்க பூர்வமான விடயங்களை முன் வைக்கவும் அலசவும் பின்னிற்காதவர் நீங்கள்.

 

இங்கிலாந்தில் இருந்து நியூசிலாந்துக்குச் சென்று விட்ட போதும்.. உங்களையும் எங்களையும் யாழே பிணைத்து வைத்துள்ளது.  நன்றி உங்கள் பகிர்விற்கு. :icon_idea::)

உங்கள் கல்வியில் தொடர் வெற்றியடையவும் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நெடுக்ஸ் :)

:D  :D  :D இன்னும் பல்லாண்டுகள் யாழ் களத்தில் நிலைத்திருக்க வாழ்த்துக்கள்.மிஸ்டர் நெடுக்ஸ்  :icon_idea:  :icon_idea:  :icon_idea:

rose+plant+animation.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சஜீவன் அண்ணா மற்றும் தமிழ் அன்பு..! :)

  • கருத்துக்கள உறவுகள்

6313.gif

வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தசாப்தகாலம் யாழில் நின்றுபிடித்த நெடுக்கிற்கு வாழ்த்துக்கள்..! அப்படியே ஒரு சகாப்தமாக மாற வேணும் என்பது எங்களது எதிர்பார்ப்பு..! :D

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி யாயினி..! :)

 

என்ன இசை அதுக்குள்ளாவே நம்மள சமாதிக்கு அனுப்பி சகாப்தமாக்க நிற்கிறீங்க..! முடியல்ல..! :lol:

 

நன்றி இசைக்கலைஞன்..! :)

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணா..பத்துவரிசமாய் இங்கை இருக்கிறியளா..ஜம்மாடி..ஆத்தாடி..ரொம்ப பெரிய காலம்..நாம எல்லாம் இம்புட்டுகாலம் இருப்பமோ தெரியலை...அப்படி வராமல் போனாலும் ..கண்டிப்பாய் வாசகராய் வந்து வாசிச்சிட்டு போவம்...தொடர்ந்து அடிச்சு தூள்கிளப்புங்க...வாழ்த்துக்கள்... :)

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  நெடுக்குத்தம்பி

 

இதை வாசித்ததும் முதல் விருப்பு வாக்கு போட்டேன்.

கரும்பு எழுதியதுபோல்

ஒரு  அண்ணனாக  இங்கு அதிக நேரத்தை நீங்கள் செலவளிப்பதில் உடன்பாடில்லை. அதை  சொல்லணும் என்றிருந்தேன்.  கரும்பு அதை இன்று எழுதியுள்ளார்.  உங்கள் கருத்தை வாசித்தேன். புரிந்து கொள்கின்றேன்.ஒரு அண்ணனாக அதை  நம்புகின்றேன். யாழில் நேரம் செலவளிப்பதை  தப்பான விடயம் என்று கருதவில்லை.  ஆனால் அதற்கும் ஒரு அளவு உண்டு என்பதே உங்கள் படிப்பு மீது கரிசனை உடைய  அண்ணனின் விருப்பம்.

அத்துடன் நீங்கள் யாழின் ஒரு சொத்து என கரும்பு எழுதியுள்ளார்.

அதை அவர் போன்றவர்கள்தான் சொல்லணும்.  நான் சொல்லக்கூடாது. இங்குள்ள புதியவர்கள் அதை புரிந்து கொள்ளணும் என்பதே எனது  ஆசை. நன்றி  கரும்பு. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நேரத்திற்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணா..பத்துவரிசமாய் இங்கை இருக்கிறியளா..ஜம்மாடி..ஆத்தாடி..ரொம்ப பெரிய காலம்..நாம எல்லாம் இம்புட்டுகாலம் இருப்பமோ தெரியலை...அப்படி வராமல் போனாலும் ..கண்டிப்பாய் வாசகராய் வந்து வாசிச்சிட்டு போவம்...தொடர்ந்து அடிச்சு தூள்கிளப்புங்க...வாழ்த்துக்கள்... :)

 

நீங்க எல்லாம் கண்டிப்பா யாழோடு இணைந்து.. இருக்கனும். அப்ப தான் யாழ் உயிர்ப்போட்டமா இருக்கும்.  என்னால் இயன்ற மட்டில் வந்து போவேன்..! காலம் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை அல்லவா..!

 

நன்றி உங்கள் கருத்திற்கு நன்றி. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  நெடுக்குத்தம்பி

 

இதை வாசித்ததும் முதல் விருப்பு வாக்கு போட்டேன்.

கரும்பு எழுதியதுபோல்

ஒரு  அண்ணனாக  இங்கு அதிக நேரத்தை நீங்கள் செலவளிப்பதில் உடன்பாடில்லை. அதை  சொல்லணும் என்றிருந்தேன்.  கரும்பு அதை இன்று எழுதியுள்ளார்.  உங்கள் கருத்தை வாசித்தேன். புரிந்து கொள்கின்றேன்.ஒரு அண்ணனாக அதை  நம்புகின்றேன். யாழில் நேரம் செலவளிப்பதை  தப்பான விடயம் என்று கருதவில்லை.  ஆனால் அதற்கும் ஒரு அளவு உண்டு என்பதே உங்கள் படிப்பு மீது கரிசனை உடைய  அண்ணனின் விருப்பம்.

 

அத்துடன் நீங்கள் யாழின் ஒரு சொத்து என கரும்பு எழுதியுள்ளார்.

அதை அவர் போன்றவர்கள்தான் சொல்லணும்.  நான் சொல்லக்கூடாது. இங்குள்ள புதியவர்கள் அதை புரிந்து கொள்ளணும் என்பதே எனது  ஆசை. நன்றி  கரும்பு. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நேரத்திற்கும்.

 

நன்றி விசுகு அண்ணா  உங்கள் அறிவுரைக்கும் அக்கறைக்கும்.

 

உண்மையில்.. எனது ஓய்வு நேரத்தையே அதிகம் யாழில் பயன்படுத்தி இருக்கிறேன். மற்றும்படி யாழே கதி என்றிருக்க நேரம் வாய்ப்பது குறைவு. யாழுக்கு சமாந்தரமாக நட்பு வட்டத்தில் சிலரின் ஒத்துழைப்போடு.. அறிவியல் பதிவுகளையும் இட்டே வருகிறேன்.  ஆரம்பத்தில் தினமும் பதிவு போட்டோம். இப்போ எல்லோருக்கும் நேரப் பிரச்சனை..! இருந்தாலும் ரிவிட்டர் உதவுகிறது.. சுருக்கமாக எழுதிவிட்டுப் போய்விடுவதே இப்போ சாத்தியமாக உள்ளது..! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.