Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லுமாலா சைக்கிள்

Featured Replies

"லுமாலா" சைக்கிள்
-----------------------------------------------------
 
 
1150186_10151928893953002_1747242359_n.j
 
1.என்னதான் BMW காரில போனாலும் ஊரில மண் றோட்டில சைக்கிள்ள போற சுகம் கோடி குடுத்தாலும் வராது பாருங்கோ.முதன் முதலா எனக்கு நல்ல ஞாபகம் "சைக்கிள்" எண்டா எங்கட அப்பு வைச்சிருந்த "கீறோ" சைக்கிள்தான் நினைவுக்கு வருது.
 
2.நான் அறிய எங்கட ஊரில 1985,86 களில் (அப்ப நான் பால்குடி..இருந்தாலும் நினைவு இருக்கு)எங்கட ஊரில விரல் விட்டு எண்ணுற ஆக்கள் தான் சைக்கிள் வைச்சிருந்தவை.அதில எங்கட அப்புவும் ஒருத்தர்.( பெருமை பேசுறன் எண்டு குறை நினையாதையுங்கோ..)
 
3.அந்த மனிசன் அந்த சைக்கிளை விடியக்காலமை எழும்பினவுடன ஒரு சிரட்டையில மண்ணெண்ணையும் தேங்காய் எண்ணையும் கலந்து , அதை ஒரு சீலத்துணியால கம்பிகள் எல்லாம் துடை துடை எண்டு துடைக்கும்.அம்மம்மாதான் இந்த துளவாரங்களையெல்லாம் செய்து குடுக்கும்.போதாக்குறைக்கு எங்களைக்கூப்பிட்டு துடைக்க விடும்.எங்களுக்கும் வலு சந்தோசம்.காரணம் அந்த கொஞ்ச நேரம் எண்டாலும் சைக்கிளை தொடலாம்.ஸ்ராண்டில நிப்பாட்டி இருக்கும் சில்லை சாட மாடையா சுத்திப்பாப்பாம்.
 
1606929_10151928893663002_139834376_n.jp
 
4.அப்பு தன்னை தவிர ஆரையும் சைக்கிளை தொட விடாது.தொட்டா மரண கலகம் நடக்கும்.அந்த கோதாரிக்காக ஒருத்தரும் தொடுறது இல்லை.ஆனால் ஆரேனுக்கும் சுகமில்லை எண்டா மட்டும் சைக்கிளைத்தரும்.ஏனெண்டா அப்ப பஸ் வசதியோ மினிபஸ் வசதியோ இல்லை.ஊரில தம்பித்துரை இளையய்யாவின்ர வானும், தம்பு அப்புவின்ர வானும் மட்டும் தான் லைன் ஓடினது.அதுவும் சாவகச்சேரி சந்தைக்கும் பருத்துறை சந்தைக்கும் எண்டு ஒரு ஞாபகம்.(அது பெரிய கதை...அதை பிறகு சொல்லுறன்).மருதங்கேணி ஆசுப்பத்திரி எங்கட ஊரில இருந்து 20மைல் இருக்கும்.அப்ப ஆரேனுக்கும் பிள்ளை பிறக்கபோறதெண்டாலோ,இல்லை சரியான சுகமில்லை எண்டாலோ அப்புவிட்ட ஆக்கள் வந்து உதவி கேப்பினம்.அதுக்கெண்டா நேர காலம் பாக்காம ஆசுப்பதிரிக்கு கொண்டே விட்டிட்டு வரும்.
 
 
5.சைக்கிள் எண்டா , ஒரு பெரிய கரியல் இருக்கும்.அது அவையவவையின்ர தேவையளைப்பொறுத்து சின்னதா இல்லை பெரிய கரியலோ இருக்கும்.மீன் சந்தைக்கு போற ஆக்களின்ர கரியல் பெரிய கரியல்.ஏனெண்டா பெரிய மீன்பெட்டி கட்டவேணுமல்லோ.அதிலையும் பாருங்கோ  கரியலில சமாந்தரமா பெரிய தடி இரண்டை கட்டி வைச்சிருப்பினம்.அதில நாங்கள் பருத்துறை போறதெண்டா சாரத்தையோ இல்லை சின்ன தலகணியையோ குண்டிக்கு வச்சுக்கொண்டு இருக்க வேணும்.இல்லையெண்டா தூரபயணங்களுக்கு குண்டி வெட்டிப்போடும்.சைக்கிள்ள முன்னுக்கும் இருந்து போகலாம்.எனக்கு பின்னுக்கு இருந்து போக வெக்கம் மாதிரி.ஏனெண்டா ஏனெண்டா என்னோட படிக்கிற பிள்ளையள் ஆரும் பாத்தா பிறகு பழிப்பாகள். 
 
