Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பை குறைக்க வேண்டுமா? இதோ 10 வழிகள்! -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இன்றைய இளைய தலைமுறையாகட்டும், பெரியவர்களாகட்டும் அவர்களுடைய எடையை, குறிப்பாக வயிற்றை குறைக்க படும் பாடுகளை சொல்லி மாளாது. இவ்வாறு வயிற்றுப்பகுதி பெரியதாக இருப்பதை அதை விட பெரிய குறையாக கருதுபவர்கள் பலரும் உண்டு. இந்த குறையை தீர்க்க ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் இதோ நாங்கள் சில குறிப்புகளை கொடுக்கிறோம். படியுங்கள் பயன் பெறுங்கள். ஏழே நாட்களில் ஏழு கிலோ குறைய வேண்டுமா? இதோ அட்டகாசமான சில டயட் டிப்ஸ்… வயிற்றுக் கொழுப்பை குறைப்பது என்பது மிகவும் கடினமான விஷயமாக உள்ளது. இவ்வாறு வயிற்று கொழுப்பை குறைக்கும் முயற்சியில் ஈடுபடும் போது சரியான வழிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் நாம் தோல்வியடைகிறோம். வயிற்றுக் கொழுப்பை குறைக்க வேண்டும் என்று உறுதியாக எண்ணினால் அதற்காக ஒன்றல்ல, இரண்டல்ல 10 வழிகள் இதோ.
சரியாக சாப்பிடுதல்
சரியான முறையில் சாப்பிட்டால் 80% கொழுப்பை நிச்சயம் குறைக்க முடியும். ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு முறையை பின்பற்றும் போது இதை நாம் சாதிக்க முடியும். தேவையான அளவு நுண் மற்றும் பெரும ஊட்டச் சத்துக்களை சாப்பிட்டால் கொழுப்பை குறைக்க முடியும். இடை உணவுகள், துரித உணவுகள் ஆகிய கடைகளில் வாங்கும் உணவுகளை அறவே தவிர்த்தால் தடியான வயிறை தட்டையான வயிறாக மாற்ற முடியும். இயற்கையான காய்கறிகள் மற்றும் பழங்கள், வேக வைத்த உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்.
தண்ணீர்
தாகம், அயர்ச்சி, பசி ஆகியவற்றைப் பற்றி தெளிவாக உணராத சிலர் பசிக்கும் போது நிறைய சர்க்கரை கொண்ட உணவை உண்டு எடையை தங்களை அறியாமலேயே அதிகப்படுத்திக் கொள்கின்றனர் அல்லது கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவை பசியில் விரைந்து உண்கின்றனர். இது தவறு. எப்போதும் ஒரு தண்ணீர் பாட்டிலை கையில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். குறைந்தது 6 முதல் 8 டம்ப்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். ஆனால் இது உங்கள் எடை மற்றும் வாழ்க்கை முறையை சார்ந்த விஷயமாக அமைகின்றது. இதை கண்டறிந்து உங்களுக்கு தேவையான தண்ணீரின் அளவை கண்டறிந்து அதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
உடற்பயிற்சி
பல மணி நேரம் உழைப்பு மற்றும் வெகு தூர ஓட்டப் பயிற்சி ஆகிய இரண்டும் தரும் பலன்களை விட சிறிது நேரம் கடினமான உடற்பயிற்சியில் ஈடுபடும் போது கொழுப்பு அதிகமாக குறையும். உதாரணமாக நீங்கள் திரெட் மில்லில் பயிற்சி மேற்கொள்ளும் போது அவ்வப்போது உங்கள் வேகத்தை கூட்டி சில வினாடிகள் அதை தொடர்ந்து பயிற்சி செய்த பின் மீண்டும் நமது பழைய வேகத்திற்கு திரும்பி வரும் போது சிறந்த அளவில் தொப்பை குறையும்.
சர்க்கரை வேண்டாம்
பொதுவாக நமக்கு கடைகளில் கிடைக்கும் சர்க்கரையை தவிர்ப்பதும் அல்லது குறைப்பதும் நல்லது. இதை தினமும் நமது உணவில் தவிர்த்தால் சிறந்தது. நாம் தினமும் உண்ணும் உணவில் சர்க்கரை நிறைய அளவு ஒளிந்திருக்கும். இதை உணர்ந்து, நாம் உண்ணும் உணவில் சாக்கரையை குறைப்பது நல்லது. இதற்கு பதிலாக தேன், பனங்கற்கண்டு மற்றும் அதிமதுர சாறு ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
சோடியம் உட்கொள்ளுதலை குறைத்தல்
உப்பை கண்டிப்பாக உணவில் சேர்த்து பயன்படுத்தும் இந்த காலத்தில் சோடியம் உப்பை தவிர, பொட்டாசியம் உப்பு, எலுமிச்சை உப்பு மற்றும் கடல் உப்பு ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம். மிளகு மற்றும் இதர மூலிகைகளை பயன்படுத்துவதன் மூலம் உப்பு உட்கொள்ளுவதை தவிர்க்க முடியும்.
வைட்டமின் சி உணவுகள்
உடலில் உள்ள கொழுப்புகளை சக்தியாக மாற்றும் கார்னிடைன் என்ற பொருளை சுரப்பதற்கு உதவும் வைட்டமின் சி மிகவும் அவசியமானதாக உள்ளது. அது மட்டுமல்லாமல் மன அழுத்தத்தால் சுரக்கப்படும் கார்டிசாலையும் வைட்டமின் சி கட்டுப்படுத்துகிறது. இந்த கார்டிசால் தான் வயிற்று கொழுப்பு அதிகரிப்பதற்கு மிக முக்கிய காரணமாகும்.
கொழுப்பை குறைக்கும் இந்திய உணவுகள்
கொழுப்பை குறைப்பதற்கு இயற்கையான வழிகள் பலவும் உள்ளன. பூண்டு, வெங்காயம், இஞ்சி, சிவப்பு மிளகு, கோஸ், தக்காளி, மற்றும் இலவங்கப்பட்டை, கடுகு, கிராம்பு ஆகியவையும் கொழுப்பை கரைக்க உதவுகின்றன. சிறிது கிராம்பு, பச்சை பூண்டு மற்றும் ஒரு அங்குல அளவிற்கு இஞ்சி ஆகியவற்றை கலந்து தினமும் காலை சாப்பிட்டு வந்தால் கொழுப்பை நிச்சயம் கரைக்க முடியும். வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் எலுமிச்சை சாறு மற்றும் தேனை கலந்து, காலையில் வெறும் வயிற்றில் அருந்துவதும் மிகப் பிரபலமான உடல் எடையை குறைக்கும் வழியாக பின்பற்றப்படுகின்றது. இது போன்று பல வழிகள் உண்டு.
தேவையான ஆரோக்கியமூட்டும் கொழுப்புச் சத்தை சேர்த்துக் கொள்ளுதல்
கெட்ட அல்லது தேவையற்ற கொழுப்புக்களை குறைக்கும் முயற்சியில் நாம் நல்ல கொழுப்பு வகைகளை சேர்க்க முயல வேண்டும். வெண்ணைய் பழம், ஆலிவ், தேங்காய் ஆகிய பருப்பு வகைகள் நல்ல கொழுப்புகளை கொண்டவையாகும்.
காலை உணவை கண்டிப்பாக சாப்பிடவும்
காலை உணவை தவிர்ப்பது உடல் எடையை குறைக்க உதவும் என்று நிறைய மக்கள் தவறாக நினைப்பதுண்டு. இது உடல் எடையை குறைக்காமல், உடல் வீக்கமடைய காரணமாகிவிடுகிறது. இதனால் வயிறு உப்புசமடைவது அதிகரித்து, பசி அதிகமாவதால் வயிற்றுக் கொழுப்பு மிகவும் அதிகமாகிறது. ஆகவே அவ்வப்போது நாம் சிறிது சிறிதாக உண்ணும் போது நமது உடல் செரிமானத்தை கட்டுப்படுத்தி உடல் எடையை மேம்படுத்த முடிகிறது. ஆகையால் உணவின் அளவை குறைத்து உண்ணும் நேரங்களை அதிகப்படுத்தி ஆரோக்கியமாக உடலை உருவாக்கிக் கொள்ளுங்கள். உலர்ந்த பழங்கள், பழ வகைகள் மற்றும் பச்சை அல்லது வேக வைக்காத காய்கறிகள் ஆகியவற்றை உண்ணலாம்.
தூக்கம்
உடல் எடையை மேம்படுத்த தூக்கம் மிகவும் அவசியமான ஒன்றாகும். அனைவருக்கும் 6 முதல் 8 மணி நேர உறக்கம் தேவைப்படுகிறது. உறங்காமல் இருப்பதும் உடல் எடையை கூட்டுவதாக உள்ளது. இத்தகைய எளிய வழிகளை பின்பற்றினால் வயிற்றுக் கொழுப்பை மட்டுமல்ல, முழு உடல் எடையையும் குறைத்து ஆரோக்கிய வாழ்வை வாழ முடியும். இதை முயற்சி செய்து வித்தியாசத்தை உணருங்கள்.
 
