Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வசந்தம் தொலைந்த வாழ்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்............

  • Replies 239
  • Views 17.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனநாளா கதை கதையாம் பகுதிக்குள் வராததால் முழுமையாகப் படிக்கவில்லை படித்து முடித்ததும் கருத்திடுகிறேன்.

 

தொடருங்கள்.. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கு நன்றி விசுகண்ணா, ஜீவா.

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதான் இதைப் பார்த்தேன் , கதையை ஆரம்பத்திலிருந்து படித்ததும்  கருத்து வைக்கின்றேன் !!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 18

வசந்தனுக்குக் கொஞ்ச நாட்களாகவே ஒரு கடை எடுத்து நடத்தினால் என்ன என்ற எண்ணம் எழுந்திருந்தது. சும்மா மற்றவனிடம் போய் கை ஏந்துவதிலும் நாமே எம்மிடம் வேலை செய்வது சுதந்திரமானது என எண்ணி வசந்திக்கும் அதைச் சொன்னான். வசந்திக்கும் அதைக் கேட்டதும் ஆசை தோன்றிவிட்டது. இங்கு தமிழர்கள் ஒருசிலர் தான் கடை நடத்துகிறார்கள். நாங்களும் நடத்தினால் நல்ல காசு வரும் என நினைத்துக்கொண்டு கணவன் கடை எடுப்பதற்கு உதவினாள். கடை என்றால் சும்மாவா?? முதலும் வேண்டும்தானே. நானும் கொஞ்சம் மாறிறன் நீயும் உனக்குத் தெரிஞ்சவையிட்டைக் கேட்டுப் பார் என்றான் வசந்தன். கணிசமான முதலை வைத்துக்கொண்டு ஒரு தொழிலைத் தொடங்கவேண்டும் என்னும் அடிப்படை அறிவுகூட இல்லாது வசந்தியும் தனக்குத் தெரிந்த சிலரிடம் விசாரித்தாள். யாரும் பணம் கொடுப்பதாக இல்லை. வேறு வழியின்றி நித்தியாவிடம் கொஞ்சம் கேட்டபோது நித்தியா தருவதற்கு ஒப்புக்கொண்டாள்.  வசந்தனும் தான் கொஞ்சம் மாறியதாகக் கூறியபோதிலும் யார் எவரிடம் என வசந்தியும் கேட்கவில்லை. கடை திறந்துவிட்டனர். கடைக்கு மேலேயே வீடும் இருந்ததால் வசந்தியும் கடையில் நிக்க வசதியானது. வசந்தனைப் பார்த்து எல்லோரும் பொஸ் என்று கூப்பிடுவது அவனுக்குப் போதையைத் தந்தது. அப்படிச் சொல்லியே பலர் அவனிடம் கடன்வாங்கினார்கள். அதைத் திரும்பக் கொடுக்காமலும் விட்டனர். அதனால் பலர் கடைக்கு வராமல் வேறு கடைக்குச் சென்றனர்.

முதல் மாதம் எல்லாம் குழப்பமாக இருந்தது. இரண்டாம் மாதம் கடை பெரிதாக லாபம் பார்க்கவில்லை என்று புரிந்தது. மூன்றாம் மாதம்தான் தான் யாரிடமோ வட்டிக்குத்தான் பணம் வாங்கினேன் என்ற விடயத்தை வசந்திக்குக் கூறினான் அவன். வட்டிக்கு வாங்கி யாராவது கடை நடத்த முடியுமோ என்று ஏங்கிப் போனாள் வசந்தி. மேற்கொண்டு கணக்குப் பார்த்ததில் கடை நட்டத்தில் ஓடுவது புரிய கடையை இழுத்து மூடிவிட்டு மீண்டும் வசந்தன் வேலைக்குப் போனான். வசந்தி நித்தியாவிடம் எடுத்துப் புலம்ப, வட்டிக்குக் காசு வாங்கிக் கடை போடுகிறீர்கள் என்றால் நான் வேண்டாம் என்றுதான் கூறியிருப்பேன். அப்படிக் கூறியிருந்தாலும் நான் எரிச்சலில் கூறுவதாகவே நீங்கள் எண்ணியிருப்பீர்கள் என்று சொல்லி நிறுத்தினாள் நித்தியா. என்ன நித்தியா நான் உங்களை அப்பிடி நினைப்பேனா? நீங்கள் என்ன புத்திமதி என்றாலும் சொல்லலாம் என்று கூறினாள்.

