Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எந்த வயதில் திருமணம் செய்யலாம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் என்ற வார்த்தையைக் கேட்டாலே போதும் அனைவரது மனதிலும் ஒரு பயம் ஏற்படும். வேண்டாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பார்கள். ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரை திருமணம் என்றால் தங்களது சுதந்திரத்தைப் பறி கொடுப்பதாக அர்த்தம். அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு திருமணத்தை தள்ளிப் போடுவதால் உண்டாகும் பிரச்சனையைப் பற்றி தெரியவில்லை. மேலும் திருமணத்தை தள்ளிப் போட்டால் தான், குடும்பத்தின் பாரத்தை உடனே சுமப்பது போல இருக்கும் என்று அனுபவசாலிகள் கூறி, மேலும் அவ்வாறு 25 வயதில் ஆகாமல், அதற்கு மேல் நடந்தால் என்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்றும் கூறுகின்றனர்.

திருமணமானது 28-30 வயதில் ஏற்பட்டால், உடனே குழந்தை பிறக்க வேண்டும் என்ற நிலைக்கு ஆளாக நேரிடும். ஏனெனில் 30 வயதிற்கு மேல் குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என்று நினைப்பது தவறு. அவ்வாறு நினைத்தால் குழந்தை பிறப்பதில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

மேலும் வாழ்க்கையை மனைவி/கணவருடன் சந்தோஷமாக எங்கேயும் சுற்றி அனுபவிக்க முடியாது. குறிப்பாக குடும்பத்தை சரியாக நடத்த எந்த ஒரு திட்டத்தையும் ஒழுங்காக போட முடியாது. அதுவே 25 வயதில் நடந்தால், மனைவி/கணவரோடு சந்தோஷமாக ஊர் சுற்றி, நன்கு அனுபவித்து, ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு, குடும்பத்தை எப்படியெல்லாம் நல்ல நிலைக்கு கொண்டு வரலாம் என்று எதையும் யோசித்து செய்ய முடியும்.

திருமணமானது 25 வயதில் நடந்தால் இருவரும் நன்கு புரிந்து கொண்டு, ஒரு மனபக்குவத்திற்கு வர முடியும். மேலும் நண்பர்களுடன் எங்கேனும் இருவரும் ஒன்றாக சென்று விட்டு எந்த நேரத்திலும் வீட்டிற்கு வரலாம். அப்போது யாரும் எந்த தடையும் போட முடியாது. ஏனெனில் அப்போது நீங்கள் புதுமணத் தம்பதியர்களாகவே தெரிவீர்கள். ஆகவே எவரும் தடைவிதிக்க முடியாது. மேலும் உங்கள் சந்தோஷத்திற்கு எந்த இடையூறும் இருக்காது.

மேலும் இந்த வயதில் திருமணமானது நடந்தால், ஒரு 30 வயது ஆகும் போது உங்களுக்கு ஒரு பொறுப்புணர்வு வரும். குடும்பத்தை எப்படி நடத்தினால், எதிர்காலத்தில் நாமும் நம் குழந்தைகளும் சந்தோஷமாக இருக்கலாம் என்று நன்று புரியும். இருவரும் தவறு செய்தால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் உங்களுக்கு சொல்லி, உங்களது தவறை திருத்துவார்கள். சொல்லப்போனால் ஒரு நல்ல அனுபவம் கிடைக்கும். அது பிற்காலத்தில் உங்களது குழந்தைக்கு சொல்லிப் புரிய வைக்க உதவியாகவும் இருக்கும்.

30 வயதில் திருமணம் செய்தால், உங்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு திருமணம் செய்வதற்குள் நீங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிடுவீர்கள். முக்கியமாக சொல்லப் போனால், அவர்கள் காலேஜ் வரும் போது உங்களுக்கு 50 வயதாகியிருக்கும். அந்த வயதில் வேலைக்கு செல்வது என்பது சற்று கடினமான விஷயம். உடல் நிலையும் அதற்கு ஒத்து போகாது. மேலும் அந்த வாழ்க்கை சற்று கடினமாக இருக்கும்.

ஆகவே திருமணம் செய்ய சரியான வயது 25 தான் என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர். என்ன நண்பர்களே! நீங்க எப்ப திருமணம் செய்யலாம்-னு இருக்கீங்க!!!!

http://mahizhaithiru.wordpress.com/category/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E2%80%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-psychology/

  • கருத்துக்கள உறவுகள்

திருமணத்தைப் பின்போடுபவர்களிடம், நான் கூறுவது இது தான்!

 

'பிறக்கப் போகும் குழந்தை, 'அப்பு' என்று கூப்பிடாமல், 'அப்பா' என்று கூப்பிடக் கூடிய வயதில், கலியாணம் கட்டி விட வேண்டும்! :D

 

ஆனால், யாழ்ப்பாணத் தமிழனைப் பொறுத்தவரையில்,

 

'சுமை தாங்கியே, இன்று சுமையானதேன்? :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலியாணம் கட்டுறதுக்கு வயது முக்கியமில்ல ஆனால் அதுக்காக பதினஞ்சு வயதில கலியாணம் கட்டேலா, எப்ப எங்களால ஒரு குடும்பத்தை உழைச்சு காப்பாத்த முடியுமோ அப்ப கட்டலாம்.  எந்த வயசில கலியாணம் கட்டினாலும் அந்த வாழ்க்கையின் வெற்றி சம்பந்தபட்ட ரெண்டுபேரிண்ட கையிலயும் தான் இருக்கு. பொறுமை விட்டுக்கொடுப்பு சகிப்புத்தன்மை இதெல்லாம் இருந்தால் எப்பொழுதுமே வெற்றிதான். அந்தகாலம் எங்கட அம்மம்மா கலியாணம் கட்டேக்க அவவுக்கு வயசு பதினைஞ்சு அம்மப்பாக்கு வயசு பதினேழு. அம்மம்மாக்கு முதல் பிள்ளை பிறக்கேக்க வயசு பதினாறு அவ்வளவு சிறு வயசில கலியாணம் கட்டினாலும் ரெண்டுபேரும் ஐம்பது வருசத்துக்கு மேல சந்தோசமா வாழ்ந்திச்சினம்.தோட்டம் துறவு குடும்பம் எண்டு எவ்வளவு சந்தோசமா வாழ்ந்திச்சினம். பணம் இல்லாதது ஒரு குறையாகவே இருக்கேல, இருக்கிறதை வச்சு சந்தோசமா வாழ்ந்திசினம். இதுதான் வாழ்க்கை.

