Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்திற்கு இரணைமடு தண்ணீர்: விவசாயிகள் ஒப்புதலில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தண்ணிப்போத்தில சரித்து வச்சு, புலம் பெயர் புண்ணியவான்களின் மனதை புண்படுத்தியதற்க்கு விக்னேஸ்வரன் சம்பந்தன் மன்னிப்பு கேட்க்க வேண்டும்.

தண்ணிப்போத்தலை கிடையாய் வைக்கவா மக்கள் உங்களுக்கு வாக்குப்போட்டார்கள்?

76 இல் வட்டுக்கோட்டையில் இருந்து நாம் போத்திலை நிமித்திதானே வைத்தோம்? அதுதானே மக்கள் ஆணை?

விக்னேஸ்வரன் அரசின் காலில் விழுந்து விட்டார் அவர் ஒரு மேட்டுக்குடி போர்சுவா என்பதற்கு இந்த சரித்து வைக்கப்பட்ட போத்திலை விட்வும் வேறு ஆதாரம் வேண்டுமோ?

 

பல இடங்களில் தங்களை பலதும் பத்தும்  தெரிந்தவர்களாக காட்டிக்கொள்பவர்களுக்கு!!!!!! 
 
முதலில் மேடை மேசை கலாச்சாரங்களை  படியுங்கள்..... அதன் பின்  பாராக்கிரம சமுத்திரத்தை காங்கேசன் துறை வரைக்கும் திசைதிருப்புவதை  பற்றி யோசிக்கலாம்.
 
 
வடக்கு நோக்கி மகாவலி! இது ஒருகாலகட்டத்து தேர்தல் பிரச்சாரம். அதுக்கு பச்சைபனையோலையிலை தொப்பியும் மாலையும் போட்டு காமினியை வரவேற்பு செய்த யாழ்ப்பாணத்தானை என்ன செய்ய????
 
வடக்குநோக்கி மகாவலி!!! அது அநுராதபுரம் வரைக்கும்தான் எண்டது எத்தினை பேருக்கு தெரியும்?
  • Replies 53
  • Views 3.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு திட்டங்கள் இருந்தாலும் சிறி லங்கா அமைச்சரவையில் அமைச்சர்களாக இருக்கும் டக்ளஸ், கருணா போன்றவர்களால் எதுவும் செய்யவில்லை அல்லது செய்ய முடியவில்லை கடந்த நான்கு வருடத்தில்.தற்போதைய மாகாண சபை வெற்றியின் மூலம் அரசுடன் சேர்ந்து இயங்க முயற்சிக்கும் கூட்டமைப்பால் சாத்தியமாகுமா என பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். எத்தகைய திட்டங்கள், பண உதவி, நிபுணத்துவம் போன்றன இருந்தாலும் மகிந்த அரசின் ஓகேயை(ok) பெறுவது எவ்வளவு தூரம் எமது அரசியல் காய்கள் நகர்த்துவதிலேயே தங்கி உள்ளது. அரசியல் இப்பகுதியில் பேசினாலும் யதார்த்த நிலை அது தானே?? 

சாத்திரி நீங்கள் சொல்வது இடிகுண்டு தானே. இதுவும் நிலாவரையும், நிலக்கீழ் ஆறு ஒன்றின் வெளித்தள்ளும் புள்ளிகளாய் இருக்கலாம் என்பது என் அனுமானம். நான் நினைக்கிறேன் யாழிற்க்கு கீழே ஒர் subterranean river ஓடுகிறது. அதுவும் எதோஒரு இடத்தில் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் நிலத்துக்கு கீழாகவே கடலில் கலக்கிறது. இந்த நிலக்கீழ் முகத்துவாரங்களை கண்டுபிடித்தால், அவற்றை தடுத்து அணை கட்டினால்,நாம் பெரும் செயற்க்கை நீரேரிகளை அமைக்கலாம், மேலும் வல்லை வெளி போன்ற உவர் நில கண்டல்களை நன்னீர் சுவர்க்கங்கள் ஆக்கலாம்.

ஆனால் இது பெரிய வேலை, மாகாணசபை மட்டுமல்ல இலங்கைஅரசாலுமே ஏலுமோ தெரியாது.

