Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாணரின் சுய தரிசனம்- இறுதிப்பாகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Elderly%20man%20in%20an%20old%20age%20ho

 

அது பகலா அல்லது இரவா என்று வாணருக்குத் தெளிவாகத் தெரியவில்லை.

 

ஆனாலும், யாழ்தேவியில் இருந்து பிள்ளைகள் வந்திருந்த படியால், அது பின்னேரம் என்று நினைத்துக்கொண்டார். அவர் ‘அடங்கிப்' போனார் என்று பரியாரியார் எல்லாருக்கும் சொல்லிக்கொண்டிருந்தது,வாணருக்குத் தெளிவாகக் கேட்டது. இந்த ‘அடக்கம்' வருவது அவருக்கு மூன்றாவது முறையாகும். அவருக்கு ஒரே ஒரு ஆம்பிளைப் பிள்ளையும், இரண்டு பொம்பிளைப்பிள்ளைகளும் உண்டு. எல்லாரும் கலியாணம் கட்டிப் பிள்ளை குட்டிகளோட கொழும்பில் தான சீவியம். .கண்கள் மூடிய நிலையில் இருந்தாலும், தனது உடல், பூவரசம் மரத்தால் செய்யப்பட்ட , தலைமாடும், கால்மாடும் இல்லாத ஒரு கட்டிலில் வளர்த்தப் பட்டிருப்பது அவருக்குத் தெரிந்தது. அத்துடன், அவரால் வெளியில் நடக்கும் சம்பவங்களை, நேரில் பார்க்கக் கூடியதாகவும் இருந்தது. அட, இதைத் தான், மரணம் என்று சொல்லுகின்றார்களோ என்ற சிந்தனையிலும், அவருக்கு ஒரு சிரிப்பு வந்தது. ஆனால், அருகிலிருப்பவர்களிடம் இருந்து ஒரு விதமான சத்தமும் வராததால், தனது ‘உதடுகள்' உண்மையில் சிரிப்பை வெளிப்படுத்தவில்லை ன்று அனுமானித்துக் கொண்டார்.

அப்போது பரியாரின் விளக்கம் தெளிவாகக் கேட்டது.

 

இஞ்சை பாருங்கோ, வாதம், பித்தம், சிலேட்டுமம் என்ற மூண்டிலையும், வாதமும், பித்தமும் விழுந்து போச்சு. இப்ப தனியச் ‘சிலேட்டுமத்தில' மட்டும் தான் ‘உயிர்' தொங்கிக்கொண்டிருக்கு. போன முறை, அடங்கேக்க, வாதம்' விழுந்து போகப் ‘பித்தம்' கொஞ்சம் ஓடிக் கொண்டிருந்தது.

 

பரியாரிக்கு வாணரில கனகாலத்துக் ‘கறள்' ஒண்டு இருக்குது எண்டு வாணருக்குத் தெரியும். பெரிசா ஒண்டுமில்லை. அவன் சின்னப் பெடியனா இருக்கேக்கை, ஒரு கலியாண வீட்டுக்கு வாணர் கூட்டிக்கொண்டு போய், அங்கை வடிவாச் சாப்பிட்ட பிறகு, வாசல்ல போற ஆக்கள் ‘மொய்' எழுதிறதைப் பாத்த பரியாரியும்,அதென்ன எண்டு கேக்க, வாணரும், ஆக்கள் சாப்பிட்டதுக்குக் காசு குடுக்கினம் எண்டு சொல்லவும், பொக்கற்றில்லாத காச்சட்டையோட நிண்ட பரியாரியாரும், காவோலை  வேலிக்கிள்ளால பூந்து வெளியால ஓடேக்கிள்ள, முதுகில வேலிக்கருக்குப் பிளந்து போட்டுது. வடுவா, இவ்வளவு காலமும் அதை மறக்காம வைச்சிருக்கிறான் எண்டு கறுவிக்கொண்டார்.

 

வாணருக்குத் தாய், தகப்பன் வைச்ச பெயர் அம்பலவாணர். அந்தக்காலத்திலேயே கொஞ்சம் நவீனமான சிந்தனையுள்ளவர் எண்ட படியால, அம்பலத்தைத் தூக்கி வெளியால போட்டிட்டார். அதோட, அவர் நிரந்தரமாய்ச் செய்த தொழிலும், ஊரில உள்ள ஆக்களிட்டை, ஆட்டுக்குட்டியள வாங்கி, மாதத்தில ஒருக்கா வாற முஸ்லிம் வியாபாரியளின்ர லொறியில. மொத்தமா ஏத்தி அனுப்பறது தான். அந்தத் தொழிலையும் செய்துகொண்டு, அம்பலத்தின் பெயரையும் காவிக் கொண்டு திரியிறது, அவ்வளவு பொருத்தமாக அவருக்குப் படவில்லை.

