Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாடு அரசு முடிவை எதிர்த்து நகர்வுகள் - The Hindu

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் கைதிகளை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு எடுத்த முடிவை எதிர்த்து இந்திய மத்திய அரசு உச்ச நீதிமன்றம் நோக்கி

நகர்வுகள் மேற்கொள்ளும்.

தமிழ்நாடு அரசு அறிவித்து இருக்கும் இம் முடிவை எதிர்த்து;  இந்திய மத்திய அரசு கோரி இருக்கும் விசாரணையை விசாரிக்க

உச்ச நீதிமன்றம் ஒப்பு கொண்டுள்ளது.

கொலை குற்றம் சாட்டப்பட்ட இவர்களின் விசாரணைகள் நிலுவையில் இருக்கும் பட்சத்தில்  இவர்களை விடுதலை செய்யக்கூடாது என்றும்  மத்திய அரசு கோரியுள்ளது.

மன்மோகன் வெளியிட்ட அறிக்கை:

 

மறைந்த ஸ்ரீ ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் எழும் சட்ட அடிப்படை பிரச்சினைகளை ஆராய மத்திய அரசு;உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை அனுப்ப உள்ளது. குற்றவாளிகளை விடுதலை செய்யும் முடிவு பற்றிய அறிக்கையானது சட்டபூர்வமாக ஏற்கக்கூடியதள்ள, இது குறித்து நாங்கள் தமிழ் நாடு அரசாங்கத்‌திற்கு அறிவித்து உள்ளோம்.

திரு ராஜீவ் காந்தி படுகொலையானது இந்திய தேசியத்தின் மீதான தாக்குதல்.

இக்கொலையாளிகள் விடுதலையானது ,முன்னாள் இந்திய பிரதமர் நமது மாபெரும் தலைவர், அதே போல் பல அப்பாவி இந்தியர்கள் அனைவருக்கும் இழைக்கும் அநீதியான செயல் அதோடு இந்திய  கொள்கைக்கும் மாறாக இருக்கும். பயங்கரவாதத்திற்கு எதிரான எமது போராட்டத்தில் அரசாங்கமோ அல்லது எந்த  ஒரு காட்சியோ மென்மையான இருக்கலாகாது.

 

http://www.youtube.com/watch?v=3JL4X3C1kpo&feature=player_embedded

 

 

 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

http://tamil.oneindia.in/news/india/centre-move-sc-on-7-tamils-release-193895.html

ஏதோ தேர்தல் நெருங்கும்வரை அம்மாவை மறக்கக்கூடாது என்பது காங்கிரஸ் கேட்டு வாங்கும் விதியாக இருக்கின்றது... வாழ்த்துக்கள்!

மோடைய அரசியலில் காங்கிரஸ்.

 

இதுவரையும் கொள்ளையும், ஊழலும் தான் காங்கிரசிடம் பிரபல்யமாக இருந்தது. இப்போது மோடைய இராஜதந்திரமும் இலங்கையிடமிருந்து தொற்றியிருக்கிறது.

 

சரியாக இலங்கையில் காணப்படும் சிக்கல்களை இவர்களும் தயாரித்து இலங்கை அரசியல் வாதிகள் மாதிரியே தம்மைத்தான் மாட்டிக்கொள்கிறாகள்.

 

1.3 பில்லியன் மக்களின் நாட்டை வழிநடத்த மத்தியில் தலைவர்கள் வங்குரோத்து.  இது முசோலினியின் சிந்தனை திறனை. காட்டுகிறது. ஜெயா தமிழ் நாட்டால் காங்கிரசையும் அதன் கூட்டாளி தி.மு.க.வையும் அழித்துத் துடைத்து விடுவார். அதன் பின்னர் இவர்களுக்கு ஒரு தலைமுறை தேவைப்படும் நாரி நிமிர. 

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி விமாட்டாராம் 

 

 

நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து தார்மீக அடிப்படையில் தமிழக அரச எடுத்த முடிவு அது. தீர்ப்பில் கூட சொல்லப்பட்ட விடயந்தான் இருந்தாலும் மீதம் இருந்த அந்த நான்கு பெயரையும் தமிழக அரசு விடுதலை பட்டியலில் இனத்ததை இவர்களால் ஏற்ருக்கொள்ள முடியவில்லை.

