Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழ்க்கை ஒரு வட்டம்.....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

.....

அன்று வெள்ளிக் கிழமை இரவு . குளிர் சூழ்ந்த   பனிக்கால   இரவு ...அனித்தா புரண்டு புரண்டு படுத்தாலும்   ..நித்திரை வரவே இல்லை. இரவு மங்கிய வெளிச்சத்தில் ..கடிகாரம் மணி 1.05 காட்டியது ...  நடு   நிசி....எழுந்து பாத்ரூம்   போய்  விட்டு வந்து  தண்ணீரைக் குடித்து விட்டு மீண்டும் தூங்க  முயற்சிக்கிறாள் ..அருகே இரு   குழந்தைகளும்  ஆழ்ந்த் நித்திரை .....  முன்னைய  நாட்கலேன்றால் அவரவர்  அறையில்  தனியே படுப்பார்கள். இரவில் ஏதும் அவசரமென்றால் கதவைத்தட்டி  அனுமதிபெற்று ...உள்  வரவேண்டும் எ ன்பது பாஸ்கரனின் கண்டிப் பான  கட்டளை.   இந்நாட்டு  வழக்கப்படி   ஆணுக்கு  ஒன்றும் பெண்ணுக்கு  ஒன்றுமாக மூன்று அறை கொண்ட வீட் டில் தான் ஒரு குடும்பத்தை  அனுமதிப்பார்கள்.    

 

 

சில வாரங்களாக  ...அவர்கள் இவளோடு தூங்குகிறார்கள் இவளுக்கும் அது இதமாக் இருந்தது. அவர்களும் ஒரு  ஆதரவாக உணர்ந்து   இருந்தார்கள்.பாஸ் கரனுடன் அமைதியாக  சென்ற குடும்ப வாழ்க்கை இப்படி புயலாக  மாறும்  என  அவள்  எண்ணவே  இல்லை. சில் மாதங்களுக்கு முன் நாங்கள்  சற்று பெரியவீடுவாங்குவோம்  ஆலோசனை கூறி  ..அவர்களிருந்த  வீடு விற்பனைக்கானது . பின்பு ஒரு மூன்று அறைகள் கொண்ட (கொண்டோ )தொடர்மாடிக்கு  இடம்  மாறியபோது தான்  அனித்தா விழித்துக்  கொண்டாள் .

 

சில  மாதங்களாக அவன் இரண்டு நாள் வேலை....தூர இடத்தில் வேலை  என  சாட்டு சொல்லி அங்கு  தங்குவதாக  சொல்வான். வீட் டிலும் எந்நேரமும் சிந்தனை வயப்பட்டவனாக இருப்பான். பிள்ளைகள்  எங்கா வது வெளியில் கூட்டிப் போவதற்காக  இருந்தாலும் தாமதமாக் வந்து அந்த நாளை சோகத்தில் ஆழ்ந்துவான். மகளுக்கு பன்னிருவய தாகிறது அவளில்  மிகுந்த நேசம் உள்ளவன். தன தாயின் சாயல் என்று சொல்வான். படிக்கும் காலத்திலேயே காதலித்துகைப்  பிடித்தவன். இவளும் தந்தையை இழந்த்தவள் .  கனடா நாட்டில்    கடின உழைப்பால்  முன்னுக்கு வந்தவர்கள். ஒரே ஒரு தங்கை ..அவளும் மணமாகி ஒரு ஆண் குழந்தையுடன் மகிழ்வாய்  வாழ்கிறாள். கோடை விடுமுறையில் மகனுடன் சேர்ந்து பந்துவிளையாடுவான்.  அமைதியான  வாழ்வில்  ஏன்  இப்படி ஒரு சுழல் காற்று 

