Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத்தை கைவிட்டுவிட்டோம் என்று சொல்கின்ற யோக்கிய அருகதை தகுதி எவனுக்கும் கிடையாது. காசி ஆனந்தன் [video ]

Featured Replies

இதே காசியனந்தனுக்குத்தான் விக்கினேஸ்வரன் நீதிபதியாக இருந்தபோது பிணை வழங்கியவர் .அதன்முலம் சிங்கள அரசால் பழிவாங்கப்பட்டார் .

  • Replies 111
  • Views 6.8k
  • Created
  • Last Reply

ஏதாவது ஒரு மேடையில் விக்னேஸ்வரன் என்னுடைய தாயகம் தமிழீழம் என்று சொல்லமுடியுமா?

விக்னேஸ்வரனோ சம்மந்தனோ துணிச்சலான ஒருமேடையில் என்னுடைய தாயகம் தமிழீழம் என்று சொல்லமுடியுமா இன்னிலையில் இவர்கள் சமஸ்டி பேசுகின்றார்கள்.

இதையே காசி வட -கிழக்கிலிருந்து சொல்வாரா ?காசிக்கு புத்தி பேதலித்து விட்டது .காசியின் புத்தகம் வித்து அவருக்கு பணம் அனுப்பியவர்களுக்குஇந்த திரியை  Email செய்துள்ளேன் .

  • கருத்துக்கள உறவுகள்

ஐயான்ரை உணர்ச்சிப் பேச்சைக் கேக்க நல்லாத் தானிருக்கும். 77 ஆம் ஆண்டுத் தேர்தலிலை அண்ணை முழங்காத முழக்கமா?

தமிழ் தேசியக் கூட்டமைப்போ அல்லது விக்னேஸ்வரனோ செய்வதெல்லாம் சரியெனப் படவில்லை. ஆனால் நாட்டுக்கு வெளியே இருந்து கொண்டு இன்னொரு புரட்சி வெடிக்கும் . தமிழீழம் மலரும் எண்டு உச்சஸ்தாயிலை பேசி ஆகப் போறது ஒண்டும் இல்லை.

இவ்வளவு உணர்வாயுள்ள ஐயா தாயகத்திற்குப் போய் அந்தப் புரட்சியைக் கொண்டு நடத்தலாம்.

அட இந்தியாவை விட்டு என்னைப் போக அனுமதிக்க மாட்டினம் எண்டால் காந்தியை மாதிரி இந்தியாவிலை இருந்து வெளியே போக அனுமதிக்கச் சொல்லி ஐயா போராடலாம்.

அதுக்குள்ளை கொழும்பான் யாழ்;பபாணத்தான் எண்டு பிரதேச வாதம் கதைக்கிறதும் அவற்றை வயசுக்கும் அனுபவத்திற்கும் ஏற்றதாத் தெரியேல்லை.

மணிவாசகா பச்சை முடிஞ்சு போச்சு. ஆயிரம் பச்சை தரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

 "தமிழீழமா சமஸ்டியா என்று ஒருதேர்தல் நடத்தமுடியுமா

அப்பொழுது பாருங்கள் மக்கள் உங்கள் முகத்தில் செருப்பால் அடிப்பார்கள்"

காசி ஆனந்தன் தெளிவாகத்தான் இருக்கின்றார்.
சிலர் மட்டும் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க வலை வீசுகின்றனர்.

காசி ஆனந்தன் அவர்கள் கூறியதுபோல
ஈழமா சமஷ்டியா என ஒரு வாக்கெடுப்பை இந்தக் கருத்துக்களத்திலேயே நடாத்திப்பாருங்கள்
அப்போது எல்லோருக்கும் விளங்கும்

அப்படியாயின் எனது கேள்வி

அவர் தனது கடமையைச்செய்கிறார்

நாம் என்ன  செய்கின்றோம்

எமது கடமையைச்செய்கின்றோமா???

அல்லது அவரது கடமையை  விமர்சிப்பது மட்டும் தான் எமது கடமையா???

சும்மா இருந்துகொண்டு பலமாக நாங்களும்அறிக்கை  விடலாம் .இன்றைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு செயற்படவேண்டும் .

யாரவது ,யாரையும் விமர்சிப்பதாக இருந்தால் விமர்சனத்திற்கு ஆளாக்குபவரை  விட விமர்சிப்பவர் செயல்திறமை உள்ளவராக இருக்கவேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்

காசியானந்தனின் திருகுதாளங்கள் தொடர்பில் நான் எழுதியதனை யாழ். நிர்வாகம் தூக்கிவிட்டது.

அதனையே பிறர் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரி எழுதி உள்ளனர்.

எது எப்படி இருப்பினும், இப்போது நான் காசியானந்தன் பக்கம்.

