Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலம்பெயர் தமிழர்களுக்கு பிரதமர் மோடி கூட்டமைப்பு மூலம் விடுத்த செய்தி என்ன? விவரிக்கின்றார் தலைவர் இரா.சம்பந்தன் (வீடியோ இணைப்பு)

Featured Replies

TNA%20sam%204444141.jpg

 

புதுடில்லியில் கடந்த மாதத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்த சமயம், புலம்பெயர் தமிழர்கள் தொடர்பான செய்தி ஒன்றை இந்தியப் பிரதமர் கோடி காட்டியிருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தத் தகவலை நேற்று திங்கட்கிழமை 'மலரும்' இணையத்துக்கு வழங்கிய விசேட செவ்வியின் போது வெளியிட்டார்.
 
புதுடில்லி மற்றும் தமிழக விஜயங்களை முடித்துக் கொண்டு இரா.சம்பந்தன் எம்.பி. நேற்றுமுன்தினம் ஞாயிறு மாலை கொழும்பு திரும்பினார். அடுத்த நாள் திங்கட்கிழமை அவர் 'மலரும்' இணையத்தின் ஆசிரியரும் சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளருமான என்.வித்தியாதரனுடன் தமது புதுடில்லிப் பேச்சுக்கள் குறித்து மனம் திறந்து உரையாடினார்.
 
புதுடில்லியில் பேச்சின் முடிவில் தங்களை வழி அனுப்ப வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 'நூற்றுக்கு நூறு வீதம் நாங்கள் உங்களுடன் இருப்போம்!' எனத் தங்களுக்கு உறுதியளித்தார் என்பதை சிலாகித்துக் குறிப்பிட்டார் சம்பந்தர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சில, பல ஆலோசனைகளை இந்தியப் பிரதமர் முன்வைத்தார் என்று குறிப்பிட்ட சம்பந்தர், புலம்பெயர்ந்த தமிழர்களுக்கான செய்தி ஒன்றை இந்தியப் பிரதமர் தங்களிடம் குறிப்பிட்டார் என்றும் சொன்னார்.
 
புதுடில்லிப் பேச்சுக்கள் தொடர்பாக இலங்கை அரசுக்கும் தமிழர்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் தாங்கள் கூறவுள்ள செய்தி என்ன? - என்ற கேள்விக்குப் பதிலளித்தார் சம்பந்தர். அப்போது அவர் கூறியவை வருமாறு:-
 
புலம்பெயர் தமிழர்கள் குறித்து நான் ஒரு விடயத்தைக் கூறவேண்டும். பிரதமர் நரேந்திர மோடியும் அது பற்றி என்னிடம் கூறியிருந்தார். 'நீங்கள் (இரா.சம்பந்தன்) ஒரு நிதானமான - பக்குவமான - போக்கைக் கடைப்பிடிக்கின்றீர்கள். அதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் புலம்பெயர்ந்த மக்கள் மத்திலிருந்து ஒரு காரசாரமான - வன்முறையை ஆதரிக்கக்கூடிய - ஒரு கருத்து வெளிவராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமை. அதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.' - என்று அவர் சொன்னார்.
 
எமது மக்களைப் பொறுத்தவரை - அவர்கள் இங்கு வாழ்பவர்களாக இருந்தாலும் சரி, புலம்பெயர்ந்தவர்களாக இருந்தாலும் சரி - நாம் கூறுவது ஒன்றுதான். சர்வதேச சமூகத்தை பொறுத்தவரை அது இந்தியாவாக இருக்கலாம்.அமெரிக்காவாக இருக்கலாம் அல்லது ஐரோப்பிய ஒன்றியமாக இருக்கலாம். வேறு எந்த ஒரு நாடாகவும் இருக்கலாம். இலங்கையில் ஒரு பிரிவினை ஏற்படுவதை அவர்கள் விரும்பவில்லை. ஒருமித்த இலங்கைக்குள் தமிழ்ப் பேசும் மக்கள் சமத்துவமாக வாழக்கூடிய ஒரு நிலைமை ஏற்படவேண்டும் என்பதுதான் அவர்களுடைய கருத்து. அந்த அடிப்படையில்தான் இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொண்ட யுத்தத்தை பல நாடுகள் ஆதரித்தன.
 
அவ்விதமான ஆதரவு இருந்த காரணத்தின் நிமித்தம்தான் இலங்கை அரசால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தோற்கடிக்க முடிந்தது. அந்த நேரத்தில் இலங்கை அரசினால் சர்வதேச சமூகத்துக்கு - விசேடமாக இந்தியாவுக்கும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்துக்கும் - அரசியல் தீர்வு சம்பந்தமாகக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் இன்றைக்கும் நிறைவுவேற்றப்படவில்லை.
 
அவை நிறைவேற்றப்படாமல் இருக்கின்ற காரணத்தின் நிமிர்த்தம்தான் சர்வதேச சமூகத்திடமிருந்து அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும்படியான கூடிய அழுத்தம் இன்று வெளிப்படுகின்றது. ஆகவே இவ்விதமான சந்தர்ப்பங்கள் எல்லாவற்றையும் பயன்படுத்தி நாம் மிகவும் நிதானமாக, பக்குவமாக - விட்டுக்கொடுக்க முடியாத விடயங்களில் விட்டுக்கொடுக்காமல் - ஒரு நியாயமான, நிரந்தரமான, நடைமுறைப்படுத்தக்கூடிய ஓர் அரசியல் தீர்வைப் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும். அத்தகைய தீர்வைப் பெறுவதற்கு இந்தியாவின் பங்களிப்பு அவசியமானதாகும். எமது சந்திப்பு - டில்லி விஜயம் - திருப்திகரமாகப் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில் நாங்கள், ஒற்றுமையாக, ஒருமித்து மிகவும் கவனமாக இந்தக் கருமத்தை முன்னெடுக்க வேண்டும் என எல்லோரையும் கேட்டுக் கொள்கிறேன். - என்றார் சம்பந்தர்.
 
