Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மலேஷிய விமானம் யுக்ரெய்னில் விபத்துக்குள்ளானது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

131108175656_breaking_news_304x171_bbc_n

மலேஷிய விமானம் யுக்ரெய்னில் விழுந்து விபத்துக்குள்ளானதாக ஆரம்ப கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. அதில் 295 பயணிகள் இருந்தனர்.

யுக்ரெய்னுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான எல்லைப்பகுதியில் இந்த விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல்.

இந்த விமானம் ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூருக்கு வந்துகொண்டிருந்த வழியில் இந்த விபத்து நடந்திருக்கிறது.

 

http://www.bbc.co.uk/tamil/global/2014/07/140717_ukrainemalaysiaflight.shtml

  • கருத்துக்கள உறவுகள்

மலேசிய எயர்லைன்ஸ் விமானம் MH 17,  295 பயணிகளுடன் அம்ஸ்ரடாமில் இருந்து கோலாலம்பூர் நோக்கி சென்ற போது.. உக்ரைனின் கிழக்கு பகுதியில் சுமார் 10,000 மீற்றர்கள் உயரத்தில் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.  (ஆதாரம் பிபிசி மற்றும் ரெலிகிராப்)


உக்ரைனின் கிழக்குப் பகுதியில் கடந்த திங்கள் உக்ரைன் விமானப்படையின் அன்ரனோவ் 26 ரக விமானம் ஒன்றும் இதே அளவு உயரத்தில் வைத்து போராளிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தது. இன்று உக்ரைனின்.. இரண்டு எஸ் யு 25 ரக போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களாகவே கடும் சக்தி வாய்ந்த விமான எதிர்ப்பு ஏவுகணைகள் பாவிக்கப்பட்டு வரும் பகுதியில்.. சர்வதேச பயணிகள் விமானங்களின் பாதையை நிர்ணயித்தமையே இந்த துக்ககர நிகழ்வுக்கு காரணமாக அமைந்துள்ளது. அதிகாரிகளின் பொறுப்பற்ற தனம்.. இந்த அழிவுக்குக் காரணமாக அமைந்திருக்கலாம். 


Malaysia airliner crashes in east Ukraine.
 

A Malaysian airliner reportedly with 295 people on board has crashed in Ukraine near the Russian border, on a flight from Amsterdam to Kuala Lumpur.  http://www.bbc.co.uk/news/world-europe-28354856

  • கருத்துக்கள உறவுகள்

malaysia_crash_2978427c.jpg

 

malaysia_crash02_2978428e.jpg

 

 BUK surface-to-air missile இந்த விமானத்தை சுட்டு வீழ்த்த பாவிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.  (நன்றி http://www.telegraph.co.uk)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

mas(5).jpg

ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசியவின் கோலாலம்பூருக்கு 15 விமானப் பணியாளர்கள் உட்பட 295பேருடன் பயணித்த மலேசியன் எயார் லைன்ஸுக்கு சொந்தமான MH17 விமானம், ரஷ்ய எல்லைக்கு அருகே உக்ரைனில் இன்று மாலை விழுந்து விபத்துக்குள்ளானதாக இன்டர்பெக்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 

குறித்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாகவும், விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் எனவும்  உறுதிப்படுத்தப்படாத செய்தி தெரிவிக்கிறது.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/118530--295-.html

  • கருத்துக்கள உறவுகள்

ருவிட்டர் வழி வெளிவந்து கொண்டிருக்கும் இந்த விபத்தின் கோர விளைவுகள் பற்றிய படம்.. ஒன்று. (இது இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படாத படம் ஆகும்.) 

 

Bswkx0XCMAAOGF9.jpg

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

'ஏவுகணைத் தாக்குதல்': உக்ரைனில் 295 பேருடன் விழுந்து நொறுங்கியது மலேசிய விமானம்

 

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூருக்கு 295 பேருடன் புறப்பட்ட மலேசிய விமானம், ரஷ்ய எல்லையில் உள்ள கிழக்கு உக்ரைன் பகுதியில் விழுந்து நொறுங்கியது.

இது, ஏவுகணைத் தாக்குதல் என்று உக்ரைனின் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் ஆன்டன் கேராஷென்கோ தெரிவித்துள்ளார்.

