Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுற்றுலா நுழைவிசைவில் வந்த ராதிகாவை நாடுகடத்த சிறிலங்கா தயக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

rathika-jaffna.jpg

சுற்றுலா நுழைவிசைவில் சிறிலங்கா வந்துள்ள கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனை நாடுகடத்தும் நடவடிக்கைகள், சிறிலங்காவுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்று சிறிலங்கா அதிகாரிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். 

சுற்றுலா நுழைவிசைவில் சிறிலங்கா வந்து, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், செய்தி சேகரிப்பில் ஈடுபட்டதாகவும் கூறி, நியூசிலாந்தின் கிறீன் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர், அவுஸ்ரேலியாவை சேர்ந்த அனைத்துலக ஊடக அமைப்பு பிரதிநிதிகள், கவிஞர் ஜெயபாலன், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர் மகா தமிழ் பிரபாகரன் போன்ற பலர் அண்மையில் சிறிலங்கா அரசாங்கத்தினால் கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்டனர். 

இந்தநிலையில் கடந்த 28ம் நாள் சுற்றுலா நுழைவிசைவில் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் சிறிலங்கா வந்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் ரில்கோ விடுதியில் தங்கியுள்ள அவர், அங்கு பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேசி வருகிறார்.

rathika-jaffna-visit.jpg

அவரது நடவடிக்கைகளை சிறிலங்கா புலனாய்வுத் துறையினர் உன்னிப்பாக அவதானித்து வருகின்ற போதிலும், சுற்றுலா நுழைவிசைவில் வந்து அரசியல் நவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி நாட்டைவிட்டு அவரை வெளியேற்ற சிறிலங்கா அரசாங்கம் தயக்கம் காட்டுவதாக தெரியவருகிறது. 

அவ்வாறு அவர் நாடுகடத்தப்படுவதை  , புலம்பெயர்  தமிழ் சமூகத்தினர் விரும்புவதாகவும், அதனை சிறிலங்காவுக்கு எதிரான பரப்புரைக்கு அவர்கள் பயன்படுத்திக் கொள்வர் என்றும் சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர். 

அதேவேளை, ராதிகா சிற்சபேசன் போன்று, புலம்பெயர் தமிழர்களுக்கு நெருக்கமான வெளிநாட்டு அரசியல்வாதிகள், மற்றும் அரசாங்கப் பிரதிநிதிகள் ஜெனிவா கூட்டத்தொடருக்கு முன்னர் வடக்கிற்கு பயணம் மேற்கொள்ளலாம் என்றும் சிறிலங்கா அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

http://www.puthinappalakai.com/view.php?20131231109701

கனேடிய எம்.பி ராதிகா மன்னாருக்கும் விஜயம்

23%2818%29.jpg

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன்  மன்னாருக்கும் விஜயம் செய்துள்ளார்.

மன்னாருக்கு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு வருகை தந்திருந்த அவர், வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து வர்த்தக வாணிபம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர்   பா.டெனிஸ்வரனை மன்னாரில் உள்ள அமைச்சரின் இல்லத்திற்குச் சென்று சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் வடக்கு மக்களின் தற்போதைய நிலை பற்றியும் அமைச்சர் பா.டெனிஸ்வர கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனிடம்    எடுத்துக் கூறியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது   தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரனும் உடன் இருந்துள்ளார்.

கலந்துரையாடலின் பின்னர் மன்னார் மறை மாவட்ட ஆயர்  இராயப்பு ஜோசப் ஆண்டகையையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார் என்று ஆயர் இல்ல தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராதிக சிற்சபேசன் நல்லூரில் விசேட வழிபாடு

கனேடிய நாடாளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் யாழ்பணத்தைச் சேர்ந்த திருமதி ராதிகா சிற்சபேசன் வரலாற்று சிறப்புமிக்க யாழ்.நல்லூர் கந்த சுவாமி கோவிலில் விசேட வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ராதிகா சிற்சபேசன் தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ளார். இவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் மற்றும் வட மாகாண சபையின் ஆளும்கட்சி உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.அத்துடன் யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு செயற்படும் பல அமைப்புக்களையும் சந்தித்து அவர் பேச்சு நடத்தியுள்ளார்.

இதேவேளை, யாழிலுள்ள சபாபதிப்பிள்ளை அகதி முகாமிற்கு நேற்று அவர்  விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த முகாமிற்கு ஏற்கனவே பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் விஜயம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் எதிர்வரும் 4ம் திகதி வரை இலங்கையினில் தங்கி நிற்கும் அவர் யுத்த பாதிப்பிற்குள்ளான பகுதிகளையும் நேரினில் பார்வையிட ஆர்வம் கொண்டுள்ளார்.

