Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழுக்கு புகையிரதம்...

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் Facebookல் இருப்பவர் என்றால், உங்களின் நண்பர் மூலம் அல்லது நண்பர் ஒருவரின் நண்பர் மூலம், இந்த ரெயின் செய்தி பற்றி அடிக்கடி அறிந்து கொண்ட அனுபவம் இருக்கும்தானே? - இங்கே யாழிலும் இணைப்புகள்வருவது உண்டு..

இது பற்றி உங்கள் கருத்து என்ன?

எனக்கு தெரிந்த ஒரு உறவினர் இடம் கதைத்த பொது இது ஒரு வெறும் ஷோ ஒழிய ஏதும் பிரயோசம் இல்லை என்று சொன்னார்- அவர் கூடுதலாக வவுனியா -யாழ் பயணிக்கும் பயணி ஒருவர்.

ஒன்று சீட் பிரச்சனை, மற்றது நேரம்.பஸ் எதோ 1 மனித்தியாத்திர்க்கு ஒருக்கா ஓடுவதாகவும், ரெயின் 2/ 3 தரம் மட்டுமே ஓடுவதாகவும்.

இங்கே வட அமெரிக்காவில், பொது போக்குவரத்து, சில பெரிய நகரங்களை தவிர ..அந்த கால CTB ஐ விட மோசம். வீட்டுக்கு ஒரு கார் , இரண்டு கார் வைத்திருப்பார்கள் . விலை கூடிய பாலை /தண்ணியை விட பெட்ரோல் மலிவு. தூரகாவுள்ள நகரங்களுக்கு போவது என்றால் விமானம் தனியே ஒருவர் /இருவர் காரில் போவதை விட மலிவு.

இலங்கையிலும், கொழும்பு, வவுனியா பயணம் என்பது சந்தியில் இருக்கும் கடைக்கு போகிறமாதிரி வந்த பிறகு இந்த 2 நேர /3 நேர சீட் இல்லாதா ரெயினால் அதிக இரயோசனம் இல்லை என்பது எனது கருத்து ...நீங்கள் என்னநினைகிறீர்கள் ...

  • கருத்துக்கள உறவுகள்

குளிருட்டப்பட்ட  பஸ்சில் ஏறி இருந்தால்.... கொழும்பு போய் சேரும் மட்டும், இருக்கிற ஆசனத்துக்கு உத்தரவாதம் இருக்கு.
ஆனால்... ரெயினில், தற்செயலாக சீற் கிடைத்தாலும்,  மதவாச்சிக்கு அப்பால் சிங்களப் பகுதிகள் ஊடாக ரயில் பயணிக்கும் போது, தமிழனின் சீற், சிங்களவனுக்கே... சொந்தம். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு தெரிந்த ஒருவர் -தமிழர் அரசாங்கத்தில் நல்ல உத்தியோகத்தில் இருப்பவர்- Facebook போட்டிருந்தார்- எங்கோ இடையில் இருந்து -அனுராதபுறம் என்று நினைக்கிறேன், கொழும்புக்கு டிக்கெட் புக் பண்ணி இருந்தும் , யாரோ சிங்களவர்கள் , இடத்தை விடாமல் பிடித்து இருந்தார்களாம். பிறகு டிக்கெட் செக்கர் சொல்லியும் விடவில்லை, பிறகு அடுத்த நிலையத்தில் போலீஸ் கூப்பிட்டு அவர்களை இறக்கி விட்டிருக்க வேண்டும்..இந்தலவிற்க்கும் அவ சிங்கள இடத்தில் வேலை செய்கிரா ஒரு 7-8 வருடமாக :(

  • கருத்துக்கள உறவுகள்

....ஆனால்... ரெயினில், தற்செயலாக சீற் கிடைத்தாலும்,  மதவாச்சிக்கு அப்பால் சிங்களப் பகுதிகள் ஊடாக ரயில் பயணிக்கும் போது, தமிழனின் சீற், சிங்களவனுக்கே... சொந்தம். :)

 

இலங்கை விமானத்தில் எப்படியாம்?