விமானம் விழுந்து நொறுங்கியதை உறுதி செய்யும் விதமாக, எம்.எச்.17 விமானத்துடனான தொடர்பை இழந்துவிட்டதாக மலேசிய ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு மலேசிய பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

கோலாலம்பூருக்குப் புறப்பட்ட போயிங் 777 ரக விமானத்தில் 280 பயணிகளும், விமானப் பணிக்குழுவைச் சேர்ந்த 15 பேரும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிழக்கு உக்ரைன் பகுதியில் மலேசிய விமானம் விழுந்ததாக மாஸ்கோவில் உள்ள ரஷ்ய விமானத் துறை வட்டாரங்கள், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பாக தங்களுக்கு தகவல் வந்துள்ளதாகவும், மலேசிய விமானத்தின் நிலை குறித்து அறிய, துரித நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் இங்கிலாந்து வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

கடைசியாக கிடைத்த தகவலின்படி, மலேசிய விமானம் விழுந்து நொறுங்கியதை உக்ரைன் அரசு உறுதி செய்தது.

 

 

ஏவுகணைத் தாக்குதல்: உக்ரைன் தகவல்

ஏவுகணைத் தாக்குதல் மூலமே மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக, உக்ரைன் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் ஆன்டன் கேராஷென்கோ தெரிவித்துள்ளார்.

மலேசிய விமானம் விழுந்து நொறுங்கிய கிழக்கு உக்ரைன் பகுதி, கிளர்ச்சியாளர்கள் வசிக்கும் ஷக்டார்ஸ்க் நகருக்கு அருகில் இருக்கிறது.

ரஷ்ய ஆதரவு பிரிவினைவாத கிளர்ச்சியாளர்கள்தான் இந்தத் தாக்குதலை நடத்தியதாக உக்ரைன் தரப்பு குற்றம்சாட்டுகிறது.

கடந்த சில வாரங்களாக, உக்ரைன் ராணுவ விமானங்களை, கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து சுட்டு வீழ்த்தி வந்ததாகவும், அவர்களுக்கு ரஷ்ய ராணுவம் ஆயுதங்களை வழங்கி வந்ததாகவும் உக்ரைன் தரப்பில் இருந்து குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால், கிளர்ச்சியாளர்களுக்கு தாங்கள் உதவவில்லை என்று ரஷ்ய தரப்பு மறுப்பு வெளியிட்டு வருவது கவனிக்கத்தக்கது.

முன்னதாக, கடந்த மார்ச் 8-ம் தேதி 5 இந்தியர்கள் உட்பட 239 பேருடன் புறப்பட்ட எம்.எச்.370 மலேசிய விமானம் மாயமாகி, இன்று வரை அதன் நிலை தெரியாதது குறிப்பிடத்தக்கது.

 

தி ஹிந்து

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
140717162323_malaysia_airlines_promo_512

மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் (ஆவணப்படம்)

மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று யுக்ரெய்னில் விழுந்து நொறுங்கியிருக்கிறது. அந்த விமானத்தில் 295 பயணிகள் இருந்தனர். இந்த விமானம் ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூருக்கு வந்துகொண்டிருந்த வழியில் இப்படி நடந்திருக்கிறது.

தனது விமானத்துடனான (எண் எம்எச்17) தகவல்தொடர்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டுவிட்டதாக மலேஷியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. கடைசியாக அந்த விமானத்துடனான தகவல் தொடர்பு என்பது அந்த விமானம் யுக்ரெய்ன் வான்பரப்பில் பறந்துகொண்டிருந்தபோதுதான் இருந்தது என்று மலேஷியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறது.

 

யுக்ரெய்னுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான எல்லைப்பகுதியில் கிழக்கு யுக்ரெய்னில் இந்த விமானம் தரையில் எரிந்ததை கண்டதாக மாஸ்கோவில் இருக்கும் வான்வழி கண்காணிப்பு அதிகாரி ஒருவர் தம்மிடம் தெரிவித்ததாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியிருக்கிறது. அந்த குறிப்பிட்ட விமானம் ரஷ்ய வான்பறப்பிற்குள் நுழையவில்லை என்றும் அந்த அதிகாரி தெரிவித்ததாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டிருக்கிறது.

இந்த விமானம் சுமார் 33,000 அடி உயரத்தில் ஏவுகணை மூலம் தாக்குதலுக்கு உள்ளானதாக யுக்ரெய்னின் உள்துறை அமைச்சரின் ஆலோசகர் ஆண்டன் ஹெரஷெங்கோ தெரிவித்ததாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் கூறியிருக்கிறது.

யுக்ரெய்ன் கிளர்ச்சியாளர்கள் காரணமா?

கிழக்கு யுக்ரெய்னில் யுக்ரெய்ன் ராணுவ விமானங்கள் ஏவுகணைதாக்குதலில் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கின்றன. இந்த பிராந்தியத்தில் தான் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிக்காரர்கள் யுக்ரெய்னிய அரசை எதிர்த்து தொடர்ந்து சண்டையிட்டு வருகிறார்கள்.