 

இந்தியா ஒரு கோமாளி நாடு என்பதை மீண்டும் நிருபிக்கின்றது.

Edited by Sooravali

தமிழ்நாட்டு தமிழன் ஒவ்வொருவனும் கிளர்ந்து எழ வேன்டிய தருணம் இது. தமிழ் நாட்டில் காலடி வைக்கும் ஒவ்வொரு காங்கிரஸ்காரனையும் அடித்து நொருக்க வேண்டும். தமிழன் என்றால் அவ்வளவு கேணயனா?
 
மன்மோஹன் இந்திரா காந்தியை சுட்ட சீக்கியனுக்கு தியாகி பட்டம் கொடுக்கும் நிகழ்வுக்கு போய் உரையாற்றுவாராம். அப்ப கேடு கெட்ட இந்திய தேசியத்திற்கு ஒன்றும் ஆகாதாம். எமது தமிழ் நிரபராதிகளை விடுவித்தால் தான் இந்திய தேசியத்திற்கு ஆபத்து வந்து விடுமாம். ஒன்று மட்டும் நிச்சயம் காங்கிரஸ்காரனுக்கு அழிவுகாலம் ஆரம்பித்து விட்டது. இனி தமிழ்நாட்டில் காங்கிரஸ்காரன் தலை நிமிர முடியாது. சோனியாவுக்கு அதைப்பற்றி அக்கறை இல்லை. அடித்த காசுடன் இத்தாலிக்கு மூட்டை கட்டிவிடுவா. 

 

தமிழ்நாட்டு தமிழன் ஒவ்வொருவனும் கிளர்ந்து எழ வேன்டிய தருணம் இது. தமிழ் நாட்டில் காலடி வைக்கும் ஒவ்வொரு காங்கிரஸ்காரனையும் அடித்து நொருக்க வேண்டும். தமிழன் என்றால் அவ்வளவு கேணயனா?
 
மன்மோஹன் இந்திரா காந்தியை சுட்ட சீக்கியனுக்கு தியாகி பட்டம் கொடுக்கும் நிகழ்வுக்கு போய் உரையாற்றுவாராம். அப்ப கேடு கெட்ட இந்திய தேசியத்திற்கு ஒன்றும் ஆகாதாம். எமது தமிழ் நிரபராதிகளை விடுவித்தால் தான் இந்திய தேசியத்திற்கு ஆபத்து வந்து விடுமாம். ஒன்று மட்டும் நிச்சயம் காங்கிரஸ்காரனுக்கு அழிவுகாலம் ஆரம்பித்து விட்டது. இனி தமிழ்நாட்டில் காங்கிரஸ்காரன் தலை நிமிர முடியாது. சோனியாவுக்கு அதைப்பற்றி அக்கறை இல்லை. அடித்த காசுடன் இத்தாலிக்கு மூட்டை கட்டிவிடுவா. 

 

கூல்டவுன் சீமான்,

 

பொறுத்திருந்து பாருங்கோ... அனேகமாக இந்த வழக்கு பெரிய மாற்றத்தை கொண்டுவராது என்பது எபதே அனுமானம். 

 

அப்படி இல்லாவிட்டால் நடந்து முடிந்த எல்லா விடங்களையும் கூட்டிப்பார்த்தால் ஒரு கோமாளி கூத்து மாதிரித்தான் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் நாடகம்தான். எங்களால் முடிந்த அளவுக்குப் போராடினோம் என்று ஹிந்தியர்களுக்கு காட்டுவதற்கு..

மறந்து போன ரஜீவை முதன்மைப்படுத்துவது ஊழலால் மதிப்பிழந்த காங்கிரசுக்கு வடக்கில் எதாவது நன்மையைச் செய்யுமா தெரியாது. அது போக காங்கிரஸ் தேர்தலின் முன்னர் சிங்களத்தை எதிர்த்து தமிழரை ஐ.நா. பிரேரணையில் வாக்களிக்கவும் வேண்டிய கட்டமும் வரலாம். ஆனால் இதை செய்வதாலும், தேர்தல் வரையும் விடுதலையை தாமதப்படுத்துவதாலும் காங்கிரஸ் தனக்கும், பழைய கூட்டு தி.மு.கவுக்கும் பாரிய கேடு செய்கிறது. தேரதலின் பின்னர் யார் வந்தாலும் அவர்கள் வெளியே வருவதைத் தடுக்க முடியாது.

