Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இயக்குனர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம்!

Featured Replies

  • தொடங்கியவர்

புலிக்கொடி போர்த்தப்பட வேண்டும் என்ற மணிவண்ணன் ஐயாவின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றி வைத்த சீமான் அண்ணாவுக்கு நன்றி.

Edited by துளசி

  • Replies 118
  • Views 12.7k
  • Created
  • Last Reply

அமரர் திரு மணிவண்ணன் ஐயா அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக்குகிறேன்.

தூய்மயான மனத்துடன் எமக்காக குரல் கொடுப்பவர்களை காலம் விரைவில் எம்மிடமிருந்து பிரித்து விடுகிறது.

நம்ப மனம் மறுக்கிறது. :(

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களின் விடுதலை உணர்வுகளைப் புரிந்துகொண்டு

பேசும் மேடைகளில் எல்லாம் தமிழக உறவுகளிடையே ஈழவிடுதலை உணர்வுகளை

வளர்ப்பதில்  முன்னின்றவர். 

 

மாமனிதராகப் போற்றப்படவேண்டிய அண்ணன் மணிவண்ணன் இன்று எம்மைவிட்டுப் பிரிந்தது

ஈழத் தமிழர்களுக்குப் பேரிழப்பாகும்   

 

வீரவணக்கங்கள்

கண்ணீர் அஞ்சலிகள்!

  • தொடங்கியவர்
தீவிர ஈழ ஆதரவாளர். பிரபாகரனை தலைவராக மனதில் வரித்துக் கொண்டவர். தான் இறந்தால், தன் உடல்மீது புலிக்கொடி போர்த்தி அடக்கம் செய்ய வேண்டும் என்பது மணிவண்ணன் ஆசை. சமீபத்தில் வெளியான அமைதிப்படை -2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய மணிவண்ணன், "நான் மட்டும் ஈழத்தில் பிறந்திருந்தால் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து போராளியாகி வீர மரணம் அடைந்திருப்பேன். தமிழ்நாட்டில் பிறந்துவிட்டதால், ஈழ உணர்வோடு வாழ்கிறேன்.
 
என் மரணத்திற்கு பிறகு சொந்தம் பந்தம் என்று சொல்லிக்கொண்டு ஓடிவருவார்கள். அவர்களிடம் என் உடலை ஒப்படைக்கக் கூடாது. என் உடம்பை தம்பி சீமானிடம் ஒப்படைத்துவிடவேண்டும். அவர்தான் இறுதிச்சடங்கு செய்யவேண்டும். என் சடலத்தின் மீது விடுதலைப் புலிகள் கொடி போர்த்த வேண்டும். இதுதான் என் கடைசி ஆசை. வேறொன்றுமில்லை," என்று கூறினார்.

 

 

அவர் கூறிய வார்த்தைகள்...

 

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=ObuIrIx2NrQ

Edited by துளசி

  • தொடங்கியவர்

இயக்குநர் மணிவண்ணன் மறைவு கலை உலக பகுத்தறிவுப் போராளி மறைந்தார்! - வைகோ இரங்கல்

 
காலத்தால் அழியாத காவியங்கள் பலவற்றை இயக்கியவரும், தலைசிறந்த சிந்தனையாளருமான   மணிவண்ணன் மறைந்தார் என்ற செய்தி பேரிடியாகத் தாக்கிற்று. தாங்க முடியாத அதிர்ச்சிக்கும், துயரத்துக்கும் ஆளானேன்.
 
எழுத்திலும் பேச்சிலும், அனைவரையும் வசீகரிக்கும் பேராற்றல் பெற்ற மணிவண்ணன், நடிகராகவும் முத்திரை பதித்தார்.
 
தமிழ் இன மீட்சிக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட கலை உலகப் போராளி மணிவண்ணன், தமிழ் ஈழ விடுதலைப்புலிகளுக்காகத் துணிச்சலுடன் ஆதரவுக்குரல் எழுப்பி வந்தார்.  தமிழ் ஈழ விடுதலைக்கான பயணத்தில் இன்னும் அளப்பரிய பணிகளைச் செய்யும் எண்ணமும், திறமும் கொண்டு, இந்த இலட்சிய ஏந்தல் உழைத்திடும் வேளையில், இயற்கை அவரைப் பறித்துக் கொண்டதை எண்ணுகையில், வேதனை மேலிடுகிறது.
 