பிள்ளைகள் வளர்ந்து பாடசாலைக்குச் செல்லத் தொடங்கியதும் வசந்தியும் வீட்டிலிருக்காது முழுநேர வேலை செய்து கொஞ்சம் பணம் சேர்த்து நித்தியாவின் பணத்தைத் திரும்பக் கொடுத்தனர். வட்டிப்பணம் எல்லாம் அடைத்தாயிற்று. கொஞ்சம் கையில் பணம் சேரத் தொடங்கியது. வசந்தனும் தன் தம்பி தங்கையைக் கூப்பிடவேணும் என்று கூற, வசந்தியும் சம்மதித்தாள். ஒவ்வொரு மாதமும் அவர்களுக்குப் பணம் போகிறது. தம்பியார் வந்தாலாவது இவர்கள் பணம் அனுப்புவதை நிப்பாட்டலாம் என்ற எண்ணம் அவளுக்கு. இதற்குள் தமக்கை தொலைபேசி எடுத்து தம்பி அம்மா அப்பா ஆட்களையும் ஒரேயடியாகக் கூப்பிடுவம் நானும் காசு தாறன் என்றதில் வசந்தன் நான்கு போரையும் ஒன்றாகக் கூப்பிட ஒழுங்குகள் செய்தான். ரஸ்சியாவில் இங்கு வருவதற்கு வந்து அவர்கள் நின்றபோது வசந்தனின் தந்தை மாரடைப்பால் இறந்துவிட வசந்தன் மனைவி பிள்ளைகளுடன் அங்கு சென்று தந்தையின் இறுதிச் சடங்கை நடத்தும் அலுவலைப் பார்த்தான். வசந்தன் குடும்பத்துடன் சென்றதைக் கேள்விப்பட்டு தமக்கையும் கணவன் பிள்ளைகளுடன் போய் இறங்கினாள். அப்பாவின் இறுதி நிகழ்வை நல்லபடியா நடத்த வேணும் என்று தமக்கை வசந்தியிடம் கூறியதை, வசந்தி என்னிடம் இப்படிக் கூறுகிறாரே இன்னும் வடிவா நடத்திக் காட்ட வேணும் என்று, எல்லோரும் ஒருவாரம் தங்க வசதியான வீடு, சமையல் செய்ய ஆள், எல்லோருக்கும் ஒரே மாதிரி கறுப்பு ஆடைகள், காலணிகள், விலை கூடிய சவப்பெட்டி, குதிரையில் ஊர்வலம் என காசை தண்ணீராக இறைத்தனர். ஆனால் குதிரை வண்டிக்குப் பின் போனது இந்த இரு குடும்பமும் மட்டும்தான். வசந்தனோ வசந்தியே இப்படி முன்னின்று எல்லாம் செய்வாள் என எதிர்பார்க்காததால் திணறித்தான் போனான். போதாதற்கு தமக்கையும் தங்கையும் அண்ணி அண்ணி என்று எல்லாவற்றிற்கும் வசந்தியை அழைத்ததில் வசந்திக்கு போதை கண்ணை மறைத்தது. தமக்கை கொடுப்புக்குள் சிரிப்பதை இருவருமே கவனிக்காது எல்லாமே தங்கள் கடமை என எண்ணி அங்கு நின்றே எல்லோரையும் அனுப்பிவிட்டு வந்து சேர்ந்தனர்.

ஒரு வாரத்தின் பின் வங்கியிலிருந்து மேலதிகமாகப் பணம் எடுத்ததற்கான வட்டியுடன் கடிதம் வந்திருந்தது. அதைப் பார்த்ததும் தான் போதை தெளிந்தது இருவருக்கும். வசந்தன் தமக்கையிடம் நீங்கள் அம்மா அப்பாவைக் கூப்பிடத் தாறன் எண்டு சொன்ன காசைத் தாங்கோ அக்கா. வங்கிக்குப் பணம் கட்டவேண்டும் என்று கேட்க, இரண்டுபேரையும் எங்க கூப்பிட்டனி. அம்மா மட்டும்தானே வந்தவ. அப்பாவின்ர செத்தவீட்டுக்கு நாங்கள் வந்த சிலவே எனக்குக் கடன். உன்ர கடமைதானே பெத்தவையைக் கூப்பிடுறது என்று கூசாமல் சொல்லிவிட்டுப் போனை வைத்துவிட்டாள் தமக்கை. வசந்தன் வேறு ஒன்றும் செய்ய முடியாது அழுவார் போல் மீண்டும் வசந்தியிடம் வந்து நின்றான். வசந்தி ஒன்றும் செய்ய முடியாது தன்னிடம் இருந்த நகைகளை மீண்டும் இழக்கவேண்டியதாயிற்று. சரி வசந்தி நான் இரண்டு மடங்காச் செய்து தாறன் அடுத்த வருஷம் என்று வசந்தன் கூறியது போலவே செய்தும் கொடுத்ததில் வசந்திக்கு வசந்தன்மேல் அன்பு பெருகியது.

