Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளித்தட்டு எப்படி விளையாடுவது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளித்தட்டு
--------------------------

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் தமிழரிடையே, குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே அழிந்து வரும்சூழலில் அவற்றை மீளவும் வெளிக்கொணர ஆங்காங்கே சில முயற்சிகள் நடைபெறுகின்றன. ஆனால் அவற்றை ஒரு தொடர்சியான முறையில் நகர்த்திச் செல்வதாயின் அவற்றினுடைய ஆடுகள விதிமுறைகள் தெளிவற்றோ அல்லது முறையாக அறியப்படாமலோ அல்லது ஊருக்கு ஊர் வேறுபட்டதாகவோ உரைக்கப்படுகின்றன.
நேற்றையதினம் தமிழ்ப்பாடசாலையொன்று கோடைகால விடுமுறைநாளையிட்டு ஒன்றுகூடிக் கிறில்பாட்டி(தமிழ்ச்சொல்தெரியவில்லை)யொன்றை நடாத்தினர். எனக்கும் கலந்துகொள்ளும் வாய்ப்புக்கிடைத்தது. அங்கு கிளித்தட்டு விளையாடப்பட்டபோது சிறியோர் இளையோர் முதியோர் என விளையாடினர். அதில் பெரியோருக்கு விதிமுறைகளில்(நானுட்பட) ஒவ்வொருவரும் வௌ;வேறு நிலைகளில் சிந்திப்பதாக இருந்தது. விளையாடும்போது பெருசுகள் சொன்னதைச் செய்யாது பிழைவிடுவதாக இளையவரொருவர் குரலெழுப்பியவாறு நின்றார். அவரைச் சமாதானப்படுத்துவது சிரமமாகவிருந்தது. எனவே கிளித்தட்டு விளையாட்டுத் தொடர்பான விபரங்களை யாழ்க்களத்தின் உறவுகளிமிருந்து அறிந்து சரியான தெளிவுடன் எமது இளையதலைமுறைக்கு அறியத்தரவேண்டும் என்ற நோக்கிலே இந்த விடயத்தை இணைக்கின்றேன். முரண்நிலை விவாதங்களுக்கப்பால் சரியான விளையாட்டு விதிமுறையைப் பகிர்ந்துகொள்ளுமாறு வேண்டுகிறேன். ஏனெனில் எதிர்காலத்திலாவது ஒருபொதுமுறைக்கிசைவாக விளையாடும் சூழல் ஏற்படுத்தப்படவேண்டும். விடுமுறைகளின்போது வௌ;வேறுநாடுகளிலிருந்து வந்து கூடிவிளையாடும் இளையோரிடையே குழப்பமற்ற ஒத்திசைவான விளையாட்டுப் பண்பியல் வளர்த்தெடுக்கப்படுவதோடு பெரியோரும் தமக்கேற்றவாறு மாறிமாறிக் கூறுவதையும் விவாதிப்பதையும் தடுக்கவேண்டும். ஏனெனில் எமது பலவிடயங்களில் பல்வேறு மாறுபட்ட சூழல்கள் தோற்றம் பெற்றுவருகின்றமையை(எடுத்தக்காட்டாக- திருமணம்) நாம் கண்டுவருகின்றோம். பாரம்பரிய விளையாட்டுகள் என்றவாறு விதிமுறைகள் தெளிவற்றிருத்தலாகாது.

விக்கிப்பீடியாவில் உள்ள விபரங்கள் சரியானதா என்பதையும் சரிபார்ப்பது பயனுடையதாகும்.


-களஉறவுகளுக்கு எனது நன்றிகள்.-

Edited by nochchi

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

கிளித்தட்டு தமிழரின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்று. குறுக்கும் நெடுக்குமாகக் கோடுகள் போடுவது தெரியும் தானே. நீளப்பாட்டுக்கு எத்தனை கோடுகளையும் போட்டு ஆட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பெரிதாக்கிக் கொள்ளலாம்.

விளையாடுபவர்களில் நடுக் கோட்டில் நிற்பவர் கிளி. அவர் நேர்கோட்டிலும் வெளிக் கோடுகளிலும் மட்டுமே திரியலாம். இடையில் ஒவ்வொரு கோட்டுக்கும் ஒருவர் நிற்பர். கிளி எட்டி ஒருவரைத் தொட்டாலே அவர் அவுட். ஆனால் மற்றைய கோடுகளில் மறிப்பவர்கள் ஒருவர் கடக்கும் போது மட்டுமே  அடித்தால் அவுட். முதலில் முன்னிருந்து ஒவ்வொரு கோடுகளையும் தாண்டி வெளியே செல்ல வேண்டும். அவர்களை காய் என்பர்.பின்னர் அடிபடாது பின்னிருந்து முன்னே யாராவது ஒருவர் சென்றாலும் பழம். ஆனால் பின்னிருந்து வரும் போது காயும் பழமும் கலக்கக் கூடாது.