அவர் சொல்வதில் என்ன தவறு?

ஆமா, புலத்து தமிழர்களோடு இணைந்து அவர் அண்டவெளியில் தமிழீழம் எடுத்து பின்னர் வடக்கு-கிழக்கு தமிழர்களை குடியேற்றுவார் என்றால் விடுங்களேன்.

காசி அண்ணை உங்கள் வாய் வீரம் செயல் வீரமாக மாற புலத்தில் இருந்து இன்றும் புலம்பிக்கொண்டிருப்பவர்களோடு இணைந்து வாழ்த்துகின்றேன்.

இறுதியாக உங்களிடம் அன்பான ஒரு வேண்டுகோளையும் முன்வைக்கின்றேன்.

இப்படி இடைக்கிடை நீங்கள் சவுண்டு விட்டுக்கொண்டே இருங்கள். பின்னர், நீங்கள் இருப்பதனை புலம்பெயர் தமிழர்களும் நானும் மறந்துவிடுவோம்.

எனக்கொரு சந்தேகம். இதனையும் தீர்த்துவிடுங்கள்.

அது எப்படி ஐயா, நீங்கள் மட்டும் இந்தியாவில் நீண்டகாலம் இருக்கிறீர்கள்? தயவுசெய்து புலத்துக் கண்மணிகளின் ஊடகங்கள் வாயிலாக HD quality video வில் பதிவு செய்து அனைத்து ஒலி-ஒளி ஊடகங்களிலும் ஒலி-ஒளிபரப்பாக ஆவன செய்யுங்கள்.

Edited by nirmalan

காசியானந்தனின் திருகுதாளங்கள் தொடர்பில் நான் எழுதியதனை யாழ். நிர்வாகம் தூக்கிவிட்டது.

தங்கள் கருத்து வேறு திரியில் இருக்கின்றது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=129835&p=940353

 "தமிழீழமா சமஸ்டியா என்று ஒருதேர்தல் நடத்தமுடியுமா

அப்பொழுது பாருங்கள் மக்கள் உங்கள் முகத்தில் செருப்பால் அடிப்பார்கள்"

காசி ஆனந்தன் தெளிவாகத்தான் இருக்கின்றார்.

சிலர் மட்டும் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க வலை வீசுகின்றனர்.

காசி ஆனந்தன் அவர்கள் கூறியதுபோல

ஈழமா சமஷ்டியா என ஒரு வாக்கெடுப்பை இந்தக் கருத்துக்களத்திலேயே நடாத்திப்பாருங்கள்

அப்போது எல்லோருக்கும் விளங்கும்

இந்த தளத்தில் வாக்கெடுப்பு நடாத்தி 100%தமிழீழத் திற்கு வாக்கு விழும் ஆனால் செயல்படுத்த

முடியுமா ?

வட -கிழக்கில் பகிரங்கமாக கூறமுடியுமா ?

  • கருத்துக்கள உறவுகள்

"தமிழீழமா சமஸ்டியா என்று ஒருதேர்தல் நடத்தமுடியுமா

அப்பொழுது பாருங்கள் மக்கள் உங்கள் முகத்தில் செருப்பால் அடிப்பார்கள்"

காசி ஆனந்தன் தெளிவாகத்தான் இருக்கின்றார்.

சிலர் மட்டும் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க வலை வீசுகின்றனர்.

காசி ஆனந்தன் அவர்கள் கூறியதுபோல

ஈழமா சமஷ்டியா என ஒரு வாக்கெடுப்பை இந்தக் கருத்துக்களத்திலேயே நடாத்திப்பாருங்கள்

அப்போது எல்லோருக்கும் விளங்கும்

வாத்தியார்,

இல்லாத ஊருக்கு பொல்லாத வழி காட்டுறதென்பது இதுதானா?

இப்படி ஒருவாக்கெடுப்பை இலங்கையில் வைத்து, அதன் முடிவை இலங்கை மதித்து நடக்கும் என்றால் கடந்த 30 வருடமா குத்தி முறிந்தது எல்லாம் என்ன காமெடியா?

காசிக்குத்தான் மண்டை கழண்டு போச்சு, உங்களுக்குமா.

  • கருத்துக்கள உறவுகள்

காசியானந்தனின் திருகுதாளங்கள் தொடர்பில் நான் எழுதியதனை யாழ். நிர்வாகம் தூக்கிவிட்டது.

அதனையே பிறர் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரி எழுதி உள்ளனர்.

எது எப்படி இருப்பினும், இப்போது நான் காசியானந்தன் பக்கம்.

அவர் சொல்வதில் என்ன தவறு?

