Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‎காவியக் கவிஞன்‬ நான்..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா.. நீங்கள் சொல்வது பல இடங்களிலும் நடப்பதுதான்.. உங்களுக்கு முதுகு கூசியதுக்கு உங்கள் தந்தையோ, மாமன்மாரோ அல்லது உறவினர்களோ பங்காளராக இருந்திருக்கலாம்.. collective responsibility எடுக்காமல் இன்னொருவரை நோக்கி கைநீட்டுவது ஏற்புடையதன்று..

அமெரிக்க ஜனாதிபதி அல்கைடாவுக்கு எதிராக அறைகூவல்விடுத்தால் அமெரிக்க மக்கள் கைதட்டுவார்கள்.. ஆனால் சாலையோர வெடிகுண்டில் சிக்குவது சாதாரண சிப்பாயாக இருப்பான்..

காசி அண்ணையை நோக்கி கைகாட்டிய நீங்கள் இப்ப புலம் பெயர்ந்தவைக்கு எதிரா கை காட்டுறீங்கள்..! இது கவிதையின் முதற்பொருளில் இருந்து விலகி சேதக்கட்டுப்பாடு செய்யும் நடவடிக்கையாகத் தெரிகிறது..

நீங்கள் 2008 இல் புலம்பெயர்ந்துவிட்டீர்கள்.. ஆனால் இன்றும் தாயகத்தில் உள்ளவர்களின் சார்பாக நீங்கள் எவ்வாறு பேசமுடியும்? அங்குள்ள ஒருவராவது தலைவர் வரமாட்டாரா என்று எண்ணுவாராக இருந்தால் அவர்களுக்கு உங்கள் கவிதை சொல்வது என்ன? :D

எனக்குத் தெரிந்த கொழும்புத் தமிழர் ஒருவர்.. அரசியலே பேசாதவர்.. தலைவர் எப்ப வருவாரு என்கிறார்.. :D

ஆக, வரும் நிகழ்வுகளை நிர்ணயிக்கப்போவது காரண காரியங்களே தவிர மேடைப்பேச்சுக்களும், கவிதைகளும் அல்ல..

 

இதே பதிலை காசியானந்தன் போன்றவர்களுக்கும் சொல்வீர்களானால் மௌனிப்போம்.

அதுவரை இப்படியான கருத்துக்களுக்கெதிரான எதிர்வினை எனக்குத் தெரிந்த விதத்தில் இருக்கும் அது எனது உரிமையும் கூட அதில் இப்படித்த்தான் இருக்க வேண்டும் என்று வகுப்பெடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. :D

  • Replies 54
  • Views 6.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இது தனிப்பட்ட ஒருவரையோ அல்லது போராட்ட இயக்கங்களையோ அவதூறு செய்யும் நோக்கில் எழுதப்பட்டது அல்ல, போராட்டத்தைச் சாட்டி தம் சுயநலத் தேவைகளை நிறைவேற்றும் சிலருக்கு எதிராக எழுதப்பட்ட ஒன்று அந்த வகையில் கடுமையான சொற்பிரயோகங்களை நான் பிரயோகிக்க விரும்பாத போதும் மென்மையான கவிதை இந்தளவுக்கு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்காது. இப்படி உசுபேத்துபவர்கள் அதை தம்மோடு மட்டும் வைத்திருப்பது தான் ஈழத்தமிழருக்குச் செய்யும் உதவி,புண்ணியமாய் அமையும். :icon_idea:

அது உங்கள் தனிப்பட்ட கருத்து மட்டுமே.. அதனாலே அது முடிந்த முடிவு அல்ல..!

திரும்பவும் ஒரு ஆயுதப்போர் வரும் என்று யாராவது சொன்னால் அது ஒரு தனிப்பட்ட கருத்து.. வராது என்று சொன்னால் அதுவும் ஒரு தனிப்பட்ட கருத்து.. போர் வரும் என்று சொல்லாதே என்றால் அது என்ன கருத்து?? :D

புலம்பெயர் அமைப்பு சர்வாதிகாரம் என்று பேசுகிற நீங்களும் அடாவடிதான் செய்கிறீர்கள் என்பது புலனாகின்றது.. :lol:

இதே பதிலை காசியானந்தன் போன்றவர்களுக்கும் சொல்வீர்களானால் மௌனிப்போம்.

அதுவரை இப்படியான கருத்துக்களுக்கெதிரான எதிர்வினை எனக்குத் தெரிந்த விதத்தில் இருக்கும் அது எனது உரிமையும் கூட அதில் இப்படித்த்தான் இருக்க வேண்டும் என்று வகுப்பெடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. :D

நாங்கள் கருத்துக்களைத்தான் பரிமாறிக் கொள்கிறோம் ஜீவா.. அதிகாரம் பண்ணவில்லை.. ஆனால் எதையோ நிறுத்துங்கள் என்று அதிகாரம் செய்தது நீங்கள்தான்.. :lol:

பிரச்சனை என்றவுடன் நாட்டை விட்டு ஓடியவர்கள் ,வசதிக்கு மேலும் நாடு விட்டு நாடு தாவியவர்கள் தமது சுக போகத்தை துறக்க தயாரில்லாதவர்களிடம் இருந்து வேறெதை எதிர்பார்க்க முடியும் .

மக்கள் அவலம் பார்த்தார்களா அல்லது ஒரு அகதி முகாம் எட்டி பார்த்தார்களா இல்லவே இல்லை .

தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் போல தமது தேவைக்கு தேசியத்தை இழுத்து வயிறு வளர்க்கவும் தங்களை நியாயப் படுத்தவும்  எதுவும் பேசுவார்கள் எதுவும் எழுதுவார்கள் .

இவர்களை தாண்டி எமது அரசியல் இப்போ எங்கோ சென்றுவிட்டது .பாவம் காசி .

  • கருத்துக்கள உறவுகள்

அது உங்கள் தனிப்பட்ட கருத்து மட்டுமே.. அதனாலே அது முடிந்த முடிவு அல்ல..!

திரும்பவும் ஒரு ஆயுதப்போர் வரும் என்று யாராவது சொன்னால் அது ஒரு தனிப்பட்ட கருத்து.. வராது என்று சொன்னால் அதுவும் ஒரு தனிப்பட்ட கருத்து.. போர் வரும் என்று சொல்லாதே என்றால் அது என்ன கருத்து?? :D

புலம்பெயர் அமைப்பு சர்வாதிகாரம் என்று பேசுகிற நீங்களும் அடாவடிதான் செய்கிறீர்கள் என்பது புலனாகின்றது.. :lol:

நாங்கள் கருத்துக்களைத்தான் பரிமாறிக் கொள்கிறோம் ஜீவா.. அதிகாரம் பண்ணவில்லை.. ஆனால் எதையோ நிறுத்துங்கள் என்று அதிகாரம் செய்தது நீங்கள்தான்.. :lol:

 

 

உலகத்தமிழர்களால்   உணர்ச்சிக்கவிஞர்  என  அறியப்பட்டவரது பெயரை மாற்றும்  வல்லமை   எவருக்கும் கிடையாது.

இருந்தபோதும்  நாம்  கட்டளைகளைப்பிறப்பிக்கவில்லை.  அவர்களது கருத்துக்களுக்கும் மதிப்பளித்து மிகவும்  நிதானமாகவே  எழுதி  வருகின்றோம். :D

 

 

நான் நினைக்கின்றேன்

இடம்  மாறி  பதியப்பட்டுவிட்டது  என்று. :(

பிரச்சனை என்றவுடன் நாட்டை விட்டு ஓடியவர்கள் ,

வசதிக்கு மேலும் நாடு விட்டு நாடு தாவியவர்கள்

தமது சுக போகத்தை துறக்க தயாரில்லாதவர்களிடம் இருந்து வேறெதை எதிர்பார்க்க முடியும் .

 

 

இது தான்  பொல்லைக்கொடுத்து வாங்கிக்கட்டுவது என்பது....

உங்களுக்கு வெட்கமே இல்லையா????

 

  • கருத்துக்கள உறவுகள்
உலகமெல்லாம்
சில்லறையாய்
சிதறிக்கிடக்கும்
வீரத்தமிழா…!
 
இன
உணர்வே
இல்லாமல்
இருப்பதுதான்
உந்தன்அழகா…!
 
உள்ளம்
உடைந்தது
அன்று..!
 
உதிரம்
கொதித்தது
அன்று..!
 
உச்சி
முதல்
பாதம்
வரை
நரம்புகள்
புடைத்தது
அன்று…!
 
தாய்மாமன்
பூமியெங்கும்
தனலாக
எரிந்தது
அன்று…!
 
இரவு பகல்
தூக்கமின்றி
தவித்தது
தமிழ் கன்று…!
 
அன்றுமுதல்
இன்றுவரை
ஈரக்குலை
அறுக்குதடா;
 
தமிழ்
உணர்வென்னும்
சின்னஞ்சிறு
கண்ணாடித்துண்டு….!
 
வெறிநாய்கள்
வேட்டையாட
தைரியம்
யார் தந்தது;
 
நித்தம் நித்தம்
எண்ணி எண்ணி
மூளைப்புண்ணே
வந்தது…!
 
ஓஓ…
தமிழ்தாயே…!
 
தேவை கருதி வே.ச.மணிகண்டபிரபாகரனின் கவிதையில் ஒருபகுதி 

பிரச்சனை என்றவுடன் நாட்டை விட்டு ஓடியவர்கள் ,வசதிக்கு மேலும் நாடு விட்டு நாடு தாவியவர்கள் தமது சுக போகத்தை துறக்க தயாரில்லாதவர்களிடம் இருந்து வேறெதை எதிர்பார்க்க முடியும் .

 

இயக்கத்தில் இருந்து இயக்கம் தாவியவர்களும் என்றிருந்தால் இன்னும் கொஞ்சம் கூட பூரணமான விவரணமாக இருந்திருக்கும்.

 

மக்கள் அவலம் பார்த்தார்களா அல்லது ஒரு அகதி முகாம் எட்டி பார்த்தார்களா இல்லவே இல்லை .

 

கடைசியாக விடுமுறைச் சுற்றுலா போனபோது ஊர் எப்படி இருந்தது?

 

தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் போல தமது தேவைக்கு தேசியத்தை இழுத்து வயிறு வளர்க்கவும் தங்களை நியாயப் படுத்தவும்  எதுவும் பேசுவார்கள் எதுவும் எழுதுவார்கள் .

 

 

இவர்களை தாண்டி எமது அரசியல் இப்போ எங்கோ சென்றுவிட்டது .பாவம் காசி .

