Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆண்கள் மீதான பாலியல் வல்லுறவு

ஆண்கள் மீதான் பாலியல் வல்லுறவு பற்றி உங்கள் எண்ணம் 19 members have voted

  1. 1. ஆண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முடியும் என நினைக்கிறீர்களா?

    • ஆம்
      17
    • இல்லை
      2
  2. 2. ஒரு ஆண் (18+) ஒரு பெண்ணால் பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டதாக சொன்னால் , அந்த ஆண் பற்றி உங்கள் எண்ணம் ?

    • தைரியமில்லாத ஆண்
      4
    • பாலியல் உறவு கிடைத்து என்று சந்தோஷ படாமல் அதை பற்றி குறை சொல்லுகிறாய்
      4
    • மட பயல் இதை போய் வெளியில் சொல்லி கொண்டு இருக்கிறான்
      1
    • வெளியில் தைரியமாக சொல்ல வேண்டும், குற்றம் செய்தவருக்கு தண்டனை வேண்டும்
      12
  3. 3. ஒரு ஆண் (18+) தான் இன்னும் ஒரு ஆணினால் பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டதாக சொன்னால் , அந்த ஆண் பற்றி உங்கள் எண்ணம் ?

    • தைரியமில்லாத ஆண்
      1
    • பாலியல் உறவு கிடைத்து என்று சந்தோஷ படாமல் அதை பற்றி குறை சொல்லுகிறாய்
      0
    • மட பயல் இதை போய் வெளியில் சொல்லி கொண்டு இருக்கிறான்
      1
    • வெளியில் தைரியமாக சொல்ல வேண்டும், குற்றம் செய்தவருக்கு தண்டனை வேண்டும்
      17

Please sign in or register to vote in this poll.

Featured Replies

ஒருவர் மீது அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அவரின் அனுமதி இல்லது பாலியல் உறவு கொள்வது தவறானது, பல நாடுகளில் தண்டனைக்கு உரிய குற்றம்.

பொதுவாக பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள் அதிக முக்கியத்துவம் கொடுத்து செய்திகளில் பிரசுரிக்கபடுவது உண்டு.

ஆண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள் செய்திகளில் வந்தாலும், அவை நடப்பது குறைவு. நடந்தாலும் அவை பற்றி ஆண்கள் வெளியில் சொல்ல முன்வருவதில்லை.

ஒரு வகையில் ஆண்கள் சிறுவயதினராக இருக்கும் போது அவர்களை பாலியல் வல்லுறவுக்கு உடபடுத்துவது ஆண்களால் அல்லது பெண்களால் நடக்கலாம். அது நடந்ததை பற்றி சிறுவர்கள் வெளியே சொல்ல பயப்படலாம் அல்லது சொல்லும் அளவுக்கு அவர்களுக்கு என்ன நடந்தது என்று அறியும் வயது வராது இருக்கலாம்.

இன்னும் ஒரு வகை, அறிவு தெரிந்த பதின்ம வயதினர், அல்லது வயதுக்கு வந்த (18+) ஆண்கள், இன்னுமொரு ஆணினாலொ அல்லது பெண்ணினாலொ பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த படலாம்.

அப்படி பாலியல் வல்லுறவுக்கு உட்பட்ட ஆண்கள் அதை பற்றி காவல் துறை (போலிஸ்) இல் முறைப்பாடு செய்வது பற்றியோ அல்லது அது பற்றி வெளியே பேசுவது பற்றியோ உங்கள் கருத்து என்ன 

இந்த இணைப்பில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட ஆண்கள் தாங்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டது பற்றி, அவர்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியவர்கள் சொன்ன வார்த்தைகளை சொல்கிறார்கள்.

http://www.buzzfeed.com/spenceralthouse/male-survivors-of-sexual-assault-quoting-the-people-who-a

Since sexual assault plagues all genders, here are quotes from male survivors.

9.
 
enhanced-buzz-15733-1379977738-5.jpg
10.