வழுக்கையாறை மறிப்பதுடன், சீரணி கேணி, ஐந்து கண்மதவை வைத்து சண்டிலிபாய்/எளுமுள்ளி பகுதியில் ஒரு சிறு நன்நீர்த்தேக்கமும் அமைகாலாம். இது புலம் பெயர் வலி மேற்கு அமைப்புகள் மற்ரும் மாகாணசபை சேர்ந்து செய்யக்கூடிய வேலை. ஆனால் எங்களுக்குதான் மருதடியானை கருங்கல்லில் அமைப்பது, அந்தோனியார் கோவிலுக்கு பெயிண்ட் அடிப்பது போல மிக முக்கிய வேலைகள் இருக்கிறனவே.

 

நடுகடந்த அரசு என்று அர்த்தமற்று அடயாளம் தேடும் அமைப்புகள் அவற்றை கலைத்து தொண்டு நிறுவனமாக தம்மை மாற்றி புலம்பெயர் தமிழர்கள் உதவியுடன் விக்கி சம்மந்தனுடன் இணைந்து சிங்கள அரசுடன் இணைந்து இவ்வாறான திட்டங்களை செய்ய முற்பட்டால் இவைகள் சாதராணமாக சாத்தியம். போரால் பாதிக்கப்பட்ட வன்னிமக்களுக்கான நிதியில் நீச்சல்குளத்தை யாழில் கட்டியதுதான் போகட்டும் இப்படியான வழங்கள் இருக்க எதற்கு விவசாய நீரில் கைவைக்கவேணும்? பறங்கியாற்றை திசைதிருப்பி வவுனிக்குளத்தில் இணைக்கும் திட்டம் புலிகளால் தொடங்கப்பட்டு இடையில் கைவிடப்பட்டுள்ளது. அவற்றை செய்து விவசாய வளத்தை பலப்படுத்தலாம். இது தமிழகத்தின் நதிநீர் பிரச்சனைபோல் வன்னிக்கும் யாழ்பாணத்துக்குமான பிரச்சனையாக மாற்றும் நோக்கே மறைமுகமாக உள்ளது. இந்து இஸ்லாம் என்ற பிரிவினை பிறகு வடக்கு கிழக்கு என்ற பிரிவினை இப்போது வன்னி யாழ்பாணம் என்று எதோ ஒன்று ஆரம்பிக்கின்றது.

Edited by சண்டமாருதன்

செயலாளர் நாயகம் வெட்டிகிற கிடங்கெல்லாம் நன்றாக தண்ணி ஊறப்போகுது. அந்த வளங்களை பயன்படுத்துவதை விட்டு விட்டு, பிறகேன் நாடு கடந்த அரசாங்கம் அங்கை. 


வன்னி-யாழ்பாணம் பிரிவினை உதயன் விவகாரத்தில் இல்லாமால் இப்பவா ஆரம்பம் ஆகிறது?  அப்போ யாழில் இருக்கும் அன்றைய கதைகள்?

யாழ்ப்பாணத்தில் நிலக்கீழ் ஆறுகள் ஓடுவதை பற்றிய அறிவியல் கட்டுரைகள் நான் படிக்க வில்லை.  நிலத்தின் கீழ் இருந்து நீர் எடுக்கும் போது குடாநாட்டு மண் உப்பு வடிபாணையாக தொழில்ப்படுவதுதான் மண்ணுக்கு வரும் ஆபத்து. இதானால்தான் தொண்மானாறு, பூநகரி உவர் நீரை நன் நீராகும் திட்டங்கள் கைவிடப்பட்டவை என்று அறிகிறேன்.

 

நிறைய காற்றும் சூரிய சக்தியும் இருப்பத்தால் மின்சாரம் மூலம் கடல் நீரை சுத்தி கரிப்பதுதான் நீண்டகால ஆபத்து இல்லா முறை. இதற்கு தேவையான தொழில் முறையை மேற்கு நாடுகளிடம் பெற வேண்டும். இதன் மூலம் உப்பும், இரசாயன பொருள்களும் உப பொருள்களாக வரும்.

செயலாளர் நாயகம் வெட்டிகிற கிடங்கெல்லாம் நன்றாக தண்ணி ஊறப்போகுது. அந்த வளங்களை பயன்படுத்துவதை விட்டு விட்டு, பிறகேன் நாடு கடந்த அரசாங்கம் அங்கை. 

வன்னி-யாழ்பாணம் பிரிவினை உதயன் விவகாரத்தில் இல்லாமால் இப்பவா ஆரம்பம் ஆகிறது?  அப்போ யாழில் இருக்கும் அன்றைய கதைகள்?

 

உதயன் வன்னி மக்களை இழிவுபடுத்தினால் அதை சுட்டிக்காட்டாது உங்களைபோல் பூசிமொழுகவேண்டிய அவசியம் எனக்கில்லை.

