Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் வேணுமா.. சிங்களவர் வேணுமா இந்திய அரசே தீர்மானி. திருச்சி சிவா வின் ஆவேசம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

சூடு சுரணை உள்ள தமிழன்.......

இணைப்புக்கு நன்றி நெடுங்ஸ் விறதர்.....

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு தமிழன் திமுக கூட்டணியில் இருப்பது வியப்யாய் இருக்கு... எங்கு இருந்தாலும் நல்லா இருக்கனும்....!

http://youtu.be/tHtBB87M950

 

தமிழகமா? சிங்களமா? – முடிவு மத்திய அரசின் கையில்! – எச்சரிக்கிறது திமுக

 

போர்க்குற்ற நாடான சிறிலங்காவுடன் நட்புறவு வேண்டுமா? தென்னிந்திய சகோதரர்களுடன் நட்புறவு வேண்டுமா? என்பதை மத்திய அரசுதான் தீர்மானிக்க வேண்டும்  என திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மத்திய அரசை எச்சரித்துள்ளார்.

 
ராஜ்யசபாவில் இன்று நடைபெற்ற இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான விவாதத்தில் சிவா பேசுகையில்,இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி மீண்டும் ரத்தம் கசியும் இதயத்துடன் இங்கே நான் பேசுகிறேன். தமது சொந்த நாட்டு மக்களையே படுகொலை செய்கிற ஒரு மனிதாபிமானமற்ற நாட்டுடன் இந்தியா உறவு வைத்திருக்கிறது. இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வாக 13-வது அரசியல் சாசன திருத்தம் பற்றி பேசுகிறீர்கள்.. இலங்கையில் என்ன நடக்கிறது என்பதே அமைச்சருக்கு தெரியவில்லை. அண்மையில் தமிழர்களுக்கு சுயாட்சி இல்லை என்று அறிவித்திருக்கிறார் அதிபர் மகிந்த ராஜபக்சே.
 
தமிழருக்கு ஆதரவாக இருந்தார் என்பதற்காக தலைமை நீதிபதியை தூக்கி எறிந்தவர் ராஜபக்சே. அந்த நாட்டை இன்னமும் நட்பு நாடு என்கிறீர்களே… இலங்கை தமிழர் மறுவாழ்வுக்காக நிதி ஒதுக்கப்பட்டது என்கிறீர்கள்.. அந்த நிதி தமிழருக்காகத்தான் செலவிடப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா? உலகில் எங்கெங்கோ மனித உரிமைகள் பாதிக்கப்படும்போதெல்லாம் இந்தியாவின் குரல் கேட்கிறது. ஆனால் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மட்டும் இந்தியாவின் குரல் அப்படி ஏன் கேட்கவில்லை? இலங்கையை தொடர்ந்து இந்தியா ஆதரிக்கிறது…இலங்கை வேண்டுமா? அல்லது இந்தியாவின் தென்பகுதியில் வாழும் மக்கள் வேண்டுமா? யாருடன் நட்புறவு வேண்டும் என்று மத்திய அரசுதான் தீர்மானிக்க வேண்டும்.
 
இலங்கை வெளிநாடு என்கிறீர்களே..அப்புறம் எப்படி அமைதிப் படையை அங்கு அனுப்பினீர்கள்? அப்புறம் எப்படி எங்களது தமிழ் மக்களை அழிக்க உதவினீர்கள்? இலங்கையில் நடப்பது ஜனநாயக ஆட்சியே இல்லை. பிரபாகரனின் மகன் சிறுவன் பாலச்சந்திரனின் நெஞ்சில் 5 குண்டுகள் பாய்ந்திருக்கிறது. அதுவும் சுடப்படுவதற்கு 10 நிமிடத்துக்கு முன்பாக உணவு கொடுத்துவிட்டுக் கொன்றிருக்கிறார்கள். இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை அவசியம். இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியா தீர்மானம் கொண்டுவர வேண்டும். அல்லது அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும். இலங்கை அதிபர் ராஜபக்சேவை இனியும் இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்றார் அவர்.  திருச்சி சிவா தாம் பேசும் போது, பாலச்சந்திரன் புகைப்படங்களையும் ராஜ்யசபாவில் எடுத்துக் காண்பித்தார்.

