Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் ஒரு காதல் - கருத்துக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யார் அடுத்து கதை எழுதுவது என்று தெரியாமல் எழுதுவது தான் இந்த தொடரின் 'த்ரில்'.
இது 'கலாநிதி' பட்டத்துக்காக 'ஆராய்ச்சி' செய்வதற்கு ஒப்பானது.
அடுத்து யார் என்னத்தை சமர்பிக்க போறான் என்று தெரியாமலே நாங்கள் அறிக்கையை தயாரிப்பதும்.
அதை வெளியிடும் முதன் நாள் யாராவது குழப்பி விடுவான்.  :lol: 





 



 

  • Replies 256
  • Views 22.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் பாஞ்ச். நீங்கள் எழுதியதில் அவசரம் தெரிகிறது. இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம்.


இரண்டாவது பந்தி என்ன சொல்கிறீர்கள் என்று விளக்கம் இல்லாமல் இருக்கு.

 


விசுகு அண்ணா எழுதியதை முதல் வாசித்துவிட்டு இவர் என்ன வேறு கதை தொடங்குகிறாரோ என்று தடுமாறிவிட்டேன். உங்களுக்கு வில்லத்தனம் தான் பிடிக்கும் போல :lol: கடைசியில் தொடர்பை ஏற்படுத்தி கதையுடன் இணைத்தவிதம் நன்று அண்ணா.

நான் இரவு வேலையால் வீட்டிக்கு போய் வோட்காவை வாயில் வைத்தபடி ஒரு மணித்தியாலத்தில் எழுதி முடித்துவிட்டேன் .காலை எழும்பி எனது E-MAIL இற்கு அனுப்பிவிட்டு வந்தேன் .

காலை கடைக்கு வந்தநேரம் முழுக்க வெட்டி ஒட்டி குத்தி முறிஞ்சு பாத்தேன் ஒன்றும் சரிவரவில்லை .இப்ப KEY-BOARD வெட்டி ஓட்டிவிட்டேன் .

விசுகுவின் கதை அதற்கு இடையில் வந்துவிட்டதால் லண்டன் அண்ணரை பிரான்ஸ் அண்ணராக வாசியுங்கள் .

நன்றி .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமையாக எழுதியுள்ளீர்கள் அர்யுன். சிரிச்சு முடியவில்லை. பச்சையும் இல்லைப் போட.

 


இடையில் மதுரனே வில்லனாவானோ என்னும் மாயையை ஏற்படுத்தியது அருமை.

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் அண்ணா நல்லா இருக்கு கதை.
 
ஆனால் சில நெருடல்கள்  இருக்கு

  • விசுகு அண்ணா பிரான்சில் இருபதாக எழுதி இருக்கிறார். அதுவும் இரண்டு வேலை பார்ப்பவராக. நீங்கள் லண்டனில் டாக்டாராக எழுதி இருக்கிறீர்கள் மதுரனின் அண்ணாவை.

    2. இந்த கதை களம் எத்தனையாம் ஆண்டளவில் நடப்பதாக சித்தரிக்கபடுகிறது. யாழ் புகையிரத நிலையம். ஆமி பிரச்சனை. புலிகளின் ரகசிய பயிற்சி. கொஞ்சம்    குழப்பமாக இருக்கிறது

Edited by முதல்வன்

  • கருத்துக்கள உறவுகள்

கதையினை தொடர்ந்த பாஞ்ச், விசுகு , அர்ஜுன்  ஆகியோருக்கு வாழ்த்துகள்.

யாழ் களத்தில் எத்தனை கதாசிரியர்கள்?!
தற்போதைய புகலிட இலக்கியத்தில் கதாசிரியர்களூக்கு பஞ்சமோ என எண்ணியதுண்டு. 

அதை மீள்பரிசீலனை செய்யத் தூண்டுகிறாது இத்தொடர்.

சில சில சின்ன நெருடல்கள் கதையின் போக்கில் இருந்தாலூம்.. ஒவ்வொருவரும் தமது திறமையை பாராட்டும்விதத்தில் வெளிப்படுத்துகிறார்கள்.

 

விசுகு, அர்ஜுன் ஆகியோருக்கு எனது பாராட்டுகள்.
 