நாம் ஒவ்வொரு வருடமும் கடற்கரையிலும் பாடசாலை விளையாட்டுப் போட்டியிலும் இப்படித்தான் விளையாடுவோம். ஈழம் சென்றிருந்த போதும் இதே முறையிலேயே விளையாடியதால். இது சரி என எண்ணுகிறேன். ஆனால் இந்தியாவில் சிலவேளை வேறுமாதிரி விளையாடுவார்களோ தெரியாது.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 
 
150px-Kilithadu.JPG
magnify-clip.png
கிளித்தட்டு

கிளித்தட்டு அல்லது தாச்சி இலங்கையில் தமிழீழத்திலும், ஈழத்தமிழர்கள் வாழும் பல்வேறு உலக நாடுகளிலும், இந்தியாவில் கேரளாவிலும் பரவலாக விளையாடப்படும் விளையாட்டாகும். இது உடலுக்கு நல்ல பயன் தரும் விளையாட்டாகும்.

பொருளடக்கம்   [மறை
தோற்றம்[தொகு]

வயல் நிலங்களில் விளையும் பயிரைக் கொத்திச் செல்ல வரும் கிளிகளை கூட்டமாய் நின்று உழவர் துரத்தும் வழமையினின்று கிளித்தட்டு தோன்றியது என்கிறார் தேவநேயப் பாவாணர்.[1]

போட்டி விதிமுறைகள்[தொகு]

மைதானத்தை முதலில் ஒரு போக்கு பெட்டிகளாக பிரித்து, பின்னர் நடுவே ஒரு கோடு போட்டு கொள்ளப்படும். படத்தை பார்க்கவும். எத்தனை ஒரு போக்கு பெட்டிகள் என்பது விளையாட்டு குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்தது. குறைந்தது ஒரு குழுவுக்கு 3 உறுப்பினர்களாவது வேண்டும்.

Tsport2.JPG
கிளிதட்டு மைதான அமைப்பு

யார் நாணய சுண்டலில் தோற்கின்றார்களோ அவர்கள் மறிப்பார்கள், மற்ற குழு புகுவார்கள். மறிக்கும் அணியினர் முதலாம் கோட்டையும், கடைசி கோட்டையும் தவிர மற்றக் கோடுகளில் நிற்பார்கள். மிகுதியான மறிக்கும் அணியை சேர்ந்தவர் கிளி என்று அழைக்கப்பட்டு, எந்த கோடுகளாலும் செல்ல வல்லவர். கிளியால் தொடப்பட்டால் புகும் குழு உறுப்பினர் ஆட்டமிழப்பார்.

முதலில் கிளி ஒரு தொங்கலிலும், புகுபவர்கள் ஒரு தொங்கலும் நிற்பார்கள். கிளி கூவிக்கொண்டு முன்னோக்கி வருவார். கிளி கூவியவுடன் புகுபவர்கள் உச்சி, தெண்டி அடுத்த எல்லைக்கு செல்ல முயல வேண்டும். தாண்டும் பொழுது மறிப்பவரால் தொடப்பட்டால் தாண்டுபவர் ஆட்டமிழப்பார். தாண்டும்போது மட்டுமே மறுப்பவர் தட்ட முடியும், சும்மா அருகில் நிற்க்கும் பொழுதோ, உச்சும் பொழுதோ தட்ட முடியாது. ஆனால், கிளி எங்கும் சென்று யாரையும் எப்பொழுதும் தட்டலாம். அதாவது, எட்டியும் தட்டலாம்.

உச்சி, தப்பி எல்லைக்கு சென்றவர்கள் பழம் என்று கருதப்படுவர். வந்து கொண்டிப்பவர்கள் காய்கள். பழமானவர், மீண்டும் புகுந்த எல்லைக்கே சென்றால் தான் அந்த அணியினருக்கு ஒரு புள்ளி கிடைக்கும். ஆனால், மீண்டும் வரும் பொழுது, பழம் காய் உள்ள ஒரு பெட்டிக்கு போகவது அவ்வளவு நல்லதல்ல, காரணம், இருவருக்கும் உச்சுவதற்கு குறுகிய இடமே கிடைக்கும். மேலும், கிளி பூட்டு போட்டு தட்ட முயல்வார்.

