Jump to content

கோகிலா தண்டு, கறி வைக்கும் முறை தெரியுமா?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

cooking.gif

இலங்கையில் இருக்கும் போது, இதனை வீட்டில் சமைப்போம்... நல்ல சுவையானதாக இருக்கும். இது சிங்கள நாட்டில், விளைவதாக நினைக்கின்றேன். நேற்று... இங்கிலாந்தில் ஒரு தமிழ் கடையில்... கண்டபோது, ஆசையில் வாங்கி விட்டேன். அதனை... எப்படி சமைப்பது என்று, யாருக்காவது தெரிந்தால்... கூறுங்களேன். :)

Link to comment
Share on other sites

கோகிலா - இன்றுதான் கேள்விப்படுகின்றேன்,

கோகிலாவின் வாழைமரத்.... மட்டும் பார்த்திருக்கின்றேன், சமைக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது, தமிழ் கோகிலா இல்லை, சிங்கள கோகிலா வந்தி..... :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதிலை யார் வடிவு..தமிழ்சிறி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

cooking.gif

இலங்கையில் இருக்கும் போது, இதனை வீட்டில் சமைப்போம்... நல்ல சுவையானதாக இருக்கும். இது சிங்கள நாட்டில், விளைவதாக நினைக்கின்றேன். நேற்று... இங்கிலாந்தில் ஒரு தமிழ் கடையில்... கண்டபோது, ஆசையில் வாங்கி விட்டேன். அதனை... எப்படி சமைப்பது என்று, யாருக்காவது தெரிந்தால்... கூறுங்களேன். :)

jvi_0008s_0006_lotusroot.jpg

இதை தாமரை கிழங்கு எண்டு சொல்லுவம் . சின்ன வட்டமாய் வெட்டுங்கோ . பிறகு அதை பொரிச்சு எடுங்கோ . பிறகு பொரிச்ச குழம்பு எப்பிடி வைப்பியளோ அப்பிடி வையுங்கோ . ஆனால் இதை கழுவுறது கவனமாய் செய்யுங்கோ . அதிலை இருக்கிற ஓட்டையளிலை சேறு இருக்கும் . முதல் பெரிய துண்டாய் வெட்டி தண்ணியிலை போட்டு ஏதாவது குச்சியாலை உள்ள ஒட்டையளுக்கை விட்டு கிளீன் செய்யுங்கோ .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

jvi_0008s_0006_lotusroot.jpg

இதை தாமரை கிழங்கு எண்டு சொல்லுவம் . சின்ன வட்டமாய் வெட்டுங்கோ . பிறகு அதை பொரிச்சு எடுங்கோ . பிறகு பொரிச்ச குழம்பு எப்பிடி வைப்பியளோ அப்பிடி வையுங்கோ . ஆனால் இதை கழுவுறது கவனமாய் செய்யுங்கோ . அதிலை இருக்கிற ஓட்டையளிலை சேறு இருக்கும் . முதல் பெரிய துண்டாய் வெட்டி தண்ணியிலை போட்டு ஏதாவது குச்சியாலை உள்ள ஒட்டையளுக்கை விட்டு கிளீன் செய்யுங்கோ .

நீங்க சொல்லிறது, தாமரைக் கிழங்கு!

அவர் கேக்கிறது 'கோகிலா' தண்டு! :icon_idea:

;கோகிலா' பிராமணப் பேர் மாதிரிக் கிடக்கு!

எனக்கென்னவோ,லண்டன் தமிழ்க் கடைக்காரர், குடிநீருக்கு அவிக்கிற என்னத்தையோ, இவருக்குத் தலையில கட்டிவிட்டாங்கள் போலக் கிடக்கு!