(கதையின் நெருடல்களை சுமே அவர்கள் சீராக்கிவிட்டால்... தொடர்ந்து எழுதுபவர்களுக்கு வசதியாக இருக்கும் என நினைக்கிறேன். நன்றி!) 

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜூனின் முதல் பந்தியே அட்டகாசம்...

"கோர்னர் சீட் கிடைத்த சந்தோஷசம் ..

"இரயிலின் நகர்வோடு யாழ்ப்பாணம் தன்னை நோக்கி கையை ஆட்டி சற்று கோபத்துடன் விடைபெறுவது போல உணர்ந்தான் . அவன் யாழை விட்டு போகும் போது கோபப்படுவதும் திரும்பி வரும்போது கட்டி அணைப்பதும் யாழ் செம்பாட்டு மண்ணுக்கும் அவனுக்குமான இந்த ஊடல் எவருக்கு புரிய போகின்றது .

அனுபவித்து எழுதி உள்ளீர்கள் போல தெரிகிறது. பாராட்டுக்கள் !!!

  • கருத்துக்கள உறவுகள்

'மதுரன்' என்ற ஒரு நாலு எழுத்தை வைத்து ஒரு கதையையே தொடர்வதாகக் காட்டிய தந்திரத்தை, நான் ஐஞ்சு தந்திரக் கதைகளிலும் படித்ததில்லை. அபாரம்!! விசுகு அவர்களுக்கு வாழ்த்துக்கள்!! :D:lol:


மதுரனது காதல் எத்தனை தடைகளை தாண்ட வேண்டி வரும் என்பதை அறியாமல் மெயில் ரெயின் வவுனியாவை தாண்டி வேகம் எடுக்கின்றது - அர்யுன்
 

 

மதுரன் இயக்கத்தில் இரகசியமாகப் பயிற்சி பெற்றிருந்ததும் கதையில் வெளிப்பட்டுள்ளது. எத்தனை தடைகளை வந்தாலும் மதுரன் உடைத்துவிடுவான். கவலையை விடுங்கள் அர்யுன்! உங்கள் கற்பனை வேகம் கண்டு வாழ்த்துக்கள்!! :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தயவுசெய்து கதை எழுதும் இனி எழுதப்போகும் உறவுகளுக்கு!

 

நாங்களும் எழுதுவோமா என்னும் திரியில் அரசியல் இல்லாத காதல் கதை என்று நான் கூறியிருந்தேன் சிலவற்றைத் தவிர்ப்பதற்காக. தயவுசெய்து அரசியல் தவிர்த்து எழுதுங்கள் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு மிகவும் நன்றாக ஒரு இளைஞனின் பாரிஸ் வாழ்க்கையை எழுதியுள்ளீர்கள் , அதிலும் நீங்கள் குறிப்பிட்ட அந்த வங்கிகளில் யாராவது கடன் வைத்திருந்தால் ஆயுள் வரை அவர்கள் வட்டிமட்டுமே கட்டிக் கொண்டு இருப்பினம். முதல் அப்படியே இருக்கும். :)

 

அர்ஜூன் நன்றாக இருக்கின்றது. நான் நினைத்ததை நீங்களே சொல்லி விட்டீர்கள். அந்த அண்ணரின் இடமாற்றத்தைத்தான் சொல்கிறேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர் தனது வாழ்க்கையையே கொட்டித் தீர்த்திருக்கிறார்! நானும், இந்த ஆள், கதையை விட்டிட்டு விலகிப்போகுது எண்டு நினைச்சாலும், தண்ணி கிண்ணி பாவிக்கிற பழக்கமில்லாத மனுசன் எண்ட படியால தொடர்ந்து வாசிப்பம் எண்டு வாசிச்சன்! கடைசியில கொண்டு வந்து இணைச்ச இடம் அருமை!  :D

 

ஆனாலும் கொடுத்த சீதனக்காசை எப்படியாவது திரும்ப வாங்கி விட வேண்டும் என்னும் ஒர்மத்தில் எனக்கு உடன்பாடில்லை! எல்லோரும் கண்ணுக்குக் கண்ணென்று ஒருவரை ஒருவர் தொடர்ந்து 'பழிக்குப் பழி' என்னும் மன நிலையில் சென்றால், முழு உலகமும் குருடாவது தான் முடிவாக இருக்கும் என்ற மகாத்மா காந்தியின் 'பொன்மொழி' தான் நினைவுக்கு வந்து போனது!

