Jump to content

வானூர்தியில் பறக்கும் வயசுக்கு வந்த பொண்ணு நிகழச்சி

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் தப்புத்தான்

தமிழச்சி வெளியில் வந்த அடுத்த தலைமுறை  என்று கணித்திருந்தேன்

இல்லை அவரும் குண்டுச்சட்டிக்குள்தான் குதிரை ஓட்டுகின்றார் என்று உங்கள் நேரடி அனுபவத்தை வைத்து புரிந்து கொண்டேன். :icon_idea:

நன்றி  வணக்கம்.

விசு;

இல்லை, என்னுடைய மகளும் உங்களது மகள் போல் இருந்தால் நான் பெருமைபடுவேன். இது தனியே  பணம் சம்பந்த பட்ட விடயம் அல்ல. நீங்கள் உங்கள் மகளுக்காக பெருமைப்படுங்கள்.

ஒன்று அவருக்கு தனது விருபத்தை சொல்ல தெரிந்திருக்கிறது. சாமத்திய வீடு, அது எதிர் காலத்தில் என்னவாகவும் இருக்கலாம்..நான் போலிஸ் ஆக வரபோகிறேன், டாக்டர், என்கினியர், குடும்ப பெண், கருவலை/வெள்ளை  கலியாணம் கட்ட போகிறேன், அரசியலில் இறங்க போகிறேன்  ......................நீங்கள் சொல்லுங்கள் ; எதுவாக இருந்தாலும் தனது விருபத்தை சொல்லும் திறமை. அது கட்டாயம் தேவை. அது உங்கட மகளுக்கு இருக்கு.

தெரிந்த இடத்தில் தவறு செய்யாமை. உங்கள் வீடுக்கு அருகில் உணவு மலிவு என்றால், பேகிற இடத்தில் விலை கூட கொடுத்து வாங்க வேண்டும் என்கிற தேவை இல்லவே இல்லை. அது இப்போது உள்ள புதிய சந்ததியில் மிகக் குறைவு. வரவிற்கு மீறிய செலவு பல இடங்களில் நடக்கிறது.

என்னுடைய மகளில் அது இருக்கு 6 வயது- வீட்டில் பகிடியாக சொல்லுவது - வேஸ்டிங் குயீன் ...இப்ப கொஞ்சம் கொஞ்சம் முன்னேற்றம்..நாங்கள் இப்ப அதில் மிகவும் கவனம்.

தமிழிச்சிக்கு;

10-12 வயசு பிள்ளைக்கு சாமத்திய வீடு நடத்த எவ்வளவு செலவு வரும் தெரியாது. அப்படி நடத்த உங்களுக்கு காசுதான் பிரச்சனை என்றால் சொல்லி விளங்கப்படுத்தலாம். அவர்களுக்கு தெரியாது..இதுக்கு 10000 முடியுமா 10 டாலர் முடியுமா என.

முடிவாக, எனது மனைவிக்கு இதுவரை காலமும் இப்படி ஒன்று செய்கிறது இல்லை என்று சொல்லிக்கொண்டு இருக்கிறா ..நான் நினைக்கிறன், மகளுக்கு விருப்பம் என்றால் அந்த நேரத்தில் உள்ள வசதிக்கு ஏற்ப செய்வம் என்று.  

Link to comment
Share on other sites

  • Replies 113
  • Created
  • Last Reply

என் தப்புத்தான்

தமிழச்சி வெளியில் வந்த அடுத்த தலைமுறை  என்று கணித்திருந்தேன்

இல்லை அவரும் குண்டுச்சட்டிக்குள்தான் குதிரை ஓட்டுகின்றார் என்று உங்கள் நேரடி அனுபவத்தை வைத்து புரிந்து கொண்டேன். :icon_idea:

நன்றி  வணக்கம்.

விசுகு, நீங்கள் உங்கள் ஒரு பிள்ளையின் சாமத்திய வீட்டிற்கு  ஆயிரக்கணக்கில் செலவழித்திருக்கிறீர்கள்.  ஆனால், இன்னொரு பிள்ளை காசு சேமிக்கிறது என்று ஒரே திரியில்தான் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.  அதைத்தான் சுட்டிக் காட்டினேன்.  முதலாவது செலவு அநாவசியமானது.  இரண்டாவது செலவு அத்தியாவசியமானது.  பொதுவாக விலைகள் இடத்திற்கு இடம் மாறுபடும்.  பிள்ளைகளுக்கு அதுவும் தெரிந்திருக்க வேண்டும்.  அந்தப் பிள்ளை பரீட்சை விடயமாக மட்டுமே அந்த இடத்திற்குச் சென்றிருக்கிறார்.  அங்கு அவர் ஆகக் கூடியது இரண்டு கிழமைகள் மட்டுமேதான் செல்லப் போகிறார்.  நாளாந்தம் அங்கு செல்வதானால் அது கட்டுப்படியாகாதுதான்.  ஆனால், ஒன்றிரண்டு கிழமைக்குச் செலவழிப்பதில் தவறில்லைத்தானே?  இவ்வாறான விடயங்களிலும் பிள்ளைகள் அனுபவப்படவேண்டும்.  வெளி அனுபவங்கள்தான் பிள்ளைகளைப் புடம் போடும்.  இது நான் எனது அனுபவத்தில் கண்டது.   அநாவசியமான செலவுக்கும் அத்தியாவசியமான செலவுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் சொல்லிக் கொடுக்கவில்லை என்பதையே கூறவிளைந்தேன்.   

உங்கள் நாட்டில் யூனியில் விலைகள் மலிவு.  எங்கள் நாட்டிலோ யூனியில் விலைகள் அதிகம்.  யூனி வளாகத்திலுள்ள கடைகளில் ஒரு பென்சில்கூட ஒன்றரை மடங்கு விலை அதிகம்.  உணவுக் கடைகளும் வெளியில் விற்கும் விலைகளிலேயே இருக்கும்.  அதைவிட யூனியில் இருக்கும் உணவுக்கடைகளும் சாதாரணமாக விலைகூடிய உணவுக் கடைகளாகவே இருக்கின்றன.  இவற்றையெல்லாம் மீறித்தான் இங்குள்ள பிள்ளைகளும் படித்து முடித்தார்கள்.