 

‘அப்புவை நினைச்சாப் பெரிய கவலையாக்கிடக்குது, என்று மகன் சொல்வது அவருக்குத் தெளிவாகக் கேட்டது. நான் காசைக் கையில குடுக்கிற நேரமெல்லாம், அப்புவும் ‘வேண்டாம், மகனே, எனக்கென்னப்பு குறை?, நீ தான் வச்சுக்கொள்ளு' எண்டு வாங்கவே மாட்டார் என்று சொல்லிக்கொண்டிருந்தான்.

 

மகன் ஒரு முறை திருவிழாவுக்கு வந்த நேரம், அவன் கோவிலுக்குக் கட்டிக்கொடுத்த ‘மணிக்கூண்டுக் கோபுரம்’, அம்பலவாணர் உபயம், என்று சிவப்பு நிற எழுத்துக்கள்  சூரிய ஒளியில் மின்னிய படி நின்று கொண்டிருந்தது் .

 

வாணருக்கும்  ஆட்டு லொறி வரப்பிந்தினதாலும்,, ஊரில கொஞ்சம் முன்பணம் கொடுத்து ஆடுகளை ‘புக்' பண்ணி வைச்சிருந்ததாலும், கொஞ்சம் காசு தேவைப்பட்டது. ஊருக்கிள்ள ஆரிட்டையும் கொஞ்சக்காசு கடன் கேட்கலாம் எண்டாலும், மகனின்ர ‘கௌரவமும்' அந்தக் கடனில் தொங்கிக்கொண்டிருந்த படியால் ஒருவரிடமும் வாய் திறந்து கேட்க முடியவில்லை. எனவே, துணிந்து மகனிடம் ‘தம்பி, கொஞ்சம் காசு தேவைப்படுகுது, லொறி வந்த உடன கொழும்புக்கு அனுப்பி விடுகிறன் என்று கேட்டுப்பார்த்தார்,

 

அப்பு, இப்ப தான் கோவில் காசு குடுத்திட்டு நிக்கிறன். நீங்கள் லொறியைக் கொஞ்சம் கெதிப் பண்ணி வரச்சொல்லுங்கோ, என்று சொன்னபடி போய் விட்டான்.

 

அப்போது, யாரோ மூக்கைச் சீறி எறியும் சத்தம் கேட்டது.மகன் அழுகிறான் போலும். மீண்டும் தனக்குள் சிரித்துக்கொண்டார்.

 

யாரோ அருகில் சுருட்டுப் பிடிக்கும் வாசம் வந்தது. அவருக்கும் ஒண்டைப் பத்தவைச்சால் நல்லம் போல கிடந்தது.

 

௦௦௦௦௦௦                        ௦௦௦௦௦௦                            ௦௦௦௦௦௦                               ௦௦௦௦௦௦                        ௦௦௦௦௦௦                            ௦௦௦௦௦௦                                   ௦௦௦௦௦௦                        ௦௦௦௦௦௦                            ௦௦௦௦௦௦

 

உடனேயே தான் இப்போது ‘அடங்கிப்போய்' இருப்பது் நினைவுக்கு வரவும், கொஞ்சம் மூச்சை இழுத்து ஆழமாக விட்டுக் கொண்டார். சுருட்டுப் புகை, உள்ளே போனதோ இல்லையோ, உடம்பில் கொஞ்சம் 'புத்துணர்வு' திடீரெனப் பாய்ந்த மாதிரி இருந்தது.  தனது புத்தியை நினைக்க அவருக்குப் பெருமையாக இருந்தது. இந்த 'நரிப்புத்தி' அவருக்குப் பல விதங்களில், பல தடவைகளில் உதவியிருக்கின்றது. .

 

‘மனுசனுக்குச் சமைக்கவே தெரியாது.  நான், இரண்டாவதை வயித்தில வைச்சிருக்கிற நேரம், மனுசன் கறி வைக்க வெளிக்கிட்டு,கறிக்குள்ள போட்ட மீனெல்லாம் கரைஞ்சு போய்த் தனிய முள்ளு மட்டும் தான் கறியிக்கை மிஞ்சிக்கிடந்தது. அதுக்குப் பிறகு மனுசனை அடுப்படிப்பக்கம் நான் விடறதேயில்லை. இப்ப கூட, சாரதாக்கா வீட்டிலையிருந்து தான் மனுசனுக்குச் சாப்பாடு போறது' எண்டு வாணரின் மனுசி, அங்குள்ளவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்ததும் வாணருக்குத் தெளிவாகக் கேட்டது.

 

அட, நான் திரும்ப எழும்பவே மாட்டன் எண்டு எல்லாரும் நினைச்சுக்கொண்டினம் போல கிடக்கு. இந்த முறை, முழிச்சு எழும்பட்டும். எல்லாருக்கும் செய்யிறன் வேலை, எனத் தனக்குள் சொல்லிக்கொண்டார். வாணரும் அந்த நாளையில லேசுப்பட்ட ஆளில்லை. பழி வாங்கிற குணம் அவரோட கூடப்பிறந்தது.

