Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய தேர்தல் முடிவுகளை காண்போமா?

Featured Replies

ஏதோ எங்கள் மண்னை காக்க  மாநில சுயாட்சியை ஆவது  இருவரும் சேர்ந்து பெற்று தரட்டும்..

 

ஆனால் தமிழ்நாட்டுக்கு பிரசாரம் செய்ய வந்த மோடி  ஈழத்தமிழர் பற்றி வாய் திறக்கவில்லை  அதே நேரம்  இந்திய தமிழக மீனவர்களையும் குயராத் மீனவர்கள்  பாக்கிஸ்தானால்  தாக்கப்படுவதாக சேர்த்து தான்    பேசினாரே தவிர  சிறப்பாக தமிழக பிரச்சனை பற்றி பேசவில்லை.

எல்லாம்  அம்மா கையில் .

 

விசயத்தை விளங்க வைக்கனும்.

  • Replies 474
  • Views 31.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நம்ப முடிகிறதா.. காங்கிரசுக்கு அதிகமான தொகுதிகளை வென்று கொடுத்த மாநிலம் கேரளா.. :wub:

12 தொகுதிகள்..

நம்ப முடிகிறதா.. காங்கிரசுக்கு அதிகமான தொகுதிகளை வென்று கொடுத்த மாநிலம் கேரளா.. :wub:

12 தொகுதிகள்..

சோனியாவின் எடுபிடிகள் எல்லாம்   மலையாளிகள்.

 

சிவசங்கர், நாராயனன்.  தமிழனுக்கு ஆப்பு வைத்தவர்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறுதி யுத்தத்தை நடத்தி முடித்து கிட்டதட்ட 4,5 வருடஙகளுக்குப் பிறகு காங்கிரசும்,திமுகாவும் ஆட்சியில் இல்லாமல் போகிறார்கள்.இதை ஏதோ தாங்கள் சாதிச்ச மாதிரி தமிழன் கொண்டாடுகிறான்.அந்தளவிற்கு இருக்கு தமிழனின் நிலை

 

விபரமாக வாசித்தால் தெரியும் இங்கே மோடி வென்றது என்ற சந்தோசத்தைவிட கருணாநிதியும் காங்கிரசும் படு தோல்வி அடைந்ததையே நாங்கள் எங்கள் வெற்றியாகக் கருதுகின்றோம் .

 

நோட் திஸ் பொயின்ற் யுவர் ஆர்னர் :D :D :lol:

 

நம்ப முடிகிறதா.. காங்கிரசுக்கு அதிகமான தொகுதிகளை வென்று கொடுத்த மாநிலம் கேரளா.. :wub:

12 தொகுதிகள்..

 

1.நன்றிக் கடனுக்காக நாயாப் பேயா அலைந்து வேலை செய்திருக்கின்றார்கள்.

2. ஈழத் தமிழர்களின் இரத்தத்தின்  ருசி கண்டவர்கள் அல்லவா??

இன்னும் தேவையாக இருக்கின்றது. அதற்காகக் காங்கிரஸிற்கு வேலை செய்திருப்பார்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி யுத்தத்தை நடத்தி முடித்து கிட்டதட்ட 4,5 வருடஙகளுக்குப் பிறகு காங்கிரசும்,திமுகாவும் ஆட்சியில் இல்லாமல் போகிறார்கள்.இதை ஏதோ தாங்கள் சாதிச்ச மாதிரி தமிழன் கொண்டாடுகிறான்.அந்தளவிற்கு இருக்கு தமிழனின் நிலை

 

அதுதான் தமிழன்!

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுதான் தமிழன்!

