Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊரிற்கு போய் வந்து ஒரு பதிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்து வந்ததற்கு தாயகம் போகாமல் முதல்முதலாக போய் வந்தவர்கள் அந்தமாதிரி இருக்குது நாடு என்று சொல்கின்றார்கள் அவர்களைப்பற்றி என்ன சொல்வது  

காரணம் புலிகளின் ஆட்சியில் தமிழ் ஈழம் எப்படி இருந்தது என்று பார்க்காதவர்கள் எப்படி அந்தமாதிரி இருக்கு என்று சொல்லுவார்கள் ...  :rolleyes:

  • Replies 88
  • Views 13.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
சண்டமாருதன்,
சாதி என்ற முனையில் உங்களது ஆத்மார்த்தமான ஈடுபாட்டையும் பிணைப்பையும் யாழ்களம் அறியும். உங்களது போராளித் தனம் மதிக்கப்படவேண்டியது. ஆனால், நிச்சயமாக, எமது சமூகத்தின் தன்மை எதுவும் எம்முடையது மட்டுமான பிரத்தியேக தன்மை அல்ல. உலகில் வேறு எந்த சமூகத்தோடோ போராட்டத்தோடோ எம்மை ஒப்பிட முடியவில்லை என்ற உங்களது கூற்றோடு எனக்கு அறவே உடன்பாடில்லை. புறச் சூழல்கள், மொழி கலாச்சாரம் என்பன சார்ந்து தன்மைகள் நேரடியாக ஒப்பிட முடியாதபடி இருக்கும். ஒரு மொழிபெயர்ப்பு அங்கு அவசியப்படும். ஆனால் எவ்வளவிற்கு எவ்வவளவு எங்களை நாங்கள் தனித்துவமானவர்களாகப் பார்க்கினும், எங்களது மட்டுமான தன்மை என்று ஒன்றைக் கூட நீங்கள் கூற முடியாது. உலக போராட்டங்கள் மற்றும் சமூகங்கள் பற்றியெல்லாம் நிறைய வாசித்ததாகக் கூறியுள்ளீர்கள். அந்த வகையில் இது பற்றி எவரும் உங்களிற்குக் கூறத் தேவையில்லை. எங்களது பிரத்தியேகமான குணங்கள் அல்லது பிரச்சினைகள் என்று நீங்கள் கருதுபவற்றைப் பட்டியலிடுங்கள். பின்னர், இந்த விவாதத்தில் நீங்கள் தான் உங்களின் எதிராளி என்று தற்காலிகமாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். இப்போ, சுகன் தமிழரின் பிரத்தியேக தன்மைகளாகக் கூறும் ஒவ்வொன்றும் வேறு வடிவங்களில் இதர சமூகங்களிலும் உள்ளன என்று நிறுவுவதே குறியாக, ஒரு டிற்ரெக்ரிவ் போல அல்லது ஆராய்ச்சியாளர் போல, நீங்கள் பட்டியலிட்ட தன்மைகளின் வடிவம் மாறிய வடிவங்களை நீங்கள் வாசித்த பல நூறு நூல்களில் தேடுங்கள். என்னால் அடித்துக்கூற முடியும், முடிவில் ஒரு தன்மை கூட தமிழ் சமூகத்தின் பிரத்தியேக தன்மையாகப் பட்டியலில் மிஞ்சாது.
 
பிரச்சினை என்னவெனில் பிரச்சினைகளின் மருவிய வடிவங்களிற்கு மருவிய தீர்வுகள் தேவைப் படும். சில தீர்வுகள் மண்டையைப் பிழிந்து அடையவேண்டி இருக்கும். நேரமும் சக்தியும் அநேகம் தேவைப்படும். வெறுப்பேற்றும். ஆனால் தீர்வு இல்லை என்பது ஏற்புடையது அல்ல. பிரச்சினையினையினைத் தீர்த்தலில் பல அணுகுமுறைகள் உள்ளன. எனக்குப் பிடித்த முறைகளில் ஒன்று, ஒரு பூதாகர பிரச்சினையினன உடைத்து, அதன் கருவில் அடிப்படையில் அதன் தன்மை என்ன என்பதை ஆராய்வது. ஒவ்வொருவரிற்கு ஒவ்வொரு அணுகுமுறை வினைத்திறன் மிக்கதாய் இருக்கும்.
 
ஒரு அறுவைச்சிகிச்சை வைத்தியர், சிகிச்சையின் நடுவில் எதிர்பாராப் பிரச்சினைகள் பல வருவதைப் பார்த்ததும், மனந்தழர்ந்து, பானிக் ஆகி, அவை அனைத்தையும் குறித்த நேரத்திற்குள் அணுகுவதற்குப் பதில் நோயாளியின் தொண்டையினை வெட்டிவிடுவோம் என்று முடிவெடுக்க முடியாது. அப்படி மட்டும் தான் ஒருவரிற்குத் தோன்றுகின்றது எனின், அவர் வேறு தொழில் பார்க்க வேண்டும். அதுபோல் தான் சமூகவிஞ்ஞானமும் என்பதும் எனது அபிப்பிராயம். எப்போதெல்லாம் ஒரு பிரச்சினை சார்ந்து மனந்தழர்ந்து போய்  இந்தப் பிரச்சினையினைத் தீர்ப்பதற்கு இந்த இனத்தையே அழித்துவிடுவது தான் ஒரே வழி என்று எமக்குத் தோன்றுகிறதோ, அப்போதெல்லம் அபாய ஒலி எமக்குள் ஒலித்தே ஆகவேண்டும்.
 
தும்பளையான்,
உங்களது கருத்தோடு முற்றாக உடன்படுகிறேன். இதனால் தான் எனது பதிவினை 'கங்கைக்குச் சென்று அஸ்த்திகரைத்து வந்த பயணம்' என்று முடித்திருந்தேன். இது எமக்கு மட்டுமல்ல புலம்பெயரும் அனைத்து மக்களும் சந்திக்கும் ஒன்று தான். எத்தினை புத்தகத்தில் படித்தாலும், 'அழுதழுதும் பிள்ளை அவளே பெறவேண்டும்' என்பதைப் போல, புலப்பெயர்வின் நீட்ச்சியில், குறிப்பாக நீண்டகாலம் நாட்டிற்கு மீள முடியாத நிலைகள் இந்திருக்கையில், இத்தகைய ஒரு 'நிஜத்தின் அறைதல்' நிகழத்தான் செய்யும். இசைக்கலைஞன் குறிப்பிட்ட கோயிலின் முன்னிருந்த கடையின் தேனீர் போல, பல நினைவுகள் தேங்கித்தான் கிடக்கும். ஏறத்தாள ஊர்நினைவு ஒரு எஸ்ககேப்பிசம், பெயின்கில்லர்;, ஊக்கிமாத்திரை, போதை, பொழுதுபோக்கு இப்படி பல்வேறு தோறணைகளில் புலம்பெயர்ந்த வாழ்வின் நீட்டிசியில் பாத்திரமாற்றிக்கொண்டிருக்கும். பதிவில் குறிப்பிட்டதைப் போல. ஊர் மாறிவிட்டது என்பது மட்டுமன்றி, எங்களது ஒறிஜினல் நினைவு கூட காலப்போக்கில் எங்கள் கற்பனையின் திறத்தில் கண்டபடிக்கு பூதாகரமாகப் பெருப்பிக்கப்பட்டு மாற்றிப்பதியப்பட்டிருக்கும்--நம் ஊரில் பசுக்களே இல்லை அனைத்தும் காராம்பசுக்கள் தான் என்பது போல. ஊரில் போய் எங்கு காராம்பசுவைக் காண்பது? எனவே இந்தப் பிரச்சினை அறிவுபூர்வமாகப் பார்க்கையில் மிகச்சிறிய பிரச்சினை தான். ஆனால் உணர்வு என்று ஒன்று ஆட்டிப்படைக்கத்தானே செய்கிறது. அதுவும் கொஞ்சம் கற்பனை கைப்படுபவர்களிற்கு உபாதைகள் அதிகம் தானே. அந்தவகையில் தான் இந்தப்பதிவு.
 
அத்தோடு, அரசியல் முனையிலும், நினைவும் நிஜமும் மாறுபடத்தான் செய்கின்றன. பொருளாதார உயர்வு மட்டுமே குறி, சந்தையில் மட்டுமே எமது கவனம் என்றால், பொருளாதார உயர்வு நோக்கி புலத்தில் என்னென்னவெல்லாம் நாம் செய்கிறோமோ அதை ஊரிலும் செய்வார்கள் என்ற புரிதல் தெளிவாக எமக்குள் ஏற்படத்தானே வேண்டும். புலத்தில் ஒரு வீட்டினை யார் அதிகவிலை தருகிறார்களோ அவர்களிற்குத் தான் விற்பார்கள். ஊரிலும், காணிகள் துண்டாடப்பட்டு அதிகவிலை தருபவர் எந்தத் தேசியத்தைச் சேர்;ந்தவர் என்பது ஒரு பொருட்டே இன்றி விற்கப்படுதல் தான் பொருளாதார உயர்வு நோக்கிய திறந்த சந்தை மனநிலைக்கு நியாயப்படமுடியும். ஊர் மாறாது இருக்கவேண்டும் என்று புலத்தில் இருந்து நினைப்பது ஏற்றுக்கொள்ளமுடியாது என்று நீங்கள் கூறுவதைப் போல், ஊரவன் தனது காணியினை யாரிற்கு விற்கலாம் என்பதும், புலத்தில் பொருளாதார உயர்வைத் தடையின்றி அடையும் நான் சொல்லமுடியாதது தானே. யாரிற்கு யார் எதை விற்கலாம் என்பது எனது கருத்திற்கு அப்பாற்பட்டதாய்த் தானே இருக்கமுடியும். ஆனால், ஹொஸ்ட்டலில் தங்கி எப்படா தவணை முடியும் என்று வீட்டுநினைவோடு நாட்களை எண்ணிக்கொண்டிருப்பவன் தவணை முடிந்து வீடு செல்கையில் வீட்டில் அம்மாவின் கட்டிலில் வெள்ளைக்காரி படுத்திருப்பதைக் காண்கையில் உணர்வு குளப்படி விடத்தானே செய்யும். அனைத்தும் எதிர்பார்க்கவும் ஏற்றுக்கொள்ளவும் படத்தான் வேண்டும். அறிவு பூர்வமாக சரிதான், உணர்வு பூர்வமாக ஒருக்கா 'கங்கைக்குப் போய் அஸ்த்திகரைத்து' வெற்றிடத்தை உணரவேண்டித் தானே இருக்கிறது.
 
