Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் சொல்வதை என் உடம்பு கேட்குமா??

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் KFC, Wendy's, McDonald's போன்ற துரித உணவுகளையும், பாண் வகைகளையும் நிப்பாட்டி 3 மாதங்கள் ஆகுது. மாதத்திற்கு ஒருமுறை சிலவேளைகளில் உண்ணவேண்டி வரும். இப்ப எடையில் 7lbs குறைந்துவிட்டது.  :icon_idea:

நான் KFC, Wendy's, McDonald's போன்ற துரித உணவுகளையும், பாண் வகைகளையும் நிப்பாட்டி 3 மாதங்கள் ஆகுது. மாதத்திற்கு ஒருமுறை சிலவேளைகளில் உண்ணவேண்டி வரும். இப்ப எடையில் 7lbs குறைந்துவிட்டது. :icon_idea:

ரிம் கோர்டன் கோப்பியில் பால், கிரீம் சேர்ப்பதை தவிர்த்து பாருங்கள். ஒரு மாதத்தில் இன்னொரு 7 பவுண்ட் குறைக்கலாம். :)

நான் KFC, Wendy's, McDonald's போன்ற துரித உணவுகளையும், பாண் வகைகளையும் நிப்பாட்டி 3 மாதங்கள் ஆகுது. மாதத்திற்கு ஒருமுறை சிலவேளைகளில் உண்ணவேண்டி வரும். இப்ப எடையில் 7lbs குறைந்துவிட்டது.  :icon_idea:

 

இந்த மூன்றிலும் நான் சாப்பிடுவதே இல்லை. ரிம் ஹோர்ட்டன்ஸ் பக்கமும் போவதில்லை. பொதுவாக எந்த ஒரு Fast food கடைகளிலும் சாப்பிடுவது இல்லை. அவற்றின் சுவை எனக்கு பிடிப்பதே இல்லை.

 

ஆனால் தமிழ்கடை சாப்பாடுகளை தொடர்வதால் உடம்பு குறையுது இல்லை. முக்கியமாக யாரோ எனக்கு 'வீச்சு' ரொட்டியிலும் பரோட்டாவிலும் செய்வினை செஞ்சு போட்டினம் போல இருக்கு. 2 கிழமைக்கு ஒருக்க்காவாவது வேண்டி சாப்பிடாட்டி நித்திரை வராது. அதே மாதிரி கீரை வடையையும் கிழமைக்கு ஒரு நாளாவது சாப்பிட வேண்டும்..

  • கருத்துக்கள உறவுகள்

முடிந்தவரைக்கு கடைகளில் சாப்பிடுவதை தவிர்த்து,வீட்டில் உள்ள கோப்பையை எறிஞ்சுட்டு ஒரு கைப்பிடி அளவுக்குள் உணவுக் கட்டுப்பாட்டை கொண்டு வந்தால் நன்று..நானும் கொஞ்ச நாளாக சாப்பிடுறது எல்லாம் ரொம்ப குறைவு 5 lb, குறைஞ்சு இருக்கிறன்..என்ன ஒரே களைக்குது...ஒன்றுமே செய்ய இயலாது இருக்கு என்றுட்டு வெயிட் செக் பண்ணி பார்த்தால் குறைஞ்சு இருக்கிறன்..கடந்த சில கிழமைகளில் ஏற்பட்ட சில மாற்றங்களால் இந்த  உடல் நிறைவு குறைவு மாற்றத்தை மட்டும் தான் கொண்டு வர முடிஞ்சது.

  • கருத்துக்கள உறவுகள்

என் மனைவியும் இந்த டயட் (GM diet) முறையை ஆரம்பித்து இன்றுடன் 4 ஆவது நாளாகின்றது. நானும் ஒரு முறை முயன்று பார்ப்பம் என்று நினைத்து இருந்தனான். ஆனால் என் மனைவி சாப்பிடும் அளவையும் உணவையும் பார்த்து விட்டு நமக்கெல்லாம் இது ஒரு விஷப் பரீட்சை என்று நினைக்கத் தொடங்கி விட்டேன்.... :)

முயற்சி செய்யுங்கள் உங்களாலும் முடியும்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த மூன்றிலும் நான் சாப்பிடுவதே இல்லை. ரிம் ஹோர்ட்டன்ஸ் பக்கமும் போவதில்லை. பொதுவாக எந்த ஒரு Fast food கடைகளிலும் சாப்பிடுவது இல்லை. அவற்றின் சுவை எனக்கு பிடிப்பதே இல்லை.