எல்லா படங்களையும் ஒன்றாக இணைக்க முடியவில்லை. மிகுதி அடுத்த பதிவில்
 
Edited by KULAKADDAN

  • Replies 78
  • Views 14.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முடியும் என நினைக்கிறீர்களா?
ஆம்.

ஒரு ஆண் (18+) ஒரு பெண்ணால் பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டதாக சொன்னால் , அந்த ஆண் பற்றி உங்கள் எண்ணம் ?
பாலியல் உறவு கிடைத்து என்று சந்தோஷ படாமல் அதை பற்றி குறை சொல்லுகிறாய்.

ஒரு ஆண் (18+) தான் இன்னும் ஒரு ஆணினால் பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டதாக சொன்னால் , அந்த ஆண் பற்றி உங்கள் எண்ணம் ?
மட பயல் இதை போய் வெளியில் சொல்லி கொண்டு இருக்கிறான்.

------

மேலே... உள்ள வாக்குப் பெட்டியில்... நீல எழுத்துக்களில், உள்ளவற்றுக்கு... எனது வாக்கை அளித்துள்ளேன். :D

நீண்ட நாட்களின் பின், களத்தில் வாக்கெடுப்பு நடத்தும் குளக்காட்டானுக்கு நன்றி. :)

1. ஆம்.

2. பாலியல் உறவு கிடைத்து என்று சந்தோஷ படாமல் அதை பற்றி குறை சொல்லுகிறாய்.

3.வெளியில் தைரியமாக சொல்ல வேண்டும், குற்றம் செய்தவருக்கு தண்டனை வேண்டும்.

:) me

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது கேள்விக்கு கூடுதல் தெரிவுகள் வேணும்.. :D

செம ஃபிகரா இருந்தால் வாயை மூடிட்டு போக வேண்டியதுதான்.. :unsure: அட்டு ஃபிகரா இருந்தால் கட்டாயம் போராட வேணும்.. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இசையின் கருத்தே எனதும்! ஆனாலும் பெண் ஆணை வல்லுறவு செய்தல்? பத்தாம் ஆண்டு விஞ்ஞானப் பாடப் புத்தகத்தை அரைகுறையாகப் படித்த ஒருவருக்கே இது சாத்தியமில்லை என்று புரியும். எப்படியப்பா? ஊசியும் நூலும் உதாரணம் காட்டி நிறுவலாம் தான் எண்டாலும் வெட்டு வாங்காமல் இருக்க "கம்"மெண்டு இருக்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆணோ

பெண்ணோ

ஒரு நிலைக்குப்பின் உடன்பட்டுவிடுகிறார்கள் என்பது தான்  உண்மை.

இதில் ஆண்கள் விரைவில் உடன்பட்டுவிடுகிறார்கள்.

இல்லாது விட்டால்

ஒரு உருப்படி இல்லாத ஆணை  என்ன  செய்யமுடியும்???

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

வல்லுறவு என்றாலே விருப்பமில்லாமல் நடக்கும் ஒன்று தானே. 

ஆணோ

பெண்ணோ

ஒரு நிலைக்குப்பின் உடன்பட்டுவிடுகிறார்கள் என்பது தான்  உண்மை.

இதில் ஆண்கள் விரைவில் உடன்பட்டுவிடுகிறார்கள்.

மிகவும் மோசமான,  பிற்போக்கான கருத்து இது விசுகு.

பாலியல் வல்லுறவாக்கப்படும் பெண்கள் ஒரு கட்டத்தில் இன்பமான ஒரு செயலுக்குட்படுவதாக (Enjoyment) கருதுவதாகவும் அதனால் ஒரு நிலைக்கு பின் உடன்பட்டு விடுகின்றார்கள் எனவும் அர்த்தம் வெளிப்படுகின்றவாறு எழுதியுள்ளீர்கள். மிக மோசமான கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

ஆணோ

பெண்ணோ

ஒரு நிலைக்குப்பின் உடன்பட்டுவிடுகிறார்கள் என்பது தான்  உண்மை.

இதில் ஆண்கள் விரைவில் உடன்பட்டுவிடுகிறார்கள்.

