Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் சாதியத்தினை எதிர்க்கவில்லை., சாதி ஒழிப்பிற்கு பாடுபடவில்லை எனச் சொல்லுபவர்களுக்கு...

Featured Replies

541565_10201003696758152_327566111_n.jpg

புலிகள் சாதியத்தினை எதிர்க்கவில்லை., சாதி ஒழிப்பிற்கு பாடுபடவில்லை எனச் சொல்லுபவர்கள் இந்த பேட்டியை படிக்கவும்.

இதே கருத்தினை கடந்த மாதம் ஒரு டாக்சி ஓட்டுனர் என்னிடம் சொன்னார். செல்பேசியில் தமிழீழம் தொடர்பாக பேசி வருவதைக்கண்ட அவர் தன்னுடைய அனுபவத்தினை பகிர்ந்தார். திண்டுக்கல் பகுதியை சேர்ந்த அவர், அரிசி ஆலைக்காக தமிழீழ அரசிற்கு 2005 ஆம் ஆண்டில் மெக்கானிக்காக சென்றார். அவரது மாமா அவரை அழைத்துச் சென்றார் என்றார். மிக நேர்த்தியான அரசாக அது இருந்தது என்று தனது பாமர மொழியில் என்னிடம் சொன்னார். ‘சாதியை சொல்லி திட்டக்கூடாது , சார். சொன்னா, அடிவிழும். தண்டனை தருவாங்க. சாதிப் பெயர் சொல்லி அழைக்கக் கூடாது என்றார்”.. இறுதியாக அவர் சொன்னது, ‘ நான் அங்கேயே இருந்துருவேன்னு பயந்து என் மாமா என்னை கட்டாயப்படுத்தி கூட்டிட்டு வந்துட்டார். ரொம்ப நல்ல ஊரு சார் அது. ரொம்ப சுத்தமா, ப்யூர் தமிழ்ல பேசுவாங்க... மரியாதையா நடந்துக்குவாங்க.. இப்ப எப்படி சார், அந்த ரைஸ் மில் இருக்குமான்னு தெரியலை.. நிறைய அரிசியை சேர்த்து வைக்க தான் அந்த மில்ல அங்க கட்டுனோம்... நிறைய பிரச்சனைன்னு சொன்னாங்க , எல்லாம் எப்பசார் சரியாகும்..” என்றார்...
இதே அனுபவத்தினை ஒரு ஆய்வாக இங்கே பதிந்திருக்கிறார், கேரளாவினை சேர்ந்த ஆய்வாளர் ஒருவர்.. மிக முக்கியமான கட்டுரையாக இதைப் பார்க்கிறேன்..

தலித்துக்களுக்கு எதிரானவர்கள், அவர்களை புறந்தள்ளினார்கள் .. என்றெல்லாம் முன்வைக்கப்படும் வாதம். வெள்ளாள உயர்சாதியை உயர்த்திப் பிடித்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் எல்லாம் வரலாற்றினை தொகுத்தால் உடைந்து நொறுங்குவதை பார்க்க முடிகிறது. அங்கிருந்த வெள்ளாள உயர் சாதிகளின் துரோகத்தினை , சிங்கள பாசத்தினை ஆய்விற்கு உட்படுத்தி ஆவணப்படுத்தினால் பல கேள்விகளுக்கு விடைகிடைக்கும்.

தேசியப் போராட்டங்களுடன் ஊடாகவே உள்முரண்களை எதிர்கொண்டு அழிக்க இயலும். சாதிய ஒடுக்குமுறை ஒழிப்பு என்பது தனித்த அரசியல் செயலன்று. உயர்ச்சாதி வெள்ளாள சாதியத்தினை மறுத்து செயல்பட்டக் காரனத்தினாலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளாகவும், மூர்க்கமான இயக்கமாகவும் சித்தரிக்கப்பட்டது.

பார்ப்பனியக் கூறுகளுடன் சிங்கள அரசு வர்க்கத்துடன் இணைந்து செயல்பட்டவர்கள் மிக லாவகமாக ஒரு வர்க்க சுய நல சூழ்ச்சியுடன் செயல்பட்டத்தன்மையை இன்றும் காண முடிகிறது. இது போன்ற சித்தரிப்பு பாலஸ்தீனத்தின் பி.எல்.ஓவிற்கோ, அல்லது இன்று இருக்கும் ஹமாஸிற்கோ, லெபனானின் ஹிஸ்புல்லாவிற்கோ இந்திய அறிவுசீவிகளோ, புரட்சியாளார்களோ கொடுக்கவில்லை..சகோதரச் சண்டை என்று ஹ்மாஸிற்கும், ஃபதா அமைப்பிற்கும், தாலிபான்களுக்கும் வட-மேற்கு போராளி குழுக்களுக்கோ இதர ராணுவ குழுக்களுக்கோ தரவில்லை.. தேசிய இனப்போராட்டம் ராணுவ்வாதமாகவே உலகெங்கும் முன்னெடுக்கப்படுகிறது. இது போராடும் தேசிய இனக் குழுக்களின் தேர்வல்ல.. குருதிஸ்தான், பாலஸ்தீனம், கச்சின்ஸ், கரேன்ஸ், காசுமீர், பலுசிஸ்தான், வசிரிஸ்தான் உள்ளிட்ட போராட்டங்களுக்கு இது பொருந்தும்..

சமகால உலக போராட்ட வரலாற்றினை, குறிப்பாக உலகமயமாக்களுக்கு பின்பான அரசியல் கட்டமைப்பில் பார்க்காமல் பேசுவது முழுமையாகாது. இது போலவே 9/11 சம்பவத்திற்கு பிறகு புலிகளுக்கு உலக அரசியல் தெரியவில்லை என்பவர்கள் முழுமையான தரவு-தகவல்களோடு பேசுவதில்லை.. இதை 2010 டிசம்பரில் மதுரைக் கூட்ட்த்தில் மே17 இயக்கம் தெளிவாக முன்வைத்தது. இதற்கான விவாத்த்திற்கும் வெளிப்படையாகவே தயாராக இருக்கிறோம் என்று அறிவித்தோம். யாரேனும் இன்றும் அவ்வாறான குற்றச்சாட்டினை முன் வைக்கும் பட்சத்தில் அதனை எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறோம்..

இவையனைத்திற்கும் காரணம் 2009க்கு பின்பான அரசியல் என்பது சிங்களப் பேரினவாத்த்தினை ஆய்விற்குட்படுத்திய அரசியல் நகர்வாகவே முழுமையாக அமைகிறது. அதை மறுத்து புலிகளில் அரசியல் தவறுகள் என்று மட்டுமே பார்ப்பவர்கள் சமகால அரசியல் நியாயங்களை மறுப்பதும், தமிழீழ விடுதலைக்கான வேலை திட்ட்த்தினை முன்வைக்க மறுப்பதுமாகவே பார்க்க வேண்டி இருக்கிறது.

பாலஸ்தீன மக்களிடம் 1993 அமைதி ஒப்பந்த பி.எல்.ஓவின் தோல்விக்குப் பிறகு, ” நீங்கள் இசுரேலின் அரசு ஒரு சன நாயக முற்போக்கு அரசாக மாறுவதற்கு இசுரேலிய மக்களிடம், முற்போக்காளர்களிடன் இணைந்து வேலை செய்து பின்னரே விடுதலை கோரிக்கையை முன்னெடுக்க முடியும்” என்று சொல்வது, பாலஸ்தீன விடுதலையை மறுப்பதும் அந்தப் போராட்டத்திற்கு துரோகம் இழைப்பதாகவே பார்க்கப்படும். தமிழீழப் போராட்டம் தேசிய இனவிடுதலைக்கான மாபெரும் பாடம். அதை முழுமையாக பார்க்கப்படல் , ஆய்வு செய்யப்படுதல் அவசியம். சர்வதேச ஆற்றல்களின் முழுமையான பங்கேற்புடனும், பங்களிப்புடனும், பிராந்திய நலனுடனும் சேர்த்து இந்திய-தமிழகத்தின் வர்க்க-சாதிய-இனப் பகையை முன்வைத்து தமிழீழப் போராட்டம் எதிர்கொள்ளப்பட்டு நசுக்கப்படுகிறது என்பதே கசப்பான உண்மை.

இந்திய துணைக்கண்ட்த்தில் வேறெந்த இனத்தினை காட்டிலும் தமிழ்ச் சமூகமே இந்திய-சர்வதேச எதிரிகளையும், ஏகாதிபத்திய வர்க்க –இன எதிரிகளையும் கொண்ட இனமாக அமைகிறது. இதுவே இந்தியாவின் ஆகச்சிறந்த மிக ஆழமாக ஒடுக்கப்படும் ”ஒரே இனம்” என்கிற பெருமை கொண்டதாகிறது.

தமிழகத்தமிழர்கள் குற்றம் குறை கூறி, சாதிய-கட்சி பேதம் பேசி நாம் இன்னும் மிகச் சிறப்பாக பலகூறுகளாக உடைபடலாம். திருவிழாவில் பலியிடப்படும் ஆடுகளாக மிகச்சிறப்பாக வளர்க்கப்பட்டுவிட்டோம். யாருடைய கொம்பு நீளமானது, வலிமையானது, கூர்மையானது என்று போட்டி போடுவோம். இந்த கொம்பு, நம்மை வெட்ட வெகு வேகமாக இறங்கும் வெட்டுக்கத்தியை ஏதும் செய்து விடாது என்பது நம்மை பலியிடுபவர்களுக்கு மிக நன்றாக தெரியும். ஆகவே ஆடுகளாக நாம் கொம்பு வளர்ப்போம்.