இந்த விபத்து குறித்து தமக்கு தெரியவந்திருப்பதாக கூறும் பிரிட்டனின் வெளியுறவு அமைச்சகம், என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்துவருவதாகவும் தெரிவித்திருக்கிறது.

முன்னதாக யுக்ரெயின் அரசு ரஷ்யா தனது போர் விமானங்களில் ஒன்றை, அது யுக்ரெயின் நிலப்பரப்பில் பறந்து கொண்டிருந்த போது, சுட்டு வீழ்த்திவிட்டதாகக் குற்றம் சாட்டியிருந்தது.

யுக்ரெய்னிய ராணுவத்துக்கு சொந்தமான எஸ்.யு 25 ரக விமானம் ஒன்று புதனன்று ரஷ்ய ஏவுகணை ஒன்றால் தாக்கப்பட்டதாகவும், ஆனால் விமானி வெளியே குதித்து விட்டார் என்றும், அவர் காயமின்றி மீட்கப்பட்டார் என்றும் யுக்ரெய்னிய பாதுகாப்பு அமைச்சகத்துக்காகப் பேசவல்ல அதிகாரி ஒருவர் கூறினார்.

140624162046_rebels_ukraine_separatists_

யுக்ரெய்ன் கிளர்ச்சியாளர்கள் (ஆவணப்படம்)

 

ரஷ்ய நிலப்பரப்பிலிருந்து ஒரு யுக்ரெயினிய கிராமம் ஒன்றில் க்ராட் ரக ராக்கெட்டுகள் ஏவப்படுவது போல காட்டும் amateur வீடியோ காட்சிகளை யுக்ரெயினிய ஊடகங்கள் காட்டின.

இந்த காட்சிகளை பிபிசியால் முழுமையாக உறுதிப்படுத்த முடியவில்லை.

கிழக்கு யுக்ரெயினில் பிரிவினைவாதிகளுக்குத் தான் உதவி செய்வதாகக் கூறப்படுவதை ரஷ்யா தொடர்ந்து மறுத்து வந்திருக்கிறது.

10,000 அடி உயரத்தில் பறக்கும் விமானத்தை எதனால் சுட்டு வீழ்த்த முடியும்?

இதேவேளை 10,000 அடி உயரத்தில் பறக்கும் ஒரு விமானத்தை சுட்டு வீழ்த்தவேண்டுமானால் அது தொலைதூரம் பறக்கவல்ல நிலத்தில் இருந்து வான்வெளிக்கு ஏவக்கூடிய நீண்டதூரம் சென்று தாக்கவல்ல ஏவுகணையால் மட்டுமே சாத்தியம் என்றும், அதுவும் கூட அத்தகைய ஏவுகணை ராடார் உதவியுடன் வழிநடத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் பாதுகாப்புத்துறை நிபுணர் ஒருவர் பிபிசியிடம் தெவித்தார்.

அந்த கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, இந்த விமானமானது மனிதர்கள் எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய மேன்பேட் என்கிற ஏவுகணைத்தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்காது என்று கருதப்படுகிறது. ஏனென்றால் அத்தகைய குறுகிய தூர ஏவுகணையின் வீச்சு விமானம் பறந்துகொண்டிருந்த உயரத்த்க்கு செல்லாது என்று மதிப்பிடப்படுகிறது.

இவை தவிர வானிலிருந்தபடியே ஏவப்பட்டு தாக்கக்கூடிய ஏவுகணைகளை ஏற்றிச் சென்ற ராணுவ தாக்குதல் விமானத்தினால் மட்டுமே இந்த விமானம் தாக்கப்பட்டிருக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

இதில் எந்த ஏவுகணை பயன்படுத்தப்பட்டிருக்கிறது அல்லது எப்படி இந்த விமானம் வீழ்ந்து நொறுங்கியது என்பதை அமெரிக்காவின் வசம் இருக்கும் செயற்கைக்கோள் படங்கள் மூலம் கண்டறிய முடியும் என்று நம்பப்படுகிறது.

நிலத்தில் இருந்து வான் நோக்கிச் சென்று தொலைதூர தாக்குதல் நடத்தப்படும்போது அத்தகைய ஏவுகணைகள் வெளி உமிழும் புற ஊதாநிற புகையை இந்த செயற்கைக்கோள்களின் படங்கள் காட்டிக்கொடுக்கும் என்று கருதப்படுகிறது.