உதாரணமாக, மதுரை - கொழும்பு - மதுரை விமானத்தில் பயணிக்கும் போது, விமானம் கச்சத்தீவுக்கு மேலே வந்ததும், இரு நாட்டவரும் தாங்கள் அமர்ந்திருக்கும் இருக்கையை மாற்றிகொள்ள வேண்டிவருமோ? (ஒரு நாட்டவர் நின்று கொண்டிருக்க, மற்றவர் உட்கார்த்துகொண்டு பயணித்து பின்னர் நாட்டு எல்லையில் மாறிக்கொள்வது) :o:(:)

 

  • கருத்துக்கள உறவுகள்

பஸ்ஸில் போவதை விட ரெயிலில் போவது விரைவானதும் மலிவானதும் களைப்பு குறைவானதும் ஆகும். போன மார்கழி இரண்டு முறை கொழும்பு - யாழ் பிரயாணம் செய்திருந்தேன். முதல் தடவை எமது வாகனத்திலும் அடுத்த முறை போகும் போது இலங்கை போக்குவரத்துச் சபை கொழும்பு - பருத்தித்துறை பேரூந்திலும் வரும் போது கிளிநொச்சி - கொழும்பு புகையிரதத்திலும் (Inter City Express) போய் வந்தேன். புகையிரதம் பின்னேரம் 2.15க்கு கிளிநொச்சியில்  வெளிக்கிட்டு இரவு 8.15க்கு கோட்டையை அடைந்துவிட்டது. அத்துடன் A9 வீதியில் நடக்கும் விபத்துக்களுடன் ஒப்பிடும்போது புகையிரதம் மிகவும் பாதுக்காப்பானது. ICE, யாழ் கொழும்பை 7 மணித்தியாலத்தில் கடக்கக் கூடியது. வீதி மூலம் இது சாத்தியமல்ல.        

  • கருத்துக்கள உறவுகள்
இந்தத் திரியைப் படித்ததும் அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே..... :rolleyes:  
 
யாழ் கொழும்பு தொடரூந்தில் மூலை இருக்கையில் இடம்பிடிப்பதற்கு யாழிலிருந்து காங்கேசன்துறைவரையில் சென்று இடம்பிடித்து வருவார்கள். அந்த இருக்கைக்காக கோட் சூட் வேட்டி சட்டை வித்தியாசமின்றி தமிழர்களிடையே வாய்ச்சண்டை, கைச்சண்டை எல்லாமும் கூட  உயர்வு தாழ்வின்றி நடைபெறுவதும் உண்டு.
 
கொழும்பு யாழ் தொடரூந்தில் தமிழன் கோட் சூட்டுடன் ஏறியதும் மூலை இருக்கையில் இருக்கும் சிங்களவன் எழுந்து 'துரே வாடிவென்ட' என்று தன் தங்கப்பல் தெரியச் சிரித்து அந்தத் தமிழனுக்கு இடம்கொடுப்பான். அது ஒரு கனாக்காலம்...... :(  :(
 
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு யாழ் தொடரூந்தில் தமிழன் கோட் சூட்டுடன் ஏறியதும் மூலை இருக்கையில் இருக்கும் சிங்களவன் எழுந்து 'துரே வாடிவென்ட' என்று தன் தங்கப்பல் தெரியச் சிரித்து அந்தத் தமிழனுக்கு இடம்கொடுப்பான். அது ஒரு கனாக்காலம்...... :(  :(

 

இப்ப சிங்களவனுக்கு தமிழன் இருங்கோ ஐயா என்று சொல்லுறான்....:D

Edited by putthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப சிங்களவனுக்கு தமிழன் இருங்கோ ஐயா என்று சொல்லுறான்.... :D

 

இல்லை......தமிழனும் இப்ப சிங்களவனை பாத்து "துரே வாடிவென்ட" எண்டு பொன்வாயை திறந்து சொல்லுறானாம்... :D

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை......தமிழனும் இப்ப சிங்களவனை பாத்து "துரே வாடிவென்ட" எண்டு பொன்வாயை திறந்து சொல்லுறானாம்... :D

 

பிறகேன்ன "அப்பே ஒக்கம எக்காய்"

