Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நின்றறுத்த தெய்வம் - The Shoe Rapist of England

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

நின்றறுத்த தெய்வம் 
 
இது ஒரு உண்மைக் கதை - சில பெயர்கள் மாறி உள்ளன.
 
பப்பிலிருந்து வெளியே வந்தாள் சமந்தா. நல்ல தோர் பார்ட்டி, நல்ல தோர் டான்ஸ், நல்ல மப்பு.
 
பரவாயில்லை, கருமியாய் இருப்பாள் என்று நினைத்தேன், ஜோ  தனது பிறந்த நாள் பார்ட்டிக்கு நன்றாக பணத்தினை வீசி செலவு செய்தாள் என்று நினைத்துக் கொண்டாள், சமந்தா. 
 
1983 ம் ஆண்டின் டிசம்பர் மாதத்து குளிர் சில்ரென்று முகத்தினைத் தாக்கியது. காரின் அருகே சென்றாள் சமந்தா. 5 நிமிடத்தில் வீடு செல்லாம், அசட்டுத் துணிவுடன் கார்த்திறப்பினை எடுத்தாள்.
 
'ஏ..ஏய், சாம்... முட்டாள் தனமாயிராமல் காரை  அங்கேயே விட்டு விட்டு நடந்து போய் விடு'. திருப்பிப் பார்த்தால், தள்ளாடியபடியே போய் கொண்டிருந்தாள், சூசன் தனது ஆண் நண்பனுடன்.
 
அவள் சொல்வது சரிதான், எதுக்கு பிரச்னை. கார் லைசன்ஸ் முக்கியம்.. நினைத்தபடியே நடக்கத் தொடங்கினாள். விளக்குகள் எரியும் பிரதான வீதிகளினூடே சென்றால் 20 நிமிடம். இருள் மண்டிய ஒத்தையடிப் பாதைவழியே சென்றால் 6 நிமிடம். 
 
ஒரு நிமிடம் யோசித்தாள்..... நிதானத்துடன் உள்ள யாருமே செல்லத் தயங்கும் பாதை. அட, 6 நிமிடத்தில் வீடு, 7வது  நிமிடத்தில் கட்டிலில் விழுந்து தூங்கி விடலாம். என்ன பயம்....
 
அசட்டுத் துணிச்சலுடன் இருட்டுப் பாதையில் நடக்க தொடங்கினாள் சமந்தா.
 
ஆனால்,....பாவம் சமந்தா.
 
அன்று .... அவளுடன் அவளது துரஸ்திடமும்  சேர்ந்தே நடந்தது...
 
அவளுக்காக காத்திருந்தது, அவள் வாழ்க்கை முழுவதும் நினைத்து வருந்தப் போகும் பேராபத்து....
 
தூரத்தில் அவள் தள்ளாடி வருவதைப் பார்த்ததும் அந்த மனித மிருகம் தயாரானது....

 

 

 

 

 

விசுகர்,
 
கொப்பு இழக்கப் படாது.  :o
 
அவன் நிறுத்தியது 1987 (1983 + 4)
 
 தங்கை பிடிபட்டது 20 வருடங்களின் பின்னர்.  :D

 

:lol:  :D

  • Replies 57
  • Views 6.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

:lol:  :D

 

 

அடடா, நீங்கள் சமந்தாவுடன் நிற்கிறீர்களா?
 
சட்டம் அப்போதும் இருந்தது. இப்போதுள்ளது போல் கடுமையாய் இல்லாவிடினும், பலர் எப்போதுமே சட்டத்தினை மிக கவனமாக கடைப் பிடிப்பார்கள்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவன் வேலை செய்த Dearne Valley Printers ல் அவனது பிரத்தியேக அறையில் இருந்து அவனது வெற்றிக் கேடயங்கள்: பெண்களின் காலணிகள், stockings, tights போன்ற பல பொருட்கள் மீட்கப் பட்டன.

