Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எழிலனின் மனைவிக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

DSCF8652.jpg
-சுமித்தி தங்கராசா,எஸ்.கே.பிரசாத்

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக யாழ். பஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று புதன்கிழமை  எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வடமாகாணத்தில் சமூகத்துடன் இணைக்கப்பட்ட உறுப்பினர்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று காலை  10.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் சுமார் ஒரு மணித்தியாலயங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி எழிலனின் மனைவி அனந்திக்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வடமாகாணத்தில் முன்னாள் போராளிகளின் உறவினர்கள் மற்றும் சமூகத்துடன் இணைக்கப்பட்ட போராளிகளின் உறவினர்கள் உட்பட  பலர் கலந்து கொண்டனர்.

2009 ஆம் ஆண்டு இராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டு சந்தோசமாக நாங்கள் வாழ்ந்து வருகின்றோம் நாங்கள் அச்சுறுத்தப்படுகின்றோம் விசாரணைக்குட்படுத்தப்படுகிறோம் என்று சொல்லி அரசியல் நடத்துவதை நிறுத்த வேண்டும் என்றே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே இவ்வாறான அரசியல் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றது என்று கூட்டமைப்புக்கு எதிராக ' எமக்கு உதவுவதாக கூறி வெளிநாடுகளில் வாங்கும் பல மில்லியன் ரூபா பணம் எங்கே கூட்டமைப்பே கூறு' ' ஆனந்தி நீ எங்களுக்காக செய்தது ஏதாவது உண்டா' ' குறுகிய அரசியல் நோக்கத்திற்காக முன்னாள் போராளிகளை காட்டிக்கொடுக்காதே'  என பல்வேறு கோசங்களைக் தாங்கியவாறு 200 க்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் கலந்துகொண்டனர்.

DSCF8674.jpg
DSCF8702.jpg
DSCF8692.jpg
DSCF8711.jpg

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/79613-2013-08-21-05-58-13.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ஆர்ப்பாட்டத்தில் கலந்தவர்களைப் பார்த்தால் தமிழர்கள் போல தெரியவில்லையே அரசபுலனாய்வு பிரிவினரின் வேலை போல இருக்கு ...  :blink: 
 
இதையும் ஒருக்கா பாருங்கோவன் 

http://www.newjaffna.com/fullview.php?id=MjUzMzc=

Edited by kkaran

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்கள், இலக்கணப் பிழை இல்லாமல் தமிழ் எழுதும் எழுதாற்றல் கொண்டவர்களென கேள்விப்பட்டுள்ளேன்...

இந்த பதாகைகளையும், ஆட்களையும் பார்த்தால், யாரோ 'குவார்டர்' சரக்குக்கும், பிரியாணி பொட்டலத்திற்கும் கூட்டி வந்தவர்கள் மாதிரி தெரியுதே? :o

இந்த பதாதைகளை எழுதியவர்கள் தான் இலங்கையில் signs உம் எழுதுகிறார்கள் போலிருக்கிறது

படையினராலும் படைப் புலனாய்வாரள்களாலும் அழைத்துச் செல்லப்பட்டவர்களால் TNAக்கு எதிராக யாழில் போராட்டம்
21 ஆகஸ்ட் 2013
lg-share-en.gif
 
"மட்டக்களப்பிலிருந்து படையினரால் அழைத்துச் செல்லப்பட்ட முன்னாள் போராளிகளின் ஒரு தொகுதியினர் அரியாலை படை முகாமில் தங்க வைக்கபட்டனர்"

EX%20LTTE2_CI.jpg

படையினராலும் படைப் புலனாய்வாரள்களாலும் அழைத்துச் செல்லப்பட்டவர்களால் க்கு எதிராக யாழில் போராட்டம் 

"மட்டக்களப்பிலிருந்து படையினரால் அழைத்துச் செல்லப்பட்ட முன்னாள் போராளிகளின் ஒரு தொகுதியினர் அரியாலை படை முகாமில் தங்க வைக்கபட்டனர்"