எந்த அணி கூடிய புள்ளிகளைப் பெறுகின்றதோ அவர்களுக்கே வெற்றி. பலருடன் சேர்ந்து விளையாடும் பொழுது, இந்த விளையாட்டு மிகவும் வேகமாகவும், விறு விறுப்பாகவும் அமையும்.

வேறு பெயர்கள்[தொகு]
444px-Game%2C_%27Kili-thattu%27_ground.j
magnify-clip.png
இதன் வேறு வகையான விளையாட்டில் பயன்படுத்தப்படும் அரங்கங்கள் - படம் 11 ஆடவர் விளையாடும் கிளித்தட்டு விளையாட்டு அரங்கம். படம் 12 சிறுவர்கள் விளையாடும் கிளித்தட்டு விளையாட்டு அரங்கம். அ-ஆ இணையர் உள்ளே உப்புக் கொடுத்து உப்பு வாங்குவதாக நடித்துக் கைகொடுக்கும் இடம். இ-ஈ, உ-ஊ, எ-ஏ பாத்திகளும் அவை
  • கிளித்தட்டு
குறிஞ்சி நிலத்தில் தட்டு என்பது பாத்தி. பாத்தியில் விளைந்த கதிர்களைத் தின்ன வரும் கிளிகளைத் தட்டி ஓட்டுவது போன்றதால் இதனைக் கிளித்தட்டு என்றர்.
  • தண்ணீர் புரி
வயல்களில் தண்ணீர் பாய்ச்சுவது போல இருப்பதால் இதனை மருதநில மக்கள் தண்ணீர் புரி என்பர்
  • உப்பு விளையாட்டு
கடல்நீர் உப்புப் பாத்தியில் பாய்வது போல இருப்பனால் நெய்தல்-நில மக்கள் இதனை உப்பு-விளையாட்டு என்பர் மேலும் பார்க்க[தொகு] மேற்கோள்கள்[தொகு]
  1.  ஞா. தேவநேயப்பாவாணர். தமிழ்நாட்டு விளையாட்டுகள்.
வெளி இணைப்புகள்[தொகு]

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கிளித்தட்டு விளையாட்டில் பூட்டு என்று ஒன்று இருக்கின்றது.

போடுகின்றவர்கள் பூட்டைச் சரியாகப் போட்டால்  மணித்தியாலக் கணக்கில்

குந்தியிருக்க வேண்டி வரும்.

 

அல்லது கிளியைப் பேய்க்காட்ட ஏதாவது வழியைக் கண்டு பிடிக்க வேண்டும்.

ஆரும் பெட்டையள் அந்த வழியால் வந்தால்  ஒழிய :lol:

மற்றும்படி கிளி  திரும்பியும் பார்க்க மாட்டுது :)

 

பிறகென்ன அளாப்பல் தான் :D     

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கிளித்தட்டு விளையாட்டில் பூட்டு என்று ஒன்று இருக்கின்றது.

போடுகின்றவர்கள் பூட்டைச் சரியாகப் போட்டால்  மணித்தியாலக் கணக்கில்

குந்தியிருக்க வேண்டி வரும்.

 

அல்லது கிளியைப் பேய்க்காட்ட ஏதாவது வழியைக் கண்டு பிடிக்க வேண்டும்.

ஆரும் பெட்டையள் அந்த வழியால் வந்தால்  ஒழிய :lol:

மற்றும்படி கிளி  திரும்பியும் பார்க்க மாட்டுது :)

 

பிறகென்ன அளாப்பல் தான் :D     

 

 

எனது மாமனார் வீட்டுக்கு போனால் வளவில் கிளித்தட்டு விளையாடுவார்கள்.

நானும் மனைவியும் எதிர் எதிராக நிற்போம்

நான் மறிக்க அவர் நின்று விடுவார். அசைய  எத்தனிக்காது பேசிக்கொண்டிருப்போம்

இதை அவதானித்த மைத்துணர் ஒரே அணியில் விட்டார்

ஒரே கூண்டுக்குள் போய் அசையாது பேசிக்கொள்வோம். நாங்கள் போய் நின்றால் கிளிக்கு அந்தப்பகுதியில் வேலை  இல்லை.

கிளத்தட்டு விளையாடப்போய்த்தான் மச்சானிடம் களவு பிடிபட்டது :lol:  :D  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

எனது மாமனார் வீட்டுக்கு போனால் வளவில் கிளித்தட்டு விளையாடுவார்கள்.