1511644_10151928897638002_947809386_n.jp
 
6.சைக்கிள்ள முன்னுக்கு இருந்துபோக அப்பா விடமாட்டுது.ஏனெண்டா நான் முன்னுக்கு இருந்து கான்டில இறுக்கிப்பிடிச்சுப்போடுவன்.பிறகு திருப்பைக்குள்ள ஆட்டி விட்டிடுவன்.கன நாள் அடியும் வாங்கி இருக்கிறன்.நான் மட்டும் இல்லை அம்மாவும் வாங்கியிருக்கிறா.
 
7.பொதுவா எங்கட ஊரில பிள்ளையை முன்னுக்கும் மனிசியை பின்னுக்கும் தான் சைக்கிள்ள ஏத்திக்கொண்டு போவினம்.மாறி ஏத்தினா சனம் ஒரு மாதிரிப்பாக்கும்.
கலியாணம் கட்டின புதிசில முன்னுக்கு மனிசியை  ஏத்திக்கொண்டு போவினம்.அதை சனம் பாத்து கொடுப்புக்குள்ள சிரிக்கும்.
 
8.கடைசி காலத்தில தன்ர சைக்கிளை அப்பு , எங்கட பெரியண்ணாட்டத்தான் குடுத்தவர்.அவன் உந்த ஊரெல்லாம் ஓடி ஊத்தையா கொண்டுவருவான்.அப்பு கத்தி கத்தி பாத்து பிறகு ஒண்டும் சொல்லுறது இல்லை.இடைக்கிடை அப்பு தானே துடைக்கும்.
 
9.அண்ணா அங்கின இங்கின போறதெண்டா என்னையும் ஏத்திக்கொண்டு போவான்.முன்னுக்கு கவட்டை விரிச்சும் இருக்கலாம்,சைற்றாவும் இருக்கலாம்.பொதுவா சின்னவயதில ஆம்பிளைப்பிள்ளையளும் பொம்பிளைப்பிள்ளையளும் கவட்டை விரிச்சுத்தான் இருந்து போவினம்.கொஞ்சம் வளர சைற்றாத்தான் இருந்து போவினம்.முன் பாறுக்கு வயர் சுத்துறவை.கதிர பின்னுற வயரால சுத்தலாம்.பொதுவா கறுப்பு,நீல வயர் தான் சுத்துவினம்.பிறகு கொஞ்ச நாளால அதுக்கெண்டு குஞ்சம் விட்ட கவர் வந்திட்டுது.
 
10.பின் கரியலில தனிய ஒரு ஆளை ஏத்திக்கொண்டு ஓடுறது கொஞ்சம் கஸ்ரம்.ஏனெண்டா சைக்கிள் உலாஞ்சும்.அதிலையும் ஆரேனும் பெண்டுகளை ஏத்தினா துலைஞ்சுது கதை.ஒண்டு காலை சில்லுக்குள்ள குடுக்குங்கள் இல்லையெண்டா சீலைத்தொங்கலை சில்லுக்குள்ள குடுக்குங்கள்.இப்பிடி நடந்து கன புருசன் பொஞ்சாதி மார் நடு றோட்டில நிண்டு கடிபட்டு சண்டைபிடிக்கிறதை கனதரம் கண்டிருக்கிறன்.
 
11.சாமத்தியப்பட்ட புதிசிலயோ இல்லை சாமத்தியப்படபோற வயசு வந்தாலோ பொம்பிளைப்பிள்ளைகளை முன்னுக்கு இருத்தாமல் பின் கரியரில தான் ஏத்திக்கொண்டு போவினம்.இது எங்களப்போல பொடியளுக்கு வலு வசதி.ஏனெண்டா தேப்பனுக்கு தெரியாமல் பின்னால இருக்கிற பிள்ளையோட பகிடிவிட எங்களுக்கு லேசு.கனபேருக்கு உந்த லவ்சு ஆரம்பிச்சதே உப்பிடித்தான்.
 
