Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆண்களை விட பெண்கள் மன அழுத்ததிற்கு ஆளாவது ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 ஆண்களை விடவும் இளம்பெண்கள் அதிகமான மன அழுத்ததிற்கு உள்ளாவதாக சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கின்றது.

இதற்கு காரணம், ஆஸ்ட்ரோஜென் என்னும் பாலியல் ஹார்மோன் பெண்களின் மூளையில் ஏற்படுத்தும் மாற்றத்தால், அதிகமான ரத்தம் செலுத்தபட்டு மன உளைச்சலை ஏற்படுத்துகின்றது.

 

 

இதுபோன்ற பாலியல் மாற்றங்கள், இளம்பெண்கள் பருவத்தை எட்டும்போது, அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதனால், முரண்மூளை நோய் (schizophrenia), நரம்பியல் குறைபாடுகள், மனநல குறைபாடுகள் போன்ற நோய்கள் ஏற்படுவதாக, பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தியோடர் சட்டெர்த்வைத் தெரிவிக்கிறார்.

பொதுவாக, பெண்களுக்கு அதிக அளவில் மனக் கவலையும் மன அழுத்தமும் ஏற்படுக்கின்றன. அதே போல், ஆண்களுக்கு முரண்மூளை நோய் போன்ற மூளை சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதாக சட்டெர்த்வைதே தெரிவித்தார்.

 

 

இந்த ஆய்விற்காக, 8 வயது முதல் 22 வயது வரை உள்ள இளைஞர்களின் மூளையிலுள்ள ரத்த ஓட்டத்தின் வளர்ச்சியை எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் ஆய்வு செய்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

 

 

இந்த ஆய்வில், தனது சூழ்நிலை மற்றும் உணர்வுகளை கையாளும்போது, பெண் மூளையின் ரத்த ஒட்டம் அதிகரிப்பதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அறிவுத்திறன் சார்ந்த செயல்களில் ஈடுபடும்போது, அச்செயல்கள் சார்ந்து மூளையிலுள்ள பகுதிகளில் ரத்த ஓட்டத்தின் அளவில் அதிகமான வேறுபாடுகள் தெரிவதாக பேராசிரியர் சட்டெர்த்வைதே குறிப்பிட்டார்.

இந்த ஆய்வு முடிவுகள் தொடர்பான விரிவான கட்டுரை, நேஷனல் அகாடமி ஆஃப் சயின்சஸ் என்ற அறிவியல் இதழில் வெளியாகியுள்ளது. 

 

http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D/article6053537.ece?ref=sliderNews

  • கருத்துக்கள உறவுகள்
இருப்பதை இல்லாதவர்களுடன் பகிர தெரியாது.
எல்லாவற்றையும் பொத்தி வைத்திவிட்டு .... தமது வாழ்விலும் சந்தோசங்களை இழந்துவிட்டு.
வயது போன நேரத்தில் கணக்கு பார்க்கும்போதுதான் வெறும் கையேடு போகபோகிறோம் எனும் உண்மை தெரிய வரும். அந்த ஏக்கம் மன உளைச்சளைதான் கொடுக்கும்.
 
வைத்திருப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழ்ச்சியாக வாழ பெண்கள் இனியாவது பழகி  கொள்ளவேண்டும்.
 
(இதில் எந்த சுயலாப எண்ணமும் இல்லை.............. எல்லாம் பொதுநல சிந்தனைதான். தயவு செய்து நம்புங்கப்பா )
  • கருத்துக்கள உறவுகள்

 

இருப்பதை இல்லாதவர்களுடன் பகிர தெரியாது.
எல்லாவற்றையும் பொத்தி வைத்திவிட்டு .... தமது வாழ்விலும் சந்தோசங்களை இழந்துவிட்டு.
வயது போன நேரத்தில் கணக்கு பார்க்கும்போதுதான் வெறும் கையேடு போகபோகிறோம் எனும் உண்மை தெரிய வரும். அந்த ஏக்கம் மன உளைச்சளைதான் கொடுக்கும்.
 