மேலும், புலத்தவர்கள் ஊரவரில் ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்பதைப் போல், ஊரவரும் புலத்தவரை ஏமாற்றக்கூடாது. எந்தச் சித்தாந்தமோ, பெறுமதிகளோ, பழைய கோசங்களோ இனிமேல் அர்த்தமற்றன, இனி ஒரு போராட்டத்தையும் நாங்கள் அனுமதியோம், எங்களிற்குத் தேவையானது மூன்றே மூன்று, முதலாவது பொருளாதாரம், இரண்டாவது பொருளாதாரம், சொல்ல மறந்திட்டன் மூன்றாவதும் பொருளாதாரம் என்பது அவர்களது நிலை ஆயின், அதை மறைத்துப் புலம்பெயர் தமிழரை ஏன் ஏய்க்கவேண்டும்? அரசியல் கட்சிகள் தொட்டு அனைத்தும் 13ம் திருத்தச் சட்டம் அல்ல எதுவும் வேண்டாம், புதிய உடன்படிக்கைகள் திறந்தவர்த்தகவலையம் சார்ந்து மட்டுமே சிந்திக்கப்படவேண்டும் என்று பேசத் தொடங்கட்டும். புலம் பெயர்ந்தவர்கள் ஊரில் தங்கியிருக்க வேண்டிய தேவையில்லை. தமக்கு வேண்டியதைத் தாமே அவர்கள் தங்கள் ஊர்களில் அல்லது மேற்கு ஒரு கொத்தணியாக அடைந்துகொள்ளலாம் தானே. பலரும் பேசியதைப் போல இலங்கைக்கு வெளியான தமிழீழம் என்பது கூட ஒரு 'லொஜிக்கல் என்ரிற்ரியாக' சாத்தியம் தானே. மில்லியன் டொலர் செலவில் ஊரின் பள்ளிக்கு மதிலும் மண்டபவும் ஏன் புலத்தில் இருந்து கட்டவேண்டும்? ஊரின் நினைவைப் புலத்தில் சித்தரிக்க அந்தத்தொகை பயன்படலாமே. பொருளாதாரம் என்று மட்டும் பேசின்;, மேசைக்குக் கொண்டுவருவதற்கு ஊரவரிடம் என்ன உள்ளது?
 
சிங்கப்பூர் பற்றிய எனது கருத்தானது, பொருளாதார உயர்வு தான் குறியாகினும் ஒரு மக்கள் குழுமம் எவ்வாறு தன்னைக் காலத்தின் நகர்ச்சியில் காணவிரும்புகிறது என்பது வெறுமனே சடப்பொருட்களைப் பார்ப்பதால் மட்டும் கைப்படாது. ஊலகில் அனைவரும் அறிந்த நாடாகச் சிங்கப்பூர் இருப்பதற்கு அதன் மின் விளக்குகள் அல்லவே காரணம். ஒரு விஷன் தான் அதன் காரணம். இதனால் தான் ஊரின் புத்தகக் கடைகளில் காத்திரமாக நூல்கள் கிடைக்கவில்லை என்பதையும் பதிவில் சேர்த்திருந்தேன்.
 
ரதி,
புலிகள் காலத்திலும் சாதி இருந்தது என்பதை மறுக்கவில்லை. ஆனால் இங்கு சாத்திரி மற்றும் சுகன் உட்படப் பலர் கூறுவதைப் போல, புலிகள் காலத்தில் எந்த மாற்றமும் நிகழவில்லை, மக்கள் அப்படியே இருந்தார்கள் அல்லது உறங்கு நிலையில் இருந்தார்கள், புலிகளை அகற்றயதும் அனைத்தும உயிர்ப்புப் பெற்றன என்பது ஏற்புடையது அல்ல.  சதையும் தோலுமான மனிதன் இயங்கு தளத்தில் அனுபவங்களால் மட்டுமே கட்டமைக்கப்படுகிறான். மனித மனம் என்பது அனுபவங்களினால் மட்டுமே சாத்தியப்படுகிறது. அவ்வாறு இருக்கையில், பேச்சிற்கு நல்லா இருக்கிறது என்பதற்காக புலியை நீக்கியதும் எல்லாம் றீசெற்ற ஆகிவிட்டது என்று கூறிவிடமுடியாது. ஆனால், கற்றுக்கொள்ளப்பட்டவற்றைப் பரந்த அளவில் நடைமுறையில் காணமுடியவில்லைத் தான். அதன் ஒரே ஒரு விளக்கம் எதுவும் கற்றுக்கொள்ளப்படவில்லை என்பதாக மட்டும் இருக்கவேண்டியதில்லை. மனித மூளை சுவாரசியமானது. சிலவற்றைச் சிலவோடு தொடர்பு படுத்தி மட்டும் பேணி வைத்திருக்கும், சிலவற்றை தனது பாதுகாப்புச் சார்ந்து மறைத்து வைக்கும். கற்றுக்கொள்ளப்பட்டவை ஆயுத போராட்டம் என்ற context கு அப்பால் transferable திறன்களாக அடையாளப்படுத்தவும் பிரயோகிக்கவும் படுகையில் பல விடயங்கள் மீளத் தெரியும். இப்போதைக்குத், தடுப்பில் இருந்த மீண்டு பிரத்தியேக வாழ்வில் ஈடுபட்டிருக்கும் பலரில் இதனை அவதானிக்க முடிகிறது. சரியான தலைமைத்துவத்தால் அதை பொதுமக்களிடம் பரந்தளவில் மீளச் செய்ய முடியயும் என்பது எனது திடமான நம்பிக்கை.

Edited by Innumoruvan

நல்லதொரு பதிவூ....Innumoruvan

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்....

நானும் 23 வருடங்களின் பின் கடந்த வருடம் யாழ் சென்றேன்.
ஆனால் வைத்தியர் தாதி ஆகியோரின் சேவை தொடர்பாக எனக்கு வேறு ஒரு பார்வை நேர்மறையான அனுபவம் கிடைத்தது....
அதை எழுதிக் கொண்டிருக்கின்றேன்.

நீங்கள் குறிப்பிடுகின்ற வைத்தியர்கள் தாதி மார் இருக்கலாம்...  ஆனால் அது பொதுமைப்படுத்தலுக்கு உரிய ஒன்றல்ல....
நன்றி

ஒரு விடயத்தை மட்டும் தெளிவாக சொல்ல முடியும்...  எங்களால் தாயகத்திலும் எதையும் காப்பாத்த முடியவில்லை அதற்கு பின்னர் வெளியிலும் எதையும் காப்பாத்த முடியாதவர்கள்... !  எங்களின் ஒற்றுமை அப்படி... 

உண்மைதான் தயா!

இந்த விடயத்திலுள்ள ஒற்றுமையை இதற்கு கிடைத்திருக்கும் பச்சைகளின் எண்ணிக்கையைப் பார்த்தால் விளங்குகிறது!!!

போர் இல்லாத சூழ்நிலை தமது உளப்பூர்வமான புலம்பெயர் வாழ்வை நிரந்தரமாக்குவதில் ஏதாவது குளறுபடிகளை உண்டாக்கிவிடுமோ என்ற பீதியில் இருந்தவர்களின் மனதில்,  இந்த சுற்றுலா அனுபவத்தில் கண்டெடுத்த "உண்மை?????" பால் வார்த்துள்ளது தெளிவாகத் தெரிகிறது!

தாய் மண்ணை உண்மையாக நேசிப்பவன், இப்படியொரு அவல நிலையை உண்மையில் கண்டு வருந்தியிருந்தால், புலம்பெயர் வாழ்வைத் துறந்து, தாய் மண்ணில் நிரந்தரமாக இருந்துகொண்டு அதன்  மீட்சிக்கு தன்னாலான பங்களிப்பை வழங்கியிருப்பான்.

எனக்கு ஒரு பெரிய கேள்வி. இன்ப சுற்றுலா புலம் பெயர்ந்த தமிழர்கள் இலங்கைக்கு போனால் அது "Boycott SriLanka"  குள் அடங்காதா? "Boycott SriLanka" என்பது வெளிநாட்டவனுக்கா?

பி.கு
இன்ப சுற்றுலா என்பது உறவினரை பார்க்க போவது , தொழில் ரீதியான பயணம்  , மனிதாபிமான உதவிக்கான பயணம் போன்றவை அல்ல.இது கட்டுரையாளனை பார்த்து கேட்‌ட கேள்வியும் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில் இருந்து ஊருக்குப் போய் வாழ்வ்து சாத்தியமில்லை என பலர் சொல்லிக் கேட்டுள்ளேன்.. ஆனால் இந்த "சாத்தியமில்லை" என்பது "தேவையில்லை" அல்லது "விருப்பமில்லை" போன்ற மனக்காரணிகளால் வருவது என நினைக்கிறேன்.

அண்மையில் ஒரு வெள்ளை ஜேர்மானியரை சந்தித்தேன்.. எமது தாயகத்திற்குச் சென்று அங்கு ஆறு மாதங்கள் குடும்பமாக வாழ்ந்துள்ளார். காலநிலை, வசதிக்குறைவு என்பன ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் இரண்டு மாதங்களில் பழகிவிட்டது என்றார்.. திரும்பியதற்கு ஒரே காரணம் பிள்ளையை பள்ளிக்கூடத்தில் அடிக்கிறார்கள் என்பது..

வெக்கை நாடுகளில் இருந்து வந்து கடும் குளிரை, வேற்றினக் கலாச்சாரங்களை சமாளித்து வாழப் பழகிக் கொண்ட எங்களுக்கு அங்கே திரும்பவும் சென்று வாழ்வை அமைத்துக் கொள்வது பெரிய கடினவேலையாக இருக்கப்போவதில்லை.. ஆனால் அதற்கு அடிப்படையில் ஒரு மனவிருப்பம் இருக்க வேண்டும்.. :unsure:

எனக்கு ஒரு பெரிய கேள்வி. இன்ப சுற்றுலா புலம் பெயர்ந்த தமிழர்கள் இலங்கைக்கு போனால் அது "Boycott SriLanka"  குள் அடங்காதா? "Boycott SriLanka" என்பது வெளிநாட்டவனுக்கா?

இதை முந்தி ஒருக்கால் கேட்டு பேச்சு வாங்கின ஞாபகம் இருக்கு.. :rolleyes: நல்வாழ்த்து நான் சொல்லுவேன்.. :D
 
இதை முந்தி ஒருக்கால் கேட்டு பேச்சு வாங்கின ஞாபகம் இருக்கு.. :rolleyes: நல்வாழ்த்து நான் சொல்லுவேன்.. :D

என்ன பேச்சு வேண்டநல்வாழ்த்தா? :D  இது ஒவ்வொரு இலங்கை அரசால் பாதிக்கப்பட்ட தமிழனும் தங்கள் மனச்சாட்சியை கேட்கவேண்டிய கேள்வி. என்னை பேசி என்ன பயன்?

