Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றுதான் பேசக்கிடைத்தது உன் தோழியிடம்... ( இசைக்கவிதை )

Featured Replies

  • தொடங்கியவர்

கவிதையின் இந்த வரிகள், உங்களிடம் உள்ள 'மனிதத்தின்' உன்னதமான வெளிப்பாடு என நினைக்கிறேன்!

போர்க்களத்தில் நின்ற அர்ஜுனனின், முடியைத் தட்டிச் சென்ற 'நாகாஸ்திரம்' போல இந்தக் காதல் போகட்டும்!

மீண்டுமொரு முறை 'நாகாஸ்திரம்' வரப்போவதில்லை!

வாழ்த்துக்கள், கவிதை!

மற்றவர்கள் மாறுகிறார்கள் என்பதற்காக நாமும் எம் மனிதத்தினைத் தொலைத்து மாறக்கூடாது.

இனிமேல்.... நாகாஸ்திரமல்ல எந்த அஸ்திரம் வந்தாலும் சமாளிக்கும் மனவலிமையும் அனுபவமும் இருக்கு புங்கை.  அனுபவங்களைப்போல நல்ல படிப்பினை  வேறு எதுவுமில்லை! :)

கருத்துக்கு மிக்க நன்றி புங்கையூரன். :)

  • தொடங்கியவர்

யதார்த்தமான ,உண்மையை கூறி நிற்கும் அழகான வரிகள் ...........வாழ்த்துக்கள் .
 
மீண்டும் வருவேன் .

இது சம்பந்தமாக எனது உண்மைக்கதையை இங்கே நான் கூறினால் .................வேண்டாம் இந்த விடயத்தில் மாத்திரம் அந்த அத்தியாயங்களை இந்த நேரத்தில் திறக்க கூடாது என உறுதியோடு செல்ல நினைப்பவன் .............ஆனாலும் சில வேளைகளில் தளம்புவதுண்டு ....மனித மனம் என்னும் பார்வையில் .
 
காதலிப்போர்க்கு என்னாலன ஒரே ஒரு தகவல் ..........காதலுக்கு இடைவெளி அதிகம் கொடுக்க கூடாது .............

மிகவும் உண்மையான விடயம். பலரது அனுபவத்திலிருந்து மட்டுமல்ல.... என் சொந்த அனுபவத்திலிருந்தும் தெரிந்துகொண்ட உண்மை இது. 

குறுகிய இடைவெளி என்பது காதலை அதிகரிக்கும்... அதேநேரம் நீண்ட கால இடைவெளி காதலின் அன்பையும் இறுக்கத்தையும் வெகுவாகக் குறைக்கும் என்பது மிகத் தெளிவான உண்மை!!!

எண்ணப் பகிர்வுக்கு..... மிக்க நன்றி தமிழ்சூரியன்!  :)

  • தொடங்கியவர்

வாழ்க்கை என்பதே அனுபவங்களின் வழிநடத்தலே..அதனை நாங்களே  தீர்மானிக்கும் அதே நேரம் அதன் பலாபலன்களையும் நாங்களே எதிர்கொள்ளவேண்டும்  தைரியமற்றவன் தற்கொலையும் தைரியமானவனாய் காட்டிக் கொள்பவன் கொலையும் செய்வான் . உண்மையான அனுபவமுள்ள தைரிய சாலி நிதானமாய் தீரக்கமான முடிவை எடுப்பான்  இதில் நீ  எந்த ரகம்???

எனது 30வருட வாழ்க்கையில் நான் பெற்றிருக்கும் அனுபவங்கள்.... இன்னொரு பிறவியெடுத்தும்

வாழப் போதுமென நினைக்கின்றேன்!

நல்ல அனுபவங்களாயினும் கடினமான கெட்ட அனுபவங்களாயினும் ஒருவிடயத்தனை தவறாமல் கொடுக்கும்.

அது........................"நிதானம்". :)

கருத்துக்கு மிக்க நன்றி சாத்ஸ் ! :)

Edited by கவிதை

  • தொடங்கியவர்

கண் மயங்கிக் காதல் கொள்ளாதீர் உறவுகளே

காதினிக்கும் காதல் மொழிகேட்டும்

கனவுலகில் சஞ்சரித்தும் கனதியான காதல் கொண்டால்

காண்பதெல்லாம் உண்மையாய் கண் மயங்கும்

கற்றறிந்து காதல் கொண்டீரெனில்

காதல் நோய் முற்றி கண்ணில் நீர்கொண்டு

காலமெல்லாம் கவலை கொண்டு

காத்திருக்கும் கேடென்றும் வந்திடாது.