ஆமா, புலத்து தமிழர்களோடு இணைந்து அவர் அண்டவெளியில் தமிழீழம் எடுத்து பின்னர் வடக்கு-கிழக்கு தமிழர்களை குடியேற்றுவார் என்றால் விடுங்களேன்.

காசி அண்ணை உங்கள் வாய் வீரம் செயல் வீரமாக மாற புலத்தில் இருந்து இன்றும் புலம்பிக்கொண்டிருப்பவர்களோடு இணைந்து வாழ்த்துகின்றேன்.

இறுதியாக உங்களிடம் அன்பான ஒரு வேண்டுகோளையும் முன்வைக்கின்றேன்.

இப்படி இடைக்கிடை நீங்கள் சவுண்டு விட்டுக்கொண்டே இருங்கள். பின்னர், நீங்கள் இருப்பதனை புலம்பெயர் தமிழர்களும் நானும் மறந்துவிடுவோம்.

எனக்கொரு சந்தேகம். இதனையும் தீர்த்துவிடுங்கள்.

அது எப்படி ஐயா, நீங்கள் மட்டும் இந்தியாவில் நீண்டகாலம் இருக்கிறீர்கள்? தயவுசெய்து புலத்துக் கண்மணிகளின் ஊடகங்கள் வாயிலாக HD quality video வில் பதிவு செய்து அனைத்து ஒலி-ஒளி ஊடகங்களிலும் ஒலி-ஒளிபரப்பாக ஆவன செய்யுங்கள்.

நீங்கள் ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு காசியே கடிச்சாச்சு பிறகென்ன தமிழ் நாட்டில் சும்மாவேணும் எமக்காக குரல் கொடுப்பவனையும் பிரித்தாயிற்று இவ்வளவுக்கும் காரணம் ஆரெண்டு பார்த்தால் அட நம்ம விக்கி ஐய்யா அந்தாளே அய்யோ நான் சொன்னதை மாறி எழுதிட்டாங்கள்  என்று சொன்னாபிறகும் அனைத்து சமூக வலைத்தலங்களிலும் உள்ள கோபத்தையெல்லாம் கொட்டியாயிற்று இதிலை வேறு ஊதிவிடுறது நம்ம ஊடகங்கள் . அட நம்ம விக்கி ஐயா மேலை அவ்வளவு நம்பிக்கையாக்கும் பாலாறும் தேனாறும் ஒட வைத்து ஈழத்தை பெற்று தருவார் என எந்த அடிப்படையில் நம்பி உள்ளவனையெல்லாம் எதிரியாக்குறம் என புரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ங் கொய்யாலை....இது மட்டும்தான்  இப்போதைக்கு  காசி யண்ணிற்கு.. யாராவது  வயரை புடுங்கி விடுங்கப்பா. :)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

முள்ளிவாய்க்காலுக்குப்பின்....

இரண்டு அமைப்புக்கள்

வளரணும்

அவை  தமக்கென தனியாக பாதைகளை  வகுத்து

தமிழ் மக்களின் தாயக உரிமைப்போரை

சர்வதேசம்  எம்மை தடை செய்த காரணங்களை ஆராய்ந்து

தவிர்த்து

செயற்படணும்  என விரும்புபவன் நான்.

அதில்  என்றுமே  எனது  பார்வை  ஒன்றே

இது பற்றி  யாழில்  அன்றிலிருந்து எழுதிவருபவன்.

அவை

கூட்டமைப்பு

நாடு கடந்த அரசு.

ஆனால் எல்லாத்தமிழர் போல்

நான்  ஒரு புலி

இதில்  எந்த மாற்றமும் இல்லை.

கிட்டத்தட்ட

30  வருடங்களாக

இளமை

வாழ்வு

உழைப்பு

அனைத்தையும் அதற்காக கொடுத்தவன்.

புலத்தவன் பேசக்கூடாது  என்பதில் 

பெறுபவற்றை  பெற்றுக்கொண்டு தட்டிவிடும் 

சுயநலம் மட்டுமே இருக்கக்கூடும். :(  :(  :(

புலத்திலும்

கப்டன்

கேர்ணல்

பிரிகேடியர்

மாமனிதர்

நாட்டுப்பற்றாளர்.......  என கௌரவப்படுத்தப்பட்டுள்ளனர்  என்பதை  எவரும் மறக்கக்கூடாது.

எதுக்காக ..யாரிடம்???

கப்டன்

கேர்ணல்

பிரிகேடியர்

மாமனிதர்

நாட்டுப்பற்றாளர்

முடியவில்லை :( :(

Edited by sathiri

காசி ஐயா தமிழ்நாட்டுக்கு ஓடிவிட்டார் என்று புலம்பெயர்நதவன் எப்படி விமர்சிக்கமுடியும்? நாட்டுக்குபோய் போராடு என்று அவருக்கு சொல்லமுற்படுவது ஒவ்வொரு புலம்பெயர்ந்தவனுக்கும் பொருந்தும்.