கனடாவில், ஒரு பிள்ளை 5ஆம் வகுப்பு படிக்கும்வரை அவருக்கு பல இனங்களையும் சேர்ந்த குழந்தைகள் நண்பர்களாக இருப்பார்கள்.  வகுப்பு 8, 9 வரை தெற்காசியப் பிள்ளைகள் நண்பர்களாக இருப்பார்கள்.  மேல்வகுப்பு படிக்கும்போது தமிழ்ப் பிள்ளைகள் நண்பர்களாக இருப்பார்கள்.  பல்கலைக்கழகம் படிக்கும்போது அவர்களது ஊரைச் சேர்ந்தவர்கள் நண்பர்களாக இருப்பார்கள்.  அவர்களும் போன தலைமுறையின் குண்டுச் சட்டிக்குள்ளேயே வந்துவிடுகிறார்கள்.  இதனை நான் கண்கூடாகவே பார்த்திருக்கிறேன்.   உங்களுக்கும் இங்கு உறவினர்கள் இருக்கிறார்கள்.  யூனியில் படித்து முடித்த பிள்ளைகள் பலர் இருப்பார்கள்.  முடிந்தால் அவர்களிடம் அவர்களுடைய நண்பர்களைப் பற்றி விசாரித்துப் பாருங்கள்.  எமது அடுத்த தலைமுறையாவது நல்ல வழியில் இருப்பார்கள் என்று எதிர்பார்த்தேன்.  ஆனால், இங்கு பிறந்த பிள்ளைகள் என்னைப் போன்றவர்களைவிட மோசமாகவே இருக்கிறார்கள்.  இது எமது இனத்தைப் பின்னடைவிற்கே கொண்டு செல்கிறது.  இந்த நிலை இங்குள்ள அமைப்புகள், சமூக சேவைத் திட்டங்களுக்கு மிகப்பெரிய தடையாக இருக்கின்றது.  இங்கு வளரும் பிள்ளைகள்கூட, நியாய, அநியாயங்களுக்கப்பால் தமது ஊரைச் சார்ந்தவர்களுக்கே முன்னுரிமை கொடுப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.  இது மிகவும் வேதனையான விடயம்.  வொல்கானோ, நீங்களும் முடிந்தால் இந்த விடயத்தைப் பற்றி இங்கே கேட்டறிந்து பாருங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசு;

இல்லை, என்னுடைய மகளும் உங்களது மகள் போல் இருந்தால் நான் பெருமைபடுவேன். இது தனியே  பணம் சம்பந்த பட்ட விடயம் அல்ல. நீங்கள் உங்கள் மகளுக்காக பெருமைப்படுங்கள்.

ஒன்று அவருக்கு தனது விருபத்தை சொல்ல தெரிந்திருக்கிறது. சாமத்திய வீடு, அது எதிர் காலத்தில் என்னவாகவும் இருக்கலாம்..நான் போலிஸ் ஆக வரபோகிறேன், டாக்டர், என்கினியர், குடும்ப பெண், கருவலை/வெள்ளை  கலியாணம் கட்ட போகிறேன், அரசியலில் இறங்க போகிறேன்  ......................நீங்கள் சொல்லுங்கள் ; எதுவாக இருந்தாலும் தனது விருபத்தை சொல்லும் திறமை. அது கட்டாயம் தேவை. அது உங்கட மகளுக்கு இருக்கு.

தெரிந்த இடத்தில் தவறு செய்யாமை. உங்கள் வீடுக்கு அருகில் உணவு மலிவு என்றால், பேகிற இடத்தில் விலை கூட கொடுத்து வாங்க வேண்டும் என்கிற தேவை இல்லவே இல்லை. அது இப்போது உள்ள புதிய சந்ததியில் மிகக் குறைவு. வரவிற்கு மீறிய செலவு பல இடங்களில் நடக்கிறது.

என்னுடைய மகளில் அது இருக்கு 6 வயது- வீட்டில் பகிடியாக சொல்லுவது - வேஸ்டிங் குயீன் ...இப்ப கொஞ்சம் கொஞ்சம் முன்னேற்றம்..நாங்கள் இப்ப அதில் மிகவும் கவனம்.

தமிழிச்சிக்கு;

10-12 வயசு பிள்ளைக்கு சாமத்திய வீடு நடத்த எவ்வளவு செலவு வரும் தெரியாது. அப்படி நடத்த உங்களுக்கு காசுதான் பிரச்சனை என்றால் சொல்லி விளங்கப்படுத்தலாம். அவர்களுக்கு தெரியாது..இதுக்கு 10000 முடியுமா 10 டாலர் முடியுமா என.

முடிவாக, எனது மனைவிக்கு இதுவரை காலமும் இப்படி ஒன்று செய்கிறது இல்லை என்று சொல்லிக்கொண்டு இருக்கிறா ..நான் நினைக்கிறன், மகளுக்கு விருப்பம் என்றால் அந்த நேரத்தில் உள்ள வசதிக்கு ஏற்ப செய்வம் என்று.  

நன்றி  ஐயா  விளக்கத்துக்கும்  கருத்துக்கும்...

நாம் நடைமுறை  வாழ்வை சந்தித்து நடப்பவர்கள்.

அதை நாளாந்தம் அனுபவிப்பவர்கள்

பெண் பிள்ளைகளின் வாழ்க்கையில் ஆனந்தம் என்பது பெற்றோருடன் இருக்கும் வரைதான் இனிமையானது. சுமையற்றது.  அதன் பின் பெரும் சுமைகளைத்தாங்குபவர்களாக பெரும்  பொறுப்புக்களை மிகுந்த பொறுமையுடன்   நிர்வகிப்பவர்களாக இருப்பார்கள். எனவே அவர்களுக்கு சிறு சிறு ஆசைகளை நிறைவேற்றுவது   அவசியம் என்பது எனது அனுபவப்பாடம். 

அதை வைத்தே எழுதுகின்றோம்

இந்த உலகத்தை ஒரு நேர் கோட்டில் கொண்டுவர முயற்சிப்பது  மடமைத்தனம்.

இதிலே

எனது மகளின் விருப்பத்தை கேளாது நானாக நடாத்தியிருந்தால் 

உங்கள் ஆதிக்கத்தை  குழந்தைமேல் திணிக்கின்றீர்கள் என்பார்கள்

கேட்டுச்செய்தால்

எல்லாவற்றிற்கும் ஆமாப்போடுகின்றீர்கள் வளர்ப்பு சரியில்லை என்பார்கள்

பல நூற்றாண்டுகளாக  நடைமுறையிலுள்ள ஒன்றை   எங்களின் கொள்கைகளுக்காக அவளிடம்  கேளாது அதை அவளுக்கு மறுப்பதை என்னவென்பது..............??? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவில், ஒரு பிள்ளை 5ஆம் வகுப்பு படிக்கும்வரை அவருக்கு பல இனங்களையும் சேர்ந்த குழந்தைகள் நண்பர்களாக இருப்பார்கள்.  வகுப்பு 8, 9 வரை தெற்காசியப் பிள்ளைகள் நண்பர்களாக இருப்பார்கள்.  மேல்வகுப்பு படிக்கும்போது தமிழ்ப் பிள்ளைகள் நண்பர்களாக இருப்பார்கள்.  பல்கலைக்கழகம் படிக்கும்போது அவர்களது ஊரைச் சேர்ந்தவர்கள் நண்பர்களாக இருப்பார்கள்.  அவர்களும் போன தலைமுறையின் குண்டுச் சட்டிக்குள்ளேயே வந்துவிடுகிறார்கள்.  இதனை நான் கண்கூடாகவே பார்த்திருக்கிறேன்.   உங்களுக்கும் இங்கு உறவினர்கள் இருக்கிறார்கள்.  யூனியில் படித்து முடித்த பிள்ளைகள் பலர் இருப்பார்கள்.  முடிந்தால் அவர்களிடம் அவர்களுடைய நண்பர்களைப் பற்றி விசாரித்துப் பாருங்கள்.  எமது அடுத்த தலைமுறையாவது நல்ல வழியில் இருப்பார்கள் என்று எதிர்பார்த்தேன்.  ஆனால், இங்கு பிறந்த பிள்ளைகள் என்னைப் போன்றவர்களைவிட மோசமாகவே இருக்கிறார்கள்.  இது எமது இனத்தைப் பின்னடைவிற்கே கொண்டு செல்கிறது.  இந்த நிலை இங்குள்ள அமைப்புகள், சமூக சேவைத் திட்டங்களுக்கு மிகப்பெரிய தடையாக இருக்கின்றது.  இங்கு வளரும் பிள்ளைகள்கூட, நியாய, அநியாயங்களுக்கப்பால் தமது ஊரைச் சார்ந்தவர்களுக்கே முன்னுரிமை கொடுப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.  இது மிகவும் வேதனையான விடயம்.  வொல்கானோ, நீங்களும் முடிந்தால் இந்த விடயத்தைப் பற்றி இங்கே கேட்டறிந்து பாருங்கள். 

