Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துபாய் - உலகின் அதிக மக்கள் புழங்கும் விமான நிலையம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

துபாய் - உலகின் அதிக மக்கள் புழங்கும் விமான நிலையம்

 

 

உலகிலேயே அதிக மக்கள் பாவிக்கும் விமான நிலையமாக, "துபாய் சர்வதேச விமான நிலையம்" என்ற முதலிட சிறப்புத் தகுதியை முதல் முறையாக துபாய் விமான நிலையம் பெற்றுள்ளது. சர்வதேச விமான நிலையங்கள் கவுன்சில் (Airports Council International) கடந்த மாதம் வெளியிட்ட புள்ளிவிவர தகவல்களின்படி, 2013 ஜனவரி மாத நிலவரப்படி,  துபாய் சர்வதேச விமான நிலையம் 5.53 மில்லியன் பயணிகளைக் கையாண்டுள்ளது. அதே சமயம் லண்டனின் ஹீத்துரு சர்வதேச விமான நிலையம் 4.86 மில்லியன் பயணிகளைக் கையாண்டுள்ளது.

இதுவரை கடந்த காலங்களில்  லண்டனின் ஹீத்துரு சர்வதேச விமான நிலையமே இந்த விடயத்தில் முதலிடத்தில் நிலைத்திருந்தது. இந்த வருட ஆரம்பத்திலிருந்தே துபாய் சர்வதேச விமான நிலையம் சீராக முன்னேற்றம் கண்டுள்ளதை இரு விமான நிலையங்களின் மாதாந்திர அறிக்கைகளை ஒப்பிடுகையில் இத்தகவல் தெரிய வந்துள்ளது.

 

 

dubai-international-airport.jpg

 

 

மேலதிக செய்திகளை ஆங்கிலத்தில் வாசிக்க கீழே சொடுக்குங்கள்...

 

http://www.khaleejtimes.com/kt-article-display-1.asp?xfile=data/uaebusiness/2013/May/uaebusiness_May278.xml&section=uaebusiness

 

 

செய்தி மூலம்: கலீஜ் டைம்ஸ்.

 

  • கருத்துக்கள உறவுகள்

வாவ் பார்க்க சுப்பராய்த் தான் இருக்கு

 

  • கருத்துக்கள உறவுகள்
அழகான விமானநிலையம்தான், ஆனால் வேலை செய்யும் அதிகாரிகள்தான் காட்டு மிராண்டிகள். 
பொதுவாக ஆசிய நாட்டவர்களை தரக்குறைவாகவும்  வெள்ளைக்காரரை மரியாதையாகவும் நடத்துகிறார்கள்.  
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாவ் பார்க்க சுப்பராய்த் தான் இருக்கு

 

லண்டன் ஆக்களுக்கு எந்த ஏர்போர்ட்தான்  வாவ் என்று இருக்காது..எனக்கு airport என்றவுடன் நினைவுக்கு வரக்கூடாதாது  லண்டன் ஹீத்துரு..சின்னக்கடை மீன்சந்தை திறம்

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் ஆக்களுக்கு எந்த ஏர்போர்ட்தான்  வாவ் என்று இருக்காது..எனக்கு airport என்றவுடன் நினைவுக்கு வரக்கூடாதாது  லண்டன் ஹீத்துரு..சின்னக்கடை மீன்சந்தை திறம்

 

இங்க கொஞ்சப் பேருக்கு எதுக்கெடுத்தாலும் லண்டனை இழுக்காட்டில் இருக்கேலாது ^_^

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலே இணைக்கப்பட்ட படங்கள் யாவும் வடிவமைப்பு பொறியியலின் (Structural Design & Interiors) அற்புதத்திற்கான சான்றுகளை அறியுங்கள் என காட்சிப்படுத்தலே தவிர, நமது பொருளாதார நிலையை நோக்கி சுட்டுவதாக எடுத்துக்கொள்ள வேண்டாமென அறியத்தருகிறேன்.

நன்றி!

