Jump to content

வானூர்தியில் பறக்கும் வயசுக்கு வந்த பொண்ணு நிகழச்சி


Recommended Posts

பதியப்பட்டது

 

 

இன்று நான் முகப் புத்தகத்தில் எனது நேரத்தை வழக்கம் போலவே வீணாக்கி கொண்டிருந்த நேரம் ஒரு செய்தி!வானூர்தியில் பறக்கும் வயசுக்கு வந்த பொண்ணு நிகழச்சி என்று என் கண்களில் காட்சிகளுடன் பட்டது. சுவிஸ் நாட்டில் தமிழரின் சாதனையாக இது பதியப்பட்டாலும் இது இங்கு பல வருடங்களாக சுவிசில் நடப்பவை தான். ஆனாலும் இன்று என் நெஞ்சில் இது எதோ ஒரு தாக்கத்தை உண்டு பண்ணியது.காரணம் இன்று என் நண்பர்களுடன் ஈழ இந்திய அரசியல் பற்றி அதிகமாக பேசியபடியால்  எம் இனம் பற்றி அதிகம் கவலைப் பட்டபடியால் இந்த செய்தி எனக்கு தப்பாக பட்டிருக்கலாம். அதுதான் உடனே இங்கு அதை பதியலாம் என்று முயற்சி பண்ணினேன் ஆனால் முடியல. இருந்தாலும் வேறு ஒரு நாட்டில் தமிழனின் சாதனையாக் நடந்த அதே சாதனை நல்லவேளையாக youtube  இல் இருந்த படியால் இதை இணைக்கிறேன். தவறென்றால் மன்னிக்கவும் நண்பர்களே  பொதுவாகவே பொண்ணு வயசுக்கு  வரும் பருவ மாற்றத்தை நம்மவர்கள் கொண்ட்டாடுவதில் எனக்கு உடன்பாடில்லை. எங்கள் பெண்களை அவமானப் படுத்துவது போல் இருப்பதாக நினைப்பவன் நான் அது என் தனிப்பட்ட கருத்தே. இருந்தாலும் தாயகத்தில் எம்மினம் அல்லல் படும் இவேலையில் இதுகள் தேவையா? ஆமாம் செய்தி நான் போடுறேன் கருத்தை நீங்க சொல்லுங்க யாழ் உறவுகளே 

 

http://www.youtube.com/watch?v=yafpS5DkPSY

 

 

  • Replies 113
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இருந்தாலும் தாயகத்தில் எம்மினம் அல்லல் படும் இவேலையில் இதுகள் தேவையா?

 

நடந்து போனார்கள்

மாடடு வண்டிலில் போனார்கள்

காரில் போனார்கள்

இன்று கெலியில் போகின்றார்கள்..........

 

எல்லாம் சேர்ந்தது தான் மக்கள் கூட்டம்.

இதை விமர்சித்து வெறுத்து ஒதுக்குவதைவிட

அவர்களிடம் சென்றும் கறப்பது தான் உண்மையான தாயக  மக்களுக்கு செய்யும்பணியாக இருக்கமுடியும்.............

Posted

நன்றி ஜீவா இதைத் தான் தேடினேன் 

 

Posted

பொதுத்தளங்களில் இவ்வாறு தரவேற்றும்போது வேண்டாத சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளது.. சிறுமிகளுக்கும் எண்ணங்கள் பெருத்துவிடுகின்றன.. எனக்குத் தெரிந்து விழாக்கள் முடிந்து ஒரு வருடத்திற்குள்ளேயே பிரச்சினைக்குள் சிக்கியுள்ளார்கள்..