 

செயலாளர் நாயகத்துக்கும் சம்மந்தன் விக்கிக்கும் இடையில் அதிக அரசியல் வித்தியாசம் நான் காணவில்லை. ஒன்று நேரடியான சிங்கள இணைவு இரண்டாவது சற்று மறைமுகமான சிங்கள இணைவு. அவ்வளவுதான். ஆனால் எல்லோரும் தமிழர்கள் என்ற அணுகுமுறை மட்டுமே என்னிடம் உள்ளது.

உதயன் வன்னி மக்களை இழிவுபடுத்தினால் அதை சுட்டிக்காட்டாது உங்களைபோல் பூசிமொழுகவேண்டிய அவசியம் எனக்கில்லை.

 

செயலாளர் நாயகத்துக்கும் சம்மந்தன் விக்கிக்கும் இடையில் அதிக அரசியல் வித்தியாசம் நான் காணவில்லை. ஒன்று நேரடியான சிங்கள இணைவு இரண்டாவது சற்று மறைமுகமான சிங்கள இணைவு. அவ்வளவுதான். ஆனால் எல்லோரும் தமிழர்கள் என்ற அணுகுமுறை மட்டுமே என்னிடம் உள்ளது.

குற்றமுள்ள நெஞ்சு குறு குறுத்து பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது போலாக்கும். 

 

வன்னியின் கல்வியைப் பாதுகாக்க கல்விமந்திரி உருவாக்கப்படுவிட்டார். இந்த சிங்கள் இராணுவ "தந்திரசிறி" பதவி விலகி அதிகாரத்தை மந்திரிகளுக்கு கொடுக்க வேண்டும். இனி கவிதை தேவை இல்லை.

 

இப்போது பிரிவினை இரணைமடுவால் ஆனது, அதை ஆக்குபவர்களும் யாரோ என்று எந்த விந்தை வார்த்தைக்களாலும் பழைதோல்வியை பூசி மெழுக முடியாது. கவிதையை பிரசுரித்தது தமிழரசுக்கட்சி சரவணபவனின் பத்திரிகை. அதன் பின்னர் மேட்டுக்குடி வீட்டு சின்னத்துக்கு வன்னியில் கிடைத்த வெற்றி பூசி மெழுக முடியாதது. இதில் வன்னி - யாழ்ப்பாணம் என்று பிரிவினையை உருவாக்கிவிடலாம் என்று நப்பாசை வைத்தால் நான் எதற்கும் பந்தயம் கட்ட தயார்.

 

அன்று விள்ங்கிக்கொள்ள கஸ்ட்டமாக இருந்தது மேட்டுக்குடிகளின் கவிதை. இங்கே மேட்டுக் குடிகளின்அறிவியல்.

 

இதுவரையில் பல அறிவியல் ஆலோசனைகளை சமர்ப்பித்தவர்கள் தங்கள் ஆதாரங்களை இணைக்கவில்லை. யாழ்ப்பாணத்து தண்ணீர் பிரச்சனை  ஒல்லாந்தர், வெள்ளைகள் காலத்திலிருந்து ஆராயப்பட்டுத்தான் தொண்டமானாறும், பூனகரியிலும் மறித்துக்கட்டியவர்கள். இதற்கு பாவிக்கப்பட்ட காற்றாடிகள் றைன் நதில் பாவிப்பவையை ஒத்தவை. அவை மண்ணை மிக விரைவாக சீர்கெடுத்தும் என்றது அறிப்பட்ட பின்னர் அது கைவிடப்பட்டது.

 

யாழ்ப்பாணத்திற்கு எப்படியோ தெற்கிலிருந்தான் தண்ணீர் தற்காலிகமாக கொண்டுவரப்படும். இந்த விதியை கடவுளாலும் மாற்ற முடியாது. மேற்கு நாடுகளை இதில் கூட்டி வந்து சேர்த்தால் அதற்குப்போட்டியாக ஒரு வேளை சீனன் தனக்கு யாபாரத்துக்காக இதை செய்தாலும் ஆச்சரியமில்லை.

Edited by மல்லையூரான்

நான் சொன்ன யாழ் கடல்நீரேரியை நன்னீரேரியாக்கும்ம்திட்டம் 48 க்கு முன்பே திட்டமிடல் நிலையில் இருந்ததோடு, 30 ஆண்டுகளுக்கு முன் அரைவாசி வேலைகளும் முடிந்து விட்டிருந்தன. எனவே இது எனது ஐடியா இல்லை. மேலும் அது மாகாண சபையால் இலகுவில் செய்யக்கூடிய வேலைத்திட்டம். பெரிதாய் செலவழியாது. என்ன சூழல் பிரச்சினைகளை தகுந்த முறையில் முகாமைத்துவம் செய்ய வேண்டும்.