 

ஆனால் தமிழ்கடை சாப்பாடுகளை தொடர்வதால் உடம்பு குறையுது இல்லை. முக்கியமாக யாரோ எனக்கு 'வீச்சு' ரொட்டியிலும் பரோட்டாவிலும் செய்வினை செஞ்சு போட்டினம் போல இருக்கு. 2 கிழமைக்கு ஒருக்க்காவாவது வேண்டி சாப்பிடாட்டி நித்திரை வராது. அதே மாதிரி கீரை வடையையும் கிழமைக்கு ஒரு நாளாவது சாப்பிட வேண்டும்.. 001_forward.gif

 

மிச்சத்தை எப்ப சொல்லுவியள்.....காத்திருக்கின்றோம்  :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இங்கு பொரிச்ச சிக்கின் கடையை கண்டால் கால் தானாக கடைக்குள் போய் விடும். ஒரு கிழமைக்கு இரு தடவையாவது சாப்பிட்டு விட்டு விடுவேன். எப்படி நிப்பாட்டுவது தெரியவில்லை

எனக்கு இங்கு பொரிச்ச சிக்கின் கடையை கண்டால் கால் தானாக கடைக்குள் போய் விடும். ஒரு கிழமைக்கு இரு தடவையாவது சாப்பிட்டு விட்டு விடுவேன். எப்படி நிப்பாட்டுவது தெரியவில்லை

 

 ரதியக்கா உங்களுக்கு சிக்கின் குனியா வரப்போகுது  :D

நான் KFC, Wendy's, McDonald's போன்ற துரித உணவுகளையும், பாண் வகைகளையும் நிப்பாட்டி 3 மாதங்கள் ஆகுது. மாதத்திற்கு ஒருமுறை சிலவேளைகளில் உண்ணவேண்டி வரும். இப்ப எடையில் 7lbs குறைந்துவிட்டது.  :icon_idea:

 

  100 - 7 = 93 lbs ??? :D

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இங்கு பொரிச்ச சிக்கின் கடையை கண்டால் கால் தானாக கடைக்குள் போய் விடும். ஒரு கிழமைக்கு இரு தடவையாவது சாப்பிட்டு விட்டு விடுவேன். எப்படி நிப்பாட்டுவது தெரியவில்லை

 

வாயில் போடாமல்தான்.. :D

  100 - 7 = 93 lbs ??? :D

 

இது குள்ளமான ஏலியன்களின் நிறையாகத்தான் இருக்கும்..  :icon_idea:

கடைசியாக எப்போது நெத்தலி போட்ட ஒடியல் புட்டு சாப்பிட்டீர்கள்....அந்த நாளே நீங்கள் கடைசியாக நல்ல உணவு சாப்பிட்ட நாள் :)

இப்போது வெளிநாடுகளில் பெரும்பாலானவர்கள் சாப்பிடுவது எல்லாம் நஞ்சு.....வேறு வழியும் இல்லை.....

  • கருத்துக்கள உறவுகள்

நோய்கள் எதுவும் தீண்டாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்குத் தேவையான 52 வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

அது ஏன் 52 வழிகள்? இந்த வழிகளை எல்லாம் ஒரே நேரத்தில் கடைப்பிடிப்பது சிரமமாக இருக்கும் என்று நினைப்பவர்கள் வாரத்திற்கு ஒரு வழி என்று பழக்கப்படுத்திக் கொண்டால் போதும், ஒரு வருடத்தில் இவை எல்லாமே அத்துப்படி ஆகிவிடும். ‘அப்புறம், உங்கள் உடலுக்கும் மனதுக்கும் 100% கியாரண்டி!’ என்கிறார் பாதை வகுத்துத் தந்த ரேகா ஷெட்டி.

இனி அந்த வழிகளைப் பின்பற்றி நடப்போமே!