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்ச சிலபேர் புளுகி அடிக்கிறத பார்த்தால்.. சிறீலங்காவில்.. மெற்றோவும்.. புள்ளட்டும் ஓடிக்கொண்டிருப்பது போல படம் காட்டினம். இன்னும்.. இந்திய.. சீன தயாரிப்பு அந்த பழைய கடகட கொட்டி தான் ஓடிட்டு இருக்குது. :lol:

 

வவுனியாவில் இருந்து நடந்து.. வந்த சேவைகள்.. இப்ப.. யாழ்ப்பாணம் வரை நீட்டப்பட்டுள்ளது. அவையே நிற்பாட்டினம். அவையே நீட்டினம். இதில எங்கட ஆக்கள் ஐயோ.. கோச் வருகுது. ஐயோ.. பாதை வருகுது என்று அதுவும் வெளிநாடுகளில் வசிக்கிறவை போய் வந்து போடுற கூச்சல் தான் அதிகமாகக் கிடக்குது.

 

அடங்குங்க அண்ணங்களா.. உலக தொடரூந்து சேவைகள் நவீனமயமாகி.. உள்ள நிலையில் சிறீலங்கா இன்னும்.. அதில் பிந்தங்கிய நிலையில் தான் உள்ளது. இந்தியாவில் வளர்ச்சி வந்தால் தான்.. அது சிறீலங்காவையும் வளர விடும். இன்றேல்.. அதே கடகட கொட்டி தான் தஞ்சம். :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அநேகர் வேற ஆக்கள் சொன்ன கதைகளை வைத்துக் கொண்டுதான் விடயங்களை தீர்மானிப்பது. சொந்தமாய்ப் போய் வந்தவர்கள் சொன்னால் வேற விடயம். கூகிளை நம்பிக் கருத்து எழுத வெளிக்கிட்டால் இதுதான் பிரச்சனை. இலங்கையின் எல்லாப் பாகங்களிலும் கட கட தான் ஓடுகிறது. அவுசில் கூட புளட் இல்லை. நாட்டை விட்டு வெள்ளணை ஓடின ஆக்களுக்குத் தெரியுமே சனம் கிளாலி, கொம்படி, சங்குப்பிட்டி, கேரதீவு, பாஸ், மூண்டு பவுண், பிணை, பிரிகேட் காமப், ஸ்டான்லி ரோட் கியூ, கிளியரன்ஸ், செஞ்சிலுவைக் கப்பல் எண்டு அலைஞ்சு திரிஞ்ச கதை. யாழ் கொழும்பு ஏழு மணித்தியாலத்தில் ஓடுவது கஷ்டப்பட்ட சனத்துக்கு எவளவோ நல்ல விடயம்.

இருக்கைகளை கட்டாயம் முற் பதிவு செய்ய வேணும். மற்றது தற்போது பளை மட்டும் நாளுக்கு நாலு சேவைகள் இருக்கு. இதை ஆறாக அல்லது ஏழாக அதிகரிக்கப் போகிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கை கொஞ்சப்பேரின்ரை கதையளை பாத்தால் யாழ்ப்பாணத்துக்கு வசுவும் ரயிலும் தான் இவ்வளவுகாலமும் பெரிய பிரச்சனையாய் இருந்திருக்கு போலை கிடக்கு....

  • கருத்துக்கள உறவுகள்

உங்கை கொஞ்சப்பேரின்ரை கதையளை பாத்தால் யாழ்ப்பாணத்துக்கு வசுவும் ரயிலும் தான் இவ்வளவுகாலமும் பெரிய பிரச்சனையாய் இருந்திருக்கு போலை கிடக்கு....

 

 

அண்ணை

போகும்  போது வவுனியாவுக்கு அப்பால் நடுங்குவதும்

வரும்  போது

வவுனியாவுக்குள் வந்ததும் ஆனந்தப்படுவதும் எப்பொழுது மாறுமோ...?

அன்றே சந்தோசம்

மற்றும்படி

வெறும் பயணம் மட்டுமே.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை

போகும்  போது வவுனியாவுக்கு அப்பால் நடுங்குவதும்

வரும்  போது

வவுனியாவுக்குள் வந்ததும் ஆனந்தப்படுவதும் எப்பொழுது மாறுமோ...?

அன்றே சந்தோசம்

மற்றும்படி

வெறும் பயணம் மட்டுமே.....

 

அனுராதபுரத்திலை வைச்சு அடிச்சாலும்......