FILED IN: மருத்துவம்

இணைப்பிற்கு நன்றி பெருமாள்!!

11) விவசாயி விக்கின் தோட்டத்தில் கிழமைக்கு இரு தடவை வேலை செய்தால் 6 பாக்ஸ் கிடைக்கும். :D

பகிடி பண்ணவில்லை. ஒரு நாள் உள்ளி நடலில் 5-8 பவுண்டு எடை குறையும்.

  • கருத்துக்கள உறவுகள்

11) விவசாயி விக்கின் தோட்டத்தில் கிழமைக்கு இரு தடவை வேலை செய்தால் 6 பாக்ஸ் கிடைக்கும். :D

பகிடி பண்ணவில்லை. ஒரு நாள் உள்ளி நடலில் 5-8 பவுண்டு எடை குறையும்.

அப்படியானால் வரும் கோடை காலத்தில் உங்களை சந்திக்கிறேன்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி பெருமாள்...! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
அதென்னாப்பா எல்லாரும் ஏழுநாள் கணக்கு வைச்சு அலையிறாங்கள்? 
 
ஏன் ஒரு பத்துபதினைஞ்சு நாளெண்டு டீலிங் வைக்கக்கூடாது?
 

அப்படியானால் வரும் கோடை காலத்தில் உங்களை சந்திக்கிறேன்.. :D

தாரளமாக.

இடையில் தப்பியெல்லாம் போக முடியாது :)

  • கருத்துக்கள உறவுகள்

உடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள்--உபயோகமான தகவல்கள்

 

 

இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. 

இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும். 

பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி, போதுமான சத்தான உணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. இதுதவிர, அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது. 

இதுபோன்றவர்களுக்கு எளிய வழியில் உடல் பருமனைக் குறைப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம். 

சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த த‌ண்‌ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச் சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும். 

சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாகச் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும். 

பப்பாளிக்காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். இதுதவிர, மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் பருத்த உடல் மெலியும். 

அமுக்கிராவேர் பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும். சுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும். 

மேலும் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்துவர வேண்டும். இதுதவிர, வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம். 

இது எ‌ல்லாவ‌ற்‌றி‌ற்கு‌ம் மேலாக காலை‌யி‌ல் அரை ம‌ணி நேர‌ம் நடைப‌யி‌ற்‌சி மே‌ற்கொ‌ண்டா‌ல் கொழு‌ப்பு‌ம் கரையு‌ம், உட‌‌ல் எடையு‌ம் குறையு‌ம், பு‌த்துண‌ர்வாகவு‌ம் இரு‌க்கு‌ம். 

.1)எப்போதும் நமது எண்ணங்கள் பாசிட்டிவாக இருந்தால்தான் எந்த வெற்றியையும் அடைய முடியும்.அது இந்த உடல் மெலிவதற்கும் பொருந்தும்.உடல் மெலிய வேண்டும் என்று உடற்பயிற்சி,டயட்டிங் இருக்க ஆரம்பித்து விட்டால், இனி உடல் எடை குறையும்,இப்போது கொஞ்சம் குறைந்து விட்டது என்று நீங்களே மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.இதுதான் உங்களை மேலும் முயற்சி செய்ய வைக்கும்.என்ன் இது 2 வாரமாகியும் உடல் எடை குறைய வில்லையே என்று பாதியில் விட்டு விடாதீர்கள்.அப்புறம் மேலும் எடை கூட வாய்ப்பு அதிகம்.
udaledai-15.jpg
2) எக்காரணம் கொண்டும் சாப்பிட்ட பிறகு உடல் பயிற்சி செய்யாதீர்கள்.சாப்பிடும் முன்பு செய்வதுதான் சரி.

3)குளிர்ந்த தண்ணீர் குடிப்பதை விட சூடான தண்ணீர் குடிப்பது உடல் எடை குறைக்க உதவும்.

4) 3 வேளையாக சாப்பிடாமல் 3 மணி நேர இடைவெளியில் 6 தடவையாக சாப்பிடுங்கள்.அதனால் எப்போதும் சாப்பிடும் ஒரு வேளை உணவை(அதே அளவை) இரண்டாக பிரித்து 2 வேளையாக சாப்பிடுங்கள்.இதுதான் இன்று மிகவும் அதிகமான பேர் பின்பற்றும் டயட்டிங் முறை.எல்லோருடைய மெட்டபாலிசமும் ஒரே மாதிரி இருக்காது.இப்படி பிரித்து சாப்பிடுவதால் உடம்பில் கொழுப்பு தங்க வாய்ப்பு இல்லாமல் எளிதில் உணவு ஜீரணமாகிவிடும்.அதனால்தான் மருத்துவர்கள் சர்க்கரை நோயாளிகளை சிறிய உணவாக உண்ண சொல்லுகிறார்கள்.எப்போதும் சாப்பிடும் தட்டைவிட சிறிய தட்டில் சாப்பிடுங்கள்.அப்போதுதான் நாம் நிறைய சாப்பிடுகிறோம் என்ற எண்ணம் வரும்.மெதுவாக,நன்றாக மென்று சாப்பிடுங்கள்.இதனால் உணவு எடுத்துக் கொள்ளும் அளவும் குறையும்.

