Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மடக்கும் கம்மாறீசும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மடக்கும் கம்மாறீசும்

Author: வந்தியத்தேவன்

வழக்கம் போல பிள்ளையார் கோயில் ஆலமரத்தடி இளந்தாரிப் பொடியளினால் களைகட்டியது. ஒரு பக்கம் ஆடு புலி ஆட்டம் விளையாடும் பொடியள் இன்னொரு பக்கம் தாயம் எறியும் கூட்டம், இன்னொரு பக்கம் 304 கடதாசிக் கூட்டம் விளையாடும் கோஷ்டி என அமளிதுமளிப்பட்டது.

blackjack-cards.jpg

வழக்கமாக 12 பேர் விளையாடுகின்ற 304 இண்டைக்கு சில வழமையான கையள் வராதபடியால் 8 பேருடன் தொடங்கியது.

"கேள்வி" என அழகன் தொடங்க பிரபா "உதவி" என்றான் அழகனும் உதவிக்கு மேலே என தன்ரை பக்க மாறனை கேட்கச் சொன்னான். மாறன் ஒரு தொன்னூறு என இழுக்க எதிர்க்கோஷ்டியினர் அனைவரும் மேலே என மாறனுக்கே விட்டுவிட்டார்கள்.

"உவன் உப்பிடித்தான் தாள் இல்லாமல் சும்மா கேட்பான் " என அழகன் மாறனைப் பேசியபடியே "சரி சரி துரும்பைக் கவிழ்" என்றான்.

"டேய் அழகா நீதானே இறக்கம் நல்ல தாளாப் பார்த்து இறக்கு" மாறன்.

"நல்ல தாளோ, சரி இந்தா டயமண்ட் வீறு" என அழகன் டயமண்ட் ஜக்கை இறக்கினான்,

"நல்ல காலம் நானும் உந்த கோதாரி டயமண்ட்டில் தான் கேட்டனான் தப்பிட்டேன்" என்ற படி பிரபா டயமண்ட் மணலை இறக்கினான்.

"அடப்பாவி மணலை மட்டும் வைத்துக்கொண்டே கேட்டிருக்கின்றாய் தப்பிவிட்டாய்"

"உவன் ரவி நல்லா அடுக்குவான் ஆனால் ஒருநாளும் வெல்ல அடுக்குவதில்லை எதாவது ஒரு தாளை மாத்தி அடிக்கி குழப்பிபோடுவான்" என ரவியின் அடுக்கை குறை சொன்னான் சீலன்.

முதல் ஆட்டம் முடிந்தது, அழகன் கார்ட்சை புறிக்கத் தொடக்கினான். கடைசிக் கை போட்டதுதான் "மடக்கு" என்றான் பிரபா.

"ஆடத்தன் அவங்களைக்கு அணைஞ்சுபோச்சு, எங்கடை பக்கம் கலாவரை ஆனாலும் ஒருதனும் கேட்கவில்லை" சலிப்புடன் அடுக்கல் மன்னன் ரவி.

ரவி சொன்னது போல பிரபாவும் ஆடத்தன் வீறை மேசையில் ஓங்கி அடித்தான். அவனுக்கு பக்கத்தில் இருந்த மாறன் ஆடத்தன் ஆசை இறக்கவும் பிரபா "கோட்" என ஏனைய தாள்களை கோட்டடித்தான்.

இந்த முறை நீங்கள் மடக்கினாலும் அடுத்த முறை நான் கம்மாறீஸ் அடிக்கின்றேன் இது சீலன்.

டேய் நீ இனத்துக்கு இனம் போடுகின்ற சின்னபெடியன் கம்மாறிஸ் அடிக்கபோறீயோ என அவனை மாறன் நக்கலடித்தான்.

இப்படியே ஒருத்தரை ஒருதர் நக்கலடித்தபடி பெரிதாக அலாப்பல்கள் இல்லாமல் நிறைவடைந்தது.

சொல் விளக்கம் :

கடதாசிக் கூட்டம் :

கார்ட்ஸ் விளையாடுபவர்களை எங்கடை ஊரில் கடதாசிக் கூட்டம் என்பார்கள்.

கையள் :

கார்ட்ஸ் விளையாட்டில் பங்குகொள்ளும் நபரை கை என அழைப்பார்கள். உதாரணமாக "மச்சான் ஒரு கை குறையுது நீயும் வா" என்றால் ஒராள் குறைவாக உள்ளது என்பதாகும்.

