Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெ. தீர்ப்பு எதிரொலி: தமிழ்த் திரையுலகினர் நாளை உண்ணாவிரதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

30-fast-kolly-600.jpg

 

கலந்து கொண்ட முன்னணி நடிகள் இவர்கள் தானாம். நடிகைகள் கூண்டோடு அப்ஸெண்ட். படப்பிடிப்பில்.. பிசி போல..!!

 

எல்லாரும் மனசில ஒன்ன வைச்சுங்க.. அம்மா உள்ள இருந்தாலும்.. வெளிய அவ ஆட்கள் தான் ஆட்சியில..!! :icon_idea::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Jaya1.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இவரு அம்மா சப்போட்டர் போல இருக்கு ரொம்பத்தான் பம்முறாரு! :D

  • கருத்துக்கள உறவுகள்

 

'அழகான கொண்டையிலே தாழம்பூவாம் அதன் உள்ளே இருப்பதுவோ ஈரும் பேனாம்'. அழகான தமிழ்நாட்டில் தமிழ்த் திரையுலகம். அதன் உள்ளே இருப்பது........ இந்தியனும் திராவிடனும்:(

 

 

இதில் தமிழன் எதில் அடக்கம்? :o:(

எவராவது நீதி மன்றத்தினை அவமதித்தனர் என்று இவர்கள் மீது (Contempt of court) வழக்குத் தொடுத்து தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும். பொது நல வழக்கு போன்று ஒன்றை செய்தால் நன்று.

  • கருத்துக்கள உறவுகள்

எவராவது நீதி மன்றத்தினை அவமதித்தனர் என்று இவர்கள் மீது (Contempt of court) வழக்குத் தொடுத்து தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும். பொது நல வழக்கு போன்று ஒன்றை செய்தால் நன்று.

 

திமிங்கலத்தினைப் பிடிச்சாச்சு, உள்ள போட்டாச்சு. இந்த நெத்தளிகளின்  கத்தலுக்கு எல்லாம் நீதித்துறை  மினக்கெட  ஏலாது.  :D

திமிங்கிலம் வலையை கிழித்து கொண்டு வரும் என்று நெத்தலிகளுக்கு நன்கு தெரியும் .அந்த பயம் தான் வேறு என்ன உண்மை அன்பா ?

  • கருத்துக்கள உறவுகள்
ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தானா? .... நீங்கள் அத்தனைபேரும் உத்தமர்தானா.......சொல்லுங்கள்.
 
தமிழக ஊடகங்களும் படைப்பாளிகளும் எதிர்கொள்ளவேண்டிய தார்மீகப்பொறுப்பு
 
- அவதானி
 
தமிழகத்தில்  காமராஜர்   தலைமையில்  அகில  இந்திய  காங்கிரஸ் இயங்கிய வேளையJey.sasiில்   பிரசாரக்கூட்டத்தில்  பேசுவதற்காக    நடிகை நாட்டியப்பேரொளி    பத்மினி   மேடையில்   அமர்ந்திருந்தார்.
 
அப்பொழுது  மேடைக்கு  வந்த  காமராஜருக்கு  யார்  அந்தப்பெண்  என்பது தெரியாது.    காமராஜர்    சினிமாப்படம்   பார்ப்பதில்லை.    சினிமா  இதழ்களும்  படிப்பதில்லை.  அதனால்  மேக்கப்  அலங்காரங்களுடன் வந்திருந்த    பத்மினி  அவருக்கு   ஆச்சரியமாக  இருந்தார்.
 
அருகில்   நின்றவரிடம்  யார்   அந்த    அம்மா?   எனக்கேட்டார்.
 
அவர்தான்     பிரபலமான  சினிமா  நடிகை.    காங்கிரஸ்   பிரசாரக்கூட்டத்தில் பேசுவதற்கு    அழைத்துவரப்பட்டுள்ளார்     எனச்சொன்னதும் -  காமராஜர்  அந்த  அம்மாவுக்கு  இங்கே  என்ன   வேலை.   அவர்களுக்கு ஸ்ரூடியோவில்தானே  வேலை    அவர்களை  போகச்சொல்  என்றார்.
 
பத்மினியும்    இறங்கிப்போய்விட்டார்.
 
கடந்த   சனிக்கிழமை   27  ஆம்  திகதி  ஜெயலலிதா    சம்பந்தமான  சொத்து குவிப்பு    வழக்கில்  அவருக்கு   எதிராக   தீர்ப்பு  வழங்கப்பட்டதும்  அவரது அனைத்திந்திய    அண்ணா    தி.மு.க.   ஆதரவாளர்கள்    நடத்தத்தொடங்கியிருக்கும்    அராஜகங்களும்  வன்முறைகளும்  காமராஜரை    இச்சந்தர்ப்பத்தில்  நினைக்கச்செய்கின்றன.
 
1967  இல்  நடந்த  சட்டசபைத்தேர்தலில்    காமராஜர்  அவரது சொந்தத்தொகுதியான    விருதுநகரில்   தோற்கடிக்கப்பட்டு அண்ணாத்துரையின்   தலைமையில்  தி.மு.க.  தமிழகத்தில் ஆட்சிபீடமேறியது.
 
அண்ணாத்துரை  -  கருணாநிதி  -  எம்.ஜி.ஆர்  -   எஸ்.எஸ். ஆர். -  நடிகவேள்  எம். ஆர் . ராதா -   சிவாஜிகணேசன்  -   முரசொலி  மாறன்   உட்பட  பலர்  தமிழ் சினிமாவுடன்    நெருங்கிய  தொடர்புவைத்துக்கொண்டே  அரசியலில் பிரவேசித்தனர்.
 