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு அவர்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை 2003 ல் நான் இலங்கை போவதற்காக இந்த விமான நிலையத்தையும் பாவித்திருந்தேன், வேலை செய்பவர்கள் காட்டுமுராண்டிகள் போல் பழகுவார்கள். இந்தியக் கட்டடத்தொழிலாழர்களது இரத்ததிலும் வியர்வையிலுமே அந்நாடு கட்டியெழுப்பப்பட்டுள்ளது. மற்றப்படி வெறும் காங்கிரிட் நகரம் அவ்வளவே. உலகின் மிகவும் தரமான உல்லாசப்பயண நட்சத்திர விடுதியில் எழுநூறு யூரோக்கள் கொடுத்த்ச் சாப்பிட்ட நான் வாழும் நாட்டவர் ஒருவர் இங்குள்ள முக்கிய செய்தித்தாழில் எழுதியிருந்தார் பத்துயூரோவுக்கு சாதாரண உணவுக்கடைகளில் அதைவிட சிறந்த உணவு தாம்வாழும் நாட்டில் சாப்பிடலாமென.

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கட்டக்கலை, நன்றாக பராமரிக்கின்றார்கள். :) 
எல்லாம்..... மசகு எண்ணை வித்த காசு. :D

 

  • கருத்துக்கள உறவுகள்

Dubai_International_airport_interior.jpg

அருமையான படங்கள், வன்னியன்! நன்றிகள்!

 

ஆனால் இங்குள்ள வரி விலக்குக் கடைகளில் வேலை செய்யும், இலங்கைத் தமிழர்கள், என்ன காரணத்தாலோ, நாங்கள் வலியப் போய்க் கதைத்தாலும், எங்களுடன் கதைக்க விரும்பவதில்லை. :o  

 

எங்கட காத்தான்குடி மாதிரியும் கிடக்குது! :D

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்த ஞாபகங்கள் இன்னும் பசுமையாக நெஞ்சினில்.

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான படங்கள், வன்னியன்! நன்றிகள்!

 

எங்கட  ஆட்கள் வரவேற்புக்கு ஏற்றது போல் (முக்கியமாக உடை) செல்வதில்லை.

அத்துடன் அங்கு வேலை செய்து திரும்புபவர்களே அதிகமானவர்கள்.

இதனால் பயணிகளுக்கும் உள்ளுர்  தொழிலாளர்களுக்கும் வித்தியாசம் காண்பது கடினம்

நான் ஒருமுறை பிரான்சிலிருந்து கட்டார் போய் அங்கிருந்து  கொழும்பு சென்றேன்.

பிரான்சிலிருந்து சென்ற விமானம் சொகுசாகவும் வசதிகளுடனும் முக்கியமாக அமைதியாக சென்றது. 

அங்கிருந்து கொழும்பு சென்ற விமானத்தில் தமிழ் சிங்கள சத்தத்தை தவிர வேறு எதுவித வசதிகளுமில்லை. எனக்கே எரிச்சல் வந்தது. ஆளையாள் தள்ளுவதும் சீண்டுவதும் பெரிதாக பேசி  சிரிப்பதும்........

 

எப்படி எம்மவரை மதிப்பர்............??? :(  :(  :(

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இணைப்பிற்க்கு வன்னியன்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அடி ஆத்தாடி, நல்லா இருக்குதே கணக்கு!

 

இப்படி எத்தனை பேரு கிளம்பி இருக்காகங்க, கதை சொல்ல.

 

இட நெருக்கடியை தவிர்க்க இலண்டணின் ஒட்டு மொத்த பயணிகளும் Heathrew, Gatwick, Luton, Stansted மற்றும் City Airport ஆகியனவற்றுள் பகிரப்படுவதாவதால் துபாய் ஒத்தை airport கூடுதலாக தெரிகிறது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

என்ன விசுகு, நாங்கள் வானூர்தியில் பயணம்தானே செய்கிறோம். எமக்கு எது வசதிப்படுகுதோ அன்றேல் பயணத்துக்கு இலகுவாக இருக்கோ அப்படியான உடைகளைத்தானே நாம் அணிய வேண்டும். இவைகளைப் பாவிப்பதற்கு கோட்டுச் சூட்டுப்போட வேண்டுமோ!

நான் 6 வருடங்களுக்கு முன்பு பார்க்கும் போதே மிகவும் பிரமிப்பு தரும் இடமாக இருந்தது. அடிக்கடி பொழுது போக்குவதற்காகவே உள்ளே போயிருக்கின்றோம். இந்த அழகான இடத்துக்கும் ஒரு முறை வீம்புக்காக சறத்துடன் போய் ஸ்ரைல் காட்டியும் இருக்கின்றோம்.