அவரது பேட்டியின் முழுக் காணொலி வடிவம் வருமாறு:- 
 
 
http://malarum.com/article/tam/2014/09/02/5068/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-.html#sthash.v3vrzB2x.dpuf
 
 
  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர்கள் குறித்து நான் ஒரு விடயத்தைக் கூறவேண்டும். பிரதமர் நரேந்திர மோடியும் அது பற்றி என்னிடம் கூறியிருந்தார். 'நீங்கள் (இரா.சம்பந்தன்) ஒரு நிதானமான - பக்குவமான - போக்கைக் கடைப்பிடிக்கின்றீர்கள். அதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் புலம்பெயர்ந்த மக்கள் மத்திலிருந்து ஒரு காரசாரமான - வன்முறையை ஆதரிக்கக்கூடிய - ஒரு கருத்து வெளிவராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமை. அதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.' - என்று அவர் சொன்னார்.

சரிங்க நாங்க காரசாரம எதுவும் பேசல்ல ஆனா நீங்க அங்கிட்டு ஒடுரீக இங்கிட்டு ஓடுறீங்க ஆனா உருப்படியா ஒரு தீர்வும் பெற்றுக்குடுக்குறீங்க இல்லியே.....

ஓன்று பட்ட இலங்கைக்குள் தான் தீர்வை அமெரிக்காவும் சரி இந்தியாவும் சரி விரும்புகின்றது என்றால் சரி நாங்களும் உங்கள் வழிக்கே வருகின்றோம் முள்ளிவாய்க்கால் முடிந்து 5 வருஷத்துக்கு மேலை ஆகுது ஜனநாயக வழியில் பொறுப்புடன் நடக்கும் உங்களால் வடக்கு மாகாணசபைக்கு நீங்கள் விரும்பும் ஒரு ஆளுனரைக்கூட பெற முடியவில்லையே?

சரி நீங்கள் சொல்லும் நாடுகளும் இன்னும் தீவிரமா தமிழர் பிரச்சனையில் தங்களை ஈடுபடுத்தி தமிழர்க்கு இன்னும் ஒரு நிரந்தர தீர்வு பெருக்கொடுக்க முடியவில்லையே சம்மந்தன் ஐயா?

சும்மா அவர்கள் சொன்னார்கள் இவர்கள் சொன்னார்கள் என்று புலம்பெயர் தமிழர்களை இனியாவது சாடாமல் இருக்க பழகுங்கள்....... புலம்பெயர் தமிழர்களின் அழுத்தங்களால் தான் ஓரளவு உங்களை போன்றவர்கள் நிம்மதியாய் நடமாட முடிது.......

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பெரியகடம் போல...அய்யா தமிழகம் ஓடினதும் உதுக்குத்தான்...இந்த மோடி சாமியாலை  சூனா சாமியையே அடக்கமுடியல...இதுக்கிள்ளை புலம்பெயர் தமிழரை அடக்க மஹிந்தசாமி மேற்கொண்ட நாடகம் மோடிமூலம் வசனனமாக்கப்பட்டு....சம்பந்து அய்யா பேசிய வசனம்....மொத்தத்தில் அய்யாவுக்கு செம லாபம்...தமிழருக்கு நாமம்...

  • கருத்துக்கள உறவுகள்

ஐயாவுக்கு

தனது ஆட்கள் யாரென்ற ஞானம் வருமளவுக்கு

அவமதிப்பு நடந்திருக்கு...

 

எதுவுமே  தரமாட்டார்கள் என்ற படிப்பினை கிடைத்திருக்கு

 

அதன்பின் சுடலை  ஞானம் வந்து

தமிழகத்தையும்

புலம் பெயர்ந்தவர்களையும் தேடுவது போலிருக்கு..

ஏதோ இரத்தங்களை  இப்பவாவது புரிஞ்சுதே..

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வயதிலும் சம்பந்தருக்குத் தலைமை ஆசை விட்டுப் போகவில்லை.
மகிந்த அன்ட் கோ சொல்ல வேண்டியதெல்லாவற்றையும் சம்பந்தரே அறிக்கையாக  விடுகின்றார்.

புலம்பெயர் தேசம் வந்து வாக்குச் சேகரிக்கும் போது ஈழம். இப்போது யாருக்குத் தாளம்?

புலம்பெயர்மக்களின் காதுகளில் பூச்சுத்த முடியாமல் தான் ஐ நா விசாரணை தொடக்கி வைத்தனர்.இரண்டாவதாக இன்றும் இலங்கையின் தந்திரங்களுக்கு வெளி நாடுகளில் எடுபடமுடியாது இருக்கிறது. அத்துடன் இனப்படுகொலை கூட்டாளிக்கும் இதில் சரியான வருத்தம். தேர்தலில் தெரிவான விக்னேஸ்வரன் ஐயாவையே காற்றுப்போன பலூனாக்கிய சிங்கள இனவாதம் புலம் பெயர்தமிழர்கள் மவுனமானால் எல்லாவற்றையும் அள்ளிகொடுத்துவிடும்(பின்வழியால்).

ஐயாவுக்கு

தனது ஆட்கள் யாரென்ற ஞானம் வருமளவுக்கு

அவமதிப்பு நடந்திருக்கு...

 

எதுவுமே  தரமாட்டார்கள் என்ற படிப்பினை கிடைத்திருக்கு

 

அதன்பின் சுடலை  ஞானம் வந்து

தமிழகத்தையும்

புலம் பெயர்ந்தவர்களையும் தேடுவது போலிருக்கு..

ஏதோ இரத்தங்களை  இப்பவாவது புரிஞ்சுதே..

 

மோடி சொன்னாரா? அல்லது மோடி கூறியதாக கூறும்படி இவருக்கு யாராவது கூறினார்களா? இந்த செய்தி ஆக மலரும் என்ற இணையத்தளத்தில் மட்டும் தான் வருகிறது, அது ஏன், இந்த இணையத் தளத்தின் பின்னனி என்ன ?