ஒருவேளை இதனுள் வேறொரு கைங்கரியமும் இருக்கலாம்.. :rolleyes: இவ்வாறான விழாக்களை நடத்தி பிரபலப்படுத்தி விட்டால் தமிழ் மாப்பிளைமார் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது அல்லவா? பலே ஐடியா.. :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நன்றி ஜீவா இதைத் தான் தேடினேன் 

 

ஓரிரு கிழமைக்கு முன்னர் பேஸ்புக்கில் பிரபலமாய் இருந்த வீடியோ இது அன்பு அண்ணா. ஒரு சில இணையத்தளங்களிலும் இதே தலைப்புடன் போட்டிருந்தார்கள். குறித்த நபர் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நிதி சேர்த்தவர் என்றும் விடுதலைப்புலிகளின் அழிவுக்குப் பின்னர் மக்கள் பணத்தைச் சுருட்டி அதில் தான் இப்படி விழாக் கொண்டாடினவர் என்று தான் பேஸ்புக்கில் பின்னூட்டம் எழுதி இருந்தார்கள், எதற்கும் சுவிஸ் வாழ் உறவுகள் தான் உண்மை நிலையை விளக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஓரிரு கிழமைக்கு முன்னர் பேஸ்புக்கில் பிரபலமாய் இருந்த வீடியோ இது அன்பு அண்ணா. ஒரு சில இணையத்தளங்களிலும் இதே தலைப்புடன் போட்டிருந்தார்கள். குறித்த நபர் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நிதி சேர்த்தவர் என்றும் விடுதலைப்புலிகளின் அழிவுக்குப் பின்னர் மக்கள் பணத்தைச் சுருட்டி அதில் தான் இப்படி விழாக் கொண்டாடினவர் என்று தான் பேஸ்புக்கில் பின்னூட்டம் எழுதி இருந்தார்கள், எதற்கும் சுவிஸ் வாழ் உறவுகள் தான் உண்மை நிலையை விளக்க வேண்டும்.

 

இது உண்மை போல தான் இருக்குது.யாராவது இப்படி கஸ்டப்பட்டு உழைத்த காசை வீணாய் செலவழிப்பார்களே :unsure:
 
இப்படி ஆட‌ம்பர‌மாக செய்தால் அதை தங்களோடு வைத்துக் கொள்வதற்கு எதற்கு ஊர் முழுக்க பிர‌பல்யப்படுத்தினம்.பெட்டைக்கு நல்லா மேக்கப்மும் போட்டு  நடிகை மாதிரித் தான் போஸ் கொடுக்குது.இப்பவே இப்படியான எண்ணங்களை ஊட்டினால் 16 வயதிற்கு முன்னர் வீட்டை விட்டு ஓட‌த் தான் சொல்லும்
 
பெற்றோர் தங்கட‌ பிள்ளைக்கு ஆசையாய் விழாக்கள் செய்வது அவர‌வர் விருப்பம் ஆனால் இது ரொம்ப ஓவர்.
Posted

பொதுத்தளங்களில் இவ்வாறு தரவேற்றும்போது வேண்டாத சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளது.. சிறுமிகளுக்கும் எண்ணங்கள் பெருத்துவிடுகின்றன.. எனக்குத் தெரிந்து விழாக்கள் முடிந்து ஒரு வருடத்திற்குள்ளேயே பிரச்சினைக்குள் சிக்கியுள்ளார்கள்..

ஒருவேளை இதனுள் வேறொரு கைங்கரியமும் இருக்கலாம்.. :rolleyes: இவ்வாறான விழாக்களை நடத்தி பிரபலப்படுத்தி விட்டால் தமிழ் மாப்பிளைமார் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது அல்லவா? பலே ஐடியா.. :icon_idea:

 