நடுகடந்த அரசை பின்பற்றுகின்றவர்கள் காசியரின் கருத்தை எப்படி விமர்சிக்கமுடியும்? போர் முடிந்தவுடன் குற்றுயிரும் குலை உயிருமாக கிடந்த மக்களை எழுப்ப மறுத்து சிறைப்பட்டவர்களுக்காக குரல்கொடுக்க மறுத்து நாடுகடந்த அரசு அமைத்ததும் வட்டுக்கோட்டை வாக்கெடுப்பு நடத்தியதும் அமர்வுகள் நடத்தியதும் அதற்கு வக்காலத்து வாங்கியவர்களும் எப்படி காசியரின் கருத்தை விமர்சிக்கின்றனர்?

காசியர் சொல்வதும் புலம்பெயர்ந்தவனின் செயற்பாடும் ஒன்றே !

இத் தேர்தலலால் தமிழர்களுக்கு என்ன நன்மை என்பது குறித்து எதுவும் சொல்வதற்கில்லை ஆனால் மகிந்த கூட்டத்தின் மீதிருந்த ஜனநாயக விரோத குற்றச்சாட்டு பலமிழந்து விட்டது என்பதில் சந்தேகமில்லை. இத்தேர்தல் சிங்களப்பேரினவாதத்திற்கே பெரும்பான்மை வெற்றி அதன் பிறகே தமிழர்களுக்கான வெற்றி.

சிங்களப்பேரினவாதத்தின் கொடுமைக்குட்பட்ட தமிழர்கள் பிரதேசத்தில் தமிழர்கள் போட்டியிட்டு அதிகம் வாக்குகளை பெற்றிருக்கின்றனர். இதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை. முக்கியமான விடயம் சிங்களப்பேரினவாத அரசு நடத்திய தேர்தல் போன்ற ஜனநாயகச் செயற்பாடு மட்டும்தான்.

Edited by சண்டமாருதன்

  • கருத்துக்கள உறவுகள்

எனது கருத்தினை இதே காசியானந்தனின் கருத்து தொடர்பில் பதிவு செய்திருந்தேன். அதனை நிர்வாகம் தூக்கிவிட்டதாக நினைத்து இதே கருத்தில் முன்னதாக எழுதியிருந்தேன். இதனைச் சுட்டிக்காட்டிய நியானிக்கு நன்றிகள்.

முன்னர் எழுதிய கருத்தினை மீண்டும் இங்கே பதிவு செய்கின்றேன்.

1990 ஆம் ஆண்டு பிரேமதாசா பேச்சுக் காலத்தில் சண்டை தொடங்கியவுடன் விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையாவிடம் கெஞ்சிக் கூத்தாடி ”நான் இந்தியா போக உதவி செய்யுங்கள்” என்று கெஞ்சிக் கூத்தாடி பின்னர் மாத்தையா இவரை இந்தியா செல்வதற்கு அனுமதித்த கதை எமக்குத் தெரியும் திரு காசியானந்தன்.

அதேபோன்று புலம்பெயர் தமிழர்கள் உங்களுக்கும் தேனிசை செல்லப்பாவுக்கும் அனுப்பிய பணத்தில் சமமாக பிரிக்காது நீங்களே முழுப்பணத்தினையும் எடுத்துக்கொண்டதனை அறிந்து பின்னர் செல்லப்பா கோவித்த கதை எங்களுக்குத் தெரியும் திரு காசியானந்தன்.

உங்களுடைய பிள்ளைகளை பத்திரமாக வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு அதேபோன்று இந்திய உளவுத்துறையின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய நீண்ட காலமாக இந்தியாவில் இருப்பதும் எங்களுக்குத் தெரியும் திரு காசியானந்தன்.

இவ்வளவற்றையும் செய்துவிட்டு அந்த மண்ணிலேயே நின்று கொண்டு சிங்கள அரசின் கெடுபிடிகளுக்கு மத்தியில் நின்று தேர்தலைச் சந்தித்த விக்கினேஸ்வரனும் சரி ஆனந்தியும் சரி பிற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் சரி போற்றுதலுக்கு உரியவர்கள்.

மாகாண சபை மூலம் தேர்தல் மூலம் உரிமைகளைப் பெறுவதற்காக தேர்தலில் நிற்கவில்லை. எந்தத் தேர்தல் வைத்தாலும் தமிழர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே தமது ஆதரவினை வழங்குவார்கள் என்பதனை உலகுக்கு மீண்டும் மீண்டும் அந்த மக்கள் தெளிவாகக் கூறி வருவதனையே இது காட்டுகின்றது.