 

யாழ் கடல் நீரேரி க்கு தண்ணீர் முக்கியமாக வரும் வளி  மண்டை தீவுக்கும்  பூநகரி கல்முனைக்கும் இடைப்பட்ட பகுதியாகும்...  அதில் பெரிய தொரு அணை கட்ட வேண்டி இருக்கலாம்...   அதன் செலவை நிச்சயமாக  மாகானசபையால் ஈடு கட்ட முடியாது... 

 

அதே சமயம் பெரும்கடலில் இருந்து பருவ காலங்களில்  இதேவளியால் தான் பல மீன் , இறால் இனங்கள் தங்களின் இனவிருத்திக்கு யாழ் குடா கடல் நீரேரிக்கு வருகின்றமை வளமை...  அதோடு  யாழ் மீனவர்களின் நலன்கள் இங்கே மிக முக்கியம்... 

 

பெருங்க கடலை விட கடல்நீரேரியில்  உப்பின் அடர்த்தி அதிகம்...   (அரியாலை) நாவற்குழியிலும் தொண்டமனாற்றிலும்  ஆனையிறவிலும் கடல்நீரேயின் நீரில் இருந்தே உப்பு தயாரிக்கும்  செயற்திட்டம்  இருந்து கைவிடப்பட்டது...   கடல் நீரேரியை  நன்னீர் ஆக்க வேண்டுமானால் உப்பை பிரிப்பது மிக அவரியம்... 

Edited by தயா

 மேலும் வல்லை வெளி போன்ற உவர் நில கண்டல்களை நன்னீர் சுவர்க்கங்கள் ஆக்கலாம்.

 

சாதாரணமாக நன்னீர் வருவதினால் உவர் நிலங்கள் உவர் தன்னமையை உடனடியாக இளக்க மாட்டாது...   தானாக மாற நீண்ட காலம் எடுக்கும்... 

 

ஏற்கனவே இருக்கும்  உப்பும் , மக்னீசியத்தின் அளவும் தான் அந்த நிலத்தைஉவர் நிலங்களாக மாற்றுகிறது...   அதை மாற்ற  நெல்லின் உமி போண்றவை அந்த பகுதிகளில் குழி தோண்டி புதைப்பதால்  வேகமாக மாறும் எண்றும்   தமிழீழ பொருண்மிய  கண்காட்சியில் சொல்லப்பட்டது... 

 

சாவகச்சேரி , கரவெட்டி பக்கம் இருக்கும்  வயல் செய்வோர்  பூவரசம் குழைகளை வயல்களில் தாட்ப்பதை கேள்விப்பட்டு இருப்பீர்கள்...  நிலத்துக்கு தேவையான அமோனியத்தை குடுப்பதோடு உவர் தன்மையையும்  அவை நீக்கும்...  

 

மற்றது இந்த கருவேலம் மரங்கள் எல்லாம் வெட்டி எறிய வேண்டும்...   நிலத்தடி நீரை  அளவுக்கு அதிகமாக உறுஞ்சி வளரும் ஒரு நோய் தான் இந்த கருவேலம் மரங்கள்..     நிலத்துக்கு கீழ் இருக்கும்  நல்ல நீரை வேகமாக வற்ற செய்வதோடு ,  உவர் தன்மையையும்  ஊட்டி விடுகிண்றன...

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்துக்கே தண்ணி தர மாட்டம் எண்டு சொல்லுறத்துக்கு என்ன துணிவு? யாரு கொடுத்த தைரியம் இது? கிளிநொச்சியில் தன்னலம் பாராது கடமையாற்றும் யாழ் ஆசிரியர்கள் வைத்தியர்கள் பொறியியலாளர்கள் போன்றவர்களை மீளப்பெற்றால் தெரியும்

  • கருத்துக்கள உறவுகள்

கருவேலமரம் என்றால் கரு வேப்பிலைமரமா?