மோடி சொன்னாரா? அல்லது மோடி கூறியதாக கூறும்படி இவருக்கு யாராவது கூறினார்களா?

 

 

 

மோடியின் பல கருத்துக்களைச் சுருக்கமாக தன் வார்த்தைகளால் சம்பந்தர் சொல்லியிருக்கலாம்.
 
அரசியல் தீர்வொன்றுக்கு எதிராக சிங்கள இனவாதமும் புலம்பெயர்ந்தவரின் தமிழ்த் தேசியமும் இருக்கின்றது.
 
புலம் பெயர்ந்தோரின் தமிழ்த்தேசியம் மிகச் சொற்பரிடமே இருக்கிறது. அதுவும் இணையத்திலும் வாய் வீச்சிலும் கருத்து என்ற அளவிலேயே இருக்கிறது.
 
தமிழ்த்தேசியம் முன்னேறுவதற்கான இயங்கு தளமும் [ Space ] இல்லை.
செயற்பாடும் இல்லை. [  Activity ] 
 
தற்சமயம் தமிழ்த்தேசியம் செய்யும் மாபெரும் போராட்டம் சம்பந்தரைத் திட்டுவது தான்.
 
எங்கே, சம்பந்தரைத் திட்டுவதை விட்டு மக்களின் விடுதலைக்கு ஆக்கபூர்வமான ஒன்றைச் செய்யுங்கள் பார்க்கலாம் ? 

 

 
 
அரசியல் தீர்வொன்றுக்கு எதிராக சிங்கள இனவாதமும் புலம்பெயர்ந்தவரின் தமிழ்த் தேசியமும் இருக்கின்றது.
 
புலம் பெயர்ந்தோரின் தமிழ்த்தேசியம் மிகச் சொற்பரிடமே இருக்கிறது. அதுவும் இணையத்திலும் வாய் வீச்சிலும் கருத்து என்ற அளவிலேயே இருக்கிறது.
 

 

 

யதார்த்தபூர்வமான கருத்து ஈசன்!

 

100 பச்சைகள்

 

மோடியின் பல கருத்துக்களைச் சுருக்கமாக தன் வார்த்தைகளால் சம்பந்தர் சொல்லியிருக்கலாம்.
 
அரசியல் தீர்வொன்றுக்கு எதிராக சிங்கள இனவாதமும் புலம்பெயர்ந்தவரின் தமிழ்த் தேசியமும் இருக்கின்றது.
 
புலம் பெயர்ந்தோரின் தமிழ்த்தேசியம் மிகச் சொற்பரிடமே இருக்கிறது. அதுவும் இணையத்திலும் வாய் வீச்சிலும் கருத்து என்ற அளவிலேயே இருக்கிறது.
 
தமிழ்த்தேசியம் முன்னேறுவதற்கான இயங்கு தளமும் [ Space ] இல்லை.
செயற்பாடும் இல்லை. [  Activity ] 
 
தற்சமயம் தமிழ்த்தேசியம் செய்யும் மாபெரும் போராட்டம் சம்பந்தரைத் திட்டுவது தான்.
 
எங்கே, சம்பந்தரைத் திட்டுவதை விட்டு மக்களின் விடுதலைக்கு ஆக்கபூர்வமான ஒன்றைச் செய்யுங்கள் பார்க்கலாம் ? 

 

 

இதுதான் இன்றைய நிலவரம். இங்கு கருத்து எழுதும் பலருக்கு அடிப்படை யதார்த்தமே புரியவில்லை. 
 
சிங்களத்தின் ஞானசார தேரர் வகையறாக்களுக்கும் இங்கு தமிழ் தேசியம் என்ற பெயரில் அனைவரையும் வசைபாடுபவர்களுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. இரு தரப்பும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். இந்த இரண்டு தரப்பையும் புறம் தள்ளிவிட்டு சாதாரண மக்கள் எப்பொழுது செல்கிறார்களோ அப்பொழுது தான் அந்த தீவில் விடியல் பிறக்கும்.
தமிழ்ர்கள் ஓரளவிற்கு இவர்களை புறக்கணிக்க துவங்கிவிட்டார்கள். சிங்களவர்கள் வெற்றி மயக்கத்திலிருந்து வெளிவரும்போது அவர்களும் இதையே செய்வார்கள். 
  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் 2009 இல் இருந்து புலம்பெயர் தமிழர்களை சிங்களத்தின் இந்தியத்தின் தேவைக்கு ஏற்ப கணக்குப் பார்க்கிற நேரத்துக்கு தான் சார்ந்த மக்கள் விரும்பும்... உருப்படியான அரசியலை முன்னெடுக்கலாம். 

 

2009 முதல் சம்பந்தன் சாதித்தவை..

 

1. மறப்போம் மன்னிப்போம் அறிவிப்பு.

 

2. மாவீரர் நிகழ்வுகள் அர்த்தமற்றவை.

 

3. சிங்கக் கொடியே நான் நேசிக்கும் கொடி.

 

4. ஐக்கிய சிறீலங்காவே எனது விருப்பம். 

 

5. தமிழீழம் நாம் கேட்டதே இல்லை.

 

6. புலிகளும் தவறுகள் செய்துள்ளனர்.

 

7. புலிகளால் தான் நாங்கள் முன்னர் மெளனிக்கப்பட்டோம்.

 

8. புலம்பெயர் தமிழர்கள் சிங்களவர்களுக்கு நோகாத அரசியல் செய்ய வேண்டும்.

 

9. புலம்பெயர் தமிழர்கள் இந்தியாவுக்கு நோகாத அரசியல் செய்ய வேண்டும்.

 

10. சிங்களவன் போடுற பிச்சையில் தான் அபிவிருத்தி.

 

11. இனப்படுகொலையை உச்சரிக்கப்படாது.