இதுவென்றால் உண்மைதான். விழக்கொண்டாடுவதும் விடுவதும் அவரவர் விருப்பம் தனிமனித சுதந்திரம். அதில் நாம் தலையிடவேண்டாம். ஆனால் இசை சொன்னதுபோல் இப்படியான செயற்பாடுகளை பிள்ளைகளுக்கு ஊடிவளப்பவர்களால் நல்ல நடத்தை உள்ள பிள்ளைக்ளை உருவாக்க முடியாது என்பதுதான் யதார்த்தம். தனிமனித சுதந்திரம் ஒரு பக்கம் இருக்கட்டும் ஆனால் யதார்த்தத்தை பொதுவில் நடப்பதை பேசுவதில் தப்பில்லைதானே. இப்பவே அந்தப்பிள்ளையின் மனத்தில் படிப்பைவிட வேறு நினைவுகளால்தான் உருவாகி இருக்கும். இதுபோலத்தான் உடைவிடயமும். சின்னவயசிலயே பிள்ளைகளுக்கு செக்ஸியாக உடுத்திவிடுபவர்கள் அவர்கள் வளரவளரவும் அதையே பின்பற்றி அவை பல்வேறு தப்பான் எண்ணங்களுக்கும் செயல்பாடுகளுக்கும் இட்டு செல்கிரது. உடுப்பு அவர்வர் சுதந்திரம். ஆனால் அதற்காக முன்னால் நடப்பவற்றை பேசக்குடாது என்று இல்லதானே.பொதுவாக நாம் பார்ப்பவர்களில் அநேகமான தப்பு பண்ணும் பெண்கள் அநேகர் இப்படிபட்டவர்கள்தான்.இப்படிப்பட்ட பெண்களில் யார்தான் நல்ல அமைதியான குடும்ப வாழ்வில் இருக்கிறார்கள்? மிகச்சிலரே.

 

எந்தக்குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே. அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவ்தும் அன்னை வளர்ப்பினிலே.

 

Posted

பெண் வயசுக்கு வந்ததை ஊரறிய விழா எடுத்து எல்லாருக்கும் அறிவிப்பதற்காக கொண்டாடுவதே கேடு கெட்ட ஒரு பழக்கம். அதிலும் அபரிதமான ஆடம்பரம் என்பது அருவருப்பான ஒன்று.

 

ஒருவரால் யுரியுப் ஒன்றில் ஒரு காணொலி பகிரப்பட்டால், அதன் மீதான public opinio இனை தவிர்க்க முடியாது. தமக்கான private video என்றால் அதனை தமக்குள்ளாகவே பகிர்ந்து இருக்க வேண்டும். அல்லது, தம் கைகளை மீறி இன்னொருவருக்குச் சென்று அவரால் வெளியுலகுக்கு பகிரப்பட்டு இருந்தால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். இதனை இவர்கள் செய்கின்றமாதிரி இல்லை.

 

இந்த குடும்பத்தினர் தம் விலாசத்தினைக் காட்ட மகளது வயசுக்கு வந்த விடயத்தினை விளம்பரப் பொருளாக பயன்படுத்துகின்றனர். மிகக் கேவலமான சிந்தனை இது.

 

இந்த பெண் பிள்ளைக்காக மனம் வருந்துகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏற்கவே இந்த விடையம் பற்றி எழுத நினைத்து விட்டு பின் எதற்கு வேண்டாத வேலை என்று விட்டு திரிந்தேன்..இந்த மாத நடுப்பகுதியில் பெரியபிள்ளையாகி விழா எடுத்த ஒரு விழாவுக்கு போய் இருந்தேன்.பெரிய பிள்ளையாகிய பிள்ளையின் தந்தையின் குடும்ப உறவுகளோடும்,தாயின் உறவுகளோடும் வீண் ஆடம்பரங்களின்றித் தான் நடந்தேறியது. ஒரு விடையம் மட்டும் எனக்கு அறவே பிடிக்கவில்லை..அது தான் இந்த வானுர்தி விழையாட்டு..ஒரு திருமணமான ஜோடிகளை காட்சிப்படுத்திக் காட்டி இருந்தால் அது உண்மையாக பார்பவர்களுக்கு புரிதல் கூடுதலாக இருக்கும்...

 

ஆனால் பெரியபிள்ளையாகி இருக்கும் ஒரு தனித்த சிறுமிக்கு இப்படியான காட்சிப்படுத்தல்கள் தேவை இல்லை என்றோ நினைக்கத் தோன்றுகிறது.வளரும் பிள்ளைகள் சிறுவயதிலயே தவறான பாதைக்கு இட்டு செல்வது இவ்வாறான ஆடம்பரங்களும் தான்..இவள்  ஒரு இடமும் வர மாட்டாள் வந்துட்டு நொட்டை கண்டு பிடிக்கிறதும்,பேசுறதும் தான் வேலை என்று சொல்வார்கள் என்ற காரணத்தினாலயே போற இடங்களில் நடக்கும் கூத்துக்களை பார்த்தும்,பார்க்காதது போல் வர வேண்டிய நிலை.
 