5)சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும்.கொள்ளு ரசம்,கொள்ளு சுண்டல் போன்றவை செய்து சாப்பிடலாம்.அதை விட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள்.இது நிச்சயம் எடையை குறைக்கும்.

6)என்ன சாப்பிட்டாலும் அதிலிருந்து எவ்வளவு எனர்ஜி கிடைக்கிறது என்று பாருங்கள்.இது வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு எளிது.அதிகம் கிலோ ஜூல்ஸ் உள்ள பதார்த்தங்களை எளிதாக தவிர்த்து விடலாம்.இதில் முக்கியமாக தவிர்க்க வேண்டியவை Sweets.எடை கூட இது முதற் காரணம்.Equal போன்ற கலோரி குறைந்த Sweetener ஐ உபயோகியுங்கள்.

7) டயட் என்றால் பட்டினி கிடப்பதில்லை.அதேபோல் சுவை குறைந்த உணவை சாப்பிட வேண்டும் என்பதும் இல்லை.இப்படி செய்ய ஆரம்பித்தால் வெறுப்புதான் வரும்.எதையும் மனதிற்கு பிடித்து செய்ய வேண்டும்.ஒரு வேளை கூட பட்டினி கிடக்காதீர்கள்.அப்புறம் உங்களையும் அறியாமல் அடுத்த வேளை அதிகம் சாப்பிட்டு விடுவீர்கள்.மீண்டும் உணவு கொழுப்பாக உடலில் தங்கிவிடும்.காலை உணவு எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

8)ஆவியில் வேக வைத்த உணவு,நீர் காய்கறிகள் என்று திட்டமிட்டு சமையுங்கள்.வாரம் ஒரு முறை பொரித்த உணவு,ஸ்வீட்ஸ் என்றுகூட சாப்பிடலாம்.முக்கியமாக டயட் இருந்தாலும் நம் உடலுக்கு தேவையான அத்தனை சத்துக்களும் தொடர்ந்து கிடைக்குமாறு பார்த்துக் கொளுங்கள்.புரோட்டீன்,கார்போஹைடிரேட்,நல்ல கொழுப்பு,கால்ஷியம்,இரும்புச் சத்து முதலியவை நம் உடலுக்கு கண்டிப்பாக தேவை.இதன் அளவு குறைந்தால் முடி கொட்டுதல்,ரத்த சோகை,எலும்பு தேய்மானம் முதலியவை ஏற்படும்.பருப்பு,கீரை,அவித்த முட்டை,சாதம்,பால் முதலியவை சேர்த்துக் கொள்ளுங்கள்.சமைக்கும் முறையில் அதிகம் கொழுப்பு சேர்ந்து விடாமல் செய்து சாப்பிடுங்கள்.

icon_cool.gif டயட்டில் ஒன்று சொல்வார்கள்.வெள்ளையாக இருப்பவற்றை, குறைந்த அளவு சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று.ஜீனி,உப்பு,சாதம்,பால்,தயிர் போன்றவை தான் இப்படி அளவை குறைக்க வேண்டிய பொருட்கள்.நிறைய பேர் Full Cream milk, Skim Milk க்கு உள்ள வேறுபாட்டை அறியாமல் இருக்கிறார்கள்.Skim milk தண்ணீரை போன்று இருப்பதால் பலரும் அதை Diluted Full Cream milk அதாவது தண்ணீர் சேர்க்கப்பட்ட பால் என்று நினைத்து விடுகிறார்கள்.அதனால் அதை வாங்கி உபயோகப்படுத்துவதும் இல்லை.Skim milk என்பது கொழுப்பு நீக்கப்பட்ட பால்.ஆனால் பாலில் உள்ள அத்தனை சத்துக்களும் அப்படியேதான் இருக்கும்.எனவே உடல் எடை குறைய skim milk உபயோகிக்கலாம்.சத்துப் பற்றாக்குறை ஏற்படாது.

9)வாரம் ஒரு முறையாவது ஓட்ஸ்,பார்லி சேர்த்துக் கொள்ளுங்கள்.ஓட்ஸ் உடம்பில் உள்ள கொழுப்பையும்,பார்லி உடம்பில் அதிகம் உள்ள நீரையும் குறைக்கும்.ஆனால் பார்லியை அதிகம் முக்கியமாக கருவுற்றிருக்கும் பெண்கள் உபயோகப்படுத்த வேண்டாம்.இது நீரின் அளவை குறைத்து சிசேரியனில் கொண்டு விட்டுவிடும்.சிலர் கால்,கை வீக்கம் கர்ப்ப காலத்தில் ஏற்படும்போது அதிகம் பார்லியை உட்கொண்டுவிடுவதால் இப்படி நேர்ந்துவிடுகிறது.இதற்கு மாற்றாக வெந்தயக்கஞ்சி செய்து சாப்பிடலாம்(கர்ப்பிணிகள்).

10)உங்களது லைப்ஸ்டைலுக்கு ஏற்றார்போல் உடல் பயிற்சியை அமைத்துக் கொள்ளுங்கள்.உங்களால் பிட்னெஸ் செண்டருக்கு தொடர்ந்து சென்று பயிற்சி செய்ய முடியும் என்றால் மட்டுமே அதில் சேருங்கள்.குழந்தை வைத்திருப்பவர்கள்,குழந்தையை ப்ராமில் வைத்து தள்ளிக் கொண்டு வாக்கிங் போகலாம்.அவர்களுக்கு வேடிக்கை காண்பிக்க வெளியில் அழைத்து சென்றது போலிருக்கும்.வாக்கிங் செய்வது மிகவும் அவசியம்.உடம்பில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் குறைக்க நினைக்காதீர்கள்.வாக்கிங்,ஜாகிங் இப்படி வெளியே செல்லும் எந்த பயிற்சியும் செய்ய முடியாதவர்கள் வீட்டிலேயே உடல் பயிற்சி செய்யலாம்.ஒழுங்காக கற்றுக் கொண்டு அல்லது புக்கில் படித்து புரிந்து,அதற்கென உள்ள வீடியோக்களை வாங்கிப் பார்த்து வீட்டினுள்ளேயே செய்யலாம்.