1.JPG

5.JPG

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

rathika.jpg

கனேடிய நாடாளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் யாழ்பணத்தைச் சேர்ந்த  ராதிகா சிற்சபேசன் வரலாற்று சிறப்புமிக்க யாழ்.நல்லூர் கந்த சுவாமி கோவிலில் விசேட வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ராதிகா சிற்சபேசன் தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ளார். இவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் மற்றும் வட மாகாண சபையின் ஆளும்கட்சி உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.அத்துடன் யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு செயற்படும் பல அமைப்புக்களையும் சந்தித்து அவர் பேச்சு நடத்தியுள்ளார்.

இதேவேளை, யாழிலுள்ள சபாபதிப்பிள்ளை அகதி முகாமிற்கு நேற்று அவர்  விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த முகாமிற்கு ஏற்கனவே பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் விஜயம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் எதிர்வரும் 4ம் திகதி வரை இலங்கையினில் தங்கி நிற்கும் அவர் யுத்த பாதிப்பிற்குள்ளான பகுதிகளையும் நேரினில் பார்வையிட ஆர்வம் கொண்டுள்ளார்.

5.JPG

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=10878:2013-12-31-11-58-54&catid=1:latest-news&Itemid=18

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1.JPG

5.JPG

unnamed_1.jpg

unnamed%20%281%29_0.jpg

unnamed%20%282%29.jpg

unnamed%20%283%29.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சிறீதரனை யாரு சந்திக்கப் போனாலும்.. உடன கோத்தா தன் பரிவாரங்களை அனுப்பி விடுகிறார். கோத்தா.. சிறீதரனுக்கு அந்தளவு பயம்.  :lol:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

1.JPG

5.JPG

unnamed_1.jpg

unnamed%20%281%29_0.jpg

unnamed%20%282%29.jpg

unnamed%20%283%29.jpg

ஆமாம் அவ ஏன் இந்த வெய்யிலிலும் கோட் போட்டு இருக்கிறா :unsure: அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பானாம் :D ஞாபகம் வந்து தொலைக்குது :rolleyes:

ஆமாம் அவ ஏன் இந்த வெய்யிலிலும் கோட் போட்டு இருக்கிறா :unsure: அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பானாம் :D ஞாபகம் வந்து தொலைக்குது :rolleyes:

இலங்கையில் இப்ப குளிர்.

இங்குள்ள குளிர் போல் அல்ல. மாரி கால குளிர். :)

ஆமாம் அவ ஏன் இந்த வெய்யிலிலும் கோட் போட்டு இருக்கிறா :unsure: அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பானாம் :D ஞாபகம் வந்து தொலைக்குது :rolleyes:

உங்கட கடல் கொள்ளையருக்கு ஆயுதம் கடத்தும் பாதுகாப்பு செயலாளர் கழுத்தை இறுக்கி டை கட்டி கோட்டு போட்டு நடுவெய்யிலில் வேர்த்து ஒழுகி இருந்து களியாட்ட நடை பவனி பார்க்கலாம்

ஆனால் கனடிய அமைச்சர் போடகூடாதா?

ரதியக்கா அது குளிருக்கு போடும் உடுப்பு என்று நினைக்கிறா. அது கனேடிய அலுவலக உடை. ராதிகா ஊர் பெண்கள் மாதிரியே சேலையுடன் கோவிலுக்கு போயிருந்தார்.

ஆமாம் அவ ஏன் இந்த வெய்யிலிலும் கோட் போட்டு இருக்கிறா :unsure: அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பானாம் :D ஞாபகம் வந்து தொலைக்குது :rolleyes:

 ரதியக்கா இதை ராதிகாவை பார்த்து சொல்லும் தகுதி உங்களுக்கு இருக்கா? :D  :D  :D

ஒரு கணம் சிந்தித்து பாருங்கள். ஒரு தமிழ் பெண் ஈழத்திலிருந்து கனடா சென்று கனடா பாராளுமன்ற உறுப்பினராகி அவர் சாதித்தவைகள் நிறைய. அவர் எமக்கெல்லாம் ஒரு ஆதரிசமாக திகழ்கிறார். அவரை நக்கல் நையாண்டி பண்ணுவதை விட்டு விட்டு உங்கள் வாழ்வில் எதாவது சாதிக்க முயலுங்கள். 

நிறைந்த ஆற்றலையும் ஆளுமையையும் வளர்த்து கொள்ளுங்கள். எல்லோருக்கும் பயனுள்ளதாக அமையும். 

ரதியக்கா அது குளிருக்கு போடும் உடுப்பு என்று நினைக்கிறா. அது கனேடிய அலுவலக உடை. ராதிகா ஊர் பெண்கள் மாதிரியே சேலையுடன் கோவிலுக்கு போயிருந்தார்.

நன்றி தகவலுக்கு. :)

ரதியக்கா அது குளிருக்கு போடும் உடுப்பு என்று நினைக்கிறா. அது கனேடிய அலுவலக உடை. ராதிகா ஊர் பெண்கள் மாதிரியே சேலையுடன் கோவிலுக்கு போயிருந்தார்.

சரியான பதில் மல்லை சூப்பர்.  :D  :D  :D

ரதியக்கா அது குளிருக்கு போடும் உடுப்பு என்று நினைக்கிறா. அது கனேடிய அலுவலக உடை. ராதிகா ஊர் பெண்கள் மாதிரியே சேலையுடன் கோவிலுக்கு போயிருந்தார்.