அவன் தனது குற்றங்களை பொலிசாரிடம் ஒத்துக் கொண்டிருந்தான். DNA test கூட அவனது குற்றங்களை உறுதிப் படுத்தி இருந்தன.

17 July 2006 அன்று, 17 வயது மகனுக்கும் 9 வயது மகளுக்கும் தந்தையான 49 வயதான James Desmond Lloyds , வட இங்கிலாந்தின் ஷேப்பீல்ட், முடிக்குரிய நீதிமன்றில் (உயர் நீதி மன்று) ஆயர் படுத்தப் பட்டான்.

நீதிமன்றில் அவனால் பாதிக்கப் பட்ட பெண்கள் பலர் இருந்தார்கள். 'நீ நரகத்தில் உழல்வாய்' என்று ஆவேசமாக கத்தினர் சிலர். அவர்களில் சிலர் அவனை தாக்கப் பாய்ந்தாலும், பொலிசாரால் தடுக்கப் பட்டனர்.

remand சிறைக்கு அனுப்பபட்ட அவன், 4 September 2006, திங்கள்கிழமை அன்று தீர்ப்பினை எதிர் நோக்கி மீண்டும் நீதிமன்றுக்கு அழைத்து வரப் பட்டான்.

கறுப்பு நிற சூட்டும், வெள்ளை நிற சேட்டும், பொருத்தமான Tie யும் அணிந்து வந்திருந்த James Desmond Lloyds எதுவித உணர்வுகளையும் வெளிக் காட்ட வில்லை.

எனினும், தமது தந்தை செய்த தவறுகளை மன்னிக்கு மாறு அவனது பிள்ளைகள் அவனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எழுதி இருந்த கடிதங்கள் நீதி மன்றில் வாசிக்கப் பட்ட போது தான் உடைந்து போய் கதறி அழுதான் அவன்.

அவனக்கு இடைக்கால தண்டனையாக 15 வருடங்கள் சிறைத் தண்டனை வழக்கப் பட்டது. உனது மன நிலை குறித்த அறிக்கை வந்தால், அதில் உனது மன நிலை சரி யாக இருந்தால் நீ 35 வருடங்கள் உள்ளே இருக்க வேண்டி நேரிடும் என்று நீதிபதி சொல்லி வைத்தார்.

 

இந்த வழக்கு கடவுள் மீதான நம்பிக்கையை பலருக்கு தரும் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை என்று நீதிபதி குறிப்பிட்டார்.

பார்வையாளர் பகுதியில், எவ்வித உணர்வும் காட்டாமல் அமைதியாக இருந்தாள், அவனது முதலாவது இலக்காக இருந்த சமந்தா.

நின்று அறுக்கும் இறைவனின் தன்மையில் பெரும் நம்பிக்கை கொண்டிருந்த அவளது, கண்கள் ஒரு கணம் மூடிக் கொள்ள, உதடுகள், மெதுவாக உச்சரித்தன:

Oh, Jesus please forgive him.... I too forgave him..

நன்றி

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்குள்ள முடிஞ்சிடுச்சா நன்றி நாதமுனி மன்னிக்கவும் விசுகன்னை.

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் முடிந்து விட்டாலும்.....
விறுவிறுப்பும், எழுத்து நடையும்.... நன்றாக இருந்தது, நாதமுனி. :)

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனியின் எழுத்து நடை.... முன்பு எழுதிய இடி அமீனின் கதையை மீண்டும் நினைவூட்டியது...!

 

கதை சொல்லும் பாங்கு... அடுத்து என்ன நடக்கும் என்னும் ஆவலை... ஏற்படுத்திய படியே இருக்கும்..!

 

அது நாதத்தின் ' தனித்துவம்' ! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனியின் தொடர் நன்றாகவே இருந்தது. ஆவலுடன் அனைத்தையும் தொடர்ந்து படிக்கவைத்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனியின் எழுத்து நடை.... முன்பு எழுதிய இடி அமீனின் கதையை மீண்டும் நினைவூட்டியது...!