 

கவனம் எங்களை விட்டுவிட்டு கன தூரம் போய்விடாதீர்கள். (எங்களுக்கு ஆபத்து ஒன்றும் இல்லை.  ஆனால் நீங்கள் சென்று சேர்ந்திருக்கும் இடம்  மலைக் cliff ஆகவும் இருக்கலாம் மாலை தீவாகவும் இருக்கலாம் )

<_<

 

நான் மட்டுமல்ல என்னைப்போல் 83 கலவரத்துடன் போராட போன பத்தாயிரம் இளைஞர்களில் அரைவாசிக்கு மேலே நாட்டை விட்டு ஓடிவந்தது --------------.

புளொட்டை விட்டு வெளிக்கிட்டாலும் நாட்டிற்கு தான் போயிருப்பேனே தவிர வெளிநாடு வந்திருக்க மாட்டேன் .

மாற்று இயக்கங்களில் இருந்த பெரும்பான்மையினர் புலிகளின் அராஜகத்தால் தான் புலம் பெயரவேண்டி வந்தது .பல புலிகளும் இதில் அடக்கம் .

உங்களை போல அவர்கள் பிரச்சனை என்றவுடன் ஓடிவந்தவர்கள் அல்ல .

லண்டனில் இருந்து வெளியேறியது மாதத்திற்கு நாலு முறை அவர்களிடம் போய் கையெழுத்து வைத்துக்கொண்டிருக்க முடியாது என்பதால் தான் .

இந்தியா விடுமுறை போனால் அகதி முகாம்கள் போகாமல் வருவதில்லை .இங்கு பதிவிடும் பலருக்கு அகதி முகாம்கள் எங்கிருக்கு என்றே தெரியாது ஆனால் தங்கள் தேவைக்கு நாலு நாடுகள் தாண்டிவிட்டார்கள்


நாட்டை விட்டு ஓடியதை விட பிள்ளைக்கு இப்பவே சீதன கணக்கு பார்பவர்களுடன் எல்லாம் கதைக்க வேண்டியதை நினைக்க தான் விதியை நோக வேண்டிக்கிடக்கு .

Edited by நிழலி
நீக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ  உங்களால் முடிந்தளவிற்கு முயற்சி செய்திருக்கின்றீர்கள் ஜீவா

 

இந்தக் கவிதையால்

 

ஒரு அகதியின் வாழ்வு செழுமையடையுமானால் ...

ஒரு அனாதைக்கு வாழ்வு கிடைகுமானால் .....

ஒரு பயங்கரவாதி போராளியாக மாறூவானானால் ....

 

தொடர்ந்து எழுதுங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

MoonBarking.jpg

 

 

களைத்தவுடன் செல்லுங்கள்.

 

நிலையற்ற கொள்கையுடைய மனிதர்கள். எழுதும் சுதந்திரத்திற்கு ஒர் எல்லையில்லையா. கவிஞனின் கால் தூசிக்குக்கூட அருகதையற்றவர்கள்

 

இங்கு எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் கவிஞரின் திறமை குறித்தோ, அவரின் ஆளுமை குறித்தோ விமர்சிக்கப்படவே இல்லை அவருடைய கருத்துச் சார்ந்த எதிர்ப்பின் விம்பம் இது. இது கூடப் புரிந்துகொள்ள முடியாதவர்கள் எல்லாம் கருத்துச் சொல்வது தான் காலத்தின் கொடுமை.

சிலவற்றைத் தகுதியானவர்களுடன் மட்டும் தான் பேசலாம். நீங்கள் திட்டிவிட்டுப் போய் சாமரம் வீசுங்கள்.

நன்றி வருகைக்கும், கருத்துப்பகிர்விற்கும்.. :)

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா சூரியனைப் பார்த்து வெயிலில் வேகிறவன் திட்டுவான் போ என்று கலைப்பான். நல்ல விளைச்சல் கண்ட விவசாயி புகழ்வான்.. வா என்று அழைப்பான். ஆனால் சூரியன் இவர்கள் இருவருக்காகவும் இங்கே வருவதில்லை..! அது காலத்தின் கோலம். இந்த எளிமையை எல்லோரும் உணர்ந்து விட்டால் போதும்.....மனித மனங்களில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கும்.  :)  :lol:

 super :icon_idea: 

இதுதான் நிதர்சனமான உண்மை. நாங்களும் முடிந்த அளவிற்கு எம்மால் முடிந்ததை செய்வோம். உண்மையான தேசியவாதிகளை துகில் உரிவதை கைவிட்டு  :icon_idea: 

 

யாழ் அன்பு மேற்கோள் காட்டிய எங்கள் கருத்து வெட்டி எடுக்கப்பட்டு.. புலிகளின் அராஜகத்தால் ஒட்டுக்குழுக்கள் வெளிநாட்டுக்கு ஓடின என்ற கருத்து விட்டு வைக்கப்பட்டுள்ளது. ஒட்டுக்குழுக்கள்.. இந்திய இராணுவத்தோடும்.. சிறீலங்கா இராணுவத்தோடும் ஒட்டிக்கொண்ட நல்ல பாதுக்காப்பான நிலையில் தான் இயங்கிக் கொண்டிருந்தன. அவற்றிற்கு கொழும்பில் வவுனியாவில்.. மட்டக்களப்பில்.. திருமலையில்.. நல்ல பாதுகாப்பும் பதுங்கிடங்களும் வழங்கப்பட்ட நிலையில்.. உமாமகேஸ்வரனே கொழும்பு திரும்பி வாழ முடிந்த நிலையில்............. புலிகளின் அராஜகம்.. காரணமாக ஒட்டுக்குழுக்கள் வெளிநாட்டுக்கு ஓடின என்பது சுத்தப் பொய். புலி என்று சொல்லி மக்களைப் போராளிகளைக் கொன்ற குற்றத்தில் இருந்து தப்ப நாட்டை விட்டு ஓடிய ஒட்டுக்குழுக்களே அதிகம். அதுவும் புலிகள் தங்களைப் பழிவாங்கிடுவார்களோ என்ற பயத்தில் குற்றம் செய்துவிட்டு ஓடியவர்களே அதிகம். அண்மை பிரிட்டன் அறிக்கையில்.. சிறீலங்காவைச் சேர்ந்த பல போர்க்குற்றவாளிகளும் அகதி அந்தஸ்துப் பெற்றிருப்பது ஒத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

 

'Nearly 100 war crimes suspects' in UK last year.

