Jump to content

தம்பதி பூஜை..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

thambathy.jpg

 

திருமணம்.. திருமண நாள் நினைவுக் கொண்டாட்டம்.. 50ம் கலியாணம்.. 60ம் கலியாணம்.. போன்ற... நிகழ்வுகளுக்கு அப்பால்.. இப்போ புலம்பெயர் நாடுகளில் தம்பதி பூஜை என்று.. ஒரு கூத்து நம்மவரிடையே ஆரம்பமாகியுள்ளது.

 

அண்மையில் ஜி ரி வி இலும் இது தொடர்பான விளம்பரங்கள் போகின்றன. லண்டனில் உள்ள ஒரு கோவிலில் இது நடத்தப்பட இருக்கிறதாம். அதுவும் சும்மா இல்ல 1000 க்கும் மேற்பட்ட தம்பதிகளுக்கு பூஜையாம். வயசு போனவர்களும் தம்பதி சமேதரராய் எழுந்தருளி இருக்க கடவுள் அருள்பாலிக்கிறாராம். அத்தோடு இதற்கு கட்டணங்களும் அறவிடுகிறார்கள் போலவே தெரிகிறது..!

 

நாங்கள் இப்போதுதான் இந்தத் தம்பதி பூஜை பற்றி கேள்விப்படுகிறோம். இது பற்றி கள உறவுகள் நீங்கள் உங்கள் அனுபவம் அல்லது நீங்கள் அறிந்த விடயங்களைப் பகிர்ந்து கொண்டால்.. நல்லா இருக்கும்.

 

இப்படியான பூஜைகள் எமக்கு அவசியம் தானா..??! குடும்பங்களைப் பலப்படுத்த இது அவசியம் என்று கோவில்காரர்கள் விளம்பரத்தில் குறிப்பிடுகிறார்கள்..! எந்த வகையில் இவை அந்த வேலையை செய்யும் என்று புரியவில்லை. தம்பதி சமேதரராய் ஓர் நாள் கோவிலில் குந்தி இருந்துவிட்டு வந்தால்.. சண்டை சச்சரவே வராதா..???!

  • Replies 51
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கு இதில் உடன்பாடில்லை

காசு பண்ண  செய்யும் வியாபார யுக்திகள் இவை.

 

உங்கள் கடைசிக்கேள்விக்கு:

 தம்பதி சமேதரராய் ஓர் நாள் கோவிலில் குந்தி இருந்துவிட்டு வந்தால்.. சண்டை சச்சரவே வராதா..???!

 

இன்னும் கொஞ்ச  காலம் இதில் கலந்து கொண்ட  மற்றவர்களுக்காக வாழ்வார்கள் போலும்... :(  :(  :(  :( 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அண்ணா இது எல்லாம் வரும்படிக்கு எடுக்கிற விழாக்கள்..இருக்கிறதை தொலைச்சுட்டு இல்லாதவற்றுக்கு விழா....இங்கும் இப்படி நிறைய விழாக்கள்  வருடம் தோறும் உருவெடுத்துக்கொண்டே இருக்கிறது..இதுக்கு எல்லாம் காரணம்  சனம் தான்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
தம்பதி பூஜை போன வருடம் தான் இந்தக் கோயிலில் தொடங்கினார்கள்.கொஞ்சக் காலம் போக எல்லாக் கோயிலிலும் செய்யத் தொடங்குவார்கள்.இந்த கோயில் ஜயருக்கு நல்ல பிஸ்னஸ் மூளை :rolleyes:
 
