Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முருகன், சாந்தன் பேரறிவாளன் நிரபராதி தமிழர்கள் மூவரும் விடுதலை. நளினியும் விடுதலை. தமிழக அரசு முடிவு. முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் காந்தியுடன் இருந்த அப்பாவி பொதுமக்கள் இறந்துள்ளார்கள், அப்பாவி காவலர்கள் இறந்துள்ளார்கள்.. அவர்களும் மனிதர்கள்தானே - ஞான தேசிகன் அட -----.. அததான் நாங்களும் பல வருடமா சொல்றோம், ராஜீவ்காந்திய தவிர ஒரு காங்கிரஸ் பொறுப்பாளர்கள் கூட சாகல----.. முக்கியமா --, மூப்பனார், சிதம்பரம், இ.வி.கே.எஸ்.இளங்கோவன்... வழக்கை மறு விசாரணை பண்ணுவோமா???? உன் பங்காளி சு.சாமிக்கும் சொல்லி அனுப்-- :D

Edited by நிழலி
ஒருமையிலமைந்த சொற்கள்

  • Replies 82
  • Views 5.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Point 1: The state govt is stipulated to act "after consultation with Central govt". 
 
Point 2: The power to commute sentences or order for release granted to the state govts. under Section 432 =>shall not be exercised by the state govts' except after 
consultation<= with the Central govt.
 
Point 3: If a case is related to the executive power of the central govt. the state govts. can exercise its power under Section 432 =>on the condition that such remission or commutation has also been made by the central govt.<=
 
So practically, J has no power to release the "seven" in this case. She has played a masterful political gimmick! 
 
thanks - Muralikrishnan Chinnadurai

http://indiankanoon.org/doc/398156/

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் கொலை வழக்கு: உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்பதாக கபில் சிபல் கருத்து

 

 

 கபில் சிபல்.

ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகள் மூவர் தூக்கு தண்டனையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பை மத்திய அரசு ஏற்று நடக்கும் என கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவர் மீதான தூக்கு தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் செவ்வாய்க் கிழமை தீர்ப்பளித்தது.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது: "ராஜீவ் காந்தி கொலையில் ஈடுபட்டவர்களுக்கு எவ்வித சலுகையும் அளிக்கப்படக் கூடாது என்பதே அட்டர்னி ஜெனரலின் வாதமாக இருந்தது. ஆனால் தற்போது நீதிமன்றம் ஒரு முடிவை எடுத்து தீர்ப்பை அறிவித்துள்ளது. விருப்பம் இருக்கிறதோ இல்லையோ நீதிமன்ற தீர்ப்பை மதித்து நடந்தாக வேண்டும். எனவே மத்திய அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று நடக்கும்" என்றார்.

 

பாஜக மவுனம் ஏன்?

அப்சல் குரு தூக்கிலிடப்பட வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வந்த பாஜகவினர் ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்காததன் காரணம் ஏன், என்று கபில் சிபல் கேள்வி எழுப்பினார்.

 

மேலும், அப்சல் குரு தூக்கு தண்டனை நிறைவேற்ற காலம் தாழ்த்தப்பட்ட போது அரசு தீவிரவாதத்தை ஒடுக்குவதில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என விமர்சித்த பாஜக இப்போது ஏன் ராஜீவ் கொலை வழக்கு தீர்ப்பில் மட்டும் மவுனத்தை கடைபிடிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

 

http://tamil.thehindu.com/india/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/article5705588.ece?homepage=true


ஏழு பேரையும் விடுவிப்பது போட்டி அரசியலே: ஞானதேசிகன்

 

 

 ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரையும் விடுதலை செய்வது என்ற முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசின் முடிவு, போட்டி அரசியலின் விளைவு என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று சென்னை சத்திய மூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் கூறியது:

 

"தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் ராஜீவ் காந்தி கொலையில் குற்றம்சாட்டப்பட்டு, தண்டிக்கப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்வதாகவும், மத்திய புலனாய்வுத் துறை விசாரித்த வழக்கு என்பதால் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

 

ராஜீவ் காந்தி கொலை என்பது தேசத்தின் மிகப் பெரிய தலைவரை இலங்கை மண்ணில் சதி செய்து, இந்தியக் குடிமக்கள் அல்லாத விடுதலைப் புலி உறுப்பினங்கள் இங்குள்ள சில பேரின் துணையோடு ஸ்ரீபெரும்புதூரில் நிறைவேற்றப்பட்ட நிகழ்வாகும்.

மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 150 பேருக்கு மேல் சுட்டுக் கொன்றுவிட்டு, அதில் கசாப் மட்டும் பிடிபட்டு, அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. டெல்லி பேருந்தில் ஒரு பெண் கொடூமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, உயிரிழந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. கோவையில் பள்ளிச் செல்கிற சிறுமி மற்றும் அவருடைய தம்பியைக் கடத்திச் சென்று, அந்தச் சிறுமியை சீரழித்து அவரது தம்பியைக் கொன்று ஆற்றில் தூக்கிப் போட்டதும் ஒரு தமிழன் தான்.

ஒரு கொலை என்பது கொடூரமானது. ஆனால் தமிழகத்தில் ராஜீவ் கொலையை அரசியலாக்கி, அதன் மூலம் ஒரு தமிழ் இன உணர்வை பயன்படுத்த சில பேர் முயல்கிறார்கள். மத்திய அரசு என்ன செய்ய வேண்டும் என்பது மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே உள்ள பிரச்சினை.

 

ஆனால், 3 பேர் விடுதலை செய்யப்பட்டால் மகிழ்ச்சி என்று சொன்னால், அந்த 3 பேர் என்ன, 7 பேரையும் விடுதலை செய்கிறேன் என்று தமிழக அரசு எடுத்த முடிவு தமிழகத்தில் நடக்கின்ற போட்டி அரசியலின் விளைவே" என்றார் ஞானதேசிகன். 

 

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/article5706109.ece?homepage=true

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தடுத்து நல்ல செய்திகள்.அரசியலில் ஜெயலலிதா மிகவும் தேறிவிட்டார்.காங்கிரஸ் இனி தலை நிமிர்த்த முடியாது.விடுதலைக்கு உறுதுணையாக நின்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!!!

காலம் கடந்திருந்தாலும், மிக்க மகிழ்ச்சியான செய்தி.

இதற்காக உழைத்த அனைவரும் போற்றப்பட வேண்டியவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைக்குப்பின் முருகன், நளினி லண்டன் செல்ல முடிவு!

 

 

வேலூர்: சிறையில் இருந்து விடுதலையான பின்பு  தங்களது மகளுடன் சேர்ந்து வாழ்வதற்காக  முருகனும், நளினியும் லண்டன் செல்ல விரும்புவதாக அவர்களது வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.


வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன் மற்றும் நளினியை அவர்களது வழக்கறிஞர் புகழேந்தி இன்று சந்தித்துப் பேசினார்.

அதன் பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், ''சிறையில் முருகனும், நளினியும் முதல்வரின் அறிவிப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முதல்வருக்கு தங்களது மனதார நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக கூறினர்.

இவ்வழக்கானது சி.பி.ஐ. விசாரித்த வழக்கு என்பதால், முருகன், நளினிnalini%20150%281%29.jpg உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வதற்கு மத்திய அரசின் ஒப்புதல் தேவைப்படுகிறது. அதற்கான அறிவிப்புகள் இன்னும் 3 நாட்களில் வெளிவரும்.

ஒருவேளை மத்திய அரசு ஒப்புதல் கொடுக்காத பட்சத்தில் தமிழக அரசு, கேபினட் மீட்டிங்கை கூட்டி மத்திய அரசின் ஒப்புதல் இன்றி தமிழக ஆளுநர் ஒப்புதலோடு 7 பேரையும் விடுதலை செய்வதற்கான முயற்சிகளை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

சிறையிலிருந்து வெளிவந்த பிறகு லண்டனில் உள்ள தங்களது குழந்தை அரித்ராவுடன் வாழ வேண்டும் முருகனும், நளினியும் ஆசைப்படுகின்றனர். தாங்கள் விடுதலையான பின்பு அவர்கள் வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள்'' என்றார்.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=24771

  • கருத்துக்கள உறவுகள்

ஆர் குத்தியும் அரிசியானால் சரி...! மிகவும் மகிழ்ச்சியான செய்தி...! :D

  • கருத்துக்கள உறவுகள்

7 பேர் விடுதலை: தமிழக அரசின் கடிதம் கிடைக்கவில்லை-ஷிண்டே தகவல்!