 

  • கருத்துக்கள உறவுகள்

யாழின் முதிர்கன்னர்கள் (முதிர்கன்னிகளுக்கு எதிர்ப்பால் என்னப்பா )கவனிக்கவும் .காலத்தே பயிர் செய்க

  • கருத்துக்கள உறவுகள்

22/3 வயசில படிப்பை முடிச்சிட்டு.. 24/25 வயசில வேலை எடுத்திட்டு.... கலியாணம் கட்டிட்டா நல்ல சோக்கா இருக்கும்..! அப்ப தான் வாறது குந்தி இருந்து கொட்டிக்க வசதியா இருக்கும். போங்கடா நீங்களும் உங்கட கணக்கும். 24/25 வயசில வேலை எடுத்தா குறைஞ்சது 27/28 வயசில ஒரு வீட்டை வாங்கி செற்றிலாகிட்டு.. அப்புறமா.. ஊர் உலகம் சுத்திட்டு.. ஒரு 30 வயசுக்கு மேல.. தேவைன்னா ஒன்றைக் கட்டிக்கிறது.

 

நினைச்சுப் பாருங்க.. வாழ்க்கையில..0-5 வருசம்.. சும்மா நேசறி அது இதென்னு போயிடுது. அப்புறம் 6 - 18 வரை பள்ளிக்கூடத்தில படிப்போட போயிடுது. அப்புறம்.. யுனி.. அங்கால ஆராய்ச்சி.. வேலை.. உழைப்பு என்று... ஒரு 25/26 வயசாகிடும். அதுவரை வாழ்க்கையை சுதந்திரமா அனுபவிக்க வாய்ப்பே இல்லை. அதுக்கு அப்புறம் கலியாணம் என்ற பெயரில.. ஒரு சுமையை தலைல சுமந்துகிட்டு ஆயிரம் பிரச்சனைகளை உள்வாங்கிக்கிட்டு.. அப்படியே ஒரு 70/80 வயசு வரை போகனுன்னா.. அந்த வாழ்க்கையின் அர்த்தம் என்ன. சோ.. பையங்க.. ஒன்றைப் புரிஞ்சுக்குங்க. நாங்க படிக்கிறதோ.. வேலை தேடுறதோ கலியாணம் கட்டிக்கிறதுக்கு இல்ல. எங்கட வாழ்க்கையை முதலில ஸ்தரப்படுத்தி என்ஜோய் பண்ணிக்க. அதற்கு குறுக்கீடா கலியாணம் வருமுன்னா.. அதைச் செய்யாமல்.. தள்ளிப்போடுறது தப்புக் கிடையாது.

 

25 வயசில கலியாணம் கட்டிட்டு.. 45 வயசில தாத்தா ஆகிறதை.. சிலர் விரும்பக் கூடும். அதே 45 வயசில கலியாணம் கட்டிட்டு 65 வயசில தாத்தா ஆனா அது பறுவாயில்லை. தாத்தா வயசில தாத்தா ஆகலாம். சோ.. உந்த 25 கணக்கை கொண்டு போய் இந்த நவீன போட்டியுள்ள உழைக்க வேண்டிய என்ஜோய் பண்ண வேண்டிய உலகில் குப்பையில போடுவதே சிறந்தது..! நான்.. கட்டிறது என்றால் 45 க்குப் பிறகு தான் கட்டுவன். அதுவரை கிரேட்  என்ஜோய்மெண்ட் தான்..!

 

கட்டிட்டு கைவிடுறது.. இல்ல மறைச்சு இன்னொரு பொய் வாழ்க்கை வாழுறதிலும்.. கட்டாமல் நேர்மையா.. மனசுக்கு சஞ்சலம்.. சங்கடம் இல்லாம வாழ்க்கையை ஸ்திரப்படுத்தி.. என்ஜோய் பண்ணுறதுதான் ஒரு ஆம்பிளைக்கு அழகும் ஆரோக்கியமும் ஆகும். பெண்கள் வேண்டும் என்றால் 25 கட்டி 26 அம்மாவாகி 45 அம்மம்மா ஆகட்டும். யார் வேணான்னா..! ஆண்களின் உழைப்பை ஒட்டுண்ணி கணக்கா.. உறிஞ்சுற கூட்டத்துக்கு உதுவே ஜாஸ்தி..! :lol::):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கு

 

மனிக்கவும் இது சாதாரணமான மனிதர்களுக்கான பதிவு. உங்களை போன்றவர்களுக்கான பதிவு இல்லை :) .  நீங்கள் நெத்தாக விடப்போறன் எண்டால் நாங்கள் என்ன செய்யமுடியும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

22/3 வயசில படிப்பை முடிச்சிட்டு.. 24/25 வயசில வேலை எடுத்திட்டு.... கலியாணம் கட்டிட்டா நல்ல சோக்கா இருக்கும்..! அப்ப தான் வாறது குந்தி இருந்து கொட்டிக்க வசதியா இருக்கும். போங்கடா நீங்களும் உங்கட கணக்கும்.

 

 

உண்மை.

 

24/25 வயசில வேலை எடுத்தா குறைஞ்சது 27/28 வயசில ஒரு வீட்டை வாங்கி செற்றிலாகிட்டு.. அப்புறமா.. ஊர் உலகம் சுத்திட்டு.. (நிச்சயமாக இதற்கு பெற்றோர் சம்மதிக்கணும்)

ஒரு 30 வயசுக்கு மேல.. தேவைன்னா ஒன்றைக் கட்டிக்கிறது.