1. ஒவ்வொரு நாளும் எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
2. சாப்பாட்டில் தவறாது இரண்டு காய்கறிகளாவது இடம் பெறும்படி பார்த்துக் கொள்ளுங்கள். சாப்பாட்டுக்குப் பின் ஏதாவது ஒரு பழத்தைச் சாப்பிடுவதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
3. உணவுக்கு முன்பு காய்கறிகளைப் பச்சையாக நறுக்கிப் போட்ட வெஜிடபிள் சாலட் சாப்பிடலாம்.

4. நொறுக்குத்தீனிக்கு நாக்கு பரபரக்கிறதா? ‘ஸ்நாக்ஸ்’ வேண்டாம். அதற்குப் பதில் முளைவிட்ட பட்டாணி, பயிறு வகைகளைச் சாப்பிடலாம்.

5. ஒவ்வொரு வேளை உணவையும் அனுபவித்து உண்ணுங்கள். ரசித்து, ருசித்துச் சாப்பிடுங்கள்.
6. ஃப்ரெஷ் ஆன காய்கறிகளை மட்டுமே பயன்படுத்துங்கள்.

7. சர்க்கரை அம்சம் கொண்ட குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம், சாக்லேட்டுகள், மிட்டாய்வகைகள் பக்கம் தலைவைத்துப் படுக்காதீர்கள்.
8. எதையும் சமைத்த உடனேயே சாப்பிடுவது நல்லது. ஃப்ரிட்ஜில் வைத்துச் சூடாக்கிச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
9. உணவில் அவ்வப்போது கீரையைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
10. என்றேனும் ஒருநாள் ‘முழு உண்ணாவிரதம்’ இருங்கள். உணவுக்குப் பதில் காலை, மதியம், மாலை, இரவு காய்கறி சூப், பழரசம் மட்டும் சாப்பிடலாம்.
11. காபி பழக்கத்திற்கு டாடா சொல்லுங்கள். எதையாவது குடிக்கவேண்டும் எனத் தோன்றினால் ஃப்ரெஷ் ஜூஸ் குடிக்கலாம்.

12. பொரித்த உணவுப்பண்டங்கள் உடலுக்குக் கெடுதல். உங்கள் உணவிலிருந்து அவற்றை விலக்கி விடுங்கள்.
13. வாரத்தில் ஏதாவது ஒருநாள் காலை டிபனுக்குப் பதிலாகப் பழங்கள் மட்டுமே சாப்பிடுங்கள். மதியம் வரை வேறு எதுவும் உண்ணாமல் நேராக மதிய உணவு அருந்துங்கள்.
14. ‘டயட்’டில் இருக்கிறோம் என்பதற்காக உணவைத் தியாகம் செய்யாதீர்கள். சாப்பிடாத வேளைகளில் ஃப்ரெஷ் ஆன பழங்கள் அல்லது வெஜிடபிள் ஜூஸ் அருந்தலாம்.
15. காபி, சோடா, கோலா ஆகிய பானங்களை அருந்த வேண்டாம்.
16. நார்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்கள் உங்கள் மெனுவில் இடம் பெறட்டும்.
17. உப்பை அளவாகப் பயன்படுத்துங்கள்.
18. குழந்தைகளுடன் குழந்தையாக மாறி விளையாடுங்கள். உங்கள் குழந்தைப் பருவம் நெஞ்சில் நிழலாடுமே! அது அல்லவா ஆனந்தம்?