11)அதிக எண்ணெய்,மட்டன்(மாதம் ஒரு முறையோ,வாரம் ஒரு முறையோ கொழுப்பில்லாத கறியாக சாப்பிடலாம்),ஸ்நாக்ஸ்(சிப்ஸ்) போன்ற கலோரி அதிகமுள்ள பொருட்களை தவிர்த்து விடுங்கள்.டீ குடிப்பது உடலில் கொழுப்பை சேர விடாது.அதுவும் க்ரீன் டீ மிகவும் நல்லது.பாலை சேர்க்காமல் அல்லது ஸ்கிம் மில்க்கை சேர்த்து குடிக்கலாம்.

12)சில வகை உணவுகள் செரிப்பதற்கு அதிக எனர்ஜியை எடுத்துக் கொள்ளும்.உதாரணமாக ஆப்பிள்,Broccoli போன்றவை செரிக்க அதிக எனர்ஜி தேவைப்படும்.அப்படி அதிக எனர்ஜி தேவைப்படும்போது நமது உடலில் உள்ள கொழுப்பிலிருந்து சக்தி எடுத்துக் கொள்ளும்.எப்படியிருந்தாலும் மேற்கண்ட பொருட்களை சாப்பிடும்போது உடலில் கொழுப்பு சேர்வதில்லை.

13)Pepsi,Coke போன்ற பானங்களை குடித்தே ஆக வேண்டும் என்றால் Sugar Free அல்லது Diet பானங்களை பருகலாம்.Milo,Horlicks போன்றவை எடையை கூட்டவே செய்யும்.சாலட் சாப்பிட்டாலும் அதில் மயோனைஸ்,சாலட் டிரஸ்சிங் சேர்க்காமல் எலுமிச்சை,மிளகுத்தூள் சேர்த்து சாப்பிடலாம்.Baked Beans,Tuna can,Crackers போன்றவற்றை சிறிய உணவாக எடுத்துக் கொள்ளலாம்.இதன் மூலம் புரோட்டீன் போன்ற சத்துக்கள் கிடைத்துவிடும்.முடிந்தவரை வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள்.வெளியில் சாப்பிடுவதுகூட எடை ஏற ஒரு காரணம்.முக்கியமாக பிட்ஸா,சிக்கன் ஃபிரை போன்ற அயிட்டங்கள் நிச்சயம் எடையை கூட்டிவிடும்.

14)Exercise,Diet இல்லாமல் எடையை குறைப்பது அவ்வளவு எளிதல்ல.Diet என்ற வார்த்தையை உபயோகப்படுத்தாமல் ஹெல்தியாக சாப்பிடுகிறோம் என்று நினையுங்கள்.நிச்சயம் சரியான டயட்டும்,உடற்பயிற்சியும் எடையை குறைக்கும்.பரம்பரை காரணமாக சிலர் குண்டாக இருப்பார்கள்.அவர்களும் முயன்றால் எடையை நிச்சயம் குறைக்கலாம்.உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள்,மருத்துவர்கள் ஆலோசனை கேட்டு உடற்பயிற்சி செய்யலாம்.

உடல் பருமனைக் குறைக்க செய்ய வேண்டியவை:
* எளிதான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்
* தினமும் 2-லிருந்து 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்
* பட்டினிக் கிடத்தல் கூடாது
* அதிக நொறுக்குத் தீனிகள் கூடாது ௦
* உருளைக்கிழங்கு, சேனைக் கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை உட்கொள்ளுதலைத் தவிர்க்கவும்
* இனிப்புகள், சர்க்கரை வகைகளை இயன்றவரை தவிர்க்க வேண்டும்.
* எண்ணெயில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகளைத் தவிர்த்து வேகவைத்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
* முட்டையின் மஞ்சள் கருவைத் தவிர்த்து வெள்ளைப் பகுதிகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும்
* கூல் ட்ரிங்ஸ்சுக்கு 'தடா' விதிக்க வேண்டும்.
* தினமும் பழங்கள் உட்கொள்ளலாம் ( 2-லிருந்து 4 வரை)
* இரவு உணவுடன் அவரை, பீன்ஸ், கேரட், கோஸ், காலி ஃப்ளவர், முருங்கைக்காய், புடலங்காய், சுரைக்காய், பரங்கி, வாழைத்தண்டு, வெள்ளரிக்காய் இவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 200 கிராம் அளவு சேர்த்துக்கொள்ளுங்கள்.
* 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை கீரை, தட்டைப் பயறு, பச்சைப் பயறு போன்ற பயறு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.
* கைக்குத்தல் அவல், முழு கோதுமை, கோதுமை ரவை, கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களையும் அவ்வப்போது உட்கொள்ள வேண்டும்.
* கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை தவிர்த்தல் மிக நன்று. பாலில் கூட குறைந்த கொழுப்புச் சத்து உள்ள 'டோன்டு மில்க்' வகைகளையே பயன்படுத்துங்கள்.
* அசைவம் விரும்புபவர்கள் தந்தூரி வகைகளையே உட்கொள்வீர். சைனீஸ், இந்தியன் வகை குழம்புகள் வேண்டாம்.

தமது எடையை அடிக்கடி பார்த்து அதற்குத் தகுந்தவாரி உணவுப் பழக்கங்களை வைத்துக் கொள்ள வேண்டும். மனிதர்களுக்கு இருக்க வேண்டிய சராசரி எடை விபரம் கீழ்காணும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
உயரம்

(செ.மீ) ஆண்

(கிலோ) பெண்

(கிலோ) உயரம்

(இன்ச்) ஆண்

(எல்.பி) பெண்

(எல்.பி.) 147 - 45-59 58 - 100-131 150 - 45-60 59 - 101-134 152 - 46-62 60 - 103-137 155 55-66 47-63 61 123-145 105-140 157 56-67 49-65 62 125-148 108-144 160 57-68 50-67 63 127-151 111-148 162 58-70 51-69 64 129-155 114-152 165 59-72 53-70 65 131-159 117-156 167 60-74 54-72 66 133-163 120-160 170 61-75 55-74 67 135-167 123-164 172 62-77 57-75 68 137-171 126-167 175 63-79 58-77 69 139-175 129-170 177 64-81 60-78 70 141-179 132-173 180 65-83 61-80 71 144-183 135-176 182 66-85 - 72 147-187 - 182 67-87 - 73 150-192 - 187 68-89 - 74 153-197 - 190 69-91 - 75 157-202 -

உணவுப் பழக்கத்தை சரிவிகிதமாக்கி உண்டுவாழ்வதால் உடல் பருமன் குறையும். 

நான் சொல்வதை கேளுங்கள். லாஜிக் பேசாதீர்கள்.

வெறுமனே நான் சொல்வதை ஒரு அடிமைப் போல் கேளுங்கள்.

இரண்டு விசயத்துக்கு கவனம் கொடுங்கள். 

ஒன்று உணவு, மற்றொன்று உடல்பயிற்சி.

