Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முகமூடி

Featured Replies

இவள் இப்போது சில மாதங்களாய் என் இருக்கைக்கு முன்னதாய் உள்ள இருக்கையில் புகையிரதத்தில் ஒவ்வொருநாளும் அமர்கிறாள். தமிழ் தான் சந்தேகமில்லை. ஏனோ இவளை எனக்குத் தெரிந்தது போன்று ஒரு உள்ளுணர்வு. எங்கே பாத்திருக்கிறேன்? ஞாபகமில்லை. எத்தனை தரம் எப்படி இருந்து யோசித்தும் ஞாபகமில்லை.
 
தமிழ் பெண்ணென்றால் தெரியாத ஆம்பிளையளைப் பாத்தாச் சிரிக்கக்கூடாது என்று அம்மா சொல்லி வழர்த்திருப்பா போல. மாதக்கணக்காய் முன்னிருக்கையில் இருந்தும் ஒரு முறுவல் தன்னும் இன்னும் இல்லை. அதற்காக, நிழல் நிஜமாகிறது படத்தில வந்த சுமித்திரா அவளும் இல்லை, கமல் நானுமில்லை இது 1978ம் ஆண்டுமில்லை. பிள்ளைக்குக் கொஞ்சம் கூச்ச சுபாவம். அவ்வளவு தான். 
 
இந்த மனிதன் என்ற விசயம் இருக்கே, இதில புரிந்ததைக் காட்டிலும் புரியாதவை தான் அதிகம். ஆவர்த்தனம், அலைவரிசை இப்படிப் பல சந்தேகத்திற்கிடமான விடயங்கள் இருந்து கொண்டு தான் இருக்கு. அது என்ன மாயமோ மந்திரமோ, முகமூடி மனிதர்கள் என்ன முகமூடி அணிந்து சென்றாலும் முகமூடிகள் அத்தனைக்கும் பொதுவான ஆன்மா நமக்குள்ளே நம்மோடு தானே எப்போதும் கூட இருக்கிறது. அதனாலோ என்னமோ சில சமயங்களில் ஆன்மாக்கள் அறிந்து கொள்கின்றன. 
 
யார்ர்ர்ர்ர்றா இவள். இந்தப் புகையிரதத்தில் எத்தனை மனிதர்கள் இருக்கிறார்கள். எத்தனை பேரைத் தினமும் கடந்து செல்கிறோம். இவளப் பத்தி மட்டும் ஏனிந்தக் கேள்வி எனக்குள்ள? அதுவும், I'm not even looking for a relationship, நம்ம வாழ்க்ககை தான் தாளம் தப்பாது நல்லா ஓடிட்டிருக்கே. அதுமட்டுமல்ல இவள்ள நமக்கு எந்தக் கவர்ச்சியும் ஏற்படேல்லயே. ஆனா இவ யாருன்னு தெரியணும்னு மட்டும் உள்ளுக்க ஒரே அடம்பிடிப்பா இருக்கிறதுக்கு மேலால இது புதுசா இருக்கு.... அபிபராமி....அபிராமி..பாத்த விழி பாத்தபடி பூத்து இருக்க...என்னடா பங்காளி இப்ப உனக்கு என்ன தான் வேணும்ற? இவ யாருன்னு தெரியணுமா? அவ ஆரா இருந்த உனக்கென்ன? தெரிஞ்சு நீ இன்னா பண்ணப்போற?
 
முன்னப்பின்ன பாத்த ஞாபகம் அறவே இல்லாத ஒருத்தியத் தெரிஞ்சது மாதிரி இருக்கெண்டா, அந்த உணர்வு மிகவும் உண்மையா இருக்கெண்டா? அது எப்படி? அறியணுமில்ல. நம்ம யாரு...பேசிரவேண்டியது தான்.
 
ஏக்ஸ்கியூஸ்மி, ஹாவ் வி மெற் ...before?
 
வெடிச்சிரிப்பு சிரிக்கிறாள். எனக்கு ஒரே குளப்பம். நாம இப்ப என்ன காமடி பண்ணீட்டம் என்று இப்பிச்சிரிக்கிறாள். ஒருவேள...
 