இது இலவசமான பூஜை என்று தான் அறிவிப்பார்கள் ஆனால் கோயிலுக்குப் போன உடனே ஒரு பெரிய அர்ச்சனைத் தட்டம் வேண்ட சொல்லுவார்களாம்.ஜோடியினர் மாத்த பூமாலைகள்,ஜயர் அம்மாவுக்கு கொடுக்க சேலை என்று கணக்க ஜயிட்டம் வேண்டச் சொல்லுவினமாம்.தம்பதியினராய் நின்று படம் எடுக்கவும் காசு.எல்லோருக்கும் தெப்பை போட்டு ஏதோ அம்மனுக்கு பேருக்கு பூசை செய்து விட்டு ஜயர் தம்பதியினரின் காலில் தம்பதியினராய் விழுந்து எழும்பி,தெப்பை கழட்டும் போது தட்சணை கொடுக்க வேண்டும்.நீங்கள் £50 கொடுத்தால் என்ட தகுதிக்கு நான் £100 கொடுக்க வேண்டாமோ :D அப்படி விழுந்து எழும்பும் போது ஜயரம்மா ஒவ்வொரு பெண்ணுக்கும் சேலை கொடுப்பாராம்.ஒவ்வொருவர் கொடுக்கும் தட்சணையைப் பொறுத்து ஜயரம்மா கொடுக்கும் சேலையின் தரம் வித்தியாசப்படும்.
 
தம்பதியினர் ஒற்றுமையாக இருக்கினமோ இல்லையோ ஒரு நாளாவது தாங்கள் ஒற்றுமையாக இருக்கிறம் என்று ஊருக்கு காட்டவும்.தம்பதியினர் தங்களைத் புதுமணத் தம்பதியினராய் எஞ்சோய் பண்ணவும் இப்படியான பூஜை உதவுமாக்கும் :)
 
பைதவே இதைப் பற்றி கல்யாணம் கட்டாத நெடுக்கருக்கு என்ன கவலை :lol:
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோவில்கள் பூசாரிகளின்  மடங்களாகிப் பலகாலங்கள் ஓடிவிட்டன.

இப்போது தம்பதி பூஜை... இன்னும் சில நாட்களில்... பூசாரிகள் தாம்பத்திய பூஜையும்... 

செய்து காட்டுவார்கள். பணம் வருகின்றது என்றால் சும்மாவா 

ஏதாவது ஒரு பூஜை செய்யத் தானே வேண்டும் :D

Posted

இப்படியான ஐயர்மாருக்கு துண்டைக்காணோம்  துணியை காணோம் என ஓடும் வரை ஒரு பூசை வைக்க முடியாதா?? :lol:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்படியான ஐயர்மாருக்கு துண்டைக்காணோம்  துணியை காணோம் என ஓடும் வரை ஒரு பூசை வைக்க முடியாதா?? :lol:  :lol:

 

ஊரிலையென்றால் இருட்டுக்குள்ளை நல்ல பூசை செய்யலாம்.

இந்த நாடுகளில் அந்தப்பூசை செய்ய வெளிக்கிட்டால்

எங்களுக்குத்தான் உள்ப் பூசை  கிடைக்கும் :D  :lol: .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உந்த பிராமணியளுக்கு முதல்லை சாவுமணி அடிக்கவேணும்........

ஒருசில மூடத்தனமான விசயங்களை சமயம் சம்பிரதாயம் எண்டு விட விட......ஆகலுந்தான் தலையிலை சம்பல் அரைக்கிறாங்கள்.

முதல் கட்டமாய் ஐயர்மாரை கண்டவுடனை உருகி விழுளுற எங்கடையளுக்கு காளிபூசை குடுக்க அதுகள் தானாய் திருந்துங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சும்மாவா சொன்னான் கவிஅரசர் கண்ணதாசன்: ஆசை வந்து வேதியரை ஆட்டி வைத்தது. அது அருள் நெருப்பை இங்கே மூட்டிவிட்டது.

Posted

கோவில்கள் பூசாரிகளின்  மடங்களாகிப் பலகாலங்கள் ஓடிவிட்டன.

இப்போது தம்பதி பூஜை... இன்னும் சில நாட்களில்... பூசாரிகள் தாம்பத்திய பூஜையும்... 