 

சாதியை இதனுள் கொண்டு வந்ததிலும் எனக்கு உடன்பாடில்லை! எல்லோரும் மரத்திலிருந்து மண்ணுக்கு இறங்கியவர்களே! 

 

ஆனால் கதையை நகர்த்திய விதமும், சம்பவங்களைக் கோவையாக்கிய விதமும் நன்றாக உள்ளது!

 

ஒரு நல்ல மகனாக, ஒரு நல்ல அண்ணனாக, ஒரு நல்ல குடும்பத் தலைவராக வாழ்கின்றீர்கள் என்பதில் பெருமையே!  :icon_idea:

 

வாழ்த்துக்கள் விசுகர்!

 

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன், ஒரு கை தேர்ந்த எழுத்தாளர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கின்றார்!

 

இவரது வாழ்வின் சில சம்பவங்களும், நிச்சயமாக இதில் மறைந்திருக்கும் என்றே கருதுகின்றேன்! யாழ்தேவிப் பயணத்தின், சம்பவங்களை அப்படியே கண் முன் விரித்திருக்கிறார்! அத்துடன், 'கருத்தக் கொழும்பான்' போன்ற குறியீட்டுப் பாவனையும், கொஞ்சம் வித்தியாசமாக இருக்கின்றது!

 

கதையின் முன்னைய சம்பவங்களைக் கொண்டு, அதனைத் தொடர்பு படுத்தும் 'கதை நகர்வுக்காக' மட்டுமே அர்ஜுனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

 

அதாவது கதையை ஒரு புத்தகமாக வெளியிட்டால், அந்தச் சம்பவங்களின் கோவையானது, இந்தக் கதை பலரால், வேறு வேறு நேரங்களின் எழுதப்பட்டுத் தொகுக்கப்பட்டது என்று எவராலும் இலகுவில் கூற முடியாதவாறு அவரது 'அத்தியாயம்' அமைந்துள்ளது!

 

விசுகரின் அத்தியாயத்திலிருந்து கொஞ்சம் விலகிச் செல்வது போல இருப்பினும், அதற்கான காரணத்தையும் 'அர்ஜுனே' தெரிவித்திருக்கிறார்!

 

உண்மையான 'அர்ஜுனும்', யாழ் களத்து 'அர்ஜுனும்' வேறு வேறு குணாதிசயங்களும், ஆழுமையும் உள்ளவர்கள் என்பதை, இப்போது ஏற்றுக்கொள்கின்றேன்! :icon_idea: 

 

வாழ்த்துக்கள் அர்ஜுன்!

 

நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுங்கள்! :D  

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் பாஞ்ச். நீங்கள் எழுதியதில் அவசரம் தெரிகிறது. இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம்.

இரண்டாவது பந்தி என்ன சொல்கிறீர்கள் என்று விளக்கம் இல்லாமல் இருக்கு.

அவசரம்தான்!....

"பந்திக்குப் பிந்திவிட்டேன், இனிச் சோற்றுக்கு நான் எங்கே போவேன்??" என்ற எனது அங்கலாய்ப்புக்கு; புங்கையூரன் தந்த ஊட்டத்தை நீங்கள் படிக்கவில்லையா??... :o

 

கதையின் விளக்கத்தை.!! கதையைப் படிப்பவர்கள், தங்கள் அறிவிற்கும், சிந்தனைக்கும், அனுபவத்திற்கும் ஏற்பக் காட்சிப்படுத்திக் கொள்ளும்போது கிடைக்கும் சுவை அலாதியானது!!!. அந்தச் சுவையை நான் அநுபவித்துள்ளேன்! அதனையே என் கதைமூலமும் கொடுக்க விரும்பினேன்! எதனையும் சுலபமாகக் காணும்படி முற்றும் திறந்து காட்டிவிட்டால்!.... அதில் உள்ள ரசனை பார்ப்பவர்களுக்கு அற்றுப் போய்விடும்!!.... :icon_idea::wub:

 

பிலா மரங்கள் இரண்டு எனது வீட்டில் இருக்கு ,அந்த இரண்டு மரங்களும் எமக்கு நல்ல சுவையான பலாபழங்களை தருகின்றன .நான் அவற்றை மிகவும் விரும்பி சாப்பிடுவன்.பிலா இலையும் எம்வீட்டில் இருக்கும் ஆட்டுக்கு உணவாக பயன்படும் .எம்மிடம் இருக்கும் இரு மாடுகளையும் நாங்கள் பிலா மரத்தில் தான் கட்டி வளர்க்கின்றோம் .

நாலாம் வகுப்பு மாணவி எழுதிய கட்டுரை இது .

வாத்தியார் அதற்கு சொன்ன பதில் -பிள்ளை பிலாமரத்தை பற்றி நான் கட்டுரை எழுதச்சொல்லியிருந்தால் உனக்கு எண்பது மார்க் ஆனால் நான் எழுத சொன்னது மாட்டைப்  பற்றி .அப்ப எத்தனை மார்க் போடலாம் .

பிள்ளை அழதொடங்கிவிட்டது :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிக்கிழமை அர்யுன் கதையை தொடர இருக்கிறார். அதற்கு முன் யாராவது எழுதுவதானால் எழுதுங்கள். ஆனால் கொஞ்சம் நீளமாக எழுதுங்கள்.

 

இதைப்பார்த்ததும்

இடையில் நாள் கனக்க  இருக்க ஒருக்கா புகுந்து  பார்க்கலாம் எனத்தோன்றியது

அதற்கான  உற்சாகத்தை நிலாமதிப்பாட்டி  தந்திருந்தார்.

பத்து நிமிடம்  கிடைத்தது

அதனாலேயே அவசர  எழுத்து.

எழுத்துப்பிழைகளை  பின்னர் தான் திருத்தினேன்

பின்னர் பார்த்ததில் இன்னும் எழுதியிருக்கலாம் என்று தோன்றியது

 

இதற்கு  முதல் எழுதிய

சுமே

புங்கையர்

நிலாப்பாட்டி

பஞ்ச்

எல்லோரும் காதலுடனும் அந்த  இருவருடனும் நின்றுவிட

அந்தக்காதலுக்கு  வரும் எதிர்ப்புக்களின் வடிவங்களை  எழுதலாம்

அதை தலை கீழாகத்தொடங்கலாம்  என்றே  முயற்சித்தேன்

கொஞ்சம் கதையை நாலாபுறமும் சிதறவிடலாம் என்று யோசித்தேன்

இனி  கதையைின் போக்கை  வைத்து மிகுதியைப்பார்க்கலாம்

 

எனக்கும் எழுத  இடம் தந்த சுமேக்கு  நன்றிகள்

 

விசுகு அண்ணா எழுதியதை முதல் வாசித்துவிட்டு இவர் என்ன வேறு கதை தொடங்குகிறாரோ என்று தடுமாறிவிட்டேன். உங்களுக்கு வில்லத்தனம் தான் பிடிக்கும் போல :lol:கடைசியில் தொடர்பை ஏற்படுத்தி கதையுடன் இணைத்தவிதம் நன்று அண்ணா.

 

நன்றி  சகோதரி

கதையினை தொடர்ந்த பாஞ்ச், விசுகு , அர்ஜுன்  ஆகியோருக்கு வாழ்த்துகள்.

 

நன்றி  கறுப்பி

நீங்களும் எழுதலாமே..

யாழ் களத்தில் எத்தனை கதாசிரியர்கள்?!

தற்போதைய புகலிட இலக்கியத்தில் கதாசிரியர்களூக்கு பஞ்சமோ என எண்ணியதுண்டு. 

அதை மீள்பரிசீலனை செய்யத் தூண்டுகிறாது இத்தொடர்.

சில சில சின்ன நெருடல்கள் கதையின் போக்கில் இருந்தாலூம்.. ஒவ்வொருவரும் தமது திறமையை பாராட்டும்விதத்தில் வெளிப்படுத்துகிறார்கள்.