அனைத்து தடைகளையும் மீறி விரைவில் விடுவிக்கப்பட வேண்டும்.

தமிழக முதலமைச்சர் இது நடக்கும் என்று எதிர் பார்த்து தான்  உடனடியாக   முடிவு எடுத்திருந்தார்.

 

அவரும் சட்ட ஆலோசகர்களுடன்  விவாதிக்காமல் முடிவு எடுத்திருக்க மாட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப பார்க்க போனால் இந்தியாவில் அம்மாவை விட சிறந்த அரசியல்வாதி இல்லை போல் தெரியுது. நல்லாக காய் நகர்த்துகிறா. இந்த தேர்தல் முழுக்க அம்மா அலைதான். தமிழ் நாட்டில், காங்கிரஸ் அழிவில் இருந்து மீள்வது கடினம். இது தமிழ் நாட்டுக்கும் டெல்லிக்கும் இடையிலான மோதல். நீதி எம் பக்கம். நிச்சயம் 7 பேரும் விடுதலை ஆவார்கள்.

இவர்களை வெளியில் விட உயர் நீதிமன்றம் தடை விதித்து விட்டாள் ..வாழ்நாள் முழுக்க இவர்கள் சிறையில்...இவர்கள் மேல் உள்ளது நாட்டு துரோக வழக்கு....

காங்கிரஸ் இதை வைத்து வடநாட்டில் வாக்குகளை அள்ளலாம்.....தமிழ்நாட்டில் எப்போதே செத்துவிட்டது தானே...

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

ராகுலின் அப்பா வை அதாவது இந்திய முன்னாள் பிரதமரைக் (ராஜீவ் காந்தியை) கொன்றது இந்திய ஆன்மாவையே உலுக்கிச்சாமே. அப்படின்னா இந்தியப் படைகளால் ஈழத்தில் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் உயிர்கள் ஆன்மாக்கள் இல்லையோ..??! இந்தியப் படைகளின் உதவியோடு சிங்களப் படைகள் தமிழர்களைக் கொன்றது.. யாரையும் உலுப்பாதோ..???! என்னடா.. உங்களிடம் அதிகாரம் இருக்கென்று திமிரில நீங்க செய்யுற எதுக்குமே.. கேள்வியும் இல்ல நீதியும் இல்ல.. என்ற உடன.... இப்படி எல்லாம் ரெம்ப உளறப்படாது. கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டே கல்லெறியக் கூடாது. தர்மம் ஓர் நாள் உங்களைத் தண்டித்தே தீரும். !! :icon_idea:

 

அது இருக்க.. அப்பாவிகளை பிடிச்சு வைச்சு.. சோடிச்ச வழக்கை வைச்சு.. பிழைச்சது பிடிப்பட்டிடும் என்று தான்.. இந்த நீதிமன்றத் தீர்ப்பை.. ஹிந்திய காங்கிரஸ் அடிவருடிகளும்.. பிராமணிய ஈழ எதிர்ப்புவாதிகளும் கையில் எடுத்திருக்காங்க..! உங்களுக்கு உள்ளூர எடுக்கிற குலப்பனுக்கு.. பாவம்.. பேசாப் பூச்சி மன்மோகன் சிங்கும் பேசுறார். அவரோட தொப்பிக்குப் பின்னால்.. இந்திய தேசத்தின் இன்னொரு ஆன்மாவை உலுக்கிய சம்பவம் நடந்தது தெரியல்லைப் போல...???! :) :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி மன்மோகன் சிங்கு ஜி..  உங்க கூட்டாளிங்க.. இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியை..சுட்டுக் கொன்ற போதும் ஹிந்திய ஆன்மா ரெம்ப சுக்குநூறாச்சுன்னு ஒரு அறிக்கை தாறது..!