மதவாச்சியிலை வைச்சு காதறுத்தாலும்......

கொழும்பிலை கதற கதற அடிச்சு கொலை செய்தாலும்.......

யாழ்ப்பாணத்திலை வீடுவீடாய் பெடிபெட்டையளை தேடிப்பிடிச்சு கொண்டுபோய் துலைச்சாலும்.....

மேலாலை வந்து குண்டுமழை பொழிஞ்சாலும்.....

எதையும் தாங்குவான் ஈழத்தமிழன்...... 

 

நல்லவன்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அனுராதபுரத்திலை வைச்சு அடிச்சாலும்......

மதவாச்சியிலை வைச்சு காதறுத்தாலும்......

கொழும்பிலை கதற கதற அடிச்சு கொலை செய்தாலும்.......

யாழ்ப்பாணத்திலை வீடுவீடாய் பெடிபெட்டையளை தேடிப்பிடிச்சு கொண்டுபோய் துலைச்சாலும்.....

மேலாலை வந்து குண்டுமழை பொழிஞ்சாலும்.....

எதையும் தாங்குவான் ஈழத்தமிழன்...... 

 

நல்லவன்கள்.

 

உங்களது  கோபம் புரியுதண்ணா...

 

ஆனால் உலக வரலாற்றையே திருப்பிப்போட்ட  தியாகங்களையும்

இதே ஈழத்தமிழினம்தான் செய்தது..

 

இன்றும் செய்யும்

ஒரு நாடு கண் திறந்தால்..

அதுவரை............ :(

  • கருத்துக்கள உறவுகள்

அவனவன் உயிரையே தாரை வார்க்க.. 16கிராம் மீட்பு நிதி கொடுக்க கஸ்டப்பட்டவை எல்லாம் கொழும்புக்கும் வெளிநாட்டுக்கும் போக.. ஏஜென்சிக்கு ஒட்டுக்குழுக்களுக்கு ஆயிரக்கணக்கில.. இலட்சக்கணக்கில அள்ளிக் கொடுத்துகள் சிலருக்கு மறந்துபோச்சுப் போல.

 

அங்கால வவுனியா வந்தால்.. தாண்டிக்குளத்தில ஒரு பாஸ்.. ஒரு போட்டோ எடுப்பு.. அப்புறம்.. ஜோசப் முகாமில்.. ஆளுக்கு 7,000 ரூபா மற்றும் பாஸ்.. இதெல்லாம் சிங்களவனிட்ட கொடுத்து வாங்கேக்க.. நடுக்கம் போல.. அதையும் மறந்திட்டினம்.

 

அப்புறம் சூரியக்கதிரிக்குப் பின்னாடி.. விசேட அடையாள அட்டை.. கொழும்புக்கு போக பாஸ்.. சிங்களவன் கொண்டு வந்ததையும் மறந்திட்டினம் போல.

 

அப்புறம் கொழும்பில.. வீட்டுப் பதிவு.. ஆள் பதிவு.. விருந்தினர் பதிவு.. அதுக்கு காசு.. ஆயிரக்கணக்கில கொட்டிக் கொடுத்ததுகளையும் சில பேர் மறந்திட்டினம்.

 

ஞாபகத்தில் இருப்பதெல்லாம் 16 கிராம் மீட்பு நிதியும்.. வகைதொகையற்ற வெளியேற்றங்களை.. பாதுகாப்பை உறுதி செய்ய கொண்டு வந்த பாஸ் நடைமுறைகளும் தான்.

 

இதில் இருந்து தெரியுதே.. எஜமான விசுவாசங்கள் எந்த வகைக்கு இருந்திருக்கென்று.

 

வவுனியாவில் இருந்து கொழும்பு போகேக்க.. தமிழர்களிடம் பறித்த நகைகள் என்ன.. கொழும்பில் இருந்து வரும் போது ஓமந்தையில் பறிந்த பணம் என்ன.. நகைகள் என்ன.. இதுகளையும் அண்ணமார் நீங்கள் சிங்களவனட்ட கேட்டு கணப் போட்டு வைச்சுங்க...!