19. காய்கறிகளை வறுப்பதோ பொரிப்பதோ கூடாது. வேக வைப்பதே சிறந்தது.
20. சமைக்கும்போது உருளைக்கிழங்கு, வெள்ளரிக்காய், கேரட், தக்காளி ஆகிய காய்கறிகளின் மேற்புறத் தோலை நீக்க வேண்டாம். கழுவி வெறுமனே சுரண்டிப் போட்டால் போதும்.
21. நீங்கள் உண்ணும் உணவில் தேவையான கலோரிகள், புரதச்சத்து ஆகியவை இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அதற்கேற்றவாறு உங்கள் உணவைத் திட்டமிடுங்கள்.
22. எப்போதும் அவசர அவசரமாக உணவை அள்ளி விழுங்காதீர்கள். மென்று தின்றால்தான் உண்ணும் உணவு செரிக்கும்.
23. தியானமும் பிரார்த்தனையும் மனப்பயிற்சிகள். தினமும் 20 நிமிடங்கள் அதற்காக ஒதுக்கிக் கொள்ளுங்கள்.
24. நீங்கள் உண்ணும் உணவில் என்னென்ன சத்துக்கள் உள்ளன என்பதைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியம் தரும் உணவைத் தேர்ந்தெடுங்கள்.
25. மளிகைப் பொருட்கள், காய்கறிகள் என எதுவானாலும் நீங்களே நேரடியாகச் சென்று வாங்குங்கள். உற்றுப் பார்த்து, முகர்ந்து பார்த்து, தொட்டுப் பார்த்து ஒவ்வொன்றையும் வாங்கினால் எந்த நோய்க்கிருமியும் உங்களிடம் வாலாட்ட முடியாது.
26. மனம் வெறுமையாக இருந்தாலோ, களைப்பு ஏற்பட்டாலோ அதனை ஈடுகட்டுவதற்காகச் சிலர் சாக்லேட்களைச் சாப்பிடுவார்கள். ஜாலி மூடில் ஐஸ்க்ரீம், ஸ்நாக்ஸ் என வெளுத்துக் கட்டுவார்கள். இப்படி உங்கள் உணர்வுகளை உணவுடன் முடிச்சு போடாதீர்கள். பின்பு அதுவே ஒரு பழக்கமாகிவிடும். ‘மூடு’ எதுவாக இருந்தாலும் ஜூஸ் மட்டும் அருந்துங்கள்.
27. சினிமா தியேட்டரில் ‘சிப்ஸ்’ கொறிக்கும் பழக்கம் உண்டா உங்களுக்கு? அதற்கு ‘நோ’ சொல்லிவிட்டு ‘பாப்கார்ன்’ கொறியுங்கள்.
28. உணவுவேளையின் போது டைனிங்டேபிளில் அமர்ந்து சாப்பிடுங்கள். சாப்பிடும்போது பேப்பர் படிப்பது, காரசாரமான விவாதங்கள் என்ன வேண்டிக் கிடக்கிறது? முழுக்கவனமும் உணவின் மீதே இருக்கட்டும்.
29. இரவு உணவின்போது ஒட்டுமொத்த குடும்பமும் டி.வி. முன் ஆஜராகி சாப்பாட்டை உள்ளே தள்ளுவது விரும்பத்தக்கதல்ல. அதைவிட குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து உட்கார்ந்து கலகலப்பான மனநிலையில் சாப்பிடுங்கள்.
30. சுவாசப்பயிற்சி நுரையீரலுக்கு நல்லது. மூச்சை நன்றாக உள்ளுக்கு இழுத்து, மெதுமெதுவாக விடவும். இதுபோல் தினமும் பலமுறை செய்யுங்கள்.
31. வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும். காமெடி சினிமாக்கள் பார்ப்பது, சரமாரியாக ஜோக்குகள் அடிப்பது, உரக்கச் சிரிப்பது, நகைச்சுவை புத்தகங்கள் படிப்பது ஆகியவற்றை உங்கள் இயல்பாக்கிக் கொள்ளுங்கள்.
32. மது அருந்தும் ஆசாமியா நீங்கள்? உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.
33. இரவில் படுக்கைக்குச் செல்லும்போது மகிழ்ச்சியான மனநிலை தேவை. தூக்கம் கண்களைத் தழுவும்போது அமைதி உங்கள் நெஞ்சில் நிலவட்டும் குட்நைட்! ஸ்வீட் ட்ரீம்ஸ்!
34. மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று நினைக்காமல் ஸ்விம்மிங், ரோலர் ஸ்கேட்டிங் என்று காலில் சக்கரம் கட்டிக் கொள்ளுங்கள்.
35. ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ‘வாக்கிங்’ செல்லுங்கள்.
36. கை, கால்களை நீட்டி மடக்கிச் செய்யும் எளிய உடற்பயிற்சிகளுக்கு என்று காலையில் 10 நிமிடங்கள், மாலையில் 10 நிமிடங்கள் ஒதுக்கிக் கொள்ளுங்கள்.
37. மாடிப்படிகளில் ஏறிச் செல்ல முடிகிறபோது லிஃப்ட், எஸ்கலேட்டர் எல்லாம் எதற்கு? படியேறுவது காலுக்கு வலிமை சேர்க்கும்.