இல்லாது விட்டால்

ஒரு உருப்படி இல்லாத ஆணை  என்ன  செய்யமுடியும்???

விசுகர், இப்படியான கேனைத் தனமான ஒரு கருத்தை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. இதை நீங்களாகவே மீளப் பெற்றுக் கொண்டு வருத்தம் தெரிவிக்க வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆணோ

பெண்ணோ

ஒரு கட்டத்துக்கப்பால்

உரசல்கள் மற்றும்  மனமாற்றங்கள் காரணமாக உடன்பட்டுவிடுவதாகவே நான் அறிந்தேன்.

இந்த திரிக்கு  ஏற்ப  ஒரு சாதாரண இருவர் மட்டும் ஈடுபடும் வன்புணர்வின் போது  என்பதற்காக எழுதியதே அது.

இதில் எல்லோரும் என்பதோ

அல்லது

மிகவும் பலத்தை  பாவித்து கொடூர வன்முறை

அல்லது

பலர் ஒன்று சேர்ந்து   பாலியல் வன்புணர்வுக்குட்படுத்துதல்  வராது ....

விளக்கமாக எழுதாததால்

அர்த்தம் மாறுபட்டிருக்கலாம் நிழலி.

சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

விசுகர், இப்படியான கேனைத் தனமான ஒரு கருத்தை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. இதை நீங்களாகவே மீளப் பெற்றுக் கொண்டு வருத்தம் தெரிவிக்க வேண்டும்!

வணக்கம்

எனது கருத்து தப்பு என்றால் மன்னிப்புக்கேட்க தயங்கப்போவதில்லை.

அதற்கு முன் ஒரு ஆணை  எப்படி வன்புணர்வு செய்யமுடியும்??? 

என விளங்கப்படுத்தமுடியுமா???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்முறையில் மென்மையான வன்முறை, கொடுமையான வன்முறை என்று ஏதும் இருக்கா?

திருமணம் செய்த மனைவியாக இருந்தால்க் கூட விருப்பமில்லாமல் தொடும் உரிமை இல்லாத போது வண்புணர்வை ஒரு கட்டத்துக்கு மேல் சம்பந்தப்பட்ட இருதரப்பும் உடன்படுகிறார்கள் என்று சொல்லவும் ஆக்கள் இருக்கு எனும் போது வேடிக்கையாக இருக்கிறது.

தங்கள் பிள்ளைகளிடம் குறிப்பாக மகளிடம் இப்படியான  ஒரு கருத்தை தந்தை சொல்லிப் பார்க்க வேண்டும்.

அந்தப்பிள்ளை முகத்தில் காறித்துப்பும்.

தன் பிள்ளைகளுக்கு நடந்தாலும் இப்படியா இந்தச் சமூகம் சொல்லும்? வெட்கமாக இருக்கிறது... :wub: :wub:

எங்க  சறுக்குவார் என்று கொஞ்சப்பேர் திரிகிறீர்கள் போலும்........

உடனே

குடும்பம்

மகள்...........  எல்லாத்தையும் இழுத்து வாறதுக்கு....

நடக்கட்டும் நடக்கட்டும்.......... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

வன்முறையில் மென்மையான வன்முறை, கொடுமையான வன்முறை என்று ஏதும் இருக்கா?

திருமணம் செய்த மனைவியாக இருந்தால்க் கூட விருப்பமில்லாமல் தொடும் உரிமை இல்லாத போது வண்புணர்வை ஒரு கட்டத்துக்கு மேல் சம்பந்தப்பட்ட இருதரப்பும் உடன்படுகிறார்கள் என்று சொல்லவும் ஆக்கள் இருக்கு எனும் போது வேடிக்கையாக இருக்கிறது.

தங்கள் பிள்ளைகளிடம் குறிப்பாக மகளிடம் இப்படியான  ஒரு கருத்தை தந்தை சொல்லிப் பார்க்க வேண்டும்.

அந்தப்பிள்ளை முகத்தில் காறித்துப்பும்.