இவர்களில்    நடிகவேள்   எம். ஆர் .ராதா    தந்தை    பெரியாருடனே  தனது அரசியலை   மட்டுப்படுத்திக்கொண்டவர்.    அதனால்  அவர்  பெரியார் போன்றே    தேர்தல்களில்  சட்டசபையில்  நம்பிக்கை    வைக்கவில்லை.
 
ஆரம்பத்தில்    காங்கிரஸிலிருந்த  எம்.ஜி.ஆர்.  தி.மு.க.வுக்கும் தி.மு.க. விலிருந்த  சிவாஜி    காங்கிரஸ_ க்கும்  சென்றார்கள்.
 
எம்.ஜி.ஆர்.  தமது  படங்களில்    உத்தமனாகவும்  கொடைவள்ளலாகவும் தாய்குலத்தின்    தலைமகனாகவும்  தன்னைக்காண்பித்தே   மக்கள் திலகமாகவும்    புரட்சி   நடிகராகவும்    பெயர்  வாங்கினார்.
 
1967   இல்  பறங்கி மலையில்  தேர்தலில்   அவர்  நின்ற பொழுது பெற்றால்தான்  பிள்ளையா   படம்  தொடர்பான  விவகாரத்தில்  ராதாவினால் சுடப்பட்டு  மருத்துவ மனையிலிருந்துகொண்டே  தேர்தலில்   வென்றவர் எம்.ஜி.ஆர்.
 
ராதா  சிறை  சென்றார்.
 
தி.மு.க.   பிரசார  மேடைகளுக்கு  தாமதமாகவே  வந்து  மக்களின் கவனத்தை   எம்.ஜி.ஆர்.  ஈர்த்த பொழுது  கருணாநிதிக்கு  அவரது  செயல் அண்ணாத்துரை   காலத்திலிருந்தே    எரிச்சலையூட்டியது.
 
எனினும்   தங்கள்  முகங்களுக்கு  மக்கள்  சில  வாக்குகள்தான்  அளிப்பார்கள்.   ஆனால் -  எம்.ஜி.ஆரின்  முகத்துக்கு  மக்கள் ஆயிரக்கணக்கில்   வாக்களிப்பார்கள்  என்று    கருணாநிதி   உட்பட கழகக்கண்மணிகளுக்கு    அண்ணாத்துரை  பாடம்  எடுத்தார்.
 
எம்.ஜி.ஆரை   அண்ணாத்துரை  தமது   தி.மு.க. வின் வாக்கு வங்கியைப்பெருக்குவkarunanidhi 10தற்காகவே  தன்னோடு  வைத்துக்கொண்டார்.
 
அண்ணாத்துரை    மறைந்தபொழுது  முதலமைச்சராக வந்திருக்கவேண்டியவர்   நாவலர்  நெடுஞ்செழியன்.   ஆனால் பொதுக்குழுவில்  கருணாநிதியை    முன்மொழிந்தவர்  எம்.ஜி.ஆர்.
 
அதன்   பின்னர்  தி.மு.க.வின்    மூத்ததலைவர்களான  பேராசிரியர் அன்பழகன்  -  நாவலர்  நெடுஞ்செழியன்  ஆகியோருக்கு  முதல்வர்  பதவி   என்பது எட்டாத   கனியாகியே விட்டது.
 
கருணாநிதி    சாணக்கியசாலி.    ஆனால் -  அவரது  சாணக்கியம்  சிவாஜி - எஸ். எஸ். ராஜேந்திரன்  -  கண்ணதாசன்  -   நாவலர்  -  அன்பழகன்  ஆகியோரிடம்    பலித்தது போன்று  எம்.ஜி.ஆரிடம்   பலிக்கவில்லை. இதுவிடயத்தில்  அண்ணாத்துரையின்  வாக்கே  பலித்தது.  அதுதான்  அவர் வர்ணித்த   எம்.ஜி.ஆரின்  முகம்.
 
எம்.ஜி.ஆர்.  தி.மு.க. வின்  பொருளார்   பதவியிலிருந்துகொண்டே கருணாநிதியிடம்  கணக்குக் கேட்டார்.   அன்று    தொடங்கிய    கணக்கு -  ஊழல் விவகாரம்    கடந்த  27   ஆம்  திகதி  ஜெயலலிதாவுக்கு   எதிரான  சொத்துக்குவிப்பு     வழக்கு  தீர்ப்புவரையில் தமிழகத்தின் தொடர்கதையாகிவிட்டது.    சாபமாகவும்   தொடர்கிறது.
 
அதன்   அடுத்த  அத்தியாயம்  கனிமொழி -  ராசாவிலிருந்து   மீண்டும் தொடங்கும்.
 
மூன்றெழுத்தில்  என்  மூச்சிருக்கும்  என்றும்    நான் ஆணையிட்டால் எனக்கொரு  மகன்   பிறப்பான்    அவன்  என்னைப்போலவே  இருப்பான் தனக்கொரு   பாதையை  வகுக்காமல்  தன்    தலைவன்  வழியிலே  நடப்பான் என்றெல்லாம்   திரையில்  டி.எம்.எஸ்.ஸின்  பின்னணியில்  பாடிப்பாடியே எம்.ஜி.ஆர்.  தனது  வாக்குவங்கியை  திரையுலகில்  இருந்துகொண்டே மேலும்  மேலும்  பெருக்கினார்.
 
பறங்கி  மலையிலிருந்து  ஆண்டிப்பட்டி  வரையில்  மட்டுமல்ல  தமிழகம் முழுவதுமே   அவரது   அலை    பேரோசையுடன்  எழுந்தமைக்கு கருணாநிதிதான்   காரணம்.
 