வசந்தியின் ராசியோ என்னவோ ஒரு வேலை விட்டால் நான்கு வேலை வாசலில் வந்து நிற்கும். எங்கு சென்றாலும் என்ன கடினமான காரியமென்றாலும் செய்துகொண்டு வந்துவிடுவாள். வசந்தன் எது செய்ய ஆரம்பித்தாலும் சாண் ஏற முழம் சறுக்கும். இம்முறை ஒழுங்காக ஒன்று செய்து என்னாலும் செய்ய முடியும் என்று காட்டவேண்டும் என மனதில் நினைத்துக்கொண்டான். இப்போது வசந்தன் ஒரு தங்கு விடுதியில் நைட் ஓடிற்றர் வேலை. நல்ல வெட்டுக்கொத்து. கையில் கொஞ்சம் காசு சேர்ந்தது. இம்முறை வசந்தியை ஆச்சரியத்தில் ஆழ்த்தவேண்டும் என முடிவுகட்டினான். வசந்திக்குத் தெரியாமலே எல்லா அலுவலையும் முடித்துவிட்டான். இன்னும் ஒன்றுதான் மிச்சம். அவள் செய்து முடிக்கும் வேலைகள் எல்லாம் நான் செய்ததில் அடிபட்டுப்போய்விடும் என கனவுகண்டுகொண்டு  நாலாம் நாள் வசந்தியை ஓரிடத்துக்குப் போகவேண்டும் வா என்றான். அவள் எங்கே என்று கேட்டதற்கு, நீர் நினைத்துப் பார்க்க முடியாத பரிசு ஒன்று உமக்குத் தரப்போறன். பேசாமல் வா என்றதும் எதோ நகையோ உடையோ வாங்கித் தரப் போகிறான் என்றுதான் அவள் நினைத்தாள். வக்கீலிடம் கூட்டிக்கொண்டு சென்றபோது என்ன இங்க வந்திருக்கிறம் என்றாள் அவள் யோசனையுடன். வந்ததுதான் வந்தீர் கொஞ்சம் பொருமன் என்றதும் அவளும் சரி தானாத் தெரிய வரும் தானே என பேசாதிருந்தாள்.

சிறிது நேரத்தில் உள்ளே அழைக்கப்படப்  போனால் வசந்தன் இவர்கள் பெயரில் ஒரு வீடு வாங்க ஒழுங்கு செய்திருந்தான். இன்றுதான் ஒப்பமிட்டு தமதாக்கிக் கொள்ளப் போகின்றனர். வசந்தி வாயைப் பிளக்காத குறைதான். தன் கணவன் இத்தனை கெட்டிக்காரனா. மூச்சுவிடாது இத்தனை பெரிய வேலையைச் செய்து முடித்திருக்கிறானே என எண்ணியதில் ஏற்பட்ட மகிழ்வில் மூச்சுத் திணறியது. வெளியே வந்ததும் வாய்விட்டே அவனிடம் அதைக் கூறினாள். அவளின் புகழாரத்தைக் கேட்டதும் வசந்தனுக்கும் தலைகால் புரியவில்லை. இருவரும் புதிய காதலர்கள் போல் காதலோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். கையோடு ஒரு சிறந்த உணவகத்துக்கும் அவளை அழைத்துச் சென்று அந்த சந்தோசத்தைக் கொண்டாடிவிட்டுப் புதிய வீட்டைக் காட்ட வசந்தன் அவளை அழைத்துப் போனான்.

வீட்டைப் பார்த்ததும் வசந்திக்குக் கொஞ்சம் ஏமாற்றம்தான். இவன் புதுவீடு தான் வாங்கிவிட்டான் என்று கட்டிய கோட்டையில் மண் விழுந்ததில் சோர்வு ஏற்பட்டது. சரி இதையாவது வாங்கினானே என ஒருவாறு மனதைத் தேற்றிவிட்டு நித்தியாவுக்கு தொலைபேசியில் விபரம் கூறி வரும்படி அழைத்தாள். நித்தியாவும் கணவனும் வந்தனர். வீட்டின் விபரங்கள் எல்லாம் கேட்டுவிட்டு அவசரப்பட்டுவிட்டீர்கள் வசந்தன். இப்பிடிப் பெரிய சொத்தை வாங்கும்போது நாலு பேரிட்டைக் கேட்கவெல்லோ வேணும். பழைய வீடுகள் யேர்மனியில் போகப்போக விலை குறைந்துகொண்டு போகுமே. புதுவீடாக வாங்கியிருக்கலாமே. அதற்கு அரசாங்கமும் பணம் கொடுக்கிறதே என்று நித்தியாவின் கணவன் கூறியதைக் கேட்டதும் வசந்திக்கு தலை சுற்றியது. இப்ப என்ன கொஞ்ச நாள் போக இதை வித்துப்போட்டு புதிதாய் ஒன்றை வாங்கலாம் என்று வசந்தன் கூறிய மழுப்பல் கதைக்குப் பின் நித்தியாவும் கணவனும் வீடு பற்றிக் கதைக்கவே இல்லை.