 

http://www.bbc.co.uk/tamil/global/2014/07/140717_ukrainemalaysiaflight.shtml

  • கருத்துக்கள உறவுகள்

மலேசியன் விமானத்திற்கே தொடர்ந்து அடி விழுகின்றது.அநியாயமாய் உயிரிழந்த அனைவரது ஆத்மாவும் சாந்தியடையட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்ஷிய உக்ரேனிய எல்லையிலேயே விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறது. 33000 அடி உயரத்தில் பறந்துகொன்டிருந்த இந்த விமானம் தரையிலிருந்து விண்ணை நோக்கிப் பாயும் "புக்" ரக ஏவுகனையினால் சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. சில நாட்களுக்கு முன்னரும் கூட இதே பகுதியில் பறந்து சென்ற இரு உக்ரேனிய ராணுவ விமானங்களைக்கூட இதேபாணியில் "ரஷ்ஷிய ஆதரவுக் குழுக்கள்" என்கிற பெயரில் உக்ரேனில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருக்கும் ரஷ்ஷிய ராணுவம் சுட்டு வீழ்த்தியது தெரிந்ததே.

 

சர்வதேச விமானப் பாதுகாப்பு நிறுவனத்தின் நிபுணர்கள் தெரிவித்த கருத்துக்களின்படி, இவ்வாறான மிக சக்தி வாய்ந்த, நவீன ஆயுதங்களை இயக்குவதென்பது நிச்சயமாக நன்றாகப் பயிற்றப்பட்ட ராணுவ நிபுணர்களாலேயே முடியும் என்றும், சாதாரண துப்பாக்கிதாரர்களினால் இதுபோன்ற ஏவுகனைத் தொகுதிகளை இயக்க முடியாதென்றும் கூறுகின்றனர். அவர்களின் கருத்துப்படி, ரஷ்ஷியாவே இந்த விமானத்தைச் சுட்டு வீழ்த்தியிருக்கிறது.

 

ரஷ்ஷியாவின் பங்குபற்றிக் கேட்கப்பட்ட கேள்வியொன்றிற்கு பதிலளித்த ரஷ்ஷியப் பிரதமர் புட்டின், "உக்ரேனின் பகுதிக்குள் சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பதால், உக்ரேன் நாடே அதற்குப் பொறுப்பு " என்று மொட்டையாகப் பதிலளித்திருக்கிறார்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு சில மணிநேரத்திலேயே தாமே விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக உரிமை கொண்டாடியுள்ள உக்ரேனியப் போராளியொருவன் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் பாகங்களின் படங்களை இணைத்திருந்தான். ஆனால் பலராலும் பார்க்கப்பட்ட அவனது படம் பின்னர் உடனடியாக அகற்றப்பட்டு விட்டது. ஆனாலும் அமெரிக்க செய்தி நிறுவனங்கள் அப்படத்தினதும், அவன் பதிந்த பதிவினதும் தரவிறக்கத்தை பெற்றிருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏதோ ஒரு வெற்றிக்காக / பதிலடிக்காக பயணிகளுடான ஒரு விமானத்தை பலியெடுத்திருக்கிறார்கள்.... :(

  • கருத்துக்கள உறவுகள்

295 பேருடன் சென்ற மலேசிய விமானம் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது!

கிய்வ்: 295 பேருடன் சென்ற மலேசிய விமானம் ஒன்று உக்ரைன் - ரஷ்யா எல்லை அருகே பறந்து கொண்டிருந்தபோது விமான எதிர்ப்பு ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

flight%201.jpg

விமானம் நொறுங்கி விழுந்த இடத்தில் விமானத்தின் சிதறிய பாகங்களும், பயணிகளின் சடலங்களும் சிதறி கிடப்பதாக ராய்ட்டர் செய்தியாளர் தெரிவித்துள்ளார். 

சம்பவ இடத்திற்கு மீட்புக்குழுவினர் விரைந்த நிலையில்,  கிராபோவோ என்ற கிராமத்தின் அருகே விமானம் நொறுங்கி கிடக்கும் இடத்தில் குறைந்தது 100 சடலங்களாவது சிதறிக்கிடப்பதை தான் பார்த்ததாக மீட்புக் குழுவை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் விமானத்தின் நொறுங்கிய பாகங்கள் சுமார் 15 கி.மீ. தொலைவுக்கு சிதறி கிடப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.  

 

malaysian%20airline.jpg

நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி விமானம் சென்று கொண்டிருந்த நிலையில், தற்போது உள்நாட்டுப் போர் நடந்து வரும் உக்ரைனின் கிழக்குப் பகுதி அருகே விமானம் சென்று கொண்டிருந்துபோது,அதன் மீது ஏவுகணை ஒன்று  தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இது தொடர்பாக மலேசிய ஏர்லைன்ஸ் தனது டுவிட்டர் தளத்தில், உக்ரைன் வான்வெளியில் பறந்தபோது விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. 