கணக்கு  கேட்டவரை    கட்சிக்குள்ளே  வைத்திருந்து  கணக்கைக்காண்பித்து காரியம்   சாதிக்கத்தவறிய  கருணாநிதி  அவரை  வெளியே  தள்ளினார். உலகம்   சுற்றும் வாலிபன்  படத்தில்  கோடிக்கணக்கில்  முடக்கிவிட்டு அதனை   மீண்டும்  பெறுவதற்காக   பொறுமை  காத்திருந்த  எம்.ஜி.ஆர் அடுத்து  என்ன  செய்யப்போகிறார் ?  என்று  பத்திரிகையாளர்கள் அவரைத்தேடியபொழுது   அவர்  தமது  சத்தியா  ஸ்ரூடியோவில் மறைந்திருந்து   தமது  அந்தரங்க  உதவியாளர்  ஆர். எம். வீரப்பனுடன் மந்திராலோசனை  மேற்கொண்டவாறு   உலகம்சுற்றும்  வாலிபன் எடிட்டிங்கிலேயே   முழுக்கவனமும்  செலுத்தினார்.MGR
 
அந்தப்படம்   வெளிவராது  என்றும்  எம்.ஜி.ஆர்.  அதில்  நடித்த  லதா  என்ற நடிகையுடன்   வாழ்க்கை  தொடங்கிவிட்டார்  என்றும்  கருணாநிதியின் ஆதரவாளர்களும்   கருணாநிதி  ஆதரவு  ஏடுகளும்  வதந்திகளை   பரப்பினர்.
 
அத்துடன்   கருணாநிதியின்  தீவிர  ஆதரவாளரான  மதுரை   (சண்டியர்) மேயர்   முத்து  எம்.ஜீ.  ஆருக்கு    எதிராக  கூட்டங்கள்  நடத்தி  யாரிடம் கேட்கிறாய்   கணக்கு?  சரோஜா    தேவியிடம்  கேள் -   ஜெயலலிதாவிடம்  கேள் - லதா விடம்  கேள்   என்றெல்லாம்  மட்டரகமாகப் பேசினார்.
 
எம்.ஜி.ஆர் . உலகம் சுற்றும்  வாலிபனை   திரையிட்டு  விட்டு பத்திரிகையாளர்   சந்திப்பை   நடத்தி  அண்ணா  தி. மு. க.  உதயம்  என்று அறிவித்தார்.
 
அடுத்து   நடைபெறவிருந்த  திண்டுக்கல்    இடைத்தேர்தலில்   மாயத்தேவரை நிறுத்தி   அறுதிப்பெரும்பான்மையுடன்  கட்சிக்கு   உயிரூட்டினார்.   அடுத்து அவரது   கனவு   தமிழக  முதல்வர்  ஆசனமாகவே  இருந்தது.
 
எம்.ஜி.ஆரை.  விமர்சித்த வந்த  கவிஞர்  கண்ணதாசன்  எம்.ஜி.ஆரின் அண்ணா  தி.முக.  நூறு நாட்கள்  மாத்திரமே   ஓடும்  என்றார்.
 
தி.மு.க.வினர்   தமிழ்நாட்டை   தமிழன்தான்  ஆளவேண்டும்.  மலையாளி வேண்டாம்   என்றெல்லாம்  பிரதேசவாதம்  கக்கினர்.  இதனையெல்லாம் அமைதியாக   பார்த்துக்கொண்டிருந்தவர்தான்  கருணாநிதி.
 
திண்டுக்கல்   இடைத்  தேர்தல்  பிரசாரத்தில்  காங்கிரஸ்   தலைவர்  காமராஜர் தி.மு.க.வையும்    அண்ணா    தி.மு.க.வையும்    ஒரே  குட்டையில்  ஊறிய மட்டைகள்    என்றே  வர்ணித்தார்.  அவரது  வாக்கு  அதன் பின்னர் தி.மு.க.விலிருந்து  உருவாகிய  வை.கோ. வின்   மறுமலர்ச்சி   தி.மு.க.  உட்பட   விஜயகாந்தின்   தே.மு.தி.க.  வரையில்   தொடருகிறது.
 
எம்.ஜி.ஆர்.   தமது  அரசியல்   பிரவேசத்தினாலும்  தாம்    ஏற்ற  முதலமைச்சர் பதவியினாலும்  மேலும்   சில  சினிமா  நடிகர்களிடம்  முதலமைச்சர் கனவை   விதைத்துவிட்டுச்சென்றுவிட்டார்.
 
அதில்   இதுவரையில்  தேறியவர்கள்  தமிழ்  நாட்டில்  ஜெயலலிதாவும் ஆந்திராவில்   என்.ரி. ராமராவும்  மாத்திரமே.
 
ஆனால்   அந்தக்கனவில்  தொடருபவர்கள்  விஜயகாந்த் - சரத்குமார் ஆகியோர்.   நடிகர்கள்  கார்த்திக் -  டி. ராஜேந்தர்  -  ராமராஜன் -  பாக்கியராஜ் ஆகியோர்   பாதிவழியில்  நின்றுவிட்டனர்.
 
எம்.ஜி.ஆர். காலத்துக்குக்காலம்  தனது  கதாநாயகிகளை   திரையில் மாற்றிக்கொண்டிருந்தவர்.
 
ஆரம்பத்தில்  வி.என்.ஜானகி.  (இவர்  கணபதிபட்  என்ற  நாடக -   திரைப்பட நடிகரின்  முன்னாள்  மனைவி)  கணபதிபட்டை  பிரிந்து  வந்து எம்.ஜி.ஆருடன்  இணைந்துகொண்டார்.
 
