Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஸ்லாமீயராக மாறினார் யுவன் சங்கர்ராஜா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே  பேசப்படுவது

அவர் போனதல்ல...

அவர் போனதற்கு நாம் காரணம் என்பது...... :(  :(  :(

நீங்கள் என்றால் யார்?

சைவ (இந்து) மதத்தைக் கட்டிக்காக்கும் காவலரா?

பிள்ளைகள் எப்போதும் பெற்றோரின் கட்டுக்கள் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் தரப்பா?

மதம் மாறுவது அவன் அவன் சொந்தப் பிரச்சினை.

அதைக்கேக்க எவனுக்கும் உரிமையில்லை. யுவன் ஒரு இந்தியர். இந்திய நாட்டு சட்டம்கூட அவரை கேக்க முடியாது.

நீங்க ஏன் குய்யோ முறையோனு அடிச்சுக்கிட்டு?? போயி பொட்டிக்கடை பொழைப்பைப் பாருங்கையா!!

  • Replies 100
  • Views 10.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்றால் யார்?

சைவ (இந்து) மதத்தைக் கட்டிக்காக்கும் காவலரா?

பிள்ளைகள் எப்போதும் பெற்றோரின் கட்டுக்கள் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் தரப்பா?

மதம் மாறுவது அவன் அவன் சொந்தப் பிரச்சினை.

அதைக்கேக்க எவனுக்கும் உரிமையில்லை. யுவன் ஒரு இந்தியர். இந்திய நாட்டு சட்டம்கூட அவரை கேக்க முடியாது.

நீங்க ஏன் குய்யோ முறையோனு அடிச்சுக்கிட்டு?? போயி பொட்டிக்கடை பொழைப்பைப் பாருங்கையா!!

இது தான் தமிழனின் விதி

இனறு  கேட்பாரற்று  அழிந்து கிடப்பதற்கு

இந்த வந்தாரை  வாழ  வைத்ததும்

மற்றவர் மனம்கோணாது எல்லாவற்றையும் தாரை  வார்த்ததுமே  காரணம்....

நாம் கத்தி  கத்தி  சாகும்  வரை

கத்துவோமையா....?

ஏதோ நம்மால் முடிந்தது...

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் தான் விரும்பும் மார்க்கத்திற்கு மாறுவதை விமர்சிப்பது என்பது ஒரு தனி மனிதனின் அகவாழ்வுக்குள் மூக்கை நுழைப்பதற்கு ஒப்பானது. விரும்பாத ஒருவரை வலுகட்டாயமாக அம்மதம் மாற்றினால் அதனை நிச்சயம் வெளிப்படையாக விமர்சிக்கத்தான் வேண்டும். ஒருவர் தானே மனம் உவந்து அம்மார்க்கத்தில் செல்லும்போது சராசரி மனிதர்களாக வரவேற்கலாமே.. வரவேற்க விரும்பாவிட்டால் அதனை பழித்து மற்றவர்களை நோகடிக்காமல் மனிதாபிமானத்தைப் பேணலாமே..

  • கருத்துக்கள உறவுகள்

விரும்பிமதம்மாறுவதற்கும், கட்டாயப்படுத்தி மதம் மாற்றுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இங்கு யுவன்சங்கர் ராஜா விரும்பித்தான் மதம் மாறியிருக்கிறார். முதல் மனைவியிடம் விவகரத்துப் பெற்று இரண்டாவது திருமணம் செய்தவர். அவரின் இரண்டாவது திருமணம் செய்தபோது ஒருவரும் விமர்சிக்கவில்லை . ஆனால் அவர் மதம் மாறுபோது சிலர் விமர்சிக்கிறார்கள். அவர் விரும்பிய மதத்துக்கு மதம் மாறுவதற்கு அவருக்கு உரிமையிருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறப்பினால் வரும் மதத்தையும் சாதியையும் காவிக்கொண்டு திரியவேண்டிய அவசியமில்லை. பிடிக்காவிட்டால் மதம் மாறவும் சாதி அடையாளத்தைத் துறக்கவும் அப்படியானவர்களை ஏற்றுக்கொள்ளவும் கூடிய சமூகம் இருக்கவேண்டும். இதை மறுப்பவர்கள் ஏதோ ஒன்றின் மீது வெறிபிடித்துத்தான் இருக்கின்றனர்.

