Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதுமணத் தம்பதிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

DSC_2723.JPG

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போரளிகளின் முன்னாள் போரளிகளின் திருமண நிகழ்வு இன்று புதன்கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்றது. இதன்போது இந்து, பௌத்த மற்றும் கத்தோலிக்க ஆகிய சமய சம்பிரதாயப்படி திருமணம் நிகழ்வுகள் இடம்பெற்றன.

முன்னாள் தமீழீழ விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர்;களான பேரின்பநாதன் வர்மன் மற்றும் நடராசா சுகிர்தா ஆகியோர் இந்து சம்பிரதாயப்படி திருமண பந்தத்தில் இணைந்தனர். இவர்கள் இருவரும் புனர்வாழ்வு பெற்று தற்போது சிவில் பாதுகாப்பு படையில் இணைந்துள்ளனர்.

இதேவேளை, தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தில் மிகவும் உயரம் குறைந்தவராகவும் ராதா படையில் இருந்தவருமான முருகையா சசிகுமார் மேரி பபிலாவை கத்தோலிக்க முறைப்படி திருமணம் செய்துகொண்டார். அத்துடன் சிங்கள இனத்தவரான சிவில் பாதுகாப்பு படை வீரர் ஹர்ஷ நூவான், பிரேமரத்னம் சுகந்தினியை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமணம் சிங்கள முறைப்படி இடம்பெற்றது. 

கிளிநொச்சி – முல்லைத்தீவு சிவில் பாதுகாப்பு படையின் கூட்டு தலைமையகத்தில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்வில் ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, சிவில் பாதுகாப்பு படையணியின் பணிப்பாளர் நாயகம் லெப்டினன் கேணல் டப்ளியூ. டப்ளியூ.ரத்ன பிரிய ஆகியோர் கலந்துகொண்டு புதுமணத் தம்பதிகளை வாழ்த்தினர். (படங்கள்: பிரதீப் தில்ருக்ஷன)

DSC_2481.JPG

DSC_2411.JPG

DSC_2417.JPG

DSC_2502.JPG

DSC_2386.JPG

DSC_2519.JPG

DSC_2557.JPG

DSC_2654.JPG

DSC_2729(1).JPG

DSC_2754.JPG

DSC_2762.JPG

DSC_2777.JPG

DSC_2786.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க  வளமுடன்............

  • கருத்துக்கள உறவுகள்

புதுமண தம்பதிகளுக்கு நல்வாழ்த்துக்கள்.

நல்வாழ்த்துக்கள்

புதுமண தம்பதிகளுக்கு நல்வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சிங்கள இனவெறி அரசியன்.. இன அழிப்பு.. அரசியல் கலியாணங்கள் எங்க கொண்டு போய் இவையை விடப்போகின்றனவோ தெரியவில்லை.

ஹெயிட்டியில்.. பாலியல் வல்லுறவு. இங்கு போரின் பின் அது முடிஞ்சு.. இப்ப.. சிங்கள இராணுவ - தமிழ் பெண்கள்.. திருமணத்தினூடாக அது நிகழ்ந்தேறுகிறது. இந்தத் திருமணங்களை கண்காணிக்க தனியான மனித உரிமை அமைப்புக்கள் அவசியம்..!  திருமணத்தின் பின் இவர்கள் குடும்பம் நடத்துகின்றனரா.. இல்ல விபச்சார விடுதிகளில் விடப்படுகின்றனரா..?????! அடுத்த விக்கிலீக்ஸ் அறிக்கை வரும் வரை.. வாழ்த்துச் சொல்லி அனுப்பி வையுங்கோ..??! இந்த இடத்தில் உங்கள் பெண் பிள்ளைகள் இருந்தால்... வாழ்த்துவீர்களா..????! மனச்சாட்சியை தொட்டுச் சொல்லுங்கள்..!!! :icon_idea::rolleyes:

Edited by nedukkalapoovan

தமிழ் ஆண்கள் எங்கள் தமிழ்ப் பெண்களைப் பற்றி எவ்வளவு கேவலமாக கேலி செய்தார்கள்,  சிங்களாவனாவது எமது பெண்களைக் கரை சேர்க்கட்டுமே! வாழ்த்துக்கள் புது மணத் தம்பதியினருக்கு!!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் 

நிதர்சனமான கருத்து :icon_idea:

அப்பிடியே எனக்கும் ஒரு பொம்பிளையப் பாத்துச் சொல்லுங்கோவன். :rolleyes::wub::lol:

போரடிச்சுப்போச்சு :lol::wub:

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் ஆகாமல் எத்த‌னையோ பேர் இருக்கிறார்கள் இப்படியாவது ஆகிட்டு போகட்டுமே
245000 பெண்கள் விதவைகளாக உள்ளனர் இலங்கையில் [நேற்றய வீரகேசரி தகவல் 18‍‍.09.2013]

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஆண்கள் எங்கள் தமிழ்ப் பெண்களைப் பற்றி எவ்வளவு கேவலமாக கேலி செய்தார்கள்,  சிங்களாவனாவது எமது பெண்களைக் கரை சேர்க்கட்டுமே! வாழ்த்துக்கள் புது மணத் தம்பதியினருக்கு!!