செய்து காட்டுவார்கள். பணம் வருகின்றது என்றால் சும்மாவா 

ஏதாவது ஒரு பூஜை செய்யத் தானே வேண்டும் :D

 

இது எத்தனையோ காலங்கலாக நடக்கின்றது, கணவனுக்கு அனுமதியில்லை :D

 

குரு நிழலியானந்தாவிடம் இதைப்பற்றி கேட்டுப்பாருங்கள் :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புத்தியுள்ள மனிதர்களை நயத்தாலும், புத்தி குறைந்தவர்களைப் பயத்தாலும் தாம்பத்தியத்தில், இணைத்து வைப்பது சமுதாய வழக்கம்! :o

 

நான் பிறந்த இனத்தில், இவ்வளவு மடையர்கள் (அதுவும் புலத்தில்) இருக்கிறார்கள் என்பதை நினைக்க, மிகவும் கவலையாக உள்ளது!

 

நாதமுனியின் கருத்துடன் (கண்ணதாசனின் வரிகள்) , நூறு வீதம் உடன்படுகின்றேன்!

Posted

Quote:"நான் பிறந்த இனத்தில், இவ்வளவு மடையர்கள் (அதுவும் புலத்தில்) இருக்கிறார்கள் என்பதை நினைக்க, மிகவும் கவலையாக உள்ளது!"

 

அடுத்த தலைமுறை நன்றாக வரும் கவலைப்படாதே நண்பா

Posted

இந்தப் பூசைக்குச் செல்வதற்குப் பதிலாகத் தம்பதிகள் வீட்டிலிருந்து கொண்டே மனம்விட்டுப் பேசினாலே அவர்கள் நீடுழிகாலம் வாழ்வார்கள்.  :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இது ஒரு கடைந்து எடுத்த முட்டாள்தனம். சைவ சமயம் என்று சொல்லி ஏதும் செய்யலாம் என்கிற அரைகுறை பிராமணார்கள் / அவர்களை வைத்து இயக்கும் கோவில் தர்ம கத்தாக்களின் கிரிகை கேட்ட வேலை.- அம்மம்மா செல்லுவா "கிரிசேட்ட" வேலை. <_<

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது ஒரு கடைந்து எடுத்த முட்டாள்தனம். சைவ சமயம் என்று சொல்லி ஏதும் செய்யலாம் என்கிற அரைகுறை பிராமணார்கள் / அவர்களை வைத்து இயக்கும் கோவில் தர்ம கத்தாக்களின் கிரிகை கேட்ட வேலை.- அம்மம்மா செல்லுவா "கிரிசேட்ட" வேலை. <_<

 

என்ரை.. அம்மம்மா, "கிலிசு" கெட்ட வேலை என்று சொல்லுவா...