- திருமுருகன் காந்தி -

  • Replies 73
  • Views 5.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் தலைவர்கள் பலர் தலித்துக்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் தலைவர்கள் பலர் தலித்துக்கள் .

தலித்துக்கள் என்றால் யார்?

லெப்டினன் கேணல் களா???
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கண்டுபிடிப்பு கல்யாணீ....இது சொல்லுறதுக்குத்தன்..அனுப்பியிருக்கினம் போலை...

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சில கள உறவுகள்.. வைத்துள்ள கருத்துக்கள்.. மோசமான தமிழ் மக்களிடையே பிரிவினையைத் தூண்டி பலவீனங்களை விதைக்கக் கூடிய.. சிந்தனைகளை இன்றும் எம்மில் உள்ளவர்கள் காவத் துடிக்கின்றனர் என்பதை இனம்காட்டுகிறது.

சாதி.. மத.. பிரதேச.. வர்க்க அடையாளங்கள் எல்லாம் கடந்து தேசம்.. மக்கள்.. விடுதலை.. உரிமை என்று உயிரை துச்சமென மதித்துப் போராடிய தமிழ் மக்களின் பிள்ளைகளை இப்படி அடையாளம் காட்டும் எமது சமூக இழிநிலையை யாழ் வரவேற்கிறதா..???!

போராட்ட ஆரம்ப காலத்தில் மக்கள் சாதி அடிப்படையில் போராளி அமைப்புக்களை இனங்காண சில அமைப்புக்கள் சாதியை முன்னிலையில் வைத்து இயங்க நின்ற போது அதனை எல்லாம் மாற்றி அமைத்த விடுதலைப்புலிகள் மீதே இன்று இப்படியான கருத்துக்களா..???!

குறிப்பாக இன்று இல்லாத தலித்தியத்தை (தலித்தியம் என்பது வெறும் சாதி அடையாளமல்ல.. அது நிர்வாக அடையாளமாகவும் உள்ள ஒரு படிநிலை. அது இந்தியாவில் தான் உள்ளது. ஈழத்தில் தலித்தியம் கிடையாது.) எம்முள் திணிப்பவர்களில் பலர் முன்னாள் சாதி அடிப்படையில் இயக்கங்களின் செயற்பாடுகளுக்கு வித்திட்டு தமிழ் மக்களின் போராட்ட ஒற்றுமையை சிதைக்க நின்றவர்களின் பெறுதிகள் என்பதை நாம் மறக்கக் கூடாது. :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தில் இருக்கும் வரைக்கும் சாதிபற்றி நான் உட்பட கதைக்கிறோம் அது புலம்பெயர்ந்தும் தொடருது. ஆனால்  "தலித்" என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டதே இல்லை.

இங்கு வந்த பின்னர் தான் தமக்குத் தாமே இலக்கியவாதிகள் என்று பட்டம் சூட்டிய ஈழத்து எழுத்தாளர்கள் சிலரும், நீயா நானா போன்ற விவாதங்களிலும் தான் தலித் என்ற வார்த்தையையே கேள்விப்பட்டேன்.

மருதங்கேணி அண்ணா கேட்ட அதே கேள்வி? தலித்துக்கள் என்றால் என்ன? யாரும் விளங்கப்படுத்துங்கோப்பா??

அதுக்குப் பிறகு ஆட்டுக்குள்ளை மாட்டை விடுங்கோ. :icon_idea:

நானும் தேடாத இடமில்லை, ஜீவா!

தனியாக ஒரு சாதியின் பெயரைக் குறிப்பிட்டு, அழைப்பதற்குப் பதிலாக, எல்லோரையும் சேர்த்துப் பொதுவார்த்தை ஒன்றால் 'தலித்; என்று அழைக்கிறார்கள் போல உள்ளது! 

இதே நோக்கத்தில் தான் மகாத்மா காந்தியும், 'ஹரிஜன்' (கடவுளின் குழந்தைகள்) என ஒரு புது வார்த்தையை அறிமுகப் படுத்தி அழைத்தார்!

இலங்கையில் இருக்கும் வரை, இந்த வார்த்தையை நான் கேள்விப்படவேயில்லை. ஆனால், சோபா சக்தி, தனது கதையொன்றின், இலங்கையில் ஒரு 'தலித் கிராமம்' ஒரு ஒரு கிராமத்தை அழைக்கிறார்!

இந்த வார்த்தை, எழுத்தாளர்களினதும், அரசியல்வாதிகளினதும் உருவாக்கமே, அன்றிப் பாதிக்கப்பட்டவர்களால் உருவாக்கப் படவில்லை போல உள்ளது! :o

இந்த கூட்டத்திற்கு ஓர் விடுதலை வேண்டும் என்று எந்த நேரத்திலும் கழுத்தில மரணத்தைக் கொழுவிக் கொண்டு ஓடித் திரிந்தவனிட்ட, இவர்கள் ஆயிரம் ஆண்டுகளாக சுமந்து திரியும் அழுக்கு மூட்டைகளையும்  கழுவி  இவர்களைப் புனிதப்படுத்தியிருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால்? இந்த இனத்திற்கு சுயபுத்தி எங்கே போனது?

அது என்ன தலித்? இந்திய சமூகப் பிரச்சனையில் உள்ள சொல்லாடலை கொணர்ந்து ஈழத்து பிரச்சனையில் பொதுமைப்படுத்துவது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் தேடாத இடமில்லை, ஜீவா!

தனியாக ஒரு சாதியின் பெயரைக் குறிப்பிட்டு, அழைப்பதற்குப் பதிலாக, எல்லோரையும் சேர்த்துப் பொதுவார்த்தை ஒன்றால் 'தலித்; என்று அழைக்கிறார்கள் போல உள்ளது! 

இதே நோக்கத்தில் தான் மகாத்மா காந்தியும், 'ஹரிஜன்' (கடவுளின் குழந்தைகள்) என ஒரு புது வார்த்தையை அறிமுகப் படுத்தி அழைத்தார்!

இலங்கையில் இருக்கும் வரை, இந்த வார்த்தையை நான் கேள்விப்படவேயில்லை. ஆனால், சோபா சக்தி, தனது கதையொன்றின், இலங்கையில் ஒரு 'தலித் கிராமம்' ஒரு ஒரு கிராமத்தை அழைக்கிறார்!

இந்த வார்த்தை, எழுத்தாளர்களினதும், அரசியல்வாதிகளினதும் உருவாக்கமே, அன்றிப் பாதிக்கப்பட்டவர்களால் உருவாக்கப் படவில்லை போல உள்ளது! :o

கொஞ்சநாளாக எனக்குச் சனி உச்சத்திலை இருக்கிறதாலை பெயர்கள் குறிப்பிட முடியவில்லை.

நன்றி புங்கை அண்ணா.

இந்தியாவின் சாதி அமைப்புக்கள் மிகச்சிக்கலானவை தலித்துக்கள் என்கிறார்கள் அதிலும் தாழ்த்தப்பட்டோர் என்று அவர்களின் சாதிக்கட்டமைப்பு என்பது எம் புரிதலுக்கு அப்பால் என்று ஒரு விவாதத்தை ரீவியில் பார்க்கும் போது தெரிந்து கொண்டேன்.

அதை விட  குட்டிரேவதி ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார், ஈழத்தில் மேட்டுக்குடியினர் குடும்பப் பிரச்ச்னைகளின் போது தமது மனைவியரை ப* பு***, ந****, தோ***, வே*** சை போன்ற தலித்துக்களைச் சொல்லித்தான் இழிவுபடுத்துகிறார்கள் என்று தெரிவித்திருந்தார்.

எங்கள் இலக்கியச் செம்மல்கள் யாரும் இதற்குரிய பதில் சொன்னார்களா என்பது தெரியவில்லை. :(

தலித்தியமும் தமிழ் தேசியமும் (2007 ல் எழுதிய கட்டுரை- மீள்பதிப்பு )

தலித்தியம் என்ற ஒரு சொல்லை இப்போது ஈழத் தமிழ்ப்பரப்பில் அறிமுகப்படுத்தும் ஒரு முயற்சி நடக்கிறது. அதை அறிமுகப்படுத்துபவர்கள் புலி எதிர்ப்பையும் அதோடு இணைப்பதால் பலருக்கு அந்தச் சொல்லைக் கேட்டதும் இயல்பான ஒரு கோபமும் எரிச்சலும் வருகிறது. இந்தக் கோபத்தையும் எரிச்சலையும் வெளிப்படுத்துபவர்கள் தலித்தியம் என்ற அந்தச் சொல் குறிக்கும் அர்த்தத்தை புரிந்தகொண்டு அதை வெளிப்படுத்தவில்லை. அந்தச் சொல்லை தங்களது புலி எதிர்ப்புச் செயற்பாட்டுக்கு பயன்படுத்துவோரை வைத்தே இந்தக் கோபமும் எரிச்சலும் வருகிறது. தலித் என்பது இந்திய பெருநிலப்பரப்பில் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்கான ஒரு பொது அடையாளமாக இதைக் கொள்கிறார்கள். இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்த மக்களை ‘ஹரிஜனம்’ (ஹரி என்பது விஷ்ணு) என்று மகாத்மா காந்தி பெயர் சூட்டி அழைத்தார். அதாவது கடவுளின் குழந்தைகள் என்பது இதன் பொருளாகும். ஆனால் இந்து மதத்திலுள்ள வர்ணக் கோட்பாடே சாதியத்துக்கு அடிப்படையாக இருக்கிறது என்ற கருதிய இந்த மக்களுடைய அமைப்புக்கள் இந்த மதக்குறியீட்டுச் சொல்லால் தாங்கள் அழைக்கப்பட்டவதை மறுத்து தலித்துக்கள் என்று தங்களை அழைத்துக்கொண்டார்கள்.