சில மாதங்களுக்கு  முன்பு ...அவள் அவனது செல் போனை ஆராய்ந்த போது   தான் ஒரு பெண்ணின் பெயர் பல தடவை பதிவாகி இருந்தது. அதுபற்றிக்  கேட்டதால்  தான் முதலில் சாட்டுபோக்கு சொன்னான் ...பின் பிரச்சினையாகி ஒரு பூகம்பமே வெடித்து,  சென்ற வாரம் தனது  உடுப்புக்களை எடுத்துக்கொண்டு தன்  ஒன்று விட்ட  சகோதரனின்  வீட் டுக்கு  செல்லுமளவுக்கு வந்து விட்டது .. மறுநாள் அவனது  சகோதரன் வந்திருந்தார்.  தன தம்பிக்கு சில  வருடங்களாக  ஒரு பெண்ணின் சிநேகிதம் இருந்தது என்றும் அவளுடன்  வாழப்போவதாக சொல்லி விட் டாராம்.  அவளும் மன்றாட்டமாய் கேட்டாள் . பிள்ளை களை   எண்ணி தன்னுடன் சேர்த்து வைக்க ம்கேட்டு கெஞ்சினாள் .அவரோ இது குடும்ப விடயம் என் நழுவி விட்டார்.      அவன் மனம் மாறுவான் என் காத்திருந்தாள் .  ...அப்போது தான் அவள்  கடந்த கால அவனது நடவடிக்கைகளை அசை போட்டாள் . . சில் மாதங்களாகவே திட்டமிட்டு வீட்டை யும் விற்க  பண்ணி ..அதில் வந்த தொகையில் சிறுபகுதியில் இந்த மூன்று  அறைகொண்ட (கொண்டோ )தொடர் மாடியை வங்கி விட்டு  மீதிப்ப் பணத்தை தன வசபடுத்தி விட்டான்  என்று.

 

 

இனி என்ன செய்வாள் தன் னோடு   வாழப் ப்பிடிக்காத வனை ?  விவாக ரத்து மிகவும் மலிந்த   பொருளாகி விட்டது .பதின் மூன்று வருட இல் வாழ்க்கை சலித்து விட்டது ..ஒரு  கணமாவது  பெற்ற பிள்ளைகளை எண்ணி பார்த்தானா? மகள் மிகவும் சோகமாய் இருக்கிறாள். எப்படி விளங்கக் படுத்துவேன்...அவனது அயோக்கிய  தனத்தை ...சென்ற வா ரம் அம்மாவும் தங்கை குடும்பமும் வந்துபார்த்து விட்டுபோனார்கள் ...ஒரு விழாவுக்கு சென்றால் ஊரவர்  உறவினர் என்ன எண்ணுவார்கள்.  பெண்கள்  கூடிக் கதைப்பார்கள் . இப்படியும் ஒரு துரோகமா... இரண்டு பிள்ளைகளுக்கு  தந்தை யானவனை எப்படி தான்  வளைத்து பிடித்தாளோ  ...இன்று சில ஆசைகளுக்காக  என்னை விட்டு செல் கிற வன் நாளைக்கு அவளையும் விட்டு செல்ல மாட்டான் என்பது என்ன நிச்சயம் ...மின்னுவதெல்லாம்  பொன்னென்று  எண்ணி ..இவனது மதி கெ ட்ட  தனத்தால் வரும் விளைவு...

என் பிள்ளைகள்   என்ன பாவம் செய்தார்கள். .? அவர்களை தாயும் தந்தையுமாக் கவனித்து வளர்க்கக் வேண்டும்... இப்படியானவர்கள் எப்போது  ஒரு குடும்பத்தின் அருமை பெருமை .. பெறுமதியினை  உணரபோகிரார்கள்..?..கட்டியவளைக் கைவிட்டு,  , காசுபண மேலாம் சுருட்ட ..கூட  வந்து  ஓட்டியவளு ம் கை விட்டு,  நோய் வாய்பட்டு வைத்திய சாலை யில் ..பார்க்க ஒருவருமில்லாமல் ...கடந்த காலத்தை  நினைத்து க டைக் கண்ணால்  நீர் வழிய .....அப்போது காலம் கடந்து விடும். .இவ்வாறு எண்ணியவள் நன்றாக  அயர்ந்து போனாள் .

 

திடீரென விழித்தவள்  நேரத்தை பார்த்தும் ..ஒ இன்று சனிக் கிழமை சற் று அவர்கள் தூங்கட்டும் என்று  எண்ணி சத்தமிடாமல் எழுந்து சென்று காலை க் கடன் கலைமுடித்து காலை  உணவுக்கு தயாரானாள் .என்ன கஷ்ட் துன்பம் வந்தாலும் என்  பிள்ளைகளை  வளர்த்து ஆளாக்குவேன் என்று எண்ணிய வாறு பிள்ளைகளை .தற்காப்புக் கலை (.கராட்டி) வகுப்புக்கு அழைத்து  செல்ல  தயாரானாள் ஒருபுதுமை பெண்ணாக ..........