நானும் மனைவியும் எதிர் எதிராக நிற்போம்

நான் மறிக்க அவர் நின்று விடுவார். அசைய  எத்தனிக்காது பேசிக்கொண்டிருப்போம்

இதை அவதானித்த மைத்துணர் ஒரே அணியில் விட்டார்

ஒரே கூண்டுக்குள் போய் அசையாது பேசிக்கொள்வோம். நாங்கள் போய் நின்றால் கிளிக்கு அந்தப்பகுதியில் வேலை  இல்லை.

கிளத்தட்டு விளையாடப்போய்த்தான் மச்சானிடம் களவு பிடிபட்டது :lol:  :D  :D  :D

உங்களுடைய அணியில் சேர்ந்து விளையாடிய பொடியள் பாவங்கள் :D  :lol:  :lol:

நான் அடிபிடிச்சாலும் இல்லை எண்டு அளாப்புவன் அதால கிளி எனக்கு அடிக்கும்போது படார் எண்டு சத்தம் வர அடிப்பான் மொக்கன் கத்திக்கொண்டு இருப்பன்

 

சின்ன பொடியளில அக்காமார் மெதுவா தங்கட காலுக்க வைச்சு ஓடுடா எண்டு தள்ளி விடுங்கள் முதுகு பளுக்குறது நமக்குதான் செம ஜாலி விளையாட்டு .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்கை ஊருக்கு ஊர் நடக்கிற கிளித்தட்டுபோட்டியிலை நாங்கள் இரண்டுதரம்  சம்பியன்.

 

11197_523023474408442_1106549851_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

கிளித்தட்டு தமிழரின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்று. குறுக்கும் நெடுக்குமாகக் கோடுகள் போடுவது தெரியும் தானே. நீளப்பாட்டுக்கு எத்தனை கோடுகளையும் போட்டு ஆட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பெரிதாக்கிக் கொள்ளலாம்.

விளையாடுபவர்களில் நடுக் கோட்டில் நிற்பவர் கிளி. அவர் நேர்கோட்டிலும் வெளிக் கோடுகளிலும் மட்டுமே திரியலாம். இடையில் ஒவ்வொரு கோட்டுக்கும் ஒருவர் நிற்பர். கிளி எட்டி ஒருவரைத் தொட்டாலே அவர் அவுட். ஆனால் மற்றைய கோடுகளில் மறிப்பவர்கள் ஒருவர் கடக்கும் போது மட்டுமே  அடித்தால் அவுட். முதலில் முன்னிருந்து ஒவ்வொரு கோடுகளையும் தாண்டி வெளியே செல்ல வேண்டும். அவர்களை காய் என்பர்.பின்னர் அடிபடாது பின்னிருந்து முன்னே யாராவது ஒருவர் சென்றாலும் பழம். ஆனால் பின்னிருந்து வரும் போது காயும் பழமும் கலக்கக் கூடாது.

நாம் ஒவ்வொரு வருடமும் கடற்கரையிலும் பாடசாலை விளையாட்டுப் போட்டியிலும் இப்படித்தான் விளையாடுவோம். ஈழம் சென்றிருந்த போதும் இதே முறையிலேயே விளையாடியதால். இது சரி என எண்ணுகிறேன். ஆனால் இந்தியாவில் சிலவேளை வேறுமாதிரி விளையாடுவார்களோ தெரியாது.

 

கிளியை முள்ளி என்றும் அழைத்ததை கேட்டிருக்கிறேன். பூட்டு போடும் போது  அப்பெட்டியை பாய்ந்து கடந்து பழம் எடுக்க முடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்பாண கம்பஸில் ஒருவர் இருந்தவர், அவர் சொல்லுவார் " அடி சரி மாறி விளையாடு "

புதிய சட்டங்களில் "பின் அடி " என்று ஒன்றும் இல்லை. அடித்தால் சரி. மற்றது இப்ப முந்தினமாதிரி பொழுதுபடும் மட்டும் பூட்டு உடைக்காமல் இருக்க முடியாது , இந்தனை நிமிடங்கள் கடந்தால் மற்ற அணி மாறி விளையாட வேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பாரம்பரிய விளையாட்டுக்கள் என்ற புத்தகம் 
இலங்கையில் வெளியானது.அந்த புத்தகத்தில் கிளித்தட்டு உள்ளீடாக 
பல பாரம்பரிய விளையாட்டுக்கள் சம்மந்தமான விதிமுறைகள் 
உள்ளன.