 

வாணரின்ர மனுசி, எப்ப சமைக்கிறதை நிப்பாட்டினது எண்டு வாணருக்குச் சரியாக நினைவுக்கு வரவில்லை. இரண்டாவது மகளின் கலியாணம் முடிஞ்ச கையோடையா அல்லது மூத்த மகளுக்குக் பேரன் பிறந்த கையோடையா என்று கண்டு பிடிக்கக் கொஞ்ச நேரம் முயன்று, பின்னர் அந்த முயற்சியைக் கைவிட்டார். திடீரென ‘அம்மாவுக்கு'  எல்லாப் பிள்ளையளின்ர வீட்டிலையும், திடீர் கிராக்கி ஏற்பட்டதும், ‘இனி, அப்புவுக்குத் தனிய உலை வைக்கிறதா? வீட்டை வந்து சாப்பிடுவார் தானே என்ற சமாதானமும் கூறப்பட்டது நினைவிருக்கின்றது. கொஞ்ச நாள், பிள்ளையளின்ர வீட்டை போய்ச் சாப்பிட்டுப் பார்த்தார். பல நாட்களில்,அவரது ஆடு பிடிக்கிற தொழிலால், அவருக்குச் சாப்பாட்டு நேரத்துக்கு வீட்டுக்குப் போக முடியாமல் போய்விடும் அல்லது ஆரோடையும் தவறனைக்குள்ள உள்ளிட்டால், நேரம் போறது தெரியாமல் போய்விடும்.  அவ்வாறு போகும் போது, மக்களின் பார்வையில், பல அர்த்தங்கள் தெரிவதாக அவர் உணர்ந்தார். தன்னால, இனிப் பிள்ளையளுக்குக் ‘கரைச்சல்' வரக்கூடாது என்று தானே சமைக்கத் துவங்கியது நன்றாக நினைவிருக்கின்றது. பிறகு பேரப்பிள்ளையளும் வளர, மனுசியும் கொழும்புக்காறியாப் போச்சுது. அவருக்கும் கொழும்புக்குப் போய்ப் பிள்ளை குட்டியளோட இருக்க இடைக்கிடை ஆசை வந்து போகும். ஆனால், ஒரு பிள்ளை கூட, அப்பு, என்னோட வந்து இருக்கலாம் தானே, என்று இதுவரை வாய் திறந்து கேட்கவில்லை. அது மனுசியின்ர பிழையா, பிள்ளையளின்ர பிழையா, தன்ர வளர்ப்புப் பிழையா, அல்லது மொத்த ஆண்குலத்தின்ர பிழையா என்ற கேள்வியைப் பல தடவைகள் தன்னைத் தானே கேட்டிருப்பார்! இரவு நேரங்களில், நாய் குலைச்சு, நித்திரை முறிஞ்சிட்டுது எண்டால், இப்படியான நினைவுகள் வந்து மனதை அரிப்பதுண்டு. மனித உடலுக்கு வயது போனாலும், மனித உணர்வுகளுக்கு வயது போவதில்லை என்பதை அனுபவத்தில் புரிந்து கொண்டார்.

 

இந்தக் கண்றாவியைக் காணப் பொறுக்காமல் தான் ‘சாரதாக்கா' தனக்குச் சமைக்கிறதில கொஞ்சத்தை அவருக்குக் கொண்டுவந்து கொடுக்கிறது.

வாணரும், இடைக்கிடை மீன், மரக்கறி எண்டு வாங்கிக் கொடுப்பதுண்டு. இந்தக் கதைக்குத் தான் வாணரின் மனுசி, கை, கால், மூக்கெல்லாம் வைச்சுத் தனது குற்றவுணர்வில் இருந்து விடு படுகிறதுக்குக் கதை புனையுது என்று அவருக்குப் புரிந்தது.

 

நாங்கள் அப்புவோட இருந்த காலத்திலை, ஒரு நாள் கூடக் கடைக்குப் போய், அரிசி வாங்கினது கிடையாது. அப்புவின்ர வயல்ல இருந்து, மூட்டை, மூட்டையாத் தான் நெல்லு வாறது. மனுசனும், நெடுக ஏதாவது ஒரு முயற்சி பண்ணிக்கொண்டே இருக்கும். இல்லாவிட்டால், எங்க இரண்டு பேருக்கும், சீதனமும் தந்து, ‘முதலாளி' மாப்பிள்ளையளாப் பாத்துக் கட்டி வைச்சிருக்க ஏலுமே. கடைசிக் காலமெண்டு, எங்களோட வைச்சிருந்து பாக்க எங்களுக்குத் தான் கொடுத்து வைக்கேல்ல. அவரைக் கொழும்புக்கு வாங்கோ, வாங்கோ எண்டு ஒவ்வொரு முறை வரேக்கையும் அவரிட்டைக் கேக்கிறனாங்கள். பிள்ளை நான் ‘காம்பறாக்குள்ள' இருந்து எப்படிச்சீவிக்கிறது எண்டு சொல்லி மாட்டனெண்டு சொல்லிப்போடுவார். ஒருவரும் கேட்காமலே, இரண்டு மகள்மாரும் தங்களுக்கிடையே பேசிக்கொள்வதும் வாணரின் செவியில் விழுந்தது. இப்போது ஏறத்தாள ஒரு ‘மரத்துப் போன' நிலைக்கு அவர் வந்திருந்தார். காரணமில்லாமல், பட்டினத்தார் நினைவில் வந்து வந்து போகத் தொடங்கினார்.