பிறப்பினால்த்தான்  நாங்கள் ஈழத்தமிழர். அதை ஏன் நாங்கள் காவிக்கொண்டு திரிய வேண்டும்? 

இதுதான் பிரச்சனைக்குரிய விசயமே!
 
ஒருத்தன் பிறப்பிலேயே மதம் மாறினால் வேறை விசயம்.இல்லையேல் பக்தி ஆன்மீகம் காரணமாக மதம் மாறினால் வேறை விசயம்.இல்லையேல் ஒழுங்கான மனிசன் மதம் மாறினால் வேறை விசயம்.
 
தினசரி கலியாணம் செய்யிற கூட்டங்கள் மதம் மனம் மாறுவது சமூக சீரழிவுகளுக்கே வகுக்கும். சினிமாவை பார்த்து விசிலடிக்கிற கூட்டத்துக்கு இதெல்லாம் ஒரு முன்னுதாரணம். 
  • கருத்துக்கள உறவுகள்

காவி துணியை அணிந்து காம களியாட்டம் ஆடிய நித்யானந்தா இன்னும் இந்து மதத்தில் தான் இருக்கிறார்.

பெருமாள் கோவிலில் கணக்கு வழக்கு கேட்டவரை ஆள் வைச்சி தீர்த்து கட்டிய காஞ்சி ஜெயேந்திரர் இன்னும் இந்து மதத்தில் தான் இருக்கிறார்.

முதல்ல இவங்களை அடிச்சு துரத்துங்கப்பா... :D

Edited by சுபேஸ்

இங்கே மத மாறாட்டம் பற்றியே கருத்தோட்டம் நடைபெறுகின்றது.

மதங்களுக்குள் நடக்கும் குளறுபடிகளுக்கானதல்ல...... குளறுபடிகளை கணக்கெடுத்தால் ஒவ்வொரு மதத்திலும் உள்ள பெரியவர்களில் 70வீதமானவர்கள் சுத்த நாதாரிகள்.

இதை நான் சொல்லவில்லை.பிரபல சஞ்சிகைகளே ஆதாரத்துடன் சமர்ப்பிக்கின்றார்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

பிறப்பினால்த்தான்  நாங்கள் ஈழத்தமிழர். அதை ஏன் நாங்கள் காவிக்கொண்டு திரிய வேண்டும்?

எதையும் பிடித்திருந்தால்தான் காவிக்கொண்டு திரியலாம். மதம், சாதி என்று ஒடுக்குபவர்கள் அந்த அடையாளங்களைத் துறக்க விடமாட்டார்கள். ஏனென்றால் அதன் பின்னர் ஒடுக்குமுறைக்குக் காரணங்கள் இருக்காதல்லவா.

ஈழத் தமிழர்கள் என்று நாம் நம்மை அடையாளப்படுத்துவதில்லை. தமிழர்கள் என்றுதான் அடையாளப்படுத்துகின்றோம். தமிழகத்தில் இருப்பவர்கள் தங்களை வேறுபடுத்தப் பாவிப்பதுதான் ஈழத் தமிழர்கள் என்ற பதம். மேலும் தமிழர்கள் என்ற அடையாளம் இப்போது British Tamils, Canadian Tamils என்று புலம்பெயர்ந்த நாடுகளுக்கு ஏற்ப மாறிக்கொண்டு வருகின்றது. காலப் போக்கில் இவை சுருங்கி British, Canadian, German என்று மாறும்போது எமது சந்ததியினர் தமிழ் அடையாளத்தை இழந்து புலம்பெயர் நாடுகளுக்கு விசுவாசமான பிரஜைகளாக மாறிவிடுவர்.

யுவன் தான் தொலைத்த வாழ்வை மீட்டு நிம்மதியாக வாழவே இஸ்லாம் மதத்தைத் தேர்வு செய்தார். தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களும் இஸ்லாமியர்களும் இலங்கையில் உள்ளவர்கள் போன்று அதிகம் சந்தேகமும், வெறுப்பும் உள்ளவர்களாக இல்லை என்பதால் அவருக்குப் பிரச்சினைகள் வராது என்றே நம்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீமாகும் யுவன் சங்கர் ராஜா....