 

கதை கற்பனை அல்ல  பெண்கள் விழிப்பாக இருக்க வேண்டும் தன்னம்பிகையுடன்   வாழ  வேண்டும் எனும் நல்  நோக்கத்துக்காக எழுதபட்ட குட்டிக் கதை . .

Edited by நிலாமதி

கதை எழுதியதற்குப் பாராட்டுகள்! 

கதையைப்பற்றி ஆறுதலாக சொல்லுகிறேன்!  :o  :)

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எத்தனையோ விடயங்கள் புலம்பெயர்  சூழலில் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. சமூக கால மாற்றங்கள் இவற்றை சாதாரணமாக்கி விட்டுவிட்டன. நன்றி அக்கா கதைக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

நிலாக்கா நன்றாக கதையை நகர்த்தி இருக்கிறீர்கள். கதையில் படிமம் இயல்பாக நகர்ந்திருக்கிறது. வாழ்க்கை ஒரு வட்டம் என்ற தலைப்பு கதையோடு சரியாக பின்னிவரவில்லைபோலத் தோன்றுகிறது. இந்தக்கதை ஒரு ஆணின் சுயநலத்தை அப்பட்டமாக சொல்கிறது. பெண்ணிற்கான தீர்வை விதியென்று ஏற்றிருக்கிறது. இலகுவாக பெண் ஏமாற்றப்படக்கூடியவள் என்பதை மட்டுமே கதாசிரியராக சொல்லமுற்படுகிறீர்களா? 

  • கருத்துக்கள உறவுகள்

சில பெண்களின் இயலாமையைக் கூறுகின்றீர்கள்  போலிருக்கு , பிள்ளைகளுக்கு அவர் ஏதாவது செய்துதானே ஆகவேண்டும்...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இப்படியான சோகக்கதைகளை நேரடியாகவே பார்த்திருக்கின்றேன்.
ஒரு சமூக கதையை தந்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு படிப்பினைக் கதை, நிலாக்கா!

 

என்னைக்கேட்டால், தவறு முழுவதும் எமது கலாச்சாரத்திலேயே தங்கியுள்ளது.

 

பொதுவாக, எமது கலாச்சாரத்தில் பெண்கள், திருமணம் முடிந்ததும்,தங்கள் உறவுக்குச் 'சமுதாயமும்', 'உறவுகளும்' என்றுமே காவலாக இருக்கும் என்று நினைத்துவிடுவது தான் தவறு!

 

வெளிநாட்டு வாழ்க்கையில், சமுதாயக்காவலும், உறவுகளின் காவலும் இல்லாமல் போய்விடுகின்றன என்பதை நாம் 'வசதியாக' மறந்து விடுகின்றோம் ! 

 

 

Edited by புங்கையூரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை எழுதியதற்குப் பாராட்டுகள்! 

கதையைப்பற்றி ஆறுதலாக சொல்லுகிறேன்!  :o  :)

 

வரவுக்குனன்றி.  உங்கள்க கருத்துக்காக  காத்திருக்கிறேன்.

இப்படி எத்தனையோ விடயங்கள் புலம்பெயர்  சூழலில் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. சமூக கால மாற்றங்கள் இவற்றை சாதாரணமாக்கி விட்டுவிட்டன. நன்றி அக்கா கதைக்கு.

 

வருகைக்கு  நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிலாக்கா நன்றாக கதையை நகர்த்தி இருக்கிறீர்கள். கதையில் படிமம் இயல்பாக நகர்ந்திருக்கிறது. வாழ்க்கை ஒரு வட்டம் என்ற தலைப்பு கதையோடு சரியாக பின்னிவரவில்லைபோலத் தோன்றுகிறது. இந்தக்கதை ஒரு ஆணின் சுயநலத்தை அப்பட்டமாக சொல்கிறது. பெண்ணிற்கான தீர்வை விதியென்று ஏற்றிருக்கிறது. இலகுவாக பெண் ஏமாற்றப்படக்கூடியவள் என்பதை மட்டுமே கதாசிரியராக சொல்லமுற்படுகிறீர்களா? 

 

 ஆம் அவள் ஏமாற்றபட்டு விட் டாள். ஆனால் ஆசையும் மயக்கமும் தீர்ந்து விட ..மனம் மாறி மன்னிப்பு கேட்டுவருவான்  என ஒரு சின்ன உள்ளுணர்வும் இருக்கிறது. 