 

அந்த நேரம் பார்த்துப் பரியாரியார் கிட்ட வந்து அவரது கையைத் தூக்கிப் பாத்தார். இப்ப ‘சிலேட்டுமமும்' விழுந்து போச்சுது போல கிடக்கு. இனி, ஆள் தப்பாது. மகனோட ஒருக்காத் தனிய கதைக்கவேணும் என்று சொல்வது தெளிவாக வாணருக்குக் கேட்டது. பின்னர், பரியாரி எதையோ மகனிடம் சொல்லவும், மகனும் மூண்டாந்தரமாய் , கடை, கிடை எல்லாத்தையும் விட்டிட்டு வந்திருக்கிறம்.  இனியும் , அப்பு எழும்புவார் எண்டு எங்கள்ள ஒருத்தருக்கும் நம்பிக்கையில்லை. ஏதோ, நீங்க செய்யிறதைச் செய்யுங்கோ எண்டு சொல்வது கேட்டது.

 

பிறகு பரியாரியும், உரத்த சத்தத்துடன் ‘நல்லா ஆண்டு அனுபவிச்ச மனிசன். எல்லா நாடியும் விழுந்துபோன பிறகும், மனிசன்ர உயிர் என்னும் போகாமல் இருக்குதெண்டால், ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும். நான், என்ர அனுபவத்தில, இப்பிடிக் கன பேரைக் கண்டிருக்கிறன்.’ மண் ஆசை' மட்டும் மனுசன்ர உயிரைப் போகவிடாமல் பிடிச்சுக் கொண்டிருக்கு. பாலுக்குள்ளை, கொஞ்சம் மண்ணைப் போட்டுப் பிள்ளையள் பருக்கி விடுங்கோ! மனிசன் சந்தோசமாய்ப் போயிரும்'

 

ஒரு நீதிபதியின் உத்தரவைக் கேட்டது போல, எல்லோரும் திடீரென அமைதியாகியது போல இருந்தது. பின்னர் மகன், ஒரு மூக்குப் பேணிக்குள்ள, கொஞ்சம் பாலைக் கொண்டுவரப் பரியாரியார், கொஞ்சம் மண்ணையள்ளி அதனுள் போட்டு, அவரது வாயைத்திறந்து, ஒரேயடியாக, அவ்வளவத்தையும் வாணரது வாய்க்குள் ஊத்தினார். அது மட்டுமல்ல, அவரது மூக்குத் துவாரங்களையும் தனது விரல்களால் இறுக்கமாகப் பொத்தியிருந்தார்.

 

வாணரின் உடல் அசையவேயில்லை. அவரது கண்கள் மட்டும் திடீரெனத் திறந்து கொண்டன! அந்தப்பார்வை, அவர் ஆட்டுக்குட்டிகளைக் கொலைக்களத்துக்கு அனுப்பும்போது அவற்றின் கண்களில் தெரிந்த ‘இயலாமையுடன் கெஞ்சும்' பார்வையைப்போலவே இருந்தது.

 

 

(அனுபவங்களுடன் கலந்த கதை)

 

 

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

இது  எங்கள் பாலம்  தந்த  வாணரின் கதையா???

எழுதப்படவேண்டிய  வரலாறு

 

தொடருங்கள் ஐயா

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் வாழ்த்துகள்  புங்கை !

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் புங்கை. வாணர் உங்கள் ஊரவரா??.

Elderly%20man%20in%20an%20old%20age%20ho

 

அது பகலா அல்லது இரவா என்று வாணருக்குத் தெளிவாகத் தெரியவில்லை.