 

 

 

Posted

 பிள்ளைகள் இப்போது 10வயதிற்குள்ளே பருவ வயதை அடைகின்றனர். இந்தப்பிள்ளைகள் மனசால் பெற்றோரின் இத்தகைய எடுப்பு விழாக்களின் தாக்கங்களை விளங்கிக் கொள்வதில்லை. சிறியவர்கள் ஆனால் இந்த விழாவை எமது கலாசார விழுமிய அடையாளமாகவே பெரும்பாலும் பெண்பிள்ளைகள் மனதில்  விதைத்துள்ளது நமது தமிழ் காலசார காப்பாளர்களின் பணியும் இதுவாகவே இருக்கிறது.

கடந்தவருடம் ஒரு பூப்புனித விழா டென்மார்க்கில் நடைபெற்றிருந்தது: அந்த நபர் இங்கு இயங்கிய புனர்வாழ்வுக்கழகத்தின் முக்கிய புள்ளி. பிள்ளையின் பூப்புனித விழாவை முகப்புத்தக நண்பர்களுக்கு நேரடியஞ்சல் செய்திருந்தார்கள். அவர் தனது பிள்ளைக்கு விரும்பி விழாவெடுத்திருந்தார் அது அவரது சுதந்திரம். ஆனால் இதனை சிலர் முகப்புத்தகத்திலும் மேலே ஜீவா குறித்தது போல விமர்சித்திருந்தார்கள்.

பெற்றோரே இவ்விடயத்தில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். தனது மகளின் அந்தரங்கத்தை வெளியில் விழாவெடுத்து கொண்டாடி ஒரு காலத்தில் பிள்ளையின் மனசை இவர்களே திசைமாற்ற வழிவகுக்கிறார்கள்.

இவ்விடயத்தில் உறவினர்களுடன் கூட முரண்பட்டுள்ளேன். ஆனால் இந்த விழாவிற்கு உறவினர் அழைத்தால் போக வேண்டிய கட்டாயம். போகாது விட்டால் முறிக்கப்படும் உறவுகளையும் தேவையற்ற விமர்சனங்களையும் தவிர்க் சபையோடு சபையாக போயிருந்து மரக்கிற சோற்றையும் சாப்பிட்டு பல மணித்தியாலங்களையும் செலவிட வேண்டியிருக்கிறது.

புலம்பெயர்ந்ததில் 3பூப்புனித விழாவிற்கு சென்றிருக்கிறேன். 4வதாகவும் ஒன்று அடுத்தமாதம் போக வேண்டியுள்ளது. உறவை முறிக்க முடியாமல் கலந்து கொள்ள வேண்டியுள்ளது.கள உறவுகளே உங்களிலும் சிலரை இந்த விழாவில் நான் தரிசிக்கக்கூடும்.

எங்கு போனாலும் எப்ப மகளுக்கு கொண்டாட்டம் என்று கேட்பார்கள். இதெல்லாம் மொக்குத்தனமான செயற்பாடு என கருத்துச் சொல்லி கடந்தமாதமும் 2கணவர் வழி சொந்தங்களில் காட்டத்துக்கு ஆளாகியுள்ளேன். ஊரே ஏற்றுக் கொண்டு கலக்கிற இவ்விழாவை முழுமையாக புறக்கணிக்க முடியாது போனாலும் வீட்டில் எனது மகளுக்கு இவ்விழாவெடுக்கவுமில்லை. பிள்ளையே இப்போது விழாவெடுக்காதமை பற்றி கதைத்தால் அவளே அவர்களுக்கு பதில் சொல்லிவிடுகிறாள்.
 

பிள்ளைக்கு முதல் வெளியாகிய குருதிபடிந்த உள்ளாடையைக்கூட காப்பாற்றுகிறார்கள் இப்போது சிலர். அதுவும் ஞாபகச்சின்னமாம்.