எது சரி என்று... தமிழறிஞர்கள் தான் விளக்க வேணும். :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted
எமது மதத்தை இழிப்பதே சிலருக்கு வேலையாய் போய்விட்டது.
"தம்பதிகள் பூஜா" என்பது எமது மதத்தின் முக்கிய பூஜைகளில் ஒன்று. மணம் முடித்த ஒரு ஆணையும் பெண்ணையும் அவர்கள் பாட்டிலே விடும் மேலை நாட்டில்தான் விவாகரத்துக்கள் அதிகம். மற்றைய நாடுகளின் விகிதாசாரம் தெரியவில்லை அமெரிக்காவை பொறுத்த மட்டில் மூன்றில் ஒரு திருமணமே மட்டுமட்டாக நிலைக்கிறது.
அவர்களை கோவிலுக்கு அழைத்து அம்மனுக்கு பூஜை செய்து அவர்களையும் பூசையில் கலந்து விடுவதால் மண வாழ்க்கை கம கம என்று மணக்க ஆரம்பிக்கும்.
எமது கோவில்களின் சிலைகள் அம்மணமாகவும் பாலியல் சார்ந்தும் இருப்பதற்கு இதுவே காரணம்.
கலவியின்போதே மனிதன் மெய்மறக்கிறான். மெய் மறக்கும்போதே ஒரு சூனியம் உண்டாகிறது. ...... இந்த இருளுக்குள்தான் இந்த பிரபஞ்சத்திற்கு ஒளியாய் இருக்கும் இறைவன் இருளாய் ஒழிந்திருக்கிறான். அந்த கடவுளை கலவியின் போதே காணலாம். கோவிலுக்கு  கடவுளை தேடியே நாம் போகிறோம். 
பண்டமாற்றம் மேலை நாட்டு படை எடுப்பு என்பன எமது மதத்தையும் மாற்றிவிட்டது. 
கோவில் என்பது மிகவும் புனிதான ஒரு இடம். அங்கே அமைதியாக அம்மனுக்கு பாலும் தேனும்  ஊற்றும்போது  அம்மனின் தேகத்தில் பாலும் பழமும் வழிந்து வரும் காட்சி ஒரு ஆணுக்கு  தன் தாரத்தின் தேகத்தை நினைவுக்கு கொண்டவரவேண்டும் என்ற சிந்தனையில்தான்  எமது பூசை முறைகள் எல்லாம் வகுத்து இருக்கிறார்கள் இறுதியில் சங்கூதி மணியடித்து தீர்த்தம் அருந்தி பூஜையை முடிப்பார்கள்.
எமது மதம் மரபு ரீதியானது . அங்கே கேள்விகளுக்கு இடமில்லை என்பது உண்மைதான். நான் என்ற  ஆணவம் இல்லாத போதே கடவுளை காணலாம் என்பது எமது மதத்தின் அடிப்படை தத்துவம் . "பகுத்தறிவு" எனபது இன்றைய உலகிற்கு தேவையான ஒன்றுதான் என்றாலும்  அந்த அறிவுடன் கடவுளை காணமுடியாது என்பதும் உண்மையானதே. பகுத்தறிவு என்பது  "நான்"  என்ற நிலையை தோற்றுவிக்கும் அங்கே கடவுளையோ சொர்கத்தையோ  காணமுடியாது.
அறிவுசார் உலகம் என்று எமது மதத்தினை மறந்து பறந்த மனிதர்கள். நிம்மதியை காணோம் .... வாழ்கையை காணோம்.........காதலை காணோம் என்று இப்போ கடவுளை தேடி கோவிலுக்கு  வர தொடங்கி இருக்கிறார்கள். எடுத்த எடுப்பிலேயே இவர்களை கடவுளிடம்  அழைத்து செல்ல முடியாது .  மட்டுமடுத்தபட்ட ஒரு பூஜை ஊடாக  ஒரு தற்காலிக  மகிழ்ச்சியை  அல்லது ஒரு மன நிறைவை இவர்களுக்கு "தாம்பத்திய பூஜை" என்று  இப்போது பிராமணர்கள் கொடுக்க தொடங்கி இருக்கிறார்கள். கோவிலுக்கு இவர்கள்     
அடிக்கடி வர தொடங்கும்போது ............. கடவுளை காணவேண்டும் என்று கேட்பார்கள். அப்போது கடவுளை  எப்படி காண்பது என்று விளக்கம் கொடுத்து இவர்களையும் பூஜையில்கலந்து கொள்ள வைக்கும்போது. கடவுள் காட்சி கொடுக்கும்போது இவர்கள் ஆனந்தம் அடைவார்கள். பிறந்த பலனை இவர்கள் கொஞ்சம் உணருவார்கள். இனி  தாமதம் இன்றி  பூஜைகள் தொடங்கப்பட வேண்டும். இனியும் என்ன தயக்கம் என்று நாம் பிராமணர்களை  கொஞ்சம் தட்டி கொடுக்க வேண்டும்.
"பிறந்த பயன் காதலிலே பூர்த்தியாகும். காதல் பிளம்பாலே காதலர்கள் கண்கள் ஜோதியாகும்"  
Posted

நெடுக்கு, ரதி அக்கா, வந்தியதேவன், மருதங்கேணி தான் ஆன்மீகம் எழுத்துகிறார்கள். இந்தவயதில் இப்படியெல்லாம் துறவறமா தாயே? :(

 

இதுவெல்லாம் "வன்னி அவலம் பகம் -2" தான்.

Posted

உரிமைப் போரில் குடும்பத் தலைவனை / தலைவியை இழந்து தாய் மண்ணில் வாழ்வை மீளக் கட்டியெழுப்ப போராடும் குடும்பங்களுக்கு உதவுவதே உண்மையான தம்பதி பூசையாக இருக்க முடியும்.