 

இதை நான் வரவேற்கின்றேன்

 

25 வயசில கலியாணம் கட்டிட்டு.. 45 வயசில தாத்தா ஆகிறதை.. சிலர் விரும்பக் கூடும். அதே 45 வயசில கலியாணம் கட்டிட்டு 65 வயசில தாத்தா ஆனா அது பறுவாயில்லை. தாத்தா வயசில தாத்தா ஆகலாம். சோ.. உந்த 25 கணக்கை கொண்டு போய் இந்த நவீன போட்டியுள்ள உழைக்க வேண்டிய என்ஜோய் பண்ண வேண்டிய உலகில் குப்பையில போடுவதே சிறந்தது..! நான்.. கட்டிறது என்றால் 45 க்குப் பிறகு தான் கட்டுவன். அதுவரை கிரேட்  என்ஜோய்மெண்ட் தான்..!

 

எனக்கும் வேணாம்(30 வயசு)

உங்களுக்கும் வேணாம் (45 வயசு)

35 ஓகே.

:lol::):icon_idea:

(இப்படி ஒரு நிலைக்குத்தான் என் பொடியுடன் ஒரு உடன்பாட்டுக்கு வந்திருக்கின்றேன்)

 

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு

 

மனிக்கவும் இது சாதாரணமான மனிதர்களுக்கான பதிவு. உங்களை போன்றவர்களுக்கான பதிவு இல்லை :) .  நீங்கள் நெத்தாக விடப்போறன் எண்டால் நாங்கள் என்ன செய்யமுடியும்.

 

சுப்பண்ணை இன்றைய காலம் தோட்டம் துரவுக் காலம் அல்ல. அன்று பள்ளிக்கூடம் போய் படிக்கிறதே கஸ்டமான நிலை. இன்று பல்கலைக்கழகம் போய் படிச்சாலும் வேலை கிடைக்கிறது முயற் கொம்பா உள்ள காலம்.

 

அன்று பெற்றோரின் உழைப்பில் சீதனம்.. முதிசம்.. சொத்து.. என்று.. வாழ்ந்தார்கள் பிள்ளைகள். இன்று சுய உழைப்பில் வாழ்வதே வாழ்க்கை என்று நினைக்கிறார்கள் இளைஞர்கள் யுவதிகள்.

 

அன்று வாழ்க்கை வட்டம் 40.. 50 வயதில் முடியுற காலம். இன்று.. பென்சன் வயசே 65..70 என்றாகிட்ட காலம். வாழ்க்கை வட்டம் 80/90 எட்டுது.

 

அன்று உலகத்தில் ஒரு சில குறிப்பிட்டவர்களுக்குத்தான் உலகத்தை சுற்றும் வாய்ப்பு. இன்று பலருக்கும் அது முடிகிறது. அன்று குழந்தை பெத்துக்கிறதுக்கு கலியாணம் தான் ஒரே வழி. இன்று அம்மா இல்லாமலே குழந்தை பெற்றுக்க முடியும்.

 

அன்று.. குழந்தைகளைப் பராமரிக்க அது கலியாணம் கட்டும் வரை பெற்றோர் அவசியம். இன்று.. குழந்தைகள் ஒரு வயதுக்குப் பின்னர் பெற்றோடு இருப்பதே பெரிய விசயம்.

 

எனவே அந்தக் காலத்தை இன்றைய காலத்துக்குள் வைச்சு பார்க்கக் கூடாது. இந்திய உபகண்டம் இன்னும் இருண்ட கண்டமாக உள்ளது என்பதற்கு மேற்படி கட்டுரை சாட்சி. நீங்களும் அதே இருண்ட உலகில் அதிக காலம் வாழ்ந்துவிட்டதாலோ என்னவோ.. அதற்குள் இருந்து வெளிவர முடியாமல் தவிக்கிறீங்க. விட்டு வெளில வந்து பாருங்க.. பிரகாசமான உலகமும் வாழ்க்கையும் உங்களுக்கும் கிடைக்கலாம். :icon_idea::)

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில எது சரி எது பிழை என்று சொல்ல முடியாது..உங்களுடைய சொந்த பந்தம்,இன சனத்தோடு சேர்ந்து செய்வதுதான் சரி.

என்னுடன் வேலை செய்கிற சில வெள்ளைகள், 25-30 -40 வயதிர்ற்குள், 4/5 பிள்ளைகள் உடன் வாழ்கிறார்கள். தன்னுடுடைய முதல் பிள்ளை ஒன்று, மனைவி இனது முதல் பிள்ளை 2, தமக்கு பிறந்த 1-2.. அவர்களுக்கு, அவர்களுடைய கலாச்சாரத்தில் இது ஏற்றுக்கொள்ளப்படக் கூடியது. ஆனால் எங்கள் சமூகத்தில் கணவன் மனைவினது 10 வருடதிற்க்கு முந்தைய டைரி வாசிப்பதே திகில் ஆக உள்ள போது அதற்க்கு ஏற்றமாதிரி தான் வாழ வேண்டும்.

இளவயது கர்ப்பம், கலாச்சார சிரழிவு பற்றி கதைப்பவர்கள்,அதில் உள்ள பெரிய பிரச்சனை எதில் வருகிறது என்று ஆராய்ந்தால், ஏன் எங்கள் சமூகத்தில் மட்டும் கொலை குற்றமாக பார்க்கப் படுகிறது என்று பார்த்தால், அதற்க்கு முக்கிய காரணம் இந்த இள வயது கற்பங்கள்எ என்று அறிந்தால், அதை இட்டு பெரிதாக "சமூக சீரழிவு " என்று மட்டும் பார்க்காமல்...அவர்களும் அந்த ஆணும் பெண்ணும், அந்த பிள்ளைகளும் வாழுகிற வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுத்தால் வளமான சந்ததிகள் வரும். இந்த இளவயது - கற்பத்தால் வரும் பிள்ளைகள் உலகையே மாற்றும் திறன் படைத்தவர்கள்.. 

