Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமிர்தலிங்கத்தின் 87 ஆவது பிறந்ததினம் இன்று

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் அ. அமிர்தலிங்கத்தின் 87 ஆவது பிறந்த தின நிகழ்வுகள் தெல்லிப்பழையில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சியின் காரியாலயத்தில் இடம்பெற்றது.

 
இன்று பிற்பகல் 4.00 மணியளவில் இடம்பெற்ற இந் நிகழ்விற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, வடமாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாணகல்வி அமைச்சர் குருகுலராஜா, வடமாகாண சபை உறுப்பினர்கள், மற்றும் பிரதேச சபை விசாளர்கள், உறுப்பினர்களும் கலந்திருந்தனர்.
 
இதன் போது இலங்கை தமிழரசுக்கட்சியின் இலட்சியப் பாதை என்னும் நூலினை இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட கிளையினர் வெளியிட்டு வைத்தனர். 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=384453369026137711#sthash.NWfG84wb.dpuf

 

  • Replies 67
  • Views 3.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் பிறந்த தினம்.. ஏன் தமிழ் மக்களால் சிறப்பிக்கப்பட வேண்டி இருக்குது. இவ்வளவு காலமும் அப்படி ஒன்றும் நிகழவில்லையே. :rolleyes::(

 

 

தெருச்சண்டையை ஆரம்பித்து வைத்த நெடுக்குக்கு வாழ்த்து சொல்ல மற்றய தெருச்சண்டையர்கள் வரப்போகிறார்கள். பண்பான கள உறவுகள் இத்திரையில் இருந்து ஒதுங்கி இருக்கலாம் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இவை அநாவசியமான மக்கள் விரும்பாத.. முன்னிறுத்தல்கள். தேசத்துக்காக எந்த எதிர்பார்ப்பும் இன்றி.. இன்னுயிரை ஈந்த எத்தனையோ பேரின் பிறந்த நாள்கள் வருவதும் தெரிவதில்லை. போவதும் தெரிவதில்லை. அப்படி இருக்க.. இந்தப் பித்தலாட்டக்காரர்கள் மீதான பித்தலாட்டங்கள் எதற்கு..???!  

 

சிலருக்கு.. இவர்கள் மீது ஒரு.. பய பக்தி உள்ளது போல. அதனால் "பண்பான" என்ற சுயதிரைக்குள் ஒளிந்திருக்க முனைகிறீர்கள் என்று நினைக்கிறோம். அது எங்களுக்கு தேவை இல்லை. யதார்த்தம் முழங்கனும்..அவ்வளவே..!

 

நாங்கள் தலைப்புக்கு.. ஏற்ப.. எங்கள் கருத்தைச் சொல்கிறோம். யாழ் அனுமதித்தால் அதனை தாங்கும். இன்றேல் தூக்கும். இதனை விட வேறு எதற்கும்.. யாருக்கும் அஞ்சி கருத்துச் சொல்வதை தவிர்ப்பது எங்கள் கருத்துக்கள நடைமுறை அல்ல..!! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

துல்ப்ஸ் நான் அச்சா பிள்ளையாய் இருக்கிறன் பார்த்துகொள்ளுங்க.

:)

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுக்கு உண்மையான தலைவர்களாக இல்லாதவர்கள் பத்தோடு பதினொன்றாக இருந்ததே வரலாறு. இரத்தப்பொட்டு நினைத்துப்பார்க்க முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இளைஞர்களிற்க்கு ரத்தப் பொட்டு வச்சு உசுப்பேத்திய அமிரின் கீழ்தர அரசியல் கண்டனத்துக்குரியது.

அதேபோல் நீலன் போன்ற மிதவாத தமிழரை கொல்ல, தமிழ் பிள்ளைகளையே தற்கொலைப் போராளிகளாய் அனுப்பிய மிலேச்சதனமும் வன்கண்டனத்துக்குரியது.