இதையும்விட பிள்ளை 9வயதையடைந்தால் சாறி வாங்கி வைத்துக் கொள்கிற நிலமையும் வருகிறது. எப்ப பிள்ளைக்கு பிறப்புறுப்பிலிருந்து குருதி வெளியேறும் சாறியுடுத்து ஐயரைக்கூப்பிட்டு துடக்கு கழிக்க வேணுமாம். அதற்கு உடனடியாக சாறி வேண்ட முடியாது போகுமென்பதனால் சாறியை வாங்கி வைத்துக் கொண்டு தினமும் பிள்ளை கழற்றிப்போட்டுவிட்டுப் போகிற உள்ளாடையை பரிசோதனை செய்கிற அம்மாக்களும் இப்ப கனக்க இருக்கினம்.

 

இந்த விழாவில் மாற்றத்தை கொண்டு வந்து பிள்ளைகளுக்கான எதிர்காலத்தை சமூகத்துடனான வாழ்வை கல்வியை ஊட்டுவதே சரியான வழியென்பதனை ஒவ்வொரு பிள்ளையும் உணரக்கூடிய நிலமைக்கு மாற்ற ஒவ்வொரு பெற்றோரும் சுற்றமுமே தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

 

 

 

Posted

இந்த மாதிரி விழாக்களை நடத்துவதில் முன்னுக்கு நிற்பது தாய்க்குலங்கள்தான்.. :rolleyes: அதுவும் சாமத்தியப்பட்டவுடன் நடத்தாமல் ஓரிரு வருடங்கள் தள்ளி நடத்த ஊக்கம் கொடுக்கிறார்கள்.. காரணம் தெரிந்ததுதான்.. :blink:

 

தாய்க்குலங்கள் ஓகே சொன்னவுடன் தந்தைக்குலங்கள் ஹெலிக்கு ஏற்பாடு செய்கினம்.. :icon_mrgreen:

Posted

ஒரு பெண்பிள்ளையின் வாழ்வென்பது எப்படியமைய  வேண்டுமென்பதற்கான இன்னொரு சாட்சியாக இன்னொரு பெண்பிள்ளையின் அந்தரங்க மாதவிடாயை எப்படியெல்லாம் செய்கிறார்கள்  என்பதனை இந்த வீடியோவில் பாருங்கோ.

 

Posted

இடம் கனடாபோல் இருக்கு.. :unsure:  கனடாவில் இருந்து ஊருக்குப் போறது கனநேரம் எடுக்கும்தானே.. :D அதுக்குத்தான் மாடு, கோழியை எல்லாம் கனடாவுக்கு கூட்டி வந்திட்டோம்.. :icon_idea:



அது சரி.. பெயர் றெபெக்கா என்று இருக்கு.. கிறித்துவர்களும் இதை செய்வார்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

 மேலே ஜீவா குறித்தது போல விமர்சித்திருந்தார்கள்.

 

ஐயோ அக்காச்சி .. இது நான் விமர்சிக்கவில்லை முகப்புத்தகத்தில் சிலரால் எழுதப்பட்டது. அவற்றை நீங்கள் கூடப் பார்த்திருக்கலாம் இல்லை என்றால் இணைப்பைத் தருகிறேன் பாருங்கள் அக்கா. மற்றும் படிக்கு வேலியிலை போற ஓணானைப் பிடிச்சு வேட்டிக்குள்ளை விட நான் தயாரில்லை அக்கா. :rolleyes::lol:

Posted

ஐயோ அக்காச்சி .. இது நான் விமர்சிக்கவில்லை முகப்புத்தகத்தில் சிலரால் எழுதப்பட்டது. அவற்றை நீங்கள் கூடப் பார்த்திருக்கலாம் இல்லை என்றால் இணைப்பைத் தருகிறேன் பாருங்கள் அக்கா. மற்றும் படிக்கு வேலியிலை போற ஓணானைப் பிடிச்சு வேட்டிக்குள்ளை விட நான் தயாரில்லை அக்கா. :rolleyes::lol:

 