 

ஆனாலும், யாழ்தேவியில் இருந்து பிள்ளைகள் வந்திருந்த படியால், அது பின்னேரம் என்று நினைத்துக்கொண்டார். அவர் ‘அடங்கிப்' போனார் என்று பரியாரியார் எல்லாருக்கும் சொல்லிக்கொண்டிருந்தது,வாணருக்குத் தெளிவாகக் கேட்டது. இந்த ‘அடக்கம்' வருவது அவருக்கு மூன்றாவது முறையாகும். அவருக்கு ஒரே ஒரு ஆம்பிளைப் பிள்ளையும், இரண்டு பொம்பிளைப்பிள்ளைகளும் உண்டு. எல்லாரும் கலியாணம் கட்டிப் பிள்ளை குட்டிகளோட கொழும்பில் தான சீவியம். .கண்கள் மூடிய நிலையில் இருந்தாலும், தனது உடல், பூவரசம் மரத்தால் செய்யப்பட்ட , தலைமாடும், கால்மாடும் இல்லாத ஒரு கட்டிலில் வளர்த்தப் பட்டிருப்பது அவருக்குத் தெரிந்தது. அத்துடன், அவரால் வெளியில் நடக்கும் சம்பவங்களை, நேரில் பார்க்கக் கூடியதாகவும் இருந்தது. அட, இதைத் தான், மரணம் என்று சொல்லுகின்றார்களோ என்ற சிந்தனையிலும், அவருக்கு ஒரு சிரிப்பு வந்தது. ஆனால், அருகிலிருப்பவர்களிடம் இருந்து ஒரு விதமான சத்தமும் வராததால், தனது ‘உதடுகள்' உண்மையில் சிரிக்கவில்லை என்று அனுமானித்துக் கொண்டார்.

அப்போது பரியாரின் விளக்கம் தெளிவாகக் கேட்டது.

 

இஞ்சை பாருங்கோ, வாதம், பித்தம், சிலேட்டுமம் என்ற மூண்டிலையும், வாதமும், பித்தமும் விழுந்து போச்சு. இப்ப தனியச் ‘சிலேட்டுமத்தில' மட்டும் தான் ‘உயிர்' தொங்கிக்கொண்டிருக்கு. போன முறை, அடங்கேக்க, வாதம்' விழுந்து போகப் ‘பித்தம்' கொஞ்சம் ஓடிக் கொண்டிருந்தது.

 

பரியாரிக்கு வாணரில கனகாலத்துக் ‘கறள்' ஒண்டு இருக்குது எண்டு வாணருக்குத் தெரியும். பெரிசா ஒண்டுமில்லை. அவன் சின்னப் பெடியனா இருக்கேக்கை, ஒரு கலியாண வீட்டுக்கு வாணர் கூட்டிக்கொண்டு போய், அங்கை வடிவாச் சாப்பிட்ட பிறகு, வாசல்ல போற ஆக்கள் ‘மொய்' எழுதிறதைப் பாத்த பரியாரியும்,அதென்ன எண்டு கேக்க, வாணரும், ஆக்கள் சாப்பிட்டதுக்குக் காசு குடுக்கினம் எண்டு சொல்லவும், பொக்கற்றில்லாத காச்சட்டையோட நிண்ட பரியாரியாரும், காவோலை  வேலிக்கிள்ளால பூந்து வெளியால ஓடேக்கிள்ள, முதுகில வேலிக்கருக்குப் பிளந்து போட்டுது. வடுவா, இவ்வளவு காலமும் அதை மறக்காம வைச்சிருக்கிறான் எண்டு கறுவிக்கொண்டார்.

 

வாணருக்குத் தாய், தகப்பன் வைச்ச பெயர் அம்பலவாணர். அந்தக்காலத்திலேயே கொஞ்சம் நவீனமான சிந்தனையுள்ளவர் எண்ட படியால, அம்பலத்தைத் தூக்கி வெளியால போட்டிட்டார். அதோட, அவர் நிரந்தரமாய்ச் செய்த தொழிலும், ஊரில உள்ள ஆக்களிட்டை, ஆட்டுக்குட்டியள வாங்கி, மாதத்தில ஒருக்கா வாற முஸ்லிம் வியாபாரியளின்ர லொறியில. மொத்தமா ஏத்தி அனுப்பறது தான். அந்தத் தொழிலையும் செய்துகொண்டு, அம்பலத்தின் [பெயரையும் காவிக் கொண்டு திரியிறது, அவ்வளவு பொருத்தமாக அவருக்குப் படவில்லை.

 

‘அப்புவை நினைச்சாப் பெரிய கவலையாக்கிடக்குது, என்று மகன் சொல்வது அவருக்குத் தெளிவாகக் கேட்டது. நான் காசைக் கையில குடுக்கிற நேரமெல்லாம், அப்புவும் ‘வேண்டாம், மகனே, எனக்கென்னப்பு குறை?, நீ தான் வச்சுக்கொள்ளு' எண்டு வாங்கவே மாட்டார் என்று சொல்லிக்கொண்டிருந்தான்.

 

மகன் ஒரு முறை திருவிழாவுக்கு வந்த நேரம், அவன் கோவிலுக்குக் கட்டிக்கொடுத்த ‘மணிக்கூண்டுக் கோபுரம்’, அம்பலவாணர் உபயம், என்று சிவப்பு நிற எழுத்துக்கள்  சூரிய ஒளியில் மின்னிய படி நின்று கொண்டிருந்தது் .