  • கருத்துக்கள உறவுகள்

தூரநோக்கு இல்லாத உணர்ச்சி அரசியலைக் கையிலெடுத்த அமிர்தலிங்கத்தை இன்னும் தமிழ்க் கூட்டமைப்பு தூக்கி வைத்திருப்பது அவர்களுக்கும் தமிழர்களின் அபிலாஷைகளை அடைய வழிகள் எதுவும் தெரியாமல் காலத்தைப் போக்காட்டுவதுதான் ஒரே தெரிவு என்று காட்டுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாப்பிள்ளை  அமிர்தலிங்கம்

ஒரு காலத்தில் எனது தலைவர்

இளைய  சந்ததியை  போராட அழைத்து முன்னக்கு அனுப்பியதில்  வரலாற்றில் பதிவாகியவர்..

அந்த வகையில் அவருக்கு வாழ்த்தக்கள் சொல்ல விரும்புபவர்கள் இருக்கலாம்..

அது அவர்களுக்கான உரிமை.

 

ஆனால் கடைசிக்காலத்தில்

பலமுறை  தாயக  மக்களால் நிராகரிக்கப்பட்டபோதும்

பின் கதவு வழியாக 

தாயக  மக்களின் தலைவர் என அவர் உட்கார்ந்ததும்

தாயக  மக்களின் விருப்பங்களுக்கு மாறாக

அவர்களது அரசியல் அபிலாசைகளை சிதைக்கும்  நடவடிக்கைகளில் ஈடுபட்டது மன்னிக்கமுடியாதது

அதனால் அவருக்கு வாழ்த்துச்சொல்ல  நான் விரும்பவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர்,

தலைவர்களை தேர்ந்து கொள்வதில் நீங்கள் எப்போதும் சறுக்கியே வந்திருக்கிறீர்கள் போலும்.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர்,

தலைவர்களை தேர்ந்து கொள்வதில் நீங்கள் எப்போதும் சறுக்கியே வந்திருக்கிறீர்கள் போலும்.

 

அப்படி இருந்தால்

அதற்கு நான் பொறுப்பாக  முடியாது...

 

ஒவ்வொரு  காலத்திலும் ஒருத்தர் தலைவராக வருவார்

மக்கள்தான் அதைத்தெரிவு செய்கிறார்கள்

எமக்கான அவரது எல்லை முடிந்ததும்

அல்லது 

எமது தேவை முடிந்ததும்

எமது   குறிக்கோள் சார்ந்து நாம் அடுத்த  கட்டத்துக்கு

அல்லது அடுத்த தலைவரை நோக்கிச்செல்கின்றோம்..

 

இப்பொழுது  நாம் அந்த நிலையில் தான் உள்ளோம்

இதைத்தான் நான் தொடர்ந்து இங்கு எழுதிவருகின்றேன்

 

செல்வா

பிரபா...காலம் முடிந்தன

 

அடுத்து  என்ன?

யார்....?

தமிழரின் குறிக்கோள் முடியவில்லை.....

சிங்களத்தின் துரத்துதல் இன்னும் வேகமாக உள்ளது....

  • கருத்துக்கள உறவுகள்

sivakumaran.jpg

அதே நாள் தான்..... ஈழப் போராட்டத்தில் முதன்முதல் சயனைட் அருந்தி, மரணித்த பொன்னுத்துரை சிவகுமாரனின் பிறந்தநாள்.

அதனை நினைவு கூர.... மாவைக்கு மனம் இல்லையோ....

அமுதலிங்கத்தின் பிறந்தநாள் கொண்டாட்டம் வேணும் என்று....யார் கேட்டார்கள்.

 

Edited by தமிழ் சிறி

ஈழ தமிழர் வரலாற்றில் தவிர்க்கமுடியாத ஒரு தலைவர் .சிறுபான்மை  இனத்தில் இருந்து இனி ஒருவர் எதிர்கட்சி தலைவராக வருவதற்கு சந்தர்ப்பமே இல்லை .எமது பிரச்சனையை பட்டி தொட்டி எல்லாம் கொண்டுபோனது மாத்திரம் இல்லாமல் சர்வதேசத்திற்கும் கொண்டு போனவர் .