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக யாழ். பஸ் நிலையத்திற்கு முன்பாக படையினரால் அழைத்து செல்லப்பட்டவர்களைக் கொண்டு இன்று புதன்கிழமை  எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது என குளோபல் தமிழ்ச் செய்திகளின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் சமூகத்துடன் இணைக்கப்பட்ட உறுப்பினர்களின் ஒன்றியம் எனும் பேரில் இன்று காலை  10.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் சுமார் ஒரு மணித்தியாலயங்கள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி எழிலனின் மனைவி ஆனந்திக்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் வடமாகாணத்தில் முன்னாள் போராளிகளின் உறவினர்கள் மற்றும் சமூகத்துடன் இணைக்கப்பட்ட போராளிகளின் உறவினர்கள் உட்பட  பலர் கலந்து கொண்டனர். குறிப்பாக மட்டக்களப்பிலிருந்து படையினரால் அழைத்துச் செல்லப்பட்ட முன்னாள் போராளிகளின் ஒரு தொகுதியினர் அரியாலை படை முகாமில் தங்க வைக்கபட்டு போராட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஈடுபடுத்தப்பட்டனர் என குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிய வருகிறது. அவர்களுடன் படைப் புலனாய்வாளர்கள் மற்றும் சிங்கள கூலித் தொழிலாளர்களும் குதித்திருந்தனர்.

EX%20LTTE.jpg

2009 ஆம் ஆண்டு இராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டு சந்தோசமாக நாங்கள் வாழ்ந்து வருகின்றோம் நாங்கள் அச்சுறுத்தப் படுகின்றோம் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறோம் என்று சொல்லி அரசியல் நடத்துவதை நிறுத்த வேண்டும் என்று  இந்த ஆர்ப்பாட்டத்தில் கோசம எழுப்பப்பட்டது.

எனினும் பொலிஸாரது அனுமதி ஏதுவுமின்றி இவ்வார்ப்பாட்டம் நடத்தப்பட்டதுடன் பெருமளவு படையினர் மற்றும் படை அதிகாரிகள் குவிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/95543/language/ta-IN/article.aspx

ஈழத் தமிழர்கள், இலக்கணப் பிழை இல்லாமல் தமிழ் எழுதும் எழுதாற்றல் கொண்டவர்களென கேள்விப்பட்டுள்ளேன்...

இந்த பதாகைகளையும், ஆட்களையும் பார்த்தால், யாரோ 'குவார்டர்' சரக்குக்கும், பிரியாணி பொட்டலத்திற்கும் கூட்டி வந்தவர்கள் மாதிரி தெரியுதே? :o

படையினராலும் படைப் புலனாய்வாரள்களாலும் அழைத்துச் செல்லப்பட்டவர்களால் TNAக்கு எதிராக யாழில் போராட்டம்
21 ஆகஸ்ட் 2013
 
"மட்டக்களப்பிலிருந்து படையினரால் அழைத்துச் செல்லப்பட்ட முன்னாள் போராளிகளின் ஒரு தொகுதியினர் அரியாலை படை முகாமில் தங்க வைக்கபட்டனர்"

thats all boss :lol: 

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்கள், இலக்கணப் பிழை இல்லாமல் தமிழ் எழுதும் எழுதாற்றல் கொண்டவர்களென கேள்விப்பட்டுள்ளேன்...

இந்த பதாகைகளையும், ஆட்களையும் பார்த்தால், யாரோ 'குவார்டர்' சரக்குக்கும், பிரியாணி பொட்டலத்திற்கும் கூட்டி வந்தவர்கள் மாதிரி தெரியுதே? :o

ஈழத்து முஸ்லீம்களுக்கும்.. ஈழத்து ஒட்டுக்குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கும்.. இப்ப புதிசா தமிழ் படிக்க வெளிக்கிட்டிருக்கும் சிங்கள இராணுவக் காடைகளுக்கும்.. நாகரிகமான தமிழும்.. வார்த்தைகளும் சுட்டுப்போட்டாலும் வராது..! இவற்றை வைச்சே இந்த ஆர்ப்பாட்டங்களின் பின்னணிகளை நாம் கஸ்டப்படாமல் கண்டுபிடிச்சிடுவம்.