Edited by லியோ

  • கருத்துக்கள உறவுகள்

பிறங்கையால் அடித்தால் செல்லாது !  கிளியின்ர அடியில்  கீரிமலை அலை மாதிரி முதுகு ஒருக்கால் நெளிஞ்சு நிமிரும் ! :rolleyes:

பின்கரையில் பேசாமல் குந்தியிருந்து தரையில் கோடு கீறிக் கொண்டிருக்கிறது . மரிப்பவர் அசந்த நேரம்  மெல்லிசாய் ஒரு தவளைத் தத்தல் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மெசொபொத்தேமியா சுமேரியர்,பெருமாள், வாத்தியார்,விசுகு, அஞ்சரன்,குமாரசாமி,நுணாவிலான், வொல்கானோ,லியோ,சுவி என வருகைதந்து நேரமொதுக்கிக் கருத்திட்ட, தகவலைத்தந்த படமிணைத்தலென ஆர்வத்தோடு இணைந்துகொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் நன்றிகள்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவங்கள். கிளியோடு கிளித்தட்டு... அளாப்புதல்... வெல்வதற்காக அதியுச்சமாக என்னமுடியுமோ அதையெல்லாம் செய்தலென..... மகிழ்வான காலங்கள். இனி எப்போது ....

ஒருவித மயக்கநிலையுடனேயே தமிழரது பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடும் நிலையிருக்கின்றது. தொடர்ந்து தேடுவோம்...

தனித்தனியே கருத்தெழுத விருப்பம் ஆனால் நேரம் நெருக்கிறது. முடிந்தால் எழுதுவேன்.

மீண்டும் நன்றிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

கிராமிய விளையாட்டு “கிளித்தட்டு”

 

- See more at: http://www.sikaram.lk/?p=1647#sthash.By4MBzfk.dpuf

 

 

“ஆலையிலே சோலையிலே ஆலம் பாடிய சந்தையிலே கிட்டிப்புள்ளும் பம்பரமும் கிறுக்கியடிக்கப் பாலாறு “என்பது கிராமத்து நாட்டார் பாடல் .
 
கிராமத்து விளையாட்டுக்கள் எப்போதுமே பாடல்களுடன் இணைந்ததாகத்தான் இருந்து வந்தன . ஆடலுடன் பாடலும் சேர்ந்துதான் பண்டை தமிழர் வாழ்வாக இருந்து வந்தது .விளையாட்டும் கலைகளும் அந்தளவுக்கு ஒன்றொடொன்று பின்னிப் பிணைந்திருந்தன .
 
முன்னர் கிராமங்களில் விடுமுறையைக் கழிக்கச் செல்லும் நகர் புறத்துப் பிள்ளைகள் இத்தகைய பண்டைய விளையாட்டுக்களை ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்வர் இப்போது இப்படிப் பார்ப்பதற்குக் கூட பாரம்பரிய விளையாட்டுக்கள் கிடைப்பது அரிதாகிப் போய்விட்டன.
 
இவ்வாறான பாரம்பரிய வியையாட்டுக்களில், கிளித்தட்டு அல்லது தாச்சி மிகவும் பிரபலமான, சுவாரஸ்யமான ஒரு விளையாட்டு. அருகிவரும் இந்த விளையாட்டைப் பற்றி அறிந்து கொண்டு நாமும் விளையாடி மகிழ்வதற்குஇந்த விளையாட்டுப்பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம் .
 
எங்கள் மண்ணுக்கே சிறப்பான விளையாட்டுக்களில் ஒன்றான “கிளித்தட்டை” சிறுவர் முதல் பெரியோர் வரை வயது, பால் வேறுபாடின்றி எல்லோருமே விளையாடி மகிழலாம் .சில கிராமங்களில் இதனை “யாட் ”அல்லது ‘தாச்சி ‘ என்றும் அழைப்பார்கள் .
 
பண்டைய காலத்தில் கிராமத்துப் பிள்ளைகளுக்குப் பிடித்தமான ஒன்றாக இருந்துவந்த இந்த விளையாட்டு இன்று பலருக்கும் தெரியாததென்பது ஆச்சரியம்தான். கிளித் தட்டு விவசாயிகளின் கலாசாரத்தை பிரதிபலிக்கின்ற ஒன்றாகும் .நெல் விதைத்த காலங்களில் வயலில் நெல் மணிகளைப் பொறுக்க வரும் கிளிகளை, கமக்காரன் வரம்புகளில் ஓடிக்கலைத்து வயலைக் காப்பதையே இந்த விளையாட்டுக் காட்டி நிற்கிறது. காப்பவர்- கமக்காரனாகவும்,புகுவோர்-கிளிகளாகவும் தட்டுக்கள் (பெட்டிகள்)- வயல் நிலங்களாகவும் கோடுகள்- வரம்புகளாகவும் பாவனை செய்யப்படுகின்றது.
 