தன் பிள்ளைகளுக்கு நடந்தாலும் இப்படியா இந்தச் சமூகம் சொல்லும்? வெட்கமாக இருக்கிறது... :wub: :wub:

ஜீவா.. இப்படி முதுகுக்குப் பின்னால் சொல்வதை விட்டுவிட்டு, பெயரைக் குறிப்பிட்டு நேரடியாகவே சொல்லலாமே.. :rolleyes:

உங்களால் அது முடியாது. சொன்னால் இரண்டு கரும்புள்ளிகளும், வெட்டும் கிடைக்கும்.. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

கருவாட்டுக்கு முன்னால் ஆண் பூனை என்ன.. பெண் பூனை என்ன. எல்லாம் ஒரு வகை தான்...!

நரம்புகளின் தூண்டல்கள்.. புலன்களின் தூண்டல்கள்.. இருந்தால்... மனித இயந்திரங்கள் சுகித்திட்டுப் போங்கள். இதில் ஆணென்ன.. பெண்ணென்ன..!

இந்த வாக்கெடுப்பில்.. ஒரு ஆண் பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டால்.. அவன்.. பாலுறவு கிடைச்சுது என்று திருப்திப்பட்டுக்கனும் இல்லை இல்லை சந்தோசப்பட்டுக்கனும்.. என்று ஒரு விடை உள்ளது.

இதனையே.. ஒரு பெண்ணின் மீதான பாலியல் வல்லுறவுக்கு எழுதி.. அதற்கு வாக்குப் போடுவார்களா.. மேன்மை தங்கிய கள உறவுகள்.

பாலியல் வல்லுறவென்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் உள ரீதியில் ஏற்படுத்தும் பாதிப்பு ஒன்றே. உடல் ரீதியில் ஏற்படும் அனுபவங்கள் என்றால்.. பாலுறவு அனுபவம்.. வல்லுறவின் போது ஆணுக்கு இருப்பது போல பெண்ணிற்கும் இருக்கத்தானே செய்யும். வல்லுறவுக்கு உள்ளாகும் பெண்களுக்கும் பாலியல் உறவு கிடைக்குது தானே. அப்ப அவங்கள அதில் சந்தோசப்பட்டுக்க வேண்டியதுதானே என்று அறிவுரை சொல்ல முடியுமா..???! பெண் என்றால்.... அங்க என்ன நரம்புகளும் தசைகளும் உரசல் இல்லாமலா இருக்கப் போகின்றன.  ஆணுக்கு மட்டும்...???????????! இதில எது முற்போக்கு.. எது பிற்போக்கு..?????????!

அந்த விடை உண்மையில் மனிதர்கள் மீதான பாலியல் வல்லுறவுக்கு தீர்வாக அமைய.. உகந்ததா...??!  ஆம் என்றால்.. பெண்ணுக்கு ஒன்று ஆணுக்கு இன்னொன்று என்று சட்டம் இயற்ற முடியாது. பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகும் ஆண் போல.. பெண்ணும் பாலுறவு கிடைச்சுதே என்று சந்தோசப்படுக்க வேண்டியது தானே...!

பாலுறவு என்று வந்திவிட்டால்.. இரண்டு மனித இயந்திரங்களும் ஒன்று தான். உணர்ச்சிப் பிளம்புகள். அவ்வளவே..! அதைத் தாண்டி உளவியல் என்ற ஒன்றுள்ளது. அதன் பாதிப்பு ஆண்கள்.. பெண்கள் இருவரிலும்.. உள்ளது. அதனை சமனாகக் கருத்தில் எடுப்பதே நன்று. பாலியல் வல்லுறவின் முன்.. பெண்ணென்றால்.. ஒரு வகை.. ஆணென்றால்.. இன்னொரு வகை என்று போற்றுதல்.. அல்லது காட்டுதல் தவறு. பாதிப்புக்கள் இருவரிலும் ஒன்றே..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா.. இப்படி முதுகுக்குப் பின்னால் சொல்வதை விட்டுவிட்டு, பெயரைக் குறிப்பிட்டு நேரடியாகவே சொல்லலாமே.. :rolleyes:

உங்களால் அது முடியாது. சொன்னால் இரண்டு கரும்புள்ளிகளும், வெட்டும் கிடைக்கும்.. :icon_mrgreen:

மாம்ஸ் முதுகுக்குப் பின்னால் கருத்தாட வேண்டிய அவசியமே இல்லை. இல்லை கரும்புள்ளிகளும், வெட்டும் கிடைப்பதும் பற்றியும் கவலையும் இல்லை. நான் குறிப்பிட்டவருடன் நட்பும் பாராட்டவில்லை அதே சமயம் அவருக்கு எதிரியோ, பகையாளியோ இல்லை. இது  தனிப்பட்ட அவருக்கு எதிரான கருத்து இல்லை. நீங்கள் கூட  தனிநபர் தாக்குதலாக பார்ப்பது எனக்கு சரியாகப்படவில்லை. அவரை அவமானப்படுத்தும் நோக்கம் கடவுள் சத்தியமாக எனக்கு துளியும் இல்லை.

ஆனால் உண்மையாக அவர் கூறிய கருத்துக்கள் எவ்வளவு பிற்போக்குத்தனமானது என்பது வாசகர்களுக்குத் தெரியும். அவரது கருத்துக்கான எதிர்வினையே தவிர அவருக்கானதல்ல.

அதை அவரும் புரிந்துகொள்வார் என்று நம்புகிறேன். :)

உண்மைதான் ஜீவா.. நீங்கள் யாரையும் குறிப்பால் உணர்த்தும் விதமாக கருத்து எழுதவில்லை.. நான் தான் பிழையாக விளங்கிக்கொண்டேன். இப்போது நம்பிவிட்டேன். நன்றி ஜீவா.. :D

இப்படிப் பட்ட "உள் குத்துக்களை" நான் வன்மையாக கண்டிக்கிறேன்! இசை நேரடியாகத் தன் கருத்தை ஜீவாவிடம் சொல்லி எல்லோருக்கும் முன்னுதாரணமாக விளங்க வேண்டுமென்று கேட்டுக் கொன்டு அமர்கின்றேன்! :icon_mrgreen:

சபாநாயகர் அவர்களே.. இடையில் குறுக்கிட்டுப் பேசியதால் உறுப்பினர் ஜஸ்டின் அவர்களின் கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்கவேண்டும்..! :D

குற்றம் மாபெரும் குற்றம் அதுவும் வெள்ளிக்கிழமை எம்மை உசுப்பேத்தும் நோக்கோடு இந்த திரி இணைக்கப்பட்டது மாபெரும் குற்றம் ..............எழுதாமல் இருக்கமுடியல ........ஆனால் இன்னும் சரியான பதநிலைக்கு வராததால் எழுத ஏதோ ஒன்று தடுக்குது ....கொஞ்சம் பொறுத்து ஏதாவது எழுத தோண்டுதா எண்டு பார்ப்பம்  :D  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆணின் மீது ஆண் பாலியல் வல்லுறவை மேற்கொள்வது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்... பெண்கள் எப்படி ஆண்களைப் பாலியல் பலாத்காரம் செய்யமுடியும்?....

கருவாட்டுக்கு முன்னால் ஆண் பூனை என்ன.. பெண் பூனை என்ன. எல்லாம் ஒரு வகை தான்...!

நரம்புகளின் தூண்டல்கள்.. புலன்களின் தூண்டல்கள்.. இருந்தால்... மனித இயந்திரங்கள் சுகித்திட்டுப் போங்கள். இதில் ஆணென்ன.. பெண்ணென்ன..!

இந்த வாக்கெடுப்பில்.. ஒரு ஆண் பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டால்.. அவன்.. பாலுறவு கிடைச்சுது என்று திருப்திப்பட்டுக்கனும் இல்லை இல்லை சந்தோசப்பட்டுக்கனும்.. என்று ஒரு விடை உள்ளது.

இதனையே.. ஒரு பெண்ணின் மீதான பாலியல் வல்லுறவுக்கு எழுதி.. அதற்கு வாக்குப் போடுவார்களா.. மேன்மை தங்கிய கள உறவுகள்.