Edited by ஊர்பூராயம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அ தி மு க வும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கிறது. இந்த ஒற்றுமையை நம்மவர்களும் உலகத்தமிழினமும் பாவித்து.. எமது தமிழினப் பொதுத் துயரில் இருந்தும் நாம் விடுபட கூட்டிணைந்து செயற்பட்டு சர்வதேச ஆதரவோடு எமக்குரிய தீர்வை பெற்றுக் கொள்ள முனைய வேண்டும்..! இனப்படுகொலையாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும்..!

 

=======================================================

 

ஈழ பிரச்சனைக்கு விடுதலைப் புலிகள் காரணமே அல்ல: ராஜ்யசபாவில் மைத்ரேயன் பேச்சு

டெல்லி: இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் காரணமே அல்ல...இலங்கை அரசின் திட்டமிட்ட கலாச்சார, இனப் படுகொலைதான் அடிப்படையான காரணம் என்று ராஜ்யசபாவில் நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் அதிமுகவின் எம்.பி. மைத்ரேயன் கூறினார். ராஜ்யசபாவில் மைத்ரேயன் பேசுகையில், கடந்த ஆண்டு ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இலங்கையில் இதுவரை எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. வெளியுறவுத்துறை அமைச்சர் தாக்கல் செய்திருக்கும் அறிக்கையானது கடந்த ஆண்டு எஸ்.எம். கிருஷ்ணா என்ன சொன்னாரோ அதைத்தான் சொல்கிறது. சில புள்ளி விவரங்கள் அப்டேட் செய்யப்பட்டிருக்கிறது. ஈழத் தமிழர்கள் கண்ணியத்துடன், சம உரிமையுடன், சுயமரியாதையுடன் வாழவேண்டும் என்பது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் நிலைப்பாடு. ஆனால் இலங்கைத் தமிழர் பிரச்சனையின் அடிப்படையை அதன் மூலம் என்ன என்பதை இந்த அரசு புரிந்து கொள்ளவில்லை.

இலங்கை பிரச்சனைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் காரணம் அல்ல..அநத நாடு சுதந்திரமடைந்த காலம் முதல் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கலாச்சார இனப்படுகொலைதான் காரணமாகும். அனைத்து அமைதிவழிப் போராட்டங்களை இலங்கை அரசுகள் ஒடுக்கியதாலேயே ஆயுதப் போராட்டம் உருவானது. அதுவே அரசியல் வன்முறைகளுக்கும் காரணமாக அமைந்தது என்பதை இந்த அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கை இறுதிப் போரின் போது மட்டும் 40 ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இன்னமும் பாலியல் வன்முறைகள் தொடர்கின்றன. காணாமல் போதலும் இனப்படுகொலையும் அங்கு நீடிக்கிறது. தமிழக சட்டசபையில் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் கொண்டுவரப்பட்ட முதல் தீர்மானமே, இலங்கையின் போர்க் குற்றங்களை ஐநாவுக்கு கொண்டு சென்று போர்க் குற்றவாளிகளாக பிரகடனம் செய்ய வேண்டும் என்பதும் இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பதுதான்.

இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. தர்போது அபிவிருத்தி பெயரில் அமைதியாக கலாச்சார இனப்படுகொலை செய்து கொண்டிருக்கிறது இலங்கை அரசு. தமிழரின் வாழ்விடங்களில் மக்கள் தொகை எண்ணிக்கையை மாற்றுவதற்காக சிங்களக் குடியேற்றத்தை ஏற்படுத்துகிறது. இன்று வெளியாகி இருக்கக் கூடிய மனித உரிமைகள் கண்கானிப்பகத்தின் அறிக்கை, தமிழ்ப் பெண்களின் பாலியல் வன்கொடுமைகளை சொல்லியிருக்கிறது. ஹைட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சி தமிழ்ப் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை தொடர்பான காட்சிகளை வெளிப்படுத்தியது.

இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சியின் நோ பயர் சோன், பாலச்சந்திரன் படுகொலை ஆகியவை போர்க்குற்ற ஆதாரங்களாகும். இலங்கை ஒருநாட்பு அல்ல.. அது ஒரு எதிரிநாடு. நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம், அமைச்சரால் வழிநடத்தப்படவில்லை. கொள்கை வகுப்பாளர்களால் நடத்தப்படுகிறது. நாட்டின் வெளியுறவுக் கொள்கை என்பது இலங்கைத் தமிழர் நலன் சார்ந்த வெளியுறவுக் கொள்கையாக இருக்க வேண்டியது அவசியம் என்றார் அவர்.,

Read more at: http://tamil.oneindia.in/news/2013/02/27/india-sri-lankan-tamils-proplem-not-from-ltte-170530.html

இலங்கையை நட்புநாடாக கருதிக்கொண்டே இருக்க விரும்பினால்.....

 

- தமிழகத்தை இந்தியா இழக்கும் என்ற நிலையை ஏற்படுத்தல் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வெட்டொன்று துண்டிரண்டு. நேரடியாக சொல்ல வேண்டியது தானே தமிழர்களுடன் தான் இந்திய மத்திய அரசு நிற்கிறது அல்லது இல்லை என்று.ஒரு வல்லரசுக்கு இதனை சொல்ல  ஒரு திராணி இல்லையா??

  • கருத்துக்கள உறவுகள்

சற்று முன் புதியதலைமுறை தொலைக்காட்சியில் பேட்டியளித்த தி.மு.கவை சேர்ந்த செல்வகண்பதி (இவர் மக்களவை உறுப்பினர்), இலங்கை வாழ் தமிழர்களுக்கு 13வது திருத்தச் சட்டப்படியே வாழ தி.மு.க  (கொள்கை) ஒத்துழைக்கும் என் உறுதி கூறினார். அதாவது காங்கிரஸ் கட்சிக்கு வக்காலத்து வாங்கி ஒத்தூதினார். ஒரே கட்சியை சார்ந்தவர்களிடையே( திருச்சி சிவா & செல்வ கணபதி) தங்கள் கட்சியின் முடிவான கொள்கையை மக்களுக்கு எடுத்துரைக்கையில் என்னே பாரிய வேறுபாடு?

இதில் யாரை நம்புவது?

 

திருச்சி சிவாவின் உணர்ச்சிமிகு உரை சொல்லும் செய்திக்கும், செல்வ கணபதியின் கமுக்கமான வேறுபட்ட கொள்கை விளக்கத்தையும் பார்க்கையில் தி.மு.க இன்னமும் தமிழர் தலையில் மிளகாய் அரைக்கும் யுக்தியை விடவில்லை என்றே தோன்றுகிறது.

சற்று முன் புதியதலைமுறை தொலைக்காட்சியில் பேட்டியளித்த தி.மு.கவை சேர்ந்த செல்வகண்பதி (இவர் மக்களவை உறுப்பினர்), இலங்கை வாழ் தமிழர்களுக்கு 13வது திருத்தச் சட்டப்படியே வாழ தி.மு.க  (கொள்கை) ஒத்துழைக்கும் என் உறுதி கூறினார். அதாவது காங்கிரஸ் கட்சிக்கு வக்காலத்து வாங்கி ஒத்தூதினார்.

 

பேட்டியில் 13 ஆவது திருத்தச் சட்டம் என்றால் என்ன அதில் என்னென்ன இருக்கு என்னென்ன இல்லை என்று கேட்கவில்லையா? அப்படிக் கேட்டு இருந்தால் 'ஙே' என்று முழிச்சு இருப்பார் என்று நினைக்கின்றேன்.

Manushya Puthiran
மானங்கெட்டதனம் என்றால் என்ன என்று எனக்கு ரொம்ப நாள் புரியாமல் இருந்தது. இலங்கை பிரச்சினையில் தமிழக காங்கிரசார் செய்து வரும் சமாளிப்புகளைப் பார்த்த பிறகு அது என்னவென்று எனக்கு புரிந்துவிட்டது.

 

 

  எத்தனை முறை ஏமாறுவோம்....