நமது கலாசாரத்தோடு கூடிய இவ் விளையாட்டு செலவுச் சிக்கனமானதும், விளையாடுபவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும், ஆர்வத்தையும் கொடுக்ககக் கூடியதாகவும் இந்த விளையாட்டு உள்ளது .
 
இதற்காக தெரிவு செய்யப்படும் இடம் புல், பூண்டற்ற துப்பரவானதாக இருக்க வேண்டும் .விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கைகேற்ப இரு பகுதிகளாகப் (கொலம்களாக) பெட்டிகள் பிரிக்கப்படும். ஆகக் குறைந்து 6 பெட்டிகளாவது இருக்க வேண்டும் .
 
விளையாடும் வீரர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து விளையாடுவார். குறைந்தது ஒரு அணியில் 5 பேர் வரையிலாவது இருக்க வேண்டும் “பூவா”, “தலையா” போட்டுப்பார்த்த பின்னர் இரண்டு அணிகளில் எந்த அணி முதலில் களமிறங்குவது என்பது தீர்மானிக்கப்படும்
 
முதலில் மறிக்கத் தெரிவாகும் அணியின் தலைவர் “கிளி”ஆவார் இவர் நெடுங்கோட்டு வழியாக மட்டும் விழிமறிப்பார் மேலும் தனது கைக்கு எட்டும் தூரத்திலுள்ள எதிரணியினரை அடிக்கவும் முடியும் .கிளியிடம் அடி வாங்கியவா் ஆட்டத்திலிருந்து விலகிவிட வேண்டும்.
குறுக்குக் கோடுகளிலுள்ளவர்கள் எதிரணியினர் பெட்டிக்குப் பெட்டிதாவுவதை மறிப்பார். பக்கத்து பக்கத்து பெட்டிகளுக்குள் மாறி மாறி செல்வதன் மூலம் இவர்களைத் திசைதிருப்பி முன்னேற முடியும் “காத்தலும், புகுதலும் ”  என இரு அணியினரும் மும்மரமாக விளையாடி ஒரு வழியாக முழுப்பெட்டியையும் தாண்டி களமிறங்கியவர்கள் வெளியே வருவார்கள்.
 
இத்தோடு முடிந்துவிடாது இனிமேல்தான் விளையாட்டே ஆரம்பமாகும். பெட்டிகளைத் தாண்டி வெளியே களமிறங்கியவர்கள் தொடர்ந்து எதிர்ப்பக்கமாக முன்னேறி மீண்டும் ஆரம்பித்த அடத்துக்கு செல்வதுதான் விளையாட்டின் விறுவிறுப்பான பகுதி. ஆரம்ப இடத்திலிருந்து உள்நுளைந்தவர்கள் “காய்” என்றும் எதிர்ப்பக்கம் சென்று மீண்டும் வெற்றிக்ககாக முன்னேறுவார்கள் “பழம்” என்றும் அழைக்கப்படுவார் இங்கு “காயும்” “பழமும்” ஒரே பெட்டிக்குள் சந்திக்க முடியாது இவ்வாறு சந்தித்தால் அந்த அணியே ஆட்டத்திலிருந்து நீக்கப்படும். இவ்விளையாட்டின் சுவாரஸ்யமும், ஆர்வமும் களமிறங்கியவர்கள் முன்னேறும் வேகத்தில்தான் தங்கியிருக்கும். இவர்கள் காலம் தாழ்த்திக்கொள்வதை கட்டுப்படுத்த நடுவர் ஓருவர் நியமிக்கப்பட்டிருப்பார். இவர் குறிப்பிட்ட நேரத்துக்குள் முன்னேறாத வீரர்களைஆட்டத்திலிருந்து விலக்குவார்
 
இவை தவிர, கிளியாக வழிமறிப்பவர்கள் எதிரணியினருக்கு அடித்துவிட்டதாக அடிக்கடி கூறுவார் அடிக்காமலே இவ்வாறு அவர் சொல்லவும் கூடும் இதை “அழாப்பல்” என்று கூறுவர். இதனையும் நடுவரே கண்காணித்து போட்டியை விறுவிறுப்பாக்குவார்.
 