 

இதனை செய்யச் சொல்ல.. சம்பந்தன் போன்ற ஒரு வகையறாத் தேவையில்லை. கருணாவோ.. டக்கிளசோ.. பிள்ளையானோ போதும்.

 

எடுத்ததற்கும் தமிழ் தேசியம் குற்றம். தமிழீழம் குற்றம்.. போர்க்குற்றம் குற்றம்.. இனப்படுகொலையை உச்சரிக்கிறது குற்றம். அப்படின்னா.. தமிழ் மக்களின் எண்ணங்களை எதனூடாக வெளிப்படுத்தப் போறீங்க..???!

 

தமிழ் தேசியம் கோட்பாட்டியல் ரீதியில்.. தமிழ் மக்களின் தேசிய இன அடையாளம் சார்ந்து எழும் ஒன்று. சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடைய ஓர் இனம் என்ற அடிப்படையில்.. இந்த தமிழ் தேசியக் கோட்பாடு எழுகிறது. 

 

அது இன்று.. தாயகம்.. புகலிடம்.. தமிழகம்.. உலகத்தமிழினத்தை கூடிய அளவில் ஒத்த கருத்துக்களை நோக்கி நகர்த்தி வந்திருக்கிறது.

 

இன்று மலேசியாவில்.. எமக்காகக் குரல் ஒலிக்குது என்றால்.. அது தமிழ் தேசிய உணர்வு சார்ந்த தமிழீழ எழுச்சி தான். தமிழகத்தில் அதே நிலை. தென்னாபிரிக்காவில் அதே நிலை.

 

இந்தக் குரல்கள் இல்லாமல்.. தமிழ் தேசிய அந்த உணர்வெழுச்சி இல்லாமல்.. போர்க்குற்ற முன்னெடுப்பு நோக்கிய அழுத்தங்களாகட்டும்.. தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதான அழுத்தங்களாகட்டும்.. சிங்கள.. இந்திய அரசுகள் மீதான அழுத்தங்களாகட்டும் எதுவும் சாத்தியமில்லை.

 

மோடியை பொறுத்த வரை.. இந்திய மத்திய அரசு மீதான தமிழ் தேசிய உணர்வு அழுத்தங்களை குறைக்க சம்பந்தனைப் பயன்படுத்துகிறார். தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழர் பற்றிய உணர்வுகளை அடக்கனுன்னா புலம்பெயர் தமிழர்களிடத்தில் உள்ள தமிழ் தேசிய.. தமிழீழ உணர்வுகளை அடக்கனும். அதனை நோக்கியே சிங்களவனும்.. சம்பந்தனை இயக்குகிறான். மோடியும் இயக்குகிறார். இவர்கள் இருவரினதும் நிலைப்பாடு.. தமிழன் தங்களுக்கு அடங்கி தாங்கள் தர விரும்புவதை வாங்கிக்கிட்டு வாய் பொத்தி வாழனும். சம்பந்தனின் நிலைப்பாடு அவங்க தாறதை வாங்கிக்கிட்டு எப்படியோ கிடந்திட்டு போகனும் என்பது.

 

இதே சம்பந்தனின் குழுவில் இடம்பெற்ற.. செல்வம் அடைக்கலநாதன்.. தந்திக்கு அளித்திருக்கும் செவ்வி.. சம்பந்தனின்.. இந்தச் செவ்வியில் இருந்தும் முற்றிலும் மாறுபட்டுள்ளது.

 

இங்கு சம்பந்தனை நியாயப்படுத்த முனைபவர்கள்.. தமிழ் தேசியத்தை ஒரு வாங்கு வாக்குபவர்கள்.. இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்.

 

 

தமிழ் தேசியம் என்பது இன்று.. தமிழ் மக்களை ஒன்றிணைக்கும்.. ஒரு கோட்பாட்டியலாக உள்ளது. அது வலுப்பெற வேண்டியது கட்டாயம். இன்று தமிழகத்தில்.. திராவிட அமைப்புக்களுக்கு போட்டியாக தமிழ் தேசிய உணர்வு அமைப்புக்கள் உள்ளமையால் தான்.. கடந்த காலத்தில் காங்கிரஸை தாஜா பண்ணி  மெளன அல்லது ஒளிப்புமறைப்பு அரசியல் செய்ய வெளிக்கிட்ட திராவிடக் கட்சிகள் கூட இன்று ஈழத்தமிழர் பிரச்சனை.. தமிழீழம்.. பொதுவாக்கெடுப்பு.. போர்க்குற்றம்.. ஐநாவில் மகிந்த பேச்சை நிறுத்து.. போர்க்குற்றவாளி போன்ற எமது துயரை.. நியாத்தை உலக அரங்கில் உரக்கச் சொல்லும் குரல்களை.. ஒலிக்க வேண்டி இருக்கிறது.

 

புலம்பெயர் மக்கள் கூட தமிழ் தேசிய.. தமிழீழ உணர்வோடு தான் கூட்டாக இயங்க நிற்கிறார்களே ஒழிய சம்பந்தன்.. சுமந்திரன்.. வகையறாக்கள் விரும்பும்.. பழைய ஏமாற்று.. ஹிந்திய.. சிங்கள அடிவருடி.. மிதவாத அரசியலுக்குள் தாயக மக்களின் உணர்வுகளை அடிமைப்படுத்தி வைக்க விரும்பவில்லை..!

 

தமிழ் தேசியம் என்ன செய்கிறது என்று கேட்பவர்களுக்கு...

 

ஒன்றை  உறுதியாகச் சொல்லிக் கொள்ளலாம்...