தமிழ் பிள்ளைகள், முதலில் எல்லா விதமான நண்பர்களும் பின்னர் தனியே  தமிழ் சமூகத்தோடு மட்டும் வந்து விடுவதை சொல்லியிருந்தீர்கள். அது உணமைதான். அது சரி என்றோ தவறென்றோ இல்லைத்தானே.

இங்கே மருத்துவம் படிக்க வந்துள்ள இரிஸ் இனத்தை சார்ந்த 2ம் தலைமுறை கனடியனும் அதைத்தான் சொல்லுகிறார். டொரொண்டோவில பல இனங்கள் இருந்தாலும் ஒரு பன்முக சமூகம் இல்லை என்று. ஒவ்வொருவரும் குழு குழுவாக் பிரிந்து உள்ளார்கள் என்று. யார்தான் தன் சமூகம் தண்டி உயர் பதவிகளுக்கு ஆட்களை எடுக்கிறார்கள்?

மருத்துவ துறையை எடுத்தால், நீங்கள் தொப்பி-ஜூஸ்- போடாமல் எதுவும் செய்ய முடியாது..ஒட்டவா மருத்துவபீட துணை தலைவர் 30/40 பேர் இருந்த இடத்தில் சொல்லுகிறார், கனடாவிற்கு வந்த இம்மிக்ரன் வைத்தியர்கள் தகுதி அற்றவர்கள் என்று. அது எந்த மாதிரி ஒரு துவேசம், அவர் ஒரு சப்பட்டை. சப்பட்டைக்கு தெரியும் சீனாவில் இருந்து வைத்தியர்கள் வருவதில்லை என்று.அதனால் தான் அப்படி சொல்லுகிறார் தெரியவில்லை? ஆனால்

அவரே சொன்னவர் இது தன்னுடைய கருத்து அல்ல, இது பொதுவான கருத்து என. 

எந்தனை கலர் பிள்ளைகள் கருபீயனுக்கு மருத்துவம் படிக்க போகிறார்கள் என்று தெரியுமா? கிட்டதட்ட 10 % வீதமான் ross மாணவர்கள் கனேடியர்கள். கலர் பிள்ளைகளுக்கு கனடாவில மருத்துவம் அவர்களுடைய பெற்றோர் வைத்தியராக இருந்தாலும் கிடைக்காது. இங்கே ஒரு மலையாளபிள்ளை இருக்கிறது, தகப்பன் மக் மாஸ்டர் இல், பிள்ளைமருத்துவர், தாய் அங்கேயே மன நல வைத்தியர், இந்த பிள்ளை, ஒன்ட்டாரியோ நீச்சல் அணி வீரர். இந்தலவிற்கும் அவரும் ross இல்தான் படிக்கிறார்.

நாங்கள் எங்களுடை "கலாச்சாரத்தை" விட்டால்  பிரதான  சமூகத்தில் எங்களை இணைப்பார்கள் என்று நினைக்க வேண்டாம். கனடாவின் பாகுபாட்டை உணர ?அடுத்த நிலைக்கு போக வேண்டும்..ஒன்றில் அது உங்களுக்கு தெரியாது அல்லது சொல்ல விரும்பவில்லை.

எனது குடும்ப நட்பு வட்டத்திற்குள்ளேயே இருவர் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் வைத்தியம் படித்திருக்கிறார்கள்.  ஒருவர் படித்து முடித்து, விசேட படிப்பும் (Specialized)முடித்து விட்டார்.  இன்னொருவர் படித்துக் கொண்டிருக்கிறார்.  இருவரையும் பார்க்கும்போதே தெரியும் அவர்கள் தமிழர்கள் என்று.  90களில் என்னோடு யூனியில் கூடப் படித்த இன்னொரு இந்திய நண்பி மக்மாஸ்டரில் மருத்துவம் படித்து இப்போது குழந்தைகள்நல மருத்துவராக இருக்கிறார்.  அவரின் சகோதரியும் மக்மாஸ்டரில்  மருத்துவம் முடித்தார்.  இருவருமே கனடாவிலேயே விசேட (Specialized) மருத்துவப் படிப்பையும் முடித்து விட்டார்கள்.  இங்கு மருத்துவம் படிப்பதாக இருந்தால், பலகட்டத் தேர்வுகளை சந்திக்க வேண்டும்.  நிறைய சமூக சேவைகள் செய்திருக்க வேண்டும்.  முக்கியமாக மருத்துவம் சம்பந்தப்பட்ட இடங்களில் செய்திருக்க வேண்டும் என அதில் பல விடயங்கள் உள்ளன.   அதைவிட நேர்முகத் தேர்வு வேறு உண்டு.  இவை எல்லாவற்றையும் ஆராய்ந்துதான் மருத்துப்படிப்பிற்கான அனுமதி கொடுக்கப்படுகிறது.  இது எல்லோராலும் முடியும் காரியமல்ல.  குறிப்பிட்ட பல்கலைக்கழகத்திற்கான நுழைவுத் தகைமைகள் பெற்றிருக்க வேண்டும்.   எந்தப் பல்கலைக்கழகத்திலும் ஒரு குறிப்பிட்டளவு மாணவர்களைத் தான் அனுமதிப்பார்கள்.  அதனால் இந்தத் தகைமைகளில் யார் யார் முன்னணி வகிக்கிறார்களோ அவர்களுக்குத் தான் அனுமதி கொடுக்கப்படும்.  

நான் மேற்கூறியவர்களுள் கனடாவில் மருத்துவப் படிப்பை முடித்த ஒருவருடைய பெற்றோரும் வைத்தியர்கள் இல்லை.  இந்தியச் சகோதரிகளின் தகப்பன் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர்.  தாய் வீட்டிலேயே இருக்கும் இல்லத்தரசி.  ஒரு தமிழ்ப் பிள்ளையின் அப்பா இன்ஜீனியர்.  தாய் குழந்தைகள் காப்பகத்தில் வேலை செய்கிறார்.  மற்றவருடைய பெற்றோர்கள் தொழிற்சாலை, மற்றும் ரிம் கோர்ட்டனில் வேலை செய்பவர்கள்.  