இப்படிச் செய்வதன் மூலம் தமிழ் பெண்களின் நிலை பெரிசா உசந்திடுதோ. இவர்களைப் பற்றி.. இன்னும் இன்னும் கேவலமாத்தான் பேசப் போகிறார்கள்.

சிங்களத்தியள்.. முன்னாள் புலிப் போராளிகளை ஏன் கலியாணம் செய்யுறாளவை இல்ல. ஆமிக்கார காவாலிகளுக்கு மட்டும் தானா.. தமிழ் இனப்பற்று.. இன ஐக்கியம்.. ஐக்கிய இலங்கை.. முக்கியமாப் படுகுது..???! :lol::D

திருமணம் ஆகாமல் எத்த‌னையோ பேர் இருக்கிறார்கள் இப்படியாவது ஆகிட்டு போகட்டுமே

245000 பெண்கள் விதவைகளாக உள்ளனர் இலங்கையில் [நேற்றய வீரகேசரி தகவல் 18‍‍.09.2013]

அதுமட்டுமல்ல.. மத்திய கிழக்கு வேலை வாய்ப்பால் தோன்றிய விவாகரத்துக்களும் சிறீலங்காவில் இருக்குது. அதுகளுக்கும் மகிந்த சிந்தனை தீர்ப்பளிச்சா நல்லா இருக்கும். அதுகள் சிங்களப் பெண்கள்.. அங்க மத்திய கிழக்கில விபச்சாரம் பண்ணிக்கிட்டு திரியுதுங்க. அந்த நிலைக்கு உள் நாட்டில் தமிழ் பெண்களைக் கொண்டு வாறாங்க..! :icon_idea::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அதுகள் சிங்களப் பெண்கள்.. அங்க மத்திய கிழக்கில விபச்சாரம் பண்ணிக்கிட்டு திரியுதுங்க. அந்த நிலைக்கு உள் நாட்டில் தமிழ் பெண்களைக் கொண்டு வாறாங்க..!

மத்திய கிழக்கில் விபச்சாரம் செய்வது அனுமதிக்கப்பட்டிருக்கா?

பொதுப்படையாக மத்திய கிழக்கிற்குபபோகும் சிங்களப் பெண்களை விபச்சாரிகள் என்று சொல்வது சிலருக்கு கிளுகிளுப்பைத் தரும்தான்!

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியே எனக்கும் ஒரு பொம்பிளையப் பாத்துச் சொல்லுங்கோவன். :rolleyes::wub::lol:

போரடிச்சுப்போச்சு :lol::wub:

ஆமிக்காரரே உங்களுக்கு ஆமிப் பெண்ணா அல்லது சாதாப் பெண்ணா என்று கூறினீர்கள் என்றால் பார்க்க வசதியாக இருக்கும். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய கிழக்கில் விபச்சாரம் செய்வது அனுமதிக்கப்பட்டிருக்கா?

பொதுப்படையாக மத்திய கிழக்கிற்குபபோகும் சிங்களப் பெண்களை விபச்சாரிகள் என்று சொல்வது சிலருக்கு கிளுகிளுப்பைத் தரும்தான்!

FACT:  Fifteen to 20 percent of the 120,000 (approx) Sri
Lankan women who leave each year for the Gulf
return prematurely, face abuse, nonpayment of
salary, or get drawn into illicit human trafficking
schemes or prostitution.
 
இது ஒரு ஆய்வுக்கட்டுரையில் இருந்து வருகிறது. கிளுகிளுப்புத் தளத்தில் இருந்தல்ல..!
 
Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எங்கிருந்தாலும் எல்லோரும் வாழ்க....... 10000 முன்னாள் புலி போராளிகளின் வாக்குகளும் சிறிலங்கா சுதந்திரகட்சிக்கு விழுமோ?