தெற்கே கன்னியாகுமரி கடற்கரையோரத்திலிருந்து வடக்கே இமயமலைக் சாரலிலுள்ள குக்கிராமங்கள் வரை இந்திய பெரு நிலப்பரப்பெங்கும் பரந்து வாழும் ஒடுக்கப்பட்டமக்களும் (சாதியத்தால்)தங்களை தலித்துக்கள் என்று அழைக்கிறார்கள். அவர்களுக்குரிய அரசியல் கோட்பாடு தலித்தியம் எனப்படுகிறது.

இந்தியாவை பொறுத்தவரை அங்குள்ள மக்களுக்குரிய பிரதான முரண்பாடாக சாதிய முரண்பாடே இருக்கிறது. இந்திய தேசியம் என்பது இந்த முரண்பாட்டை கட்டிக்காக்கின்ற அமைப்பாகவே இருக்கிறது.இன்றைக்கும் சாதி குறைந்தவரை மலம் உண்ண வைப்பதும் உயிரோடு எரிப்பதும் உணவகங்களில் தனித் தட்டு தனிக் குவளை வைத்து தனிமைப்படுத்துவதும் தமிழகக் கிராமங்களில் இன்று வரை தொடர்கிறது. இந்த நிமிடம் வரையில் தமிழகம் மட்டும் அல்லாமல் இந்திய சமூகம் முழுவதுமே சாதியச் சமூகமாக பிளவுபட்டுப் போய்கிடக்கிறது. தீண்டாமை என்பது வெளிப்படையாகவே இருக்கிறது. இன்று வரை சாதியக் கலப்பு எற்பட்டுவிடும் என்பதற்காக காதல் திருமணங்களை ஏற்றுக் கொள்ளாத மனப்பான்மையும் காதல் என்றால் தீண்டத் தகாத ஒன்று என்ற சிந்தனையும் மக்கள் மத்தியிலே இருக்கிறது.

கட்சி அரசியலுக்காகவும் அதிகாரவர்க்க நலன்களுக்காவும் சாதியம் கட்டிக் காக்கப்படுவதோடு ஒடுக்கு முறையும் சாதிக் கலவரங்களும் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. அதிகாரத்தை கையில் வைத்துள்ள மேல்தட்டு வர்க்கம் அடித்தட்டு மக்கள் மீது திணிக்கும் அடக்குமுறைக்கு எதிராக அந்த மக்கள் சாதி அமைப்புக்களின் கீழ் அணி திரள்வது அங்கு தவிர்க்க முடியாததாகிறது. இல்லையென்றால் தஞ்சாவூர் மாவட்டம் கீழ் வெண்மணியில் நிகழ்ந்து போல அவர்கள் குடும்பம் குடும்பமாக எரித்துக் கெல்லப்பட்டு விடுவார்கள்.இது இந்திய தழிழக நிலப்பரப்பக்குரிய முரண்பாட்டின் தன்மையும் கள நிலமையும ஆகும்.

இதை நாங்கள் அப்படியே கொப்பியடித்துக் கொண்டு வந்த எங்களுடைய நாட்டிலே பொருத்த முடியாது. ஈழத் தமிழர்களை பொறுத்தவரை சாதிய முரண்பாடு என்பது அடிப்படை முரண்பாடாகும் அது இப்போது பிரதான முரண்பாடாக இல்லை. இப்போது சிறீலங்கா விமானப்படை எமது தாயகத்தின் மீது குண்டுபோடும் போது சாதி பார்த்துக் குண்டு போடுவதில்லை. சிறீலங்கா படையினர் எறிகணைத்தாக்குதல் நடத்தும் போது இது உயர்சாதிக்காரர் வாழும் இடம். இது சாதி குறைந்தவர்கள் வாழும் இடம் என்றெல்லாம் பார்த்து தாக்குதல் நடத்துவதில்லை. சிறீலங்கா அரசினதும் அதை இயக்குகின்ற பௌத்த சிங்கள பேரின வாதிகளினதும் இலக்கு ஒட்டுமொத்த தமிழினத்தையும் அழித்து அல்லது அடக்கி தமது மேலாண்மை நிலைநாட்டுவதாகும். ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை இன்று பிரதான முரண்பாடாக இருப்பது இன முரண்பாடாகும்.

தலித்தியத்தை எமது தளத்தக்கு இறக்குமதி செய்ய நினைப்பவர்கள் தங்களது செயலை வலுப்படுத்துவதற்காக ஈழப் போராட்டம் என்பதே மேட்டுக் குடியினரின் போராட்டம் என்று சித்தரிக்க முனைகிறார்கள். தமிழீழ தேசியத் தலைவரையும் விடுதலைப்புலிகளையும் மேட்டுக்குடியினரின் நலன்களை பாதுகாப்பவர்களாக சித்தரிக்க விளைகிறார்கள். தமிழ் தேசியவாதத்தக்கு சிந்தைனைக்கு வடிவம் கொடுத்தவர் ஆறுமுக நாவலர் என்றும் சிறீலங்கா அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தவர்கள் யாழ்ப்பாண மேட்டுக்குடி இளைஞர்களே என்றும் நிறுவி அதன் மூலம் தமிழீழ விடுதலைப்போராட்டம் அடித்தட்டு மக்களுக்கு எதிரானது அது அதிகாரவர்கக்த்தின் மேலாண்மையை நிலை நிறுத்தவே நடக்கிறது. அதனால் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் எல்லாம் தலித்துக்கள் என்று அடையாளத்துக்குள் ஒன்றிணைய வேண்டும் என்ற இவர்கள் வாதிடுகின்றனர்.

முதலாவதாக இலங்கையில் இருந்த சாதியால் ஒடுக்கப்பட்ட மக்கள் ‘ஹரிஜன்கள்’ என்ற பொது இந்துத்துவ அடையாளத்தால் அழைக்கப்படவும் இல்லை அவ்வாறு அவர்கள் ஒரு மத அடையாளத்தின் கீழ் ஒருபோதும் ஒன்றுபட்டுப் போராடவும் இல்லை. யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருந்த ஒடுக்கப்பட்ட மக்கள் பஞ்சமர்கள் என்று குறிப்பிடப்பட்டாலும் பொது அரசியல் வழக்காக சிறுபான்மைத் தமிழர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். தீண்டாமையின் வீச்சு 1970 களுக்கு முன்னர் இருந்ததைப் போல இப்போது இல்லை. அதேபோல அடிமை குடிமை முறையும் இப்போது இல்லை. ஓடுக்குபவனை திருப்பி அடிக்க திராணியற்று அல்லது உரிமையற்று எல்லாம் தலைவிதி என்று சொல்லிக்கொண்டிருந்த சமூகம் இப்போது தாயகத்தில் இல்லை. இந்தியவில் தலித் தலித்தியம் என்ற சொல்லுருவாக்கத்துக்கு அடிப்படையாக களயதார்த்தம் ஈழத்தில் இல்லை. ஈழத் தமிழர்களான எங்களைப் பொறுத்த வரை நாங்கள் தமிழர்கள் என்ற பொது அடையாளத்துக்குள் நின்று எங்களுக்கு எதிரான அடககு முறைகளுக்கும் ஒடுக்கு முறைகளுக்கும் எதிராகப் போராடுவதே இன்றைய தேவையாகும்.