சொறி சொறி, நீங்க தமிழ் தானே, தமிழ் தான் அது தெரியும், நேற்றுத் தான் அந்தப் புத்தகத்தை முடிச்சீங்களே. நானேன் சிரிச்சனென்டால் இப்ப மூன்று மாசமா நான் கேக்க நினைச்சத நீங்க கேட்டிங்களா, நம்ப முடியேல்ல. அது சரி நாங்க எங்க மீற் பண்ணினம்?
 
அட போம்மா நீ வேற. தெரிஞ்சா சொல்ல மாட்டமா? அது சரி நாங்க சந்திச்சமெண்டு எப்பிடி நம்புறீங்க? இது நான்.
 
சந்திச்சிருக்கிறம், அதுல டவுட்டில்ல. அல்லாட்டி ஏன் இரண்டுபெரும் சந்திச்சதா நினைக்கிறம். சரி, நீங்க எங்க படிச்சீங்க? நான் அதைச் சொன்னேன். எங்க வேலை பாக்கிறீங்க?...சொன்னேன். இதுக்கு முன்னம் எங்க இருந்தீங்க...சொன்னேன். எதுவுமே பொதுவா இல்ல. யரையும் பொதுவில எங்களிற்கு தெரிந்ததாய் இல்ல. அப்ப தான் அது நடந்திது...
 
'சரியாப் போச்சு யாழில தான் பதிவு போடோணும்' என்று அவள் சொன்னாள்.
 
என்னாது, யாழா? யாரும்மா நீயி...
 
  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ஐயோ ஐயோஎன்ன இப்பிடி இடையில விட்டுவிட்டீர்கள். விளங்காத  மொழியில எழுதும் நீங்கள் இண்டைக்குத்தான் விளங்கிறதுபோல எழுதுறீங்கள் எண்டு எண்ணி முடிக்கேல்ல. விட்டுவிட்டுப் போயாச்சு

  • கருத்துக்கள உறவுகள்
:lol: :lol: :lol: உங்களுக்கு மண்டை வெடிக்குது.. எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை இன்னுமொருவன்.. :D நம்ம வல்வை அக்காவா இருக்கப்போகுது.. :lol:
  • கருத்துக்கள உறவுகள்

இனி  நானும் ரயிலில  தான் போகப்போறன்............ :D

  • கருத்துக்கள உறவுகள்

--------
'சரியாப் போச்சு யாழில தான் பதிவு போடோணும்' என்று அவள் சொன்னாள்.
 
என்னாது, யாழா? யாரும்மா நீயி...

பொருத்தமான இடத்தில், பொருத்தமான நேரத்தில்... உங்களது கதையை பதிந்து கொண்டுள்ளீர்கள், இன்னுமொருவன்.

வாசித்து, ரசித்தேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

'சரியாப் போச்சு யாழில தான் பதிவு போடோணும்' என்று அவள் சொன்னாள்.
 
என்னாது, யாழா? யாரும்மா நீயி...

எவா அவா ? இன்னுமொருவன் சொல்லீடுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாப் பக்கமும் போய்ப் பார்த்துவிட்டு வந்திட்டன், உப்பிடி யாரும் யாழில பதின்ச சிலமன் இல்லை! :)  :)

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயம் சுமேயா இருக்காது! கட்டாயம் மாசமொரு கடிதமாவது தந்திருப்பா! :D

பதிவு கொஞ்சம் வித்தியாசமா இருக்கு! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அது யாராயினும் பிரச்சனை இல்லை
ஆத்மா என்ற மனதுக்கு எல்லாம் எப்போதும் தெரியுமாம்.

ஆனால் யாழிலை பதிவு போட வேண்டும் என்று சொன்னபடியால்

நீங்கள் பொறுமை காத்திருக்கலாம் தானே என் இப்படி அவசரப்பட்டு எழுதினீங்கள் :D  :D

இதுக்குத்தான் சொல்றது வாத்தியாரின் தமிழ் வகுப்பில பின் வாங்கிலயெண்டாலும் இருக்க வேணுமெண்டு. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அது யாராயினும் பிரச்சனை இல்லை

ஆத்மா என்ற மனதுக்கு எல்லாம் எப்போதும் தெரியுமாம்.