வாணருக்கும்  ஆட்டு லொறி வரப்பிந்தினதாலும்,, ஊரில கொஞ்சம் முன்பணம் கொடுத்து ஆடுகளை ‘புக்' பண்ணி வைச்சிருந்ததாலும், கொஞ்சம் காசு தேவைப்பட்டது. ஊருக்கிள்ள ஆரிட்டையும் கொஞ்சக்காசு கடன் கேட்கலாம் எண்டாலும், மகனின்ர ‘கௌரவமும்' அந்தக் கடனில் தொங்கிக்கொண்டிருந்த படியால் ஒருவரிடமும் வாய் திறந்து கேட்க முடியவில்லை. எனவே, துணிந்து மகனிடம் ‘தம்பி, கொஞ்சம் காசு தேவைப்படுகுது, லொறி வந்த உடன கொழும்புக்கு அனுப்பி விடுகிறன் என்று கேட்டுப்பார்த்தார்,

 

அப்பு, இப்ப தான் கோவில் காசு குடுத்திட்டு நிக்கிறன். லொறியைக் கொஞ்சம் கெதிப் பண்ணி வரச்சொல்லுங்கோ, என்று சொன்னபடி போய் விட்டான்.

அப்போது, யாரோ மூக்கைச் சீறி எறியும் சத்தம் கேட்டது.மகன் அழுகிறான் போலும். மீண்டும் தனக்குள் சிரித்துக்கொண்டார்.

 

யாரோ அருகில் சுருட்டுப் பிடிக்கும் வாசம் வந்தது. அவருக்கும் ஒண்டைப் பத்தவைச்சால் நல்லம் போல கிடந்தது.

 

(வாணரின் உடல் நிலையைப்  பொறுத்துக் தரிசனம் தொடரும்!)

 

இங்கை நிக்கிறியள் ............... :icon_idea: . உங்கள் கதை வாசிப்பதும் ஒருவித சுகானுபவமே . உங்கள் கதைக்கு எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் புங்ஸ் :) :) .

 

Edited by கோமகன்

மனதை தொட்டு சென்றுவிட்டது நீங்கள் கதையை நகர்த்தியவிதம்.

 

இடையில் விடாமல், விரைவில் முடித்துவிடுங்கள் புங்கையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது  எங்கள் பாலம்  தந்த  வாணரின் கதையா???

எழுதப்படவேண்டிய  வரலாறு

 

தொடருங்கள் ஐயா

வணக்கம், விசுகர்!

 

இது பாலம் கட்டிய 'நம்ம வாணரின்' கதையில்லை! அதைப் பின்னொரு நாளில். பய பக்தியுடன் இருக்கும் நேரத்தில் எழுதுகின்றேன்! இது எனது கண்முன்னால் வாழ்ந்து மறைந்து போன ஒரு வாணரின் கதை!

 

எவ்வாறு ஒரு இளைய தலைமுறை, மூத்த தலைமுறையின் 'உபயோகமில்லாமல் போனவர்களைக்' எவ்வளவு 'இலகுவாகக்' கை கழுவி விடுகிறது என்பதைக் கூறுகின்ற ஒரு கதை! மிகுதியையும் இன்று இணைத்துள்ளேன்! :D  

மனதை நெருடும் விதமாக கதையை எழுதியிருக்கின்றீர்கள் புங்கை!

அத்தோடு மறந்துபோன சில சொற்களையும் உங்கள் கதையில் காணக்கூடியதாக இருந்தது.

ஆக்கத்திற்கு மிக்க நன்றி புங்கையூரன்! :)

  • கருத்துக்கள உறவுகள்
மனித உடலுக்கு வயது போனாலும், மனித உணர்வுகளுக்கு வயது போவதில்லை என்பதை அனுபவத்தில் புரிந்து கொண்டார்.
மனித ஆசையும் அப்படிதான்.....நல்ல ஒரு கதையை தந்த புங்கையுரனுக்கு நன்றிகள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடருங்கள் வாழ்த்துகள்

 நன்றாக எழுதியிருக்கிறீர்கள் தொடருங்கள் புங்கை , புதிய அனுபவம்

  • கருத்துக்கள உறவுகள்

கதையின் முடிவு மனதைப் பிசைய வைத்துவிட்டது புங்கை.  நன்றாக கதையை நகர்த்தியுள்ளீர்கள். சிறிய கதையுள் நிறைய விடயங்களை அடக்கியது திறமை.

ஒரு விவரணம் சில ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்து இருந்தேன். மிகவும் வயதான ஒருவரை, இனி யாருக்கும் தேவைப்பட மாட்டார் என்று ஒரு சடங்கு வைத்து பால் எல்லாம் ஊற்றி சுற்றம் எல்லாம் சேர்ந்து இறக்க  கொலை செய்வதைக் காட்டியிருப்பார்கள். இது இந்தியாவின் பல இடங்களில் நிகழ்வதாக குறிப்பிட்டு இருந்தனர்.