 

புதுடெல்லி: 7 பேரை விடுவிப்பது தொடர்பான தமிழக அரசின் கடிதம் இதுவரை கிடைக்கவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறினார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்ட முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை குறைத்து, ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. மேலும், அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு செய்யலாம் எனவும் தீர்ப்பளித்தது.

இதைத் தொடர்ந்து, பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்யப்படுவார்கள் என்று  முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் அறிவித்தார். இதற்கான பரிந்துரை கடிதமும் உடனடியாக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறும்போது, ''7 பேரை விடுவிப்பது தொடர்பான தமிழக அரசின் கடிதம் இதுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை. தமிழக அரசின் கடிதம் கிடைத்த பின்னரே அதுகுறித்த முடிவுகள் எடுக்கப்படும்'' என்றார்.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=24772

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தடுத்து நல்ல செய்திகள்.அரசியலில் ஜெயலலிதா மிகவும் தேறிவிட்டார்.காங்கிரஸ் இனி தலை நிமிர்த்த முடியாது.விடுதலைக்கு உறுதுணையாக நின்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!!!

 

கட்டு மரம் தன்ர நரி புத்திய காட்டும் என்று தெரிந்து அம்மா எல்லாத்தையும் வேகமாக்கவே செய்யிறா...

  • கருத்துக்கள உறவுகள்

பேரறிவாளன், நளினி உள்பட 7 பேருக்கு மருத்துவ பரிசோதனை!

 

சென்னை: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பை தொடர்ந்து வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்பட 7 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார்.

இந்நிலையில், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் மற்றும் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி ஆகியோரை  அரசு மருத்துவக் குழு இன்று பரிசோதனை செய்தது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் வரும் 22ஆம் தேதி அவர்கள் அனைவரும் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=24744&r_frm=news_related

  • கருத்துக்கள உறவுகள்

ஏழு பேரையும் விடுவிப்பது போட்டி அரசியலே: ஞானதேசிகன்

ஓ.. :huh:

  

ராஜீவ் காந்தி கொலை என்பது தேசத்தின் மிகப் பெரிய தலைவரை இலங்கை மண்ணில் சதி செய்து, இந்தியக் குடிமக்கள் அல்லாத விடுதலைப் புலி உறுப்பினங்கள் இங்குள்ள சில பேரின் துணையோடு ஸ்ரீபெரும்புதூரில் நிறைவேற்றப்பட்ட நிகழ்வாகும்.

ம்ம்ம்.. ரைட்டு.. :blink:

 

மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 150 பேருக்கு மேல் சுட்டுக் கொன்றுவிட்டு, அதில் கசாப் மட்டும் பிடிபட்டு, அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. டெல்லி பேருந்தில் ஒரு பெண் கொடூமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, உயிரிழந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. கோவையில் பள்ளிச் செல்கிற சிறுமி மற்றும் அவருடைய தம்பியைக் கடத்திச் சென்று, அந்தச் சிறுமியை சீரழித்து அவரது தம்பியைக் கொன்று ஆற்றில் தூக்கிப் போட்டதும் ஒரு தமிழன் தான்.

சரிங்க.. :mellow:

 

ஒரு கொலை என்பது கொடூரமானது.

தெய்வமே... :huh:

9-6-2013+12-23-29+PM.png

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க மகிழ்ச்சியான செய்திகள்! பரபரப்பைப் பார்த்து மூன்று நாட்களுக்குள்ளாகவே மத்திய அரசு விடுதலைக்குத் தடை போட்டு உத்தரவு அனுப்புமோ என்ற பயம் தான் வாட்டுகிறது!கடவுளின் கரங்கள் வலிமையாகச் செயல் பட்டு மனிதனின் சதிகளை உடைக்கட்டும்! நளினி முருகன் அரித்திரா உட்பட எல்லாரும் மீண்டும் மகிழ்ச்சியாக புதியதொரு உலகின் மூலையில் வாழ்வை மீள ஆரம்பிக்கட்டும்! இதுவே பிரார்த்தனை!