மணிரத்தினத்தின்  இருவர்  படத்தில்  எம்.ஜி.ஆர்.  ( மோகன்லால்) கருணாநிதி  ( பிரகாஷ்  ராஜ்)   ஐஸ்வர்யா  ராய்  ( ஜெயலலிதா)                 கௌதமி ( ஜானகி)   மற்றும்  கருணாநிதியின்  இரண்டு  தாரங்களாக  இரு  வேறு நடிகைகள்)   தி.மு.க.வின்  தோற்றம் -  அண்ணா  தி.மு.க. வின்  உதயம் ஆகியன   மிகவும்  நுட்பமாக  பதிவாகியிருக்கின்றன.
 
ஜானகி   எம்.ஜீ. ஆரின்  துணைவியாக  அறிவிக்கப்பட்டதும்  அவர் சினமாவிலிருந்து   ஒதுங்கினார்.  அதன்   பின்னர்  பானுமதி  அவருக்குப்பின்னர்  சரோஜாதேவி  ( சரோஜா  தேவியுடன்  எம்.ஜி.ஆர் இணைந்து  பல  படங்களில்  நடித்தபொழுது  எங்கவீட்டுப்பிள்ளை இலங்கையிலும்   தமிழகத்திலும்  வெளியான  ஒரே  காலப்பகுதியில் எம்.ஜி.ஆர்.  தம்முடன்  இலங்கைக்கு  அழைத்து வந்தது  சரோஜா தேவியைத்தான்.)
 
சரோஜாதேவிக்குப்பின்னர்   பந்துலுவின்  ஆயிரத்தில்  ஒருவன்  முதல் ஜெயலலிதா.   அதன்   பின்னர்  மஞ்சுளா    பின்னர்  லதா  என்று  வருடாந்த ஒப்பந்த   நடிகைகளாக  மிளிர்ந்தனர்.
 
இவர்களில்  ஜெயலலிதா  மாத்திரமே   தன்னை   அரசியலில் வளர்த்துக்கொண்ட   ஆளுமையுடைய  பெண்.  அதற்கு  அவரது  ஆங்கில கல்வி   பின்புலமும்  பலமாக  இருந்தது.
 
அவரது   தாய்   சந்தியா    எம்.ஜி.ஆர். -   சிவாஜி    படங்களில்  நடிக்கும் காலத்தில்   ஜMGR & Janakiெயலலிதா    குழந்தை.    தாயுடன்    படப்பிடிப்பு  தளங்களுக்கு வரும்பொழுது   சிறுமியாக   இருந்தவர்  காலப்போக்கில்  எம்.ஜி.ஆர். சிவாஜியுடன்   இணைந்து  கதாநாயகி    அந்தஸ்து  பெற்று  திரையுலகில் உயர்ந்தவர்.
 
மலையாள  நடிகர்  சோபன் பாபுவுடன்   அவருக்கு  காதல்  ஏற்பட்டபொழுது அவர்   ஏற்கனவே  திருமணமானவர்  என்பது  தெரிந்தும்  அவருடன் நெருக்கமான   தொடர்புகளை    வைத்திருந்தவர்.  ஒரு  கட்டத்தில்  சோபன் பாபுவுடன்   ஏற்பட்ட  மனக்கசப்பினால்   அளவுக்கு  அதிகமான தூக்கமாத்திரைகளை   விழுங்கி  தற்கொலை    செய்ய  முயன்றார்.  அவரை மருத்துவமனையில்   பார்த்து  ஆறுதல்  சொன்ன   எம்.ஜி.ஆர்.  அதன்  பின்னர்   அவரை   தமது  பாதுகாப்பிலேயே    வைத்துக்கொண்டார்.   அன்று முதல்   ஜெயலலிதாவின்  இதய  தெய்வமானார்  எம்.ஜி.ஆர்.
 
அண்ணா   தி. மு.க.வில்  தமது   மனைவி  ஜானகிக்குக்கூட  வழங்காத விசேட   அனுமதியை    ஜெயலலிதாவுக்கு  வழங்கி  கொள்கை பரப்புச் செயலாளராக்கினார்.   அந்த  நன்றிக்கடனுக்காகவே  எம்.ஜி.ஆர். மறைந்த பொழுது   அவரது  பூதவுடல்  புறப்பட்ட  வண்டியிலிருந்து  அவர் பலவந்தமாக   ஜானகி  ஆதரவாளர்களினால்   இறக்கப்பட்ட வேளையிலும் தாம்   உடன்கட்டை  ஏறப்போவதாகச்சொன்னார்.
 
நல்லவேளை  எம்.ஜி.ஆர்.  தகனமாகவில்லை.   அவர்  மெரீனா  கடற்கரையில்   அடக்கம்  செய்யப்பட்டார்.  எம்.ஜீ. ஆர்.  அவரது  குல முறைப்படி   தகனம்  செய்யப்பட்டிருப்பின்  அந்த  சிதையில்  அவரது பிரியத்துக்குரிய  ரசிகர்களும்  குதித்திருக்கலாம்.  நல்ல  காலம் ஜெயலலிதாவுக்கு  அந்தப்பாக்கியம்  சித்திக்கவில்லை.
 
எம்.ஜி.ஆர் . முதல்வர்  ஆசனத்தில்  அமர்ந்தபொழுது  அந்த  நாற்காலியின் ஒரு  கால்  பட்டுக்கோட்டை  கல்யாண  சுந்தரம்  என்று  தமது நன்றியுணர்வை  வெளிப்படுத்தினார்.
 