கணவன் வேலைக்குப் போனபின் வசந்தி பத்திரிகை வாங்கி வீடுகள் பற்றி எல்லாம் ஆராய்ந்ததுடன் மட்டுமல்லாது, தெரிந்த சிலரிடம் தாம் வீடு வாங்கிய விடயத்தைக் கூறாது விசாரித்ததில் வசந்தன் பார்த்திருக்கும் மடை வேலை புரிந்தது. அவனால் ஏற்பட்டிருந்த பூரிப்பும், அவன்மேல் இருந்த மதிப்பும் இறங்க அடுத்து வந்த நாட்கள் ஒரே வாய்த்தர்க்கத்தில் கழிந்தது. முன்புபோல் இல்லாமல் வசந்தனிடம் குடிப்பழக்கமும் புகைப்பிடிக்கும் பழக்கமும் அதிகரித்தது. இவள் அதற்கும் சண்டை போட்டாள். குழந்தைகள் இருக்கும் வீட்டில் புகை பிடிக்கவே கூடாது என அங்கு பிடிப்பதைத் தடை செய்தாள்.

கையில் காசு புழங்கியதால் இவர்களை அடிக்கடி விலை உயர்ந்த உணவகங்கள் மற்றும் இடங்கள் சுற்றிப் பார்க்க என்றும் விதவித ஆடைகள் விளையாட்டுப் பொருட்கள் என்றும் வாங்கிக் குவித்தான். வசந்தியும் எவ்வளவோ சொல்லிப் பறத்தும் அவன் கேட்பதாக இல்லை.
நித்தியாவிடம் புலம்பியபோது மாதா மாதம் நம்பிக்கையானவர்களிடம் சீட்டுப் போடும்படியும் அவனைச் சொல்லி அந்தக் காசைக் கட்டும்படியும்  யோசனை கூறினாள். அது பலிக்கவே செய்தது.

அதற்கிடையில் வசந்தியின் தாய் அவளின் தம்பியார் அங்கிருக்கப் பயம் ஆமி பிடிச்சுப்போடுவான் எனக் கூறியதில், வசந்தி தனக்கு அந்தக் கடமை இருக்கு என்று தம்பியாரைக் கூப்பிட்டு விட்டு நிமிர தங்கை வந்து கொழும்பில் நின்றாள். வசந்தன் எதுவுமே கதைக்காதது வசந்திக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரின் சகோதரர்களையும் கூப்பிட்டதுதானே அவர் என்ன சொல்வது என எண்ணிக்கொண்டு வேலைக்குக் கிளம்பினாள்  வசந்தி.


தொடரும்........

 

 

நன்றி சுவி அண்ணா

 

 

வசந்தனும் தான் கொஞ்சம் மாறியதாகக் கூறியபோதிலும் யார் எவரிடம் என வசந்தியும் கேட்கவில்லை. கடை திறந்துவிட்டனர்.

 

இவ்வளவு அப்பாவித்தனமாக இருப்பார்களா ?

 

சிறிது நேரத்தில் உள்ளே அழைக்கப்படப்  போனால் வசந்தன் இவர்கள் பெயரில் ஒரு வீடு வாங்க ஒழுங்கு செய்திருந்தான். இன்றுதான் ஒப்பமிட்டு தமதாக்கிக் கொள்ளப் போகின்றனர். வசந்தி வாயைப் பிளக்காத குறைதான்.

 

நடைமுறையில் ஐரோப்பிய நாட்டில் இது சாத்தியமற்றது. கார் வாங்குவதுபோல் அல்ல வீடு வாங்குவது. தான் பார்க்காமல் ஒரு வீட்டை வாங்குவதை எந்த மனைவியும் விரும்ப மாட்டார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வசந்தன் செய்த விசர் வேலைகளில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் அல்லது வசந்தி பொய் கூறுவதாக இருக்கலாம். இருவரையும் இருத்திவைத்துக் கேட்டாலன்றி யார் கூறுவது சரி என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கதை? 