அதை விட்டுவிட்டு இந்தக் கோவிலில் தம்பதி பூசையென்று காசை விரயம் செய்பவர்கள் நரக வேதனை அனுபவித்து நரகத்துக்கு செல்ல வேண்டியவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நெடுக்கு, ரதி அக்கா, வந்தியதேவன், மருதங்கேணி தான் ஆன்மீகம் எழுத்துகிறார்கள். இந்தவயதில் இப்படியெல்லாம் துறவறமா தாயே? :(

 

இதுவெல்லாம் "வன்னி அவலம் பகம் -2" தான்.

 

இது பற்றிக் கதைக்க சந்நியாசியாக வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஊரில சமய பாடம் படிச்சிருந்தாலே போதும்.

 

சைவ சமயம் இரண்டு வழிகளில் உங்கள் மனதை அடக்கி.. மனதை மும் மலங்களில் (ஆணவம்.. கன்மம்... மாயை) இருந்து விடுவிக்கலாம் என்கிறது. அதுவே நித்திய சந்தோசம் அளிக்கும் என்றும் சொல்கிறது. இது கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற பிரச்சனை அல்ல. மனித மன ஆளுமையை எப்படி கட்டுப்பாட்டுக்குள்ளும் விருத்தி நிலைக்குள்ளும் வைத்துக் கொள்வது என்பது பற்றியது. மனதை ஒரு முகப்படுத்துவது என்பது கல்விக்கும் அவசியமான விடயம். அலை பாயும் மனதால் கல்வியைக் கூட சரியாகப் பெற முடியாது.

 

சைவ சமயம் சொல்லும் வழிகளில் 1. பிரமச்சாரியம். இதன் மூலம் மனவடக்கம்.. தனிமனித ஒழுக்கம்.. சமூக சேவை என்பதன் ஊடாக தன்னை நற்பிரஜையாகவும் மும்மலமற்றவராகவும் ஒருவர் இலகுவில் மாற்றிக் கொள்ளலாம் என்கிறது சைவம் சமயம். மாறாக காவி தரித்து ஊரை ஏய்க்கச் சொல்லவில்லை..! அல்லது கல்வியைக் கைவிட்டு மடங்களில் தவழச் சொல்லவில்லை. கற்ற கல்வியைக் கொண்டும் பொதுப்பணி செய்யலாம். அறிவூட்டலாம். அறிவார்ந்த ஒரு நற்சமூகத்தை வளர்க்கலாம். அதுகூட இறை செயல் இயற்கையில் எம் பிறப்பினை அர்த்தப்படுத்தும் செயல் என்று தான் சொல்லப்படுகிறது.

 

2. இல்லறம். (சம்சாரிகளுக்கானது.)

 

அங்கு எதிலும் இப்படி பூஜை நடத்தச் சொல்லவில்லை. மாறாக.. இல்லறத்தில் இருந்தாலும்.. மனிதன் ஆசா பாசங்களுக்கு கட்டுப்படுவதில் இருந்து விடுபட வேண்டும் என்றே சொல்கிறது. பேராசைகள்.. மும்மலங்கள்.. மனிதனின் சந்தோசத்தை அழிக்கின்றன என்று சொல்கிறது சைவம். அதேபோல் உருவாக்கும் குழந்தைகளை நல்ல பிரஜைகளாக உருவாக்க வேண்டும் என்றும் வகை சொல்கிறது. மதுவை.. புலான் உணவைத் தவிர்க்கக் கோருவதோடு.. ஜீவகாருணியத்தை வலியுறுத்துகிறது. மேலும் உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவும் மனப்பான்மையை அதிகரிக்க வேண்டுகிறது. அதுதான் இல்லற தர்மம் என்றாகிறது..!