 

Suspects originated from countries including Afghanistan, Iran, Iraq, Libya, Rwanda, Serbia and Sri Lanka.

 

http://www.bbc.co.uk/news/uk-23495314

 

இப்ப எல்லாம்.. என்னவோ யாழ் சரிநிகர் பாணியில் வெட்டுக்குத்துக்கு இலக்காகுதோ என்று எண்ணத் தோன்றுகிறது. இது ஜனநாயகம் அல்ல. கருத்தியல் அராஜகம்..! தாங்கள் சரி என்று நினைப்பதை திணிக்கும் தன்மை. இதனால் தான் ஒட்டுக்குழுக்களையும் சரி.. பிற ஒட்டுக்குழுக்களுக்கு வக்காளத்து வாங்கிய ஊடகங்களையும் சரி மக்கள் புறக்கணித்தார்கள்.

 

மேலும் நிழலியிடம் ஒரு கேள்வி.. மேற்படி சூரியன் பற்றிய கருத்தை வெட்டி அகற்ற என்ன தேவை உள்ளது..???! அர்ச்சுன் என்பவர் இங்கு எடுக்கும் புலி வாந்தியை விட்டு வைக்கும் நீங்கள் சூரியன் மீதும்.. விவசாயி மீதும்.. வெக்கையில் அவியுறவன் மீதும் காட்டும் மனிதாபிமானம் புல்லரிக்க வைக்கிறது..???! :lol::D

Edited by nedukkalapoovan

வழக்கம் போல தங்களால் கவிதையின் திசையில் கருத்துக்களை வைத்திருக்க முடியாமைக்கு வருதம்.

 

நான் மட்டுமல்ல என்னைப்போல் 83 கலவரத்துடன் போராட போன பத்தாயிரம் இளைஞர்களில் அரைவாசிக்கு மேலே நாட்டை விட்டு ஓடிவந்தது புலி பயங்கரவாதிகளால் தான் .

 

83ல் வெளியே போனவர்கள் பற்றிய தங்கள் கணக்கு அபாரம்.  ஆனால் இந்த ஒற்றைவரிக் குழப்பத்தை விடுத்து பதில் எழுதுவது முடியாத காரியம்.  கனடா போன்ற நாடுகள் 1984 வரைக்கு இலங்கை அகதிகளுக்கு வீசா இல்லாமல் வரவிட்டிருந்தார்கள். ஆகவே அகதிகள் 83க்கு முன்னர் அங்கு சிரமப்படாமல் போனார்கள்.  பலர் ஐரோபாபாவிலும் கோரியிருந்தார்கள். 83ல் கப்பல் ஏற்றி அனுப்பப்பட்டவர்களால் போராளிகளுக்கு ஆதாயம் வந்தது. இதில் நீங்கள் சொல்லும் யார் பத்தாயிரத்தில் அரைவாசி?. அவர்கள் எந்த இயக்கத்தவர்கள். நீங்கள் புள்ளிவிபரம் எடுக்கும் முலம் இங்கே இணைக்கப்படத்தக்கதா? உங்களை போல சிலர் புலிகளை போட்டுகொடுத்து அகதி நிலை பெற்றார்கள். இது சுய நலம்.  இவர்கள் அவர்கள் பிரச்சனையுடன் ஓடிவராவிடால் புலிகள் இன்னும் இருப்பத்தாலா இலங்கை போய்வாழாமல் கனடாவில் இருக்கிறார்கள்?

 

 

புளொட்டை விட்டு வெளிக்கிட்டாலும் நாட்டிற்கு தான் போயிருப்பேனே தவிர வெளிநாடு வந்திருக்க மாட்டேன் . புளொட்டை விட்டு வெளியேறி சித்தார்த்தன்  எங்கே போய் இருக்கிறார் என்று கேள்விப்பட்டீர்களா? அவருடன் அங்கே இருந்து கூத்தாடியவர்களை புலிகள் கோவில்கட்டி வழி பட்டார்களா?  அப்பாவிகளை பாதளச்சிறைகளில் வைத்திருந்து சித்திரவதை செய்தவர்கள் எப்படி அங்கே இருந்தார்கள்.  இந்தியாவில் இருப்பவர்களில் எத்தனை பேர் வெளியேறி மேற்கு நாடுகள் போனார்கள்? நீங்கள் ஓடிய காரணம் 1). புளொட்டை விட்டு வெளியேறிய ஆபத்தால். அல்லது சொந்த முன்னேற்றத்திற்கு. இதை ஏய்து யார் நம்புவார்கள்?

 

 

மாற்று இயக்கங்களில் இருந்த பெரும்பான்மையினர் புலிகளின் அராஜகத்தால் தான் புலம் பெயரவேண்டி வந்தது .பல புலிகளும் இதில் அடக்கம் .