இப்ப தப்பிட்டேன் இல்லை! எனக்கு பேச்சு வாங்கி தாறதில இசைக்கு என்னா இன்பம் :unsure:

:D :D

Edited by கா ளா ன்

உண்மைதான் தயா!

இந்த விடயத்திலுள்ள ஒற்றுமையை இதற்கு கிடைத்திருக்கும் பச்சைகளின் எண்ணிக்கையைப் பார்த்தால் விளங்குகிறது!!!

போர் இல்லாத சூழ்நிலை தமது உளப்பூர்வமான புலம்பெயர் வாழ்வை நிரந்தரமாக்குவதில் ஏதாவது குளறுபடிகளை உண்டாக்கிவிடுமோ என்ற பீதியில் இருந்தவர்களின் மனதில்,  இந்த சுற்றுலா அனுபவத்தில் கண்டெடுத்த "உண்மை?????" பால் வார்த்துள்ளது தெளிவாகத் தெரிகிறது!

தாய் மண்ணை உண்மையாக நேசிப்பவன், இப்படியொரு அவல நிலையை உண்மையில் கண்டு வருந்தியிருந்தால், புலம்பெயர் வாழ்வைத் துறந்து, தாய் மண்ணில் நிரந்தரமாக இருந்துகொண்டு அதன்  மீட்சிக்கு தன்னாலான பங்களிப்பை வழங்கியிருப்பான்.

ஒருவன் நல்லா நடக்கும்/இருக்கும் போது விரும்புவதும் அதே ஆள் பிழை/தாழ்ந்து  விடும்போது எட்ட இருப்பதும் மனித இயல்பு தானே. எங்களை சராசரி மனிதனாகத்தான் பார்க்கவேண்டும்.கடவுளாக அல்ல சகோதரி :(

 நிச்சயமாக, எமது சமூகத்தின் தன்மை எதுவும் எம்முடையது மட்டுமான பிரத்தியேக தன்மை அல்ல. உலகில் வேறு எந்த சமூகத்தோடோ போராட்டத்தோடோ எம்மை ஒப்பிட முடியவில்லை என்ற உங்களது கூற்றோடு எனக்கு அறவே உடன்பாடில்லை. புறச் சூழல்கள், மொழி கலாச்சாரம் என்பன சார்ந்து தன்மைகள் நேரடியாக ஒப்பிட முடியாதபடி இருக்கும். ஒரு மொழிபெயர்ப்பு அங்கு அவசியப்படும். ஆனால் எவ்வளவிற்கு எவ்வவளவு எங்களை நாங்கள் தனித்துவமானவர்களாகப் பார்க்கினும், எங்களது மட்டுமான தன்மை என்று ஒன்றைக் கூட நீங்கள் கூற முடியாது. உலக போராட்டங்கள் மற்றும் சமூகங்கள் பற்றியெல்லாம் நிறைய வாசித்ததாகக் கூறியுள்ளீர்கள். அந்த வகையில் இது பற்றி எவரும் உங்களிற்குக் கூறத் தேவையில்லை. எங்களது பிரத்தியேகமான குணங்கள் அல்லது பிரச்சினைகள் என்று நீங்கள் கருதுபவற்றைப் பட்டியலிடுங்கள். பின்னர், இந்த விவாதத்தில் நீங்கள் தான் உங்களின் எதிராளி என்று தற்காலிகமாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். இப்போ, சுகன் தமிழரின் பிரத்தியேக தன்மைகளாகக் கூறும் ஒவ்வொன்றும் வேறு வடிவங்களில் இதர சமூகங்களிலும் உள்ளன என்று நிறுவுவதே குறியாக, ஒரு டிற்ரெக்ரிவ் போல அல்லது ஆராய்ச்சியாளர் போல, நீங்கள் பட்டியலிட்ட தன்மைகளின் வடிவம் மாறிய வடிவங்களை நீங்கள் வாசித்த பல நூறு நூல்களில் தேடுங்கள். என்னால் அடித்துக்கூற முடியும், முடிவில் ஒரு தன்மை கூட தமிழ் சமூகத்தின் பிரத்தியேக தன்மையாகப் பட்டியலில் மிஞ்சாது.
 
பிரச்சினை என்னவெனில் பிரச்சினைகளின் மருவிய வடிவங்களிற்கு மருவிய தீர்வுகள் தேவைப் படும். சில தீர்வுகள் மண்டையைப் பிழிந்து அடையவேண்டி இருக்கும். நேரமும் சக்தியும் அநேகம் தேவைப்படும். வெறுப்பேற்றும். ஆனால் தீர்வு இல்லை என்பது ஏற்புடையது அல்ல. பிரச்சினையினையினைத் தீர்த்தலில் பல அணுகுமுறைகள் உள்ளன. எனக்குப் பிடித்த முறைகளில் ஒன்று, ஒரு பூதாகர பிரச்சினையினன உடைத்து, அதன் கருவில் அடிப்படையில் அதன் தன்மை என்ன என்பதை ஆராய்வது. ஒவ்வொருவரிற்கு ஒவ்வொரு அணுகுமுறை வினைத்திறன் மிக்கதாய் இருக்கும்.
 
ஒரு அறுவைச்சிகிச்சை வைத்தியர், சிகிச்சையின் நடுவில் எதிர்பாராப் பிரச்சினைகள் பல வருவதைப் பார்த்ததும், மனந்தழர்ந்து, பானிக் ஆகி, அவை அனைத்தையும் குறித்த நேரத்திற்குள் அணுகுவதற்குப் பதில் நோயாளியின் தொண்டையினை வெட்டிவிடுவோம் என்று முடிவெடுக்க முடியாது. அப்படி மட்டும் தான் ஒருவரிற்குத் தோன்றுகின்றது எனின், அவர் வேறு தொழில் பார்க்க வேண்டும். அதுபோல் தான் சமூகவிஞ்ஞானமும் என்பதும் எனது அபிப்பிராயம். எப்போதெல்லாம் ஒரு பிரச்சினை சார்ந்து மனந்தழர்ந்து போய்  இந்தப் பிரச்சினையினைத் தீர்ப்பதற்கு இந்த இனத்தையே அழித்துவிடுவது தான் ஒரே வழி என்று எமக்குத் தோன்றுகிறதோ, அப்போதெல்லம் அபாய ஒலி எமக்குள் ஒலித்தே ஆகவேண்டும்.
 
உங்கள் பதிலுக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களையும் உள்வாங்கிக்கொண்டேன்.

இனத்தை அழித்துவிடுவது என்பது விருப்பு அல்ல ஆனால் அது நடக்கின்றது. அது கட்டாயமாகின்றது என்பதை புரிந்துகொள்வதில்தான் சிக்கல்கள்.

அடிமைப்படுத்தலுக்கு எதிராக உலகில் அத்தனை இனங்களும் போராடிக்கொண்டே இருக்கும். இது மனித இயற்கையான குணம். அது இனங்களுக்கிடையில் மதங்களுக்கிடையில் அதே நேரம் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவென பல பரிணாமங்களில் மனிதன் போராடிக்கொண்டே இருக்கின்றான்.

தமிழரில் இரண்டு போராட்டங்கள் தொடர்ந்து நடக்கின்றது.

ஒன்று தனக்குள் இருக்கும் சாதிய பிரதேச மத ஏற்றதாழ்வுகளுக்கு எதிரான போராட்டம். இதற்கு அர்த்தம் கொடிபிடித்து வீதியில் இறங்கி வன்முறையில் ஈடுபடும் போராட்டம் என்பதல்ல.. இயற்கையாக ஒரு முயற்சி எந்த ஒரு காரணத்தை கொண்டு தாழ்த்தப்படுகின்றானோ அதற்கெதிராக போராடும் தன்மை இருந்துகொண்டே இருக்கின்றது. இது நடப்பது பலுநூறு வருடங்கள். இந்த முயற்சியே பொதுவான தமிழரின் குணத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உள்ளகப்போராட்டத்திற்கு ஒரு எல்லை இருக்கின்றது. அது தமிழன் என்ற இனக் குடையின் கீழ்தான் நடகும். அதை விட்டு அவர்கள் விலத்திக்கொண்டே இருக்கின்றார்கள். தமிழர்கள் தங்களுக்கு தனித்தீவுகளாகின்றார்கள். புலப்பெயர்வுகள் அடுத்தடுத்த தலைமுறைகள் என்னும் என்னும் விலத்திக்கொண்டே இருக்கின்றார்கள் இருப்பார்கள். தாயகத்தில் இது வேறுவிதமாக இருக்கும். பிறிதொரு இனத்தின் துணையும் தாழ்த்துபவனுக்கு எதிரான பகையும் விரிவாகும். இவைகள் நடக்கின்றது. சிதைவுகள் தவிர்க்க முடியாததது. இனக்குடைக்குக் கீழ் அரவணைப்பு இருந்தால்தான் அந்த நிழலில் எவரும் அண்டிச்செல்ல முடியும். அங்கே வெறுப்பும் விரோதமும் நிரம்பி வளியும்போது அதை விட்டு அகல்வது தவிர்க்க முடியாத இயற்கை.

தமிழர்களின் அடுத்த போராட்டம் இனவிடுதலைக்கு எதிரான போராட்டம். புறநிலையில் சிங்களத்திற்கு எதிரான போராட்டம். அதற்கான பலத்தை தமிழர்களின் நெடுங்கால முதல்நிலைப்போராட்டம் தராது. அத்தோடு தமிழர்களின் உள்ளகப்பேராட்டத்துள் புறநிலை ஆக்கிரமிப்பாளர்கள் போதுமானளவு கால்பதித்துவிட்டார்கள்.

உள்ளகப் போராட்டத்திலிருந்து விடுதலை என்பது இன எல்லைக்கு அப்பாற்பட்டுச் செல்லுதல்.

புறநிலையில் சிங்கள ஒடுக்குமுறையில் இருந்து விடுதலை என்பது இனமாக ஒன்றுபட்டு எதிர்கொள்ளுதல்.

இதையே நான் சொல்கின்றேன் தமிழர்கள் தங்கள் சுயத்தை இழப்பதும் விடுதலையும் ஒரே நேர்கோட்டில் இருக்கின்றது என்று.

உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்கின்றேன். அறிவார்ந்த அணுகுறை புத்திசாலித்தனம் கடும் உழைப்பு முயற்சி இருந்தால் எந்தப்பிரச்சனையும் தீர்க்கமுடியும். முடியாது என்று உலகில் எதுவும் இல்லை. எவ்வளவு முரண்பட்டாலும் இறுதியாக இப்படித்தான் கருத்துக்கள் முடியும். என்று கூறி இத்தலைப்பில் இருந்து விடைபெறுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் தயா!