1653918_472642766197260_956820840_n.jpg  

1609665_472642802863923_130159464_n.jpg

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் யுவன் சங்கர் காஜா.. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் ஒருவரின் முகப்புத்தகப் பதிவிலிருந்து..........

முகநூlலை, திண்ணையாக்கியுள்ள யுவனின் தனி மனித சுதந்திரம்.

ஒரு மனிதன் வெற்றியடைவதற்காகப் போராடுவதைவிட ..
அந்த வெற்றி கொடுக்கும் பிரபலத்தால் Privacy யை இழப்பதும், பெற்ற வெற்றியை தக்க வைப்பதும் மிகக் கடினமான விடயம். அவiனின் ஒவ்வொரு நடவடிக்கையும் பூதக்கண்ணாடி கொண்டு பெரிதாக்கப்படும். அவர்கள் விடும் ஒவ்வொரு மூச்சுக்காற்றும் சுனாமி என்று பிரமாண்டப்படுத்தப்படும். உலகின் பல சாதனையாளர்களின் வரலாறு இதைத் தெரிவிக்கிறது..

மைக்கேல் ஜாக்சன்..
டயானா
மர்லின் மன்றோ..
முகமது அலி..
கமல்ஹாசன் .. 

இப்படி இந்த வரலாறு நீண்டு கொண்டே செல்கின்றது..செல்லும். தற்போது இதில் சிக்கி விவாதபொருளாகியுள்ளவர் யுவன்.

தற்போது யுவன் சந்தித்துள்ள இதே பிரச்சினையை அமெரிக்கக் குத்துச்சண்டை வீரனும் இன்றுவரை உலகின் நம்பர் 1 குத்துச்சண்டை வீரன் என்ற அசைக்க முடியாத பெயருடன் இருப்பவருமான முகமது அலி எதிர்கொண்டார். அவர் தனக்கு விரும்பிய மதம் ஒன்றுக்கு மாறியபோது எதிர்கொண்ட சவால்கள் கொஞ்சநஞ்சமல்ல. அப்போது அவர் உதிர்த்த வார்த்தைகள்தான்..

" I Know Where I'm going..and I Know the truth,and I don't have to be what you want to be. I'm free to be what I want. "

யுவன் - ஒரு இசையமைப்பாளன், இசை மேதை ஒருவனின் மகன். இவற்றையெல்லாம் விட முக்கியமானது அவர் ஒரு சுதந்திரமான தனி மனிதன். அவர் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் எடுக்கும் முடிவுகளுக்கு பூரண உரித்துடையவர். 

அவர் என்ன செய்கிறார் , எந்த மதத்தைப் பின்பற்றுகிறார், எப்படி வாழ்கிறார் என்பதில் நாம் ஏன் அக்கறைப்பட வேண்டும் ?? அவரின் தொழில் இசை அதைக் கேட்பவர்கள் நாங்கள் எனவே அதை மட்டும் ரசிப்போம் .

ஒருவனின் தனிப்பட்ட விடயங்களுக்குள் மூக்கை நுழைப்பதற்கும் அவற்றைப் பற்றி விவாதிப்பதற்கும் முகநூலைப் பயனடுத்துவதைப் பார்க்கும்போது இவர்கள் இன்னும் திண்ணையிலேயே இருக்கிறார்கள் என்பது புரிகின்றது. 

நாம் எம்மை மாற்றாவிட்டால் விஞ்ஞானம் எவ்வளவுதான் வளர்ந்தாலும் அதனால் மனுக்குலத்துக்கு சாதகத்தை விட பாதகமே ஏற்படும் என்பதற்கு உதாரணம் இது.

இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படியே திண்ணையில் பல்லைக் குத்திக் கொண்டு இருக்கப்போகிறோம் ??

"Respect People feelings,
Even if it doesn't mean anything 
to you,
It could mean everything 
to them"

உலகப்புகழ் பெற்ற ஏ. ஆர். ரகுமான் கூட இந்துவாகவிருந்து உங்களைப்போன்ற இந்துமத அடிப்படைவாதிகளால் சாதிக்கொடுமையால் பாதிக்கப்பட்டு சமூகத்தில் ஒதுக்கப்பட்டு வேறுவழியின்றித்தான் இஸ்லாமியராக மாறினார் என்பதாவது தெரியுமா உங்களுக்கு ? 