அதுசரி.. இந்திய ஆன்மா எத்தினை தரம் சுக்குநூறாகும்..???! அதுக்குத்தான் எத்தினை ஆன்மா..??!  காந்தியைச் சுட்டாங்க.. இந்திரா காந்தியை சுட்டாங்க.. ராஜீவ் காந்தியை கொன்றாங்க.. இப்படி ஒவ்வொருக்காவும்.. அதன் ஆன்மா சுக்குநூறாகுது... அப்புறம்.. ஒட்டிக்குது. மக்களுக்கு எதிராக தலைவர்கள் செய்யும் சீப்பான.. கேவலமான.. மனித நாகரிகம் மன்னிக்க முடியாத அரசியலால் பாதிக்கப்படுறவங்க.. தங்களுக்கு  நீதி இன்றி.. தலைவர்கள் தப்புக்கு தண்டனை இன்றி தப்பிக்கும் போது.. அவங்களே நீதிபதியாகிடுறாங்க. இது யார் குற்றம். இந்திய ஆன்மாவின் குற்றமே ஆகும். அதனை முதலில சுத்தப்படுத்துங்க.. ஜி. !!!!

 

இதற்காக அப்பாவிகளை தண்டிக்கப்படாது. குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க.. இந்திய ஆன்மாக் குட்டையை கலக்கி விடுற.. சதிகாரர்களை வெளில விட்டு வைக்கப்படாது. :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்தில் கருத்துக்களால் முரண்பட்ட அனைவரும் இவர்கள் விடுதலைக்காக ஆதரவான கருத்துக்களே வைக்கிறார்கள். அதே போல தமிழகத்தில் காங்கிரசுக்கட்சியைத்தவிர அனைத்துக்கட்சியும்( பாஜகட்சி தமிழகப் பிரிவு உட்பட) இவரது விடுதலைக்கு ஆதரவான கருத்துக்களை தற்பொழுது வைக்கிறார்கள். தமிழகத்துக்கு வெளியே இந்தியாவில் பெரும்பாலானவர்கள் இவர்களை விடுதலை செய்யக்கூடாது என்ற நிலையில் இருக்கிறார்கள். தெழுங்கு மொழியில் பேசும் ஒருவரை சென்ற புதன் மாலையில் புகையிரத நிலையத்தில் சந்தித்தேன். தெழுங்கானா பிரிப்பு பற்றிக் கேட்டேன். இவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசின் தேர்தல் நாடகம் என்றார். அத்துடன் ஜெயலலிதாவும் தேர்தலுக்காக நாடகம் இடுகிறார் என்றார். ராஜீவ் கொலையாளிகளை எவ்வாறு விடலாம் என்றார்?. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசினை திமுக உட்பட ஒருவரும் கூட்டணி அமைக்காமல் விட்டால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படியே... முதல்வர் ஜெயலலிதா தனது முடிவை தெரிவித்திருந்தார்.
இப்போது காங்கிரஸ் அதனை எதிர்த்து மனு செய்கின்றது என்றால்....
உச்ச நீதிமன்றத்திற்கு மதிப்பு இல்லையா?
உச்ச நீதிமன்றத்துக்கு மேலும்... ஒன்று உள்ளதா?
காங்கிர‌சின் செய‌ல், உச்ச‌ நீதிம‌ன்ற‌த்தின் செய‌லை, கேலிக் கூத்து ஆக்குவ‌து போல் உள்ள‌து.
 

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் கொலையாளிகளை எவ்வாறு விடலாம் என்றார்?

அடுத்தமுறை அவரைச் சந்தித்தால் அவர்கள் கொலைக்குற்றவாளிகள் இல்லை என்பதை எடுத்துச் சொல்லுங்கள் கந்தப்பு. இந்திய தீர்ப்புப்படி பார்த்தாலும் அவர்கள் கொலைக்குற்றத்திற்கு "உடந்தையாக" இருந்தவர்கள் மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்

அட ராஜீவ் காந்தியை கொன்றவங்க என்று விசாரிச்சு சொன்னவனே தான் சரியா விசாரிக்கல்ல தப்புப் பண்ணிட்டன் என்றான்.. ஆனால் ஹிந்திய ரிவி முன்னாடி இருக்கிற ஒன்று அமெரிக்க கென்னடி..வழக்கை பேசுது. இந்திய விடுதலைப் போராட்டமுன்னு ஹிந்தியர்கள் வெள்ளையர்களுக்கு எதிராக செய்த பயங்கரவாதம்..சதிகள் பற்றி பேசினால்.. ஈழத்தில் இந்தியப் படைகள் செய்த போர்க்குற்றங்கள் பற்றிப் பேசினால்.. காஷ்மீர்.. பஞ்சாப் பற்றிப் பேசினால் மைக்கை ஆவ் பண்ணிட்டு அடுத்தவன் மீது தங்க விதண்டாவாதத்தை ஜனநாயகம் என்று திணிக்கிறாங்க. என்ன கொடுமை இது. !!!!