ஆகவே, இந்தியாவில் இருந்து கொண்டு அறிவுரை கூறுகின்ற வேலைகளை விட்டு விட்டு இரண்டு சினிமாப் பாட்டு எழுதி சம்பாதிக்கலாமா என்று பாருங்கள். விடுதலைப் புலிகளோடு இருந்து இன்று இருப்பே தெரியாத நலையில் இருக்கின்ற புதுவை இரத்தினதுரை அவர்களுக்கு அண்மையில் கூட நிற்கக்கூட நீங்கள் தகுதியற்றவர் என்பதனை மனதில் வைத்திருங்கள்.

அதேபோன்று மீண்டும் மீண்டும் புலம்பெயர் தமிழ் ஊடகங்களிடம் கேட்டுக்கொள்வது, இவ்வாறான காவாலித்தன அறிக்கைகளை வெளியிட்டு மீண்டும் மீண்டும் மக்களை குழப்புகின்ற செயல்களை செய்யாதீர்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை எதிர்த்த புலம்பெயர் ஊடகங்கள் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவான செய்திகளை வெளியிடுவது வரவேற்கத்தக்கது.

மீண்டும் கஜேந்திரகுமார் அணியினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து பணியாற்றுவது தொடர்பில் சிந்திக்க வேண்டுகின்றேன்.

2015 ஆம் அண்டு இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை இன்றே வீச்சோடு எதிர்கொள்ளக்கூடிய வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலப்படுத்துகின்ற வேலையினை தொடங்க வேண்டும்.

யாழ். மாவட்டத்தில் இவ்வளவு காலமும் இருந்த 8 ஆசனங்களில் இனி 6 ஆசனங்களே பெற முடியும். ஆகவே, அந்த 6 ஆசனங்களை கைப்பற்றுகின்ற வேலையினை இன்றே செய்ய வேண்டும்.

விகிதாசார பிரதிநித்துவ தேர்தல் முறைமை தமிழர்களுக்கு எதிரானது என்பதனை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

காசி ஐயா தமிழ்நாட்டுக்கு ஓடிவிட்டார் என்று புலம்பெயர்நதவன் எப்படி விமர்சிக்கமுடியும்? நாட்டுக்குபோய் போராடு என்று அவருக்கு சொல்லமுற்படுவது ஒவ்வொரு புலம்பெயர்ந்தவனுக்கும் பொருந்தும்.

நடுகடந்த அரசை பின்பற்றுகின்றவர்கள் காசியரின் கருத்தை எப்படி விமர்சிக்கமுடியும்? போர் முடிந்தவுடன் குற்றுயிரும் குலை உயிருமாக கிடந்த மக்களை எழுப்ப மறுத்து சிறைப்பட்டவர்களுக்காக குரல்கொடுக்க மறுத்து நாடுகடந்த அரசு அமைத்ததும் வட்டுக்கோட்டை வாக்கெடுப்பு நடத்தியதும் அமர்வுகள் நடத்தியதும் அதற்கு வக்காலத்து வாங்கியவர்களும் எப்படி காசியரின் கருத்தை விமர்சிக்கின்றனர்?

காசியர் சொல்வதும் புலம்பெயர்ந்தவனின் செயற்பாடும் ஒன்றே !

இத் தேர்தலலால் தமிழர்களுக்கு என்ன நன்மை என்பது குறித்து எதுவும் சொல்வதற்கில்லை ஆனால் மகிந்த கூட்டத்தின் மீதிருந்த ஜனநாயக விரோத குற்றச்சாட்டு பலமிழந்து விட்டது என்பதில் சந்தேகமில்லை. இத்தேர்தல் சிங்களப்பேரினவாதத்திற்கே பெரும்பான்மை வெற்றி அதன் பிறகே தமிழர்களுக்கான வெற்றி.

சிங்களப்பேரினவாதத்தின் கொடுமைக்குட்பட்ட தமிழர்கள் பிரதேசத்தில் தமிழர்கள் போட்டியிட்டு அதிகம் வாக்குகளை பெற்றிருக்கின்றனர். இதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை. முக்கியமான விடயம் சிங்களப்பேரினவாத அரசு நடத்திய தேர்தல் போன்ற ஜனநாயகச் செயற்பாடு மட்டும்தான்.

புலத்தில் இருந்து கொண்டு காசியானந்தன் போல நாம் எல்லாம் ஈழம் கேட்கவில்லையே.

இத் தேர்தலலால் தமிழர்களுக்கு என்ன நன்மை என்பது குறித்து எதுவும் சொல்வதற்கில்லை ஆனால் மகிந்த கூட்டத்தின் மீதிருந்த ஜனநாயக விரோத குற்றச்சாட்டு பலமிழந்து விட்டது என்பதில் சந்தேகமில்லை. இத்தேர்தல் சிங்களப்பேரினவாதத்திற்கே பெரும்பான்மை வெற்றி அதன் பிறகே தமிழர்களுக்கான வெற்றி.