கேள்வி :

விளையாட்டுத் தொடங்கும்போது கார்ட்சினை பங்கிட்டவருக்கு பக்கத்தில் இருப்பவர் பெரும்பாலும் இந்தக் கேள்வியுடன் தான் ஆரம்பிப்ப்பார். புள்ளிகள் அடிப்படையில் இது 50 (சாதாரண 50) ஆகும். இதன் ஆங்கிலப் பிரயோகம் தெரியவில்லை.

உதவி :

கேள்வி கேட்டவரின் எதிரணி உறுப்பினர் (பெரும்பாலும் கேள்வி கேட்டவருக்கு அருகில் இருப்பவர்) கேட்பது இதன் பெறுமதி சாதாரண 60 புள்ளிகள் ஆகும்,

மேலே :

ஒருவர் தன்னால் எந்தக் கேள்வியும் கேட்கமுடியாமல் தன் அணியைச் சேர்ந்த ஏனையவர்களிடம் விட்டுவிடுவது,

தாள் :

சீட்டு ஒன்றை தாள் என்பார்கள். உதாரணமாக நல்ல தாள் வாய்க்கவில்லை.

துரும்பு :

Trumpபே துரும்பு எனப்படுகின்றது. துருப்புச் சீட்டின் மருவிய வடிவம் இந்த துரும்பாகும்.

வீறு : ஜாக்(Jacks).

மணல் : ஒன்பது (Nine)

ஆசு : Ace

ஆஸ் (Ace) என்பதன் மருவிய பதம்

அடுக்குதல் :

அடுக்குதல் என்பது சீட்டினை ஒருவிதமான வரிசைப்படுத்தலில் அடுக்குதல். ஏதாவது ஒரு அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள தாள்கள் செல்லும், சிலவேளைகளில் அடுக்கு பிழைத்தால் தோல்வி தான்.

புறித்தல் :

சீட்டினை அனைத்து விளையாடும் உறுப்பினர்களிற்க்கும் பங்கிடுதல்.

மடக்கு :

ஒருவர் தன்னுடைய கையில் இருக்கும் தாள்கள் அனைத்தும் எதிரணி உறுப்பினர்களால் வெட்டமுடியாமல் விளையாடுவது.

கோட்(Coat) :

மடக்கியவர் கடைசியாக கோட் எனச் சொல்லி தன்னுடைய தாளை அல்லது தாள்களை இறக்கவேண்டும்.

ஆடத்தன் : Hearts

உவீத்தன் : Diamonds

கலாவரை : Clubs

ஸ்பேட் (Spades) அதே பெயரில் தான் அழைக்கப்படுகின்றது.

கம்மாறிஸ் : Caps

ஒரு அணியினருக்கு சகல தாள்களும் கிடைத்தால் கடைசியாக அடிப்பது கம்மாறீஸாகும்.

சில சொற்களின் ஆங்கிலச் சொற்கள் தெரியவில்லை. மேலதிக தகவல்களை கார்ட்ஸில் வித்துவம் கூடிய நண்பர்கள் சொல்லவும். இந்த 304 விட ரம்மி, 31 (முப்பத்தியொன்று), கழுதை, பிரிஜ்(Bridge) போன்ற ஏனைய கார்ஸ்ட் விளையாட்டுகளும் பிரபலம் வாய்ந்தவை.

http://eelamlife.blogspot.co.uk/search/label/விளையாட்டு

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

அடுக்கி விளையாடுதல் 1பிடியில் ஒரேஇனத்தில் 4 அல்லது 3தாள்கள் அதன்மேலே அடுத்த பிடி (எதுவாகவும் இருக்கலாம்)அதன் மேலே முதற்பிடியின் இனத்தைச்சேர்ந்த 3 அல்லது 4தாள்கள் (4-4ஆய் அடுக்கினால்அழி துரும்பாகிவிடும்)2 வைக்கும் பொழுது நடுவே வைக்க வேண்டும் அப்பதான் பிரிபடாது.கடதாசியைக்கலக்கும் போது ஒரேமாதிரிக்கலக்க வேண்டும் இடையில் இழுத்துக் கலக்கினால் அடுக்கல் குழம்பிடும்.பல ஆராய்ச்சிகளின் பின் நான் கண்டு பிடித்தது இதுதான்.ஒரு இனத்தாளை மட்டும்தான் அடுக்க வேண்டும் 2 இனத்தாளை அடுக்கினால் எதிர்ப்பாட்டிக்கும் அடுக்குத்தாள் போக வாய்ப்பிருக்கிறது.படிக்கிற காலத்தில இந்த விளையாட்டில நான் ஒரு சூரனாக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இலங்கையில்..... இருக்கும் போது, காட்ஸ் விளையாடியதில்லை.
இங்கு வந்த ஆரம்பத்தில்.... எல்லோரும் தனியே இருந்த,   பெடியள் என்ற படியால்... சில வருடங்கள் விளையாடினேன். 