திராவிட இயக்கத்தில் சோதனைகளை எதிர்கொண்டு நான் போராடியபோது, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உருவான தொடக்க காலத்தில், இயக்குநர் மணிவண்ணன் எழுத்திலும், மேடைப் பேச்சிலும், தோள்கொடுத்துத் துணைநின்று, ஆதரித்த பண்பும் பாங்கு, என்றும் என் எண்ணத்தில் நிலைத்து இருக்கும். ஆண்டுகள் பலவாக அவருடன் பழகிய உன்னதமான நாள்களை நான் எப்படி மறக்க முடியும்?
 
அவரது மறைவு, பகுத்தறிவு இயக்கத்துக்கு, கலை உலகுக்கு, தமிழ் ஈழப் போர்க்களத்துக்கு ஈடு செய்யவே முடியாத பேரிழப்பாகும்.
 
அவரை இழந்து கண்ணீரில் பரிதவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், அவரை நேசிக்கும் அனைத்துத் தமிழ் உள்ளங்களுக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்ணீரைக் காணிக்கை ஆக்குகின்றேன்.
 
‘தாயகம்’
சென்னை - 8
15.06.2013
 
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
 

 

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா மணிவண்ணனுக்குச் சமர்ப்பணம்.

 

988647_622810741063473_628449107_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஈழ விடுதலைக்காகத் துணிச்சலுடன் ஆதரவுக்குரல் எழுப்பி வந்தவர் இயக்குநர் மணிவண்ணன்! வைகோ இரங்கல்!

 

இயக்குநர் மணிவண்ணன் மறைவையொட்டி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

காலத்தால் அழியாத காவியங்கள் பலவற்றை இயக்கியவரும், தலைசிறந்த சிந்தனையாளருமான   மணிவண்ணன் மறைந்தார் என்ற செய்தி பேரிடியாகத் தாக்கிற்று. தாங்க முடியாத அதிர்ச்சிக்கும், துயரத்துக்கும் ஆளானேன்.

 

எழுத்திலும் பேச்சிலும், அனைவரையும் வசீகரிக்கும் பேராற்றல் பெற்ற மணிவண்ணன், நடிகராகவும் முத்திரை பதித்தார்.

தமிழ் இன மீட்சிக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட கலை உலகப் போராளி மணிவண்ணன், தமிழ் ஈழ விடுதலைப்புலிகளுக்காகத் துணிச்சலுடன் ஆதரவுக்குரல் எழுப்பி வந்தார். தமிழ் ஈழ விடுதலைக்கான பயணத்தில் இன்னும் அளப்பரிய பணிகளைச் செய்யும் எண்ணமும், திறமும் கொண்டு, இந்த இலட்சிய ஏந்தல் உழைத்திடும் வேளையில், இயற்கை அவரைப் பறித்துக் கொண்டதை எண்ணுகையில், வேதனை மேலிடுகிறது.

 

திராவிட இயக்கத்தில் சோதனைகளை எதிர்கொண்டு நான் போராடியபோது, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உருவான தொடக்க காலத்தில், இயக்குநர் மணிவண்ணன் எழுத்திலும், மேடைப் பேச்சிலும், தோள்கொடுத்துத் துணைநின்று, ஆதரித்த பண்பும் பாங்கு, என்றும் என் எண்ணத்தில் நிலைத்து இருக்கும். ஆண்டுகள் பலவாக அவருடன் பழகிய உன்னதமான நாள்களை நான் எப்படி மறக்க முடியும்?

 

அவரது மறைவு, பகுத்தறிவு இயக்கத்துக்கு, கலை உலகுக்கு, தமிழ் ஈழப் போர்க்களத்துக்கு ஈடு செய்யவே முடியாத பேரிழப்பாகும்.

அவரை இழந்து கண்ணீரில் பரிதவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், அவரை நேசிக்கும் அனைத்துத் தமிழ் உள்ளங்களுக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்ணீரைக் காணிக்கை ஆக்குகின்றேன்.

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=101641

வீரத்தமிழனின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.
 

Edited by thanga

கண்ணீர் அஞ்சலிகள்!

சிறந்த தமிழ் உணர்வும் உன்னத இலட்சியங்களில் இயல்பான ஈடுபாடும் கொண்ட உத்தமர் மணிவண்ணனின் மறைவு

ஈடுசெய்யமுடியாத இழப்பாகும்.தமிழ் ஈழமக்களிடம் விசேட ஈடுபாடுகொண்ட அவருக்கு எமது ஆழ்ந்த அஞ்சலிகள்.அவரின்

குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்

கண்ணீர் அஞ்சலிகள் .

ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுத்த முக்கிய ஒரு உயிர்  ஓய்ந்துவிட்டது .

 
 
மணிவண்ணன் உடல் மீது புலிக்கொடி - இறுதி விருப்பத்தை நிறைவேற்றிய சீமான்  Saturday, June 15, 2013,
 
சென்னை: மணிவண்ணனின் இறுதி ஆசைப்படி, அவரது உடல் மீது புலிக்கொடி போர்த்தி இறுதி மரியாதை செலுத்தினார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான். தமிழ்சினிமாவின் பிரபல இயக்குநரும், நடிகருமான மணிவண்ணன் இன்று மாரடைப்பால் சென்னையில் மரணம் அடைந்தார். ஆரம்பத்தில் திமுக அனுதாபியாக இருந்த மணிவண்ணன், வைகோ பிரிந்தபோது அவரை ஆதரித்து மறுமலர்ச்சி திமுகவில் இணைத்துக் கொண்டார். அப்போது அந்தக் கட்சிக்காக நீதியின் போர்வாள் என்ற பத்திரியை ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தினார்.  பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக மதிமுகவிலிருந்து விலகிக் கொண்டார். ஆனால் வைகோ குறித்து உயர்வாகவே பேசி வந்தார் மணிவண்ணன். இயக்குநர் சீமான் நாம் தமிழர் கட்சியை ஆரம்பித்தபோது, அவரை ஆதரித்து நாம் தமிழர் மேடைகளில் பேசி வந்தார். தீவிர ஈழ ஆதரவாளர். பிரபாகரனை தலைவராக மனதில் வரித்துக் கொண்டவர். தான் இறந்தால், தன் உடல்மீது புலிக்கொடி போர்த்தி அடக்கம் செய்ய வேண்டும் என்பது மணிவண்ணன் ஆசை. சமீபத்தில் வெளியான அமைதிப்படை -2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய மணிவண்ணன், "நான் மட்டும் ஈழத்தில் பிறந்திருந்தால் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து போராளியாகி வீர மரணம் அடைந்திருப்பேன். தமிழ்நாட்டில் பிறந்துவிட்டதால், ஈழ உணர்வோடு வாழ்கிறேன். என் மரணத்திற்கு பிறகு சொந்தம் பந்தம் என்று சொல்லிக்கொண்டு ஓடிவருவார்கள். அவர்களிடம் என் உடலை ஒப்படைக்கக் கூடாது. என் உடம்பை தம்பி சீமானிடம் ஒப்படைத்துவிடவேண்டும். அவர்தான் இறுதிச்சடங்கு செய்யவேண்டும். என் சடலத்தின் மீது விடுதலைப் புலிகள் கொடி போர்த்த வேண்டும். இதுதான் என் கடைசி ஆசை. வேறொன்றுமில்லை," என்று கூறினார். நிறைவேற்றிய சீமான்... அந்த ஆசையை இப்போது நிறைவேற்றி வைத்துள்ளார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான். இன்று மணிவண்ணனுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்த வந்த சீமான், அவர் உடலில் புலிக்கொடியைப் போர்த்தினார். நாளை மாலை மணிவண்ணனின் இறுதிச் சடங்கு சென்னை அருகே போரூரில் நடக்கிறது. மணிவண்ணனின் கேகே நகர் வீட்டிலிருந்து புலிக்கொடி போர்த்தப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் சென்று அவரை அடக்கம் செய்கிறார்கள்.

 http://tamil.oneindia.in/movies/news/2013/06/seeman-comletes-the-last-wish-manivannan-177198.html
 

 

Edited by மகம்

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

அவருடைய பிரிவால் துயருறும் குடும்பத்தினர் கலைத்துறையினர் ஆகியோரோடு நாமும் இணைகிறோம்.