ஐயோ தம்பி நீங்கள் பகிர்ந்த கருத்து போல இருந்தென்றதை குறித்தேன். அது உங்கள் கருத்தில்லை. நான் சொன்ன கடந்தவருட நேரடி பூப்புனிதவிழா காட்சியின் கீழ் நீங்கள் மேற்கோள் காட்டியது போல எழுதப்பட்டிருந்ததென்று சொல்லு வந்தேன். கோதாரி கருத்து மயக்கத்தை தந்துவிட்டது மன்னித்துவிடு ராசா. :lol:

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மேற்கு நாடுகளில் உலங்குவானூர்தியில்.. சிறிய ரக விமானத்தில்..  ஊரைச் சுற்றுவது ஒன்றும் புதினம் அல்ல. முன்னம் ஊரிலும் பலாலியில் இருந்து இப்படியான சேவைகள் இடம்பெற்றதாக தந்தை சொல்லக் கேட்டிருக்கிறேன்.

 

இந்தப் பொண்ணுங்களுக்கு அந்த வாய்ப்பு இப்படி ஒரு கேளிக்கை வேடிக்கை விநோதக் களியாட்டம் மூலமாவது கிடைச்சுதே என்று சந்தோசப்பட்டுக்க வேண்டியது தான். இது நாளை அவர்களை ஒரு விமானியாக அல்லது விமானப் பணிப்பெண்ணாக வரத் தூண்டக் கூடும்.. என்று சொல்லிச் சென்று விட வேண்டியது தான்.

 

நாங்கள் கத்தி சனம் திருந்தப் போறதே இல்லை. இந்தச் சாமத்தியச் சடங்கு பற்றி நான் அறிய 2002 இல் இருந்து யாழில் எத்தனையோ கருத்தாடல்கள்.. பல மணி நேரங்கள்... பல மனித வலுக்களைச் செலவழித்து செய்யப்பட்டும்.. ஆன பயன்??!. அது இப்ப வீட்டில இருந்து கோலுக்கு வந்து.. ஆகாயத்திற்குப் போயிட்டுது..! நாளை விண்ணுக்குப் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..! :lol::D:icon_idea:

Posted

போற போக்கில முதலிரவை பறக்கும் விமானத்தில் வைத்தாலும் வைப்பார்கள்.

 

Posted

போற போக்கில முதலிரவை பறக்கும் விமானத்தில் வைத்தாலும் வைப்பார்கள்.

அதையும்தாண்டி அதை காசுகொடுத்து கமராமான் வைத்து வீடியோ எடுத்து எடிற்பண்ணி நல்ல பாட்டுக்கள் போட்டு அல்பம் செய்து நெட்டில் விட்டுவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

போற போக்கில முதலிரவை பறக்கும் விமானத்தில் வைத்தாலும் வைப்பார்கள்.

 

"அற்பனுக்கு பவிசு வந்தால்.. அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம்" என்று எம் முன்னோர்கள் எம்மவர்களின் இன்றைய இந்தக் கோலத்தை அழகுற அன்றே இனங்கண்டு சொல்லி விட்டுத்தான் சென்றுள்ளனர்..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்
Posted
இந்த வானூர்தி விடயங்களை ஒரு பக்கமாக வைத்து விட்டு, இந்த விழா குறித்து நான் அவதானித்த ஒரு விடயம் பகிர விரும்புகின்றேன்.
 
இந்த விழாக்களை நக்கல் அடித்து, இதுகள் எல்லாம் எண்ட பிள்ளைக்கு செய்ய மாட்டேன் என்று சொன்ன அப்பாகளை, ஒன்று அல்ல பல பேரை பார்த்து இருகின்றேன்.
 

பின்னர் தமது பிள்ளைகளுக்கு விழா எடுத்த அவர்களுடன் பேசிய போது, அவர்களது மனதினை மாற்றிய ஒரே விடயம், அவர்களுக்கு சொல்லப் பட்ட நியாயம்.

 
இந்த ஒரு நிகழ்வு தான், தாய், தகப்பன் முழு உரிமையுடன், முடிவு எடுத்து செய்யக் கூடியது. ஏனெனில் எதிர்காலத்தில், மேற்குலகில் வாழும் ஒரு பிள்ளையின் எதிர்கால வாழ்வு கலியாணமோ, சேர்ந்து வாழ்வதோ, ஓரின வாழ்வோ ஆல்லது தனிமையானதோ என எதிர்வு கூற முடியாதது.
 