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்துக்கே தண்ணி தர மாட்டம் எண்டு சொல்லுறத்துக்கு என்ன துணிவு? யாரு கொடுத்த தைரியம் இது? கிளிநொச்சியில் தன்னலம் பாராது கடமையாற்றும் யாழ் ஆசிரியர்கள் வைத்தியர்கள் பொறியியலாளர்கள் போன்றவர்களை மீளப்பெற்றால் தெரியும்

எப்பிடி பாஸ் இப்பிடியெல்லாம் உங்களுக்கு யோசிக்கத்தெரியுது,என் கண்ணே பட்டிரும்போல இருக்கு
  • கருத்துக்கள உறவுகள்

தேங்க்ஸ் தேங்க்ஸ் பாஸ் ரொம்ப கண்ணு வைச்சிடாதிங்க அப்புறம் அம்மா கிட்ட சொல்லி சுத்தி போடணும்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் நிலக்கீழ் ஆறுகள் ஓடுவதை பற்றிய அறிவியல் கட்டுரைகள் நான் படிக்க வில்லை.  

906542_10200241121245585_1465154818_o.jp

பருவமழைகாலங்களில் இவ்விடம் தற்காலிகமாக ஊற்று கிளம்பி கடலை நோக்கி செல்வதை காணலாம் கலக்கும் இடத்தில் கடல்தண்ணீரை நல்ல தண்ணீராக மாற்றி விடும் அளவிற்க்கு தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கும் குடாநாடு நிலக்கீழ் நீர் மட்டம் குறையும் நேரம் இந்த ஊற்றும் காணாமல் போய் விடுவதை காணலாம். 

Edited by பெருமாள்

இங்கு நன்கு திட்டமிட்டு யாழ்பாணத் தமிழன் வன்னி தமிழன் என்று பிரிவினையை ஏற்படுத்த, மலையாளி ரோ விதி போடுது, இதுக்கு வழக்கம் போல யாழ் கலமும் ஆதரவு அழிக்குது. போகிற போக்கைப் பார்த்தால் அடுத்து வடமராட்சித் தமிழர்,வலிகாமம் தமிழர்,தென்மராட்சி தமிழர் என ரோ முகவார்கள் ஆரம்பிபார்கள், நாங்களும் நல்லா சண்டை போடுவம், அது சரி தனி தமிழ் ஈழம் என்னவாயிற்று,போர் குற்ற விசாரணை என்னவாயிற்று,ஈழ ஆதரவாளர்கள் செய்ய வேண்டியது ஒன்று தான் இந்த ரோ முகவர்களின் கருத்துக்கு பதில் எழுதாமல் விடுதல்

 

பருவமழைகாலங்களில் இவ்விடம் தற்காலிகமாக ஊற்று கிளம்பி கடலை நோக்கி செல்வதை காணலாம் கலக்கும் இடத்தில் கடல்தண்ணீரை நல்ல தண்ணீராக மாற்றி விடும் அளவிற்க்கு தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கும் குடாநாடு நிலக்கீழ் நீர் மட்டம் குறையும் நேரம் இந்த ஊற்றும் காணாமல் போய் விடுவதை காணலாம். 

 

இவை சிறு ஊற்றுக்களே. இவையும் விவாசாய மண்ணை வடிபானை மண்ணாக பயன் படுத்தும் கிணறுகள் போன்ற ஆபத்தானவையே. உண்மையில் நீரை தேவையில்லாமால் வீணாக்குவதால் கிணறுகளையும் விட ஆகாதவை. பயன்படுத்த முடியாதவிடத்து பாதுகாக்காமல் மூடிவிட வேண்டும். மழை காலத்தில் பெய்யும் மழை தானாக மண்ணில் இறங்கி வடிந்து கடலுக்கு சென்றால் மண்ணின் உப்பை கடலுக்கு எடுத்துச்செல்லும். இது வடிபானை முறைக்கு எதிராக தொழில் படுவத்தால் மண் சுத்திகரிக்கப்படும். ஊறணி ஊற்றில் நன்னீர் நிலத்தில் ஊறாமல் வெளியே பாய்வதால் மழை நீர் விரையமாகிறது. 

 

வழுக்கையாறு போன்றவையும் மாரியில் மட்டும்தான் மழை வெள்ளம் பாய்ந்தோடும்  கால்வாய்களாக இருக்கின்ற்ன. அதன் நீரையும் கடலுக்கு ஓடாமல் தடுக்க வேண்டும். இல்லையேல் கோடையில் அதுவும் நிலத்து நீரை காயவைத்துவிடும். 

 

ஆறுகள் மழை நீர் ஊற்றேடுத்து பாய்பவை. கிணறுகள் கோடை காலத்தில் கடல் நீரை வடி கட்டுகின்றன. நிலக்கீழ் ஆறு என்பது உயரப்பிரதேச மழை நிலத்தின் கீழால் ஓடும் ஆறாக மாறுவதே. இதை தடுப்பது சதாரண ஆற்றைத் தடுத்து தண்ணீர் எடுப்பது போன்றது. ஏன் எனில் இதன் தண்ணீர் விவசாய நிலைத்தை வ்டிபானை மண்ணாக பாவித்து கடல் நீரை வடி கட்டி எடுப்பத்தல்ல. 