விமானத்தில் 280 பயணிகளும், விமானிகள் உள்ளிட்ட 15 ஊழியர்களும் பயணம் செய்து கொண்டிருந்ததாக மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் கூறியுள்ளது. ரஷ்ய எல்லையருகே விமானம் சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் விமான நிறுவனம் கூறியுள்ளது. உக்ரைனின் எல்லையில் இருந்து, ரஷ்ய எல்லைக்கும் விமானம் நுழையவேண்டிய தருணத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

விமானம்,  ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுவதால் சர்வதேச அரசியலில் திடீர் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

flight%202.jpg

தங்களுக்கும் விமானம் விழுந்து நொறுங்கியதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும்,விமானத்தை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியதாகவும்  உக்ரைன் அரசு குற்றம்சாட்டியுள்ளது. 

எனினும் 33 ஆயிரம் உயரத்தில் பறக்கும் விமானத்தை வீழ்த்துவது என்பது சாதாரண ஏவுகணைகளால் இயலாது என்ற கருத்தையும் நிபுணர்கள் முன்வைத்திருக்கிறார்கள்.

ராடார் மூலம் கட்டுப்படுத்தப்படும் ஏவுகணைகளோ, விமானத்தில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளோதான் இத்தகைய தாக்குதலை நடத்த முடியும் என்றும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், தற்போதைய சூழல் குறித்தும், எழுந்திருக்கும் நெருக்கடி குறித்தும் விவாதிப்பதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமாவை, ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://news.vikatan.com/article.php?module=news&aid=30290

  • கருத்துக்கள உறவுகள்

MH 370 யும் சுட்டு வீழ்த்தப்பட்டது என்பதை முபே கூறியிருந்தேன் அந்த வகையில் இப்போது MH 17, இரண்டுமே போயிங் 777. மலேசியன் எயர்லைன்ஸ், றேய்தியோனின் AMDS ஒன்றில் முதலிடுவது நல்லது. 

 

http://www.raytheon.com/capabilities/products/amds/

 

பயண நேரத்தைக் குறைக்க, எரிபொருளை மீதப்படுத்த குறுக்கு வழியால போல. அண்மையில் இரண்டு ராணுவ விமானங்களுக்கு சங்கூதிய கதை இவர்களுக்கு முதலிலேயே தெரிந்திருக்க வேண்டும். இனி நான் கப்பலில தான் ஏறுவன். இறந்தவர்களுக்கு எனது அஞ்சலிகள்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

separatisten-haben-in-der-ost-ukraine-de

 

Im gerade von blutigen Gefechten erschütterten Kriegsgebiet im Osten der Ukraine stürzt ein Passagierflugzeug der Malaysian Airlines ab. Fast 300 Menschen - unter ihnen mindestens vier Deutsche - sterben dabei nach Behördenangaben. Unter den insgesamt 298 Insassen seien zudem 154 Niederländer und 27 Australier gewesen, teilte ein Vertreter der Fluggesellschaft Malaysia Airlines am Amsterdamer Flughafen Schiphol mit.

 

பயணிகள் விமானத்தை சுட்டு விழுத்துவது என்பத... எந்த வகையிலும் எற்றுக் கொள்ள முடியாது.
இதில் நான்கு ஜேர்மன், 154 நெதர்லாந்து, 27 அவுஸ்திரேலிய பயணிகளும் இறந்துள்ளார்கள்.
பயங்கரவாதிகளின் இச்செயல் மிகவும் கண்டிக்கப் பட வேண்டியது.

 

  • கருத்துக்கள உறவுகள்

MH17 மலேசிய பிராயாணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா ? 

பின்னனி என்ன ?

10474308_10152268553511939_8822065010786

Ukrainian interior ministry adviser Anton Gerashchenko posts a picture on Facebook showing a Buk missile system passing through the city of Torez, near the Malaysia Airlines MH17 site, hours before the crash.

Mr Gerashchenko says the plane was shot down with a Buk ground-to-air missile by separatists.

Read more: http://bit.ly/1rtXK11

 

 

http://bcove.me/lv2tlfc6

 

 

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்
 
உக்ரைனில் ரஷ்ய எல்லை அருகே விழுந்து நொறுங்கிய மலேசிய விமானம்: 295 பேர் பலி
 
001.jpg
 
ரஷியா அருகே கிழக்கு உக்ரைனில் ஒரு மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதை கிழக்கு உக்ரைன் கிளர்ச்சியாளர்கள்தான் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் அரசு கூறியுள்ளது.
 