சிங்கள அரசிடம் இருந்த்து தப்பி ஒடவில்லை என்று வைத்துகொள்வோம். மேலும் நீங்கள் சொல்லும் "அவர்களின் அலுவலில்" கொஞ்சம்தான் வெளியெ வந்தது என்றும் வைத்துக்கொள்வோம். இதில் 1,500,000 அகதிகளுக்கு கணக்குக்காட்டும் பிரச்சனையை முழுவதாக மறந்து விடுவோம்.  ஆனால் அடுத்த தடவை வன்னி இராச்சியத்தை பிடிக்காமல் எல்லோரும் விட்டிவிட்டு ஓடினார்கள் என்று மட்டும் எழுதாதேங்கோ.  மாற்று இயக்கக்காரர்  புலிகள வெளியேற்றியதால் ஓடினார்கள் என்றதுடன் இருந்துவிட்டால் நல்லது. ஏன் ஏன்றால் பின்னர் உங்கள் கணக்கு நம்பர் சேர்ப்பது கஸ்டம். புள்ளிவிபரம் இல்லாமல் கதை கட்டுவது உங்களுக்கு இலகுவான தொழில்.

 

உங்களை போல அவர்கள் பிரச்சனை என்றவுடன் ஓடிவந்தவர்கள் அல்ல . லண்டனில் இருந்து வெளியேறியது மாதத்திற்கு நாலு முறை அவர்களிடம் போய் கையெழுத்து வைத்துக்கொண்டிருக்க முடியாது என்பதால் தான் .

நாலுமுறை கையெழுத்து போட கஸ்ட்டப்பட்டு வெளியேறிவர்கள் தங்கள் வசதிக்காக வெளியேறாமல் போராட்டத்தில் உயிர் கொடுக்க வெளியேறினார்கள் எங்கிறீர்களா?

 

இந்தியா விடுமுறை போனால் அகதி முகாம்கள் போகாமல் வருவதில்லை .இங்கு பதிவிடும் பலருக்கு அகதி முகாம்கள் எங்கிருக்கு என்றே தெரியாது ஆனால் தங்கள் தேவைக்கு நாலு நாடுகள் தாண்டிவிட்டார்கள்.

இந்தியாவில் வைத்து திருநாவுகரசர் கயிலையை கண்டமாதிரியா இலங்கை அகதிகள் முகாம்களை கண்டு அதைபற்றி எழுதினீர்கள்? அதே நேரம் மற்றவர்கள் இலங்கை அகதிகள் முகாமை பார்க்க வில்லை என்று எழுதினீர்கள்? சரிதான் புலிளால் ஓடிவந்தோருக்கு வன்னி போய் உண்மையாக நிலைமைகளை பார்த்துவிட்டு வர என்ன தடங்கல்?


நாட்டை விட்டு ஓடியதை விட பிள்ளைக்கு இப்பவே சீதன கணக்கு பார்பவர்களுடன் எல்லாம் கதைக்க வேண்டியதை நினைக்க தான் விதியை நோக வேண்டிக்கிடக்கு .

உழைச்சு சேர்ப்பவன் பிள்ளைக்கு சீதனம் கொடுப்பான். மூவி,விளையாட்டு, ரூர், பியர்....... பணம் போய்முடிய மற்றவனைப் பார்த்துப் பொறாமைப்பட்டால் அவர்கள் தாயக மக்களுக்காக வாடி, வருந்துகிறார்கள் என்்தா கருத்து? இது  விதியின் சரியான கொடுமையாகத்தான் இருக்கிறதே

 

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

காசி அண்ணன்.. தன் ரூட்டில போய்க்கிட்டு இருக்கிறார். ஜீவா தன் ரூட்டில போய்க்கிட்டு இருக்கிறார். பாவம் அவரின் தற்போதைய இலக்குகள்.. சீமான்.. வைகோ ஐயா.. நெடுமாறன் ஐயா.. காசி அண்ணன்.

 

இது தான் நாங்கள் இத்தலைப்பில் உணர்ந்து கொண்டது.

 

இதில் புலி வாந்தி எடுக்க காத்திருப்போர் சந்தியில் சிந்து பாடுகின்றனர். அதில் ஜனநாயகம் வளர்க்க நிழலி தலை கீழாக நின்று கருத்துக்களை வாசித்து வெட்டுகிறார். அவ்வளவும் தான். இப்ப யாழின் பல அரசியல் தலைப்புக்கள் இப்படித்தான் போய்க்கிட்டு இருக்குது. எங்கும் புலி வாந்தி...! ஓர் இடத்திலும் ஆரோக்கியமான ஆக்கபூர்வமான கருத்தாடலுக்கு இடமளிக்கப்படுவதில்லை..! :icon_idea::lol:

இப்ப யாழின் பல அரசியல் தலைப்புக்கள் இப்படித்தான் போய்க்கிட்டு இருக்குது. எங்கும் புலி வாந்தி...! ஓர் இடத்திலும் ஆரோக்கியமான ஆக்கபூர்வமான கருத்தாடலுக்கு இடமளிக்கப்படுவதில்லை..! icon_idea.giflaugh.png

 

உண்மை நெடுக்ஸ் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
லண்டனில் இருந்து வெளியேறியது மாதத்திற்கு நாலு முறை அவர்களிடம் போய் கையெழுத்து வைத்துக்கொண்டிருக்க முடியாது என்பதால் தான் .

