Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் மீதான தடையை நீக்கியது ஐரோப்பிய நீதிமன்றம்.

Featured Replies

அவர்கள் தடை செய்ததிற்கும் நீக்கியதற்கும் அவர்களுககுச் சாதகமான காரணங்களே இருக்கின்றது. இதில் தமிழர்கள் மகிழ்வதற்கு எதுவும் இல்லை.

வேண்டுமானால் தடையை மீள கொண்டுவருவார்கள் மீள நீக்கவும் செய்வார்கள்.

சிங்களப்பேரினவாதத்திற்க ஆதரவாக இருந்து போருக்கு பின்புலமாக பெரும் உதவிகளை செய்தார்கள். பல்லாயிரம் மக்கள் பலியாக பார்த்துக்கொண்டிருந்தார்கள். தடுக்கும் படியான அத்தனை போராட்டங்களையும் அலட்சியப்படுத்தினார்கள். பின்னர் போர்குற்றம் என்றார்கள். இவ்வாறுதான் இந்த தடைகளும் நீக்கல்களும். இலங்கை அரசுக்கும் ஐரோப்பாவுக்கும் உள்ள பேரங்கள் அழுத்தங்கள் சார்ந்து பயன்படுத்தப்படும் துருப்புக்களாகவே இவை இருக்கின்றது. இனியும் இருக்கும்.

  • Replies 200
  • Views 13.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்.. ஐரோப்பிய ஒன்றியம் தனது மையவாத சிந்தனையில் இருந்து வெளிவரும்வரையில் இது தொடரத்தான் செய்யும். :D

  • கருத்துக்கள உறவுகள்

பேசிக்கொண்டு மட்டும் இருப்பவர்களுக்கும் போராட்ட பணத்தை சுருட்டிய பினாமிகளுக்கும் மத்தியிலும், வெடிக்கும் முழங்கும் என்று கதை விடும் நடிகர்களுக்கு நடுவிலும் சாத்தியமான வழியில் நகர சிந்தித்த மனிதன்... One of the initiators of the legal move against the eu ban on ltte.  Lathan Suntharalingam

10252166_10152508476184891_1925568058794

¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨

600.jpg
விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிரான தடையை நீக்குமாறு ஐரோப்பிய நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு தமிழ் மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கக்கூடிய ஒன்று என்று இந்த வழக்கை தாக்கல் செய்தவர்களுக்கான சட்ட ஆலோசகர் லதன் சுந்தரலிங்கம் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக புலம்பெயர்ந்து வாழக்கூடிய மக்களுக்கு இது ஒரு வெற்றி என்றும் அவர் கூறியுள்ளார்.
அவர் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

https://audioboom.com/boos/2568204-

வணக்கம் கனடா OCT 16 2014 LATHAN SUNTHARLINGAM, KURUPARAN K UK & NCCT MOHAN RAMAKRISHNAN

http://www.ctr24.com/archive/16102014-1103-வணக்கம்-கனடா-oct-16-2014-lathan-suntharlingam-kuruparan-k-uk-ncct-mohan

Edited by சுபேஸ்

உண்மைதான்.. ஐரோப்பிய ஒன்றியம் தனது மையவாத சிந்தனையில் இருந்து வெளிவரும்வரையில் இது தொடரத்தான் செய்யும். :D

இது ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் இருந்து தொடர்கின்றது. அப்போதும் மையவாதிகள் ஆட்சியாளர்களுக்கு ஜிங்சாக் அடித்துப் பிழைப்பை நடத்தினார்கள். இப்போதும் ஆட்சியாளர்களுக்கு ஜிங்சாக் அடித்து பிழைத்துக்கொள்கின்றார்கள்

http://www.jaffnatime.com/contents/?i=4304

http://www.yarl.com/forum3/index.php?/topic/147378-யாழ்-இந்துவில்-ஜனாதிபதி/#entry1049956

போரால் அழிந்த மக்களும் வாழ்வும் வளங்களும் என்னும் அதே நிலையிலேயே இருக்கின்றது. ஆனால் மையவாதமும் பேரினவாதமும் கைகோர்த்து நீச்சல் குளங்கள் தேர்கள் திருவிளாகக்கள் இதர ஆடம்பரங்கள் என்று தொடர்ந்து சுகபோகத்தில் திளைக்கின்றது.