 

  • கருத்துக்கள உறவுகள்

25 வயதில் பிள்ளைகளை பெற்றுக்கொள்ளலாம் :) , ஆனால் திருமணம் வேண்டும் என்று வற்புறுத்தல் இருந்தால் ஒரு 35-40 வயதில் வைத்துக்கொள்ளலாம் <_< . எந்தப் பிள்ளையின் அம்மா அதிகம் நச்சரிக்காமல் இருக்கின்றாரோ அவரைத்தான் மனைவியாகத் தேர்ந்தெடுக்கவேண்டும் :icon_mrgreen: .

  • கருத்துக்கள உறவுகள்

25 வயதில் பிள்ளைகளை பெற்றுக்கொள்ளலாம் :) , ஆனால் திருமணம் வேண்டும் என்று வற்புறுத்தல் இருந்தால் ஒரு 35-40 வயதில் வைத்துக்கொள்ளலாம் <_< . எந்தப் பிள்ளையின் அம்மா அதிகம் நச்சரிக்காமல் இருக்கின்றாரோ அவரைத்தான் மனைவியாகத் தேர்ந்தெடுக்கவேண்டும் :icon_mrgreen: .

 

வாய்ச் சொல்லில் வீரர் தான் என்று நன்றாகத் தெரிகிறது. :D

என்னைப் பொருத்தவரை பெண்கள் 25 வயதுக்குள்ளும் ஆண்கள் 30 வயதுக்குள்ளும் திருமணம் செய்து பெண்களுக்கு 30 வயதுக்கு முன் குழந்தைகளைப் பெற்றுவிடவேண்டும். அப்போதுதான் எமக்கு சக்தி இருக்கும்போதே பிள்ளைகளை வளர்த்து 45 வயதுக்குப்பின் அவர்கள் பட்டப்படிப்புத் தொடக்கி முடிய நாங்கள் எங்கள் அலுவல்களைப் பாத்து இன்னும் ஒரு 5 வருடத்தில் அவர்களுக்குத் திருமணம் முடித்துக் கொடுத்துவிட்டு நின்மதியா ஊர் சுத்தலாம் கணவனுடன்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வாய்ச் சொல்லில் வீரர் தான் என்று நன்றாகத் தெரிகிறது. :D

என்னைப் பொருத்தவரை பெண்கள் 25 வயதுக்குள்ளும் ஆண்கள் 30 வயதுக்குள்ளும் திருமணம் செய்து பெண்களுக்கு 30 வயதுக்கு முன் குழந்தைகளைப் பெற்றுவிடவேண்டும். அப்போதுதான் எமக்கு சக்தி இருக்கும்போதே பிள்ளைகளை வளர்த்து 45 வயதுக்குப்பின் அவர்கள் பட்டப்படிப்புத் தொடக்கி முடிய நாங்கள் எங்கள் அலுவல்களைப் பாத்து இன்னும் ஒரு 5 வருடத்தில் அவர்களுக்குத் திருமணம் முடித்துக் கொடுத்துவிட்டு நின்மதியா ஊர் சுத்தலாம் கணவனுடன்.

நெடுக்ஸ் முதலில் சொல்லியது மாதிரி, படிப்பு, வேலை, திருமணம், குழந்தை, பின்னர் குழந்தைகளின் படிப்பு, அவர்களின் திருமண, அதன் பின்னர் பேரப் பிள்ளைகளைப் பராமரித்தல் என்ற வட்டத்திற்குள் வாழும் சராசரி வாழ்க்கையைத்தான் பரிந்துரைக்கின்றீர்கள். இதற்குள் கால் நடக்கமுடியாத காலத்தில் கணவனுடன் ஊர் சுத்தலாம் என்ற ஆசை வேறு..!! :icon_mrgreen: 

 

  • கருத்துக்கள உறவுகள்

வாய்ச் சொல்லில் வீரர் தான் என்று நன்றாகத் தெரிகிறது. :D

என்னைப் பொருத்தவரை பெண்கள் 25 வயதுக்குள்ளும் ஆண்கள் 30 வயதுக்குள்ளும் திருமணம் செய்து பெண்களுக்கு 30 வயதுக்கு முன் குழந்தைகளைப் பெற்றுவிடவேண்டும். அப்போதுதான் எமக்கு சக்தி இருக்கும்போதே பிள்ளைகளை வளர்த்து 45 வயதுக்குப்பின் அவர்கள் பட்டப்படிப்புத் தொடக்கி முடிய நாங்கள் எங்கள் அலுவல்களைப் பாத்து இன்னும் ஒரு 5 வருடத்தில் அவர்களுக்குத் திருமணம் முடித்துக் கொடுத்துவிட்டு நின்மதியா ஊர் சுத்தலாம் கணவனுடன்.

 

நீங்கள் சொல்றபடி பார்த்தால் உங்களுக்கு இப்ப பேரன்,பேர்த்தி இருக்கோணும் அல்லவா :D

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் படித்து,நல்ல வேலை எடுத்து பொருளாதாரா ரீதியாக தம்மை வளப்படுத்தாமல் திருமணம் கட்டவே கூடாது.25 வயதிற்குப் பிறகு கட்டினால் அவர்களுக்கு மெட்சூரிட்டியும்,பொறுப்புணர்வும் அதிகம்.வாழ்க்கையும் நன்றாக இருக்கும்

 

  • கருத்துக்கள உறவுகள்

25 வயதிற்கு மேல் உங்களுக்கேற்ற ஒரு பெண்ணோ ஆணோ

உங்களிடம் கைவசம் இருந்தால் காலத்தை வீணடிப்பதில் பிரயோசனம் இல்லை.