றுபார்ப் எண்டு ஒரு தண்டு விக்கிறவை! இது சில வருத்தங்களுக்கு நல்லது!

rhubarb.jpg

இதுக்குத் தான் 'கோகிலா' எண்டு நம்ம சனம் பேர் வைச்சிருக்கோ தெரியாது! :o

Link to comment
Share on other sites

தாமரைக் கிழங்கைத்தான்  சிங்களத்தில் '(G)கோகில' என்று கூறுவார்கள். 'காகத்திற்கு பறக்ககையும்.......' ஏதோ  நினைப்பு மாதிரி,   கடைக்காரன் 'கோகில' என்று சொன்னது 'சிறியருக்கு 'கோகிலா' என்று காதில விழுந்திருக்கும்.   :D 
 
மருத்துவ குணம் உள்ளது. வயிற்றிற்கும் மூலத்திற்கும் நல்லது.
 
மைத்திரயி  கூறியது மாதிரி பொரித்தும் குழம்பு வைக்கலாம். பொரிக்காமல் சாதாரணமாக வைத்தால் உடலுக்கு நல்லது.

மனுசன் வடிவாத் 'தண்டு' எண்டெல்லோ சொல்லியிருக்கு! :o

Link to comment
Share on other sites

மனுசன் வடிவாத் 'தண்டு' எண்டெல்லோ சொல்லியிருக்கு! :o

அதான், கடைக்காரன் சொன்னதை ஒழுங்காகக் கேட்டிருந்தால்தானே. 'கோகிலா' என்று காதில் விழுந்தவுடன் மனிசன்  கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டிருக்கும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை ஆங்கிலத்தில் lotus tuber எண்டு சொல்லுவம் . சிங்களத்திலை " கோகில " எண்டு சொல்லுறவை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதான், கடைக்காரன் சொன்னதை ஒழுங்காகக் கேட்டிருந்தால்தானே. 'கோகிலா' என்று காதில் விழுந்தவுடன் மனிசன்  கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டிருக்கும். :D

ஏனப்பா

எல்லோரும் போட்டு சாத்துறியள்

ஒரு அப்பாவியை...... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நான் நினைக்கின்றேன் 83 ம் ஆண்டில் எனது ஊரில் இருந்து மண்டலாய் பிள்ளையார் சென்றிருந்த வேளை இந்த தாமரை கிழங்கு கறி பிரட்டலாக வைத்து ஒரு கோவில் ஐய்யர் தந்திருந்தார் அப்போதுதான் முதல்முதலில் நான் சாப்பிட்டிருக்கின்றேன் அன்று எனக்கு நல்ல பசி வேற சாப்பிடும்போது அப்படி ஒரு சுவையாக இருந்தது அந்தமாதிரி ஒரு கறியை  இன்றும் என்னால் மறக்க முடியாமல் இருக்கின்றது என்னும் சொல்லப்போனால் அந்த நாளை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை அப்படி ஒரு சுவை.. :wub:   
 
அதன்பின்னர் பல தடவை சாப்பிட்டாலும் அந்தளவுக்கு சுவையாக யாரும் சமைத்து சாப்பிட்டதே இல்லை  :unsure:  
 
என்னதான் வெளிநாட்டில் இருந்தாலும் நம்ம ஊரில் இருந்து அனுபவித்த சந்தோசத்தை இங்கு இன்றுவரை நினைக்கத்தான் முடிகின்றது :(    
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை ஆக்கள் எதைத்தான் ஒழுங்காச் சொல்லுறவை. அதன் பெயர் மருவி இப்ப கோகிலாவா வந்திருக்கும். அதுக்கு ஏன் சிறியைக்  குறை சொல்லுறியள். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாமரைக்கிழங்கு நல்ல உணவு, இங்கு சீனா கடைகளில் கிடைக்கும்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=19407

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

DSC03322.JPG

சிறியண்ணா அது தாமைரைக் கிழங்கு அல்ல. கொஹில தண்டு.