 

அரசியல் தலைவராக இருந்தால் தூற்று வாங்குவது வெகு சகஜம் .

  • கருத்துக்கள உறவுகள்

sivakumaran.jpg

 

அதே நாள் தான்..... ஈழப் போராட்டத்தில் முதன்முதல் சயனைட் அருந்தி, மரணித்த பொன்னுத்துரை சிவகுமாரனின் பிறந்தநாள்.

அதனை நினைவு கூர.... மாவைக்கு மனம் இல்லையோ....

அமுதலிங்கத்தின் பிறந்தநாள் கொண்டாட்டம் வேணும் என்று....யார் கேட்டார்கள்.

 

 

 

சிறியண்ணா.. இதுக்கு மாவை.. இப்படித்தான்.. சொல்லுவார்..

 

நோ நோ.. எங்கள் அண்ணன் இடத்தில்.. தீவிரவாதிகளை வைச்சுப் பார்க்க முடியாது. எங்கள் அண்ணன் இரத்தக் கறைபடியாத அரசியல் செய்தவர். ஆனால்.. இரத்தப் பொட்டு மட்டும் வைத்தவர். எங்கள் அண்ணன் தமிழீழம் கேட்டவர்.. ஆனால் தேர்தலுக்கு அப்புறம் அது சாத்தியமில்லை என்று கண்டதும் சிங்களவர்களுக்கு நோகாத வகையில் அதனைக் கைவிட்டவர். இவர்கள் எல்லாம் தமிழீழம் என்று செத்துப்போனவர்கள். சிங்களவர்களை நோகடித்தவர்கள். அந்த வகையில் அறிவாளியான எங்கள் அண்ணன் இடத்தில்.. இவர்களை வைச்சுப் பார்க்க மனசுக்கு முடியல்ல. மன்னிக்கனும். :icon_idea::(

 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழ தமிழர் வரலாற்றில் தவிர்க்கமுடியாத ஒரு தலைவர் .சிறுபான்மை  இனத்தில் இருந்து இனி ஒருவர் எதிர்கட்சி தலைவராக வருவதற்கு சந்தர்ப்பமே இல்லை .எமது பிரச்சனையை பட்டி தொட்டி எல்லாம் கொண்டுபோனது மாத்திரம் இல்லாமல் சர்வதேசத்திற்கும் கொண்டு போனவர் .

 

அரசியல் தலைவராக இருந்தால் தூற்று வாங்குவது வெகு சகஜம் .

 

அமிர்தலிங்கம் அடுத்த தைப்பொங்கல் தமிழீழத்திலை எண்டு சொன்னதாலைதான் எதிர்க்கட்சி தலைவராக வந்தவர்....அவையள் அந்தக்காலத்திலை சொன்ன தேர்தல் வாக்குறுதிகளை ஒருநாளும் மறக்கக்கூடாது.. :(
 
ரோட்டு போடுவன்,கரண்ட்தருவன்,வீட்டுக்கு பெயின்ற் அடிப்பன்,குச்சொழுங்கையுக்கை சிரிபி வஸ் விடுவன் எண்டெல்லாம் சொல்லேல்லை. :D
 
ஈழத்தமிழனுக்கு தமிழீழம்தான் தீர்வு எண்டு சொல்லித்தான் வாக்கு கேட்டவை.... :)
 
பெடியளுக்கு உசுப்பேத்தியும் விட்டவை.... :icon_idea:
 
அறப்படிச்ச அமிர்தலிங்கம் கொம்பனிக்கும் தமிழீழம் எண்டால் என்னெண்டு தெரியாது எண்டது இப்ப இப்பத்தான் தெரிய வருது :icon_idea:
 
அமிர்தலிங்கம் அவர்கள் ஈழத்தமிழன் பிரச்சனையை பட்டிதொட்டியெல்லாம் கொண்டு போகேல்லை.....பின்கதவாலை பார்ட்டியளுக்குத்தான் போனவர்  :icon_mrgreen:
  • கருத்துக்கள உறவுகள்

 