 

கதை சொல்லும் பாங்கு... அடுத்து என்ன நடக்கும் என்னும் ஆவலை... ஏற்படுத்திய படியே இருக்கும்..!

 

அது நாதத்தின் ' தனித்துவம்' ! :lol:

 

நன்றி 

 

நாதமுனியின் தொடர் நன்றாகவே இருந்தது. ஆவலுடன் அனைத்தையும் தொடர்ந்து படிக்கவைத்தது.

நன்றி 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் முடிந்து விட்டாலும்.....

விறுவிறுப்பும், எழுத்து நடையும்.... நன்றாக இருந்தது, நாதமுனி. :)

நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்

விறுவிறுப்பாக எழுதி முடித்தவிதம் அருமை.. தலைப்பை மட்டும் மாத்தியிருக்கலாம்.. :unsure:

"நின்றறுத்த டிஎன்ஏ" :D

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி கதையை நல்ல விறுவிறுப்பாக எழுதியிருக்கிறார். ஒரே மூச்சில் படித்து முடித்தேன் பாராட்டுக்கள். உப்பை தின்றவன் தண்ணி குடித்துத்தான் ஆகவேண்டும்.

அடிக்கடி இப்படியான கதைகளை எழுதுங்கோ ,சுவராஸ்யமாக இருக்கு .

 

உண்மைக்கதை என்றாலும் வாசிக்க நல்ல விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது..... பாராட்டுக்கள்!

மிகவும் சுவாரசியமாக இருந்தது. இக் குற்றவாளியின் பெயரை வைத்து கூகிள் பண்ணும் போது ஆளின் Fetish குணம், மனைவியுடன் செய்த லீலைகள் எல்லாம் அறியக் கிடைத்தது.

 

இப்படி அடிக்கடி எழுதுங்கோ முனி

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே மூச்சில் வாசித்தேன் , உண்மைக் கதை  உணர்ச்சிகளை உருக்கி விட்டது...நாதமுனி இனியும் கீதங்கள் தொடரட்டும்...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ஆம் நிழலி, நீங்கள் சொல்வது சரி. பெண்கள் ஆர்வத்துடன் வாசிக்க வருவார்கள் என்பதால் அவற்றினை தவிர்த்தேன். 
 
புத்தகம் வெளியிடும் அளவுக்கு அனுபவமிக்க, வசிஸ்டர்களான கண்மணி அக்கா, சுமே அக்கா ஆகியோரின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி. 
 
யாழ் தளம் பரீட்சார்த்தமான முயற்சிகளுக்கு பேராதரவு தரும் ஒரு அற்புதமான தளம்.
 
தமிழினி, சுபேஸ், சுவி, பெருமாள், முனிவர், வாத்தியார், புங்கையூரார்  எல்லோருக்கும் நன்றி. உற்சாகம் தந்த அனைவருக்கும் நன்றி. பெயர் குறிப்பிடப் படாதவர்கள் குறை நினைக்க வேண்டாம். 

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
உண்மையில் நான் ஏற்கனேவே வேறு திரியில் சொன்னது போல், ஒரு ஆங்கில புத்தகம் (e-book) வெளியிட்டு, இன்னுமொன்றில் வேலை செய்து கொண்டிருக்கிறேன்.
 
விபரம் விரைவில் தருவேன். 
 
புத்தக வெளியீடு என்றவுடன் பெரிதாக நினைக்காதீர்கள். பெரிய வெளியீட்டு நிறுவனங்கள் எல்லாம் பல் புடுங்கப் பட்ட பாம்புகளாகியுள்ள நிலையில், இந்த இணைய உலகில் இன்று யாரும் தைரியமாக இறங்கி புகுந்து விளையாடலாம்..
 