நீங்கள் குறிப்பிட்டவர் நீச்சல் அணித் தலைவராக இருக்கலாம்.  அவரின் பெற்றோர்கள் மருத்துவர்களாக இருக்கலாம்.  அதற்காக மட்டும் அவரை மருத்துவம் படிக்க அனுமதிக்க முடியுமா?   அவரின் தகைமைகள் இங்குள்ள பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான தகைமைகளைவிடக் குறைவாக இருக்கலாம்.  அதற்கு அவர் குறை கூறும் ஆயுதம் இனத்துவேசம். 

நீங்கள் குறிப்பிடும் இனத்துவேசத்தை வென்றுதான் எத்தனையோ தமிழ்ப்பிள்ளைகள் இங்கு மருத்துவம் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறியவில்லையா?  

ஊரில் செய்யாத, அனுபவிக்காத துவேசத்தையா நாம் இங்கு அனுபவிக்கிறோம்?

நீங்கள் குறிப்பிட்டதுபோல, கரிபியனுக்குச் சென்ற பலர் அங்குகூடப் படிக்க முடியாமல் திரும்பி வந்து சாதாரண வேலைகள் செய்து கொண்டிருப்பவர்களும் அதிகம்.   , மருத்துவம் என்பது சாதாரண படிப்பல்ல.  ஆனால், எம்மில் பலர்  ஆசைக்காக மருத்துவம் படிக்க வெளிக்கிட்டுத் தங்கள் வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்கிறார்கள். 

நான் எங்குமே எமது கலாச்சாரத்தை விட்டுக் கொடுக்கச் செல்லவில்லை.  அதே நேரம் கலாச்சாரம் என்று சொல்லிக் கொண்டு குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட வேண்டாம் என்றுதான் கூறுகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 இங்கு மருத்துவம் படிப்பதாக இருந்தால், பலகட்டத் தேர்வுகளை சந்திக்க வேண்டும்.  நிறைய சமூக சேவைகள் செய்திருக்க வேண்டும்.  முக்கியமாக மருத்துவம் சம்பந்தப்பட்ட இடங்களில் செய்திருக்க வேண்டும் என அதில் பல விடயங்கள் உள்ளன.   அதைவிட நேர்முகத் தேர்வு வேறு உண்டு.  இவை எல்லாவற்றையும் ஆராய்ந்துதான் மருத்துப்படிப்பிற்கான அனுமதி கொடுக்கப்படுகிறது.  இது எல்லோராலும் முடியும் காரியமல்ல.  குறிப்பிட்ட பல்கலைக்கழகத்திற்கான நுழைவுத் தகைமைகள் பெற்றிருக்க வேண்டும்.   எந்தப் பல்கலைக்கழகத்திலும் ஒரு குறிப்பிட்டளவு மாணவர்களைத் தான் அனுமதிப்பார்கள்.  அதனால் இந்தத் தகைமைகளில் யார் யார் முன்னணி வகிக்கிறார்களோ அவர்களுக்குத் தான் அனுமதி கொடுக்கப்படும்.  

நீங்கள் குறிப்பிட்டதுபோல, கரிபியனுக்குச் சென்ற பலர் அங்குகூடப் படிக்க முடியாமல் திரும்பி வந்து சாதாரண வேலைகள் செய்து கொண்டிருப்பவர்களும் அதிகம்.   , மருத்துவம் என்பது சாதாரண படிப்பல்ல.  ஆனால், எம்மில் பலர்  ஆசைக்காக மருத்துவம் படிக்க வெளிக்கிட்டுத் தங்கள் வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்கிறார்கள். 

நீங்கள் சொல்லுகிற வண்டிலுக்களை த்தான், எங்களுக்கும் சொன்னவை. அதற்க்கு நாங்கள் ஒன்று செய்ய முடியாது. அதுதான் உண்மை என்று நன்பிகொண்டு இருக்கோ.உங்களுக்கு தெரிந்தவர்களிடம் கேளுங்கோ, எந்தனைபேர் பின் கதவாலை வந்தவை, எத்தினை பேர் நீங்கள் சொல்லுகிற, சமூக சேவை, பல படிப்பு, பல நேர்முக தேர்வுகள் செய்து வந்தவை என்று?

அதென்ன இலங்கையில் இருக்க மாதிரிதான் இங்கேயும் எடுக்கிறார்கள், (அதவிட இங்கே கூட எடுக்கிறார்கள் ) இலங்கையில் 20 மில்லியன் சனம் 1000 பேர் மெடிசின் படிக்கினம், இங்கே 30 மில்லியன் சனம் 1500/1800 பேர் படிக்கினம். ஆனால் இலங்கையில் இருக்கிற ஆக்கள் இப்படி சொல்லுவதில்லை. இங்கே மேடிசினே படிக்கேலாது என்று. இங்கே மாத்திரம் ஒரு வீட்டில 3/ 4 என்கினியர் இருப்பார்கள் மருந்திற்கும் ஒரு வைத்தியர் இருக்க மாட்டார். எப்பவாவது யோசித்து பார்த்தனீர்களா ?

நான் சொன்னது அவரது பெற்றோர் வைத்தியர் என்று, அப்படி ஒரு வைத்தியர் jews சமூகத்தில் இருந்தால் அவருக்கு ஒரு தகுதியும் தேவையில்ல..பல நேர்முக தெரிவு, சமூக சேவை, பல பட்ட படிப்பு..மற்றவர்களுக்குத்தான் தேவை.

ஒவ்வொரு வருடமும் எந்தனை பேர் முதல் படிப்பு உடன் மருத்துவம் படிகிறார்கள் என்று பாருங்கள், அவர்களுது சமூக பின்னணியை பாருங்கள்.

உங்களுக்கு நான் சொல்லுவது புதினம் என்றால் அதற்கு நான் ஒன்று செய்ய முடியாது. ஆனால் உங்களது பிள்ளைகள் உறவிர்களை இப்படி எல்லாம் செய்துதான் வர வேண்டும் என்று கொடுமைபடுத்த வேண்டாம்.

கரிபியன் இல் இருந்து இடையில் வராது பற்றி சொன்னீர்கள்..அது ஒரு பெரிய பிசினஸ்..அவர்களின் நோக்கம் பணம் பண்ணுவதுதான் ..ROSS முதலாளி ஒரு மிகப் பெரும் பணக்காரர். ஆனாலும் அவர்களுடைய படிப்பிற்கு மரியாதை இருக்கு. அவர்கள் இங்கே தொகையாக எடுப்பார்கள்- மாணவர்களை, பிறகு செமிஸ்டர் செமிஸ்டர் ஆக மாணவர்களை சோதினை வைத்து விலத்துவார்கள் - weeding என்று சொல்லுவார்கள். ஆனால் பலர் தடை தாண்டி படிக்கிறார்கள். ஆனால் கனடியன், USA பல்கலை கழகங்கள் ஊர் மாதிரி நுழைஞ்ச சரி..99.99999 டாக்டர்தான்.