ஆனால் யாழிலை பதிவு போட வேண்டும் என்று சொன்னபடியால்

நீங்கள் பொறுமை காத்திருக்கலாம் தானே என் இப்படி அவசரப்பட்டு எழுதினீங்கள் :D  :D

இப்ப இன்னுமொருவன் யார் என்கிற குட்டு அந்தப் பக்கம் வெளிச்சிருக்கும்.. பாவம் இன்னுமொருவன்.. :(:D

நல்லா பாத்திங்களா அது பொம்பிளை தானா எண்டு...??? இல்லை யாழுக்கை.... அதுவும் முகமூடி எண்டதால சந்தேகம் வரும் தானே...??

விடுங்க பாஸ் போன ஜென்மத்திலை யாருக்காவது கடன் குடுத்துட்டு திருப்பி வாங்க நடையா நடந்து செருப்பு தேஞ்சி செத்திருப்பிங்க... அவங்களா இருக்கும்...

அதொண்டும் பிரச்சினை இல்லை... படுக்கும் போது தண்ணி குடிச்சிட்டு படுங்க எல்லாம் சரியாயிடும்...

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இன்னுமொருவன் யார் என்கிற குட்டு அந்தப் பக்கம் வெளிச்சிருக்கும்.. பாவம் இன்னுமொருவன்.. :(:D

இன்னுமொருவன் ஒரு பொறுமைமிக்க பதிவாளர்

இந்த விடையம் பல காலத்திற்கு முன்னர் நடந்து

அவர் காத்திருந்து காத்திருந்து காலங்கள் சென்றும்

பொறுமை இழந்திருக்கலாம்.

சோ நாங்கள் அவர் சொல்லும்வரை காத்திருப்போம் :)  :D

நான் நினைக்கின்றேன், இந்தக் கதை முடிந்து விட்டது; இனித் தொடராது என்று தான்.

ஒருவரின் கருத்துகளை / பதிவுகளை தொடர்ந்து வாசிக்கும் போது, அந்தக் கருத்துகளால் உருவான ஒரு முகம் அவர்களின் முகமூடிக்கு பின்னாலும் உணரக் கூடியதாக இருக்கும் என்று. இன்னுமொருவனுக்கு இதுதான் நிகழ்ந்து இருக்கு போல...

  • தொடங்கியவர்
சுமேரியர்,இசைக்கலைஞன்,விசுகு,தமிழ்சிறி.சாந்தி,சுவி,புங்கையூரான்,வாத்தியார்,தயா,அலைமகள் மற்றும் நிழலி உங்கள் அனைவரிற்கும் மிக்க நன்றி.
 
இது 100 வீதம் கற்பனை. கதைகதையாம் பகுதியில் போட்டபடியால் யாவும்கற்பனை என்று முடிவில் போடாமல் விட்டிட்டன். ஒரு சின்ன இன்ஸ்ப்பிறேசனை வைத்து எழுதிய முற்றுமுழுதான கற்பனை.
 
புகையிரதத்தில் தினமும் பயணிப்பதால் ஏகப்பட்ட இன்ஸ்ப்பிறேசன். அப்பப்ப சிலதை யாழில் பகிர்ந்து கொள்வது. அவ்வளவு தான். இன்று ஒரு நல்ல இன்ஸ்ப்பிறேசன் கிடைச்சிது. அதுக்கும் யாழ்களத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை--யாழ்களத்தோடு அதைப் பகிரவேண்டும் என்பதற்காகக் கதையை யாழ்சார்பாக்கினது மட்டும் தான் நடந்தது.
 
முதலை எதைக்கவ்வினாலும் தண்ணிக்குள்ள கொண்டுபோறதைப் போல நான் யாழிற்குக் கொண்டுவாறது என்று சொல்லலாம்.
 
அது தானே பாத்தன்! :D

களப் பெண் உறவுகள், கொஞ்சம் ஆடித்தான் போச்சினம்! :o

Edited by புங்கையூரன்

சா....   சப்பெண்டு போச்சுது...    முடிவு நல்லாவே இல்லை....  :lol:  :lol:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அடங் கொய்யால முடிவு இப்படியா போச்சே  :wub:

  • தொடங்கியவர்

சா....   சப்பெண்டு போச்சுது...    முடிவு நல்லாவே இல்லை....  :lol:  :lol:  :lol:

உண்மை தான் தயா. பின்னூட்டங்களைப் படிச்சாப் பிறகு உண்மையைச் சொல்ல எனக்கே சப்பெண்டு தான் போச்சு.
 