இவ்வாறு மாறி மாறி இரு அணியினரும் விளையாடி தாம் எடுக்கும் வெற்றிகளின் எண்ணிக்கையில் அன்றைய போட்டியின் வெற்றியணி தீர்மானிக்கப்படும். சின்னச் சின்ன சண்டைகள் கோபங்களுடன் விளையாடும் போது போட்டியின் விறுவிறுப்புக்கு எல்லையேயிருக்காது. போட்டி முடிந்ததும் அனைவரும் சமாதானமாக வெளியேறும் போது இன்றைய கிரிக்கட் விளையாட்டை தொலைக்காட்சியில் பார்க்காமல் நேரடியாகப் பார்க்கிற மாதிரி இருக்கும் .
 
கிராமங்களில் பாடசாலை விடுமுறையில் வீட்டுக்குள்ள அடைந்து இருக்காமல் நண்பர்கள் எல்லோருமாகச் சேர்ந்து கிளித்தட்டு விளையாடிப்பாருங்கள் காலம் போகின்ற வேகம் தெரியாமலே நீங்க எல்லோரும், இத்தனை நாளும் எப்படிப்பேச்சு? என்ற ஆச்சரியத்தோடு தை மாதம் பாடசாலைக்கு ஆயத்தமாகுவீர்கள்
 
—-ஜெயந்தி—–

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிராமிய விளையாட்டு “கிளித்தட்டு”

 

- See more at: http://www.sikaram.lk/?p=1647#sthash.By4MBzfk.dpuf

 

 

“ஆலையிலே சோலையிலே ஆலம் பாடிய சந்தையிலே கிட்டிப்புள்ளும் பம்பரமும் கிறுக்கியடிக்கப் பாலாறு “என்பது கிராமத்து நாட்டார் பாடல் .

 

கிராமத்து விளையாட்டுக்கள் எப்போதுமே பாடல்களுடன் இணைந்ததாகத்தான் இருந்து வந்தன . ஆடலுடன் பாடலும் சேர்ந்துதான் பண்டை தமிழர் வாழ்வாக இருந்து வந்தது .விளையாட்டும் கலைகளும் அந்தளவுக்கு ஒன்றொடொன்று பின்னிப் பிணைந்திருந்தன .

 

முன்னர் கிராமங்களில் விடுமுறையைக் கழிக்கச் செல்லும் நகர் புறத்துப் பிள்ளைகள் இத்தகைய பண்டைய விளையாட்டுக்களை ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்வர் இப்போது இப்படிப் பார்ப்பதற்குக் கூட பாரம்பரிய விளையாட்டுக்கள் கிடைப்பது அரிதாகிப் போய்விட்டன.

 

விடுமுறையில் வீட்டுக்குள்ள அடைந்து இருக்காமல் நண்பர்கள் எல்லோருமாகச் சேர்ந்து கிளித்தட்டு விளையாடிப்பாருங்கள் காலம் போகின்ற வேகம் தெரியாமலே நீங்க எல்லோரும், இத்தனை நாளும் எப்படிப்பேச்சு? என்ற ஆச்சரியத்தோடு தை மாதம் பாடசாலைக்கு ஆயத்தமாகுவீர்கள்

 

—-ஜெயந்தி—–கிராமிய விளையாட்டு 'கிளித்தட்டு' என்ற இணைப்பைத் தந்த நுணாவிலானுக்கு எனது நன்றிகளும் பாராட்டுகளும்.

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் கிளித்தட்டு விளையாடிய காலங்கள் நினைவுக்கு வருகின்றன.. :unsure:  சிறிய காலமேயானாலும் மனதில் நன்றாகப் பதிந்துள்ளது.. யாரையாவது ஒருத்தர் தடுத்து வைத்திருப்பார்.. தடுக்கப்பட்டவரிடம் (எனது அணிக்காரர்) பேசுவதுமாதிரிப் போய் அவரின் முதுகுப் பக்கத்தால் கோட்டைத் தாண்டிவிடுவது எனக்கு கைவந்தகலை.. :D சுவி அண்ணா சொன்னதுபோல் கோட்டைத் தாண்டிவிட்டால் பின்வளமாக அடிக்கக்கூடாது.. :unsure:

நானும் கிளித்தட்டு விளையாடினேன்  என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள் [என் உடல் அமைப்பை பார்த்து] :D 

