Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனிபகவான் தலம்.

Featured Replies

சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன்
செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது. இது எப்படி சாத்தியம்? என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரளவைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின் தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்து விடுகின்றன.

அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ? ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது. இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கரு நீல கதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும்.
விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கை கோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை. இதில்குறிபிடத்தக்க அம்சம்
என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால் 'சனிபகவான்' தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர்.

இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய
முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும். நாம் பல செயற்கைகோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான
நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை, நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலை நோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.

இதை மிஞ்சும் வகையில் ஒரு விசயம் கேள்வி பட்டேன். நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே நவகிரகங்களை நன்றாககவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!! உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள்!!!

எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள்! பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்த அறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும்.

நன்றி ஆன்மீகம் .

  • Replies 79
  • Views 7.1k
  • Created
  • Last Reply

இந்தத் தகவலை இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன். தகவலுக்கு மிகவும் நன்றி!!

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இங்கு குறிப்பிடும் நாசா சம்பந்தப்பட்ட தகவலை ஊர்ஜிதம் செய்ய முடியுமா. செய்தி பத்திரிகை, சஞ்ஜிகை அல்லது இணையத்தில் வந்திருந்தால் இணைத்துவிடுங்கள். ஆன்மீகத்தில் மிக்க ஈடுபாடு கொண்டவன் என்ற முறையில் கேட்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன்

செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது. இது எப்படி சாத்தியம்? என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரளவைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின் தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்து விடுகின்றன.

அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ? ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது. இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கரு நீல கதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும்.

விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கை கோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை. இதில்குறிபிடத்தக்க அம்சம்

என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால் 'சனிபகவான்' தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து ,பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர்.

-----

அஞ்சரன், அந்த நாசா விஞ்ஜானிகளின், (போட்டோவை, இணைக்கவும்.)

ஆடான... ஆடெல்லாம், கஞ்சிக்கு அழுததாம்....

ஒரு... ஆடு, சோத்துக்கு அழுததாம்.

இச் செய்தி முகப்புத்தகத்தில் பரப்பப்பட்டு பின்னர் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தடுமாறிய செய்மதியின் பெயரையோ, நாசா தெரிவித்த கருத்தையோ எங்கும் காண முடியவில்லை. அப்படி இருக்குமானால் யாராவது இணைத்து விடுங்கள்.

ஆகக் குறைவான உயரத்தில் பறக்கும் செய்மதி 200 கிலோமீற்றர் உயரத்தில் பறப்பதாக வைத்துக் கொள்வோம். கோயிலின் பரப்பளவோடு ஒப்பிடும் போது ஒரு தூசு அளவில் இருக்கும். அப்படி இருக்கும்போது செய்மதி கோயிலுக்கு மேலாகப் பறந்தது என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது ? இந்த உயரத்தில் தரையொடு ஒப்பிடும்போது அதன் வேகம் 1 வினாடிக்கு பல்லாயிரம் மீற்றர்கள். 3 வினாடிகள் எவ்வாறு ஸ்தம்பிக்க முடியும் ?

பூமியில் சில இடங்களில் புவியீர்ப்பு கூடுதலாகவும் சில இடங்களில் குறைவாகவும் இருக்கும். தமிழ்நாடு - இலங்கைப் பிரதேசத்தில் புவியீர்ப்பு ஏனைய இடங்களை விடக் குறைவாக உள்ளது (படத்தில் நீலமாக உள்ள பகுதி).

terre1.png

இந்த இடங்களைக் கடக்கும்போது செய்மதிகளின் வேகம் வித்தியாசப்படுவதாக நாசா ஒப்புக் கொள்கிறது. ஏன் இந்த இடத்தில் புவியீர்ப்பில் மாற்றம் உள்ளது என்பது பற்றிய சரியான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தத் தகவலை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட கதையாகவே இக் கட்டுரை தென்படுகிறது. சரியான தகவல்கள் யாருக்காவது தெரிந்தால் பதியுங்கள்.