உணவு

காலையில் கண்டிப்பாகப் பசியாறுங்கள்.

அதன்பின் மதியம்வரை வாயில் எதுவும் வைக்காதீர்கள்.

மதியம் நல்ல சாப்பாடு. பாதி சோறு, கோழி அல்லது மீன் என்று நல்ல சத்தான சாப்பாடு சாப்பிடுங்கள்.

அதன்பின் இரவு வரை வாயில் எதுவும் வைக்காதிர்கள்.

இரவு உணவாக, சப்பாத்தி, ரொட்டி என்று சிம்பெலாக சாப்பிடுங்கள்.

அதன் பிறகு எதுவும் வேண்டாம்.

இந்த சாப்பாடுகளைத் தவிர வேறு எதுவும் சாப்பிடாமல் இருக்கணும். 

அடுத்து, குடிக்கும் பானம்.

வெறும் ஆறிய தண்ணீர்தான்.

ஆறிய தண்ணீரைத் தவிர வேறு எதுவும் குடிக்ககாமல் இருக்கணும்.

தேநீர், காப்பி, என்று சூடான பானம் முதல், ஆரஞ்சு, பெப்சி, கோலா போன்ற குளிர் பானம் வரை நோ....நோ...நோ...

உடற்பயிற்சி

உடற்பயிற்சி என்று  தனியாக செய்வது கஷ்டம்தான். அதனால், தனியாக உடற்பயிற்சி என்று எதுவும் செய்யாவிட்டால் பரவாயில்லை.

அன்றாடம் நடைப் பயிற்சி செய்யுங்கள். 

வேண்டுமென்றே, அன்றாடம் நடந்து போங்கள்.

விருப்பப்பட்டு அன்றாடம் நடந்து போங்கள்.

மார்க்கெட் போகனுமா?

காரை ஒரு 100 அல்லது 200 மீட்டர் தூரத்தில் பார்க் பண்ணி நடந்து போங்கள்.

வேறு எங்காவது போகனுமா?

கடையின் வாசலில் கார் பார்க் பண்ண இடமிருந்தாலும், அதை பயன்படுத்தாதிர்கள்.

தூரமாக பார்க் பண்ணி நடந்து செல்லுங்கள்.

படி ஏறும் வேலையே இல்லாவிட்டாலும், சும்மா ஏறி போங்கள்.

படி ஏற விரும்புங்கள்.

குப்பை போடணுமா?

வயிறு  அழுந்த குனிந்து குப்பை போடுங்கள்.

வீடு கூட்டணுமா?

வயிறு அழுந்த குனிந்து கூட்டுங்கள்.

மெனக்கெட்டு,

அக்கறை எடுத்து,

மிகவும் முக்கியமாக விருப்பப்பட்டு,

வீட்டு வேலைகளை அன்றாடம் செய்யுங்கள்.

மேலே சொல்லப்பட்டவை அனைத்தும் மிகவும் சுலபமான வழிமுறைகள்.

எந்த செலவும் இல்லை. 

ஒரு மாதம் செய்து பாருங்கள்.

உடல் எடை வித்தியாசம் தெரியும்.

ஆனால், யாரும் செய்ய மாட்டீர்கள் என்று தெரியும்.

காரணம், அவை சவால் இல்லை.

பெருமைப் பட எதுவும் இல்லை.

காசு செலவு இல்லை.

மாறாக,

சுய கட்டுப்பாடு அவசியம்.

வாயை கட்டணும்.

மெனெக்கெட்டு நடக்கணும்.

இதெல்லாம் ரொம்ப கஷ்டம்.

உடல் எடை குறைக்க மருந்து விற்பவர்கள் எதையும் விற்பார்கள். அவர்கள், பழைய கால மருத்துவம், நவீன மருத்துவம் என்ற பெயரில் எதையாவது நம் தலையில்  கட்டுவார்கள். முடிந்தால், மலத்தை  பாடம் பண்ணி, இது இயற்கை வைத்தியம் என்று சொல்லி நம்மை ஏமாற்றுவார்கள். எல்லாம்  ஒரே பிசினஸ் மயம்தான்.

இவர்கள் ஒரு பக்கம் என்றால், உடல் எடை குறைக்க விரும்பும் நபர்கள்,  பாடம் செய்யப்பட்ட மலத்தையும் கூட மருந்தாக எடுக்க தயார் ஆகிவிடுவார்கள். இவர்களுக்கு எப்படியாவது எடை குறைந்தால் சரி. எதை சாப்பிடுகிறோம் என்று கவலையில்லை.

மருந்து சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்றால், உலகில் ஒரு பணக்கார குண்டு நபர்களை கூட நாம் பார்க்க இயலாது. எல்லாரும் அதிக பணம் கொடுத்து, விலையுயர்ந்த மருந்து சாப்பிட்டு, சிலிம்மாகத்தான் இருப்பார்கள். ஆனால் நடைமுறையில் அப்படி எதுவும் இல்லை.

 

http://pettagum.blogspot.ca/2012/07/blog-post_5196.html

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எங்கப்பா உந்த பிள்ளைகள் வேலை செய்யுது  வேலை செய்தா இந்த பிரச்சினை வராதே அந்த நாள்களில் ஆச்சி உடுப்பை கழுவி அதை படியில அடிச்சு .,குடத்தை தூக்கு தண்ணி சுமந்து ,விறகை கொத்தி இப்படி பல வேலை செய்ததனால்தான் நாங்க அம்பதுலையும் நாங்களலெல்லாம் கம்பு மாதிரி திரியுறம் :D

இப்ப எங்கப்பா உந்த பிள்ளைகள் வேலை செய்யுது வேலை செய்தா இந்த பிரச்சினை வராதே அந்த நாள்களில் ஆச்சி உடுப்பை கழுவி அதை படியில அடிச்சு .,குடத்தை தூக்கு தண்ணி சுமந்து ,விறகை கொத்தி இப்படி பல வேலை செய்ததனால்தான் நாங்க அம்பதுலையும் நாங்களலெல்லாம் கம்பு மாதிரி திரியுறம் :D

உண்மை முனிவர். உடம்பை முறித்து வேலை செய்வது இப்ப பசன் இல்லை .

பிறகு மருத்துவர் கொலச்ட்ரோல் எண்டு சொல்ல பாய்ந்தடித்து மாதம் 50 டொலர் குடுத்து சைக்கிள் ஓடுவினம், நிண்ட இடத்தில நடப்பினம்.:)

  • 1 year later...

முப்பது வருட கால ஆய்வுகளின் அடிப்படையில் மைகல் மோஸ்லி (Michael Mosley) அவர்களால் BBC Horizon நிகழ்ச்சிக்காக தொகுக்கபட்டது.