  • கருத்துக்கள உறவுகள்

எமது முன்னாள் போராளிகள் வாழவேண்டும். அதில் எள்ளளவேணும் அய்யமில்லை. ஆனால் தமிழ் முன்னாள் பெண் போராளிகள் சிங்கள ஆயுதப்படையினரைத் திருமணம்செய்துகொள்வது உள்ளத்தினை நெருடுகின்றது. (இதனைச் சொல்லுவதற்கு எனக்குத் தகுதியுண்டோ நானறியேன்).

வாழ்த்துவதைத் தவிர வேறுவழியில்லை.

It's Hobson's choice! :(

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் நன்மைக்கே..! நல்வாழ்த்துக்கள்..!!

  • கருத்துக்கள உறவுகள்

இது சிங்களவர்களுடைய காலம்

அவர்கள் ஆடும் ஆட்டத்திற்குத் தான் நாங்கள் தாளாம் போடலாம்
 
சிங்கள தமிழ் இன அபி விருத்திக்காக இணைந்த மணமக்களுக்கு வாழ்த்துகள்

80  வரை  சிங்கள ஊரெல்லாம் கடைகளைப் போட்டு
தமிழருடைய பொருளாதாரத்தையும் சிங்களவர்களுடைய 

இனத்தையும் விருத்தி செய்தது எங்கள் கடைக்கார முதலாளிகள் தானே.
 
சொந்த ஊரில் ஒரு கடையும் சிங்கள ஊரில் இரண்டுக்கு மேற்பட்ட

கடைகள் வைத்திருந்தவர்களும் இருக்கின்றார்கள்   

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில்  மனதார  நாங்கள்   வாழ்த்தகின்றோம்

ஆனால்

உண்மை என்ன??

நடைபெற்ற ஆடம்பரங்களையும்

கலந்து கொண்ட அதிமுக்கியமானவர்களையும்

சிங்கக்கொடிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அதிமுக்கியத்தவத்தையும்  பார்க்கும்போது.....

வாழ்த்துக்குள்ளும் வேதனையும் பரிதாபமும் தான் மிஞ்சுகிறது

இரண்டுக்கும்  வித்தியாசம் உண்டு வாத்தியார்

ஒன்று விரும்பி  நடந்தது

மற்றது

விரும்ப வைக்கப்பட்டு நடக்கிறது...... :(

சிங்களவன் திட்டமிட்டுச் செய்கின்றான் இன்று

தமிழன் திட்டமே இல்லாமல் செய்தான் அன்று

அது அல்ல இங்கு பிரச்சனை

சிங்களவர்களால் ராணுவத்தால் முன்னின்று இந்தத் திருமணங்கள் நடைபெறுவதால் ஊடகங்களில் திட்டமிட்ட வகையில் முக்கிய செய்தியாகின்றது.

நாங்களும் மல்லுக்கட்டி நிற்கின்றோம்

ஏதோ ஒரு மூலையில் இரகசியமான முறையில் இப்படிப் பல திருமணங்கள் நடைபெறுகின்றன.

அதை நடத்தி வைப்பவர்கள் தமிழர்களாகவே இருக்கின்றனர்.அதாவது பெண்ணின் பெற்றோரோ அல்லது ஆணின் பெற்றோரோ முன்னின்று செய்கின்றனர்.

இதற்கு நாங்கள் என்ன செய்யலாம்???

திருமணம் செய்ய வழி இல்லாமலும் புது ரோடு  இல்லாமலும் பஸ்,ரெயின் இல்லாமலும் தமிழன் இருந்த படியால் தான் போராட்டம் வந்தது இது விளங்காமல் நீங்க வேற வாத்தியார் சும்மா டென்சன் பண்ணுறீங்க. சிங்களவனை பாருங்க தமிழ்ப் பெண்களை திருமணம் செய்கிறான், தமிழன் பகுதிகளுக்கு பஸ்,ரெயின் விடுறான். தமிழர் நிலத்தில் புது ரோட்  போடுறான். நீங்க என்ன செய்தீங்க? :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சில காலங்களுக்கு முன்னாள் ஏழாலைச் சேர்ந்த பெண் ஒருவர் சிங்கள இராணுவ வீரரினை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இராணுவவீரருக்கு கண்டியில் வேலை மாற்றம். எழாலைப் பெண் சிங்கள மாமியார் வீட்டில் கொழும்பில் வேலைக்காரி போல வாழ்கிறார். ஒரு குழந்தை. மாமியார் கொடுமை தாங்கமுடியவில்லை என்று உறவினர்களிடம் தொலைபேசியில் சொல்லி அழுகிறார். தேவையா இந்தக் காதல் திருமணம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.