 

அவனவன்.. கிளாலிக்கால.. சிங்கள நேவிட்ட இருந்து தன்ர உயிரை பணயம் வைச்சு காவல் காத்து அனுப்பி வைக்க.. வெளில வந்திட்டு.. இப்ப சிங்களவன் ஆட்டோ விடுறான்.. ரயில் விடுறான்.. 7 மணித்தியாலத்தில போய் வாறம் என்று புகழுகிறது எல்லாம் ஓவர்.

 

இதே நிலையை அவங்களட்டை கொடுத்திருந்தால்.. வன்னில இருந்து இப்ப.. ஹெலி சேவிசே நடத்தி இருப்பாங்க. எல்லாத்தையும் தடுத்து.. தடை செய்திட்டு.. இப்ப.. ரயில் விடுறம்.. பஸ் விடுறம் என்றதில எந்த முன்னேற்றமும் கிடையாது. இருந்ததை தடுத்து இல்லாமல் செய்திட்டு மீண்டும் இருப்பது போல காட்டும் சிங்களச் சுற்றுமாற்றே இது.

 

இதெல்லாம்.. சிலருக்கு சுகமா.. சுகிதமா இருக்கலாம். ஆனால் மிகப் பழசு. :):D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அங்க இருக்கிற சனம் ரயிலோட்டம் பற்றி என்ன நினைக்குது என்பது தான் முக்கியம். வோல்கனோ சொன்னது போல அங்க இருப்போருக்கு இதனால பெரிய நன்மைகள் இருக்குதோ தெரியாது. ஆனால் ரூர் போற எங்கட ஆட்கள் போய் படமும் பிடிச்சு முகநூலில போட்டு கிட்டத் தட்ட சிறி லங்கா உல்லாசப் பயணச் சபை முகவராகவே மாறி விடுவினம். திபெத்தை சீனாக்காரன் பிடிச்சாப் பிறகு ஒரு ரயில் சேவையை திபெத்துக்கு விட்டான். திபெத்தியன் வெளியில போய் சீனா சுற்றிப் பார்க்க அல்ல, திபெத்திற்கு வெளியே இருக்கும் ஹான் சீனர்கள் ஆயிரக்கணக்கில் பெட்டி படுக்கையோடு வந்து திபெத்தில் குடியேறுவதற்காகவே! இது தெரியாமல் நாங்கள் அதிகம் ஆலாபனை செய்வது நல்லதல்ல!

  • கருத்துக்கள உறவுகள்

வந்தால் புல்லட் கோச்சி வர வேணும்.அல்லாட்டில் மாட்டு வண்டில்.நல்ல சிந்தனை.நாங்கள் எல்லா வசதிகளையும் அனுபவிக்க வேணும் அங்கை மட்டும் மாட்டு வண்டி ஓட வேண்டும்.ஊருக்கே திரும்பி போக மாட்டோம் என்பவர்களுக்கு நிச்சயம் கசப்பான விடையம் தான்.மற்றது வோல்கனா சொன்னதில் இருந்தே தொியுது சீற் கிடைப்பது கஸ்ரம் என்பது.அப்ப கோச்சி புல்தானே.சிங்களவன் கால்வாசி தமிழன் மீதி.இது நான் போகும் போது பார்த்த நிலவரம்.எப்படி பாத்தாலும் கோச்சி வசதியான பயனம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு புள்ளை குட்டி வியர்க்க விறுவிறுக்காமல் ஊர் போய் வர கோச்சி என்ன.. மகிந்த முதுகில் கூட சவாரி செய்யதாலும் வசதியே.

 

அங்கினை சனம் கோச்சியில போக வழியில்லாமல்.. தினக் கஞ்சிக்கு... வழி இல்லாமல்.. சிங்களவன் மீனையும்.. வயலையும்.. தோட்டம் துரவையும்..வறுத்தெடுக்கிறது.. இவைக்குத் தெரிய.. புரிய நியாயம் இல்லை.