ஏற்கனவே அமெரிக்க கொண்டுவந்த வெற்றுதீர்மானங்களால் ஈழ மக்களுக்கு ஒரு நன்மையும் ஏற்படவில்லை....
திருடன் கையில் சாவியை போல் குற்றம் புரிந்தவனையே குற்றத்தை விசாரிக்க சொல்லும் அயோக்கியதனங்கள்தான் அங்கே அரங்கேரியது...
அதற்கே ஏதோ சாதனை செய்ததை போல் இந்தியா அந்த தீர்மானத்தை ஆதரித்தது...
நான் அடிப்பது போல் அடிக்கிறேன் நீ அழுவது போல் அழு... என்று இனி அமெரிக்காவும், இந்தியாவும் வேசம் போடும்..
வழக்கம் போல் புள்ளரிப்பில் நாம்...
ஆகா ஆகா ஈழம் கிடைச்சுறும்...
இனப்படுகொலைக்கு நியாம் கிடைச்சுரும்....

 

Kalyanasundaram Sanmugam

இலங்கையை இந்தியாவிற்கு எதிரி நாடாக கருத முடியாது..... - சல்மான் குர்ஷித். 

/////பாகிஸ்தானை தமிழரின் எதிரி நாடக கருத முடியாது... எடுங்கடா அந்த பச்சை கொடிய....//////

 

இன்றைய மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் எவரெல்லாம் இலங்கையில் நடைபெற்றது GENOCIDE என்றும், வெறும் அமெரிக்க தீர்மானம் மட்டும் இல்லாமல் இலங்கையின் மீது சர்வதேச விசாரணை முன்னெடுக்க வேண்டும் என்றும் கூறினார்களோ அவர்கள் மட்டுமே ஈழத்திற்காக நேர்மையாக குரல் கொடுத்தவர்கள்.

 

நவீன் மதனகோபால் ஆனா! ஒன்னு மட்டும் புரியுது கடைசி வரைக்கும் ஈழத்துல என்ன நடந்துச்சுன்னு எங்களுக்கு தெரியாதுன்னு சலிக்காம திரும்ப திரும்ப சொல்ல நம்ம வெளியுறவு அமைச்சர்களால் மட்டுமே முடியும்!

நேத்து ஆஸ்கர்ல இவங்க பேர எப்படி விட்டாங்க?

 

கைகழுவப்பட்ட 
கடைசி தமிழனின் குரலாய்
டி.ராஜாவின் குரல் ஒலித்தது!

நன்றி...

 

FB நெருங்கிய நண்பர்கள்..

உந்த திருச்சி சிவா 2009 ஆண்டுகளில் எங்கு இருந்தவர் .

தி மு க வில் தான் ஈழ போராட்ட ஆதரவாளர்கள் கூடுதலாக இருபதாக சொல்லுகின்றார்கள் இருந்தும் தலைமையின் முடிவை எதிர்க்க திராணியற்றவர்களாக இருக்கின்றார்கள் .பிழையான ஒரு அமைப்பில் இருப்பதும் பிழைதான் .இதுதான் தமிழனின் தலைவிதி .

இப்படியே 2009இல் நடந்த திமுகவின் கட்டுப்படுத்தபட்ட செயற்பாடுகளைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருப்பதில் பயன் ஒன்றும் இல்லை. இன்றைய நிலைமைக்கு இவர்கள் எப்படி உதவுவார்கள் என்றுதான் பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

mythreyan-2722013-150.jpg

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் காரணமே அல்ல.இலங்கை அரசின் திட்டமிட்ட கலாச்சார, இனப் படுகொலைதான் அடிப்படையான காரணம் என்று ராஜ்யசபாவில் நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் அதிமுகவின் எம்.பி. மைத்ரேயன் கூறினார். ராஜ்யசபாவில் மைத்ரேயன் பேசுகையில்-

  

கடந்த ஆண்டு ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் நடைபெற்றது. அப்போது இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இலங்கையில் இதுவரை எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. வெளியுறவுத்துறை அமைச்சர் தாக்கல் செய்திருக்கும் அறிக்கையானது கடந்த ஆண்டு எஸ்.எம். கிருஷ்ணா என்ன சொன்னாரோ அதைத்தான் சொல்கிறது. சில புள்ளி விவரங்கள் அப்டேட் செய்யப்பட்டிருக்கிறது. ஈழத் தமிழர்கள் கண்ணியத்துடன், சம உரிமையுடன், சுயமரியாதையுடன் வாழவேண்டும் என்பது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் நிலைப்பாடு. ஆனால் இலங்கைத் தமிழர் பிரச்சனையின் அடிப்படையை அதன் மூலம் என்ன என்பதை இந்த அரசு புரிந்து கொள்ளவில்லை.