இந்த விடயத்திலுள்ள ஒற்றுமையை இதற்கு கிடைத்திருக்கும் பச்சைகளின் எண்ணிக்கையைப் பார்த்தால் விளங்குகிறது!!!

போர் இல்லாத சூழ்நிலை தமது உளப்பூர்வமான புலம்பெயர் வாழ்வை நிரந்தரமாக்குவதில் ஏதாவது குளறுபடிகளை உண்டாக்கிவிடுமோ என்ற பீதியில் இருந்தவர்களின் மனதில்,  இந்த சுற்றுலா அனுபவத்தில் கண்டெடுத்த "உண்மை?????" பால் வார்த்துள்ளது தெளிவாகத் தெரிகிறது!

தாய் மண்ணை உண்மையாக நேசிப்பவன், இப்படியொரு அவல நிலையை உண்மையில் கண்டு வருந்தியிருந்தால், புலம்பெயர் வாழ்வைத் துறந்து, தாய் மண்ணில் நிரந்தரமாக இருந்துகொண்டு அதன்  மீட்சிக்கு தன்னாலான பங்களிப்பை வழங்கியிருப்பான்.

உதை நீங்கள் ஊரில் இருந்து கொண்டு எழுதியிருந்தால் சந்தோசமாய் இருக்கும்.நாங்களும் ஏற்கலாம்

இதிலே எனக்கொன்றும் பிழை இருப்பதாகத் தெரியவில்லை. நீங்கள் வாழும் நாடுகளில் உங்களை எல்லோரும் அனுசரித்து மரியாதையை வழங்க வேண்டும் என எதிர்பார்ப்பீர்கள். ஆனால் மிகவும் துவேஷமாகச்  சிங்களவன் என்று கருத்து எழுதுகிறீர்கள். 

நான் எழுதியது பிழை தான்.மன்னிக்கவும்.பொதுவாக நான் அப்படி எழுதுவதில்லை.நேற்று என்ன நடந்தது என்று தெரியவில்லை சுட்டிக் காட்டியதிற்கு நன்றி

நான் எழுதியது பிழை தான்.மன்னிக்கவும்.பொதுவாக நான் அப்படி எழுதுவதில்லை.நேற்று என்ன நடந்தது என்று தெரியவில்லை :unsure: சுட்டிக் காட்டியதிற்கு நன்றி

இதிலே எனக்கொன்றும் பிழை இருப்பதாகத் தெரியவில்லை. நீங்கள் வாழும் நாடுகளில் உங்களை எல்லோரும் அனுசரித்து மரியாதையை வழங்க வேண்டும் என எதிர்பார்ப்பீர்கள். ஆனால் மிகவும் துவேஷமாகச்  சிங்களவன் என்று கருத்து எழுதுகிறீர்கள். 

நான் எழுதியது பிழை தான்.மன்னிக்கவும்.பொதுவாக நான் அப்படி எழுதுவதில்லை.நேற்று என்ன நடந்தது என்று தெரியவில்லை சுட்டிக் காட்டியதிற்கு நன்றி
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான பதிவு.

ஊர் சென்று திரும்பிய உணர்வுகளை நன்றாக இரை மீட்‌டா உணர்வு/ திருப்தி.

இன்னும் சில காலம் செல்ல உங்கள் உணர்வுகள் மாறலாம், தாயகம் என்பது சுத்திபார்த்து விட்து வருவதை விட வேறு.

கிளிநொச்சி சிங்கப்பூர் என்பததிற்ர்க்கும், அவர்களோடு 2 மாதம் இருந்து விட்டு நண்புங்கள் தமிழ் ஈழம்நாளை கிடைக்கும் என்பதற்க்கும் ஏதாவது வேறுபாடு உண்டா என என்னால் உணர முடியவில்லை.

எனது நண்பன் ஒருவன் லண்டன் இல் மேலதிக சத்திர சிகிச்சை வைத்தியர் பயிற்சி எடுக்க வந்தவன் , போன கிழமை இறோப்பா பயணம் செய்தவர், அவரிடம் கெட்டேன் எப்படி டூர் என்று , "நாங்கள் கானகாலம் சண்டை பிடிச்சு போட்டோம் . நாங்கள் 30 வருடமாக உடைத்தல் மாத்த்திரம் தான் செய்தனாங்கள் ஆனால் அவர்கள் 2 உலக யுத்த்தத்திர்ற்கு பிறகு செய்ய வில்லை. அதுதான் வித்த்த்தியாசம் ..என்று"  அது சரியோ தவறோ உங்களிடமே விடுகிறேன் ...

இதில் அரசியல் வியாக்கியானங்களை தவிர்த்த்து பார்த்த்தால் நல்ல பதிவு. புலம் பெயர்ந்தவர்களையும் தயகத்த்தில் இருப்பவர்களையும் பிரிக்கும் அறிவீலிகள் எங்கும் நிறைந்து இருக்கிறார்கள் , இன்றும் ஒருவர் facebook கவிதை போட்டிருந்தார் புலம் பெயர்ந்த கலாச்சாரத்த்த்தை மதிக்காத  நாய்கள் என்று கோவிலில் வெட்டீ கட்டாதாத்திறிர்க்கு  ...அவர்களை ஒன்றும் செய்ய முடியாது..

நான் 15 நாள் விடுப்பில் போனேன் , முதல் நாலு நாள் காச்சல் , டிக்கெட்டை மாத்திப்போட்டு திரும்ப வருவோமோ என்று நினைத்தேன் ..இழுத்து பிடித்து போகப்போக கொன்சம் பழகி விட்டது ....கொழும்பில் நண்பன் ஒருவனின் flats இருந்தால் "பாண்" போறனை திறம் ...ஆனாலும் இப்ப திருப்ப போக இருக்கிறேன் வார வருடம். காசு கடன் கட் டி முடித்த்த பிற்பாடு .

எனகு இம்மிக்கிரேசன் அனுபவம் ,

பிள்ளைகளுக்கு ஒன் லைந் விசா எடுத்த்து கொண்டு போக, VISA வரவில்லை என்றான் (அவர்களுக்கு சும்மா பெயர் சேர்ப்பது மாத்திரமே ) அதற்க்கு காசு கேட்டான் ..அரியன்டமாக இருந்தது..நண்பர்கள் சொன்னார்கள் ஏன் காசு கொடுத்த்து என்று ...அவர்களிடம் சொன்னேன் நான் பழைய.....................அல்ல ..அதனாலே கொடுத்தேன் என்று ..ஒரு இடத்த்திலும் சிங்களம் கதைக்க வில்லை ... இலங்கை ஒரு தோல்வியடைந்த நாடு என்பதை நிரூபிப்பதற்ர்க்கி  ஒரு கனெடியன் பாஸ் போர்ட் உடன் கட்டுனாயக்கவிர்ற்கு போனால் சரி ... நல்ல பம்பலாகவும் இருக்கும் ...போட்டார் இல் இருந்து பெரிய பெரிய ஆபிசர் வரைக்கும் பிச்சை கேப்பார்கள் ...

  • தொடங்கியவர்

நன்றி சண்டமாருதன், உங்கள் பார்வையினைப் பகிர்ந்துகொண்டமைக்கு.

கிளிநொச்சி சிங்கப்பூர் என்பததிற்ர்க்கும், அவர்களோடு 2 மாதம் இருந்து விட்டு நண்புங்கள் தமிழ் ஈழம்நாளை கிடைக்கும் என்பதற்க்கும் ஏதாவது வேறுபாடு உண்டா என என்னால் உணர முடியவில்லை. ...

நியாயமான கேள்வி தான். 

  • கருத்துக்கள உறவுகள்

தும்பளையான்,
உங்களது கருத்தோடு முற்றாக உடன்படுகிறேன். இதனால் தான் எனது பதிவினை 'கங்கைக்குச் சென்று அஸ்த்திகரைத்து வந்த பயணம்' என்று முடித்திருந்தேன். இது எமக்கு மட்டுமல்ல புலம்பெயரும் அனைத்து மக்களும் சந்திக்கும் ஒன்று தான். எத்தினை புத்தகத்தில் படித்தாலும், 'அழுதழுதும் பிள்ளை அவளே பெறவேண்டும்' என்பதைப் போல, புலப்பெயர்வின் நீட்ச்சியில், குறிப்பாக நீண்டகாலம் நாட்டிற்கு மீள முடியாத நிலைகள் இந்திருக்கையில், இத்தகைய ஒரு 'நிஜத்தின் அறைதல்' நிகழத்தான் செய்யும். இசைக்கலைஞன் குறிப்பிட்ட கோயிலின் முன்னிருந்த கடையின் தேனீர் போல, பல நினைவுகள் தேங்கித்தான் கிடக்கும். ஏறத்தாள ஊர்நினைவு ஒரு எஸ்ககேப்பிசம், பெயின்கில்லர்;, ஊக்கிமாத்திரை, போதை, பொழுதுபோக்கு இப்படி பல்வேறு தோறணைகளில் புலம்பெயர்ந்த வாழ்வின் நீட்டிசியில் பாத்திரமாற்றிக்கொண்டிருக்கும். பதிவில் குறிப்பிட்டதைப் போல. ஊர் மாறிவிட்டது என்பது மட்டுமன்றி, எங்களது ஒறிஜினல் நினைவு கூட காலப்போக்கில் எங்கள் கற்பனையின் திறத்தில் கண்டபடிக்கு பூதாகரமாகப் பெருப்பிக்கப்பட்டு மாற்றிப்பதியப்பட்டிருக்கும்--நம் ஊரில் பசுக்களே இல்லை அனைத்தும் காராம்பசுக்கள் தான் என்பது போல. ஊரில் போய் எங்கு காராம்பசுவைக் காண்பது? எனவே இந்தப் பிரச்சினை அறிவுபூர்வமாகப் பார்க்கையில் மிகச்சிறிய பிரச்சினை தான். ஆனால் உணர்வு என்று ஒன்று ஆட்டிப்படைக்கத்தானே செய்கிறது. அதுவும் கொஞ்சம் கற்பனை கைப்படுபவர்களிற்கு உபாதைகள் அதிகம் தானே. அந்தவகையில் தான் இந்தப்பதிவு.
 