நானும் ரவுடிதான் என்ற றேஞ்சில் நாங்களும் தேசியவாதிகள் என்று ஒப்புக்கு நடிப்பு வேறு !

ஆட்டுக்க மாட்டைகொண்டுவந்து செருகுவதால் மையவாதம் இல்லை என்று ஆகிவிடாது. வன்னி மக்களின் உயிர்பறிப்பிலும் இப்போதய வறுமை நிலையிலும் வளங்கள் அளிப்பிலும் சிங்களப்பேரினவாதத்துக்கு சம அளவிலான பங்கு மையவாதத்திற்கு உண்டு. அதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.

உங்களுக்கு விசிலடித்துக் கனகாலமாகிவிட்டது அதனால் ஐரோப்பிய யுனியன் தடையை நீக்கிவிட்டது என்று ஒரு விஸ்கியை அடித்து இந்த வாரம் விசிலை அடிக்கவேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்

பேசிக்கொண்டு மட்டும் இருப்பவர்களுக்கும் போராட்ட பணத்தை சுருட்டிய பினாமிகளுக்கும் மத்தியிலும், வெடிக்கும் முழங்கும் என்று கதை விடும் நடிகர்களுக்கு நடுவிலும் சாத்தியமான வழியில் நகர சிந்தித்த மனிதன்... One of the initiators of the legal move against the eu ban on ltte. Lathan Suntharalingam

Lathan-150-news.jpg
 
சரியாகச் சொன்னீர்கள் சுபேஸ்.

லதன் சுந்தரலிங்கம்,  ஒற்றை மனிதனாக... பெரிய சாதனையை செய்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

இது ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் இருந்து தொடர்கின்றது. அப்போதும் மையவாதிகள் ஆட்சியாளர்களுக்கு ஜிங்சாக் அடித்துப் பிழைப்பை நடத்தினார்கள். இப்போதும் ஆட்சியாளர்களுக்கு ஜிங்சாக் அடித்து பிழைத்துக்கொள்கின்றார்கள்

http://www.jaffnatime.com/contents/?i=4304

http://www.yarl.com/forum3/index.php?/topic/147378-யாழ்-இந்துவில்-ஜனாதிபதி/#entry1049956

போரால் அழிந்த மக்களும் வாழ்வும் வளங்களும் என்னும் அதே நிலையிலேயே இருக்கின்றது. ஆனால் மையவாதமும் பேரினவாதமும் கைகோர்த்து நீச்சல் குளங்கள் தேர்கள் திருவிளாகக்கள் இதர ஆடம்பரங்கள் என்று தொடர்ந்து சுகபோகத்தில் திளைக்கின்றது.

நானும் ரவுடிதான் என்ற றேஞ்சில் நாங்களும் தேசியவாதிகள் என்று ஒப்புக்கு நடிப்பு வேறு !

ஆட்டுக்க மாட்டைகொண்டுவந்து செருகுவதால் மையவாதம் இல்லை என்று ஆகிவிடாது. வன்னி மக்களின் உயிர்பறிப்பிலும் இப்போதய வறுமை நிலையிலும் வளங்கள் அளிப்பிலும் சிங்களப்பேரினவாதத்துக்கு சம அளவிலான பங்கு மையவாதத்திற்கு உண்டு. அதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.

உங்களுக்கு விசிலடித்துக் கனகாலமாகிவிட்டது அதனால் ஐரோப்பிய யுனியன் தடையை நீக்கிவிட்டது என்று ஒரு விஸ்கியை அடித்து இந்த வாரம் விசிலை அடிக்கவேண்டியது தான்.

ஏன் எரிஞ்சு விழுறீங்கள் சண்டமாருதன்.. :D மையவாதம் என்றால் என்ன என்று நான் முன்னம் ஒருக்கால் கேட்டதுக்கு நீங்கள் பதிலே தரேல்ல.. :huh:  ஆகவே இந்தக் குழப்பத்துக்கு நீங்கள்தான் பொறுப்பு..  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி. மகிழ்ச்சியாக இருக்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றிய தடை நீக்கப்பட்டதை அடுத்து கிலிகொண்ட மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் பழையபடி தூசுதட்டி தங்கள் புலி எதிர்ப்பு புராணத்தை பாட தொடங்கிட்டீனம்..... மறுபடியும் வேப்பிலை அடிச்சா தான் அடங்குவீனம் போல....