உண்மையில் எங்களுக்கும் -இந்த துறையில் இருப்பதால் அப்படி சொல்லாம் என்று நினைக்கிறன்; உந்த வண்டில் கதைகளை கேள் கேள் என்று கேட்டு, புளிச்சு போட்டுது. மற்றது நான் இந்த தகவல்களை எடுத்தது தமிழ் குடி மக்களிடம் இருந்து அல்ல. அதிகம் பேர் இந்தியன், இரிஸ்காரன், பஞ்சப்பட கோகாசியன், இம்மிக்ரன் இத்தாலியன்..சப்பட்டை, பாகிஸ்தானி, லெபனீஸ்....

நான் வேலை செய்கிற இடத்தில் ரோஸ் ஆக்கள் தங்களுடைய பயிற்சிக்கு வாறவை.

ROSS பற்றி கன தரம் எழுதின படியால்; இதுதான் இப்ப உள்ள மிகச் சிறந்த கருபியன் மருத்துவ பீடம். சரியான காசு, கண்ணை மூடி முளிகிரதிற்குள் தட்டி விட்டு விடுவார்கள். weeding -ஆனால் படித்து முடித்தால் கூடுதாலாக வேலை எடுப்பதில் பிரச்சனை இருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு, நீங்கள் உங்கள் ஒரு பிள்ளையின் சாமத்திய வீட்டிற்கு  ஆயிரக்கணக்கில் செலவழித்திருக்கிறீர்கள்.  ஆனால், இன்னொரு பிள்ளை காசு சேமிக்கிறது என்று ஒரே திரியில்தான் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.  அதைத்தான் சுட்டிக் காட்டினேன்.  முதலாவது செலவு அநாவசியமானது.  இரண்டாவது செலவு அத்தியாவசியமானது.  பொதுவாக விலைகள் இடத்திற்கு இடம் மாறுபடும்.  பிள்ளைகளுக்கு அதுவும் தெரிந்திருக்க வேண்டும்.  அந்தப் பிள்ளை பரீட்சை விடயமாக மட்டுமே அந்த இடத்திற்குச் சென்றிருக்கிறார்.  அங்கு அவர் ஆகக் கூடியது இரண்டு கிழமைகள் மட்டுமேதான் செல்லப் போகிறார்.  நாளாந்தம் அங்கு செல்வதானால் அது கட்டுப்படியாகாதுதான்.  ஆனால், ஒன்றிரண்டு கிழமைக்குச் செலவழிப்பதில் தவறில்லைத்தானே?  இவ்வாறான விடயங்களிலும் பிள்ளைகள் அனுபவப்படவேண்டும்.  வெளி அனுபவங்கள்தான் பிள்ளைகளைப் புடம் போடும்.  இது நான் எனது அனுபவத்தில் கண்டது.   அநாவசியமான செலவுக்கும் அத்தியாவசியமான செலவுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் சொல்லிக் கொடுக்கவில்லை என்பதையே கூறவிளைந்தேன்.   

உங்கள் நாட்டில் யூனியில் விலைகள் மலிவு.  எங்கள் நாட்டிலோ யூனியில் விலைகள் அதிகம்.  யூனி வளாகத்திலுள்ள கடைகளில் ஒரு பென்சில்கூட ஒன்றரை மடங்கு விலை அதிகம்.  உணவுக் கடைகளும் வெளியில் விற்கும் விலைகளிலேயே இருக்கும்.  அதைவிட யூனியில் இருக்கும் உணவுக்கடைகளும் சாதாரணமாக விலைகூடிய உணவுக் கடைகளாகவே இருக்கின்றன.  இவற்றையெல்லாம் மீறித்தான் இங்குள்ள பிள்ளைகளும் படித்து முடித்தார்கள்.

கனடாவில், ஒரு பிள்ளை 5ஆம் வகுப்பு படிக்கும்வரை அவருக்கு பல இனங்களையும் சேர்ந்த குழந்தைகள் நண்பர்களாக இருப்பார்கள்.  வகுப்பு 8, 9 வரை தெற்காசியப் பிள்ளைகள் நண்பர்களாக இருப்பார்கள்.  மேல்வகுப்பு படிக்கும்போது தமிழ்ப் பிள்ளைகள் நண்பர்களாக இருப்பார்கள்.  பல்கலைக்கழகம் படிக்கும்போது அவர்களது ஊரைச் சேர்ந்தவர்கள் நண்பர்களாக இருப்பார்கள்.  அவர்களும் போன தலைமுறையின் குண்டுச் சட்டிக்குள்ளேயே வந்துவிடுகிறார்கள்.  இதனை நான் கண்கூடாகவே பார்த்திருக்கிறேன்.   உங்களுக்கும் இங்கு உறவினர்கள் இருக்கிறார்கள்.  யூனியில் படித்து முடித்த பிள்ளைகள் பலர் இருப்பார்கள்.  முடிந்தால் அவர்களிடம் அவர்களுடைய நண்பர்களைப் பற்றி விசாரித்துப் பாருங்கள்.  எமது அடுத்த தலைமுறையாவது நல்ல வழியில் இருப்பார்கள் என்று எதிர்பார்த்தேன்.  ஆனால், இங்கு பிறந்த பிள்ளைகள் என்னைப் போன்றவர்களைவிட மோசமாகவே இருக்கிறார்கள்.  இது எமது இனத்தைப் பின்னடைவிற்கே கொண்டு செல்கிறது.  இந்த நிலை இங்குள்ள அமைப்புகள், சமூக சேவைத் திட்டங்களுக்கு மிகப்பெரிய தடையாக இருக்கின்றது.  இங்கு வளரும் பிள்ளைகள்கூட, நியாய, அநியாயங்களுக்கப்பால் தமது ஊரைச் சார்ந்தவர்களுக்கே முன்னுரிமை கொடுப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.  இது மிகவும் வேதனையான விடயம்.  வொல்கானோ, நீங்களும் முடிந்தால் இந்த விடயத்தைப் பற்றி இங்கே கேட்டறிந்து பாருங்கள். 

தமிழச்சி ஒவ்வொரு இனம் சார்ந்த மாணவரும் தங்கள் இன மாணவர்களோடு தானே சேருகிறார்கள் இதில் தமிழர் மட்டும் விதி விலக்கா என்ன?...எல்ல இன மாணவர்களும் நண்பர்களாக இருந்தாலும் தங்கள் இனத்தை சார்ந்தவரை பெஸ்ட் நண்பராக வைத்திருப்பதன் காரணம் தாங்கள் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தான்.தமிழன் என்ன தான் யூனியில் படித்தாலும்,வெளியில் சாப்பிட்டாலும் வீட்டில வந்து சோறு சாப்பிடாமல் இருக்க முடியுமா? இந்தியன் சப்பாத்தி,சீனாக்காரன் நூடில்ஸ்,இத்தாலிக்காரன் பீசா என்று சாப்பிட்டால் தானே அவர்களுக்கு திருப்தி
Link to comment
Share on other sites

வொல்கானோ, உங்களின் எழுத்து நடை வித்தியாசமாக உள்ளது.   நீங்கள் எழுதியது எனக்கு விளங்கவில்லை.  அதனால் என்னால் விளக்கமாக எழுத முடியாது.  இருந்தாலும் சிலதை எழுத விரும்புகிறேன்.