 
 
ஆனால் உண்மையில் வேகமான ,உக்கிரமான ,ரோசமான ,கோபம் பொங்கி வரும் ஓர் அருமையான விளையாட்டு.  :)
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அண்ணே கிளித்தட்டில மட்டும் தானா அண்ணே வேகமா உக்கிரமா ரோசமா விளையாடலாம் ன்னே

:D

  • கருத்துக்கள உறவுகள்

நான் பதினோரு வயதாக இருக்கும் போது, 
அயலக நண்பர், நண்பிகளுடன் கிளித்தட்டு விளையாடிக் கொண்டிருக்கும் போது...
கிளி மறிக்கும் வேளையில்...
ஒரு பெண், வயித்தை பிடித்துக் கொண்டு... இருந்து விட்டா....
அதுக்குப் பிறகு, அவ சாமத்தியப் பட்டதால்... இருந்தவ என்று, ஊரில் பேசிக் கொண்டார்கள்.
எனக்கு, அப்ப அது விளங்க... கனகாலம் எடுத்தது. :D

நான் பதினோரு வயதாக இருக்கும் போது, 

அயலக நண்பர், நண்பிகளுடன் கிளித்தட்டு விளையாடிக் கொண்டிருக்கும் போது...

கிளி மறிக்கும் வேளையில்...

ஒரு பெண், வயித்தை பிடித்துக் கொண்டு... இருந்து விட்டா....

அதுக்குப் பிறகு, அவ சாமத்தியப் பட்டதால்... இருந்தவ என்று, ஊரில் பேசிக் கொண்டார்கள்.

எனக்கு, அப்ப அது விளங்க... கனகாலம் எடுத்தது. :D

:D  :D நான் நம்புறேன் .நம்புறேன் .நம்புறேன்............... :D  :D  :D 

  • கருத்துக்கள உறவுகள்

நான் பதினோரு வயதாக இருக்கும் போது, 

அயலக நண்பர், நண்பிகளுடன் கிளித்தட்டு விளையாடிக் கொண்டிருக்கும் போது...

கிளி மறிக்கும் வேளையில்...

ஒரு பெண், வயித்தை பிடித்துக் கொண்டு... இருந்து விட்டா....

அதுக்குப் பிறகு, அவ சாமத்தியப் பட்டதால்... இருந்தவ என்று, ஊரில் பேசிக் கொண்டார்கள்.

எனக்கு, அப்ப அது விளங்க... கனகாலம் எடுத்தது. :D

 

 

சிறி

கிளித்தட்டு விளையாட்டில் ஒரே ஒரு விதி மட்டுமே  உண்டு

அது கையை  மட்டும் பாவிக்கணும் என்பது.

நீங்கள் எழுதுவதைப்பார்த்தால்

பிள்ளை  எதையோ  பார்த்திருக்கவேணும்............. :lol:  :D  :D  :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பதினொரு வயதிலை நண்பிகளோடை கிளித்தட்டு விளையாடின சிறித்தம்பி....குரும்பட்டியிலை தேர் செய்து குடும்பமாய் இழுத்திருக்கோணுமே????அதுக்குப்பிறகுதான் அப்பா அம்மா விளையாட்டுக்கள் எல்லாம் வரும்.....வந்திருக்கும். :lol:

நான் பதினோரு வயதாக இருக்கும் போது, 

அயலக நண்பர், நண்பிகளுடன் கிளித்தட்டு விளையாடிக் கொண்டிருக்கும் போது...

கிளி மறிக்கும் வேளையில்...

ஒரு பெண், வயித்தை பிடித்துக் கொண்டு... இருந்து விட்டா....

அதுக்குப் பிறகு, அவ சாமத்தியப் பட்டதால்... இருந்தவ என்று, ஊரில் பேசிக் கொண்டார்கள்.

எனக்கு, அப்ப அது விளங்க... கனகாலம் எடுத்தது. :D

 

இதுதான் சொல்கிறது பெண்பிள்ளைகளோடு விளையாடும் பொழுது சாரம் கட்ட கூடாது shorts போடவேணும் என்று.இந்த பாவம் உங்களை சும்மா விடாது  :D 

பதிவிற்கு நன்றி.இன்று எமது தமிழ்ப் பள்ளியில் கிளித்தட்டுப் போட்டி நடைபெற இருக்கிறது.முதல் முறையாக செயற்படுத்துகிறோம்.பயனுள்ள தகவல்களைத் தந்த்வர்களுக்கும் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டோருக்கும் நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.