இதோ உங்களுக்காக சில செய்முறை இணைப்புக்கள் சில:

http://www.nihariscookbook.com/2010/09/kohila-stems-curried.html

http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&view=article&id=7572:-kohila-stems&catid=28:-&Itemid=187

Link to comment
Share on other sites

தமிழ் சிறி தாமரை தண்டை வங்கி வந்துவிட்டு கோகிலா என்றாரா அல்லது உண்மையான கோகிலா வை வாங்கி வந்தாரா?

kohila , தாமரை இரண்டும் வேறு வேறானவை.

kohila

Lasia spinosa (local name - kohila) is a stout, marshy plant
with a creeping spiny rhizome. The tender leaves and rhizomes are used
as a vegetable and are recommended for a variety of diseases in
Ayurvedic medicine. The present study was carried out to determine the
total antioxidant activity of Lasia spinosa

http://www.sljol.info/index.php/VJS/article/view/1530

கோகிலா கறி சிங்களவர்களது செய்முறை:

1. http://www.inside.lk/food/recipe/kohila-curry/

2. http://www.nihariscookbook.com/2010/09/kohila-stems-curried.html

தாமரைக்கு சிங்கள பெயர்:  நெலும் ,

தாமரை கிழங்குக்கு  பெயர்: நெலும் அல 

சிங்கள தாமரை கிழங்கு கறி : http://www.infolanka.com/recipes/mess3/97.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாமரைக் கிழங்கைத்தான்  சிங்களத்தில் '(G)கோகில' என்று கூறுவார்கள். 'காகத்திற்கு பறக்ககையும்.......' ஏதோ  நினைப்பு மாதிரி,   கடைக்காரன் 'கோகில' என்று சொன்னது 'சிறியருக்கு 'கோகிலா' என்று காதில விழுந்திருக்கும்.   :D 

மருத்துவ குணம் உள்ளது. வயிற்றிற்கும் மூலத்திற்கும் நல்லது.

மைத்திரயி  கூறியது மாதிரி பொரித்தும் குழம்பு வைக்கலாம். பொரிக்காமல் சாதாரணமாக வைத்தால் உடலுக்கு நல்லது.

ஒரு அரவு செய்த வேலை...எவ்வளவு கரவுக்கு இடம் வச்சிட்டு..தலை தடக்கி விழுந்தாலும் தாவணியில..சா..இல்ல..தாமரையில தடக்கி விழுந்திட்டு :D ..அதுக்காக எடக்கு முடக்காய் எழுதி எங்கள் தலைவரின் காலை வாருவதை விடுத்து அடக்கி வாசிக்கும்படி அகில உலக ஜெனிலியா ரசிகர்கள் அன்புக்கட்டளை இடுகிறோம் :D ..சங்கத்து ஆளை தொட்டா...சரித்திரம் மாறிடும்..இல்லா மாத்திடுவம்... :wub: 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி தாமரை தண்டை வங்கி வந்துவிட்டு கோகிலா என்றாரா அல்லது உண்மையான கோகிலா வை வாங்கி வந்தாரா?

அது நடந்திருந்தா....இது நடந்திருக்காது யாழில்..ஆள் இங்கு எழுதும் நிலையில் இருந்திருக்க முடியாது..வீட்டில் உருட்டுக்கடையால் அடிவாங்கி கைகால் வீங்கி எழுத வாசிக்க முடியாமல் படுக்கையில் இருந்திருப்பார்.. :lol: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG0375.jpg

அதுசரி சிறித்தம்பி கோகிலா என்னத்துக்கு நல்லதாம்? :(  :rolleyes:

Link to comment
Share on other sites

உதை திண்டால் கண்டவரின் இடுப்பையும்  கிள்ள சொல்லுமாம் .

மீண்டும் கோகிலாவில் கமல் உது சாப்பிட்டு விட்டுத்தான் நடித்தாராம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது நடந்திருந்தா....இது நடந்திருக்காது யாழில்..ஆள் இங்கு எழுதும் நிலையில் இருந்திருக்க முடியாது..வீட்டில் உருட்டுக்கடையால் அடிவாங்கி கைகால் வீங்கி எழுத வாசிக்க முடியாமல் படுக்கையில் இருந்திருப்பார்.. :lol: 

இந்தப் பெடியன் இப்ப தலையில கல்லைத் தூக்கிப் போடுது! :o

கறியோட வாறன் எண்ட மனுசனை, இன்னும் காணேல்லை எண்டு நானே குழம்பிப் போயிருக்கேக்கை, இது தேவையா? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதிலை யார் வடிவு..தமிழ்சிறி..