எமது முன்னோர்கள் பல துறைகளிலும் அனுபவ ரீதியாகப் பலதரப்பட்டவற்றைக் கண்டுபிடித்துள்ளனர். இவற்றில் சில விடயங்கள் அக்காலத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக சமய ரீதியாகத் தொடர்பு படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட இன்றைய காலப் பகுதியில் இற்றில் பல அவசியமற்றதாகிறது. தகவல் பகிர்வு இலகுவாகிவிட்ட சமுதாயத்தில் பகுத்தறிந்து நல்ல பழக்கங்களைப் பேணியும், மாற்றங்கள் செய்தும், புதியவற்றை உருவாக்கியும் எமது இனத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும். தொன்மையான பயனுள்ள கருத்துக்களை ஆராய்ந்து அவற்றை வேறு மொழிகளில் உலகம் முழுவதும் பரப்ப வேண்டும்.

***

இக் கட்டுரையில் நவக்கிரகங்கள் பற்றிய இன்னொரு பிழையான தகவல், சூரியனையும் சந்திரனையும் நவக் கிரகங்களுக்குள் சேர்த்துள்ளனர். இவை இரண்டும் கிரகங்கள் அல்ல.

என்னுடைய சந்தேகமெல்லாம் செயற்கைக் கோளையே தடுத்து நிறுத்தும் சனிக்கு குண்டு போடப் போகும் விமானங்களையும் மக்களைக் கொல்லக் கிளப்பும் செல்கள் மற்றும் ஏவுகணைகளையும் தடுத்து நிறுத்த முடியாதா? அப்பாவீ மக்களைக் காப்பாற்ற முடியாதா? 

இந்த அப்பாவித்தமிழர்கள்

தமிழில் கத்தியதற்கு அவர் என்ன செய்யமுடியும்??

ஆனால் புலம் பெயர் மக்கள் பணத்தால் அபிசேகம் செய்து 

தமிழில் சொன்னால் புரியுது என்கிறார்கள் புலம் பெயர் பக்தர்கள்..

அத்துடன் இது கூட ஒரு அரசியல் தான்

மூடநம்பிக்கைகளுக்கு தடை வந்தபின்

இது போன்ற வியாபாரங்கள்  அடிக்கடி திறக்கின்றன... :lol:  :D

  • தொடங்கியவர்

மெய்யானம் என்பதை நிங்கள் மத நம்பிக்கையா பார்ப்பது தவறு அண்ணா இங்கு சொல்லப்படும் செய்தி என் முன்னோர் தொழில்நுட்பம் வளர முன் எவ்வாறு இவற்றை சிந்தித்து செய்தனர் என்பதே ..

சரியான கணிப்பிடு ..எதை எங்கு வைக்க வேணும் என்னும் அறிவியலை அவர்கள் எங்கு பெற்றார்கள் என்பதுதான் .

உங்கள் வாதத்துக்கு வந்தால் மாடு சாகும்போது கன்றுக்கு புல்லு பிடுங்கி வைத்துவிட்டு சாவது இல்லை தானா தான் தேடவேண்டும் என்பது உலக நியது ..

அப்பாவா பக்கத்தில் இருந்தாலும் போகும் மகனின் உயிரை தடுத்து நிறுத்த முடியாது எங்கிருத்து பெறப்பட்டதோ அங்குதான் போகும் எது எங்கு என்பதுதான் தேடல் ..

அதை கடவுள் என்பார்கள் அவ்வளவுதான் .

இந்த அப்பாவித்தமிழர்கள்

தமிழில் கத்தியதற்கு அவர் என்ன செய்யமுடியும்??

ஆனால் புலம் பெயர் மக்கள் பணத்தால் அபிசேகம் செய்து 

தமிழில் சொன்னால் புரியுது என்கிறார்கள் புலம் பெயர் பக்தர்கள்..

அத்துடன் இது கூட ஒரு அரசியல் தான்

மூடநம்பிக்கைகளுக்கு தடை வந்தபின்

இது போன்ற வியாபாரங்கள்  அடிக்கடி திறக்கின்றன... :lol:  :D

பிள்ளைக்கு கலியாணம் சாமத்தியம் எல்லாம் மூட நம்பிக்கைதான் அண்ணே முதலில் அங்கிருத்து ஆரம்பிப்பம் எங்காவது கட்டிட்டு போகட்டும் என்று விடுவமா நீங்க தயாரா அதுக்கு ..

காலையில் எழும்பி முகம் கழுவி சிவா சிவா என்று திருநீறு பூசிட்டு வந்து கணனியில் எதுவும் எழுதலாம் அண்ணே ஆனால் நிஜம் வேறு இல்லையா  :D  :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த அப்பாவித்தமிழர்கள்

தமிழில் கத்தியதற்கு அவர் என்ன செய்யமுடியும்??