சிங்களப்பேரினவாதத்தின் கொடுமைக்குட்பட்ட தமிழர்கள் பிரதேசத்தில் தமிழர்கள் போட்டியிட்டு அதிகம் வாக்குகளை பெற்றிருக்கின்றனர். இதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை. முக்கியமான விடயம் சிங்களப்பேரினவாத அரசு நடத்திய தேர்தல் போன்ற ஜனநாயகச் செயற்பாடு மட்டும்தான்.

பாவம் குத்தியர் தான் காணமல் போய்ட்டார் . :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த தேர்தல் முடிவு குறித்து பலரும் அலசி ஆராய்ந்து கொண்டே இருக்கிரார்கள். இதில் யாருடையது சரி யாருடையது பிழை என்று வாக்கு கேட்டவர்களுக்கோ அல்லது போட்டவர்க்ளுக்Kஎனும் தெரியுமோ  என்று தெரியவில்லை. ஆளை ஆள், கடித்து குதறாமல் கருத்துக்களை சொன்னால் யாபொருக்கும் பயனாக இருக்கும். 

எனக்கு தெரிந்த "தகவல்களின்" படி புலிகளுக்கும் பிறேமதாசா அரசுக்கும் இடையில் இருந்த உறவு போன்ற நிலையே விரைவில் வரும் என்று சொல்லுகிறார்கள். அதற்க்கு விக்கினேச்வரன் தனது அனுபவம், திறமை, தனது தொழில் முறை தொடர்புகளை பயன்படுத்துவாராம். 

அதைத்தவிர எப்படி பெரியண்ணாவை வெட்டுகிறது என்று அனைவரும் தலையை பிச்சு கொண்டு இருக்கினம் என்றும் கேள்வி :(

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ அண்ணே கடசில பிரேம தாசக்கு ஏற்ப்பட்ட கதி தான் ஏற்படுமா அண்ணே ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படிதான் வந்தால் உன்களுக்கு சந்தோசம் என்றால், திருப்ப கதைக்கேக்க அதையும் சொல்லிவிட்டால் போச்சு :)

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ அண்ணே கடசில பிரேம தாசக்கு ஏற்ப்பட்ட கதி தான் ஏற்படுமா அண்ணே ?

ஓட்டை சிரட்டைக்குள்ளை கொஞ்சம் தன்னியும் பிடிச்சு அனுப்புங்க சுண்டல் முடியலை  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

 "தமிழீழமா சமஸ்டியா என்று ஒருதேர்தல் நடத்தமுடியுமா

அப்பொழுது பாருங்கள் மக்கள் உங்கள் முகத்தில் செருப்பால் அடிப்பார்கள்"

காசி ஆனந்தன் தெளிவாகத்தான் இருக்கின்றார்.

சிலர் மட்டும் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க வலை வீசுகின்றனர்.

காசி ஆனந்தன் அவர்கள் கூறியதுபோல

ஈழமா சமஷ்டியா என ஒரு வாக்கெடுப்பை இந்தக் கருத்துக்களத்திலேயே நடாத்திப்பாருங்கள்

அப்போது எல்லோருக்கும் விளங்கும்

இந்த சவாலை ஏன் ஒருத்தரும் எதிர் கொள்கிறார்களில்லை???

இதையே காசி வட -கிழக்கிலிருந்து சொல்வாரா ?காசிக்கு புத்தி பேதலித்து விட்டது .காசியின் புத்தகம் வித்து அவருக்கு பணம் அனுப்பியவர்களுக்குஇந்த திரியை  Email செய்துள்ளேன் .

என்ன ஒரு100 பவுன்ஸ் வருமா? புத்தகம் வித்த காசு. 

காசியானந்தனின் திருகுதாளங்கள் தொடர்பில் நான் எழுதியதனை யாழ். நிர்வாகம் தூக்கிவிட்டது.