 

நான் சந்திக்க ஆசைப்பட்ட கலைஞர்களில் முதன்மையானவர். நமக்குத்தான் கொடுப்பினை இல்லைப்போல.... முகம் பாராமலே நான் அதிகம் நேசிக்கும் மனிதர்களை தட்டிப்பறிப்பதில் இறைவன் மிகக்கொடியவனாக இருக்கிறான். படைப்பாளியாக, நடிகனாக, இன உணர்வாளனாக, தமிழ்நேசிப்பாளனாக எத்தனையாக இனங்காட்டி எங்கள் மனங்களை கொள்ளையடித்த கலைஞா நம்ப முடியாமல் அதிர்ச்சியில் திணறுகிறது உள்ளம். மீளாத்துயிலுக்கு சென்று விட்டீர்கள் இருப்பினும் உறங்கா மாமனிதனாக எங்கள் மனங்களில் வாழ்வீர்கள்.

Memory_Box_flowers_Ginger_Edwards.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கணனியை போட்டபொழுது தமிழ்சூரியனின் இசையில் யாழ் உறவுகளின் கூட்டுமுயற்சியில் பாடல்  வந்திருப்பதையறிந்து முதலில் அங்கேயே போய் ஆசையாய் கேட்டு கருத்துக்க்அளை வாசித்தபொழுது இந்தப்பாடல் loyolahungerstrike இலும் வந்திருப்பதைக் கேள்விப்பட்டு அங்கே சென்றதும் பெரிய இடி தலையில் விழுந்ததுபோல பெரிய அதிர்ச்சி செய்தி. 

 

அவரை சினிமா நடிகனாக, இயக்குனராக, கதாசிரியனாக என் மனதை கவர்ந்தவராக இருந்தும் அவரை தமிழின உணர்வாளராக அறிந்த கணத்திலிருந்து என் மனதில் என்றுமே நீங்காத இடத்தை பெற்றுக்கோண்ட ஒரு மாமனிதன். மிகவும் நாசூக்காக, நகைச்சுவையாக தனது கருத்தை சொல்லக்கூடிய ஒரு திறமைசாலி. இந்தியாவின் தேசிய விலங்கு புலி, நாங்கள் புலியை கட்டாயமாக ஆதரிக்கவேண்டும் என்று  தான் எதைச் சொல்லவந்தாரோ அதை மிகவும் சாமர்த்தியமாக மேடையில் சொல்லும் திறமை சாலி.  தமிழராக பிறந்தாலும் தமிழரின் உணர்வையோ உயிரையோ மதிக்காத வடக்கு நாட்டவனுக்கு ...........கழுவி சேவகம் செய்யும் தமிழருக்கு மத்தியில், தான் இறந்தால் புலிக்கொடி போத்தியே தன்னை அடக்கம் செய்யவேண்டும் எனும் அவரின் தமிழுணர்வுக்கு எது ஈடு இணையாகும்.

 

மணிவண்ணன் ஐயாவின் இழப்பு, தமிழினத்துக்கு மாபெரும் இழப்பு....  அவருக்கு அஞ்சலிகளை தெரிவிப்பதோடு அன்னாரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.... 

 

உங்கள் ஈழக்கனவு நிச்சயம் நிறைவேறும் ஐயா.... போய்வாருங்கள்.... தமிழ் ஈழத்தில் நிச்சயம் குழந்தையாகப் பிறப்பீர்கள்....

Edited by இளங்கவி

கண்ணீர் அஞ்சலிகள்

  • தொடங்கியவர்

1004731_590759174297029_39343177_n.jpg

 

969655_590759464297000_649678164_n.jpg

 

1005047_590755677630712_1387579910_n.jpg

 

1011717_590755980964015_1886986232_n.jpg

 

1013693_590755670964046_403319271_n.jpg

 

998610_590756334297313_2004460353_n.jpg

 

5822_590756484297298_1531407699_n.jpg

 

996169_590756510963962_1141165823_n.jpg

 

(facebook)

  • தொடங்கியவர்

http://m.soundcloud.com/loveguru911/director-manivannan-crying-in

 

கண்ணீர் அஞ்சலிகள்!

எனக்கு இது mobile இலிருந்து கேட்க கூடியதாக உள்ளது. laptop இல் கேட்க முடியாமல் உள்ளது. மற்றவர்களுக்கும் அப்படி இருப்பின் இந்த இணைப்பில் சென்று கேட்கலாம்.

https://soundcloud.com/loveguru911/director-manivannan-crying-in

(இணைப்பு: முகநூல்)

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழுணர்வாளரும் தமிழீழ ஆதரவாளரும் புரட்சிகரமான திரைப்படங்களைத் தந்தவருமான மதிப்பிற்குரிய மணிவண்ணனவர்களது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்!

http://seithy.com/breifNews.php?newsID=85177&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.