பொழுது போக்குவதற்கு நல்ல விளையாட்டு.
 

சிலர் இதில் பைத்தியமாக..... இரவு, பகலாக விளையாடுவதைப் பார்க்க... எரிச்சலாக இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று வரைக்கும் நான் காட்ஸ் விளையாடினதேயில்லை. ஆர்வமுமில்லை. படிப்பில்தான் அதிக கவனம் செலுத்துவேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று வரைக்கும் நான் காட்ஸ் விளையாடினதேயில்லை. ஆர்வமுமில்லை. படிப்பில்தான் அதிக கவனம் செலுத்துவேன்.

 

நீங்கள் இதை, முனியப்பர் கோயிலிலை..... சத்தியம் பண்ணி சொன்னால் தான்.... நாங்கள் நம்புவம். :D

  • கருத்துக்கள உறவுகள்

இன்று வரைக்கும் நான் காட்ஸ் விளையாடினதேயில்லை. ஆர்வமுமில்லை. படிப்பில்தான் அதிக கவனம் செலுத்துவேன்.

 

இப்படி நீங்கள் பச்சைபுள்ளையா உண்மையை டக்கென்று சொல்வதால்தான் உங்களை எனக்கு ரெம்ப பிடிக்கும் :lol:

 

ஏழாம் எட்டாம் வகுப்பில் பெரியவர்களுடன் விளையாடத் தொடங்கியது, சில காலம் இப்ப விடுபட்டுப்போச்சு, இனி தொடங்கனும் பிள்ளைகளுடன்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இதை, முனியப்பர் கோயிலிலை..... சத்தியம் பண்ணி சொன்னால் தான்.... நாங்கள் நம்புவம். :D

நீங்க முனியப்பர் கோயிலுக்கு கூப்பிட,அவர் பரிமளத்தோட சின்னக்கோட்டைக்குள் போய் நிக்கப்போறார்.
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பேட்ஸ் =  ஸ்கோப்பன் எனச் சொல்வார்கள்.

 

ஹைகோட்ஸ்சுக்கு  பிடிக்க முடியாத தாள்கள் துரும்பாகவும் ஏனைய சில பெரிய தாள்களுடன் , வீறு, மனல் பாட்னரிடம் என நல்லாத் தெரிந்தாலும் அவற்ரைச் சரியாய் அடுக்கி துரும்பு மேலே காட்டி கோட் சொல்லி அடிக்க வேண்டும்.

 

எனக்கொண்டும் தெரியாதப்பா , சும்மா கேள்விப்பட்டது...! :D

  • கருத்துக்கள உறவுகள்

அடுக்கி விளையாடும் பொழுது தாளைப் பிரிப்பவர் இடையாலை இழுத்து அடித்தால் அடுக்கியவர்கள் பாடு அதோகதி.

மற்றது கை முந்தியும் தாள் போடக்கூடாது.போட்டால் அடுத்த முறை கை முந்தியவர்  பக்கத்திலிருந்து  அதே இனத்தாள் மேசைக்கு வரக்கூடாது.

மடக்கு என்றால் ஒருவர் தன்னுடைய அணியைச் சேர்ந்தவர்களின் தாள்களின் உதவியில்லாமல் தனியாக விளையாடுவதாகும்.(partner close)

 

ஊருக்கு ஊர் வித்தியாசமாக கம்மாரிசு அடிப்பார்கள்
பிந்தின கம்மாரிசு ஏற்றுக்கொள்ளப்படாது. :D
 

304 சுமாராகத்தான் விளையாட தெரியும்......மற்றவர்கள் மடக்கி, அடுக்கி :) மற்றும் வேறு யுத்திகளை கையாண்டு விளையாடுவதை பார்க்க ஆ..கா  எப்படி இப்படி விளையாடுகின்றார்கள் என்று எண்ணுவதுண்டு. எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு 532 மற்றும் 3 cards :D