அத்தோடு, அரசியல் முனையிலும், நினைவும் நிஜமும் மாறுபடத்தான் செய்கின்றன. பொருளாதார உயர்வு மட்டுமே குறி, சந்தையில் மட்டுமே எமது கவனம் என்றால், பொருளாதார உயர்வு நோக்கி புலத்தில் என்னென்னவெல்லாம் நாம் செய்கிறோமோ அதை ஊரிலும் செய்வார்கள் என்ற புரிதல் தெளிவாக எமக்குள் ஏற்படத்தானே வேண்டும். புலத்தில் ஒரு வீட்டினை யார் அதிகவிலை தருகிறார்களோ அவர்களிற்குத் தான் விற்பார்கள். ஊரிலும், காணிகள் துண்டாடப்பட்டு அதிகவிலை தருபவர் எந்தத் தேசியத்தைச் சேர்;ந்தவர் என்பது ஒரு பொருட்டே இன்றி விற்கப்படுதல் தான் பொருளாதார உயர்வு நோக்கிய திறந்த சந்தை மனநிலைக்கு நியாயப்படமுடியும். ஊர் மாறாது இருக்கவேண்டும் என்று புலத்தில் இருந்து நினைப்பது ஏற்றுக்கொள்ளமுடியாது என்று நீங்கள் கூறுவதைப் போல், ஊரவன் தனது காணியினை யாரிற்கு விற்கலாம் என்பதும், புலத்தில் பொருளாதார உயர்வைத் தடையின்றி அடையும் நான் சொல்லமுடியாதது தானே. யாரிற்கு யார் எதை விற்கலாம் என்பது எனது கருத்திற்கு அப்பாற்பட்டதாய்த் தானே இருக்கமுடியும். ஆனால், ஹொஸ்ட்டலில் தங்கி எப்படா தவணை முடியும் என்று வீட்டுநினைவோடு நாட்களை எண்ணிக்கொண்டிருப்பவன் தவணை முடிந்து வீடு செல்கையில் வீட்டில் அம்மாவின் கட்டிலில் வெள்ளைக்காரி படுத்திருப்பதைக் காண்கையில் உணர்வு குளப்படி விடத்தானே செய்யும். அனைத்தும் எதிர்பார்க்கவும் ஏற்றுக்கொள்ளவும் படத்தான் வேண்டும். அறிவு பூர்வமாக சரிதான், உணர்வு பூர்வமாக ஒருக்கா 'கங்கைக்குப் போய் அஸ்த்திகரைத்து' வெற்றிடத்தை உணரவேண்டித் தானே இருக்கிறது.
 
மேலும், புலத்தவர்கள் ஊரவரில் ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்பதைப் போல், ஊரவரும் புலத்தவரை ஏமாற்றக்கூடாது. எந்தச் சித்தாந்தமோ, பெறுமதிகளோ, பழைய கோசங்களோ இனிமேல் அர்த்தமற்றன, இனி ஒரு போராட்டத்தையும் நாங்கள் அனுமதியோம், எங்களிற்குத் தேவையானது மூன்றே மூன்று, முதலாவது பொருளாதாரம், இரண்டாவது பொருளாதாரம், சொல்ல மறந்திட்டன் மூன்றாவதும் பொருளாதாரம் என்பது அவர்களது நிலை ஆயின், அதை மறைத்துப் புலம்பெயர் தமிழரை ஏன் ஏய்க்கவேண்டும்? அரசியல் கட்சிகள் தொட்டு அனைத்தும் 13ம் திருத்தச் சட்டம் அல்ல எதுவும் வேண்டாம், புதிய உடன்படிக்கைகள் திறந்தவர்த்தகவலையம் சார்ந்து மட்டுமே சிந்திக்கப்படவேண்டும் என்று பேசத் தொடங்கட்டும். புலம் பெயர்ந்தவர்கள் ஊரில் தங்கியிருக்க வேண்டிய தேவையில்லை. தமக்கு வேண்டியதைத் தாமே அவர்கள் தங்கள் ஊர்களில் அல்லது மேற்கு ஒரு கொத்தணியாக அடைந்துகொள்ளலாம் தானே. பலரும் பேசியதைப் போல இலங்கைக்கு வெளியான தமிழீழம் என்பது கூட ஒரு 'லொஜிக்கல் என்ரிற்ரியாக' சாத்தியம் தானே. மில்லியன் டொலர் செலவில் ஊரின் பள்ளிக்கு மதிலும் மண்டபவும் ஏன் புலத்தில் இருந்து கட்டவேண்டும்? ஊரின் நினைவைப் புலத்தில் சித்தரிக்க அந்தத்தொகை பயன்படலாமே. பொருளாதாரம் என்று மட்டும் பேசின்;, மேசைக்குக் கொண்டுவருவதற்கு ஊரவரிடம் என்ன உள்ளது?
 
சிங்கப்பூர் பற்றிய எனது கருத்தானது, பொருளாதார உயர்வு தான் குறியாகினும் ஒரு மக்கள் குழுமம் எவ்வாறு தன்னைக் காலத்தின் நகர்ச்சியில் காணவிரும்புகிறது என்பது வெறுமனே சடப்பொருட்களைப் பார்ப்பதால் மட்டும் கைப்படாது. ஊலகில் அனைவரும் அறிந்த நாடாகச் சிங்கப்பூர் இருப்பதற்கு அதன் மின் விளக்குகள் அல்லவே காரணம். ஒரு விஷன் தான் அதன் காரணம். இதனால் தான் ஊரின் புத்தகக் கடைகளில் காத்திரமாக நூல்கள் கிடைக்கவில்லை என்பதையும் பதிவில் சேர்த்திருந்தேன்.
 
இன்னுமொருவன் அண்ணா, உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

திறந்த பொருளாதாரத்தை நோக்கி ஊரிலுள்ளவர்கள் அகலக் கால் வைத்து விட்டார்கள். மற்றவர்களுக்குக் காட்ட நினைக்கும் சிந்தனையும், போட்டி மனப்பான்மையும் இதன் முக்கிய ஊக்கிகள். உங்கள் உதாரணம் போல அதிக விலை தருபவர்களுக்கே காணிகள் விற்கப்படுகின்றன. அதுவும் சில கேந்திர முக்கியத்துவம் உள்ள இடங்களை சிங்களவர்களும் முஸ்லீம்களும் கோடிகளைக் கொட்டி வாங்கியிருக்கிறார்கள். இப்போது சட்ட ரீதியாக அது அவர்களுடையது. (முன்பொரு காலத்தில், கொழும்பில் தமிழர்கள் கோடிகளைக் கொட்டி தொடர்மாடி வீடுகளை அமைத்தது போல). அதிகமாக இவ்வாறான காணிகளை அதிக விலைக்கு விற்பவர்கள் புலம்பெயர்ந்த தமிழர்கள் தான். ஊருக்கு விடுமுறை எனப் போகிறார்கள், காலம் காலமாக வாடகை தராமல் இருப்பவர்களை சட்டப்படி நோடீஸ் கொடுத்து எழுப்புகிறார்கள். வீட்டை சந்தையில் அறாவிலைக்குப் போடுகிறார்கள். காசை யார் தந்தாலும் சரி உறுதியை எழுதிவிடுகிறார்கள். அவர்களுக்கு, அவர்கள் இருக்கும் நாடுகளின் மோட்கேஜை கட்ட காசு வந்தா சரி. உதாரணமாக நோர்வேயில் இருக்கும் எனது உறவினர்கள் சமாதான காலத்திலேயே ஊரிலே விலைக்கு வந்த எமது தூரத்து சொந்தங்களின் வீடுகளை குறோண் குறோனாகக் கொட்டி வாங்கினார்கள். இப்போ பத்து வருடங்களின் பின், எங்களுக்கு இனி என்னத்துக்கு என்று விட்டு ஒவ்வொன்றாக வித்துக்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு தாங்கள் பத்து லட்சத்துக்கு வாங்கின வீடுகள் இப்போ ஐம்பது/அறுவது லட்சத்துக்கு விகின்றனவே என்ற மகிழ்ச்சி. இதிலே எதுவிதமான வரியும் இல்லாதததால் சட்டச் செலவுகள் போக மிச்சம் எல்லாம் அவர்களுக்கே. நாங்கள் புலத்திலே ஐரோப்பியன், சீனன், ஆபிரிக்கனுடன் அனுசரித்துப் போவது போல ஊரிலிருப்பவர்களும் அனுசரித்துப் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை. யாழின் சுண்டுக்குளி போன்ற சில இடங்கள் ஏற்றகனவே அப்படி மாறிவிட்டன. இப்போது யாழ்ப்பாணத்தில் கடைகளில் வேலைதேடும் போது முதல் கேள்வி "சிங்களம் தெரியுமா?" தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். இவை அனைத்துமே எமது சமூகம் ஒரு நுகர்வுச் சமூகமாக, சந்தைக் கேற்றப மாறும் சமூகமாக மாறிவருகிறது என்பதற்கான சுட்டிகள்.

நான் முதல் பதிவில் குறிப்பிட்டது போல ஊரவர்கள் புலத்தவர்களை ஏமாற்றுகிறார்கள். முக்கிய நோக்கம் பணம். இங்க எல்லாம் நல்லம், ஒரு பிரச்சனையும் இல்லை என்றால் எப்படி காசு கேட்கலாம்? நுகர்வுப் பொருளாதாரத்தில் சிக்கியிருக்கும் நிலையில் அவர்களின் தேவைகளும் விருப்பங்களும் கூடியிருக்கின்றன. ஊரிலிருக்கும் எனது இரண்டு கல்லூரி நண்பர்கள் என்னிடம் தொலைபேசி காசு கேட்டார்கள். "மச்சான், ஒரு ஆயிரம் அனுப்படா, உனக்கு மூண்டுனாளில உழைக்கிற காசு தானே" ஆயிரம் டொலரா ரூபாவா எண்டு நானே தடுமாறிவிட்டேன். அவளவு சாதாரணமாகக் கேட்டார்கள். இவளவற்றிட்கும் ஒருத்தன் அரச உத்தியோகம், மற்றவன் நல்ல வருமானம் வரும் சொந்த வியாபாரம். புலத்தில் இருப்பவர்களும் சுடுறான், கடத்துறான், கெடுக்கிறான் செய்திகளை கேட்க விரும்புவதால் அதையே அவர்களும் சொல்லுகிறார்கள். அடுத்தமுறை யாராவது இந்த மாதிரி செய்தி சொன்னால் நீங்கள் உங்கள் சுய ஆராட்சியை செய்து ஒரு முடிவுக்கு வாருங்கள். அரசியல் கட்சிகள் கூட புலம்பெயர் தமிழரிடம் காசைத்தனே கேட்கின்றன. சம்பந்தன் ஐயாவே உதவி கேட்டதாக படித்த ஞாபகம். எம்மவர்களின் அரசியலை நீங்கள் இன்னமுமா நம்புகிறீர்கள்?  