இதுதான் தனிநபர் தாக்குதல் வகையாக்கும் :icon_mrgreen:

ஓவ்வொருவருடைய கருத்தும் அவருடைய தனிநபர் கருத்தாக மட்டுமே பாhக்க்கப்படக்கூடியது. அந்தவகையில் தேர்தல் சார்ந்த எனது கருத்தையும். என்னுடைய கருத்தாக மட்டும் கூறின்:
 
பிரான்சிஸ் பூக்காயாமாவின் பிரசித்தி பெற்ற அவதானிப்பைப் போல,  சனநாயகம் என்பது உலகில் பெரும்கவர்ச்சியாக இருப்பதன் மிகப்பெரும் அடிப்படை என்னவெனில், மத்தியவர்க்க மக்கள் கூட்டத்திற்கு ஆட்சியில் ஒரு உரித்து இருப்பதாகக் காட்டும் மிகப்பெரும் உத்தியே 'வாக்கு' என்பது. பொருளாதாரம் உயர உயர (அதாவது நடுத்தட்டைத் தாண்டி உண்மையான பலசாலி ஆகும் நிலைவருவதற்குக் கீழும் ஏழை நிலைக்கு மேலும்). தெரிவு செய்யப் பட்ட அரசு என்னத்தை எப்பிடி செய்யிது என்பது இரண்டாம் பட்சம், அரசைத் தெரிவு செய்வதில் தனக்கு ஒரு பிடி இருக்கிறது என்ற எண்ணம் தான் சனநாயத்தின் ஆணிவேர். அந்தவகையில், பொதுமையின் அரசியல் அபிலாசை என்பதற்கு அப்பால், கொஞ்சம்கொஞ்சமாகப் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி ஓடியும் அடைந்தும் வரும் யாழ்ப்பாண மக்கள் 66 சதவீதம் வாக்களிக்கச் சென்றது ஒன்றும் வியப்பில்லை. கடந்த தேர்தலைக் காட்டிலும் பொருளாதாரம் அதிகரித்த நிலையில் அதிகரித்த வாக்களிப்பு எதிர்பார்க்கப்படவேண்டியதே. என்னைக் கேட்டால் வாக்களித்தவர்களில் மிகப்பெரும்பான்மையானவர்கள் நடுத்தர வாக்கத்தினராய் இருப்பர். அது போன்று நடுத்தட்டு வாக்கு வங்கியில் 133 ஆயிரம் வாக்குகள் உயர்வின் சின்னமாகத் தெரியும் முதலமைச்சரை விருப்பென்று அறிவித்ததிலும் எந்த விந்தையும் இல்லை. தம்மை ஒத்தவர்கள் அல்லது தாம் அடைய ஆசைப்படும் இலக்கை ஒத்தவர்கள் தான் எந்த சனநாயகத்திலும் தெரிவுசெய்யப்படுகிறார்கள். ஏனெனில், வாக்களிப்பு என்பது பொதுமையின் அரசியல் அபிலாசைகளை மட்டும் சார்ந்ததல்ல .

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

காசிஆனந்தன் பாதுகாப்பாக இருந்து கொண்டு எதுவும் கதைக்கலாம்.இதே காசி தலைவர் கூப்பிடும்போது போகவில்லை என்ற கதையும் போராளிகளின் ஊடாக கேள்விப்பட்டுள்ளேன் .

ஆதாரமற்ற கருத்துக்கள் களத்தின் விதிமுறை மீறல்களில் ஒன்று

  • கருத்துக்கள உறவுகள்

சண்டமாருதன் சொல்வதுபோல "இத் தேர்தலால் தமிழர்களுக்கு என்ன நன்மை என்பது குறித்து எதுவும் சொல்வதற்கில்லை ஆனால் மகிந்த கூட்டத்தின் மீதிருந்த ஜனநாயக விரோத குற்றச்சாட்டு பலமிழந்து விட்டது என்பதில் சந்தேகமில்லை. இத்தேர்தல் சிங்களப்பேரினவாதத்திற்கே பெரும்பான்மை வெற்றி அதன் பிறகே தமிழர்களுக்கான வெற்றி". அதாவது இந்தத்தேர்தலில் சிங்களம் வடக்கில் தோற்றாலும் உலகத்தின் பார்வையில் வெற்றி பெற்றுவிட்டது. "வடக்கில் 25 வருடங்களுக்குப்பிறகு எங்களால் சனநாயகமாக தேர்தல் நடாத்தியிருக்கிறது. இனி வடக்கில் அபிவிருத்தியினைச் செய்யப்போகிறோம்." என்று சிங்களம் சொல்லிவருகிறது. நாங்கள் தான் உலகத்துக்கு "இத்தேர்தல் வெற்றியினால் தமிழர்களின் பிரச்சனை தீரப்போவதில்லை" என்று சொல்லவேண்டும்.

சம்பந்தர் அதைச் சொன்னார், இதைச் சொன்னர் என்பது எல்லாம் பொருள் இல்லாதது. 1983ம் ஆண்டு 6ம் திருத்தம் வந்தது. அதன் பின்னர் யாரின் பேச்சும், கதையும், எழுத்தும் அதற்கு மிஞ்சிப் போகவில்லை. ஈழவேந்தன் மாதிரி பதவியை விட்டுவிட்டு ஒட எல்லா பா.உ களும் நினைப்பார்களாயின் தேர்தல்களில் நிற்கவேண்டியதில்லை. (அவர் நியமனம்)  எனவே பேச்சுக்களுக்கு விவரணம் கொடுப்போர், எல்லாப்பேச்சும் அதன் கீழ்த்தான் என்பதையும் எழுதிவிட்டுத்தான் விவரணம் கொடுக்க வேண்டும். 