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதிதாகக் காண்பவர்களுடன் பழக 304 கடதாசி விளையாடுவது உதவுகின்றது. சீட்டு விளையாடுவது சூதாட்டம் என்பதாலும், காசு வைத்துப் பெரியவர்கள் சூதாடுவதாலும் சிறுவயதில் சீட்டுக்கட்டு எமக்கெல்லாம் தடைசெய்யப்பட்டு இருந்தது. எனினும் ஒபரேசன் லிபரேசன் காலத்திலும் அதன் பின்னர் வந்த இந்திய இராணுவக் காலத்திலும் சிறுவர்கள் ஓரிடத்தில் கண்ணுக்குள் இருக்கவேண்டும் என்பதற்காக சீட்டு விளையாடுவது அனுமதிக்கப்பட்டது. அப்படிப் பழகி நிறையத் தேர்ச்சி அடைந்திருந்தேன். யார் கையில் என்ன கார்ட்ஸ் இருக்கும், ஒவ்வொரு கூட்டிலும் எத்தனை விழுந்தது, என்ன விழுந்தது என்றெல்லாம் கணக்குப் பண்ணி விளையாடுவதும், கப்ஸ் லேற்றா இல்லையா என்று விவாதிப்பதும், கப்ஸைக் குழப்ப முயற்சிப்பதும் பைம்பலாக இருக்கும்.

எனினும் போன மாதம் தெரியாத சிலருடன் ஒரு BBQ இல் பார்ட்டியில் கார்ட்ஸ் விளையாடியபோது அதில் ஒருவர் பயங்கர விண்ணனாக வந்து சேர்ந்தார். தன்னிடம் ஒரு கார்ட்ஸ் வைத்துக்கொண்டே கேள்வி மேல் கேள்வி கேட்டு வென்று கொண்டே இருந்தார். அவர் வெல்லமுடியாத கார்ட்ஸ் என்னிடம் வந்தது என்று நம்பியபோதும் அவர் வென்று வெறுப்பேத்தினார். யார் இந்த சூரன் என்று கேட்டால் அவர் ஊரிலேயே காசுக்கு விளையாடியவர் என்று தகவல் வந்தது. இனிமேல் வயசானவர்களுடன் 304 விளையாடுவதில்லை என்று தீர்மானித்துள்ளேன்!

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு விளையாட்டு 304. கப்ஸ் சொல்லும்போது 100% சரியாக இருக்கவேண்டும். அதாவது எந்த ஒரு அட்டையாவது மேசையில் விழுந்தபின் மிகுதி எல்லாமே எனக்குத்தான் வரும் என்றால் அந்த நொடியில் சொல்லிவிட வேண்டும். அடுத்தவர் தனது விளையாட்டை அதற்குள் ஆடிவிட்டார் என்றால் கப்ஸ் பிழைத்துவிடும். பலர் இந்த விதியை தளர்த்திவிட்டு விளையாடுவார்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் 304 என்று விளையாடுகிறோம், தமிழ்நாட்டில் மற்றும் மலையாளிகள்  28  என்று  சொல்லி விளையாடுவினம். இதே விதிமுறைகள் தான் . நாங்கள் காணாத் துரும்பு கூடுதலாய் ஆடுவது . ஆறு பேர் ஆடும் போது துரும்பு காட்டுவது போல் , அவர்கள் கேள்வியின் பின் துரும்பு காட்டி ஆடுவினம்.

 

ஜாக் = 3

மனல் = 2

ஏஸ்  = 1 .1

10 எண் = 1 

கிங்  =  0 . 3

குயின் = 0 . 2

 

என ஒரு இனத்துக்கு 7 . 6  -----  x ---- 4 =  304.

 

அவர்கள்  தசமத்தைச் சேர்க்காமல்  280 கேள்வியில் விளையாடி 28 ல் பொயின்ற் பார்ப்பார்கள்.

 

ஆனாலும் நாங்கள் ஆடும் காணாத் துரும்புடன்  தாமதமில்லாத கம்மாரீசும்தான்  விளையாடத் திரில்.

 

கள்ளக் கம்மாரீஸ் அடிப்பதைப் பிடித்து வெற்றித் தாள் வாங்குவது சூப்பர்.

 

தொடர்ந்து அடுக்கி ஜாடை காட்டி விளையாடும் கோஷ்டியை ,இரு தாள்பிரிவதுபோல் வெட்டி விடுதல் ,தாள் பிரிக்கும்முன் ஊடறுத்து இழுத்து அடித்தல் என்பன சற்று ஜாலிதான்...!  :rolleyes::D