 

http://youtu.be/f5Nr0nduA2k


1922010_810724002274845_111845499_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்
http://www.yarl.com/forum3/index.php?showtopic=136392 அர்ணாப்பை அலற வைத்த திருமுருகன்காந்தி!!!!!
  • கருத்துக்கள உறவுகள்

கெனடியின் கொலையாளி 45 வருடங்களாக அமெரிக்க சிறையில் உள்ளார் அதுபற்றியெல்லாம் திருமுருகன் வாசித்து அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்குது அர்னாப்.

கெனடியை சுட்ட குற்றமும் மின்கலம் வாங்கிக் கொடுத்த "குற்றமும்" சம அளவு குற்றங்களாமா? facebook-emoticon-covering-his-grin.jpg

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் கெனடியை ஒப்பீட்டு பேசுவதற்கும் இதற்கும் நிறைய ஒற்றுமை உள்ளது. கெனடியைக் கொன்றவர்கள் அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவு என்பதற்கான நிறைய வாதங்கள் பலரால் முன் வைக்கப்படுவதுண்டு. அந்தக் காணோளியிலும் அந்தக் கணத்தில் அவரை விட்டு மெய்ப்பாதுகாலவர் விலத்தித் செல்லும் காட்சிகள் எப்படிச் சந்தேகத்தை வரவழைக்கின்றதோ, அவ்வாறே ராஜிவ் கூடப் பெரிய தலைகள் மாட்டுப்படாமல்  தப்பிக் கொண்டதும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. கெனடி தன்னிச்சையாகச் செய்த பல செயல்கள் ரசியர்களோடு வைத்த இரகசியக்கூட்டு என்பன அவரது கொலைக்குக் காரணம் என நம்பப்படுகின்றது.


அத்தோடு உண்மையாகச் சுட்டவரை, பிற்பாடு என்னுமொருவர் சுட்டுக் கொன்றார். அவ்வாறே சிவராசன் , சுபா போன்றவர்களை விட்டால் வெளியில் உண்மை வந்து விடும் என்பதற்காக அவர்களைப் படுகொலை செய்து விட்டு தற்கொலை செய்தததாக இந்திய அரசு கதை எழுதுகின்றது...

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் வெளியே வருவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?

வா.மணிகண்டன்

“ராஜீவ் காந்தி கொலை என்பது இந்தியாவின் ஆன்மா மீதான தாக்குதல். எந்த அராசங்கமும் அல்லது கட்சியும் நமது தீவிரவாதத்திற்கு எதிரான சண்டையில் மென்மையாக நடந்து கொள்ளக் கூடாது” என்று பிரதமர் திருவாய் மலர்ந்திருக்கிறார். இனி ஒவ்வொருவருவராக வரிசையில் நின்று தடியெடுப்பார்கள். இந்த தேசத்தின் இறையாண்மை கேள்விக்குள்ளாக்கப்படுவதாக ஒருவர் கருதுவார். இந்த தேசத்தின் பாதுகாப்பு அடமானம் வைக்கப்படுவதாக இன்னொருவர் கதறுவார். தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இப்பொழுதே ஹிந்து பத்திரிக்கையில் ‘அதெப்படி மாநில அரசு முடிவெடுக்கலாம்’ என்கிறார்கள். சிபிஐ என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும் அமைப்பு. அது நடத்திய விசாரணையில் மாநில அரசு முடிவெடுக்க முடியாது என்று சட்ட வல்லுநர்கள் கருதுகிறார்களாம். நடுநிலையாளர்களைப் போலவே எழுதியிருக்கிறார்கள். வட இந்திய ஊடகங்களைப் பற்றி கேட்கவே வேண்டியதில்லை. கையில் மைக்குக்கு பதிலாக துப்பாக்கியைக் கொடுத்தால் நேராக வேலூர் சிறைச்சாலைக்கு வந்து ஏழு பேரையும் சுட்டுக் கொன்றுவிட்டுதான் மறுவேலை பார்ப்பார்கள். தேசத்தின் மீதான அன்பு பெருகி வழிகிறது.