ஆறுமுகநாவலர் தமிழ்தேசியவாதத்துக்கு அடித்தளம் இட்டவர் என்று கூறுவதன் மூலம் அவர் சாதிய மேலான்மையை நிலை நிறுத்தியவர் என்று நிறுவி அதனால் தமிழ் தேசியம் என்பதே அதை நிலைநிறுத்துவதை அடிப்படையாகக் கொண்டது எனறு காட்ட முற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தேசிய சிந்தனை என்பது ஒரு சமூகத்துக்குள் இருக்கும் அனைத்து முரண்பாடுகளையும் களைந்து அந்த சமூகத்தை ஒரே இனம் என்ற அடிப்படையில் ஒன்றுபட வைப்பதாகும். ஆனால் ஆறுமுக நாவலரோ சாதி பார்த்ததன் மூலம் தமிழினத்தை பிளவுபடவைத்தார். ஐரோப்பியர்களின் வருகையால் பிடி தளர்ந்து போன சாதிகட்டமைப்பை சற்சூத்திரக் கோட்பாடு என்ற ஒன்றைக் கொண்டு வந்து இறுக்கமாக்கினார். ஆங்கிலக் கல்வி கற்று பைபிளை அனைவரும் படித்துப் புரிந்து கொள்ளக் கூடிய இலகு தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்து கிறீஸ்தவ மதமாற்றத்துக்கு ஆரம்பத்தில் மறைமுகமாக துணைபோன அவர் அடுத்தட்டு மக்கள் மதம்மாறி ஆங்கிலக்கல்வி கற்று வளர்ச்சியடைவது தனது சமூக மேலாண்மையை பாதிக்கும் என்று உணர்ந்து கொண்டதும் கிறீஸ்தவமத எதிர்ப்பை முதன்மைப்படுத்தினார். சைவ மேன்மையை வலியுறுத்திய அவர் கிறிஸ்த்தவ மதமாற்றத்தை தடுத்து நிறுத்தி தமிழ் மக்கள் அனைவனையும் ஒரே இனம் ஒரே மதத்தவர் என்ற அடிப்படையில் ஒன்றிணைக்கும் தேசியச் சிந்தனை உடையவராக இருந்திருந்தால் அவர் தான் உருவாக்கிய சைவப்பிரகாச வித்தியாசாலைகளில் தமிழர்கள் என்ற அடிப்படையில் எந்தவித வித வேறுபாடுமின்றி அனைவருக்கும் கல்வி கற்கும்வாய்ப்பை கொடுத்திருப்பார். ஒரு சமூகத்தின் உயிர்நாடியாகவும் தேசிய அடையாளமாகவும் இருப்பது கிராமியக் கலைகளாகும். அந்தக் கலைகளின் நிகழ்களங்களாக ஆலயங்களே இருப்பது வழக்கமாகும். ஆனால் ஆறுமுக நாவலரோ இழிசனர்களர்கள் என்று தான் கருதிய ஒடுக்கப்பட்ட மக்களால் நடத்தப்படும் இந்தக் கலைகள் ஆலயங்களின் புனிதத்தை கெடுப்பதாக கூறி அவற்றை ஆலங்களில் நிகழ்த்தக் கூடாதென்று தடை செய்ததன் மூலம் இன்னொரு விதத்திலும் தமிழ் தேசிய உருவாக்கத்துக்கு இடையூறு செய்தார். ஆறுமுக நாவலர் சிறந்த தமிழ் அறிஞர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அவர் தமிழுக்கு செய்த நன்மை 30 வீதம் என்றால் தமிழ் சமூகத்துக்கு செய்த தீமை 70 வீதமாகும். எனவே ஆறுமுக நாவலரில் இருந்தே தமிழ் தேசியவாதம் தோற்றம் பெற்றது என்று கூறுவது எற்புடையதல்ல. அவ்வாறே தமிழுர்களுடைய உரிமைப்போர் யாழ்ப்பாண மேல்தட்டு பிரிவினரால் அவர்களுடைய வர்க்க நலன்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது என்று கூறுவதும் வரலாற்றை திரிக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு முன்வைக்கப்படும் ஒரு கூற்றாகும்.

குடாநாட்டில் சாதி ரீதியாக ஓடுக்ப்பட்ட மக்கள் தாங்கள் குடியிருந்த நிலைத்தை தங்களுக்கு சொந்தமாக்குவதற்கும் புதிய நிலங்களை வாங்குவதற்கும் 1892ம் ஆண்டும் 1904 ம் ஆண்டும் நடந்திய நில உரிமைப் போராட்டங்களும் 1910 ம் ஆண்டும் 1920ம் ஆண்டும் நடத்திய கல்வி கற்கும் உரிமை மற்றும் மேலாடை அணியும் உரிமை கல்வீடு கட்டும் உரிமை என்பவற்றுக்காக நடத்திய போராட்டங்களும் 1935 மற்றும் 1960 களில் நடந்த தீண்டாமை ஒழிப்பப் போராட்டங்களே தமிழ் தேசிய சிந்தனையின் உருவாக்கத்திற்கான அடிப்படைகளாகும். ஒரு சமுகம் எதிர்கொள்ளும் அக-புற முரண்பாடுகளின் ஐக்கியமும் போராட்டமும் தான் அந்த சமூகத்தை அடுத்த கட்டத்தை நோக்கி தள்ளுகிறது என்பது இயங்கியல் விதியாகும். இந்த வகையிலேயே தமிழ் சமூகம் முதலில் தனக்குள் இருந்த அகமுரண்பாட்டுகளுக்கு எதிராக போராடி அதன் அடுத்த கட்டமாக தன் மீது புற நிலையில் இருந்து திணிக்கப்பட்ட பௌத்த சிங்கள பேரினவாதத்தக்கு எதிராக தற்போது போராடுகிறது.

சிறீலங்கா அரசு தமிழ் மக்களுடைய விடுதலை உணர்வை சிதைப்பதற்கும் தமிழ்தேசிய ஒருமைப்பாட்டை கலைப்பதற்கும் பிரதேசவாதம் சாதியம் ஆகிய நட்பு முரண்பாடுகளை பகை முரண்பாடுகளாக மாற்றும் முயற்சியில் திட்டமிட்ட ஈடுபட்டு வருகிறது. இதற்காக ஒரு பெரிய கருத்தில் போரையே அது தொடுத்திருக்கிறது. அதன் ஒரு அங்கம் தான் விடுதலைப்புலிகள் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினரின் நலன்களுக்காக மட்டும்தான் போராடுகிறார்கள் என்று சித்தரிக்க முயல்வதாகும். புலம் பெயர்ந்த தமிழ் சமூகம் போராட்டத்தின் ஆதார சக்தியாக ஒன்ற திரள்வவதை தடுப்பதற்கான வேலைத் திட்டத்தையும் சிறீலங்கா அரசு செய்துவருகிறது.

இந்துவத்தை அடிப்படையாகக் கொண்ட சனாதன மதம் என்பது வேறு தமிழர் மதம் என்பது வேறு என்பதை முதலில் நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு சமூகமும் தனக்கென்று ஒரு மெய்யிலை கொண்டிருப்பதைப் போலவே தமிழ் சமூகமும் தனக்கென்று தனித்துவமான மெய்யிலை கொண்டிருக்கிறது. தமிழர் மெய்யில் எப்படி பார்ப்பணிய மெய்யிலால் ஆக்கிரமிக்கப்பட்டது என்பதை ஆராயுங்கள். தமிழ் சமூகத்தில் இருந்த ஓதுவார்கள் அல்லது அந்தணர்களும் வர்ணக் கோட்பாட்டையும் அதன் சாராம்சமான புனிதம் தீட்டு என்பவற்றையும் தங்களது சடங்காசாரங்களாக் கொண்டுள்ள பார்ப்பணியர்களும் ஒன்றல்ல என்பதை உணருங்கள்.

சிவன் கந்தன் கண்ணன் காளி ஐயனார் முதலான தமிழ் கடவுள்கள் எப்படி பார்பணியக் கடவுள்களாக மாற்ப்பட்டார்கள் என்பதை ஆராயுங்கள். தமிழ்நாட்டிலுள்ள தமிழ் கோவிலான சிதம்பரத்தில் தேவாரம் திருவாசகம் பாடுவதற்கு நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்ற அந்தக் கோவில் தீட்சதர்களுடைய மனோபாவம் என்ன என்பதை விவாதியுங்கள். இந்து மதத்தின் மேன்மை சிறப்பு என்பதைபற்றி எல்லாம் மதம் என்ற ஒரு தனியான தலைப்பின் கீழ் ஆராயுங்கள். இந்து மதத்தில் உள்ள வர்ணக் கோட்பாடு சரியா தவறா என்பதை விவாதியுங்கள். தயவு செய்து அதை விடுத்து தமிழ் தேசியம் என்பது இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்டது என்று அதனுடன் இணைத்து பேசுவதற்கு முற்படாதீர்கள். இந்துமத மேன்மைக்காவே விடுதலைப் போராட்டம் நடக்கிறது என்ற எதிரிகளின் பிரச்சாரத்துக்கு துணைபோகாதீர்கள். தமிழ் தேசியம் என்பது அனைத்து தமிழ் மக்களுக்கும் பொதுவானது பாரபட்சம் காட்டதது. பிறப்பால் தொழிலால் மக்களை இழிவுபடுத்தாதது என்பதை உங்கள் பேச்சிலும் எழுத்திலும் செயலிலும் காட்டுங்கள். ............

சிவா சின்னப்பொடி

(04.03.2007 ல் யாழ் இணையத்தில் எழுதியது)

Edited by navam

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நவம் அண்ணா, இணைப்புக்கு.. :)

  • கருத்துக்கள உறவுகள்

தலித் என்பது தாழ்த்தப்பட்டவரைக் குறிக்கும் இந்திச் சொல்.. அதை கூகிள் ஆண்டவரிடம் விட்டுப் பார்த்தபோது Depressed என்று வருகிறது. அப்படியானால் சரிதான்.

சரிதான் என்று சொன்னது பாவனைக்கு சரி என்கிற அர்த்தத்தில் அல்ல.. தலித் என்றால் தாழ்த்தப்பட்டவர் என்கிற பொருளை மட்டுமே சொன்னேன்..

  • கருத்துக்கள உறவுகள்

சிவா சின்னப்பொடியின் கட்டுரையில் ஈழத்துள் தலித்தியம் என்ற பதம் திணிக்கப்படுவதில் நல்ல கருத்துக்கள் இடம்பெற்றிருந்தாலும்..  ஆறுமுகநாவலர் பற்றிய குற்றச்சாட்டுக்கள் எந்தளவுக்கு நியாயமானது என்று தெரியவில்லை.

காரணம்.. நாவலர்.. பல பிந்தங்கிய கிராமங்களில் கூட தமிழ் பள்ளிகளைத் திறந்து.. தமிழ்மொழிக் கல்வி வழங்க மிகவும்.. உறுதுணையாக இருந்தவர். பல சைவ மற்றும் இந்துக் கல்லூரிகளின் பிறப்புக்கு காரணமாக இருந்தவர்.