 

 

உலகத் தமிழினம் ஒட்டுமொத்தமாக.. (பெரும்பான்மை சதவீதத்தின் அடிப்படையில்) தமிழ் தேசிய.. தமிழீழ உணர்வோடு தான் கூட்டாக இயங்க நிற்கிறார்களே ஒழிய சம்பந்தன்.. சுமந்திரன்.. வகையறாக்கள் விரும்பும்.. பழைய ஏமாற்று.. ஹிந்திய.. சிங்கள அடிவருடி அரசியலுக்குள் தாயக மக்களின் உணர்வுகளை அடிமைப்படுத்தி வைக்க விரும்பவில்லை..! இந்த நிலையை உருவாக்கியதில்.. தமிழ் தேசிய உணர்வெழுச்சிக்கு மகத்தான பங்கு உண்டு. அது இன்னும் வலுப்படுத்தப்பட வேண்டும். இன்றேல் சிங்களமும்.. ஹிந்தியமும்.. சர்வதேசமும்.. எம்மீது சவாரி செய்யும் அரசியல் தான்... எம்மை முழுமையாக ஏமாற்றும் அரசியல் தான் எமக்குப் பரிசளிக்கப்படும்.   :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் புலம்பெயர்ந்த மக்கள் மத்திலிருந்து ஒரு காரசாரமான - வன்முறையை ஆதரிக்கக்கூடிய - ஒரு கருத்து வெளிவராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமை. அதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.' - என்று அவர் சொன்னார்
சும்மா எதுக்கெடுத்தாலும் புலம்பெயர்ந்தவர்களை திட்டாத்தையுங்கோ ஐயா.... :D நாங்கள் சிவனே என்று சொல்லிக்கொண்டு சிட்னி முருகனிட்ட போறம்....பிறகு முதல்நாள் முதல்காட்சி சினிமாவை $20 கொடுத்து பார்க்கிறோம்.....தென்னிந்தியாவிலிருந்து வருகை தரும் பின்னனி ,முன்னனி பாடகர்கள்,மேடை பேச்சாளர்கள்,சாத்திரிமார்,சாமிமார் எல்லொரையும் சந்திக்க செல்கின்றோம்........உதுக்குள்ள எங்களுக்கு எங்க நேரம் கிடைக்குது வன்முறையை உபதேசிக்க.....சும்மா புறுடா விடாதையுங்கோ..........

யதார்த்தபூர்வமான கருத்து ஈசன்!

 

100 பச்சைகள்

 

சம்பந்தன் வன்முறை கருத்தைப்பற்றிதான் சொல்லியிருக்கின்றார்....தமிழ்தேசியத்தைப்பற்றியல்ல

நாங்கள் இந்திய (பல்) தேசியத்துக்கு  அடிமையாக இருப்பதை விட  சிங்களத்துக்கு அடிமையாக இருப்பது மிகச்சிறந்தது  சம்பந்தன் ஐயா...!! 

 

அதாவது

 

இந்தியா இலங்கையை தனக்கு அடிமையாக்கி  அதன் மூலம் இலங்கை சிங்களவருக்கு  அடிமையாக இருக்குமாறான ஒரு தீர்வை  தமிழருக்கு தருவதை விட  ...  விளக்கமாக சொன்னால்  அடிமைக்கு அடிமை எனும் நிலையை விட இப்போது இருக்கும் நிலை எவ்வளவோ மேலானது... 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களுக்கென்று ஒரு கனவு இருக்கின்றது அதற்கு வடிவம் கொடுப்பதற்கு அதனை முதலில் முழுமையாக நம்ப வேண்டும் அவ்வறான தலைவர்கள் அதற்கு வடிவம் கொடுக்கும் போது மக்கள் ஓரணியாக பிந்தொடர்வர் முழுமனதாக, அதற்கு அடிப்படையில் அவர்களிடம் தெளிவான பார்வை வேண்டும்(இலக்கு).தலைவர்கள் மக்களுக்கு அந்த இலக்கை அடைவதற்கான பாதையை தெளிவாக மக்களுக்கு அடையாளம் காட்டவேண்டும் அப்படியான தலைவர்கள் காலத்தை வென்றவர்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பர்,வரலாறும் அவர்களையே பதிவெடுக்கும். ஸ்ராளினிடம் மாணவர்கள் சென்று கேட்டார்கள் இந்த இக்கட்டான இடர் மிகுந்த காலத்தில் மாணவர்களாகிய நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்றனர். ஸ்ராளின் அதற்கு உங்களுக்கு 3 கடமைகள் உண்டு 1.படிக்கவேண்டும் 2.படிக்கவேண்டும் 3 ஆவதும் படிக்கவேண்டும் என்று சொன்னார். உலகத்தை ஆளும் அமெரிக்காவை ஆளும் அம்ரிக்க செல்வந்தர் மொத்த அமெர்க்க சனத்தொகையில் வெறும் 2 %. ஜூத செல்வந்தரின் மனுக்கு ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்கவில்லை என்பதற்கா தெருவில் இறங்கி போர்ராடவில்லை,வெறுமனே தனது இங்கிலாந்து வங்கியில் இருந்த வைப்பை எடுத்து கொண்டார் அவ்வளவே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

மோடியின் பல கருத்துக்களைச் சுருக்கமாக தன் வார்த்தைகளால் சம்பந்தர் சொல்லியிருக்கலாம்.
 
அரசியல் தீர்வொன்றுக்கு எதிராக சிங்கள இனவாதமும் புலம்பெயர்ந்தவரின் தமிழ்த் தேசியமும் இருக்கின்றது.
 
புலம் பெயர்ந்தோரின் தமிழ்த்தேசியம் மிகச் சொற்பரிடமே இருக்கிறது. அதுவும் இணையத்திலும் வாய் வீச்சிலும் கருத்து என்ற அளவிலேயே இருக்கிறது.
 
தமிழ்த்தேசியம் முன்னேறுவதற்கான இயங்கு தளமும் [ Space ] இல்லை.
செயற்பாடும் இல்லை. [  Activity ] 
 
தற்சமயம் தமிழ்த்தேசியம் செய்யும் மாபெரும் போராட்டம் சம்பந்தரைத் திட்டுவது தான்.
 