 

http://en.wikipedia.org/wiki/Subterranean_river

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா விசயத்தையும் எல்லாரும் இங்க நல்லாத்தான் அலசி ஆராய்கிறீர்கள். அதன்பின் ???????????

இங்கு நன்கு திட்டமிட்டு யாழ்பாணத் தமிழன் வன்னி தமிழன் என்று பிரிவினையை ஏற்படுத்த, மலையாளி ரோ விதி போடுது, இதுக்கு வழக்கம் போல யாழ் கலமும் ஆதரவு அழிக்குது. போகிற போக்கைப் பார்த்தால் அடுத்து வடமராட்சித் தமிழர்,வலிகாமம் தமிழர்,தென்மராட்சி தமிழர் என ரோ முகவார்கள் ஆரம்பிபார்கள், நாங்களும் நல்லா சண்டை போடுவம், அது சரி தனி தமிழ் ஈழம் என்னவாயிற்று,போர் குற்ற விசாரணை என்னவாயிற்று,ஈழ ஆதரவாளர்கள் செய்ய வேண்டியது ஒன்று தான் இந்த ரோ முகவர்களின் கருத்துக்கு பதில் எழுதாமல் விடுதல்

 

நல்ல கருத்து. போடுவதற்கு பச்சை இல்லை.

சிங்களப் பேரினவாதம் பிரிக்காமல், மிக இலகுவாக தங்களுக்குளேயே அடிபடும் புத்தகக் கல்வி கற்ற முட்டாள்கள்.

இங்கு நன்கு திட்டமிட்டு யாழ்பாணத் தமிழன் வன்னி தமிழன் என்று பிரிவினையை ஏற்படுத்த, மலையாளி ரோ விதி போடுது, இதுக்கு வழக்கம் போல யாழ் கலமும் ஆதரவு அழிக்குது. போகிற போக்கைப் பார்த்தால் அடுத்து வடமராட்சித் தமிழர்,வலிகாமம் தமிழர்,தென்மராட்சி தமிழர் என ரோ முகவார்கள் ஆரம்பிபார்கள், நாங்களும் நல்லா சண்டை போடுவம், அது சரி தனி தமிழ் ஈழம் என்னவாயிற்று,போர் குற்ற விசாரணை என்னவாயிற்று,ஈழ ஆதரவாளர்கள் செய்ய வேண்டியது ஒன்று தான் இந்த ரோ முகவர்களின் கருத்துக்கு பதில் எழுதாமல் விடுதல்

பதில் எழுதாமல் விடுவதுதான் நல்ல முறை. ஆனால் இவர்கள் மிக கெட்டித்தனமாக ஆப்பிறுக்குகிறார்கள். இவர்களில் பலர் யாழில் சந்தேகத்திக்கிடமில்லாதாவாறு யாழில் அடையளம் காணபட்டவர்கள். எனவே அவர்கள் அரசியல் எழுதினால் யாரும் சந்தேகத்துடன் பார்ப்பார்கள் என்பது அவர்களுக்கு தெரிகிறது. இதானால் அவர்கள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதற்காக தமக்கு சற்றும் அறிவே இல்லாத அறிவியல்கள், மருத்துவம் பற்றி தெரிந்த மாதிரி எழுதிப் பிரிக்கிறார்கள். தமக்கு தெரியாத இந்து மததை பற்றி எழுதிப் பிரிக்கிறார்கள். கல்வி, தொழில் துறை, பண்பாடு போன்றவறை இவர்கள் எழுதும் போது வேறு இடங்களில் அவற்றை வாசித்தவர்களுக்கு இதில் இருக்கும் உள்குத்துக்கள் அப்பட்டமாக தெரியும். ஆனால் யாழில் மட்டும் இவற்றை பார்ப்போருக்கு இந்த ரோ களின் புதிய விஞ்ஞானம் குழப்பத்தை விளைக்கலாம் என்பத்தால் தான் இந்த புதிய வகை றோகளின் விஞ்ஞானம், மருத்துவம், தொழில் துறை, விவசாயம் மதம் போன்ற கட்ருரைகளை யாழில் பிரசுரிக்கிறார்கள்.