மிகவும் மகிழ்வான செய்தி... இந்த வெற்றிக்கு யார், எவ்வாறு செயற்பட்டார்கள் என்று தெரிந்தவர்கள் அறியத் தந்தால் மிகவும் சந்தோசமாக இருக்கும்..... :)

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் மீதான சர்வதேச தடைகளை நீக்கச் சொல்லி போராடி வரும் ஒரு சிலரில்.. வை.கோ ஐயாவும் ஒருவர்... அவர் இத்தீர்ப்புப் பற்றி... கூறியுள்ளவை....

ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்பு இருண்ட வானத்தில் ஒளிக்கீற்று: வைகோ அறிக்கை.
 
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ 16.10.2014 வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 
தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து இலக்சம்பெர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு 2011 ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கில் புலிகளின் சார்பில், நெதர்லாந்து நாட்டைச் சார்ந்த வழக்கறிஞர் விக்டர்கோப் வாதாடினார். இலக்சம்பெர்க் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை 2014 பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வந்தது. விடுதலைப்புலிகள் இயக்கம் தங்கள் தாயகத்தின் விடுதலைக்காகவும் ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டவும் போராடியதேயொழிய அது பயங்கரவாத இயக்கம் அல்ல என்றும், விக்கிப் பீடியா தகவல்களை மட்டும் வைத்துக்கொண்டு சிங்கள அரசின் இன ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய புலிகள் இயக்கத்தின் மீது தடை விதிப்பது என்பது நியாயமற்றது என்றும் புலிகள் இயக்கத்தின் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
 
இந்தியா உள்ளிட்ட உலகின் 40-க்கும் மேற்பட்ட நாடுகள், இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலைக்குத் துணைபோனதும், நிதி மற்றும் இராணுவ உதவிகளை வாரி வழங்கியது சர்வதேச சட்ட நியதிகளுக்கும், உலக நீதிக்கும் எதிரானது ஆகும்.
 
நெதர்லாந்து நாட்டில் உள்ள ஹேக் மாவட்ட நீதிமன்றம் 2011 அக்டோர் 21 இல் விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்ரவாத இயக்கம் அல்ல என்று தீர்ப்பளித்தது. அதற்கு முன்பு 2013 ஜூன் 23 இல் நேபிள்ஸ் நீதிமன்றம் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக தீர்ப்பளித்தது.
 
சர்வதேச சட்டங்களின்படி, அரசியல் உரிமைகளுக்காகப் போராடிய புலிகள் இயக்கத்தை, தீவிரவாத இயக்கமாக சித்தரிப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என்று நியூசிலாந்து உச்ச நீதிமன்றம் 2009 இல் தெளிவுபடுத்தியது.
 
இவற்றை எல்லாம் சுட்டிக்காட்டிதான், இந்தியாவில் விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க சென்னை உயர் நீதிமன்றத்திலும், தீர்ப்பாயத்திலும்  ரிட் மனு தாக்கல் செய்தேன். புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகிறேன்.
 
இந்தச் சூழ்நிலையில், இருண்ட வானத்தில் ஒளிக்கீற்றாக ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கி தீர்ப்பு வழங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இனி உலக நாடுகளும் இதனைப் பின்பற்றி தடையை நீக்கும் என்பது உறுதி.
 
இந்தியாவும் புலிகள் இயக்கத்தை விடுதலைப் போராட்ட இயக்கமாக அங்கீகரித்து, அதன் மீதான தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

மிக மகிழ்ச்சியான செய்தி. இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்.

மாற்றம் ஒன்றுதான் மாறாதது ............

தொலைநோக்கு அரசியல் என்பது கடந்த பத்து வருடங்களில் சீனாவை தவிர மற்றைய நாடுகளிடம் அறவே   இருக்கவில்லை  என்பதற்கு இப்போதைய நிகழ்வுகள் ஆதரமாகின்றன.

தமிழரை பகைத்து இந்தியா இன்னொரு புறம் கையை சொறியும்நிலை அண்மித்துகொண்டு இருக்கிறது. 6 கோடி  தமிழர்கள் இந்தியாவிலேயே இருக்கிறார்கள் தமிழ்நாட்டை மையாமகவே உலக தமிழர்கள் கருதுகிறார்கள். இன்றைய நாளில் ஒரு கணிசமான பொருளாதராம் உலக தமிழர்களிடம் இருக்கிறது இதை  நன்கு திட்டம்  தீட்டி இருப்பின் இந்தியா தனதாக்கி இருக்கலாம்.