 

 

இலட்சக்க கணக்கில் ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்து ஐந்து வருடங்கள் சென்றும் அவர்களுக்கான எந்தத் தீர்வையும் பெற்றுக் கொடுக்க முன்வராமல்..... இனவாத மகிந்த அரசின் கீழ் இன்னூம்  தங்கள் சுய லாப  அரசியலைச் செய்து கொண்டு யாழ்ப்பாணத்தில் சிங்கள் இராணுவத்துடன் சேர்ந்து வெசாக் கோடி ஏற்றித் திரிபவர்களும் தமிழர்கள் தானே அல்லது வேற்றுக் கிரக வாசிகளோ வாலி   

 

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி யுத்தத்தை நடத்தி முடித்து கிட்டதட்ட 4,5 வருடஙகளுக்குப் பிறகு காங்கிரசும்,திமுகாவும் ஆட்சியில் இல்லாமல் போகிறார்கள்.இதை ஏதோ தாங்கள் சாதிச்ச மாதிரி தமிழன் கொண்டாடுகிறான்.அந்தளவிற்கு இருக்கு தமிழனின் நிலை

 

அந்த...அள‌விற்கு, எங்களது புல நாய்கள் வேலை செய்திருக்கு, ரதி.

தமிழ்நாடு மட்டுமே இந்தியா என்பதுபோல் போகுது சில கருத்து இப்ப மதவாதி மோடி ஆட்சி எதிர்த்தவர்கள் என்ன செய்ய போகினம் ......வழமையா மீனவன் சுடுபட்ட ஒரு கடிதம் கோரிக்கை அப்படியே போயிடும் காலம் கேட்டால் மத்திய ஆட்சியில் அங்கம் வகிக்க வில்லை அதனால் எங்களை புறக்கணிக்குது  அரசு என்று சொல்லி தப்பித்து கொள்ளலாம் ...

 

37 எடுத்து என்ன பயன் தனித்து நின்றது பேரம் பேச கடைசியில் அதிக பெருன்பான்மை கொண்டு மோடி வந்ததால் அதுவும் இல்லாமல் போயிட்டு ...

 

காகம் இருக்க பனம் பழம் விழ்ந்த கதை சீமானின் கதை ..திராவிட கட்சியுடன் கூட்டணி இல்லை ஆனால் ஆதரவு பிரச்சாரம் கூலிக்குமாரடிப்போர் ..

 

எல்லாவற்றுக்கும் விடை 2016 கிடைக்கும் யார் யார் தமிழ் தேசியத்தின் உண்மை முகம் பிழைப்பு முகம் என்று .

  • கருத்துக்கள உறவுகள்

சோனியாவின் எடுபிடிகள் எல்லாம்   மலையாளிகள்.

 

சிவசங்கர், நாராயனன்.  தமிழனுக்கு ஆப்பு வைத்தவர்கள்

 

இந்தியாவின் வெளி விவகார பொறுப்பாக இருந்த...

நாராயணன் என்ற ஒரு மலையாளி, கொழும்பில்...

வெறுங்காலுடன், காலி ரோட்டில் நடக்க வைத்தவன், சிங்களவன்.

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி யுத்தத்தை நடத்தி முடித்து கிட்டதட்ட 4,5 வருடஙகளுக்குப் பிறகு காங்கிரசும்,திமுகாவும் ஆட்சியில் இல்லாமல் போகிறார்கள்.இதை ஏதோ தாங்கள் சாதிச்ச மாதிரி தமிழன் கொண்டாடுகிறான்.அந்தளவிற்கு இருக்கு தமிழனின் நிலை

அதுக்கு நாங்க என்ன செய்யுறது. அங்க அஞ்சு வருசத்துக்கு ஒருக்காத்தானே தேர்தல் வருது.

இறுதி யுத்தத்தை நடத்தி முடித்து கிட்டதட்ட 4,5 வருடஙகளுக்குப் பிறகு காங்கிரசும்,திமுகாவும் ஆட்சியில் இல்லாமல் போகிறார்கள்.இதை ஏதோ தாங்கள் சாதிச்ச மாதிரி தமிழன் கொண்டாடுகிறான்.அந்தளவிற்கு இருக்கு தமிழனின் நிலை

உண்மையை சொல்லுங்கோ ரதி, உங்களுக்கு இறுதி யுத்தம் நடந்து முடிந்து சரியாக எத்தனை வருடங்கள் என்று தெரியாதா ..?