நோனா தான் வடிவு, அல்வாயன். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

jvi_0008s_0006_lotusroot.jpg

இதை தாமரை கிழங்கு எண்டு சொல்லுவம் . சின்ன வட்டமாய் வெட்டுங்கோ . பிறகு அதை பொரிச்சு எடுங்கோ . பிறகு பொரிச்ச குழம்பு எப்பிடி வைப்பியளோ அப்பிடி வையுங்கோ . ஆனால் இதை கழுவுறது கவனமாய் செய்யுங்கோ . அதிலை இருக்கிற ஓட்டையளிலை சேறு இருக்கும் . முதல் பெரிய துண்டாய் வெட்டி தண்ணியிலை போட்டு ஏதாவது குச்சியாலை உள்ள ஒட்டையளுக்கை விட்டு கிளீன் செய்யுங்கோ .

நான் வாங்கி வ‌ந்தது, இது இல்லை மைத்ரேயி.

இது ஆற்ற‌ம் க‌ரைக‌ளில்... ச‌துப்பு நில‌த்தில் வ‌ள‌ர்வ‌தாக‌ கேள்விப்ப‌ட்டுள்ளேன், ச‌ரியாக‌த் தெரிய‌வில்லை.

கடைக‌ளில் விற்கும் போது அத‌ன் தோலை சீவியுள்ள‌ நிலையில் தான்.... விற்பார்க‌ள்.

தாளை மரம் போல் இருக்கும் என, நான் நினைக்கின்றேன். த‌ண்டில்... முள்ளு இருப்ப‌தால்... தோலைச் சீவி விற்கிறார்க‌ளோ தெரிய‌வில்லை.

நீங்க சொல்லிறது, தாமரைக் கிழங்கு!

அவர் கேக்கிறது 'கோகிலா' தண்டு! :icon_idea:

;கோகிலா' பிராமணப் பேர் மாதிரிக் கிடக்கு!

எனக்கென்னவோ,லண்டன் தமிழ்க் கடைக்காரர், குடிநீருக்கு அவிக்கிற என்னத்தையோ, இவருக்குத் தலையில கட்டிவிட்டாங்கள் போலக் கிடக்கு!

றுபார்ப் எண்டு ஒரு தண்டு விக்கிறவை! இது சில வருத்தங்களுக்கு நல்லது!

rhubarb.jpg

இதுக்குத் தான் 'கோகிலா' எண்டு நம்ம சனம் பேர் வைச்சிருக்கோ தெரியாது! :o

றூபர்ப் தண்டும் இல்லை புங்கையூரான்.

றூபர்ப் மிதமான‌ குளிர் பிரதேசத்தில் தான்.... விளையும் என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாமரைக் கிழங்கைத்தான்  சிங்களத்தில் '(G)கோகில' என்று கூறுவார்கள். 'காகத்திற்கு பறக்ககையும்.......' ஏதோ  நினைப்பு மாதிரி,   கடைக்காரன் 'கோகில' என்று சொன்னது 'சிறியருக்கு 'கோகிலா' என்று காதில விழுந்திருக்கும்.   :D 

மருத்துவ குணம் உள்ளது. வயிற்றிற்கும் மூலத்திற்கும் நல்லது.

மைத்திரயி  கூறியது மாதிரி பொரித்தும் குழம்பு வைக்கலாம். பொரிக்காமல் சாதாரணமாக வைத்தால் உடலுக்கு நல்லது.

:D

நாங்கள் இதை... ஊரில் அடிக்கடி சமைத்துள்ளோம், தப்பிலி.