அதுபோன்று  ஜெயலலிதா  முதலில்  அமர்ந்த  நாற்காலியின்  நான்கு கால்களும்   எம்.ஜி.ஆர். தான்  என்பது  புரிந்துகொள்ளத்தக்கதே.
 
அரசியலில்  எதிர்  அணியிலிருந்தபோதிலும்  எம்.ஜி. ஆர். தன்னை   என்றுமே கலைஞர்   என்றுதான்  விளித்துப்பேசுவார்    ஆனால் -  தனது  வசனங்களுக்கு   திரையில்  பேசி  நடித்த  ஜெயலலிதா  தன்னை   ஏய்... கருணாநிதி ...   என்றுதான்  திட்டுகிறார்  என்று  கருணாநிதி  வருத்தப்பட்டார்.
 
ஜெயலலிதா   எம்.ஜி.ஆருக்கு  நெருக்கமாகவிருந்தபோதிலும்  அவருக்கு விசுவாசமாக   அவர்  நடந்தவரில்லை    என்பதற்கும்  பல  சம்பவங்கள் இருக்கின்றன.   ஜெயலலிதாவை    விட்டு விட்டு  அவர்  மஞ்சுளாவுடனும் லதாவுடனும்   உலகம்  சுற்றும்  வாலிபன்  படப்பிடிப்பிற்காக  ஜப்பானில் நடந்த   எகஸ்போ 70   உலகக்கண்காட்சிக்கு  சென்றபொழுது  அதனை முறையிட   கருணநிதியை   நாடியவர்  ஜெயலலிதா.  பின்னாளில்  அண்ணா. தி.மு.க. கொ.ப.செ.யாக  இருந்து கொண்டே  ராஜிவ்கந்தியிடம்  எம்.ஜி.ஆர். பற்றிய   புகர்களை   அடுக்கியவர்.
 
ஏற்கனவே  ஆண்களினால்  வஞ்சிக்கப்பட்ட  ஜெயலலிதா  தன்னிடம் ஆண்கள்   நெருங்காமலிருக்க  பார்த்துக்கொண்டார்.Vaiko-20
 
கருணாநிதி   முதல்வராக  இருந்தபொழுது  துரை  முருகன்  அவரது சேலையை   இழுத்து  அவமானப்படுத்தியபொழுது  தனது  கட்சி  அங்கத்தவர் செங்கோட்டையனைப்பார்த்து  அவனை  அடிடா  என்று  குரல்  எழுப்பியவர்.
 
ஆண்கள்  --  அவர்கள்  எந்தப்பெரிய  மனிதர்களாக  இருந்தாலும்  அவர்களை  தன்னிடம்   அண்டவிடாமல்  பார்த்துக்கொண்ட  அதே  சமயம்  அந்த ஆண்கள்   தனது  காலில்  விழுந்து  எழுவதையும்  அங்கீகரித்தவர்.
 
தனது    ஆட்சியின்பொழுது  ஒரு  கணக்காய்வாளருக்கு  அடிக்க செருப்பைத் தூக்கியவர்.
 
இலங்கை    அரசியலிலும்  இலங்கை    இனப்பிரச்சினையிலும்  புலிகள் விடயத்திலும்   அவருக்கு  இரண்டு  முகங்கள்  அல்ல.   பல  முகங்கள். சமகாலத்தில்   -  தடுத்துவைக்கப்பட்டிருக்கும்  பேரறிவாளனின்  தாய் அற்புதம்மாளுக்கு   தேறுதல்  சொன்ன  நாட்கள்  பறந்து  செல்வதற்கு முன்னர்   தமது  சொத்துகுவிப்பு  வழக்கில்  தோன்றும்பொழுது புலிகளினாலும்   தமக்கு  ஆபத்துவரலாம்  என்று  கூடுதல்  பாதுகாப்பு கோரியவர்.
 
ஜெயலலிதாவின்   இந்த  பன்முகப்பட்ட  முகத்தை   நாடு  கடந்த  தமிழ் ஈழக்கொழுந்துகளும்   அகில  உலக  தமிழ்க்காங்கிரஸ்வாதிகளும் புரிந்துகொண்டால்  சரி.
 
சீமான் -  வை..கோ - ராமதாஸ்  -  நெடுமாறன்   உட்பட  பல  ஈழ  ஆதரவு தமிழக   தலைவர்களைப்பற்றி  சொல்வதற்கு  ஒன்றுமில்லை.  இவர்கள் அவர்களின்   இயல்பிலேயே   அரசியலைத்தொடருபவர்கள்.
 
அரசியலில்  எதிரியும்  இல்லை -    நண்பரும்  இல்லை .  அரசியல்ல இதெல்லாம்    சகஜமப்பா  என்பது  போன்ற  பஞ்ச்  வார்த்தைகள் இவர்களைப்பொறுத்தவரையில்   தொடரும்.
 
ஈழப்பிரச்சினையில்  தமிழகத்தலைவர்களையும்    மே  17  இயக்கம்  உட்பட பல      அமைப்புக்கள்    வரையிலும்  நம்பிக்கொண்டிருக்கும்   இலங்கையின் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர்  முதல்  புலன்  பெயர்ந்து  வாழும் நாடுகடந்த  தமிழ்  ஈழக்கொழுந்துகளும்  அகில  உலக தமிழ்க்காங்கிரஸ்வாதிகளும்  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்காக உலகெங்கும்   கிளைகள்  அமைத்துக்கொண்டிருப்பவர்களும்  தொடர்ந்தும் நம்பியிராமல்   ஈழ மக்களுக்கு  அவர்கள்  போருக்குப்பின்னர்  வாழ விரும்பும்    நிம்மதியான  வாழ்வுக்கு  பக்கபலமாக  இருப்பதே    காலத்தின் தேவை.
 