அந்த விமானம், மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 ரக பயணிகள் விமானம் ஆகும். நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு அந்த விமானம் புறப்பட்டது. அதில், 280 பயணிகளும், 15 சிப்பந்திகளும் இருந்தனர்.
 
அந்த விமானம், உக்ரைன் நாட்டு வான் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென ‘ராடார்‘ கருவியின் பார்வையில் இருந்து மறைந்தது. சற்று நேரத்தில், விமானம் தீப்பிடித்தபடி, வானத்தில் இருந்து நெருப்புக் கோளமாக தரையில் விழுந்தது.
 
விமானம் விழுந்த இடம், கிழக்கு உக்ரைனில் உள்ள ஷாக்தர்ஸ்க் நகருக்கு அருகில் உள்ளது. அந்த பகுதி, கிளர்ச்சியாளர்களுக்கும், உக்ரைன் ராணுவத்துக்கும் இடையே சண்டை நடந்து வரும் பகுதி ஆகும். மேலும், அப்பகுதி ரஷியாவுக்கு அருகே உள்ளது. 
 
ரஷிய எல்லைக்குள் நுழைவதற்கு 40 கி.மீ. தூரத்துக்கு முன்பே இச்சம்பவம் நடந்துள்ளது.
 
அந்த விமானத்தை கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள்தான் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் நாட்டு உள்துறை அமைச்சக ஆலோசகர் ஆன்டன் கெராஷ்செங்கோ தெரிவித்தார். தரையில் இருந்து பாய்ந்து சென்று வானில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணை உதவியால், விமானத்தை கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியதாக அவர் கூறினார். விமானத்தில் இருந்த 295 பேரும் பலியாகி விட்டதாக அவர் கூறினார்.
 
ஏவுகணையால் தாக்கப்பட்டபோது, விமானம் 10 ஆயிரம் மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.
 
விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதாக மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனமும் உறுதிப்படுத்தி உள்ளது. விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக மலேசிய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது.
 
கடந்த சில வாரங்களில் எத்தனையோ உக்ரைன் விமானங்களை கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தி உள்ளனர். நேற்றுமுன்தினம் கூட ஒரு ஜெட் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியது.
 
இதற்கிடையே, விமானம் விழுந்த இடத்துக்கு அவசரகால மீட்பு குழுவினர் விரைந்தனர். விமானத்தை தேடும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். விமானத்தின் சேத பகுதிகளை உள்ளூர் மக்கள் பார்த்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது பற்றி உக்ரைன் பிரதமர் எரிசெனி யட்செனிக் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
 
நக்கீரன்.
  • கருத்துக்கள உறவுகள்

வல்லரசுகளின் அதிகாரப் போட்டியில் இன்னொரு முறை அப்பாவிப் பொதுமக்கள் பலியாகியுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

3 Filipinos, 1 Canadian and 27 Australians on board the 'shot down' Malaysian Air MH17 

Confirmed death toll so far

 

Netherlands: 189
Malaysia: 44 (including 15 crew)
Australian: 27
Indonesia: 12
UK: 9
Germany: 4
Belgium: 4
Philippines: 3
Canada: 1
New Zealand: 1
Unverified: 4

  • கருத்துக்கள உறவுகள்
கணவன் கடிந்து கொண்டான் மனைவியை
எத்தனை தடவை சொன்னேன்,
அந்த கறுப்புப் பை கவனம் என்று
மனைவி கவலைப்பட்டாள்,
அடடே அவர் சொல்லியும் நான் மறந்து விட்டேனே...
 
காதலன் இறுக ஒரு முறைஅணைத்துக்கொண்டான்
அவளோ அவன் இதழில் அழுத்திப் பதித்தாள்
இன்னும் 10 நாட்கள் கடற்கரையில்
உன்னை என்னசெய்கிறேன் பார் ரகசியம் பேசினாள் ...
 
இன்னும் ஒருவன் கண்ணாடியை சரிசெய்து கொண்டு
தொலைபேசி செய்தியில் மூழ்கிப் போனான்
நாளைய நாள் கண் முன்னே நடமாடியது,
அலுவலகத்தில் முக்கிய மூன்று சந்திப்பு,
நண்பனை காண வேணும், பழைய கதைகள் பேச வேணும்
அவன் விரும்பும் மதுப் புட்டி வாங்கவேணும் ...
 
முதியவர் மனதுக்குள் பேசிக்கொண்டார்,
நேரத்துக்குப் போய்விட்டால் மகனுக்கு சுலபம்
மருந்துகள் வாங்கவேணும், மனைவியும் பாவம்,
பேரக் குழந்தைகளை கவனிப்பதே அவள் வேலை
அடுத்த வாரம் அவளை முருகனிடம் அழைத்துப் போகவேணும்,
உடைந்த மூக்குத்தியும் மாற்றவேணும் ...
 