வைத்திருப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழ்ச்சியாக வாழ பெண்கள் இனியாவது பழகி  கொள்ளவேண்டும்.
 
(இதில் எந்த சுயலாப எண்ணமும் இல்லை.............. எல்லாம் பொதுநல சிந்தனைதான். தயவு செய்து நம்புங்கப்பா )

 

 

நீங்கள் ஒன்றை  புரிந்து கொள்ளவேண்டும்

பெண்கள் பொதுவாக சோம்பேறிகள்

--------------------------------------------------

நீங்களும் சோம்பேறியாக  இருந்திருப்பதை

என் அனுபவம் ஊடாக அறியமுடிகிறது.... :lol:  :D

Edited by நிழலி
..நீக்கப்பட்டுள்ளன

  • கருத்துக்கள உறவுகள்

அதொன்றுமில்ல.. அடுத்தவர் சோழியை தூக்கி தங்கட தலையில போடுவதும் இல்லாமல்.. அதனை தொலைபேசி.. பேஸ்புக்.. மற்றும் குதர்க்க சம்பாசணைகள் மூலம்.. பரப்புவதையே நோக்காக்க் கொண்டு வாழ்க்கையை ஓட்டும்.. கெட்ட பழக்கத்தால் பெண்களுக்கு இந்த நிலை வருகிறது.

 

நீங்க என்னதான் ஆய்வு செய்து சொன்னாலும்.. அவர்களின் பிறப்புரிமையியல் குணமான இதை மாற்ற முடியாது. :D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

Please epadi sollatheenga neduk Anna.

  • கருத்துக்கள உறவுகள்

பல ஆடவர்களுக்கு வீட்டிற்கு வெளியேயும், அலுவலகத்திலும் நடக்கும் அன்றாட பிரச்சனைகளுக்கு தீர்வை அப்பொழுதே காணாமல், வீட்டில் வந்து தங்கள் இயலாமையை, ஆற்றாமையை மனவியிடம் கொட்டுவதால் தான் பெண்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. :icon_idea:

கணவனின் நெருங்கிய உறவுகளிடமிருந்து வரும் வீட்டு அரசியலை புரிந்து அனைவரிடமும் மனம் கோணாமல் நடக்கோணும், புருசனின் இயலாமைக்கு வடிகாலாகவும் இருக்கோணும், இரவில் கணவனுக்கு தாசியாக இருக்கோணும், குழந்தைகளின் படிப்பு, வீட்டு வேலைகளை சமாளிக்கணும், குடும்பத்தை சிக்கனமாக நடத்தி வருங்காலத்தை வளமாக்க வேணும் இவையனைத்தையும் பெண்களின் தலையில் கட்டிவிட்டு, இந்த ஆண் சிங்கங்கள்(?) அலுவலகத்தில் ஜொள்ளுவிட்டு நாலு காசு சம்பாதித்துவிட்ட திமிரில் வீட்டில் வந்து கொட்டும் எரிச்சலை தாங்கும் இடிதாங்கிகளை அவ்வளவு மட்டமாக எடை போடாதீர்கள்! :wub::lol:

 

பல்லிளித்து கல்யாணம் கட்டும் ஆண்களின் வண்டு குணம் எப்பொழுதும் மாறுவதேயில்லை, இதில் பெண்களை நோக்கிய கூப்பாடு வேறு...! :o

விளங்கிடுமய்யா..! :)

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

மன அழுத்தம் பற்றிய பதிவு என்பதால் படித்த இந்த விடயம் ஞாபகத்திற்கு வந்தது..

ஒரு மனோதத்துவ நிபுணர், மன அழுத்தம் பற்றிய விளக்க உரைக்காக கூடியிருந்தோரை நோக்கி ஒரு டம்ளரில் நீரை நிரப்பி அவர்களை நோக்கி கேள்வியை தொடுக்க நினைக்கையில், அனைவரும் 'இவரென்ன கேள்வி கேட்கப்போகிறார்...? டம்ளரில் எவ்வளவு நீர் இருக்கிறதென்றுதானே..?' என எண்ணியிருந்தனர்.