என்ன செய்ய...? வயசு சும்மா இருக்க விடாதே....!!!! :)

புரிகிறது அக்கா. அனுபவங்கள் நல்ல பாடத்தைக் கொடுத்திருக்கின்றன.

மிக்க நன்றி அக்கா! :)

இப்போது எல்லாமே இருக்கிறது என்னிடத்தில்...
உன் வற்றாத நினைவுகளும்
ஆற்றமுடியாத காயங்களும்
ஆறாத கோபமும் கூட.
உன்னையும் நீ செய்த துரோகத்தையும்
எப்படி மறக்கமுடியும்??? ///// 
காதலலினால் வந்த  பிரிவு ஏறதாள சிரங்கு போன்றதே !! ஏனெனில் சொறியச் சொறிய இன்பமாகி இறுதியில் நிணமும் சீழுமே மிஞ்சும் . இந்த சிரங்கில் இருந்து நீங்கள் விடுபடவேண்டும் . எல்லா நிகழ்வுக்குமே ஓர் காரணம் உண்டு . நீங்கள் சீரும் சிறப்புமாக இருக்க வேண்டும் . அதுவே எனது விருப்பம் .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் உண்மையான விடயம். பலரது அனுபவத்திலிருந்து மட்டுமல்ல.... என் சொந்த அனுபவத்திலிருந்தும் தெரிந்துகொண்ட உண்மை இது.

குறுகிய இடைவெளி என்பது காதலை அதிகரிக்கும்... அதேநேரம் நீண்ட கால இடைவெளி காதலின் அன்பையும் இறுக்கத்தையும் வெகுவாகக் குறைக்கும் என்பது மிகத் தெளிவான உண்மை!!!

எண்ணப் பகிர்வுக்கு..... மிக்க நன்றி தமிழ்சூரியன்! :)

அப்படியானால் உண்மைக்காதல் என்று ஒன்றுமில்லையா?

ஒரு கதைக்கு, காதலன் தன் வருங்கால மனைவியான காதலிக்கு வளமான எதிர்காலத்தை வழங்க திரைகடல் ஓடுகிறான் திரவியம் தேட..! அப்போது காதல் பணால் ஆகிவிடுமா? :(:D

கவிதையை பார்க்க இது தான் ஞாபகத்திக்கு வருகிறது.There is no point crying over spilt milk.

அன்பான மனைவி , மழலை சிரிப்பில் என்னை உலகத்தையே மறக்க வைக்கும் குழந்தை , ஒவ்வொரு நிமிடமும் என் சந்தோசத்திற்காக பிரார்த்திக்கும் பெற்றோர். இவ்வளவு அன்பான உலகம்  என்னை சுற்றி இருக்க, என்னை விட்டு விட்டு போனவளை இன்னும் நினைத்து உருக நான் சுயநலவாதி இல்லை :)

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அண்ணா, கவிதை நன்று ஆனால் மறக்க வேண்டிய விசயங்களை, இனி மாறாது எண்டு தெரியிற விசயங்களை மறந்து விடுவது நல்லது. கடந்த காலத்தில் வாழ்வது எதிர்காலத்தைப் பாதிக்கும். அநியாயத்திற்கு நல்லவனாக இருந்தால் எல்லாரும் இப்பிடித்தான் தலையிலே ஏறிக் குந்துவார்கள். அவளின் சிநேகிதியிடம் சொல்லி விடுங்கள் "அந்தச் சனியன் இல்லாமல் நான் இப்ப  அந்தமாதிரி வாழ்க்கைய என்ஜோய் பண்ணுறன்" எண்டு.

குறுகிய இடைவெளி என்பது காதலை அதிகரிக்கும்... அதேநேரம் நீண்ட கால இடைவெளி காதலின் அன்பையும் இறுக்கத்தையும் வெகுவாகக் குறைக்கும் என்பது மிகத் தெளிவான உண்மை!!!

இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் நீண்ட கால இடைவெளி (2.5 வருஷத்திலும் கூட) அவளைக் காணாமல் இருந்தும் எனது காதல் அப்பிடியே தான் இருந்தது. உங்களுக்கு வந்தது காதல். ஆனால் அவளுக்கு வந்தது காதல் அல்ல, அது ஒரு கவர்ச்சி. குறிப்பாக உயர்தரம் படிக்கும் போது வரும் உணர்ச்சிகளின் பிரதி பலிப்பு. அதுதான் தூரம், இடைவெளி கூட, வீட்டுக்காரரின் வற்புறுத்தல்கள் கூட மாறியிருக்கிறது. உண்மையான காதல் இருந்திருந்தா எந்த நிலையிலும் மாறியிருக்காது. அதுதான் நீங்கள் இன்னமும் மாறாமல் கவிதை எழுதிக்கொண்டு இருக்கிறியள். ஆத்தில மிதிச்சு குளத்தில கழுவுற இந்தக் காலத்தில இது டூமச் அண்ணா. எதோ வேகத்திலையும் நம்பிக்கயிலையும் கலியாணத்தை எழுதிப் போட்டியள், நடந்தத கெட்ட கனவா நினைச்சு மறந்து போட்டு அடுத்த அலுவலப் பாருங்கோ. 

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை, முந்தி ஒரு அண்ணா இப்படி தான் சொல்கிறவர் "உருப்படுகிற வழியை பாருங்கோ" என்று. கவலையை விட்டு அடுத்த கட்டம் நோக்கி நகருங்கள்.

உங்கள் உணர்ச்சிகளை கவிதை வடிவில் வடித்துள்ளீர்கள், ஆறுதல் வார்த்தை இதற்கில்லை, வாழ்நாள் பூர இந்த வலி தொடரும் மறக்க தெரியவில்லையெனின். அல்லது நல்லதொரு துணைவி கிடைக்கனும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவளைக்  "கட்" பண்ணும் போதே அவள் நண்பியையும் சேர்த்துக் "கட்" பண்ணியிருக்க வேணும் ப்றோ.. :D:lol:

  • தொடங்கியவர்

வணக்கம் அண்ணா, கவிதை நன்று ஆனால் மறக்க வேண்டிய விசயங்களை, இனி மாறாது எண்டு தெரியிற விசயங்களை மறந்து விடுவது நல்லது. கடந்த காலத்தில் வாழ்வது எதிர்காலத்தைப் பாதிக்கும். அநியாயத்திற்கு நல்லவனாக இருந்தால் எல்லாரும் இப்பிடித்தான் தலையிலே ஏறிக் குந்துவார்கள். அவளின் சிநேகிதியிடம் சொல்லி விடுங்கள் "அந்தச் சனியன் இல்லாமல் நான் இப்ப  அந்தமாதிரி வாழ்க்கைய என்ஜோய் பண்ணுறன்" எண்டு.

இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் நீண்ட கால இடைவெளி (2.5 வருஷத்திலும் கூட) அவளைக் காணாமல் இருந்தும் எனது காதல் அப்பிடியே தான் இருந்தது. உங்களுக்கு வந்தது காதல். ஆனால் அவளுக்கு வந்தது காதல் அல்ல, அது ஒரு கவர்ச்சி. குறிப்பாக உயர்தரம் படிக்கும் போது வரும் உணர்ச்சிகளின் பிரதி பலிப்பு. அதுதான் தூரம், இடைவெளி கூட, வீட்டுக்காரரின் வற்புறுத்தல்கள் கூட மாறியிருக்கிறது. உண்மையான காதல் இருந்திருந்தா எந்த நிலையிலும் மாறியிருக்காது. அதுதான் நீங்கள் இன்னமும் மாறாமல் கவிதை எழுதிக்கொண்டு இருக்கிறியள். ஆத்தில மிதிச்சு குளத்தில கழுவுற இந்தக் காலத்தில இது டூமச் அண்ணா. எதோ வேகத்திலையும் நம்பிக்கயிலையும் கலியாணத்தை எழுதிப் போட்டியள், நடந்தத கெட்ட கனவா நினைச்சு மறந்து போட்டு அடுத்த அலுவலப் பாருங்கோ.