பாதிரியார் வந்தவரைய் பார்த்து முறுவலித்தார்,
கையில் இருந்த பைபிளில் தொலைந்து போனார்
26 அநாதை சிறுவர்கள், யார் யார்க்கு என்ன தேசமோ
கவலையானார், இது பெரும் பொறுப்பு தான்
நல்லபடியாக எல்லாம் அமைய வேணும்
யேசுவே, கண் கலங்க மனதுக்குள் மன்றாடினார்...
 
சிறுவன் கணணி விளையாட்டில் சாப்பிட மறுத்தான்,
அன்னை சலித்துக்கொண்டாள்
அப்பாவிடம் சொல்லி உன்னை என்ன செய்கிறேன்,
பார் சிறுவனுக்கு பயம் காட்டினாள்
அப்பா சிறுவனிடம் பாசமாக கெஞ்சினார்,
முதலில் சாப்பாடு அதன் பிறகு தான் விளையாட்டு ...
 
உயரமாய் தெரிந்தவர்
சிறுநீர் கழிக்க வரிசையில் போய் நின்றார்,
சாப்பாடு சுவையாய் இல்லை நொந்து கொண்டார்
எதிரே இருந்த இளம் பெண்ணை பார்த்து ஆனந்தமானார்,
என்ன அழகு இவள் 24 இருப்பாளா ?
பள்ளி நாட்களில் பழகிய ஒருத்தி,
இவளை போலதான் இருப்பாள்,
பழைய நினைவோடு சிறுநீர் கழித்தார் ...
 
யாரோ ஒருத்தி தலைக்கு மேல் இருந்த
பெட்டியை தட்டி தடவி இறக்கிக்கொண்டு இருந்தாள்
அதை இங்கு தான் வைத்தேனா,
இல்லை பெரிய பெட்டியில் போட்டேனா,
தலையை சொரிந்தாள்,
போன மாதம் வாங்கிய புகைப்பட கருவி,
கொஞ்சம் கவலையானாள்,
எங்கும் போகாது காலையில் தேடுவோம் நினைத்துக்கொண்டாள்...
 
கைக் குழந்தை சிணுங்கிற்று,
அம்மா புட்டியில் பாலை ஊற்றி வாயில் திணித்தாள்
குழந்தை அமிர்தம் கண்டது,
அன்னையை பார்த்து கண்ணை சிமிட்டியது,
பால் வெளியே வழிந்தது
அன்னை குழந்தை முகத்தை கொஞ்சினால், தடவினாள் ,
கனவுகளோடு சஞ்சரித்து தூங்கிப் போனார்கள்..
 
அழகிய அந்த பெண்
கள்ளம் கபடம் இல்லாமல் சிரித்தாள்,
ஓடி ஓடி உபசரித்தாள், சுத்தம் செய்தாள்
குழந்தைகளுக்கு பரிசு தந்தாள்,
முதியவருக்கு போர்வை தந்தாள்,
விளக்கை அணைத்து வணக்கம் சொன்னாள்,
இன்னும் ஏதும் வேணுமா என்று திரும்ப கேட்டாள்,
அயர்ச்சியோடு பணிவிடை செய்தாள் ..
 
ஒருவன் வக்கீல், ஒருவன் நோயாளி,
ஒருவன் ஆசிரியன், ஒருவன் படைப்பாளி...
ஒருத்தி மணப் பெண், ஒருத்தி கர்ப்பிணி,
ஒருத்தி சினிமா பிரபலம், ஒருத்தி மூதாட்டி ...
அவர் அவர் வாழ்க்கை, இயந்திரமாய்
கரையும் பொழுதுகள், எல்லோரும் நல்லவரே ...
 
எங்கோ ஒரு தேசம், இருள் சூழ்ந்த நேரம்,
தூரத்தில் இரைச்சல், இவன் தான் முதலில் அவதானித்தான்
சிறிதாய் வெளிச்சம், அதுவாய் இருக்குமோ,
பரபரப்பானான், செய்தி அனுப்பினான்
அங்கே தாடியோடு இருந்தவன் சுருட்டை பற்ற வைத்தான்,
உள்ளே இழுத்து வெளியே புகையை விட்டான்
 