உடனே கட்டிவிடுங்கள் .இழுத்தடித்துக் கொண்டு சென்றால் இருக்கின்றதும்

கை நழுவிச் சென்றால் அப்புறம் காலம் முழுவதும் கவலையும் விரக்தியும் தான்

வாழ்க்கையாகும் .

நான் சரியான வயதில் தான் கட்டியிருக்கின்றேன்.

இதுவரை அதையிட்டு மிகவும் மகிழ்வுடன் வாழ்கின்றேன். :)  

 

புலம்பெயர் வாழ்வில் 30இற்கு மேல்தான் திருமணம் சரியாக வரும்.  புலம்பெயர் தேசங்களில் இருவருமே சிங்கிளாக என்ஜாய் பண்ணியபிறகு செய்வதுதான் சரிவரும்.   இது ஆண், பெண் இருபாலாருக்கும் பொருந்தும்.  முக்கியமாகப் பெண்கள், பொருளாதார ரீதியில் வளர்ந்திருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே கருத்தெழுதியவர்கள் பெரும்பாலும் புலத்திலுள்ள வாழ்க்கை முறையை மனதில்கொண்டு எழுதியுள்ளதாகவே படுகிறது.

 

உங்கள் தாய்நாட்டில் அறுபது வயது கடந்தவரின் செல்வம் சம்பாதிக்கும் திறன் எவ்வளவு? அவரின் பொருளாதார நிலை என்னவாக இருக்கும்? தனியார் நிறுவனங்களிலோ அல்லது அரசாங்க வேலைகளிலோ அறுபது கடந்த பின் வேலையில் தொடர முடியுமா? எந்த வேலைக்குச் சென்றாலும் "ஐயா பெரியவரே உங்களுக்கு வயசுபோச்சுது...ஏதாவது மூலையில் உட்கார்ந்து கணக்கெழுதும் வேலை இருந்தால் பாருங்கோ!" என திருப்பி அனுப்பும் நிறுவனங்களே அதிகம். கடின கூலி வேலையாவது செய்யலாமெனில் உடல்நிலை ஒத்துழைக்குமா?

 

புறச்சமூக நிலை இப்படியிருக்கையில், முறுக்கிக்கொண்டு, நான் முப்பது அல்லது நாப்பது வயதில்தான் கல்யாணம் செய்து, பிள்ளைகுட்டிகளை பெற்று கரையேறுவேன் என்றால், பிறக்கும் குழந்தைகளுக்கு, கால்கட்டு போட தனக்கு மூன்றாம் கால் தேடும் வயதிலா, மகளுக்கோ, மகனுக்கோ துணை தேடுவார்?

 

ஆகவே சொந்த விருப்பு வெறுப்புகள் வேறு, அக, புறச்சூழல்கள் வேறு...

 

ஒருவரின் அறுபது வயதிற்குள் குடும்ப பாரத்தை தாங்க, உற்ற உறுதுணையாக தோள் கொடுக்கும் தோழனாக மகன் நிச்சயம் இருக்க வேண்டும்.. மகளென்றால் திருமணத்தை முடிக்கும் நிலையில் இருக்கவேண்டும்...அப்பொழுதுதான் முதுமையினால் வரப்போகும் உடல் உபாதைகளையும் கருத்தில் கொண்டு தனக்கு உழைக்கும், அலையும் தெம்பு இருக்கும் போதே குடும்பக் கடமைகளை முடிக்க இயலும்.

 

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே கருத்தெழுதியவர்கள் பெரும்பாலும் புலத்திலுள்ள வாழ்க்கை முறையை மனதில்கொண்டு எழுதியுள்ளதாகவே படுகிறது.

 

உங்கள் தாய்நாட்டில் அறுபது வயது கடந்தவரின் செல்வம் சம்பாதிக்கும் திறன் எவ்வளவு? அவரின் பொருளாதார நிலை என்னவாக இருக்கும்? தனியார் நிறுவனங்களிலோ அல்லது அரசாங்க வேலைகளிலோ அறுபது கடந்த பின் வேலையில் தொடர முடியுமா? எந்த வேலைக்குச் சென்றாலும் "ஐயா பெரியவரே உங்களுக்கு வயசுபோச்சுது...ஏதாவது மூலையில் உட்கார்ந்து கணக்கெழுதும் வேலை இருந்தால் பாருங்கோ!" என திருப்பி அனுப்பும் நிறுவனங்களே அதிகம். கடின கூலி வேலையாவது செய்யலாமெனில் உடல்நிலை ஒத்துழைக்குமா?

 

புறச்சமூக நிலை இப்படியிருக்கையில், முறுக்கிக்கொண்டு, நான் முப்பது அல்லது நாப்பது வயதில்தான் கல்யாணம் செய்து, பிள்ளைகுட்டிகளை பெற்று கரையேறுவேன் என்றால், பிறக்கும் குழந்தைகளுக்கு, கால்கட்டு போட தனக்கு மூன்றாம் கால் தேடும் வயதிலா, மகளுக்கோ, மகனுக்கோ துணை தேடுவார்?

 

ஆகவே சொந்த விருப்பு வெறுப்புகள் வேறு, அக, புறச்சூழல்கள் வேறு...

 

ஒருவரின் அறுபது வயதிற்குள் குடும்ப பாரத்தை தாங்க, உற்ற உறுதுணையாக தோள் கொடுக்கும் தோழனாக மகன் நிச்சயம் இருக்க வேண்டும்.. மகளென்றால் திருமணத்தை முடிக்கும் நிலையில் இருக்கவேண்டும்...அப்பொழுதுதான் முதுமையினால் வரப்போகும் உடல் உபாதைகளையும் கருத்தில் கொண்டு தனக்கு உழைக்கும், அலையும் தெம்பு இருக்கும் போதே குடும்பக் கடமைகளை முடிக்க இயலும்.