 

விசுகு, அர்ஜுன் ஆகியோருக்கு எனது பாராட்டுகள்.

 

(கதையின் நெருடல்களை சுமே அவர்கள் சீராக்கிவிட்டால்... தொடர்ந்து எழுதுபவர்களுக்கு வசதியாக இருக்கும் என நினைக்கிறேன். நன்றி!) 

 

நன்றி  ஐயா... :o  :o  :o

 

ஏற்கனவே  தைப்போன்று  எழுதி  அனுபவப்பட்டவர்  என்பதால்

சுமேக்கு தங்கள் அனுபவங்களை  ஆலோசனைகளை  முன் வையுங்கள் :icon_idea:

'மதுரன்' என்ற ஒரு நாலு எழுத்தை வைத்து ஒரு கதையையே தொடர்வதாகக் காட்டிய தந்திரத்தை, நான் ஐஞ்சு தந்திரக் கதைகளிலும் படித்ததில்லை. அபாரம்!! விசுகு அவர்களுக்கு வாழ்த்துக்கள்!! :D:lol:

 

 

நன்றி  சகோதரா

உங்கள் ஊக்கம்  இன்னும் எழுதியிருக்கலாம் என்ற  ஊக்கம் தருகிறது :D  :lol:  

தயவுசெய்து கதை எழுதும் இனி எழுதப்போகும் உறவுகளுக்கு!

 

நாங்களும் எழுதுவோமா என்னும் திரியில் அரசியல் இல்லாத காதல் கதை என்று நான் கூறியிருந்தேன் சிலவற்றைத் தவிர்ப்பதற்காக. தயவுசெய்து அரசியல் தவிர்த்து எழுதுங்கள் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.

 

 

அரசியல் எங்கும் வந்ததாக  தெரியவில்லை  சுமே

ஆனால் நாட்டு   நடப்புக்கள்  கதையில் வருவது  இயல்புதானே..??

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இப்போ... பெரிய கதைகள் வாசிக்க, பொறுமை இல்லாததால்...
கருத்து எழுத முடியாமைக்கு... மன்னிக்கவும்.
சுமோவின் நல்ல முயற்சிக்கும்... அதனை தொடராக கொண்டு செல்லும், உறவுகளுக்கும் பாராட்டுக்கள்.smiley_happy_thumbup.gif:)

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு மிகவும் நன்றாக ஒரு இளைஞனின் பாரிஸ் வாழ்க்கையை எழுதியுள்ளீர்கள் , அதிலும் நீங்கள் குறிப்பிட்ட அந்த வங்கிகளில் யாராவது கடன் வைத்திருந்தால் ஆயுள் வரை அவர்கள் வட்டிமட்டுமே கட்டிக் கொண்டு இருப்பினம். முதல் அப்படியே இருக்கும். :)

 

 

நன்றியண்ணா

 

கதை  என்றாலும்

கொஞ்சம் நன்மை  தீமைகளையும் கலந்தால் தானே  நாளை  வாசிப்பவர்களுக்கு எதாவது படிப்பினையைத்தரும்.

நாம் அனுபவிச்சது தானே  அண்ணா...

  • கருத்துக்கள உறவுகள்

 

1-விசுகர் தனது வாழ்க்கையையே கொட்டித் தீர்த்திருக்கிறார்! நானும், இந்த ஆள், கதையை விட்டிட்டு விலகிப்போகுது எண்டு நினைச்சாலும், தண்ணி கிண்ணி பாவிக்கிற பழக்கமில்லாத மனுசன் எண்ட படியால தொடர்ந்து வாசிப்பம் எண்டு வாசிச்சன்! கடைசியில கொண்டு வந்து இணைச்ச இடம் அருமை!  :D

 

2- ஆனாலும் கொடுத்த சீதனக்காசை எப்படியாவது திரும்ப வாங்கி விட வேண்டும் என்னும் ஒர்மத்தில் எனக்கு உடன்பாடில்லை! எல்லோரும் கண்ணுக்குக் கண்ணென்று ஒருவரை ஒருவர் தொடர்ந்து 'பழிக்குப் பழி' என்னும் மன நிலையில் சென்றால், முழு உலகமும் குருடாவது தான் முடிவாக இருக்கும் என்ற மகாத்மா காந்தியின் 'பொன்மொழி' தான் நினைவுக்கு வந்து போனது!