ஜெயலலிதா   முதல்வராக  இருந்தபொழுது    அவரைச்சந்திக்க  விரும்பிய  வடமாகண   சபை   முதல்வர்    உட்பட  தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினருக்கு கடந்த   27  ஆம்  திகதிக்குப்பின்னர்  புதிய  ஞானம்  பிறந்திருந்தால்  அதில் ஆச்சரியமில்லை.
 
சுதாகரன்   விவகாரம்
 
சிவாஜி கணேசன்  சினிமாவிலும்  அரசியலிலும்  ஈடுபட்டிருந்தபொழுதிலும்    தமது   குடும்பத்தினரைப்பொறுத்தவரையில்   அவர்களுக்கு  திருமண சம்பந்தங்களை   சினிமா  பிரபலங்களுடனும்  அரசியல்   பிரமுகர்களுடனும்      விரும்பவில்லை.   அவரது  தி. நகர்  அன்னை   இல்லம் கூட்டுக்குடும்ப   அமைப்பில்  வாழ்ந்தது.
 
தமது  குடும்பப்பெண்களை   சினிமா -  அரசியலுக்கு   அனுப்ப  அவர் விரும்பியிருக்கவில்லை.   தமது  மனைவி  கமலாவை    திருமணம் மரணச்சடங்கு   உட்பட   பொது  நிகழ்வுகளுக்கும்  தாம்  சம்பந்தப்பட்ட    திரைப்படப்பிடிப்பு   நிகழும்  இடங்களுக்கும்   மாத்திரமே   அழைத்துச்செல்பவர்.    கமலா   தமது  கணவர்  சிவாஜியை  மாமா  என்றுதான்  தமிழக  மரபுரீதியாக   அழைப்பவர்.
 
அவரது   மகன்  பிரபுவின்  மனைவியையும்   பொது  நிகழ்வுகளில்  அதிகம் காண  முடியாது.
 
சிவாஜியின்  மூத்த  மகள்  சாந்தநாயகி  ஒரு  மகப்பேற்று  மருத்துவ நிபுணர்.   அவரது  கணவர்  நாராயண  சாமி  செல்வந்தர்.  அவர்களின்  மகள் சிவாஜியின்  அபிமானத்துக்குரிய  செல்லப்பேத்தி.    சிவாஜி   வெளியே  புறப்படும்   பொழுதெல்லாம்  அந்தக்குழந்தையின்   முகத்தைப்பார்த்துவிட்டே   செல்வாராம்.   அந்த   முகராசியில்  நடிகர்திலகம் நம்பிக்கை  வைத்திருந்தவர்.
 
ஜெயலலிதாவுடன்  பல  படங்களில்  இணைந்து  நடித்த  சிவாஜிக்கு ஜெயலலிJeya son suthakaranதாவின்   அரசியலில்  ஆர்வம்  இருந்ததில்லை.   சினிமாவுடன் மாத்திரம்  அவருடானான     உறவை                            மட்டுப்படுத்திக்கொண்டவர்தான்   சிவாஜி.
 
 சசிகலாவின்  உறவு  முறைப்பையன்   சுதாகரனையும்   தனது  பிணாமிகளில்   ஒருவனாக்கிக்கொண்ட  ஜெயலலிதா  அவனுக்கு  சிவாஜி  குடும்பத்திலேயே   வரன்  தேடினார்.
 
காலப்போக்கில்   சசிகலா  தோழியின்  சகவாசத்தினால்    ஜெயலலிதா  மட்டுமல்ல  எதிர்பாராதவிதமாக  சிவாஜியின்  குடும்பத்தினரும்   பாதிக்கப்பட்டனர்.
 
சுதகாரன்    தனது  வளர்ப்பு  மகன்  எனச்சொல்லிக்கொண்டே   சாந்தநாயகி - நாராயண  சாமியுடன்  திருமண    பேச்சுக்களைத் தொடர்ந்தார்  ஜெயலலிதா.  அந்த   பண  பலம் -  அரசியல்   பலத்திற்கு  நடிகர்  திலகம்  மயங்காதுவிட்டாலும்   அவரது  மகளும்  மருமகனும்  அந்த  வலையில்  சிக்கினார்கள்.
 
சிவாஜி   அந்த  சம்பந்தத்தை    விரும்பவில்லை.   தமது  பேத்திக்கு வேறிடத்தில்   வரன்  பார்க்கவே    விரும்பினார்.   ஜெயலலிதாவின் இயல்புகளை   நன்கு   அறிந்தவர்  சிவாஜி.    ஆனால் -  தங்கள்  குடும்பமும்   உயரவேண்டும்   தங்களையும்  வெளியுலகம்  விழியுயர்த்திப்பார்க்க வேண்டும்  என்று  சாந்த நாயகியும்  நாராயணசாமியும்  சிவாஜியுடன்   வாதிட்டு   அவரை   சம்மதிக்கவைத்தனர்.
 
இறுதியில்   அவரது  மகளும்  மருமகனும்   விரும்பியவாறே அந்தத்திருமணம்  கோடிக்கணக்கான  செலவில்  முழு  இந்தியாவுமே வியக்கும்   வண்ணம்  நடந்தேறியது.  ஜெயலலிதாவை    தொடர்ந்து ஆதரிக்கும்   துக்ளக்  சோவும்  அந்தத்  திருமணத்தை  சபிக்கப்பட்ட திருமண  விழா  என்றே   வர்ணித்தார்.  இறுதியில்  சபிக்கப்பட்ட வாழ்வாகிப்போனது   சிவாஜியின்  பேத்தியின்  வாழ்வு.
 