1558536_10151928894128002_1276367478_n.j
 
12.சைக்கிள் பெல் ஆரம்ப காலத்தில ஒரு பெரிய ரவுண்டா இருந்திச்சு.விரலால இழுத்து அடிக்கிறதே கஸ்ரம்.சின்னப்பொடியள் அடிக்கேலாது.வலு கஸ்ரம்.இருந்தாலும் அதை கஸ்ரப்பட்டு அடிச்சு அப்புவிட்ட கன நாள் சாத்து(அடி) வாங்கியிருக்கிறம்.ஏனெண்டா அடிச்சா "கிறீங் கிறீங்" எண்டு பெரிய சத்தம் வரும்.முந்தி ஐஸ்பழக்காரர் பாட்டு போட்டு வாறயில்லை.உந்த காண்டாமணி பெல்லை அடிச்சுக்கொண்டுதான் வருவாங்கள்.கடிதகாரனும் அந்த பெல்லைத்தான் வீட்டு வாசல்ல வந்து அடிப்பான்.பெல் சத்தம் கேட்டா முந்திப்பயம்.ஏனெண்டா கடிதகாரன் எந்த இழவு செய்தியைகொண்டுவாறன் எண்டு பயப்படுவினம்.
 
1525694_10151928898118002_1246180428_n.j
 
13.பெல் அடிக்கிறதிலையும் ஒரு ரெக்னிக் இருக்கு.சிலபேர் தாங்கள் சுத்துற பிள்ளையின்ர வீட்டடியால கடக்கையில ஒரு வித்தியாசமா  பெல் அடிப்பினம்.அது அந்தப்பிள்ளைக்கு மட்டும் விளங்கும்.இவர் அடிச்சுப்போட்டு ஒரு சுத்து சுத்தி வர இவா நைசா வேலியால எட்டிப்பாப்பா. இல்லையெண்டா சும்மா சாத்திக்கிடக்கிற படலையை திரும்பவும் சாத்துற சாக்கில அவரைப்பாத்து ஒரு சிரிப்பு சிரிப்பா.கொஞ்ச நாளால ஒண்டு தாய் கண்டு பிடிச்சிடுவா இல்லையோ தேப்பன் கண்டுபிடிச்சிடும்.அதுக்குப்பிறகு உந்த பெல் அடிக்கிற வேலை சரிவராது.
 
 
14.சில ஆக்கள் செயினுக்கு கிறீஸ் போடாட்டி 1 மைலுக்கு அங்கால வரவே "கிறீச்சு கிறீச்சு" எண்டு சத்தம் போடும்.செயின் தொஞ்சாலும் அது மக்காட்டில முட்டி சத்தம் வரும்.வாழ்கையில மிகப்பெரிய கஸ்ரம் செயின் கழண்டா வரும்.அதை கைபடாமல்(ஏனெண்டா கிறீஸ் கையில ஒட்டினா கை கறுப்பா ஊத்தையாயிடும்) ஒரு தடியால ரெக்னிக்கா எடுத்து சரியா போடவேணும்.முதல்ல பின்னுக்கு முழுசாப் போட்டிட்டு பிறகு முன்னுக்கு கொஞ்சம் போட்டு பின் சில்லை சுத்தவேணும்.ஆனா பாருங்கோ பொம்பிளைப்பிள்ளையள் சரியா கஸ்ரப்படுவினம். இதைச்சாக்கா வைச்சு செயின் போட்டுக்குடுத்து லவ்வை டெவலப் பண்ணின ஆக்கள் கனபேர்.அந்த நேரம் தடி கிடி ஒண்டும் பாவிக்கமாட்டம்.வெறும் கையாலதான் விளையாட்டு காட்டுவம்.ஏனெண்டா அப்பதானே அவா ஜோசிப்பா "பாருங்கோ இந்த பொடியன் எனக்காக கையில கிறீஸ் பிரழ பிரழ ..உதவி செய்யுது" எண்டு.
 