 

இலங்கை பிரச்சனைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் காரணம் அல்ல..அநத நாடு சுதந்திரமடைந்த காலம் முதல் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கலாச்சார இனப்படுகொலைதான் காரணமாகும். அனைத்து அமைதிவழிப் போராட்டங்களை இலங்கை அரசுகள் ஒடுக்கியதாலேயே ஆயுதப் போராட்டம் உருவானது. அதுவே அரசியல் வன்முறைகளுக்கும் காரணமாக அமைந்தது என்பதை இந்த அரசு புரிந்து கொள்ள வேண்டும். இலங்கை இறுதிப் போரின் போது மட்டும் 40 ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இன்னமும் பாலியல் வன்முறைகள் தொடர்கின்றன. காணாமல் போதலும் இனப்படுகொலையும் அங்கு நீடிக்கிறது.

 

தமிழக சட்டசபையில் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் கொண்டுவரப்பட்ட முதல் தீர்மானமே, இலங்கையின் போர்க் குற்றங்களை ஐநாவுக்கு கொண்டு சென்று போர்க் குற்றவாளிகளாக பிரகடனம் செய்ய வேண்டும் என்பதும் இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பதுதான். இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. தர்போது அபிவிருத்தி பெயரில் அமைதியாக கலாச்சார இனப்படுகொலை செய்து கொண்டிருக்கிறது இலங்கை அரசு. தமிழரின் வாழ்விடங்களில் மக்கள் தொகை எண்ணிக்கையை மாற்றுவதற்காக சிங்களக் குடியேற்றத்தை ஏற்படுத்துகிறது.

 

இன்று வெளியாகி இருக்கக் கூடிய மனித உரிமைகள் கண்கானிப்பகத்தின் அறிக்கை, தமிழ்ப் பெண்களின் பாலியல் வன்கொடுமைகளை சொல்லியிருக்கிறது. ஹைட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சி தமிழ்ப் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை தொடர்பான காட்சிகளை வெளிப்படுத்தியது. இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சியின் நோ பயர் சோன், பாலச்சந்திரன் படுகொலை ஆகியவை போர்க்குற்ற ஆதாரங்களாகும். இலங்கை ஒருநாட்பு அல்ல. அது ஒரு எதிரிநாடு. நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம், அமைச்சரால் வழிநடத்தப்படவில்லை. கொள்கை வகுப்பாளர்களால் நடத்தப்படுகிறது. நாட்டின் வெளியுறவுக் கொள்கை என்பது இலங்கைத் தமிழர் நலன் சார்ந்த வெளியுறவுக் கொள்கையாக இருக்க வேண்டியது அவசியம் என்றார் அவர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=76950&category=IndianNews&language=tamil

Edited by தமிழரசு

இம்மக்களவை நிகழ்ச்சிகளுடே புதியதலைமுறையில் நடந்த சூடான விவாதத்தில் பங்கேற்று பேசிய இயக்குனர் கௌதம் ஒன்றைசொன்னார் " இவ்வளவு ஆதாரங்கள் வெளிவந்தும் இன்னும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கையை எங்களால் எதிரியாக பார்க்கமுடியாது என்கிறார். இவர் இதேநிலையில் தொடர்ந்து நீடிப்பாரேயானால்  விரைவில் இந்திய வரைபடத்திலிருந்து தமிழ்நாட்டை இழக்க வேண்டிய நிலைவரும் என்றார் " 