ஆனால் அவர் புன்முறுவலுடன், கூட்டத்தினரப் பார்த்து "இந்த டம்ளர் நீரின் கனம் எவ்வளவு இருக்கும்...?" என வினவினார்.

உடனே கூட்டத்திலிருந்து ஒவ்வொருத்தரும் 50 கிராம், 100 கிராம் எனக் கூவினர்.

உடனே மனோதத்துவ நிபுணர்,

 

"இந்த டம்ளரின் கனம் பெரிதோ, பொருட்டோ அல்ல..இதை எவ்வளவு நேரம் இதை நான் தாங்கி பிடிக்கிறேன் என்பதே மிக முக்கியம்..

ஒரு நிமிடம் பிடித்திருந்தால் பிரச்சனை இல்லை..

ஒரு மணிநேரம் பிடித்தால் கை வலியெடுக்கும்..

ஒரு நாள் முழுவதும் பிடித்தால் கையும் தோளும் வலிக்கும்..

ஒவ்வொன்றிலும் டம்ளரின் கனம் மாறவில்லை, அதை தாங்கி நிற்கும் நேர காலம் தான் மாறுகிறது..ஆகவே நேரம் செல்லச் செல்ல வலியும் அதிகரிக்கிறது...

அது போலவே நம் வாழ்க்கையில் கவலைகளும், மன அழுத்தமும்...

ஒரு நிமிடம் நினைத்தால் பிரச்சனை இல்லை..ஆனால் அதையே நாள் முழுவதும் நினைத்தால் மனம் வலிக்கும், நிம்மதி இருக்காது..

பின் நாட்கள் செல்லச் செல்ல மன அழுத்தம் கூடி வாழ்க்கையே பாழாகிவிடும்...

ஆகையால் ஆணோ பெண்ணோ அன்றாட பிரச்சனைகளுக்கு அப்பொழுதே தீர்வை கண்டு முடித்துவிடவும்..அடுததவர் மேல் சுமத்தாதீர்கள்..."


என அறிவுறுத்தி முடித்தார்.


ஆகையால் யாழ் உறவுகளே, பெண்ணை நோக்கி மட்டுமே சுட்டாதீர்கள்...!

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் தேவையில்லாத... பிரச்சினைகளை தமது தலையில் தூக்கிப் போடுவது தான்... மன அழுத்தத்திற்கான காரணம்.
எதனையும்... "ரேக் இற் ஈசியாக" எடுத்தால், பிரச்சினை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் சுமைதாங்கிகள். வீட்டில் குழந்தை, கணவன் ,சகோதரங்கள் , பெற்றோர் எனத் தன் சொந்தங்கள் அனைவரின் பிரச்சனைகளுக்கும் முகம் கொடுக்கவேண்டிய நிலையில் இருப்பவர்கள்.

எந்தச் சின்ன விடயமாக இருந்தாலும் அத மிகவும் கடுமையாக எதிர்நோக்குபவர்கள்.
அதனால் இலகுவில் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
இது ஈழத்தமிழ்ப் பெண்களுக்குப் பொருந்தும்.

இளம் வயதுப் பெண்கள் அதுவும் மேற்கு நாட்டில் வாழும் இளம் வயதுப் பெண்கள்  பலர் மன உளைச்சலுக்கு ஆளாவதின் காரணம் அவர்களின் பின் தங்கிய மனப்பான்மை. மற்றைய பெண்களுடன் தேவையில்லாமல்
தங்களை ஒப்பிட்டுப் பொறாமை கொண்டு ஆற்றாமையால் மன  உளைச்சலுக்கு ஆளாவதும் உண்டு.
இது அனேகம் மேற்கத்தியப் பெண்களுக்குப் பொருந்தும் நம்மவர்களுக்கும் கூட.

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களின் மனம் மூளையில் இருக்கிறது , மூளை கனமற்றதாலும் , பெரும்பாலான நேரங்கள்  அது காலியாக இருப்பதாலும் அழுத்தம் குறைவு...!

 

பெண்களின் மனம் இதயத்தில் இருக்கின்றது...!!