 

இதில் இன்னும் ஒரு ஆபத்து என்ன என்றால் நீங்கள் அறிவியலில் செய்யும் ஆராச்சி ஒன்றில் தவறுவிட்டு கட்டுரைகள் எழுதினீர்களாயின் அது முன்னேறிய நாடு ஒன்றில் இருக்கும் ஆராச்சியாளரால் படிக்கப்பட்டு திருத்தப்படும் அல்லது சவால் விடப்படும். ஆனால் இந்த ரோ ஆராச்சிகளை அவர்கள் கண்டால் அவர்களுக்கு நோக்கம் உடனே தெரிந்துவிடுவத்தால் அவற்றை கழித்துவிடுகிறார்களே அல்லாமல் அவற்றை எடுத்து ஆராய்ந்து சரி பிழை கூறமட்டார்கள். இந்த ஆபத்து இருப்பதால் இது நமது கடமையாகிறது. நாம் தான் எது அறிவியல் ஆராச்சி, எது மூளை ச்சலவை செய்ய வெளிவிடப்படும் ரோ ஆராச்சி என்று புட்டு வைக்க வேண்டும். இல்லையேல் வடக்கு கிழக்கின் உண்மையான பொருளாதார, விவசாய, கல்வி, மத, பண்பாட்டு திரிகளில் உண்மையான தலைப்புகள் விவாதிக்கப் பட முடியாமல் போய்விடுகிறது. பல தடவைகளில் இந்த ரோ ஆராச்சியாளர்களால் திரிகள் கையாக் பண்ணப்பட்டு நிர்வாகத்தால் பூட்டப்படுகிறது. தெரிந்த உண்மைகளை அந்த துறையில் கல்வி கற்ற தொழில் துறை கல்வியாளர்கள் வந்து கருத்து எழுத பயப்படுவது தமது தொழில் துறை கருத்துகள் இந்த பிரிவினை ஆப்பிறுக்கல்வாதிகளால் அரசியல் ஆக்கப்படுவதாலேயே.  

 

ஒரு இத்துப் போன கவிதை, அதை இலக்கிய ஈடுபாடு உள்ளவர்கள் கூட வன்னில் படித்திருக்க மாட்டர்கள். அதை பிடித்து வைத்து சரவணனுக்கு எதிராக அரசியல் செய்யவும் வன்னி-யாழ்ப்பாண பிரிவினை விதைக்கவும் இந்த கூட்டம் சாப்பாட்டுக்கும் வழியில்லாதா மக்களை தங்கள் அன்றைய சோற்றுக்கு கூட உழைப்புக்கு போகவிடாகமல் தங்களுக்காக அடித்து அடித்து இழுத்து வந்து பாதுகைகள் பிடிக்க வைத்து  படங்கள் பிரசுத்தவர்கள்.

 

இவர்கள் உதயன் ஒரு கவிதையை வைத்து வன்னிக் கல்வியை நாசமாகியது என்கிறார்கள். இலங்கையில் 1970 களில் இவர்கள் பதியுதின் என்ற புல்லுருவியை கொண்டு தமிழரரின் கல்வியை நாசமாக்கியதால் இளைஞர்கள் செய்ய ஒன்றும் இல்லாமல் ஆயுதம் தூக்கினார்கள் என்றதை எழுதினால் அது தங்களின் துரோக செயல் வெளிவருகிறது என்று பயப்பட்டு அதை பற்றி ஒரு நாளும் எழுதுவத்தில்லை.

 

இதே கூட்டம் மிக மிக தேவையான நிலமல ரூபன் வழக்கில் மொகான் பீரிசு என்ற இனத்துவேசி அழித்த தீர்ப்பை பற்றி ஒரு சொல் எழுதாதவர்கள். அந்த வழக்கு விரைவில் விரைவில் எம்னேஸ்டி போன்றவற்றால் சர்வதேச விவகாரங்களில் இழுத்துவரப்படும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா விசயத்தையும் எல்லாரும் இங்க நல்லாத்தான் அலசி ஆராய்கிறீர்கள். அதன்பின் ???????????

ஓநாய் கூட்டத்திற்க்கு புல்லு பகிர்ந்தளிக்கப்படுகிறது இந்த திரியில் விளங்கவில்லையா? தமிழ் தேசியஅவமதித்தல் , பிரிவினைகளை உருவாக்குதல் , நம்பிக்கையீணத்தை ஏற்படுத்தல் இப்படியாண திரிகளில் எதிர் திட்டமிட்ட பரப்புரைகளை பரப்புவர்கள் இந்த திரியில் அட்வைஸ் குஞ்சுகளாய் மாறிவிட்டிணம்.ஏனெனில் அவர்கள் எதிர்பார்த்து திரியில் நடக்கவில்லை.சரி அலசி ஆராய்ந்து தமிழனுக்கு நண்மை பயக்கும் நீண்டகால திட்டத்திற்க்கு சிங்களம் அனுமதிக்குமாம் அதை நாங்கள் நம்புவமாம்.   