எங்கே, சம்பந்தரைத் திட்டுவதை விட்டு மக்களின் விடுதலைக்கு ஆக்கபூர்வமான ஒன்றைச் செய்யுங்கள் பார்க்கலாம் ? 

 

சூப்பர்.. இதைவிட சிம்பிளாக சொல்ல முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்

வைஸ் அட்மிரல் நெல்சனைப்பற்றி பேச்சுபவர்கள் அட்மிரல் பாக்கரைப்பற்றியும் பேசுவார்கள். பொதுவாக எதிர்மறை சிந்தனைகள் ஒருவரின் தனிப்பட்ட சுய பிரதிபலிப்பு. நினைவு நல்லது வேண்டும் -பாரதியார்-

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா புலம்பெயர் தமிழர்களை குறை சொல்லிட்டு இருக்கப்படாது சம்மந்தன் ஐயா.... நீங்க வேட்டி சட்டையோட ஒழுங்கா திரிய காரணமே புலம்பெயர் தமிழர் தான் என்றத மறக்க கூடா... இல்லது சிங்களவன் அதையும் உருவி இருப்பான் ....

சும்மா புலம்பெயர் தமிழர்களை குறை சொல்லிட்டு இருக்கப்படாது சம்மந்தன் ஐயா.... நீங்க வேட்டி சட்டையோட ஒழுங்கா திரிய காரணமே புலம்பெயர் தமிழர் தான் என்றத மறக்க கூடா... இல்லது சிங்களவன் அதையும் உருவி இருப்பான் ....

 

இவங்கள விடுங்கண்ணே இதுங்க சும்மா இப்படித்தான் புலம்பிக்கொண்டு இருப்பாங்க 
Boat people க்கு எதிரான உங்கட போராட்டம் எந்த அளவில நிக்கிது?  :wub:
 

 

உலகத் தமிழினம் ஒட்டுமொத்தமாக.. (பெரும்பான்மை சதவீதத்தின் அடிப்படையில்) தமிழ் தேசிய.. தமிழீழ உணர்வோடு தான் கூட்டாக இயங்க நிற்கிறார்களே ஒழிய சம்பந்தன்.. சுமந்திரன்.. வகையறாக்கள் விரும்பும்.. பழைய ஏமாற்று.. ஹிந்திய.. சிங்கள அடிவருடி அரசியலுக்குள் தாயக மக்களின் உணர்வுகளை அடிமைப்படுத்தி வைக்க விரும்பவில்லை..! இந்த நிலையை உருவாக்கியதில்.. தமிழ் தேசிய உணர்வெழுச்சிக்கு மகத்தான பங்கு உண்டு. அது இன்னும் வலுப்படுத்தப்பட வேண்டும். இன்றேல் சிங்களமும்.. ஹிந்தியமும்.. சர்வதேசமும்.. எம்மீது சவாரி செய்யும் அரசியல் தான்... எம்மை முழுமையாக ஏமாற்றும் அரசியல் தான் எமக்குப் பரிசளிக்கப்படும்.   :icon_idea:

 

 

2013 வட மாகாணசபை தேர்தலில் சம்பந்தன் சுமந்திரன் வகையறாக்கள் இருக்கும் கூட்டமைப்பு வாங்கிய வாக்கு விகிதம் = 84.37%
 
2010 பாராளுமன்ற தேர்தலில் சம்பந்தன் சுமந்திரன் வகையறாக்கள் இருக்கும் கூட்டமைப்பு வாங்கிய வாக்கு விகிதம் = 43.85%
தமிழ் தேசியத்திக்கான மக்கள் முன்னணி வாங்கிய வாக்கு விகிதம் = 4.83%   :D  :icon_idea:
 
எந்த ஒரு கொள்கையோ கோட்பாடோ, அது extremism ஆனால் அது மக்களை அழிவுப்பாதையில் தான் கொண்டு செல்லும்.
உதாரணம்: நாசிசம், கம்யூனிசம், இந்தியர்களின் சாதி வெறி, முஸ்லிம்களின் மதவெறி, தமிழ்/சிங்கள தேசியம் etc etc.
  • கருத்துக்கள உறவுகள்

2013 இல் சம்பந்தன் வகையறாக்கள் திகழும் தமிழரசுக் கட்சிக்கு கிடைத்த வாக்குகளை விட.. பிரபாகரன்.. சுயநிர்ணயம்.. தமிழ் தேசியம்.. போர்க்குற்றம்.. காணாமல் போனோர் தொடர்பில் வாங்கப்பட்ட வாக்குகளே அதிகம்.

 

2010 ஐ விட 2005 இல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு.. வாங்கிய இடங்களும் அதிகம்.. வாக்கு சதவீதமும் அதிகம்.

 

சம்பந்தன் வகையறாக்கள் கூட தமிழ் தேசிய நிழலில் தான் தமிழரசுக் கட்சியை வைத்துக் கொள்ள வேண்டிய நிலை. இன்றேல்.. தமிழரசுக் கட்சிக்கு வாக்கு வங்கி இருக்குது மக்கள் வாக்குப் போடினம் என்றால்.. ஏன்.. சம்பந்தன் வகையறாக்கள்.. எக்ஸ்றீமிசும் என்று கருதும் ஒரு கோட்பாட்டியலுக்குள் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு நிற்கினம். வெளில போய் மக்களை சந்திக்க வேண்டியது தானே. அதுக்கு துப்பில்ல இல்ல...!

 

தமிழ் தேசியம் என்பது ஒரு தேசிய இனத்துக்கான கோட்பாட்டியலே அன்றி அது இன்னொரு தேசிய இனத்தை அழிக்கவோ.. அடையாளம் இழக்கச் செய்யவோ.. அதன் நிலத்தைப் பறிக்கவோ வந்ததல்ல. தமிழ் தேசியம்.. என்பது போன்றதல்ல.. சிங்களப் பேரினத் தேசியம். அது பிற இனங்களின் தேசிய அடையாளங்களை கோட்பாடுகளை அழித்து தன்னை அதற்குள் நிலைநிறுத்த விரும்புகிறது.