 

மிகவும் சுத்தமாக எப்படி ஒரு இடத்தினை வைத்து இருக்க வேண்டும் என்பதற்கு டுபாய் விமான நிலையம் ஒரு எடுத்துக்காட்டு. அத்துடன், பிரமாண்டமானாதும் விசாலமானதுமாயினும் கூட  விழிப்புலன் அற்றவர்களில் இருந்து எவரும் (கொஞ்சம் அறிவுடன் இருந்தால்) மிகவும் இலகுவாக பயன்படுத்தக் கூடிய மாதிரி வைத்துள்ளனர்.

 

 

அடி ஆத்தாடி, நல்லா இருக்குதே கணக்கு!

 

இப்படி எத்தனை பேரு கிளம்பி இருக்காகங்க, கதை சொல்ல.

 

இட நெருக்கடியை தவிர்க்க இலண்டணின் ஒட்டு மொத்த பயணிகளும் Heathrew, Gatwick, Luton, Stansted மற்றும் City Airport ஆகியனவற்றுள் பகிரப்படுவதாவதால் துபாய் ஒத்தை airport கூடுதலாக தெரிகிறது.

 

டுபாய் விமான நிலையம் ஒரு Hub. ஒரு வருடத்தில் பல மில்லியன் மக்கள் பயன்படுத்திச் செல்லும் விமான நிலையம் இது. அத்துடன் டுபாயினைச் சுற்றி மேலும் 2 முக்கிய சர்வதேச விமானநிலையங்கள் அருகருகே உள்ளன. ஒன்று அபுதாபி விமான நிலையம், அடுத்தது சார்ஜா விமான நிலையம். இவை தவிர சர்வதேச தரத்துடன் இல்லாவிடினும் மத்திய கிழக்கினூடான விமான சேவைகளை நடத்தும் வேறு சின்ன சின்ன விமான நிலையங்களும் அங்குள்ளன.

 

 

அங்கு வேலை செய்யும் அரபிய பெண்கள் முகத்தை மூடி மறைத்து இருப்பார்களா?

 

 

சென்ற வருடம், இரண்டாவதாக இணைத்த படத்திலுள்ள செயற்கைப் பேரீச்சை மரங்களுக்கருகில் இருந்து தேநீர் அருந்திய இனிமையை மறக்க முடியாது. பயங்கர வெயில் வெக்கையிலும் பிரம்மாண்டமான கட்டிடங்கள் யாவும் குளிரூட்டப்பது வியப்பைத் தருகிறது. Taxi ஓட்டுனர்கள் அதிகமானோர் தமிழ் பேசுகின்றனர்.

 

எழுஞாயிறு சொல்வது உண்மை. விமானத்தில் சந்தித்த பணக்கார எமிரேற் பிரஜைகளும், விமான நிலையத்தில் கடமையாற்றிய அந் நாட்டு அதிகாரிகளும் தந்த கசப்பான அனுபவங்களினால் டுபாய்க்கு இனிப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளேன்.  :D

 

அப்போது ராஜவன்னியனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் நேரமின்மையால் சந்திக்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது.

பார்க்க ஆசையாகவும் பிரமிப்பாகவும் இருக்கு .

சிங்கப்பூர் விமானநிலையத்தில் தமிழ்பெண்கள்  பூவும் பொட்டுடன் மெட்டல் டிடக்டருடன் நிற்பதை பார்க்க ஆயிரம் கண் வேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

 

டுபாய் விமான நிலையம் ஒரு Hub. ஒரு வருடத்தில் பல மில்லியன் மக்கள் பயன்படுத்திச் செல்லும் விமான நிலையம் இது. அத்துடன் டுபாயினைச் சுற்றி மேலும் 2 முக்கிய சர்வதேச விமானநிலையங்கள் அருகருகே உள்ளன. ஒன்று அபுதாபி விமான நிலையம், அடுத்தது சார்ஜா விமான நிலையம். இவை தவிர சர்வதேச தரத்துடன் இல்லாவிடினும் மத்திய கிழக்கினூடான விமான சேவைகளை நடத்தும் வேறு சின்ன சின்ன விமான நிலையங்களும் அங்குள்ளன.

 

நிழலி,

 

ஒத்துக்க மாட்டேன், ஒத்துக்க மாட்டேன், ஒத்துக்கவே மாட்டேன். (வினு சக்கரவர்த்தி ஸ்டைல்)

 

சும்மா டமாசு, டென்ஷன் ஆகாதீங்க.