   ராதிகா கனெடிய பெண்கள் வெயிலுக்கு அணியும் ஆடை அணிந்து செல்ல வேண்டும் என்றா ரதியக்கா விரும்புகிறா?   :D  :D  :D 

Edited by seeman

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் அவ ஏன் இந்த வெய்யிலிலும் கோட் போட்டு இருக்கிறா :unsure: அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பானாம் :D ஞாபகம் வந்து தொலைக்குது :rolleyes:

சா அந்த  dress code ஐ உங்களை கேட்டு  போடச்சொல்லி இருக்கலாம்.

ராதிகாவிடம் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணை லங்கைக்கு வருகை தந்துள்ள கனேடிய தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனிடம் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளதாக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் தெரிவித்துள்ளது.

Untitled-45.jpg

குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கிளிநொச்சியிலுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரனின் அலுவலகத்திலும் விசாரணை மேற்கொண்டுள்ளதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://virakesari.lk/?q=node/360293

இந்த நேரத்தில் இந்த அம்மணியின் யாழ் சுற்றுலாவுக்கும் நடக்கவிருக்கும் கனேடிய தேர்தலுக்கும் சம்பந்தமில்லை என்று எல்லோரும் நம்ப வேண்டும். இலங்கை அரசை எதிர்த்து கனேடிய பாராளாமன்றத்தில் பேசிய தன்னை இலங்கை அரசு ஒன்றுமே செய்யாது என்று நம்பித்தான் இவர் போனார் என்பதையும் எல்லோரும் நம்பவேண்டும்.

இவர் போனமுறை வெல்லும்போது முன்னதாக‌ பாராளுமன்றத்தில் பேசியிருக்கவில்லை என்பது கூடுதல் தகவல்..

இவர் போனமுறை வெல்லும்போது முன்னதாக‌ பாராளுமன்றத்தில் பேசியிருக்கவில்லை என்பது கூடுதல் தகவல்.. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை தமிழரைக் காட்டிக்கொடுக்கும் தமிழரைப்பற்றியே படித்தும், கேட்டும் பார்த்தும் வந்துள்ளோம். தற்போது தமிழரையே பிடிக்காத தமிழரையும் இத்திரி வெளிக் கொணர்ந்து காட்டி வருகிறது. :(

'ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி'.

தமிழும் வளர்ந்து தமிழரும் வளர்ந்தால் அதுதாண்டா வீழ்ச்சியோ...??? :o

அத்துடன் இத்திரி பல நடிகர்களையும் இனம் காட்டி உள்ளது :icon_mrgreen: .

  • கருத்துக்கள உறவுகள்

இவன் மோடன்  மேர்வின்  கண்ணுல படாம வந்துசேரம்மா :icon_mrgreen:  ,கிழவிக்கே நூல் விட்ட ஆள் அவன்  :o

  • கருத்துக்கள உறவுகள்

கனடா ல வரப்போற தேர்தலுக்காக இந்த ராதிகா போடுற ஸ்டண்ட் கொஞ்ச நஞ்சம் இல்ல

  • கருத்துக்கள உறவுகள்

கனடா ல வரப்போற தேர்தலுக்காக இந்த ராதிகா போடுற ஸ்டண்ட் கொஞ்ச நஞ்சம் இல்ல

உங்களுக்கென்ன ஒரு கணனி கிடைத்துவிட்டது. என்னவேணுமென்றாலும் எழுதலாம்தானே.

ஆமாம் அவ ஏன் இந்த வெய்யிலிலும் கோட் போட்டு இருக்கிறா :unsure: அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பானாம் :D ஞாபகம் வந்து தொலைக்குது :rolleyes:

முன்பு போல யாழில் சிவப்புப்புள்ளிகள் வழங்கும் திட்டம் தற்பொழுது இல்லாமல் போய்விட்டதே. இருந்திருந்தால்..

ஆமாம் அவ ஏன் இந்த வெய்யிலிலும் கோட் போட்டு இருக்கிறா :unsure: அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பானாம் :D ஞாபகம் வந்து தொலைக்குது :rolleyes:

ஒரு பெண் அழகாக இருந்தாலோ, அழகான உடை உடை உடுத்தாலோ அது சில பெண்களுக்கு பலத்த எரிச்சலை ஏற்படுத்தும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். புரிகிறது ரதியக்கா

  • கருத்துக்கள உறவுகள்

கமரூன் அரசியல் இல்லாமல் யாழ்ப்பாணம் செல்லவில்லை. ஹாப்பர் பொதுநலவாய மாநாட்டிற்கு செல்லாததும் அரசியல் தான். ராதிகா யாழ்ப்பாணம் போக முன்பே தேர்த்தலில் வென்று எம்.பி ஆனவர். இனி ஒரு அரசியல் யாழ்ப்பாணத்தில் செய்ய வேண்டிய அவசியம் தான் என்ன?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.