புலம்பெயர்ந்தவர்கள் ஊரிலே கோயில் கட்டுவதற்கும், பாடசாலைகளுக்கு கட்டடங்களை அன்பளிப்பு செய்வதற்கும் ஊர்ப் பற்று என்பதை விட "மற்றவர்களுக்கு தமது பணப் பலத்தைக் காட்டல்" என்பதே முக்கிய காரணம். இதன் அடுத்த கட்டமாகத்தான் ஊர் போய் தாங்கள் செய்தவற்றை மற்றவர்களுக்கு காட்டுகிறார்கள். பாடசாலைக் கட்டடத் திறப்பு விழாக்களுக்குப் போகிறார்கள். பாடசாலைகளும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை நன்றாகக் கவனித்து மேலும் உதவிகளைப் பெறுகிறார்கள். புலம்பெயர்ந்தவர்கள் தாம் வசிக்கும் நாடுகளில் ஊரின் நினைவுகளை சித்தரிக்கப் பயன்படுத்தலாம். சில கோயில் நிகழ்வுகள், கலியான வீடுகள், சாமத்திய வீடுகள், இசை விழாக்கள் ஊர் நினைவுகளை புலத்தில் நாட்ட நடக்கும் முயற்சி. அதிலும் போட்டி இருப்பதால் தான் சாமத்தியப்பட்ட பிள்ளையை கெலியில் கொண்டுவந்து இறக்குகிறார்கள். ஆனால் இவை சில மாதங்களில் மறைந்து விடும், யாரும் கதைக்க மாட்டார்கள். ஊரிலே எண்டால் அங்கிருக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு பெயர், இவர்கள் ஒவ்வொரு சமரும் போய் "உதெல்லாம் எங்கட கனடாக் காசில தான் கட்டினது" எண்டு வெட்டிப் பெருமை பேச முடியும். ஊரிலே கோயில்களை எத்தனை தரம் இடித்துக் கட்டுகிறார்கள் எனப் பார்த்தால் உங்களுக்குப் புரியும்.

ஊரவரிடம் பொருளாதாரம் என்னும் போது மேசைக்குக் கொண்டுவர ஒன்றுமே இல்லை. சுய முயற்சி இல்லை, சுய சிந்தனை இல்லை, சுய திட்டமிடல் இல்லை. ஊரவர் சுயத்தை இழந்து பலவருடம். இந்த சுயத்தை இழந்தமையே எமது அழிவிற்கும் காரணம். நாம் எப்போது வெளிநாட்டில் இருப்பவர்கள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பி நகர்வுகளை மேற்ற்கொண்டோமோ அப்பவே எமக்கான ஆப்பு இறுக்கப்பட்டது. ஊரிலிருப்பவர்கள் சுயமாக சிந்திக்க, சுயமாக முடிவெடுக்க, சுயமாக வேலை செய்து தாங்களே தங்களுக்கு சோறுபோட விடும் போது அவர்களிடமும் பொருளாதாரம் என்னும் மேசைக்குக் கொண்டுவர ஏதாவது இருக்கும்.

வெளிநாட்டில் இருப்பவர்கள்  கை கழுவி விடவேண்டும் என நான் சொல்லவில்லை, ஆனால் சிறந்த வழிகாட்டலோட அவர்களின் முயற்சியை ஊக்குவிக்க வேண்டும்.

சிங்கபூர் சிங்கபூராக மாற கிட்டத்தட்ட 25 வருடங்கள் எடுத்தன. இப்போதுதான் 4 வருடங்கள் முடிந்திருக்கின்றன. வளர்ச்சி வீதத்தைக் கணக்குப் பார்த்தால் கையும் கணக்கும் சரியாகத்தான் வருகிறது. சிங்கப்பூரின் வளர்ச்சி வீதம் சராசரியாக 9% எமது தற்போதைய சராசரி வளர்ச்சி வீதம் 10%.  

"Facing severe unemployment and a housing crisis, Singapore embarked on a modernisation programme that focused on establishing a manufacturing industry, developing large public housing estates and investing heavily on public education. Since independence, Singapore's economy has grown by an average of nine percent each year. By the 1990s, the country had become one of the world's most prosperous nations, with a highly developed free market economy, strong international trading links, and the highest per capita gross domestic product in Asia outside of Japan"

கீழே இலங்கை தொகை மதிப்பு, புள்ளிவிபரத் திணைக்களத்தின் வறுமைக்கோடு சம்பந்தமான அட்டவனையை இணைத்திருக்கிறேன். ஏனைய எல்லா மாவட்டங்களையும் விட யாழ் மாவட்டத்தின் சராசரி வறுமைக்கோடு உயர்வானது (கொழும்பை விட!). எம்மிடம் நிறைய potential இருக்கிறது, இதனை சரியாக பயன்படுத்தாது விடின் வேறு இனங்களோ, நாடுகளோ எம்மைப் பாவித்து முன்னேறுவார்கள்.

District official poverty lines

(CCPI based year 2006/07=100)

(Minimum Expenditure per person per month to fulfill the basic needs)

Screenshot.png

Department of Census & Statistics - Sri Lanka

source - http://www.statistics.gov.lk/poverty/monthly_poverty/index.htm

வெளிநாட்டில் இருந்து ஊருக்குப் போய் வாழ்வ்து சாத்தியமில்லை என பலர் சொல்லிக் கேட்டுள்ளேன்.. ஆனால் இந்த "சாத்தியமில்லை" என்பது "தேவையில்லை" அல்லது "விருப்பமில்லை" போன்ற மனக்காரணிகளால் வருவது என நினைக்கிறேன்.

அண்மையில் ஒரு வெள்ளை ஜேர்மானியரை சந்தித்தேன்.. எமது தாயகத்திற்குச் சென்று அங்கு ஆறு மாதங்கள் குடும்பமாக வாழ்ந்துள்ளார். காலநிலை, வசதிக்குறைவு என்பன ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் இரண்டு மாதங்களில் பழகிவிட்டது என்றார்.. திரும்பியதற்கு ஒரே காரணம் பிள்ளையை பள்ளிக்கூடத்தில் அடிக்கிறார்கள் என்பது..

வெக்கை நாடுகளில் இருந்து வந்து கடும் குளிரை, வேற்றினக் கலாச்சாரங்களை சமாளித்து வாழப் பழகிக் கொண்ட எங்களுக்கு அங்கே திரும்பவும் சென்று வாழ்வை அமைத்துக் கொள்வது பெரிய கடினவேலையாக இருக்கப்போவதில்லை.. ஆனால் அதற்கு அடிப்படையில் ஒரு மனவிருப்பம் இருக்க வேண்டும்..

இதை முந்தி ஒருக்கால் கேட்டு பேச்சு வாங்கின ஞாபகம் இருக்கு.. :rolleyes: நல்வாழ்த்து நான் சொல்லுவேன்..

உண்மையிலேயே காசும் கொஞ்சம் மூளை வளமும் இருந்தால், இங்கிருப்பதை விட வசதியாக இலங்கையில் இருக்கலாம் (ஊரில் இருக்க இன்னும் சில வருடங்கள் எடுக்கும்). எனக்கு தெரிந்த ஒரு லண்டன் கோஷ்டி இப்போ கொழும்பிலே ஆறுமாதமாக நிக்கிறார்கள். மூண்டுமாதம் என்றுதான் ஆரம்பத்தில் போனார்கள், ஆனால் இப்போ நீடித்திருக்கிறார்கள். படிக்கும் வயதில் பிள்ளைகள் இருப்பவர்களும் வேற மொழிகளில் படித்த பிள்ளைகளும் கஷ்டப்படுகிறார்கள். பிரிடிஸ் கல்வி முறை எம் முறையை (G.C.E முறை) ஒத்திருப்பதால் லண்டனில் இருந்து போவோறருக்கு சிக்கல் குறைவு. நான் சில வருடங்களில் ஊரில் போய் நிரந்தரமாகவே தங்க விரும்புகிறேன். இதனை முன்னரும் கூறியிருக்கிறேன். இங்கு உழைத்து உழைத்து வரிகட்டி அலுத்துவிட்டது. இலங்கையில் நல்ல காசிருக்கும் எனது நண்பர்கள் சிலரின் வாழ்க்கைத் தரத்துக்கு முன்னர் அவுஸ் வாழ்க்கைத்தரம் வெறும் தூசு. ஒவ்வொரு வார விடுமுறையும் அறுகம் குடா, பெந்தோட்ட எண்டு எனது வயித்தை புகைப் பண்ணுறாங்கள். 

எனகு இம்மிக்கிரேசன் அனுபவம் ,

பிள்ளைகளுக்கு ஒன் லைந் விசா எடுத்த்து கொண்டு போக, VISA வரவில்லை என்றான் (அவர்களுக்கு சும்மா பெயர் சேர்ப்பது மாத்திரமே ) அதற்க்கு காசு கேட்டான் ..அரியன்டமாக இருந்தது..நண்பர்கள் சொன்னார்கள் ஏன் காசு கொடுத்த்து என்று ...அவர்களிடம் சொன்னேன் நான் பழைய.....................அல்ல ..அதனாலே கொடுத்தேன் என்று ..ஒரு இடத்த்திலும் சிங்களம் கதைக்க வில்லை ... இலங்கை ஒரு தோல்வியடைந்த நாடு என்பதை நிரூபிப்பதற்ர்க்கி  ஒரு கனெடியன் பாஸ் போர்ட் உடன் கட்டுனாயக்கவிர்ற்கு போனால் சரி ... நல்ல பம்பலாகவும் இருக்கும் ...போட்டார் இல் இருந்து பெரிய பெரிய ஆபிசர் வரைக்கும் பிச்சை கேப்பார்கள் ...

நான் முதல் முறை (2009) போகும் போது, இலங்கை கடவுச் சீட்டு தான். எனது சிங்கள நண்பன் ஒருவனுடனேயே சென்றிருந்தேன். அவன் குடும்பம் கொஞ்சம் செல்வாக்கான ஆக்கள். இமிகிரசன் லைனில் நிற்கும் போது "அடோ வரேங் பங்" எனப் பழக்க தோஷத்திலே அவனைக் கூப்பிட்டு விட்டேன். முன்னால இருந்தவர் ஒருமுறை நிமிர்ந்து பார்த்துவிட்டுக் குனிந்தார். எனது முறை வந்த போது கேட்டுக்கேள்வி இல்லாமல் ஒரே குத்துத்தான். வழமையாக நச்சரிக்கும் "சேர் பொட்ட சப்போட் தாண்ட..." "foreign படு தியனவாத" போன்ற எதுவுமே அதன் பின்னர் இருக்கவில்லை.      

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 "சேர் பொட்ட சப்போட் தாண்ட..." "foreign படு தியனவாத" போன்ற எதுவுமே அதன் பின்னர் இருக்கவில்லை.      