ஒன்று மட்டும் உண்மை ஈழ பிரச்சினை தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு உணர்வு எழிச்சி மட்டுமே ...

இந்தியா என்று வந்துவிட்டால் அவர்கள் ஈழம் மறந்து இந்திய நலனுக்கான முடிவையோ எடுப்பர் என்பது இந்த தேர்தல் முடிவு சொல்லி போய் இருக்கு ...

ஈழ தமிழர் தங்களுக்கான விடுதலையை தாங்களே தேடவேண்டும் .அவர் செய்வார் இவர் செய்வார் என்று காத்து இருந்தா இன்னும் நாற்ப்பது வருடம் போனாலும் பேஸ்புக்கில் படம் மாற்றுவதுடன் நிக்கும் .. முள்ளிவாய்க்கால் நினைவு வந்து போகும் .

  • கருத்துக்கள உறவுகள்

38 தொகுதிகளில் டெபாசிட் இழந்த காங்கிரஸ் கட்சி!

 

தமிழகத்தில் கன்னியாகுமரி தவிர மற்ற 38 தொகுதிகளில் டெபாசிட் தொகையை காங்கிரஸ் பறிகொடுத்துள்ளது.

தமிழகத்தில் சுமார் 4.4 சதவீத வாக்குகள் மட்டுமே காங்கிரஸýக்கு கிடைத்துள்ளது.

நடந்து முடிந்த 16-ஆவது மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டது.

ஒரு வேட்பாளர், தான் செலுத்திய டெபாசிட் தொகையை திரும்பப் பெற வேண்டுமானால் மொத்தம் பதிவான வாக்குகளில் 6-இல் 1 பங்குக்கு அதிகமாக பெற வேண்டும்.

கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் எச். வசந்தகுமார் சுமார் 2.50 லட்சம் வாக்குகளைப் பெற்றார். இவரைத் தவிர காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட 38 பேரும் டெபாசிட் தொகையை இழந்தனர்.

எஸ்.எஸ். ராமசுப்பு (திருநெல்வேலி), சாருபாலா தொண்டைமான் (திருச்சி), ஏ.பி.சி.வி. சண்முகம் (தூத்துக்குடி), ஜே.எம். ஹாரூண் (தேனி), கே. ஜெயகுமார் (தென்காசி), கார்த்தி சிதம்பரம் (சிவகங்கை), சு. திருநாவுக்கரசர் (ராமநாதபுரம்), மணிசங்கர் அய்யர் (மயிலாடுதுறை), ஆர். பிரபு (கோவை), ஆர். ராஜேஷ் (அரக்கோணம்) ஆகியோர் 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

கடந்த 2009 மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் ராமநாதபுரத்தில் போட்டியிட்ட திருநாவுக்கரசர் சுமார் 1,30,000 வாக்குகள் பெற்றார். ஆனால், இப்போது இதே தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட அவருக்கு சுமார் 63 ஆயிரம் வாக்குகளே கிடைத்துள்ளன.

காங்கிரஸýக்கு தமிழகத்தில் 10 சதவீதத்துக்கும் அதிகமான வாக்கு வங்கி இருப்பதாக அக்கட்சி தலைவர்கள் கூறி வந்த நிலையில் சுமார் 4.4 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன.

 

Source: http://www.dinamani.com/tamilnadu/2014/05/17/38-தொகுதிகளில்-டெபாசிட்-இழந்த-/article2229346.ece

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

ஒன்று மட்டும் உண்மை ஈழ பிரச்சினை தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு உணர்வு எழிச்சி மட்டுமே ...

இந்தியா என்று வந்துவிட்டால் அவர்கள் ஈழம் மறந்து இந்திய நலனுக்கான முடிவையோ எடுப்பர் என்பது இந்த தேர்தல் முடிவு சொல்லி போய் இருக்கு ...