சிங்கள அரசு வெறும் வப்பாட்டி கணக்கில்தான் இந்தியாவுடன் உறவு கொண்டு உள்ளது நீ படுக்காவிட்டால்  பாகிஸ்தான்  சீனாவுடன் போய்  படுத்துடுவேன் என்றுதான் சிங்களம் இந்தியாவை  ஆட்டுகிறது. இந்தியாவின்  பிடியில் இப்போ சிங்கள அரசும் இல்லை ...... தமிழர் தரப்பும் இல்லை. தமிழர்களை படுகொலை செய்த பழி மட்டுமே  இந்தியாவிடம் இருக்கிறது.

நல்ல அலசல் மருதங்கேணி

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்திதான்.

தடையை முற்றாக நீக்கிய பின்னராவது புலிகளின் பிரதிநிதிகள் என்று சொல்பவர்கள் வெளிப்படையாக ஏதாவது உருப்படியான விடயங்களைச் செய்ய முன்வருவார்களா?

ஏன் எரிஞ்சு விழுறீங்கள் சண்டமாருதன்.. :D மையவாதம் என்றால் என்ன என்று நான் முன்னம் ஒருக்கால் கேட்டதுக்கு நீங்கள் பதிலே தரேல்ல.. :huh:  ஆகவே இந்தக் குழப்பத்துக்கு நீங்கள்தான் பொறுப்பு..  :lol:

அதற்கெல்லாம் உங்களுக்கு போதிய விளக்கம் தந்தாகிவிட்டது.

மையவாதத்திற்கு நீங்களே ஒரு சிறந்த உதாரணம் என்பதை பல முறை இக்களத்தில் வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

உதாரணத்துக்கு

நீங்கள் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் தமிழ் ஈழம் அடைத்தே தீரப்படும், உங்களுடைய ஆட்கள் எவ்வளவு தான் முயற்சித்தாலும் சைவர்களும், கிறிஸ்த்தவர்களும் தமக்குள் சண்டை பிடிக்க வேண்டியது இல்லை, போவதும் இல்லை அண்மைக்கலமாக இரணைமடு நீரை வைத்து யாழ்-வன்னி ப்ரச்சனையை ஆரம்பித்தீர்கள் அது பலிக்கவில்லை ,அதுக்கு முன்னர் உதயன் பத்திரிகையை கவிதையை வைத்து பிரச்ச்னையை ஆரம்பித்தீர்கள் அதுவும் நடக்கவில்லை இப்போது புதிதாக சைவம்-கிறிஸ்த்தவ பிரச்சனையை ஆரம்பித்துளீர்கள், இது என்னத்தை காட்டுகிறது என்றால் தமிழ் ஈழம் என்ற இலக்கு நெருங்குகின்றது வெகு தொலைவில் இல்லை என்பதே அதான் பிரச்சனையை கிளப்பி அதை குழப்ப முயற்சி செய்கிறீர்கள், ஆனால் தமிழ் ஈழம் நிறுவப்பட்டு அதன் பின் தமிழர் அல்லாதோர் எல்லம் வெளியேற்ற்பபடுவார்கள் அல்லது மலேசியா போல் இரண்டாம் தர பிரஜை ஆக்கப்படுவார்கள், தமிழ்ருக்கு உரிய மதம் என்றால் அது சைவம்,கிறிஸ்த்தவம்,புத்த மதம் மூன்றும் மட்டுமே.

Edited by Dash, 16 February 2014 - 05:51 PM.

சர்வதேச அளவில் போராட்டம் பயங்கரவாதமானதற்கும் தமிழீழம் என்ற இலக்கு திசைமாறிப்போனதற்கும் இஸ்லாமியர்களை அகதிகளாக்கி இரவோடு இரவாக வெளியேற்றியது பெரும் காரணமாக இருந்தது. இவ்வளவு அழிவுகளின் பின்னர், கோவணம் கூட உருவப்பட்டபின்னர் கிட்டத்தட்ட தமிழரளவு சனத்தொகையை நெருங்கும் இஸ்லாமியத்தமிழர்களை வெளியேற்றுவோம் இரண்டாம்தரப் பிரஜைகளாக்குவோம் என்ற கருத்தை விரும்பும் உங்கள் மன நிலையே மையவாதத்தின் கருவாகும். ஆகவே உங்களிடமே அதற்கான விடை இருக்கின்றது.