கருவேலமரம் என்றால் கரு வேப்பிலைமரமா?

 

கருவேலம் எண்டது வெப்ப வலய காடுகளில் வளரும் ஒருவகை  மரம்... புளியம் இலைகள் போல கொஞ்சம் பெரிய இலைகளை கொண்டது... எங்களின் பக்கத்தில் இதை சீமைகிழுவை எண்டு சொல்வார்கள்...  

 

  வளருவதுக்கு அதிகமான நீர் தேவைப்படுவது போல பெரிய அளவில் நீரை ஆவியாககுவதில்லை... 

 

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D

 

 

சீமைக் கருவேலம்

 

 

 

எந்த வறட்சியிலும் வளரக்கூடிய தன்மை சீமைக் கருவேல மரங்களுக்கு உண்டு. மழை இல்லாமல் போனாலும் நிலத்தடி நீரை உறிஞ்சி , தனது இலைகளை வாடவிடாமல் பார்த்துக்கொள்கிறது. இவை ஆழ வேர் மட்டுமில்லாமல் உறுதியானப் பக்கவேர்களையும் கொண்டு வளர்வதால் இவை மழைநீரை உறிஞ்சி நிலத்தடிக்குச் செல்வதை தடைசெய்கிறது. எந்த நோயினாலும் பூச்சிகளாலும் தாக்க முடியாத, எந்த இடத்திலும் மற்ற தாவரங்களை அழித்துவிட்டு தான் மட்டும் செழித்துப் படருகின்ற தன்மை வேலிக்காத்தானுக்கு மட்டுமே உண்டு. இவை வாழும் இடத்தில் உற்பத்தி செய்யும் நச்சுப்பொருளால் நிலத்தில் பிற செடிகள் வளர்வதை அறவே தடுக்கிறது.

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

என்னக்கென்னமோ நீங்கள் சிலர் ஓவர் றோக்காய்ச்சலால் அவதிப்படுறியள் போலகிடக்கு.

70 களிலே யாழ்-அகற்றிச் சங்கங்கள் வன்னியில் செயல்பட்டது. அப்போ றோ விரல் சூப்பிக்கொண்டிருந்த காலம்.

யாழ் கடநீரேரியை நன்னீராக்கினால் இரணை மடுவில் தங்க தேவையில்லை. இதனால் யாழ்-கிளி எனும் பிரச்சினைகள் எழாமல் தடுக்கலாம்.

இது ஒற்றுமைக்கு வழிகோலுமே தவிர பிரிவினையை தூண்டாது. இல்லாமல் வன்னியில் வயலுக்கே தண்ணியில்லாத போது யாழுக்கு தண்ணி எடுத்தா, நிச்சயம் பிரச்சினை வரும்.

தேசியத்துக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை. குடாநாடு பூராவும் வாழ முடியாததாகிப் போனபின், எங்கே போவீர்கள்?

இங்கே ஒருவருக்கும் ரோ காய்ச்சல் பிடிக்கவில்லை, ஆனால் இப்ப தண்ணி என தொடங்கி அதை யாழ்ப்பாண வன்னி பிரச்சனையாக்கி தமிழனையும் தமிழனையும் அடிபடவிடும் மலையாளியின் நோக்கம் எல்லம் எங்களுக்கு தெரியும், தமிழ் நாட்டில் எப்படி சாதி பிரச்சனை தமிழன் ஒற்றுமைக்கு குந்தகமாக அமையுதோ அதே போல் பிரதேச பிரச்சனையை ஊதிப்பெருசாக்கமுயற்சிகீனம், 2014 தேர்தல் முடிந்தால், தங்களால் எதுவும் செய்ய முடியாது என் இந்த கும்பலுக்குத் தெரியும் அதான், இப்ப கொஞ்ச் நாளா புலம் பெயர் தமிழன்,யாழ் தமிழன் என் உளரிக்கொண்டு திரியீனம்

2004

 யாழ்ப்பாணி - மட்டக்கிளப்பான் = முள்ளிவாய்க்கால்

 

2013

யாழ் மாவட்டம் - இரணைமடு = ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.