சுருக்கமாக சொன்னால் வெள்ளி செவ்வாய் கிழமைகளில் உபவாசம் இருங்கள். உபவாசம் இருக்கும் தினங்களில் இருவு நேரம் மட்டுமே உணவை உட்கொள்வீர்கள் அதன் போது கூட சாதாரண அளவை விட மூன்றில் இரண்டு பகுதியையே உட்கொள்ளுங்கள். 

பகல் வேளைகளில் கோப்பியோ தேனீரோ குடிக்கலாம் அண்ணலும் இனிப்பை தவிருங்கள், ஓரிரு பழங்களை உண்ணலாம்.

ஏனைய நாட்களில் விரும்பியதை சாப்பிடுங்கள். 

இதனால் வரும் மருத்துவ நன்மைகள் மிகவும் அதிகம், கொழுப்பு மாத்திரம் இல்லை பலவகையான வயோதிப கால வருத்தங்கள் மற்றும் நீண்ட ஆயுளையும் தரவல்ல அரிய வாழ்கை முறை.

 

 

Life span extended in the depression of the 1930s despite people having less to eat. And rats on a calorie restricted diet lived 50% longer than the controls. Calorie restriction is the only thing that significantly extends life in mammals. We evolved in periods of feast and famine. Our current lifestyle is one long feast. Our body chemistry switches when we fast, to a condition different from when we eat three meals a day. It seems there are benefits. In the filmEat, Fast and Live Longer, Michael Mosley explores the latest biochemical research and tries the various diets. He self-tested on a four-day fast. Then he tried alternate day fasting and a fast of two days. Now he regularly fasts one day each week.

http://www.abc.net.au/radionational/programs/scienceshow/eat-fast-and-live-longer/4649612#transcript

 

 

 

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

அடிவயிறு, மேல்வயிறு, வாய் முதற்கொண்டு எல்லாயிடத்திலும் கொழுப்பே இல்லாதவர்களுக்கு  கொழுப்பை ஏற்ற ஏதாவது வழியுண்டா? :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

சைவ ஆக்கள் கிழமையிலை இரண்டு மூண்டுதரம் அப்பு ஆச்சியை நினைச்சு விரதம் இருந்தால் நக்கலுக்கு பஞ்சமில்லை. :(

அதை மாத்தி ஜிம் எண்டு ஒரு வெள்ளைக்காரன் சொல்லிட்டான் எண்டால்......:o

சொல்லி வேலையில்லையப்பா:lol:

 

சைவ ஆக்கள் கிழமையிலை இரண்டு மூண்டுதரம் அப்பு ஆச்சியை நினைச்சு விரதம் இருந்தால் நக்கலுக்கு பஞ்சமில்லை. :(

அதை மாத்தி ஜிம் எண்டு ஒரு வெள்ளைக்காரன் சொல்லிட்டான் எண்டால்......:o

சொல்லி வேலையில்லையப்பா:lol:

வெள்ளைக்காரன் எப்போதோ சொன்னதை உங்கள் பாடப்புத்தகத்தில் படித்திர்ர்கள் இப்போது சொனதை உங்கள் வம்சங்கள் படுக்கும்.

அதையும் சொல்லி சிரிச்சு ஒரு கூட்டம் அதுக்கு விசிலடிக்க இன்னொரு கூட்டம்.

 

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பதிவை, இது வரை.... 36,277 பேர் பார்வையிட்டுள்ளார்கள்.
பலருக்கு... அடி வயிற்றில், கொழுப்பு தங்கி.... பிரச்சினை கொடுக்குது போல் தெரிகின்றது.:)

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொப்பையை குறைக்க மிக சிறந்த வழிகள் .

தொப்பையில்லாத வயிற்றுடன் இருப்பது நேர்மறையான எண்ணங்கள் மற்றும் உடல் மொழியை வெளிப்படுத்தும் சிறந்த வழிகள் என்பதை ஆண்கள் யாரும் மறுக்கப் போவதில்லை. அது ஆரோக்கியமான எண்ணங்களை உருவாக்கி, மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் உங்களையும் கொண்டு சேர்க்கும். ஒரு பெரிய தொப்பையுடன் இருக்கும் ஆணை பொதுவாக யாரும் விரும்பமாட்டார்கள்.

அர்ப்பணிப்பு உணர்வும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் நமக்கு தொப்பையை குறைத்து அழகான வயிற்றைத் தரும். எந்த ஒரு மனிதரும் நல்ல உடலமைப்பையும், தட்டையான வயிற்றையும் வைத்திருப்பது பலரை கவரக் கூடியதாக இருக்கும்.
ஒருவேளை உங்களுக்கு நடுத்தர அளவில் தொப்பை இருந்தாலோ, மிகவும் பெரிதாக தொப்பை இருந்தாலோ அந்த கொழுப்பை குறைக்க இப்போதே முயற்சிக்க வேண்டியது அவசியமாகும். முதலில் எளிய முறையில் முயற்சியைத் துவங்க வேண்டும். எளிய முறையில் அட்டவணையிட்டு உணவுமுறைகளில் கட்டுப்பாட்டையும் மற்றும் எளிய உடற்பயிற்சிகளையும் துவங்க வேண்டும்.

பயிற்சியின் நேரத்தை நாட்கள் செல்ல செல்ல அதிகரித்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்யும் போது உங்கள் உடம்பில் ஏற்படும் மாற்றங்கள் கொழுப்பு கரைந்த தன்மையை உணரும் போது உங்களுக்குள் ஒரு புத்துணர்வை நீங்கள் உணருவீர்கள். உங்கள் உடம்பும் ஆரோக்கியமாக மாறுவதை உணருவீர்கள்.
கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை குறைத்து ஊட்டச்சத்து நிறைந்த பிற உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பது சிறந்தது. உடலில் உள்ள கொழுப்பை குறைத்து மெல்லிய உடலை கொண்டு வரும் பல உணவு வகைகள் உள்ளன. வெள்ளை அரிசியைத் தவிர்த்து பழுப்பு அரிசியை பயன்படுத்தும் நேரம் வந்துவிட்டது. பழுப்பு அரிசியும், கோதுமை ரொட்டியையும் உண்டால் உங்கள் உடலுக்கு மெதுவாகவும் நிலையாகவும் சக்தி கிடைக்கின்றது. இதனால் பசி வருவதையும் தள்ளிப் போடலாம். முட்டையின் வெள்ளை கரு பகுதியை காலை உணவுடன் உண்பது தொப்பையை வெகுவாக குறைக்க உதவுகின்றது.

ஆரோக்கியமான காலை சிற்றுண்டி
தட்டையான வயிற்றை பெற உங்களது முதல் வழி இதோ! முட்டையின் வெள்ளை கரு பகுதி, பிரவுன் பிரட், காய்கறிகள், பாதாம், ஓட்ஸ் ஆகியவற்றை முழு தானியங்களாக உண்ண வேண்டும். இவற்றில் உள்ள உயர்ந்த சத்துக்கள் மற்றும் கடினமான கார்போஹைட்ரேட் ஆகியவை உடம்பில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகின்றன. இதனால் தட்டையான வயிற்றைப் பெற முடியும்.