இம்மக்களவை நிகழ்ச்சிகளுடே புதியதலைமுறையில் நடந்த சூடான விவாதத்தில் பங்கேற்று பேசிய இயக்குனர் கௌதம் ஒன்றைசொன்னார் " இவ்வளவு ஆதாரங்கள் வெளிவந்தும் இன்னும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கையை எங்களால் எதிரியாக பார்க்கமுடியாது என்கிறார். இவர் இதேநிலையில் தொடர்ந்து நீடிப்பாரேயானால்  விரைவில் இந்திய வரைபடத்திலிருந்து தமிழ்நாட்டை இழக்க வேண்டிய நிலைவரும் என்றார்

 

அது நடக்கும் சாத்தியத்தை மத்திய அரசு உருவாக்கி வருகின்றது .

27sircartoon_6.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே 2009இல் நடந்த திமுகவின் கட்டுப்படுத்தபட்ட செயற்பாடுகளைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருப்பதில் பயன் ஒன்றும் இல்லை. இன்றைய நிலைமைக்கு இவர்கள் எப்படி உதவுவார்கள் என்றுதான் பார்க்க வேண்டும்.

 

ஆபத்தில் உதவாதாவர்கள் இன்று உதவுவார்கள் என எதிர்பார்ப்பது எமது மடமை.

27sircartoon_6.jpg

கருணாநிதி குடும்பம் ஆட்சியில் இருந்ததால் தமிழ் நாட்டை மத்தியிடம் பிச்சை எடுக்க வைத்துவிட்டது. அது மாறி தமிழ் நாடு குஜராத் மாதிரி தன்னைத்தான் கட்டி எழுப்பி  மத்தியை பிச்சை எடுக்க வரப் பண்ண வேண்டும்.

 

தலைவர் அமைத்தது மாதிரி  ஒரு அரசு தமிழ் நாட்டில் வந்தால் சட்டம், கல்வி, பொருளாதரம் சீர்ப்படும்.

இம்மக்களவை நிகழ்ச்சிகளுடே புதியதலைமுறையில் நடந்த சூடான விவாதத்தில் பங்கேற்று பேசிய இயக்குனர் கௌதம் ஒன்றைசொன்னார் " இவ்வளவு ஆதாரங்கள் வெளிவந்தும் இன்னும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கையை எங்களால் எதிரியாக பார்க்கமுடியாது என்கிறார். இவர் இதேநிலையில் தொடர்ந்து நீடிப்பாரேயானால்  விரைவில் இந்திய வரைபடத்திலிருந்து தமிழ்நாட்டை இழக்க வேண்டிய நிலைவரும் என்றார் " 

 இந்திய இறைமைக்கு ஏதிராக பேசினார் என தூக்கப்போகின்றான்கள் 

 

இந்தியா உடையனும் அப்பதான் நமக்கு வழிபிறக்கும்

நம்முடைய கலாச்சாரம், மொழி, பண்பாடு... உலகிற்கு தெரிய வரவேண்டுமாயின் தமிழ்நாடு கிந்தி என்ற சாடியின் மூடியை திறந்து வெளியே வரவேண்டும். வெள்ளைகள் யாரையாவது கேட்டுப்பாருங்கள் தமிழ் என்று ஒரு மொழி இந்தியாவில் இருப்பதை தெரியுமா என்று?

இங்கிலாந்து, கனடாவில் தமிழர், இந்தியர் என்று இரண்டு வேறு வேறு அடையாளம் ஏற்கனவே ஏற்பட்டுவிட்டது. அவர்களிடம் தமிழர் என்றால் அது ஈழத்து தமிழரே. தமிழ் நாடு இந்த குகையை விட்டு வெளியில் வர துணிச்சல் கொள்ள வேண்டும்.

தி.மு க எமக்கு உதவுவதாக இருந்தால் முதலில் அந்த கூட்டணியில் இருந்து வெளியே வரவேண்டும் .