நகர்ப்புற.. மக்கள் காலனித்துவ கிறிஸ்தவப் பள்ளிகளின் "நாகரிகத்தால்" விழுங்குப்பட்டுக் கொண்டிருக்க.. நாவலர் அதற்கு எதிராக அறிவு கொண்டு போராடிய ஒருவர். அவரை ஒரு சாதி வெறியராக இனங்காட்ட விளைவது ஏதுவான ஒரு நிலையல்ல..! :icon_idea:

நானும், தவறான கண்ணோடு தான், ஆறுமுகநாவலரைப் பார்த்துள்ளேன், நெடுக்ஸ்!

பின்பு, சைவப் பள்ளிக்கூடங்களில் படிப்பிக்கும், ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுப்பதற்காக, தனது சம்பளத்தைத் தியாகம் செய்ததுடன், வீடு, வீடாகச் சென்று, 'பிடியரிசி' சேர்த்தார் என்று படித்தபோது, அவரது சாதி சம்பந்தமான கருத்துக்களைக் கூட, மன்னித்துவிடும் பக்குவநிலையை அடைந்தேன்! இவர் நினைத்திருந்தால், மிசனரியில் சேர்ந்து, நிரம்ப பணத்தைச் சேர்த்திருக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

சிவா சின்னப்பொடியின் கட்டுரையில் ஈழத்துள் தலித்தியம் என்ற பதம் திணிக்கப்படுவதில் நல்ல கருத்துக்கள் இடம்பெற்றிருந்தாலும்..  ஆறுமுகநாவலர் பற்றிய குற்றச்சாட்டுக்கள் எந்தளவுக்கு நியாயமானது என்று தெரியவில்லை.

காரணம்.. நாவலர்.. பல பிந்தங்கிய கிராமங்களில் கூட தமிழ் பள்ளிகளைத் திறந்து.. தமிழ்மொழிக் கல்வி வழங்க மிகவும்.. உறுதுணையாக இருந்தவர். பல சைவ மற்றும் இந்துக் கல்லூரிகளின் பிறப்புக்கு காரணமாக இருந்தவர்.

நகர்ப்புற.. மக்கள் காலனித்துவ கிறிஸ்தவப் பள்ளிகளின் "நாகரிகத்தால்" விழுங்குப்பட்டுக் கொண்டிருக்க.. நாவலர் அதற்கு எதிராக அறிவு கொண்டு போராடிய ஒருவர். அவரை ஒரு சாதி வெறியராக இனங்காட்ட விளைவது ஏதுவான ஒரு நிலையல்ல..! :icon_idea:

சிவா சின்னப்பொடி  அண்ணா

இது சம்பந்தமாக பல கட்டுரைகளை  அவர் எழுதியதிலிருந்து

தான் நேரடியாகப்பாதிக்கப்பட்ட ஆத்திரத்தின் விளைவாக 

அந்த சமூகத்தை பழிவாங்கணும் என்ற  வெறியில் 

தான் சார்ந்த சமூகத்தின்  பக்கம் சார்பாக எழுதுபவர். :(

எனவே நியாயத்ததை நீங்கள்தான்  பரிசீலிக்கணும்

அன்புள்ள விசுகு ஐயா 
பாதிக்கப்பட்டவர்களின் குரலும் வாக்குமுலமும் பாதிப்பை உண்டாக்கிய தரப்புக்கு பக்கசார்பானதாகவும் ஆத்திரத்தை உண்டாக்குவதாகவும் இருக்கும்.பாதிக்கப்படவர்கள் சொல்வதை நம்பவேண்டாம் அதெல்லாம் பொய் என்று பாதிப்பை உண்டாக்கிய தரப்பு செல்வது வழமைதான்  இதைத்தான்

 முள்ளிவாய்க்காலிலே இவ்வளவு கொடுமைகளையும் செய்த சிங்களத் தரப்பும் தழிழர் தரப்பை பார்த்து சொல்கிறது. இதற்கும் நீங்கள் எழுதிய இந்தக் கூற்றுக்கும் என்ன வித்தியாசம்.
என்னுடைய எழுத்தைப்படித்து ஆத்திரமடைந்த நீங்கள் சில கருத்துக்களை சொன்னதாக சிலர் வந்து என்னிடம் கூறினார்கள்.அதை க் கேட்டு எனக்கு கோபம் வரவில்லை. உங்களது தவறான பார்வையை எண்ணி அனுதாபம் தான் எற்பட்டது.ஏனென்றால் நான் நீண்டகாலமாக உங்களை அறிவேன் தனி;ப்பட்ட முறையில் நீங்கள் நல்ல மனிதர் என்பதையும் நான் அறிவேன்.
பாதிப்புக்கு எதிராக குரல் கொடுப்பதையும் போராடுபவதையும் பயங்கரவாதம் என்று சொல்லும் பார்வையின் சாயல் உங்கள் கூற்றில் இல்லையா என்பதை தயவு செய்து மனச்சாட்சியோடு கேட்டுப்பாருங்கள்.
நீங்கள் சொல்வதை மாற்றுக்கருத்து மாமணிகள் இவர் புலிவால் Gலிக்கு சார்பானவர்.இவர் எழுதுவதெல்லாம் புலிக்கு சார்பனது என்கிறார்கள்
கீழே உள்ளது ஒரு சாதிவெறியர் எனக்கு அனுப்பிய செய்தி....
'ஐந்தாம் வகுப்பு அறிவே இல்லாத பண்ணாடை பரதேசி நீ எல்லாம் ஏண்டா பதிவு எழுதிறாய்.நாயே போய் சோத்துப்பாசல் வாங்கிச் சாப்பிடடா.உனக்கெல்லாம் ஊடவியலாளன் என்டு சொல்ல என்னடா தகுதி இருக்கு?நீங்கள் எல்லாம் வெளிநாட்டக்கு வந்தாபோல பெரியாக்கள் ஆகியிட்டீங்களா?எப்பவடா நீங்கள் கொம்யூட்டரை கண்டனீங்கள்.கீ போட்டிலை தட்டுறதை விட்டுட்டு ஊருக்கு போய் கொப்பன்ரை தொழிலை செய்யடா?'
0000
ஆறுமுகநாவலரை பற்றி நிறையவே எழுத்துக்கள் வெளிவந்துவிட்டன. நான் எழுதிய என்னுடைய தரப்பு கருத்து. அதை எற்பதற்கும் மறுப்பதற்கும் உங்களுக்கு உரிமையுண்டு.அதை நான் எற்றுக்கொள்கிறேன்.ஆனால் நான் வெறித்தனமாக எழுதுகிறேன் பகக்ச்சார்பாக எழுதுகிறேன் என்பது விமர்சனதல்ல.சேறடிப்பு
அன்புடன்
என்றும்உங்களுக்கு தெரிந்த 
சிவா சின்னப்பொடி

நாவலர் சைவத்தையும் தமிழையும் வளர்திருக்கலாம் ஆனால் அவர் ஒரு சாதிவெறியர் தான் .

நாட்டிற்காக இனத்திற்காக மொழிக்காக  மதத்திற்காக உயிரையே கொடுக்க தயாராக இருக்கும் பலர் கூட இந்த சாதி விடயத்தில் கண்டும் காணாமல் தான் இருக்கின்றார்கள் .

எம்மவர் இந்த விடயத்தில் வலு சுழியர்.

தலித்தியமும் தமிழ் தேசியமும் (2007 ல் எழுதிய கட்டுரை- மீள்பதிப்பு )

தலித்தியம் என்ற ஒரு சொல்லை இப்போது ஈழத் தமிழ்ப்பரப்பில் அறிமுகப்படுத்தும் ஒரு முயற்சி நடக்கிறது. அதை அறிமுகப்படுத்துபவர்கள் புலி எதிர்ப்பையும் அதோடு இணைப்பதால் பலருக்கு அந்தச் சொல்லைக் கேட்டதும் இயல்பான ஒரு கோபமும் எரிச்சலும் வருகிறது. இந்தக் கோபத்தையும் எரிச்சலையும் வெளிப்படுத்துபவர்கள் தலித்தியம் என்ற அந்தச் சொல் குறிக்கும் அர்த்தத்தை புரிந்தகொண்டு அதை வெளிப்படுத்தவில்லை. அந்தச் சொல்லை தங்களது புலி எதிர்ப்புச் செயற்பாட்டுக்கு பயன்படுத்துவோரை வைத்தே இந்தக் கோபமும் எரிச்சலும் வருகிறது. தலித் என்பது இந்திய பெருநிலப்பரப்பில் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்கான ஒரு பொது அடையாளமாக இதைக் கொள்கிறார்கள். இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்த மக்களை ‘ஹரிஜனம்’ (ஹரி என்பது விஷ்ணு) என்று மகாத்மா காந்தி பெயர் சூட்டி அழைத்தார். அதாவது கடவுளின் குழந்தைகள் என்பது இதன் பொருளாகும். ஆனால் இந்து மதத்திலுள்ள வர்ணக் கோட்பாடே சாதியத்துக்கு அடிப்படையாக இருக்கிறது என்ற கருதிய இந்த மக்களுடைய அமைப்புக்கள் இந்த மதக்குறியீட்டுச் சொல்லால் தாங்கள் அழைக்கப்பட்டவதை மறுத்து தலித்துக்கள் என்று தங்களை அழைத்துக்கொண்டார்கள்.