ஈழ தமிழர் தங்களுக்கான விடுதலையை தாங்களே தேடவேண்டும் .அவர் செய்வார் இவர் செய்வார் என்று காத்து இருந்தா இன்னும் நாற்ப்பது வருடம் போனாலும் பேஸ்புக்கில் படம் மாற்றுவதுடன் நிக்கும் .. முள்ளிவாய்க்கால் நினைவு வந்து போகும் .

 

 

ஈழத் தமிழன் இதுவரை தன விடுதலைக்காகத் தான் மட்டுமே போராடினான். அது உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைத்தான்

ஹிந்திய  காங்கிரஸ் தன் சொந்த விருப்பு வெறுப்புக்களுக்காகச் சிங்களத்துக்குத் துணைபோய் தமிழர்களின் போராட்டத்தைச் சிதைத்ததும் உங்களிக்குத் தெரிய வாய்ப்பில்லைத்தான்,

ஹிந்திய  உபத்திரவம்  இருந்தால் ஈழ விடுதலையில் பின்னடைவு ஏற்படும் என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைத்தான்.

அதுவும் ஹிந்திய காங்கிரஸ் இந்தியாவை ஆண்டால் ஈழத்தமிழன் மீண்டெழுவதில் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைத்தான்  

இப்போது மட்டும் சந்தில் சிந்துபாட மட்டும் உங்களுக்குத் தெரிந்திருக்கின்றது என்பது எங்களுக்கு எப்போதோ தெரியும் :D:icon_idea:

 

ஈழத் தமிழன் இதுவரை தன விடுதலைக்காகத் தான் மட்டுமே போராடினான். அது உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைத்தான்

ஹிந்திய  காங்கிரஸ் தன் சொந்த விருப்பு வெறுப்புக்களுக்காகச் சிங்களத்துக்குத் துணைபோய் தமிழர்களின் போராட்டத்தைச் சிதைத்ததும் உங்களிக்குத் தெரிய வாய்ப்பில்லைத்தான்,

ஹிந்திய  உபத்திரவம்  இருந்தால் ஈழ விடுதலையில் பின்னடைவு ஏற்படும் என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைத்தான்.

அதுவும் ஹிந்திய காங்கிரஸ் இந்தியாவை ஆண்டால் ஈழத்தமிழன் மீண்டெழுவதில் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைத்தான்  

இப்போது மட்டும் சந்தில் சிந்துபாட மட்டும் உங்களுக்குத் தெரிந்திருக்கின்றது என்பது எங்களுக்கு எப்போதோ தெரியும் :D:icon_idea:

 

எல்லாம் தெரிந்து இருந்தும் வீழ்த்து போனோம் என்பது கூட என்னுடன் சேர்த்து உங்களுகும் தெரிய வாய்ப்பில்லை தான்  :D

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரனின்... பம்மாத்து,
விளையாட்டுக்களை... பரியாரிரும் அறிந்தது, மகிழ்ச்சி. :D  :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் தெரிந்து இருந்தும் வீழ்த்து போனோம் என்பது கூட என்னுடன் சேர்த்து உங்களுகும் தெரிய வாய்ப்பில்லை தான்  :D

 

ஓ கே யோ...  இனிமேலாவது விட்ட பிழைகளைத் தவிர்த்து கைகோர்த்துச்  சேர்ந்து ஈழத்தமிழர்களின் இனவிடுதலைக்காகப் போராடுவோம் :D:icon_idea:

 

முள்ளிவாய்க்கால் நினைவு தினமான   இன்று, எம்மை அழித்தவர்களை  5 ஆண்டுகள் கழித்து அதே தினத்தில் இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் நீதிதேவதை துவம்சம் செய்துள்ளாள். தருமத்தையும் நீதியையும் நம்புவர்கள் கொஞ்சம் பொறுமையாக இருங்கள், நீதிதேவதை எம்மை நிச்சயம் அரவணைப்பாள்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
மத்தியில் எந்த ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும் ஈழத்தமிழனுக்கு அழுதகண்ணீரும் சோறும் தான் மிச்சம்......இருந்தாலும் வாழ்த்துக்கள் சொல்வதில்  ஒன்றும் குறைந்துவிடப்போவதில்லை. :D
 
வருங்கால இந்தியப்பிரதமர் மோடிக்கு என் வாழ்த்துக்கள்.