ம்ம்ம்ம்..... நீங்கள் கூறுவதும் உண்மைதான் தும்பளையான். தங்கள் காதலை உண்மையாக நேசிப்பவர்கள் எப்பொழுதும் மாறமாட்டார்கள். உறுதியாக இருப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால்.....

நான் என் விடயத்தில் நடந்ததை மட்டும் வைத்துக் கூறவில்லை. பலரது வாழ்க்கையில் கண்டது.

நீண்ட இடைவெளிகளும் சூழ்நிலைகளும் அப்போதைய மனநிலைகளும் பிரிவுகளுக்கு வழிவகுத்துவிடுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதைத்தான் சொன்னேன்.

அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தும்ஸ்...! :)

  • தொடங்கியவர்

அப்படியானால் உண்மைக்காதல் என்று ஒன்றுமில்லையா?

ஒரு கதைக்கு, காதலன் தன் வருங்கால மனைவியான காதலிக்கு வளமான எதிர்காலத்தை வழங்க திரைகடல் ஓடுகிறான் திரவியம் தேட..! அப்போது காதல் பணால் ஆகிவிடுமா? :(:D

அப்பிடி இல்லை இசை...! சில காதல் நிலைச்சிருக்கு. சில காதல் சிதைஞ்சிருக்கு...! எல்லாமே அவரவர் மனங்களையும் காதல்மேல்கொண்ட உறுதியையும் பொறுத்தது.

காதலுக்கு அடிப்படை பரஸ்பர நம்பிக்கைதான். இடைவெளியானது அந்த நம்பிக்கையைக் குறைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நம்பிக்கையைக் குறையாது காப்பதன்மூலம் காதலையும் காப்பாற்றலாம்.

காதலர்கள் செய்யவேண்டியது.... அவரவர் காதலரைக் காதலிப்பதைவிட தங்களின் காதலை மிகவும் காதலிக்க வேண்டும். அப்படியிருந்தால் காலமெல்லாம் காதல் வாழும். :wub:

என்ன இசை.... இந்த விளக்கம் போதுமா? :)

நீங்கள் கேட்ட கேள்வி... கொஞ்சம் வில்லங்கமானது....! நான் ஏதாவது எழுதப்போக.... போர்க்கொடியை தூக்கிவிடுவார்கள்! :o 

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியிருந்தால் காலமெல்லாம் காதல் வாழும். :wub:

என்னப்பா  தம்பி  கவிதை

புதிதாக  ஒரு வரவு (அவதாரில்)

சொல்லவே  இல்லை...... :icon_idea:

  • தொடங்கியவர்

என்னப்பா  தம்பி  கவிதை

புதிதாக  ஒரு வரவு (அவதாரில்)

சொல்லவே  இல்லை...... :icon_idea:

அண்ணை அது புது வரவில்லை...! 31 வருடகாலப் பழசு....!  :D  அந்தப் போட்டோ எடுத்தது 26.08.1983 அன்று.

என்னுடைய ஒரு வயதில்...!

சொந்த முகத்தைப் போடவில்லையே என்றொரு குறை இருக்கவேண்டாம் என்பதற்காக போட்டது :icon_idea: . :lol:

  • கருத்துக்கள உறவுகள்

//அவரவர் காதலரைக் காதலிப்பதைவிட தங்களின் காதலை மிகவும் காதலிக்க வேண்டும். அப்படியிருந்தால் காலமெல்லாம் காதல் வாழும். :wub://

ம்ம்ம்.. பழைய லவ் லெட்டரையெல்லாம் தேடி எடுத்து படிக்க வேணும் போலை.. :rolleyes::D

  • தொடங்கியவர்

"இன்றுதான் பேசக்கிடைத்தது உன் தோழியிடம்... " என்ற இந்தக் கவிதைக்கும் நான் எழுதிவரும் "விற்றுத்தீர்ந்த காதல் கதை" எனும் தொடர்கதைக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. அக்கதையில் வரும் றிஷானா என்ற  அஞ்சலியின் தோழியுடன் கதைக்கக் கிடைத்த சந்தர்ப்பத்தில் தோன்றிய மனநிலையில்தான் இக்கவிதையினை எழுதியிருந்தேன்.