பெண் விட்டுக்கொடுத்து விட்டுக்கொடுத்த சமாளித்து போனபோது பலராலும் கருத்து வைக்கப்பட்டது முக்கியமாக எமது ஆண் குலத்தால்.

தற்பொழுது ஆணின் வேடம் அக்கு வேறு ஆணி வேறாக நாறிக்கிடைக்கையில் எல்லா ஆண்களுமே ஓடி ஒழிந்து கொண்டு விட்டது தெரிகிறது.  இதன் மூலம் தெரியவருவது என்னவென்றால்  மாப்பிள்ளை  ஆனாலும் பிணம் ஆனாலும  எமக்குத்தான் மாலை. :D

 

வாழ்வில் இதெல்லாம் சகசமப்பா.   வாங்கோ.  வந்து ஆண்குலத்தை நிமிர்த்து வழியைப்பார்ப்போம்.  :D

  • கருத்துக்கள உறவுகள்

இணையவன் கூறியது போன்று கதையின்  சில இடங்களில் நம்பகத்தன்மை இல்லாமல் இருக்கின்றது. வாழப் போகின்ற வீட்டை முன்கூட்டியே பார்க்காமல் எந்தப் பெண்ணும் வாங்க அனுமதிக்க மாட்டார்.

 

ஏற்கனவே பல இடங்களில் அடி வாங்கியும் கதாநாயகி இன்னும் திருந்தவில்லை.

 

அல்லது ஆண்குலத்தை தாழ்த்துவதற்காகவே அப்படியான கதாநாயகி படைக்கப்படுகின்றாரா? :D

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த கதை? 

பெண் விட்டுக்கொடுத்து விட்டுக்கொடுத்த சமாளித்து போனபோது பலராலும் கருத்து வைக்கப்பட்டது முக்கியமாக எமது ஆண் குலத்தால்.

தற்பொழுது ஆணின் வேடம் அக்கு வேறு ஆணி வேறாக நாறிக்கிடைக்கையில் எல்லா ஆண்களுமே ஓடி ஒழிந்து கொண்டு விட்டது தெரிகிறது.  இதன் மூலம் தெரியவருவது என்னவென்றால்  மாப்பிள்ளை  ஆனாலும் பிணம் ஆனாலும  எமக்குத்தான் மாலை. :D

 

வாழ்வில் இதெல்லாம் சகசமப்பா.   வாங்கோ.  வந்து ஆண்குலத்தை நிமிர்த்து வழியைப்பார்ப்போம்.  :D

 

நீங்கள் அழைத்தது வாத்தியாருக்குக் கேட்டுவிட்டது விசுகண்ணா. கை கொடுக்க ஓடி வந்துவிட்டார்.

 

 

இணையவன் கூறியது போன்று கதையின்  சில இடங்களில் நம்பகத்தன்மை இல்லாமல் இருக்கின்றது. வாழப் போகின்ற வீட்டை முன்கூட்டியே பார்க்காமல் எந்தப் பெண்ணும் வாங்க அனுமதிக்க மாட்டார்.

 

ஏற்கனவே பல இடங்களில் அடி வாங்கியும் கதாநாயகி இன்னும் திருந்தவில்லை.

 

அல்லது ஆண்குலத்தை தாழ்த்துவதற்காகவே அப்படியான கதாநாயகி படைக்கப்படுகின்றாரா? :D

 

நாம் நம்பமுடியாத, எதிர்பாராத விடயங்கள் உலகில் நடப்பதுதானே வாத்தியார்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

நாம் நம்பமுடியாத, எதிர்பாராத விடயங்கள் உலகில் நடப்பதுதானே வாத்தியார்.

நம்ப முடியாத விடயங்கள் உலகில் நடப்பது வழமை.

 

இந்தக் கதையிலேயே பல விடயங்கள் நம்ப முடியாதபடி நடந்திருக்கே :D  :lol:   

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு பேரும் சரியான பாவங்கள் விட்டுவிடுவம்..அந்த அக்காவுக்கு வேணும் என்றால் போச்சி போத்தல்(feeding bottle) ஒன்று வாங்கி அனுப்பி விடுறன். முகவரியை தனிமடலிடுங்கள் சுமோ அக்கா..

 

 

Feeding-Bottle.jpg

 

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் பாடசாலையில் கற்றும் உலகத்தை அனுபவத்தால் கற்றும் திருந்துவதில்லை என தெரிகிறது. தவறுகளில் இருந்து கற்றது போலவும் தெரியவில்லை.