 

அதே மாதிரி நம் ஊர்களிலும் செய்கின்றனர் என்பதை இன்றுதான் இக் கதை மூலம் வாசித்து அறிய முடிந்தது.

 

கனடா போன்ற நாடுகளில் கூட வயதானவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் 'இனி இவர் சாகத்தான் லாயக்கு' என்ற முடிவோடு அலட்சியமாக சிகிச்சை கொடுப்பதையும் அறியும் போது எல்லா இடங்களிலும் மனிதர்களின் மனம் ஒரே மாதிரி என்றே எண்ணத் தோன்றுகின்றது.  அ.முத்துலிங்கமும் விஞ்ஞானம் மிக முன்னேறி இருக்கக் கூடிய 2050 ஆம் ஆண்டு போன்ற ஒரு காலகட்டத்தில் இதனையே கருவாக வைத்து  ஒருவரது தாயை ஊரே பார்ட்டி வைத்து மேலே அனுப்பி வைப்பதை எழுதி இருந்தார்.

 

கதை எழுதிய விதமும் உணர்வுகளும் அருமை புங்கை.

 

---------------------------------

 

..அது சரி, இந்தக் கதை இத்துடன் முடிந்து விட்டதே?!... ஏன் எல்லாரும் தொடருங்கள் என்று சொல்லுகினம்?

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி புங்கை அண்ணா...

 

எனக்கு இந்தக் கதையைப் படிக்கும் போது நேற்று முன்தினம் நான் சென்று வரும் மருவத்துவமனையில் கண்ட காட்சி தான் கண் முன் வந்து போகிறது..இரண்டு பெண்கள் ஒரு வயதான வெள்ளை இனத்தவர் ஒருவரை அவரது மனைவியும்,மகளும் என்று நினைக்கிறன் சக்கரநாற்காலியில் தள்ளிக்கொண்டு வந்தது மற்றவர்களுக்கு இடையூறு இல்லாதவாறு பார்த்து கொண்டு  பேசிக்கொண்டு இருந்தார்கள்.இடைக்கிடை ...'பப்பா சே சம்திங் என்ற வார்த்தை காதில் விழுந்தது..பின்னர் மீண்டும் மெதுவாய் அழும் குரலில் பப்பா பிளீஸ் சே சம்திங் என்ற வார்த்தை..

 

திரும்பி பார்த்தேன் அந்த வயதானவர் கையை பிடிச்சு வைச்சு கொண்டு ஒருவர் கொஞ்சினார். மற்றையவர் தோளை தடவிக்கொண்டு இருந்தார்..ஆனால் அந்த வயதானவரால் பேசமுடியாமல் தவிப்பது மட்டும் முக பாவனையில் அறியக் கூடியதாக இருந்தது..அவரை பேச வைப்பதற்காக இரண்டு பெண்களும் நிறைய 
விடையங்களை சொல்லிக் கொண்டும்,கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள் பதில் சொல்கிறார் இல்லை சிரிப்பு மட்டும் தான் முகத்தில் காணப்பட்டது.
  
 வைத்தியர் ஒரு முடிவுக்கு வருவதற்குள்  ஆண்டவா,இது எப்ப போகும் என்று தான் அனேகமனாவர்கள் நினைப்பார்கள் இப்படியும் இருக்கிறார்கள் தானே. கிடக்க விடக் கூடாது அனுப்பிடனும் என்று துடிக்கும் உறவுகள் இப்படியானவற்றை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் வாழ்த்துகள்  புங்கை !

நன்றிகள், சுவி அண்ணா!

 

ஒரு மாதிரி கதையை முடிச்சாச்சு!

 

இதை ஒரு தொடராக எழுதும் உத்தேசம் இருக்கவில்லை.  கதை அரைவாசிக்கு வரும்போது, வாணரின் கடைசிக்கணங்கள் நினைவில் மீண்டும் வந்து போனதால், என்னால் கதையைத் தொடரமுடியவில்லை. எனவே தொடரும் போட்டு விட்டுப் போய் விட்டேன்!

 

அது பலரைக் குழப்பி விட்டது போல் உள்ளது!

வாழும் காலத்தில் நல்லவர்களாக வாழ்ந்தால், இறக்கும்போது நிம்மதியாக இறக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் அனுபவ பகிர்வு . கதை சுவாரசியமாக விறுவிறுப்பாக நகர்த்திய விதம் அருமை. புங்கையூரனுக்கு என்  பாராட்டுக்களும் நன்றியும். இவ்வாறு பல கதைகள் தொடரவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை அண்ணா எழுதியது என்பதால் தொடக்கம் முதல் முடிவு வரை பொறுமையாக வாசித்தேன்... கதை எழுதிய விதமும் உணர்வுகளின் கோர்ப்பும் கண்களை சற்றும் அகலவிடாமல் கடைசிவரை படித்து முடிக்க வைத்துவிட்டன.. அருமை அண்ணா...