தெற்கே கன்னியாகுமரி கடற்கரையோரத்திலிருந்து வடக்கே இமயமலைக் சாரலிலுள்ள குக்கிராமங்கள் வரை இந்திய பெரு நிலப்பரப்பெங்கும் பரந்து வாழும் ஒடுக்கப்பட்டமக்களும் (சாதியத்தால்)தங்களை தலித்துக்கள் என்று அழைக்கிறார்கள். அவர்களுக்குரிய அரசியல் கோட்பாடு தலித்தியம் எனப்படுகிறது.

இந்தியாவை பொறுத்தவரை அங்குள்ள மக்களுக்குரிய பிரதான முரண்பாடாக சாதிய முரண்பாடே இருக்கிறது. இந்திய தேசியம் என்பது இந்த முரண்பாட்டை கட்டிக்காக்கின்ற அமைப்பாகவே இருக்கிறது.இன்றைக்கும் சாதி குறைந்தவரை மலம் உண்ண வைப்பதும் உயிரோடு எரிப்பதும் உணவகங்களில் தனித் தட்டு தனிக் குவளை வைத்து தனிமைப்படுத்துவதும் தமிழகக் கிராமங்களில் இன்று வரை தொடர்கிறது. இந்த நிமிடம் வரையில் தமிழகம் மட்டும் அல்லாமல் இந்திய சமூகம் முழுவதுமே சாதியச் சமூகமாக பிளவுபட்டுப் போய்கிடக்கிறது. தீண்டாமை என்பது வெளிப்படையாகவே இருக்கிறது. இன்று வரை சாதியக் கலப்பு எற்பட்டுவிடும் என்பதற்காக காதல் திருமணங்களை ஏற்றுக் கொள்ளாத மனப்பான்மையும் காதல் என்றால் தீண்டத் தகாத ஒன்று என்ற சிந்தனையும் மக்கள் மத்தியிலே இருக்கிறது.

கட்சி அரசியலுக்காகவும் அதிகாரவர்க்க நலன்களுக்காவும் சாதியம் கட்டிக் காக்கப்படுவதோடு ஒடுக்கு முறையும் சாதிக் கலவரங்களும் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. அதிகாரத்தை கையில் வைத்துள்ள மேல்தட்டு வர்க்கம் அடித்தட்டு மக்கள் மீது திணிக்கும் அடக்குமுறைக்கு எதிராக அந்த மக்கள் சாதி அமைப்புக்களின் கீழ் அணி திரள்வது அங்கு தவிர்க்க முடியாததாகிறது. இல்லையென்றால் தஞ்சாவூர் மாவட்டம் கீழ் வெண்மணியில் நிகழ்ந்து போல அவர்கள் குடும்பம் குடும்பமாக எரித்துக் கெல்லப்பட்டு விடுவார்கள்.இது இந்திய தழிழக நிலப்பரப்பக்குரிய முரண்பாட்டின் தன்மையும் கள நிலமையும ஆகும்.

இதை நாங்கள் அப்படியே கொப்பியடித்துக் கொண்டு வந்த எங்களுடைய நாட்டிலே பொருத்த முடியாது. ஈழத் தமிழர்களை பொறுத்தவரை சாதிய முரண்பாடு என்பது அடிப்படை முரண்பாடாகும் அது இப்போது பிரதான முரண்பாடாக இல்லை. இப்போது சிறீலங்கா விமானப்படை எமது தாயகத்தின் மீது குண்டுபோடும் போது சாதி பார்த்துக் குண்டு போடுவதில்லை. சிறீலங்கா படையினர் எறிகணைத்தாக்குதல் நடத்தும் போது இது உயர்சாதிக்காரர் வாழும் இடம். இது சாதி குறைந்தவர்கள் வாழும் இடம் என்றெல்லாம் பார்த்து தாக்குதல் நடத்துவதில்லை. சிறீலங்கா அரசினதும் அதை இயக்குகின்ற பௌத்த சிங்கள பேரின வாதிகளினதும் இலக்கு ஒட்டுமொத்த தமிழினத்தையும் அழித்து அல்லது அடக்கி தமது மேலாண்மை நிலைநாட்டுவதாகும். ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை இன்று பிரதான முரண்பாடாக இருப்பது இன முரண்பாடாகும்.

தலித்தியத்தை எமது தளத்தக்கு இறக்குமதி செய்ய நினைப்பவர்கள் தங்களது செயலை வலுப்படுத்துவதற்காக ஈழப் போராட்டம் என்பதே மேட்டுக் குடியினரின் போராட்டம் என்று சித்தரிக்க முனைகிறார்கள். தமிழீழ தேசியத் தலைவரையும் விடுதலைப்புலிகளையும் மேட்டுக்குடியினரின் நலன்களை பாதுகாப்பவர்களாக சித்தரிக்க விளைகிறார்கள். தமிழ் தேசியவாதத்தக்கு சிந்தைனைக்கு வடிவம் கொடுத்தவர் ஆறுமுக நாவலர் என்றும் சிறீலங்கா அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தவர்கள் யாழ்ப்பாண மேட்டுக்குடி இளைஞர்களே என்றும் நிறுவி அதன் மூலம் தமிழீழ விடுதலைப்போராட்டம் அடித்தட்டு மக்களுக்கு எதிரானது அது அதிகாரவர்கக்த்தின் மேலாண்மையை நிலை நிறுத்தவே நடக்கிறது. அதனால் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் எல்லாம் தலித்துக்கள் என்று அடையாளத்துக்குள் ஒன்றிணைய வேண்டும் என்ற இவர்கள் வாதிடுகின்றனர்.

முதலாவதாக இலங்கையில் இருந்த சாதியால் ஒடுக்கப்பட்ட மக்கள் ‘ஹரிஜன்கள்’ என்ற பொது இந்துத்துவ அடையாளத்தால் அழைக்கப்படவும் இல்லை அவ்வாறு அவர்கள் ஒரு மத அடையாளத்தின் கீழ் ஒருபோதும் ஒன்றுபட்டுப் போராடவும் இல்லை. யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருந்த ஒடுக்கப்பட்ட மக்கள் பஞ்சமர்கள் என்று குறிப்பிடப்பட்டாலும் பொது அரசியல் வழக்காக சிறுபான்மைத் தமிழர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். தீண்டாமையின் வீச்சு 1970 களுக்கு முன்னர் இருந்ததைப் போல இப்போது இல்லை. அதேபோல அடிமை குடிமை முறையும் இப்போது இல்லை. ஓடுக்குபவனை திருப்பி அடிக்க திராணியற்று அல்லது உரிமையற்று எல்லாம் தலைவிதி என்று சொல்லிக்கொண்டிருந்த சமூகம் இப்போது தாயகத்தில் இல்லை. இந்தியவில் தலித் தலித்தியம் என்ற சொல்லுருவாக்கத்துக்கு அடிப்படையாக களயதார்த்தம் ஈழத்தில் இல்லை. ஈழத் தமிழர்களான எங்களைப் பொறுத்த வரை நாங்கள் தமிழர்கள் என்ற பொது அடையாளத்துக்குள் நின்று எங்களுக்கு எதிரான அடககு முறைகளுக்கும் ஒடுக்கு முறைகளுக்கும் எதிராகப் போராடுவதே இன்றைய தேவையாகும்.

ஆறுமுகநாவலர் தமிழ்தேசியவாதத்துக்கு அடித்தளம் இட்டவர் என்று கூறுவதன் மூலம் அவர் சாதிய மேலான்மையை நிலை நிறுத்தியவர் என்று நிறுவி அதனால் தமிழ் தேசியம் என்பதே அதை நிலைநிறுத்துவதை அடிப்படையாகக் கொண்டது எனறு காட்ட முற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தேசிய சிந்தனை என்பது ஒரு சமூகத்துக்குள் இருக்கும் அனைத்து முரண்பாடுகளையும் களைந்து அந்த சமூகத்தை ஒரே இனம் என்ற அடிப்படையில் ஒன்றுபட வைப்பதாகும். ஆனால் ஆறுமுக நாவலரோ சாதி பார்த்ததன் மூலம் தமிழினத்தை பிளவுபடவைத்தார். ஐரோப்பியர்களின் வருகையால் பிடி தளர்ந்து போன சாதிகட்டமைப்பை சற்சூத்திரக் கோட்பாடு என்ற ஒன்றைக் கொண்டு வந்து இறுக்கமாக்கினார். ஆங்கிலக் கல்வி கற்று பைபிளை அனைவரும் படித்துப் புரிந்து கொள்ளக் கூடிய இலகு தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்து கிறீஸ்தவ மதமாற்றத்துக்கு ஆரம்பத்தில் மறைமுகமாக துணைபோன அவர் அடுத்தட்டு மக்கள் மதம்மாறி ஆங்கிலக்கல்வி கற்று வளர்ச்சியடைவது தனது சமூக மேலாண்மையை பாதிக்கும் என்று உணர்ந்து கொண்டதும் கிறீஸ்தவமத எதிர்ப்பை முதன்மைப்படுத்தினார். சைவ மேன்மையை வலியுறுத்திய அவர் கிறிஸ்த்தவ மதமாற்றத்தை தடுத்து நிறுத்தி தமிழ் மக்கள் அனைவனையும் ஒரே இனம் ஒரே மதத்தவர் என்ற அடிப்படையில் ஒன்றிணைக்கும் தேசியச் சிந்தனை உடையவராக இருந்திருந்தால் அவர் தான் உருவாக்கிய சைவப்பிரகாச வித்தியாசாலைகளில் தமிழர்கள் என்ற அடிப்படையில் எந்தவித வித வேறுபாடுமின்றி அனைவருக்கும் கல்வி கற்கும்வாய்ப்பை கொடுத்திருப்பார். ஒரு சமூகத்தின் உயிர்நாடியாகவும் தேசிய அடையாளமாகவும் இருப்பது கிராமியக் கலைகளாகும். அந்தக் கலைகளின் நிகழ்களங்களாக ஆலயங்களே இருப்பது வழக்கமாகும். ஆனால் ஆறுமுக நாவலரோ இழிசனர்களர்கள் என்று தான் கருதிய ஒடுக்கப்பட்ட மக்களால் நடத்தப்படும் இந்தக் கலைகள் ஆலயங்களின் புனிதத்தை கெடுப்பதாக கூறி அவற்றை ஆலங்களில் நிகழ்த்தக் கூடாதென்று தடை செய்ததன் மூலம் இன்னொரு விதத்திலும் தமிழ் தேசிய உருவாக்கத்துக்கு இடையூறு செய்தார். ஆறுமுக நாவலர் சிறந்த தமிழ் அறிஞர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அவர் தமிழுக்கு செய்த நன்மை 30 வீதம் என்றால் தமிழ் சமூகத்துக்கு செய்த தீமை 70 வீதமாகும். எனவே ஆறுமுக நாவலரில் இருந்தே தமிழ் தேசியவாதம் தோற்றம் பெற்றது என்று கூறுவது எற்புடையதல்ல. அவ்வாறே தமிழுர்களுடைய உரிமைப்போர் யாழ்ப்பாண மேல்தட்டு பிரிவினரால் அவர்களுடைய வர்க்க நலன்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது என்று கூறுவதும் வரலாற்றை திரிக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு முன்வைக்கப்படும் ஒரு கூற்றாகும்.