சிவாஜி   நோயுற்றார்.   சுதாகரனுக்கும்  ஜெயலலிதாவுக்கும்   பிணக்கு வந்தது.   சுதாகரன்  கைதானான்.  அவனது  மனைவி   -  சிவாஜியின்  பேத்தி   சிவாஜியின்  காலில்  விழுந்து  கதறினாள்.
 
திரையில்   தமது  நடிப்பில்  அத்தகைய  வாழ்வை  பல முறை  கண்ட சிவாஜி   தமது  பேத்தியின்  வடிவில்  அப்படி  ஒரு  அதிர்ச்சி  வரும்  என்று  எதிர்பார்த்திருக்கமாட்டார்.
 
இறுதியில்  அந்த  தீராத  சோகத்துடனேயே    சிம்மக்குரலோன்   நிரந்தரமாக  உலகைவிட்டு   விடைபெற்றார்.
 
நீங்கள்   அத்தனைபேரும்   உத்தமர்தானா?
 
ஜெயலலிதாவுக்கு   எதிராக   தீர்ப்பு  வந்து  அவர்  சிறைக்குச்சென்றதும் அறிக்கைகள்  விடும்  வைக்கோ  -   ராமதாஸ்  -  விஜயகாந்த்  ஆகியோர்  அந்த   வழக்கு  இழுத்தடிக்கப்பட்ட  குறிப்பிட்ட  18   வருட காலத்தில் எத்தனை   முறை  ஜெயலலிதாவுடன்  கூட்டணி   அமைத்துக்கொண்டு தேர்தல்களில்   ஈடுபட்டனர்  என்பதை    குறிப்பிட்ட  கால  கட்ட பத்திரிகைகளையும்   இதழ்களையும்   தேடி  எடுத்து  புரட்டிப்பார்க்கலாம். அல்லது  - பாதுகாப்பாக  இருக்கும்  தொலைக்காட்சி  செய்திகளின் தொகுப்புகளை   தூசி  தட்டி  எடுத்துப்பார்க்கலாம்.
 
இவர்கள்   அனைவரும்  ஜெயலலிதாவுடன்  கூட்டுவைத்துக்கொண்ட குறிப்பிட்ட   காலப்பகுதியில்  அவர்  சொத்துகுவிப்பு  வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கிறார்   என்பது  தெரியவில்லையா?
 
தெரிந்திருப்பதனால்   நீங்கள்  அத்தனைபேரும்  உத்தமர்தானா ...? சொல்லுங்கள்    எனக்கேட்கத் தோன்றுகிறது.
 
2012    இல்    பாட்டாளி  மக்கள்  கட்சி    தருமபுரி    முதல்   ஏனைய பிரதேசங்களிலும்    நிகழ்த்திய   வன்முறைகளில்  சேதமாக்கப்பட்ட சொத்துக்களை   மதிப்பிட்டு   அதனை  ராமதாஸ_ம்   அவரது  மகன் அன்புமணியும்   அவர்களின்  அடியாள்  காடுவெட்டி  குரு  உட்பட சம்பந்தப்பட்ட    அனைவரும்  நட்டஈடு  தரவேண்டும்  என்று  சட்டசபையில் தீர்மானம்   கொண்டு  வந்தவர்  ஜெயலலிதா.
 
கடந்த   27  ஆம்  திகதிய   தீர்ப்பின்     பின்னர்  ஜெயலலிதாவின்   அண்ணா. தி.முக. அடியாட்கள்  மேற்கொண்டுள்ள    வன்முறைகளையும்    கணக்கில் எடுத்து   அந்தக்கட்சியே    அதற்கான   நட்டஈட்டை  வழங்கவேண்டும்   என்று    நீதிமன்றம்     தீர்ப்புக்கூறல்     வேண்டும்   அல்லது  அண்ணா தி.முக.வின்   அசையும்  அசையா    சொத்துக்களை   சீல்வைத்து   முடக்கவேண்டும்.
 
அப்படிச்செய்தால்தான்    வன்முறைகளில்  ஈடுபடும்   தமிழக  அரசியல் கட்சிகளுக்கு  புத்தி  வரும்.
 
தாம்   பயணித்த   தமது  குழந்தைகள்  பயணிக்கும்  பஸ் வண்டிகளை -பொதுமக்களின்     தேவைக்காகவே  இயங்கும் வர்த்தக   நிலையங்களை    தாக்குபவர்களுக்கும்  கடுமையான    தண்டனை    வழங்கவேண்டும்.
 
தி.மு.க.   பாட்டாளி  மக்கள்  கட்சி  -   அண்ணா தி.மு.க  உட்பட  பல  தமிழக கட்சிகளின்    அடியாட்கள்  தமது  ஆத்திரத்தை  பொதுச்சொத்துக்களிலேயே  காண்பித்து   வருகின்றனர்.
 
இந்தக்கலாச்சாரத்திற்கு   வித்திட்ட  பெருமை    தி.மு.க.வையே   சாரும்.
 
ஒருபுறம்   தனிமனித -   வழிபாடு   மறுபுறம்   கட்அவுட்  கலாச்சாரம் சினிமாவையும்   சீர்கெட்ட  அரசியலையும்  இணைத்துக்கொண்டு  தொடரும் அராஜகங்கள்   முதலானவற்றை   தமிழகத்திலிருந்து  முற்றாக ஒழிக்காதவரையில்   தமிழகத்திற்கு  விடிவே  இல்லை.
 
தமிழக   ஊடகங்கள்  தமிழக  மக்களுக்கு  சிறந்த  வழியை காண்பிக்கவேண்டும்.
 