ஆனால் புலம் பெயர் மக்கள் பணத்தால் அபிசேகம் செய்து 

தமிழில் சொன்னால் புரியுது என்கிறார்கள் புலம் பெயர் பக்தர்கள்..

அத்துடன் இது கூட ஒரு அரசியல் தான்

மூடநம்பிக்கைகளுக்கு தடை வந்தபின்

இது போன்ற வியாபாரங்கள்  அடிக்கடி திறக்கின்றன... :lol:  :D

போரில் இறந்த அனைத்து அப்பாவிதமிழர்களும் இந்துக்களா? கிறிஸ்தவர்கள் இல்லை??? கிறிஸ்தவ தேவாலயங்கள் குண்டுவீசி தகர்க்கப்படவில்லை??? :icon_idea:
 
அப்போ ஜேசு என்ன செய்தார்? வத்திக்கான் என்ன செய்தது? பாப்பாண்டவர் என்ன செய்தார்?  :icon_idea:
 
Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தைச் சொன்னாலும் சனி சாரில் எனக்கு நம்பிக்கை உள்ளது.. :D

  • தொடங்கியவர்

என்னத்தைச் சொன்னாலும் சனி சாரில் எனக்கு நம்பிக்கை உள்ளது.. :D

இசை இன்னும் பிடிக்கவில்லை உங்களை பிடிச்ச பிறகு தெரியும் சனி விடாது தொடரும் என்று ...கலியாணம் விரைவில் நடக்க வாழ்த்துக்கள்  :D

  • கருத்துக்கள உறவுகள்

போலி அறிவியல் எல்லாம் இனி இல்லை என்று சொன்ன பிறகு பல அறிவியல் போலிகளாக வந்துகொண்டிருக்கே.

நவக்கிரகங்களின் மீதுள்ள வண்ணத் துணிகளைத் தட்டிப்பார்த்தால் தூசு பறந்து தும்மல்தான் வரும்!! சந்திரனும் ஒரு கோளாகத்தானே இப்பவும் சோதிடத்தில் இருக்கு. இப்ப மாத்தீட்டார்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

இசை இன்னும் பிடிக்கவில்லை உங்களை பிடிச்ச பிறகு தெரியும் சனி விடாது தொடரும் என்று ...கலியாணம் விரைவில் நடக்க வாழ்த்துக்கள்:D

இன்னொரு கல்யாணமா:D????????????? இசைக்கா:D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு கல்யாணமா:D????????????? இசைக்கா:D:lol:

நானே கேட்டிட்டு பேசாமல் ஒரு கிளுகிளுப்போட இருக்கிறன் :D

  • தொடங்கியவர்

நானே கேட்டிட்டு பேசாமல் ஒரு கிளுகிளுப்போட இருக்கிறன் :D

அட பாவிகள் இது வேறையா அவசரபட்டுடமே  :icon_idea:

போலி அறிவியல் எல்லாம் இனி இல்லை என்று சொன்ன பிறகு பல அறிவியல் போலிகளாக வந்துகொண்டிருக்கே.

இத்தகைய பதிவுகளை தவிர்க்க சொல்லிய பின் வேண்டும் என்றே போடுகின்றார்களோ என்று சந்தேகமாக இருக்கு. :unsure:

எந்த அடிப்படையும் அற்ற ஆகக் குறைந்தது விஞ்ஞான பூர்வமான விளக்கம் கொண்ட ஒரு ஆதாரத்தினையும் காட்டாது,  வெறுமனே முக நூலை மட்டும் ஆதாரமாகக் கொண்டு இணைக்கப்படும் இவ்வகையான ஆக்கங்கள் இனிமேல் தொடர அனுமதிக்கப்பட மாட்டாது என்பதை சம்பந்தப்பட்ட அனைவரும் புரிந்து கொள்ளவும்.