  • கருத்துக்கள உறவுகள்
அற்புதமான எழுத்தாற்றல் புங்கை உங்களுக்கு தொடருங்கள்
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புங்கைக்கு  பாராட்டு, நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
எலுத்து பிலைகளை பொறுத்து கொள்ளவும். என்னுடைய வளமையான கூக்லே கூக்லே பண்ணிப்பதேன் வேலை செய்யவில்லை.
 
வால்த்துக்கள் புங்கை 
 
கதையை பற்றி ஒன்றும சொல்லல்லை. நன்றாக இருக்கிறது..
 
எனக்கு இந்த பால் பருக்கிறதை பற்றி, சொல்லாதேறியவில்லை. (நானும் ஒருவருக்கு செய்தேன், அதைப்படி அறிந்தும் அறியாத வயதில்-)
இன்று  கிளைத்தேய முறையான சாவை வீட்டில், சமூகத்தில் எர்ருக்கொள்ளுகிற, ஏற்றுக்கொள்ள வைக்கிற பாதையில் அமெரிக்க போகிறது. சரி பிளைக்கு அப்பால் மருத்துவம் இன்று ஒரு நாட்டின் வரவு செலவு திட்டத்தில் பெரும் பாதுதியை  விலுங்குகிற ஒன்றாக மாறி வருகிறது. ஒருவருடை மருத்துவ செலவில் 25 தொடக்கம் 33 சதவீதமான செலவுகள் அவரின் கடைசி 30 நாட்களில் செலவாகிறது. இந்த மாதிரி சாவை வீட்டில் வைத்தால் அந்த செலவை குறைக்கலாம். இங்கே ஹோம் ஹோஸ்ப்ஸ் என்று இருக்கிறது. வைத்தியர் ஆல் கைவிட்டவர்களை வீடுக்கைல் வைத்து பார்ப்பார்கள். 
இந்த கதையில் வாணர் அப்படி இப்படி எல்லாம் யோசித்தவர் என்றும், அவரை கொலை களத்து கொண்டு செல்லும் ஆட்டுடனும் இனப்பது நீங்களே, வாணர் அல்ல. -அதற்காக அப்படி யோசிக்க இருக்க மாட்டார் என்றும் இல்லை. 
மனதை சஞ்சலம் அடையாமல் வைத்தியர் சொல்லுவதை கொட்டால் சுகமாய் இருக்குமோ என்று யோசிக்கிறேன்..
-என்னால் விரைவாக , எலுத்து பிலை இல்லாமல் எலுத முடியாமைல்க்கு வருந்துகிறேன் 

கதையை நகர்த்தியவிதம் மிக அழகு புங்கை! கதையின் இறுதிப்பாகம் மனதுக்குக் கஸ்டமாய் இருந்தது.

 

ஆண்டவா எங்களை ஒருத்தரும் இப்படி போய் துலை என்று அனுப்பக் கூடாது! நினைக்கவே பயமாயிருக்கு!  :lol:


வாழ்த்துக்கள் புங்கை!

  • கருத்துக்கள உறவுகள்

அழகிய கதைக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் புங்கை. வாணர் உங்கள் ஊரவரா??.

 

 

கதையின் முடிவு மனதைப் பிசைய வைத்துவிட்டது புங்கை.  நன்றாக கதையை நகர்த்தியுள்ளீர்கள். சிறிய கதையுள் நிறைய விடயங்களை அடக்கியது திறமை.

மிக நன்றிகள், சுமே!

 

வாழ்க்கையென்பது இலட்சியங்களுக்கும் (ideals), உண்மை நிலைக்கும் (reality) இடையில் நடக்கும் ஒரு சமநிலை காணும் போராட்டமே!

காலங்கள் மாறுகையில், அந்தச் சமநிலைப்புள்ளியும் மாற வேண்டியது, கால நகர்வின் கட்டாயம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கை நிக்கிறியள் ............... :icon_idea: . உங்கள் கதை வாசிப்பதும் ஒருவித சுகானுபவமே . உங்கள் கதைக்கு எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் புங்ஸ் :) :) .

 

கோமகன், ஒரு கதையொன்றைப் பிரசவித்த வலியுடன், அந்தக் கதையின் நிறம் 'கறுப்பா' அல்லது 'சிகப்பா' எனக் கருத்துக்களுக்காகக் காத்திருக்கும், கதை எழுதியின் நிலையில், உங்கள் கருத்து, எனது கதையின் விதியை எப்போதுமே சரியாக எதிர்வு கூறத் தவறுவதே இல்லை!

 

உங்கள் ஆக்க பூர்வமான விமரிசனங்களை, எப்போதும் எதிர்பார்த்திருப்பேன்! உங்கள் 'அஞ்ஞாத வாசத்தின்' போது கூட, நீங்கள் வரா விட்டாலும், உங்கள் 'பச்சையாவது' நிச்சயம் வந்து போகும்! மிக்க நன்றிகள்! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.