உண்மையில இசைக்கலைஞசனின் முதலாவது பின்னூட்டத்தைப் போல ஒரு றொமான்ரிக்நகைச்சுவை ரைப்பில தான் எழுதினேன். ஆனால் பின்னூட்டங்களைப் படித்தபோது உறவுகள் கற்பனைக் கதையினை நேரடி அஞ்சல் என்ற தளத்தில் கொண்டுபோறதைப் பாத்ததும் இருட்டடி பற்றிய எண்ணமெல்லாம் வந்துதா, மனதைக் கல்லாக்கிக் கொண்டு சப்பெண்டுபோன உண்மையைச் சொல்லியே ஆகவேண்டிப்போச்சு :lol:
  • கருத்துக்கள உறவுகள்

புகையிரதத்தில் தினமும் பயணிப்பதால் ஏகப்பட்ட இன்ஸ்ப்பிறேசன். அப்பப்ப சிலதை யாழில் பகிர்ந்து கொள்வது. அவ்வளவு தான். இன்று ஒரு நல்ல இன்ஸ்ப்பிறேசன் கிடைச்சிது.
 
கவனம் இன்ஸ்ப்பிறேசன் வைபிறேசனானால் கஸ்ரகாலம் ஆரம்பிக்கும்: :lol:

 இருட்டடி பற்றிய எண்ணமெல்லாம் வந்துதா, மனதைக் கல்லாக்கிக் கொண்டு சப்பெண்டுபோன உண்மையைச் சொல்லியே ஆகவேண்டிப்போச்சு :lol:

எண்டாலும் இருட்டடி இல்லது றெயினாலை இறங்க வைச்சு நடக்கிற தர்மஅடி நிச்சயம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன் ஒரு பொறுமைமிக்க பதிவாளர்

இந்த விடையம் பல காலத்திற்கு முன்னர் நடந்து

அவர் காத்திருந்து காத்திருந்து காலங்கள் சென்றும்

பொறுமை இழந்திருக்கலாம்.

சோ நாங்கள் அவர் சொல்லும்வரை காத்திருப்போம் :)  :D

உங்களுக்குத்தான் இப்ப பொறுமை இல்லைப் போலை கிடக்கு. :D :D

சுமேரியர்,இசைக்கலைஞன்,விசுகு,தமிழ்சிறி.சாந்தி,சுவி,புங்கையூரான்,வாத்தியார்,தயா,அலைமகள் மற்றும் நிழலி உங்கள் அனைவரிற்கும் மிக்க நன்றி.
 
இது 100 வீதம் கற்பனை. கதைகதையாம் பகுதியில் போட்டபடியால் யாவும்கற்பனை என்று முடிவில் போடாமல் விட்டிட்டன். ஒரு சின்ன இன்ஸ்ப்பிறேசனை வைத்து எழுதிய முற்றுமுழுதான கற்பனை.
 
புகையிரதத்தில் தினமும் பயணிப்பதால் ஏகப்பட்ட இன்ஸ்ப்பிறேசன். அப்பப்ப சிலதை யாழில் பகிர்ந்து கொள்வது. அவ்வளவு தான். இன்று ஒரு நல்ல இன்ஸ்ப்பிறேசன் கிடைச்சிது. அதுக்கும் யாழ்களத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை--யாழ்களத்தோடு அதைப் பகிரவேண்டும் என்பதற்காகக் கதையை யாழ்சார்பாக்கினது மட்டும் தான் நடந்தது.
 
முதலை எதைக்கவ்வினாலும் தண்ணிக்குள்ள கொண்டுபோறதைப் போல நான் யாழிற்குக் கொண்டுவாறது என்று சொல்லலாம்.