பாலியல் வல்லுறவென்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் உள ரீதியில் ஏற்படுத்தும் பாதிப்பு ஒன்றே. உடல் ரீதியில் ஏற்படும் அனுபவங்கள் என்றால்.. பாலுறவு அனுபவம்.. வல்லுறவின் போது ஆணுக்கு இருப்பது போல பெண்ணிற்கும் இருக்கத்தானே செய்யும். வல்லுறவுக்கு உள்ளாகும் பெண்களுக்கும் பாலியல் உறவு கிடைக்குது தானே. அப்ப அவங்கள அதில் சந்தோசப்பட்டுக்க வேண்டியதுதானே என்று அறிவுரை சொல்ல முடியுமா..???! பெண் என்றால்.... அங்க என்ன நரம்புகளும் தசைகளும் உரசல் இல்லாமலா இருக்கப் போகின்றன.  ஆணுக்கு மட்டும்...???????????! இதில எது முற்போக்கு.. எது பிற்போக்கு..?????????!

அந்த விடை உண்மையில் மனிதர்கள் மீதான பாலியல் வல்லுறவுக்கு தீர்வாக அமைய.. உகந்ததா...??!  ஆம் என்றால்.. பெண்ணுக்கு ஒன்று ஆணுக்கு இன்னொன்று என்று சட்டம் இயற்ற முடியாது. பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகும் ஆண் போல.. பெண்ணும் பாலுறவு கிடைச்சுதே என்று சந்தோசப்படுக்க வேண்டியது தானே...!

பாலுறவு என்று வந்திவிட்டால்.. இரண்டு மனித இயந்திரங்களும் ஒன்று தான். உணர்ச்சிப் பிளம்புகள். அவ்வளவே..! அதைத் தாண்டி உளவியல் என்ற ஒன்றுள்ளது. அதன் பாதிப்பு ஆண்கள்.. பெண்கள் இருவரிலும்.. உள்ளது. அதனை சமனாகக் கருத்தில் எடுப்பதே நன்று. பாலியல் வல்லுறவின் முன்.. பெண்ணென்றால்.. ஒரு வகை.. ஆணென்றால்.. இன்னொரு வகை என்று போற்றுதல்.. அல்லது காட்டுதல் தவறு. பாதிப்புக்கள் இருவரிலும் ஒன்றே..! :icon_idea:

நெடுக்கின் கருத்துடன் முற்றிலும் ஒத்துப் போகின்றேன். வல்லுறவு என்பதே வன்முறையின் உச்சக்கட்டம் தான். உடலியல் உளவியல் பாதிப்புகள் ஏற்படுத்தும் ஆழமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் குரூர வன்முறை. இதில் ஆண் பெண் பேதம் கிடையாது.

அதே நேரத்தில் ஒரு பெண்ணால் ஆணை வல்லுறவுக்குட்படுத்தப்படுவது என்பது எந்தளவுக்கு சாத்தியம் என்பது புரியவில்லை. ஆண் உறுப்பு விரைப்பு ஏற்படாமல் எப்படி பெண் ஒருவரால் ஆணை வல்லுறவு செய்ய முடியும்? ஆணுக்கு மனம் இணங்காவிட்டால் ஆணுறுப்பு ஒரு போதும் விரைப்புக்குள்ளாகாது. அது விரைப்புக்குள்ளாகாவிடின் அங்கு உடலுறவு / வல்லுறவு இடம் பெற முடியாதே? விளக்கம் தந்தால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் வன்புணர்வின் தாக்கம் பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கையையே மாற்றிவிடுகின்றது.

வாழ்க்கைபூராகவும் மன உளைச்சலில் இருந்து மீள முடியாதவர்களும் இருக்கின்றார்கள்.

எவராக இருந்தாலும் அவர்களுக்கான தண்டனையை வாங்கித்தர
முன்னிற்க வேண்டும்.
 