நீங்களேதான் எழுதுகிறீர்கள், கனேடிய, அமெரிக்க பல்கலைக்கழகங்களில் சென்று விட்டால் 99.99 வீதம் டொக்டர்தான் என்று.  கரிபியனிலும் அங்கு போனபின்பும் விலத்துகிறார்கள்தானே?   கரிபியனில் விலத்துகிறார்கள் என்று தெரிந்தும் அத்தனை பணம் செலுத்திச் செல்கிறார்கள் தானே?

பாரபட்சம் என்பது எங்கும் இருப்பதுதான்.  இந்தப் பாரபட்சத்தையும் மீறித்தான் பலர் இங்கு மருத்துவம் படித்து முடிக்கிறார்கள்.  நீங்கள் சொன்ன விடயங்களை நானும் ஏற்கனவே அறிந்து வைத்திருந்தேன் தான்.  ஏன், மேலே குறிப்பிட்டவர்களுள் ஒருவருக்கு முதல் வருடமே மருத்துவப் பீடத்திற்கு அனுமதி கிடைத்திருந்தது.  ஆனால், அவருக்கு அனுமதிக் கடிதம் கிடைக்கவில்லை.  அவரும் அவரது பெற்றோரும் இதே குறையைத்தான் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.  ஆனால், அடுத்த வருடமே அவர் அதே பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். 

 எமது நாட்டோடு ஒப்பிடும்போது, கனேடிய நாட்டில் இனத்துவேசம் வெளிப்படையாக இருப்பதில்லை.  அவ்வாறு துவேசம் இருக்குமாயின், 20 - 25 வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டுக்குக் குடியேறிய தமிழர்கள் அரசியல்வாதிகளாக இருந்திருக்க முடியுமா?

தமிழச்சி ஒவ்வொரு இனம் சார்ந்த மாணவரும் தங்கள் இன மாணவர்களோடு தானே சேருகிறார்கள் இதில் தமிழர் மட்டும் விதி விலக்கா என்ன?...எல்ல இன மாணவர்களும் நண்பர்களாக இருந்தாலும் தங்கள் இனத்தை சார்ந்தவரை பெஸ்ட் நண்பராக வைத்திருப்பதன் காரணம் தாங்கள் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தான்.தமிழன் என்ன தான் யூனியில் படித்தாலும்,வெளியில் சாப்பிட்டாலும் வீட்டில வந்து சோறு சாப்பிடாமல் இருக்க முடியுமா? இந்தியன் சப்பாத்தி,சீனாக்காரன் நூடில்ஸ்,இத்தாலிக்காரன் பீசா என்று சாப்பிட்டால் தானே அவர்களுக்கு திருப்தி

ரதி, எல்லா இனத்தவரும் தங்கள் தங்கள் இனத்தோடு சேருவது உண்மைதான்.  அதற்காக அவர்கள் தங்கள் இனத்தோடு மட்டும் நின்று விடுவதில்லை.  மற்ற இனத்தோடும் சேரத்தான் செய்கிறார்கள்.  ஆனால், ஒருசில இனத்தவர் மட்டும் தங்கள் தங்கள் இனத்தோடு மட்டும் சேர்கிறார்கள்.  அதற்குள் தமிழினமும் அடங்கும்.  ஆனால், சில இனத்தவர்கள் மற்ற இனத்தவர்களோடு கலந்து பழகுவதால் பல துறைகளில் முன்னேறியிருக்கிறார்கள்.  எம்மவர்கள் இன்னும் குண்டுச் சட்டிக்குள்ளேயேதான் இருக்கிறார்கள். 

இங்கு நடக்கும் நிகழ்வுகளில் கலந்து கொள்பவர்களில் அனைவரும் தமிழர்களாகவே இருப்பார்கள்.   அரசியல்வாதிகள், முக்கிய விருந்தினர்கள், மற்றும் நிறுவனத்திற்குத் தேவையான விருந்தினர்கள் என மிகச் சொற்பமானவர்களே வேற்றினத்தவர்களாக இருப்பார்கள்.  இளைய தலைமுறையினரின் நிகழ்வுகளிலும் இப்படித்தான் இருக்கிறது.  இது தொடர்ந்தால் எம்மவர் தனித்துப் போன ஒரு இனமாகத்தான் இருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல நூற்றாண்டுகளாக  நடைமுறையிலுள்ள ஒன்றை   எங்களின் கொள்கைகளுக்காக அவளிடம்  கேளாது அதை அவளுக்கு மறுப்பதை என்னவென்பது..............??? :(

மன்னிக்க வேண்டும் அண்ணா, சிறு சந்தேகம், பல நூற்றாண்டுகளாக சாமத்திய வீடு கொண்டாடுவது நடைமுறையில இருக்கும் ஒன்றா??? அத்துடன் சாமத்திய வீட்டிற்கும் தமிழர்களின் கலாச்சாரத்திற்கும் என்ன தொடர்பு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க வேண்டும் அண்ணா, சிறு சந்தேகம், பல நூற்றாண்டுகளாக சாமத்திய வீடு கொண்டாடுவது நடைமுறையில இருக்கும் ஒன்றா??? அத்துடன் சாமத்திய வீட்டிற்கும் தமிழர்களின் கலாச்சாரத்திற்கும் என்ன தொடர்பு?

சாமத்தியம் என்பது தமிழ் சொல்லே இல்லை என்று நினைக்கிறேன், தும்ஸ்! :o

சமர்த்து என்ற வடமொழிச் சொல்லிலிருந்து 'சாமர்த்தியம்' என்று வந்து, இன்று சாமத்தியாமாகி நிற்கின்றது! 

அதாவது ஒரு பெண்ணுக்குப், புத்தி, அறிவு வரவேண்டிய நாள் அது என்று நினைக்கின்றேன்!

அதுவரை, விளையாட்டுப் பிள்ளையாக இருந்தவள், தாயாகும் பக்குவநிலையை அடைவதால் இன்னும் சிறுமியல்ல என்று கருத்தாகும்!

'ருது' என்ற வார்த்தையும் வடமொழியே!

எனவே எங்கிருந்து இந்தக் கொண்டாட்டங்கள், யாரால் அறிமுகப்படுத்தப்பட்டன என்பது, களத்தின் ஊகத்திற்கே விட்டு விடுகின்றேன்! :icon_idea:

நன்றி புங்ஸ் அண்ணா. இதே மாதிரியான பதிலைத்தான் எதிர்பார்த்தேன். பல நூறு வருட வழக்கம் என்பதைக் கேட்டவுடன் தலையை சுத்த வெளிக்கிட்டிது, அதுதான் கேட்டன்.  அவரவர் காசில், அவரவர் விருப்பப்படி சாமத்தியவீடு, சாறிப் பாட்டி எண்டு எதுவும் வையுங்கோ ஆனால் உதுதான் தமிழரின் பாரம்பரியம் எண்டு மட்டும் சொல்லாதேயுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்து பகிர்ந்து கொண்டிருக்கும் நண்பர்கள், அன்பர்களுக்கு நன்றி கூறிக்கொண்டு,

நான் சிறு கூகிள் தேடுதல் செய்தேன், இந்த சடங்கு பற்றி, பொதுவில் அதிகளவு "பழங்குடி" மக்களிடம்தான் இந்த பழக்கம் இருக்கிறது.