ரகுமான் சாதிக்கொடுமையினால் மதம் மாறவில்லை. அவரை தத்து எடுத்து வளர்த்தவர் ஒரு முஸ்லீம்.

பெற்ற தாய்க்கு மதத்தை ஒப்பிடுவதுதான் தற்போதைய புலித்தேசீயமோ?p>

புலிகள் எந்த மதத்தினையும் முன்னிறுத்தி செயற்படவில்லை. இந்து சமயத்துக்காகப் போராடுகிறோம் என்று அவர்கள் போரிட்டால் பார்ப்பணர்கள் உட்பட இந்தியர்கள் ஈழத்துக்கு ஆதரவு குடுத்திருப்பார்கள். திரவிடக்கழங்கள் போல புலிகளைப் பார்ப்பணர்கள் உட்பட வட இந்தியர்கள் நினைக்கிறார்கள். யாரோ ஒரு யாழ் அன்பு என்பவரின் கருத்துக்காக புலித்தேசியம் என்று சொல்வது தவறு.

Edited by sivakumaran

மதம் சைவமும் தமிழும் இரு கண்கள் என்று வாழ்பவன் நான் .

சைவத்தினை மதித்தால் ஏனப்பு இந்து மதத்தில் இருந்து யுவன்சங்கர் மாறியதிற்கு கவலைப்படுகிறீர்?. சைவமும் இந்துவும் ஒன்றா?. வெள்ளைக்காரர் வரமுன்பு சைவம், வைஸ்ணம் என்று வேறு வேறாக இருந்தது. 20 வருடங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் ஆஞ்சனேயர், ஐயப்பன் கோவில் இருந்ததா?. யுவன் தன்னை முன்பு சைவமாக அடையப்படுத்தவில்லை. இந்துவாகவே அடையாளப்படுத்துகிறார்.

எல்லாச்சமயத்திலையும் அயோக்கியர்கள், முள்ளமாறிகள், பொறுக்கிகள் இருக்கிறார்கள். எல்லாமத்திலையும் கள்ளச்சாமிகள் இருக்கிறார்கள். வன்னியில ஆமி அடிக்கைக்க எல்லாக் கடவுளும் வந்து வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருந்தவை. ஒருத்தரையும் காப்பாற்றவில்லை. நீங்கள் மதம் மாறினால் என்ன மாறவிட்டால் என்ன புதுக்கடவுளோ, பழையகடவுளோ ஒன்றும் செய்யமாட்டார்கள். பேசாமல் உங்கட வேலைகளை ஒழுங்கச் செய்யுங்கள். கஸ்டப்பட்டவர்களுக்கு உதவுங்கள். நீங்கள் தான் கடவுள். அன்பே அல்லா, அன்பே புத்தா, அன்பே சிவா, அன்பே யேசு, அன்பே உங்கட கணவர் பெண்டாடிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
"மனிதன் மாறிவிட்டான் மதத்ததில் ஏறிவிட்டான்"
 
மதம் என்பது கடவுளை காண்பதற்கான மார்க்கமாக இருக்கும்போது அதை ஒரு தனிமனிதனால் மாற்றமுடியுமா? 
 
இந்த வழியால் போனாலே கடவுளை காணலாம் என்று ஒருவர் நம்பி அல்லது நம்ப வைக்கபட்டு 25 வருடங்கள் கடவுளை தேடி பயணித்த பின்பு .......
இந்த வழி  கொஞ்சம் சுற்று பாதை ...
இந்த பாதை காட்டுக்கு போகிறது அங்கே கடவுள் இல்லை ....
போன்ற எண்ணம் ஏற்பட்டு .
இதுதான் சிறந்த பாதை என்று இன்னொன்றை யாரோ சொல்ல கேட்டு .
பாதையை மாற்றி கொள்கிறார்............. பயணம் கடவுளை தேடியே போகிறது.
 
ஒரே இலக்கை நோக்கி பயணித்து கொண்டு இருப்பவர்கள் ..... வேறு பாதையால் போவோரை வெறுகின்றார்கள் . இலக்கு ஒன்றாக இருக்கும்போது .... ஏன் ஒருவரை ஒருவர் அடித்து கொள்கிறார்கள்?
 