எனினும் புத்தகம் இந்தியாவில் அச்சடித்துக் கொள்வது மலிவானது, குறித்த தொகையில் அடித்தால் பணம் சேமிக்கலாம் என சொல்லப் படுவதை, கணக்காளர் எனும் முறையில் நான் ஏற்பதில்லை.
 
அச்சடிக்கத் தான் வேண்டும் (printed copy) என்று நினைப்போர், On Demand digital printing முறையில் வேண்டியதனை மட்டும் (10, 20 50 என) அந்தந்த நாடுகளிலே பிரிண்ட் பண்ணி விநியோகிக்க முடியும்.
 
இந்த வகையில் செலவும், மன அழுத்தமும் (அடித்த புத்தகம் விற்கவில்லையே  என்ற)  இருக்காது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக எழுதியுள்ளீர்கள் ....வாழ்த்துக்கள் தொடருங்கள்......

  • கருத்துக்கள உறவுகள்

 

உண்மையில் நான் ஏற்கனேவே வேறு திரியில் சொன்னது போல், ஒரு ஆங்கில புத்தகம் (e-book) வெளியிட்டு, இன்னுமொன்றில் வேலை செய்து கொண்டிருக்கிறேன்.
 
விபரம் விரைவில் தருவேன். 
 
புத்தக வெளியீடு என்றவுடன் பெரிதாக நினைக்காதீர்கள். பெரிய வெளியீட்டு நிறுவனங்கள் எல்லாம் பல் புடுங்கப் பட்ட பாம்புகளாகியுள்ள நிலையில், இந்த இணைய உலகில் இன்று யாரும் தைரியமாக இறங்கி புகுந்து விளையாடலாம்..
 
எனினும் புத்தகம் இந்தியாவில் அச்சடித்துக் கொள்வது மலிவானது, குறித்த தொகையில் அடித்தால் பணம் சேமிக்கலாம் என சொல்லப் படுவதை, கணக்காளர் எனும் முறையில் நான் ஏற்பதில்லை.
 
அச்சடிக்கத் தான் வேண்டும் (printed copy) என்று நினைப்போர், On Demand digital printing முறையில் வேண்டியதனை மட்டும் (10, 20 50 என) அந்தந்த நாடுகளிலே பிரிண்ட் பண்ணி விநியோகிக்க முடியும்.
 
இந்த வகையில் செலவும், மன அழுத்தமும் (அடித்த புத்தகம் விற்கவில்லையே  என்ற)  இருக்காது.

 

On Demand digital printing மேலதிக விபரங்கள் தந்துதவினால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

கதை முடிந்து விட்டதா? கடைசியில் எத்தனை காலம் அவருக்கு தண்டனை கிடைத்தது? நாதமுனி நீங்கள் கணக்காளாரா :) கிருபனும் கணக்காளார் என எழுதிய ஞாபகம்:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

On Demand digital printing மேலதிக விபரங்கள் தந்துதவினால் நல்லது.

 
பெருமாள்,
 
இது எனது அனுபவத்தினால் தேடிக் கிடைத்தது. பகிர்கிறேன். யாரையும் தனிப் பட்ட முறையில் குறிப்பிடவில்லை. இது போன்ற விடயங்களை புத்திசாலித்தனமாக, முழு விபரம் அறிந்தே செய்ய வேண்டும்.
 
புத்தகங்கள்  வெளியிட விரும்புவோர் முதலில் நம்மவர் அச்சகம் நாடுவர். அவர்கள்,  நாலு காசு பார்க்கலாமா என்று வியாபாரத்துக்கு இருபவர்கள். மேலும் பலருக்கு நவீன வசதிகள் தெரியாது.
 