அமிர்தலிங்கம் அடுத்த தைப்பொங்கல் தமிழீழத்திலை எண்டு சொன்னதாலைதான் எதிர்க்கட்சி தலைவராக வந்தவர்....அவையள் அந்தக்காலத்திலை சொன்ன தேர்தல் வாக்குறுதிகளை ஒருநாளும் மறக்கக்கூடாது.. :(
 
ரோட்டு போடுவன்,கரண்ட்தருவன்,வீட்டுக்கு பெயின்ற் அடிப்பன்,குச்சொழுங்கையுக்கை சிரிபி வஸ் விடுவன் எண்டெல்லாம் சொல்லேல்லை. :D
 
ஈழத்தமிழனுக்கு தமிழீழம்தான் தீர்வு எண்டு சொல்லித்தான் வாக்கு கேட்டவை.... :)
 
பெடியளுக்கு உசுப்பேத்தியும் விட்டவை.... :icon_idea:
 
அறப்படிச்ச அமிர்தலிங்கம் கொம்பனிக்கும் தமிழீழம் எண்டால் என்னெண்டு தெரியாது எண்டது இப்ப இப்பத்தான் தெரிய வருது :icon_idea:
 
அமிர்தலிங்கம் அவர்கள் ஈழத்தமிழன் பிரச்சனையை பட்டிதொட்டியெல்லாம் கொண்டு போகேல்லை.....பின்கதவாலை பார்ட்டியளுக்குத்தான் போனவர்  :icon_mrgreen:

 

 

ஒரு கடந்த வரலாற்றை அப்படியே சொல்லி இருக்கீங்க... கு.சாண்ணா.  நச். :icon_idea::)

 

முன்னர் எங்கள் வீட்டருக்கில்.. சிறீலங்கா பொலிஸில் இருந்து பின்னர் இனப்பற்றுக்காரணமாக வெளியேறிய ஒரு ஐயா இருந்தவர். அவர் மாலை வேளைகளில்.. எங்களோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாட்டிட்டு.. அப்புறம் எல்லாப் பொடியளையும் கூப்பிட்டு அரசியல் சொல்லித் தருவார். அவர் சொன்ன வரலாறுகள் இப்பவும்..மனசில நிற்குது. எங்கட முன்னாள் அரசியல்வாதிகளைப் பற்றி அறிய ஆர்வமூட்டியவர்களில் அவரும் ஒருவர். அவர் சொல்லும் அதே வகையில் இருக்குது உங்கட இந்தக் குறிப்பு. அவரை மீள நினைவு படுத்த வைத்துள்ளது. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

முதன் முதலில் தமிழகம் மற்றும் டெல்கிக்கு எம்பிரச்சினையை கொண்டு போனவர் அமிர்- வரலாற்றை புனைய நினைக்கும் எந்த முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிளும் மாற்ற முடியாத உண்மை அது.

அமிர் அடுத்த தைப்பொங்கல் தமிழ் ஈழத்தில் என்று புருடா விட்டர் - இதுவும் வரலாற்று உண்மை

அமிர் அதன் ஆபத்து தெரிந்தே இளைஞனர்களை ரத்த பொட்டு வச்சு உசுப்பேத்தினார் - இதுவும் உண்மை

இந்தியாவுக்கு இசைவதற்காக ரப்பர் செல் போன்ற உண்மையற்ற அறிக்கைகளை விட்டார் - உண்மை

ஆனால் ஒரு அரசியல்வாதியாக இத்தனை தகிடுதத்தம் செய்தாலும் நான் அமிரை மதிப்பது ஒரே ஒரு காரணத்துக்காக.

அவருக்கு எமது போராட்டத்தின் வரையறை எல்லை (limitations) தெரிந்து இருந்தது. அல்லது சொல்லும் போது கிரகிக்கும் ஆற்றல் இருந்தது.

எக்காரணம் கொண்டும் இந்தியாவை பகைக்க கூடாது, பகைதால் எம் இனத்துக்கு அது மரண அடியாகும் என்னும் தூர நோக்கு இருந்தது.