 

மீண்டும் சுய நலத்துக்காக  வந்தவள் அவனை  ஏமாற்று வாள் என்பதையும்  குறிக்கும். அதனால் வாழ்க்கை ஒருவட்டம்  என கருதினேன்

சில பெண்களின் இயலாமையைக் கூறுகின்றீர்கள்  போலிருக்கு , பிள்ளைகளுக்கு அவர் ஏதாவது செய்துதானே ஆகவேண்டும்...!

 

 

அவர் விரும்பினால் செய்யட்டும். ஆனால் அவள் படித்தவள் வங்கியில் வேலை 

 

..தன் காலில்நிற்கும் தென்பு  உண்டு.

 

இப்படியான சோகக்கதைகளை நேரடியாகவே பார்த்திருக்கின்றேன்.
ஒரு சமூக கதையை தந்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்.

 

 

தங்கள் வருகைக்கு நன்றி

நல்ல ஒரு படிப்பினைக் கதை, நிலாக்கா!

 

என்னைக்கேட்டால், தவறு முழுவதும் எமது கலாச்சாரத்திலேயே தங்கியுள்ளது.

 

பொதுவாக, எமது கலாச்சாரத்தில் பெண்கள், திருமணம் முடிந்ததும்,தங்கள் உறவுக்குச் 'சமுதாயமும்', 'உறவுகளும்' என்றுமே காவலாக இருக்கும் என்று நினைத்துவிடுவது தான் தவறு!

 

வெளிநாட்டு வாழ்க்கையில், சமுதாயக்காவலும், உறவுகளின் காவலும் இல்லாமல் போய்விடுகின்றன என்பதை நாம் 'வசதியாக' மறந்து விடுகின்றோம் ! 

 

தங்கள் வருகைக்கு நன்றி ...பெண்கள் முழுக்க் முழுக்க  கணவனையே   சார்ந்து இருக்க கூடாது .. களவும் கற்று மற  என்பது போல தள்ளிவிட் டாலும் நீந்த கற்றுக்  கொள்ள  வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

கதை கற்பனை அல்ல 

பெண்கள் விழிப்பாக இருக்க வேண்டும் தன்னம்பிகையுடன்   வாழ  வேண்டும் எனும் நல்  நோக்கத்துக்காக எழுதபட்ட குட்டிக் கதை . .

 

 

 

ஒரே மாதிரியான வாழ்க்கை

ஒரே பொருளை  நுகர்தல்....

போன்றவற்றால்  சிலர் தடுமாறுவதுண்டு

காலம் அவர்களைத்தண்டிக்கும்

ஆனால் அந்த பிஞ்சுகளே உடனடியாக

இதற்கான விலையைக்கொடுப்பர் என்பது   வேதனை  தரும் உண்மை

முடிவு தேவையானது...

 

நன்றி  பாட்டி

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை அக்கா பாராட்டுக்கள்.

வாழ்வில் ஒரு போதும் தன்னம்பிக்கையை மட்டும் இழக்க கூடாது

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை என்று சொல்ல மனம் வரவில்லை இது இன்னொரு உறவின் வலி என்பதால்.. இதை தனியே ஆண்கள் மட்டும்தான் இப்படி செய்வது என்பதை ஏற்றுகொள்ளமுடியாது... இப்படி பல பெண்களும் குடும்பங்களையும் பிள்ளைகளையும் விட்டு தறிகெட்டுதிரிகிறார்கள்.. இதுகுறித்து நெடுக்ஸ் அண்ணாவின் என்றியை எதிர்பார்க்கிறேன்.. :D கதைக்கு நன்றி அக்கா..

இப்ப இப்பிடி நிறையவே நடக்குதாம். ஏனுங்க கலாச்சாரத்தை மறக்கிறீங்க.

  • 2 weeks later...

கதை நன்றாக இருந்தாலும் சிறிது செம்மைப்படுத்தலில் கவனம் செலுத்துங்கள் .கதைக்கு வாழ்த்துக்கள் நிலாமதி .

  • கருத்துக்கள உறவுகள்

விவாகரத்தின்பின் முன்னாள் கணவன் உதவித்தொகை கொடுக்க வேண்டி வரும். இது அந்தப் புது மனைவிக்கு சில மாதங்களின் பின் எரிச்சலைக் கொடுக்கும். ஆகையால், நிம்மதியான வாழ்க்கைக்கு வழியில்லை. :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.