இவர்கள் இலக்கை நோக்கி பயணிக்கவில்லை ... இலக்கில் இவர்களுக்கு எந்த ஈர்ப்பும் இல்லை 
அதனால்தான் .... பாதையை சோடித்து கொள்கிறார்கள்.
பாதையிலேயே செத்து போகிறார்கள் .... மரணத்தின் முன்பு கடவுளே என்று கத்துகிறார்கள் .... கடவுள் அங்கே இருக்கபோவதில்லை.
கடவுள் பாதையில் இல்லை ...............
பயணிப்பவனின் மனதில்தான் இருக்கிறார். அதை கண்டு கொள்ளாதவன் முஸ்லிமாகவும் ........... இந்துவாகவும்  .............. கிறிஸ்தவன் ஆகவும் பாதையை சோடித்து கொண்டிருக்கிறான்.
 
யுவன் அல்லாவை காண மதம் மாறவில்லை .....
அல்லாவின் பாதையில் செல்வோருக்கு தன்னை அறிமுக படுத்தவே மதம் மாறுகிறார். 
முன்பு இன்னொரு பாதை சோடனை காரர்களுடன் பயணித்த்வர் என்பதனால் ........
ஏன் யுவன் ?
எப்படி உன்னால் முடிந்தது ?
இந்த பாதையில் அப்படி என்ன இல்லை ?
போன்ற கேள்விகளுக்கு யுவன் பதில் கொடுக்க தகுதி ஆனவரே ....... இதை தனிமனித சுதந்திரமாக என்னால் பார்க்க முடியவில்லை.
இல்லாமைக்குள் இருந்துவிட்டால் வெறுமை நீண்டு கொண்டே போகும் .... அங்கே ஒரு அச்சம் நிட்ச்ச்சயம்  குடிகொள்ளும். இந்துக்கள் இப்போ யுவனை கேள்வி கேட்பதற்கு இந்த அச்சம்தான் மறைமுக காரணம்.
அது அவர்களுடைய உரிமை என்றுதான் நான் எண்ணுகிறேன்.
தனிமனிதனாக யாராலும் இருக்க முடியாது .............
தனிமனிதனாக யாரும் இங்கே வரவில்லை ............... இன்று நான் வாழும் அமெரிக்கா என்ற நாட்டை உருவாக்க  எத்தனையோ உயிர்கள் விலையாக கொடுக்க பட்டிருக்கிறது. அவர்களிடம் ஒரு எண்ணம் இருந்தது ...... அந்த எண்ணத்தை நான் எப்படியும் கடனாக பெற வேண்டும். இன்று அவர்களுடைய உழைப்புதான் எனக்கு  வாழ்க்கை என்ற பிச்சை போடுகிறது.
அவர்களுடைய என்னத்திற்கு நான் அசைந்தாக வேண்டும்............. அது ஒரு மனிதனின் கடமை என்றுதான் நான் எண்ணுகிறேன்.
எனது சொந்த பிரச்சனை ........... என்று ஏதும்  இல்லை. எல்லாம் சமூகம் என் மீது சுமத்தியதுதான்.
"தனிமனித சுதந்திரம்" என்ற வேடிக்கை சொல்லை எனக்கு சொல்லித்தந்தும் இந்த சமூகம்தான்.  
சிற்பிகள் சிலைகளை அதுதான் நிர்வாணமாக வடிக்கிறார்கள். அவர்களது கலை சிந்தனைக்கு மனிதர்கள்  இல்லாதவைகளை  பூசிவிடுவார்கள் என்ற அச்சம்தான் காரணம்.
நிர்வாணமாக இருப்பதால் ஒரு பெண் உருவ சிலை .... பெண்ணாக இருக்கிறது. ஆடையை போட்டால் அதை அமெரிக்க பெண்  ஆப்ரிக்க பெண் என்று அடையாளம் காண தொடக்கி விடுவார்கள்.
தனியாக மிருகங்களே இல்லை சமூகமாகத்தான் இருக்கிறது ............. சமூகத்தை தொலைத்து  தனியாக திரியும் மிருகங்கள்  உண்டு............ தனியாக இல்லை. தனி மிருக சுதந்திரமே இல்லை .....
ஓவரு நாள் ஆற்றில் சென்று குளிக்கும் பன்றி ஒன்று இருந்தாலும் ........... அதன் சமூகம் சார்ந்து அதை நாம் பன்றி என்றுதான் அழைப்போம்.
 