Edited by suvy

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் உணர்ச்சிவசப்படுவது அதிகம் என்பதால் அதிகம் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.எதையும் டேக் இட் ஈசியாக எடுக்கும் மனப்பான்மை பெண்களுக்கு இல்லை என்றே நினைக்கிறேன்.எனக்கும் தான் :D.

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் சும்மா இருக்கும் போது மன அழுத்தம் வருகிறதா இல்லயே..ஏதாச்சும் ஒரு காரணி இருக்கத் தானே வேண்டும்.ஆண்களுக்கு இயற்கையாகவே ஒரு குணம் இருக்கு...தங்களுக்கு பிடித்தமாதிரி மற்றவர்கள் இல்லாது விட்டால்,ஏன் சாதரணமாக பேசும் போது கூட அவர்கள் சொல்வதை கேட்காது விட்டால் சட்டென்று யார் என்று பார்க்காமல் எடுத்து எறிவது.வேண்டாத பேச்சுக்களால் திட்டுவது,பெண்களுக்கு பிடிக்காத விடையங்களை செய்ய முயற்சிப்பது,

இவ்வாறன கட்டங்களில் தான் பெண்களுக்கு மன அழுத்தமோ இல்லை வேறை இடக்குகளோ வந்து சேர்ந்து கொள்கிறது...ஒரு விடையம் பிடிக்காது விட்டால் அந்த தருணத்தை அவோயிட் பண்ண தெரிந்திருந்தால் மற்றவர்கள் மேல் பழி போடவோ இல்லை வேண்டாத சொற்களால் கொட்டி தீர்க்க வேண்டிய சந்தர்ப்பங்கள் வராது..

சொன்னால் ஒத்துக் கொள்ளவே மாட்டார்கள்..ஏன் ஒருத்தி கோவப்படுகிறாள் என்பதை கூட விளங்கிக் கொள்வதில்லை..ஒரு தப்பை செய்தால் அதை ஆறுதலாக இருக்கும் போது கூட ஏன் நாங்கள் இப்படி செய்தோம் என்று யோசித்து அதற்கு ஏற்ப நடப்பதில்லை....இவ்வாறன பிரச்சனைகளை மனசுக்குள்ளயே போட்டு யோசித்து அழுது தங்களையே தண்டிப்பதனால் தான் பெண்களுக்கு மன அழுத்தமோ இதர நோய்களோ ஏற்படுகிறது..யாராச்சும் ஏற்றுக் கொள்வீர்களா........???

பெண் தானே அவள் யாரோ வீட்டுப் பிள்ளை தானே எப்படி என்றாலும் கேட் பண்ணலாம்.

 

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

பல பெண்கள்....
புதிதாக வந்த.... நகைக்கும், சீலைக்கும் ஆசைப்படுவார்கள்.
அடுத்த வீட்டுகாரன், " மெர்சிடஸ் பென்ஸ்" கார் வைச்சிருக்கிறான்  என்று... பெரு மூச்சு விடுவார்கள்.
அதோடை..... அவர்களுக்கு, வருத்தம், ஆரம்பமாயிட்டுத்து என்று... அர்த்தம்.

 

மற்றவளை(னை).... பார்த்து  வாழாமல்....
நாம் வாழ்ந்தால்... துன்பம் இல்லை. :) 
 

  • கருத்துக்கள உறவுகள்

பல பெண்கள்....

புதிதாக வந்த.... நகைக்கும், சீலைக்கும் ஆசைப்படுவார்கள்.

அடுத்த வீட்டுகாரன், " மெர்சிடஸ் பென்ஸ்" கார் வைச்சிருக்கிறான்  என்று... பெரு மூச்சு விடுவார்கள்.

அதோடை..... அவர்களுக்கு, வருத்தம், ஆரம்பமாயிட்டுத்து என்று... அர்த்தம்.

 

மற்றவளை(னை).... பார்த்து  வாழாமல்....