 

இவைட வயிறு தான் சுவை சுவையா.. நிறையுதில்ல. ஏப்பம் பலமாத்தான் இருக்கும்..! கால் வயிற்று கஞ்சிக்கு கஸ்டப்படுறவனுக்கு கோச்சியும்.. பூங்காவும் தான் இப்ப அவசியமா தேவைப்படும்..! நல்ல சிந்தனை தான். சிங்கள எஜமான விசுவாசத்தைக் காட்ட.. எப்படி எப்படி எல்லாம் எழுதித் தள்ளுறாங்க. :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் பலர் அங்கு அடுத்த வேளை கஞ்சிக்கும் படிப்புக்கும் பல அடிப்படை வசதிகளும் இல்லாமல் உள்ளார்கள்.இதை நான் நெற்றில் மட்டும் பாக்க வில்லை.நோில் பார்த்தேன்.அவர்களுக்கெல்லாம் கோச்சி எல்லாம் ஓடுதே என்று தொிந்து இருக்க நியாயம் இல்லை.ஆனால் தொிந்தால் அதில் ஏறியும் சிறு வியாபரம் செய்து பஞ்சம் பிழைப்பார்கள்.அரசியல் உரிமை என்பனவும் அடிப்படை வசதிகளும் சமாந்திரமாக நடக்கட்டுமே.புலிகளும் இதைத்தானே வலியுறித்தினார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கோச்சில ஏறி 1500 ரூபாவுக்கு பஞ்சம் பிழைக்க.. உள்ள கடலையும்.. வயலையும்.. நிலத்தையும்.. உரிமையையும் சிங்களவனிடம் தாரை வார்.. என்று புலிகள் வகுப்பெடுத்தார்களாக்கும். :huh:

 

எங்களுக்கு ஊருக்கு விசிட் அடிக்க.. 5000.. 10000 யூரோவுக்கு என்ன.. ஐரோப்பாவில்.. ரயில்களில் சுண்டலா விற்றுக் கொண்டு திரிகிறோம். கடனட்டையில் தானே ஓடிப்போய் சோ காட்டிட்டு வாறம். நாங்களும் அங்கினை போய்.. பஞ்சம் பிழைக்கலாம் தானே..! இஞ்ச இருந்து அவனுக்கு கடலை.. காணியை சிங்களவனட்ட கொடுத்திட்டு.. கோச்சில பஞ்சம் பிழை என்று வழிகாட்டுறனாங்க..! :):rolleyes::icon_idea:

Edited by nedukkalapoovan

மிகவும் சந்தோசமான செய்தி

 

சர்வதேசத்தின் இயங்கியலின் படி இனிவரும் காலங்களில் பொருளாதார முன்னேற்றம் ஒன்றே தமிழர் பலத்தினை அதிகரிக்கும்.  வடக்கின் விளை பொருட்கள், உற்பத்திகள் என்பன தெற்கையும், அதனைத் தாண்டி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகுமாயின் வடக்கின் பொருளாதாரம் மேலும் முன்னோக்கிச் செல்லும். போரின் மூலம் அடிப்படைக் கட்டுமானங்கள் அனைத்தினையும் இழந்து தவிக்கும் எம் மக்களுக்கு போக்குவரத்து வசதிகளும் இலகுவாக்கப்பட்டால் மேலும் முன்னேறுவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும்.

 

சிங்களம் தன் குடியேற்றத் திட்டத்திக்கு ரயில் போக்குவரத்தினை பயன்படுத்துமா இல்லையா என்ற கேள்விக்கு கண்டிப்பாக பயன்படுத்தும் என்பதுதான் பதில். ஆனால் ரயில் போக்குவரத்து இல்லாவிடினும் கூட சிங்களம் அதனைத் தான் செய்யும். சிங்கள குடியேற்றம், சிங்கள மயமாகுதல் என்பன அரசியல் பிரச்சனைகள். இந்த அரசியல் பிரச்சனையை அரசியலினூடாக தீர்ப்பதற்கான முயற்சிகளை தமிழ் தேசிய சக்திகள் முன்னெடுக்கும் அதே வேளை பொருளாதார முன்னேற்றத்திற்கான அனைத்து விடயங்களையும் செய்ய வேண்டும்.

 

அரசியல் பிரச்சனை தீர்க்கபட்ட பின்பு தான், விடுதலை கிடைத்த பின்புதான் அபிவிருத்தி என்றால் சுடுகாடாக போயிருக்கும் எம் மண் மேலும் மேலும் மக்கி போக வைக்கத் தான் செய்ய முடியும்.