உடனே அச்சுப் பதிவு விலை சொல்லுவார்கள். அடடா.. இவ்வளவு வருமா என்று, இவர்களே இந்த விலையாயின், பெரிய அச்சக நிறுவனங்கள் கொள்ளை காசு கேட்பார்களே என்று வந்தவர், போனவர்களிடம் விசாரிப்பார்கள். உறவினர்கள் யாரவது, போற போக்கில் அங்கே, இலங்கையில், இந்தியாவில் அடிச்சு எடுப்பிச்சால்  மலிவாயிருக்குமே என்பார்கள்.
 
இது இறுதியில் சுண்டங்காய் கால் பணம், சுமை கூலி முக்கால் பணம் என்ற ரீதியில் போய் நிற்கும். ஷிப்பிங், கிளியரிங், storage என்று பின்னர் தான் தலைவலி, திருகுவலி வரும். அது மட்டுமா, புத்தக வெளியீடு செலவு... 
 
அவர்களது படைப்பு உணர்வே இல்லாது போய் விடும்... 
 
அதற்காக  தான் புதிய வெளியீட்டு முறைகள் குறித்து அறிந்து வைத்திருக்க வேண்டும்.
 
1. iBook (ஐ புக்)
 
உங்கள் படைப்புகளை (ipad / Iphone - நியூஸ் ஸ்டான்ட் ) apple கருவிகளில் வாசிக்கக் கூடியவாறு ஐ புக் ஆகத் தயாரிப்பது. எந்த மொழியிலும் தயாரிக்கலாம். புத்தகம் வாசிக்க விரும்புவோர் பணத்தினை, (நாம் 'game, apps' வாங்குவதுபோல்) அப்பிளுக்கு செலுத்த, ஆப்பிள் தனது கமிசன்   30% எடுத்துக் கொண்டு 70% எமக்கு தரும்.
 
2. Kindle
 
மேலே உள்ள அதே முறை. ஆனால் இது Amazon. இந்த முறையில் அமேசான் எமக்கான சந்தைப் படுத்துதல் வேலைகளைச் செய்வதால் எமது வேலை இலகுவாகும். உதாரணமாக ஒருவர் தமிழ் புத்தகம் ஒன்றை வாங்கினால், எமது படைப்பும் தமிழாய் இருந்தால் அந்த வாங்குனருக்கு, அமேசான் 'மெயில்' செய்து இந்த தமிழ் புத்தகம் வாங்கி விட்டீர்களா என்று விசாரிக்கும். (முன்னரே வாங்கி இருந்தால் அதுக்கு தெரியும்)
 
3. ஈ புக் (ebook) 
 
இது இலகுவானது. சாதாரணமாக உங்கள் வழக்கமான மென்பொருளில் புத்தகத்தை layout செய்து pdf ஆக paypal போன்ற வழிகளில் பணத்தினை வாங்கிக் கொண்டு, ஈமெயில் மூலம் அனுப்பி வைப்பது.
 
4. on demand printing
 
இம் முறையில் புத்தகம் டிஜிட்டல் format (மேலே 3ல் சொன்னது போல pdf ), டிஜிட்டல் பிரிண்டர்ஸ் இடம் உங்கள் கணக்கினை ஆரம்பித்து upload செய்து வைப்பது.
 
உங்களுக்கு இந்தவாரம் 10 புத்தகம், போனவாரம் 12 புத்தகம் ஆர்டர் வந்திருந்தால், உங்கள் கணக்கில் சென்று 22 புத்தகத்துக்கு பிரிண்ட் ஆர்டர் செய்து, அனுப்ப வேண்டிய முகவரிகளையும் தந்தால், அவர்கள் புத்தகங்களை நேராக அனுப்பி வைப்பார்கள். (goole will give a lot of info)
 
நீங்கள் ஐரோப்பாவில் இருந்தால், ஐரோப்பா, கனடா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா என உங்கள் customers இருக்க கூடிய நாடுகளில் உள்ள on demand digital printers தேடி கணக்கு வைத்திருந்தால் உங்கள் புத்தகம் அனுப்பும் தபால் செலவு உள்ளூர் செலவாகும்.
 