நாம் வாழ்ந்தால்... துன்பம் இல்லை. :) 

 

 

தனித்து சேலை,வீடு,கார் போன்றவற்றினால் தான் பிரச்சனைகள் வருவது எண்டு சொல்லி விட முடியாது.இவற்றையும் தாண்டி நிறைய பிரச்சனைகள் இருக்கிறது...அது,அது அவர்களோடையே போகட்டும்....மனிதர்களாக பிறந்தால் எல்லாருக்கு விருப்பு,வெறுப்புக்கள் இருக்கும்,இருக்க வேண்டும்  அவை

இல்லாத விடத்து சுய சிந்தனா சக்தியற்ற மனிதர்களாக தான் கொள்ள முடியும்..விருப்பு வெறுப்புக்களில் யாருமே விதி விலக்காக இருக்க முடியாது..ஆனால் எல்லாராலும் எல்லாவற்றையும் கண்டு கொள்ளவும் முடியாது,அவர்களுக்கு ஏற்ப நடக்கவும் மாட்டார்கள்.காகம் போல் கத்த முடியுமான மட்டுக்கு கத்திப் போட்டு போக வேண்டியது தான்...

  • கருத்துக்கள உறவுகள்

தனித்து சேலை,வீடு,கார் போன்றவற்றினால் தான் பிரச்சனைகள் வருவது எண்டு சொல்லி விட முடியாது.இவற்றையும் தாண்டி நிறைய பிரச்சனைகள் இருக்கிறது...அது,அது அவர்களோடையே போகட்டும்....மனிதர்களாக பிறந்தால் எல்லாருக்கு விருப்பு,வெறுப்புக்கள் இருக்கும்,இருக்க வேண்டும்  அவை

இல்லாத விடத்து சுய சிந்தனா சக்தியற்ற மனிதர்களாக தான் கொள்ள முடியும்..விருப்பு வெறுப்புக்களில் யாருமே விதி விலக்காக இருக்க முடியாது..ஆனால் எல்லாராலும் எல்லாவற்றையும் கண்டு கொள்ளவும் முடியாது,அவர்களுக்கு ஏற்ப நடக்கவும் மாட்டார்கள்.காகம் போல் கத்த முடியுமான மட்டுக்கு கத்திப் போட்டு போக வேண்டியது தான்...

 

பெண்களுக்கு,

விரலுக்கு... தகுந்த வீக்கம் இருக்காவிடில்....

வீடு,நாடு, குடும்பம், பரம்பரை .... எல்லாம்  பாழ்.

உதாரணம்:  சொனியா காண்டி.

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கு, முந்திய உதாரணம்: சந்திரிக்கா பண்டார நாயக்க. :D 

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கு, முந்திய உதாரணம்: சந்திரிக்கா பண்டார நாயக்க. :D 

உங்களது கரிசனையும் கவனமும் சாதாரண பெண்ணகள் பற்றி இல்லையென்பதனை உங்கள் கருத்து மேலும் ஆதாரங்களோடு விளக்குகிறது தமிழ்சிறி. நீங்கள் சொல்லும் காரணங்கள் உங்கள் அறியாமையின் வெளிப்பாடுகளே தவிர வேறில்லை. ஒரு விடயத்தின் கனத்தை ரேக்இட்ஈசி என சொல்கிற நீங்கள் அதன் தாக்கத்தை புரிந்து கொண்டு கருத்தை எழுதவும் பிரச்சனைகளை அணுகவும் பழகிக்கொள்ளுங்கள்.

பல பெண்கள்....

புதிதாக வந்த.... நகைக்கும், சீலைக்கும் ஆசைப்படுவார்கள்.

அடுத்த வீட்டுகாரன், " மெர்சிடஸ் பென்ஸ்" கார் வைச்சிருக்கிறான்  என்று... பெரு மூச்சு விடுவார்கள்.

அதோடை..... அவர்களுக்கு, வருத்தம், ஆரம்பமாயிட்டுத்து என்று... அர்த்தம்.