 

 

அதெண்டால் உண்மைதான்......அடிக்கடிபோய் சைன்வைக்கிறதுக்கு நாங்கள் என்ன கிரிமினல் கேசிலையே இருக்கிறம்? எங்கடை குலமென்ன கோத்திரமென்ன கோட்டுசூட்டென்ன நாங்கள் வாய் கொப்புளிக்கிறதே பன்னீரிலைதான்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நான் மட்டுமல்ல என்னைப்போல் 83 கலவரத்துடன் போராட போன பத்தாயிரம் இளைஞர்களில் அரைவாசிக்கு மேலே நாட்டை விட்டு ஓடிவந்தது --------------.

புளொட்டை விட்டு வெளிக்கிட்டாலும் நாட்டிற்கு தான் போயிருப்பேனே தவிர வெளிநாடு வந்திருக்க மாட்டேன் .

மாற்று இயக்கங்களில் இருந்த பெரும்பான்மையினர் புலிகளின் அராஜகத்தால் தான் புலம் பெயரவேண்டி வந்தது .பல புலிகளும் இதில் அடக்கம் .

உங்களை போல அவர்கள் பிரச்சனை என்றவுடன் ஓடிவந்தவர்கள் அல்ல .

லண்டனில் இருந்து வெளியேறியது மாதத்திற்கு நாலு முறை அவர்களிடம் போய் கையெழுத்து வைத்துக்கொண்டிருக்க முடியாது என்பதால் தான் .

இந்தியா விடுமுறை போனால் அகதி முகாம்கள் போகாமல் வருவதில்லை .இங்கு பதிவிடும் பலருக்கு அகதி முகாம்கள் எங்கிருக்கு என்றே தெரியாது ஆனால் தங்கள் தேவைக்கு நாலு நாடுகள் தாண்டிவிட்டார்கள்

நாட்டை விட்டு ஓடியதை விட பிள்ளைக்கு இப்பவே சீதன கணக்கு பார்பவர்களுடன் எல்லாம் கதைக்க வேண்டியதை நினைக்க தான் விதியை நோக வேண்டிக்கிடக்கு .

 

இப்படி ஏதோ மக்களில் அக்கறை உள்ளவர்கள் போல் எழுதுவீர்கள்.பின்னர் " ஏன் பிரபாகரன் பங்கருக்குள் இருந்தார் " என நக்கலுடன் எழுதுவீர்கள்.உங்களின் பம்மாத்தை அனைவரும் அறிவோம்.

Quote:"புளொட்டை விட்டு வெளிக்கிட்டாலும் நாட்டிற்கு தான் போயிருப்பேனே தவிர வெளிநாடு வந்திருக்க மாட்டேன்"

 

புளொட்டில் சேர முதல் எங்கே இருந்தீர்கள்? :lol:  :lol: சும்மா அளக்காதீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறான் ஜீவா அவர்கள் ஆயுத போராட்டத்தை இங்கே கொச்சைப்படுத்த வில்லை

ஆனால் தொடர்ந்தும் புலிகள் வருவார்கள் திருப்பி அடிப்பார்கள் என்று கூறி மீண்டும் மீண்டும் மக்களை முட்டாளாக்கும் இப்பிடியான செயல்களை தான் எதிர்கின்றார்

நியாயமான ஆதங்கம் தானே......

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்று உச்சரிக்கவே கூடாது என்ற சட்டம் போட்ட இடத்தில் நின்று தமிழீழத்தை உச்சரிப்பது மட்டுமல்ல.. அதன் தேவை நோக்கம்..அவசியம் இவற்றை தமிழக இளைஞர்கள்.. படைப்பாளிகள் மத்தியில் இன்றும் விதைப்பவர்கள் ஒரு சிலரே..! அவர்களில் காசி அண்ணனும் ஒருவர்.

 

சிங்களவனோடு இணக்க அரசியலும்.. இணங்கிப் போதலும்.. என்று அடிமைத்தனத்திற்கு சோரம்போதலுக்கு.. அழகு வசனங்கள் சேர்க்காமல்.. ஐக்கிய சிறீலங்கா.. ஒன்றுப்பட்ட நல்லிணக்கம்.. சமாதானமும் சகோதரத்துவமும்.. என்று சாணக்கிய கனவான் அரசியல்பேசி.. சிங்கக் கொடியை தூக்கினால்.. சிங்களத்தை படித்துவிட்டால்.. சிங்களச் சிப்பாயை திருமணம் செய்துவிட்டால்.. சிங்களவனை நடுவீட்டில் குடியிருத்தி விட்டால்.. தமிழன் சுதந்திரம் அடைந்து விடுவான்.. உரிமை பெற்றுவிடுவான் என்று நம்ப வைக்க முனையும்.. கொலை.. கொள்ளைக் கூட்டத்தினரிலும் பார்க்க.. காசி அண்ணன் தனது இந்தப் பேச்சில் வெளிப்படுத்திய ஆதங்கம் ஒன்றும் மிகையான ஒன்றாகத் தெரியவில்லை..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதோ கவிஞரின் அந்தப் பேச்சு.. அந்தில் எவ்வளவோ அர்த்தபுஷ்டியான விடயங்கள் இருக்குது. அதனை கேட்டுத் தெளிவது நல்லது. தமிழனை அடித்த சிங்களவனை தமிழக மன்னர்கள் வந்து அடித்த வரலாற்றை உண்மையில் கவிஞர் வாயால்  நேற்றுத் தான் கேட்டு அறிகிறேன்.துட்டகைமுனு எல்லாளனை வென்றான் (அதுவும் வயதான நிலையில்.. ஒண்டிக்கு ஒண்டி போர் என்று அழைத்து கோழைத்தனமாக சூட்சியால் வென்றிருக்கிறான்.. இன்று உலக நாடுகளில் தமிழர்களின் போராட்டத்தை சர்வதேச பயங்கரவாதம் என்பதாகக் காட்டி அதன் கீழ் உலக வல்லாதிக்கங்களை ஒன்றிணைத்து சர்வதேசத்தை ஏமாற்றி அதன் ஆதவரோடு ஆயுதங்களை வாங்கி சலுகைகளைப் பெற்று அவற்றை தமிழன் தலையில் கொட்டி.. தமிழர்களை அழித்தது போல.. அதனை தனது வெற்றியாகச் சிங்களம் காட்டித் திரிவது போலவே துட்டகைமுனுவின் வெற்றியும் உள்ளது.) மட்டுமே எமக்கு சிங்களம் வரலாறாகக் கற்க வைச்சிருக்கிறது என்ற வேதனை தான் விஞ்சியது..!