நிழலி உங்களை வெருட்டிப் போட்டுது போலை போட வேண்டாம் எண்டு. அட பாவியளே நல்லா இருங்கோ. :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன் எழுதிய விதம் மிகவும் சுவாரசியமாக உள்ளது.பாராட்டுக்கள்.அவர் தமிழச்சி என்று நினைத்தேன் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் கற்பனையாக இருந்தாலும் பயணத்தில் சந்திக்கும் தமிழ்ப்பெண்ணை யாழில் உள்ளவராக நினைக்கத் தோன்றுவது யாழிலுள்ள கனடிய பெண் முகமூடிகளுக்கு வெற்றிதான். <_<

இன்னுமொருவன் எழுதிய விதம் மிகவும் சுவாரசியமாக உள்ளது.பாராட்டுக்கள்.அவர் தமிழச்சி என்று நினைத்தேன் :lol:

எனக்கும் ஏனோ படிக்கும்போது தமிழச்சிதான் நினைவுக்கு வந்தார் :wub:

  • தொடங்கியவர்
சுமேரியர்,
கதையின் முடிவில் "தொடரும்" என்று வேணும் என்றால் போடலாம், ஆனால் 'முற்றும்' அல்லது 'யாவும் கற்பனையே' என்பதெல்லாம் ஒரு வாசகரா என்னைக் கடுப்பேற்றும் விடயங்கள். ஒரு கதை முடிஞ்சுதா இல்லையா என்பது வாசகனிற்குத் தெரியும். பார்வையென்பதே ஒருவிதத்தில் கற்பனைதானே. அதனால் stating the obvious என்பதில் எனக்கு எப்பவுமே கடுப்புத் தான். மற்றம்படி இந்தக்கதை நிஜத்தில் நடக்கவில்லை.
 
இருந்தாலும் வாசகர்கள் சுட்டிக்காட்டியதைப் போல இதில ஒரு பிரச்சினை இருக்குத் தான். என்னதான் முகமூடி உலகம் என்பது பிரமாண்டமானது என்று நினைச்சு நான் கற்பனைக் கதை எழுதினாலும், அதைக் கதைகதையாம் பகுதியில் பதிந்தாலும், நான் கனடாவில் இருப்பது தெரிந்தது. அந்தவகையில் யாழில் உள்ள கனேடியத் தமிழ் பெண் முகமூடிகள் என்று மிகமிகச் சுருங்கிய வட்டத்திற்குள் கதை வந்துவிட்டது பிரச்சினை தான். அதற்காக வருந்துகிறேன். யாரையாவது offend பண்ணியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்.
 
நன்றி நந்தன். ரதி, கிருபன், மணிவாசகன், தப்பிலி, சுபேஸ் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்.
 
இதில் ஒரு நல்ல விடயம் என்று பார்த்தால், எதுவுமே தனக்கு றிலேற் பண்ணினால் தான் அதில ஈடுபாடு வரும். யாழ் களத்தில் தான் இந்தக் கதைக்கு இவ்வாறு உணர்வு கிடைக்கும், ஏனெனில் இது யாழில் படிக்கப்படுகிறது. அனைத்து மாக்கெற்றிங் மட்டும் பிரச்சாரங்களிலும் இது தான் கவனிக்கப்படுகிறது.
 
மேலும், தற்போது கனடாவின் புராதனகுடிகள் மத்தியில் 1600ம் ஆண்டுகளில் நடந்த ஒரு நாவல் வாசித்துக்கொண்டிருப்பதால், அந்த நாவலின் பெயரரே Orenda (ஆன்மா) என்பதால், புராதன குடிகளின் அந்த ஆன்மா சார்ந்த விடயங்களில் ஒரு கிளர்ச்சி கிடைத்தது. அதால தான் ஆன்மா அறிகின்றன என்ற கோணத்தில் இந்தக் கதை வந்தது.
 
சுரி நாலு பந்தியில கதை எழுதிப்போட்டு ஐந்து பந்தியில கருத்தெழுதுறது அபத்தம் தான். நிறுத்திக்கொள்கிறேன் :)
  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன், உங்கள் பதிவுகளை ஒரு பிரமிப்புடன்தான் நான் வாசிப்பது. வழமையை விட சிறிது மாறி எழுதியதால் நாங்களும் கொஞ்சம் அதிகமாக அரட்டையில் இறங்கிவிட்டோம். மற்றப்படி ஒன்றுமில்லை. எமக்காக எப்பவாவது இயல்பு அலாதன செய்வீர்கள்தானே ??? :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.