 

தாயகத்தில் எங்கள் ஆசிரியர் ஒருவர் 50 வயதில் திருமணம் செய்து குழந்தையும் பெற்றுக் கொண்டிருந்தார். பாடசாலைக்கு வரும் போது.. அந்தப் பிள்ளையை நேசறியில் கொண்டு போய் விடுவார். மதியம் போல கூட்டி வந்து பள்ளியில் ஆசிரிய கூடத்தில் விடுவார். அப்புறம் வீட்ட போகேக்க கூட்டிக் கொண்டு போவார். அவரை யாரும் 50 வயதான ஆள் என்றே சொல்லமாட்டார்கள். காரணம் ஒரு இளைஞனுக்குரிய துடிப்பு அவரிடத்தில்.

 

நான் அவதானித்த வகையில் தாயகமோ.. புகலிடமோ.. சின்ன வயதில் திருமணம் செய்பவர்கள் கூடிய உடல் முதிர்ச்சியை எய்துவதை காணக் கூடியதாக உள்ளது. இதற்குக் காரணம் குடும்பப் பாரமாக இருக்கலாம். ஒருவர் தன்னுடைய வாழ்க்கையை சுவாரசியம் நிறைந்ததாகக் கொண்டு போகவே பாடுபட வேண்டிய இன்றைய காலத்தில்.. தன்னோடு 2/3 பேரை கூட இழுத்துக் கொண்டு போவது என்பது நிச்சயம்.. கடினமானது. அதற்கான உழைப்பு அவர்கள் முதிர்ச்சியை எளிதில் தொடச் செய்கிறது என்று நினைக்கிறேன்... (பெண்களிலும் கூட. உங்க ஊரிலும்..இப்ப எல்லாம் நடிகைகள் 30 தாண்டித் தான் திருமணமே செய்கின்றனர்.)

 

அதனால் தான் என்னவோ மகான்கள் எல்லாம் பிரமச்சாரியத்தை விரும்பினார்கள். சித்தார்த்தன் கூட ஒரு கட்டத்தில் குடும்பத்தைக் கைவிட்ட பின் தான்.. கெளதம புத்தரானார். அன்னை தெராசோ அப்படி. எங்கட தேசிய தலைவரைக் கூட வளைச்சுப் போட அவரிற்கு குடும்பம் பற்றிய ஆசை காட்டல்களை இந்திய இராணுவம் பாவித்தது... ஆனால் அவர் அதனை தூக்கி தூர வை என்று சொல்லிவிட்டார். இப்படி எல்லோருக்கும் திருமணம் என்பது ஒரு கட்டத்தில் பாரமாகவே இருந்துள்ளது. அதனால் அதனை ஏலியா செய்து ஏலியாவே.. நலிந்து மெலிந்து நூடில்ஸ் ஆவதிலும் நிதானமாக இந்த விடயத்தில் முடிவெடுக்க வேண்டும். குறிப்பாக ஆண்கள்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மேலும்.. தாயகத்தில் திருமணம் என்பதை புரட்சிகர சிந்தனைக்கு எதிரான ஆயுதமாக பாவிக்கின்றனர். திருமணம் செய்து கொண்டவர்கள் தீவிரமான சிந்தனையில் இறங்கமாட்டார்கள் என்ற பொது எண்ணம் எல்லோரிடமும் உள்ளது. அந்த வகையில்.. இயக்கத்துக்கு ஓடிடுவான்/ள் என்று பிள்ளைகளுக்கு சின்ன வயதில் திருமணம் செய்து வைத்தோரும் எம்மில் உளர். அதேபோல் இராணுவம்.. ஒட்டுக்குழு பிடிக்கும் என்று திருமணம் செய்து வைக்கப்பட்டோரும் உளர். இப்போது சிங்களமும் முன்னாள் போராளிகளுக்கு திருமணம் செய்து வைக்கிறது. காரணம்.. குடும்பத்தை சுமக்கிற வலியில் தேசத்தைப் பற்றி இவனுக்கு/இவளுக்கு எங்க சிந்தனை வரப்போகுது என்று தான்..! ஆக திருமணம் என்பது சாதாரண விடயமல்ல..! எமது சக்தியை ஆற்றலை..உறிஞ்சும் அநியாயப்படுத்தும்.. ஒரு விடயம்..! சில இடங்களில் அது பாதுகாப்புக் கவசம் ஆக்கப்படுகிறது. அந்த இடத்தில் அதனைப் பாவித்து தப்பிக் கொள்வது தவறல்ல..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இளம் பெண் தற்கொலை: கணவன், மாமியார் உள்ளிட்ட  மூவர் மீது வழக்கு பதிவு

 

தர்மபுரி செங்கொடிபுரத்தை சேர்ந்த முனியப்பன் மகள் அம்பாள்குணசுந்தரி, 23. இவரும் ஜாலிபுதூர், காந்திநகரை சேர்ந்த டிரைவர் சசிக்குமார், 24 ஆகிய இருவரும் காதலித்து வந்தனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த, இவர்கள் பெற்றோரின் எதிர்ப்பை மீறி, கடந்த, 2011 ஜனவரி, 30ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

 

தர்மபுரியில் வசித்து வந்தனர். கடந்த, நான்கு மாதங்களுக்கு முன் சசிக்குமாரின் தந்தை தங்கம் இறந்ததை தொடர்ந்து, சசிக்குமார், தனது மனைவியுடன், ஜாலிபுதூர் காந்திநகரில், தனது தாய் வளர்மதி, 50, சகோதரர் சரணவன், 27 ஆகியோருடன் வசித்து வந்தார்.

 

அம்பாள்குணசுந்தரி கடந்த, 1ம் தேதி தர்மபுரி செங்கொடிபுரத்தில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு வந்தார். 2ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது. எலி மருந்தை குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து அவரை, அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனிற்றி இறந்தார். முனியப்பன் கொடுத்த புகாரின் பேரில், தர்மபுரி டவுன் போலீஸார் விசாரித்து, சசிக்குமார், வளர்மதி, சரவணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவான மூன்று பேரையும் போலீஸார் தேடிவருகின்றனர். திருமணம் நடந்து, இரண்டரை ஆண்டுகளில், இளம் பெண் இறந்தது குறித்து, தர்மபுரி ஆர்.டீ.ஓ.,மேனகா விசாரிக்கிறார்.