 

நன்றி கவிஞரே தங்கள் மேன்மை தங்கிய வரலாற்றுக் கருத்திற்கு.

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்று உச்சரிக்கவே கூடாது என்ற சட்டம் போட்ட இடத்தில் நின்று தமிழீழத்தை உச்சரிப்பது மட்டுமல்ல.. அதன் தேவை நோக்கம்..அவசியம் இவற்றை தமிழக இளைஞர்கள்.. படைப்பாளிகள் மத்தியில் இன்றும் விதைப்பவர்கள் ஒரு சிலரே..! அவர்களில் காசி அண்ணனும் ஒருவர்.

 

தமிழக மக்களுக்கு மறதி மிகமிக அதிகம், அது மட்டுமல்ல, ஒரு துயரத்திற்குப் பின் அடுத்த துயரம் என்று வந்துவிட்டால் முன்னதை கிடப்பில் போட்டுவிடுவர். அப்படிப்பட்ட மக்களிடம் ஈழத்தின் துயரம், வலியை  ஈழத்தில் கொடுமையை அனுபவித்தவர்களின் அனுசரனுடனேயே ஈழ தார்மீக ஆதரவு தளத்தை இங்கே உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

என் எழுத்துக்கள் ஆயிரம் பேரைப் போராளியாக்கியது

அவகளை உலகம் பயங்கரவாதியாக்கியது..

என் உணர்ச்சிப் பாடல்கள் ஆயிரமாயிரம் பேரைப்

போர்க்களமேவச் செய்தது - மாவீரராக்கி

அவர்தம் குடும்பத்தை அநாதையாக்கியது..

என் சிந்தனைச் சிதறல்கள் குஞ்சு குருமனையெல்லாம்

அழித்து எம் குலப்பெண்டிரைக் கைம்பெண்ணாக்கியது

எஞ்சியவர்களை அகதியாக்கியது..

மாபெரும் வீரனை முருகனாய் பாவனை செய்து

முள்ளிவாய்க்காலில் கோம(வ)ணக் கடவுளாக்கினேன்..

இதற்கு  என்ன  அர்த்தம்  சுண்டல்????

எழுதினால்  நாங்களும் புரிந்து  கொள்வோமில்லை............ :(

 

 

நான் நினைக்கிறான் ஜீவா அவர்கள் ஆயுத போராட்டத்தை இங்கே கொச்சைப்படுத்த வில்லை

ஆனால் தொடர்ந்தும் புலிகள் வருவார்கள் திருப்பி அடிப்பார்கள் என்று கூறி மீண்டும் மீண்டும் மக்களை முட்டாளாக்கும் இப்பிடியான செயல்களை தான் எதிர்கின்றார்

நியாயமான ஆதங்கம் தானே......

 

 

 

அகிம்சைப் போராட்டம் அதன் பின்னால் தொடங்க இருந்த ஆயுத போரட்டத்திற்கு அடி கோலியிருந்தது. ராஜதந்திர போரட்டத்திற்கு வழிகோலிவிட்டுபோராளிகள் ஆயுதங்களை மௌனித்தார்கள். ஒன்று இல்லாமல் மற்றயது வந்திருக்க முடியாது. மொட்டு இல்லாமல் பூவராது, பூ இல்லாமல் பிஞ்சு வராது. ஆயுத போராட்டத்தை இழிவு படுத்துவது தமிழருக்கு உரிமை தேவை இல்லை, அவர்கள் தங்களைதான் தேவை இல்லாமல் அழித்தார்கள் என்பது போலானது.

நன்றி : மல்லை ஊரான் அண்ணா

http://www.yarl.com/forum3/index.php?app=forums&module=post&section=post&do=reply_post&f=37&t=105149&qpid=919741

 

Edited by விசுகு

இதோ கவிஞரின் அந்தப் பேச்சு.. அந்தில் எவ்வளவோ அர்த்தபுஷ்டியான விடயங்கள் இருக்குது. அதனை கேட்டுத் தெளிவது நல்லது. தமிழனை அடித்த சிங்களவனை தமிழக மன்னர்கள் வந்து அடித்த வரலாற்றை உண்மையில் கவிஞர் வாயால்  நேற்றுத் தான் கேட்டு அறிகிறேன்.துட்டகைமுனு எல்லாளனை வென்றான் (அதுவும் வயதான நிலையில்.. 