 

 

நித்யாவின் கணவர் நல்லவரா ? இல்லை ஆண்களை (உங்கள் கதைகளில் வரும்) போல கெட்டவரா ?

:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு பேரும் சரியான பாவங்கள் விட்டுவிடுவம்..அந்த அக்காவுக்கு வேணும் என்றால் போச்சி போத்தல்(feeding bottle) ஒன்று வாங்கி அனுப்பி விடுறன். முகவரியை தனிமடலிடுங்கள் சுமோ அக்கா..

 

 

இதில கடைசிக்கு முதல் இருக்கிற போத்தலை அனுப்பிவிடுங்கோ யாயினி. :D

 

 

சிலர் பாடசாலையில் கற்றும் உலகத்தை அனுபவத்தால் கற்றும் திருந்துவதில்லை என தெரிகிறது. தவறுகளில் இருந்து கற்றது போலவும் தெரியவில்லை.

 

சிலர் அனுபவத்திலோ அல்லது தவறுகளிளிருந்தோ திருந்தாமல் இருப்பது அவர்களின் குறைபாடு அல்லது ஒருவகை மன நோயாகக் கூட இருக்கலாம்

 

 

நித்யாவின் கணவர் நல்லவரா ? இல்லை ஆண்களை (உங்கள் கதைகளில் வரும்) போல கெட்டவரா ?

:D

 

சரி உங்களுக்காகவே ஒரு நல்ல ஆணின் கதை எழுதுகிறேன்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று பச்சை இன்று போட்டேன் ..தொடருங்கோ....

அவர் மற்றவர் முன்னாள் தன்னை நல்லவன் என்று காட்டிக் கொள்ள என்னவும் செய்வார் என்றாள்
இந்த தொப்பி எனக்கு அளவு போலகிடக்கு..... :D
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூன்று பச்சை இன்று போட்டேன் ..தொடருங்கோ....

 

இந்த தொப்பி எனக்கு அளவு போலகிடக்கு..... :D

 

 

எங்களுக்கு முன்னால ஒத்துக்கொள்ளுறியளே. அதே பெரியவிசயம். :D

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சுமே, இருந்தாபோல 'எக்ஸ்பிரஸ்' ரோட்டில ஏறிட்டீங்க போல கிடக்கு! :D

 

வசந்தன், வசந்தி இரண்டு பேருமே, மாறி, மாறிக் கோவிக்கிறதையும், திரும்பச் சேருறதையும் பார்க்க, நல்ல ஒரு ரென்னிஸ் விளையாட்டுப் பார்த்தது மாதிரிக் கிடக்கு! :o

 

என்ன இருந்தாலும், கடைசியில வசந்தன்ர தலையில தான், எல்லாம் வந்து விடியும் போல கிடக்கு!

 

ஆம்பிளையள் எண்டா, இப்பிடித்தான் இருப்பினம்! :icon_idea:

 

நீங்க, தொடருங்கோ, சுமே!

Edited by புங்கையூரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆம்பிளையள் எண்டா, இப்பிடித்தான் இருப்பினம்! :icon_idea:

நீங்க, தொடருங்கோ, சுமே!

 

நல்ல அனிமேஷன் நன்றி

 

 

இரண்டும் கெட்டான் கதைக்கு இவ்வளவு நீளமா? இது வசந்தம் தொலைத்த வாழ்வு அல்ல, உறவுகள் தொலைத்த நேரம்தான் அதிகமாக இருக்கு.

 

சுமே கதை சொல்ல வந்து எப்படி முடிப்பது என முழிக்கின்றீர்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 19

சகோதரர்களை அழைத்தவுடன் வசந்திக்கு கடன் மீண்டும் ஏறியது. இம்முறை வசந்தியே வட்டிக்குப் பணம் மாறி வட்டி கட்டியே கடன் கூடியது. மீண்டும் நித்தியாவிடமே பணம் வாங்கிக் கொஞ்சக் கடனை அடைத்தாயிற்று. சகோதரர்கள் வெளிநாடு வரும் வரைதான் அக்கா அக்கா என்றார்கள். நாடு பிடிபட்டவுடன் நாங்கள் யாரோ நீ யாரோ என வசநதியின் கடன் அடைக்க உதவி செய்யக் கூட வரவில்லை. தம்பாட்டிலேயே தம் வாழ்வையும் அமைத்துக்கொண்டு மூன்றாம் மனிதருக்கு கூறுவதுபோல் கூறியது வசந்தியை சொல்லொணாத் துன்பத்தில் ஆழ்த்தியது. என்ன மனிதர்கள் இவர்கள். கூடிப் பிறக்க கோடிதவம் செய்யவேண்டும் என்று கூறுவதெல்லாம் பொய்தான். பணத்தைக் கண்டதும் எல்லாமே மறக்குமோ என எண்ணிக்கொண்டாள்.