பாதையை சோடிப்பது ஒன்றும் தமிழருக்கு புதியதல்ல ........
ஈழ விடுதலை போரில் கூட இறுதிவரை பாதையை சோடித்தவர்கள் உண்டு. "தனி ஈழம்" என்ற கொள்கை அது தன்பாட்டில் செத்து கிடக்கிறது.
எனது பாதை எதோ ஒரு காரணத்தால் முடிந்து விட்டது ............... ஆனாலும் புலிகள்  எனது கொள்கையான "தனி ஈழம்" என்ற இலக்கை நோக்கி நகர்கிறார்கள். மன கசப்பு அவர்களோடு கை கோர்க்க விடவில்லை ....
தள்ளியாவது இருந்திருக்கலாம். புலிகளை காட்டி கொடுத்தவர்கள் ஓவரு ஊரிலும் உண்டு.
கொள்கையை யாரும் பெரிதுபடுத்தி பார்க்கவில்லை ........... பாதையை சோடித்து கொண்டிருந்தார்கள்.
அது முள்ளி வாய்க்கால் என்ற மயானத்தில் கொண்டு வந்து விட்டிருக்கிறது.
தொடங்கியவர்கள் தொடக்கியபோது ........... பிறந்தே இருக்கதவர்கள்.
:தனி ஈழம்" என்று மேனியில் வெடிசுமந்து திரிந்தபோது ................ அவர்களை தீர்த்து கட்ட ஈழத்தை எரித்தவனுடன்  எரித்து கொண்டிருந்தவனுடன் கூடி நின்றார்கள். 
 
ஏன் செல்கிறேன்? ............. எங்கே செல்கிறேன் ?
என்ற கேள்விகளுக்கு விடை தெரியாது போனவர்களால் ஒரு இனமே இன்று அழிந்து கிடக்கிறது.
உயிர்தெழுந்த ஜேசு போல் ............. புலிகளாலும் ஒன்று இரண்டு தடவைதான் உயிர்தெழ முடிந்தது.
கடவுளுக்கு ......... மதத்தின் பெயரால் சிலுவையில் ஆணி அடித்து மகிழ்ந்திருக்கிறது ஒரு கூட்டம்.
 
ஏன் செல்கிறேன் ............. எங்கே செல்கிறேன்...........??
என்ற விடை இன்றி செல்பவர்களால் ............. உலகில் உள்ள அத்தனை சமூகமும் சீரழிந்து போகிறது.
பாதிரியார் பாலியல் பலாத்தகாரம் செய்து மனிதனை சிதைக்கும்போது ........... கருணையையும் கடவுளையும் தூக்கி எறிந்து விட்டு வத்திகான் அவர்களை  பாதுகாக்கிறது.
விடைதெரியாத கூட்டம் இருப்பதால் இந்தியாவில் சந்திக்கு ஒரு காமுகன் சாமி ஆகா முடிகிறது.
சவுதியில் எழு பெண்களை ஒரே கட்டிலில் வைத்து புனையும் அயோக்கிய தனத்தை சட்டம் பாதுகாக்கிறது.
 
இவர்கள் கடவுளை தேட தொடங்கு மட்டும்.............
இப்படி எதோ ஒரு அயோக்கிய தனத்திற்கு அடிமைகளாகவே இருப்பார்.
கடவுள் இல்லவே இல்லை என்று இவர்கள் 100 வீதம் நம்புகிறார்கள். அதுதான் மதம் மாறுகிறார்கள்.
இல்லை என்றால் தங்கள் மனதை அல்லவா மாற்றி இருக்க வேண்டும்?

Edited by Maruthankerny

ரகுமான் சாதிக்கொடுமையினால் மதம் மாறவில்லை. அவரை தத்து எடுத்து வளர்த்தவர் ஒரு முஸ்லீம்.

புலிகள் எந்த மதத்தினையும் முன்னிறுத்தி செயற்படவில்லை. இந்து சமயத்துக்காகப் போராடுகிறோம் என்று அவர்கள் போரிட்டால் பார்ப்பணர்கள் உட்பட இந்தியர்கள் ஈழத்துக்கு ஆதரவு குடுத்திருப்பார்கள். திரவிடக்கழங்கள் போல புலிகளைப் பார்ப்பணர்கள் உட்பட வட இந்தியர்கள் நினைக்கிறார்கள். யாரோ ஒரு யாழ் அன்பு என்பவரின் கருத்துக்காக புலித்தேசியம் என்று சொல்வது தவறு.