இந்த தேர்தலின் ஒரே நல்ல விடயம் மோடியிடம் எல்லா அதிகாரத்தையும் கொடுத்ததே....

நல்ல வேளை தமிழ்நாட்டில் இருந்து  எந்த மந்திரியும் போக போவதில்லை (கையில் காலில் விழுந்து அன்புமணி வேண்டுவாரோ தெரியாது...வாய்பாயி நேரத்திலும் இருந்த படியால்..திறமையாக சுகாதார துறையில் செயல்பட்டதாகவும் கதை)..ஆகவே ஊழல் பட்டம் இந்த முறை கிடையாது...ஆனால் தமிழ் நாட்டு MPகள் பாராளுமன்றம் போகவே தேவையில்லை.....

 

சுப்பிரமணியம் சுவாமி வெளியுறவு மந்திரியாக (எலெக்சனில் நின்றாரா?) நியமிக்கப்படலாம் :) என்றும் ஒரு கதை..

  • கருத்துக்கள உறவுகள்
ஜெயலலிதாவும், மோடியும் உலகிலேயே சக்திவாய்ந்த தலைவர்கள்: நடிகர் விஜய் புகழாரம்
Posted by: Veera Kumar Updated: [iST] சென்னை:
 
மோடியும், ஜெயலலிதாவும் உலக அளவில் மிகப்பெரிய சக்திகள் என்று நடிகர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.
 
இதுகுறித்து நடிகர் விஜய் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் இந்திய அளவில் ஓர் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.தேசிய அளவில் அதிக இடங்களை கைப்பற்றிய நரேந்திரமோடிக்கும், தமிழகத்தில் வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும், எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
 
உலக அளவில் பெரும் சக்தியாக திகழும் இந்த இரு தலைவர்களும் உலக அளவில் இந்தியாவை வல்லரசு நாடாகவும், இந்திய அளவில் தமிழகத்தை முதன்மை மாநிலமாகவும் மாற்றி காட்டுவார்கள் என்ற கோடானு கோடி மக்களின் நம்பிக்கையில் நானும் ஒருவனாக இந்த வெற்றியை எண்ணி சந்தோஷமடைகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

இவர்களுடன் சீமானின் பெயரை விஜெய் சேர்க்காமல் விட்டதற்கு இங்கு கொஞ்ச பேர் விஜெயில கோவிக்க போகினம்  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்
Preserve the Idea of India With the BJP winning a majority on its own, a remarkable paradigm shift has clearly taken place in the trajectory of India’s parliamentary politics.

The sensational sweep and scale of the Bharatiya Janata Party’s electoral victory was unquestionably the direct result of the strong upsurge in the popularity of its prime ministerial candidate, Narendra Modi. The Gujarat Chief Minister was clearly the star campaigner and the massive “Modi wave” that has clearly caught the imagination of large sections of India’s voters has given the BJP-led National Democratic Alliance an unprecedented and historic mandate. With the BJP winning a majority on its own, a remarkable paradigm shift has clearly taken place in the trajectory of India’s parliamentary politics. Breaking the trend of the last few decades in which no party was able to pull off a runaway victory of this kind, the BJP will come to power, free from the pressures of coalition politics, giving it unfettered space and scope to govern. This election marked the entry of 100 million new voters, young Indians impatient for change and extremely aspirational in their focus. The voter turnout — 66.38 per cent — was the highest ever in India’s post-Independence electoral history, beating the record of 1984 when 64.01 per cent of Indians voted in the aftermath of Indira Gandhi’s assassination.