 

கள்ளக்காதலுக்கு இடையூறு - கணவனை  கொலை செய்த மனைவி உட்பட மூவர் கைது.

 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்த ஜூஜூவாடி எஸ்.எல்.வி., நகரை சேர்ந்தவர் மெய்யழகன்,வயது- 42. இவர் கர்நாடகா மாநிலம் அத்திப்பள்ளியில் உள்ள ஒரு பி.வி.சி.பைப் கம்பெனியில் தொழில்நுட்ப மேலாளராக பணியாற்றி வந்தார்.

 

இவரது மனைவி ஜெயந்தி, வயது-30. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த, 10-ம் தேதி ஜூஜூவாடி செந்தில் நகரில் மெய்யழகன், பிராந்தி பாட்டிலால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

 

இதுகுரித்த்டு, ஓசூர் டி.எஸ்.பி., கோபி,  போலிஸ் இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர். மெய்யழகன், மனைவியிடம் போலீஸார் "கிடுக்கி'பிடி விசாரணை மேற்கொண்டனர்.

 

இதில் ஜெயந்திக்கும், மூக்கண்டப்பள்ளி எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த செல்ஃபோன் கடை அதிபர் பிரபு, வயது-29 என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததது தெரியவந்தது.

 

மெய்யழகன் வீட்டில் இல்லாத போது, பிரபு அவரது வீட்டிற்கு சென்று ஜெயந்தியுடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளார். இதையறிந்த மெய்யழகன், மனைவியை அடித்து கண்டித்துள்ளார்.

 

இதை ஜெயந்தி, பிரபுவிடம் கூறியுள்ளார். இதையடுத்து, இருவரும் தங்களுடைய கள்ளக்காதலுக்கு இடை யூறாக உள்ள மெய்யழகனை கொலை செய்ய திட்டமிட்டனர்.

 

அதன்படி, கடந்த, 9-ம் தேதி இரவு  பிரபு மற்றும் திருவள்ளுவர் நகரை சேர்நத அவரது நன்பர் சரண், வயது-24 ஆகியோர், , மெய்யழகனை செந்தில் நகருக்கு அழைத்து சென்று பிராந்தி பாட்டிலால் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். அதற்க்கு பின்னர் அவர்கள் ஏறிவரும் தலைமறைவாகினர்.

 

ஜெயந்தியிடம் விசாரணை செய்ததன் மூலம் துப்பு துலங்கிய போலீசார்  அவரது கள்ளக்காதலன் பிரபு, அவரது நண்பர் சரண் ஆகியோரை நேற்று கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரனையில், சனிக்கிழமை அத்திப்பள்ளிக்கு வேலைக்குச் சென்ற மெய்யழகனை, பிரபு, சரவணன் இருவரும் பின் தொடர்ந்து சென்று செந்தில் நகரில் வைத்து இருவரும் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

 

கைது செய்யப்பட்ட ஜெயந்தி உள்பட மூவரும் ஒசூர் நீதிமன்றத்தில் நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

 

தேவையா இவை.. இந்த வயசில்............. இவை தான் நாளாந்தச் செய்திகள். இங்கு எல்லோரும் (பெண்கள்) 30 வயசுக்குள் திருமணம் செய்து வாழ்க்கையை வெறுத்தவர்களாகவோ அல்லது பங்குபோடத் தயாராக உள்ளவர்களாகவோ இருந்துள்ளனர்.  இவை நடைமுறை உதாரணங்கள்........... :(:rolleyes:

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=99213

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=99212

 

 

 

Edited by nedukkalapoovan

25 சரியான வயது.

 

தனியாக வாழும் வாழ்க்கை வேறு திருமண வாழ்க்கை வேறு. குடும்ப வாழ்வில் எதிர்கொள்ளும் பல சவால்களை எதிர்கொள்ள, இளமையாக இருப்பது கூடுதலான நன்மை தரும். இதைவிட வயதான பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பாதிப்புகள் உருவாகலாம் என்றும் கூறுகிறார்கள்.

 

பல்லு இருக்கக்கதான் பகோடா சாப்பிட வேண்டும். :D

 

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் சொல்லவருவதை பார்த்தால் ஒழுக்கப்பிறழ்வால் வந்த குற்றங்கள் பெரும்பாலும் 30 வயதுக்குட்பட்டவர்களால் மட்டுமே நிகழ்வதாக நிறுவ முற்படுகிறார். குற்றங்கள் நிகழ்வது தற்போதிருக்கும் அபரிமிதமான கட்டுப்பாடற்ற தகாத உறவுகள்/குற்றச் செயல்களை செய்யத் தூண்டக்கூடிய செய்திகளும்,திரைப்படங்களும், ஊடகங்களுமே.

 

முன்னர் கிராமங்களிலோ, நகரங்களிலோ இம்மாதிரி குற்றங்களை புரிவோரை ஒதுக்கித் தள்ளிவைப்பதினால் வரும் அவமானகரமான உணரிச்சிகளுக்கு பயந்தாவது தப்புகள் செய்யத் தயங்கினர். ஆனால் தற்பொழுது வேகமாக மாறிவரும் நவீன வாழ்க்கையில், யாரும் இம்மாதிரி ஒழுக்கக் குறைவுகளை அவ்வளவு பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை அல்லது சகிக்கப் பழகிவிட்டார்களென்றே சொல்லவேண்டும். இம்மாதிரி குற்றங்கள் செய்ய வயது ஒரு தடைக் கல் அல்ல. எத்தனை ஒழுக்ககேடான செயல்களை பகுத்தறியும் முதிர்வுள்ள முப்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் செய்கிறார்களென கணக்கெடுத்தால் இவற்றைவிட அவை அதிகமாகவே இருக்கும், நெடுக்ஸ்!