குறிப்பு: சம்மந்தமில்லாமல் மையவாதம் என்று நீங்கள் இத் திரியில் இழுத்தபடியால் தான் அதற்கு பதிலளிக்கும் நோக்கில் எனது கருத்து அமைந்தது. இதற்கு மேல் இத் திரியில் சம்மந்தமில்லாத ஒரு விசயத்தை தெடரவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அட .. லைக் பண்ணினது ஒரு குற்றமா?? :huh: தமிழீழம் என்று பெயர் வைத்ததால் தமிழர்கள் வாழ்வார்களாக்கும் என நினைத்துவிட்டேன். அடாத்தாக குடியேற்றப்பட்டவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்கிற விதத்திலேயே அக்கருத்தை விளங்கிக் கொண்டேன்.

இப்படிக்கு

"மையவாதி இசைக்கலைஞன்" :lol:

நீதிக்காகவும் உண்மைக்காகவும் உழைப்பவர்களில் நான் கண்ட உன்னத மனிதர்கள்.   மாண்புமிகு விக்டர் கோப்பும் ,அவரது உதவியாளர்களும் ,இவர்கள் எமது தேசம் சார்ந்த விடயங்களில் மட்டுமல்ல நெதர்லாந்தில் உண்மைக்காக பலமுறை குரல் கொடுத்து உண்மையை நிலை நாட்டிய உத்தமர்கள் 

[நெதர்லாந்தில் இவர்களை பலமுறை நேரில் கண்டுள்ளேன் ].1779761_836156673095623_3778627582156348

  • கருத்துக்கள உறவுகள்

லதன் செய்ததை போல 1998 யுகே தடை செய்தபோது, சட்ட ரீதியில் அதை முறியடிக்க வசந்தராஜா, ஜெயதேவன் போன்றோர் முனைந்தனர் ஆனால் தலைமையை சுற்றி இருந்த புலம்பெயர் வியாபாரிகள், புலிகளை தவறாக வழி நடத்தி அதை செய்யவிடாமல் பார்த்துக்கொண்டனர். 2009 க்கு முன்பே இதை செய்திருந்தால், செய்யவிட்டிருந்தால்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்கள் தடை செய்ததிற்கும் நீக்கியதற்கும் அவர்களுககுச் சாதகமான காரணங்களே இருக்கின்றது. இதில் தமிழர்கள் மகிழ்வதற்கு எதுவும் இல்லை.

வேண்டுமானால் தடையை மீள கொண்டுவருவார்கள் மீள நீக்கவும் செய்வார்கள்.

சிங்களப்பேரினவாதத்திற்க ஆதரவாக இருந்து போருக்கு பின்புலமாக பெரும் உதவிகளை செய்தார்கள். பல்லாயிரம் மக்கள் பலியாக பார்த்துக்கொண்டிருந்தார்கள். தடுக்கும் படியான அத்தனை போராட்டங்களையும் அலட்சியப்படுத்தினார்கள். பின்னர் போர்குற்றம் என்றார்கள். இவ்வாறுதான் இந்த தடைகளும் நீக்கல்களும். இலங்கை அரசுக்கும் ஐரோப்பாவுக்கும் உள்ள பேரங்கள் அழுத்தங்கள் சார்ந்து பயன்படுத்தப்படும் துருப்புக்களாகவே இவை இருக்கின்றது. இனியும் இருக்கும்.

இவை அனைத்தையும் தெரியாதவர்கள்தான் விடுதலைப்புலிகள். :lol:
 
புலிக்கொடி தூக்குவதை தவிர வேறெதுவும் தெரியாதவர்கள்தான் மடச்சாம்பிராணி புலம்பெயர்தமிழர்கள். :lol:
 
ஐயா சண்டமருதன்! உங்களிடம் கோவில்களில் பிரசங்கம் செய்யக்கூடிய தகுதி அத்தனையுமுள்ளது  :icon_idea:  :D
  • கருத்துக்கள உறவுகள்

லதன் செய்ததை போல 1998 யுகே தடை செய்தபோது, சட்ட ரீதியில் அதை முறியடிக்க வசந்தராஜா, ஜெயதேவன் போன்றோர் முனைந்தனர் ஆனால் தலைமையை சுற்றி இருந்த புலம்பெயர் வியாபாரிகள், புலிகளை தவறாக வழி நடத்தி அதை செய்யவிடாமல் பார்த்துக்கொண்டனர். 2009 க்கு முன்பே இதை செய்திருந்தால், செய்யவிட்டிருந்தால்?