38. தினமும் தியானம் மனதுக்கு நல்லது.
39. ஒருபோதும் மூக்கு முட்ட சாப்பிடாதீர்கள்.
40. ஓய்வெடுப்பது என்பது ஒரு கலை. சும்மா இருப்பது ஓய்வு ஆகாது. உங்கள் உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் ஓய்வு கொடுங்கள். குறைந்தது 20 நிமிடங்கள் ஓய்வு அவசியம்.
41. காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து குடிப்பது நல்லது.
42. புகை உங்கள் உடலுக்குப் பகை. பழக்கம் இருந்தால் அடியோடு விட்டுவிடுங்கள்.
43. உங்கள் ஆழ்மனத்திற்கு என்று இருக்கும் ஆற்றலைப் பயன்படுத்துங்கள். உங்கள் உடலை 20 நிமிடங்களுக்குத் தளர்த்திவிட்டுக் கொள்ளுங்கள். அந்த ஆரோக்கியமான உடல்நிலையை மனதால் உணருங்கள்.
44. வேலை செய்ய, பொழுதுபோக்க என்று உங்கள் நேரத்தைச் சரியாகப் பகுத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் ‘பேலன்ஸ்’ மிக முக்கியம்.
45. காய்கறிகளை நறுக்குவதற்கு முன் சுத்தமான தண்ணீரில் நன்றாகக் கழுவுங்கள்.
46. நண்பர்களை அடிக்கடி சந்தியுங்கள். வாய்ப்பு இல்லாவிட்டால் டெலிபோனிலாவது பேசுங்கள். தனிமை விலகும், இனிமை கூடும்.
47. இதுவரை செய்யாவிட்டால் என்ன, இன்று முதலாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.
48. பிறரது தவறுகளை மன்னித்துவிடுங்கள். தேவையில்லாத மனபாரம் குறையும்.
49. முன்பின் தெரியாதவராக இருந்தால் என்ன, எல்லோரிடமும் நட்பு பாராட்டுங்கள்.
50. தினமும் குறைந்தது அரைமணி நேரம் குடும்பத்தினருடன் அரட்டை அடியுங்கள்.
51. ஒவ்வொரு நாளும் குறைந்து 15 நிமிடங்களாவது காது குளிர இசையைக் கேளுங்கள்.

52. நல்ல புத்தகம், நல்ல நண்பன். வாரம் ஒரு புத்தகமாவது

 

http://kiliyanur.blogspot.com.au/2010_12_12_archive.html

  • 6 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் 4 முறை மாதங்கள் விட்டு விட்டு செய்து

தற்பொழுது 15 கிலோ குறைந்துள்ளேன் உறவுகளே..

 

வயிறு முழுவதுமாக போய்விட்டது

ஓடுதல்

குனிதல்

படி ஏறுதல் சுலபமாக உள்ளது...

 

தலை மயிர் மட்டும் கொஞ்சம் கழண்டுவிட்டது :(

விற்றமின் குறைவடைந்ததால் இருக்கலாம்...

 

பதில் எழுதியவர்களுக்கு பின்னர் எழதுகின்றேன்

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது வைத்தியர்

மற்றும் குடும்பத்தவர்கள்

நண்பர்கள் அனைவருக்கும் சந்தோசம்

நானே இதைச்செய்து முடித்ததால் (சாப்பாட்டு ராமன் நான்)

எனது குடும்பத்தில் பலர் (ஊரிலும் கூட)  செய்கிறார்கள்

அந்தளவுக்கு உதாரணமாகியுள்ளேன்...

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் 4 முறை மாதங்கள் விட்டு விட்டு செய்து

தற்பொழுது 15 கிலோ குறைந்துள்ளேன் உறவுகளே..