இது தான் உண்மை... அந்த ------ தானும் ஒரு ஆள் என்று இப்ப அறிக்கை விடுது....கட்டு மரத்தை இப்ப ஒருதரும் மனிசரா மதிக்கிறது இல்லை...

 

தூக்கு தண்டனை ரத்து என்றதும் தனது முயற்சியால் தான் நடந்தது என ஏற்கனவே அறிக்கை விட்டவர் கருணாநிதி. :huh: அந்தாள் திருந்தாது. நேற்றைய செய்தியை வாசித்து பாருங்கள். :o

 

மூவர் தூக்கு தண்டனை ரத்து தீர்ப்பு - திமுக முயற்சிக்கு கிடைத்த வெற்றி: கருணாநிதி

 

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிக்கள் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டிருப்பது திமுக எடுத்த முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி என அக்கட்சித் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: " டெசோ கூட்டங்களின் வாயிலாகவும் - பிரதமருக்கு எழுதிய பல்வேறுகடிதங்களின் வாயிலாகவும் - விடுத்த ஏராளமான அறிக்கைகளின் மூலமாகவும் - இறுதியாக திருச்சியில் நேற்று முன் தினம் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் பத்தாவது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஒரு வெற்றியாக - உச்ச நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பின் மூலம் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கு வாழும் உரிமை கிடைத்திருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

 

இன்று நேற்றல்ல! கடந்த பல ஆண்டுக் காலமாகவே நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தூக்குத் தண்டனையே ரத்து செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறேன். என் தலைமையிலே கழக ஆட்சி இருந்த போது நான் எடுத்த முயற்சியாலும், நான் கொடுத்த வேண்டுகோள்களின் அடிப்படையிலும் தூக்கு தண்டனையிலிருந்து விடுபட்ட தியாகு, கலியபெருமாள், நளினி ஆகியோரைப் போல இன்றைக்குத் தூக்குத் தண்டனையிலிருந்து விடுபட்டுள்ள சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய இந்த மூவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

இந்தச் சிறப்பான தீர்ப்பினைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையை ஏற்று, இவர்கள் ஏற்கனவே இதுவரை அனுபவித்த தண்டனைக் காலத்தினை மனதிலே கொண்டு, உடனடியாக அவர்களை மத்திய, மாநில அரசுகள் விடுதலை செய்ய வேண்டுமென்று வலியுறுத்துவதோடு, அவர்கள் விடுதலை அடைவார்களேயானால் நான் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்". இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

 

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF/article5702069.ece

Edited by நிழலி
ஒருமையில் எழுதியிருந்ததை மேற்கொள் காட்டியமை நீக்கப்பட்டது

இந்த தீர்ப்பு, ஜெயலலிதாவின் விடுதலை அறிவிப்பு போன்றவற்றால் தமிழகத்தில் காங்கிரஸ் எதிர்ப்பு அலை மேலும் ஓங்கி அடிக்கப்போகின்றது. இதனால் திமுக வோ அல்லது பேரம் பேசி அதிக இடங்கள் பெறலாம் என்று நப்பாசையில் திரியும் விஜயகாந்தோ காங்கிரசுடன் இனி இந்த தேர்தலில் கூட்டணி வைக்க முடியாது. அப்படி வைத்தால் கட்டுப் பணத்தினைக் கூட பல இடங்களில் இழக்க நேரிடும்.

 

திமுக விற்கு இருக்கும் ஒரே தெரிவு விஜயகாந்த் கட்சியுடன் கூட்டு வைப்பது தான். அப்படி விஜயகாந்த் வைத்தால் 2016 சட்டசபைத் தேர்தலில் அதிமுக வை மட்டுமே எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய நிலைக்கு விஜயகாந்த் வந்து விடுவார். எதிர்க்கட்சி தலைவர் பதவி கூட கிடைக்காமல் போய்விடும். விஜயகாந்த் புத்திசாலி என்றால் திமுக வுடன் இம்முறை கூட்டணி வைக்க மாட்டார்.