தேவையான அளவு தண்ணீர்
பெரும்பாலான ஆண்கள் ஒரு நாளைக்கு போதுமான அளவு தண்ணீரை குடிப்பதில்லை. நமது உடம்பை சுத்தப்படுத்தும் சக்தி தண்ணீருக்கு மட்டும் தான் உண்டு. உடம்பில் உள்ள தேவை இல்லாத கழிவுகளை வெளியே அனுப்பும் சக்தி கொண்ட பொருள் தண்ணீராகும். மீதமுள்ள மற்றும் செரிக்க முடியாத உணவு பொருட்களையும் தண்ணீர் வெளியே அனுப்பிவிடும். இத்தகைய செயல்களால் கொழுப்பு உடம்பில் சேர்வதை தவிர்க்க முடியும்.

தினசரி உடற்பயிற்சி
எளிமையான முறையில் ஓடுவது அல்லது நடப்பது போன்ற பயிற்சிகளை உடனடியாக ஆரம்பிப்பது நல்லது. உங்கள் மனதை இதற்காக தயார் செய்து கொள்வது நல்லது. இன்னொரு நாள் இதை செய்யலாம் என்று தள்ளிப் போட போட நம்மால் இத்தகைய செயல்களை செய்யாமல் போய் நம் முயற்சியில் தோற்றுவிடுவோம். 20 நிமிடங்கள் கார்டியோ மற்றும் 20 நிமிடம் கீழ் வயிற்றை குறைப்பதற்கான பயிற்சிகளை மேற்கொண்டால் சில மாதங்களிலேயே மெல்லிய இடையை பெற முடியும்.

முழு தானியங்கள்
உணவு முறையைப் கவனிக்கும் போது காலை நேரங்களில் முழு தானியங்களை பயன்படுத்துவது மிகவும் அவசியமானதாக இருக்கின்றது. பழுப்பு அரிசி, கோதுமை, ஓட்ஸ், ஆகிய தானியங்களை உண்பது சிறந்தது. இவை மிகவும் சக்தி வாய்ந்தவையாகவும், உடம்பில் இருக்கும் சக்தியை மெது மெதுவாக பயன்படுத்தவும் உதவுகின்றன. இதனால் நாம் வேகு நேரத்திற்கு பசியின்றி இருக்கக்கூடும். இதனால் நாம் உண்ணும் உணவின் அளவு குறையும்.

சீக்கிரம் இரவு உணவை உண்பது
தட்டையான வயிற்றுப் பகுதியை பெற இதுவும் ஒரு முக்கியமான செயலாகும். படுக்கைக்கு போவதற்கு 3 மணி நேரத்திற்கு முன் உணவை உண்டால் அவை படுப்பதற்கு முன்பே செரித்துவிடும். இதனால் படுக்கும் போது வயிற்றில் செரிக்கப்படாத உணவேதும் இருக்காது. இவ்வாறு செரிக்கப்படாத உணவு வயிற்றிலேயே இருந்தால் அவை அதிக அளவு கொழுப்பை நமது வயிற்றுப்பகுதியில் சேர்த்து விடும் மற்றும் தொப்பையை உண்டாக்கும்.

பழங்கள் மற்றும் உலர் பழங்கள்
தட்டையான வயிற்றை பெறுவதில் பழங்கள் மிகவும் முக்கியமான பங்கை வகிக்கின்றன. இவை நல்ல செரிமானத்தை உண்டாக்கி, மலச்சிக்கல்களை தவிர்த்து, கொழுப்பு நிறைந்த உணவை உண்ட பின் குறைந்த கலோரிகள் நிறைந்த பிறசேர்க்கை உணவாக நமக்கு பயன்படுகின்றன. அந்தந்த காலத்தில் நமக்கு கிடைக்கும் பழங்களை நாம் உண்பதன் மூலம் நமக்கு தேவையான நார்ச்சத்தும் கிடைக்கின்றது. அதுமட்டுமின்றி உடலில் நல்ல செரிமானம் ஏற்பட்டு கழிவுகளை எளிதாக வெளியேற்றவும் முடிகின்றது.

 

http://www.ltamil.com/archives/3484


"தட்டையான வயிற்றை பெற உங்களது முதல் வழி இதோ! முட்டையின் வெள்ளை கரு பகுதி, பிரவுன் பிரட், காய்கறிகள், பாதாம், ஓட்ஸ் ஆகியவற்றை முழு தானியங்களாக உண்ண வேண்டும். இவற்றில் உள்ள உயர்ந்த சத்துக்கள் மற்றும் கடினமான கார்போஹைட்ரேட் ஆகியவை உடம்பில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகின்றன. இதனால் தட்டையான வயிற்றைப் பெற முடியும். "

இந்த தட்டையான வயிறும் ஒரு பிரச்சனை, மகள் கேக்கிறாள் எனப்பா உங்களுக்கு இன்னும் வயிறு வைக்கவில்லை மற்றவர்களைப்போலவென்று. நானும் தான் சாப்பிட்டுப்பார்க்கின்றேன். 100% உள்ளே 100% வெளியே, இதுதான் எனக்கு நடக்கின்றது.

போத்தல் போத்தலாக பியர் அடித்துப்பார்த்தும் வேலை செய்யவில்லை, எங்கேயோ பிரச்சனைtw_blush:

 

  • கருத்துக்கள உறவுகள்

இது ஓகேவா :grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொழுப்பைக் குறைக்க கொழுப்பை சாப்பிடு - இதுதான் பேலியோ டயட் !


  •  

IMG9190.jpg

இப்போது தமிழ் இணைய உலகைக் கலக்கிக்கொண்டிருக்கும் புதிய வகை உணவு முறை பேலியோ டயட். ‘நான் பேலியோ டயட் ஃபாலோ பண்றேன். இரண்டே மாதத்தில் 25 கிலோ எடை குறைந்துவிட்டது’ என பலரும் புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்வதைப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. இதற்கு என்றே உள்ள ’ஆரோக்கியம் நல்வாழ்வு’ என்ற ஃபேஸ்புக் குழு பயங்கர ஆக்டீவாக இயங்கி வருகிறது. 

ஒவ்வொருவரும், ’நான் இன்று இந்த உணவை சாப்பிட்டேன், நான் இத்தனை கிலோ எடை குறைந்துள்ளேன், பேலியோவுக்கு மாறிய பிறகு எனக்கு இருந்த பி.பி. போய்விட்டது’ என அதில் தங்கள் அனுபவங்களை உற்சாகமாகப் பதிவிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ’பேலியோவுக்கு முன், பேலியோவுக்குப் பின்’ என அவர்கள் பதிவிடும் புகைப்படங்களைப் பார்த்தால், ஏதோ அதிசயம் போல இருக்கிறது. 