இல்லையேல்   காமராஜர்  அன்றே  சொன்னதுபோல்  எல்லோரும்  ஒரே    குட்டையில்    ஊறிய  மட்டைகள்தான்  என்பது  தமிழக  அரசியல்  வரலாற்றில்   நிரந்தர   அடையாளமாகிவிடும்.
 
  • கருத்துக்கள உறவுகள்

இதில் தமிழன் எதில் அடக்கம்? :o:(

 

யேர்மன் மொழியைத் தாய்மொழியாகப் பேசுபவன் யேர்மானியன். 
இத்தாலி மொழியைத் தாய்மொழியாகப் பேசுபவன் இத்தாலியன். 
பிரஞ்சு மொழியைத் தாய்மொழியாகப் பேசுபவன் பிரஞ்சுக்காரன்
கிந்தி மொழியைத் தாய்மொழியாகப் பேசுபவன் கிந்திக்காரன்
மலையாளம் மொழியைத் தாய்மொழியாகப் பேசுபவன் மலையாளி
 
தமிழ் மொழியைத் தாய்மொழியாகப் பேசும் தமிழனைமட்டும் ஏன் திராவிடனாக்க வேண்டும்...????  :blink:  :blink:
 
தமிழ் மொழியைத் தாய்மொழியாகப் பேசுபவன் தமிழன். :icon_idea:  :icon_idea:  :icon_idea: 
  • கருத்துக்கள உறவுகள்

 

...

 

தமிழ் மொழியைத் தாய்மொழியாகப் பேசும் தமிழனைமட்டும் ஏன் திராவிடனாக்க வேண்டும்...????  :blink:  :blink:
தமிழ் மொழியைத் தாய்மொழியாகப் பேசுபவன் தமிழன். :icon_idea:  :icon_idea:  :icon_idea:

 

ஏனெனில் திராவிட சித்தாந்தம் 'ஜஸ்டிஸ் பார்டி' என்ற நீதிக்கட்சியால் இந்திய சுதந்திரத்திற்கு முன் உருவாக்கப் பட்டவை.

 

அச்சித்தாந்தத்திற்கு பிற மாநிலங்களில் வரவேற்பில்லாவிட்டாலும் தமிழகத்தில் அக்கட்சியிலிருந்து உருப்பெற்ற தி.க., தி.மு.க மற்றும் அ.தி.மு.க போன்றவற்றின் தலைகள் அதன் அடிப்படை சித்தாந்ததை விடவில்லை. காலப் போக்கில் திராவிட சித்தாந்தம் மறைந்து மருவி, தமிழ் தேசியமாக உருப்பெறும், பெற வேண்டும், அப்பொழுது தமிழனை திராவிடனாக அடையாளப் படுத்தும் ஊடகங்கள், எம்மை தமிழனாகவே ஏற்றுக்கொள்ளவேண்டி வரும். அக்கட்சிகளின் பெயர்களும் மாறும்! :)

 

  • கருத்துக்கள உறவுகள்

30-fast-kolly-600.jpg

 

கலந்து கொண்ட முன்னணி நடிகள் இவர்கள் தானாம். நடிகைகள் கூண்டோடு அப்ஸெண்ட். படப்பிடிப்பில்.. பிசி போல..!!

 

எல்லாரும் மனசில ஒன்ன வைச்சுங்க.. அம்மா உள்ள இருந்தாலும்.. வெளிய அவ ஆட்கள் தான் ஆட்சியில..!! :icon_idea::lol:

அவையல் தாய்மொழி தமிழ் இல்லைதானே பிறகேன் மினக்கடுவம் என நினைச்சிட்டினம் இவையளுக்கு மம்மி 2 ரெம்ப டெரர்ரா இருக்கப் போவுது.

tamil-film-industrys-show-of-strength-fo

tamil-film-industrys-show-of-strength-fo

tamil-film-industrys-show-of-strength-fo

tamil-film-industrys-show-of-strength-fo

tamil-film-industrys-show-of-strength-fo

tamil-film-industrys-show-of-strength-fo

படங்கள் : Behindwoods.com

Edited by துளசி

tamil-film-industrys-show-of-strength-fo

tamil-film-industrys-show-of-strength-fo

படங்கள் : Behindwoods.com

ஊழலுக்கு எதிராக உண்ணா விரதம் இருந்த சினிமா களம் இப்போ ஆதரவாய் இருக்கிறார்கள்

10703911_376040955905867_249650170111653

10404007_375968305913132_253847594138317

(Facebook)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

கமலின் "விஸ்வ ரூபம்" படம் வெளிவருவதற்கு... ஜெ. கொடுத்தத தடங்கலும்,
ரஜனி பா.ஜ.க. வில் கிட்டத்தட்ட ஐக்கியமாகி விட்ட சூழ்நிலையாலும், 

இந்த உண்ணா விரதத்தில்.... அவர்கள் கலந்து கொள்ளவில்லை என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கமலின் "விஸ்வ ரூபம்" படம் வெளிவருவதற்கு... ஜெ. கொடுத்தத தடங்கலும்,

ரஜனி பா.ஜ.க. வில் கிட்டத்தட்ட ஐக்கியமாகி விட்ட சூழ்நிலையாலும், 

இந்த உண்ணா விரதத்தில்.... அவர்கள் கலந்து கொள்ளவில்லை என நினைக்கின்றேன்.

 
:rolleyes:
 
இல்லை சிறியர். 
 
நீங்கள் சொல்வது சரியாயினும், அரசியல் கட்சி சார்பான நிகழ்வுகளில் பங்கு கொண்டு அதிமுக கட்சியுடன் அடையாள படுத்தப் படுவதனை அவர்கள் விரும்பவில்லை என்பதே உண்மை. 

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.