This landmark election has also seen the incumbent United Progressive Alliance crash to an ignominious defeat with the Congress party, already on a downward spiral in several elections, now humiliatingly reduced to a double-digit figure in Parliament, its worst electoral tally since Independence. An indefensibly uninspiring campaign led by Rahul Gandhi failed to rally a young and impatient electorate. The BJP’s landslide victory, almost entirely attributable to the sweeping effect of the Modi wave across India, reflects the intensity of the desire for more effective governance. The rising public anger as a result of the UPA’s policy paralysis, stalled economic growth and worst of all, the series of corruption scandals, created a hunger for change especially among young Indians who see Mr. Modi as a leader symbolising their expectations of fast economic growth unshackled from red tape and corruption. It is indeed an ironic twist of history that the Gujarat Chief Minister whose governing record is shadowed by the disquieting facts that have not really gone away — relating to his moral and political responsibility for the Gujarat pogrom of 2002 — has adroitly become the beneficiary of the increasing eagerness for a higher growth trajectory. It is also discomfiting that the election campaign that Mr. Modi conducted in the Hindi heartland States, especially Uttar Pradesh, drew heavily upon Hindu cultural nationalism, invoking as he did Hindu sacred geography in Varanasi and using Hindu cultural idioms, not really imagery suitable to the public space in democratic India.

Mr. Modi emphatically asserts that his agenda is all about governance and economic change. We welcome his assertion and wish him well in his efforts in this regard. But the reality remains that there is a huge trust deficit with the minorities, especially the Muslim community, which must be addressed. He is still regarded as a deeply polarising figure not really reaching out to minorities unlike many of his senior colleagues in the BJP or even the RSS who have made some political attempts to bridge the divide. In order to close the credibility gap that persists as regards his acceptability to govern all Indians, Mr. Modi must ensure that the idea of India as a pluralist and inclusive landscape in which all citizens have equality before the law as constitutionally decreed, is upheld consistently and transparently, while he is in office as Prime Minister. He tweeted exuberantly upon hearing the election results that “India has won!” Indeed the task ahead is to ensure that all Indians share that sense of belonging and participation in the national governing agenda. With these cautionary notes, we offer our congratulations to Narendra Modi, India’s next Prime Minister, and wish him all success, for his own sake and India’s too.

 

THE HINDU

  • கருத்துக்கள உறவுகள்
சரிபாதி பறிபோன தேமுதிக: கடந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட தேமுதிக 10.8% சதவீத வாக்குகளைப் பெற்றது. தற்போது பாஜக கூட்டணியில் 14 இடங்களில் போட்டியிட்ட அந்தக் கட்சி 5.1% வாக்குகள் என்ற ஒற்றை இலக்கத்துக்குள் சுருங்கிப் போய் படுத்துக் கொண்டது.
 
படுதோல்வி அடைந்த காங்: கடந்த தேர்தலில் திமுக அணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 15.03% வாக்குகளைப் பெற்றிருந்தது. ஆனால், இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 4.3% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.
 
தடுமாறிப் போன பா.ம.க: பாமகவும் கடந்த தேர்தலில் 6.28% வாக்குகளைப் பெற்றிருந்தது. ஆனால் இம்முறையோ 4.4% வாக்குகளைத்தான் பெற முடிந்துள்ளது. அதுவும் மெகா கூட்டணியில் இடம்பெற்றும் கூட இதைத்தான் எட்ட முடிந்துள்ளது.
 
தக்க வைத்த மதிமுக: மதிமுக மட்டுமே தனது வாக்கு சதவீதத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது. கடந்த தேர்தலில் 3.67% வாக்குகளைப் பெற்றது. அது இப்போது 3.5% என சற்று குறைந்துள்ளது.
 
சாதித்த பாஜக: தமிழகத்தில் பாஜக கடந்த தேர்தலில் 2.3% வாக்குகளை மட்டுமே பெற்றது. ஆனால், இந்தத் தேர்தலில் 5.5% வாக்குகளைப் பெற்றதுடன், ஒரு தொகுதியிலும் வெற்றியைப் பெற்றுள்ளது.
 