 

இவற்றைச் செய்யாமல்.. வெறுமனவே.. பூஜை.. மண்ணாங்கட்டின்னு ஒரு நாள் கூத்துப் போடுவதால் மட்டும்.. மனிதர்கள் புடமிடப்பட்டுவிடுவார்களா..??! நிச்சயமாக இல்லை. அதுவும் நம்மவர்களுக்கு மனதில் உள்ள அழுக்குகளை அகற்றனுன்னா.. பெரிய குப்பை லொறிகள் தான் தேவை. அந்தளவுக்கு போட்டி பொறாமை அழுக்காறு புறங்கூறுதல்.. பொய்.. பித்தலாட்டம்.. ஆணவம்.. தற்பெருமை.. எல்லாம் நிறைஞ்சிருக்குது. உதுகளை உள்ள தொன் கணக்கில.. கட்டி வைச்சுக் கொண்டு.. உதில போய் குந்தி எழும்பிறதால.. எந்த நன்மையும் இல்லை..! :):icon_idea:

Posted

மருதங்கேணி எழுதியிருப்பதை வாசித்துவிட்டு பச்சை போடலாமா என்று யோசித்தால், அது பகிடி என்று உறுதியா சொல்ல முடியேல்ல.. :(:D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மருதங்கேணி எழுதியிருப்பதை வாசித்துவிட்டு பச்சை போடலாமா என்று யோசித்தால், அது பகிடி என்று உறுதியா சொல்ல முடியேல்ல.. :(:D

 

இசை,

 

மருதின் ஒரு பதிவு:

 

பிள்ளையார் விளையாடிப்போட்டார் போல கிடக்குது:

 

Maruthankerny

Maruthankerny

Advanced Member

  • av-1409.jpg?_r=0
  • கருத்துக்கள உறவுகள்
  • bullet_black.pngbullet_black.pngbullet_black.png
  • 3,664 posts
  • Gender:Not Telling
  • Location:USA
  • Interests:In Anything

Posted 10 March 2013 - 07:49 AM

நீங்கள் என்ன சொல்ல விழைகிறீர்கள்???

 
இப்போது உலகம் இருக்கும் நிலையில் .... பூமிக்கு பிள்ளையார் வந்து பால் குடித்து விளையாடி விட்டு போனார்?
 
இப்படியொரு பேமாண்டியை தான் நாம் கடவுள் என்று கும்பிட வேண்டும் என்றால்?
 
 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தற்பொழுது பிரான்சில் அம்மா தினம்  அப்பாதினம் காதலர் தினம் பக்கத்துவீட்டுக்காறர் தினம் என உள்ளது.

அத்துடன் பெற்றோர் தினம் ஒன்றையும் கொண்டுவரணும் என்று புதிதாக பேசப்படுகிறது.  இதற்கு காரணம் சில பிள்ளைகளுக்கு அப்பா அல்லது அம்மா இருப்பதில்லை.

 

(நெடுக்குக்காக ஒரு தகவல். இதில் அப்பா தினமே மிகமிக குறைவாக கொண்டாடப்படுகிறதாம் :D )

Posted

இது பற்றிக் கதைக்க சந்நியாசியாக வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஊரில சமய பாடம் படிச்சிருந்தாலே போதும்.

 

நோய்க்கு மருந்து கொடுக்க வைத்தியன் நோயாளியாக இருந்திருக்க வேண்டும் என்பதில்லை.

 

ஆனால் தயாகாத பெண்ணால் பிள்ளையை பெற்றெடுக்க முடியுமா? அவளுக்கு வைத்தியன் உதவ முடியுமா?

 

கடவுள் தன்தனக்கானது. ஒவ்வொருவரும் கடவுளை வணங்குவதும் அவரவரின் தனிப்பட்ட நோக்கத்துக்கானது. நான் இன்னொருவரை இந்த நோக்கத்துடன் கடவுளை வணங்கென்றோ, இந்த நோக்கத்துக்காக வணங்கும் போது இந்த மாதிரி மட்டும் வணங்கினால்தான் கடவுள் உனக்கு வரம் தருவார்  என்றோ நிர்ப்பந்திக்க முடியாது.
 