வட இந்தியர்களின் கமெண்ட்டுகளை இணையத்தில் வாசித்தால் கண்களில் ரத்தம் கசிகிறது. இந்த நாட்டில் வெறித்தனமான தேசபக்த உணர்ச்சியோடு இத்தனை மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பதை நினைக்கவே பெருமையாக இருக்கிறது. அவ்வளவு தூரம் போகாவிட்டால் என்ன? இங்கு இருக்கும் சில மனிதர்களைப் பாருங்கள். ராஜீவ் காந்தியோடு சேர்ந்து செத்துப் போன தமிழர்களுக்காக இதயம் வெடிக்கும் அளவுக்கு அழுகிறார்கள். ராஜீவ் காந்திக்காக இல்லாவிட்டாலும் உடன் செத்துப் போன தமிழர்களுக்காகவாவது ஏழு பேரையும் அம்மிக்கல்லுக்கு நடுவில் வைத்து நசுக்க வேண்டும் அல்லது கொதிக்கும் சுண்ணாம்புக் கால்வாயில் போட்டு சாவடித்துவிட வேண்டும் என்கிறார்கள்.

இத்தகைய கருத்துக்களைச் சொல்லும் தமிழ் நல விரும்பிகள்தான் தமிழக மீனவர்கள் நீலக்கடலில் சுடப்பட்ட போதெல்லாம் குடும்பத்தோடு பட்டினி கிடந்து தங்களை வருத்திக் கொண்டவர்கள் என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். அவர்களுக்கு அத்தனை பாசம்- தமிழர்கள் மீது. முத்துக்குமரன் இறந்த போதும், இலங்கை முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்பட்ட போதும் தங்களைக் கொளுத்திக் கொள்வதற்காக கெரசின் டின்னோடு சுற்றித் திரிந்தவர்கள். அதனால்தான் ராஜீவ்காந்தியோடு செத்துப் போன தமிழர்களுக்கு பதிலாக இந்த ஏழு பேரைக் கொல்ல வேண்டும் என்கிறார்கள்.

இருக்கட்டும்.

ஒன்பது வோல்ட் பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக பேரறிவாளன் மீது குற்றம் சுமத்தப்பட்டு, அந்த பேட்டரியில்தான் ராஜீவைக் கொன்ற வெடிகுண்டை தயாரித்தார்கள் என்று நிரூபித்திருக்கிறார்கள். பேட்டரி செல் வாங்கியதற்கான பில் எதுவும் கையில் வைத்திருந்தாரா என்று தெரியவில்லை. பிரபாகரனிடம் கணக்கு காட்ட வேண்டுமல்லவா? ‘பேட்டரி செல் 2 ரூபாய்’ என்று பில் வாங்கி வைத்திருக்கக் கூடும். சிபிஐ சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும். நம்பிக் கொள்வோம்.

இவர்களைக் கொன்றுவிடுவதால் அல்லது தனிமைச் சிறையிலேயே அடைத்து வைப்பதால் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது? ஒருவேளை இவர்கள் தவறு செய்திருப்பவதாகவே இருந்தாலும் வெளியே வந்த பிறகு இன்னொரு தலைவருக்கு குறி வைக்கப்பார்கள் என்று நம்புகிறீர்களா? அல்லது இவர்களுக்கு தண்டனையளிப்பது அடுத்தவர்களுக்கான பாடமாக இருக்கும் என்றால் இனிமேல் தீவிரவாதிகள் பயந்து போய் தங்களது துப்பாக்கிகளை கீழே போட்டுவிட்டு சரணடைந்துவிடுவார்களா? எதுவுமே நடக்காது.