 

தமிழ் தேசியம் போன்றதல்ல.. முஸ்லீம் இஸ்லாமிய மத அடிப்படைவாதம். அது வெறும் மதக் கொள்கைகள் சார்ந்து மக்களையும்.. தேசங்களையும் துண்டாடி.. மற்றைய இன.. மத மக்களின் உரிமைகளை காவு கொள்ள நினைக்கிறது.

 

தமிழ் தேசியம்.. என்பது தமிழ் தேசிய இனத்தின் இருப்பினை அடையாளப்படுத்தும்.. அந்த இனத்தினை அரசியல்.. பொருண்மிய.. பூகோள ரீதியில்.. ஒற்றுமைப்படுத்தும் ஒரு கோட்பாடு. அவ்வளவு தான். அதில் ஒரு எக்ஸ்றீமிசுமும் கிடையாது. சிலர் அப்படிக் காட்டிக் கொண்டு தங்களது.. சோரம்போதல்.. சரணாகதி அரசியலை நியாயப்படுத்திக் கொள்ள முனைகிறார்கள் அவ்வளவே. சம்பந்தன் வகையறாக்களின் நடவடிக்கையும் அத்தகைய ஒன்றே. :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழ்த்தேசியம் முன்னேறுவதற்கான இயங்கு தளமும் [ Space ] இல்லை.
செயற்பாடும் இல்லை. [  Activity ] 
 
தற்சமயம் தமிழ்த்தேசியம் செய்யும் மாபெரும் போராட்டம் சம்பந்தரைத் திட்டுவது தான்.

 

 

 

உங்கள் கருத்துப்படி

எதுவுமே அற்ற தமிழ்த்தேசியத்துக்கா

உலகின் நாலாவது வல்லரசு

ஆசியாவின் தாதா  பயப்படுகிறார்..???

இப்படித்தான்

ஒருத்தர் நாலு சறம் கட்டிய  பொடியள் என்றவர்... :(

 

எப்பொழுதும் எமது பலம் எமக்குத்தெரிவதில்லை  என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு..

உங்கள் கருத்துப்படி

எதுவுமே அற்ற தமிழ்த்தேசியத்துக்கா

உலகின் நாலாவது வல்லரசு

ஆசியாவின் தாதா  பயப்படுகிறார்..???

இப்படித்தான்

ஒருத்தர் நாலு சறம் கட்டிய  பொடியள் என்றவர்... :(

 

எப்பொழுதும் எமது பலம் எமக்குத்தெரிவதில்லை  என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு..

 

 

 

பிரபாகரனால் முடியாததையா நாம் முடித்துக்காட்டப் போகிறோம் ?
 
நம்மால் முடியாதது நமக்கு எதற்கு ?
 
ஊருக்குள் சண்டை என்றால் கூத்தாடிக்குக் கொண்டாட்டமாம். அதுபோல இலங்கையின் இன மோதல் வல்லரசுகளின் சமியாக் குணத்திற்கு வெத்தில பாக்கு.
 
மூளைய‌ப் பாவிப்போமாக!
 
 
 
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
 
 
இறுதி நாள் சண்டையில் சீமானின் ஆட்கள் தொலைபேசியில் கேட்ட அழிவுகள் பற்றிய கேள்விக்கு சூசை சொன்ன பதில்
 
 
"இனித் தெரிந்து என்ன செய்யப் போறீங்கள் ?"
 
 
தமிழ்த்தேசியத்தின் பலம் என்ன என்று சூசையின் பதிலில் இருந்து அறியலாம்.
  • கருத்துக்கள உறவுகள்

 

பிரபாகரனால் முடியாததையா நாம் முடித்துக்காட்டப் போகிறோம் ?
 
நம்மால் முடியாதது நமக்கு எதற்கு ?
 
ஊருக்குள் சண்டை என்றால் கூத்தாடிக்குக் கொண்டாட்டமாம். அதுபோல இலங்கையின் இன மோதல் வல்லரசுகளின் சமியாக் குணத்திற்கு வெத்தில பாக்கு.
 
மூளைய‌ப் பாவிப்போமாக!
 
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
 
இறுதி நாள் சண்டையில் சீமானின் ஆட்கள் தொலைபேசியில் கேட்ட அழிவுகள் பற்றிய கேள்விக்கு சூசை சொன்ன பதில்
 
"இனித் தெரிந்து என்ன செய்யப் போறீங்கள் ?"
 
தமிழ்த்தேசியத்தின் பலம் என்ன என்று சூசையின் பதிலில் இருந்து அறியலாம்.

 

 

தமிழுருடைய சுதந்திரத்துக்கான  போராட்டம் பற்றி

இவ்வாறு எழுந்தமானத்துக்கு  எழுதுவது பொருந்தாது

 

பிரபாகரன் எப்பொழுது சொன்னார் தன்னால் முடியாது

விட்டுவிடுங்கள் என்று?

அவர் எப்பொழுதும்  சொல்லிவந்தது

போராட்ட வடிவங்கள் மாறலாம்

ஆனால் போராட்டம் தொடரும்

அதன் இறுதி  இலக்கு தமிழீழம் என்று தான்....

புலம் பெயர்ந்த இளையோரும்  இதில் பங்கெடுக்கணும் என்று தானே இறுதியாச்சொன்னார்.

இந்த புலம் பெயர்ந்த பொடியளுக்கத்தானே இப்ப மோடி சொல்வதாக சம்பந்தர் விடுகதை சொல்கிறார்??

 

 

சூசையண்ணா

எப்பொழுது சொன்னார்

எல்லோரும் ஒதுங்குங்கள் என்று...?

கடைசியிலும் 

அங்கு கொண்டு செல்லுங்கள்

இவர்களிடம் சொல்லுங்கள்

தொடருங்கள் என்று தானே  சொன்னார்...

அந்தநிலையிலும் அவர் தளராது பேசினாரே..