5. பழமையான அச்சக ஆபிஸ் சென்று புத்தகம் அடிப்பது.
 
இன்னும் இந்த செலவு பிடித்த விபரம் வேணும் என்கிறீர்களா? பெருமாள்?
 
All the best...

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நாதமுனி பதில் தந்தமைக்கு நிற்க்க  புத்தகவெளியீடு என இந்தியா,இலங்கை யில் விடயம் தெரியாமல் காசை கரியாக்கும் ஒரு சில நம்மவர்களின் முட்டாள்தனம் வீட்டை றீமோட்கேச் செய்யுமளவிற்க்கு சிலவு வைத்துள்ளனர் அங்குள்ள பதிப்பகத்தினர் இங்கு £1.76 முடியும் புத்தகத்தை சென்னையில் அடிச்சு இங்கு கொண்டுவந்து சேர்க்க £ 2.03 க்கு கொண்டுவந்து £3.50 வித்தால் லாபம் ஆனால் விலைபட்டது மொத்தம் 77 புத்தகம் மிகுதி 500 ல் 423 புத்தகம் கராச்சினுள் புத்தகம் அடிச்ச சிங்கம் என்னமும் சிலிர்த்துகொண்டுதான் திரியிது நான்  ஆளைகண்டால் சீன்டுவது "கடைசியா எரிக்கேக்கிலை கரண்டு உங்களுக்கு கிடையாது கிடக்கிற புத்தகத்தால் தான் எரிப்பு"ஆனால் இதெல்லாம் தாண்டி லாபத்தில் அடிக்கும் லைனுகளும் உன்டு தமிழர்தகவல்,நாழிகை இரண்டும் அசராமல் பத்துவருடங்கள் லண்டனில் தான்டியிட்டுனம் :)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்வாணன் எழுதிய துப்பறியும் மர்மநாவல்கள் போன்று விறுவிறுப்பான நடை. தொடர்ந்தும் எழுத வாழ்த்துக்கள் :)

நாதமுனி நீங்கள் கணக்காளாரா :) கிருபனும் கணக்காளார் என எழுதிய ஞாபகம் :lol:

சொந்த வரிக்கணக்குகளைக்கூட பார்க்கமுடியாத நிலைதான் எனக்கு. கணக்காளர் என்றால் பணக்காரர் என்று அர்த்தம் உள்ளது அல்லவா! நான் பணம் சம்பாதிக்கும் வழிகளைத் தெரிந்திருந்தும் பணம் சம்பாதிக்க விரும்பாத ஒரு சாதாரணனன்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை முடிந்து விட்டதா? கடைசியில் எத்தனை காலம் அவருக்கு தண்டனை கிடைத்தது? நாதமுனி நீங்கள் கணக்காளாரா :) கிருபனும் கணக்காளார் என எழுதிய ஞாபகம் :lol:

 

7 வருடங்கள்.
 
அப்பீல் செய்து, இவர் இந்த குற்றம் செய்த காலப் பகுதியில் அமுலில் இருந்த தண்டனையே கொடுக்கப் பட வேண்டும் என வாதாடி 7 வருடங்களாக குறைக்க பட்டுள்ளது. 
 
*********
 
ஆம் கணக்காளர் ஆனால் வேலை செய்வது IT துறையில் 

Edited by Nathamuni

2006 ம் ஆண்டு தீர்ப்பு வெளிவந்தமையால் இப்போது இவர் விடுதலையாகியிருப்பார். என்னைப்பொறுத்தவரையில் இவர் திருந்தியிருந்தாலும் இவரால் பாதிப்படைந்த அத்தனை பெண்களின் துன்பத்திற்கும் மன உளைச்சலுக்கும்  முன்னால் 7 வருட சிறை என்பது அவருக்கு மிகக்குறைந்த தண்டனை :huh:

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.