உடல் எடை மட்டுமல்ல, அவர்களின் தோற்றப் பொலிவு பெற்று, வயதே குறைந்ததுபோல் இருக்கிறார்கள். No carb no sugar என்பதுதான் பேலியோவின் அடிப்படை. அதாவது கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை உணவுகளை அடியோடு தவிர்ப்பது. இது இரண்டையும் தவிர்த்துவிட்டால் வேறு எதை சாப்பிடுவது? ‘முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து சாப்பிடுங்க’ ‘கொழுப்பை மட்டும் வாங்கிவந்து ஃப்ரை பண்ணி சாப்பிடுங்க’ என்கிறார்கள். கேட்பதற்கே வித்தியாசமாக இருக்கிறது இல்லையா? 

பொதுவாக கொழுப்பைத் தவிர்க்கச் சொல்லிதான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இவர்கள் கொழுப்பை மட்டுமே சாப்பிடுங்கள் என்று சொல்வது ஏன்? ஏனென்றால் நம் உடம்பில் அளவுக்கு அதிகமான கொழுப்பு சேர்ந்திருக்கிறது. அதுதான் குண்டாக இருக்கக் காரணம்.

Paleo-diet.jpg

இந்தக் கொழுப்பு சேரக் காரணம், நாம் சாப்பிடும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட்கள். நாம் கார்போஹைட்ரேட்டை தவிர்க்கும்போது, நம் உடம்பு அதை தேட ஆரம்பிக்கிறது. அப்போது, உடம்பில் சேர்ந்திருக்கும் கொழுப்பை எரித்துப் பயன்படுத்த தொடங்குகிறது. இதன்மூலம்தான் எடை குறைகிறது. ‘ஆனால் நாம் நேரடியாக கொழுப்பையே சாப்பிடுகிறோமே... அது என்ன ஆகும்?’ என்றால், அது கொழுப்பாக சேராது. அது நம் உடலின் அன்றாட இயக்கத்துக்குத் தேவையான சக்தியாக மாறி, எரிக்கப்பட்டுவிடும். சுருங்கச் சொன்னால், கொழுப்பைக் கரைக்க, கொழுப்பை சாப்பிட வேண்டும். முள்ளை முள்ளால் எடுக்கும் அதே டெக்னிக். 

உண்மையில் பேலியோ டயட் என்பது நவீன கால கண்டுபிடிப்பு அல்ல. இது ஆதி மனிதனின் உணவுமுறை. விவசாயம் கண்டுபிடிப்பதற்கு முந்தைய கற்காலத்தை, `பேலியோலித்திக்’ என்பார்கள். அப்போது சாப்பிட்டதைப் போல அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்களைத் தவிர்த்து, நல்ல கொழுப்பு அடங்கிய முட்டை, மீன், இறைச்சி, விதைகள், கொட்டைகள், போன்றவற்றை உண்பதே பேலியோ டயட். இது வாழ்நாள் முழுமைக்குமான ஓர் ஆரோக்கியம் தரும் உணவு முறை. எடைக்குறைப்புக்கான பிரத்தியேக டயட் அல்ல; இதைப் பின்பற்றினால் எடைக்குறைப்பு தானாகவே நிகழும். தேவையில்லாத கொழுப்பு கரைந்து, உடல் வலுவடையும்.

cablea2.jpgஇந்தமுறையில் தன் உடம்பைக் குறைத்த பிரபல இணையப் பதிவரும், திரைப்பட இயக்குநருமான கேபிள் சங்கரிடம் பேசினோம். 

‘’நான் கடந்த ஒரு வருஷமா பேலியோவை ஃபாலோ பண்றேன். 2 மாதத்தில் 91 கிலோவில் இருந்து 80 கிலோவாக எடை குறைந்தேன். எனக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருந்தது. அதுவும் கண்ட்ரோலுக்கு வந்தது. பி.பி. அளவு நார்மல் ஆனது. இப்போது சுகர் மாத்திரையை முழுமையாக விட்டுவிட்டேன். எனக்கு சுகர் பிரச்னையே இப்போது இல்லை. காலையில் கார்ப் இல்லாத காய்கறி பொரியல், பகலில் பன்னீர், பன்னீர் டிக்கா, சீஸ், சிக்கன் சூப், மட்டன் சாப்ஸ், இரவில் முட்டை, ஆஃப் ஆயில், பன்னீர், மறுபடியும் காய்கறி பொறியல் இவைதான் என்னுடைய ஒரு நாள் டயட். 

வீட்டில் இருந்து செய்து சாப்பிடுவர்களுக்கு இது பிரச்னை இல்லை. என்னை மாதிரி வெளியில் சுற்றுபவர்களுக்கு இது ஒரு பிரச்னைதான். ஒரு ஹோட்டலுக்கு சென்று டேபிளில் அமர்ந்தால் சர்வர் வருவார். அவரிடம், ‘நாலு ஆம்லேட்’ என்றால் ஒரு மாதிரி பார்ப்பார். அதை முடித்து, ‘ரெண்டு அவிச்ச முட்டை’ என்றால் இன்னும் ஒரு மாதிரிப் பார்ப்பார். பொறியல்தான் இன்றைய இரவு உணவு என்று முடிவு செய்துவிட்டால் நேராக சரவண பவன் போவேன். அங்கே கால் கிலோ பொறியல் 30 ரூபாய்க்கு பார்சல் தருவார்கள். அதை அங்கேயே உட்கார்ந்து சாப்பிடுவேன். ஆரம்பத்தில் வித்தியாசமாகப் பார்த்தார்கள். இப்போது அவர்களே பழகிவிட்டார்கள். எனக்கும் ஒரு மாதிரி செட்டாகிவிட்டது.’’ என்கிறார்.

விகடன்.காம்

  • கருத்துக்கள உறவுகள்

போலியோ டயட் பற்றிய முழுமையான இணைப்பை கறுப்பி இணைத்திருந்தார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ரதி said:

போலியோ டயட் பற்றிய முழுமையான இணைப்பை கறுப்பி இணைத்திருந்தார்

மன்னிக்கவும் அந்த திரியை காணவில்லை அதனால்தான் தனி திரி தொடங்காமல் இங்கு கொண்டு வந்து ஒட்டினன் நிர்வாகம் இதை அங்கு கொண்டு நகர்த்தும் என நினைக்கின்றன் போலியோ டயட் பற்றி இங்கு விகடன் சொல்லுது அவ்வளவுதான் வித்தியாசம் .

  • கருத்துக்கள உறவுகள்

தினமும் 10,000 வார்க் போங்க.. அடிவயிற்றில்.. ஒரு மண்ணாங்கட்டியும் தங்காது. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

10,000 ஆயிரமா? அம்மாடியோ எவ்வளவு நேரம் எடுக்கும் நடக்கிறத்திற்கு

  • கருத்துக்கள உறவுகள்

1.89 மைல்கள் தான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.