நாங்கள் எல்லாம் முடிந்து வெளியில் நின்ற போது, ஒரு பெரிய குருப்பும் வந்தார்கள் இந்தியாவில் இருந்து..ஒரு சாமி குருப், ஓராள் ஓடிவந்து எங்களை வேற இடத்தில் நிற்க்க சொன்னால் சொன்னார். சொல்லிப்போட்டு , அவர்கள் "ஏதோ குருப் " என்று சொன்னார் , நாங்கள் வி‌ஐ‌பி ஆம் ,..அவர்களுக்கு கிட்ட நிற்க்க வேண்டாமாம் என்றார். அவர்களுடன் நின்றால் பேரம் பேசுபவர்கள் தொல்லை கொடுப்பார்கள் என்று சொன்னார். பிறகு எங்கட வான் வர, அவரே எல்லாம் முன்னுக்கு நின்று ஏற்றி விட்டார்...பிறகு "பொடி சப்போர்ட் ..."

ஆங்கிலத்திலே கதைத்தால் கண்டவனுக்கும் சப்போட் வெட்ட வேணும். நான் போகும் போது படு லோக்கல் மாதிரித்தான் போவது அத்துடன் தெரிஞ்ச சிங்களத்தில் கதைக்கத் தொடங்கிவிடுவேன். 2009 போய்  வெளியாலே போன போது எனது நண்பனின் குடும்ப சாரதி பஜீரோவுடன் நின்றுகொண்டிருந்தான். இதனால் எம்மை யாரும் வி ஐ பி என நடத்த முடியவில்லை.  

கடைசி முறை அவுஸ் வரும்போது கலியாணம் முடிஞ்சு மனிசியோட வந்தபடியால் பயங்கர excess baggage, ஒரு 20kg ஆவது இருக்கும். நாங்கள் வந்தது மலேசியன், check in SriLankan காரர்தான் செய்தார்கள். ஒரு ஆண்தான் என்னைக் கவனிக்கப் போறார் என பாக்க விளங்கி விட்டது. மனிசியை பின்னல் விட்டுவிட்டு  தள்ளு வண்டிலுடன் நான்மட்டும் முன்னே போனேன். கடவுச் சீட்டுக்களை நீட்டியதும் அவரது பெயரை அவரது name badge இலிருந்து பார்த்து விட்டேன். எமது பொதிகளை தூக்கி பெலிட்டிலே வைக்கும்படி சொன்னார். பாக்கைத் தூக்கிய படியே "ஐயே சென் பீற்றஸ் டீம் எக்கட்ட கிரிகெட் கஹனவாத?" என்ற கேள்வியோட பாக்கை வைத்தேன். பக்கத்து கண்ணாடியினூடு நானும் நிறையைப் பார்த்தேன். "நாஹ் மள்ளி மம றோயல் றக்பி டீம், அய்?" ஓ அதுதான் மாடு மாதிரி விளைஞ்சிருக்கிறானா என்று நினைத்தபடி "நா ஐயே, மகே ஹொந்த யாளுவாகே யாழுவா நம சமிந்த....." நான் முடிக்க முன்னரேயே எங்களது போடிங் பாஸ் எனது கையில்.    

உந்த ஆமிக்காரங்கள் எல்லாம் என்ன செய்யுறாங்கள் ? :rolleyes:  அவனுகளைப்பத்தி ஒண்டும் வடிவாச் சொல்லேலயே. சண்டை எல்லாம் முடிஞ்சுபோய் எல்லாம் அந்தமாரி என்டால் அவயளுக்கு அங்க என்ன வேலை? :rolleyes::lol:

  • கருத்துக்கள உறவுகள்

பதின்ம வயதுகளில் ஊரை விட்டுப் பிரிந்து இன்னுமொருவனைப் போன்றே சரியாக 23 வருடங்களிற்குப் பின்னர் நான்கு நாள் ஊருக்குப் பயணிக்கவென இரவு பஸ்ஸினுள் காத்திருக்கும்போது இந்தப் பதிவைப் படித்தேன். நான்கு நாட்களில் அதிக விடயங்களை அறியமுடியாது என்பது உண்மையென்றாலும் இன்னுமொருவனின் அவதானங்களோடு ஒத்துப்போக முடிகின்றது. மக்கள் கடந்த 30 வருடங்களில் நடந்தவற்றை பெரும்பாலும் மறந்துவிட்டு அதற்கு முந்தைய காலத்தின் தொடர்ச்சியில் வாழுவதைத் போன்ற உணர்வு. எனினும் விரும்தோம்பலும், உறவுகளின் அன்பும் அப்படியேதான் இருக்கின்றது.

அரசின் திட்டமிட்ட புறக்கணிப்பு சகல விடயங்களில் இருந்தாலும் சந்தித்தவர்கள் அரசியல் பேசுவதைத் தவிர்க்கின்றார்கள். தேசியக் கூட்டமைப்பு ஒன்றும் பெரிதாக வெட்டிக் கிழிக்க மாட்டார்கள் என்று தெரிந்தாலும் அவர்களுக்கே மக்கள் வாக்களிப்பார்கள் என்று சந்தித்த ஒருவர் சொன்னார்.

தாயகத் தமிழர்களுக்கு புலம்பெயர் தமிழர்களின் பொருளாதார உதவி உள்ளதால் யாழ்ப்பாணம் எங்கும் ஒரே வங்கிகள் மயம். "கார்ப்பற்" வீதிகள் போடப்பட்டுள்ளதால் முன்னர் வெகுதூரத்தில் இருந்த இடங்கள் எல்லாம் அருகில் இருப்பது போன்ற உணர்வு. ஆனால் தமிழர்களின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப தொழிற்சாலைகளோ, விவசாயத்தில் நவீன உத்திகளைப் புகுத்துவதையோ காணமுடியவில்லை. தமிழர்களை வெறும் நுகர்வோர்களாக வைத்திருப்பதுபோன்ற தோற்றம் ஏற்பட்டது.

நேரம் இருந்தால் எனது அனுபவத்தைப் பின்னர் விரிவாக எழுதுகின்றேன்.

என்னப்பா ஒரே ரவலிங்கா இருக்கு :rolleyes: . குடுத்து வச்ச மனிசன் தான். ஜெட் லாக் மாற முன்னம் கெதியில எழுதுங்கோ, விட்டா ஆறிவிடும்.

நானும் சென்ற வருடம் ஊருக்குச் சென்று வந்திருந்தேன். இன்னுமொருவன் எழுதிய அநேகமான விடயங்களுடன் ஒத்துப்போகிறேன்.

முறிகண்டியிலிருந்து முகமாலை வரயிலான பயணத்தின்போது எனக்கிருந்த மனநிலையை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை. சிங்களத்திடம் நாம் தோற்றதை உள்மனம் சகித்துக் கொள்ள முடியாமையா அல்லது தமிழர்கள் கொடுத்த விலைமதிக்க முடியாத தியாகங்கள் யாவும் அணுவணுவாகத் துடைத்தெறியப்பட்டதைப் பொறுத்துக் கொள்ள முடியாமையா என்று புரியவில்லை.  செறிவான இராணுவ நடமாட்டங்களுக்கு மத்தியில் வீதி ஓரங்களில் அங்காங்கு ஓலைக் கொட்டில்களிலும் கிழிந்து தையல் போடப்படிருந்த சிறிய கூடாரங்களிலும் வறுமையில் உள்ள மக்களைக் காண வேதனையாக இருந்தது. 

யாழ்ப்பாணம் சென்று அங்குள்ள மக்களோடு உரையாடியபோது வன்னியும் யாழ்ப்பாணமும் வெவ்வேறு நாடுகள் போல் தெரிந்தது. அங்கு பலர், குறிப்பாக இளையவர்கள் தமது ஆடம்பர செலவுகளுக்காக வெளிநாட்டுப் பணத்தை எதிர்பார்த்திக்கிறார்கள். எமது உறவினர்களிட்ம் முன்னேற்றம் தொடர்பான எந்தச் சிநந்தனையும் இல்லை.

திரும்பி வரும்போது நிறைவான மனதுடன் வரவில்லை. வெறுப்பாகவே இருந்தது. அங்கு பயனுள்ளதாக ஏதும் செய்யக்கூடிய அளவு இப்போதைக்கு எனக்குப் பலம் இல்லை. ஆனால் வன்னி மக்களுக்கு ஏதாவது நிச்சயம் செய்வேன். 

நானும் சென்ற வருடம் ஊருக்குச் சென்று வந்திருந்தேன். இன்னுமொருவன் எழுதிய அநேகமான விடயங்களுடன் ஒத்துப்போகிறேன்.

முறிகண்டியிலிருந்து முகமாலை வரயிலான பயணத்தின்போது எனக்கிருந்த மனநிலையை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை. சிங்களத்திடம் நாம் தோற்றதை உள்மனம் சகித்துக் கொள்ள முடியாமையா அல்லது தமிழர்கள் கொடுத்த விலைமதிக்க முடியாத தியாகங்கள் யாவும் அணுவணுவாகத் துடைத்தெறியப்பட்டதைப் பொறுத்துக் கொள்ள முடியாமையா என்று புரியவில்லை.  செறிவான இராணுவ நடமாட்டங்களுக்கு மத்தியில் வீதி ஓரங்களில் அங்காங்கு ஓலைக் கொட்டில்களிலும் கிழிந்து தையல் போடப்படிருந்த சிறிய கூடாரங்களிலும் வறுமையில் உள்ள மக்களைக் காண வேதனையாக இருந்தது. 

யாழ்ப்பாணம் சென்று அங்குள்ள மக்களோடு உரையாடியபோது வன்னியும் யாழ்ப்பாணமும் வெவ்வேறு நாடுகள் போல் தெரிந்தது. அங்கு பலர், குறிப்பாக இளையவர்கள் தமது ஆடம்பர செலவுகளுக்காக வெளிநாட்டுப் பணத்தை எதிர்பார்த்திக்கிறார்கள். எமது உறவினர்களிட்ம் முன்னேற்றம் தொடர்பான எந்தச் சிநந்தனையும் இல்லை.

திரும்பி வரும்போது நிறைவான மனதுடன் வரவில்லை. வெறுப்பாகவே இருந்தது. அங்கு பயனுள்ளதாக ஏதும் செய்யக்கூடிய அளவு இப்போதைக்கு எனக்குப் பலம் இல்லை. ஆனால் வன்னி மக்களுக்கு ஏதாவது நிச்சயம் செய்வேன்

உண்மையில் யுத்த அழிவுகளை நேரடியாக அனுபவித்த மக்களின் அவலங்கள் மன வேதனையத் தான் தரும்!

மக்களின் அவலங்களை காணும் தமிழினப் பற்றுள்ளவர்கள், தாய்மண் பற்றுள்ளவர்கள், புலம் பெயர்ந்தாலும் "வன்னி (பாதிக்கப்பட்ட) மக்களுக்கு ஏதாவது நிச்சயம் செய்வேன்" போன்றதொரு  முடிவையே எடுப்பார்கள். "இனி இந்தப் பக்கம் வரவேமாட்டன்" என்று கனவிலும் கூட முடிவெடுக்கமாட்டார்கள்.