 

உங்கள் வட்டத்தை தாண்டி உலகம் பெரியது அதனை முதலில் புரிந்தால் மட்டுமே உங்களால் சமூகத்தின் பாதியான பெண்களின் பிரச்சனைகளை புரிய முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் நேற்றுத் தொடக்கம் இப்போது வரைக்கும் மேல் சுட்டிக் காட்டப்பட்ட  கருத்துக்களைப் பார்த்துக் கொண்டு தான் திரிந்தேன்....கொஞ்சம் அதிகமாக எழுதினால் குளப்பத்தை ஏற்படுத்தி விட்டது போல் இருக்கும்.என்ன செய்வது..ஒருதனி மனிதரின் வாழ்வோடு அரசியல் தலைவர்களின் தலை இடிகளை கொண்டு வந்து சொருகுவது எழுதுபவர்வர்களை கொஞ்சம் ஓரமாக போங்களன் என்று சொல்வது போல இருந்தது...

அரசியல் வாதிகளின் பிரச்சனைகளுக்கும் தனி ஒருவருக்கும் இருக்கும் பிரச்சனைகளுக்கும் நிறையவே வித்தியாசங்கள் இருக்கிறது.வீடுகளில்  வளர்ந்த பிள்ளைகளை வைத்திருப்பவர்களுக்கே மற்றவர்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாத விடத்து நாங்கள் தான் ஓரமாக செல்ல வேண்டியதாக இருக்கிறது...

குடும்பச் சுமை, கணவரால் தொல்லை, கணவரின் சுற்றத்தால் தொல்லை என்ற காரணங்களால் பெண்களுக்கு மனவழுத்தம் வரும் என்றால் ஏன் எங்கள் அம்மாக்களுக்கும் பாட்டிமார்களும் அவை வரவில்லை?  அதுவும் ஒன்றுக்கு 10 பிள்ளைகளை பெற்றுத் தள்ளிய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அவர்கள். அவர்களின் காலத்தில் அவர்களுக்கு மிக அரிதாக வந்த மனவழுத்தப் பிரச்சனை ஏன் இப்ப மிக அதிகளவில் வருகின்றது?

 

அதுவும் இக் காலத்தில் ஆணுக்கும் பெண்ணுக்குமான புரிதல் அதிகரித்து, ஆணும் பிள்ளை வளர்ப்பிலும் சரி சமமாக தன்னை ஈடுபடுத்தி, கணவன் மனைவிக்கிடையிலான அந்நியோனியமும் அதிகரித்து வருகின்ற இக்காலத்திலும் வெறுமனே ஆணாதிக்க சூழ்நிலைதான் பெண்களுக்கான மனவழுத்ததிற்கு முக்கிய காரணம் என்று கருத்து வைப்பது எப்படி சரியாகும்?

 

ராஜவன்னியன் இன்னும் ஒரு படி மேலே போய், இரவில் மனைவி தாசியாக வேறு இருக்க வேண்டி வருதாம் என்கின்றார். தாசி என்பவர் வெறுமனே உடம்பு சுகத்தினை கொடுப்பவர் - பெறுபவர் அல்ல. ஆனால் மனைவி - ஒரு பெண்ணாக தனக்கான பாலுறவுத் தேவையையும் கணவன் மூலம் நிறைவேற்றிக் கொள்ளுதல் எப்படி தாசி முறையில் அமையும்?

 

பெண்களின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஆணாதிக்கமே காரணம் என்பது ஒரு தப்பித்தல் முறை.

 

அதே போன்று நகை ஆசை, பொருள் ஆசை என்பன இன்றா நேற்றா பெண்களிடம் வந்தது? காது கிழியும் அளவுக்கு தொங்கட்டான் போட்ட காலம் என் பாட்டியின் காலம். அரைமுடி சலங்கை கட்டிய காலம் என் பாட்டியின் பாட்டி காலம்.

 

எம் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட சடுதியான மாற்றங்கள், இயற்கை உணவுகளை தவிர்த்து கடும் இரசாயன உணவுகளையும் Fast food களையும் நாடும் உணவுப் பழக்கம்,  தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்படும் தனிமை உணர்வு, தன்னை ஒரு சின்ன வட்டத்துக்குள் குறுக்கி வைத்து இருக்கும் தற்போதைய வாழும் முறை, தன் சக்திக்கும் மீறி செலவழிக்கவும் ஆசைப்படவும் வைக்கும் corporate வியாபாரத் தந்திரத்துக்குள் சிக்கிக் கொண்டமை போன்றனதான் இன்று மனவழுத்தம் வரவைக்க செய்பவை.