 

ஆக, திமுக வும் காங்கிரசும் தேமுக வும் அந்தரத்தில் தொங்கும் நிலைதான் வந்துள்ளது.

 

ஈழத் தமிழர் ஆதரவு கட்சிகளும் அதிமுக வும் ஒரு win win situation இல் ஒன்றாகி நிற்கின்றார்கள். பார்க்கப் போனால் தமிழகத்தில் அ.தி.மு.க Vs பா.ஜ.க + மதிமுக  என்ற நிலைதான் தோற்றம் பெறப்போகின்றது. இரண்டுமே தற்போதைக்கு ஈழ ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளதால் மேலும் சில நன்மைகள் விளையலாம்.

 

இந்த நன்மையை ஈழத்தில் அறுவடை செய்யும் அரசியல் சாணக்கியம் தமிழ் தேசியக் கட்சியிடமோ அல்லது வேறு தமிழ் கட்சிகளிடமோ இல்லை என்பதுதான் கவலையான விடயம்.

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை

தமிழரின் காலம் இனி..........

ஆனால் நாம் தயாரா.............????????????????????????? :(  :(  :(

 

அத்துடன்  புலிகள்  மற்றும் தமிழர் மீதான களங்கம் துடைக்கப்படுவது மாத்திரமல்லாது

அது காங்கிரசை  நோக்கி  திருப்பப்படுகிறது

தற்பொழுது

ராஜீவ்காந்தி கொலையிலிருந்து

அப்பாவிகளை சிறையிட்ட குற்றம் வரை  காங்கிரசின் மீது விழுந்துள்ளது

இதைத்துடைக்க

காங்கிரசார் முயல்வர்

அது

போர்க்குற்றத்தை சிறீலங்காமீது பயன்படுத்த  உதவுவதாக இருக்கக்கடவது........

Edited by விசுகு

ஜெயலலிதா மிக ஆணிதரமாக் சொல்லுகின்றார் ,மத்திய அரசுடன் கலந்து ஆலோசிக்கத்தான் மூன்று நாட்கள் என்றும் அவர்களிடம் இருந்து  பதில் வருகின்றதோ  இல்லையோ அவர்களுக்கு விடுதலை நிட்சயம் என்கின்றார் .

 

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா மிக ஆணிதரமாக் சொல்லுகின்றார் ,மத்திய அரசுடன் கலந்து ஆலோசிக்கத்தான் மூன்று நாட்கள் என்றும் அவர்களிடம் இருந்து  பதில் வருகின்றதோ  இல்லையோ அவர்களுக்கு விடுதலை நிட்சயம் என்கின்றார் .

 

 

தொடர்ந்து கடிதம் போட்டுக்கொண்டிருக்க  இது கருணாநிதியல்ல  என்று  சொல்கிறார் போலும்

இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று  தான்.......

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை வைத்து காங்கிரசால் ஆடபட்ட அரசியல் சதுரங்கம் மூன்று நாள் எனும் பாசக்கயிறில் காங்கிரஸ் மத்திக்கு வீசபட்டுள்ளது. அதுவும் தேர்தல் நேரத்தில் வரம் குடுத்தாலும் அழிவு இல்லையாயினும் அழிவு காங்கிரஸுக்கு மறுப்பென்றால் தெற்க்கை மறக்க வேண்டியதுதான் தெற்க்கு சரி என்றால்  முஸ்லீம்களின் வாக்குகள் சிதறிவிடும் ஆகவே நாட்களை கடத்துவதே ஒரே வழி தற்போதைய சூழலில் அதுவும் முடியாது. எது எப்படியாயினும் காலமறிந்து நேரத்திற்க்கு தகுந்தவாறு ராஜதந்திரமாக முயற்ச்சி எடுத்த வைகோ அய்யாவுக்கு பல கோடி நன்றிகள்.