நன்றி தட்ஸ்தமிழ்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
10 தொகுதிகளில் டெபாசிட் இழந்த தேமுதிக, பாமக-3, மதிமுக-2
 
லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக 10 தொகுதிகளில் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளது. பாமக 3 தொகுதிகளிலும், மதிமுக 2 தொகுதிகளிலும் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளது.
 
10 தொகுதிகளில் டெபாசிட் இழந்த தேமுதிக, பாமக-3, மதிமுக-2 தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., ஐ.ஜே.கே., கொங்குநாடு மக்கள் கட்சி இடம் பெற்றது.
 
நீலகிரி நீங்கலாக 38 தொகுதியில் போட்டியிட்டது பாஜக கூட்டணி 38ல் 2 வெற்றி இதில் பாஜக கன்னியாகுமரி தொகுதியிலும், பா.ம.க. தர்மபுரி தொகுதியிலும் மட்டும் வெற்றி பெற்றது. மற்ற 36 தொகுதியிலும் படுதோல்வி அடைந்தது.
 
தேமுதிக 10 காலி
 
இதில் கூட்டணிக்கு தலைமை தாங்கி அதிகபட்சமாக 14 தொகுதியில் போட்டியிட்ட தே.மு.தி.க. வடசென்னை, கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், நாமக்கல், திண்டுக்கல், கரூர், திருச்சி, கடலூர், மதுரை, நெல்லை ஆகிய 10 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது.
 
பாமக 3 காலி பா.ம.க. 8 தொகுதியில் போட்டியிட்டு தர்மபுரியில் வெற்றி பெற்றது. நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுவை ஆகிய 3 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது.
 
மதிமுகவுக்கு 2 அவுட் ம.தி.மு.க. 7 தொகுதியில் போட்டியிட்டது. இதில் தேனி, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 2 தொகுதிகளில் டெபாசிட்டினை பறிகொடுத்தது.

Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/dmdk-forfeits-deposit-10-constituencies-lse-201255.html

காங்கிரஸில் கார்த்தி, வசந்த்குமாரைத் தவிர யாருமே 1 லட்சத்தை எட்டலை.
 
காங்கிரஸ் கட்சியின் சார்பில் தமிழகத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களில் கன்னியாகுமரி வசந்தகுமார் மற்றும் சிவகங்கை கார்த்தி சிதம்பரத்தைத் தவிர யாருமே 1 லட்சம் வாக்குகளை எட்டவில்லை.
 
காங்கிரஸில் கார்த்தி, வசந்த்குமாரைத் தவிர யாருமே 1 லட்சத்தை எட்டலை! லோக்சபாத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.
 
இதில் மத்தியில் பாஜகவும், தமிழகத்தில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன.தமிழகத்தில் தனித்து போட்டியிட்ட காங்கிரஸின் ஒரு வேட்பாளர் கூட வெற்றிப் படியை அடையவில்லை. கடந்த தேர்தலில் திமுக அணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 15.03 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது. ஆனால், இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 4.4 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.
 
கன்னியாகுமரியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வசந்தகுமார் 2,44,244 வாக்குகளையும், சிவகங்கையில் போட்டியிட்ட கார்த்திக் சிதம்பரம் 1,03,273 வாக்குகளையும் பெற்று ஒரு லட்சத்தை தொட்டுள்ளனர். ஆனால், மீதமுள்ள 36 தொகுதிகளில் ஒன்றிக் கூட காங்கிரஸ் வேட்பாளர்கள் 1 லட்சம் வாக்குகளைத் தொடவில்லை.
 
இதில் காங்கிரஸின் நட்சத்திர வேட்பாளர்களான திருநாவுக்கரசர், மணிசங்கர் ஐயர் ஆகியோரும் அடங்குவர்.

Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/congress-candidates-didn-t-reach-1-lakh-votes-lse-201243.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.