இதெல்லாம்.. பன்னெடும் காலமாக நடக்கிறது. ஆனால் இதற்கு பிள்ளையார் சுழிபோட்டது நம்ம  இந்திய அமைதிப்படை தான்..! அவர்களின் காலத்தில் தான் இந்த விளையாட்டுக்கள் ஒட்டுக்குழுக்களால் அரங்கேற ஆரம்பித்தது. வீதியால் போற வாற மக்களின் அடையாட அட்டைகளை பறித்து வைத்துக் கொண்டு மைதானத்துக்கு வா.. தரலாம் என்பார்கள். சனம் அங்க கூடும்.. அதை கூட்டம் என்று வீடியோ எடுத்து.. தூர்தர்சனில் காட்டுவார்கள். இப்படி ஆரம்பிச்சது.. இப்ப சிங்களத்தின் அனுசரனையோடு.. நல்லா அபிவிருத்தி அடைஞ்சிருக்குது..! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் ஈழத்தில் சிங்களமும் ஹிந்தியாவும் அமெரிக்காவும் பரிசளித்துள்ள சன நாய் அகம்..! :icon_idea::lol:

ஒரு தட்டியிலை நாங்கள் நிம்மதியாக வாழுகிறோம் எண்டு இருக்கு ( மகிழ்ச்சி) இன்னும் ஒரு தட்டியிலை எங்களுக்கு யாரும் உதவி செய்ய இல்லை எண்டு எல்லோ இருக்கு ( கவலை) ... இப்ப எது உண்மை...??

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தட்டிகளுக்கும் யாழில் சிலரின் முழக்கங்களுக்கும் ஒற்றுமை இருக்குது. அங்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மில்லியனை அடிச்சிட்டுது. இங்க புலிப் பினாமிகள் காசை அடிச்சிட்டாங்கள். ஆக.. காசில தான் ஒட்டுக்குழுக்களும்.. சிங்கள அரசும் கவனமா இருக்கினம்..! அங்க தான் அவையிட அரசியல்.. சாமாதானம்.. இன நல்லிணக்கம் நிற்குது. :lol::D

Edited by nedukkalapoovan

எழுத்துகளை பார்க்க யாருடையோ பேட்டி  ஞாபகம் வருகுது ?

எழிலன் மனைவிக்கு எதிராக யாழ். நகரில் ஆர்ப்பாட்டம்
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 21 ஆகஸ்ட், 2013 - 11:19 ஜிஎம்டி
130818170426_elilans_wife_ananthi_sasiha

விடுதலைப் புலிகளின் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளர் எழிலனின் மனைவி ஐநாவின் மனித உரிமைகள்

ஆணையரை சந்திக்கவும் வாய்ப்பு கேட்டிருந்மை குறிப்பிடத்தக்கது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பெண் வேட்பாளர் அனந்தி சசிகரனுக்கு (எழிலன் மனைவி) எதிராகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிராகவும் இன்று புதனன்று காலை யாழ் பஸ்நிலையப் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருக்கின்றது.

வடமாகாணத்தில் சமூகத்துடன் இணைக்கப்பட்ட உறுப்பினர்களின் ஒன்றியம் என்ற பெயரிலான அமைப்பு இந்த ஆர்ப்பாட்டத்தை அமைதிப் பேரணி என்ற பெயரில் ஏற்பாடு செய்திருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அதன் வேட்பாளரான விடுதலைப் புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளர் எழிலனின் மனைவி அனந்தி சசிகரனுக்கும் எதிராக எழுத்துப் பிழைகளுடன் கூடிய வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தார்கள்.

நேற்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இன்னொரு வேட்பாளரான தம்பிராசாவின் வாகனம் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, கூட்டமைப்பின் பெண் வேட்பாளரான அனந்தி சசிகரனுக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது செய்தி சேகரிப்பதற்காக அங்கு சென்றிருந்த செய்தியாளர்கள், ஆர்ப்பாட்டக்காரர்களை தெளிவாகப் படம் எடுக்க முடியாதவாறு சம்பவ இடத்தில் புகை எழும்பச் செய்யப்பட்டிருந்தது.

அத்துடன், தங்களைப் படம் எடுக்கக் கூடாது என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்தியாளர்களைத் தடுத்ததுடன், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சார்பானவர்கள், வீடியோ மற்றும் சாதாரண கமராக்களைக் கொண்டு செய்தி சேகரிக்க முயன்ற செய்தியாளர்களை படம் எடுத்துள்ளனர்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்தது.