கோகிலா தண்டு என்று தான் சொல்லி கடையில் வாங்குவோம். கன காலத்தின் பின், லண்டன் கடையில் கண்டதால், வாங்கிவிட்டேன். கடைக்காரரிடம் இதன் பெயரைக் கேட்டிருக்கலாமே... என்று, இப்ப தான் யோசிக்கின்றேன்.

ஏனப்பா

எல்லோரும் போட்டு சாத்துறியள்

ஒரு அப்பாவியை...... :D

எல்லாரும்... ரவுண்டு கட்டி அடிக்கிறாங்க விசுகு. :D 

ஒருவரும்... இதனை ஊரில் சாப்பிடவில்லை என நினைக்க ஆச்சரியமாக இருக்கிறது.

நான் நினைக்கின்றேன் 83 ம் ஆண்டில் எனது ஊரில் இருந்து மண்டலாய் பிள்ளையார் சென்றிருந்த வேளை இந்த தாமரை கிழங்கு கறி பிரட்டலாக வைத்து ஒரு கோவில் ஐய்யர் தந்திருந்தார் அப்போதுதான் முதல்முதலில் நான் சாப்பிட்டிருக்கின்றேன் அன்று எனக்கு நல்ல பசி வேற சாப்பிடும்போது அப்படி ஒரு சுவையாக இருந்தது அந்தமாதிரி ஒரு கறியை  இன்றும் என்னால் மறக்க முடியாமல் இருக்கின்றது என்னும் சொல்லப்போனால் அந்த நாளை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை அப்படி ஒரு சுவை.. :wub:   
 
அதன்பின்னர் பல தடவை சாப்பிட்டாலும் அந்தளவுக்கு சுவையாக யாரும் சமைத்து சாப்பிட்டதே இல்லை  :unsure:  
 
என்னதான் வெளிநாட்டில் இருந்தாலும் நம்ம ஊரில் இருந்து அனுபவித்த சந்தோசத்தை இங்கு இன்றுவரை நினைக்கத்தான் முடிகின்றது :(    

தாமரைக் கிழங்குக் கறி மிக நன்றாக இருக்கும் தமிழரசு.

அதனையும்... கடைகளில் தேடினேன் கிடைக்கவில்லை. சீனாக் கடைகளில் உள்ளது, ஆனால்... ஊரில் உள்ள கிழங்கின் சுவை இல்லை.

எங்கடை ஆக்கள் எதைத்தான் ஒழுங்காச் சொல்லுறவை. அதன் பெயர் மருவி இப்ப கோகிலாவா வந்திருக்கும். அதுக்கு ஏன் சிறியைக்  குறை சொல்லுறியள். :lol:

கோகி என்று... சொல்வதை விட, கோகிலா என்பது கவர்ச்சியான பெயராக இருக்கிறது சுமோ. :D

தாமரைக்கிழங்கு நல்ல உணவு, இங்கு சீனா கடைகளில் கிடைக்கும்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=19407

நான் குறிப்பிட்டது இதுகும் இல்லை, உடையார்.

கோகிலாதண்டின் படமெடுத்து போடலாம்... என்றால், மனைவி நேற்று அதை வெட்டி சமைத்து விட்டார். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

DSC03322.JPG

சிறியண்ணா அது தாமைரைக் கிழங்கு அல்ல. கொஹில தண்டு.

இதோ உங்களுக்காக சில செய்முறை இணைப்புக்கள் சில:

http://www.nihariscookbook.com/2010/09/kohila-stems-curried.html

http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&view=article&id=7572:-kohila-stems&catid=28:-&Itemid=187

யாழ்வாலி நீங்கள் இணைத்த படத்தில் இலை வடிவில் உள்ளது.

நான் வாங்கியது தண்டு, அது கிட்டத்தட்ட மணிக்கட்டு கையின் மொத்தம் இருக்கும்.

அத்துடன்... இளம் மண்ணிறமானது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.