ஒரு மனிதனுக்கான அதிகபட்சத் தண்டனை என்பது அவனது வாழ்வின் பெரும்பகுதியை தனிமையில் கழிப்பதுதான். அதை இவர்கள் அதிகப்படியாகவே அனுபவித்துவிட்டார்கள். பத்தொன்பது வயதிலும் இருபது வயதிலும் சிறைச்சாலைக்குள் சென்றவர்கள் நாற்பது வயதிலும் ஐம்பது வயதிலும் வெளியே வர முயன்று கொண்டிருக்கிறார்கள். இளமை முழுவதும் சூரியனைப் பார்க்காத பகல்களால் கழிந்துவிட்டது. உடல் முறுக்கம் முழுவதும் விசாரணை என்ற பெயரில் இறங்கிய லத்திகளாலும் சிறையின் தனிமை தின்றதாலும் இளகிவிட்டது. இனியாவது வெளியே வரட்டுமே. நீங்களும் நானும் நம்பிக் கொண்டிருப்பது போல வெளியே வந்தவுடன் அவர்களுக்கு சாதாரண மனிதனைப் போல வாழ்க்கை அமைந்து விடப் போவதில்லை என்பதுதான் நிஜம்.

அவர்களைச் சாவடியுங்கள், அவர்களை தனிமையில் வாட்டுங்கள், அவர்களைக் கொல்லுங்கள் என்று நாம் உணர்ச்சிவசப்பட்டு கை நீட்ட வேண்டியதில்லை. உனது தந்தையைக் கொன்றிருந்தால் இப்படி விட்டுவிடச் சொல்வாயா என்று கேள்வி எழக் கூடும். அதே கேள்வியை சற்று மாற்றிக் கேட்கலாம். உங்களது மகனோ மகளோ இந்த நிலைமையில் இருந்தால் உங்களின் நிலைப்பாடு இதுவாகவேதான் இருக்குமா என்று. ஆனால் இந்த இரண்டு கேள்விகளுமே அபத்தமானவைதான்.

நமக்கான அரசியல், நமக்கான கோபங்கள் ஆகியவற்றை ஒதுக்கி விட்டு யோசித்துப் பார்த்தால் அவர்கள் வெறும் மனிதர்கள். கிட்டத்தட்ட அனைத்து எலும்புகளும் ஒடிக்கப்பட்ட, அத்தனை உணர்ச்சிகளும் சாகடிக்கப்பட்ட ஜீவன்கள். இன்னும் இருபது வருடங்களோ அல்லது முப்பது வருடங்களோ அதிகபட்சம் வாழ்வார்கள். எத்தனையோ குற்றவாளிகளாலும், தண்டனைகளிலிருந்து தப்பித்த அயோக்கியர்களாலும் சூழப்பட்டிருக்கிறோம். இந்த ஏழு பேரால்தான் நமது புனிதத்தன்மை கெட்டுவிடப் போகிறதா?

இவர்களின் விடுதலை என்பது ஓட்டுக்கான அரசியல், தேர்தலை மனதில் வைத்து எடுக்கப்பட்ட முடிவு, எதிரியை வீழ்த்தும் திட்டம் என்று என்ன காரணமாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். இத்தனை வருடங்களாக இன்று சாவேனா, நாளை சாவேனா என்று எதிர்பார்த்து இருட்டுக்குள் கிடந்திருக்கிறார்கள். கால் நூற்றாண்டு காலத்தை இழந்துவிட்டார்கள். இனியாவது வாழ்ந்துவிட்டுப் போகட்டுமே! அவர்கள் வெளிவருவதற்குத் தேவையான மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்- எதுவாக இருந்தாலும் தேர்தல் நடப்பதற்குள் ஏழு பேரும் வெளியே வந்துவிட்டால் விடுதலை அடைந்துவிட்டார்கள் என்று அர்த்தம். தவறினால் அவ்வளவுதான். அடுத்த தேர்தல் வரைக்கும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பது மட்டும் நிதர்சனம்.

http://www.nisaptham.com/2014/02/blog-post_20.html

  • கருத்துக்கள உறவுகள்

17 அப்பாவிகள் ராஜிவோடு கொல்லப்பட்டதாக நீலிக்கண்ணீர் வடிக்கின்றவர்கள், அதற்காக ஏன் 7 அப்பாவிகளைத் தண்டிக்க வேண்டும் என நினைக்கின்றீ்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ரரஜீவுடன் கொல்லப்பட்ட 17 அப்பாவிகள் இருக்கட்டும். ராஜிவினால் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளுக்கு யார் நீதி வழங்குவது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.