ஏன் நாம் துவண்டு போய்  எழுதுகின்றோம்

இருக்கின்றோம்

செய்பவனையும் ஒதுக்குகின்றோம்... 

 

செய்து காட்டுங்கள் என்று சுட்டுவிரல் நீட்டமுதல்

உங்களை நாலு விரல் காட்டுதே

என்ன  செய்தீர்கள்???

செய்து கொண்டிருக்கின்றீர்கள்??

 

நான் இப்படித்தான் என்னை  முதலில் கேள்வி  கேட்பேன்

நிச்சயமாக

தலைவர் சொன்னதன்படி

தாயக மக்களின் இன்றையநிலையறிந்து

என்னால் முடிந்ததற்கும் மேலாக செய்துவருகின்றேன் புலத்திலிருந்து...

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் ஐக்கிய இலங்கைக்குள் 13 ஆம் திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்கிறார்களா? அல்லது பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வை விரும்புகிறார்களா?என்பதைப் பொது வாக்கெடுப்பு நடத்தாமல் சம்பந்தர் எப்படித்தீர்மானிக்க முடியும்.உலகெங்கிலும் இடம் பெறும் சனநாயக நடைமுறை இதுதான் .தமிழ்மக்கள் விடயத்தில் மட்டும் ஏன் இதை நடைமுறைப்படுத்த இந்தியாவும், அனைத்துலகமும்,சம்பந்தன் வகையறாக்களும் விரும்ப வில்லை?(1977ஆம் ஆண்டும் தேர்தலை ஒரு அம்மா தமிழ்வாக்கெடுப்பாகவே கருதி தமிழ்மக்கள் ஆணையிட்டு இருக்கிறார்கள்) அப்படி ஒரு வாக்கெடுப்பை தமிழ்நாட்டு சட்டமன்ற தீர்மானத்தை மேற்கோள்காட்டி மோடியின் கேட்கவில்லை?தற்போது அனைத்துலக விசாரணை நடைபெற்று வருகிறது. அதனை விட முக்கியமான விடயமாக 30 வருடங்களுக்கு முன் தமிழ்மக்களால் நிராகரிக்கப்பட்ட தமிழ் மக்கள் சம்பந்தப்படாத இந்திய சிறிலங்கா ஒப்பந்தத்தின்படி அமைந்த13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தல் சொல்லிக் கேட்பது முக்கிய விடயமாக உள்ளது. அந்த ஒப்பந்தம் நடை முறைப்படுத்தவதை உறுதிப் படுத்துவது இந்திய அரசின் கடப்பாடு.30வருடங்களாக அதைப்பற்றி எந்தக் கரிசனையும் காட்டாத இந்திய அரசு இவர்கள் இப்போது 30 நிமிடங்களுக்குள் சொன்னவுடனா நிறைவேற்றப்போகிறது?மோடி புலம் பெயர்ந்த தமிழர்களை அடக்கி வாசிக்கச் சொன்னதற்கு வேறு காரணம்இருக்கலாம்.புலம் பெயர்ந்த தமிழர்களின் முயற்சியினால் முன்னெடுக்கப்படும் போர்க்குற்ற விசாரணையின் முடிவில் இந்தியாவின் பங்களிப்பும் வெளிப்படுத்தப்படலாம்.அதனைச சம்பந்தர் மூலமாக சொல்ல வைத்திருக்கிறது.அதற்காகவே சம்பந்தரை அழைத்துப் பேசியிருக்கலாம்.அதனால்தான் இந்தத்தீர்மானத்துக்கு தன்னால் ஆன முட்டுக்கட்டையைப் போட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் மக்கள் ஐக்கிய இலங்கைக்குள் 13 ஆம் திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்கிறார்களா? அல்லது பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வை விரும்புகிறார்களா?என்பதைப் பொது வாக்கெடுப்பு நடத்தாமல் சம்பந்தர் எப்படித்தீர்மானிக்க முடியும்.

வாக்கெடுப்பு வேண்டாம் புலவரே.. ஏறக்குறை தமிழ் ஈழம் வேண்டும் என்ற கொள்கையுடைய  கஜேந்திரன்களுக்கு விழுந்த வாக்கு மாதிரி விழுந்தால் என்ன செய்வது? மக்கள் கருத்து வேண்டாம். நம்ம கருத்து நன்றாக உள்ளது.. அதையே வைத்துக் கொள்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்

ததேகூட்டமைப்புக்கு விழுந்த வாக்குகள் சம்பந்தருக்கு விழுந்ததாக நினைக்கிறீர்களா? சபேசன்???சம்பந்தரால் கஜேந்திரகுமார் ஆகியோரை வெளியே தள்ளிவிட்டு உள்வாங்கப்பட்ட பழம் பெரும் அரசியல்வாதி ஆனந்த சங்கரிக்கு நடந்தது என்ன?தில்லிருந்தால் ததேகூட்டமைப்பை விட்டு வெளியேறி தமிழரசுக்கட்சி சார்பில் வென்று காட்டுவாரா சம்பந்தன் .இதே ததேகூட்டமைப்பில் 2004 ஆம. ஆண்டுத்தேர்தலில் வென்றவர்கள்தான் ததேமுன்னணீயினர்.ததேகூட்டமைப்பு புலிகளால் உருவாக்கப்பட்டது என்பதற்காககத்தான் மக்கள் வாக்களித்தார்களே ஒழிய சம்பச்துருக்காகவோ,சுரேசுக்காகவோ,சித்தார்த்தனுக்காகவோ வாக்களிக்கவில்லை..அனந்திக்கு வீழுந்த வாக்குகள் சம்பந்தருக்காக விழுந்த வாக்குகளா?சம்பந்தரின் தலைமை பிடிக்காது வெளியேற நிர்பந்திக்கப்பட்டவர்கள்தான் ததேமக்கள் முன்னனியினர்.அவர்களும் ததேகூட்டமைப்பில் ஓர் அங்கம்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.