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நான் கம்மாறிஸ் அடித்து வெல்லுறதிலும் பார்க்க அடிச்ச கம்மாறிசில் பிழை பிடித்து வெற்றித்தாள் வாங்குவதுதான்கூட.அதனால ஈசியான கம்மாறிஸசைக் கூட பதட்டத்தில் முந்திப்பிந்தி அடிச்சுப் பிழைக்க விடுவினம்.இப்ப கனநாளாக விளையாடத படியால் பழையமாதிரி விளையாட முடியாது என்று நினைக்கிறேன். கம்மாறிஸ் அடிக்கும் பொழுது கீழே வைக்கும் தாள் ஒழுங்கு முக்கியம்.எல்லாப்பிடியும் எமக்குக் கிடைக்கும் என்று தெரிந்தாலும் சில வேளைகளில் இறக்கம் பார்த்து அதற்கேற்றவாறு தாளை அடுக்கி கீழே சரியான தாளை வைத்து அடிக்க வேண்டும்.அதுவும் தாமதிக்காமல் அடிக்க வேண்டும்.தாமதித்தால் லேற் கம்மாறிஸ்

Edited by புலவர்

பல்கலைகழகம் மூடியிருந்த சில வருடங்கள் இரவு பகல் என்று விளையாடியது உண்டு. முளைக்கும் சிறிய வேலை உண்டு ....

  • கருத்துக்கள உறவுகள்

எனது வாகனத்துக்குள்  எப்பொழுதும் 2க்கு மேற்பட்ட பைக்கற் இருக்கும்

 

போடும்   போதே அடுக்கி  வைத்துவிட்டால்

நண்பரின் கையிலிருப்பதை தெரிந்து விளையாடலாம்.

வேறு பொழுது போக்கு இல்லாததால்..

நானொரு புலி  இதில்... :D

 

சின்ன வயதிலேயே இது விளையாடப் பழகினாலும் இதுவரை பிழை விடாமல் கம்மாரிசு அடிச்சதில்லை.

சிலபேர் தங்கட கடுதாசியைப் பாத்து, மற்றாக்களுக்கு என்ன வந்திருக்கும் என்று ஊகித்து 250 கேட்டு விளையாடுவார்கள். இப்பிடியானவையோட விளையாடப் போறதில்லை. அதிலேயும் பக்கத்துவீட்டு மாமா ஒருத்தர் விளையாட வந்தால் நைசாக நழுவி விடுவேன். பிழையா விளையாடினால் ஆரென்றும் பார்க்காமல் எட்டி அறைஞ்சு போடுவார். :wub:

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன வயதிலேயே இது விளையாடப் பழகினாலும் இதுவரை பிழை விடாமல் கம்மாரிசு அடிச்சதில்லை.

சிலபேர் தங்கட கடுதாசியைப் பாத்து, மற்றாக்களுக்கு என்ன வந்திருக்கும் என்று ஊகித்து 250 கேட்டு விளையாடுவார்கள். இப்பிடியானவையோட விளையாடப் போறதில்லை. அதிலேயும் பக்கத்துவீட்டு மாமா ஒருத்தர் விளையாட வந்தால் நைசாக நழுவி விடுவேன். பிழையா விளையாடினால் ஆரென்றும் பார்க்காமல் எட்டி அறைஞ்சு போடுவார். :wub:

 

 

நானும்  பக்கத்து வீட்டு பெரியவர்களிடம் தான் கற்றேன்

அவர்கள் ஆளையாள் கடிபட்டதில்

அவர்களிடம்  நல்ல தமிழ் இலக்கணமும் கற்றேன் :lol:  :D

கை குறையும் போது ஊரில மடத்தில வயது போனவர்களுடன் விளையாட பழகியது .ஆறு பேர்கள் ஆட்டம் அது .ஓரளவு விளையாடுவேன் ஆனால் பெரிய ஆர்வம் இன்றுவரை இல்லை .

இந்தியாவிலும் பின்னர் இங்கு வேலை செய்யும் இடத்தில் உணவு இடைவேளையின் போதும் இடைக்கிடை விளையாடினேன் .

கனடாவில் அதிகம் விளையாடிய ஆட்டம் EUCHRE ஆட்டம் ஆகும் .நல்ல காட்ஸ் விளையாட்டு ஆனால் கொஞ்சம் மூளை வேண்டும் . :lol:

அதைவிட கயனிஸ் ஆட்களுடன் பியர் அடித்துக்கொண்டு Dominoes  விளையாட அந்த மாதிரி இருக்கும் டொமினோ சிப்ஸ்ஐ  அவர்கள் மேசையில் ஓங்கி அடிக்கும் சத்தம் காதை கிழிக்கும் . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

52 தாழ்களுடன் விளையாடும் பாலம்(பிரிட்ஜ்) மற்றும் ஆறுபேர் விளையாடும் பரிசேர் போன்ற விளையாட்டுக்கள் மிகவும் மூளைக்கு வேலைதருவன.  அவற்றை விளையாடப் பழகுங்கள். கொசம் காசுவைத்து விiளாயாடினாற்தான் விறுவிறுப்பாக இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.