 

போலிப் புன்னகையை தவிர்த்து மனசால சிரிச்சு வெளிப்படையாக வாழ்ந்து பார்க்கின்றவர்களுக்கு ஒரு போதுமே மனவழுத்தம் வரப் போவதில்லை.

 

 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

யாயினிக்கு என்னாச்சு நினைச்சு,நினைச்சு வந்து எழுதிக் கொண்டு இருக்கிறது  என்று யாரும் தவறாக  கருதிக் கொள்ளவேண்டாம்.சிரிச்சு வெளிப்படையாக இருப்பதில் தப்பில்லை..ஆனால் அந்த சிரிப்பையே பிடிக்காத உறவுகள் பழகிக் கொண்டு இருக்கும் நட்புக்கள்,உறவுகள் மத்தியில் இனிமேல் சேர்ந்து கொள்ள முடியாத அளவுக்கு விரிசலை ஏற்படுத்தி விட்டுப் போகிறார்கள்..ஒருவரை தங்களுக்கு மிகவும் பிடித்து விட்டது என்றால் அவர்களை மற்றவர்களிடத்திலிருந்து பிரிப்பதில் தான் கண்ணாக இருக்கிறார்கள்...நட்புக்களாளயே வேண்டாத பேச்சுக்களால் எல்லாம் பேச வைக்கிறார்கள்.....அவ்வாறு எல்லாம் நடக்கும் பட்சத்தில் சில பெண்கள் யாரிடத்திலும் எதையும் சொல்ல மாட்டார்கள்.அப்போது தான் உடல் ரீதியான பாதிப்புக்களை எதிர் நோக்க வேண்டியவர்களாகி விடுகிறார்கள்..

ஏன் நிழலியண்ணா நான் கூட வேறு இடத்தில்  அடிக்கடி குளம்பிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது....அண்மைய காலங்களில்  அந்த இடத்தில் இருந்து விலகிக் கொள்ளும் நோக்கில் இனிமேல் வேணாம் என்று  போட்டு ஒதுங்கிவிடும் நிலைக்கு கூட சென்று இருக்கிறன்..இவை எல்லாம் எதனால் ஏற்படுகிறது மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் செய்யும் சில செயல்பாடுகளினால் தானே....தூக்கி எறிந்துட்டு போனவே,அப்படியே எறிந்துட்டு போனாவர்களாகவே இருக்கட்டும் பிரச்சனை இல்லை..ஏனில் காணும் இடங்களில் கூட சிறு சிரிப்பைக் கூட உதிர்த்து விட்டுப் போக முடியாத அளவுக்கு தான் சில இடங்களில் நான் காயப்பட்டு இருக்கிறன்..அது அவர்களின் சுய நலம்.
நட்புக்களாக,விருப்பட்டவர்களாக பழகுபவர்களாலயே புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் எப்படி இருக்கும்.வேணாம்,வேணாம் என்ற  அளவுக்கு மனத்தில் காயங்களை எற்படுத்தி விட்டுப் போகும் சந்தர்ப்பங்களில் தான் மன அழுத்தம் போன்றவை ஏற்படுகின்றன..இல்லை என்று சொல்லப் போகிறீர்களா..

முன்னைய காலத்தில் வாழ்ந்த உறவுகளில் மிகுந்த அன்பு,புரிந்துணர்வு,விட்டுக் கொடுப்பு என்று நியைவே இருந்தது..இப்போது எல்லாம் அப்படி இல்லை..ஊரில் இருந்த உறவுகளுக்கும் இணைய வெளிகளில் உலாவும் உறவுகளுக்கும் நிறையவே வித்தியாசம்.ஒருத்தியை வார்த்தைகளால் கொன்றாவது தங்களுக்கு விருப்பட்டதை அடைய வேணும் என்று நினைத்து செயல்படுகிற உலகம்..இவ்வாறன விடையங்கள் தான் நாள் போக,போக மன அழுத்தமாக உருப்பெற்றுவிடுகிறது..