இந்திய அதிகாரிகள் தமிழ் ஈழம் அமைய இந்தியா ஒருபோதும் விடாது என்று எடுத்துச் சொன்னபோது - அதன் தாற்பரியத்தை உணரும் தகமை இருந்தது.

எல்லாவற்றையும் விட 1987 ஒப்பந்தத்தை ஒரு சவாலாக ஏற்று அதிலிருந்து மேலும் முன்நகரலாம் எனும் சமயோசிதம் இருந்தது.

அவரிற்க்கு பின்னான தலைமைக்கு அமிரைவிட பற்றுதி இருந்தும், எதையும் செய்யும், உயிரையும் கொடுக்கும் படைப்பலம் இருந்தும், இந்த அரிய தலைமை பண்பு இருக்கவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமிர்தான் எங்கடை பிரச்சனையை தெல்லிக்கு மன்னிக்கவும் டெல்லிக்கு கொண்டு போன அமிர்தமெண்டால்... தந்தை செல்வநாயகம் சவுக்காரம் வாங்கவே டெல்லிக்கு போனவர்?

  • கருத்துக்கள உறவுகள்

அவர் போட்டு வந்துதானே சொன்னவர் - ஆண்டவனாலதான் காப்பத முடியும் எண்டு. டெல்லியில அவர் வெளிநாட்டமைச்சரை கூட சந்திக்கவில்லை என நினைக்கிறேன்.

அதுக்கு பிறகு அமிர், பார்த்தசாரதி முயற்சியால், இந்திரா-ஜேஆர் பகையால் நிலமை எமக்கு சாதகமாக மாறியது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மஸ்த்தியஸ்த்துடன் இரண்டு ஒப்பந்தங்கள் தந்தை செல்வாவால்..செய்யப்பட்டும்.. அவை இரண்டும் கிழிக்கப்பட்ட பின்னும்.. வெறும் வாக்குறுதிகளை நம்பி.. அமிர்தலிங்கம் கையொப்பம் போட்ட இடத்தில்.. போடாது நின்று.. வாக்குறுதிகளுக்கு அப்பால்.. நடைமுறைப்படுத்திக் காட்டுங்கள் என்று அடம்பிடித்த.. பிரபாகரனால் தான்.. இந்திய - இலங்கை ஒப்பந்தமே கைச்சாத்தானது. இதில அமிர்தலிங்கம் வெட்டிக் கிழிச்சாராம். சும்மா விடுப்புப் பார்த்தார். தட்ஸ் ஆல்..!!! :icon_idea::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பண்டா-செல்வா, டட்லி-செல்வா ரெண்டும் இருதரப்பு ஒப்பந்தங்கள் (bilateral private agreements). Indo-Lanka is an international agreement between two countries. இதெல்லாம் உங்களுக்கு விளங்கநியாயமில்லை.

பிரபாகரனை மிரட்டி அசோகா கோட்டலில் வைத்து அடிபணிய வைத்து கைச்சாத்தானதுதான் 87 ஒப்பந்தம். It was signed despite Pirabaharan not because of him.

பண்டா-செல்வா, டட்லி-செல்வா ரெண்டும் இருதரப்பு ஒப்பந்தங்கள் (bilateral private agreements). Indo-Lanka is an international agreement between two countries. இதெல்லாம் உங்களுக்கு விளங்கநியாயமில்லை.

பிரபாகரனை மிரட்டி அசோகா கோட்டலில் வைத்து அடிபணிய வைத்து கைச்சாத்தானதுதான் 87 ஒப்பந்தம். It was signed despite Pirabaharan not because of him.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய - இலங்கை ஒப்பந்தம்.. சர்வதேச உடன்படிக்கை என்று தான் படம் காட்டினவை. (இந்திய - இலங்கை ஒப்பந்தம் எந்த ரகம் என்று எழுதப்படவில்லை) கடைசியில்.. அதன் கீழ் இணைக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டு.. அதன் அமுலாக்கங்கள் பின்போடப்பட்டும்.. அது அர்த்தமற்ற ஒப்பந்தம் என்றாக்கப்பட்டு காலம் கடந்துவிட்டது. இப்போது அதன் எச்சமாக உள்ள ஒரே ஒரு கூறு.. என்றால் 13 வது சட்டத்திருத்தம். அது அமுலாக முதலே அழிக்கப்பட்டிரும் போலவே தான் இருக்குது. இதில என்ன சர்வதேசக் கடப்பாடு சிறீலங்காவுக்கு இருக்கோ.. யார் அறிவார்..!!! :icon_idea::lol:

 

தந்தை செல்வா செய்த ஒப்பந்தங்களின் தரம் பற்றி எழுதப்படவில்லை. அவை இந்திய மத்தியஸ்த்தத்தோடு செய்யப்பட்டவை என்ற தகவல் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. எழுதிறதை வாசிக்கும்.. புரிதல் குறைவு போல.

 

பிரபாகரன் கைச்சாத்திட்டார் என்று எழுதப்படவில்லை. பிரபாகரனின் நிலைப்பாட்டால் கைச்சாத்தானது என்று தான் எழுதப்பட்டுள்ளது.  மீண்டும்.. புரிதல் குறைவு. :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிரட்டுமளவிர்க்கு ஈழத்தமிழனின் பலம் இந்தியாவிற்கு தெரிகின்றது.சிங்களவனுக்கு தெரிகின்றது.சர்வதேசத்திற்கு தெரிகின்றது.ஆனால் நரிகளுக்குமட்டும் பயத்துடன் கூடிய நாதாரி பிழைப்புகள் ஏனென்று தெரியவில்லை. :D

தங்கள் தங்கள் அறிவிற்கும் தங்களுக்கு தெரிந்தவற்றையும் எழுத முடியும் .

அமிர் பல உலக நாடுகள் சென்று சர்வதேச புகழ் பெற்ற ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தவர் ,அவர் எதிர்கட்சியில் இருக்கும் போது சமர்பிக்கபட்ட பட்ஜெட் பற்றி அவர் ஆற்றிய உரை பல ஆழும் கட்சி அங்கத்வர்களாலேயே பாராட்டப்படப்பட்டது .

தை பொங்கலுக்கு தமிழ் ஈழம் என்று அமீர் பேசவில்லை தமிழ் ஈழம் தான் தீர்வு என்று பேசினார் .

செல்வா டட்லியின் ஒப்பந்தத்துடன் காலாவாரியாகிவிட்டார் .

 

அமிரும் பிழை விடாத மனிதர் அல்ல ஆனால் மிக சிறந்த அரசியல் தலைவர் .

 

சுந்தரத்தை பிராபாவை கொண்டு போடா வைத்தவர் இவர்தான் என்றும் கதையிருக்கு  .

 

வடலிக்கு பின் போவர்களுக்கு டாய்லட் பற்றி தெரியாது . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

சங்கிலியனின் வாளைத் தூக்கி தமிழீழம்தான் ஒரே தீர்வு என இளைஞர்களை உசுப்பேத்தியவர்தான் இந்த அமிர்தலிங்கம்.பாராளுமன்றத்தில் மங்கையர்கரசியை கீழ்த்தரமாக நெவில்பெர்ணாண்டோ விமர்சித்த பொழுது இரத்தம் கொதிக்காத தமிழன் கிடையாது.ஆனால் அமிர்தலிங்கம் தமிழர்களின் முதுகில் குத்திய வரலாறும் தமிழ் மக்கள் அவரைக் குப்புறத் தள்ளிய வரலாறும் நாம் அறிந்ததே.இவ்வளவு காலமும் இருந்து விட்டு இப்ப அவருக்குப் பிறந்தநாள் கொண்டாடுவதில் ஏதே சூட்சுமம் இருக்கிறது.ஒருவேளை புல்pகளால் உருவாக்கப்பட்ட ததே கூட்டமைப்பை உடைத்து விட்டு தமிழரசுக்கு கட்சியை முன்னிலைக்கு கொண்டு வரும்படி யாராவது??? ஆலோசனை சொன்னார்களோ??????

Edited by புலவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.