உனக்கு பாடம் நான் போதிப்பேன் இன்று,
மனதுக்குள் கருவிக்கொண்டான்,
எழுந்து சென்று கட்டளை இட்டான்,
இயந்திரங்கள் முடுக்கப்பட்டன,
300 கனவுகளை சுமந்து வந்த மலேசிய பட்சி நான் ..
சின்னத் திரையில் தெளிவாய் முடக்கப்பட்டேன்
 
உஷ்ணம் உணரப்பட ஒளிக் கீற்றுகள் சீரிப்பாய
மரணத்தின் வாசனை மண்ணை தொட்டது,
அனர்த்தம் நிகழ்ந்தது, அனைத்தும் அதிர்ந்தது
அவள், அவன், பெரியவர், பாதிரி, குழந்தை, காதலன் ....
எல்லோருக்கும் ஒரே புள்ளியில் அஸ்தமனம்,
நான் புள்ளியாய் சிறு புள்ளியாய் பஸ்மம் ஆகிறேன்
மீண்டும் ஒருமுறை செய்தியாய் மாறுகிறேன்..
"Missile downed Malaysia Airlines" CNN, BBC அலறுகிறது!!
  • கருத்துக்கள உறவுகள்

விமானம் விழுந்த இடத்தில் சர்வதேச விசாரணையாளர்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கிழக்கு யுக்ரெய்னில் மலேஷிய ஏர்லைன்ஸ் விமானம் தரையில் விழுந்த இடத்திற்கு சர்வதேச விசாரணையாளர்கள் சென்றடைந்துள்ளனர்.

வியாழன் மதியம் பறந்துகொண்டிருந்தபோது சுடப்பட்டு இந்த விமானம் கீழே விழுந்ததாகத் தெரிகிறது.

ஓ எஸ் சி இ ஐரோப்பிய பாதுகாப்பு கூட்டுறவு அமைப்பைச் சேர்ந்த முப்பது நிபுணர்கள் சம்பவ இடத்தை ஹெலிகாப்டரில் சென்றடைந்துள்ளனர்.
மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து அழிந்துள்ள இச்சம்பவம் தொடர்பில் ஒரு முழுமையான, ஆழமான, சுயாதீனமான ஒரு சர்வதேச விசாரணைக்கு ஐநா பாதுகாப்பு சபை கோரியுள்ளது.

யுக்ரெய்னில் சண்டையில் ஈடுபட்டுள்ள அரசு தரப்பும், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சித் தரப்பும் ஏவுகணையால் இந்த விமானத்தை மற்றவரே சுட்டு வீழ்த்தியதாக ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்த விமான சேதங்களை சர்வதேச விசாரணையாளர்கள் வந்து பார்வையிடுவதை அனுமதிப்போம் என ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிக்காரர்கள் முன்னதாக தெரிவித்திருந்தனர்.
மலேஷியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட செயல் ஒரு சர்வதேசக் குற்றம் என்றும் அதற்குப் பொறுப்பானவர்கள் தி ஹேக் நீதிமன்றத்தில் குற்றவியல் நடவடிக்கையை சந்திக்க வேண்டும் என்றும் யுக்ரெய்னிய பிரதமர் கூறியிருந்தார்.

கிழக்கு யுக்ரெய்னிய கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆதரவு தருவதில் ரஷ்யா அளவுக்கதிகமாகச் சென்றுவிட்டது என்று பிரதமர் அர்செனியு யத்சென்யுக் கூறினார்.

ஆம்ஸ்டெர்டாமிலிருந்து கோலாலம்பூரை நோக்கிப் பறந்த இந்த விமானம் கிழக்கு யுக்ரெய்னில் ரஷ்யாவுடனான எல்லைக்கு அருகில், ரஷ்ய ஆதரவு பெற்ற கிளர்ச்சிக்காரர்கள் வசமுள்ள ஒரு பகுதியில், கீழே விழுந்து அழிந்துபோனது. இதில் அந்த விமானத்திலிருந்து கிட்டத்தட்ட முந்நூறு பேரும் உயிரிழந்தனர்.

இந்த விமானத்தின் பிளாக் பாக்ஸ் பதிவுக் கருவிகள் ஏற்கனவே கண்டெடுக்கப்பட்டுவிட்டன.

10422967_550425481728511_902274229061535
 
 

 

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

TCAS எனப்படும் மோதல் தவிர்ப்பு பொறி விமானியின் அறையில் அலறியிருக்கும். இன்னொரு விமானம் மோதிவிட்டதாக விமானிகள் நினைத்திருக்கக் கூடும்.

மேலும் அமெரிக்கா இந்த விடயத்தில் நல்லவன் வேடம் போட முடியாது. அவர்களும் வகைுடாவில் ஒரு ஈரானிய பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியவர்கள்.

Edited by இசைக்கலைஞன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.