83 இல் இருந்து கருணாநிதி எமது போராட்டத்தில் முக்கிய காலகட்டங்களில் தமிழ் நாட்டில் யாரும் எழுச்சியுடன் செயற்பட முன்வரும் போது, தான் அதைவிட கூடுதலாக செய்யப்போவதை போல் தொடங்கி  அவர்கள் போராட்டத்தையும் மழுங்கடித்து பின் தனது போராட்டத்தையும் கை விட்டுவிடுவார் .இப்படி அவர் நடக்க கூடியதாக இருப்பதற்கு அவரின் பேச்சாற்றலும்,நடிப்பும் ஊடக பலமும் ,பணமும்,மக்களின் அறியாமையும் (இங்கும் சிலர்) காரணமாகின்றது .

எமக்கு எதையாவது அவர்கள் செய்ய நினைத்தால் முதல்அடி கொங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறுவதுதான் அதுவரை எவரையும் நம்பமுடியாது .

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரசே இவர்களை கை கழுவி விட்டு விடுவார்கள்.இருவராலும் ஒருவருக்கும் (கட்சிக்கும்) பிரயோசனம் இல்லாத போது கூட்டெதற்கு??

உண்மையான நிலை: தேர்தலில் தமிழ்நாட்டில் கருணாநிதியை காங்கிரஸ் இழுத்து விழுத்த போகிறது. வெளியே பலருக்கு காங்கிரஸ் தி.மு.கா வுடன் கூட்டு வைத்திருந்த்தால் ஸ்பெகரம் வழக்கை தி.மு.காவிற்காக காங்கிரஸ் சடைந்தாக கோபம். இதானால் வடக்கில் காங்கிரஸ்  தி.மு.காவினால் இழுத்து விழுத்தப்படுகிறது. அருமையான மசாலாக்கூட்டு. குழம்பு வைக்கத்தான் நல்லது.

 இந்திய இறைமைக்கு ஏதிராக பேசினார் என தூக்கப்போகின்றான்கள் 

 

இந்தியா உடையனும் அப்பதான் நமக்கு வழிபிறக்கும்

 

இம்மாதிரியான கருத்துக்களை பேச ஆரம்பித்தாலே இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுகிறார்கள் என்ற கைது தண்டனை போன்ற நாட்களைக் கடந்து, இன்று தொலைகாட்சிகளில் இவ்வாறாக பேசுவதை தொலைகாட்சிகள் அனுமதிப்பதை ஒரு மாற்றமாகவே பார்க்கவேண்டியிருக்கு. சீமானை அதிகமாக இம்மாதிரியான நிகழ்வுகளில் அதிகம் அழைக்கப்படாமல் இருப்பதற்கு இதும் ஒரு காரணமோ ? சீமான் மற்றும் வைகோ போன்றோர்களையும் இந்நிகழ்ச்சிகளில் அழைத்தால் நலம்.

  • கருத்துக்கள உறவுகள்

 இந்திய இறைமைக்கு ஏதிராக பேசினார் என தூக்கப்போகின்றான்கள் 

 

இந்தியா உடையனும் அப்பதான் நமக்கு வழிபிறக்கும்

 

அது ஒரு நாடு அதுக்கு ஒரு இறையான்மை  :o 

சொனியாட்டை போய் யாராவது கேலுங்கோ இறையான்மை என்றால் என்ன என்று...அது அவாக்கு கூட தெரியாது என்ன என்று :unsure: ...அப்படி தெரிந்து இருந்தால் இந்தியா இண்டைக்கு இப்படி இருந்து இருக்காது...டெல்லி பாராளமன்றத்தில் இருக்கும் சிங்களத்தின் கை கூலியல் தான் தமிழ் நாட்டு தமிழனை மிரட்ட ஒரு பூச்சாண்டி விளையாட்டு காட்டுவினம் அவன் அப்படி கதைத்து விட்டான் இப்படி கதைத்து விட்டான் என்று....... (((வெளிப்படையா சொல்லப் போனால் இந்தியா என்ர நாடு பழிக்குப் பழி வாங்கும் நாடு அந்த நாட்டில் இறையான்மை என்ர ஒன்று இல்லவே இல்லை ))

அந்த நாட்டில் இறையான்மை இருந்து இருக்கலாம் அது காந்தி நேரு வாழ்ந்த காலத்தில்...எப்ப இத்தாலி எ.மை ஆட்சிக்கு வந்திச்சோ அன்றில் இருந்து இந்தியா தலை கீழா போச்சு....  :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.