1011765_10151928897863002_2145438588_n.j
 
15.மழையில சைக்கிள் நனைஞ்சா கட்டாயம் கிறீசோ இல்லை மண்ணெண்ணையோ செயினுக்கு விடவேணும்.இல்லையெண்டா கண்டிப்பா சத்தம் வரும்.
 
16.எனக்கு ஆண்டு 6 இல தான் சைக்கிள் அப்பா வாங்கித்தந்தவர்.அதுவரையும் பள்ளிக்கூடத்துக்கு நடைதான்.சைக்கிள் வாங்கிதந்ததும் முதல்ல செய்த வேலை கோயிலுக்கு கொண்டு போய் அதுக்கு திருநீறு பூசி,சந்தணப்பொட்டு வச்சு கண்ணன் ஐயாட்ட ஒரு திருநூல் வாங்கி காண்டில்ல கட்டிவிட்டதுதான்.அதுக்குப்பிறகு
புதுசீற் கவர்,சில்லுக்கு புது பூ இரண்டு,புது பெல்....மாயாவி ஸ்ரிக்கர்(அது மக்காட்டில ஒட்டுறது) எண்டு கன சாமான் வாங்கின நினைவு.அதில வேற இரவு நாலஞ்சுதரம் எழும்பி எழும்பி மூத்திரம் பெய்யுற மாதிரிப்போய் தொட்டு தொட்டு பாத்திட்டு வந்தன்.அடுத்த நாள் பள்ளிக்கூடத்துக்கு நேரத்தொடையே போனன்.காரணம் பெடியளிட்ட காட்டவும், தேமா மர நிழல்ல முன்னுக்கே இடம் பிடிக்கவும் தான்.
 
17.அட ... சைக்கிள் பழகின கதையை சொல்ல மறந்திட்டன்.முதன் முதலா பவா அக்கா சைக்கிள் ஓடையுக்க அவளுக்கு சைக்கிளை பிடிச்சு விட்டு விட்டுத்தான் ஆரம்பிச்சன்.சைக்கிள் இடையுக்குள்ளால ஒரு காலை ஓட்டி ஒரு கையை சீற்றில வச்சு மற்ற கையால காண்டிலப்பிடிச்சு கெந்தி கெந்தித்தான் ஓட பழகினன்.அதுவும் அப்பா சைக்கிள் தர மாட்டார்.அவர் எங்காவது போய் வந்து ஸ்ராண்டில விடுற நேரம் அப்பிடியே சத்தம் போடாமா நைசா உருட்டிக்கொண்டு ஓடிடுவன். 
முதல்ல எங்கட ஊர் தொடுவாய்க்கு(கடற்கரைக்கு அருகில் சிறு குளம் மாதிரி இருக்கும், அதை அண்டி பெரிய புல் வெளி இருக்கும்)தான் ஓடுறது.சும்மா தார் றோட்டு மாதிரி புல் இருக்கும்.தற்சமயம் விழுந்தாலும் காயம் வராது.அப்பிடியே கவட்டுக்கால ஒடி ஒடி ஒரு நாள் காலைத்தூக்கி பாறுக்கு மேலால போட்டு ஓடினா அது பெரிய வெற்றி.சீற்றில இருக்கேலாது,ஏனெண்டா உயரம் காணாதல்லோ.இப்பிடியே கனதூரம் எங்கட ஊரில இருந்து மருதங்கேணிக்கு ஓடி எனக்கு கவட்டில வெட்டி காயமும் வந்திருக்குது. எனக்கு மட்டுமில்ல கனபேருக்கு உந்த நிலமைதான்.
 
18.ஆனா என்னதான் சொன்னாலும் சைக்கிள்ள போறதபோல ஒரு சுகம் என்னதான் ஆயிரக்கணக்கில காசு குடுத்து மோட்டச் சைக்கிள் வாங்கி ஓடினாலும் வராது.வெளிநாட்டில இருந்து ஊருக்குப்போறவை சோட்டைக்கு ஒருக்கா எண்டாலும் சைக்கிள் ஓடிப்பாக்காம வரமாட்டினம்.சாறத்தை கட்டிக்கொண்டு மனிசியை முன்னுக்கு ஏத்திக்கொண்டு சைக்கிள்ள போனா ஒரு சுகம்தான்.அது சொல்லிப்புரியாது.அனுபவிச்சாத்தான் தெரியும்.
 