 

வயிறு முழுவதுமாக போய்விட்டது

ஓடுதல்

குனிதல்

படி ஏறுதல் சுலபமாக உள்ளது...

 

தலை மயிர் மட்டும் கொஞ்சம் கழண்டுவிட்டது :(

விற்றமின் குறைவடைந்ததால் இருக்கலாம்...

 

பதில் எழுதியவர்களுக்கு பின்னர் எழதுகின்றேன்

 

என்ன செய்து 15 கிலோ குறைஞ்சது எண்டு உடனடியாய் பதில் வேணும் விசுகர்!! பிரச்சனை எனக்கில்லை.....தூரத்து அண்ணை முறையான ஒராளுக்கு உதவி தேவையாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதைப்பிரின்ற் எடுத்து கொடுங்கள் அண்ணா...

7_DAYS_6_KG_Page_1.jpg7_DAYS_6_KG_Page_2.jpg

இவ்வளவையும்  வாசிக்கவே மனுஷன் மெலிஞ்சு போவான் போலகிடக்கு . :icon_mrgreen:

 

மாதத்தில இரண்டு நாள் பார்ட்டி போட்டு அந்த மாதிரி குத்து பாட்டுக்கு  டான்ஸ் ஆட தனுஷ் மாதிரி வரலாம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உடனடி பதிலுக்கும் தகவல் இணைப்பிற்கும் நன்றி விசுகர்! 

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உடனடி பதிலுக்கும் தகவல் இணைப்பிற்கும் நன்றி விசுகர்! 

 

குமாரசாமியண்ணா

எனது குடும்பத்தினர் கேட்டதற்காக முகநூலில்  நான் எழுதிப்போட்டதை இங்கு தந்திருக்கின்றேன்.

தேவையென்றால் எடுத்துக்கொள்ளுங்கள்.

 

7 நாட்கள் வாய்க்குள் போடுவதை பார்த்துப்போட்டால் 6 கிலோ காணாமல் போகும். தயாரா..??

 

1- முதலாவது நாள்

பழங்கள் மட்டும் (வாழைப்பழம் தவிர்த்து)

எவ்வளவும் சாப்பிடலாம். தாகத்துக்கு தண்ணீர் குடியுங்கள். தேனீர் வேண்டும் என்றால் பாலில்லாத தேனீர். சீனியை முடிந்தவரை குறையுங்கள். தேசிக்காய் விட்டுக்குடித்தால் இன்னும் நன்று.

 

2- இரண்டாவது நாள் 

மரக்கறிகள் மட்டும்.

பொரிக்க

வதக்கக்கூடாது. பச்சையாக அல்லது அவித்து.

எவ்வளவும் சாப்பிடலாம். தாகத்துக்கு தண்ணீர் குடியுங்கள். தேனீர் வேண்டும் என்றால் பாலில்லாத தேனீர். சீனியை முடிந்தவரை குறையுங்கள். தேசிக்காய் விட்டுக்குடித்தால் இன்னும் நன்று.

 

3-மூன்றாவது நாள்

இரண்டும் கலந்து (பழம் மரக்கறி)

எவ்வளவும் சாப்பிடலாம். தாகத்துக்கு தண்ணீர் குடியுங்கள். தேனீர் வேண்டும் என்றால் பாலில்லாத தேனீர். சீனியை முடிந்தவரை குறையுங்கள். தேசிக்காய் விட்டுக்குடித்தால் இன்னும் நன்று.

 

4- நான்காவது நாள்

8 வாழைப்பழமும் 3 கப் பாலும்...

தாகத்துக்கு தண்ணீர் குடியுங்கள். தேனீர் வேண்டும் என்றால் பாலில்லாத தேனீர். சீனியை முடிந்தவரை குறையுங்கள். தேசிக்காய் விட்டுக்குடித்தால் இன்னும் நன்று.

பயப்படவேண்டாம். பாலும் பழமும் பசியை விரட்டிவிடும்.

 

5-வது நாள்

ஒருபிடி சோறும் 6 தக்காளிப்பழமும்..