அதே நேரத்தில் இதற்கு "கிட்டதட்ட" சமமான நிகழ்வு யூத மக்களிடமும் உண்டு. அவர்கள் அதை ஆண்களுக்கு 13 வயதிலும்,பெண்களுக்கு 12 வயதிலும் செய்கிறார்கள் , அந்த காலத்தில் இருந்து அவர்கள் "இறைபணி"  (என்று நினைக்கிறன்) செய்யத் தொடங்கலாம்.

இது ஜப்பானிலும் இருக்கிறது. விக்கிபீடியாவில் இருந்து

ஜப்பானில் பெண்ணின் பெருமைக்குரிய சடங்காக பூப்பெய்தல் நிகழ்வைக் கொண்டாடுகிறார்கள். விருந்துக்கு அழைக்கும் போது விருந்துக்கான காரணத்தைச் சொல்வதில்லை. சிவந்த அரிசியும், பீன்ஸ்சும் நிறைந்த பெரிய தட்டை பூப்படைந்த பெண்ணின் முன்னால் வைத்திருப்பதன் மூலம் விருந்துக்கும் கொண்டாட்டத்திற்குமான காரணம் சொல்லப்படும்.

பிறகும் பார் "3J"

தாயத்தில் இதற்க்கு ஒரு தேவை இருந்தது, வைத்தியர் நச்சினார்கினியர், சொல்லுவர் அந்த காலத்தில் வழங்குகிற உணவு, கவனிப்பு காலம் காலமாக கவனிக்காமல் விட்ட பெண் குழந்தைகளுக்கு பெரிய வரப்பிரசாதம் என்று சொல்லுவார். ஆனால் அந்த ஒரு கிழமையோ / மாதமோ, போதாது என்றும்  சொல்லுவார். அதநேரத்தில், பெண் குழந்தைகளுக்குரிய போசணை கூடிய பொருட்கள்  5-7 வயதிலேயே கொடுக்க வேண்டும் என்று சொல்லுவார்.

யூத சமூகத்திலும் எங்கள் சமூகத்தில் உள்ளது போல் பெண்கள் மாதவிடாய் காலத்தில் பணிகளில் விலத்தி வைக்கிற பண்பு இருக்கிறது.

எனக்கு தெரிய அதிக கலியான வீடுகள் "நாய்-பூனை" மாதிரித்தான் நடந்திருக்கிறது. ஏனெனில் இரண்டு அறியாத குடும்பங்கள் சேருகிற விழா என்கிறபடியால். இது அறிந்த குடும்பங்கள், மகளை சாரி கட்டி பார்க்கிறது, பெரிசா பிழையாக எனக்கு தெரியவில்லை.

கிருபன் சொன்ன "சாரி பாட்டி"  நல்ல பொருத்தமான பெயர். ஹெலி பிடிக்க வசதி இருந்தால் பிடியுங்கோ. இந்த திரி தொடக்கத்தில் இருந்த ஹெலிக்கு பக்கத்தில் இருந்த படம் வடிகாகத்தான் இருந்த்தது. இதற்கு ஹெலி பிடிக்க கூடாது என்றால், எதற்கு பிடிக்கலாம்? காலியான வீட்டிற்கு பிடிக்க வெளிகிட்டா, யார் யார் ஏறுகிறது என்பதிலேயே ஒரு சண்டை வரும்.  அப்படி பிடிக்காவிட்டலும் கிழங்குகள் என்று எல்லோ சொல்லுவினம் -கூட வேலை செய்கிற வெள்ளைகள். அவன் இந்த அலங்கார ஹெலி வைத்திருப்பது இப்படியான விசேட வைபவங்களுக்கு பாவிக்கத்தானே. அதைத்தவிர எப்பதான் ஹெலியில் ஏறியும் பார்க்கிறதாம்? இதை விட்டால்  கை-வே இல்  மண்டை பிளந்து,  அவசர air -lifting இல்தான் மற்றும்படி கிடைக்கும்.

நன்றி வணக்கம்.

இதில் நல்ல கருத்துக்கள் பகிர்ந்து உள்ளார்கள்.

http://www.mayyam.com/talk/archive/index.php/t-3878.html?s=8f5e04f39b48b2025fafaf57187caf70

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் செய்யும் செயல்களுக்கு, விளக்கம் கற்பிப்பதற்கு, எமதினத்தை விட வேறெந்த இனமும் கிட்ட நிக்க ஏலாது!

தாலி என்பது, ஒரு மஞ்சள் துண்டு கட்டிய (ஏனெனில் மஞ்சள் மங்கலமானது) கயிறாகவே இருக்க வேண்டும்! இன்றும், இந்தியாவில் எந்தப் பணக்காரனெனினும் மஞ்சள் கட்டிய நூலைத் தான் தாலியாக மணமகளின் கழுத்தில் கட்டுவான்! (பிழையெனில் திருத்தி விடுங்கள்).

தமிழன் மட்டுமே, தாலியைத் தங்கப் பவுனில் கட்டுபவன். 

இதே போலத்தான், ஹெலி விசயமும்! 

அந்தஸ்தைப் பறையடிப்பது! :D

ஜப்பானில் பெண்ணின் பெருமைக்குரிய சடங்காக பூப்பெய்தல் நிகழ்வைக் கொண்டாடுகிறார்கள். விருந்துக்கு அழைக்கும் போது விருந்துக்கான காரணத்தைச் சொல்வதில்லை. சிவந்த அரிசியும், பீன்ஸ்சும் நிறைந்த பெரிய தட்டை பூப்படைந்த பெண்ணின் முன்னால் வைத்திருப்பதன் மூலம் விருந்துக்கும் கொண்டாட்டத்திற்குமான காரணம் சொல்லப்படும்.

பிறகும் பார் "3J"

வொல்கனோ, கூறுவது போல, ஜப்பான் காரனிடம் இல்லாத ஹெலியா?

ஆனால், இன்னும் இருபது வருடங்களின் பின்பும், சிவந்த அரிசியும், பீன்சும் தான் அவன் உபயோகிப்பான்! இதைத்தான், கலாச்சாரம் என்று கருதுகின்றேன்! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் செய்யும் செயல்களுக்கு, விளக்கம் கற்பிப்பதற்கு, எமதினத்தை விட வேறெந்த இனமும் கிட்ட நிக்க ஏலாது!

தாலி என்பது, ஒரு மஞ்சள் துண்டு கட்டிய (ஏனெனில் மஞ்சள் மங்கலமானது) கயிறாகவே இருக்க வேண்டும்! இன்றும், இந்தியாவில் எந்தப் பணக்காரனெனினும் மஞ்சள் கட்டிய நூலைத் தான் தாலியாக மணமகளின் கழுத்தில் கட்டுவான்! (பிழையெனில் திருத்தி விடுங்கள்).

தமிழன் மட்டுமே, தாலியைத் தங்கப் பவுனில் கட்டுபவன். 