மனத்தை கட்டுப்படுத்துவதால் சோதனை பாஸ் பண்ண முடியாது. சோதனைக்கு படித்திருக்க வேண்டும். கணித பாடம் படித்தவன் விஞ்ஞான பாட சோதனை பாஸ்பண்ணுவது கிடையாது. இதனால் மனதை கட்டுப்படுத்த அறிந்தவன் துறவறத்தை உணர்வதில்லை. துறவியால் இன்னொருவர் கண்ட கடவுளை வாங்கிப்பார்த்து அது மாதிரி இன்னொன்று தனக்குத் தேடிப் பெற்றுக்கொள்ள முடியாது. எனவே உண்மையான துறவி தன்னுள் உந்தலை உணரும் போது யாரின் வாயையும் எதிர்பார்க்கமாட்டான். அவனை இழுத்து வைத்திருந்து யாரும் அவனுக்கு போதிக்கவும் முடியாது.

 

பள்ளியில் கற்றுகொள்ளும் இன்னொரு PhD போன்றதல்ல அது.

1). கல்வியறிவுள்ள இந்துக்களில் 93% வீதம் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்.  இந்திய சனத்தொகை மட்டும் 1.5 பில்லியன்.  

2).தேவர்களும் கடவுள்களும் 33 கோடி.  அதிகாலை, காலை, உச்சி, மாலை, சாமம் என்று ஐந்து பொழுதுகள். எழு நாட்கள் ஒரு கிழமை. நான்கு கிழமைகள்  ஒரு மாதம், பன்னிரண்டு மாதங்கள் ஒரு வருடம். இதில் இடையறாமல்  எல்லாத் தேவைகளும் ஏற்ப வணங்க,  எண்ணில்லாத கொண்டாட்டங்களும்,  நாள்களும், திதிகளும்  நேரங்களும் வகுக்கப்படிருக்கின்றன. இதில் எங்கே, எப்படி, என்ன செய்ய வேண்டும் என்று நாமும் புத்தகம் எழுதினால் அது மனுதர்ம சாஸ்த்திரதை விட வித்தியாசமானதாக இருக்க முடியுமா? அல்லது  இதில் சம்சாரிக்கும் சந்நினியாசிக்கும் மட்டும்தான் இடம் இருக்கு என்று நாம் எமது காலை நீட்டி மற்றவர்களை வண்டியிலிருந்து உதைத்து தள்ளிவிட முடியுமா?  சிவலிங்கத்தை பாதுகாப்பதாக போட்டி போட்டுகொண்ட சிலந்தியும் யானையும் கதை இன்னமும் சமய பாடப்புத்தகங்களில் இருக்கே?  தனது இரண்டு கண்களையும் தோண்டிய கண்ணப்பர் கதை இன்னமும் நீக்கப்படவில்லையே? எதிரி என்று தெரிந்த பின்னர் முத்திநாதனின் கையால் இறக்க வென்று அவனின் காலின் கீழ் இருந்து இறந்த மெய்ப்பொருள் நாயனாரின் சரிதம் இன்னமும் சமய பட புத்தகங்களில் இருந்து விலக்கப்படவில்லையே? 

 

யேசுவிடம் ஒரு கூட்டம் மக்கள் அவரின் போதனைகேட்டு ஒழுங்காகான வாழ்கை நடத்தி வந்தார்கள். அவர்கள் தம்முள் ஒருத்தியை வேசியாக இனம் கண்டு அவள் இறவனுக்கு இடைஞ்சலாக இருந்துவிடப்போகிறாள் என்று எண்ணி அவளை இழுத்து வந்து  தமது குருவிடம் தண்டிக்க சொல்லி கேட்டார்கள். அவர்களின் குரு சொன்னதாவது அவளை தண்டிக்கவோ, மன்னிக்கவோ நீங்கள் யார். உங்களில் எத்தனை பேர் உங்களின் பாவங்களுக்கு உங்களை ஏற்கனவே தண்டித்தவர்கள்? இது யேசு பற்றி கிரீஸ்தவர்கள் சொல்லும் கதை. பிராமணன் மட்டும்தான் நம்மை கெடுத்தானா. நம் சரியாக மட்டும்தான் நடந்துகொள்வோமா?