வசந்தனுக்கு இப்ப வேலை செய்யுமிடத்தில் புதிதாய் ஒரு நட்புக் கிடைத்திருந்தது. இப்ப அந்த இரு குடும்பமும் மிக நெருக்கமாகிவிட்டனர். வசந்திக்கும் பொழுது போவதற்கு இப்படி ஒன்று தேவையாகவும் இருந்தது. வசந்தி வீட்டுக்கு ஒருமுறை நித்தியா சென்றிருந்தபோது அந்தக் குடும்பமும் வந்திருந்தது. அளவுக்கு மீறிக் குழைவுடன் அவர்கள் பழகியது நித்தியாவுக்கு யோசனையைத் தந்தது. மீண்டும் குசினுக்குள் சென்று இருவரும் கதைத்தபோது, எதுக்கும் கவனமா இருங்கோ. எனக்கெண்டால் நல்லவர்கள் போல் தெரியவில்லை என்று நித்தியா கூறியதை ஒரு சிரிப்புடனேயே தட்டிக்கழித்தாள் வசந்தி. ராஜன் அக்கா அக்கா என்று என்னில சரியான அன்பு. உங்களுக்கு யாரைப் பார்த்தாலும் சந்தேகம்தான் என்று கூற, எனக்கு ஒன்றும் இல்லை. பிறகு பிரச்சனை என்று எனக்கு போன் செய்யக் கூடாது என்று நித்தியாவும் பகிடிபோல் கூறியதில் பேச்சு நின்றது.

இரு மாதங்கள் செல்ல மீண்டும் வசந்தி ராஜனுடன் சேர்ந்து கடை போடப் போவதாகவும் பண உதவி செய்யும்படியும் நித்தியாவிடம் வந்து நின்றாள். எனக்கு ராஜனில் நம்பிக்கை இல்லை வசந்தி அக்கா. எனக்கு உங்களில் எந்த எரிச்சல் பொறாமையும் இல்லை. வடிவா யோசிச்சுச் செய்யுங்கோ என்று கூறிப் பணத்தையும் கொடுத்தாள். நித்தியாவின் கணவரோ ஒரே ஏச்சுத்தான். உப்பிடி ஆக்களிட்டைக் கடன்வாங்கி என்ன செய்யப் போயினம். ஒழுங்கா வேலை செய்தாலே வடிவாக் காசை மிச்சம் பிடிக்கலாம் என்றார். எல்லாருக்கும் எல்லா நேரமும் புத்தி சொல்ல ஏலாதப்பா என்றதும் இனிமேல் உன் நண்பி கடன் கேட்டால் இல்லை என்று சொல்லிவிடு. இல்லை என்றால் ஒரு கோபம் தான். பிறகு கடனால் உங்களிடையே நிரந்தரப் பிரிவு வந்துவிடும் என்றார். நித்தியாவுக்கே கணவன் கூறுவது சரி என்றுதான் பட்டது.

வசந்தியின் கடை நான்றாகப் போனது. கடை வைத்தவுடன் பல புதிய நட்புக்கள் கிடைத்தது. இவர்களைக் கடைக்காரர் என்று அழைத்ததில் வசந்திக்கும் உச்சி குளிர்ந்து  போனது. பிள்ளைகளுக்கும் வயது பத்தும் பன்னிரண்டும் ஆனதால் வசந்திக்கு பிள்ளைகளை இந்த நாட்டில் வைத்து வளர்ப்பது சரியாகப் படவில்லை. அத்தோடு கடைக்கு அடிக்கடி வரும் நிரஞ்சனின் மனைவியும் பிள்ளைகளும் கூட இந்தியாவில்தான். வசந்திக்கும் இந்தியாவில் போய் இருக்கும் ஆசை பிடித்தது. வழமைபோல் நித்தியாவிடம் தான். ஏன் அக்கா இந்த வசதியை விட்டுப் போட்டு யாராவது அங்க போவினமா?? இங்கேயும் இவ்வளவு பிள்ளையள்  வளருதுதானே என்று சொல்லிப் பார்த்ததாள். வசந்தி கேட்பதாக இல்லை. அக்கா நீங்கள் போக முதல் என்ர காசையும் தந்திட்டுப் போங்கோ என்றாள். போக முதல் எல்லாப் பிரச்சனையளும் முடிச்சிட்டுத்தான் போவேன் என்று கூறிய வசந்தி கூசாமல் வசந்தன் உங்கட காசைத்தருவார் என்றுவிட்டு போயேவிட்டள். இங்கு நித்தியாவின் கணவரிடம் நித்தியா கேட்ட குத்தல் கதைகளை சொல்லி முடியாது. ஒரு மாதம்  செல்ல வசந்தி தாங்கள் வசதியாக இந்தியாவில் குடிகொண்டாயிற்று என்றும் நித்தியாவையும் வரும்படியும் அழைத்தாள். ஒரு நிமிடம் நித்தியாவுக்கும் அந்த ஆசை வந்துதான் போனது. இருந்தும் கணவனை விட்டுப் போய் அங்கிருப்பதை அவள் மனது ஒப்பாததால் அதன் பின் அவள் அதுபற்றி ஆசை கொள்ளவில்லை.