 

எல்லாவற்றினையும் இழந்து நிற்கும் வேளையில் கிடைக்கும் சிறு துரும்பும் கூட எமக்கு உதவிகரமானதாக மாற்றுவதில் தான் எம் எதிர்காலம் தங்கியுள்ளது. அது அரசியல் என்றாலும் சரி, பொருளாதாரம் என்றாலும் சரி.

 

அரசியல் பிரச்சனை தீர்க்கபட்ட பின்பு தான், விடுதலை கிடைத்த பின்புதான் அபிவிருத்தி என்றால் சுடுகாடாக போயிருக்கும் எம் மண் மேலும் மேலும் மக்கி போக வைக்கத் தான் செய்ய முடியும்.

 

எல்லாவற்றினையும் இழந்து நிற்கும் வேளையில் கிடைக்கும் சிறு துரும்பும் கூட எமக்கு உதவிகரமானதாக மாற்றுவதில் தான் எம் எதிர்காலம் தங்கியுள்ளது. அது அரசியல் என்றாலும் சரி, பொருளாதாரம் என்றாலும் சரி.

 

 

உன்மை. அதோடு தென்னிலங்கையில் பலத்த வாழ்கைச் செலவை வாடகை போன்றவறிற்றுனூடாக அனுபவித்து கஸ்டப்படும் எம்மக்கள் மீண்டும் ஊர் திரும்புவதற்கு ஓர் உக்கமாகவும் இருக்கும். (வெளி உலகோடு நல்ல போக்குவரத்து வசதிகள் யாழ்ப்பாணத்திற்கு இருக்குமாயின் கொழும்பில் நெருக்கடியில் வாழ்வதை விட ஊர் போகலாம்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்துக்களை பகிர்ந்த உறவுகளுக்கு நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சந்தோசமான செய்தி

 

சர்வதேசத்தின் இயங்கியலின் படி இனிவரும் காலங்களில் பொருளாதார முன்னேற்றம் ஒன்றே தமிழர் பலத்தினை அதிகரிக்கும்.  வடக்கின் விளை பொருட்கள், உற்பத்திகள் என்பன தெற்கையும், அதனைத் தாண்டி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகுமாயின் வடக்கின் பொருளாதாரம் மேலும் முன்னோக்கிச் செல்லும். போரின் மூலம் அடிப்படைக் கட்டுமானங்கள் அனைத்தினையும் இழந்து தவிக்கும் எம் மக்களுக்கு போக்குவரத்து வசதிகளும் இலகுவாக்கப்பட்டால் மேலும் முன்னேறுவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும்.

 

சிங்களம் தன் குடியேற்றத் திட்டத்திக்கு ரயில் போக்குவரத்தினை பயன்படுத்துமா இல்லையா என்ற கேள்விக்கு கண்டிப்பாக பயன்படுத்தும் என்பதுதான் பதில். ஆனால் ரயில் போக்குவரத்து இல்லாவிடினும் கூட சிங்களம் அதனைத் தான் செய்யும். சிங்கள குடியேற்றம், சிங்கள மயமாகுதல் என்பன அரசியல் பிரச்சனைகள். இந்த அரசியல் பிரச்சனையை அரசியலினூடாக தீர்ப்பதற்கான முயற்சிகளை தமிழ் தேசிய சக்திகள் முன்னெடுக்கும் அதே வேளை பொருளாதார முன்னேற்றத்திற்கான அனைத்து விடயங்களையும் செய்ய வேண்டும்.

 

அரசியல் பிரச்சனை தீர்க்கபட்ட பின்பு தான், விடுதலை கிடைத்த பின்புதான் அபிவிருத்தி என்றால் சுடுகாடாக போயிருக்கும் எம் மண் மேலும் மேலும் மக்கி போக வைக்கத் தான் செய்ய முடியும்.

 

எல்லாவற்றினையும் இழந்து நிற்கும் வேளையில் கிடைக்கும் சிறு துரும்பும் கூட எமக்கு உதவிகரமானதாக மாற்றுவதில் தான் எம் எதிர்காலம் தங்கியுள்ளது. அது அரசியல் என்றாலும் சரி, பொருளாதாரம் என்றாலும் சரி.

 

இதைத்தான் நானும் சொல்லுறன்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.