 

இதில் அர்த்த புஸ்டி இல்லை. சிங்களவனை அடிப்பது, தமிழனை அடிப்பது என்றெல்லாம் அந்தக் காலத்தில் இருக்கவில்லை.  ராஜராஜன், ராஜேந்திரன் போன இடங்களில் எல்லாம் சிங்கள-தமிழ் சண்டைகள் இருக்கவில்லை. கங்கை கொண்ட சோழபுரக்கோவில், தஞ்சைக் கோவிலை சிங்களவனை அடிக்க கட்ட வில்லை. நம்பியாண்டார் நம்பியை  வைத்து தேவாரங்களை வகுத்தது சிங்களவரை அடிக்க இல்லை.

 

யாழ்பாணத்தில் நான் இருந்த போது நெப்போலியனை, அலெக்சாண்டரை, ராஜராஜ சோழனை ஒப்பிட்டு ஒரு கட்டுரை படித்திருந்தேன். மேற்குலகால் தூதிக்கப்படும் நெப்போலியன், நிறைதூளி அழிவுகளை செய்தபின்னர், வீடு திரும்ப முன்னர் தோல்வி பரிசுக்குப் போய் பரிசை அடிமை கொண்டுவிட்டடது. மாகஅலெக்சாண்டர் வீடே திரும்ப முடியவில்லை. ஆனால் தான் இறந்த பின்னர் 400 அண்டுகள் சோழ இராச்சியம் வீரத்தில் மட்டுமல்ல, கலையில், தமிழில் மட்டுமல்ல, ஆன்மீகத்தில் மட்டுமல்ல, பொருளாதாரம்,  பண்பாடு என்று எதிலுமே பின்வாங்காத சாம்ராச்சியமாக இருந்தது சோழப்பேரசு. இதை செய்த மன்னனை தமிழனை அடித்த சிங்களவனை அடிக்கத்தான் இலங்கை வந்தான் என்று சரித்திரம் மீது ஒரு தூய்மையான உணர்வில்லாமல் பேசுவது அர்த புஸ்டியான பேச்சல்ல.  தமிழ் நாட்டில் கருணாநிதி போன்ற துரோகிகள் மீது பாவிக்கப்படும் இந்த பேச்சுக்களை அவசரம் அவசரமாக இறக்குமதி செய்ய கூடாது. இலங்கை பேச்சுதந்திரம் இல்லாத நாடு. வருத்தகாற பிள்ளைக்கு பத்து தாம்பாளத்தில் விருந்து படைக்க கூடாது. எதற்கும் வைத்தியரின் பத்தியத் தெளிவு தண்ணி முடிய வேண்டும். பிறகு ரஸ்க் விசுக்கோது. உதயன் போன பாதையில் போய்  தேர்தலை பழுதாக்க கூடாது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர் என்கிற கருத்தாக்கம் சில நூறு ஆண்டுகள் மட்டும்தான் பழமையானது.. ஆனால் அவர்கள் தங்களுக்கான ஒரு தேசியம் உண்டென்று ஆக்கிக் கொண்டுவிட்டார்கள்..! ஆனால் தமிழர்களில் சிலர் பல நூற்றாண்டுகள் பழமையான தமது தேசியத்தை எள்ளி நகையாடுவதைக் காண்கிறோம்.. சிங்களவரும் தமிழ் தேசியத்தை மறுக்கிறார்கள்..! (கொடுமைடா..)

மற்றும்படி தமிழக மன்னர்களிடம் இலங்கை ராச்சியங்களின் அரசர்கள் காலத்திற்குக் காலம் உதவிக்குச் சென்றது வரலாற்று உண்மை.. தமிழ் மன்னர்களும் போனார்கள்.. சிங்கள மன்னர்கள் என்று சிங்களவர்களால் இன்று கொண்டாடப்படும் மன்னர்களும் சென்றார்கள் என நினைக்கிறேன்.. இராவண சக்தி இயக்கத்தால் வருங்காலத்தில் இராவணனும் சிங்கள மன்னனாகிவிடுவான்..

  • “உடல்கீறி விதை போட்டால்

    உரமின்றி மரமாகும்

    கடல் மீது

    வலை போட்டால்

    கரையெங்கும் மீனாகும்.

    இவளின் சேலையைப் பற்றி

    இந்தா ஒருவன்

    தெருவில் இழுக்கின்றான்

    பார்த்துவிட்டுப்

    படுத்துறங்குபவனே!

    நீட்டிப்படு.

    உனக்கும் நெருப்பூட்டிக் கொளுத்த

    அவனுக்கு வசதியாக இருக்கட்டும்.

    ‘ரோஷ’ நரம்பை

    யாருக்கு விற்று விட்டுப்

    பேசாமற் கிடக்கின்றாய்?”

-:புதுவையார் :-

 

அஞ்சலியாய்

 

ஈழக் கவியரசே

நீயும் என்ன

பாவம் செய்தாயோ

நானறியேன்

ஈழத்தமிழனாய்

நீ பிறந்ததை தவிர

எம்மின மக்களை

எவனும் மதிக்கவில்லை

இந்த உலகில்

சிங்களவனாவது

பறவாயில்லை

தமிழனை மிருகமாய்

மதித்து சுட்டுக்

கொல்கிறான்

 

http://eelavarkural.blogspot.co.uk/2009/10/blog-post_24.html

Edited by தயா

Quote: "இந்தக் கவிதைக்கான புன்னூட்டங்களைப் ( :lol:  :lol:) பாருங்கள் உறவுகளே.. 75_75.gif
http://www.yarl.com/...howtopic=126402 "
 

from

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=21433

 

 

அக்காச்சிக்கு மட்டும்தான் கவிதை விளங்கவில்லை :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.