இப் பதிவில் கூறப்பட்டுள்ள செய்மதி தொடர்பான விடயத்திற்கான ஆதாரத்தினை காட்டுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

  • தொடங்கியவர்

1530356_743479532348905_613722806_n+(1).

venkkayam1.JPG

அஞ்சரன்,

ஆதாரம் என்று கேட்டது தமிழக / தமிழ் சஞ்சிகைகளில் வந்தவற்றையோ அல்லது தமிழில் இருந்து ஆங்கிலத்தில் நேரடியாக மொழியாக்கம் செய்தவற்றையோ அல்ல.  தமிழக சஞ்சிகைகள் லேகியங்களின் பெருமைகள் வரைக்கும் பத்தி பத்தியாக எழுதும் திறமை படைத்தவை என்பது அனைவருக்கும் தெரியும். நாசா அல்லது தகுந்த விண்வெளி ஆராச்சி நிறுவனங்கள் இது பற்றி செய்த ஆராச்சிகள், அது பற்றி வெளியிட்ட அறிக்கைகள் தான் சரியான ஆதாரங்கள். ஆகக் குறைந்தது இந்திய விண்வெளி ஆராச்சி நிறுவனம் இஸ்ரோ வினது அறிக்கையாவது இதற்கு உண்டா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக/ தமிழ் சஞ்சிகைகளில் வந்தவற்றை வைத்து இனி ஒரு விடயமும் இங்கு பதியப்படாது என கூறுகிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரன், அந்த நாசா விஞ்ஜானிகளின், (போட்டோவை, இணைக்கவும்.)

ஆடான... ஆடெல்லாம், கஞ்சிக்கு அழுததாம்....

ஒரு... ஆடு, சோத்துக்கு அழுததாம்.

அஞ்சரன்,

ஆதாரம் என்று கேட்டது தமிழக / தமிழ் சஞ்சிகைகளில் வந்தவற்றையோ அல்லது தமிழில் இருந்து ஆங்கிலத்தில் நேரடியாக மொழியாக்கம் செய்தவற்றையோ அல்ல.  தமிழக சஞ்சிகைகள் லேகியங்களின் பெருமைகள் வரைக்கும் பத்தி பத்தியாக எழுதும் திறமை படைத்தவை என்பது அனைவருக்கும் தெரியும். நாசா அல்லது தகுந்த விண்வெளி ஆராச்சி நிறுவனங்கள் இது பற்றி செய்த ஆராச்சிகள், அது பற்றி வெளியிட்ட அறிக்கைகள் தான் சரியான ஆதாரங்கள். ஆகக் குறைந்தது இந்திய விண்வெளி ஆராச்சி நிறுவனம் இஸ்ரோ வினது அறிக்கையாவது இதற்கு உண்டா?

உங்க இரண்டு பேருக்கு சனி பார்வை விழுந்துட்டுது !! அது தான் இந்த மாதிரி கேள்வியல் வருது.
 
சனியரோட  சொறிஞ்சால் கஞ்சிக்கும், சோத்துக்கும் அழவேண்டும் சிறியர்!!!  :icon_mrgreen:  அந்தாள்  ஒரு டைப் !!
 
இந்த  கட்டுரை  எங்கள மாதிரி ஆக்களுக்கு.
 
உங்களுக்கு எண்டு பெரியார் கணக்க எழுதி வச்சிருக்கிறார், வாசித்து சந்தோசமா இருங்க.  :icon_mrgreen:  :icon_idea:

Edited by Nathamuni

ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோயில் கட்டுரை கட்டுக்கதை என்று ஆதாரபூர்வமாக விளங்கப்படுத்தியும் பிடிவாதமாக நம்புவோரைப் பார்க்கும்போது எமது சமுதாயத்தில் மூட நம்பிக்கை எவ்வாறு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதைக் காணலாம். எதிர்த்துக் கதைத்தால் கடவுள் பழிவாங்குவார் என்ற பயமுறுத்தலும் இவற்றை நீண்ட தூரம் காவிச் செல்லும். இன்று நாம் நம்பிக் கொண்டிருக்கும் புராணக் கதைகளில் ஏறத்தாள அனைத்துமே கட்டுக் கதைகள்தான். முடிந்தால் பொய்யான விளக்கங்களைப் பரப்பாமல் இவற்றிலிருந்து அறிவியலைத் தேட முயலுங்கள். இதற்குள் பெரியார் என்ற மனிதன் தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெ.. யாகம் செய்தார்.. கோவில் கும்பிட்டார்.. சனி பகவானுக்கு எள்ளெண்ணைய் எரித்தார்.. எம கண்டம்.. ராகு காலம்.. சுப நேரம் பார்த்தார்.. திடீர் திடீர் என்று.. கோவில் திருத்தல விஜயங்கள் செய்தார்.. கூட தோழி சசியும்.. தன் பங்கிற்கு.. ! இலச்சம் இலச்சமா அள்ளிக் கொடுத்து ஜோதிடக்காரங்களை கூப்பிட்டு ஜோதிடம் கணிச்சாங்க.. அப்புறம்.. என்னாச்சுன்னு.. என்று கேள்வி கேட்கும்.. அதிமுகவினர்.... கடவுள் மேல கொல வெறியில இருக்காங்களாம்.