புலம்பெயர் மக்களின் அனுசரணையில் பணவசதியுடன் இருக்கும் கணிசமான யாழ்குடா மக்கள் இந்த அவலங்களைப் தாம் முன்வந்து, சிந்தித்து  போக்கும் சிந்தனை அற்றவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு 3G மொபைல் போன், ஒரு LCD  தொலைக்காட்சி, வீட்டுக்கு  2, 3 மோட்டார் சையிக்கிள்  இவைதான் அத்தியாவசிய தேவை. அந்தக் கணிசமானவர்களின் தற்போதைய குறிக்கோள் புலம்பெயர் உறவுகளின் அனுசரணையில் நாட்டைவிட்டு ஓடுவது. தாய்மண் பற்று தமக்கு இருப்பதாக காட்டிக்கொள்ளும் இவர்கள், யாரவது எவராவது வந்து தமிழ் மக்களை காப்பாற்றுவார்கள், "எமக்கு அந்தப் பொறுப்பில்லை" என்ற மனநிலையுடன் வாழ்வார்கள். குறுகியகால (1 - 6 மாதம்) சுற்றுலாவில் வருபவர்கள் இலகுவில் இப்படியான மனநிலையில் உள்ளவர்களை கண்டுபிடித்துவிடலாம்.  

நாம் ஏன்  பாரிய பின்னடைவை சந்தித்தோம் என்று ஆராயும் போது கிடைக்கக் கூடிய ஐந்து முக்கிய காரணங்களுள் "சமாதானகாலத்தில் ஊர் சென்று மீள்கையில் அவசரமாக நிரந்தரமாக மீளவேண்டும் என்று நினைத்தேன். இம்முறை, கனடா தான் எனது நாடு என்ற முடிவோடும்" - "எமக்கு அந்தப் பொறுப்பில்லை" என்பதைப் போன்ற ஈழத்தமிழரின் மனநிலையும் ஒன்றாகும்.

இன்னுமொரு கணிசமான யாழ்குடா மக்கள், பாதுகாப்பு சூழ்நிலைகளை அறிந்தபடியால், தம்மைப்போல் ஒத்த மனநிலை உடையவர்களுடன் இணைந்து, காதும் காதும் வைத்ததுபோல், அவரவர்கள் சக்திக்கு ஏற்ப பொறுப்புடன் தமிழினத்தின் மீட்சிக்கு இடைவிடாது உழைத்தே வருகிறார்கள். இவர்களை குறுகியகால (1 - 6 மாதம்) சுற்றுலாவில் வருபவர்கள் காண்பது சாத்தியமில்லை.

தும்பளையான் எழுதிய "திறந்த பொருளாதாரத்தை நோக்கி ...."   முதல்    "....... ஆனால் சிறந்த வழிகாட்டலோட அவர்களின் முயற்சியை ஊக்குவிக்க வேண்டும்"  வரையிலான கருத்துக்கள் ஓரளவு யதார்த்தமானவை. ஒருவேளை அது நெல்லண்டையின் அருளோ தெரியவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் அவலங்களை காணும் தமிழினப் பற்றுள்ளவர்கள், தாய்மண் பற்றுள்ளவர்கள், புலம் பெயர்ந்தாலும் "வன்னி (பாதிக்கப்பட்ட) மக்களுக்கு ஏதாவது நிச்சயம் செய்வேன்" போன்றதொரு  முடிவையே எடுப்பார்கள். "இனி இந்தப் பக்கம் வரவேமாட்டன்" என்று கனவிலும் கூட முடிவெடுக்கமாட்டார்கள்.

புலம்பெயர் மக்களின் அனுசரணையில் பணவசதியுடன் இருக்கும் கணிசமான யாழ்குடா மக்கள் இந்த அவலங்களைப் தாம் முன்வந்து, சிந்தித்து  போக்கும் சிந்தனை அற்றவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு 3G மொபைல் போன், ஒரு LCD  தொலைக்காட்சி, வீட்டுக்கு  2, 3 மோட்டார் சையிக்கிள்  இவைதான் அத்தியாவசிய தேவை. அந்தக் கணிசமானவர்களின் தற்போதைய குறிக்கோள் புலம்பெயர் உறவுகளின் அனுசரணையில் நாட்டைவிட்டு ஓடுவது. தாய்மண் பற்று தமக்கு இருப்பதாக காட்டிக்கொள்ளும் இவர்கள், யாரவது எவராவது வந்து தமிழ் மக்களை காப்பாற்றுவார்கள், "எமக்கு அந்தப் பொறுப்பில்லை" என்ற மனநிலையுடன் வாழ்வார்கள். குறுகியகால (1 - 6 மாதம்) சுற்றுலாவில் வருபவர்கள் இலகுவில் இப்படியான மனநிலையில் உள்ளவர்களை கண்டுபிடித்துவிடலாம்.  

நாம் ஏன்  பாரிய பின்னடைவை சந்தித்தோம் என்று ஆராயும் போது கிடைக்கக் கூடிய ஐந்து முக்கிய காரணங்களுள் "சமாதானகாலத்தில் ஊர் சென்று மீள்கையில் அவசரமாக நிரந்தரமாக மீளவேண்டும் என்று நினைத்தேன். இம்முறை, கனடா தான் எனது நாடு என்ற முடிவோடும்" - "எமக்கு அந்தப் பொறுப்பில்லை" என்பதைப் போன்ற ஈழத்தமிழரின் மனநிலையும் ஒன்றாகும்.

அருமையான  கருத்து

நான் லீவு முடிந்து வந்து  எழுதணும் என்று  நினைத்திருந்ததை  அப்படியே எழுதியுள்ளீர்கள்

நன்றி

அவரது வாகனசாரதி  குறிப்பிட்டது போல

ஒரு தமிழனாக  அல்லாது

வெளிநாட்டுக்காறனாக

ஒரு சுற்றுலாவுக்கு  இடம்  தேடுபவனாக  சென்றுவந்துள்ளார்

அண்மையில் பிரான்சில் தொலைக்காட்சியில்

 ஒரு சுற்றுலாவுக்கு  இடம்  தேடுபவனாக  சென்றுவந்து  ஒருவர் (பிரெஞ்சுக்காறர்)

எமது   அவலங்களை  வெளியில் கொண்டுவர  பட்ட  சிரமங்களை இங்கு காணிக்கையாக்குகின்றேன்,

முடிந்தால்  எவராவது அந்த காணொளியை (FRANCE 2) இங்கு இணைத்துவிடுங்கள்

நன்றி

இன்னுமொருவனின் மன நிலையும் குறை சொல்வதற்கில்லை.
 
அந்த மண்ணுக்கும் இன்னுமொருவனுக்கும் உள்ள தொடர்பு நலிந்து அறுந்து போய் உள்ளது. நீண‌டகால இடம்பெயர்வு வாழ்க்கையில் இது நடக்கக் கூடிய ஒன்று தானே.
 
இன்னுமொருவனின் மன நிலையே இப்படி என்றால் அடுத்த சந்ததியின் மன நிலை என்ன ??

அருமையான, ஆழமான ஒரு பதிவு..நானே அங்கு சென்று அனுபத்த வலிகளாக உங்கள் அனுபவப் பதிவு இருந்தது. இனிமேல் என்ன இருக்கு எமக்கு என்றுதான் ஏமாற்றத்துடன் எண்ணத் தோன்றுகிறது.நன்றி   :rolleyes: 

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவனின் மன நிலையும் குறை சொல்வதற்கில்லை.
 
அந்த மண்ணுக்கும் இன்னுமொருவனுக்கும் உள்ள தொடர்பு நலிந்து அறுந்து போய் உள்ளது. நீண‌டகால இடம்பெயர்வு வாழ்க்கையில் இது நடக்கக் கூடிய ஒன்று தானே.
 
இன்னுமொருவனின் மன நிலையே இப்படி என்றால் அடுத்த சந்ததியின் மன நிலை என்ன ??

இந்தச் சந்ததிக்குப் பிறகு அடுத்த சந்ததி ஊருக்கு ஒரு செப்புக் காசு கூட அனுப்ப மாட்டார்கள். ஊரிலிருப்பவர்களும் புலம்பெயர்ந்தவர்களை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள்.

"புரட்சி என்பது மற்றவனை பலிகடாவாக்கி செய்யப்படுவது என்கிற கருதுகோள்களுடன் இயங்கும் கூட்டமொன்று எப்போதுமே இருக்கிறது. அதுவும், எங்களை பலிகடாவாக்கி விட வேண்டும் என்கிற பலரின்/குழுக்களின் வேகம் வியக்க வைக்கிறது?!

இவர்களுக்கெல்லாம் சொல்லிக்கொள்ள இருப்பது இதுதான், எமக்கு நிறைய காயங்கள் உண்டு. அதில், வடுக்களாகிவிட்ட காயங்களும் ஏராளம். அப்படியிருக்கிற போது திரும்பவும் வலிகளை கொடுக்க வேண்டும் என்கிற உங்களின் புரட்சிகள் எமக்கு தேவையில்லை.

எங்களை நாங்களே பார்த்துக் கொள்ள தகுதியும்- நேரமும் வரும்; அப்போது பார்த்துக் கொள்கிறோம். உங்களின் உதவியும் வேண்டாம், உபத்திரமும் வேண்டாம்!"

மேலே  குறிப்பிட்டது நவநீதம்பிள்ளை வந்துபோன சந்தர்ப்பத்தில் ஊரிலிருக்கும் எனது நண்பன் ஒருவனின் முகப்புத்தம் கூறிய செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்

தும்பளையானின் நண்பனுக்குப் பல புரிதல்கள் கிடைக்கவேண்டி உள்ளது.. புலம்பெயர்ந்தவர் அனைவருமே விருப்பத்துடன் புலம்பெயர்ந்தவர்கள் என்கிற விம்பத்தை உருவாக்குகிறது.. அது அவ்வாறானதல்ல என்பதுதான் உண்மை..

தலாய் லாமாவால் திபெத்திற்குத் திரும்பமுடியாது.. அவர்போல் ஆயிரக்கணக்கான திபெத்தியர்கள் வெ ளிநாடுகளில் இருப்பார்கள்..! திபெத்தில் இலட்சக்கணக்கில் இருப்பார்கள்.. நண்பரின் கருத்துப்படி லாமா தன்னுரிமை இழந்தவர் ஆகிறார்..

இங்கு கவனிக்கப்படவேண்டியது நண்பர் தாயக மக்களுக்காகப் பேசவல்ல பிரதிநிதி அல்ல என்பது.. பொதுவில் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கே மக்கள் அந்த உரிமையை வழங்குகிறார்கள்..! அண்மையில் இந்த அமைப்பு புலம்பெயர் அமைப்புக்களை சந்தித்த விடயம் தெரிந்ததே..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.