 

துபாய் அந்த மாதிரி.

 

என்ன; நம்ம ஊரு வேலை ஆட்கள், பழக்க தோசத்தில, அங்கே இருக்கும் இருக்கைகளில் இருக்காமல் சுவரில் சாய்ந்தவாறு குந்தி இருப்பதைப் பார்த்தால், நம்ம மானமும் கப்பல், சீ, விமானம் ஏறும்.

 

இது குறித்து அங்கே, போரிட்ங் கார்ட் செக் பண்ணின கேரளா காரரிடம் பேசிய போது, இது சொல்லிச், சொல்லிச் கடைசில சரி வராது எண்டு விட்டு விட்டோம் என்றார்.

 

இதன் காரணமாக நான் லண்டன் வரும்போது, இலங்கை கடவுச் சீட்டுடன், விசா இருந்தும் அவதிப்பட நேர்ந்தது. இதில குந்தி இருக்க வேண்டிய ஒன்று, எங்களைக் கடந்து போகுது என்ற மாதிரியான வகையில் கையாண்டார்கள்.  நான் வந்த அதே நாள் சிங்கையில் இருந்து போலி விசாவில் லண்டன் வந்த 7 பேர் பிடிபட்டதால், நான் உட்பட்ட 3 சிங்களவர்களுக்கும் விமானத்தில் ஏற விடாமல் பிரச்னை தந்தார்கள். (முறைப்பாடு செய்து, Emirates விமான நிறுவனம் இலவச டிக்கெட் ஒன்று தந்து இருந்தார்கள்.)

 

அதனால் இனி, வேறு பாஸ்போர்ட்  இருந்தும் மத்திய கிழக்கு விமான நிலையமே வேண்டாம் என முடிவு செய்தாகி விட்டது.

 

BBC இணையத்தில் ஒரு முறை ஒரு இந்தியர் சொன்னார் என குறித்து இருந்தார்கள். உலகில் துவேசம் பிடித்தவர்கள் இந்த அரபிகள் தான் என்று. அதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.

 

இந்த விமான நிலையத்தினைப் பார்க்கும் போது, ஆணவம் மிக்க அழகிய பெண் போல் தான் எனக்குப் படுகின்றது.

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கருத்து நாதமுனி ஆனால் குந்தி இருப்பது (squat) இங்கு ஒரு கூட்டம் யோகா மாதிரி கொண்டாடுது.  

 

http://youtu.be/gWTmg4dHiKg

 

AsianSquat.jpgsquat1-520x520.jpgdesk-squat.larger.jpg

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

துபாயில்... சில பேரூந்து தரிப்பிடங்களிலும், குளிரூட்டப் பட்ட அறைகள் (நம்மூர் நிழற்குடை மாதிரி) உள்ளதாக செய்தி ஒன்றில் வாசித்தேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைவரின் கருத்துக்களுக்கும் நன்றி.

 

இன ரீதியாகவும், கண்டம் ரீதியாவும் பாகுபாடு இங்கே பார்க்கப்படுவது உண்மைதான். இதற்கு முக்கிய காரணம் அரபிகளுக்கு இயல்பாகவே வெள்ளைத் தோல்காரர்களைக் கண்டால், அவர்கள் எல்லாவிதத்திலும் முன்னேறியவர்கள், அதிபுத்திசாலிகள் என்ற மனப்பான்மையும் ஒருபுறமிருக்க, கறுப்பாக ஆசியாவிலிருந்து வருபவர்கள் எந்த லெவெலுக்கும் கீழே இறங்கி வேலை செய்ய தயாராக இருப்பதும், சட்டவிரோதமாக இந்நாட்டிலிருந்து கொண்டு அனைத்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதும் தான்.

 

ஆனால் மற்ற அரபு தேசங்களை ஒப்பிடுகையில், அமீரகம் எவ்வளவோ தேவலை.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துபாயில்... சில பேரூந்து தரிப்பிடங்களிலும், குளிரூட்டப் பட்ட அறைகள் (நம்மூர் நிழற்குடை மாதிரி) உள்ளதாக செய்தி ஒன்றில் வாசித்தேன்.

 

குளிரூட்டப்பட்ட துபாய் பேருந்து நிறுத்தங்கள்

 

Air-conditioned-bus-stop-Dubai-UAE_thumb

 

 

Air-conditioned-bus-stop-interior-Dubai-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.