எனினும் செய்தியாளர்கள், ஆர்பபாட்டக்காரர்களுடன் குறுக்கிட்டு பேச முடியாதவாறு தடுப்பதில் பொலிசார் பாரபட்சமாக ஈடுபட்டிருந்தாக யாழ்ப்பாணத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/08/130821_jaffnaelilanprotest.shtml

Edited by தயா

 குறுகிய அரசியல் நோக்கத்திற்காக முன்னாள் போராளிகளை காட்டிக்கொடுக்காதே

"காட்டிக்கொடுப்பது" என்ற சொல் என்ன பொருளில் பாவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது அரசிடமா?

அது சரியாயானால் இவர்கள் இதுவரையில் அரசிடமிருந்து பூரண மன்னிப்பு பெறவில்லை. இவர்கள் தங்களின் பழைய புலிகளின் தொடர்புகளுக்கு தாங்கள் இன்னும் தண்டிக்கப்படலாம் என்று பயப்படுகிறார்களா? அப்படியாயின் இவர்கள் பூராணமாக மன்னிக்கபடவில்லை என்ற விடயம், இந்த பாதகை படங்களுடன் நவநீதம் பிள்ளைக்கு அனுப்பிவைக்க வேண்டும். அப்போதுதான் அவர் இந்த புனர்வாழ்வு பெற்ற்வர்களின் அரசு மீது இருக்கும் பயத்தை தெரிந்து கொள்வார்.

எதற்காக அவர்களின் திருமுகங்களை மறைந்துக்கொண்டு நிற்கினம் தெரிகிற முகங்களைப் பார்த்தாலே யார் என்று தெரியுதே 

  • கருத்துக்கள உறவுகள்

எழிலன் மனைவிக்கு எதிராக யாழ். நகரில் ஆர்ப்பாட்டம்
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 21 ஆகஸ்ட், 2013 - 11:19 ஜிஎம்டி
130818170426_elilans_wife_ananthi_sasiha

விடுதலைப் புலிகளின் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளர் எழிலனின் மனைவி ஐநாவின் மனித உரிமைகள்

ஆணையரை சந்திக்கவும் வாய்ப்பு கேட்டிருந்மை குறிப்பிடத்தக்கது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பெண் வேட்பாளர் அனந்தி சசிகரனுக்கு (எழிலன் மனைவி) எதிராகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிராகவும் இன்று புதனன்று காலை யாழ் பஸ்நிலையப் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருக்கின்றது.

வடமாகாணத்தில் சமூகத்துடன் இணைக்கப்பட்ட உறுப்பினர்களின் ஒன்றியம் என்ற பெயரிலான அமைப்பு இந்த ஆர்ப்பாட்டத்தை அமைதிப் பேரணி என்ற பெயரில் ஏற்பாடு செய்திருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அதன் வேட்பாளரான விடுதலைப் புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளர் எழிலனின் மனைவி அனந்தி சசிகரனுக்கும் எதிராக எழுத்துப் பிழைகளுடன் கூடிய வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தார்கள்.

நேற்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இன்னொரு வேட்பாளரான தம்பிராசாவின் வாகனம் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, கூட்டமைப்பின் பெண் வேட்பாளரான அனந்தி சசிகரனுக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது செய்தி சேகரிப்பதற்காக அங்கு சென்றிருந்த செய்தியாளர்கள், ஆர்ப்பாட்டக்காரர்களை தெளிவாகப் படம் எடுக்க முடியாதவாறு சம்பவ இடத்தில் புகை எழும்பச் செய்யப்பட்டிருந்தது.

அத்துடன், தங்களைப் படம் எடுக்கக் கூடாது என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்தியாளர்களைத் தடுத்ததுடன், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சார்பானவர்கள், வீடியோ மற்றும் சாதாரண கமராக்களைக் கொண்டு செய்தி சேகரிக்க முயன்ற செய்தியாளர்களை படம் எடுத்துள்ளனர்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்தது.

எனினும் செய்தியாளர்கள், ஆர்பபாட்டக்காரர்களுடன் குறுக்கிட்டு பேச முடியாதவாறு தடுப்பதில் பொலிசார் பாரபட்சமாக ஈடுபட்டிருந்தாக யாழ்ப்பாணத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/08/130821_jaffnaelilanprotest.shtml

அட இப்ப புகை அடிச்சு பழுக்க வைச்சுத்தான் ஊர்வலம் செய்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

EX%20LTTE2_CI.jpg

ஏக் காவ் மே கிஸான் மே ரகுதாத்தா.. 
 