வசந்தி போய் நான்கு ஆறு என மாதங்கள் ஓடியதே அன்றி நித்தியாவின் பணம் கொடுக்கவே இல்லை. மறுபடியும் நித்தியாவே தொலைபேசி எடுத்து எனக்கு அவசரம் பணம் உடனடியாகத் தேவை என்றவுடன் தான் வசந்தனுக்குச் சொல்வதாகவும் வசந்தி கூறியதை நம்பி நித்தியாவும் நாட்களைக் கடத்தியதுதான் மிச்சம்.பணம் வரவில்லை. கணவனின் திட்டு ஒருபுறம் நம்பி உதவியதற்கு இப்படிச் செய்கிறார்களே என எண்ணியதில் கோவம் வந்து நித்தியா வசந்தியுடன் தொடர்புகொண்டு கொஞ்சம் காரசாரமாகவே எசிவிட்டாள். அதன்பின் ஒரு வாரத்தில் பணம் வந்ததுதான் ஆயினும்  கொண்டுவந்த வசந்தன் எதோ இவர்கள் கேட்கக் கூடாததை அவர்களிடம் கெட்டது போல் நடந்ததுதான் மனவருத்தத்தை உண்டாக்கியது. கணவர் கறாராகவே கூறினார் இனிமேல் ஒருவருக்கும் கடன் கொடுப்பதில்லை என்று. இப்ப உங்கட காசைத் தராமல் விட்டவையே என இவளும் வக்காலத்து வாங்கினாள். அதன்பின் பெரிதாக வசந்தியோ வசந்தனோ இவர்களுடன் கதைப்பதில்லை. இவளுக்கு மனதில் ஏமாற்றம் இருந்தாலும் வலிந்து ஒருவரிடம் சென்று கதைக்க மனம் இடம் தராததால் அமைதியாகவே இருந்தாள்.

வருடம் ஒன்று ஓடிப்போனது வசந்தி இந்தியா சென்று. நித்தியா இருக்கும் இடத்தில் தாயக உணவுப் பொருட்கள் இல்லாததால், இவர்கள் இருக்கும் இடத்திலிருந்து இருபத்தி ஐந்து கிலோமீற்றர் தூரத்தில் இருக்கும் எம்மவர் கடைக்கு மாதத்தில் ஒருமுறை சென்று பொருட்களை வாங்கி வருவர் கணவனும் மனைவியும். ஒரு நாள் அப்படிப் போனபோது கணவன் கிட்ட வந்து உடனே திரும்பிப் பார்க்காதே. உனது நண்பி தன் சகோதரியுடன் நிக்கிறார் என்றதும் உடனே திரும்பிப் பார்த்தாள் நித்தியா.


தொடரும்..........

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியாவிடம் எக்கச்சக்கமா பணம் புரளும்போலை இருக்கு.. :rolleyes::D

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியாவிடம் எக்கச்சக்கமா பணம் புரளும்போலை இருக்கு.. :rolleyes::D

 

 

எழுதுவார் தானே

அதற்குள் என்ன அவசரம் .....???

அவசரக்குடுக்கை..............

அவசரக்குடுக்கை.............. :D  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நித்தியாவிடம் எக்கச்சக்கமா பணம் புரளும்போலை இருக்கு.. :rolleyes::D

 

நீங்களும் கடன் கேட்கப் போறியளோ ??? :D

 

எழுதுவார் தானே

அதற்குள் என்ன அவசரம் .....???

அவசரக்குடுக்கை..............

அவசரக்குடுக்கை.............. :D  :D

 

அதுதானே என்ன அவசரம்

 

ம்ம்....... தொடருங்கள் சுமே  :)


நித்தியாவிடம் எக்கச்சக்கமா பணம் புரளும்போலை இருக்கு.. :rolleyes::D

 

 

:lol:  :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.