காலையில் 2 தக்காளிப்பழத்தை மட்டும் சாப்பிடுங்கள்.

பாலில்லாத தேனீர் குடியுங்கள்.

மதியம் ஒரு பிடி சோறு. 2 தக்காளிப்பழம்

இரவு ஒரு பிடி சோறு. 2 தக்காளிப்பழம்

மொத்தம் 6 தக்காளிகள் தான்

தாகத்துக்கு தண்ணீர் குடியுங்கள். தேனீர் வேண்டும் என்றால் பாலில்லாத தேனீர். சீனியை முடிந்தவரை குறையுங்கள். தேசிக்காய் விட்டுக்குடித்தால் இன்னும் நன்று.

பயப்படவேண்டாம். தக்காளிப் பழம் பசியை விரட்டிவிடும்

உங்களது வயிறு குறைவடைவதையும் உடலில் புத்துணர்ச்சி ஏற்படுவதையும் உணரத்தொடங்குவீர்கள்

 

6-வது நாள்

ஒருபிடி சோறும் மரக்கறிகளும் 

காலையில் மரக்கறி அல்லது உருளைக்கிழங்கை அவித்து சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடியுங்கள்

மிகுதி இரு நேரமும் ஒருபிடி சோறும் மரக்கறிகளும் 

தாகத்துக்கு தண்ணீர் குடியுங்கள். தேனீர் வேண்டும் என்றால் பாலில்லாத தேனீர். சீனியை முடிந்தவரை குறையுங்கள். தேசிக்காய் விட்டுக்குடித்தால் இன்னும் நன்று

 

7வது நாள்

ஒருபிடி சோறும் மரக்கறிகளும் பழங்களும்..

காலையில் பழம் சாப்பிடுங்கள்(வாழைப்பழம் தவிர்த்து)

மிகுதி இரு நேரமும் ஒருபிடி சோறும் மரக்கறிகளும் பழங்களும்..

தாகத்துக்கு தண்ணீர் குடியுங்கள். தேனீர் வேண்டும் என்றால் பாலில்லாத தேனீர். சீனியை முடிந்தவரை குறையுங்கள். தேசிக்காய் விட்டுக்குடித்தால் இன்னும் நன்று

 

விரதம் முடிந்தது

அதற்குள்ளேயே மக்கள் சொல்லிவிட்டார்கள்

பெரும் வெற்றி என்று...

நிறுத்தால்

6 கிலோ குறைந்தேன்.....

 

*****(7 நாளும் கட்டாயம் தவிர்ப்பவை

சீனி

இறைச்சி

முட்டை

மீன்

எண்ணெய்

பால் (ஒரு நாள் தவிர்த்து)

மாவகைகளில் செய்த பதார்த்தங்கள் - புட்டு, இடியப்பம், பாண் உட்பட)

 

6 மாதத்தில் நாலு முறை செய்து 15 கிலோ குறைந்துள்ளேன்.

 

காணாமல் போனவை.

வயிறு

எப்பொழுதும் கண்ணுக்குள் இருக்கும் நித்திரை மயக்கம்

கன்னங்களிலிருந்த கறுப்புப்படலம்..

ஓடினால் 

படி ஏறினால் ஏற்படும் மூச்சுவாங்கல்

உடம்பிலிருந்த கொழுப்பு மற்றும் சீனி 

உடுப்புக்களின் size XXL

 

மீண்டும் கிடைத்தவை

எனது பழைய வெள்ளைநிறம்

ஊசியைக்கூட குனிந்து எடுக்கமுடிவது

உடுப்புக்களின் size L (மக்களின் உடுப்பை இனி மாறிப்போடலாம்)

நானே ஒரு உதாரணம்.

என்னாலேயே முடிந்தது என்றால் உங்களுக்கு....

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நன்றி விசுகர்!
வைத்தியர்களின் வைத்தியத்தை விட அனுபவித்து சொல்பவர்களின் வைத்தியமே சிறந்தது.  நன்றி   :)
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப உங்க உடம்பு கேட்டிட்டு இல்ல.. உங்க சொல்ல.. அதுக்கு கடா வெட்டி விருந்து வையுங்க.. விசுகு அண்ணா. :D:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.