அது உண்மையும் கூட தானே!
 
தாயகத்தில், முன்னர் அச்சு தொழிலில் இருப்போர், ஒரு வியாபார தந்திரம் செய்வார்கள். ஒரு துண்டு பிரசுரம் அடித்தி விநயோகிப்பர். ஒரு தெய்வ சம்பவம் குறித்து விபரிக்கும் அந்த பிரசுரத்தினை, பிரதி அடித்து விநியோகித்தால், இன்ன பலன் கிடைக்கும், இல்லாவிடில்.... என் பயமுறுத்தலும் இருக்கும். கீழே அந்த அச்சகத்தின் தொடர்பு விபரம் இருக்கும்.
 
இந்த தாய் தந்தையரின் முழு உரிமை கதை இந்த விளம்பர உத்தியினை, இந்த விழாவிற்கு, பல சேவைகளை வழங்கி பணம் பார்க்கும் வியாபாரிகள் உபயோகிக்கின்றரோ என் தோன்றுகின்றது.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இதுவும் ஒரு கலாச்சாரம் என்று வர அதிக நாள் எடுக்காது. ஏன்னெனில் யுத்தத்தால் பாதிக்க பட்ட பெண்களை கூட, ஒதுக்கி வைப்பதுப்பதுதான் கலாச்சாசரம் என்று "நியூ யோர்க்" இருந்து சொல்லுகிற தமிழர் காவலர்கள் உள்ள இடத்தில் இந்தகைய "இறுகிய/கட்டுக்கோப்பு" மிக்க புராதன பண்பாடுகள் வளரத்தான் செய்யும். 

Posted

இந் நிகழ்வு அக் குடும்பத்தின் தனிப்பட்டவிடயம். அதில் இனம் கலாச்சாரம் என்பதினூடாக தலையிட முடியாது. பல இனக் குழுமங்களில் இருந்து பொறுக்கப்பட்ட கலாச்சாரமே கலாச்சாரம் என்ற போர்வையில் பேசப்படுகின்றது. இரவல் கலாச்சாரம். அதற்கும் எந்த வரைமுறையும் கிடையாது. யாரும் ஒருத்தன் வித்தியாசமாகப் பண்ணிவிட்டால் உடனே புலிக்காசில் பண்ணிவிடடான் என்பது பொது வழக்கு. அதனால் அது செல்லாது. அந்தக்காலத்தில் பல்லாக்கு இருந்தது அதில் பவனிபோனார்கள் இந்தக்காலத்தில் உலங்கு வானூர்தி இருக்கின்றது அதில் போகின்றார்கள். அவர்கள் உழைப்பு அவர்கள் காசு அவர்கள் சந்தோசம் அவர்கள் திருப்தி. இதில் கருத்துக்கூற நாம் யார்? பரணி பாடிய தேசீயவாதிகள் இப்போது புறணிபாடும் நிலைக்கு வந்துவிட்டார்கள். அதை விடுத்து அவர்களுக்கு வாழ்த்து சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

  இது முந்தியே கன இடங்களிலை குசுகுசுத்த விசயம்.... காணானதை கண்ட சனம் செய்யுது.....இதுக்குப்போய் பெரியவசனம் எல்லாம் போட்டு கதைக்கக்கூடாது. பாரம்பரியம் தெரிஞ்சவன்....பகுத்தறிவு தெரிஞ்சவன்...பள்ளிக்கூடம் போய் நாலெழுத்து படிச்சவன் ஒருகாலமும் இந்த வேலை செய்யமாட்டான்.....

 

Posted

கலை அம்சத்துடன் பார்க்கலாம். வேறு, சரி, பிழை, தேவை, தேவையில்லை பார்ப்பதாயின்.. இதுபோல் பல்லாயிரம் விடயங்கள் உள்ளன. நாங்கள் இணையத்தளத்தில் எழுதுவனவற்றையும் இவ்வாறே வேறோர் ஊடகப்பரப்பில் விமர்சித்து திட்டி தீர்க்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.