எல்லாமே கடந்துபோகும்.... இதுவும் அப்படித்தான். ஏதோ பிறந்தோம்.. வாழ்ந்தோம்... இறந்தோம் என்று இல்லாமல்...., அது இன்பமோ துன்பமோ இப்படியான அனுபவங்கள்தான் வாழ்க்கையை சுவாரஸ்யமாக்குகின்றன. வருவது எதுவாயினும் சந்திப்போம்...! காலங்களால் மட்டுமே சில காயங்களை ஆற்றமுடியும். காலப்போக்கில் எல்லாமே சரியாகிவிடும்! :unsure: :)
 
அண்மையில் என்னுடைய முகப்புத்தகத்தில் என்னுடைய மனநிலை பற்றி பகிர்ந்துகொண்ட சில வரிகள்,
 
எதிர்பார்ப்புக்கள் எதுவுமே இல்லாத இப்போதைய வாழ்க்கையில்.... ஏமாற்றங்கள் எதுவுமே வருவதில்லை...!
எதுவரினும்... புன்னகையுடன் வரவேற்கத் தயாரான உறுதியான மனநிலையை,
கசப்பான அனுபவங்களால் மட்டுமே கொடுக்க முடியும்!

கசப்பான அனுபவங்களுக்கும் அதைத் தந்தவர்களுக்கும் நன்றி சொல்லியே ஆகவேண்டும்! :)

கவலைப்பட ஒன்றுமில்லை :)

தங்கள் அனைவரின் அன்புக்கும் பாசத்துக்கும் அறிவுரைக்கும் என்றென்றும் அன்பானவனாக நான் இருப்பேன்.

மிக்க நன்றி உறவுகளே! :)

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை அது புது வரவில்லை...! 31 வருடகாலப் பழசு....!  :D  அந்தப் போட்டோ எடுத்தது 26.08.1983 அன்று.

என்னுடைய ஒரு வயதில்...!

சொந்த முகத்தைப் போடவில்லையே என்றொரு குறை இருக்கவேண்டாம் என்பதற்காக போட்டது :icon_idea: . :lol:

ஒரு வயசிலேயே தம்பி ரொமான்ஸ் மூடுலதான் இருக்கார் .இந்த திகதி ,மாதத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கை சோகமயமாத்தான் இருக்கும்  :(  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
கவிதை உங்கள் கவிதையை வாசித்தேன்.பச்சை குத்துவோம் என நினைத்தேன் ஆனால் குத்தவில்லை.ஏனெனில் உங்கள் கவிதையின் கடைசி பந்தியோடு எனக்கு உடன்பாடு இல்லை.
 
காதல் சொல்லி ஏமாத்தி செல்பவரை எப்படி மன்னிக்கவோ அல்லது அவர் இரக்கப்படவோ முடியும்?....உண்மையான காதலால் முடியும் என்று சொல்வது எல்லாம் என்னைப் பொறுத்த வரை பொய்.
 
காதலிக்கும் போது எந்தளவிக்கு நேசிக்கிறமோ அதையும் பார்க்க அவர்கள் எம்மை ஏமாற்றி செல்லும் போது வெறுக்கிறோம்.
  • கருத்துக்கள உறவுகள்

வெகு விரைவில் மேர்ந்டும் உங்கள் அவளிடமும் பேச வாழ்த்துக்கள் கவி

  • 3 months later...
  • தொடங்கியவர்

"இன்றுதான் பேசக் கிடைத்தது உந்தோழியிடம்... " என்ற இக்கவிதைக்கான இசைவடிவத்தினை இன்றுதான் செய்து முடித்தேன்.

அதனையும் உங்கள் பார்வைக்காக இக்கவிதையுடன் இணைத்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உப்பிடியே பேசிக்கொண்டிராமல் அடுத்த கட்டத்துக்கு நகருங்கோ தம்பி. வாழ்க்கை பலருக்கு பூவனம் பலருக்கு தீ வனம்.  இன்னும் சிலருக்கோ போர் வனம். இதில் நடந்து உடைந்து விழுந்து எழுவதே வெற்றி. 

  • கருத்துக்கள உறவுகள்

move on!

  • தொடங்கியவர்

மிக்க நன்றி சாந்தி அக்கா, ஜஸ்ரின்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.