 

கல்யாணச் சந்தையில் விலைபோகா மாடுகள், இந்த 25 வயதிற்கு மேற்பட்ட பெண்களும், 30 வயதிற்கு மேற்பட்ட ஆண்களும்... வேண்டுமெனில் தரகர்களையோ அல்லது மேட்ரிமோனியல் இணையதளங்களிலோ பாருங்கள் இது புரியும். இம்மாதிரி முதிர்கன்னி/கன்னர்களை 'இபி' என சங்கேத மொழியில் தரகர்களிடம் பேசக் கேட்கலாம். :)

 

பெண்கள் உடல்வாகு மற்றிய மருத்துவ ரீதியான உண்மைகளோடு, இங்கேயிருக்கும் சமுதாய கட்டமைப்பும், வாழ்க்கை முறையுமே ஒருவரின் திருமண வயதை தீர்மானிக்க ஆதிக்கம் செலுத்த வல்லது.

 

இதே நெடுக்ஸ், ஈழத்திலிருந்தால், நிச்சயம் இந்நேரம் சந்நியாசியாக இல்லாமல் சம்சாரியாகி இருப்பார். :rolleyes:

 

  • கருத்துக்கள உறவுகள்

இதே நெடுக்ஸ், ஈழத்திலிருந்தால், நிச்சயம் இந்நேரம் சந்நியாசியாக இல்லாமல் சம்சாரியாகி இருப்பார். :rolleyes:

 

நான் ஈழத்தவன் என்பதால் தான் என்னளவில் என்றாலும் சுய ஒழுக்கத்தோடு இருக்கிறேன். ஈழத்தில் தான் சின்ன வயதிலேயே ஆன்மீகத்தைப் போதிக்கிறார்கள். பெரியவர்களின் வாழ்வை வழிகாட்டலாக முன் வைக்கிறார்கள். நாயன்மார்கள்.. மகான்களின் குருபூசைகளை பாடசாலைகளில் கொண்டாடி அவர்களின் போதனைகளை மாணவர்கள் உள்வாங்கச் செய்கின்றனர். பாடசாலை நாட்களில் இவற்றில் மிகவும் அக்கறையோடு பங்குபற்றி அப்பப்ப மேடைகளில்..கருத்துக்களையும் வழங்கி இருக்கிறேன். அன்றைய தேடல்களின் விளைவுகள் இன்றும் ஆழ்மனதெங்கும் வியாபித்துள்ளது. ஆனால் இப்போது எப்படி என்று தெரியவில்லை..!!!

 

திருமணம் என்பது தான் வாழ்க்கை என்றில்லை. அனுபவிக்க எவ்வளவோ இருக்க.. ஒத்தே வர முடியாத.. மனங்களோடு.. அஜெஸ்ட் பண்ணி வாழும்.. திருமணம் என்ற சிறைக்குள் எம்மை நாமே இட்டுக் கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை..! இது எனது தனிப்பட்ட நிலைப்பாடு. எல்லா வகையிலும் ஒத்துவரக் கூடிய மனதோடு இணைந்து வாழ்வதில் தவறும் இல்லை..! அதற்கு வயதை பெரிய காரணமாக்க... வேண்டிய அவசியமும் இல்லை என்பதே எனது நிலைப்பாடு. வயது என்பது நாங்கள் வகுத்தது..! இயற்கை வகுத்ததல்ல.

 

காரணம்.. வயதைத் தாண்டிய பக்குவமுள்ள இளைஞர்களும் உளர்.. வயதைத் தாண்டியும் பக்குவமற்ற மூத்தவர்களும் உளர்..!

 

நன்றி ராஜவன்னியன் அண்ணா தங்கள் மதிப்புள்ள கருத்துக்களுக்கும் நேரத்திற்கும். :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் முதலில் சொல்லியது மாதிரி, படிப்பு, வேலை, திருமணம், குழந்தை, பின்னர் குழந்தைகளின் படிப்பு, அவர்களின் திருமண, அதன் பின்னர் பேரப் பிள்ளைகளைப் பராமரித்தல் என்ற வட்டத்திற்குள் வாழும் சராசரி வாழ்க்கையைத்தான் பரிந்துரைக்கின்றீர்கள். இதற்குள் கால் நடக்கமுடியாத காலத்தில் கணவனுடன் ஊர் சுத்தலாம் என்ற ஆசை வேறு..!! :icon_mrgreen: 

 

 

ஐம்பது வயதில் கால் நடக்க முடியாது என்றால் அவர்கள் நோயாளிகளே. நான் கூறியது கிருபன் ஆரோக்கியமானவர்களைப் பற்றி. நோயாளிகள் எக்காலத்திலும் வாழ்வை அனுபவிக்க முடியாது. :lol:

அத்தோடு பேரப் பிள்ளை பராமரிக்கும் தேவையற்ற வேகலை எல்லாம் நான் செய்யப் போவதில்லை. ஏனெனில் என் பிள்ளைகளை நானே வளர்த்தேன் என் பெற்றோர் அருகில் இருந்தும். அதனால் என் பிள்ளைகளும் என்போல் தான் இருப்பார்ர்கள்.

 

நீங்கள் சொல்றபடி பார்த்தால் உங்களுக்கு இப்ப பேரன்,பேர்த்தி இருக்கோணும் அல்லவா :D

 

எனக்குப் பூட்டப் பிள்ளையே இருக்கு ரதி :lol:

 

 

  • கருத்துக்கள உறவுகள்
அத்தோடு பேரப் பிள்ளை பராமரிக்கும் தேவையற்ற வேகலை எல்லாம் நான் செய்யப் போவதில்லை.

 

யம்மாடி...!

 

அவனவன் பேரப்பிள்ளைகளை கொஞ்சி மகிழ, அவர்கள் நம்மீது ஏறி விளையாட மாட்டார்களாவென தவமிருக்கிறார்கள். தங்களுக்கு தேவையற்ற வேலையா..? :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.