இந்த தலைப்பை அவங்க முன்னாடி போட்டீங்க.. போட்டவர்.. பீஸ் பீஸாகிடுவார். :lol::D

மனித மூளையில் உள்ள பயம் என்ற சிந்தனை தான்.. இத்தனைக்கும் கடவுளை... ஜோதிடத்தை.. நாள்.. கோள்களை தேட வைக்கிறது. ஒருவேளை.. கடவுள் இருந்தாலும்.. இந்தப் பெரிய பிரபஞ்சத்தில் அவருக்கு ஆயிரெத்தெட்டு வேலை இருக்கும். பூமில உள்ள உங்களையே சதா ஜி பி எஸ் வைச்சு.. மொனிட்டர் பண்ணிக்கிட்டு இருக்க அவர் என்ன.. வேற வேலைவெட்டி இல்லாமலா இருக்கார்..!!!! ஏதோ நீங்க செய்யுறதை உங்க புத்திக்கு செய்யுங்கன்னு தானே மூளை.. முண்ணான்.. உடம்பு என்று வைச்சு படைச்சு விட்டிருக்கிறார். அதை யூஸ் பண்ணாம.. கடவுள் வருவார்.. என்று கனவு கண்டிட்டு இருந்தா... சனி என்ன.. பிரமதோசமும் பிடிக்கத்தான் செய்யும்..!!!!  :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தைச் சொன்னாலும் சனி சாரில் எனக்கு நம்பிக்கை உள்ளது.. :D

அப்படியே அவரை நானும் சுகம் விசாரித்தாதாக சொல்லிவிடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
எமது மூதையோர் எவளவோ நாள்கள் நேரங்கள் செலவழித்து எத்தனையோ அறிவு திறனை படைத்து வைத்தார்கள்.
 
எப்போ இந்த பாழ்பட்ட இந்துமதம் தமிழ் மண்ணை தொட்டதுவோ.
அன்று தொட்டதுதான் இந்த சனியன். இது இலகுவாக போகாது. மிகவு சக்தி பெற்று விட்டது.
 
ஜோதிகள் பற்றி மூதையோர் எழுதிவைதவையை ..... அடுத்தவனை ஏய்க்க ஜோதிடம் என்று ஆக்கினான் இந்து புறம்போக்கு. இன்றுவரை மக்களை ஏய்த்து பிளைத்துகொண்டுதான் இருக்கிறான்.
 
சித்த வைத்தியத்தை சிதறடித்து சிக்குண்டி சக்குண்டி சாமிகளை உருவாக்கி பல்லி பாம்புக்கு பால் ஊத்தி திரிய வைத்தான்.
 
கடவுளை யார் மிதிக்கிறானோ .............. அவன்தான் மதத்தை தூக்கி பிடிக்கிறான்.
கடவுள் மீது மதிப்பு இருந்தால் .......... அவனுக்கு மதம் தேவை இல்லை. கடவுளின் கீர்த்தி வேண்டி கருணைதான்  தேவை.
 
போலிகளுக்குதான் மதம் தேவை ............ மனிதனுக்கு மார்க்கம் மட்டுமே தேவை.
 
இந்து அரஜாகத்தை .... ஒரு இந்து மதவாதி மூடி மறைக்கிறான்.
சவூதி ரவுடிகளை ............. முஸ்லிம் சீலை போர்த்தி மூடுகிறான்.
கிறிஸ்தவ காம வெறியர்களை ....... கிறிஸ்தவன் வத்திகானை வைத்தே காக்கிறான்.
 
சக மனிதனையே சாகடிக்கும் குரங்குகளுக்கு மதம் ஒரு கேடு? இந்த சாக்கடையில் இப்படியான போலி செய்திகள்தான்  புனித நீராக ஓடும். அப்படியே அவர்கள் அள்ளி பருக வேண்டியதுதான்.
 
தயவு செய்து உங்கள் கைகளை மனிதத்தில் துடைகாதீர். உங்கள் கோவில் சுவர்களிலேயே துடைத்து கொள்ளுங்கள். 

என்னத்தைச் சொன்னாலும் சனி சாரில் எனக்கு நம்பிக்கை உள்ளது.. :D

நானும்  நூறு வீதம் நம்புறன் ....... :icon_mrgreen:  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.