குடாநாட்டில் சாதி ரீதியாக ஓடுக்ப்பட்ட மக்கள் தாங்கள் குடியிருந்த நிலைத்தை தங்களுக்கு சொந்தமாக்குவதற்கும் புதிய நிலங்களை வாங்குவதற்கும் 1892ம் ஆண்டும் 1904 ம் ஆண்டும் நடந்திய நில உரிமைப் போராட்டங்களும் 1910 ம் ஆண்டும் 1920ம் ஆண்டும் நடத்திய கல்வி கற்கும் உரிமை மற்றும் மேலாடை அணியும் உரிமை கல்வீடு கட்டும் உரிமை என்பவற்றுக்காக நடத்திய போராட்டங்களும் 1935 மற்றும் 1960 களில் நடந்த தீண்டாமை ஒழிப்பப் போராட்டங்களே தமிழ் தேசிய சிந்தனையின் உருவாக்கத்திற்கான அடிப்படைகளாகும். ஒரு சமுகம் எதிர்கொள்ளும் அக-புற முரண்பாடுகளின் ஐக்கியமும் போராட்டமும் தான் அந்த சமூகத்தை அடுத்த கட்டத்தை நோக்கி தள்ளுகிறது என்பது இயங்கியல் விதியாகும். இந்த வகையிலேயே தமிழ் சமூகம் முதலில் தனக்குள் இருந்த அகமுரண்பாட்டுகளுக்கு எதிராக போராடி அதன் அடுத்த கட்டமாக தன் மீது புற நிலையில் இருந்து திணிக்கப்பட்ட பௌத்த சிங்கள பேரினவாதத்தக்கு எதிராக தற்போது போராடுகிறது.

சிறீலங்கா அரசு தமிழ் மக்களுடைய விடுதலை உணர்வை சிதைப்பதற்கும் தமிழ்தேசிய ஒருமைப்பாட்டை கலைப்பதற்கும் பிரதேசவாதம் சாதியம் ஆகிய நட்பு முரண்பாடுகளை பகை முரண்பாடுகளாக மாற்றும் முயற்சியில் திட்டமிட்ட ஈடுபட்டு வருகிறது. இதற்காக ஒரு பெரிய கருத்தில் போரையே அது தொடுத்திருக்கிறது. அதன் ஒரு அங்கம் தான் விடுதலைப்புலிகள் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினரின் நலன்களுக்காக மட்டும்தான் போராடுகிறார்கள் என்று சித்தரிக்க முயல்வதாகும். புலம் பெயர்ந்த தமிழ் சமூகம் போராட்டத்தின் ஆதார சக்தியாக ஒன்ற திரள்வவதை தடுப்பதற்கான வேலைத் திட்டத்தையும் சிறீலங்கா அரசு செய்துவருகிறது.

இந்துவத்தை அடிப்படையாகக் கொண்ட சனாதன மதம் என்பது வேறு தமிழர் மதம் என்பது வேறு என்பதை முதலில் நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு சமூகமும் தனக்கென்று ஒரு மெய்யிலை கொண்டிருப்பதைப் போலவே தமிழ் சமூகமும் தனக்கென்று தனித்துவமான மெய்யிலை கொண்டிருக்கிறது. தமிழர் மெய்யில் எப்படி பார்ப்பணிய மெய்யிலால் ஆக்கிரமிக்கப்பட்டது என்பதை ஆராயுங்கள். தமிழ் சமூகத்தில் இருந்த ஓதுவார்கள் அல்லது அந்தணர்களும் வர்ணக் கோட்பாட்டையும் அதன் சாராம்சமான புனிதம் தீட்டு என்பவற்றையும் தங்களது சடங்காசாரங்களாக் கொண்டுள்ள பார்ப்பணியர்களும் ஒன்றல்ல என்பதை உணருங்கள்.

சிவன் கந்தன் கண்ணன் காளி ஐயனார் முதலான தமிழ் கடவுள்கள் எப்படி பார்பணியக் கடவுள்களாக மாற்ப்பட்டார்கள் என்பதை ஆராயுங்கள். தமிழ்நாட்டிலுள்ள தமிழ் கோவிலான சிதம்பரத்தில் தேவாரம் திருவாசகம் பாடுவதற்கு நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்ற அந்தக் கோவில் தீட்சதர்களுடைய மனோபாவம் என்ன என்பதை விவாதியுங்கள். இந்து மதத்தின் மேன்மை சிறப்பு என்பதைபற்றி எல்லாம் மதம் என்ற ஒரு தனியான தலைப்பின் கீழ் ஆராயுங்கள். இந்து மதத்தில் உள்ள வர்ணக் கோட்பாடு சரியா தவறா என்பதை விவாதியுங்கள். தயவு செய்து அதை விடுத்து தமிழ் தேசியம் என்பது இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்டது என்று அதனுடன் இணைத்து பேசுவதற்கு முற்படாதீர்கள். இந்துமத மேன்மைக்காவே விடுதலைப் போராட்டம் நடக்கிறது என்ற எதிரிகளின் பிரச்சாரத்துக்கு துணைபோகாதீர்கள். தமிழ் தேசியம் என்பது அனைத்து தமிழ் மக்களுக்கும் பொதுவானது பாரபட்சம் காட்டதது. பிறப்பால் தொழிலால் மக்களை இழிவுபடுத்தாதது என்பதை உங்கள் பேச்சிலும் எழுத்திலும் செயலிலும் காட்டுங்கள். ............

சிவா சின்னப்பொடி

(04.03.2007 ல் யாழ் இணையத்தில் எழுதியது)

நல்லதொரு கட்டுரை, நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள விசுகு ஐயா 
பாதிக்கப்பட்டவர்களின் குரலும் வாக்குமுலமும் பாதிப்பை உண்டாக்கிய தரப்புக்கு பக்கசார்பானதாகவும் ஆத்திரத்தை உண்டாக்குவதாகவும் இருக்கும்.பாதிக்கப்படவர்கள் சொல்வதை நம்பவேண்டாம் அதெல்லாம் பொய் என்று பாதிப்பை உண்டாக்கிய தரப்பு செல்வது வழமைதான்  இதைத்தான்

 முள்ளிவாய்க்காலிலே இவ்வளவு கொடுமைகளையும் செய்த சிங்களத் தரப்பும் தழிழர் தரப்பை பார்த்து சொல்கிறது. இதற்கும் நீங்கள் எழுதிய இந்தக் கூற்றுக்கும் என்ன வித்தியாசம்.
என்னுடைய எழுத்தைப்படித்து ஆத்திரமடைந்த நீங்கள் சில கருத்துக்களை சொன்னதாக சிலர் வந்து என்னிடம் கூறினார்கள்.அதை க் கேட்டு எனக்கு கோபம் வரவில்லை. உங்களது தவறான பார்வையை எண்ணி அனுதாபம் தான் எற்பட்டது.ஏனென்றால் நான் நீண்டகாலமாக உங்களை அறிவேன் தனி;ப்பட்ட முறையில் நீங்கள் நல்ல மனிதர் என்பதையும் நான் அறிவேன்.
பாதிப்புக்கு எதிராக குரல் கொடுப்பதையும் போராடுபவதையும் பயங்கரவாதம் என்று சொல்லும் பார்வையின் சாயல் உங்கள் கூற்றில் இல்லையா என்பதை தயவு செய்து மனச்சாட்சியோடு கேட்டுப்பாருங்கள்.
நீங்கள் சொல்வதை மாற்றுக்கருத்து மாமணிகள் இவர் புலிவால் Gலிக்கு சார்பானவர்.இவர் எழுதுவதெல்லாம் புலிக்கு சார்பனது என்கிறார்கள்
கீழே உள்ளது ஒரு சாதிவெறியர் எனக்கு அனுப்பிய செய்தி....
'ஐந்தாம் வகுப்பு அறிவே இல்லாத பண்ணாடை பரதேசி நீ எல்லாம் ஏண்டா பதிவு எழுதிறாய்.நாயே போய் சோத்துப்பாசல் வாங்கிச் சாப்பிடடா.உனக்கெல்லாம் ஊடவியலாளன் என்டு சொல்ல என்னடா தகுதி இருக்கு?நீங்கள் எல்லாம் வெளிநாட்டக்கு வந்தாபோல பெரியாக்கள் ஆகியிட்டீங்களா?எப்பவடா நீங்கள் கொம்யூட்டரை கண்டனீங்கள்.கீ போட்டிலை தட்டுறதை விட்டுட்டு ஊருக்கு போய் கொப்பன்ரை தொழிலை செய்யடா?'
0000
ஆறுமுகநாவலரை பற்றி நிறையவே எழுத்துக்கள் வெளிவந்துவிட்டன. நான் எழுதிய என்னுடைய தரப்பு கருத்து. அதை எற்பதற்கும் மறுப்பதற்கும் உங்களுக்கு உரிமையுண்டு.அதை நான் எற்றுக்கொள்கிறேன்.ஆனால் நான் வெறித்தனமாக எழுதுகிறேன் பகக்ச்சார்பாக எழுதுகிறேன் என்பது விமர்சனதல்ல.சேறடிப்பு
அன்புடன்
என்றும்உங்களுக்கு தெரிந்த 
சிவா சின்னப்பொடி