 

3- சாதியை இதனுள் கொண்டு வந்ததிலும் எனக்கு உடன்பாடில்லை! எல்லோரும் மரத்திலிருந்து மண்ணுக்கு இறங்கியவர்களே! 

 

4- ஆனால் கதையை நகர்த்திய விதமும், சம்பவங்களைக் கோவையாக்கிய விதமும் நன்றாக உள்ளது!

 

ஒரு நல்ல மகனாக, ஒரு நல்ல அண்ணனாக, ஒரு நல்ல குடும்பத் தலைவராக வாழ்கின்றீர்கள் என்பதில் பெருமையே!  :icon_idea:

 

வாழ்த்துக்கள் விசுகர்!

 

  

1- இப்படியா  நம்பிக்கை  வைப்பது?? :D

   உங்களையே தடுமாற  வைத்திருக்கு என்றால்.....

    நம்பிக்கை  வருகிறது

 

2- 3- எல்லோரும்  அந்த இருவரையும் காதலையும் சற்றி  வந்ததால

கொஞ்சம் காரம் கொடுப்பம் என்று பார்த்தன்.

வழமையாக  எமது காதலுக்கு இருக்கும் எதிர்ப்புக்கள் தானே  இவை?

முன்பொரு மறை  பப்படித்தான் சாதி  பற்றி  இங்கொரு கதை  எழுதப்பட்டபோது

அதை  உங்களைப்போலவே  மறுதலித்திருந்தேன்

ஆனால் சொல்லப்பட்ட  காரணம்

தமிழர்களிடம் இல்லாத  ஒன்றையா  சொன்னோம் என்பது

அப்படியே  இதையும் எடுத்துக்கொள்ளலாமே... :lol:

அத்துடன் எந்த ஒரு கதையும்  படமும் கம்பீரமடைய  அதன் வில்லனின் அதிக கொடூரமே  காரணம்

அந்தவகையில் கொஞ்சம் ஏத்திவிட்டேன்

அது உங்களையே  தொட்டிருக்கு என்றால் வில்லனுக்குத்தான் வெற்றி.

 

4- நன்றியண்ணா. உங்களிடம் வாழ்த்துப்பெற  கொடுத்து வைத்திருக்கணும்

அதிலும் எனக்கு  இரட்டிப்பு மகிழ்ச்சி

     :icon_idea:  :icon_idea:  :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு இப்போ... பெரிய கதைகள் வாசிக்க, பொறுமை இல்லாததால்...

கருத்து எழுத முடியாமைக்கு... மன்னிக்கவும்.

சுமோவின் நல்ல முயற்சிக்கும்... அதனை தொடராக கொண்டு செல்லும், உறவுகளுக்கும் பாராட்டுக்கள்.smiley_happy_thumbup.gif:)

 

சிறித்தம்பி! சொன்னதைத்தான் நானும் சொல்லுறன்.. :D  :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறித்தம்பி! சொன்னதைத்தான் நானும் சொல்லுறன்.. :D  :)

 

அப்ப எதுக்குத்தான் பொறுமை ???? :lol:

 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

சிறித்தம்பி! சொன்னதைத்தான் நானும் சொல்லுறன்.. :D:)

மேல ரெண்டு பேரும் சொன்னதை தான் நானும் சொல்லுறன்

மேல ரெண்டு பேரும் சொன்னதை தான் நானும் சொல்லுறன்

என்னையும் சேர்த்துக்கொள்ளுங்க பாஸ்  :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னையும் சேர்த்துக்கொள்ளுங்க பாஸ்  :D

 

தட்டிவான் வெளிக்கிடப்போகுது இன்னும் ஆக்கள் இருந்தால் ஓடிவந்து ஏறுங்கோ.... :D  :lol:

புத்தன் தொடருங்கள் .

நேர்கோட்டில் மட்டும் போகாமல் காதல் கிளை விடுவதும்  நன்றாக இருக்கும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.