 
19.ரியூசனுக்கு சைக்கிள்ள போகையுக்க செய்யுற கூத்துகள், பெடியளோட இரண்டு மூண்டு பேர் எண்டு கை பிடிச்சுக்கொண்டு பரலலா பொற அநியாயங்கள்,வாத்தியின்ர சைக்கிள் ரயருக்கு வட்டவாரியால குத்தின குசும்பு,பெட்டையளின்ர சீற்றில மை தெளிச்சுவிடுற வம்பு,சைக்கிள் துறப்பை துலைச்சுப்போட்டு கல்லால குத்தி உடைச்ச கெட்டித்தனங்கள்,ஏதோ தேய தேய என்ர நண்பனின் காதலுக்காய் பருத்துறையில இருந்து நெல்லியடிக்கு ஒவ்வொரு நாளும் ரியூசன் முடிய ஓடிய நினைவுகள், அவளின் சைக்கிள் கூடையுக்குள்ள கடிதம் போட அதை அவளின்ர தாய் பாத்து கிழிய கிழிய வாங்கிய கேவலங்கள்... இப்பிடி கனக்க கனக்க "சைக்கிள் கதைகள்" இருக்கு.
1527028_10151928897973002_1687410596_n.j
 
20.எல்லாத்தையும் எழுதினா புத்தகமாகத்தான் எழுதவேணும்.அதனால ஏதோ கொஞ்ச நினைவுகளை சுறண்டிப்பாத்திருக்கிறன்.உங்கட நினைவுகளையும் பகிர்ந்து கொள்ளுங்கோ.
 
பசுமை நினைவுகளுடன்
 
தமிழ்ப்பொடியன் :) 

Edited by தமிழ்ப்பொடியன்

  • கருத்துக்கள உறவுகள்
"லுமாலா" சைக்கிள் ஒன்று வாங்க அன்று 10 ம் வகுப்பில் நல்ல பெறுபேறு எடுக்கவேண்டி இருந்தது ! 
 
இதற்க்கு பின்னாலும் பசுமையான நினைவுகள் என் வாழ்விலும் உண்டு ......  :D
 
நன்றி தமிழ்ப்பொடியன்.   

நல்ல சுவையான பதிவு பாருங்கோ தமிழ் பொடியன்.

 

இதனை சிரிப்பு பகுதியில் போடாமல், கதை கதையாம் பகுதியில் இருக்கும் முற்றத்து மல்லிகையில் போட்டு இருக்கலாம். வேணுமென்றால் கேளுங்கள், நானே அங்கால நகர்த்தி விடுறன்.

  • தொடங்கியவர்

நன்றி நிழலி

செய்துவிடுங்கோ....

பெரிய உதவி பாருங்கோ...!!!

  • கருத்துக்கள உறவுகள்
  
நன்றி தமிழ்பொடியன் , பழைய நினைவுகளை நினைவூட்டியமைக்கு. 
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ்பொடியன் ,

பழைய நினைவுகளை நினைவூட்டியமைக்கு.

  • தொடங்கியவர்

 

"லுமாலா" சைக்கிள் ஒன்று வாங்க அன்று 10 ம் வகுப்பில் நல்ல பெறுபேறு எடுக்கவேண்டி இருந்தது ! 
 
இதற்க்கு பின்னாலும் பசுமையான நினைவுகள் என் வாழ்விலும் உண்டு ......  :D
 
நன்றி தமிழ்ப்பொடியன்.   

 

 

நன்றி தமிழரசு

எனக்கு புது சைக்கிள் கிடைக்க “ 5ம் ஆண்டு கொலசிப்பில” பாஸ் பண்ண வேண்டியிருந்திச்சு. :(

நன்றி தமிழ்பொடியன் ,

பழைய நினைவுகளை நினைவூட்டியமைக்கு.

நன்றி விசுகு அண்ணை..

 

கறள் பிடிச்சு கிடக்கிற “பல பசும் நினைவுகளை” சுறண்டிப்பாக்கிற முயற்சியில இறங்கியிருக்கிறன்.

 

  
நன்றி தமிழ்பொடியன் , பழைய நினைவுகளை நினைவூட்டியமைக்கு. 