பண்பட்ட ஒருவரின் எழுத்துக்கும் ஆழுமைக்கும் உங்கள் எழுத்துக்கள் எடுத்துக்காட்டு. பொதுவாக உணர்ச்சித்தளத்தில் நின்று தங்கள் சாதி உயர்வையும் திமிரையும் காவிக்கொண்டு திரிகிறவர்களுக்கு இது கசக்கும்.

எனினும் உங்கள் எழுத்தும் ஊடக வரத்தையும் சரியாகப்பயன்படுத்துங்கள்.

நன்றி சாந்தி

  • கருத்துக்கள உறவுகள்

நாவலர் சைவத்தையும் தமிழையும் வளர்திருக்கலாம் ஆனால் அவர் ஒரு சாதிவெறியர் தான் .

நாட்டிற்காக இனத்திற்காக மொழிக்காக  மதத்திற்காக உயிரையே கொடுக்க தயாராக இருக்கும் பலர் கூட இந்த சாதி விடயத்தில் கண்டும் காணாமல் தான் இருக்கின்றார்கள் .

எம்மவர் இந்த விடயத்தில் வலு சுழியர்.

இந்தக் கருத்துக்கு ஆயிரம் பச்சைப்புள்ளி தர வேணும் Arjun.

நாவலர் சைவத்தையும் தமிழையும் வளர்திருக்கலாம் ஆனால் அவர் ஒரு சாதிவெறியர் தான் .

நாட்டிற்காக இனத்திற்காக மொழிக்காக  மதத்திற்காக உயிரையே கொடுக்க தயாராக இருக்கும் பலர் கூட இந்த சாதி விடயத்தில் கண்டும் காணாமல் தான் இருக்கின்றார்கள் .

எம்மவர் இந்த விடயத்தில் வலு சுழியர்.

நிதர்சனமான உண்மை அர்ஜுன். 

இந்த இடத்தில் ஒன்றை எழுதலாம் என நினைக்கின்றேன் .

எனது பெற்றோர் இந்த விடயத்தில் மிக முன்மாதிரியாகத்தான் இருந்தார்கள் ,இதனால் அயலில் பல விமர்சனங்கள் கூட வந்ததுண்டு .

ஆசிரியர்களான பெற்றோர் எமது கிராமத்தில் சிறுபான்மை இனத்தவர்கள் நடாத்தும் விளையாட்டு போட்டிகளுக்கு நடுவர்களாக பல வருடங்களாக போய் வந்தார்கள் .அவர்களுடன் படிப்பிக்கும் எந்த ஆசிரியர்கள் ஒருவரும் அவர்களுடன் போகாதது மாத்திரமல்ல அதை தடுக்க மிக முயற்சித்தார்கள்

கோண்டாவில் வாகிச்வரி சனசமூக நிலையம் கேட்டுக்கொண்டதரற்கிணங்க அம்மா அவர்களுக்கு நடனம் வீட்டில் கொண்டுவந்து பழக்கி நல்லூர் தொகுதியில் முதல் பரிசும் வென்றார்கள் .

எனது அம்மா குடும்ப கட்டுப்பாட்டு அலுவலராக அவர்கள் வீடுவீடாக திரிந்து குடும்பகட்டுப்பாடின் அவசியத்தையும் விளக்கி  அதன்கான உபகரணங்களையும் விநியோகித்துவந்தார் .

கடந்த மாதம் அப்பா நாட்டிற்கு சென்று இருந்த  நேரம் தன்னை பல முன்னாள் நண்பர்கள்  வந்து சந்தித்ததாகவும் தான் கோவிலில் ஒரு அன்னதானம் கொடுக்கபோகின்றேன் நீங்கள் எல்லோரும் கட்டாயம் வரவேணும் என்று சொல்ல இப்போ தாங்கள் எந்த கோவிலுக்குள்ளும் போகலாம் தடையில்லை ஆனால் தங்களுக்கு மற்றவர்கள் கோவில்களுக்கு போக விருப்பமில்லை என்றார்களாம் .பின்னர் அப்பா கேட்டதற்கு இணங்க அவர்களும் வந்து கலந்துகொண்டதாகவும் எல்லோரும் ஒன்றாக இருந்து சாப்பிட்டதை பார்க்க தனக்கு மிக சந்தோசமாக இருந்ததாகவும்  அப்பா சொன்னார் .

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் அண்ணாவின் பெற்றோர் பலருக்கு முன்மாதிரியாக இருந்துள்ளார்கள் என்பதை அறிந்ததும் மகிழ்ச்சியாக இருந்தது..!

இந்த இடத்தில் ஒன்றை எழுதலாம் என நினைக்கின்றேன் .

எனது பெற்றோர் இந்த விடயத்தில் மிக முன்மாதிரியாகத்தான் இருந்தார்கள் ,இதனால் அயலில் பல விமர்சனங்கள் கூட வந்ததுண்டு .

ஆசிரியர்களான பெற்றோர் எமது கிராமத்தில் சிறுபான்மை இனத்தவர்கள் நடாத்தும் விளையாட்டு போட்டிகளுக்கு நடுவர்களாக பல வருடங்களாக போய் வந்தார்கள் .அவர்களுடன் படிப்பிக்கும் எந்த ஆசிரியர்கள் ஒருவரும் அவர்களுடன் போகாதது மாத்திரமல்ல அதை தடுக்க மிக முயற்சித்தார்கள்

கோண்டாவில் வாகிச்வரி சனசமூக நிலையம் கேட்டுக்கொண்டதரற்கிணங்க அம்மா அவர்களுக்கு நடனம் வீட்டில் கொண்டுவந்து பழக்கி நல்லூர் தொகுதியில் முதல் பரிசும் வென்றார்கள் .

எனது அம்மா குடும்ப கட்டுப்பாட்டு அலுவலராக அவர்கள் வீடுவீடாக திரிந்து குடும்பகட்டுப்பாடின் அவசியத்தையும் விளக்கி  அதன்கான உபகரணங்களையும் விநியோகித்துவந்தார் .

கடந்த மாதம் அப்பா நாட்டிற்கு சென்று இருந்த  நேரம் தன்னை பல முன்னாள் நண்பர்கள்  வந்து சந்தித்ததாகவும் தான் கோவிலில் ஒரு அன்னதானம் கொடுக்கபோகின்றேன் நீங்கள் எல்லோரும் கட்டாயம் வரவேணும் என்று சொல்ல இப்போ தாங்கள் எந்த கோவிலுக்குள்ளும் போகலாம் தடையில்லை ஆனால் தங்களுக்கு மற்றவர்கள் கோவில்களுக்கு போக விருப்பமில்லை என்றார்களாம் .பின்னர் அப்பா கேட்டதற்கு இணங்க அவர்களும் வந்து கலந்துகொண்டதாகவும் எல்லோரும் ஒன்றாக இருந்து சாப்பிட்டதை பார்க்க தனக்கு மிக சந்தோசமாக இருந்ததாகவும்  அப்பா சொன்னார் .

உங்கள் ஊர் நல்ல ஊர் போலக் கிடக்கு...  என் ஊரில் கடந்த வருடம் நடந்த வைரவர் கோவில் திருவிழாவில் சிறுபான்மை தமிழர்கள் (இந்தப் பதம் சரி என நினைக்கவில்லை) இனைச் சார்ந்த ஒரு அன்பர் வைத்த திருவிழாவில் (15 நாள் திருவிழாவில் அவரதும் ஒரு நாள்) அவர் சமூகத்தினைச் சார்ந்த மற்றும் அவரது சமூகத்தினைப் போன்றவர்கள் மட்டும் கலந்து கொண்டு பொங்கல், வடை என்பன சாப்பிட சாதித் திமிர் கூடியவர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை. இதனை அவர்கள் அனைவரும் தமக்குள் பேசி, நிறுவன மயப்பட்டு செய்துள்ளார்கள். இதனை முன்னின்று செய்தவர்களில் என் மாமன் தான் முக்கியமானவர் (தன் தங்கையை இதே சமூகத்தினைச் சார்ந்தவர் மணம் முடித்தமைக்காக காரால் அடித்து கொல்ல வைத்தவர்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.