கூட்டமைப்பின் தேர்தலில் பிரசாரங்களில் எங்கும் வட்டுக்கோட்டை மகாநாட்டைப் பற்றி பிரஸ்தாபிக்கவில்லை.  எனவே அதைப் பிரதியிட இது கொண்டு வரப்பட்டது என்பதும் அடிப்படை இல்லாதது.கன்றை பூட்டி இழுத்த வண்டிலில் தாய் மாடு போனது என்று கூக்குரல் இடுவோருக்கு வட்டுக்கோட்டை மகாநாடு ஈழத்தமிழர் எல்லோருக்கும் பொதுவானா தீர்மானம் என்பது புரியாமல் சம்பந்தருக்கு எதிர்ப்பு எழுத எதையாவது எழுத்துகிறார்கள். கொஞ்சம் நினைவில் வைத்திருங்கப்பா - இது மாகாணசபை தேர்தல் மட்டும்.

கூட்டமைப்பின் வேட்டியை இழுத்துக்கிழிப்பது ஒன்றும் பெரிய வீரப்பிரதாபம் இல்லை.  போன வருசத்திற்கு, முதல் வருசத்திற்கு, முதல் வருசம் இந்தியாவிடம் பாதுகாப்பு கேட்டு போனவர்கள் தான் அவர்கள். இன்று அவர்களுக்கு தேர்தலில் நின்று மாகண சபையின் உரிமை கேட்கப் பலம் கொடுத்தது வெளிநாடுகள். வெளிநாடுகளை யாரும் மதிக்க, கேட்க வேண்டியதில்லை - ஐ.நாவில் ஒரு பிரேரணை தேவை இல்லை என்றால்.

பிரேரணையை குறுக்கே மறிப்பது இந்தியா. அதை சகல உலக நாடுகளும் பார்க்கின்றன. தேர்தலில் இந்தியா தலையிட்டதையும் பார்த்தார்கள். இதில் இந்தியா 13ம் திருத்தத்தை நடை முறைப்படுத்தாவிட்டால் பிரேரணையில் இந்தியாவின் கை இழகுவதை தவிர வேறு வழி இல்லை. 13ம் திருத்தம் நடைமுறைப்படுத்தப்படுமா என்ற விவாதத்தில் இறங்காமல், அது நடை முறைப்படுத்தப்பட்டால், அதில் இருக்கும் சரத்துகளை, மகிந்தாவையும், ஆமிகளையும் பொறுப்புக்கூற வைத்து தண்டிக்க பாவிக்க முயல வேண்டும். அப்படி தண்டிப்பதை சிங்கள் தேசம் ஏற்குமா என்றதை பார்க்க வேண்டும்.  வெலிவேரிய சம்பவத்திற்கு பிறகும் மத்தியமாகாணத்தில் UNP வெல்ல முடியவில்லை; SLFP வென்றது என்றதையும் கணக்கில் வைத்து எதிர்வு கூறல்களை எழுத வேண்டும். அதாவது சிங்களவர் மனத்தில் இருப்பது, தமது இனம் அழிந்தாலும் பரவாயில்லை, தமிழ் இனம் அழிய வாக்கு போட வேண்டும் என்பதுதான். 

தேர்தல் வந்தது இந்தியாவின் அழுத்ததால். காசி ஆனந்தனுக்கு தேர்தல் ஏற்கமுடியாததாக இருந்தால் இந்தியாவைவிட்டு வெளியே இன்னொரு நாட்டில் நின்று கொண்டு தேர்தலை கொண்டுவந்த இந்தியாவை தாக்கட்டும். 6ம் திருத்ததை அனுசரித்து அதன் தேர்தலில் நிற்பவர்கள், தமிழ் ஈழம் கேட்கவில்லை என்று சும்மா பகிடிவிடக் கூடாது. என்வே கல் கும்பியின் மீது நிற்கும் குரங்குக்கு கல்லெறிந்தாராயின் புலம் பெயர் தேசங்கள் எங்கும் இருந்து அவருக்கு பதில் எறிய காத்திருந்தவர்களிடம் இருந்து கல்லெறி வாங்கப்பொகிறாரே அல்லாமல். வேறு எதும் நடக்காது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா இப்ப காசியரையும் போட்டு வறுத்தெடுக்க தொடங்கியாச்சு

நெக்ஸ்ட்டு யாரு?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.