 

 

நன்றி நுணாவிலான்

 

எனக்கும் இது ஒரு “இரைமீட்டல்” தான்.

இன்னும் வரும்...

:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பதிவு தமிழ்ப் பொடியன்.
ஒவ்வொரு வரியாக ரசித்து வாசித்தேன்.cycling1.gif
ஒவ்வொருவர் வாழ்விலும்... முதல் சைக்கிள் ஓடப் பழகும் போதும், முதலாவது சைக்கிள் எமக்கு சொந்தமாக கிடைக்கும் போதும் ஏற்படும் மகிழ்ச்சி அளவில்லாதது மட்டுமல்ல அந்த நினைவுகள் இறக்கும் வரை... பசுமையாக இருக்கும்.radeln.gif:)

நல்லதொரு பதிவு தமிழ்ப் பொடியன். சைக்கிளில் திரிந்த காலங்கள் மறக்க முடியுமா? கலில் காளனியில்லாமல் வேகமாக போய் குதிக்காலால் பின் ரயரில் அமத்தி ஒரு சுழுட்டு சுழட்டி பிறேக் போடுவதில் வரும் திரில்லே தனி (அதுவும் வகுப்பு பெண்களுக்கு முன்னால்..)

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல அனுபவப்பகிர்வு, தமிழ்ப்பொடியன்!

 

முந்தி எங்கட ஊரில, கிராமச்சங்கம் மூலம்  சைக்கிள்களுக்கு 'லைசென்ஸ்' எடுக்க வேண்டும்!

 

பெரிசா ஒண்டும் யோசிக்காதீங்க! ஒரு தகடு ஒண்டில, சில இலக்கங்களைப் பதித்துத் தருவார்கள்! அந்தத் தகட்டைக் கட்டாயம் சைக்கிளில, பின் மக்காட் பாரில திருகாணியால பூட்டவேண்டும்! இந்தத் தகடு ஒவ்வொரு வருசமும், வேற, வேற நிறத்தில வரும்! சில பேர், பழையதுகளைக் கழட்டாமல் விட்டிருப்பினம்! பாக்க நல்ல வடிவா, ஈஸ்ட்மன் கலரில, சைக்கிளும் நல்ல வடிவா இருக்கும்!

 

என்ர முதலாவது சம்பளத்தில, சைக்கிள் வாங்கின அனுபவம் நேற்றுப்போல இண்டைக்கும் இருக்கு!

 

தொடர்ந்து அனுபவப் பகிர்வுகளை எதிர்ப்பார்க்கிறோம்! 

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ்பொடியன் நான் ஓடிய லுமாலா சயிக்களையும் நினைவுபடுத்தியது உங்கள் பதிவு. அந்த லுமாலாவில உங்கள் ஊர் கடற்கரைகளையும் சுற்றிய நினைவுகளும் நிறையவே.
 

சைக்கிளாலை எப்பவுமே எனக்கு பிரச்சனைதான் :( . நான் அநேகமாய் கால் பிறேக் தான் அடிக்கிறனான்  :D  . சிலநேரம் தோல் மணக்கும்  :lol:  . படைப்புக்குப் பாராட்டுக்கள் பெடியா  :)  :)  .

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

துவிச்சக்கரவண்டி ஓடிய காலத்தினை நினைவுபடுத்தியதற்கு நன்றிகள். ஒழுங்கைகள் வழியாக வண்டி ஓடும்போது சிலவேளைகளில் நாய்கள் துரத்தும். தப்பிப்பிழைத்த அனுபவங்களும் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்கத்திற்கு நன்றிகள் டமிழ்போய்...

1.என்னதான் BMW காரில போனாலும் ஊரில மண் றோட்டில சைக்கிள்ள போற சுகம் கோடி குடுத்தாலும் வராது பாருங்கோ.முதன் முதலா எனக்கு நல்ல ஞாபகம் "சைக்கிள்" எண்டா எங்கட அப்பு வைச்சிருந்த "கீறோ" சைக்கிள்தான் நினைவுக்கு வருது
என்றாலும் உது கொஞ்சம் ஒவர்...:D
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லுமாலா சைக்கிளுக்கு நன்றி தமிழ்ப்பொடியன். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.