ரகு இல்லடா மண்டு... ரக ரக... எங்க சொல்லுபாப்பம்...
  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு உதவுவதாக கூறி வெளிநாடுகளில் வாங்கும் பல மில்லியன் ரூபா பணம் எங்கே கூட்டமைப்பே கூறு ? என்று கூட்டமைப்பினைப் பார்த்து ஆர்ப்பாட்டத்தில் கேட்டிருக்கிறார்கள். யாராவது பொதுவாழ்க்கையில் ஈடுபட்டால் அவர்களுக்குப் பிடிக்காத எதிர்தரப்புக்கள் கேட்கிற கேள்வி இது.

தெரிந்தவர்கள் எங்கு எங்கு என்ன் தொகை வாங்கினார்கள் என்று சொன்னால் கூட்டமைப்பை கேட்டுவிலாம் எப்படி அந்த பணம் செலவானது என்று. ஆனால் சீனாவிடம் வாங்கிய 1500 கோடி எப்படி செலவானது?

புலம்பெயர் நாடுகளில் ஒரு சிலர் போராட்டத்தை விற்று இன விடுதலைய காட்டிக் கொடுத்து  வயிறு வளர்ப்பது மாதிரி இதுவும் நடக்குது 

இது நல்ல ஜனநாயகம் தானே ...ஒருவர் காலை ஒருவர் வாருவதும்...சேறு அடிப்பதும்...

முதல் என்றால்....ஒன்று தான் நிச்சயம்.....ம்ம்ம் என்றால் உடனே "மின்கம்பம், வெடி, தலை வெட்டு"..

இல்லை என்றால் ஒரே shell அடி, bombing, பங்கர்...இப்படி உயிருக்கு பயந்து பயந்து ஒவொரு நாளும் உயிர் தப்புறது ஒரு Lotto

இப்போது சனத்துக்கும் பொழுது பம்பலா போகும்....கோயில் திருவிழா...election திருவிழா....காசு கொடுத்தா எதுவும் கிடைக்கும்..

i miss this fun

Edited by naanthaan

ஆனால் சேகுவாராவுக்கு உந்த ஜனநாயகம் பிடிக்காது...... :D

  • கருத்துக்கள உறவுகள்

சோனியளும் ,படைப்புலனாய்வாளர்களும்,ஒட்டுக்குழுக்களும்தான் தமிழைப் பிழை பிழையாக எழுதுபவர்கள்.அவர்களின் எழுத்தே அவர்களைக் காட்டிக் கொடுத்து விட்டது..மகிந்தா நீ என்ன ஆட்டம் போட்டாலும் தமிழர் தாயகத்தில் உன் பருப்பெல்லாம் வேகாது.தமிழ் மக்கள் எப்போதும் தெளிவாகவே உள்ளனர்.

ஆனால் சேகுவாராவுக்கு உந்த ஜனநாயகம் பிடிக்காது...... :D

நிச்சயமாக யாழ்ப்பாணமோ வட/கிழக்கோ சுதந்திரமாக இல்லை தான்....ஆனால் முன்பை (2009க்கு) விட

"சாதாரண" மக்களுக்கு ok

சே-குவேராக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை என்று யார் சொன்னது..அவர் எதிர்த்தது "தனிமனித/சர்வாதிகாரத்தை"தான் :)

சிங்கள கொலைகாரக் கட்சிகளின் சார்பில் ஆனந்தி என்று யாராவது போட்டி போடுகிறார்களோ?

இல்லை என்றால், ஆனந்தி என்ற பெயரைத் 1வது, 2வது கடைசி படங்களில் உள்ள வாசகங்கள் எல்லாம் அப்படியே சிங்கள பௌத்த அரசுக்கு தான் பொருத்தமானவை.

எனவே தலைப்பை மாற்றினால் எல்லாம் சரியாகிவிடும்.

இதில் என்ன ஆச்சரியம் என்றால் அனந்தியை புகழ்ந்து அவரை கூட்டமைப்பிலிருந்து பிரிக்க முயல்வோர் அவரை ஆதாரித்து இப்படித் திரிகளில் எழுதுவதில்லை.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=127697&p=927132

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.