இதே போலத்தான், ஹெலி விசயமும்! 

அந்தஸ்தைப் பறையடிப்பது! :D

வொல்கனோ, கூறுவது போல, ஜப்பான் காரனிடம் இல்லாத ஹெலியா?

ஆனால், இன்னும் இருபது வருடங்களின் பின்பும், சிவந்த அரிசியும், பீன்சும் தான் அவன் உபயோகிப்பான்! இதைத்தான், கலாச்சாரம் என்று கருதுகின்றேன்! :icon_idea:

அதே... போல், யூதன் நினைத்திருந்தாலும்.... ஹெலியில் சாமத்திய சடங்கை செய்திருக்கலாம்.

ஆனால்... ஹெலி இல்லாத எங்கலிடம் தான்... உந்த ஆசைகள் எல்லாம், வரூது. :D

Link to comment
Share on other sites

அதுகளை ஒருக்கா கெலியை தொட்டு பார்க்க விடுங்கப்பா. 

:D  :D

எந்த கெலி? கெலி பிடித்து அலையும் பையன்களையா? ரெம்ப முக்கியம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த கெலி? கெலி பிடித்து அலையும் பையன்களையா? ரெம்ப முக்கியம்

சுண்டல்...வந்தியத்தேவன் சும்மா தேவை இல்லாமல் எங்களோட தனகிறாற்றா... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல்...வந்தியத்தேவன் சும்மா தேவை இல்லாமல் எங்களோட தனகிறாற்றா... :D

செத்த எலிக்குஞ்சோடா  என்னத்த விளையாடுறது  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண்பிள்ளையின் வாழ்வென்பது எப்படியமைய  வேண்டுமென்பதற்கான இன்னொரு சாட்சியாக இன்னொரு பெண்பிள்ளையின் அந்தரங்க மாதவிடாயை எப்படியெல்லாம் செய்கிறார்கள்  என்பதனை இந்த வீடியோவில் பாருங்கோ.

 எங்கடை கமராக்காரங்களும் தங்கடை வித்தையை வேறையெங்கை காட்டுறது???? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதெப்பிடி பொண்ணுங்களுக்கு மட்டும் ஹெலி நம்ம நந்தன் அண்ணா எம்புட்டு பீல் பண்ணுறார் தெரியுமா? ஆண்களுக்கு மட்டும் இப்பிடி சடங்குகள் அந்த நேரம் வைச்சு இருந்தா சுண்டல் நான் ஹெலி என்ன ஹெலி புக்காரவ வாடகைக்கு பிடிச்சு அதில இருந்து கயிறு கட்டி இறங்கி இருப்பன் எண்டு சொல்லி தேம்பி தேம்பி அழுறார்..... :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமத்திய வீடு வைக்கிறதே எங்க வீட்டு பொண்ணு வயசுக்கு வந்திட்டா கல்யாணம் ஆகிறதுக்கு ரெடி ஆகிடுவா அதனால பொண்ணு கேட்டு வாரநீங்கள் வாங்க எண்டு சொல்ல தானே.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா முடிவாக என்ன சொல்லுகிறீர்கள்? முதலில் சொன்னார்கள் இது தமிழ் கலாச்சாரம் இல்லை, புகுத்தப்பட்ட கலாச்சாரம், பெண் அடிமை, பெண்ணுக்கு மாதவிடாய் தொடங்கியதை அவருடையதை அந்தரங்கத்தை ஊருக்கு பறை சாற்றும் விடயம்.......

என்னவாக இருந்தாலும்,இன்றும் சில சமூகங்களில் இந்தகைய நடைமுறை இருக்கிறது. அதிலும் நாகரிகம், வளர்ச்சி போன்றவற்றில் முன்னேறிய சமூகங்களிலும் இருக்கிறது. இது ஏன் சிறுமிகளுக்கு மாத்திரம் என்றால், அவர்களில் மிக இலகுவாக கண்டு கொள்ளகூடியவாறு பருவ மாற்றம் நிகழ்கிறது. ஆனால் சிறுவர்களில் அப்படி அல்ல. அது மிகவும் கடினமா காரியம்.- எனது அனுபத்தில் ஒரு 17/18 வயது ஆண் ஒருவர் வந்திருந்தார், தனக்கு துணைப்பால் இயல்புகள் வரவில்லை என்று..ஆயிரத்தெட்டு குருதி சோதனைகள் செய்துதான் அந்த நிலையை  உறுதிபடுத்தியது ஆனால் பெண்களின்/ சிறுமிகளில் நிலை அப்படி அல்ல. அவர்களுக்கு இயற்கையாகவே அமைந்த "காட்டி /மொனிடர் " இந்த மாதவிடாய், ஒருவருக்கு அதில் பிரச்சனை என்றால், அவருக்கு பாலியல் சம்பந்த பட்ட ஓமோன்களில் பிரச்சனை இருக்கு என்று தெரியும்.

இயற்கை படைத்திருக்கிற ஒரு monitor, டாக்டர் இடம் போகத்தேவையில்லை, குருதி சோதனை செய்ய தேவையில்லை, ஸ்கேன் எடுக்க தேவையில்லை.

அதே நேரத்தில்; 9/10/12 வயது குழந்தைக்கு உடலில் இருந்து இரத்தம் போவது, ஒரு இலகுவான அனுபவம் அல்ல. பல சந்தர்பங்களில் வயிற்று நோ, உடல் அசதி, ...அது இலகுவாக இருக்காது..அதற்கு அதிக உதவிகள் தேவை. அதைத்தான் இவர்கள் செய்கிறார்கள். சிலவேளைகளில் சில உதவிகள் உபத்திரமாகவும் போவதுதானே. எங்கே எல்லை என்பது அவர் அவரின் தனித்துவம்.

-வயதிற்கு வருவது என்பது தனியே மாதவிடாய் தொடங்குவது மாத்திரம் அல்ல, மாதவிடாய் பல மாற்றங்களின் இறுதியாக  இலகுவாக வெளித்தெரிகிற நிகழ்வு. கோழி குஞ்சு பொரிக்கும் போது வார உடைந்த கோது போன்றது..வெளியில் இருந்து பார்க்கும் போது குஞ்சு பொரித்ததே  தெரியாது, உடைந்த கோதுதான் தெரியும்.  நாங்கள் குஞ்சு பொரித்ததிற்காகத்தான் விழா எடுக்கிறோம். உடைந்த கோதுதிற்கா அல்ல.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிலையிருந்து, சாதி தொடக்கம், உள்ள நல்லது கெட்டதையெல்லாம், தூக்கிக் கொண்டுபோன வெள்ளைக்காரன், இதை மட்டும் ஏன் விட்டிட்டுப் போனான் எண்டு தான் விளங்கவில்லை! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொரு திரியில் தமிழ்சிறி சொன்னது போல், தொடங்கேக்க விழா எடுப்பது போல, முடியேக்கையும் ஹெலி ஏத்தி விழா எடுக்கலாம்.

சரிதானே!

வேற புது திரிகள் வந்திருக்கு. எல்லோரும் அங்க போவம் வாருங்கோ!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.