 

 

கடவுளை கண்டவர் என்று யாருமே இருந்தது இல்லை. புத்தர், யேசுவின் போதனைகளைக் கற்று அந்த பதையில் சென்று இன்னொருவர்  கடவுளைக்கண முடியும் என்பதும் உண்மை இல்லை.- J.கிருஸ்ண மூர்த்தி, கடவுளை பற்றி போதிக்க நீ எப்போது அவரிடம் அதிகாரம் பெற்றாய்- பரமகம்சர்(பரகம்சர் சொல்வது கடவுளைபார்க்காதவருக்கு கடவுளை தெரிய வழி இல்லை, அவர் விடாபிடியாகப் போதுப்பது தனது தனிப்பட்ட மூளையின் விளங்கங்களை மட்டுமே).

 

குருவுக்கும் போதகனுக்கும் உள்ள வித்தியாசம் பத்தினிக்கும் விபச்சாரிக்கும் உள்ள வித்தியாசம். பத்தினி தன்னை குருவாகவும் கணவனை அடியான் ஆகவும் காண்பவள். தனது கணவனுக்கு உடல் இன்பதை அளிப்பதில் தான் இன்பம் காண்பவள். தானும் அந்த இன்பத்தில் பங்கானவள். அதில் ஒரு கணவன் காணும் இன்பம் ஆழமானது, நிலையானது, உண்மையானது. விபச்சாரி தன் உறவில் தான் இன்பம் காணத்தெரியாதவள். தன் உறவில் இன்பம் காணாதவள். ஒரு பொழுதுக்கு ஒரு ஆணுக்கு இன்பம் அழித்துவிட்டதாக நடிப்பவள். அவள் மனதில் தான் அன்பானவன் என்று ஒருவன் இல்லை. ஒருவன் நன்மை பற்றி அவளுக்கு கவலை இல்லை. அவளுக்கு யார் மீதும் அக்கறையும் இல்லை. அவளின் நோக்கம் பணமும், புகழுமே. அதனால் ஆணுக்கு கிடைக்கத்தக்கது நோயும், பண நட்டமுமே.   

 

பொதுமக்களை அவன் அவன் விருப்பத்திற்கேற்ப, வசதிக்கேற்ப ஏற்ப, வாழ்ந்து இறக்க மட்டும்தான் விட்டுவிட வேண்டும். சாதரண மனிதானாக தன்னை நினைத்துகொள்பவன் ஒவ்வொருவனும் தான் சட்டதை மட்டும் மத்தித்து நடக்கப் பழக வேண்டும். தனக்கு அருகில் இருப்பனவனுக்கு அளிக்கக் கூடிய மிகச் சிறந்த உபதேசமும் அதுவாகத்தான் இருக்க முடியும்"நீயும் சட்டத்தை மட்டும் மதித்து வாழப்பழகு." :D  :D  :D

:)  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தப் பூசைக்குச் செல்வதற்குப் பதிலாகத் தம்பதிகள் வீட்டிலிருந்து கொண்டே மனம்விட்டுப் பேசினாலே அவர்கள் நீடுழிகாலம் வாழ்வார்கள்.  :)

 

 

 

சனத்திற்கு காசு மெத்திப் போச்சு தமிழச்சி...

எதற்கு எல்லாம் செலவு செய்வது என்று தெரியாமல் கடசியில போய் ஐயனுக்களுக்கு கொட்டுகிறார்கள்.பூசைகள் புனஸ்காரங்களை உண்மையான மன  திருப்தியோடு செய்தால் பறவா இல்லை..எனது உறவுக்கார பெண் ஒருவர் என்னோடு சொல்லி கவலைப் பட்ட விடையம்...இப்படி ஒரு பூசைக்கு போய் விட்டு எல்லாம் முடிந்ததும் ஐயனின் காலில் தொட்டு கும்பிட்டு விட்டு நிமிரும் போது ரொம்ப, வடிவாயிருக்கிறாய் என்னைக் கட்டுறாயா என்று கேட்டாராம்...ரொம்ப வயதான ஒருவர் கேட்கும் கேள்வியா இது...அந்தப்பிள்ளை ஏற்கனவே திருமணம் செய்த ஒருவர்..இப்படி நிறைய விடையங்களை எழுதலாம்....நாங்கள் எழுதுவதை எவ்வளவு தூரம் மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்று தெரியாது..

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.