புலிகள் எந்த மதத்தையும் முன்நிறுத்தவில்லை ஆனால் புலிகள் செயற்பட்ட சமூகத் தளம் மதத்தை முன்நிறுத்தியது. இதன் விழைவே இஸ்லாமியத் தமிழருக்கும் புலிகளுக்குமிடையிலான பிளவும் பிரிவும்.

தீவிரமாக தேசீயப்பற்றுள்ளவர்கள் போல் தம்மை காட்டுபவர்களும் புலி ஆதரவாளர்களாக தம்மை காட்டுபவர்களும் புலிகளில் இல்லாத மத வெறியை கொண்டுள்ளனர். இதனாலேயே புலித்தேசீயத்தை முன்நிறுத்தி இவர்களிடம் கேள்வி கேட்கவேண்டியுள்ளது. புலிகளும் போராட்டமும் அழிந்ததுக்கான அகநிலைக் காரணமாக இவர்களே உள்ளனர் என்பதை இவர்கள் கருத்துக்கள் ஊடாக வெளிப்படுத்துவதற்கு இவ்வாறான சந்தர்ப்பங்களே பொருத்தமாக உள்ளதால் இவ்வாறான கேள்விகள் எழுப்பவேண்டியுள்ளது.

இந்திய அதிகாரவர்க்கமான இந்துத்துவா பார்ப்பனக் கூட்டத்திடம் இவ்வளவு அடிவாங்கிய பின்னரும் இந்து மதத்தை தாய்க்கு ஒப்பிடும் நிலையை விபரிக்க முடியாது. சோ ராமசாமியும் சுப்பிரமணியம் சாமியும் தாங்களும் ஒரு தாய் பிள்ளைகளாம் ! என்ன செய்ய முடியும்.

சைவமும் தமிழும் இரு கண்களாம். தமிழை வளர்த்த சமணத்தையும் பௌத்தத்தையும் கழுவேற்றி கருவறுத்து சைவம் என்று சாதி வளர்த்து கடசியில் இப்போது இந்துவாம். தமிழை நீச பாசை என்று தமிழ்ப் பிரசங்கம் செய்த மேடையை கழுவி தீட்டு நீக்கிய வரலாறுகளை எல்லாம் மறந்து இந்துத்துவத்தை தாயக்கு ஒப்பிட்டு இந்துத்துவாக்களிடம் மண்டியிட்டுக்கிடக்க விரும்ம்பும் இவர்களுக்கும் சுதந்திரம் என்ற வார்த்தைக்கும் எதுவித சம்மந்தமும் இல்லை ஆனால் சுதந்திரத்துக்காக போராடிய ஒரு அமைப்பை ஆதரிப்பவர்காளக இவர்கள் இருக்கும் போது இவ்வாறான போட்டுவாங்கல்கள் அவசியமாகின்றது.

ஒட்டுமொத்தத்தில்,
 
தமிழை அழித்த சைவத்தை பின்பற்றி இந்துவாகி இஸ்லாமிய தமிழர்களின் எதிர்ப்பை சம்பாதித்து போராட்டத்தில் தோற்றுப் போனோம்.
 
சரிதானா ?  :wub:
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் மதம்மாறித்தான் வந்திருக்கிறோம் பிரபலங்கள் மதம் மாறும் பொழுது கொஞ்சம் புகை வருகுது'''''''''''''' தமிழ் வளர்த்த இஸ்லாம் என்று ஒரு தொடர் இனி வரும்...... :Dஅதை நான் தான் எழுதுவேன்...

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

பிறப்பினால் வரும் மதத்தையும் சாதியையும் காவிக்கொண்டு திரியவேண்டிய அவசியமில்லை. பிடிக்காவிட்டால் மதம் மாறவும் சாதி அடையாளத்தைத் துறக்கவும் அப்படியானவர்களை ஏற்றுக்கொள்ளவும் கூடிய சமூகம் இருக்கவேண்டும். இதை மறுப்பவர்கள் ஏதோ ஒன்றின் மீது வெறிபிடித்துத்தான் இருக்கின்றனர்.