 

 தமிழுக்காக என செங்கொடி போன்றவர்கள் தம்மைதாமே மரணிக்கபன்னுவதை நிறுத்தி பல வாழ்நாள் செயற்பாடுகளை மேற்கொள்வதே மிகச்சிறந்த முடிவாகும்.  செங்கொடியின் தியாகம்   இத்தருனத்தில் அளபரியதாக உள்ளது எனினும் தமிழ் இனஅழிப்பு என எம்மெதிரிகளுக்கு நாங்களாக வழி சமைப்பதாய் இனி வரும் காலங்களில் இவற்றை தவிர்த்து செல்லல்நல்லதே.

 

இருபது வருடங்களின் பின் இந்த அநியாயமாய் குற்றம்சாட்டபட்ட ஏழு தமிழ் தியாகிகள்வாழ்க்கையை நிம்மதியாக வாழு உறுதுனையாய் இருப்போம்.

ஒற்றுமையான இந்தியாவை கருவறுக்கும் காங்கிரஸ் கட்ச்சியின் செல்வாக்கை நிமிர்த்த நடாத்தபட்ட அரசியல்கொலை சிலுவை தூக்கியது நாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஞானதேசிகன் அறிவை மெச்ச வேண்டும். மரணதண்டனைக்கென பரிந்துரைக்கப்பட்டவர்களே விடுதலை  செய்யப்படும்போது ஆயுள்தண்டனைக்கு உற்பட்டவர்களைச் சிறையில் வைத்திருப்பதா? அதனால் தான் 7 பேரின் விடுதலையும் உறுதி செய்யப்படுகின்றது. ஆனால் இந்த மனிதர் கருணாநிதி 3 பேர் விடுதலை பற்றிச் சொன்னதும், ஜெயலலிதா 7 பேரை விடுதலை செய்கின்ற அரசியல் போட்டி என்கின்றார். ஆக மொத்தம் காங்கிரஸ்காரர் அறிவு அந்தளவு தான்....

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸ், சுப்பிரமணியசாமி கோஷ்டிகள் தமிழகத்தில் அணையப்போகும் கொள்ளிக்கட்டைகள். சற்று பிரகாசமாக எரிந்துவிட்டுத்தான் அணையும்..

ஜெயலலிதா முடிவை நிராகரித்த உள்துறை அமைச்சகம்

 

ராஜீவ் கொலையாளிகளை விடுவிப்பது தொடர்பாக 3 நாட்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இது தொடர்பாக முடிவு செய்யும் உரிமை மாநில அரசிற்கு கிடையாது என்றும், மத்திய அரசிற்கே உள்ளது என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

 

http://www.dinamani.com/latest_news/2014/02/19/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-/article2066148.ece

  • கருத்துக்கள உறவுகள்
 

2059803248Nalini_RajivGandhi.jpg

விடுதலைக்கு பின் லண்டனில் வசிக்க விரும்பும் நளினி!
 
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 23 வருடம் சிறையில் இருக்கும் நளினி, இன்னும் சில தினங்களில் விடுதலை ஆகிறார். 

தற்போது வேலூர் சிறையில் இருக்கும் அவர், இந்த விடுதலை ஆகப்போகும் செய்தியை கேள்விப்பட்டதும், இனிப்புகள் வாங்கி, சக சிறைக்கைதிகளும் அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தார். 

விடுதலைக்கு பின் நளினி லண்டன் சென்று, தனது மகளுடன் தங்கியிருக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இத்தகவலை நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி நம்மிடையே தெரிவித்தார். 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்தக் காணொளி ஒன்றே சொல்கிறது.. இந்தியா ஒரு நாடு அல்ல. தமிழர்களின் உணர்வுகளுக்கு வடக்கு இந்தியாவில்.. மதிப்பும் இல்லை. இந்த நிலையில்.. தமிழக அரசின் அறிவிப்பை மத்திய ஹிந்திய காங்கிரஸ் அரசு நிராகரித்தால்.. தமிழ் நாடும்.. தமிழ் நாட்டு மக்களும் சில.. காத்திரமான முடிவுகளை எடுக்க வேண்டும். இவர்களின் விடுதலையை உறுதி செய்ய வேண்டும். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சந்தோசமான செய்தி !

ஜெயலலிதா அம்மையாருக்கு மிகவும் நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.