விசுகு அண்ணா

பாலியல் வன்புணர்விற்கு வற்புறுத்தப்படுபவர்கள்  என்று விளங்கிக்கொண்டால்(அதுவும் குற்றமே ) நீங்கள் கூறுவதில் சில வேளைகளில் அர்த்தம் இருக்கலாம் ஆனால் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்படுபவர்கள் என்ற ரீதியில் ஆராயப்படும்போது நீங்கள் கூறுவது பிழை.    

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா, ஒரு மாதிரி திரியைப் பத்த வச்சாச்சு! :D

01~Bushmen-Making-Fire.jpg

  • கருத்துக்கள உறவுகள்

கருவாட்டுக்கு முன்னால் ஆண் பூனை என்ன.. பெண் பூனை என்ன. எல்லாம் ஒரு வகை தான்...!

நரம்புகளின் தூண்டல்கள்.. புலன்களின் தூண்டல்கள்.. இருந்தால்... மனித இயந்திரங்கள் சுகித்திட்டுப் போங்கள். இதில் ஆணென்ன.. பெண்ணென்ன..!

இந்த வாக்கெடுப்பில்.. ஒரு ஆண் பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டால்.. அவன்.. பாலுறவு கிடைச்சுது என்று திருப்திப்பட்டுக்கனும் இல்லை இல்லை சந்தோசப்பட்டுக்கனும்.. என்று ஒரு விடை உள்ளது.

இதனையே.. ஒரு பெண்ணின் மீதான பாலியல் வல்லுறவுக்கு எழுதி.. அதற்கு வாக்குப் போடுவார்களா.. மேன்மை தங்கிய கள உறவுகள்.

பாலியல் வல்லுறவென்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் உள ரீதியில் ஏற்படுத்தும் பாதிப்பு ஒன்றே. உடல் ரீதியில் ஏற்படும் அனுபவங்கள் என்றால்.. பாலுறவு அனுபவம்.. வல்லுறவின் போது ஆணுக்கு இருப்பது போல பெண்ணிற்கும் இருக்கத்தானே செய்யும். வல்லுறவுக்கு உள்ளாகும் பெண்களுக்கும் பாலியல் உறவு கிடைக்குது தானே. அப்ப அவங்கள அதில் சந்தோசப்பட்டுக்க வேண்டியதுதானே என்று அறிவுரை சொல்ல முடியுமா..???! பெண் என்றால்.... அங்க என்ன நரம்புகளும் தசைகளும் உரசல் இல்லாமலா இருக்கப் போகின்றன.  ஆணுக்கு மட்டும்...???????????! இதில எது முற்போக்கு.. எது பிற்போக்கு..?????????!

அந்த விடை உண்மையில் மனிதர்கள் மீதான பாலியல் வல்லுறவுக்கு தீர்வாக அமைய.. உகந்ததா...??!  ஆம் என்றால்.. பெண்ணுக்கு ஒன்று ஆணுக்கு இன்னொன்று என்று சட்டம் இயற்ற முடியாது. பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகும் ஆண் போல.. பெண்ணும் பாலுறவு கிடைச்சுதே என்று சந்தோசப்படுக்க வேண்டியது தானே...!

பாலுறவு என்று வந்திவிட்டால்.. இரண்டு மனித இயந்திரங்களும் ஒன்று தான். உணர்ச்சிப் பிளம்புகள். அவ்வளவே..! அதைத் தாண்டி உளவியல் என்ற ஒன்றுள்ளது. அதன் பாதிப்பு ஆண்கள்.. பெண்கள் இருவரிலும்.. உள்ளது. அதனை சமனாகக் கருத்தில் எடுப்பதே நன்று. பாலியல் வல்லுறவின் முன்.. பெண்ணென்றால்.. ஒரு வகை.. ஆணென்றால்.. இன்னொரு வகை என்று போற்றுதல்.. அல்லது காட்டுதல் தவறு. பாதிப்புக்கள் இருவரிலும் ஒன்றே..! :icon_idea:

பாலியல் ரீதியான பாதிப்பு இருவருக்கும் இருக்கும் ஆனால் பெண்ணுக்குத் தான் மனதாலும்,உடம்பாலும் பெரும் பாதிப்பு  :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.