அவுஸ்ரேலியாவில் வெள்ளைஇனத்தவர்கள் அப்படியான ஒரு சமுக அமைப்பாக வந்து கொண்டிருக்கிறார்கள்.....தேவாலயங்களை விற்பனை செய்கின்றார்கள்.....

  • கருத்துக்கள உறவுகள்

அதான் தினமலர் நாளிதழில் புட்டு புட்டு வைத்திருகின்றார்களே யுவனின் மதம் மாற்றம்பற்றி

அதாவது மலேசியாவில் பெரும் பணக்கார முஸ்லிம் குடும்பத்தில் 3 ஆவதாக திருமணம் செய்ய யுவன் பொண்ணு பாத்து இருக்காராம் அதற்க்காவே இந்த மதம்மாற்றம் என்று.

  • கருத்துக்கள உறவுகள்

அதுவும் மலேசியாவை பொறுத்த வரை முஸ்லிம் பெண்ணை கட்டவேண்டும் என்றால் கண்டிப்பாக மதம் மாறியே ஆகணும் சட்டம் அப்பிடி

அதுவும் மலேசியாவை பொறுத்த வரை முஸ்லிம் பெண்ணை கட்டவேண்டும் என்றால் கண்டிப்பாக மதம் மாறியே ஆகணும் சட்டம் அப்பிடி

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியாவில் வெள்ளைஇனத்தவர்கள் அப்படியான ஒரு சமுக அமைப்பாக வந்து கொண்டிருக்கிறார்கள்.....தேவாலயங்களை விற்பனை செய்கின்றார்கள்.....

நீங்க டூ லேட் அண்ணே,லண்டனில ஏற்கனவே வித்து முடிச்சாச்சு இன்னும் ஒண்டு இரண்டிதான் மிச்சம் இருக்கு.வித்தது எல்லாம் முருகன் கோயிலாவும்,சுப்பர்மாக்கற்றுகளாகவும் மின்னுது.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு மதத்தின் கொள்கை பிடித்தால் அதனைப் பின்பற்றுவதில் எந்தத் தவறும் இல்லை.  அதற்காக மதம் மாறுவதுதான் பிழை.  மதம் மாறுவது என்பது சும்மா ஒரு சாக்குப் போக்கு.  தனக்கென ஒரு கொள்கை, சிந்தனைத்திறன் இல்லாதவர்கள்தான் மதம் மாறுகிறார்கள்.  நான் பிறப்பால் இந்து.  ஆனால், எனக்கு 11 வயதில் கிறிஸ்தவர்களின் நட்புக் கிடைத்தது.  அவர்களோடு சேர்ச்சுக்குச் சென்றிருந்தபோது, அவர்களின் வழிபாட்டு முறை மிகவும் பிடித்திருந்தது.  அதனால் அநேக ஞாயிறுகள் அவர்களோடு சேர்ச்சுக்குச் சென்றிருக்கிறேன்.  ஒரு வருடத்தில் இடப்பெயர்வின் காரணமாகச் சேர்ச்சுக்குச் செல்வது நின்றுவிட்டது.   இங்கு ஏழு நாட்களும் சேர்ச் திறந்திருக்கும்.  ஆனால், இப்போது மனம் நினைக்கும் போதெல்லாம் சேர்ச்சுக்கு போவதுண்டு.    சேர்ச்சுக்குச் செல்ல வேண்டுமென்பதாலோ, அவர்களின் வழிமுறைகள் பிடித்திருப்பதாலோ நான் மதம் மாறவில்லை.

இவர் மதம் மாறியதற்கு காரணம் அவர் விரும்பும் பெண்ணைத் திருமணம் செய்வதற்கே.  அதற்கு மதத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.  இளையராஜா தனக்கென ஒரு பெயரை உருவாக்கியது உண்மை.  ஆனால், இசையிலும் சரி, சொந்த வாழ்விலும் சரிஇ தனக்கான வாரிசை உருவாக்கவில்லை.  சொந்த வாழ்க்கையில் அவர் தோல்விதான் கண்டிருக்கிறார். 

உங்கள் கருத்து இந்த திரிக்கும் யுவன் சங்கருக்கும் ஒரு முற்றுப்புள்ளி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.