யுகே 2001 இல் புலிகளை தடைசெய்தது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  மகிழ்ச்சியான செய்தி...!

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் மீரா 98 இல்லை 01 தான்.

  • கருத்துக்கள உறவுகள்

எமது கடந்த கால வரலாறு 'கறைகள்' படிந்தது!

அதைக் கழுவி எடுக்க வேண்டியது எமது முதலாவது கடமை!

அந்த வகையில் இந்தத் தடைநீக்கல் வரவேற்கத் தக்கது!

இதனை மற்றைய நாடுகளும் தொடர வேண்டும் என்பதே எனது ஆவல்!

  • கருத்துக்கள உறவுகள்

தடை செய்தவற்கு முதல் (2000) மாவீரர் தின உரையில் ஆலோசகர் தடை செய்பவர்கள் எல்லோரும் தடைசெய்யுங்கள் பிறகு வந்து சமாதானம் பேச பாலா வீட்டு கதைவை தட்டவேண்டாம் என்றார். இராசதந்திரம்???????

இவை அனைத்தையும் தெரியாதவர்கள்தான் விடுதலைப்புலிகள். :lol:

புலிக்கொடி தூக்குவதை தவிர வேறெதுவும் தெரியாதவர்கள்தான் மடச்சாம்பிராணி புலம்பெயர்தமிழர்கள். :lol:

ஐயா சண்டமருதன்! உங்களிடம் கோவில்களில் பிரசங்கம் செய்யக்கூடிய தகுதி அத்தனையுமுள்ளது  :icon_idea:  :D

எல்லாம் தெரிந்தவர்களும் யூதர்களுக்கு நிகரான புத்திசாலிகள் என்றும் தம்மைத் தாமே பீத்திக்கொள்பவர்கள் எதற்கு வன்னி மக்களை காவுகொடுத்தனர்? அதுவும் ராசதந்திரமோ?

காலம் மாறுதோ என்று யோசித்தால்...

" கீழே உள்ளது இங்கு மற்றவர்களை இழுத்து துள்ளுபவர்களுக்காக மட்டும்..."

செத்த கிளிக்கு சிங்காரம் எதுக்கு?? இனி இதால் என்ன பிரயோசினம்?????

அந்த lawyerகளுக்கு நல்ல வேட்டை :)

உண்மையில் இதில் பெரிய நன்மை இருக்கு 

விரும்பியோ விரும்பாமலோ புலிகளில் இணைந்தவர்கள் முள்ளிவாய்காலுக்கு பின்னரும் உலகெங்கும் புலிகள் என்ற முத்திரை குத்தப்பட்டு அகதி கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படும் நிலையில் இருக்கின்றார்கள்.விசாரணை சாதகமாக அமைந்தவர்கள் கூட நிரந்தர வதிவுரிமை கிடைக்காமல் ஒவ்வொரு வருடமும் விசா புதுப்பித்திக்கொண்டு இருக்கின்றார்கள் .நேற்றைய பத்திரிகையில் கூட புலிகளின் நகைக்கடையில் கணக்காளராக இருந்தவர் தான் இன்னமும் நிரந்தர வதிவுரிமை கிடைக்காமல் மனைவியை கனடாவிற்கு கூப்பிட முடியாமல் இருப்பதாக சொல்லியிருந்தார் .கப்பலில் வந்தவர்கள் சிலருக்கும் இதே நிலைமை .

நாட்டுக்காக போராட போய் போராட்டம் முடிந்த நிலைமையிலும் இந்த அவலதிற்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த தீர்ப்பு உதவலாம் .நாட்டில் இருக்கும் புலிகளே புனரமைப்புடன் சகஜவாழ்விற்கு திரும்பும் போது புலம்பெயர்ந்து வந்தவர்களை தொடர்ந்தும் திரிசங்கு நிலையில் வைத்திருக்க தேவையில்லை .

தடை எடுத்தாச்சு இனி அடியை பார் என்ற கணக்கில் சிலர் துள்ளுகின்றார்கள்.முள்ளிவாய்காலே மணி விளையாட்டு என்றவர்கள் இவர்கள் .சாயிபாபா ,நிந்தியானந்தா  பக்த கோடிகள் கணக்கு இவர்களையும் வேடிக்கை பார்த்துவிட்டு போகவேண்டியதுதான் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.