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைத்தான் நான் ஒரு சின்ன உதவி என்று தொகுப்பில் போட எல்லாரும் வந்து எனக்கு அட்வைஸ் பண்ணினீர்கள்.  தனக்குத் தனக்கு வந்தால்தான் தலையிடியும் காய்ச்சலும் என்னவென்று விளங்கும்.  இப்பவெல்லாம் உறவுகள் என்பது பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே சொந்தம்.  பணம் இல்லாது இருந்து பாருங்கள்... இப்ப இருக்கிற சொந்த பந்தங்கள் எல்லாம் காணாமல் போய்விடுவார்கள். 

 

வெளிநாடுகளிலை இருக்கிற ஆம்பிளையளுக்கு மனஉளைச்சல் வந்தால் தண்ணியைப் போட்டுவிடுவம்.  பொம்பிளையள் அப்பிடிச் செய்யிறேல்லை.  அப்பிடியே தண்ணி அடிச்சாலும் ஒவ்வொரு நாளும் வீடுகளிலை எடுக்கிறேல்லை.  இங்க கருத்தெழுதின ஆம்பிளையள்ஆராவது உங்களுக்குக் கஸ்டம் வரேக்குள்ள தண்ணி அடிக்காமல் இருந்திருக்கிறீங்களா?

  • கருத்துக்கள உறவுகள்

நான் இருந்திருக்கிறேனே.. :icon_idea::D

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இருக்கின்றேனே... :icon_idea:  :icon_idea:  :icon_idea:

 

நான் இருந்திருக்கிறேனே.. :icon_idea::D

 

அதென்ன நான் இருக்கின்றேனே...???

அப்போ  தற்பொழுது..?? :(


இதைத்தான் நான் ஒரு சின்ன உதவி என்று தொகுப்பில் போட எல்லாரும் வந்து எனக்கு அட்வைஸ் பண்ணினீர்கள்.  தனக்குத் தனக்கு வந்தால்தான் தலையிடியும் காய்ச்சலும் என்னவென்று விளங்கும்.  இப்பவெல்லாம் உறவுகள் என்பது பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே சொந்தம்.  பணம் இல்லாது இருந்து பாருங்கள்... இப்ப இருக்கிற சொந்த பந்தங்கள் எல்லாம் காணாமல் போய்விடுவார்கள். 

 

வெளிநாடுகளிலை இருக்கிற ஆம்பிளையளுக்கு மனஉளைச்சல் வந்தால் தண்ணியைப் போட்டுவிடுவம்.  பொம்பிளையள் அப்பிடிச் செய்யிறேல்லை.  அப்பிடியே தண்ணி அடிச்சாலும் ஒவ்வொரு நாளும் வீடுகளிலை எடுக்கிறேல்லை.  இங்க கருத்தெழுதின ஆம்பிளையள்ஆராவது உங்களுக்குக் கஸ்டம் வரேக்குள்ள தண்ணி அடிக்காமல் இருந்திருக்கிறீங்களா?

 

 

ஐயா

உங்களுக்கு மீண்டும் எழுதுவதற்காக பொறுத்தருள்க

 

மது ஒரு கவலையை  மறக்கும் மருந்து அல்ல

அதிலும் கவலையால் மனம்  ஆட்டம் கட்டிருக்கும் வேளைகளில்

மதுவை  தொடங்கவே கூடாது

ஒரு தம்பியையும் 

ஒரு ஆருயிர் நண்பனையும் இப்படி மதுவை ஆரம்பித்ததால் இழந்திருக்கின்றேன்

இது பற்றி  நிறையவே யாழில் பேசியிருக்கின்றோம்....

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன நான் இருக்கின்றேனே...???

அப்போ தற்பொழுது..?? :(

கஷ்டம் ஒவ்வொரு நாளுமா வருகிறது?? :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி வாழுவதைவிடச் சாவது மேல்.  நானாகத் தற்கொலை செய்யாதவரை நான் இறப்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.